Re: [MinTamil] Re: காதம் எவ்வளவு தூரம்

6 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 14, 2016, 3:58:15 AM7/14/16
to மின்தமிழ், vallamai, Santhavasantham, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, panb...@googlegroups.com, tiruva...@googlegroups.com


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை



1 யோசனை = 1 காதம் என்று பல தமிழ் நூல்களில் கையாண்டுள்ளார்கள். உ-ம்: நைடடம் 10 யோசனை என்பதை நாலாறு (4+6) காதம் என்கிறது நளவெண்பா. எனவே, 1 காதம் = 1 யோசனை.

1 காதம்/காவதம் = 4 குரோசம்.
அதேபோல்,
1 யோசனை = 4 குரோசம். (சென்னைப் பேரகராதி)

இதனை, கந்தபுராணச் செய்யுள் கொண்டு காட்டலாம்:

அங்குலம் அறு நான்கு எய்தின் அது கரம் கரம் ஓர்  நான்கு 
தங்குதல் தனு என்று அகும் தனு இரண்டு அது ஓர்  தண்டம் 
இங்கு உறு தண்டம் ஆன இராயிரம் குரோசத்து  எல்லை 
பங்கம் இல் குரோசம் நான்கு ஓர் யோசனைப் பாலது  ஆமே. 

காளையார்கோயிற்புராணத்தின்படி 1 யோசனை = ~ 10 மைல் (அதாவது, 1 காதம்) என்றாகிறது:
முனைவர் காளைராசன் கணக்கீடு:

ஒரு யோசனை = 10 மைல் என வேளுக்குடியும் சொல்கிறார்:
/துன்புளது அன்றோ இன்பம் உளது -ஐவர் ஆனோம்-10 காதம் =100 மைல் தூரம் சித்ர கூடம் பரத்வாஜர் சொல்ல”

”-தமிழ் மா முனி-4 யோசனை 40 மைல் அகஸ்தியர் ப்ராத ஆஸ்ரமம் வரும்-பேர் சொல்ல வில்லை-மாமான் மகளே போலே/வில்லை கொடுக்கிறார்/”

சென்னைப் பேரகராதி, 1 யோசனை = 1 காதம் = ~10 மைல் எனக் குறிக்கிறது.
ஐ ஐந்து அடுத்த இரட்டி : இருபத்தைந்தின் இருமடங்கு; ஐம்பது.
நான்கு குரோசம் கொண்டது ஒரு யோசனை. இரண்டரை மைல் ஒரு
குரோசம். எனவே, யோசனை என்பது பத்து மைல் தொலைவு
ஆகிறது. காதம் என்பதும் சுமார் பத்து மைல் தொலைவு என்பர்.


காதம் = யோசனை ~10 மைல் கீழெல்லை எனத் தெரிகிறது.
இந்தியா முழுதும், ஓர் அங்குலம் = 19 மிமீ என நிர்ணயிப்பர்.
4000, 5000 வருஷமாய் உள்ள அளவைகளில் 1 அங்குலம் = 19 மிமீ என நிலையாக இருக்கிறது.

அதன் படி பார்த்தால், தணிகைப் புராணம், சிவஞான மாபாடியம் இவற்றில்
1 யோசனை (= 1 காதம்) = 18.2 மைல் வருகிறது. அதாவது, 1 குரோசம் = 18.2/4 மைல் = ~ 4.5 மைல்கள்.

இத்தத்துவங்களின் அளவு யோசனை என்ற கணக்கில் கூறப்படும். சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப்படும்.

	8	அணு		-	திரசரேணு
	8	திரசரேணு	-	இலீக்கை
	8	இலீக்கை		-	யூகை
	8	யூகை		-	இயவை நெல்லு
	8	இயவை நெல்லு	-	அங்குலம்
	24	அங்குலம்	-	முழம்
	4	முழம்		-	வில்லு
	2	வில்லு		-	தண்டம் 8 (முழம்)
	2000	தண்டம் 		-	குரோசம்
	4 குரோசம்		-	யோசனை 64,000 (முழம்)

மேற்கண்ட கணக்கில் ஒரு யோசனை என்பது 18. 2160 மைல்கள் அல்லது 29.09 கிலோ மீட்டர் ஆகும். 


அலெக்சாண்டர் கானிங்காம் கொடுக்கும் தென்னிந்தியாவின் காதம் ~16 மைல் என்பதுடன் இந்தப் ~18 மைல் (=1 யோசனை) பொருந்துகிறது.
ரைஸ், புக்கானன், ... 1 காதம்/காவதம் ~14மைல் என்பர்.
-------------------------------

சைனர்கள் 4 காதம் = 1 யோசனை என்றும் சொல்வர். தீர்த்தங்கரர் உயரம் போன்றன மிகைப்படுத்தலாக உள்ளது: https://en.wikipedia.org/wiki/Tirthankara
அதுபோல, ஒரு காதம் ~10 மைல் என எடுத்தால், 1 யோசனை = 40 மைல் என்று ஆகிறது.

உ-ம்: நாலடியார் பாட்டுக்கு உரையில். நச்சினார்க்கினியரின் சிந்தாமணி உரை.

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல்

கடிப்பு - முரசறையுங் கோல், காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப. முழங்கியதென்பது முழங்கிய ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை'1 என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சான்றோராற் கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது பெறப்படும்; "நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்டல்" 2 என்றார் பிறரும்.


ஆனால், பொதுவாக, இருக்கிற சான்றுகளை வைத்துப் பார்த்தால்
1 யோசனை = 1 காதம் = ~ 12 மைல்  (~9 - ~18 மைலுக்கு இடையே).

அதன்படி பார்த்தால், 3 நாட்டையும் காட்டும் சிலம்பின் நாடுகாண்காதையில்
கவுந்தியடிகள் பள்ளி - மேற்குத்தொடர்ச்சிமலையில் தலைக்காவேரி அருகே.
மதுரையில் இருந்து ~360 மைல் வடக்கே இருந்துள்ளது. பின்னர், சீரங்கபட்டினம் (அரங்கம்)
வந்து, அந்தசாரணர் (விண்ணவரைக் கண்டு), வழியில் வம்பப் பரத்தை (harlot),
வறுமொழியாளன் (trifler) ... எல்லாம் சந்தித்து, மலைவளமும், அங்கே உள்ள
உழவர்களின் வேளாண்மையும் கண்டு கடைசியாக திருச்சி (உறையூர்) வருகின்றனர்.
உறையூரை வாரணம் என்கிறார். நாடுகாண் காதைக்கு ‘மாடல்’ கண்டவ்யூகம்
என்னும் மகாயான சூத்திரம். போரோபுதூர் ஸ்தூபி கண்டவ்யூகந்தான்.

நா. கணேசன்



N. Ganesan

unread,
Sep 8, 2016, 9:42:30 PM9/8/16
to மின்தமிழ், SUBBAIER RAMASAMI, SUBBAIER RAMASAMI, Santhavasantham, vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com


On Wednesday, July 13, 2016 at 6:11:07 AM UTC-7, elandhai wrote:
சாண் முழம் கணக்குப்படி பார்த்தால்      சாண் என்பது 9 அங்குலம்

ஒரு முழம் ஒன்றரை அடி.  ஒரு கோல் - 6 அடி    கூப்பிடு  3000 அடி     ஒரு காதம்   12000 அடி . அதாவது 2.273 மைல். . காதம் என்பது கிட்டத்தட்ட 10 மைல் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு காலத்தில்,   நிமிடத்தை விநாடி என்றும்  செகண்டை நொடி என்றும் சொல்லியிருக்கிறார்கள்.


பாரதியார் 3-4- 1909ல் இந்தியா பத்திரிகையில் எழுதியுள்ள திசைகள் என்ற கவிதையில்


ஒரு நொடிப்போதில் ஓர் பத்து
ஒன்பதாயிரமாம் காதம்
வருதிற லுடைத்தாஞ் சோதிக்
 கதிரவன் வகுப்பானான்றோர்
கருதவும் அரிய தம்மா!

என்கிறார். அதாவது  ஒரு நொடியில் ஒளி செல்லும் தூரம் 19000 காதம் என்கிறார். அதாவது 1,90,000 மைல்.   கிட்டத்தட்டச் சரிதான். ஒளியின் வேகம் 1,86,000 மைல்.

சூரியனிடமிருந்து பூமிக்கு ஒளிவர

கதிருடை விரைவும் அஃது
பருதியின் நின்றோர் எட்டு
விநாடியிற் பரவு மீங்கே” என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் என்பது அவரது கணக்கு. அதுவும் சரிதான். சரியான அளவு எட்டு நிமிடங்கள் 20 நொடிகள்.

காதம் என்பதைப் 10 மைல் என்று கொள்வதுதான் பொருத்தம் என நினைக்கிறேன்.  ஒரு காதத்திற்கு 6.5 கி மீ என்றும் இல்லை அதில் பாதி என்றும் சொல்பவர்கள் உண்டு. பலத்த ஆய்வு நடைபெற்றிருக்கிறது. ஆனால் முடிவுதான் எட்டவில்லை.

“ மண்டலத்தை அணுவணு வாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை” என்கிறான் பாரதி.

ஒரு யோசனை என்றால் எவ்வளவு தொலைவு?

இலந்தை


யோஜனை Yoking என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான சம்ஸ்கிருதச் சொல். காவதம் (Gaavada) என்பதும் எருதுகள் பூட்டுவதை (யோஜனம், Gau - எருதுகள்)க் குறிப்பதே. ஒருநாள் பிரயாணம் எவ்வளவு  தொலைவோ அவ்வளவைக் குறிப்பிடும் சொற்கள். 10 யோசனை (நைடதம்) = 10 காதம் (நளவெண்பா). 1 யோசனை = 1 காதம் என்பது பொதுவாக எடுக்கும் பொருள். சிரமண சமயங்கள் உயர்வுநவிற்சியுடையன. தீர்த்தங்கரர்கள் உயரம், போதிசத்துவர்கள் உயரம் எல்லாம் கற்பனைக்கும் அதிகமான வடிவில் சொல்லப்படும் அச்சமயங்களில். சில சமயம் 4 காதம் = 1 யோசனை என்பது அம் மதங்களில். அப்படிப் பார்த்தால், 1 காதம் = 10 மைல் (சென்னைப் பேரகராதி, பாரதியார்) என்றால், அப்புறம் யோசனை 40 மைல் ஆகும்! வதன சரோருக எனத் தொடங்கும் திருப்புகழில் 1 காதம் = 12 மைல் என அருணகிரிநாதர் கொடுத்துள்ளார். ஏனெனில் வள்ளிமலை - திருத்தணி தூரம் நாம் நிச்சயிக்கமுடியும். அதேபோல், பூவணப் புராணமும் 1 காதம் = 12 மைல் என்றே காட்டுகிறது. கந்தபுராணம், சிவஞான மாபாடியம் 1 யோசனை = 18 மைல் என்கிற அளவைக் கொடுக்கிறது.

பாரதியார் ஒரு காதம் = ஒரு யோசனை என்று கொண்டுள்ளார். எவ்வாறு தெரிகிறது என்றால், நீங்கள் கொடுத்துள்ள பாரதி வாசகம் ரிக்வேதத்தின் 1.50 சுலோகத்தின் சாயண பாஷ்யத்து மொழிபெயர்ப்பு.
சாயணர் யோசனை என்ற இடத்தில் காதம் என்று பயன்படுத்துகிறார் பாரதியார்.

Sāyaṇa (c. 1315-1387) was a minister in the court of King Bukka I of the
Vijayanagar Empire in South India; he was also a great Vedic scholar who
wrote extensive commentaries on several ancient texts. In his commentary
on the fourth verse of the hymn 1.50 of the Rigveda on the sun, he says:

tathā ca smaryate yojanānāṃ sahasre dve dve śate dve ca yojane
ekena nimiṣārdhena kramamāṇa namo 'stu ta iti

Thus it is remembered: [O Sun,] bow to you, you who traverse
2,202 yojanas in half a nimeṣa.

We have no knowledge that Sāyaṇa was an astronomer and he acknowledges
that he is only quoting from an old tradition, so we label this note as
"Sāyaṇa's astronomy" only in the sense of what was known by his time in
the fourteenth century.

Padmakar Vishnu Vartak in a recent book has argued that this statement
refers to the speed of light. He says, "One Yojana is equal to 9 miles,
110 yards = 9 1/16 miles = 9.0625, ...and according to Mahābhārata,Sānti
Parva, 231, half a nimeṣa equals 8/75 seconds. If calculated on this data the
velocity of light comes to 187,084.1 miles per second... Sir Monier Williams
gives one Yojana equal to 4 Krosha = 9 miles. Taking 1 Yojana = 9 miles,
the velocity comes to 186,413.22 miles per second. The well accepted popular
scientific figure is 186,300 miles per second."

பாரதியார் சாயண பாஷ்யம் படித்திருக்கிறார்.

நா. கணேசன்

ஒருமுறை சுபாஷ் காக் (கஷ்மீரி பண்டிதர், எலெக்ட்ரிகல் எஞ்சினீயர்) இங்கே மீனாட்சி கோயிலில் பேசச் செய்தோம்.

ஒரு யோசனை = ஒரு காதம் (= ~10 மைல்) நடந்த எருதுகள் இளைப்பாறுகின்றன.
நண்பர் சுப்பராமன் அழகிய ஓவியமும், வி. சிந்தாமணிப் பாடலும் தந்துள்ளார்:


N. Ganesan

unread,
Sep 9, 2016, 9:26:53 PM9/9/16
to மின்தமிழ், elan...@gmail.com, kavim...@gmail.com, santhav...@googlegroups.com, vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
நிமைத்தல் = இமைத்தல். இரத சுரமுலை எனத் தொடங்கும் அருணைத் திருப்புகழில்: 

நிமேஷம் = வடமொழியில் இமை மூடி விழிக்கும் நேரம். இது எத்தனை செகண்ட்?
(1)
(2)

ஒரு நிமேஷம் = 16/75 செகண்ட் எனக் கணித்துள்ளனர். அதனை சாயணர் கொடுக்கும் கணக்கு சூத்திரத்தில் பயன்படுத்துவோம்:
சாயணர் கொடுக்கும் ஒளியின் வேகம்:
(2202 * 9.0625) / (8/75)  = 187083.98 mps
ஒரு யோசனை = 9.06 மைல்
அரை நிமேஷம் = 8/75 செகண்ட்.

இதனைத் தமிழில் தந்துள்ளார் பாரதியார்.

N. Ganesan

unread,
Sep 22, 2016, 9:44:11 PM9/22/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

On Tuesday, September 20, 2016 at 2:32:49 AM UTC-7, Jalasayanan wrote:

 

இவண் காதம் என்பது 20 கிலோ மீட்டர் என தெரிகிறது.

 

 கோடிக்கும் வேதைக்கும் காதம்; 
வேதைக்கும் கள்ளிக்கும் காதம்; 
கள்ளிக்கும் பூண்டிக்கும் காதம்; 
பூண்டிக்கும் நாகைக்கும் காதம்; 
நாகைக்கும் காரைக்கும் காதம். 
(கோடி. கோடிக்கரை வேதை. வேதாரண்யம், 
கள்ளி.கள்ளி மேடு, பூண்டி-திருப்பூண்டி. 
இப்படியே காசிவரைக்கும் உண்டு என்பர்.) 
இவண் காதம் என்பது 20 கிலோ மீட்டர் என தெரிகிறது.



கிவாஜ, தமிழ்ப் பழமொழிகள், நூலில் கொடுத்துள்ளதுபோலவே
இன்னொரு பழமொழியும் தஞ்சைப் பகுதியில் வழங்குகிறது.
இதனாலும், 1 காதம் = 20 கிமீ உறுதிப்படுகிறது.

’பாரதியின் வேதமுகம்’ போன்ற நூல்களின் ஆசிரியர்
சைவத்திரு. சு. கோதண்டராமன் அவர்கள் மின்தமிழ் குழுவில்
12/10/2010 அன்று குறிப்பிட்டுள்ளார்:
நாகைக்கும் காரைக்கும் காதம், 
காரைக்கும் கடையூருக்கும் காதம்,
கடையூருக்கும் காழிக்கும் காதம், 
காழிக்கும் தில்லைக்கும் காதம் என்று
ஒரு வழக்கு அந்தப் பகுதிகளில்- நாகப்பட்டினம், காரைக்கால்,
திருக்கடையூர், சீர்காழி, சிதம்பரம்- கேட்டிருக்கிறேன். 
சொல்லப்பட்ட ஊர்களுக்கு இடையேயுள்ள தூரம் 
ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் உள்ளது. விக்ரமன்”

இதை இன்னொருவரும் எழுதியுள்ளார்.
கோவி. கண்ணன் தன் வலைப்பதிவில் இதே பழமொழியை
தன் தாயிடம் கேட்டதைப் பதிவுசெய்து வரைபடத்திலும்
காட்டியுள்ளார்.





































நா. கணேசன்
 

நல்ல சான்று. கிவாஜ அளித்துள்ளார். இன்னும்  லட்சம் நூல்கள் பிடிஎப், பக்கம் பக்கமாக மிஷினில் பிரித்து ஓசிஆரில் போட்டால்
தமிழ் வளரும். அரசும், அதிகாரிகளும் செய்யவேண்டும். பணம் தர அரசாங்கம் டில்லி, சென்னையில் தயாராக உள்ளது. செய்தற்கு
ஆள் காணோம். இலக்கியப் பயிற்சியும் குறைவாக உளது.

---------------------------------

கர்நாடகம், தமிழகம் இரண்டிலும் இலக்கிய, தொல்லியல் சான்றுகளால் காதம் = 10 மைல் என சென்னைப் பேரகராதி கொடுத்தாலும்,
12 மைல் எனப் பயன்படுத்தி வருகிறேன். உங்கள் காதம் = 20 கிமீ  (= 12.5 miles) பொருந்திவருவதூஉங் காண்க. மகிழ்ச்சி. 

கவுந்தி/காவுந்தி, காவதம்/காதம் என்னும் கன்னட சொற்களை மிகக் கவனமாகத் தேர்ந்து காவிரிநாடு முழுதும் பாடிய
இளங்கோ அடிகளும் உரைகாரர்களும் தெளிவாக விளக்கியவற்றை விட்டுவிட்டு அண்மைக் கால உரையைப் பிடித்துக்கொண்டு
வரும் மடல்களைப் பார்க்கிறேன். பகுத்தறிவைப் பயன்படுத்தி நாடுகாண் காதையில் பூடகமாய்ச் சொல்லும் இடங்களும்,
இரண்டு பழைய உரைகாரர்களும் சீரங்கம் (பட்னம்), திருவரங்கம் வேறுபடுத்திக் தெளிவுபடுத்தியதை குழுமத்தினர் படிக்க
வேண்டுகிறேன்.

மதுரைக்கு வடக்கே ~360 மைல் தொலைவில் கவுந்தி அடிகள் பள்ளி. அந்த இடங்களில் இளங்கோ அடிகள் சமணம் பற்றி
ஆழ்ந்து கற்றிருக்கலாம். அல்லது சேரர் தலைநகர் வஞ்சியில் அவர வளர்ந்த அரண்மனையில் ஆசிரியராக வடபெருங்கோட்டு
(ஸஹ்யாத்ரியின்) சமணக் குரவர் சமயம், பிராகிருதம், த்ராவிட பாஷைகளின் சிறப்பு பயிற்றி முத்தமிழ்க் காவியம் பாடத்
தூண்டியிருக்கலாம். இளங்கோ அடிகளுக்குப் பின்னாலே கங்கக் குரிசில் உவக்க ஜினபுரத்திலே பவணந்தி முனிவர்
நன்னூல் யாத்தது நாம் எல்லோரும் அறிவோம். கொங்குவேள் பெருங்கதை செய்தது இளங்கோ அடிகளை முத்தமிழ்க்
காப்பியம் செய்யவைத்தது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. பவணந்திக்கு அப்புறம் பொப்பண காங்கேயன் ஆதரவில்
அடியார்க்குநல்லார் வருகிறார்.

பிற பின்!
நா. கணேசன்
 
Reply all
Reply to author
Forward
0 new messages