நெடுஞ்செழியன் வாழ்ந்த காலம் - பொ.உ.மு. 130 - 80 (மதுரை எரிந்தது பொ.உ.மு. 80 எனக்கொண்டு) ஆக இருக்குமா? அப்படியாயின் மற்றைய அரசர்களின் காலம் ஒத்துப்போகின்றதா எனப் பார்க்கலாமா?
1. பல்யானைச் செல்கெழு குட்டுவன் பொ.உ.மு. 156 - 132
சிலப்பதிகாரம் - கட்டுரை காதைவண் தமிழ் மறையோற்கு வான் உறை கொடுத்த
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு
பதிற்றுப்பத்து - மூன்றாம் பத்து - பதிகம்'நீர் வேண்டியது கொண்மின்' என,
'யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல் வேண்டும்' என,
பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி
வேட்பிக்க, பத்தாம் பெரு வேள்வியில் பார்ப்பானையும்
பார்ப்பனியையும் காணாராயினார்.
பராசரன்
பரிசு பெறச் சென்றது பல்யானைச் செல்கெழு குட்டுவனிடம். அக்காலம் பாண்டிய
நாட்டை ஆண்டவன் நெடுஞ்செழியன் . (வார்த்திகனைச் சிறையிடல்)
2.
சிலப்பதிகாரம் - கட்டுரை காதைகாவல் வெண்குடை
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி!
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி!
விடர்ச் சிலை பொறித்த விறலோன் வாழி!
பூந் தண் பொருநைப் பொறையன் வாழி!
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க!
வார்த்திகனைச் சிறையிடும் நிகழ்ச்சி நடந்தபோது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், மாந்தரஞ் சேரல் இரும்பொறை ,பல்யானைச் செல்கெழு குட்டுவன் வாழ்ந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி நடந்த்தபோது
ஆடித் திங்கள் பேர் இருள் பக்கத்து,
அழல் சேர் குட்டத்து, அட்டமி ஞான்று,
வெள்ளி வாரத்து, ஒள் எரி உண்ண,
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்
என்று எதிர்வுகூறப்பட்டிருக்கின்றது. இது நடந்ததன் பின் நெடுங்காலம் நெடுஞ்செழியன் ஆண்டிருக்கமுடியுமா?
3.
பொ.உ.மு.80 இல் செங்குட்டுவன் வடபடையெடுப்பு
செங்குட்டுவன் பொ.உ.மு. 131 - 77
படையெடுப்புக் காலம் ஏறத்தாழ 3 ஆண்டுகள். (எண் நான்கு மதியம், வஞ்சி நீங்கியது)
நடுகல் காதை
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு
ஐ-ஐந்து இரட்டி சென்றதன்பின்னும்,
50 ஆண்டு கழிந்ததாக மாடலன் கூறுகின்றான்.
செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான் என பதிற்றுப்பத்து 5ம் பத்து கூறுகின்றது.
ஆகவே படையெடுப்பின் பின் 8 ஆண்டுகள் (மாடலன் ஐ-ஐந்து இரட்டி சென்றதன்பின்னும் எனக் கூறியபின் 5 ஆண்டுகள்) செங்குட்டுவன் வாழ்ந்திருக்கின்றான்.
4.
நடுகல் காதை
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும்,
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும்
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
நான்மறையாளன் செய்யுள் கொண்டு,
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும்,
(பல்யானைச் செல்கெழு குட்டுவன்)
“போற்றி மன் உயிர் முறையின் கொள்க” என,
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும்,
(யாரென்று புரியவில்லை.. போர் வேண்டாம் எனத் தவிர்த்த மன்னனா? இருபக்கமும் பெருஞ்சோறு அளித்த பெருஞ்சோற்று உதியன் ??)
வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு,
பொன் படு நெடு வரை புகுந்தோன் ஆயினும்,
(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அல்லது அவனுக்காக செங்குட்டுவனுடன் சென்றவன்)
மிகப் பெரும் தானையோடு இருஞ் செரு ஓட்டி,
அகப்பா எறிந்த அருந்திறல் ஆயினும்,
உரு கெழு மரபின் அயிரை மண்ணி,
இரு கடல் நீரும் ஆடினோன் ஆயினும்,
(பல்யானைச் செல்கெழு குட்டுவன்)
சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து,
மதுக் கொள் வேள்வி வேட்டோன் ஆயினும்,
(குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை)
மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின்
போர் நடந்தது பொ.உ.மு.80 எனின் பொ.உ.மு.83 இல் பல்யானைச் செல்கெழு குட்டுவன் இல்லை, மாந்தரஞ்சேரலும் இல்லை அவன் மகன் இளஞ்சேரல் இரும்பொறையும் இல்லை. ஆனால் வார்த்திகன் நிகழ்வு நடந்தபோது மாந்தரஞ்சேரல், பல்யானைச் செல்கெழு குட்டுவன் இருந்திருக்கின்றார்கள். மேலும் ஆடித் திங்கள் அரைசு கேடுறும் என்று கூறியதன் பின் மதுரை எரிந்தது எவ்வளவு காலம் என அறிந்தால் மேற்கூறிய காலவரிசையில் சில திருத்தங்கள் செய்யலாம் என நினைக்கின்றேன்.
நன்றி,
முகுந்தன்