மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கவிஞர் முத்துலிங்கம்

66 views
Skip to first unread message

Thevan

unread,
Jul 6, 2016, 12:23:43 AM7/6/16
to mintamil, panbudan
மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: கவிஞர் முத்துலிங்கம்

பசும்பொன் அறக்கட்டளை சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி
கருத்தரங்கம் சென்னை அபிபுல்லா சாலையிலுள்ள தேவர் மண்டபத்தில்
நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவிஞர் முத்துலிங்கம்
பேசும்போது ‘எம்.ஜி.ஆர். வழியை பின்பற்றி பசும்பொன்
முத்துராமலிங்கத்திற்கு சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தவர் முதல்வர்
அம்மாதான். மத்திய அரசு தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.
என்றும் திரைப்பட பாடலாசிரியர்., கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

முன்னாள் அரசவைக்கவிஞரும், முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான கவிஞர்
முத்துலிங்கம் பேசியதாவது, ‘தேவர் ஒரு சாதியை சேர்ந்தவராக இருந்தாலும்
சாதி பேதம் பார்க்காத சமத்துவஞானியாக வி்ளங்கிய ஆரசியல் ஞானி அவர்.

தேவர் படித்தது ஆறாம் படிவம் வரைதான். ஆனால் ஆங்கிலத்திலும் தமிழிலும்
அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார்.

காசி இந்து சர்வ கலாச்சாலையில் இந்து மதத்தத்துவத்தைப் பற்றி மூன்று
மணிநேரம் ஆங்கில பேராசியர்களே வியந்து போகும்படி ஆங்கிலத்தில்
சொற்பொழிவாற்றினார்.

அதற்குத் தலைமைதாங்கிய இந்து சர்வ கலாச்சாலை துணைத்தலைவர் சர்.சி.பி
ராமசாமி ஐயர் பேசும்போது, ‘உலகநாடுகளை ஆங்கிலம் அடக்கி ஆள்கிறது. அந்த
ஆங்கிலத்தையே மூன்று மணிநேரம் எங்கள் சேது நாட்டுச் சிங்கம்
முத்துராமலிங்கம் அடக்கி ஆண்டு விட்டது. இது சேது நாட்டுக்கு மட்டுமல்ல.
தமிழ் நாட்டுக்கே பெருமை இந்தியாவுக்கும் இந்தியர்களுக்குமே பெருமை’
என்று பேசினார்..

தேவர் முதன்முதலில் மேடையேரியது 1933 ஆண்டு சாயல்குடியில் நடந்த விவேகானந்தர்

வாசக சாலையில்தான். அங்கும் மூன்று மணி நேரம் பேசி எல்லோரையும்
ஆச்சரியப்ட வைத்தார். அந்த விழாவில்தான் காமராசர் முதன் முதலில் தேவரை
சந்திக்கிறார். தேவரும் அப்போதுதான் காமராசரை பார்க்கிறார்.

இப்படிப்பட்ட பேச்சை இதுவரை கேட்டதில்லையென்று காமராசர் மற்றவர்களிடம்
பாராட்டிப் பேசியதோடு இப்படிப்பட்ட தேவர் காங்கிரஸ் கட்சிக்கு
பேச்சாளராக இருந்தால் கட்சி வெற்றி பெறும் என்று தன் விருப்பத்தை
தெரிவித்தாராம்.

1936 ல் நடந்த ஜில்லா போர்டு உறுப்பினர் தேர்தலில் முதுகுளத்தூர்
பகுதியில் நின்று மிகப்பெரிய வெற்றியை பெற்றார் தேவர். அதுதான் அரசியலில்
அவருக்கு முதல் நுழைவு. விருது நகர் நகராட்சியில் முதன் முதல் வார்டு
உறுப்பினர் தேர்தலுக்கு காமராசரை நிறுத்தி வெற்றி பெற வைத்ததும்
தேவர்தான்.

1937 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் சாத்தூர் தொகுதியில் காமராசர்
ஜெயித்ததற்கு தேவர்தான் காரணம். அதுமட்டுமல்ல நீதிக்கட்சியை
சேர்ந்தவர்களால் காமராசருக்கு ஏற்படவிருந்த ஆபத்தைத் தடுத்து
நிறுத்தியதும் தேவருடைய பேச்சுதான். தென் மாவட்டங்களில் நீதிக்கட்சியை
வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததற்கும் தேவர்தான்
காரணம்.

இதை ராஜாஜியே சொல்லியிருக்கிறார். தென் புலத்தில் காங்கிரஸ் வெற்றி
பெற்றதற்கு என்னை பாத்தனென்று சொல்கிறார்கள். நான் பார்த்தனென்றால்
எனக்கு சாரதியாக இருந்து வெற்றி தேடி தந்தது இருபத்தொன்பது வயதே ஆன
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்கிற வாலிபர்தான். ்’ என்று மனம்
திறந்து பாராட்டினார் ராஜாஜி.

அந்த நேரத்தில் நீதிக்கட்சியை சேர்ந்த ராமநாதபுரம் அரசரை எதிர்த்து
போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தேவர். இது அந்தக் காலத்தில்
நினைத்துப்பார்க்க முடியாத ஒன்று. .அன்றைக்கு ராமநாதபுரம் தொகுதியென்பது
ராமநாதபுரம்,பரமக்குடி முதுகுளத்தூர் தாலுகா அடங்கிய பெரிய தொகுதி.

பதவியில் இருப்பவன் தாமரை இலைத் தண்ணீரைப்போல ஒட்டியும் ஒட்டாமலும்
பட்டும் படாமலும் இருக்க வேண்டும் என்றார் தேவர். அப்படி இருந்தாலும் கூட
இருப்பவர்கள் இருக்க விடமாட்டார்கள் என்பதால்தான் தன்னைத் தேடி வந்த
மாநில அமைச்சர் பதவி மத்திய அமைச்சர் பதவியை வேண்டாம் என்று மறுத்தார்.

உங்கள் பார்வேர்டு கட்சியை காங்கிரஸில் இணைத்துவிட்டு மத்திய அமச்சர்
பதவியில் உங்களுக்கு எந்த இலாகா வேண்டுமோ அந்த இலாகவை ஏற்றுக்கொள்ளுங்கள்
என்று நேரு கேட்டபோது, ‘நான் நேதாஜியை தலைவராக ஏற்றுக்கொண்டவன் உங்களைத்
தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது. என்று நேருவிடம் பகிரங்கமாகவும்.
வெளிப்படையாகவும் சொன்னவர் தேவர்.

இதனால் வங்க மக்கள் தென்னாட்டு போஸ் என்று அடைமொழி கொடுத்து அழைத்துச்
சிறப்பித்தார்கள். தேவரைப் போல துணிச்சல் மிகுந்த தலைவர்கள் அன்றைக்கு
எவரும் இல்லை.

அரசியல் மேடையில் ஆன்மீகம் பேசமாட்டார். ஆன்மீக மேடையில் அரசியல்
பேசமாட்டார். இன்றைக்கு திருமண மேடையில் கூட அரசியல் பேசி மேடையை
அலங்கோலப் படுத்துபவர்கள்தான் அதிகம்.

தேவரது அரசியல் பேச்சில் அனல் பறக்கும். ஆன்மீக பேச்சில் ஞான ஊற்றுச்
சுரக்கும். 1938ம் ஆண்டு மதுரையில் வைத்தியநாத ஐயர் தலைமையில் அரிசனங்கள்
ஆலயப்பிரவேசம் செய்ததற்கு முத்துராமலிங்கத் தேவர்தான் பெருங்காரணம். இதை
மூடி மறைத்துப் பலர் பேசுகிறார்கள்.

வாய்மை, தூய்மை, உண்மை, மெய்ம்மை, நேர்மை துணிவுடைமை ஆகியவற்றுக்கு
எடுத்துக்காட்டாக விளங்கியவர் தேவர். எல்லாருக்கும் நெருக்கமான தலைவர்கள்
ைருக்கலாம். இணக்கமான தலைவர்கள் இருக்கலாம். ஆனால் தேவரைப் போல ஒழுக்கமான
தலைவர்கள் எவருமே கிடையாது.

காமராசர், எம்.ஜி.,ஆர். ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது
வழங்கிச் சிறப்பித்தது போல் தேவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது
வழங்கிச் சிறப்பிக்க வேண்டும். அப்படிச் சிறப்பித்தால் அது தேவருக்கு
மட்டும் பெருமையாக இருக்காது. மத்திய அரசுக்கும் பெருமையாக இருக்கும்.

எம்.ஜி.ஆர். அரசியலில் இருந்தபோதுதான் தேவருடைய பிறந்த நாள் விழாவை அரசு
விழாவாகக் கொண்டாடினார். தேவருடைய படத்தை சட்டமன்றத்திலே திறந்து வைத்து
தேவருக்குப் பெருமை சேர்ந்ததும் எம்.ஜி.ஆர்.தான். தேவருடைய வாழ்க்கை
வரலாற்றைப் பாடப்புத்தகத்தில் இடம்பெறச்செய்து மாணாக்காச் செல்வங்களும்
அவருடைய பெருமையை அறியும்படி செய்தவரும் எம்.ஜி.,ஆர்.தான் ர் எம்.ஜி.ஆர்
வழியில் சென்னை நந்தனம் பகுதியில் தேவருக்குச் சிலை வைத்து அந்தச்
சாலைக்கே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலை என்று பெயரிட்டுச்
சிறப்பித்தவர் தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மாதான்.

அதுமட்டுமல்ல பசும்பொன் கிராமத்தில் அவர் நினைவிடத்தில் அமைந்துள்ள
மார்பளவுச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவித்துச் சிறப்பித்தவரும்
அம்மாதான். தேவரிடம் இருந்த துணிச்சல் இன்று அம்மா ஒருவரிடம் மட்டுமே
இருக்கிறது. தேவர் இருந்திருந்தால் அம்மாவை வாழ்த்தியிருப்பார். என்று
பேசினார் முத்துலிங்கம். நிகச்சியில் கவிஞர் ஜீவபாரதி, மேடைமணி நடராசன்,
கவிஞர் இதயகீதம் ராமனுஜம், ராஜராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

--
http://makkalmurasu.com/central-government-should-provide-bharat-ratna-for-devar-kavignar-muththulingam/

செல்வன்

unread,
Jul 6, 2016, 10:15:40 AM7/6/16
to பண்புடன்

பாரத ரத்நா விருதின் பெயரையே பசுன்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் விருது என மாற்றி வழங்கவேண்டும். அவருக்கு வழங்கபப்டுவதால் விருதுகளுக்கு பெருமை சேரலாமே ஒழிய அவருக்கு புதிதாக இதனால் சிறப்பும் சேரப்போவதில்லை.

Jaisankar Jaganathan

unread,
Jul 6, 2016, 10:39:35 AM7/6/16
to பண்புடன்
இது பெருமாள் தேவனுக்கு,
நேதஜியே புறக்கனிக்கப்படும்போது தேவர் மறக்கப்பட்டதில் ஆச்சரியம் இல்லை.

இது செல்வனுக்கு,
ஏன் சார் இப்படி? அவர் நல்லாத்தானே பேசுறார்


செல்வன்

unread,
Jul 6, 2016, 2:31:19 PM7/6/16
to பண்புடன்

தேவர் ஐயா தமிழ்நாட்டில் பிறக்காமல் வடக்கே பிறந்திருந்தால் வாழும் காலத்திலேயே பாரதரத்நா கொடுத்திருப்பார்கள்.

தியாகு

unread,
Jul 7, 2016, 1:19:22 AM7/7/16
to பண்புடன்
தேவரை பற்றி ஆ மார்க்ஸ்  எழுதிய கட்டுரை இது

இப்படி நட்ட நடு செண்டராக இருப்பதும் பிரச்சனைதான்

----------------------------------------------------https://thetimestamil.com/2016/05/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/

நமது அரசியல் தலைவர்கள் பற்றிய ‘திரு உரு’பிம்பங்களைக் கட்டமைப்பது, அப்பழுக்கற்ற iconic images உருவாக்குவது முதலியன ஆபத்தானது என அருள் எழிலன் கூறியுள்ளது முக்கியமான ஒன்று. காமராசர் பற்றிக் கிட்டத் தட்ட ஒரு குட்டிக் கடவுள் என்கிற அளவு பிம்ப உருவாக்கம் நடதுள்ளதை அவர் குறிப்பாகக் கூறியுள்ளார்

காமராசர் குறைகளே இல்லாதவர் என்பதல்ல. ஆனால் காமராசர், கக்கன் முதலானோருக்கு இத்தகைய பிம்பம் உருவானது எப்படி என்பது பற்றியும் நாம் ஆராய வெண்டும். இன்றைய தலைவர்களுடன் ஓப்பிட்டு அது உருவாகிறது. மூன்று முக்கிய அம்சங்களில் அவர்கள் இன்றைய தலைவர்களிடமிருந்து வேறுபடுத்தப் படுகிறார்கள்.

1..எளிமை 2. ஊழலின்மை 3. தன் குடும்பத்தினரை வாரிசுகளாக உருவாக்காமை. குறிப்பாகத் தன் அம்மாவைக் கூட அவர் தன்னுடன் கொண்டு வைத்துக் கொண்டால் அவரோடு சில உறவினர்களும்கூட வந்துவிடுவார்கள், அதன் மூலம் சில தவறுகள் நடக்கலாம் என அதை அவர் தவிர்த்தார் என்கிற செய்திகள் எல்லாம் காதில் விழும்போது இன்றைய தலைவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் கடவுளர் ரேஞ்சுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

இது பிரச்சினை இல்லை. பிரச்சினை எங்கு வருகிறது எனால் அவர்கள் மீது விமர்சனகளே கூடாது என்கிற அளவிற்குப் போகும்போதுதான். காமராசரிடமும் பல தவறுகள் இருக்கத்தான் செய்தன. அரசியல் ரீதியாகவும் இருந்தன. முதுகுளத்தூர் கலவரத்தைத்தான் எடுத்துக் கொள்ளுங்களேன். கலவரத்தை நிறுத்தணும்னா அவங்க ஆட்களில் நாலுபேரைச் சுட்டுத் தள்ளுங்க என காமராசருக்குப் பெரியார் அறிவுரைத்ததாகவும் உடனே காமராசர் உத்தரவிட 5 அப்பாவித் தேவரினத்தவர் பிடித்துச் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் கலவரம் நின்றதெனவும் இங்கு ஒரு கதை உண்டு. அப்படி காமராசரிடம் பெரியார் சொன்னாரா என்பது ஒரு பக்கம். ஆனால் அப்படி ஐந்து அப்பாவிகள், கூட்டத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் பிடித்து வரப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை. காமராசரின் இந்தச் செயலை எப்படிச் சரி எனச் சொல்ல இயலும்? இப்படி நான் சொல்வதை ஒரு வேளை அருள் எழிலனே கூட ஏற்காமல் போகலாம். இப்படி நான் சொல்வதற்காக் என்னை ஒரு தலித் விரோதி என்றும் கூட யாரும் சொல்லலாம்.

எல்லோரிடமும் நல்லவைகளும் உண்டு, எதிர்மறை அம்சங்களும் உண்டு. தந்தை பெரியாரை நான் முழுமையாகக் கொண்டாடுகிறேன். ஆனால் அதற்காக அவர் குத்தூசி குருசாமியை நடத்திய விதத்தை ஏற்றுக் கொள்ள இயலுமா?அதேபோல சினிமா என்கிற கலைவடிவத்தை 5 தீமைகளில் ஒன்று என முற்றாகப் புறக்கணிக்கச் சொன்னதையும் வீட்டில் கூடத் தமிழிலேயே பேசாதீர்கள் எனச் சொன்னதையும் மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்ளாமல் அப்படியே எடுத்துக் கொள்ள இயலுமா?

கார்ல் மார்க்சைவிடச் சிறந்த அறிஞர் ஒருவர் உலக வரலாற்றில் காண்பது அரிதுதான். அதற்காக அவர் அரசியல் ரீதியாக பகூனினை எதிர் கொண்ட விதத்தையும் சொந்த வாழ்க்கையில் ஹெலன் டெமூத்திடம் நடந்து கொண்டதையும் எப்படி விமர்சிக்காமல் இருக்க இயலும்

சோஷலிசக் கட்டுமானத்தில் தவறுகள் லெனின் காலத்திலிருந்தேதான் தொடங்குகின்றன.

இதையெல்லாம் சொல்லித்தான் ஆக வேண்டும். சோல்லாமல் இருப்பதுதான் பல மிகைப்படுத்தப்படல்களுக்கும், அசட்டு அரசியல் களுக்கும் பல தவறுகளுக்கும் காரணமாகின்றன.

2. இப்படித் தெய்வத் திரு உருக்களையும் கூட விமர்சனத்திற்குள்ளாக்கும் நெஞ்சுரம் இன்றைய காலத்தின் தேவை என அருள் எழிலன் சொல்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இங்கே முற்றிலும் எதிர்மறைத் திரு உருக்களாகக் கட்டமைக்கப்பட்டவர்கள் குறித்த சில மறுபார்வைகளும் அவசியம்.

இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படிக் காமராசரின் எதிர்மறை அம்சங்களைப் பேசுவது என்பது அவரை முற்றாக மறுப்பது ஆகாதோ அவ்வாறே எதிர்மறை icon ஆகக் கட்டமைக்கப்பட்ட ஒருவரின் ஏதேனும் ஒரு சரியான அம்சத்தைச் சொல்வது என்பது அவரை முழுமையாக ஏற்றுக் கொள்வதோ கொண்டாடுவதோ ஆகாது.

வைகோ சமீபத்தில் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலையிடப் போனதை அவரை திரு உருவாகக் கொண்டாடுபவர்கள் எதிர்த்தது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் அவரை எதிர்மறை திரு உருவாக நினைப்பவர்கள் எதிர்த்ததும் அத்தனை அபத்தம்தான். ஒரு வெகுஜன அரசியலைச் செய்யும் அரசியல்வாதி தேவர் சிலைக்கு மாலையிடப் போனதைப் புரிந்து கொள்ள வெண்டும் என நான் எழுதியதற்காக ஏன்னைத் திட்டி இடப்பட்ட பின்னூட்டங்களைப் பாருங்கள்.

முத்துராமலிங்குருக்கு இம்மானுவேல் சேகரன் அவர்களின் கொலை அதை ஒட்டிய கலவரங்கள் ஆகியவற்றில் உள்ள பங்கிற்காக அவரை நாம் கண்டிப்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவருக்கு வேறு வரலாறுகளுமுண்டு. தேவர் சாதி ஒர் பக்கம் ஆதிக்க சாதி.இன்னொரு பக்கம் அது ஒடுக்கப்பட்ட சாதியும் கூட. குற்றப்பரம்பரையாக கடும் ஒடுக்கு முறைகளுக்கு ஆளானவர்களுக்கு அந்தக் கொடுமையிலிருந்து விடுதலைபெறப் போராடியவர் அவர்.

சுதந்திரப்போராட்டத்திலும் அவருக்கு ஒரு பங்குண்டு. சுதந்திரப் போராட்டத்திலும் நெல்லைச் சதிவழக்கிலும் பத்தாண்டுகளுக்கும் மேல் சிறைப்பட்டிருந்த தியாகி தோழர் ஐ.மாயாண்டி பாரதி அவர்களை நானும் சுகுமாரனும் கடைசியாகச் சந்தித்த போது அவர் சில பழைய புகைப்படங்களைக் காட்டினார். அதில் ஒன்றில் முத்துராமலிங்கர் ஒரு நாற்காலியில் அமர்ந்துள்ளார். காலடியில் ஐ.மாபா. அந்தப் படத்தின் ஒரு பிரதி சுகுமாரனிடம் உள்ளது. இதையேலாம் கணக்கில் எடுத்துக் கொள்வதென்பது அவரின் பெயரால் இன்று நடக்கும் அரசியலை ஏற்றுக் கொள்வதென்பதாகாது.

3. அரசியலில் மட்டுமல்ல அரசியலுக்கு அப்பால் இவ்வாறு உருவாக்கப்படும் திரு உருக்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நீதியரசர் சந்துரு போன்றோர் இன்று அவ்வாறு விமர்சனத்திற்கு அப்பா்ற்பட்டு ச் சிலரால் திரு உருக்களாகக் கட்டமைப்பதிலும் ஆபத்துகள் உண்டு. அவர்களிடம் உள்ள பிரச்சினைகளையும் நாம் பேசித்தான் ஆக வேண்டும்.

******************************************************************************

இந்த விவாதத்தில் நான் தலையிடுவதில் உள்ள பிரச்சினைகளை உணர்ந்துதான் நான் இந்த ரிஸ்கை எடுத்துள்ளேன். இன்று இந்த “iconisation” என்பது எத்தனை மிகை எளிமைப்படுத்தப்பட்ட புரிதல்களுக்கும், அசட்டு அரசியல்களுக்கும், ஆபத்தான போக்குகளுக்கும் காரணமாகி உள்ளது என்பது குறித்து விரிவாகவே எழுத உள்ளேன்.

அ.மார்க்ஸ், ஓய்வுபெற்ற பேராசிரியர்; எழுத்தாளர்.



2016-07-07 0:01 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

தேவர் ஐயா தமிழ்நாட்டில் பிறக்காமல் வடக்கே பிறந்திருந்தால் வாழும் காலத்திலேயே பாரதரத்நா கொடுத்திருப்பார்கள்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

sadayan sabu

unread,
Jul 7, 2016, 2:20:55 AM7/7/16
to panbudan
//பாரத ரத்நா விருதின் பெயரையே பசுன்பொன்// சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர் ரத்நா தான் கொடுக்க வேண்டும் 


2016-07-06 19:45 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

பாரத ரத்நா விருதின் பெயரையே பசுன்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் விருது என மாற்றி வழங்கவேண்டும். அவருக்கு வழங்கபப்டுவதால் விருதுகளுக்கு பெருமை சேரலாமே ஒழிய அவருக்கு புதிதாக இதனால் சிறப்பும் சேரப்போவதில்லை.

--

தியாகு

unread,
Jul 7, 2016, 3:51:19 AM7/7/16
to பண்புடன்
//பாரத ரத்நா விருதின் பெயரையே பசுன்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் விருது என மாற்றி வழங்கவேண்டும்.//
செல்வன் எழுத்து பிழைகள் பேலியே சாப்பிட்ட மாதிரி ஆகிவிட்டது வாக்கியம் :)

செல்வன்

unread,
Jul 7, 2016, 11:45:42 AM7/7/16
to பண்புடன்

தேவர் திருமகன் கள்ளர் சாதியினரை குற்ற பரம்பரையில் இருந்து விடுவித்த போராட்ட நிகழ்வு மார்ட்டின் லூதர் கிங், மண்டேலாவின் போராட்டத்துக்கு இணையானது. தற்கால அரசியல் நிகழ்வுகள், ஜாதி அரசியலை வைத்து அவரை இன்று எடை போடுவது தான் வரலாற்று சோகம்.

தியாகு

unread,
Jul 8, 2016, 9:44:32 AM7/8/16
to பண்புடன்
தேவர் காமராஜரை பற்றி பேசியது

//"இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)//




2016-07-07 21:15 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

தேவர் திருமகன் கள்ளர் சாதியினரை குற்ற பரம்பரையில் இருந்து விடுவித்த போராட்ட நிகழ்வு மார்ட்டின் லூதர் கிங், மண்டேலாவின் போராட்டத்துக்கு இணையானது. தற்கால அரசியல் நிகழ்வுகள், ஜாதி அரசியலை வைத்து அவரை இன்று எடை போடுவது தான் வரலாற்று சோகம்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Thevan

unread,
Jul 8, 2016, 11:46:41 AM7/8/16
to panb...@googlegroups.com
தியாகு,

அப்படியே சாதாரண தொண்டர்களைப் பற்றி காமராஜர் என்ன சொன்னார் எடுத்துப்
போடுங்க பார்ப்போம்.

Thevan

unread,
Jul 8, 2016, 11:47:22 AM7/8/16
to panb...@googlegroups.com
அப்படியே தேவர்,
வேறு எந்தெந்த தலைவர்களைப் பற்றி என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்றும்
எடுத்துப் போடுங்கள்.

Ahamed Zubair A

unread,
Jul 8, 2016, 12:00:00 PM7/8/16
to panb...@googlegroups.com
தேவன் அண்ணே... 

அவங்க சொல்ற குற்றச்சாட்டு சரியா இல்லையான்னு சொல்லாம மடை மாத்தாதீங்க.

அவங்க தேவர் மேல வைக்கும் குற்றச்சாட்டு சரியா இல்லையா?

Thevan

unread,
Jul 8, 2016, 12:50:02 PM7/8/16
to panb...@googlegroups.com
தியாகு, தேவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு சரியானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?

தியாகு அவர்களுக்கு, காமராஜர் பற்றி திமுகவினர் என்னவெல்லாம் பேசினார்கள்

Thevan

unread,
Jul 8, 2016, 1:33:49 PM7/8/16
to panb...@googlegroups.com
திரு தியாகு அவர்கள் குறிப்பிட்ட தேவரின் பேச்சுக்கு முன்னதாக மற்றொரு
பத்தியை கொடுத்திருக்கிறார்கள். அதை தியாகு குறிப்பிட தவறிவிட்டார்.

அது,
அன்றைக்கு பத்திரிகைகள் என்ன எழுதின? (1937 தேர்தல் குறித்து பேசுகிறார்)
“காங்கிரஸுக்கு தென்னிந்தியாவில் ஜெயம் கிடைத்த்து என்றால், தேவரின்
தனிச் செல்வாக்கினால் ஜெயித்த்து” என்று எழுதி. இது அன்றைய சரித்திரம்.
அந்த அளவுக்கு காங்கிஸை காப்பாற்றி நிலைக்கச் செய்தவன் அடியேன்.

அப்படியிருக்கும்போது, இப்போது காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்று
பேசுவதன் நோக்கம் என்ன? இதுதான் மக்கள் சக்தி உணர்ந்துகொள்ள வேண்டிய
விஷயமாகும்.

(1957-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், தமது
வேட்பாளரான திரு என்.ஜி. சக்கரவர்த்தி நாயக்கர் அவர்களை ஆதரித்தும்,
காங்கிரஸ் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரை எதிர்த்தும் 21.02.57-ம்
தேதியன்று பேசியது)

Srimoorthy S

unread,
Jul 8, 2016, 1:37:49 PM7/8/16
to பண்புடன்

ரொம்ப காலம் கழிச்சி இப்போ வந்து இந்த குரூப்பை பாக்கும்போது வேடிக்கையா இருக்கு. ;)

Thevan

unread,
Jul 8, 2016, 1:38:46 PM7/8/16
to panb...@googlegroups.com
அதேபோல தியாகு குறிப்பிட்ட பேச்சிக் கீழே அவர் பேசிய பத்தி,
எல்லாரையும் போல, அரசியலில் வந்து சேர்ந்து சிறைச் சாலைக்குப்போய், அதன்
மூலம் ‘பெரியவன்’ என்ற பட்டம் கட்டிக் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.
அரசியலில் எங்களுக்கு இருக்கிற அபிமானத்தின் பெயரால், நாங்கள இருந்த
உயர்ந்த தன்மையையும் கருதாமல், சிறையில் போக்கிரிகளோடு வாடிவதங்கினோம்.
அரசியலுக்கு வந்ததால் நாங்கள் பெரிய மனிதத் தன்மை பெறவில்லை. எங்களுக்கு
இருந்த பெரிய மனிதத் தன்மையை அரசியலுக்குக் கொடுத்து உதவினோம். இந்த
நிலைமையில்தான் எங்கள் அரசியல் நடந்தது.

Thevan

unread,
Jul 8, 2016, 2:09:58 PM7/8/16
to panb...@googlegroups.com
அதே கூட்டத்தில் தேவர் பேசுகிறார்....

அன்றைக்கு 1936-ம் ஆண்டு டிஸ்ட்ரிக்ட் போர்டு தேர்தல் நடந்தபோது,
இன்றைக்கு முதல் மந்திரியாக இருக்கிற நபர், ஒரு ‘போலிங் பூத்தில்’ நின்று
கொண்டிருந்தார். அன்றைக்கு இவரின உறவின் முறையாக இருந்தவர்கள் எல்லாம்
ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர் காங்கிரஸில் இருந்ததால், இந்த
நபர் மீது இருந்த கோபத்தில் வி.வி.ராமசாமி நாடாரின் ஆட்களில் ஒருவர்,
பட்டப்பகலில் பன்னிரெண்டு மணிக்கு, காமராஜர் ‘போலிங்பூத்துக்கு’ வெளியே
நிற்கிறபோது அவருடைய வேஷ்டிய உரிந்து விட்டார்.

இவர் கீழே விழுந்த வேஷ்டியை எடுத்துக் கட்ட குனிவதற்கு முன்பே, இரண்டு
சண்டியர்கள் வலதுபுறத்தில் ஒருவனும், இடது புறத்தில் ஒருவனுமாக வேஷ்டியை
மிதித்துக் கொண்டார்கள். வேஷ்டியை எடுத்துக் கட்ட முடியாத நிலைமையில்,
ஒன்றும் புரியாது நிற்கிறார். இவர் ஏழைத் தொண்டனாக இருந்ததால் யாரும்
உதவிக்கு வராமல், இவர் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது
அடியேன் நிலைமை என்ன?
அடியேன் ராமநாதபுரம் சேதுபதியோடு போட்டி போடுகின்ற காலம். எல்லா
காங்கிரஸ் கட்சிக்காரர்களையும் போல அடியேன் நூறு ரூபாய் செலுத்தி, அடஹாக்
கமிட்டியிடம் “என்னை மெம்பராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அடியேன்
கேட்கவில்லை. எங்களுக்குத் தேர்தல் வேண்டாம் என்று ஒதுங்கி நின்ற
தீவிரவாதிகள் நாங்கள்.

அப்போது அகில இந்திய காங்கிரஸ் பார்லிமெண்டரி போரடு, “தேவர் ராமநாதபுரம்
சேதுபதியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும். அவர் போட்டியிடாது போனால்
ராமநாதபுரம் சேதுபதியை தோற்கடிக்க ஆளில்லை. அவர் போட்டியிட வேண்டும்”
என்று கே.ஆர். வெங்கட்ராமய்யருக்கு தந்தியனுப்பி, ‘நாமினேஷன்’ போட
வேண்டும் என்று முதல் இரவு பன்னிரெண்டு மணிக்கு வந்து என்னை
உசுப்புகிறார்கள். அந்த நிலைமையில் நான் போய் ‘நாமினேஷன்’ போட
வேண்டியவனாக இருந்தேன்.

அப்போது என் மீது வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டு, நான் பேசக்கூடாது
என்று தடுத்து வைக்கப்பட்டிருந்த காலம். இந்த நிலைமையில் நான்
‘நாமினேஷன்’ போடுகிறபோது, அங்கே நடக்கிற அலங்கோலம் என்னவென்றால், என்னைப்
பெற்ற தகப்பனார் ராமநாதபுரம் சேதுபதியின் காரில் ஏறிக்கொண்டுபோய், “என்
மகனுக்கு ஓட்டுப் போடாதீர்கள். ராஜா நமது குலத்து தலைவர்.
நேபாளத்திலிருந்து வருகிற சிற்றரசர்கள் கூட இவரைப் பார்க்காது போவதில்லை.
என் மகன் காங்கிரஸில் சேர்ந்து குலத்தைக் கெடுக்கப் பார்க்கிறான்” என்று
என் தகப்பனார் சொன்ன காலம்.
இத்தனையும் கவனியாது அடியேன் காமராஜருக்கு, நாமசாதி நாடார் கையாட்களால்
அவமானம் நேர்ந்தது என்பதைக் கேள்விப்பட்டவுடன், ராஜா ஜெயித்தாலும் சரி,
நான் தோற்றாலும் சரி என்று சொல்லி, என்னுடைய பிராந்தியத்தை விட்டுவிட்டு
விருதுநகருக்குப் போனேன்.

அங்கேபோய் காங்கிரஸ் கமிட்டி ஆபீசில் நுழைகிறபோது, பலபேர் வந்து
சேர்ந்தார்கள். ஒருவர் வந்து, “பழனிக்குமார் பிள்ளை என்பவரை ஜஸ்டிஸ்
கட்சிக்காரர்கள் செருப்பால் அடித்து, ஆணி குத்தி, கன்னத்தில் கிழித்து,
ரத்தம் ஒழுகிக் கொண்டிருக்கிறது” என்று சொன்னார். அதற்கு மேல் கூட்டமாக
வந்த காங்கிரஸ்காரர்கள், “ஐயா நல்லவேளையாக வந்தீர்கள். காமராஜரையும்,
முத்துச்சாமி ஆச்சாரியாரையும் பலாத்காரமாக காரில் போட்டுக் கொண்டுபோய்
பட்டிவீரன்பட்டி சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோட்டத்தில் ஒழித்துக்
கட்டப் பார்க்கிறார்களாம், நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று
தெரிவித்தார்கள்.

இந்த நிலைமையைக் கண்டதும் இரண்டுபேருக்கும் நல்ல பந்தோபஸ்து கொடுத்தவன்
அடியேன். அதற்கு மேல் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக்கு சொல்லி அனுப்பினேன்.

“நீங்கள் நல்ல பணக்காரர்களாக இருக்கலாம். வெள்ளைக்கார டி.எஸ்.பி-கள்,
கலெக்டர்கள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம். வெள்ளைக்காரனை எதிர்த்து
சண்டை போடக் கூடியவர்கள் நாங்கள். காங்கிரஸ்காரர்கள் ஆயுதத்துக்கு பயப்பட
மாட்டார்கள். உங்கள் பணத்திமிருக்கு நாங்கள் பயந்து போக முடியாது.

இனிமேல் நீங்கள் காங்கிரஸ் தொண்டர்களிடத்தில் மரியாதையாக
நடந்துகொள்ளவில்லை என்றால், நாளை முதல் நீங்கள் வெளியில் வரும்போது
தோளுக்கு கவசம் போட்டுக் கொண்டு வரவேண்டி வரும். உங்களுக்கு ஆபத்து
வரலாம்” என்று சொல்லியனுப்பிய பிறகு அவர்கள் அவசரக் கூட்டம் போட்டார்கள்.

“தேவர் ராமநாதபுரம் ராஜாவை எதிர்த்துப் போட்டி போடுகிறபடியால், இங்கே
வரமாட்டார் என்று நினைத்தோம். ராஜா ஜெயித்து அவர் தோற்றாலும் சரி
என்கிறார். நாம் இனிமேல் அக்கிரமம் செய்ய முடியாது. எப்படியும் அவர்கள்
ஒன்று சேர்ந்து விட்டதால் மஞ்சள் பெட்டிதான் ஜெயிக்கப் போகிறது” எனச்
சொல்லி வி.வி. ராமசாமி நாடார் வாபஸ் வாங்கிக் கொள்ளச் செய்தார்கள்.
இந்த நிலைமையில் அவ்வளவு பாடுபட்டு, காமராஜர் போன்ற நபர்களை
ஸ்தானத்திற்கு கொண்டு வந்த அடியேன், இப்போது அந்தக் காங்கிரஸ் சபைக்கு
விரோதமாக ஆட்களை நிறுத்தி இருப்பதும், அவர்களுக்கு பொதுஜனங்களாகிய நீங்கள
வெற்றி பெற்றுத் தரவேண்டும் எனப் பிரசங்கம் புரிவதன் நோக்கம் என்ன?

அன்றைக்கு மஞ்சள் பெட்டியை ஜெயிக்கச் செய்து, அதன் மூலமாக பெரிய
போராட்டத்தை ஆங்கிலேயனுக்கு விரோதமாக உற்பத்தி பண்ண வேண்டுமென்று
நினைத்தோம். அப்படி நினைத்த காலத்தில் காங்கிரஸ் சபையில் இருந்த
தீவிரவாதிகளின் அபிப்ராயமும், மிதவாதிகளின் அபிப்ராயமும் ஒன்றுக்கொன்று
மாறுபட்டதாக இருந்த்து. ஒன்று சேரவில்லை.

தீவிரவாதிகள் “ராணுவத்தைக் கைக்கொண்டு, ராணுவ ரீதியாக சுதந்திர சர்க்காரை
அமைக்க வேண்டும்” என்று அபிப்ராயம் கொண்டவர்கள்.
மிதவாதிகள் “கொஞ்சம், கொஞ்சமாக சத்தியாக் கிரகத்தின் மூலமாக வாங்கினால்
போதும்” என்ற அபிப்ராயத்தில் இருந்தார்கள்.
--------------------------------------
தேவர் தீவிரவாதி
காமராஜர் மிதவாதி.

தேவையைப் பொறுத்து தேவரின் 1957-ம் ஆண்டு தேர்தல் பிரச்சார உரை
முழுவதுமாக ஆராயப்படும், தியாகு அவர்களே. உங்களுக்கு வேண்டிய விஷயங்களை
மட்டும் எடுத்துக் கொண்டு பேசக் கூடாது. அந்தப் பேசுக்கு முன்னும்
பின்னும் பேசியதையும் கவனத்தில் கொண்டு பேச வேண்டும்.

தியாகு

unread,
Jul 9, 2016, 12:38:48 AM7/9/16
to பண்புடன்
கல்வி கண்ணை திறந்த காமராஜரை தேவ

Thevan

unread,
Jul 9, 2016, 12:55:39 AM7/9/16
to panb...@googlegroups.com
காமராஜர் செய்த நல்ல காரியம் அது ஒன்றுதான். மற்றபடி அவர் செய்துள்ள
தவறுகளும் பல உள்ளன.

அதற்காக அவரை தூற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. தேவர் காமராஜர் இருந்த
நிலையை சுட்டிக் காட்டுவதன் மூலம் காங்கிரஸ் கட்சி என்ன மாதிரியான
நிலையில் உள்ளது என்பதையே சுட்டிக் காட்டுகிறார்.

இன்னும் முக்கியமாக சொல்லப் போனால், 1957 தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ்
கட்சியிலிருந்து உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரர்கள், சுதந்திரப் போராட்ட
வீரர்கள் தனியே பிரிந்து சென்று ஒரு கட்சியை துவக்க விரும்புகிறார்கள்.
அவர்கள் காமராஜர் மீது வைத்த குற்றச் சாட்டு, “காமராஜர் உண்மையான
காங்கிரஸ் தொண்டர்களை மதிப்பதில்லை. பணக்காரர்களுக்கு முக்கியத்துவம்
கொடுக்கிறார், சாதி பார்த்து வேட்பாளர்களை நியமிக்கிறார்” போன்றவை ஆகும்.

அப்போது அவர்கள் நேராக சென்றது ராஜாஜியிடம், ஆனால் தேவர் சொன்னால்
நீங்கள் இதைச் செய்யலாம் என்று ராஜாஜி அவர்களை தேவரிடம் அனுப்பி
வைக்கிறார். பின்னர் தேவரின் சம்மதத்தின் பேரில் ‘சீர்திருத்த காங்கிரஸ்
கட்சி’ உதயமாகிறது.

இந்தக் கட்சியும் ஃபார்வேர்டு பிளாக் கட்சியும் இணைந்து தேர்தலில்
80-க்கும் மேற்பட்டஇடங்களில் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சி 22
இடங்களிலும் ஃபார்வேர்டு பிளாக் 7 இடங்களிலும் என 29 இடங்களை
பிடிக்கிறார்கள். எதிர்க்கட்சியே இல்லை என்று இருந்த நிலையில் இவ்வாறு
ஒரு எதிர்க்கட்சி உருவானதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை.

எனவே இதுபோன்ற ஒரு சூழலில்தான் 1957-ம் ஆண்டு தேர்தல் நடக்கிறது. இந்த
தேர்தலில் தேவர் தங்கள் கூட்டணிக்காக காஞ்சிபுரத்திலிருந்து கன்யாகுமரி
வரை பிரச்சாரம் செய்கிறார். அதில் காங்கிரஸ் கட்சிக்கு தான் உழைத்த
விதம், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு, காமராஜரின் நிலை என எல்லா
விஷயங்களையும் பேசுகிறார். இதில் காமராஜரை பற்றி பேசியதை மட்டும்
பிடித்துக் கொண்டு குற்றம்சாட்டுவதாக இருந்தால் அது உங்கள் விருப்பமாகவே
இருக்கட்டும்.

தியாகு

unread,
Jul 9, 2016, 1:02:56 AM7/9/16
to பண்புடன்
காமராஜர் காலத்தின் தொழில் வளர்ச்சி கல்வி வளர்ச்சி தனிபட்ட வாழ்க்கையாகட்டும் பொது வாழ்க்கையாகட்டும். அவரது சேவை போற்றத்தக்கது

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ்  : http://www.panbudan.com

தியாகு

unread,
Jul 9, 2016, 2:07:35 AM7/9/16
to பண்புடன்
// நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.//

இது அவரோட பாசிட்டிவ்

1.காமராஜரை தாக்கி பேசிய வார்த்தைகள்
2.இம்மானுவேல் கொலை

இது அவரோட நெகட்டிவ்

தியாகு

unread,
Jul 9, 2016, 2:26:38 AM7/9/16
to பண்புடன்
இம்மானுவேல் சேகரின் கொலைக்கு தேவர் காரணம் அல்ல ஆனால் அவருடன் இருந்தவர்கள் இதை செய்திருக்கிறார்கள் என பேசும் இந்த கட்டுரை நாடார்களின் பங்கு என்னவென்பதை  பேசுகிறது ஒருவேளை

நாடார்கள் மீதான வெறுப்பை காமராஜர் மீது காட்டினாரா தேவர் என தெரியவில்லை

/

இம்மானுவேல் சேகரன் - நாங்கள் எப்படி புரிந்துகொள்கிறோம்..



இம்மானுவேல் சேகரன் ஒரு இளைஞர். போராட்ட குணமுள்ளவர்.  அவர் காங்கிரஸ் கட்சியின் தலைமைகளுக்கு நெருக்கமாக ஆகிறார். அல்லது ஆக்கப்படுகிறார். இந்த நிலையில்...

முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகு அங்கு பல்வேறு இடங்களில் கலவரங்கள், மோதல்கள் நடக்கின்றன என்பது போன்ற வதந்திகள் கிளப்பப்படுகின்றன. தொகுதிக்குள் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது.

அப்பொழுது அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பதவியிலும் இல்லாத இம்மானுவேல் பள்ளர்களின் பிரதிநிதியாக ஆக்கப்படுகிறார். (கலெக்டர், எஸ்பி முதலானோர் கலந்துகொண்ட இந்த பேச்சு வார்த்தையை நாட்டாமை கூட்டம் என்ற ரேஞ்சில் திராவிடர்கள் / தலித்கள் அறிவுஜீவிகள் வர்ணிப்பர்).

அப்போது தேர்தெடுக்கப்பட்ட பள்ளர் எம்எல்ஏக்கள் காங்கிரஸ், பார்வர்டு பிளாக் ஆகிய இரண்டு கட்சிகளிலுமே இருந்தனர். அவர்கள் பள்ளர்களின் பிரதிநிதியாக்கப்படவில்லை. அதேவேளையில் 80% பள்ளர்களின் ஆதரவு பார்வேர்டு பிளாக் கட்சிக்கு உள்ளது.

இதைத்தான் தேவர் கேட்டார், “பள்ளர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கும்போது இவரை எப்படி பள்ளர்களின் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ள முடியும்?” என்று. அதேபோல இம்மானுவேல் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியில் இல்லாத காரணத்தால் அவரோடு கையொப்பம் இட முடியாது என்றுதான் தேவர் சொன்னார். (இதை திராவிட, சாதி ஊடகங்கள் அவர் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்தால் அவருடன் கையொப்பம் இட முடியாது என்று தேவர் சொன்னதாக செய்தி வெளியிட்டன).

அதன் பின்னர் அமைதிக்காக தனித்தனி வேண்டுகோள் தயாரிக்கப்பட்டு அதில் கையொப்பம் இடப்படுகிறது. அத்துடன் கூட்டம் நல்ல முறையில் நடந்து முடிகிறது.

கூட்டம் முடிந்த பின்னர் தேவர், ஒரு பள்ளப் பயலை இப்படி பேச விட்டுவிட்டீர்களேஎன்று தன்னுடன் இருந்தவர்களை கடிந்து கொண்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட பெருமாள் பீட்டர் கூறுகிறார். (இதனை ஏற்க இயலாது. ஏனெனில் தேவருடன் எப்போதும் இருக்கும் சோலைக் குடும்பன் ஒரு பள்ளர். (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார்.) அப்படி இருக்கும்போது தேவர் இப்படி பேசியதாக கூறியது ஏற்புடையதல்ல).

அடுத்ததாக தேவர் அப்படி கடிந்துகொண்டிருந்தாலும் அது கொலைக்குத் தூண்டியதாக கருதப்படுமா என்று தனிநீதி மன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. பின்னர் அதனை அப்படிக் கருத முடியாது என்று கூறி நீதிபதிகள் ஏற்க மறுத்து விடுகிறார்கள்.

அதன் பின் தேவருக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்குமா என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி அவரை விடுதலை செய்கிறார்கள்.

தேவரை முதலில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்த காங்கிரஸ் அரசாங்கம் ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்குப் பிறகுதான் அவரின் பெயரை இம்மானுவேல் கொலையில் சேர்க்கிறது. (தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய முடியாது. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் கைது செய்தது).

சரி இம்மானுவேலை கொலை செய்யவே இல்லையா? ஆமாம், அவர் கொலை செய்யப்பட்டார். அவர்கள் தேவருடன் இருந்தவர்கள்தானே? ஆமாம், தேவருடன் இருந்தவர்கள்தான். ஒரே கட்சியில் ஒரே தலைவரின் கீழ் இயங்குபவர்கள் மோதிக் கொள்வதில்லையா? அதற்கு காரணம் கட்சி இல்லையே? அதுபோல அவர்கள் வேறு ஏதாவது காரணத்திற்காக கொலை செய்திருக்கலாம். (அதற்கான தண்டனையையும் அவர்கள் அனுபவித்துவிட்டார்கள்.)

இந்தப் புள்ளிக்கு காங்கிரஸ் அரசு செல்லவேயில்லை. அதாவது இம்மானுவேல் சேகரன் எதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படவேயில்லை. அவர்களின் நோக்கம் இந்த கொலை வழக்கில் தேவரைச் சிக்க வைப்பதாகவே இருந்தது. அதுவும் தோல்வியில் முடிந்தது.

இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டது வருந்தத் தக்கது, கண்டிக்கத் தக்கது. ஆனால் அதற்காக திராவிடமும், தலித்தியமும் அந்த கொலைக் குற்றத்தை ஒட்டு மொத்த தேவர் சமுதாயத்தின் மீதும் சுமத்த முயற்சிப்பது எந்த வழியில் நியாயம்? அன்று காங்கிரஸ் செய்த சதியை இன்று திராவிடமும், தலித்தியமும் செய்து வருகின்றன. இவர்களின் தேவை கலவரம் தொடர வேண்டும். ஆனால் நமது தேவை அதுவல்ல.

மற்றபடி முதுகுளத்தூர் கலவரத்திற்கு முன்பு மறவரும் - பள்ளரும் இப்பகுதியில் சகோதரர்களாத்தான் வாழ்ந்து வந்தார்கள். இந்த இரண்டு சமுதாயத்தினரும் கலந்து வசித்து வந்தார்கள். திராவிட, தலித் அறிவுஜீவிகள் அரசியல் செய்ய தேவைப்படும் “சேரி” இங்கு இல்லை. பள்ளர்கள் சேரிகளில் வசிக்கவில்லை. அவர்கள் மறவர்களோடு கலந்து வசித்து வந்தார்கள்.

உண்மைகள் இப்படி இருக்க, தேவர்களை ஆதிக்க சாதியாகக் காட்டி அரசியல் செய்ய திராவிடருக்கும் தலித்களுக்கும் கலவரங்கள் தேவையாக உள்ளன. எனவே அவர்கள் இதையே விரும்புகிறார்கள்.

முதுகுளத்தூர் கலவரத்தில் நாடார்களுக்கும் கணிசமான பங்கு உண்டு. ஏன்? தேவர் நாடார்களில் கள்ள மார்க்கெட்டில் ஈடுபட்டு வருவோரை கடுமையாகக் கண்டித்து வந்தார். பார்வேர்டு பிளாக்கில் நாடார்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நாடார்களுக்கு எதிரானவராக இருந்தால்  அவர்கள் எப்படி அந்தக் கட்சியில் இருந்திருப்பார்கள்? காமராஜர் அரசியலின் கடைக்கோடியில் இருந்தபோது உதவிக்கு வராத இந்த கள்ள மார்க்கெட் கும்பல் அவர் முதல்வர் பதவிக்கு வந்ததும் அவரோடு வந்து ஒட்டிக் கொண்டது. சில சமயங்களில்  அவர்களின் விருப்படியும் அரசியல் நடைபெற்றது. அதுவே முதுகுளத்தூர் கலவரம் மற்றும் இம்மானுவேல் சேகரனின் கொலைக்கு காரணமாக அமைந்த்து.

அமைதிப் பேச்சுவார்த்தையில் அவர்களும் பங்கேற்க வந்ததன் மர்மம் இதுதான். ஆனால் அவர்களை அதிகாரிகள் வெளியேற்றிவிட்டனர். நேரடியான தொழிலோ, அரசியலோ செய்ய முடியாத இந்தக் கும்பல் மறவர்களுக்கு எதிராக பள்ளர்களை களத்தில் இறக்கியது என்பதுதான் உண்மை. அதற்கு பலிகடா ஆக்கப்பட்ட போராளிதான் இம்மானுவேல் சேகரன்.

இன்றையத் தேவை சமூக நல்லிணக்கம். பல்வேறு தமிழ்ச் சமூகங்களும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். கடந்த காலத்தில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மறந்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சாதி ஒழிப்பு தமிழருக்கான விடுதலை அல்ல. சாதிகளுக்கு இடையேயான புரிதலே தமிழருக்கான விடுதலை.

பள்ளர்கள் இம்மானுவேல் சேகரனின் குருபூஜையை கொண்டாட்டும். தேவர்கள் தேவரின் குருபூஜையைக் கொண்டாட்டும். பள்ளர்களும் - தேவர்களும் எதிரிகள் அல்ல, சகோதரர்கள். எனவே இரு தரப்பினரும் தங்களுக்குள் பகைமை பாராட்டாமல் ஒற்றுமையை பேணுவது காலத்தின் கட்டாயம்.//

தியாகு

unread,
Jul 9, 2016, 2:27:08 AM7/9/16
to பண்புடன்
இதை எழுதியது பெருமாள் தேவன் அவர்கள் தான்

தியாகு

unread,
Jul 9, 2016, 2:28:54 AM7/9/16
to பண்புடன்
மேற்கண்ட கட்டுரையில் எனது சந்தேகங்கள் இதுதான்

எந்த அரசியல் கொலையையும் தலைவர்கள் தலைமை தாங்கி நடத்துவதில்லை

அவ்வகையில் சாதி ஆதிக்க திமிரோடு இந்த கொலை நடந்திருக்கிறது ஆனால் சாதி ஆதிக்க திமிர் கொண்டவர்கள்

அவரது கட்சியில் வைத்திருந்திருக்கிறார் தேவர் என்ற வகையில் சமூக அநீதியில் அவர் பங்கு உள்ளது

Thevan

unread,
Jul 9, 2016, 8:51:02 AM7/9/16
to panb...@googlegroups.com
கட்டுரை குறித்து கவனத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி. கட்டுரை எழுதும்போது
அவர்கள் கொலையாளிகள் குறித்த குற்றச்சாட்டை வைத்தே எழுதப்பட்டது. அதன்
பின்னர் நான் விசாரித்துப் பார்த்ததில், அவர்களுக்கும் தேவருக்கும்,
ஃபார்வேர்டு பிளாக் கட்சிக்கும் தொடர்பில்லை என்று தெரிந்தது.

தியாகு

unread,
Jul 11, 2016, 12:58:57 AM7/11/16
to பண்புடன்
இன்றும் கூட தேவர் பெயரால் பத்தட்டம் உருவாக்கப்படுகிறது அப்படி இருப்பதற்கு தேவரின் நடவடிக்கைகள் ஒரு காரணமே ஆகும்

சாதி அரசியல் என்பதை விட சாதி ஆணவ அரசியல் சமூக பதட்டம் இதெல்லாம் இருக்க கூடாது என்றால்

ஆதிக்க சாதி தலைவர்களின் பெருமையை ஓட்டுக்காக அரசியல் கட்சிகள் கொண்டாடுவதை கைவிடவேண்டும்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com

Thevan

unread,
Jul 11, 2016, 8:55:48 AM7/11/16
to panb...@googlegroups.com
//இன்றும் கூட தேவர் பெயரால் பத்தட்டம் உருவாக்கப்படுகிறது அப்படி
இருப்பதற்கு தேவரின் நடவடிக்கைகள் ஒரு காரணமே ஆகும் //

ஹாஹாஹாஹா

seewty...@gmail.com

unread,
Jul 11, 2016, 9:18:56 AM7/11/16
to panb...@googlegroups.com
What a laugh

Sent from my vivo smart phone

Thevan <apth...@gmail.com> wrote:

தியாகு

unread,
Jul 12, 2016, 3:01:28 AM7/12/16
to பண்புடன்
பரம குடி கலவரம் பற்றிய ஒரு கட்டுரை பகிர்தலுக்காக

7 தலித்துகள் உயிரிழப்புக்கு காவல்துறை காரணமா ?

by Savukku · September 12, 2011

பரமக்குடி கலவரத்தையும், அதையொட்டி நடந்த உயிரிழப்பையும், இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் விவாதித்தன.  இதற்கு பதிலளித்துப் பேசிய செல்வி ஜெயலலிதா, பரமக்குடியில் ஒரு சுவரில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை, இழிவாகக் குறிப்பிட்டு ஒரு சுவற்றில் எழுதப் பட்டிருந்ததாகவும், அதன் காரணமாக பழனிக்குமார் என்ற 15 வயதுச் சிறுவன் கொல்லப் பட்டதாகவும், அந்தப் பழனிக்குமார் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த ஜான் பாண்டியன் சென்றதாகவும், அவரை தடுத்ததால் அவர் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், இப்படியாக சங்கிலித் தொடர் போலச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

 Natarajan-IAS

ஜெயலலிதாவின் இந்தச் சங்கிலித் தொடர், அவருக்கே நியாயமாக இருக்கிறதா என்பது தெரியவில்லை.   ஒரு தலைவரைப் பற்றி சுவற்றில் தவறாக எழுதப் பட்டிருக்கிறது என்பதற்காக ஒரு 15 வயதுச் சிறுவனை சாதி வெறியர்கள் கொலை செய்திருக்கிறார்கள்.  அந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அந்தச் சிறுவனின் சாதியைச் சேர்ந்த ஒரு தலைவர் வந்தால் கலவரம் ஏற்படும் என்பதற்காக அவர் தடுக்கப் பட்டார், அதனால் தான் கலவரம் நடந்தது என்று ஒரு முதல்வர் சட்டசபையில் பேசலாமா ?   ஒரு மனநிலை பிறழ்ந்தவன் சுவற்றில் ஏதோ கிறுக்கி  விட்டான் என்பதற்காக, ஒரு 15 வயதுச் சிறுவனை கொல்லலாமா ?   அப்படியே அந்தச் செயலை அந்தச் சிறுவன்  செய்தான் என்றே வைத்துக் கொள்ளலாம்.    அதற்காக அவனை கொலை செய்வது சரியா ?  ஏற்கனவே காலம் காலமாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஒரு அரசு ஏற்படுத்தும் நம்பிக்கையா இது ?   இருக்கும் ஒட்டு மொத்த காவல்துறையையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குவித்து, அந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டாமா ?

 Seven_Killed_In10652

சில அரசியல் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்தச் செயலில் ஈடுபட்டார்கள் என்று ஜான் பாண்டியனை குறிப்பிடுகிறாரே….   இன்று அரசியலில் ஆதாயத்துக்காக யார்தான் காரியங்களைச் செய்யவில்லை ?  இத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தும், இதே ஜான் பாண்டியனோடு, 2001 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தவர் தானே ஜெயலலிதா ?  அப்போது எழும்பூர் தொகுதியில் பரிதி இளம் வழுதிக்கு எதிராக நின்று, 86 வாக்குகளில் தோல்வியடைந்த ஜான் பாண்டியனும், பரிதி இளம் வழுதியும், கடும் வன்முறையில் ஈடுபட்டார்களே… அப்போது ஜான் பாண்டியனை கண்டித்தாரா ஜெயலலிதா ?

 

வருடம் தவறாமல், தேவர் குரு பூஜைக்கு சிறப்பு விமானத்தில் சென்று கலந்து கொள்கிறாரே ஜெயலலிதா ?  அது அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல் வேறு எதற்காக ?   தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுவதில், இடது சாரிகள் கூட விதிவிலக்கல்ல என்பதுதான் வேதனையான விஷயம். அரசியல் ஆதாயம் தேடாத ஒரே ஒரு கட்சியை ஜெயலலிதாவால் அடையாளம் காட்ட முடியுமா ?

 

ஜான்பாண்டியன் அரசியல் ஆதாயத்துக்காகத் தான் பரமக்குடி செல்ல முயன்றார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது.   தேவேந்திர குல மக்களின் ஒரே பிரதிநிதி என்பதில் டாக்டர்.கிருஷ்ணசாமிக்கும், ஜான் பாண்டியனுக்கும் இடையே நிலவும் போட்டியே, ஜான் பாண்டியனை பரமக்குடிக்கு செல்லத் தூண்டியது என்றால் மிகையல்ல.

 

திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே, முத்துராமலிங்கத் தேவரை கவுரவித்து, அதன் மூலம், முக்குலத்தோர் வாக்கு வங்கிகளை வசப்படுத்த வேண்டும் என்பதில் கடும் போட்டி போட்டன.

 vehicle_779216g

2007ல், முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை அனைத்து சாதி பிரதிநிதி கருணாநிதி மிகச் சிறப்பாக நடத்தினார்.   பசும்பொன் விழா என்ற பெயரில் மூன்று நாட்கள் இந்த விழா நடந்தது.

 

2007 செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தேவர் சாதியினராலும், தமிழக அரசாலும் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன. அரசு சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் ‘தேவர் ஜெயந்தி விழா’ கொண்டாடப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கமுதி தாலுகாவில் விழா நாட்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்’ என்றும் ‘தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்’ என்றும் ‘ஒவ்வொரு 30 கி.மீ. தூரத்திற்கும் ஓர் அவசர சிகிச்சை வண்டி நிறுத்தப்படும்’ என்றும் “போக்குவரத்து வழித்தடங்களில் ஒவ்வொரு இடத்திலும் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், துணை மாஜிஸ்ட்ரேட் ஆகிய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்’ என்றும் தெரிவித்திருந்தார். முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழா மூன்று நாட்களும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழா ஒரு நாளும் மேலும் இவ்விழாப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றல், விடுபடல் என ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு தென் தமிழகத்தின் 8 மாவட்டங்களின் அரசு எந்திரம், அன்றாட மக்களின் பணிகளை விடுத்து இவ்விழாவில் முடக்கப்பட்டன. அனைத்து உழைக்கும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.

 

அதே ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாடப் பட வேண்டிய, முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜீவா மற்றும் பகத் சிங் ஆகியோருக்கு கலைவாணர் அரங்கத்தில் நடக்க இருந்த அரசு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப் பட்டதை மறக்க முடியாது.

 THSHK_PARAMAKUDI_PT_779816g

ஜெயலலிதா தன் பங்குக்கு, இணையாக, மதுரையில் அவருக்கு நூறு அடி உயர சிலை நிறுவவும், ‘இரண்டாம் படை வீடு’ என்ற பெயரில் கோயில் கட்ட அடிக்கல் நாட்டி தன் பங்குக்கு தேவருக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.  இதேநேரத்தில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை நிறுவ வேண்டுமென, அப்போது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த ஜான்பாண்டியன் தலைமையில் மறியல் நடந்தபோது, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு நான்கு தலித் உயிர்கள் பலியான சம்பவம் நம் நினைவிற்கு வரவேண்டும். பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினரோடு, ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அரசே அண்ணா சாலையில் சிலை வைப்பதும், இமானுவேலுக்கு, சிலை வைக்க அனுமதிக்கே மறியல் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் உயிர் விடுவதும், இதே தமிழ்நாட்டில் தான் நடக்கிறது.

 

‘தேவர்’ பெயர் சூட்டலும், மணி மண்டபம் கட்டும் வேலைகளும், பொதுப் பெயர் சூட்டி குறிப்பிட்ட சாதியினரை வலிமைப் படுத்துதலும் தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவால் தொடர்ந்து முன்னெடுக்கப்  படுகையில், அதற்கான எதிர்வினையாகவே  தலித் மக்கள் ஆங்காங்கே தன்னியல்பாக அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம் சிலைகளை நிறுவ முயல்வதும், இவர்களுக்கான விழாவை சிறப்பாக கொண்டாடுவதிலும் ஈடுபடுகிறார்கள்.

 

இன்று இமானுவேல் நினைவு தினத்துக்கு பரமக்குடியில் திரண்டிருந்த பெரும்பாலானோருக்கு, இமானுவேல் வரலாறு என்ன என்பது தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், தங்களை ஒடுக்கும் சாதிக்கு தங்கள் எதிர்ப்பை காண்பிப்பதற்கான ஒரு களமாகவே இமானுவேல் நினைவு தினத்தை பார்க்கிறார்கள்.   இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் தங்கள் சாதிக் கட்சித் தலைவரை காவல்துறை கைது செய்துள்ளது என்கிற செய்தி, ஒடுக்கப் பட்ட ஒரு கூட்டத்திடம் கோபத்தை வரவழைப்பது இயல்பே. “அதிகாரமற்றவர்களின் குரலே கலவரங்கள்” (riots are the voice of the powerless) என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்வது பொறுத்தமானதே.

 THSHK_PARAMAKUDI_5_779813g

இந்த பின்புலத்திலேயே ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சம்பவங்களைக் காண வேண்டும்.  வரக்கூடிய உள்ளாட்சித் தேர்தல்களில், டாக்டர்.கிருஷ்ணசாமியை விட, நான் வலுவானவன் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயம் ஜான் பாண்டியனுக்கு.  அதற்காக, இமானுவேல் நினைவு தினத்தன்று விரிவான ஏற்பாடுகளை செய்கிறார்.  ஏராளமான பணத்தையும் செலவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இந்த நிலையில் இமானுவேல் நினைவு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன், சாதீயக் கொலை என்று சந்தேகப் படும் வகையில் பழனிக்குமார் என்ற 15 வயது சிறுவன் கொல்லப் படுகிறான்.  மறுநாள் ஊடகங்களில் வந்த செய்திகள், அந்தச் சாதியைச் சேர்ந்த யாராவது ஒருவரை கொல்ல வேண்டும் என்று ஒரு கும்பல் தேடிய போது, இந்தச் சிறுவன் மாட்டிக் கொண்டான் என்று கூறின.

 THSHK_PARAMAKUDI_2_779810g

காவல்துறை, இந்தச் சிறுவனின் மரணத்தை அறிந்த உடனேயே, ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும்.   கொடி அணிவகுப்பு நடத்தியிருக்க வேண்டும்.   மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.    ஒரு 15 வயதுச் சிறுவனை சாதியின் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறதென்றால், அந்தச் சம்பவத்தை, பாதிக்கப் பட்ட மக்கள், உணர்ச்சி வசப் பட்ட நிலையிலேயே அணுகுவார்கள் என்பதை காவல்துறை கணித்திருக்க வேண்டும்.

 THSHK_PARAMAKUDI_1_779809g

சனிக்கிழமை இரவு முதல், ஞாயிற்றுக் கிழமை காலை வரை, ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தமிழகமெங்கும் இருந்து, மக்கள் வந்து குவிந்தது, காவல்துறைக்கு நன்கு தெரியும்.   தெருவுக்குத் தெரு, டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்திருந்தால், அந்த மக்கள் எப்படி வருவார்கள் என்பதும் தெரியும்.    இப்படி மக்கள் குவியும் போது, அதற்கு ஏற்றார் போல, அந்தக் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் போதுமான காவல்துறையினர் அந்த மாவட்டத்தில் திரட்டப் பட்டிருக்க வேண்டும்.  அந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கூடுகிறார்கள், எத்தனை பேர் எதிர்ப்பார்க்க படுகிறார்கள், ஜான் பாண்டியன் செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பதையெல்லாம் கணிக்க வேண்டியது உளவுத் துறையின் பொறுப்பு.   1997ல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரத்தின் போது, உளவுத்துறையில் பணியாற்றிய, தற்போது தமிழகத்தின் உளவுத்துறை தலைவராகவும், காவல்துறை இயக்குநராகவும் இருக்கும் ராமானுஜத்திற்கு, இந்த விஷயங்களில் போதுமான அனுபவம் உண்டு. 

THSHK_PARAMAKUDI_779808g

 மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு கலவரத்தின் போது, கூட்டத்தின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பதை பயிற்சியிலேயே சொல்லிக் கொடுக்கிறார்கள்.  முதல் கல் எறியப் படும் வரைக்கும் தான் பேச்சுவார்த்தை எல்லாம். அதன் பிறகு பேசுவதற்கு இடமே கிடையாது. கலவரம் தொடங்கியதும், பொதுமக்கள் காவல்துறை எல்லோருமே ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்.  சென்னை உயர்நீதிமன்ற காவல்துறையினர் வழக்கறிஞர் மோதலின் போது, சும்மா நின்று கொண்டிருந்த கார்களையும், பைக்குகளையும், காவல்துறையினர் அடித்து நொறுக்கவில்லையா ?

 THSHK_PARAMAKUDI_779807g

ஏராளமான பணத்தை செலவு செய்து, தனது அரசியல் செல்வாக்கை நிலை நாட்ட ஜான் பாண்டியன் முயலப்போகிறார் என்பது உளவுத்துறைக்கு நன்கு தெரியும்.  அப்படி இருக்கையில், இவ்வளவு செலவு செய்து விட்டு, ராமநாதபுரம் செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் கேட்டுக் கொண்டால், அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்கும் நிலையில் அவர் அரசியல் செல்வாக்கு இல்லை.  ஜான் பாண்டியனை கைது செய்தால், ராமநாதபுரத்தில் கூடியிருக்கும் 3 ஆயிரம் மக்களை எப்படிக் கட்டுப் படுத்துவது என்பதை காவல்துறையினர் யோசித்திருக்க வேண்டும்.  ஜான் பாண்டியன் தடையை மீறுவார், கைது செய்ய நேரிடும் என்பதையும் கணித்திருக்க வேண்டும்.   இதைக் கணித்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழையாமல், மாவட்ட எல்லையிலேயே மக்களை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.   அப்படி இல்லையென்றால் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, அதிரடிப்படை, லொட்டு லொசுக்கு படைகளையெல்லாம், ராமநாதபுரத்தில் குவித்திருக்க வேண்டும்.

THSHK_PARAMAKUDI_3_779811g

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வருகை தருவதற்கு நான்கடுக்கு பாதுகாப்பை வழங்கும் தமிழக காவல்துறை, சொந்த மாநிலத்தில், சக குடிமகன்களுக்கு பாதுகாப்பு வழங்காமல், ஓட விட்டு சுடுவது வெட்கக் கேடு.

இப்படி முன்னேற்பாடுகளைச் செய்யாமல், போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினரை குவிக்காமல், 7 பேரை ஓட ஓட விரட்டிச் காக்கைக் குருவிகளைப் போல சுடுவதென்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கலவரத்திற்கு பொறுப்பான அதிகாரிகள்

 THSHK_PARAMAKUDI_779817g

1)  திரு.கே.ராமானுஜம், உளவுத் துறை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்

2)  திரு.எஸ்.ஜார்ஜ், கூடுதல் டிஜிபி சட்டம் மற்றும் ஒழுங்கு

3)  திரு.டி.ராஜேந்திரன், உளவுத்துறை கூடுதல் டிஜிபி

4)  திரு.ராஜேஷ் தாஸ், தென் மண்டல காவல்துறை தலைவர்

5)  திரு.சந்தீப் மிட்டல், ராமநாதபுரம் டிஐஜி

6)  திரு.காளிராஜ் மஹேஷ்வர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர்

7)  திரு.செந்தில் வேலன், அடையாறு துணை ஆணையர், ராமநாதபுரத்தில் ஏற்கனவே பணியாற்றியதாக ஞாயிறன்று பரமக்குடிக்கு அனுப்பப் பட்டவர்.  இவர்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்.

அந்தக் கூட்டத்தினர் கலவரத்தில் ஈடுபட்டனர், அதனால் காவல்துறைக்கு வேறு வழியில்லை என்று காவல்துறையினர் சமாதானம் சொல்லக் கூடும்.

கடந்த மாதம் 6 முதல் 10 வரை, லண்டன் மாநகரில் நடந்த கலவரங்களை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம்.    அன்று லண்டன் பெருநகர காவல்துறை துப்பாக்கிச் சூடு  நடத்தியிருந்தால், நூற்றுக்கணக்கில் செத்திருப்பார்கள்.  ஆனால், லண்டன் காவல்துறை ஒரு முறை கூட துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.    இந்தப் புகைப்படங்களைப் பாருங்கள்.  இதைவிடவா பரமக்குடியில் கலவரம் நடந்து விட்டது ?


Thevan

unread,
Jul 12, 2016, 7:50:42 AM7/12/16
to panb...@googlegroups.com
ஒரு எழுத்தாளர் அதிபுத்திசாலித்தனமாக எழுதிய கட்டுரை.

//ஒரு தலைவரைப் பற்றி சுவற்றில் தவறாக எழுதப் பட்டிருக்கிறது என்பதற்காக
ஒரு 15 வயதுச் சிறுவனை சாதி வெறியர்கள் கொலை செய்திருக்கிறார்கள்.//

ஒரு சிறுவன் ஒரு தலைவரை அவமதிக்கும் வகையில் எழுதினால் அது சாதிவெறி கிடையாது.

//ஒரு மனநிலை பிறழ்ந்தவன் சுவற்றில் ஏதோ கிறுக்கி விட்டான் என்பதற்காக,
ஒரு 15 வயதுச் சிறுவனை கொல்லலாமா?//
ஒரு மனநிலை பிறழ்ந்தவன் சுவற்றில் ஏதோ கிறுக்கினான் என்றால் மற்றொரு
மனநிலை பிறழந்தவன் அவனை கொலை செய்கிறான். இரண்டுமே ஒன்றுதான்.

// அப்படியே அந்தச் செயலை அந்தச் சிறுவன் செய்தான் என்றே வைத்துக்
கொள்ளலாம். அதற்காக அவனை கொலை செய்வது சரியா ? ஏற்கனவே காலம் காலமாக
ஒடுக்கப் பட்ட மக்களுக்கு ஒரு அரசு ஏற்படுத்தும் நம்பிக்கையா இது?
இருக்கும் ஒட்டு மொத்த காவல்துறையையும் ராமநாதபுரம் மாவட்டத்தில்
குவித்து, அந்த மக்களுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்க
வேண்டாமா ?//

அரசாங்கம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே செயல்பட வேண்டும்.
மற்றவர்கள் நாசமாகப் போனால் கவலைப்படக் கூடாது.

//சில அரசியல் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக இந்தச் செயலில்
ஈடுபட்டார்கள் என்று ஜான் பாண்டியனை குறிப்பிடுகிறாரே…. இன்று
அரசியலில் ஆதாயத்துக்காக யார்தான் காரியங்களைச் செய்யவில்லை ?//
அப்படி என்றால் எல்லா அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளும் நியாயம்தானே?

//வருடம் தவறாமல், தேவர் குரு பூஜைக்கு சிறப்பு விமானத்தில் சென்று
கலந்து கொள்கிறாரே ஜெயலலிதா ? அது அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல் வேறு
எதற்காக ? தேவர் குரு பூஜையில் கலந்து கொண்டு, அரசியல் ஆதாயம்
தேடுவதில், இடது சாரிகள் கூட விதிவிலக்கல்ல என்பதுதான் வேதனையான விஷயம்.
அரசியல் ஆதாயம் தேடாத ஒரே ஒரு கட்சியை ஜெயலலிதாவால் அடையாளம் காட்ட
முடியுமா ?//
அவரே சொல்லிவிட்டார் எல்லாக் கட்சிகளும் அரசியல் ஆதாயம் தேடுகின்றன என்று.

//ஜான்பாண்டியன் அரசியல் ஆதாயத்துக்காகத் தான் பரமக்குடி செல்ல முயன்றார்
என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. தேவேந்திர குல மக்களின் ஒரே
பிரதிநிதி என்பதில் டாக்டர்.கிருஷ்ணசாமிக்கும், ஜான் பாண்டியனுக்கும்
இடையே நிலவும் போட்டியே, ஜான் பாண்டியனை பரமக்குடிக்கு செல்லத் தூண்டியது
என்றால் மிகையல்ல.//

அவர்களுக்கு இடையே ஏற்படும் அரசியல் போட்டிகளுக்கு மற்றவர்கள்
பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறாரா?

//திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே, முத்துராமலிங்கத் தேவரை
கவுரவித்து, அதன் மூலம், முக்குலத்தோர் வாக்கு வங்கிகளை வசப்படுத்த
வேண்டும் என்பதில் கடும் போட்டி போட்டன.//

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுகிறேன் பேர்வழி என்று செயல்படும் கட்சிகள்
அம்பேத்கரை கௌரவிக்க தவறுவதில்லையே? ஆனால் அது சரி என்பார்
போலிருக்கிறது.

//2007ல், முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை அனைத்து
சாதி பிரதிநிதி கருணாநிதி மிகச் சிறப்பாக நடத்தினார். பசும்பொன் விழா
என்ற பெயரில் மூன்று நாட்கள் இந்த விழா நடந்தது.//

கருணாநிதி அனைத்துச் சாதிப் பிரதிநிதியாம். ஹாஹாஹாஹா

//2007 செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தேவர் சாதியினராலும், தமிழக
அரசாலும் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் முடுக்கி
விடப்பட்டன. அரசு சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள்
‘தேவர் ஜெயந்தி விழா’ கொண்டாடப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட
ஆட்சியர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு,
செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கமுதி தாலுகாவில் விழா நாட்களில்
கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்’ என்றும் ‘தலைவர்களின்
சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்’ என்றும் ‘ஒவ்வொரு 30 கி.மீ.
தூரத்திற்கும் ஓர் அவசர சிகிச்சை வண்டி நிறுத்தப்படும்’ என்றும்
“போக்குவரத்து வழித்தடங்களில் ஒவ்வொரு இடத்திலும் வட்டாட்சியர், காவல்
துறை ஆய்வாளர், துணை மாஜிஸ்ட்ரேட் ஆகிய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில்
ஈடுபடுத்தப்படுவர்’ என்றும் தெரிவித்திருந்தார். முத்துராமலிங்கம்
நூற்றாண்டு விழா மூன்று நாட்களும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை
திறப்பு விழா ஒரு நாளும் மேலும் இவ்விழாப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள்
பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றல், விடுபடல் என ஏறத்தாழ ஒரு வார
காலத்திற்கு தென் தமிழகத்தின் 8 மாவட்டங்களின் அரசு எந்திரம், அன்றாட
மக்களின் பணிகளை விடுத்து இவ்விழாவில் முடக்கப்பட்டன. அனைத்து உழைக்கும்
மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.//
“முத்துராமலிங்கம்” என்று விளிக்கத் துவங்கிய எழுத்தாளரின் சாதிப் பற்று
புளங்காங்கிதம் அடையச் செய்கிறது.

//பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ
ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் ஆதிக்கச்
சாதியினரோடு, ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அனைத்து அரசியல் சக்திகளும்
ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.//

இது அரசியல் ராஜதந்திரிகளின் செயல். இதில் ஆதிக்க சாதிகள் எங்கே வருகின்றன?

//பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அரசே அண்ணா சாலையில் சிலை
வைப்பதும், இமானுவேலுக்கு, சிலை வைக்க அனுமதிக்கே மறியல் நடத்தி
துப்பாக்கிச் சூட்டில் உயிர் விடுவதும், இதே தமிழ்நாட்டில் தான்
நடக்கிறது.

‘தேவர்’ பெயர் சூட்டலும், மணி மண்டபம் கட்டும் வேலைகளும், பொதுப் பெயர்
சூட்டி குறிப்பிட்ட சாதியினரை வலிமைப் படுத்துதலும் தமிழகத்தில் இரு
பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவால் தொடர்ந்து முன்னெடுக்கப்
படுகையில், அதற்கான எதிர்வினையாகவே தலித் மக்கள் ஆங்காங்கே தன்னியல்பாக
அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம் சிலைகளை நிறுவ
முயல்வதும், இவர்களுக்கான விழாவை சிறப்பாக கொண்டாடுவதிலும்
ஈடுபடுகிறார்கள்.//

ஆக தலித்கள் எது செய்தாலும் தவறில்லை. ஆதிக்க சாதிகள் அதுபோல எதுவும்
செய்துகொள்ளக் கூடாது.

//காவல்துறை, இந்தச் சிறுவனின் மரணத்தை அறிந்த உடனேயே, ராமநாதபுரம்
மாவட்டம் முழுக்க பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும். கொடி
அணிவகுப்பு நடத்தியிருக்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை
ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஒரு 15 வயதுச் சிறுவனை சாதியின் காரணமாக
ஒரு கும்பல் கொலை செய்திருக்கிறதென்றால், அந்தச் சம்பவத்தை, பாதிக்கப்
பட்ட மக்கள், உணர்ச்சி வசப் பட்ட நிலையிலேயே அணுகுவார்கள் என்பதை
காவல்துறை கணித்திருக்க வேண்டும்.//

அந்த தலைவர் அவர் சார்ந்த சாதியின் காரணமாகத்தானே
அவமதிக்கப்பட்டிருக்கிறார்? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

//சனிக்கிழமை இரவு முதல், ஞாயிற்றுக் கிழமை காலை வரை, ராமநாதபுரம்
மாவட்டத்துக்கு தமிழகமெங்கும் இருந்து, மக்கள் வந்து குவிந்தது,
காவல்துறைக்கு நன்கு தெரியும். தெருவுக்குத் தெரு, டாஸ்மாக் கடைகளை
திறந்து வைத்திருந்தால், அந்த மக்கள் எப்படி வருவார்கள் என்பதும்
தெரியும். இப்படி மக்கள் குவியும் போது, அதற்கு ஏற்றார் போல, அந்தக்
கூட்டத்தை சமாளிக்கும் வகையில் போதுமான காவல்துறையினர் அந்த மாவட்டத்தில்
திரட்டப் பட்டிருக்க வேண்டும். அந்த மாவட்டத்தில் எத்தனை பேர்
கூடுகிறார்கள், எத்தனை பேர் எதிர்ப்பார்க்க படுகிறார்கள், ஜான் பாண்டியன்
செய்திருக்கும் ஏற்பாடுகள் என்ன என்பதையெல்லாம் கணிக்க வேண்டியது உளவுத்
துறையின் பொறுப்பு. 1997ல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரத்தின்
போது, உளவுத்துறையில் பணியாற்றிய, தற்போது தமிழகத்தின் உளவுத்துறை
தலைவராகவும், காவல்துறை இயக்குநராகவும் இருக்கும் ராமானுஜத்திற்கு, இந்த
விஷயங்களில் போதுமான அனுபவம் உண்டு. //

எழுத்தாளர் ஏதோ சாதிக் கலவரம் நடந்ததாகவே கற்பனை செய்துகொண்டு எழுதி
இருக்கிறார். நடந்தது பள்ளர்களுக்கும் காவல்துறையினருக்குமான மோதல்.
இதில் சாதி எங்கேயிருந்து வந்தது?
Reply all
Reply to author
Forward
0 new messages