சாதகப் பறவைகள்-தன்னார்வ தொண்டு நிறுவனம்

13 views
Skip to first unread message

CHAIRMAN - SAATHAGAPARAVAIGAL

unread,
Jun 20, 2018, 5:29:59 AM6/20/18
to rkarthik...@gmail.com
அன்பு நெஞ்சத்திற்கு,

சாதகப் பறவைகள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் நாள் துவங்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் சமூகத்தில் நம்மால் முடிந்த சில மாற்றங்களை கொண்டு வருவதே.

நாங்கள் பின்வரும் துறைகளில் கவனம் செலுத்தி வருகிறோம்.


1.இளைஞர் முன்னேற்றம்/இளைஞர் நல மேம்பாடு:
வருங்கால இந்தியா நம் இளைஞர் கையில் தான் இருக்கிறது. அதற்கு நம் இளைஞர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்க வேண்டும். அதனுடன் அவர்கள் பொது மற்றும் சமூகம் சார்ந்த சிந்தனையுடன் இருக்க வேண்டும். அதற்கு நாங்கள் கிராம, நகர மாணவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த உள்ளோம். சுய தொழில், வேலை வாய்ப்பு, அரசியல், படிப்பு என அனைத்து துறைகளுக்கும் ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

2.பெண்கள் நல மேம்பாடு:
ஒரு பெண் வளர்ச்சி பெற்றால் ஒரு சமூகமே வளர்ச்சி பெரும் என்பது எங்களது நம்பிக்கை. கிராமப்புற பெண்கள், கணவர்களை இழந்த தாய்மார்கள், ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு சுய தொழில் பற்றிய விழிப்புணர்வு தருவதுடன், அவர்களுக்கு தேவையான பயிற்சியும் தர திட்டமிட்டுள்ளோம்.

3.இரத்த தானம், உறுப்பு தானம் மற்றும் தோல் தானம்:
தானத்தில் சிறந்தது அன்ன தானம், அதனிலும் சிறந்தது இரத்த தானம். நாங்கள் நம் நட்பு வட்டங்களின் உதவியுடன் இரத்த தேவைப்படும் நபருக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறோம். இதுவரை நம் அமைப்பின் வாயிலாக 50 நபர்கள் பலன் அடைந்துள்ளனர். உறுப்பு தானத்திற்கு விழிப்புணர்வு செய்து வருகிறோம்.

4.இயற்கை அரண் அமைத்தல்:
இயற்கையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மரம் நம் மண்ணின் உயிர், இதுவரை நம் அமைப்பின் சார்பில் 450 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அதில் 300கும் மேற்பட்ட மரங்கள் நல்ல முறையில் பேணிப் பாதுகாக்க பட்டு வருகிறது. பசுமை தோட்டம் அமைக்க, மரம் நட விரும்புவோர் நம் அமைப்பினை தொடர்பு கொள்ளலாம்.

5.கல்விப் பணி:
“ஆயுதம் செய்வோம்; நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம்; கல்விச் சாலைகள் வைப்போம்” என்றும் “உலக தொழிலனைத்தும் உவந்து செய்வோம்” என்ற முழங்கிய பாரதியின் வாக்கின் படி நம் அமைப்பின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகம் அமைத்தல், பாடப்புத்தகங்கள் வழங்குதல், பள்ளி வளாகத்தினை தூய்மை செய்தல், மரம் நடுதல், சுத்தமான நீ, சுகாதாரமான கழிப்பறை அமைத்து கொடுத்தல் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன் முதற் கட்டமாக அரசு பள்ளிகளில் நூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். உங்களிடம் உள்ள கதை, சிறுகதை, காவியம், கட்டுரை, வரலாறு, இலக்கியம், சமூகம், அரசியல், பொதுஅறிவு, அறிவியல் சார்ந்த புத்தகங்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

6.உழவாரப் பணி:

ஆலயத் தூய்மை ஆண்டவன் சேவை என்ற முன்னோர்களின் வாக்கின் படி நம் பகுதிகளில் அமைந்துள்ள ஆலயங்களில் தூய்மைப் பணி செய்யயுள்ளோம். நம் பாரம்பரியம் பாதுகாக்க  எங்களுடன் கரம் கோர்க்க வேண்டுகிறோம்.

நீங்கள் மேற்கண்ட எந்த துறையிலும் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். இங்கு நாம் செய்ய வேண்டிய சேவைகள் நிறையா இருக்கிறது. ஆனால் சேவை செய்ய தான் தன்னார்வலர்கள் இல்லை. உங்களின் வரவுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவன்.

நம் தாரக மந்திரம்: கனவு மெய்ப்பட வேண்டும் 

வாழ்க பாரதம்! வளர்க நம் தேசம்!

அரிமா.R.கார்த்தி குமார்,
நிறுவனத் தலைவர்,
சாதகப் பறவைகள்,
5/203 ஏ சௌகதலி தெரு, பரமக்குடி 623 707
தொடர்புக்கு: +91-9345141419


Reply all
Reply to author
Forward
0 new messages