உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே.. (கவிதை) வித்யாசாகர்!

1 view
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
Sep 13, 2016, 5:42:28 AM9/13/16
to தமிழ் சிறகுகள், பகலவன், மின்தமிழ், தமிழ் பிரவாகம், தென்றல், பண்புடன், தமிழ் அமுதம், தமிழுலகம், வித்யாசாகர் முகநூல் குழுமம், வல்லமை, Gulf_tami...@yahoogroups.com, முத்தமிழ்



அந்தத் திருமுகம் காணலியே கிளியே
நெஞ்சம் பச்சையாய் வேகுதடி கிளியே
இச்சையொன்றுமில்லையே கிளியே - மொத்தத்தில்
அன்பொன்றே போதுமேடி கிளியே..

சர்க்கரைப் பொங்களோடி கிளியே - நீ
சர்க்கரைப் பொங்களோடி கிளியே, உன்னில்
சவ்வாது மணக்குதோடி கிளியே - கொஞ்சம்
கொஞ்சத்தான் மனம் சிவக்குதடி கிளியே..

உயிரை மிஞ்சித்தான்போகிறாய் கிளியே - உலகை
உன்னுள்ளே வைக்கிறாய் கிளியே, அன்பிற்கு
எல்லையேது கிளியே; கடலின்
ஆழத்தை வெல்லுகிறாய் கிளியே..

கொள்ளை நெருப்போடி கிளியே, நீயில்லா
தனிமை கொள்ளை நெருப்போடி கிளியே; கொன்று
பொசுக்குதடி கிளியே; உன் நினைவோ
கொள்ளியாய் தீ கொளுத்துதடி கிளியே..

சோகத்தில் ரணம் வலிக்கிறது கிளியே, காற்றில்
பஞ்சைப்போல் மனது பறந்துதவிக்குதடி கிளியே
ஆழிசூழ் இருட்டு அது கிளியே, நீயில்லாத
தனிமையெனக்கு ஆழிசூழ் இருட்டு கிளியே..

தீக்கிரை ஆக்குவேனடி கிளியே, நீயில்லா தனிமையதை
உள்ளத் தீக்கிரை யாக்குவேனடி கிளியே, சற்றே
நெருங்கிப்பார் கிளியே, ஒரு கோணல் திரும்பிப்பார் கிளியே
என்னில் சிறகடிப்பேன்' எழுகடல் தாண்டியொரு
கூற்றுமாடி களிப்பேனடி கிளியே!! களிப்பேனடி கிளியே!!
------------------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

Reply all
Reply to author
Forward
0 new messages