டெல்லி: 2013-14ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளமுக்கிய அம்சங்கள்:
ரயில்வேயில் 1.52 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படும்
டெல்லி நிஜாமுதீன், ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.100 கோடி
நடப்பாண்டில் ரயில்வே ரூ 100 கோடி சரக்குகளை கையாண்டு சாதனை
தனியார் உதவியுடன் ரயில்வே துறையில் ரூ. 1 லட்சம் கோடி முதலீடு
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நவீனப்படுத்தப்படும்ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் நவீனப்படுத்தப்படும்
ஆன்லைன் முன்பதிவு நேரம் முற்பகல் 12 மணி முதல் இரவு 11.30 வரை செயல்படுத்தப்படும்
79 ரயில்வே நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும்
400 ரயில் நிலையங்களில் லிப்ட் அமைக்கப்படும்
உணவின் தரத்தை பரிசோதிக்கவும் தனி ஏற்பாடு
ரயில்வே உணவு தயாரிப்புக் கூடங்கள் நவீனப்படுத்தப்படும்
பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதலாக 4 பெண்கள் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்
நாடு முழுவதும் 10197 ஆளில்லா ரயில்வே கேட்கள் மூடப்படும்
17 முக்கிய ரயில்வே பாலங்கள் சீரமைக்கப்படும்
ரயில் நிலையங்கள், ரயிலில் தூய்மையை கடைப்பிடிக்க தீவிர நடவடிக்கை
ரயில்வேக்கான பாதுகாப்பு நிதி பத்தவில்லை
1040 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்
பயணம் செய்யும்போதே ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளும் வசதி விரிவுபடுத்தப்படும்
நஷ்டம் ரூ.22, 500 கோடியில் இருந்து ரூ. 24, 600 கோடியாக உயர்வு