Re: அணில் - (மீ.விசுவநாதன்)

9 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 3, 2016, 9:12:35 PM9/3/16
to சந்தவசந்தம், Saravanan Palanisamy, vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panb...@googlegroups.com

On Thursday, September 1, 2016 at 9:46:00 AM UTC-7, meev1955 wrote:

அணில்

(மீ.விசுவநாதன்)

தென்னை ஓலையின் நுனியில்

தொங்கிய படியும்

கொய்யா மரக்கிளையில்

குறுக்கும் நெடுக்குமாக ஓடியும்

நல்ல ஒரு பழத்தைத் தேர்ந்து

தன் மணிவாயால்

ஒரு கடி கடிக்கிறது அணில்...

கீழே ஒருவன்

கையின் கவணுடன் குறிபார்க்க

மேலே வல்லூறு வட்டமிட

அணிலோ

பழத்தின் ருசியில் தியானம்

நானோ

அணிலின் உருவில் உலகில்.....

(01.09.2016  22.09 PM)

அழகு!  அணிலின் தோகை, அதன் ஏரோடைனமிக் பயன் பற்றியும் தமிழ்க்கவிகள் பேசவேண்டும்.

தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரம் நினைவுக்கு வருகிறது:
குரங்குகள் மலையை நூக்கக் 
     குளித்துத்தாம் புரண்டிட் டோடி 

தரங்க நீ ரடைக்க லுற்ற 
     சலமிலா அணிலும் போலேன்

இராமபிரான் அணிலைத் தடவியதால் மூன்றுகோடுகள் என்பது நம் புராணம்.
காளிதாச நாகர் (Nag) என்னும் வங்கப் பேராசிரியர் சென்னைப் பல்கலையில்
மேஜிக் லேண்டர்ன் வைத்துக் காட்டிய காட்சியில் இந்தோனேசியாவில் இச்சிற்பம்
இருப்பதாகக் குறிப்பிட்டாராம் (மு. ராகவையங்கார் எழுதியுள்ளார்). 80-90 வருஷம் முன்னாடி.
 அதன் படம்தேடிக் கொண்டுள்ளேன். ஒருநாள் கிடைக்கலாம். காளிதாஸ் நாகரின் மகனும்
இப்போதைய ஆங்கிலக் கவிஞர், பெயர் சட்டென நினைவுக்கு வரலை. 

விலங்கின் வால் முடியுடையதாக இருப்பின் “தோகை” என்பது தமிழ். (திவாகரம்).
நாய், குதிரை, அணில், புலி இவற்றின் வால் தோகை எனப்படும். 
வார்த்தல் - கீழே விழுதல். ர/ல மாற்றத்தில் வார் வால் என வரும். புச்சம் என்பதும் தமிழ்முளை கொண்டதே.
நீர்-/நீலம் ~ இந்திய உபகண்டம் முழுமையும் நீலம் என்னும் தமிழ்ச்சொல் blue color-கு இருப்பது நம் தமிழின்
பழமையை அறிவிக்கிறதன்றோ? நேர்- > ஏலவே/ஏற்கெனவே என ர்/ல் மாறுபாடு:

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் - கண்ணதாசன்

ஏரோப்ளேனின் Control Surfaces ( https://en.wikipedia.org/wiki/Flight_control_surfaces ) -ல் முக்கியமானது Rudder.
கண்ணதாசன் பாட்டை கொஞ்சம் விரிவு செய்தால் “அணிலின் தோகையைக் கண்டான், விமானத்தோகை (சுக்கான்) படைத்தான்” எனலாம்.
 A squirrel’s tail helps stabilize its movements and acts as a rudder when it jumps.

File:Aileron yaw.gif

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 4, 2016, 12:59:16 AM9/4/16
to சந்தவசந்தம், pshara...@gmail.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.

அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.
4200 வருஷம் முன்னால் சிந்து  யுனிகார்ன் முத்திரையில் அணிற்பிள்ளை:

சணில் என்ற சொல் துளுவிலும், பழைய கன்னடத்திலும் அணிலுக்குண்டு. செணில் என்னும் சொல் சணில் > அணில் ஆகியிருக்க வேண்டும்.
ஸஹஸ்ர > சாயிரம் (கன்னடம்) > ஆயிரம் தமிழில் 1000 என்பதன் எண்ணுப்பேர் ஆதற்போல என்க.

வேண்மாள் அந்துவஞ்செள்ளை - பதிற்றுப்பத்து. புலவர் நச்செள்ளை.

செள்- செண்- (செண்டு = பூங்கொத்து) - செண்ணம். அழகான பூங்கொத்துப் போன்ற தோகை உடைய விலங்கு = செணில்/சணில் > அணில்.
செளில் > அளில் என்று ஆகியுள்ளது எனலாம்.

DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.

செண்ணம்/சென்ன- சென்னகேசவன் - வேளூரில் (Belur) செண்ணம் - வடிவு, அழகு, பூவேலை, ஒப்பனை, நுண்டொழில் (நச்சர் உரை).

2423 Ka cannu, cennu straightness, beauty, grace, niceness, properness, elegance; canna, cenna a man of beauty, a handsome man; fem. canni, canne, cenne; cannage handsomely, nicely, properly; canniga a handsome, fine man. Tu. canna handsome, well. Te. cennu beauty, grace, elegance, manner, way. Cf. 328 Ko. anv and 2328

 செண்ணம் அமைத்த செம்பொன் பட்டத்து வண்ண மணியொடு முத்து இடை விரைஇய (பெருங்கதை)

இன்தீம் பைஞ்சுனைத் தண் நறுங் கழுநீர்-இனிய தீவிய பசுமை வாய்ந்த சுனையில் உள்ள தண்ணிய நறிய குவளைப் பூவுடன் இயன்ற, ஈரணிப் பொலிந்த - பெரிய ஒப்பனையாற் பொலிவுற்ற, செண் இயல் சிறுபுறம்-கொண்டை அசைதலையுடைய முதுகினை (அகநானூறு)

ஆக,

கிளைக்குக் கிளை தாவவும், மரம் ஏற இறங்கவும் பல கோணங்களில் உதவும் அணில் தோகையின் அழகு மக்களை ஈர்த்துள்ளது. எனவே,

சினையாகுபெயராய் செணில்/சணில் என்று பெயரிட்டனர். சணில் > அணில் (Cf. சிப்பி > இப்பி).

கடுக்காய் மரத்துக்கும் இப்பெயரே உண்டு:
DEDR 119 Ka. aṇile, aḷale, aḷile, aḷule, aḷḷi, aḷḷe a large tree furnishing Indian myrobalans or ink nuts, Terminalia chebula Roxb. Tu. aṇile-kāyi gall-nut, ink-nut; aṇile-mara ink-nut tree, T. chebula; alḍe-kāyi gall-nut, T. c. DED(S) 101.
அணில்தோகை போல கடுக்காய்மர புஷ்பங்கள் இருப்பதால் இரண்டுக்கும் ஒரே பெயர்.

N. Ganesan

unread,
Sep 10, 2016, 1:30:02 AM9/10/16
to மின்தமிழ், santhav...@googlegroups.com, pshara...@gmail.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com
On Saturday, September 3, 2016 at 9:59:14 PM UTC-7, N. Ganesan wrote:
மீவியின் அணிற்கவிதை அணிலின் பழைய பெயரைச் சிந்திக்கவைக்கிறது.

அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை - பிள்ளை பெயர்பெற்ற செல்லங்கள் (pets) இந்தியாவில் பலகாலமாக உண்டு.
4200 வருஷம் முன்னால் சிந்து  யுனிகார்ன் முத்திரையில் அணிற்பிள்ளை:

சணில் என்ற சொல் துளுவிலும், பழைய கன்னடத்திலும் அணிலுக்குண்டு. செணில் என்னும் சொல் சணில் > அணில் ஆகியிருக்க வேண்டும்.
ஸஹஸ்ர > சாயிரம் (கன்னடம்) > ஆயிரம் தமிழில் 1000 என்பதன் எண்ணுப்பேர் ஆதற்போல என்க.

வேண்மாள் அந்துவஞ்செள்ளை - பதிற்றுப்பத்து. புலவர் நச்செள்ளை.

செள்- செண்- (செண்டு = பூங்கொத்து) - செண்ணம். அழகான பூங்கொத்துப் போன்ற தோகை உடைய விலங்கு = செணில்/சணில் > அணில்.
செளில் > அளில் என்று ஆகியுள்ளது எனலாம்.

DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.

செணில்/சணில் த- என்று திரிதலுக்கு ஒப்பீட்டு உதாரணங்கள்:

(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

N. Ganesan

unread,
May 10, 2017, 9:02:17 AM5/10/17
to மின்தமிழ், santhav...@googlegroups.com, pshara...@gmail.com, vall...@googlegroups.com, minT...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, Dr. Krishnaswamy Nachimuthu, sirpi balasubramaniam, Iravatham Mahadevan, K Rajan, S. V. Shanmukam, George Hart
I am attending a conference on Tirukkural at Nagercoil:

செணில் > தணில் (= அணில்), துளுவில்.

சொல்முதல் ச்- > த்- ஆதற்கு உதாரணங்கள் பல உள.

எள்ளு சிந்துவெளியில் முக்கிய வெள்ளாமை.

அதன் வடமொழிப் பெயர் தில- என்பது. தைலம் = எண்ணெய். (சிவன் சமயம் சைவம் என்பதுபோல்).

சில்- (சில்+து = சிறு) - சிறிய தானியம் என்பதற்கு சில- > தில- என்றி வட இந்தியாவில் திரிந்து வழங்குகிறது,
சில > தில எள்ளின் அளவுபற்றி பிறந்த பெயர். ஞெள்ளு/நெள்ளு > எள்ளு கருமை பற்றி எழுந்த பெயர்.

சிரீ > திரி (நம்பூதிரி, பௌவத்திரி (துறைமுகம்), ...) > திரு ...

மேலும், இதுபோன்றனவற்றிற்குக் காட்டுகள் சில!
(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

நா. கணேசன்

DEDR 2315 Ta. aṇil, aṇilam

2315 Ta. aṇil, aṇilam, (Ag., p. 175) aṇiyal, (Koll.) aṇṇattān squirrel. Ma. aṇil, aṇṇal, aṇṇān id.; eṇuṅku a variety of mountain squirrel. Ko. e·ṇḍḷ squirrel. To. aṇil id. Ka. aṇal, aṇil, aḷale, aḷil, aḷul, aḷḷūma, āḷindaki, iṇaci, (Bark.) caṇila id. Koḍ. aṇekoṭṭï id. Tu. caṇilů, canilů, taṇilů, (B-K. also) aṇilů id. DED(S) 1911.

செணில்/சணில் த- என்று திரிதலுக்கு ஒப்பீட்டு உதாரணங்கள்:

(1) செச்சை ‘Scarlet Ixora'/செச்சி (பூ) > தெச்சி/தெத்தி (பூ)
செச்சைக் கண்ணியன் (திருமுரு 208).
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய (திருப்புகழ்)

> தெச்சி மந்தா³ரம் துளஸி பிச்சக மாலகள் சார்த்தி
> கு³ருவாயூரப்பா நின்னெ கணி காணேணம் (2)

(2) யாமை > சாமெ > தாபேலு, தாம்பேலு (தெலுங்கு)
(3) சிரீ (< ஸ்ரீ) > திரி/திரு (நம்பூ-திரி)
(4) சப்- “to beat, to cruch" சப்பளிசு, சப்பாணி > தப்பளிசு
(5) சுறா > துறாவு (மலையாளம்)
(6) செள்ளு > தெள்ளு
(7) சொட்டு > தொட்டு (கன்னடம்)
(8) செம்மல் ‘wet, dampness' >  தேம, தைம்ய (தெலுங்கு, இந்தி)
(9) சளி > தள்- ‘cool' (சண்ணீள்ளு ‘cold water' தெலுங்கு)
(10) சார்தல் > தாரு (தெலுங்கு)
(11) சுப்பு (சுவை) > துப்பு
etc., 

N. Ganesan

unread,
Jul 9, 2018, 10:00:24 PM7/9/18
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages