தங்கமலை ரகசியம்

7 views
Skip to first unread message

செல்வன்

unread,
Apr 9, 2018, 1:09:47 AM4/9/18
to செல்வன்
தங்கமலை ரகசியம் (1957) பார்த்தேன்.

சிறுவயதில் விடியோவில் பார்த்த படம். கதை அதனால் மறந்துவிட்டிருந்தது. புதுசா பார்ப்பது போல ரசித்து பார்த்தேன்.

கதை பலருக்கும் தெரிந்திருக்கலாம்.....அதனால் அதை எழுதவில்லை. யுடியூபில் முழுபடமும் உள்ளது.

மூன்றேகால் மணிநேர படம். சுமார் முதல் 30 நிமிடம் நம்பியார், டி.ஆர்.ராஜகுமார், எம்.வி.ராஜம்மா பிளாஷ்பிக்கேலேயே கழிகிறது. இப்பல்லாம் இதை ஐந்து நிமிடத்தில் சொல்லிமுடித்துவிடுவார்கள். ஆனால் பழையகால ஸ்டைலில் மெதுவாக முன்கதையை பாடல்களுடன் காண்பது மிக வித்தியாசமகாவே உள்ளது. நம்பியாருக்கு மிக பாஸிடிவான வேடம். வேலைககரியை ஏற்றதாழ்வு பாராது மணக்கும் சக்க்ரவர்த்தி வேடம்.

ஜமுனா நடித்த சில தமிழப்டங்களில் ஒன்று. ஒல்லியாக, அழகாக இருக்கிறார். அமுதை பொழியும் நிலவே பாடல் சுசீலாம்மாவை உச்சிக்கு கொண்டுபோன பாடல். பலமுறை நிறுத்தி ஓட்டி, ஓட்டி கேட்டேன்

சிவாஜி அந்த பாடல்காட்சியில் தான் ஜமுனாவை சந்திக்கிறார். டார்ஜான் மாதிரி வித்தியாசமான வேடம். கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளிக்கிறார். யானைகள் மேல் அன்புகாட்டும் காட்சியிலும், குடும்பமாக நினைத்து விடைபெறும் காட்சியிலும் மனதை கவர்கிறார்.

சாரங்கபாணி, டி.ஆர். ராமச்சந்திரன் காமடி காட்சிகளில் கலக்குகிறார்கள். ராஜா காது கழுதை காது கிரேக்கத்தில் புகழ்பெற்ற சிறுகதையின் தமிழாக்கம். நன்றாகவே உள்ளது.

கே.சாரங்கபாணி 50களின் புகழ்பெற்ற காமடி நடிகர். தற்போதைய நடிகர் தியாகுவின் தாத்தா என கேள்விபட்டேன். அலிபாபாவும் 40 திருடகளும் படத்தில் இவர் சொல்லும் "அல்லா, இது உனக்கு நல்லா இருக்கா" டயலாக்கும் எம்.வி.ராஜத்துடன் பாடும் "சின்னஜ்சிறு சிட்டே எந்தன் சீனா கல்கண்டே" பாடலும் மிக பிரசித்தி.

இசையமைப்பாளர் லிங்கப்பா பின்னாளில் கன்னட திரையுலகத்துக்கு போனது நமக்கு இழப்பே. "அமுதை பொழியும் நிலவே" பாடல் மாதிரி இனி ஒரு பாடல் எந்த காலத்தில் நமக்கு கிடைக்கபோகிறது?

60 ஆண்டுகள் தாண்டியும் இன்னும் மனதில் நிற்கும் படம்.இப்படத்தில் நடித்த மெயின் கேரக்டர்களில் தற்போது இருப்பது ஜமுனா மட்டுமே என நினைக்கிறேன்.




--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages