அண்ணாகண்ணனின் அகமொழிகள்

26 views
Skip to first unread message

Anna Kannan

unread,
Aug 26, 2016, 2:51:28 AM8/26/16
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
விமர்சகரின் நிலைப்பாடு, பரந்து பட்ட அனுபவம், உள்வாங்கும் திறன், உறவுநிலை, ஆதாயம் ஆகியவற்றோடு அவரது மனநிலையும் விமர்சனத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. சிறிய பிழைகளைப் பெரிதுபடுத்துவதிலும் பெரிய குற்றச்சாற்றுகளை ஒன்றுமில்லாமல் ஆக்குவதிலும் தேர்ந்த வழக்குரைஞரைப் போல் அவர் செயல்படுகிறார். சிறப்பம்சங்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதிலும் மென்மையான / கடுமையான அணுகுமுறையை அவர் கையாளலாம். மேலும், விமர்சனம் எப்போதுமே முழுமையானது இல்லை. தேர்ந்தெடுத்த சில புள்ளிகளின் தொகுப்பே. எனவே, படைப்பை ஒருவரின் அந்த நேரத்தைய வெளிப்பாடு என்றும் விமர்சனத்தை ஒருவரின் அந்த நேரத்தைய பார்வை என்றும் எடுத்துக்கொள்வது, நல்லது. (அகமொழி 1030)

Anna Kannan

unread,
Aug 30, 2016, 2:51:13 PM8/30/16
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்

எப்போதும் உர்ரென்று முறைப்பவர்கள், தங்கள் வருத்தங்களைக் கோபம் என்ற திரையிட்டு மறைக்கிறார்கள். பதிலுக்குக் கோபப்படாமல் அன்பை மேலும் மேலும் ஊட்டுங்கள். மனத்துள் ஈரமும் இதழில் புன்னகையும் அரும்பக் காண்பீர்கள். (அகமொழி 1031)

Anna Kannan

unread,
Sep 8, 2016, 12:46:46 PM9/8/16
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்

உலகில் அடிமை என எவருமில்லை; அதிகாரப் படிநிலைகள் மட்டுமே உள்ளன. (அகமொழி 1032)

Ahamed Zubair A

unread,
Sep 10, 2016, 1:53:53 AM9/10/16
to தமிழ் சிறகுகள், panbudan
அதிகாரப் படிநிலைகள் மேல இருக்குறவங்க மத்தவங்களை அடிமைப் ”படுத்துவதில்லை” :))

On 8 September 2016 at 19:46, Anna Kannan <annak...@gmail.com> wrote:

உலகில் அடிமை என எவருமில்லை; அதிகாரப் படிநிலைகள் மட்டுமே உள்ளன. (அகமொழி 1032)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Anna Kannan

unread,
Oct 22, 2016, 2:13:59 AM10/22/16
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்

தகுதிக்கு மீறி, அதிகமாய் ஆசைப்பட்டதாகச் சொல்லாதீர்கள்; ஆசைப்பட்ட அளவுக்குக் கூர்மையாக, கால எல்லைக்குள் உழைக்கவில்லை எனச் சொல்லுங்கள். (அகமொழி 1033)

Achu Sudhakar

unread,
Oct 24, 2016, 9:58:03 AM10/24/16
to பண்புடன், தமிழ் சிறகுகள்
Nice.

2016-10-22 2:13 GMT-04:00 Anna Kannan <annak...@gmail.com>:

தகுதிக்கு மீறி, அதிகமாய் ஆசைப்பட்டதாகச் சொல்லாதீர்கள்; ஆசைப்பட்ட அளவுக்குக் கூர்மையாக, கால எல்லைக்குள் உழைக்கவில்லை எனச் சொல்லுங்கள். (அகமொழி 1033)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Anna Kannan

unread,
Jan 9, 2017, 3:01:46 PM1/9/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
அளவில்லாத ஆசை என ஒன்றே கிடையாது. இன்னொரு முறையில் சொல்வதானால், உன்னால் அளவில்லாமல் ஆசைப்படவே முடியாது. (அகமொழி 1034)

Ahamed Zubair A

unread,
Jan 10, 2017, 12:39:36 AM1/10/17
to தமிழ் சிறகுகள், Vallamai, தமிழ் மன்றம், panbudan
Jio :)

2017-01-09 23:01 GMT+03:00 Anna Kannan <annak...@gmail.com>:
அளவில்லாத ஆசை என ஒன்றே கிடையாது. இன்னொரு முறையில் சொல்வதானால், உன்னால் அளவில்லாமல் ஆசைப்படவே முடியாது. (அகமொழி 1034)

--

Anna Kannan

unread,
Jan 30, 2017, 8:36:59 PM1/30/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
சித்தாந்தப் பிரமிடுகள். சித்தாந்தங்கள் வீழ்ந்த பிறகு, அவற்றின் மீது பிரமிடுகளைக் கட்டி வைக்கிறார்கள். மக்கள் அவற்றை வேடிக்கை பார்க்கிறார்கள், தற்படம் எடுக்கிறார்கள். சிலர் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலரோ, அவை உயிருடன் இருப்பதாக நம்புகிறார்கள். (அகமொழி 1035) 

Jaisankar Jaganathan

unread,
Jan 31, 2017, 12:20:54 AM1/31/17
to vall...@googlegroups.com, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
கம்யூனிஸசித்தாந்தத்தை சொல்லுறீங்களா

Anna Kannan

unread,
Feb 2, 2017, 6:12:52 AM2/2/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
இறந்த காலத்துத் துன்பங்களை ஒருவர் நினைத்துப் பார்த்து மகிழ, இப்போது அவற்றிலிருந்து மீண்டு, அவர் நல்ல நிலையில் இருக்க வேண்டும். (அகமொழி 1036)

Anna Kannan

unread,
Feb 10, 2017, 10:44:32 AM2/10/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
நேருக்கு நேர் சந்தித்து, கொம்புகளைப் பிடித்து, திமிலைப் பற்றிச் சாய்த்து அடக்கியவன், பக்கவாட்டிலிருந்து தொட்டு, தொற்றி, தொங்கி, தூக்கி எறியப்பட்டு, துரத்தப்பட்டு, ஓடி விழுவதை ஆயிரம் ஆண்டு அடர்த்தியுடன் வெறித்துப் பார்க்கிறது காளை. (அகமொழி 1037)

Anna Kannan

unread,
Feb 16, 2017, 5:53:09 AM2/16/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
தீயவர்களைத் தோற்கடிக்கச் சிறந்த வழி, அவர்களை நல்லவர்களாக மாற்றுவதே. (அகமொழி 1038)

Anna Kannan

unread,
Feb 26, 2017, 11:35:35 AM2/26/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
குற்றங்களின் எண்ணிக்கை கூடியிருப்பதாகப் புள்ளிவிவரம் வரும்போது, அவை அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கொள்ளவும் இடம் உண்டு.

போராட்டங்கள் மிகுதியாக நடைபெறுகையில், சிக்கல்கள் பெருகிவிட்டதாகவோ, முதிர்ந்துவிட்டதாகவோ உடனே கருதிவிடக் கூடாது; போராடுவதற்கான சுதந்திரம் அதிகரித்திருப்பதாகவும் கொள்ளலாம். (அகமொழி 1039)

Anna Kannan

unread,
Feb 27, 2017, 11:26:45 AM2/27/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்

பல நேரங்களில் மக்களாட்சி என்பது ஒரு புனைகதை, கற்பிதம் மற்றும் ஆடம்பரம்; தாக்கங்களுக்கு மக்கள் ஆட்படுவார்கள் எனில், அது ஒரு மாயை. இந்த அமைப்பில் சர்வாதிகாரிகள் எளிதில் தேர்வு பெறுவார்கள். மக்கள் 'உண்மைகளின்' அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள்; ஆனால், அவர்களை வந்தடைகிற உண்மைகளைக் கட்டுப்படுத்த முடியும்; மேலும், அதே தகவல்களுக்கு எப்படியும் விளக்கம் அளிக்கும் மகத்தான 'சுதந்திரமும்' உண்டு. அது முடிவுகளைத் தாமதப்படுத்தும்; எனவே, அவசர காலங்களில் அது அபாயகரமானது. (அகமொழி 1040)

Democracy is a myth, fantasy & luxury in times; if people under influence, it will be an illusion; dictators will easily get elected in this system; people will decide based on 'facts'; but, ways to restrict the data, which they receive; huge 'freedom' is there to interpret the same data; it will delay decisions; so, dangerous in emergencies. (Akamozhi 1040)

Anna Kannan

unread,
Mar 1, 2017, 1:47:04 PM3/1/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
வன்மத்துடன் சுற்றி வளைத்துத் தாக்கப்படும் ஒன்றைக் காண நேருபவர்கள், அதைக் காக்கவும் தாக்குபவர்களை எதிர்க்கவும் தன்னிச்சையாக உறுதி பூணுவார்கள். (அகமொழி 1041)

வேந்தன் அரசு

unread,
Mar 1, 2017, 3:02:45 PM3/1/17
to தமிழ் சிறகுகள், Vallamai, தமிழ் மன்றம், panbudan
எத்தனை ம்ட்டமானாலும் மாற்று இல்லாத ஆட்சிமுறை மக்களாட்சி.

27 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 8:26 அன்று, Anna Kannan <annak...@gmail.com> எழுதியது:

பல நேரங்களில் மக்களாட்சி என்பது ஒரு புனைகதை, கற்பிதம் மற்றும் ஆடம்பரம்; தாக்கங்களுக்கு மக்கள் ஆட்படுவார்கள் எனில், அது ஒரு மாயை. இந்த அமைப்பில் சர்வாதிகாரிகள் எளிதில் தேர்வு பெறுவார்கள். மக்கள் 'உண்மைகளின்' அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள்; ஆனால், அவர்களை வந்தடைகிற உண்மைகளைக் கட்டுப்படுத்த முடியும்; மேலும், அதே தகவல்களுக்கு எப்படியும் விளக்கம் அளிக்கும் மகத்தான 'சுதந்திரமும்' உண்டு. அது முடிவுகளைத் தாமதப்படுத்தும்; எனவே, அவசர காலங்களில் அது அபாயகரமானது. (அகமொழி 1040)

Democracy is a myth, fantasy & luxury in times; if people under influence, it will be an illusion; dictators will easily get elected in this system; people will decide based on 'facts'; but, ways to restrict the data, which they receive; huge 'freedom' is there to interpret the same data; it will delay decisions; so, dangerous in emergencies. (Akamozhi 1040)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

ஸ் பெ

unread,
Mar 2, 2017, 11:40:20 AM3/2/17
to panbudan
மக்களிடம் போராட்டதன்மையும் அதிகரித்து விட்டது எனலாம்..

2017-02-26 17:35 GMT+01:00 Anna Kannan <annak...@gmail.com>:
குற்றங்களின் எண்ணிக்கை கூடியிருப்பதாகப் புள்ளிவிவரம் வரும்போது, அவை அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன எனக் கொள்ளவும் இடம் உண்டு.

போராட்டங்கள் மிகுதியாக நடைபெறுகையில், சிக்கல்கள் பெருகிவிட்டதாகவோ, முதிர்ந்துவிட்டதாகவோ உடனே கருதிவிடக் கூடாது; போராடுவதற்கான சுதந்திரம் அதிகரித்திருப்பதாகவும் கொள்ளலாம். (அகமொழி 1039)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Anna Kannan

unread,
Mar 2, 2017, 2:32:18 PM3/2/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
எதைச் சொன்னாலும் ஒருவர் நம்புகிறார் எனில், அவர் மீது தவறில்லை; அவர் சரியாகத்தான் இருக்கிறார். சொல்கிறவர்களே, நீங்கள் சரியாகச் சொல்லுங்கள். (அகமொழி 1042)

Anna Kannan

unread,
Mar 10, 2017, 12:45:53 PM3/10/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
சில நேரங்களில் தூக்கம் ஒரு விமானப் பயணம் போல் அமைகிறது. ஒரு மணி நேரம் முன்பு சென்று, வசதியான உடை அணிந்து, உடலை நிலையில் இருத்தி, இருளில் அமிழ்ந்து, ஓடுபாதையில் விரைந்து, மெல்ல மேலே மேலே எழுந்து, வான் தடத்தில் மேகங்களுக்கு இடையே நீந்துவது போல், மெல்ல மெல்ல ஆழ்ந்து, நினைவுகளுக்கு நடுவே நீள்கிறது நித்திரை. (அகமொழி 1043)

Anna Kannan

unread,
Mar 15, 2017, 12:08:18 PM3/15/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
இங்கே எளிமையானவர்கள் உண்டு. படித்தவர்களும் செல்வந்தர்களும் நாவலர்களும் பட்டறிவு கொண்டோரும் பற்பலர். ஆனால், தலைமைப் பதவிக்கு இந்தத் தகுதிகள் போதா. மகத்தான கனவுகளும் செயல் திறமும் ஆக்கச் சிந்தனைகளும் அசராத உழைப்பும் துணிவும் தொலைநோக்கும் வீறும் உறுதியும் விவேகமும் அர்ப்பணிப்பும் மரபின் மீது மதிப்பும் நவீனத்தின்பால் ஆர்வமும் மக்கள் மீது மாளா அன்பும் தன்னலம் கருதாத தனித்துவமும் கொண்டு, காந்தம் போல் ஈர்க்கும் ஒருவரே சம காலத்தின் தன்னிகரற்ற தலைவர். (அகமொழி 1044)

Ahamed Zubair A

unread,
Mar 16, 2017, 1:25:57 AM3/16/17
to தமிழ் சிறகுகள், Vallamai, தமிழ் மன்றம், panbudan
//மகத்தான கனவுகளும் செயல் திறமும் ஆக்கச் சிந்தனைகளும் அசராத உழைப்பும் துணிவும் தொலைநோக்கும் வீறும் உறுதியும் விவேகமும் அர்ப்பணிப்பும் மரபின் மீது மதிப்பும் நவீனத்தின்பால் ஆர்வமும் மக்கள் மீது மாளா அன்பும் தன்னலம் கருதாத தனித்துவமும் கொண்டு, காந்தம் போல் ஈர்க்கும்//

இது எல்லாத்துக்கும் 

//படித்தவர்களும் செல்வந்தர்களும் நாவலர்களும் பட்டறிவு கொண்டோரும் பற்பலர். ஆனால், தலைமைப் பதவிக்கு இந்தத் தகுதிகள் போதா//

இது போதாதுங்களா?

2017-03-15 19:07 GMT+03:00 Anna Kannan <annak...@gmail.com>:
இங்கே எளிமையானவர்கள் உண்டு. படித்தவர்களும் செல்வந்தர்களும் நாவலர்களும் பட்டறிவு கொண்டோரும் பற்பலர். ஆனால், தலைமைப் பதவிக்கு இந்தத் தகுதிகள் போதா. மகத்தான கனவுகளும் செயல் திறமும் ஆக்கச் சிந்தனைகளும் அசராத உழைப்பும் துணிவும் தொலைநோக்கும் வீறும் உறுதியும் விவேகமும் அர்ப்பணிப்பும் மரபின் மீது மதிப்பும் நவீனத்தின்பால் ஆர்வமும் மக்கள் மீது மாளா அன்பும் தன்னலம் கருதாத தனித்துவமும் கொண்டு, காந்தம் போல் ஈர்க்கும் ஒருவரே சம காலத்தின் தன்னிகரற்ற தலைவர். (அகமொழி 1044)

--

Anna Kannan

unread,
Mar 16, 2017, 3:00:30 PM3/16/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
பிறரை விமர்சித்துக்கொண்டே இருப்பவர், மற்றவர் கவனத்தைத் திசை திருப்பி, தன் மீதான விமர்சனங்களில் இருந்து தப்பித்துக்கொள்கிறார். (அகமொழி 1045)

Anna Kannan

unread,
Mar 17, 2017, 2:53:49 PM3/17/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
தாழ்வாகப் பறக்கும் பறவை, எதையோ கொத்திச் செல்ல வருகிறது. (அகமொழி 1046)

Anna Kannan

unread,
Apr 2, 2017, 1:17:36 PM4/2/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
பூமியில் மனிதனுக்கு இடப் பற்றாக்குறை என்பது ஒரு மாயத் தோற்றமே. வளங்களின் மீதான உரிமைக் கொள்கையும் வள மேலாண்மையில் திறமை இன்மையும் அக்கறை இன்மையும் பொறுப்பு இன்மையுமே அவனது முதன்மைச் சிக்கல்கள். இவை தொடரும் பட்சத்தில், இன்னொரு கோள் கிடைத்தாலும் அவனது இடப் பற்றாக்குறை தீராது. (அகமொழி 1047) 

Anna Kannan

unread,
Apr 21, 2017, 1:32:54 PM4/21/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
பெண்கள் ஏதும் சாதனை புரியும் போது, சமூகம் வியப்படைகிறது. ஏனென்றால், அவர்களைச் சமூகம் குறைத்து மதிப்பிடுகிறது. அவர்கள் மீது அவநம்பிக்கை கொள்கிறது. உன்னால் முடியாது எனச் சொல்லி வளர்க்கிறது. நீ இதற்காகத்தான் பிறந்திருக்கிறாய் என எல்லை வகுக்கிறது. இத்தனையும் மீறி அவள் சாதிக்கும்போது, இயல்பாகவே வியக்கிறது. (அகமொழி 1048) 

Anna Kannan

unread,
Apr 23, 2017, 12:44:21 PM4/23/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
அடுத்தவர் கண்கள் வழியாகவும் நீ காணத் தொடங்கிவிட்டால், உனது பார்வை இன்னும் தெளிவுறத் துலங்கும். (அகமொழி 1049)

Anna Kannan

unread,
May 9, 2017, 4:09:13 PM5/9/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
எவர் நேரத்தை வீணடிக்கிறாரோ, அவருக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி இருக்கின்றன. அவருக்குப் பெரிய தேவைகளோ, இலக்குகளோ இல்லை. அவரளவுக்கு அவர் வசதியான எல்லைக்குள் (comfort zone) இருக்கிறார் எனப் புரிந்துகொள்ளலாம். (அகமொழி 1050)

Anna Kannan

unread,
May 13, 2017, 3:46:37 PM5/13/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
மிகக் கடினமான ஒன்றை எட்டுவதற்காக, மனிதன் ஏன் இத்தனை மெனக்கெட வேண்டும்? ஊண், உறக்கம் பாராது, வலி, காயம், வாதைகளைப் பொறுத்து, உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து, அணுவளவு அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்காக, ஒட்டுமொத்த வாழ்வையும் ஏன் தியாகம் செய்ய முன்வர வேண்டும்? இயன்ற எளிய செயல்களை மட்டும் ஆற்றிக்கொண்டிருந்தால், அவனுக்கு இத்தனை துன்பங்கள் இல்லையே!

கேளுங்கள் அந்த இரகசியத்தை.

அவன் இன்று எளிதில் செய்யும் அனைத்தையும் தொடக்கத்தில் மிகக் கடினமாக முயன்றே செய்தான். இன்று மிகக் கடின முயற்சியில் ஆற்றும் ஒவ்வொன்றையும் காலப் போக்கில் எளிதில் செய்வான். தொடர் முயற்சியும் அனுபவமும் தன் ஆற்றலை உணரும் நுண்ணறிவும் இயலாதவற்றை எல்லாம் இயல வைக்கும். அதுவே அவனை அதி மானுடனாய் ஆக்கும். சிற்றெல்லைகளைத் தகர்த்து, புத்தாற்றலை ருசித்து, புதிய சாத்தியங்கள் மூலம் மனித இனத்தையே மேம்படுத்தும். எனவே, புதிய தேடலுடன் இன்னோர் அடி எடுத்து வையுங்கள். (அகமொழி 1051)

Anna Kannan

unread,
May 13, 2017, 4:06:43 PM5/13/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
தகுதியான ஒருவருக்கு உரிய வாய்ப்பினை வழங்குவதன் மூலம், அவருக்கு நீங்கள் உதவி புரியவில்லை; அவரால் பயன் பெறக்கூடிய ஒட்டுமொத்த மக்களுக்கும் உதவுகிறீர்கள். (அகமொழி 1052)

Anna Kannan

unread,
May 13, 2017, 4:36:52 PM5/13/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
அன்றாடப் பிரார்த்தனைகள் / எண்ணங்களுக்கும் உயிருக்கு ஆபத்தான நேரத்திலான பிரார்த்தனைகள் / எண்ணங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, அவற்றின் தீவிரத்தன்மை. இந்த ஆபத்திலிருந்து மீள வேண்டும் எனப் புலன்கள் ஒன்றிணைந்து, இறைஞ்சி, உள்ளத்தின் ஆழத்திலிருந்து வேண்டும்போது / எண்ணும்போது அதற்கு இயல்பாகவே சக்தி அதிகம். அன்றாட வேண்டுதல்கள், பெரும்பாலும் சடங்குகள். பக்தியின் ஆழத்திற்கு ஏற்பவே அருள் கிட்டுகிறது. (அகமொழி 1053)

Ahamed Zubair A

unread,
May 14, 2017, 3:25:46 AM5/14/17
to பண்புடன், annak...@gmail.com
பிற்கால சந்ததிகளின் ஆராய்ச்சி காரணங்களுக்காக, தங்கள் அகமொழிகளை சுருக்கமாகச் சொல்லவேணுமாய் பண்புடன் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Anna Kannan

unread,
May 21, 2017, 8:54:14 AM5/21/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
நிபந்தனைகளின் எண்ணிக்கையும் இறுக்கமும் நிலை உயர உயரக் கூடுகின்றன; நிலை தாழத் தாழத் தளர்கின்றன. (அகமொழி 1054)

Anna Kannan

unread,
May 21, 2017, 9:44:22 AM5/21/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
எது உனக்கு அகந்தையை அளிக்கிறதோ, அதை நீ இழப்பாய். அதன்வழி அந்த அகந்தை, துடைத்து எறியப்படும். (அகமொழி 1055)

Anna Kannan

unread,
May 21, 2017, 9:06:11 PM5/21/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
ஒட்டுமொத்த அறிவின் அளவும் தன்மையும் ஆழமும் புலப்படாத நிலையில், அறிந்தது இவ்வளவு, அறியாதது இவ்வளவு என அளவிட இயலாது. (அகமொழி 1056)

Anna Kannan

unread,
Jun 18, 2017, 7:16:45 AM6/18/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
அதிக விளம்பரம் செய்யப்படும் பொருள்களில், அதிக இலாப விகிதம் இருக்கும். (அகமொழி 1057)

Anna Kannan

unread,
Jun 18, 2017, 9:23:03 AM6/18/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
விலை கேட்ட பிறகு, பொருளைத் தேர்ந்தெடு; தேர்ந்த பிறகு விலை கேட்பது, விற்பவருக்கே சாதகமாகும். (அகமொழி 1058)

Jaisankar Jaganathan

unread,
Jun 18, 2017, 9:27:51 AM6/18/17
to தமிழ் சிறகுகள், Vallamai, தமிழ் மன்றம், panbudan
என்ன வாங்கி ஏமாந்தீங்க அண்ணாகண்ணன் சார்

2017-06-18 18:53 GMT+05:30 Anna Kannan <annak...@gmail.com>:
விலை கேட்ட பிறகு, பொருளைத் தேர்ந்தெடு; தேர்ந்த பிறகு விலை கேட்பது, விற்பவருக்கே சாதகமாகும். (அகமொழி 1058)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragugal+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
regards,
jaisankar jaganathan

Anna Kannan

unread,
Jun 18, 2017, 1:20:54 PM6/18/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
இன்பத்தின் கடைசிச் சொட்டு கசப்பாகவும் துன்பத்தின் கடைசிச் சொட்டு இனிப்பாகவும் இருக்கும். (அகமொழி 1059)

Anna Kannan

unread,
Jun 18, 2017, 2:16:13 PM6/18/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
சிறு அச்சம் எழ இடம் கொடுத்தால் போதும், பேரச்சங்களுக்கும் பெரும் தோல்விகளுக்கும். (அகமொழி 1060)

Anna Kannan

unread,
Jun 22, 2017, 2:25:07 PM6/22/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
தனி மனிதனோ, சமுதாயமோ, தனது முன்னுரிமைப் பணிகளை அடையாளம் கண்டு, முனைந்து ஆற்றாவிட்டால், பின்னடைவு உறுதி. (அகமொழி 1061)

Anna Kannan

unread,
Jun 23, 2017, 1:11:13 AM6/23/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
திருத்திய வடிவம்:

உனது முன்னுரிமைப் பணிகளை அடையாளம் காண்; முனைந்து நிறைவேற்று; அல்லால், பின்னடைவு உறுதி. (அகமொழி 1061)

உணவை அதிக அளவில், வகைகளில் வைப்பின், குறைவாக எடுக்கத் தோன்றும். குறைவாக வைத்து, அதுவும் தீரும் எனில், அதிகம் எடுக்கத் தோன்றும். (அகமொழி 1062)

Anna Kannan

unread,
Jun 23, 2017, 1:48:11 PM6/23/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
முன்னோர் வழி நடத்தல் என்பது, அவர்கள் செய்ததை அப்படியே செய்வது இல்லை. அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் இன்னும் சிறப்பாகச் செய்வது. (அகமொழி 1063)

Anna Kannan

unread,
Jun 28, 2017, 1:42:28 PM6/28/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
கண்ணை மோதுவது போல் மிக அருகில் நிற்கும் கொசுவையோ, ஈயையோ அடிக்க முடியாது; நம் விருப்புக்கு உரிய வெள்ளுடை, சிசு மீது அவை அமரும் போதும் விரட்டவே முடியும். ஒரு களத்தில், குறிப்பிட்ட நேரத்தில், எங்கே நிலை கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே வெற்றி துலங்குகிறது. (அகமொழி 1064)

Anna Kannan

unread,
Jul 2, 2017, 2:53:45 PM7/2/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
அழகாகத் தெரிவதற்கே பலரும் முயல்கிறார்கள், இயல்பிலேயே தாங்கள் அழகு என்பதை மறந்துவிட்டு. (அகமொழி 1065)

AnnaKannan K

unread,
Jul 7, 2017, 1:51:15 AM7/7/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
ஓயாமல் செய் அல்லது முழங்கு; அப்போதுதான் உன்னைத் திரும்பிப் பார்ப்பார்கள்; உன்னிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நம்புவார்கள். (அகமொழி 1066)

Ahamed Zubair A

unread,
Jul 8, 2017, 1:50:40 AM7/8/17
to பண்புடன், Vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள்
Thanks: Juliana (Bigg Boss)

2017-07-07 8:50 GMT+03:00 AnnaKannan K <annak...@gmail.com>:
ஓயாமல் செய் அல்லது முழங்கு; அப்போதுதான் உன்னைத் திரும்பிப் பார்ப்பார்கள்; உன்னிடம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று நம்புவார்கள். (அகமொழி 1066)

--

AnnaKannan K

unread,
Jul 9, 2017, 12:43:24 PM7/9/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
வயது ஏற ஏற, சிலருக்குச் சுதந்திரம் குறைகிறது; சிலருக்குக் கூடுகிறது. பொறுப்பு மிகுவதால் சிறுவர்களுக்குக் குறைகிறது; அடுத்தவர் எதிர்பார்ப்புக்காக, தேவைக்காக வாழ்பவர்களுக்குக் குறைகிறது;  அழகும் இளமையும் குறைகின்ற நடுவயதுப் பெண்களுக்குக் கூடுகிறது; பொறுப்புகளை நிறைவேற்றிய முதியவர்களுக்குக் கூடுகிறது. பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களுக்குக் கூடுகிறது. (அகமொழி 1067)

AnnaKannan K

unread,
Jul 9, 2017, 1:43:37 PM7/9/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
நற்பெயருக்காக, ஒரு செயலைச் செய்யாதே; எச்செயலையும் சிறப்பாகச் செய்; நற்பெயர் தானாக வரும். (அகமொழி 1068)

AnnaKannan K

unread,
Jul 10, 2017, 1:41:02 AM7/10/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
அனுபவம் என்பது ஆண்டுக் கணக்கில்லை; கூடும் பொறுப்புணர்வு. (அகமொழி 1069)

AnnaKannan K

unread,
Jul 10, 2017, 10:59:33 AM7/10/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
ஓட்டம் என்பது மேதைமை இல்லை; மேதைமைக்கு ஓட்டம் அவசியமில்லை. (அகமொழி 1070)

Fluency is not excellency & excellency does not need fluency. (Akamozhi 1070)

AnnaKannan K

unread,
Jul 10, 2017, 1:27:41 PM7/10/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
ஒருவரின் மிகச் சில படைப்புகளையும் வெகு சில சந்திப்புகளையும் எதற்கோ உதிர்த்த கருத்துகளையும் காற்று வாக்குக் கதைகளையும் செய்தித் துணுக்குகளையும் கொண்டே அவரைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறோம். அதையே நெடுங்காலம் நினைவில் வைத்திருக்கிறோம். இந்நிலையில் ஒருவரை முழுவதுமாகப் புரிந்து கொள்வது என்பது முற்றிலும் அசாத்தியம். (அகமொழி 1071)

AnnaKannan K

unread,
Jul 12, 2017, 3:26:12 PM7/12/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
உதவுவதை இயல்பாகக் கொள்; இயலும்போது பேதம் பாராமல் உதவு. அதைக் கடமையெனக் கருது. உதவியதை அந்நொடியே மற. மறந்தும் நன்றி எதிர்பாராதே. (அகமொழி 1072)

உதவி பெறுகிறாயா? உடனே மற. இயலும்போது யாருக்கும் உதவு. பெற்ற உதவிக்குப் பதிலாக, நன்றிக் கடனாக உதவாதே. அது, கொடுக்கல், வாங்கல். (அகமொழி 1073)

விசுவாசம், ஓர் அடிமை முறை. உதவியவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டாம். உண்மையுடன் இரு. உன் சுதந்திரத்துக்கு எந்தத் தளையும் கூடாது. (அகமொழி 1074)

கொடுப்பவர், பெறுபவர் ஆகிய இருவரும் ஓர் உதவியின் சரி சமப் பங்காளிகள். இவர்களுள் உயர்வு, தாழ்வு இல்லை. உதவியை விரயமாக்காமல் முழுமை செய்வதால், பெறுபவருக்கே பொறுப்பு அதிகம். (அகமொழி 1075)

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. உதவிக்கான எதிர்வினை, அவ்வாறு தொடர்ந்து உதவத் தூண்டுவதே; ஆனால் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டு. (அகமொழி 1076)

Ahamed Zubair A

unread,
Jul 13, 2017, 1:22:14 AM7/13/17
to பண்புடன்
உதவி பெற்றவர் அந்த உதவியை மறக்கலாமா?

அது பாவமில்லையா?

AnnaKannan K

unread,
Jul 17, 2017, 6:46:28 AM7/17/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
தகுதியுள்ளவரைப் போன்றே தகுதியில்லாதவரும் ஒன்றின் மீது ஆசைப்படலாம், அடையலாம், தக்கவும் வைக்கலாம். அவரால், அந்த இடத்தை நிரப்ப முடியுமே தவிர, தகுதியுள்ளவரின் செயல்களை, செயல்களால் விளையும் பயன்களை, பயன்களால் சேரும் பெருமையை அளித்துவிட முடியாது. (அகமொழி 1077)

annakannan

unread,
Jul 18, 2017, 3:20:22 AM7/18/17
to பண்புடன்
பாவமில்லை; இதற்கான பதில், அடுத்தடுத்த அகமொழிகளில் உள்ளது. 

நாம் வெளிப்படையாகச் செய்த / பெற்ற உதவிகளை மட்டுமே இங்கே பேசியிருக்கிறோம். உண்மையில், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வோர் அணுவும் தமக்குள் கொண்டு கொடுத்து, ஒத்துழைத்து, உதவுகின்றன. நாம் உயிர் வாழ, ஐம்பூதங்களும் பூமிக்கு உள்ளும் புறமும் உள்ள எவ்வளவோ அணுக்கள் உதவுகின்றன, எந்தப் பிரதி பலனும் பாராமல். இவை அனைத்தையும் நாம் நினைத்துப் போற்ற வேண்டும். ஆனால், அப்படி வார்த்தையாக, சடங்காக அல்லாமல் அவற்றை விரும்பி, இன்னோர் உயிருக்குத் தீங்கு நேராமல் வாழ முயல்வதே தக்க எதிர்வினை. இதுவே உதவியை மறக்காமல் இருப்பதன் அடையாளம்.

Ahamed Zubair A

unread,
Jul 18, 2017, 7:13:10 AM7/18/17
to பண்புடன்
பதிலுக்கு நன்றி.

AnnaKannan K

unread,
Jul 18, 2017, 11:35:58 AM7/18/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
தன்னம்பிக்கையுடன் கூடிய புன்னகை, தனியழகு; எதிர்ப்பு, விமர்சனம், தோல்வி எது வரினும் அதே முறுவலுடன் எதிர்கொள்வது, தன்னேரில்லா அழகு. (அகமொழி 1078)

AnnaKannan K

unread,
Jul 19, 2017, 7:15:10 AM7/19/17
to Vallamai, தமிழ் மன்றம், panbudan, தமிழ் சிறகுகள்
நெரிசல் மிகுந்த சில இடங்களில், சில நேரங்களில், கடைசியில் ஏறியவர் முதலிலும் முதலில் ஏறியவர் கடைசியிலும் இறங்கும்படி ஆகிவிடுகிறது. (அகமொழி 1079)
Reply all
Reply to author
Forward
0 new messages