Re: நாகினி - வெற்றிலைக் கொடியும், வஞ்சிக் கொடியும்

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 18, 2017, 12:03:22 PM11/18/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, R Cheran, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban

வஞ்சிக்கொடி:
----------------------------

சென்னைப் பேரகராதியில் வஞ்சிக்கொடி என்பதற்கு முள்கள் நிறைந்த ரத்தன் (< அரதனம்) செடியைக் குறித்துள்ளனர். அது தவறு என்றும், சங்கச் சேரர் தலைநகர் வஞ்சி மாநகரில் உள்ள பழைய செய்திகளால் வஞ்சிக்கொடி என்றால் என்ன என்பதும் ஆராய்வோம். முதலில் ஸம்ஸ்கிருத அகராதிகளில் ஹம்சம் என்பதற்கு Swan எனத் தவறாகப் போட்டுவிட்டனர். அதனால், அன்னம் என்பதற்கும் Swan என்று சென்னைப் பேரகராதி தருகிறது. இது பிழை. சங்க இலக்கியங்களில் உள்ள அன்னம் Bar-headed geese என்று முன்னர் விரிவாகப் பார்த்தோம். அதே போல, வஞ்சிக் கொடி என்றால் பெப்ரீசியஸ் இலங்கையில் கேட்டுச் சொன்ன தகவலைப் பார்த்தால், சென்னைப் பேரகராதியில் வஞ்சிக்கொடி என்ன எனத் தெளியலாகும்.

ஆவுடையார், இலிங்க வழிபாடு குறித்த தந்திரயான சமயம் பற்றியும் பேசலாம். இலிங்கத்தை காக்கும் அரவு, நாகலிங்கம்.

வஞ்சி அம்மன் - மதுரைக்கு மதுராபதி அம்மன், புகாருக்கு சம்பாபதி (சம்பா - சண்பை) போல,
வஞ்சி மாநகருக்கு வஞ்சியம்மன். இன்றும் உள்ள கோயில். முந்தைய தலைமுறை
வரை, கோவை, ஈரோட்டில் பல பெண்களுக்கும் வஞ்சிக்கொடி என்ற பெயர் உண்டு.
‘கொஞ்சநாள் பொறு தலைவா, வஞ்சிக்கொடி இங்கு வருவா’


வாணி ஜெயராம் தமிழர். இனிய குரல்வளம் வாய்த்தவர். அவரது இன்குரலில் 1984-ஆம் ஆண்டு
’சாந்தி முகூர்த்தம்’ சினிமாப் பாடலைக் கேட்டேன். நீங்களும் கேட்டு இரசிக்கலாம்.

முழுப்படமும் யுட்யூபில் உள்ளது: https://www.youtube.com/watch?v=86VfDLNe-aA
எந்த நேரத்தில் இந்த அழகான பாட்டுத் தொடக்கம் என அறிவித்தால் நன்றியுடையேன்.
பாடல் யார் இயற்றியது? வைரமுத்து?

வஞ்சிக் கொடி நெஞ்சைப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
   ஏதேதோ செய்கின்றதே!

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
   பூமாரி பொழிகின்றதே!

பொல்லாத நாணம் போ என்றது - இது
போதுமென்று யார் சொன்னது?

வஞ்சிக் கொடி நெஞ்சப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
   ஏதேதோ செய்கின்றதே!

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
   பூமாரி பொழிகின்றதே!

பொல்லாத நாணம் போ என்றது - இது
போதுமென்று யார் சொன்னது?

உள்ளங்கை தேனே உன்மேனி தானே
  நான் தீண்டும் புல்லாங்குழல்

நீ தீண்டக் கண்டு சந்தோஷம் கொண்டு
  பூப் பூக்கும் புல்லாங்குழல்

கொடுத்தாலும் குறையாது
 எடுத்தாலும் குறையாது
கொடுத்தாலும் குறையாது
 எடுத்தாலும் குறையாது

இளம் பூவின் முத்தம் 
  இதமான யுத்தம்

வஞ்சிக் கொடி நெஞ்சப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
   ஏதேதோ செய்கின்றதே!

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
   பூமாரி பொழிகின்றதே!

பொல்லாத நாணம் போ என்றது - இது
போதுமென்று யார் சொன்னது?

என் தேகம் யாவும் ஏன் இந்த ஈரம்
 நீ என்ன கார்காலமா

பனிப் பெய்யும் போதே நனைகின்ற மாதே
மழை பெய்தால் குளிர் தாங்குமா

மழையொன்றும் தடையல்ல
 மகரந்தம் சுமையல்ல
மழையொன்றும் தடையல்ல
 மகரந்தம் சுமையல்ல

உன் ஆண்மை எந்தன் உயிர் சேர அல்ல

வஞ்சிக் கொடி நெஞ்சப் படி
அன்பின் ரசம் அள்ளிக் குடி
   ஏதேதோ செய்கின்றதே!

மங்கை இதழ் தங்கச் சிமிழ்
சிந்தும் ஒலி சங்கத் தமிழ்
   பூமாரி பொழிகின்றதே!

பொல்லாத நாணம் போ என்றது - இது
போதுமென்று யார் சொன்னது?
ல ல ல ல ல ல ல ல லலலலலல

இவ்விசைப்பாட்டில் உள்ள வஞ்சிக்கொடி எந்தத் தாவரம்?
பார்ப்போம். சென்னைப் பேரகராதி பிழைசெய்துள்ள இடமிது.
கொங்குநாட்டு வரலாற்றால் விளங்கும்.


நா. கணேசன்



Reply all
Reply to author
Forward
0 new messages