--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தாண்டக விளக்கம்:
இவற்றுள் தாண்டகம் என்ற செய்யுள் வகையை அப்பரடிகள் மிகச்சிறப்பாக எடுத்தாண்டுள்ளார். ஆறாம் திருமுறை முழுதும் இத்தாண்டக யாப்பாலேயே விளங்குகின்றன. இத்தாண்டகம் வடமொழி இலக்கணம் பற்றிவந்த செய்யுள் என்றும் இது தமிழ் யாப்பே யாகும் என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு.
யாப்பருங்கல விருத்தி 2ம் சூத்திர விளக்கவுரையிலிருந்து (1) அளவியல் தாண்டகம் (2) அளவழித் தாண்டகம் என்ற இருவகைகள் அறியப்படும்.
பன்னிரு பாட்டியல் என்ற நூலிலிருந்தும் அதன் உரையி லிருந்தும் அறியப்படும் வகைகள் (1) குறுந்தாண்டகம் (2) நெடுந் தாண்டகம் என்ற இரண்டாம் ஒவ்வோரடியினும், `அறுசீரேனும்', `எண்சீரேனும்' வகையாக அமைத்து இயற்றப்பட்ட நான்கடிச் செய்யு ளால் ஆடவரையும் கடவுளரையும் புகழ்வது, தாண்டகம் என்பது பன்னிரு பாட்டியற் கருத்தாகும்.
இவற்றுள் அறுசீரடிப் பாக்களாலாயது குறுந்தாண்டகம்; எண் சீர்ப்பாக்களாலாயது நெடுந்தாண்டகம்.
"மூவிரண் டேனும் இருநான் கேனும்
சீர்வகை நாட்டிச் செய்யுளின் ஆடவர்
கடவுளர்ப் புகழ்வன தாண்டகம் அவற்றுள்
அறுசீர் குறியது நெடியதெண் சீராம்"
என்பது பன்னிருபாட்டியலார் கூற்று. (110)
"அறுசீர் எண்சீர் அடிநான் கொத்தங்
கிறுவது தாண்டகம் இருமுச் சீரடி
குறியது நெடிய திருநாற் சீரே"
என்பது பல்காயனார் வாக்கு.
"மங்கல மரபின் மானிடர் கடவுளர்
தம்புகழ் உரைப்பது தாண்டக வகையே"
"தாண்டகம் மானிடர் கடவுளர்க் குரித்தே"
என்பன மாபூதனார் நூற்பாக்கள்.
"அடிவரை நான்கும் எழுத்தெண்ணி
நேரடி வருவது தாண்டகம் ஆகும்"
என்பர் சீத்தலையார். இருபத்தேழெழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடி யினவாய் எழுத்தும், குருவும், லகுவும் ஒத்து வருவன அளவியல் தாண்டகம் எனவும், எழுத்தொவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வருவன அளவழித் தாண்டகம் எனவும் பெயர் பெறும் என்பது யாப்பருங்கல் விருத்தி உரைகாரர் விளக்கம் ஆகும்.
அப்பரடிகள் அருளிய தாண்டகங்கள், ஒற்றும் குற்றியலுகர மும் நீக்கி எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட ஐவகை அடிகளுள் கழி நெடிலடிக்கு மேலெல்லையாகிய இருபதெழுத்தென்னும் அளவி னைக் கடந்து இருபத்தேழெழுத்திற்கு உட்பட்டு வருவனவாகும்.
ஆனால் யாப்பருங்கல விருத்தி கூறும் இலக்கணம் இதனின் வேறுபட்டது என்பது மேலே காட்டப்பட்டது. யாப்பருங்கல விருத்தி உரையின் கருத்துப்படி இந்தயாப்பு அமையவில்லை என்பது அறிந்துணரத்தக்கது.
எனவே, தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தை அடியொற்றி யமைந்த திருத்தாண்டகப் பாவும், வடமொழித் தண்டக யாப்பினை அடியொற்றிப் புதியன புனைந்த யாப்பருங்கல விருத்தி உதாரணச் செய்யுள்களும் இலக்கண வகையால் தம்முள் வேறுபட்டன என்று உணர்தல் வேண்டும்.1
தாண்டக வேந்தராகிய அப்பரடிகள் இந்த வகையை மிக அழகுபடுத்தி இதனை நயம்பெறக் கையாண்டு விளக்கம் புரிந்துள் ளார். கி. பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன் அடைந்திராத செல்வாக்கை இவ்வகை யாப்புலகிற் பெறுவதாயிற்று.
பின்வந்த திருமங்கையாழ்வாரும் இந்த யாப்பை மேற் கொண்டு காத்தனர்.
தாண்டவமாடும் சிவன்தாள் மலரின்பம் நுகர்ந்த அடிகள் அப்பெருமான் புகழ்பாட இதனை மேற்கொண்டது வியந்து போற்று தற்குரியதாகும். இப்போது கிடைத்துள்ள அப்பர் திருத்தாண்டகங்க ளின் தொகை தொளாயிரத்து எண்பத்தொன்று (981) ஆகும் என்பது இங்கு அறியத்தக்கது.
--
இத்தகைய பாடல்களில் குற்றியலுகரப் புணர்ச்சியைக் கருதாமலும் எழுத்தெண்ணலாம் என்பதற்குத் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாண்டகத்தில் ஒரு பாடலை எடுத்துக் காட்டாகத் தருவதைக் கண்டேன்:
பாருருவில் நீரெரிகால் விசும்பும் ஆகிப்
..பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே என்ன நின்ற
..இமையவர்தம் திருவுருவே றெண்ணும் போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
.. ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி
.. முகிலுருவம் எம்மடிகள் உருவம் தானே
(என்ன அழகிய கருத்தும் சொல்லாட்சியும் கொண்ட பாடல்!)
இங்கு, இரண்டாம் அடியின் இரண்டாம் அரையடியின் ஈற்றில், ‘போது’ என்பதை உகரம் கெடாமல் எண்ணி, முதல் இரண்டு அடிகளிலும் 26 எழுத்துக்கள் உள்ளனவாகக் கொள்ளவேண்டும் என்று சோ.ந.கந்தசாமியின் நூலில் காண்கிறது.
அனந்த்
--
தாண்டக வேந்தரின் தனித்த கொடை
மோகனா - (முனைவர்ப் பட்ட ஆய்வாளர் - தமிழிலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)