Fwd: [தமிழ் வாசல்] டெங்கு - அனுபவப் பகிர்வு!

1 view
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Sep 15, 2016, 12:26:40 AM9/15/16
to பண்புடன், தென்றல்

---------- Forwarded message ----------
From: ஜீவ்ஸ் <jee...@gmail.com>
Date: 2016-09-14 12:28 GMT+05:30
Subject: [தமிழ் வாசல்] டெங்கு - அனுபவப் பகிர்வு!
To: தமிழ் வாசல் <thamiz...@googlegroups.com>


கூகிள் ப்ளஸில் பகிர்ந்தது.. இங்கேயும். யாருக்கேனும் உதவக் கூடும்.   
************************************************************************************************************


என் மச்சானுக்கு போன புதன் கிழமையன்னைக்கு ஜுரம்னு ஆஸ்பத்திரிக்குப் போனாங்க. ஜுரம் விட்டு விட்டு வந்துட்டு இருந்தது, தலைவலி ( முக்கியமா கண்ணுக்கு பின்னாடி ) தாகமின்மை அதிகம். மூட்டுகளில் வலி, உடம்பு வலின்னு இருந்தான். நான் போகும்போதே சொன்னேன் எதுக்கும் இரத்தப் பரிசோதனை பண்ணிடுங்கன்னு.

அங்க டாக்டர் ஒண்ணுமில்லைன்னு பாராசிடாமல் மருந்ந்து லோ டோஸ் குடுத்து ரெண்டு நாள்ல சரியாகிடும்னு சொல்லி அனுப்பிட்டாங்களாம். இத்தனைக்கும் அந்த ஏரியாவில பெரிய ஆஸ்பத்திரி அது. 

மறுநாள் நான் வற்புறுத்தி  பண்ணி மறுபடி அதே டாக்டர்கிட்ட போயி, ப்ளட் டெஸ்ட் பண்ணதுல டெங்கு பிரைமரி ( லெவல் 1 ) அப்படின்னு கன்ஃபர்ம் ஆகிட்டுது. உடனே அதே ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணிட்டாங்க.

அப்பத்தில இருந்து 20000 வீதம் ப்ளேட்லெட்ஸ் ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் குறைய ஆரம்பிச்சுட்டுது. டாக்டர் மறுநாள் 70ல இருக்கும் போது “ நாலு மணிக்கு வந்து பாத்து முடிவு பண்ணலாம் “ அப்படின்னு சொல்லிட்டுப் போனாராம். 

நடுவில நான் ஆஸ்பிடல் போயிருந்தப்ப வந்த டெஸ்ட் ரிசல்ட் படி 35 ஆயிரம் ப்ளேட்லெட்ஸ்க்கு வந்துட்டது. ஒரு 5 pm இருக்கும். 


ஆறு மணி வரைக்கும் பொறுத்துப் பார்த்துட்டு டாக்டர் இனி வரமாட்டார்ங்கற நிலையில சண்டை போட்டு ஆஸ்பத்திரிய விட்டு டிஸ்ச்சார்ஜ் வாங்கிட்டேன். உடனே எம்.எஸ். ராமையா ஹாஸ்பிடலுக்க்கு மாத்திட்டேன். ஹாஸ்பிடல் உள்ள போகும் போது மணி இரவு 9 ஆகிட்டது. அட்மிட் ஆகறதுக்கு முன்னாடி சீனியர் டாக்டர் எல்லா ரிப்போர்ட்டும் பாத்துட்டு என்ன என்ன விளைவுகள், இதுக்கு என்ன மாதிரி மருந்துன்னு எல்லாம் தெளிவா சொல்லிட்டு அப்புறம் அட்மிட் செஞ்சார். அப்போ எடுத்த ரிசல்ட் படி, கவுண்ட் 23க்கு குறைஞ்சுட்டது. 

டாக்டர் உடனே A+ ரத்தம் குடுக்கறதுக்கு ஆள் அரேஞ்ச் பண்ணுங்க.. அவசரம்னுட்டார். ரிசல்ட் வந்தப்ப மணி 10:30க்கு மேல ஆகிட்டுது. 

எல்லா ப்ளட் பேங்க் க்கும் போன் போட்டா ஸ்டாக் இல்லைன்னுட்டானுங்க. சிலர் கிட்ட இருக்கு ஆனா ராமையா ஹாஸ்பிடல்னா குடுக்க மாட்டேன்னுட்டாங்க. ஏன்னா இங்க நிறைய ஸ்ட்ரிக்ட் ஃபார்மாலிடிஸ் அதெல்லாம் நிறைவேத்துனா மட்டுமே ஒப்புத்துக்குவாங்க. ஆக ரத்ததானம் செய்ய ஆள் கண்டிப்பா வேணுமே வேணுங்கற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

அந்த நடு ராத்திரில எங்க போயி தேட, தெரிஞ்ச நண்பர்களுக்கு எல்லாம் அழைச்சுக் கேட்டாச்சு, வாட்ஸப் அனுப்பியாச்சு.. சென்னைல இருந்து வந்து தரதுக்கும் சில தடங்கல்கள் ( பந்த் முடிஞ்ச மறுநாள்ங்கறதால ).

இந்த நேரத்துல நெருங்கிய நண்பர்  ஒரு லிங்க் குடுத்தார்

http://www.listofdonors.com/donors-in-bangalore

அதுல ரெஜிஸ்டர் பண்ணிருந்தவங்கள்ல ரெண்டு பேரை அழைச்சேன். ஒருத்தர் நான் ஊர்லயே இல்லைங்கன்னார். 

இன்னொருத்தர், நவீன்னு பேரு.. போன் செஞ்சதுமே, நான் இங்க தாங்க பக்கத்துல இருக்கேன். 10 நிமிசத்துல வந்துடுவேன்னு சொன்னார்.

அதுக்குள்ள நர்ஸ் வந்து ஒரு 3 டோனர் ரெடி பண்ணிக்கோங்க.. ஏன்னா அட்மிட் பண்ணும் போதே 23ன்னா இந்த நேரத்துக்கு 10க்கு கிட்ட வந்துட்டிருக்கும் அதனால முன்னெச்சரிக்கையா இருக்கட்டும்னு.

அலுவலகத்துல ஒரு ப்ளட் டொனேஷன்னுக்குன்னே தனியா முகவரி இருந்தது நினைவுக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மேனேஜருக்கு போன் அடிச்சு, இப்படி விஷயம்னு சொன்ன உடனே அவரும் மெயில் அனுப்பிட்டார். அதுக்கு அப்புறம் நடந்தவை மிகப்பெரிய விஷயம்.

கிட்டத்தட்ட பத்துல இருந்து பதினைஞ்சு பேர் அழைச்சுட்டாங்க. அதுல எட்டு பேர் ஆஸ்பத்திரிக்கே வந்துட்டாங்க. எதுவா இருந்தாலும் நாங்க இருக்கோம் கவலைப் படாதீங்கன்னு காலைல 4 மணி வரைக்கும் நகரவே இல்லை. 

Who said there is no GOD ? There are Plenty.. We Just fail to recognize them. 

நவீன் என்பவரைப் பற்றிச் சொன்னேன் இல்லையா ? அவர் உடனே மருத்துவமனைக்கு வந்து, இரத்த வங்கி இருக்கும் இடத்திற்கு சென்று தேவையான எல்லாவற்றையும் பூர்த்தி செய்துவிட்டு எனக்கு அழைத்தார். “ எல்லா ஃபார்ம் ஃபில்லப் பண்ணிட்டேங்க. பேஷண்ட் பேர் மட்டும் சொன்னீங்கன்னா இம்மீடியட்டா ப்ராசசிங் ஸ்டார்ட் பண்ணிடலாம் “ அப்படின்னார். பேரைச் சொன்னதும் நான் அவரைப் போயி சந்திக்கும் முன்பே அவர் சாம்பிள் டெஸ்ட்டுக்கு தன்னுடைய இரத்தம் கொடுத்துவிட சென்றுவிட்டார். அவர் வெளியே வந்து

“ கவலைப்படத் தேவைல்லங்க. நான் எப்படியும் மூனு மாசத்துக்கு ஒரு முறை இரத்த தானம் செஞ்சுடுவேன். இப்ப கூட இரத்தம் மொத்தம் எடுத்துக்க மாட்டாங்க. ரத்தம் எடுத்து, அதுல ப்ளேட்லெட்ஸ் பிரிச்சுட்டு அந்த ரத்தத்தை மறுபடியும் எனக்கே அனுப்பிடுவாங்க. மறுபடியும் தேவைன்னா 12 மணி நேரம் கழிச்சு என்னால தர முடியும். எதுவும் யோசிக்காதீங்க.. எல்லாம் சரியாகிடும் “

இந்த பேச்சே பல நேரங்களில் வியாதிகளை குணப்படுத்தக் கூடியது.

நன்றி என்ற வார்த்தையை சொல்லக் கூட வார்த்தையற்று அவர் கைகளைப் பற்றி நிற்கிறேன்.

சிறிது நேரத்தில் அவர் ரத்தம் குடுக்க உள்ளே சென்றுவிட்டார்.

மேலும் ரத்தம் தர வந்தவர்களிடம் நடந்ததை சொன்னேன். அதனாலென்ன பரவால்லை. காத்திருக்கோம்னு 4 மணி வரைக்கும் காத்திருந்தார்கள். வருகிறேன்னு உறுதி செய்த பலருக்கும் போன் செய்து தேவையான ரத்தம் கிடைச்சுட்டது, நீங்க சிரமப் பட்டு வரவேண்டாம்னு சொல்லி அனுப்பி வச்சோம்.. அதுலயும் சிலர் கேக்காம வந்து, இருந்து ப்ளேட்லெட்ஸ் ஏத்தற வரைக்கும் ( 3:30 க்கு முடிந்தது ) காத்திருந்து, டாக்டர் இனி இரத்தம் தேவை இல்லை. ஆனா தேவைன்னு சொன்னா உடனே வரமுடியுமான்னு கேட்டா “ எப்போ வேணும்னு சொல்லுங்க.. நாங்க இங்கயே வெயிட் பண்றொம்னு “ சொல்ல

எத்தனை நல்லுள்ளங்கள் ? இதில் எத்தனை பேர் கன்னடர்கள் ? எத்தனை இந்திவாலாக்கள் ? எத்தனை தமிழர்கள் ? எனக்குத் தெரியாது. இவர்களை இணைத்தது எது ? மதமா ? ஜாதியா ? மொழியா ? இனமா ? எதுவும் கிடையாது. நான் ஒரு பாகிஸ்தானியாக இருந்திருந்தாலும் இவர்கள் முன் நின்றிருப்பார்கள். இவர்கள் அனைவரையும் இணைத்தது சக மனிதன் என்னும் தோழமை, மனித நேயம் அவ்வளவு தான்.  அத்தனைப் பேருக்கும் என் கண்ணீர் மல்கிய, கரம் கூப்பிய நன்றி பல.

மேலும் அடிக்கடி ஆலோசனைக்காக+Dr.J.Mariano Anto Bruno Mascarenhas  அண்ணனை அழைத்து ஆலோசனை கேட்டுக் கொண்டே இருந்தேன். அவரும் எந்த நேரமும் தயங்காமல் அழைப்பை எடுத்து பதில் சொன்னார். நன்றி அண்ணே..


சரி இப்போ முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.

1 - ப்ருணோ அண்ணன் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம். “ எதுவாக இருந்தாலும் முதலில் உங்களோட ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் செய்ங்க “ இது முக்கியம். எடுத்த உடனே ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்னு போயி நிக்காம, உங்க குடும்ப மருத்துவரை அணுகுங்க. கண்டிப்பா அது பெரிய பலனை அளிக்கும். மேலும் அவர் உங்களின் உடல்நிலையை அடிக்கடி கவனிப்பவராக இருப்பதால் சரியான ஆலோசனையை அவரால் வழங்க இயலும்.

2 - எதுவாக இருந்தாலும் பதட்டப்பட்டு தவறான முடிவு எடுக்காதீர்கள். அவங்க அந்த மருந்து சாப்பிட்டு சரியாகிட்டதாம், இவங்களுக்கு இந்த மருந்து சாப்பிட்டு சரியாகிட்டதாம்னு எதையும் தானே மருந்து குடுக்க ஆரம்பிக்காதீங்க. கைவைத்தியம் அது இதுன்னு தயவு செய்து நீங்களே இழுத்துப் போட்டுக்காதீங்க. டெங்கு குணப்படுத்தக் கூடிய ஒன்று. ஆனால் சரியான மருத்துவம் சரியான நேரத்தில் தரத்தவறினால் அது உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும். சில நண்பர்களின் வீட்டுக் கதை அப்படியும் ஆகி இருக்கிறது.

3 - கிவி பழம் குடுத்தால் குணமாகிறது என்று ஒரு வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. இதனால் ஒரு பழம் 25 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த கிவி இப்போது 50 ரூபாய்க்கும் மேலே விற்கிறது. விட்டமின் சி அதிகம் இருக்கிறதென்னமோ உண்மை தான். ஆனால் டெங்குவினால் அசிடிட்டி / நெஞ்செரிச்சல் அதிகம் இருக்கும். இந்தப் பழத்தில் அமிலத்தன்மை அதிகமாய் இருக்கும். இது அசிடிட்டியை அதிகப் படுத்தக் கூடும். மேலும், இந்தப் பழத்தினால் டெங்கு குணமாகிறது என்று எந்த ஒரு மருத்துவ ஆய்வு குறிப்புகளும் கிடைக்கவில்லை. ஆகவே மருத்துவர் என்ன உணவு தரச் சொல்கிறாரோ அதை தொடர்ந்து கொடுங்கள்.

4 - பப்பாளி இலைச்சாறு ப்ளேட்லெட்ஸ் எண்ணிக்கையை அதிகப் படுத்த உதவுகிறது.  மருத்துவ ரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.   இப்போது இது மாத்திரையாகவே கிடைக்கிறது என்றாலும், பறித்து நீரில் கழுவி, பெரிய நரம்புகளை நீக்கி அதை உரலில் இட்டு அரைத்து அதன் சாறு பிழிந்து நாம் தருவது இன்னும் பலன் அளிக்கக் கூடும். ப்ளேட்லெட் இஞ்ஜெக்சன் போட்ட பிறகு, 5 மணி நேரத்துக்கு 3 ஆயிரம் வீதமாக அதிகரித்துக் கொண்டிருந்த எண்ணிக்கை, பப்பாளிச் சாறு 5 மி.லி கொடுத்ததும் அடுத்த பரிசோதனையில் 20க்கும் மேலாக எண்ணிக்கை கூடி இருந்தது. இதுவும் மருத்துவரை கலந்தாலோசித்து, அவரைக் கேட்டுக்கொண்டே கொடுத்தது.  பொதுவாக 5 மி.லி  ஒரு வேளைக்கு என காலை மாலை கொடுக்கலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.  ப்ளேட்லெட்ஸ்களின் சேதாரத்தைக் கணக்கில் கொண்டு இந்த அளவு மாறக்கூடும்.  மருத்துவ அறிக்கையில் 25 மி.லி வரைக்கும் கூட கொடுத்ததாக படித்தேன். 

5 - டெங்கு வைரஸ் வந்துவிட்டால் குறைந்தது 7 -8 நாட்கள் தான் வைரஸின் வாழ்நாள். அதுவரைக்கும் ப்ளேட்லெட்ஸ் எண்ணிக்கையை மிகக் குறைவாக போகவிடாமல் பார்த்துக் கொண்டால், உடல் மீண்டும் நல்ல ஆரோக்கியம் பெற்றுவிடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதற்கு கண்டிப்பாக மருத்துவர்களின் உதவி தேவை.

6 - ப்ளேட்லெட்ஸ் வேகமாக குறைகிறது என்று அறிந்தால், முன்னெச்சரிக்கையாக, இரத்த வங்கி இருக்கும் மருத்துவ மனைக்கு சென்றுவிடுவதும், தேவையான இரத்தம் வழங்க தயாராக இருப்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பதும் அவசியம்.

7- டெங்குவை பரப்பும் கொசு சாக்கடை நீரில் இருந்து வரும் என்பதெல்லாம் தவறு. கொசு நம்மைச் சுற்றி தேங்கி இருக்கும் நல்ல நீரில் தான் அதிகம் வளரும். குறிப்பாக நீர்த்தொட்டி, பூத்தொட்டி, கொட்டாங்குச்சி போல எங்கெல்லாம் நீர் தேங்க வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் டெங்குவின் அபாயம் உள்ளது

9 - டெங்கு பெரும்பாலும் பகலில் தான் கடிக்கும். ஆனால் இரவில் கடிக்காது என்பதல்ல. ஆகவே எந்த நேரமும் நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். டெங்குவிற்கான அறிகுறி தெரிந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

10 - டெங்குவிற்கான அறிகுறிகள் : அடிக்கடி வாந்தி வருவது, அல்லது வாந்தி உணர்வு, நெஞ்செரிச்சல், தொடர்ந்து வரும் காய்ச்சல், உடல் வலி, மூட்டுகளில் வலி, பசியின்மை, குளிர்க்காய்ச்சல், கண்களின் பிற்புறம் வலி, தலைவலி, தொண்டையில் வலி, தசைகளில் வலி என எல்லாம் கலந்து கட்டி வரும். ப்ளேட்லெட்ஸ் குறையக் குறைய மூக்கில் இரத்தம் வருவது, உடலில் ஆங்காங்கே சிவப்புப் புள்ளிகள், அல்லது அரிப்புடன் கூடிய தடிப்பு ( Rashes ) 

மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புவது ஒன்று தான். டெங்கு குணப்படுத்தக் கூடியது. தேவையில்லாமல் தானே மருத்துவம் செய்து கொள்கிறேன் என்று ( எனக்கு வந்த ஆலோசனைகளில் ஒன்று .. 6 கிவிப் பழத்தை ஒரே நாளில் தரச் சொல்லிச் சொன்னார்கள்.. ) வினையை இழுத்துப் போட்டுக் கொள்ளத் தேவை இல்லை. மருத்துவர்கள் கையில் விட்டுவிடுங்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். கொஞ்சம் உடல் தேறியதும் வேண்டுமானால், மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து உங்களில் கை மருத்துவத்தை பயன் படுத்துங்கள்.

Be Safe!

மருத்துவர்கள் யாரும் இங்கே இருந்தால், இதில் இருக்கும் தவறுகளைத் திருத்தலாம். 

அன்புடன்
ஐயப்பன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasal+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/thamizhvaasal.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
Reply all
Reply to author
Forward
0 new messages