Re: [பண்புடன்] கர்ணகடூரமாய் சில சங்கதிகள்…

275 views
Skip to first unread message

AbulKalam Azad

unread,
Mar 25, 2014, 4:34:22 AM3/25/14
to பண்புடன்
:-)

R.VENUGOPALAN

unread,
Apr 29, 2014, 1:20:44 AM4/29/14
to பண்புடன்

ஆரவல்லிக்கு அஞ்சலி


ஆரவல்லிக்கும் எனக்கும் 13 வருட உறவு. அதற்காக ஆரவல்லிக்கு நேர்ந்தது அகால மரணம் என்று சொல்லுவதற்கில்லை. சொல்லப்போனால், இந்த முடிவு எப்போதோ வந்திருக்க வேண்டுமென்றுதான் விஷயம் தெரிந்தவர்கள் சொன்னார்கள்.


“இன்னிக்கோ நாளைக்கோ காலியாயிடும். இதையெல்லாம் ரிப்பேர் பண்ணறதுக்கு புதுசாவே ஒரு கம்ப்யூட்டரை வாங்கிடலாமே சேட்டைண்ணா!” என்று எனக்காக திருவொற்றியூரிலிருந்து சூளைமேட்டுக்கு வந்து என் கணினியின் நாடிபிடித்துப் பார்த்துச் சொல்லியிருந்தார் பதிவர் அஞ்சா நெஞ்சன் செல்வின். 2013-ல் விஜயாவில் என் உடம்பை ஒரு அங்குலம் விடாமல் பரிசோதித்து ஒரு ஃபைல் நிறைய பிரிண்ட்-அவுட்டுக்களைச் சொருகிக் கொடுத்தபோது, பாராளுமன்றத் தேர்தலில் எனது வாக்காளர் சீட்டு பயன்படுமா என்று ஏற்பட்ட அதே பயத்தை ஆரவல்லியின் நிலையும் ஏற்படுத்தியது.


“இது எப்படி இன்னும் ஓடிட்டிருக்குன்னே தெரியலியே?” என்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஆற்காட்டு நவாவின் தூசிபடிந்த அங்கியைப் பார்ப்பதுபோல புருவம் உயர்த்திப் பார்த்துவிட்டுச் சொன்னார் பதிவர் ‘மின்னல் வரிகள்’ பாலகணேஷ்.


“ஓடுறவரைக்கும் ஓடட்டும்ணா! அதை டிஸ்டர்ப் பண்ணாதீங்க,” என்று உதட்டைப் பிதுக்கி, உச்சுக்கொட்டிவிட்டுக் கிளம்பினார் கே.ஆர்.பி.செந்தில். ”உங்க கம்ப்யூட்டருக்குக் கடைசி ஆசை ஏதாவது இருந்தா நிறைவேத்திடுங்க” என்று சொல்லாதது ஒன்றுதான் பாக்கி.


ஆக, என் ‘ஆரவல்லி’ வைகுண்டப்பிராப்தியை அடையவிருக்கிறாள் என்பது சில நாட்களாகவே தெரிந்ததுதான் என்றாலும், அவ்வளவு சீக்கிரம் என்னைத் தவிக்க விட்டுச் செல்ல மாட்டாள் என்றுதான் நம்பியிருந்தேன். எதற்கும் இருக்கட்டும் என்று அதன் தலைமாட்டில் இருந்த காளிகாம்பாள் படத்துக்குப் பக்கத்தில் ஒரு ஷீரடி பாபாவின் படத்தையும் மாட்டி வைத்திருந்தேன். ஒரு லட்சியக்கூட்டணி ஏற்பட்டு என் கம்ப்யூட்டரைக் காப்பாற்றிவிட மாட்டார்களா என்று ஒரு நப்பாசை.


ஆனால், கடந்த 25-04-2014 அன்று காலை 8:10 மணியளவில் நான் எனது ஆரவல்லியை எழுப்பியபோது, ஒரு வினோதமான சத்தம் கேட்டது. அப்போதுதான் பிறந்த பூனைக்குட்டி பால்குடிக்கிற சத்தம் போலிருந்த அந்த மெல்லிய ஓசையைத் தொடர்ந்து மானிட்டர் இருண்டது. பழைய மோரிஸ் மைனர் காரின் இன்ஜின் அடங்குவதுபோல அதன் சத்தமடங்கியதும், செல்வினை அழைத்தேன். ‘சிவாஜி’ படத்தில் ரகுவரன் ரஜினிக்கு சி.பி.ஆர். செய்வதுபோல எதையாவது செய்து எனது ஆரவல்லியின் இதயத்துடிப்பை உயிர்ப்பிக்க முடியுமா என்று கேட்டுப் பார்த்தேன். அவர் சொல்லச் சொல்ல நானும் எதையெதையோ செய்து செய்து, அவர் கேட்ட வினாக்களுக்கெல்லாம் விடைகள் அளித்து முடித்தபின்னர்….


“சேடடைண்ணா! அவ்ளோதான்! முடிஞ்சுபோச்சுண்ணா!”


கம்ப்யூட்டருக்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்திருந்த என்னை வினோதமாகப் பார்த்தபடி குழந்தைகள் வந்தனர்.


“என்னப்பா ஆச்சு?”


“கம்ப்யூட்டர் முடிஞ்சுபோச்சு!”


“ஐயையோ!”


நேற்றுக் காலை வரைக்கும் என் ஆரவல்லியைப் பார்க்கிறபோதெல்லாம், குடித்தனம் நடக்கிற வீட்டில் ஒரு சடலத்தைக் கிடத்தியிருப்பதுபோல ஒரு உணர்வு. அவ்வப்போது ஆரவல்லியை முடுக்கிப் பார்த்தேன். ஊஹும்! எனது அவஸ்தை எனக்கே வினோதமாக இருந்தது. எப்படி ஒரு இயந்திரத்தின் மீது இத்தனை ஈடுபாட்டை வைத்துத் தொலைத்தேன்?


“என் லாப்-டாப்பை யூஸ் பண்ணிக்கோங்கப்பா!” மகள் அனுதாபத்துடன் சொன்னாள். கொஞ்சம் தடுமாறி மகளின் மடிக்கணினியில் கொஞ்சம் வேலை பார்த்துவிட்டு என் ஆரவல்லியைப் பார்த்தபோது, அனாவசியமாக ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. இது சரிப்படாது!


நேற்று மாலை, என் வீட்டின் ஒரு அங்கமாக இருந்த ஆரவல்லியை ஒரு சாக்குப்பையில் கட்டி எடுத்துக்கொண்டு போனதும், காலியாகி விட்டிருந்த அதன் இருக்கையைப் பார்த்து உண்மையிலேயே கண்ணீர் துளிர்த்தது.


ஈரோட்டில் வசிக்கத் தொடங்கிய நாட்களில் ஆசை ஆசையாய் என் ஆரவல்லியை வாங்கினேன். கணினி குறித்த தொழில் நுட்ப விபரங்கள் எதுவும் தெரியாமல் ‘ஒரு இருபதாயிரம் பட்ஜெட்டுலே வேணும்’ என்று சொல்லி வாங்கிய கணினிதான் ஆரவல்லி. டிவிடி பிரபலமாகிக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் தினமும் ஏதாவது புதுப்படம் பார்க்கவும், என் மகன் “Need for speed” விளையாடுவதற்கும், அலுவலகத்தில் அரைகுறையாக விட்ட வேலைகளைச் செய்யவும் மட்டுமே ஆரவல்லியை உபயோகித்து வந்தேன். சுஜாதாவின் புத்தகம் படித்து இணையத்தின் மீது காமம் சுரந்தாலும், இணையத்தால் எனது ஆரவல்லிக்கு ஏதேனும் வரக்கூடாத நோய் வந்துவிடுமோ என்ற பயத்தால் வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன்.


ஆரவல்லி என்னோடு சென்னைக்கு வந்தபிறகுதான் இணைய உலகில் “ஊ..லலல்லா” என்று பாடியாடி சஞ்சரிக்கத் தொடங்கினாள். ஆரம்பத்தில் என் பணி நிமித்தமாக சில ஆங்கில யாஹூ குழுமங்களில் தட்டுத்தடுமாறி நடமாடிக் கொண்டிருந்தபோதுதான், தமிழில் எழுதவும் வாசிக்கவும் வாய்ப்பிருப்பதைக் கண்டு கொண்டேன். அதன் பிறகு, குழுமங்கள்,வலைப்பதிவு, சில குறும்படங்கள், ஒரு முழு நீளத் திரைப்படம் என்று ஆரவல்லியின் துணையோடு, காசு கிடைத்ததோ இல்லையோ வாய்ப்புக்கள் கிடைத்தன. இரண்டு ஆண்டுகள் ‘ நிலாச்சாரல்’ தளத்துக்கு மின்புத்தகங்கள் தயாரித்துக் கொடுத்து, நிறைய சில்லறை பார்த்தேன். ‘ஷேர்கான்’ முகவராகி இருபதாண்டு சேமிப்பை இரண்டே ஆண்டுகளில் தொலைத்து போண்டியானேன். மின்வெட்டு பரவலாகியிருந்த சமயங்களில் ‘பாக்யா’ பத்திரிகையின் பெரும்பகுதியை ஆரவல்லி தட்டச்சிக் கொடுத்தாள்.


சன்னி லியோன் இந்திப்படத்தில் நடிப்பதாக செய்தி வந்ததும் கே.பாக்யராஜ் அவர்கள் அழைத்து ‘அந்தப் புள்ளையைப் பத்தி ஒரு ரெண்டு பக்கம் வர்ற மாதிரி கட்டுரை எழுதுங்க’ என்று சொன்னதற்காக சில ஆராய்ச்சிகள் செய்யப்போக, இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிற விவகாரங்களைப் பற்றிய பொது அறிவு வளர்ந்தது. ஆரவல்லி, பல நல்ல நிகழ்வுகளுக்கும் சில மோசமான உரசல்களுக்கும் சாட்சியாக இருந்தவள். ஒரு விதத்தில் ‘பாரத விலாஸ்’ படத்தில் வந்த சிவாஜி மனசாட்சிபோல எனக்கு வாய்த்ததாகக் கூடச் சொல்லலாம்.


போன வருடம் ஆரவல்லியைக் குணப்படுத்த ஒரு தொகை செலவிட்டு அதன் ஆயுளை நீட்டித்திருந்தேன். வாய்ப்பிருந்திருந்தால், இந்தமுறைகூட கடைசி முயற்சியாக அதைச் சரிசெய்திருப்பேன். All good things come to an end. ஆரவல்லிக்கு விதித்தது அவ்வளவுதான் என்று தேற்றிக்கொண்டு வாழ்க்கை தொடர்கிறது. ஒரு ஆறுதலுடன் – சென்ற ஆண்டு எனக்கும் என் ஆரவல்லிக்கும் பலவாறான உபாதைகள் ஏற்பட்டபோது, எங்கள் இருவரில் முந்தப்போவது யாராக இருக்கும் என்று ஒரு கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. மனிதனைவிட இயந்திரத்துக்கு வேகம் அதிகம் என்பதாலோ என்னவோ, ஆரவல்லி முந்திக்கொண்டாகி விட்டது.


சில நாட்களுக்கு முன்புவரை, பின்னோக்கிப் பார்த்து அசைபோட்டுக்கொள்ளப் பல்வேறு விஷயங்கள் இருந்திருந்தாலும், இன்னும் சில நாட்களுக்கு எனது ஆரவல்லியே எனது மனதை ஆட்கொண்டிருப்பாள் என்று தோன்றுகிறது. அது இருந்த அறையில் தென்படுகிற வெற்றிடம், மாலைபோட்டு வைக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது.



2014-03-25 14:04 GMT+05:30 AbulKalam Azad <banu...@gmail.com>:
:-)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

Srimoorthy S

unread,
Apr 29, 2014, 1:36:58 AM4/29/14
to பண்புடன்

அய்யோ பாவம் ஆரவல்லி.
தேவையான மரியாதை செஞ்சி புதைச்சிடுங்க.

Sheik Mohamed Shajahan

unread,
Apr 29, 2014, 1:38:53 AM4/29/14
to பண்புடன்
வேணு ஐயா,

சில இயந்திரங்களுடனான உறவு அப்படித்தான்.. மனையாளை விட மிக நெருக்கமாக , நேசமாக நாம் சொல்வதை புரிந்துகொண்டு கேட்டுக் கொண்டு என்ன கேட்டோமே அதை தருவதில் (என்ன விரும்பினோமோ அதை ஒரு போதும் இரண்டு பேரும் தருவதில்லை ) இப்படியாக அதிக நேரம் அதோடு செலவிடுவதால் அப்படி ஒரு பிரிவாற்றமை வந்துவிடுகிறது.

உங்களுக்கு ஆரவல்லி . எனக்கு தோஷிபா சேட்டிலைட் தூக்கிப் போட மனமில்லாமல் வீட்டில் வைத்து விட்டு வந்திருக்கிறேன். ஸோ சேட்..
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Ahamed Zubair A

unread,
Apr 29, 2014, 4:32:10 AM4/29/14
to பண்புடன்
:-))))

Ahamed Zubair A

unread,
Apr 29, 2014, 4:32:24 AM4/29/14
to பண்புடன்
அடப்பாவமே....

மஞ்சூர் ராசா

unread,
Apr 29, 2014, 6:13:16 AM4/29/14
to பண்புடன்
நிறைய பொருட்களை நாம் இப்படிதான் தூக்கிப்போட மனசில்லாமல் அப்படியே வைத்திருப்போம்.  அது தூசிப்படிந்து இடத்தை அடைத்திருந்தாலும் அதுப் பற்றி கவலைப்படமாட்டோம்.   நம் வாழ்க்கையும் அது போலத்தான்.


--

sadayan sabu

unread,
Apr 29, 2014, 8:20:08 AM4/29/14
to panbudan
எனக்கும் பழைய பொருட்களை தூக்கிப்போட மனசு வராது.
இதனாலேயே என் பிள்ளைகள் என்னை செல்லமாக சொல்வது குப்பைத்தொட்டி

Asif Meeran AJ

unread,
May 4, 2014, 11:49:44 PM5/4/14
to பண்புடன்
எனக்கும் பழைய பொருட்களை தூக்கிப்போட மனசு வராது.

​உங்கள் பிள்ளைகளுக்கும்தான். இல்லன்னா இந்நேரம் உம்ம லொள்ளுக்கு உம்மைத் தூக்கிப் போட்டிருக்கணூமே?! :-))
இதனாலேயே என் பிள்ளைகள் என்னை செல்லமாக சொல்வது குப்பைத்தொட்டி 

​அது செல்லமா சொல்றதா நீங்களா நெனச்சுக்கிட்டிருங்க :-)​

Srimoorthy S

unread,
May 4, 2014, 11:53:17 PM5/4/14
to பண்புடன்

ஹாஹாஹா
கலாய்ச்சிஃபை...

--

R.VENUGOPALAN

unread,
May 11, 2014, 5:41:16 AM5/11/14
to பண்புடன்

தோனி அடித்த மெகா சிக்ஸர்


இந்த அரசியல் கத்திரி வெயிலிலிருந்து சற்றே விடுபட, ஐ.பி.எல். ஜோதியில் அடியேனும் கலந்து கொண்டுவிட்டேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்த சியர் லீடர்ஸ் இந்தியாவுக்கு வந்தவுடன் நமது கிரிக்கெட் வர்த்தகக் கலாச்சாரத்துக்கேற்ப உடையணிந்து துள்ளிக்குதிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. மேக்ஸ்வெல், மில்லர், ஸ்மித் இன்னோரன்னார் அதகளம் பண்ணிக்கொண்டிருந்தாலும், இந்த மாட்டடி மாடசாமிகளின் ஆட்டத்திலும் புவனேஷ்குமார் போன்றாரால் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பது கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு ஆறுதல் அளிக்கிற சங்கதி.


எனது கணிப்பில் இதுவரை பார்த்த ஆட்டங்களின் அடிப்படையில் மிகப் பட்டவர்த்தனமாகத் தெரிகிற ஒரு குறை – நடுவர்கள்! சில அம்பயர்களைப் பார்க்கிறபோது எங்க ஊரின் தெருமுனை மேட்சுகளுக்கு அம்பயரிங் செய்த உப்புமா ரவியும் ஓமப்பொடி நாராயணனும் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.


புதிது புதிதாகப் புள்ளிவிபரங்கள் தரப்படுகின்றன. எத்தனை தடவை பந்தை எச்சில் படுத்தினார்கள், எத்தனை தடவை பந்தை டிரவுசரில் துடைத்தார்கள் என்பன போன்ற இன்றியமையாத தகவல்களையும் அடுத்த சீசனில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு யோசனை! அதிகம் சிக்ஸர் அடித்தவர்கள், அதிக ஓட்டம் எடுத்தவர்கள், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்களின் விபரங்களை அடிக்கொரு தடவை  ஸ்லைடு போட்டுக் காட்டுவதுபோல, அதிக முறை வட இந்தியாவில் சரளமாகப் புழங்குகிற ”அந்த” வார்த்தையைப் பிரயோகிக்கிறவர்களைப் பற்றிய விபரங்களையும் காட்டித்தொலைத்தால், கனவான்களின் விளையாட்டு கட்டெறும்பாய்த் தேய்ந்து வருவதன் அடையாளங்களைப் பதிவு செய்த புண்ணியமாவது கிடைக்கும்.


அதிலும், நேற்றைய போட்டியில் தோற்றவுடன் ரோஹித் ஷர்மா காலைக் காற்றில் உதைத்து மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் அந்தப் புனிதமான வார்த்தையை உபயோகித்த காட்சி கிரிக்கெட் இதிகாசத்தில் இடம்பிடித்து வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டுவதற்குப் பெருமளவு உதவும். மற்ற விஷயத்தில் விராட் கோலியைப் பின்பற்ற முடிகிறதோ இல்லையோ, இந்த விஷயத்தில் ரோஹித் முயற்சி செய்தால் நிச்சயம் கோலியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.


ஏறத்தாழ பதினைந்து வருடங்கள் மும்பையிலேயே வசித்திருந்தாலும், இந்த மும்பை இந்தியன்ஸ் அணியைப் பார்த்தால் இனம்புரியாத ஒரு எரிச்சல் மேலிடுவது ஏன் என்பது புரியவில்லை. சில சமயங்களில் மும்பை அணியைப் பார்த்தால் கடுப்பாக இருக்கிறது; பல சமயங்களில் சிரிப்பாக வருகிறது. ஆடிய ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆடுகிற வரிசையிலிருந்து ஏதாவது குண்டக்க மண்டக்கவென்று மாறுதல்களைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற தெளிவு எப்படியும் மீதமிருக்கிற ஆட்டங்கள் முடிவதற்குள் வந்துவிட்டால் அடுத்த ஆண்டாவது உருப்படியாக ஆட ஆரம்பிக்கலாம் என்று சற்று அனுதாபத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டைப் பொறுத்தவரை, ஊஹும், நோ சான்ஸ்!  


Too many cooks spoil the sprout என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவது மும்பை இந்தியன்சுக்குச் சாலப் பொருந்தும். (இதற்கு நிகராக நெல்லை-குமரி வட்டாரங்களில் ஒரு தமிழ்ச் சொலவடை இருந்தாலும், அதையெல்லாம் பொதுவிடத்தில் எழுத முடியாது) பேட்டிங் என்று பார்த்தால் சச்சின், ரிக்கி பாண்டிங், ஜான் ரைட், பந்துவீச்சு என்றால் கும்ப்ளே, ஃபீல்டிங்குக்கு ஜாண்டி ரோட்ஸ், ராபின் சிங் என்று எல்லா அம்சத்துக்கும் பொருத்தமாக நிறையப் பணக்கொழுப்பெடுத்து ஏகப்பட்ட பயிற்சியாளர்களை நியமித்து ஆளுக்கு ஒரு நாற்காலியும், பேப்பர் பேடும் கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி போல, கூடிய சீக்கிரம் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் ஒரு Dirty Tricks Department ஏற்படுத்தி அதற்கும் பாகிஸ்தானிலிருந்தோ, ஆஸ்திரேலியாவிலிருந்தோ ஒரு பயிற்சியாளரை நியமித்தாலும் வாய்பிளக்க வேண்டியதில்லை. உலகத்திலேயே ஆடுகிறவர்களின் எண்ணிக்கையைவிட பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிற, இருக்கப்போகிற ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் தான் என்பதும்,இது 2014-ம் ஆண்டின் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கத்தக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெருமை என்பதையும் மறுப்பதற்கில்லை. இப்படியே போனால், விஜய் மெர்ச்சென்ட் ஸ்டாண்ட், பாலி உம்ரிகர் ஸ்டாண்ட், சுனில் கவாஸ்கர் ஸ்டாண்ட் என்பதுபோல மும்பை இந்தியன்ஸ் ஸ்டாண்ட் என்று ஒன்றை ஏற்படுத்தியே தீர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இல்லாவிட்டால் அத்தனை பேரும் உட்கார இடத்துக்கு எங்கே போவது?


சரி, தலைப்புக்கு வருவோம்.


ஆட்டம் முடிந்ததும், தோனி ரவி சாஸ்திரியிடம் சொன்னார். “The Mumbai Indians probably misread the pitch”. கடைசி ஓவரில் தோனி அடித்த அந்த ஒரு சிக்ஸரை விடவும், இந்த சிக்ஸர் எனக்குப் பிடித்திருந்தது. வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தோனி ஒரு கடப்பாரையையே ஏற்றி விட்டார். ஏற்கனவே நொந்து நூலாகியிருந்த ரோஹித் சர்மாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை வழி நடத்தும் பொறுப்பிலிருக்கிற மூத்த குடிமகன்களுக்கும் இந்தக் கலாய்ப்பு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தாலே பூரிப்பாக இருக்கிறது.


விஷயம் இவ்வளவுதான். தோனிக்கு வான்கெடே ஆடுகளத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே இதில் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது புரிந்து, ஹில்ஃபன்ஹாஸுக்குப் பதிலாக சாமுவேல் பத்ரியை அணியில் சேர்த்துக் கொண்டார். ஆனால், மும்பை அணிக்காரர்களோ ஒரே ஒரு சுழல்பந்து வீச்சாளரை வைத்துக்கொண்டு கூடுதலாக இன்னும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைச் சேர்த்துக் கொண்டனர். துவக்கத்திலேயே சராசரி எட்டு ஓட்டங்களுக்கு மேல் தேவைப்படுகிற எந்த அணியும், அழுத்தத்தில்தான் விளையாடும். நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸும் ஏறத்தாழ அந்த அழுத்தத்துக்குப் பலியாக இருந்தார்கள், ஆனால், மலிங்கா தவிர்த்து மற்ற வேகப்பந்து வீச்சாளர்களைக் குறிவைத்து விளையாடி திக்கித் திணறி ஜெயித்து விட்டார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹர்பஜனின் பந்துவீச்சு நேற்று அபாரமாக இருந்ததைப் பார்த்தபோது தோனியின் உத்தியைப் பற்றி யோசிக்க நேர்ந்தது. அத்தோடு விடாமல், மும்பை இந்தியன்ஸ் ஆடுகளத்தைச் சரிவரக் கணிக்காமல் விட்டுவிட்டார்கள் என்று அவர் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதை நினைத்தால், படு குஷியாக இருக்கிறது.


ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை, மனிதர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அது இயல்பாக ஏற்படுகிற அழுத்தமா அல்லது தலைக்கு மேல் இருந்துகொண்டு ஆளாளுக்குக் குழப்புகிற மகானுபாவர்களால் ஏற்படுகிற அழுத்தமா என்பதுதான் பிரச்சினை. மும்பை அணி உருப்பட வேண்டுமானால், உருப்படியாக ஒரு பயிற்சியாளரை வைத்துக்கொண்டு தங்களது பலத்தை மட்டும் நம்பி விளையாடுகிற தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதே நல்லது. ஆளாளுக்கு நாட்டாமை பண்ணுகிற ஒரு அணி, வெற்றி பெறத்தக்க ஒருங்கிணைப்பையோ கட்டுப்பாட்டையோ அவ்வளவு எளிதில் கொண்டு விடாது.


தோனி ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி புரிந்து கொண்டால், அவர்களுக்கும் நல்லது; பார்வையாளர்களுக்கும் நல்லது. ஆனால், அந்த எதிர்பார்ப்போ நம்பிக்கையோ எனக்கில்லை. அங்கிருக்கிற பெருந்தலைகள் அவ்வளவு சீக்கிரம் இடப்பெயர்ச்சி செய்வார்கள் என்று தோன்றவில்லை.


சென்னை வாழ்க! J

 

 

ஹாஜா மொஹைதீன்

unread,
May 11, 2014, 6:07:18 AM5/11/14
to panb...@googlegroups.com

2014-05-11 12:41 GMT+03:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:


தோனி ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணி புரிந்து கொண்டால், அவர்களுக்கும் நல்லது; பார்வையாளர்களுக்கும் நல்லது. ஆனால், அந்த எதிர்பார்ப்போ நம்பிக்கையோ எனக்கில்லை. அங்கிருக்கிற பெருந்தலைகள் அவ்வளவு சீக்கிரம் இடப்பெயர்ச்சி செய்வார்கள் என்று தோன்றவில்லை.


செமத்தியா பின்னி எடுத்திருக்கீங்க ஜி

இதை பேஸ்புக்கில் பகிர நீங்கள் அனுமதி அளிப்பீர்கள் என்ற எண்ணத்தில் நான் அங்கே பகிர்கிறேன்

என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Mohammed Siddiq

unread,
May 11, 2014, 6:10:33 AM5/11/14
to panb...@googlegroups.com
எத்தனை சிறப்பான பள்ளியாக இருந்தாலும் உலகின் தலை சிறந்த ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் ஒழுங்கா படிச்சி தேர்வு எழுதி வெற்றி பெற்றால்தான் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமை. இந்த கட்டுரை எழுதியவர்கள் மும்பை அணியை பிடிக்காமல் எழுதவில்லை வேறு யாரையோ பிடிக்கவில்லை போல் இருக்கு
 
சச்சின், ரிக்கி பாண்டிங், ஜான் ரைட், பந்துவீச்சு என்றால் கும்ப்ளே, ஃபீல்டிங்குக்கு ஜாண்டி ரோட்ஸ், ராபின் என்று எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் பதினோரு பேரும் அவர்கள் ஆட்டத்தை காட்டணும் இல்லை என்றல் எந்த அணியாக இருந்தாலும் ஆட்டம் கண்டு விடும். 


11 மே, 2014 12:41 பிற்பகல் அன்று, R.VENUGOPALAN <venugopal...@gmail.com> எழுதியது:

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 
Thanks & Best Regards,

S. Mohammed Siddiq
MSC Dammam,
Mobile: 00966 568826046

PRASATH

unread,
May 11, 2014, 6:12:39 AM5/11/14
to Groups
நல்ல ரைட் அப் ஐயா...

ஏனோ தெரியலை, உங்கள் எழுத்துகளில் முன்னம் இருந்த எளிமை கொஞ்சம் குறைஞ்சாப்புல ஒரு ஃபீல்... மே பி மை அன்டர்ஸ்டேண்டிங் பவர் குறைஞ்சிருச்சோ...

Ahamed Zubair A

unread,
May 11, 2014, 7:16:33 AM5/11/14
to பண்புடன்
ஆக்ரோஷமான ரோஹித்தை நேற்றுதான் கவனித்தேன். அந்தத்துணியை காலால் எத்தும்போது உதிர்க்கும் முத்து உண்மையிலேயே கனவான்களின் விளையாட்டு பணவான்களுக்கானதாகத்தான் தோன்றுகிறது ;))

Asif Meeran AJ

unread,
May 11, 2014, 9:11:57 AM5/11/14
to பண்புடன்
ஏனோ தெரியலை, உங்கள் எழுத்துகளில் முன்னம் இருந்த எளிமை கொஞ்சம் குறைஞ்சாப்புல ஒரு ஃபீல்... மே பி மை அன்டர்ஸ்டேண்டிங் பவர் குறைஞ்சிருச்சோ...

​நல்ல சித்த வைத்தியராப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கோ பிசாத்து..

இதை விடவும் எளிமையாக எழுதணும்னா
அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தா தான்னுதான் எழுதணும்

உங்க இம்சைங்களுக்கு அளவே இல்லாம போய்க்கிட்டிருக்கு

வேணு ஐயா.. சின்னப்பயளுக என்னைக்கும் சின்னப் புள்ளத்தனமாத்தான் பேசுவானுங்க. கண்டுக்காதீங்க
இன்னொரு இயல்பான கட்டுரை. தோனி ஏற்றிய கடப்பாறையை நானும் ரசித்தேன் ஆனால் அதனை
இத்தனை இலகுவாக எழுத்தில்கொண்டு வர என்னால் முடிந்திருக்காது..

தொடர்ந்து ஐபிஎல் ஆட்டங்கள் குறித்து எழுதுங்கள்​

PRASATH

unread,
May 11, 2014, 9:38:22 AM5/11/14
to Groups

ஒப்பீனியன் டிபர்ஸ்...
அதுக்காக மாத்துக் கருத்தே வரக் கூடாதுனு நினைச்சா சொல்லுங்க நான் எல்லாம் உள்ளவே வரலை...

"யாராச்சும், அருமை, சூப்பர், மார்வெலஸ், பெண்டாஸ்டிக்" னு சொல்வாங்க... இரசிச்சுட்டு போய்ட்டே இருக்கலாம்...

--

Ahamed Zubair A

unread,
May 11, 2014, 9:53:11 AM5/11/14
to பண்புடன்
+1

பிரசாத்து, உன்கிட்டேர்ந்து இன்னும் எதிர்பாக்குறேன்...

Asif Meeran AJ

unread,
May 11, 2014, 9:59:47 AM5/11/14
to பண்புடன்

ஒப்பீனியன் டிபர்ஸ்...
அதுக்காக மாத்துக் கருத்தே வரக் கூடாதுனு நினைச்சா சொல்லுங்க நான் எல்லாம் உள்ளவே வரலை..."யாராச்சும், அருமை, சூப்பர், மார்வெலஸ், பெண்டாஸ்டிக்" னு சொல்வாங்க... இரசிச்சுட்டு போய்ட்டே இருக்கலாம்...


​அருமை அருமையில்லைங்குறது இங்க சிக்கலே இல்லை
இதை விட எளிமையாக எழுத முடிவதெப்படின்னு நீ கொஞ்சம் எழுதிக்காட்டு

பைதவே.. அண்டர்ஸ்டாண்டிங்​ பவர் உனக்குக் கொறஞ்சிருக்குன்னு நீ சொன்னது சரிதான்

PRASATH

unread,
May 11, 2014, 10:04:29 AM5/11/14
to Groups

ஒரு சமையல்காரரிடம், நீ முன்னம் சமைச்சதை விட இப்ப சமைச்சிருக்குறது ருசி குறைவுனு ஒரு கஸ்டமர் சொன்னா, இன்னொரு கஸ்டமர்க்கு இந்த சமையலே ருசியா தான் இருக்குன்றதால, முதல் கஸ்டமரைப் பார்த்து ரெண்டாமவர், இதை விட ருசியா நீ சமைச்சு காமி பார்க்கலாம்னு சொல்றது எந்த வகையில நியாயம் அண்ணாச்சி...

--

PRASATH

unread,
May 11, 2014, 10:05:25 AM5/11/14
to Groups

ஏம்லே,உனக்கிந்த நாரதர் வேலை...

--

Ahamed Zubair A

unread,
May 11, 2014, 11:30:19 AM5/11/14
to பண்புடன்
இப்படி எழுதுறவன் வேணுஜி எழுதுறது எளிமையா இல்லைன்னா செம காமெடியா இருக்கு :)))

PRASATH

unread,
May 11, 2014, 12:11:17 PM5/11/14
to Groups

ஐ நோ, சம் ஒன் வில் கம் வித் திஸ் ஸ்டேட்மெண்ட்...

இந்த பாராவைப் படிக்கும் போது ஏற்படும் உணர்வை ஒத்ததோர் உணர்வை, வேணு ஐயாவின் மடலின் ஒரு பாராவில் உணர்ந்தேன்...

அதனையே எளிமை இல்லை என்றும் சொன்னேன்...

Asif Meeran AJ

unread,
May 12, 2014, 12:05:58 AM5/12/14
to பண்புடன்
எதுக்க்கும் எழுதி முடிச்சிட்டு எளிமயா இருக்கான்னு உன் கிட்ட சான்றிதழ் வாங்கிட்டு வேணு ஐயாவை அனுப்ப சொல்றேன் :-))

​ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு கட்டுரை எழுதுனேன்
அது ஒரு குத்தமாய்யா?

இப்படிக்கு ​
வேணுஜி

R.VENUGOPALAN

unread,
May 12, 2014, 12:08:25 AM5/12/14
to பண்புடன்
2014-05-11 15:37 GMT+05:30 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>:

செமத்தியா பின்னி எடுத்திருக்கீங்க ஜி 

இதை பேஸ்புக்கில் பகிர நீங்கள் அனுமதி அளிப்பீர்கள் என்ற எண்ணத்தில் நான் அங்கே பகிர்கிறேன்

என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

தாராளமாகப் பகிர்ந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி! :-) 

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
May 12, 2014, 12:10:42 AM5/12/14
to பண்புடன்
2014-05-11 15:40 GMT+05:30 Mohammed Siddiq <siddiq....@gmail.com>:
 இந்த கட்டுரை எழுதியவர்கள் மும்பை அணியை பிடிக்காமல் எழுதவில்லை வேறு யாரையோ பிடிக்கவில்லை போல் இருக்கு

கட்டுரையை எழுதியவன் அடியேன் தான். எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியைப் பிடிக்காது என்பதை முதலிலேயே சொல்லிட்டேனே. குறிப்பாகச் சொல்ல ஒருவருமில்லை; ஏனோ மொத்த அணியும் பிடிக்கவில்லை. :-)) 



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
May 12, 2014, 12:12:55 AM5/12/14
to பண்புடன்
2014-05-11 15:42 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:
நல்ல ரைட் அப் ஐயா...

ஏனோ தெரியலை, உங்கள் எழுத்துகளில் முன்னம் இருந்த எளிமை கொஞ்சம் குறைஞ்சாப்புல ஒரு ஃபீல்... மே பி மை அன்டர்ஸ்டேண்டிங் பவர் குறைஞ்சிருச்சோ...

முன்னை மாதிரி நகைச்சுவை இல்லைன்னு நிறைய பேர் சொல்றாங்க. அதைத்தான் நீங்களும் சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா பிரசாத்? எப்பவும்போல இப்பவும் வெளிப்படையா சொல்லியிருக்கீங்க. நன்றி. உங்க புரிதலில் தப்பொண்ணும் இல்லை.  

2014-05-11 15:11 GMT+05:30 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

தோனி அடித்த மெகா சிக்ஸர்



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
May 12, 2014, 12:14:27 AM5/12/14
to பண்புடன்
2014-05-11 16:46 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
ஆக்ரோஷமான ரோஹித்தை நேற்றுதான் கவனித்தேன். அந்தத்துணியை காலால் எத்தும்போது உதிர்க்கும் முத்து உண்மையிலேயே கனவான்களின் விளையாட்டு பணவான்களுக்கானதாகத்தான் தோன்றுகிறது ;))

அது உண்மையிலேயே கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு. பாவம் ரோஹித், அவருக்கு சுதந்திரம் இல்லை.  


2014-05-11 13:41 GMT+04:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:


ரோஹித் சர்மாவைப் பொறுத்தவரை, மனிதர் மிகுந்த அழுத்தத்தில் இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. அது இயல்பாக ஏற்படுகிற அழுத்தமா அல்லது தலைக்கு மேல் இருந்துகொண்டு ஆளாளுக்குக் குழப்புகிற மகானுபாவர்களால் ஏற்படுகிற அழுத்தமா என்பதுதான் பிரச்சினை.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
May 12, 2014, 12:17:32 AM5/12/14
to பண்புடன்
2014-05-11 18:41 GMT+05:30 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

ஏனோ தெரியலை, உங்கள் எழுத்துகளில் முன்னம் இருந்த எளிமை கொஞ்சம் குறைஞ்சாப்புல ஒரு ஃபீல்... மே பி மை அன்டர்ஸ்டேண்டிங் பவர் குறைஞ்சிருச்சோ...

​நல்ல சித்த வைத்தியராப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கோ பிசாத்து..

இதை விடவும் எளிமையாக எழுதணும்னா
அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தா தான்னுதான் எழுதணும்

உங்க இம்சைங்களுக்கு அளவே இல்லாம போய்க்கிட்டிருக்கு

அண்ணாச்சி. பிரசாத்திடம் எனக்குப் பிடித்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று. அவர் சொன்னதில் ஓரளவு உண்மையிருக்குன்னு தான் எனக்கே தோணுது. அவர் சுட்டிக்காட்டின குறையை நிறைய பேர் அடிக்கடி என்னிடம் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

வேணு ஐயா.. சின்னப்பயளுக என்னைக்கும் சின்னப் புள்ளத்தனமாத்தான் பேசுவானுங்க. கண்டுக்காதீங்க
இன்னொரு இயல்பான கட்டுரை. தோனி ஏற்றிய கடப்பாறையை நானும் ரசித்தேன் ஆனால் அதனை
இத்தனை இலகுவாக எழுத்தில்கொண்டு வர என்னால் முடிந்திருக்காது..

தொடர்ந்து ஐபிஎல் ஆட்டங்கள் குறித்து எழுதுங்கள்​

கண்டிப்பா எழுதறேன் அண்ணாச்சி. உங்களுக்குப் பிடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி. 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
May 12, 2014, 12:19:36 AM5/12/14
to பண்புடன்
2014-05-11 19:08 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:

ஒப்பீனியன் டிபர்ஸ்...
அதுக்காக மாத்துக் கருத்தே வரக் கூடாதுனு நினைச்சா சொல்லுங்க நான் எல்லாம் உள்ளவே வரலை...

"யாராச்சும், அருமை, சூப்பர், மார்வெலஸ், பெண்டாஸ்டிக்" னு சொல்வாங்க... இரசிச்சுட்டு போய்ட்டே இருக்கலாம்...


தாராளமாகச் சொல்லுங்க பிரசாத்!  நான் எழுதுவது எல்லாம் அருமைன்னு நானே சொல்லிக்க மாட்டேன். அண்ணாச்சி ஆஸ் ஆல்வேஸ் கலாய்ச்சிஃபையிங். :-)) தொடர்ந்து சுட்டிக்காட்டுங்க. ஐயாம் வெயிட்டிங்...

R.VENUGOPALAN

unread,
May 12, 2014, 12:21:47 AM5/12/14
to பண்புடன்
அண்ணாச்சி ராக்ஸ்! :-))

மஞ்சூர் ராசா

unread,
May 12, 2014, 1:33:26 AM5/12/14
to பண்புடன்
இந்தக் கட்டுரை நறுக்குத்தெரித்தார் போல நச்சுன்னு இருக்கு.  உங்களுக்கே உரிய அந்த நகைச்சுவையும் நக்கலும் கொஞ்சம் குறைவாக இருப்பதால் எளிமையாக இல்லை என பிரசாத் சொல்கிறார் என நினைக்கிறேன்.

தொடர்ந்து உங்கள் ஐபில் பதிவுகளை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.


--

PRASATH

unread,
May 12, 2014, 8:04:33 AM5/12/14
to Groups
நன்றி ஐயா...
 
( தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்... எஸ்கேப்பு...)

R.VENUGOPALAN

unread,
May 25, 2014, 4:01:38 AM5/25/14
to பண்புடன்

ரயிலே ரயிலே….

 

 நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ரயில் பயணம். ஈரோட்டுக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸில் எத்தனை தடவை பயணம் செய்தேன் என்று விரல்விட்டு எண்ணி விடலாம். முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரே நாளில் வெயிட்டிங் லிஸ்டிலிருந்து வழுக்கி இறங்கி, மாலைக்குள் ஆர்.ஏ.ஸிக்கு வந்து ரயில் நிலையத்துக்குப் போனபோது ‘பர்த்’ வரம் கிடைத்திருந்தது.

 

ரயில் பயணங்களில் ஏதாவது குறிப்பிடும்படியான ஒரு அனுபவமாவது இல்லாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. தனியான ரயில் பயணங்களில் ஏற்பட்ட விதவிதமான அனுபவங்களே ஒரு கூட்ஸ் வண்டியில் ஏற்றுமளவு இருக்கின்றன. ஆகவே, சிறுவயதில் ஜன்னலோரத்துக்கு அடித்துக் கொண்ட அல்பத்தனங்களையும், குடும்பஸ்தனானதும் அதே ஜன்னலை விட்டுக்கொடுத்துவிட்டு பெரிய தியாகி மாதிரி அலட்டிக்கொண்ட சின்னப்புள்ளைத்தனத்தையும் பீற்றிக்கொள்ளாமல் சில அனுபவங்களைக் கிளறியெடுக்க ஆசை.

 

பி.காம் படிப்பை நான்கு வருடத்தில் முடித்த சாதனைக்குப் பிறகு, ’தில்லி சலோ’ என்று கே.கே.எக்ஸ்பிரஸ் பிடித்துக் கிளம்பிய முதல் ரயில் பயணம் இன்னும் ஞாபகமிருக்கிறது. வழிக்கு வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துக் கொள்ளாமல், வண்டி நிற்கிறபோது கிடைப்பதைத் தின்று போய்ச் சேரலாம் என்று துணிச்சலோடு கிளம்பியிருந்தேன். எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றதும், ’ரைஸ் ரைஸ்’ என்று கூவியவனிடம் ஒரு பொட்டலம் வாங்கி, வண்டி கிளம்பியதும் பசியோடு பிரித்தபோது, சோற்றுக்கு நடுவே ஒரு முழுநீள மீன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தது இன்னும் நினைவிருக்கிறது. அதற்குப்பிறகு, தில்லி சென்று சேரும்வரை டீ, காப்பி மட்டுமே குடித்துக்கொண்டு போய்ச் சேர்ந்ததை நான் மறந்தாலும், அவ்வப்போது என் வீட்டில் யாரேனும் நினைவூட்டி அசடுவழிய வைக்கிறார்கள்.

 

அடுத்ததாக, தங்கை திருமணத்துக்காக தில்லியிலிருந்து திரும்பியது. இன்னும் இந்தி புரியாத சூழலில், ஒரு சர்தார்ஜி குடும்பத்துடன் பயணம். சர்தார்ஜியின் மகனான சிறுவன், கையில் துணியால் மூடப்பட்ட ஒரு செம்புப்பாத்திரத்துடன் அழுதுகொண்டே ஏறியதைப் பார்த்தமாத்திரத்திலேயே பரிதாபம் சுரந்தது. அனேகமாக, பாட்டியோ தாத்தாவோ ஆபீஸ் பூட்டியதால், அவர்களது அஸ்தியை அந்தக் கலசத்தில் கொண்டுபோய் ராமேஸ்வரத்தில் கரைக்கப் போகிறார்கள் போலும் என்று கற்பனையைக் கழுதைவேகத்தில் ஓடவிட்டு உச்சுக்கொட்டியபடி உட்கார்ந்திருந்தேன். ரயில் புறப்பட்டதிலிருந்து அந்தச் சின்ன சர்தார்ஜி அந்தக் செம்பை மடியிலேயே வைத்தபடி அழுதுகொண்டே வர, அவனது பெற்றோர்கள் அவனை சமாதானப்படுத்தப் படாதபாடு பட்டுக் கொண்டிருந்ததையும் கவனித்தேன். நாக்பூரிலிருந்து ரயில் கிளம்பியபோது சிறுவனின் அழுகை கட்டுப்படுத்த முடியாமல் போகவே, அந்த அம்மா, அந்த செம்பை மூடியிருந்த துணியை அவிழ்த்து அதிலிருந்த குலோப் ஜாமூனை அவனுக்கு ஒவ்வொன்றாக ஊட்ட ஆரம்பித்தபோது ‘அடச்சே, இதுக்கா இம்புட்டு அழுகை’ என்று எனது முட்டாள்தனத்தை மறைக்க, அந்த சர்தார்ஜி குடும்பத்தை மனதாற வசவுபாடியதும் நினைவிருக்கிறது.

 

அடுத்த அனுபவம் ஒரு திரில்லர் போன்றது. முஜபர்நகரிலிருந்து மும்பை செல்ல, தெஹ்ராதூன் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்து ரயில் நிலையத்தில் காத்திருக்க, எங்கோ சரக்குவண்டி தடம்புரண்டதால், ரயில் வேறுவழியாகச் செல்வதாக அறிவிக்க, அரக்கப் பரக்க வெளியே ஓடி, அழுக்குப் பிடித்த உ.பி. அரசுப் பேருந்தில் ஏறி தில்லிக்கு டிக்கெட் வாங்கினேன். மிகச்சரியாக மோதிநகரைக் கடக்கும்போது பஸ் குடைசாய்ந்துவிட, என் தலைமீது என் சூட்கேஸே விழுந்து ஒரு இரண்டு நிமிடம் மூர்ச்சையானதுபோலக் கிடந்தேன். அதன்பிறகு இன்னொரு பஸ்ஸைப் பிடித்து தில்லிக்குப் போய்ச்சேர்ந்து, அங்கிருந்து நகரப்பேருந்தைப் பிடித்து ஐ.டி.ஓ-வில் இறங்கியதும் விபத்தில் படுகாயமடைந்திருந்த எனது சூட்கேஸின் கைப்பிடி தனியாகக் கழன்று வந்துவிட, அதை நாய்க்குட்டியைத் தூக்குவதைப் போலத் தூக்கிக்கொண்டு தில்லி ரயில் நிலையத்துக்குச் சென்றதும் ஞாபகமிருக்கிறது.  இதில் வேடிக்கை என்னவென்றால், இத்தனை களேபரத்துக்குப்பிறகும், நான் போய்ச்சேர்ந்து மேலும் ஒரு மணி நேரம் ஆனபிறகுதான் தெஹ்ராதூன் எக்ஸ்பிரஸ் (?) வந்து சேர்ந்தது.

 

தில்லி-மும்பை தடத்தில் இன்னொரு அனுபவமும் உண்டு. மும்பையில் வேலை கிடைத்து, உடனே சென்றுசேர வேண்டிய கட்டாயத்தால், நிரம்பிவழிந்த ஃப்ராண்டியர் மெயில் பிடித்துக் கிளம்பியிருந்தேன். நான் பயணித்த அந்தப் பெட்டி கோட்டா சென்றுசேர்ந்ததும் காலியாகத் தொடங்க, ‘அப்பாடா’ என்று நான் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு லக்கேஜ் வைக்கும் இடத்தில் ஏறி உறங்க ஆரம்பித்து விட்டேன். ஒரு சில நிமிடங்களிலேயே கண்விழித்துப் பார்த்தபோது, நான் சயனித்திருந்த அந்த ஒரு பெட்டியை மட்டும் தனியாகக் கழற்றி ஒன்றாவது பிளாட்பாரத்திலிருந்து நான்காவது பிளாட்பாரத்துக்கு மாற்றி ஜெய்ப்பூர் செல்லும் ரயிலில் இணைப்பதற்காக நிறுத்தி வைத்திருந்தார்கள். தண்டவாளங்களைத் தாவிக்கடந்து கிளம்பும் தறுவாயிலிருந்த ரயிலில், ஏதோ ஒரு பெட்டியில் ஏறியமர்ந்தபிறகும், பரோடா வரும்வரைக்கும் உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்ததும் ஞாபகமிருக்கிறது.

 

எனது பால்ய நண்பன் (இப்போது உயிரோடில்லை!) கிட்டாமணியுடன் சென்னையிலிருந்து மந்திராலயம் போனபோது இன்னொரு சம்பவம். குண்டக்கல் வந்ததும் வண்டியிலிருந்து இறங்கிய கிட்டாமணி, தலைதெறிக்க ஓடியதைப் பார்த்து, ‘என்னாச்சு, எவனாவது பிக்பாக்கெட் அடித்துவிட்டானா?’ என்று பயந்து நானும் கீழே இறங்கி அவனைப் பின் தொடர்ந்து ஓட, அவன் ஐ.ஆர்.ஆரில் சுடச்சுட பொங்கல், உப்புமா வாங்குவதற்காக நின்ற நீண்டவரிசையில் ஒட்டிக்கொண்டபோது ஏற்பட்ட எரிச்சல் இருக்கிறதே!

 

இது தவிர குல்பர்காவருகே சென்னை எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது;  நாக்பூரில் எனது சான்றிதழ்களுடன் எனது பெட்டி திருடுபோனது; பங்காருபேட்டையில் தண்ணீர்குடிக்க இறங்கி பெங்களூரிலிருந்து சென்னை செல்லும் மெயிலைத் தவற விட்டது என்று எக்கச்சக்கமான அனுபவங்கள். இத்தனை அனுபவங்களையும், ரயில் நிலையங்களுக்குள் நுழைந்தாலே நாசியைத் தாக்கும் அந்த வினோதமான நாற்றத்தையும், தவறாமல் ஒவ்வொரு தடவையும் யாரையோ வழியனுப்ப வருகிறவர்களின் அலப்பறைகள் தருகிற எரிச்சலையும், ஆந்திரா தாண்டியதும் அடுத்தடுத்து எல்லா ரயில் நிலையங்களிலும் ஏறி, கைதட்டிப் பணத்தை அடாவடியாகப் பறிக்கிற திருநங்கைகளால் ஏற்படுகிற எரிச்சலையும் தாண்டி, இப்போதும்கூட ரயில் பயணம் என்றாலே, சிறுவயதில் ஏற்பட்ட அளவுக்கு அதே உற்சாகம் கிட்டத்தட்ட ஏற்படுவது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

 

என்னைப் போலவே ஒவ்வொருவருக்கும் ஏற்படும்; ஏற்படுகிறது என்பதை இந்த முறையும் நானே கவனித்தேன். ஈரோட்டிலிருந்து திரும்புகிறபோது உடன் பயணித்த ஒரு இளம் தம்பதியினர். (விரல்கோர்த்துக்கொண்டு அவர்களும் தூங்காமல், அடுத்தவர்களையும் தூங்கவிடாமல் பேசிக்கொண்டே வந்ததால் அண்மையில்தான் திருமணமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. பாவம்.)

 

      ராகேஷ், உள்ளே வா… டிரெயின் கிளம்பப் போகுது.

 

      அந்தப் பெண் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் கெஞ்சக் கெஞ்ச, அந்தப் புதுக்கணவன் வெளியில் நின்றவாறு ஜன்னல்வழியாகப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, ரயில் புறப்படும்போது கூடவே நடந்து, ஓடி பிறகு வண்டியில் தொற்றிக்கொண்டு தனது வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். ‘இதெல்லாம் எத்தனை நாளைக்கு?  நடத்துங்க,’ என்று சற்றுக் குரூரத்துடன் மனதுக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் காட்டாத வீரப்பிரதாபமா? ஹாஹாஹா!

 

      காட்பாடி வரைக்கும் தூங்க முடியவில்லை. நாசூக்கு பார்த்ததெல்லாம் போதும். அந்தப் பையன் ஸ்டேஷன் வந்ததும் வெளியே இறங்கியதும் நானும் பின்னாலே இறங்கினேன். “தம்பி, நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது அந்தப் பொண்ணை மட்டும்தான்; ஏற்காடு எக்ஸ்பிரஸையே இல்லை. உங்களுக்குத் தூக்கம் வரலேன்னா, எங்களையாவது தூங்க விடுங்க,’ என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்துக் கீழே இறங்கினேன். ஒரு டீ குடித்துவிட்டுத் திரும்பியபோது வண்டிக்குள்ளே அவளும், வண்டிக்கு வெளியே அந்தப் பையனும் ஜன்னல்வழியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எரிச்சலுடன் நெருங்கியபோது….

 

      ”எனக்குத் தெரியும்… இந்த மாதிரி ஏதாவது நடக்கும்னு….” அந்தப் பெண் சீறுவதைக் கேட்க முடிந்தது. என்னாயிற்று? ஒன்றுமில்லை; அந்தப் பையனின் சாம்ஸன் கேலக்ஸி போன் நழுவிக்கீழே விழுந்து விட்டிருந்தது. அதாவது தண்டவாளத்துக்கும் நடைபாதைக்கும் இடையில் விழுந்து விட்டிருந்தது. பார்த்தவுடன் முதலில் ‘ நல்லா வேணும்’ என்று தோன்றியது உண்மைதான். ஆனால், கொஞ்ச நேரத்தில் பரிதாபமாக இருந்தது.

     

      சிறிது நேரத்தில் சிக்னல் போட்டு விட்டார்கள். ஐயையோ!

 

      ’இவ்வளவு நேரம் சும்மாவா நின்னிட்டிருந்தீங்க? ஸ்டேஷன் மாஸ்டர்கிட்டே சொன்னீங்களா?’

 

       நான் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அந்தப் பையன் சட்டென்று இரண்டு பெட்டிகளுக்கும் இடையே இருந்த பள்ளத்தில் குதித்து, குனிந்து குறுகி செல்போனை நெருங்கி எடுத்து, அப்படியே பின்வாங்கி வந்து, மீண்டும் அதே இடைவெளி வழியாக வெளியேறவும், ரயில் நகரத் தொடங்கியது.

 

      அடப்பாவி! ஒரு நொடி தாமதமாகியிருந்தால்….?

      ”சரியான ஸ்டுப்பிட் நீ!” அந்தப் பெண் அவனைப் பார்த்து இரைந்தாள். எனக்குக் கைதட்ட வேண்டும் போலிருந்தது. அதன்பிறகு கொஞ்ச நேரம் அவன் தனது செல்போனையே ஒரு பூனைக்குட்டியைத் தடவிக்கொடுப்பதுபோல தடவியபடி வந்தான். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவள் அவனை மாறி மாறி வசவுபாட அவன் ஆண்பிள்ளையாக லட்சணமாக அசடுவழிந்து கொண்டிருந்தான். சத்தியமாக, அடுத்த ரயில் நிலையத்தில் அவன் இறங்க மாட்டான் என்று தோன்றியது.

 

      ஒரு நொடி! அவனது கணக்கு தப்பாகியிருந்தால் என்னாகியிருக்கும்? கொஞ்ச நேரம் முன்புவரை அவனும் அவளும் சிரித்துப் பேசியதெல்லாம் கரைந்துபோய் ஒரு விபரீதமான சூழல் ஏற்பட்டிருக்கும். இதுவரை ஏற்பட்ட ரயில் பயண அனுபவங்களிலேயே மிகவும் பயங்கரமான அனுபவமாக எனக்கு அமைந்திருக்கும். ஆனால், நல்லவேளை! இப்படியொரு தம்பதியுடன் பயணித்ததை நான் மறந்தாலும் மறக்கலாம். அவர்களைப் போன்ற அசடுகள் ஊரெங்கும் பரவிப் படர்ந்திருக்கிறார்கள். ஆனால்,

 

அந்த இளம் தம்பதியினருக்கு அன்று காட்பாடியில் நடந்த சம்பவம் நிச்சயம் இன்னும் பல வருடங்களுக்கு ஞாபகமிருக்கும். காட்பாடி, ரயில், சாம்சன் கேலக்ஸி என்று எதைக்கேட்டாலும் அவர்களுக்கு அந்த சம்பவம் ஞாபகத்துக்கு வந்து மயிர்க்கூச்செரிய வைக்கலாம்.

 

அதனால்தான் இந்த ரயில் பயணங்கள் என்பவை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்லுகிறதோடு நின்றுவிடாத ஒரு நிகழ்வாகப் பலருக்கு அமைந்து விடுகிறது.

 


Ahamed Zubair A

unread,
May 25, 2014, 5:09:45 AM5/25/14
to பண்புடன்
சேட்டைஜி... அதகளம்...

அறந்தாங்கியிலிருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இடம் கிடைக்காது என்பதால் குடும்பத்தோடு 11 மணி பேசஞ்சரில் சென்னை செல்லக் கிளம்பினோம். 

மயிலாடுதுறையில் வண்டி மாற வேண்டுமாம்... அதற்காக அரக்கப்பரக்க வண்டி மாறும்போது தம்பியை லக்கேஜோடு லக்கேஜாக மேலே ஏற்றிவிட்டு நள்ளிரவிலே மேலே இருந்து, நடுவில் படுத்திருந்தவரின் மேல் விழுந்த போது தான் அவனை மேலே படுக்க வைத்ததே நினைவுக்கு வந்தது ;)))

பொறியியல் படிக்கையில் 50% தள்ளுபடி தருவார்கள் என்பதற்காகவே கம்பன் எக்ஸ்பிரசில் வந்திருக்கிறேன்...

அது ஒரு காலம் ;)


தமிழ்ப் பயணி

unread,
May 25, 2014, 5:20:25 AM5/25/14
to பண்புடன்
குண்டக்கல் வந்ததும் வண்டியிலிருந்து இறங்கிய கிட்டாமணி, தலைதெறிக்க ஓடியதைப் பார்த்து, ‘என்னாச்சு, எவனாவது பிக்பாக்கெட் அடித்துவிட்டானா?’ என்று பயந்து நானும் கீழே இறங்கி அவனைப் பின் தொடர்ந்து ஓட, அவன் ஐ.ஆர்.ஆரில் சுடச்சுட பொங்கல், உப்புமா வாங்குவதற்காக நின்ற நீண்டவரிசையில் ஒட்டிக்கொண்டபோது ஏற்பட்ட எரிச்சல் இருக்கிறதே!

 பிக்பாக்​கெட் அடிச்சிருந்தா கூட அவர் இவ்வளவு ​வேகமா ஓடியிருக்க மாட்டாருன்னு நி​னைக்க ​தோணுது... :) :)


2014-05-25 13:31 GMT+05:30 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

ரயிலே ரயிலே….

 

 நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ரயில் பயணம். ஈரோட்டுக்கு ஏற்காடு எக்ஸ்பிரஸில் எத்தனை தடவை பயணம் செய்தேன் என்று விரல்விட்டு எண்ணி விடலாம். முன்னோர்கள் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரே நாளில் வெயிட்டிங் லிஸ்டிலிருந்து வழுக்கி இறங்கி, மாலைக்குள் ஆர்.ஏ.ஸிக்கு வந்து ரயில் நிலையத்துக்குப் போனபோது ‘பர்த்’ வரம் கிடைத்திருந்தது.


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’
- ​சோமன், விஷ்ணுபுரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Ahamed Zubair A

unread,
May 25, 2014, 6:49:29 AM5/25/14
to பண்புடன்
”ரயிலே ரா” பாட்டுல நஸ்ரியா எப்படி ஆடி இருப்பாங்கன்னு நினைக்கத் தோணுது ;))

இதும் பெருமூச்சு இழையாகிடுமோ?? :))

R.VENUGOPALAN

unread,
May 31, 2014, 5:10:36 AM5/31/14
to பண்புடன்

 ராம் தேரி கங்கா மைலி!

 


வாரணாசி நகரில் வசிக்கிற பாக்கியம் (அ) துர்ப்பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லை என்றாலும் கூப்பிடு தூரத்திலிருக்கிற பதோஹி என்ற ஊரில் சில மாதங்கள் குப்பை கொட்டியிருக்கிறேன். அதுபற்றி அலட்டிக் கொள்வதற்கு முன்னர்…..

 


     பொடியனாக இருக்கையில் ஊரிலிருந்து யாரேனும் காசிக்குப் போய்விட்டு வந்தால் மஞ்சள் கயிறு வாங்கிக்கொண்டு வந்து மணிக்கட்டில் கட்டி விடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இன்னும் சில பேர் சிறியதும் பெரியதுமாக சீல் வைக்கப்பட்ட செம்பில் கங்கை நீரை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்கள். என் வீட்டிலும் அப்படி ஒரு அரை டஜன் கங்காஜலம் பூஜையறையில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். அதன் உண்மையான உபயோகம் என்னவென்று அறிவதற்கு என் பாட்டியின் மரணம்வரை காத்திருக்க நேர்ந்தது. அதன்பிறகு எங்கு கங்காஜலத்தைப் பார்த்தாலும், தவிர்க்க முடியாமல் மரணம் குறித்த ஒரு சின்ன பயம் மனதுக்குள் ஏற்பட்டதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

 


திருப்பதி லட்டு மாதிரியோ, பழனி பஞ்சாமிர்தம் மாதிரியோ, காசிக்கு அடையாளமாக ஒரு தின்பண்டம் இல்லாமல் போனதும் அதன்மீது அதிக ஆர்வம் ஏற்படாமல் போனதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். காசி அல்வா என்று சொல்லப்படுவது அகர்வால் இனிப்புப் பண்டங்களின் வியாபார உத்திகளில் ஒன்று என்பது புரிய பல ஆண்டுகள் பிடித்தன. அந்தக் கணக்குப்படிப் பார்த்தால், காசியில் பிரெட் பக்கோடாவுக்கென்றே ஒரு தனிக்கடை இருக்கிறது; பேளூர் மடத்தருகே இருந்த ராஜஸ்தானிய உணவகத்தில் முட்டியா சாப்பிட்டு ஜெலூசலை ரோஸ்மில்க் மாதிரிக் குடித்ததும் ஞாபகத்துக்கு வரத்தான் செய்கிறது.

 


காசியென்றால் சட்டென்று ஞாபகத்துக்கு வருவது கங்கையும் வெற்றிலையும். கைக்கே பான் பனாரஸு வாலா.. குல்ஜாயே பந்த் அகல் கா தாலா…! பனாரஸ் பானுக்கும்(வெற்றிலை) கொல்கத்தா வெற்றிலைக்கும் பண்டைகாலம் தொட்டே மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்க்ஸ் போல கடுப்பான போட்டி நிலவி வந்திருக்கிறது. இரண்டையும் சுவைத்தவன் என்ற முறையில் எங்கூரு ஈத்தாமொழி வெற்றிலைக்கு ஈடு இணையில்லை என்றுதான் சொல்லுவேன் என்றாலும் பனாரஸ்-கொல்கத்தா பானுக்கு இடையேயான இரண்டு குறிப்பிடத்தக்க வித்தியாசங்களைச் சொல்வது அவசியம். பனாரஸ் பான் கொஞ்சம் அடர்பச்சை; கொல்கத்தா வெளிர்பச்சை. பனாரஸ் பான் கொஞ்சம் பெரிது. அம்புட்டுத்தேன்! இதில் ஏக் ஸோ பீஸ் (120), தோ ஸோ சாலீஸ் (240), கச்சி சுப்பாரி (பச்சைப்பாக்கு), பக்கி சுபாரி (காய்ந்த பாக்கு) என்று தரம்பிரித்து, கலர் கலராக சுண்ணாம்பு, கிராம்பு, ஏலக்காய் தொடங்கி பலவண்ணங்களில் இனிப்பும் சேர்த்து முக்கோணமாக மடித்துக் கொடுப்பார்கள்.

 


ஜாதிக்காய், ஜர்தா கலந்து தரப்படுகிற பானை ஒன்றுக்கு மேல் மென்றால் கரைப்பதற்காகக் கொண்டுவந்த அஸ்திகலசத்துக்குள் இறந்துபோனவர்கள் சிரிப்பதைக் கேட்க முடியும். இப்போதெல்லாம் வேலை மெனக்கெடாமல் ஒரு பாக்கெட் பான்பராக்கை அப்படியே வெற்றிலையில் கொட்டி மடக்கி வாங்கி வாயில் போட்டுக் கொண்டு சஹாரன்பூரிலிருந்து ரூர்க்கிவரை பஸ்ஸின் ஜன்னல்வழியாகத் துப்பிக்கொண்டே செல்கிறார்களாம்.

 


தலைப்பை விட்டு வெகுதூரம் வந்துவிட்டாகி விட்டது. கங்கைக்கும் காசிக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. எல்லாரும் ரொம்பவும் பெருமிதப்படுகிற விஷயம் கங்கை – ஒரு காலம் வரைக்கும்!

 


ஹோட்டோன் பே சச்சாயி ரஹத்தி ஹை

தில் மே ஸஃபாயி ரஹத்தி ஹை

ஹம் உஸ் தேஷ் கே வாஸி ஹை

ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை…

 


உதடுகளில் உண்மையுடனும், உள்ளத்தில் தூய்மையுடனும் கங்கை புரண்டோடுகிற நாட்டில் நாங்கள் வசிக்கிறோம் – இப்படித்தான் ராஜ்கபூர் பெருமைப்பட்டார் ‘ஜிஸ் தேஷ் மே கங்கா பஹத்தி ஹை’ படத்தில். (ஹீரோ ராஜ்கபூர் பிறந்த அதே தேசத்தில் வில்லன் பிராண் எப்படிப் பிறந்தார் என்று விஷமத்தனமாகக் கேட்டதுமுண்டு!)

 


அதே ராஜ்கபூர் பின்னாளில் ‘ராம் தேரி கங்கா மைலி’ என்று ஒரு படமெடுத்து கங்கை எப்படிக் குட்டிச்சுவராகப் போனது என்பதை வெளிப்படுத்தினார்; கூடவே அவரது ரசனையும். புனிதமான கங்கை அழுக்காகி விட்டது என்பதைக் காட்டுவதற்காக, கதாநாயகி மந்தாகினிக்கு ஒரு ஸீ-த்ரூ வெள்ளைப்புடவையை (மட்டும்) கட்டிவிட்டு, அருவியில் குளிப்பாட்டியதில் தொடங்கி, மந்தாகினியை (கங்கையின் இன்னொரு பெயர்) படத்தின் பெரும்பாலான காட்சிகளில் துகிலுரிந்து தனது சமுக அக்கறையை வெளிப்படுத்தியிருந்தார். ‘பாபி’ படத்துக்குப் பிறகு, எல்லா கிளைமேக்ஸிலும் கொஞ்சம் வன்முறை சேர்த்தால் உடம்புக்கு நல்லது என்ற டாக்டர் அறிவுரைக்கேற்ப இந்தப் படத்திலும் துப்பாக்கியால் கதையை முடித்திருந்தார் ராஜ்சாஹேப்.

 


ஒரே இயக்குனர் முப்பது ஆண்டுகள் இடைவெளியில் தயாரித்து வெளியிட்ட இரண்டு படங்களையும் கங்கை படுகிற பாட்டுக்கு ஒரு உதாரணம் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம். அடுத்து முப்பதாண்டுகள் ஆகியும் இன்னும் ‘ராம் தேரி கங்கா மைலி’ தான் (ராம், உன் கங்கை அழுக்கு எனப் பொருள்). அதனால்தான், கங்கையைப் புதுப்பிக்கவென்றே ஒரு அமைச்சரவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி ஆட்சியிலும் இதே போன்று சில முயற்சிகள் எடுக்கப்பட்டது அனைவரின் ஞாபகத்திலும் இருக்கலாம்.

 


பதோஹியில் இருந்த காலத்தில் வாரணாசிக்கு நாலைந்து முறை சென்றிருக்கிறேன். முதல் மூன்றுமுறை கங்கையில் குளிக்கிற துணிச்சல் வரவில்லை என்பதற்கு எனக்குத் தண்ணீரில் கண்டமிருக்கிறது என்று ஜாதகத்தைக் கணித்த அம்பாசமுத்திரம் அனந்தசுப்பு சாஸ்திரிகள் சொன்னதும், எனக்கு நீச்சல் தெரியாது என்பதும் சின்னக் காரணங்கள்தான். முக்கியமான காரணம், கங்கையைப் பார்த்த மாத்திரத்தில், அதன் நிறத்தைப் பார்த்த மாத்திரத்தில், அதிலிருந்து புறப்பட்ட நெடியைச் சுவாசித்த உடன் உடம்புக்குள்ளிருந்த நரம்புகள் அனைத்தும்  அருவருப்பில் முறுக்கிக்கொண்டதுதான். கிளம்புவதற்கு முன்னர், ‘கொஞ்சம் பாவத்தையாவது குறைத்தால் அளவான லக்கேஜுடன் ஊர்திரும்பலாம்’ என்ற நப்பாசையில் குளித்ததும் இனி ஜென்மத்தில் வாரணாசியில் குளிக்க மாட்டேன் என்று சூளுரை மேற்கொண்டதும் நிகழ்வுகள்.

 


காசியில் குளித்தால் எதையாவது விட வேண்டுமென்று சொன்னபோது, ‘இனி காசியில் குளிப்பதை விட்டு விடுகிறேன்’ என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டேன்.

 


ஒரு கேள்வி மனதுக்குள் உண்டு. கங்கையை சுத்தப்படுத்துகிற பணியை வாரணாசியிலிருந்து துவங்குவார்களா? உலகத்திலேயே பாரம்பரியம் மிக்க நகரம், மடங்கள், சமிதிகள், அகோரிகள், சாதுக்கள் என்று காசியின் அடையாளமாகப் பல இருந்தபோதிலும், காசிக்கு இன்னொரு முக்கியமான அடையாளமாக இருந்த ஒரு அவலத்தை நான் அறிந்திருக்கிறேன். மும்பையில் ஒரு கிராண்ட் ரோடு போல, கொல்கத்தாவின் சோனாகச்சியைப் போல, வாரணாசியிலும் பெண்கள் அவலத்தில் புழங்கி வயிற்றைக் கழுவி வாழ்கிற ஒரு பகுதி இருக்கிறது. கங்கைக்குப் புதுவாழ்வு அளிப்பது இருக்கட்டும்; அங்கிருக்கிற ஜீவன் களை அந்த அழுக்கு நீரோட்டத்திலிருந்து யாரேனும் காப்பாற்றுவார்களா? அப்படிக் காப்பாற்றும்வரைக்கும்…….

 


ராம் தேரி கங்கா மைலி….

மஞ்சூர் ராசா

unread,
May 31, 2014, 6:23:00 AM5/31/14
to பண்புடன்
உண்மையான கங்காவின் அழுக்கை (பெண்களின் துயரத்தை) சுத்தப் படுத்தப்படுமா என்பது சந்தேகம் தான்.


--

Ahamed Zubair A

unread,
May 31, 2014, 7:45:14 AM5/31/14
to பண்புடன்
யூட்யூப் லிங்க் கிடைக்குமா??

- விலாசம் விலாசம்!! :-)))

R.VENUGOPALAN

unread,
Jun 7, 2014, 2:50:48 AM6/7/14
to பண்புடன்

ஆபுத்திரன் டைலர்ஸ்



வெயிலில் மண்டை காய்ந்து கொண்டிருக்கிற இந்தப் புழுக்கத்தில் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற பழமொழியைச் சொல்வது அபத்தமாக இருக்கும். ஒரு வழியாக மகன் விரும்பிய பள்ளியில் +1 படிப்பில் சேர்த்தாகி விட்டாலும் (அப்பாடா…!), இன்னும் நிறைவேற்ற வேண்டிய உதிரிக் கடமைகள் பாக்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு, சீருடையை ஒரு நல்ல டைலரிடம் கொடுத்து, உரிய நேரத்தில் தைத்து வாங்கி, ஒழுங்கு மரியாதையாக முதல் நாளே மகன் போட்டுக்கொண்டு செல்வதை உறுதிப்படுத்தியாக வேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து எழுதுவதற்கே அலுப்பூட்டுகிற பல வேலைகள் இருக்கின்றன.

 

வழக்கமாகத் தைத்துக் கொடுக்கிற டைலர் இப்போது சந்தானத்தை விடவும் படுபிஸியாக இருப்பதால், கடையில் படியேறியதுமே முகத்தை அஷ்டகோணலாக்கி ‘யூனிஃபார்மா சார், பதினஞ்சாம் தேதிக்கு மேல்தான் கிடைக்கும். பரவாயில்லையா?” என்று ’கெளம்பு, காத்து வரட்டும்’ என்று சொல்லாமல் சொல்லிவிடவே, குறித்த தேதிக்குள் மகனின் சீருடையைத் தைத்து வாங்கியாக வேண்டுமே என்ற கவலை தொற்றிக்கொண்டது.

 

மகன் மேற்கொண்ட புலன்விசாரணையில், கச்சிதமாகச் தைக்கிற டைலர் ஒட்டுமொத்த சூளைமேட்டிலேயே இல்லை என்பது தெரியவர, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் வரைக்கும் ஒரு பாதயாத்திரை மேற்கொண்டதில் எல்லாரும் ஜூன் இரண்டாவது வாரம் வரைக்கும் படுபிசி என்பது தெரிய வந்தது. இப்படியே இரண்டு நாட்கள் வெட்டியாகப் போய்விட, வீட்டுக்குள் நுழையும்போதெல்லாம் மகன் பார்வையாலேயே கடுப்பேற்றிக் கொண்டிருந்தான். டி.ஏ.வியில் அட்மிஷன் வாங்கிக்கொடுத்த இஷ்டசித்தி வினாயகருக்கு இன்னொரு தேங்காய் உடைப்பதாக மனதுக்குள் வேண்டிக் கொண்டபிறகு, அசரீரி மாதிரி ஒரு தேவவாக்கு கேட்டது.

 

’அந்த டைலர்கிட்டே கொடுத்தா சொன்ன தேதிக்குத் தைச்சுக் கொடுத்திருவார். அர்ஜெண்ட்னு சொன்னாப் போதும். உடனே ரெடி பண்ணிடுவார்.”

 

வீட்டு ஓனரும் பக்கத்து வீட்டில் குடியிருப்பவரும் பேசிக்கொண்டிருந்தது காதில் தேனாகப் பாய்ந்தது. உடனே படியிறங்கிப் போய் சர்வசாதாரணமாக வருகிற அசட்டுச்சிரிப்பை உதிர்த்து, வாராதுவந்த மாமணியாம் அந்த டைலரின் இருப்பிடத்தை விசாரித்தேன்.

 

“சாயங்காலம் வாக்கிங் போறபோது வாங்க. நான் சொன்னா உடனே தைச்சுக் கொடுத்திடுவான். கவலையை விடுங்க.” என்று பக்கத்து வீட்டுக்காரர் அளித்த வாக்குறுதியைக் கேட்டதும் கொஞ்சம் ஆனந்தக்கண்ணீரே விடலாம் போலிருந்தது. அவர் இட்ட கட்டளையைச் செவிமடுத்து மாலை அவர் வாக்கிங் கிளம்பியபோது என் பையனுடனும், துணிப்பையுடனும் கிளம்பியபோது இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. கடவுளே, டைலர் மனமிறங்கி உடனடியாகத் தைத்துத் தர வேண்டுமே!

 

பத்து நிமிட நடைக்குப் பிறகு புதுத்துணி வாசனை நிரப்பியிருந்த அந்தச் சின்னக் கடைக்குள் நுழைந்தபோது காதில் பென்சிலும் கையில் கத்திரியுடனுமிருந்த அந்த டைலரின் கண்களில் கிஞ்சித்தும் சினேகம் இருக்கவில்லை. இருந்தாலும் உடன்வந்த பக்கத்துவீட்டுக்காரருக்காக, ‘போனால் போகிறது’ என்று ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு என்னையும் என் கையிலிருந்த பையையும் ஒரு தினுசாகவே பார்த்தார். பக்கத்து வீட்டுக்காரர் என்னையும், என் பையனையும் அறிமுகப்படுத்திவிட்டு, நாங்கள் வந்த நோக்கத்தைச் சொன்னதும் அந்த டைலர் சிவாஜியைப் போல உதட்டைப் பிதுக்கினார்.

 

“பயங்கர பிஸி சார், யூனிஃபார்மை வாங்கிட்டு கரெக்டாக் கொடுக்கலேன்னா தப்பாயிடும். வேறே இடம் பாருங்களேன் ஸார்?” என்று டைலர் சொன்னதும் என் பையன் கையைக் கிள்ளினான்.

 

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க!” பக்கத்து வீட்டுக்காரர் கெஞ்சினார். “நீங்க கண்டிப்பா செஞ்சு கொடுப்பீங்கன்னு சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்திட்டேன். கொஞ்சம் பார்த்துப் பண்ணிக் கொடுங்க. எனக்கு ரொம்ப வேண்டியவங்க.”

 

படபடப்போடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டில் சென்னை மாநகராட்சி உதவி கமிஷனர் இருக்கிறார் என்று சொல்லிப் பார்க்கலாமா? எனக்கு வேண்டிய ஒருவர் மூப்பனார் பேரவையில் இருக்கிறார்; அவரிடம் உதவி கேட்கலாமா? அல்லது நேரடியாகவே பா.வளர்மதியின் உதவியாளருக்கு போன்போட்டு ‘ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுங்க’ன்னு சொல்லலாமா?

 

“ம்?” என்று அந்த டைலர் பிதுக்கிய உதட்டைப் பிரிக்காமலே என்னையும் என் பையனையும் என் கையிலிருந்த பையையும் பார்த்தபோது நான் எல்லா தெய்வங்களையும் மனமாற வேண்டிக்கொண்டிருந்தேன்.

 

“சரி சார், என்னிக்கு வேணும்?” என்று டைலர்சார் கேட்டதுதான் தாமதம். சட்டென்று பையிலிருந்த துணியை எடுத்துக் காட்டி, என் மகனின் பள்ளி திறக்கப்போகிற நாள் உட்பட அனைத்து விபரங்களையும் மிகவும் பணிவன்போடு சொல்லி முடித்தேன்.

 

“ஓ.கே சார், ஸ்கூல் திறக்கிறதுக்கு முன்னாலே ரெண்டு செட் ரெடி பண்ணித் தந்திடறேன். மூணாவது செட் அப்புறம்தான் தருவேன்.”

“ஓ.கே அங்கிள்!” என் வாயைப் பற்றி நன்றாக அறிந்த என் மகன் குறுக்கிட்டுப் பேசினான். அப்புறம் என்ன, அளவெடுத்து முடித்துவிட்டு, பள்ளிக்கூடம் திறப்பதற்கு ஒரு வாரம் முன்பாகத் தருவதாக அந்த டைலர்பெருமான் கூறவும், ‘கடவுள் காப்பாத்திட்டார்’ என்று தோன்றியது. உடுக்கை இழந்தவன் கைபோலாங்கே உடுப்புத் தைக்க உதவிய பக்கத்து வீட்டுக்காரருக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.

 

”நீங்க செய்த உதவியை இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு நான் மறக்க மாட்டேன் சார்!”

 

இது நடந்து ஒரு வாரமாகி விட்டது. இன்னும் துணி தைத்து முடியவில்லை. ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும், தூக்க நேரத்தில் அழைப்புமணியை அமுத்தி, வாக்யூம் க்ளீனர் விற்க வந்தவனைப் பார்ப்பதுபோல அத்தனை கடுப்புடன் பார்க்கிறார் டைலர்.

 

“அதுக்குத்தான் அன்னிக்கே சொன்னேன் சார். ஏதோ பெரியவர் சொன்னாரேன்னுதான் தட்ட முடியாம வாங்கிட்டேன். ஸ்கூல் தொறக்கிறதுக்கு முன்னாடி ஒரு செட் தந்திடறேன் சார். மீதியை ரெண்டு மூணு நாளிலே வாங்கிக்குங்க. போன் பண்ணுங்க சார். எதுக்கு இந்த வெயில்லெ வந்து கஷ்டப்படுறீங்க?( எதுக்கு நீயும் காய்ஞ்சு என்னையும் காயவைச்சு உசிரை எடுக்கிறே)”

 

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி அந்த ஒரு செட் கூட இன்னும் தயாராகவில்லை என்பதால், மிகுந்த மனக்கிலேசத்துக்கு உள்ளான என் மகன், தனது நண்பர்களுடன் அம்பா ஸ்கைவாக் மாலுக்குச் சென்று பி.வி.ஆரில் ஏதோ ஒரு இந்திப்படம் பார்த்து வந்து புண்பட்ட மனதைத் தேற்றிக்கொண்டிருக்கிறான்.

 

பதினோராம் தேதிக்கு முன்பாக ஒரு செட் சீருடையாவது கிடைக்காதா? அந்த டைலரிடம் போவதா வேண்டாமா? பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி இன்னொருமுறை சிபாரிசு செய்யச் சொல்லலாமா? ஒரு நடை மண்ணடி வரைக்கும் போய் இஷ்டசித்தி வினாயகரிடமும் காளிகாம்பாளிடம் முறையிடலாமா?

 

இப்படியெல்லாம் கலங்கலாகக் குழம்பிக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக எனது பால்யகாலத்தில் இப்படியெல்லாம் எனது துணிகளைக் குறித்த நேரத்தில் தைக்காமல் அலைக்கழித்த பல டைலர்களைப் பற்றிய ஒருசில ஃப்ளாஷ்பேக்குகள் வந்துபோகின்றன.

 

எங்கள் குடும்பத்தின் ஆஸ்தான டைலராக பாலமோர் ரோட்டில், சுதர்சன் ஜவுளிக்கடைக்கருகேயிருந்த ‘பாம்பே டைலர்ஸ்’ நியமிக்கப்பட்டிருந்தது. தீபாவளியென்றால், எனக்கும் என் இரண்டு சகோதரர்களுக்கும் ஒரே துணியை தாராளமாக வாங்கிக் கொடுப்பது வழக்கம். ’பாம்பே டைலர்ஸ்’ ஒன்றும் மோசமில்லை. என்ன, என் அண்ணனின் சட்டையில் தைக்கிற பையைக் கிழித்தால் எனக்கு இன்னொரு சட்டை தைக்கலாம் போலிருக்கும். பள்ளியை விட்டு கல்லூரிக்குச் சென்றபிறகு ‘பாம்பே டைலர்ஸ்’ பக்கம் போவதை நிறுத்திவிட்டு லேட்டஸ்ட் ஃபாஷன் தேடி நாங்கள் போனது பழைய டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகேயிருந்த ‘கௌபாய் டைலர்ஸ்.’ அப்போதே எனக்குக் கொழுப்பு அதிகம் என்பதால், கௌபாய் டைலர்ஸ் என்பதை ஆபுத்திரன் டைலர்ஸ் என்று கலாய்க்க ஆரம்பித்திருந்தேன். கௌபாய் டைலர்ஸின் ‘ஆபுத்திரன்’ சேவியர்.

 

சேவியர் டைலர் ஒரு நவரச நாயகன். புதுத்துணியுடன் போகையில், முகமெல்லாம் புன்சிரிப்பாக வரவேற்பார். கடந்தமுறை அவர் தைத்துக் கொடுத்த சட்டை, பேண்ட் குறித்து அக்கறையோடு குசலம் விசாரிப்பார். அப்போது மெட்ராஸில் என்ன ஃபாஷன் என்பதையெல்லாம் விளக்கி, ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக எதையாவது செய்து ஆச்சரியபட வைப்பார். ஆனால், அவரிடமிருந்து குறித்த நேரத்தில் துணியைத் தைத்து வாங்கியவர்களும், கன்னியாகுமாரி சங்கிலித்துறையில் குதித்துப் பிழைத்தவர்களும் மாவட்டத்திலேயே கிடையாது. சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிற வழக்கம் அவருக்குக் கிடையாது என்பதை அனுபவத்தில் அறிந்திருந்ததால், குறிப்பிட்ட தினத்தன்று ஒரு லுல்லுலாயிக்குத் தலையைக் காட்டிவிட்டு ‘என்னண்ணே, ஒவ்வொரு வாட்டியும் இப்படியே லேட் பண்ணா எப்படி?” என்று அங்கலாய்ப்பதும், அதற்கு அவர் என்னமோ ஜோக்கைக் கேட்டவர்போலச் சிரிப்பதைப் பார்த்தும் எரிச்சல்படாமல் மாங்கு மாங்கென்று சைக்கிளை மிதித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்புவதும் வழக்கமாகிப் போனது.

 

ஒரு கட்டத்தில், துணியைத் தைக்கக்கொடுத்துவிட்டு, ஆபுத்திரன் டைலர்ஸ் கடையருகேயிருந்த ’ஜெயகுமாரி ஸ்டோர்ஸ்’ கடையின் கல்லாவிலிருக்கும் என் நண்பன் குளத்தூரானிடம் அவ்வப்போது சேவியர் அண்ணனை ஞாபகப்படுத்துமாறு சொல்லி வைத்ததுமுண்டு.

 

காலம் மாறியது; கோலம் மாறியது. ஆனால், அங்கெங்கெனாதபடி எங்கணும் காணப்படுகிற டைலர்கள் எல்லாரும் ஆபுத்திரன் டைலர்களாகவே இருக்கிறார்கள் போலும்.

 

 

தமிழ்ப் பயணி

unread,
Jun 7, 2014, 4:54:00 AM6/7/14
to பண்புடன்
சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிற வழக்கம் அவருக்குக் கிடையாது என்பதை அனுபவத்தில் அறிந்திருந்ததால், குறிப்பிட்ட தினத்தன்று ஒரு லுல்லுலாயிக்குத் தலையைக் காட்டிவிட்டு ‘என்னண்ணே, ஒவ்வொரு வாட்டியும் இப்படியே லேட் பண்ணா எப்படி?” என்று அங்கலாய்ப்பதும்,

பிரச்சி​னைகளுக்கு ஏற்ப நம் தகவ​மைப்புக​ளை மாற்றி ​கொள்வது இயல்பு தா​னே. உங்க ​பையனுக்கு இப்ப தா​னே அனுபவம் ஆரம்பித்து இருக்கிறது.. ​​போக ​போக அவரும் வாழ்வியல் பாடம் நல்ல படியா கத்துகிடுவார்...  :) :)


2014-06-07 12:20 GMT+05:30 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

ஆபுத்திரன் டைலர்ஸ்



வெயிலில் மண்டை காய்ந்து கொண்டிருக்கிற இந்தப் புழுக்கத்தில் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற பழமொழியைச் சொல்வது அபத்தமாக இருக்கும். ஒரு வழியாக மகன் விரும்பிய பள்ளியில் +1 படிப்பில் சேர்த்தாகி விட்டாலும் (அப்பாடா…!), இன்னும் நிறைவேற்ற வேண்டிய உதிரிக் கடமைகள் பாக்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு, சீருடையை ஒரு நல்ல டைலரிடம் கொடுத்து, உரிய நேரத்தில் தைத்து வாங்கி, ஒழுங்கு மரியாதையாக முதல் நாளே மகன் போட்டுக்கொண்டு செல்வதை உறுதிப்படுத்தியாக வேண்டும். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து எழுதுவதற்கே அலுப்பூட்டுகிற பல வேலைகள் இருக்கின்றன.



ஸ் பெ

unread,
Jun 9, 2014, 7:13:36 AM6/9/14
to panbudan
செம.. விவிசி.. 



2014-06-07 8:50 GMT+02:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:
படபடப்போடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டில் சென்னை மாநகராட்சி உதவி கமிஷனர் இருக்கிறார் என்று சொல்லிப் பார்க்கலாமா? எனக்கு வேண்டிய ஒருவர் மூப்பனார் பேரவையில் இருக்கிறார்; அவரிடம் உதவி கேட்கலாமா? அல்லது நேரடியாகவே பா.வளர்மதியின் உதவியாளருக்கு போன்போட்டு ‘ஒரு வார்த்தை சொல்லச் சொல்லுங்க’ன்னு சொல்லலாமா?




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Srimoorthy S

unread,
Jun 9, 2014, 4:20:43 PM6/9/14
to பண்புடன்

;)
நம்ம நாட்டுல நெஜமாலுமே 100 கோடி பேருக்கு மேல இருக்கறாங்களான்னு சந்தேகப்படவைக்கும் அனுபவங்கள் ;)

--

R.VENUGOPALAN

unread,
Jun 16, 2014, 10:28:38 PM6/16/14
to பண்புடன்

வாயை மூடி சும்மா இருடா!

 

இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் அயர்ந்து உறங்க முற்படுகிறபோதெல்லாம் தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கிற மின்விசிறி திடீரென்று நெய்வேலி தொழிலாளார்கள் போல வேலை நிறுத்தம் செய்து விடுகிறது. கரண்ட் போச்சா?

 

ஒரு பத்து நிமிடம், எப்படியாவது மீண்டும் மின்சாரம் வந்துவிடும் என்று படுத்தவாறே பலவாறான யோகாசனங்களைச் செய்துவிட்டு, சலிப்புடன் எழுந்து வாசலுக்கு வருவதும் வாடிக்கையாகி விட்டது. முன்னெல்லாம் மின்தடை ஏற்பட்டால், அடுத்த ஐந்து நிமிடத்தில் தெருவில் ஆளாளுக்கு டார்ச் லைட்டும் செல்போனுமாய்க் கூடி விடுவார்கள். இப்போது அவர்களில் பெரும்பாலானாவர்களின் வீட்டில் இன்வெர்ட்டர் என்ற ஒரு அற்புதவஸ்து வந்துவிட்டதால், என்னைப் போல ஒரு சில சோப்ளாங்கிகள் மட்டுமே தெருவுக்கு வருகின்றனர்.

 

தேசவிசாரம் என்பது நமக்கெல்லாம் மின்சாரத்தடையின்போதுதான் அதிகமாகப் பீறிட்டுக் கொண்டு வரும்.

 

“ஜூன் ஒண்ணாம் தேதிக்கப்புறம் இல்லேன்னு சொன்னாங்க. பழைய குருடி கதவைத் திறடின்னு ஆயிடுச்சே! தமிழ்நாட்டுக்கு விடிவே கிடையாதா?”

 

”மோடி பிரைம் மினிஸ்டரானதும் ‘அச்சே தின் ஆனேவாலே ஹை’ன்னு சொன்னார். ரொம்ப நன்னாத்தான் வந்திருக்கு போங்கோ அச்சே தின்..!”

 

“அதுக்கும் இதுக்கும் என்னய்யா கனெக்‌ஷன்? என்னமோ குஜராத்தை விட நாமதான் மேல்னு வாய்கிழியப் பேசினோமே? குஜராத்துலே இப்படியா இருக்கு?”

 

“சும்மாயிரும் ஓய்! தில்லியோட சங்கதி எப்படி நாறிண்டிருக்குன்னு தெரியுமோன்னோ? இந்த மனுஷன் வந்ததுலேருந்து ஒண்ணும் சரியில்லை. தினமும் ஏதாவது அச்சானியமா நடந்துண்டிருக்கு. ஒரு மந்திரியே போய்ச் சேர்ந்துட்டார்.”

 

”உலகத்துலேயே இந்தியாதான் மூணாவது பெரிய பொருளாதாரமாமே? பேரு பெத்த பேரு, தாக நீரு லேதுங்கிறது சரியாத்தானிருக்கு.”

 

     மேலே சட்டைகூட போடாமல் (மனசுக்குள்ளே பெரிய சார்லஸ் ப்ரான்ஸன்னு நினைப்பு) தோளில் ஒரு ஈரிழைத்துண்டைப் போட்டுக்கொண்டு அக்குளைச் சொரிந்தவாறே நியாயம் பேசுவதற்கு மின் தடை பொன்னான நேரம்.  நாய்கள்கூட கொஞ்சம் பரிதாபத்துடன் அமைதியாய் இருக்கும் நேரம் என்பதால், இரண்டுகால் பிராணிகள் இஷ்டத்துக்கும் குரைத்துக் கொண்டிருப்பார்கள்.

 

அடிக்கடி எங்கள் தெருவில் மின்சாரம் தடைபடுவதன் சூட்சமம் இவர்கள் எல்லாருக்குமே தெரியும். ஆனால், சொல்ல மாட்டார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு ஏ.சி.க்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அடிக்கடி டிரான்ஸ்ஃபார்மரில் தீ கொழுந்துவிட்டு எரிவதும் அதைத் தொடர்ந்து சிலபல மணி நேரங்கள் மின்சாரம் இல்லாமல் மொத்தத்தெருவும் வெளியே வந்து ஜெயலலிதாவிலிருந்து தொடங்கி பாலகங்காதர திலகர் வரை அனைவரையும் திட்டுவதும் ‘பிள்ளை நிலா’ போல தினசரி நடப்பாகி விட்டது.

 

 நேற்றும் அப்படித்தான்…!

 

“ஆக்சுவலி அவர் டெமாக்ரஸி இஸ் ய பாரடாக்ஸ்! வி ஆல்வேஸ் புட் தி கார்ட் பிஃபோர் தி ஹார்ஸ்!”

 

“நூத்துலே ஒரு வார்த்தை சொன்னேள்ணா!”

 

இவர்களின் இந்தக் களேபரம் இப்படி நடந்துகொண்டிருக்கும்போது, கோடிவீட்டிலிருந்து லுங்கியும், முண்டா பனியனுமாக செல்லமணி வெளிப்பட்டார். என் ஜாதி – அக்கவுண்டண்ட்! காதில் செல்போனை வைத்தபடி பேசியவாறே அவர் நடக்க, உதிரியாக ஆங்காங்கே நின்றபடி பேசிக்கொண்டிருப்பவர்கள் மார்கழி மாத பஜனை கோஷ்டிபோல அவரையே தொடர்ந்து சென்றோம். அவர் பேசி முடித்தவுடன்…

 

“என்ன சொல்றான் ஈ.பியிலே…?”

 

“ஸ்குவாட் வெளியே போயிருக்காம். நேரமாகுமாம்.”

 

“அதென்னமோ போங்க, நீங்க போன் பண்ணினா மட்டும் உடனே லைன் கிடைச்சிடுது. நானும் பத்து நிமிஷமா ட்ரை பண்றேன், என்கேஜ்ட் டோனாவே வருது.” என்று கூசாமல் புளுகுவார் ஒருவர்.

 

“ரீசீவரை எடுத்து வைச்சிட்டுத் தூங்கிட்டிருப்பானுங்க. இந்த கவர்மெண்ட் ஸெர்வண்ட்ஸ் இருக்காங்களே….ஹோப்லஸ்..!”

 

செல்லமணி கொஞ்ச நேரம் ஆனதும்...

 

“வேணு சார், வண்டியை எடுத்திட்டு வாங்களேன். பவர் ஹவுஸ் வரை போயிட்டு வரலாம்.”

 

முதல் தடவை நான் கொஞ்சம் யோசித்தபோது, “சார், உங்க வீட்டுக்கும் சேர்த்துத்தான் கரண்ட் வரப்போவுது. என்ன யோசனை?” என்று அவர் சீறியதால், இப்போதெல்லாம் அவர் ‘வேணு’ என்று சொன்னாலே, தயாராகி விடுவது வழக்கம். முண்டா பனியன், லுங்கியுடன் வண்டியின் பின்னால் அவர் உட்கார, உறங்கிக்கொண்டிருக்கிற எல்லா நாய்களையும் மெனக்கெட்டு எழுப்பியவாறு நான் வண்டியை ஓட்டி மின்சார வாரிய அலுவலகத்தைச் சென்றடைந்தோம். வழக்கம்போல, எங்களுக்கு முன்னாலேயே ‘அம்மா கேண்டீன்’ போல ”ஜேஜே” என்று கூட்டம் நின்றிருந்தது. இருக்கிற ஒரு ஜன்னலையும் பாதியாகத் திறந்து வைத்தபடி, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி மின்சார வாரிய ஊழியர் ஒவ்வொரு புகாராகக் கேட்டு குறுக்கும் நெடுக்குமாக ஒரு நோட்டில் எழுதிக்கொண்டார்.

 

”இன்னும் ஒரு மணி நேரம் ஆவும்னு சொல்றாங்க. இருங்க, என்கிட்டே ஏ.ஈ நம்பர் இருக்கு…” என்று செல்லமணி செல்போனை அமுத்தினார். “எடுக்க மாட்டேங்குறார்…. பேசாம எஸ்.டி.ஈ-யை எழுப்பிடலாம்.”

 

தெருவுக்குத் திரும்புகிறபோதிலும் கூட பின்னால் அமர்ந்தபடி அவர் யாரிடமோ புகார் தெரிவித்துக் கொண்டே வந்தார். தெருவுக்குள் நுழைந்ததும் முன்னைக்கு இப்போது கூட்டம் இரட்டிப்பாகியிருந்தது.

 

“என்னாச்சு?”

 

“ஒன் அவர் ஆகுமாம்.”

 

“நாசமாப் போச்சு! இன்னும் ஒன் அவரா?”

 

“திஸ் இஸ் ரிடிகுலஸ்! தி கவர்மெண்ட் ஸீம் டு பீ டேக்கிங் தி பப்ளிக் ஃபார் ய ரைட்! இட்ஸ் அட்டர் **************”

 

“நாக்கைப் புடுங்கிக்கிறாப்லே சொன்னேள்!”

 

”சே! பேத்திகூட ஸ்கைப்புலே ‘சாட்’ பண்ணிட்டிருந்தேன். என்ன தாத்தா உங்க இந்தியா இப்படியிருக்குன்னு நாளைக்கு அது கேட்கப் போவுது. ஒழுங்கா எலெக்ட்ரிஸிடி கூட தர முடியாத ஒரு கவர்மெண்டெல்லாம் ஒரு கவர்மெண்டா..?”

 

“என்னமோ குஜராத்துலேருந்து வரும்னு சொன்னாங்க?”

 

“ஆமா, நவஜீவன் எக்ஸ்பிரஸ்லே வந்திண்டிருக்கு. இப்போ வண்டி புஷாவல்லே நின்னுண்டிருக்காம். அவா சொன்னா நீரும் கேட்கறீரே?”

 

இந்த தினசரி நாடகத்துக்கு சுவாரசியம் சேர்ப்பதுபோல ஒரு பெண் கதாபாத்திரம். அசப்பில் அனுஷ்காவுக்கு ரிம்லெஸ் கண்ணாடி போட்டதுபோல, உயரமாக, நைட்டியணிந்தபடி கையில் செல்போனா  ஷேவிங்செட் டப்பாவா என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு செவ்வகமான சங்கதியுடன் அந்த அம்மணி வந்தார். பிரபல ஆங்கில தினசரியில் வேலை!

 

“என்னாச்சு அங்கிள்? எப்போ கரண்ட் வரும்?”

 

“ரெண்டு மணி நேரமாகுமாம்!” என்னை ‘அங்கிள்’ என்று சொன்ன எரிச்சலில் கூட ஒரு மணி நேரத்தைச் சேர்த்து அந்த அம்மணியைக் கடுப்பேற்றினேன்.

 

“ஷிட்!” அந்த அம்மணி உடனே கையிலிருந்த அந்த சாதனத்தின் திரையை விரலால் துடைத்துத் துடைத்துக் காதில் வைத்தபடி, யாருடனோ ஆங்கிலத்தில் பேசியபடி அங்கிருந்து நகர்ந்தார்.

 

“அவா பிரஸ்லே வேலை பார்க்கிறா! பேசி முடிச்சதும் ஆள் வரும் பாருங்கோ!”

 

“சும்மா இருங்காணும்! அவங்க பாய்ஃபிரண்டோட பேசுறாங்க.”

 

“இர்ரெஸ்பான்ஸிபிள்”

 

மீண்டும் காந்தியின் தலை உருண்டது. விதிவிலக்கில்லாமல் எல்லாரும் பல்லைக்கடித்தவாறு ‘நாடு உருப்படாது” என்று ஏகமனதாக நள்ளிரவுத்  தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

 

ஒரு மணி நேரத்துக்கு, இரண்டு மணி நேரம் கழித்து மின்சாரவாரிய ஊழியர் வந்து ஒவ்வொரு பெட்டியாகத் திறந்து டார்ச் அடித்துப்பார்க்க, எல்லாரும் துட்டி வீட்டுக்கு விசாரிக்கப் போனவர்கள்போல, கன்னத்தில் கைவைத்தபடி அருகில் நின்றார்கள். கடைசியில்…

 

“கேபிள் அவுட்டு!” படாலென்று அந்தப் பெட்டிகளைச் சாத்தியவாறு சொல்லுவார் மின்சார ஊழியர். “இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. காலையிலேதான் ஸ்டோர்ஸ்லே கேபிள் கொடுப்பாங்க.”

 

“ஐயையோ!”

 

“பெருமாளே!”

 

“மை குட்னஸ்!”

 

     ”கொஞ்சம் சும்மாயிருங்க எல்லாரும்!” செல்லமணி அதட்டினார். கைபேசியை எடுத்து யாருடனோ பேசினார். பிறகு அந்த மின்சார ஊழியரிடம் கொடுக்க, அவர் அதை வாங்கிக் காதில் வைத்துக்கொண்டு ‘சரி சார், அப்படியா சார், அப்படியா சார், சரி சார், பார்த்துப் பண்ணிடறேன் சார்” என்று சொல்லி முடித்தார்.

 

பிறகு, மீண்டும் அந்தப் பெட்டியைத் திறந்து சில மோடிமஸ்தான் வேலைகள் செய்து, சில கேபிள்களை இடம் மாற்றி சில ஜாலங்கள் செய்தவுடன் ‘ஜிங்’ என்ற சத்தத்துடன் வீடுகளில் விளக்கொளி பீறிட்டது.

 

“சார், இது சும்மா டெம்பரரியாக் கொடுத்திருக்கேன். தயவுசெய்து ஏ.ஸி. போடாதீங்க. பிச்சுக்கிட்டுப் போயிரும்.”

 

“தேங்க் காட்!, அப்பாடா! கடவுளே!” என்று ஆளாளும் ஆசுவாசப்பட்டுக் கொண்டு, மாமண்டூர் டாபாவில் சிறுநீர் கழிக்க பஸ்ஸிலிருந்து இறங்குகிற பயணிகளைப் போல அவசரமாக அவரவர் வீடுகளை நோக்கி விரைந்தனர்.

 

மின்சார ஊழியர் தெருமுனை திரும்புவதற்குள்ளாக, இத்தனை நேரமும் கொத்துக் கொத்தாகக் கூடி நின்றவர்கள் அனைவரும் அவரவர் வீட்டுக்குள் மாயமாக மறைந்து விட்டார்கள்.   நானும் செல்லமணியும் 80Cயை அருண் ஜேட்லி என்ன பண்ணப் போகிறார் என்று சில நிமிடங்கள் அகாலமாக விவாதித்துவிட்டு அவரவர் வீட்டுக்குத் தூங்கப் போனோம்.

 

சரியாக பத்து நிமிடம் கழித்து, ‘டப்’ என்று ஒரு சத்தம். மீண்டும் கரண்ட் காணாமல் போனது. படித்துப் படித்துச் சொல்லியும் கேட்காமல் யாரோ அல்லது எல்லாருமோ ஏ.ஸியைப் போட்டதால்தான் மீண்டும் கரண்ட் கட் ஆகியிருப்பதை எரிச்சலுடன் புரிந்துகொண்டு, ‘எப்படியும் போங்கடா’ என்று தூங்க முயன்றேன். முடியவில்லை. ஒரு ஐந்து நிமிடம் கழி்த்து வாசலில் சலசலப்பு கேட்கவே, எழுந்து எட்டிப் பார்த்தேன்.

 

“பத்து நிமிஷம் கூட தூங்க முடியலே. அதுக்குள்ளே கரண்ட் போயிடுச்சு. அந்தாளு என்னதான் வேலை பண்ணினான் தெரியலியே?”

 

“அந்தாளைச் சொல்லிக் குத்தமில்லைய்யா! இந்த செல்லமணியும் வேணுவும்தானே பெரிய இவனுங்க மாதிரி வண்டியெல்லாம் எடுத்துக்கிட்டுப் போனாங்க. ஒவ்வொரு வாட்டியும் டெம்பரரியா பண்ண வேண்டியது; அப்புறம் அவஸ்தைப்பட வேண்டியது. ஒரு பத்து நிமிஷம் இருந்து பார்த்திருக்க வேண்டாமா? கரண்ட் வந்ததும் ரெண்டு பேரும் பெருச்சாளி வளைக்குள்ளே போறதுமாதிரியில்லே போயிட்டாங்க? சே!”

 

அடேய் வேணு!


எத்தனை சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி நடந்தாலும் உன்னைப் பிடிச்சிருக்கிற சனி மட்டும் ஒரு அங்குலம்கூட இடம்பெயராதுடா! இனிமே இந்த மாதிரி பொதுச்சேவையெல்லாம் பண்ணுவே நீயி…? பண்ணுவே…?

Naresh Kumar

unread,
Jun 16, 2014, 10:35:11 PM6/16/14
to பண்புடன்
சான்சே இல்ல வேணுஜி... பட்டாசு!

தமிழ்ப் பயணி

unread,
Jun 16, 2014, 10:38:16 PM6/16/14
to பண்புடன்
எத்தனை சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி நடந்தாலும் உன்னைப் பிடிச்சிருக்கிற சனி மட்டும் ஒரு அங்குலம்கூட இடம்பெயராதுடா! இனிமே இந்த மாதிரி பொதுச்சேவையெல்லாம் பண்ணுவே நீயி…? பண்ணுவே…?

 விழுந்து விழுந்து சிரிக்க ​வைக்கிறீர்கள்.. :) :)


2014-06-17 7:58 GMT+05:30 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

வாயை மூடி சும்மா இருடா!

 

இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் அயர்ந்து உறங்க முற்படுகிறபோதெல்லாம் தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்கிற மின்விசிறி திடீரென்று நெய்வேலி தொழிலாளார்கள் போல வேலை நிறுத்தம் செய்து விடுகிறது. கரண்ட் போச்சா?



Arumbanavan A

unread,
Jun 17, 2014, 12:17:53 AM6/17/14
to பண்புடன்
வேணு ஜி இன்னும் வேணும் ஜி...

செம்ம....... 


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Srimoorthy S

unread,
Jun 17, 2014, 12:28:20 AM6/17/14
to panb...@googlegroups.com

ஹிஹிஹி....

எத்தனை சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி நடந்தாலும் உன்னைப் பிடிச்சிருக்கிற சனி மட்டும் ஒரு அங்குலம்கூட இடம்பெயராதுடா! இனிமே இந்த மாதிரி பொதுச்சேவையெல்லாம் பண்ணுவே நீயி…? பண்ணுவே…?

--

Srimoorthy S

unread,
Jun 17, 2014, 12:32:42 AM6/17/14
to panb...@googlegroups.com

இந்த மாதிரி லொள்ளு பேசுறவங்களை எப்படி டீல் பண்றதுன்னு பல காலமா தெரியாம இருந்தேன். அருமையான ஒரு வழியை வேணுஜி கொடுத்திருந்தார். எனக்கென்ன போச்சுன்னு சும்மா இருக்கணும் ;)

Ahamed Zubair A

unread,
Jun 17, 2014, 12:49:18 AM6/17/14
to பண்புடன்
வேணுஜி...

த கோல்டன் டேஸ் ரைட்டப் ஸ்டைல்...

கொஞ்ச நாள் ஃபார்ம் அவுட்டா இருந்தீங்க... இஞ்சூரி ;)

இப்ப பர்பிள் பேட்ச் கிடைச்சிருக்கு... விளாசுங்க ;)))


2014-06-17 6:28 GMT+04:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

--

Haja Muhiyadeen

unread,
Jun 17, 2014, 1:05:29 AM6/17/14
to பண்புடன்

“என்னாச்சு அங்கிள்? எப்போ கரண்ட் வரும்?”

 

“ரெண்டு மணி நேரமாகுமாம்!” என்னை ‘அங்கிள்’ என்று சொன்ன எரிச்சலில் கூட ஒரு மணி நேரத்தைச் சேர்த்து அந்த அம்மணியைக் கடுப்பேற்றினேன்.

 



ஹா ஹா ஹா  அனுஷ்கா வீட்ல மட்டும் பீச புடுங்குங்க வேணுஜி


மஞ்சூர் ராசா

unread,
Jun 17, 2014, 3:00:04 AM6/17/14
to பண்புடன்
வேணு, அட்டகாசம்.   ரொம்ப நாளுக்கப்புறம் எல்லாம் மறந்து லயித்து சிரித்தேன்.

R.VENUGOPALAN

unread,
Jun 29, 2014, 11:40:09 AM6/29/14
to பண்புடன்

பல்புகள் பலவிதம்…!

 

கொளுத்தும் வெயிலில், ஸ்டெர்லிங் சாலை சந்திப்பில், பச்சை விளக்கின் கருணைக்காக நானும் என் வாகனமும் காத்திருக்கையில், உறக்கத்தில் உளறும் குழந்தையைப் போல எனது கைபேசி சிணுங்கியது. எடுக்கலாமா என்று யோசிக்க விடாமல் பச்சைவிளக்கு பளிச்சிட, வண்டியை முடுக்கி விரைந்து சென்று கல்லூரி சாலையின் ஒரு ஓரத்தில் நிறுத்துவதற்குள் அலைபேசி அடங்கி விட்டிருந்தது. எடுத்துப் பார்த்தவுடன் புதிய நம்பரிலிருந்து அழைப்பு வந்திருப்பது புரியவே, திருப்பி அழைத்தேன்.

 

“ஹலோ! ஆர்.வேணுகோபாலன் சாரா?”

 

“ஆமா சார், நீங்க யாருன்னு…..?”

 

“சார், என் பேரு ******செல்வன் சார்! இப்ப ரீஸண்ட்டா ‘வ****’னு ஒரு படம் வந்திச்சே, அதுலே வொர்க் பண்ணியிருக்கேன் சார்! ஒரு புதுப்படத்தோட கதையிலே வொர்க் பண்ணிட்டிருக்கேன். அது விஷயமா பேசலாமா சார்?”

 

“சார், நான் டிரைவிங்லே இருக்கேன். எக்மோர்லே ஒரு ஆடிட்டரைப் பார்க்கப் போயிட்டிருக்கேன். ஒரு மணி நேரம் கழிச்சு நானே கூப்பிடலாமா?”

 

“சரி சார்!”

 

எனக்குத் தெரியும். ஒரு மணி நேரமென்றால் அறுபத்தியோராவது நிமிடமானாலே மீண்டும் அழைப்பார்கள் என்று. வேலையிருந்தால் திரைப்படத் துறைக்காரர்களும் ஊடகத்துறைக்காரர்களும் அப்படித்தான் ’அன்புத்தொல்லை’ கொடுப்பார்கள். வேலை முடிந்தால் நாம்தான் விரல்ரேகை தேயுமளவுக்குத் திரும்பத் திரும்ப அழைக்க வேண்டும். அப்படியே கூப்பிட்டாலும்….?

 

“சார், ஈவ்னிங் ஏழு மணிக்குக் கூப்பிடறீங்களா? சார் ஒரு முக்கியமான டிஸ்கஷன்லே இருக்காரு….”

 

“உங்க ட்ராஃப்ட்டை எடுத்துக்கிட்டுத்தான் ப்ரொட்யூஸர்கிட்டே பேசப் போயிருக்காருங்க சார். வந்தவுடன் பேசறேன்னு சொல்லச் சொன்னாரு..”

 

“நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தற்சமயம்……….”

 

நான்கு திரைப்படங்கள், இரண்டு தொலைக்காட்சித் தொடர், இரண்டு பண்பலை வானொலி நிகழ்ச்சிகள், ஒரு குத்துப்பாட்டு என்று வந்த வாய்ப்புகளெல்லாம் இப்படித்தான் கனவுகளில் வருகிற சினிமா நடிகைகளைப் போல தற்காலிகமான கிளுகிளுப்பை அளித்துவிட்டு விடிந்தவுடன் எனது மடமையைப் பரிகாசம் செய்திருக்கின்றன. தி மாரல் ஆஃப் தி ஸ்டோரி புரிந்து விட்டதால், இப்பொழுதெல்லாம் யார் அழைத்தாலும் நிறைய அவநம்பிக்கையுடனும் கொஞ்சம் அலட்சியத்துடனும் தான் அவர்களுடன் பேசுவது. ஹும், இதற்குமேல் எதையாவது சொன்னால், ‘ச்சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொல்வது போலிருக்கும் என்பதால், விட்டு விடலாம்.

 

எதிர்பார்த்தது போலவே, ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் அந்த ஏதோசெல்வனிடமிருந்து அழைப்பு வந்தது.

 

“சொல்லுங்க சார்!”

 

“அதான் சார், ஒரு காமெடி சப்ஜெக்ட்டு, நீங்க நல்லா எழுதுவீங்கன்னு சொன்னாங்க. டிஸ்கஷனுக்கு வர முடியுமா சார்?”

 

“யாரு சார் புரொட்யூஸர்?”

 

“அது பிரச்சினையில்லே சார்! (அடப்பாவி!) ரெண்டு மூணு பேரு பைப்லனிலே இருக்காங்க. நீங்க எந்தெந்தப் படங்கள்ளே வொர்க் பண்ணியிருக்கீங்க சார்?”

 

சொன்னேன்.

 

“மன்னார் வளைகுடா கேட்ட மாதிரியிருக்கு சார். மத்த படங்களைப் பத்தி நான் கேள்விப்படலை…”

 

“கொஞ்ச நாளா நானே கேள்விப்படலை சார்,” என்றேன் நான்.

 

”எப்ப சார் ஃப்ரீயா இருப்பீங்க?”

 

“ஜூலை முடியறவரைக்கும் கொஞ்சம் டைட் சார்! ஆகஸ்ட்டுலே மூணு மாசம் திருநெல்வேலி போறேன். கொஞ்சம் கஷ்டம்தான் சார்.”

 

“ஓ! அப்படியா?” என்று நிறுத்தியவர், “வேறே காமெடி எழுதுறவங்க யாராவது தெரியுமா சார்?” என்று கேட்டார்.

 

“இல்லை சார்,” என்றேன். யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்பது என் கொள்கையா என்ன? ஏற்கனவே, ஒரு இயக்குனர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு நல்ல பதிவரின் பெயரைப் பரிந்துரை செய்து, இப்போது ஈரோட்டுக்குப் போனால் காளைமாட்டுச்சிலை சந்திப்பில் வைத்து என்னைக் கழுவேற்றுகிற அளவுக்குக் கடுப்பிலிருக்கிறார் அவர். இப்போதுகூட அந்த இயக்குனர் தனது சம்பாஷணையின்போது ‘எவ்வளவு கேட்பீங்க?’ என்றோ ‘எங்க பட்ஜெட் இவ்வளவு சார்’ என்றோ சொல்லவில்லை என்பதையும் கவனித்துத் தொலைத்திருந்தேன். அதுதான் சினிமா உலகம்.

 

அத்தோடு பேச்சு முடிந்தது. விவகாரம் மட்டும், குப்பைலாரி போன பிறகும் தொடர்ந்து வீசும் துர்நாற்றம் போல மேலும் சிறிது நேரம் நீடித்தது. இன்னொரு அழைப்பு; இம்முறை ‘பாக்யா’ பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியரிடமிருந்து.

 

“என்னண்ணா, நம்ம ஏதோசெல்வன் கூப்பிட்டாராம்; மாட்டேன்னுட்டீங்களாமே? உங்களைப் பத்தி நான்தான் சொன்னேண்ணா.” (உன்னையெல்லாம் பாக்யராஜ் சார் தினமும் திட்டினதுலே தப்பேயில்லைடா.)

 

”சும்மாயிருங்க தம்பி, என் கையிலேருந்து காசுபோட்டு பெட்ரோல் அடிக்கிறதுதான் மிச்சம். இதெல்லாம் வேணாம்னு நான் ஒதுங்கிட்டேனில்லே?”

 

”பணத்தைப் பத்தி யோசிக்கிறீங்களாண்ணா?”

 

“பின்னே என்ன பால்கே விருது கிடைக்குமான்னா யோசிக்கறேன்?”

 

”எல்லாம் பேசிக்கலாம்ணா! ஒரு வாட்டி போயிட்டு வாங்க.”

 

’சரி’ – சில நிமிட சம்பாஷணைக்குப் பிறகு சம்மதித்தேன். மயிரைக்கட்டி மலையை இழுக்கிற கதைதானே? பார்த்து விடலாம். சரியாக, மாலை முன்று மணிக்கு ஏதோசெல்வனிடமிருந்து மீண்டும் அழைப்பு.

 

“சார், ஒண்ணும் யோசிக்காதீங்க சார்! ஒரு புது யூனிட் சார்! எல்லாருமே ஃப்ரெஷ்! (நாசமாப்போச்சு; அப்ப அக்மார்க் பட்டைநாமம் கியாரண்டி!) ஒரு பெரிய ப்ரேக்-க்குக்காக இந்தப் படத்தைப் பண்ணலாம் சார்.”

 

“சரி, எப்போ வரணும்? எங்கே?”

 

“சாலிகிராமம் சார், பாலுமகேந்திரா பட்டறை தெரியுமா சார்?”

 

“தெரியும்.”

 

“அங்கே வந்து போன் பண்ணுங்க. என் ஆளு வந்து கரெக்டாக் கூட்டிக்கிட்டு வருவாரு! ஒரு அரை அவர்லே வந்திடுவீங்களா?”

 

“என்னது, இப்பவா?”

 

“ஆமா சார், அசோசியேட்டு, கேமிராமேன் எல்லாரும் வந்திட்டாங்க சார்.”

 

“நான் ஓட்டுற வேகத்துக்கு அரைமணியிலே எல்லாம் வர முடியாது. வந்ததும் கூப்பிடறேன்.”

 

சரி, தப்பித்தவறி இந்த வாய்ப்பாவது கொஞ்சம் உருப்படியாக இருந்து தொலைத்தால் வேண்டாமென்றா இருக்கிறது? போய்த்தான் பார்ப்போமே! செருப்பால் அடித்தாலும் திருந்தாத என் புத்தி நப்பாசையில் உசுப்பேற்றவே வண்டியை சாலிகிராமத்தை நோக்கி முடுக்கினேன். பா.ம.பட்டறையருகே வந்து போன் செய்து நான் தம்மடித்துக் கொண்டிருந்த இடத்தைச் சொன்னதும், ஐந்து நிமிடம் கழித்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஜெர்கின்ஸ் அணிந்துகொண்டு, சாகும்வரை சவரம் செய்ய மாட்டேன் என்று சபதம் மேற்கொண்டவர் போலொருவர் என்னை அணுகினார்.

 

“நீங்கதான் ரைட்டரா ஸார்?”

 

“ம்.. நீங்க?”

 

“அசோசியேட் டைரக்டர். போகலாமா?” என்று உரிமையோடு என் வண்டிக்குப் பின்னால் அமர்ந்துகொள்ள, ‘உலகத்திலிருந்தே dis-associate ஆனவர் போலிருக்கிற இவர் associate-டா?’ என்று அங்கலாய்த்தபடியே, திரும்பி வருவது எப்படி என்பது மறந்து போகிற அளவுக்கு ஏகப்பட்ட சந்துபொந்துகளுக்குள் எனது வண்டியைப் போகச்சொல்லி, ’இதற்குமேல் ஓட்டினால் கொன்னுடுவேன்’ என்பதுபோல ஒரு முட்டுச்சந்திலிருந்த பிள்ளையார்கோவிலுக்கு முன்பு நிறுத்தச் சொன்னார். பிரசவ வேதனையுடன் வண்டியை நிறுத்திவிட்டு, அவருக்குப் பின்னால் சென்று ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்று ரஜினியின் படத்தையும் பொன்மொழியையும் கதவில் ஒட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்தேன்.

 

டிவியில் கால்பந்து ஹைலைட்ஸ் ஓடிக்கொண்டிருக்க, சட்டையணிந்து டிரவுசர் அணியாத ஒருவரும், சட்டையில்லாமல் ஜீன்ஸுடன் ஒருவரும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவர் கேமிராமேன்; மற்றவர் டைரக்டர். ஞொய்யாலே!

 

பரஸ்பர அறிமுகம் முடிந்தது. (ரொம்ப அவசியம்!)

 

“ஆரம்பிக்கலாமா?” வாட்சைப் பார்த்தபடி கேட்டேன்.

 

“டீ, காப்பி…?”

 

“வேணாம். அப்புறம் பார்த்துக்கலாம்.” (டீக்கும் பஜ்ஜிக்கும் என்கிட்டேயிருந்தே காசுபறிக்க சதியா? அஸ்க்கு புஸ்க்கு!) 

     

எவ்வளவுதான் சோபா நாற்காலி இருந்தாலும், சினிமாக்கதை டிஸ்கஷன் என்றால், தரையில் மெத்தையோ அல்லது ஒரு தடிமனான ஜமுக்காளமோ விரித்து, இழவுவீடு போல கால்களை நீட்டிக்கொண்டுதான் நடக்கும். இங்கும் அப்படித்தான். காலை நீட்டியமர்ந்ததும், மின்விசிறியின் காற்றில் என்னையறியாமல் கொட்டாவி வந்தது. அடக்கு, அடக்கு!

     

”கதை எக்மோர் ஸ்டேஷன்லே ஓப்பன் ஆகுது சார்!”

     

”ஓ.கே!”

     

”ஒரு முப்பத்தஞ்சு நாப்பது வயசுக்காரர் ஒருத்தர் ஸ்டேஷனிலேருந்து வெளியே வர்றாரு! எதுத்தாப்புலே இருக்கிற சந்துக்குள்ளே நுழையறாரு! பக்கத்துலே இருக்கிற ஒரு பில்டிங்குலே ஒரு அரசியல்வாதியோட ஃப்ளெக்ஸை வைச்சிருக்காங்க. அதைப் பார்த்ததும் அவரு கண்ணு சிவக்குது. ஜூம் பண்ணி, அவரோட முகத்தை டைட்-க்ளோஸ் அப்புலே காட்டறோம் சார். மீசை துடிக்குது.”

     

”ஓ!” இந்தக் கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!

     

”அப்படியே ஒரு லாட்ஜுக்குள்ளே போறாரு! அங்கே சாமிப்படத்தோட அந்த அரசியல்வாதியோட படமும் மாட்டியிருக்கு.”

     

”என்…னது…?” இதையும் இதுக்கு முன்னாடி….

     

”கட் பண்ணிட்டு இன்னொரு லாட்ஜைக் காட்டறோம்.அங்கே நம்ம ஆளு பணத்தைக் கட்டிட்டு ரூம் எடுக்கிறாரு! ரூமுக்குள்ளே போய் ஜன்னல்வழியாப் பார்க்கிறாரு! ரோட்டுலே அந்த அரசியல்வாதியோட கட்-அவுட்டு!”

     

”ஸ்டாப்!” கையமர்த்தினேன். “இந்தக் கதையிலே ஒரு மாலிலே எஸ்கலேட்டர்லே போற சீன் வருதா?”

     

”சார்…?” டைரக்டர் முகத்தில் ஆச்சரியம். “ஆமா சார்… உங்களுக்கு எப்படி?”

     

”ஆட்டோக்காரர்கூட சண்டை போடற சீன் இருக்கா?”

     

”இல்லை சார், டாக்ஸி! ஆனா, இதெல்லாம் உங்களுக்கு….?”

     

”லாட்ஜுலே வேலை பார்க்கிற பொண்ணு சினிமாப்பைத்தியமா?”

     

”ஆ…ஆமா….ஆமா சார்… இந்தக் கதையை நீங்க இதுக்கு முன்னாடி கேட்டிருக்கீங்களா?”

     

”கேட்டதில்லை சார்,” சிரித்தேன் நான். “இந்தக் கதையை எழுதினதே நான்தான். இது நான் எழுதின ‘பட்டணத்தில் பூதலிங்கம்’ன்னுற நாவல். இன்னும் பிரிண்ட் ஆகலை. ஆனா நிறைய பேருக்குச் சொல்லியிருக்கேன். சுத்தி வளைச்சு அது என்கிட்டேயே வந்திருச்சா?”

     

கேமிராமேன் என்னையும் அந்த டைரக்டரையும் பார்வையாலேயே ஜூம்-இன், ஜூம்-அவுட் செய்து கொண்டிருந்தார்.

     

”எங்கேயோ தப்பு நடந்திருக்கு சார்!” என்றார் டைரக்டர்.

     

”எங்கேயோ நடக்கலை; என் தப்புத்தான்,” சிரித்தேன் நான். “ஒரு காமெடி ப்ளாட் சொல்லுங்களேன்னு கேட்டாங்கன்னு சில பேரை நம்பி இந்தக் கதையைச் சொன்னேன் பாருங்க.”

     

”ஒரு நிமிஷம்!” என்ற டைரக்டர் அந்தக் கேமிராமேனை அழைத்தார். “வாங்கஜீ, ஒரு விஷயம் பேசணும்.”

     

கொஞ்ச நேரத்துக்கு அந்த அறையில் நானும், மின்விசிறியின் சத்தமும் மட்டும் இருக்க, சில நிமிடங்கள் கழித்து இருவரும் மீண்டும் வந்தனர்.

     

”வேணுகோபாலன் சார்! இது ஆக்சுவலி என் கதையில்லை…!” டைரக்டர் சமாளிக்க முற்பட்டார். “யாரோ ஒருத்தர் சொன்னது. அவர் கதைன்னு நம்பி….”

     

”இது என் கதை!” என்றேன் நான். “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே இதுக்கு டைரக்டர் பாக்யராஜ் அணிந்துரை எழுதிக்கொடுத்திருக்காரு. பப்ளிஷர் கொஞ்சம் கஷ்டதசையிலே இருக்கிறதுனாலே புத்தகம் வரலை. அதுக்காக இப்படியா?”

     

இன்னும் இரண்டு நொடிகள் இருந்தால் நிச்சயம் எனது நிஜ இயல்பு வெளிப்பட்டு இருவரையும் வசைபாடுவது உறுதியென்பது மட்டும் புரிந்தது. எழுந்து கொண்டேன்.

 

      ”லேட்டாச்சு, நான் கிளம்பறேன்!”

     

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் என் பெயரை சிபாரிசு செய்த அந்தப் புண்ணியவானுக்கு ஒரு போன் போட்டு அறம்பாடலாமா என்று சின்னதாய் ஒரு யோசனை. அடுத்த கணமே, ‘அவன் என்ன செய்வான் பாவம்?’

     

அதற்காக, சும்மாவா இருப்பது?

     

சனிக்கிழமையன்று பாக்யராஜ் சாரை போனில் அழைத்து, ஆதியோடந்தமாக விஷயத்தைச் சொன்னேன்.

     

”வேணுசார்…. மேக்-கப் போட்டுக்கிட்டிருக்கேன். என்னாலே சிரிக்கக்கூட முடியலே சார்!”

     

மறுமுனையில் பாக்யராஜ் சார் சிரிக்கச் சிரிக்க, நான் அசடுவழிந்தபடி நின்று கொண்டிருந்தேன். அவரது சிரிப்பின் பொருள் புரிந்தது. இந்த உலகத்தை நான் கொஞ்சம்கூடப் புரிந்து கொள்ளவில்லை.

Srimoorthy S

unread,
Jun 29, 2014, 2:54:15 PM6/29/14
to பண்புடன்

சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நீர் சிரித்துக் கொண்டே அழுகின்றீர்...

--

Omprakash

unread,
Jun 30, 2014, 2:00:01 AM6/30/14
to panb...@googlegroups.com
//“இந்தக் கதையை எழுதினதே நான்தான். இது நான் எழுதின ‘பட்டணத்தில் பூதலிங்கம்’ன்னுற நாவல். இன்னும் பிரிண்ட் ஆகலை. ஆனா நிறைய பேருக்குச் சொல்லியிருக்கேன். சுத்தி வளைச்சு அது என்கிட்டேயே வந்திருச்சா?”
கேமிராமேன் என்னையும் அந்த டைரக்டரையும் பார்வையாலேயே ஜூம்-இன், ஜூம்-அவுட் செய்து கொண்டிருந்தார்.

//

முடியல சார்... வயிறு வலிக்குது...









--
தெய்வம் நீ என் றுணர்..

Asif Meeran

unread,
Jun 30, 2014, 1:06:02 PM6/30/14
to panb...@googlegroups.com
சினிமா என்ற கனவுலகம் இயங்கும் நிலையை எளிமையாகவும் உங்களுக்கே உரிய நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறீர்கள் வேணுஜி!! உங்களுக்கான காலம் உதயமாகட்டும் என் முன்கூட்டிய வாழ்த்துகள்!!

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Jul 2, 2014, 11:32:17 AM7/2/14
to panb...@googlegroups.com

சினிமா என்றதும் கஸாலி ஜி தான் நினைவுக்கு வருகிறார்...என்னவாயிற்று அவரின் திரைப்படம்...

Asif Meeran

unread,
Jul 3, 2014, 3:35:20 AM7/3/14
to panb...@googlegroups.com
சினிமா என்றதும் கஸாலி ஜி தான் நினைவுக்கு வருகிறார்...என்னவாயிற்று அவரின் திரைப்படம்...

இன்னமும் இரண்டு லட்சம் இருந்தால் முடிந்து விடுமென்று சொல்லியிருந்தார்
அதுவே பின்னர் 5 லட்சமாயிற்று. இப்போது சமீபத்தில் அவரது சகோதரரைச் சந்தித்தேன்
மேலும் பத்து லட்சம் தேவைப்படுகிறதென்றார்.

சினிமாவுலகம் ஒரு புதைமணல்..
வெற்றியை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்
அதற்குப்பின்னால் இருக்கும் பல அவமானங்கள், துயரங்கள் நமக்குத் தெரிவதில்லை
அதையும் மீறி வேணு ஐயாவும் கஸ்ஸாலியும் வெற்றி பெற வாழ்த்துவோம்

மஞ்சூர் ராசா

unread,
Jul 3, 2014, 4:41:42 AM7/3/14
to பண்புடன்
வேணு அய்யாவின் கதை வேறு.  அவரது திறமைக்கு தான் வாய்ப்பு கிடைக்கவில்லை.  ஆனால் கஸாலி தன் வாழ்நாள் உழைப்பின் சம்பாதனை அனைத்தையும் சினிமாவுக்காக போட்டுவிட்டார்.  அது மட்டுமல்லாது அவரது உறவுகளிடமும் ஏராளமாக பணம் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார்.  அவரை நினைத்தால் மிகவும் வருத்தமும் சங்கடமும் ஏற்படுகிறது.


--

R.VENUGOPALAN

unread,
Jul 3, 2014, 6:40:59 AM7/3/14
to பண்புடன்
2014-07-03 13:05 GMT+05:30 Asif Meeran <asifme...@gmail.com>:
சினிமா என்றதும் கஸாலி ஜி தான் நினைவுக்கு வருகிறார்...என்னவாயிற்று அவரின் திரைப்படம்...

இன்னமும் இரண்டு லட்சம் இருந்தால் முடிந்து விடுமென்று சொல்லியிருந்தார்
அதுவே பின்னர் 5 லட்சமாயிற்று. இப்போது சமீபத்தில் அவரது சகோதரரைச் சந்தித்தேன்
மேலும் பத்து லட்சம் தேவைப்படுகிறதென்றார்.


அதே அதே!  இன்றைக்கு இப்படி ஐந்து லட்சத்துக்காகவும் பத்து லட்சத்துக்காகவும் முடிக்கப்படாமல் நிற்கிற படங்கள் அனேகம். வாய்ப்பு கிடைக்கும்வரை சுத்தபத்தமாக இருந்துவிட்டு, தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்ததும் சும்மானாச்சும் ஒரு பட்ஜெட் சொல்லி அட்வான்ஸ் வாங்கிவிட்டு, பின்னாளில் அவரது கறவைப்பசு வரைக்கும் விற்கச் செய்கிற சில புதுமுக இயக்குனர்களும் காரணம். ( என் விஷயத்தில் இரண்டு படங்களில் அதுதான் நிலை) 

சினிமாவுலகம் ஒரு புதைமணல்..
வெற்றியை மட்டுமே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்
அதற்குப்பின்னால் இருக்கும் பல அவமானங்கள், துயரங்கள் நமக்குத் தெரிவதில்லை
அதையும் மீறி வேணு ஐயாவும் கஸ்ஸாலியும் வெற்றி பெற வாழ்த்துவோம்

அண்ணாச்சி, இதுவரை எனக்கு வந்த வாய்ப்புகள் அனைத்துமே தானே வந்தவை தான். கே.பாக்யராஜ் புதுப்படம் இயக்கப்போகிறார் என்று சொன்னபோதுகூட ‘ நானும் வரட்டுமா?’ என்று கேட்கவில்லை. அவரது அலுவலகத்தில் தினசரி வருகிறவர்களில் நாலில் ஒரு பங்கைப் பரிச்சயம் செய்து கொண்டிருந்தாலும் இதற்குள் எங்காவது ஒட்டியிருப்பேன். ஆனால், இது எனது கோப்பைத் தேனீர் இல்லை என்பது நன்றாகத் தெரியும். மேலும் என் உடம்பு இருக்கிற இருப்புக்கு என்னால் வெளிப்புறப்படப்பிடிப்புக்கெல்லாம் போக முடியாது. வெறும் வசனம் மட்டும் எழுதிக்கொடு என்று யாராவது கேட்டால் சரி. 

ஏதோ ஆசைப்பட்டதற்கு ஒரு புத்தகம் வெளியாகி விட்டது. அது போதும். மற்றவையெல்லாம் நம்மூரில் சொல்லுவது போல ‘பொழச்சுக்கிடந்தாப் பார்க்கலாம்.”

;-) 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
Jul 5, 2014, 3:44:39 AM7/5/14
to பண்புடன்

அவள் பெயர் வடிவழகி


நான் பிறந்த கிராமத்துக்கு வடிவீஸ்வரம் என்று பெயர். காரணம், அங்கிருக்கும் கோவிலில் அருள்பாலிக்கிற வடிவீஸ்வரர் எனும் சிவபெருமான். அம்மனை அழகம்மன் என்றும் வடிவாம்பாள் என்றும் அழைப்பார்கள். எனக்கு வடிவழகி என்று அழைப்பதே பிடிக்கும். பாட்டியின் விரலைப் பற்றிக்கொண்டு கோவிலுக்குப் போனபோது, இரண்டடி உயரத்தில், மெனக்கெட்டு செய்யப்பட்ட சந்தனக்காப்பில் சற்றே மிகையாகப் புன்னகைத்தவாறே நின்றிருந்த அம்மனைப் பார்த்ததும், தெருவில் சிரித்தபடி பாண்டி விளையாடுகிற சிறுமிகளில் ஒருத்தியைப் பார்ப்பது போன்ற பரிச்சய உணர்வே ஏற்பட்டது.


எல்லா தெய்வச்சிலைகளும் பயபக்தியை வரவழைத்து விடுவதில்லை. என்னதான் படுபாந்தமாகக் கைகூப்பி நின்றிருந்தாலும் சுசீந்திரம் ஆலயத்திலிருக்கிற நெடிதுயர்ந்த அனுமாரைப் பார்க்கிறபோதெல்லாம் பக்திக்கு முன்பு சற்று பயம்தான் ஏற்படும். கன்னியாகுமரி பகவதி அம்மனும் பாவாடை தாவணியில், மூக்குத்தி பளிச்சிட ‘வந்திட்டியா, வா’ என்று ஒரு தாயின் வாஞ்சையுடன் அழைப்பதுபோலத் தோன்றினாலும், அவளது காலடியில் மிதிபட்டுக் கொண்டிருக்கிற வாணாசுரனின் தலையைப் பார்க்கிறபோது, இருட்டும்வரை தெருவில் விளையாடிவிட்டு வீடு திரும்பும்போது அம்மாவைப் பார்ப்பதுபோன்ற ஒருவிதமான கிலி ஏற்படும். அதுவே கிருஷ்ணன்கோவிலில் ஒன்றரையடியில் குழந்தையுருவத்தில் கையில் வெண்ணையுடன் குறும்பாகச் சிரித்துக் கொண்டிருக்கிற கண்ணனைப் பார்த்தால் ‘நீ நம்ம ஆளு’ என்று படுசினேகமாக அந்தச் சிலையையே பார்த்துக்கொண்டு நிற்கத் தோன்றும்.


’வடிவழகி’ என்று நான் பெயரிட்டதை எள்ளியவர்கள் உண்டு. எல்லாருக்கும் எளிதாய்ப் புரிகிற மாதிரி என் பக்தி எப்போதுமே இருந்ததில்லை. இந்த வினோதமான முரண்டு இப்போதும் தொடர்கிறது. அவசரமாக பஸ்ஸோ, ரயிலோ பிடிக்க வேண்டிய சூழலில், வழியிலிருக்கிற கோவிலைப் பார்த்து சல்யூட் அடித்துவிட்டு ‘குட் மார்னிங் புள்ளையாரே’ என்று இன்றும் விரைகிறேன்.


அழகம்மன் கோவில் எனது பால்ய பருவத்தின் ஒரு முக்கிய அங்கம் வகித்தது. ஆடிமாதங்களில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நவகிரஹங்களுக்கு முன்பு என்னை மையத்தில் உட்காரவைத்து சிறுமிகள் கோலாட்டம் போட்டு ஆடுவார்கள். அந்த கோபிகைகளுக்குக் கிடைத்த ரெடிமேட் கண்ணன். பொருத்தமாக வேணு என்ற பெயர் ஆதலால், குழலூதுகிற கண்ணனாகவே வரிக்கப்பட்டு விட்டேன். (இப்போதும் வெண்குழல் ஊதுகிற பழக்கமுண்டு)


அழகம்மன் கோவில் சூரசம்ஹாரமும் மிகவும் பிரசித்தம். கருப்பு,சிவப்பு உடையில் சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மன் ஆகியோரின் மூன்று முகங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி, தேரடி வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். குதிரை வாகனத்தில், நுனியில் எலுமிச்சை குத்திய கூரிய வேலுடன் முருகப்பெருமான் சூரனைத் துரத்திக்கொண்டு வருவார். நாதஸ்வரம், தவில் இசைக்கப்படும்போது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெற்றிலை பாக்கு பழத்துடன் வந்து முருகனை வழிபடுவார்கள். செண்டை முழங்கத்தொடங்கியதும் தூரத்தில் நிற்கிற சூரன் போரை மீண்டும் தொடங்குவார். கொஞ்சம் நேரம் சூரனின் லந்தையெல்லாம் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கும் முருகப்பெருமான் திடீரென்று சூரனை நோக்கி வீராவேசத்துடன் முன்னேற, கூட்டமும் உற்சாகமாகப் பின்னால் செல்லும். கடைசியில் தேரடியருகே இருந்த வெட்டவெளியில் சூரனின் உடலை முருகனின் வேல் பதம்பார்க்க, உள்ளேயிருக்கிற பானையுடைந்து சிவப்பு நிறத்தில் தண்ணீர் வெளியேறும். அடுத்த ஐந்து நிமிடத்தில் சூரனின் உடல் கொளுத்தப்படவும், முருகப்பெருமான் பழையாற்றில் நீராடிவிட்டு பெவிலியனுக்குத் திரும்புவார்.


  அத்தகைய வைபவங்கள் அவசியமா, அவசியமற்றதா என்ற விவாதங்களுக்குள் மூக்கை நுழைக்காமல், அது எல்லாரும் சேர்ந்து கொண்டாடுகிற ஒரு நிகழ்வாக, பெரியவர்களும் சிறுவர் சிறுமிகளுக்கு இணையாகக் குதூகலிக்கிற ஒரு நாளாக இருந்தது என்பதுதான் முக்கியமானது. ஜவ்வு மிட்டாய், இனிப்புச்சேவு, பலூன், காற்றாடி, யோகப்ரைஸ், மாங்காய்க்கீற்று, உப்பு நெல்லிக்காய், கொய்யாப்பழம், கழிச்சி கலர், கடலை மிட்டாய், இஞ்சி மரப்பா சாப்பிடுவதற்கு வழக்கமாகக் கிடைப்பதைவிட உபரியாக நாலணா அதிகமாகக் கிடைக்கும். அதே சமயம், ‘சமர்த்தா இல்லேன்னா சாமி வேலாலே குத்திடுவார்’ என்று சட்டாம்பிள்ளைகளை அவரவர் அம்மாக்கள் அடக்குவதற்கும் வருடத்தில் அந்த ஒரு நாள் ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது. கார்த்திகை மாதம் நிகழும் சொக்கப்பனையும் அப்படியே!


ஆனால், மாசி மாதம் நடைபெறும் திருவிழாவுக்கு ஈடு இணையில்லை. பத்து நாட்களும் கிராமமே விழாக்கோலம் பூண்டு, ஒவ்வொரு வீட்டு வாசலிலிலும் போட்டி போட்டுக்கொண்டு பெரிய பெரிய கோலங்களாகப் போட்டுத் தள்ளுவார்கள். காலையிலும் இரவிலும் தெய்வங்கள் திருவீதி உலா வருவார்கள். வாகனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும். பைலட் வாகனங்கள் போல மூஞ்சுறு வாகனத்தில் பிள்ளையார் ஜம்மென்று நின்றபடி முதலில் வருவார். அதைத் தொடர்ந்து மயில்வாகனத்தில் முருகன், கருட வாகனத்தில் விஷ்ணு, ரிஷப வாகனத்தில் வடிவீஸ்வரரும் வடிவழகியும் வருவார்கள். அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தும் பல தெய்வங்கள் அவரவர் வாகனங்களில் வந்துசேர ஊர்வலம் களைகட்டும். ஏழாவது நாளன்று, அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் ஊர்வலம் வருவதைக் காண, உண்மையிலேயே கண்கோடி வேண்டும். எட்டாவது நாளன்று நடராஜப்பெருமான் சப்பரத்தில் ஆடியாடிக்கொண்டு வருவதுதான் ஹைலைட்.  ‘தில்லையம்பலம் திருச்சிற்றம்பலம்’ என்று எல்லாரும் கோஷமிட, அலங்கரிக்கப்பட்ட பூமாலைகள் ஆட ஆட, இடதுபதம் தூக்கியபடி நடராஜர் வருவதைப் பார்க்கிறபோது ‘நாமும் கொஞ்சம் ஆடினாலென்ன?’ என்று தோன்றும். ஒன்பதாவது நாளன்று தேர்த்திருவிழா. அரை டிக்கெட்டுகளுக்கு பிள்ளையார் தேரை மட்டும்தான் இழுக்க அனுமதி. பெரிய தேரை ஆரோக்கியமான இளைஞர்களும், பெரியவர்களும், நடுவில் கழண்டு கொள்ள வசதியாக தும்புப்பகுதியில் ஆஸ்துமா, ரத்த அழுத்தம், நீரிழிவு, பணக்கொழுப்பு ஆகிய உபாதைகளுடையவர்கள் இழுப்பார்கள். இரண்டு மணி நேரத்துக்குள்ளாக இரண்டு தேரும் நிலைக்கு வந்து நின்று விடும். இறுதி நாளான பத்தாம் நாளன்று திருக்கல்யாணம். இரவில் வெளியூரிலிருந்து வந்த சாமிகளெல்லாம் ‘டாட்டா பைபை’ சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவார்கள். பத்து நாட்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்; குழந்தைகள் முதல் கிழடுகள்வரை ஒவ்வொரு தரப்பினருக்கும் ஏதாவது ஈர்ப்பான விஷயம் இல்லாமல் போகாது. திருவிழா முடிந்து மறுநாள் கோவிலுக்குப் போகும்போது, பந்தலிலிருந்த ஓலைகள் நீக்கப்பட்டு ஒரு பிரம்மாண்டமான மூங்கில்கூடு நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். பத்து நாட்கள் மிகவும் நெருங்கிய உறவினர்கள் வந்து இருந்துவிட்டுக் கிளம்பிப்போன சூனியம் நான்கு தெருக்களிலும் காணக்கிடைக்கும்.


திருவிழா, அபிஷேகம், ஆராதனை, திருக்கல்யாணம்,ஆறாட்டு ஆகியவையும் தாண்டி எனக்குப் பிடித்த பல நிகழ்வுகள் பத்து நாட்களும் நடந்தேறும். கோவிலின் முன்பும், தேரடியிலும் ஆற்றுமணல் கொட்டி, மேடையமைத்து முறையே சிறிய பெரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கர்னாடக சங்கீதம், பரத நாட்டியம், கதாகாலட்சேபம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், மெல்லிசைக் கச்சேரி, 16 எம்.எம். திரையில் இலவசமாக ‘திருவிளையாடல், திருமால் பெருமை, கந்தன் கருணை, லவகுசா, பக்த பிரகலாதா’ போன்ற படங்கள் என்று வரைட்டியாக நடைபெறும். எம்.எல்.வசந்தகுமாரி முதல் பம்பாய் சகோதரிகள் வரை, மதுரை சோமு முதல் மகாராஜபுரம் சந்தானம் வரை, பத்மா சுப்ரமணியம் முதல் சித்ரா விஸ்வேஸ்வரன் வரை. போதாக்குறைக்கு, போன கோடை விடுமுறையில் வலுக்கட்டாயமாக இரண்டே மாதத்தில் சரளி, ஜண்டை வரிசை வரை அவசரமாக விழுங்கி, ஸ்கூல் திறப்பதற்குள் கீர்த்தனைக்கு வந்துசேர்ந்த புதிய திடீர் இசைக்கலைஞர்களும் மாலை நான்கு முதல் ஆறு மணிவரை, பலவந்தமாக அவரவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களை முன்னால் உட்காரவைத்து இ(ம்)சை நிகழ்ச்சி நடத்துவார்கள். இது தவிர உள்ளூர்க்குழுவினரின் ஈனசுர மெல்லிசைக்கச்சேரிகளும், பாடகர்கள் மசாலா பால் குடிக்கிறபோது அலுப்பூட்டுகிற மிமிக்ரிகளும் நடக்கும். அடியேன் எதையும் விட்டு வைத்ததில்லை. கோவிலில் திருவிழா நடந்தால், நாளொன்றுக்கு ஒரு சினிமா மட்டுமே, அதுவும் பகல்காட்சி அல்லது மதியக்காட்சி மட்டுமே என்று ஒரு சட்டத்துக்குள் உறுதியாக இருந்தேன்.


கொஞ்சம் தேவாரம், கொஞ்சம் அபிராமி அந்தாதி, கொஞ்சம் ராமாயணம் என்று சிட்டிகை சிட்டிகையாக நான் என் அளவுக்கு நிறைய தமிழை சேகரித்துக் கொண்டதெல்லாம் அந்தப் பத்து நாட்கள் திருநாட்களில்தான். கோவில் பிரகாரத்தில் எழுதப்பட்டிருந்த தேவாரப்பாடல்களை வாசித்து வாசித்தே நிறைய மனப்பாடம் செய்து கொண்டேன். சீர்காழி கோவிந்தராஜனும் மதுரை சோமுவும் கச்சேரி நடத்தியபோது, தமிழில் பாடுவது எவ்வளவு வசதி, எவ்வளவு பெருமை என்பதும் புரிந்தது.


என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை

இன்னுமென்ன சோதனையா முருகா?’ என்று மதுரை சோமு உருகியபோது எழுந்துபோய் கண்களைத் துடைத்து விடலாமா என்று தோன்றும்.


நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்

நிறைந்த சுடர்மணிப்பூண்” என்று சீர்காழி வெண்கலக்குரலில் பாடியபோது, அது பாரதியார் பாடல் என்பது தெரிந்திருக்கவில்லை.


போதாதற்கு அந்த பக்திப்படங்கள், அதில் வந்த ஏ.பி. நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய வசனங்கள். எனது சிவராத்திரி நாடகங்களுக்கு விதைபோட்ட வசனங்கள்.


ஒரே ஒரு வருத்தம். அந்தப் பத்து நாட்களும் வடிவழகியை அதிக நேரம் பார்த்து நிற்க முடியாது. ’என்ன இருந்தாலும் நான் தினசரி வர்றவன்; இந்தப் பத்து நாள் கூட்டத்தைப் பார்த்து என்னை மறந்திடாதே வடிவழகி’ என்று மனசுக்குள் எண்ணிக் கொள்வதுண்டு.


பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் எனது பால்ய சினேகிதன் ஒருவனை ஒரு திருமணத்தில் சந்தித்தபோது வடிவழகியைப் பற்றிக் குசலம் விசாரித்தேன்.


”அதையேண்டா கேட்குறே? கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெரிய பிரச்சினையாம்?”


”என்னாச்சு?”


“கும்பாபிஷேகம் பண்ணியிருக்காங்கடா. அதுக்கு ஏதோ லைட்-மியூஸிக் வைச்சிருக்காங்க போலிருக்கு. மேடையிலே குத்துப்பாட்டு போட்டு அரையும் குறையுமா ஆடி, லிப்-டு-லிப் கிஸ் வேறே அடிச்சிருக்காங்க. போலீஸ் அப்ஜெக்ட் பண்ணதும் இவனுக கல்லெடுத்து அடிக்க, போலீஸ் லத்தி சார்ஜ் பண்ண, ஒரே களேபரம் தான். டிவியிலே கூட காட்டினாங்களாமே? பார்க்கலியா நீ?”


என்னது? வடிவழகி கோவில் வாசலில் குத்துப்பாட்டா? அரைகுறை டான்ஸா? லிப்-டு-லிப் கிஸ்ஸா?


”பார்க்கலியே? நீயாவது அப்பப்போ போறதுண்டா?”


“இல்லைடா! முன்னெல்லாம் ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் போயிட்டிருந்தேன். ஒருவாட்டி என் குழந்தை நட்சத்திரத்துக்கு மாசாமாசம் அபிஷேகம் அர்ச்சனை பண்ணச்சொல்லி ஆயிர ரூபாய் கட்டினேன். பிரசாதமே வரலே. என்னான்னு போய்க்கேட்டா, பணத்தைக் கணக்குலேயே காட்டாம வைச்சிருக்கானுங்கன்னு புரிஞ்சுது. அப்புறம் போகவே மனசு வரலே. ஏதாவது ஒரு ஆடிச்செவ்வாய்க்குப் போறதோட சரி. மத்தபடி மனசுக்குள்ளே வேண்டிக்கிறதுதான்.”


கேட்கக் கேட்க அதிர்ச்சியாக இருந்தது.


வடிவழகி, உனக்கா இந்த கதி?

Ahamed Zubair A

unread,
Jul 5, 2014, 4:13:45 AM7/5/14
to பண்புடன்
எனி உள்குத்து??

R.VENUGOPALAN

unread,
Jul 5, 2014, 4:18:44 AM7/5/14
to பண்புடன்
2014-07-05 13:43 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
எனி உள்குத்து??

வாய்ப்பில்லை. அந்தக் கட்சி தோன்றுவதற்கு முன்பிருந்தே அப்படித்தான். :-) 



2014-07-05 11:44 GMT+04:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:


கருப்பு,சிவப்பு உடையில் சிங்கமுகன், பானுகோபன், சூரபத்மன் ஆகியோரின் மூன்று முகங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி, தேரடி வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

Ahamed Zubair A

unread,
Jul 5, 2014, 4:33:50 AM7/5/14
to பண்புடன்
அப்ப சரி ;)

R.VENUGOPALAN

unread,
Jul 27, 2014, 2:53:22 AM7/27/14
to பண்புடன்
என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்?

என் மனைவியின் சினேகிதியின் கணவர் அந்த நண்பர். இயக்குனர் ஸ்ரீதரின்
பிந்தைய படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்துவிட்டு இப்போது
சுயதொழில் செய்து அதில் கணிசமாக வருமானம் வந்து கொண்டிருக்கிறது.
கண்ணியவான்; வீட்டுக்கு வந்தால் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருப்பார்.
சென்ற ஆண்டு ஒவ்வொரு முறை நான் உடல்நலம் குன்றியிருந்தபோதும், பழங்களுடன்
வீட்டுக்கு / ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்துவிட்டுப் போவார். கொஞ்சம்
காந்தம் மாதிரி; சட்டென்று நண்பர்களை ஈர்ப்பதில் கெட்டிக்காரர்.
சிவாஜி,எம்.எஸ்.வி, கண்ணதாசன், பகவத் கீதை, அரசியல்,கிரிக்கெட் என்று
அவருக்கும் எனக்குமிருந்த ரசனைகளில் பலதில் ‘அட’ போட வைக்குமளவுக்கு
ஒற்றுமையிருந்தது. இருந்தாலும்…..

”உங்க ஜாதகத்தைக் கொடுங்க சார்,” என்று ஒரு நாள் ஆரம்பித்தார். “நீங்க
எங்கயோ இருக்க வேண்டியவரு. என்ன தோஷமோ என்னமோ இப்படி
லோல்பட்டுக்கிட்டிருக்கீங்க! எனக்கு ஆஸ்டராலஜி, நியூமராலஜி, நேமாலஜி
ஜெம்மாலஜி எல்லாம் நல்லாத் தெரியும் சார். தெரிஞ்சவங்களுக்கு மட்டும்தான்
இதெல்லாம் பண்ணுவேன்.”

தலப்பாக்கட்டு பிரியாணிக்கடைக்கு வந்து தயிர்சாதம் கேட்பதுபோல, என்னிடம்
வந்து இதையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறாரே என்று எரிச்சல் வந்தாலும்,
வழக்கம்போல ஹிஹித்துவிட்டு “அதெல்லாம் ஒண்ணுமில்லே சார், இந்த வயசுக்கு
மேலே ஜாதகத்தைப் பார்த்து என்ன பண்ணப்போறோம்? அதது நடக்கிறபடி
நடக்கட்டும் சார். கடவுள் இருக்காரு!” என்று கையைப்பிடித்துக் கெஞ்சாத
குறையாகச் சொன்னாலும் கேட்டபாடில்லை.

”அப்படியெல்லாம் அவநம்பிக்கையாப் பேசக்கூடாது சார்! அடுத்தவாட்டி நான்
வரும்போது ஜாதகத்தை ரெடியா எடுத்து வைச்சிருங்க. எனக்காகவாச்சும் கொடுங்க
சார்!”

அடுத்தடுத்து பல அடுத்தவாட்டிகள் வந்தபோதிலும், எனக்கு ஜாதகம் என்று
ஒன்றிருக்கிறதா, இருந்தால் அதில் கரையான் அரித்ததுபோக எவ்வளவு
மீதமிருக்கும் என்பதைப் பற்றிக்கூட யோசிக்காமல் நான் ஒவ்வொரு முறையும்,
எனக்கே உரித்தான முறையில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அசடு வழிந்து
கொண்டிருந்தேன்.

ஆனால், ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஒரு ரவுண்டு எல்லா டாக்டர்களையும்
சந்தித்து மொய் எழுதி, கர்ப்பப்பரிசோதனை தவிர அனைத்தும் செவ்வனே முடித்து
அலுப்பாய் வீட்டில் படுத்திருந்தபோது அவர் மீண்டும் வந்தார்.

”ஏன் சார் இப்படி அடம்பிடிக்கிறீங்க? உங்க சொத்தை எழுதிக்கொடுங்கன்னா
கேட்குறேன்? ஜாதகத்தைக் கொடுக்கிறதுக்கு இப்படி யோசிக்கிறீங்களே?” என்று
ஆப்பிள் வாங்கி வந்த உரிமையோடு அவர் கேட்கவும், வீட்டிலிருந்தவர்கள்
அவரது கட்சிக்குத் தாவினார்கள்.

”ஒரு தடவை கொடுத்துத்தான் பாருங்களேன்! உங்க நல்லதுக்குத்தானே சொல்றாரு?”

’சரி’ என்று நான் சொன்னவுடன், அவரது முகம் இலவச கிரைண்டர் வாங்கிய
இல்லத்தரசியைப் போலப் பிரகாசமானது. ‘கைதவறி எங்கேயோ வைச்ச என் ஜாதகம்
எங்கேயிருக்கிறது என்று ஜோசியம் பார்த்துச் சொல்ல முடியுமா?’ என்று கேட்க
துடுக்குப்பிடித்த என் நாக்கு துடித்தாலும், தெய்வாதீனமாக
அடக்கிக்கொண்டேன். அடுத்த தடவை அவர் எப்போது வருவார் என்று
காத்திருக்காமல், அடுத்த ஞாயிறன்றே பரணுக்குள் சரணாகதியடைந்திருந்த பழைய
பெட்டிகளைக் கீழே இறக்கி, அதிக சேதாரம் ஏற்படாமல் ஓரளவு ஆரோக்கியமாக
இருந்த எனது ஜாதகத்தைக் கண்டுபிடித்தும் விட்டேன். அப்பாடா!

பொழுதுபோகாமல் அந்த 40 பக்க நோட்டிலிருந்த எனது ஜாதகத்தை வாசித்தபோது,
அதைக் கணித்தவர் சொன்னபடி நடந்திருந்தால் அனேகமாக இன்றைக்கு பில்கேட்ஸ்
எனக்கு பி.ஏவாக இருந்திருக்கலாம் என்று தோன்றியது. கடலுடன் தொடர்புடைய
உத்தியோகம் வாய்க்கும் என்று வேறு போட்டிருந்தது. அனேகமாக ‘கடனுடன்
தொடர்புடைய’ என்பதில் ஏற்பட்ட எழுத்துப்பிழையாக இருக்கலாம். ஆயிரத்தில்
ஒருவருக்கு மட்டுமே இவ்வளவு சிறப்பான ஜாதகம் அமையும் என்று வேறு
எழுதியிருக்கவே, மீதமிருந்த 999 பேர்களுக்காகவும் ஒரு நிமிடம் மனதுக்குள்
மௌன அஞ்சலி செலுத்தினேன். இவ்வளவு யோகஜாதகத்துக்கு உரியவனாக இருந்தும்,
எப்படி ஸ்ரீதேவியை மிஸ் பண்ணினேன் என்பது எனக்கே மலைப்பாக இருந்தது.

ஜாதகத்தை நண்பருக்குக் கொடுத்து அனுப்பிய பிறகு, ‘நாதஸ்வரம்’ சீரியல்போல
தினமும் மாலையில் சரியாக அவரது அழைப்பு வருவதும் வாடிக்கையானது.

”சார், நீங்க காளஹஸ்தி போயிருக்கீங்களா?”

”ரெண்டுவாட்டி போயிருக்கேனே?”

”சோட்டானிக்கரா?”

”ஓ!”

”வைத்தீஸ்வரன் கோவில்?”

”போயிருக்கேன்.”

”திருப்பதி?”

”எத்தனை தடவைன்னு ஞாபகமேயில்லை!”

”சபரிமலை!”

”நான் குருசாமி சார்!”

”அப்போ நான் நினைச்சது சரிதான்! மறுபடி கூப்பிடறேன் சார்!”

அவர்பாட்டுக்கு ‘டக்’கென்று பேச்சைத் துண்டித்துவிட, நான் ‘இதுவரை நாம்
போகாத கோவில் எதெது?’ என்று கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டிருந்தேன்.
வைஷ்ணோதேவி போயாச்சு, காசி, ராமேஸ்வரம், நாஸிக், மதுரா, துவாரகாவும்
பார்த்தாச்சு. அறுபடை வீடு பார்த்தாச்சு. சீதாம்மா அமெரிக்காவிலிருந்து
வந்தபோது நவகிரஹ ஸ்தலங்களையும் ஒரு ரவுண்டு அடித்தாகி விட்டது.
பத்ரிநாத், கேதார்நாத் போகலை. இந்த மூட்டுவலியை வைச்சுக்கிட்டு இனி
போகவும் முடியாது. சமவெளியிலே எந்தக் கோவிலை விட்டு வைச்சோம்? கூகிளில்
தேடிப் பார்க்கலாமா? அட, இன்னும் தர்மஸ்தலம் போகலியோ?

ஜெயா டிவியில் ‘அருள்தரும் ஆலயங்கள்’ நிகழ்ச்சியில், என் பரம்பரையே
கேள்விப்பட்டிராத பல கோவில்களைப் பார்த்து, ‘அடடா, இந்தக் கோவிலைப்
பார்த்ததே இல்லையே! தப்புப்பண்ணிட்டோம் போலிருக்கே’ என்று
ஆதங்கப்படலானேன்.

எனது ஆதங்கத்தை அதிகமாக்காமல், அந்த நண்பரே ஒரு நாள் வீடுதேடி வந்து
விட்டார். இரண்டு பெண்மணிகளும் அவர்களின் சம்பாஷணைகளில் ஈடுபட, இவர் ஒரு
காகிதத்தை நீட்டி ‘இதுலே ஒரு கையெழுத்துப்போட்டுக் காமிங்க சார்’
என்றார். நானும் போட்டுவிட்டுத் திரும்பியபோது அவரது முகம் சுட்ட
கத்திரிக்காயைப் போலச் சுருங்கியிருந்தது.

”என்ன சார், இப்படிக் கையெழுத்துப்போடறீங்க?”

”ஏன் சார்?”

”உங்க கையெழுத்து கீழேயிருந்து மேலே நோக்கிப்போகுது.”

”அதுவாவது மேல்நோக்கிப் போகட்டுமே, என்ன தப்பு?”

”கையெழுத்து நேர்கோட்டுலே இருக்கணும் சார்,” என்று தெரியாத்தனமாக
ஏலச்சீட்டு நிறுவனத்தில் பணம்போட்டவனைப் பார்ப்பதுபோல அனுதாபத்துடன்
பார்த்தபடி சொன்னார்.

”நான் எப்பவுமே இப்படித்தான் போடுறேன் சார்!”

”அதான்…அதான்…அதான் இவ்வளவு பிரச்சினை உங்களுக்கு!” என்று ஒரு முடிவுக்கே
வந்தவர்போல உறுதியாய்க் கூறினார். “அது கூடப் பரவாயில்லை. இதென்ன சார்,
கையெழுத்துக்குக் கீழே ரெண்டு புள்ளி வைக்கிறீங்க? ஐயையே!”

”சார், ரெண்டு புள்ளி வைச்சதுக்கா புள்ளிராஜாவைப் பார்க்குறா மாதிரி
அசிங்கப்படறீங்க?”

அவரோ எனது கையெழுத்தை கூகிளில் மேப் பார்ப்பதுபோலக் கூர்ந்து கவனித்துக்
கொண்டிருந்தார். ஒரு வழியாக….

”நௌ ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் ப்ராப்ளம்!” என்றார் நண்பர். “சீக்கிரம்
ஒரு தீர்வோட வந்து பார்க்கிறேன்.”

”இல்லை சார்,” நான் மறுத்தேன். “என் பிரச்சினை என்னான்னு தெரியணும்னா,
நிறைய ஃபைல் ஃபைலா இருக்குது. படிச்சா பாதி எம்.பி.பி.எஸ் படிச்ச
மாதிரி.”

”அதெல்லாம் பெரிஃபெரல் இஷ்யூஸ் சார், கோர் இஷ்யூ உங்க பேரு, உங்க
கையெழுத்து. ரெண்டையும் மாத்திட்டா எல்லாம் சரியாயிடும்.”

”இனிமே என்ன சரியாகி என்ன ஆவப்போகுது?” என்றேன் நான். (ஸ்ரீதேவியின் மகளே
நடிக்க வந்தாச்சாம். டூ லேட்)

அன்றைய தினம் அதற்கு மேல் எதையும் சொல்லாமல் கிளம்பியவர் ஒரு வாரத்துக்கு
மேலாகியும் என்னைத் தொடர்பு கொள்ளாமல் போகவே, வியாபார மும்முரத்தில்
மறந்திருப்பார் போலிருக்கிறது என்று நானும் வேணுகோபாலனாகவே இருந்தேன்.
ஆனால்….

ஐ.பி.எல் ஜுரத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மாலைப்பொழுதில் வந்து சேர்ந்தார்.

”சார், உங்க பேருக்கு முன்னாலே ‘V’ வருது. அதுக்கு முன்னாடி ஒரு ‘S’
வரணும் சார்,” திடீரென்று குண்டைத் தூக்கிப் போட்டார்.

”இப்பவே நான் நிறைய ‘Yes’ போட்டுக்கிட்டுத்தான் இருக்கேன் சார்!”

”பீ சீரியஸ் சார்! வேணுவுக்கு முன்னாலே ‘எஸ்’வர்ற மாதிரி பெயரை மாத்திக்கணும்.”

”அப்படியா?” யோசித்தேன். “ஸ்ரீ சேர்த்துக்கலாம். ஸ்ரீவேணுகோபாலன்னு
வைச்சுக்கலாம்னா, ரைட்டர் புஷ்பா தங்கதுரையோட பேரு அது. எனக்கு தூரத்து
சொந்தம் வேறே அவரு!”

”அப்புறம், இந்த venu-வுலே வர்ற ‘U’வுக்குப் பதிலா ரெண்டு ‘O’ போடணும்.
Gopalan-லே ‘p’க்கு அடுத்தபடியா ஒண்ணுக்கு ரெண்டு ‘a’ போடணும். முக்கியமா
உங்க பேரு ‘L’ எழுத்தோட முடிஞ்சிடணும்.”

”ஸ்ரீவேணுகோபால்?”

”ம்ம்ம்?” யோசித்தார் அவர். “சரியா வரலியே! வேறே ட்ரை பண்ணலாம். உங்க
அப்பாவோட முழுப்பெயர் என்ன?”

”ஐயையோ, எங்கப்பாவெல்லாம் பேரை மாத்திக்க மாட்டாரு சார்; அவருக்கு 80 வயசு.”

”அவரு மாத்த வேண்டாம் சார்! அவர் முழுப்பெயரைச் சொல்லுங்க.”

”சேஷாத்ரி ரங்கன்.”

”வெரி குட்!” நண்பர் உற்சாகமானார். “அப்போ இனிமே உங்க பேரு
எஸ்.ஆர்.வேணுகோபால். சுருக்கினாக்கூட எஸ்.ஆர்.வின்னு நச்சுன்னு வருது.”

”எஸ்.ஆர்.வியா? பழைய பிராண்டு நல்லெண்ணை மாதிரியிருக்கே?”

”சூப்பராயிருக்கு சார்!”

”அதெல்லாம் சரி, பேரை மாத்துறதுன்னா வெளையாட்டா? எவ்வளவு வேலை இருக்குது?”

”எல்லாம் நான் பார்த்துக்கறேன்,” என்று அபயஹஸ்த முத்திரை காட்டினார்
அவர். “இந்த நிமிஷத்துலேருந்து உங்க பேரு எஸ்.ஆர்.வேணுகோபால்.
இங்கிலீஷ்லே S.R.VENOO GOPAAL-ன்னுதான் எழுதணும். காலையிலே
எழுந்திரிச்சதும் ‘என் பேர் எஸ்.ஆர்.வேணுகோபால்’னு சொல்லிக்குங்க.
முடிஞ்சா தினமும் ஒரு பேப்பர்லே உங்க புதுப்பெயரை அம்பதுவாட்டியோ,
நூறுவாட்டியோ எழுதிக்குங்க. இந்தப் பேரு முதல்லே உங்க மனசுலே ரிஜிஸ்டர்
ஆகணும். ஒரு மாசம் கழிச்சு நான் சில ஃபார்ம்ஸ் கொண்டுவர்றேன். சட்டப்படி
உங்க பெயரை மாத்திடலாம். அப்புறம் பாருங்க, நீங்க போகப்போற இடமே வேறே!”

”இதெல்லாம் வடிகட்டின பித்துக்குளித்தனமாத் தெரியலியா?” நண்பர்
கிளம்பியதும் என் வீட்டிலிருந்தவர்களிடம் கேட்டேன்.

”உங்களுக்கு இஷ்டமில்லாட்டி விடுங்க!” என்று மனைவி, குழந்தைகள் மூவருமே
சொல்லவும், ஏற்கனவே குட்டை போலாகியிருந்த மனதில் மேலும் சில குழப்ப
அலைகள்.

அப்பா, அம்மாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் என்ன?

”தாராளமா மாத்திக்கடா!” என்றாள் என் அம்மா. “நீ ஊருலே இருந்தவரைக்கும்
தினமும் நாகராஜா கோவிலுக்குப் போயிட்டிருந்தே. இப்ப வருஷக்கணக்கா நீ
ஊருக்கே போகலே. ரெண்டு மூணு வருஷமா கோவில் கொடைக்கும் போறதில்லை. எல்லாம்
தெய்வகுத்தம்தான். தெரிஞ்சவங்க சொன்னா, பேரை மாத்திக்கோ. தப்பில்லை!”

”எது சரின்னு படுதோ பண்ணுடா,” என்று ரத்தினச்சுருக்கமாகச் சொன்னார்
அப்பா. “பேரை மாத்தினா நல்லதுன்னா ஓ.கே. ஆனா, உன் மேலே ஒரு ஃபால்ட்டும்
இல்லையான்னு யோசிச்சுக்கோ. அவ்வளவுதான்.”


குழப்பம் தீர்ந்தபாடில்லை. ஆரம்பத்தில் தினமும் காலையில் எழுந்து
கொண்டதும் ‘என் பேர் எஸ்.ஆர்.வேணுகோபால்’ என்று சொன்னதும், ஒரு நோட்டில்
ஐம்பது தடவை எழுதியதும் நாளாவட்டத்தில் நின்றுபோனது.

ஒரு நாள் நண்பர் வந்தார்.

”அவசரமா ஹைதராபாத் போறேன் சார்! வந்ததும் உங்க பெயரை மாத்திடலாம்.”

”சரி சார், என்ன திடீர்னு ஹைதராபாத்? பிசினஸா?”

”இல்லை சார், பையனுக்குக் கொஞ்சம் மார்க் குறைச்சல். இங்கே ஒரு நல்ல
ஸ்கூல்லேயும் அட்மிஷன் கிடைக்கலை. அதான் ஹைதராபாத்துலே ஒரு பெஸ்ட்
ஸ்கூல்லே அட்மிஷன் வாங்கிட்டேன். பையனைக் கொண்டுபோய்ச் சேர்க்கணும்.”
விசனத்துடன் சொன்னார் நண்பர்.

”பையன் ஜாதகத்தைப் பார்த்தீங்களா? பேரு எல்லாம் ஓ.கே தானே?”
அசந்தர்ப்பமாக நான் கேட்க, அவர் அதிர்ந்துபோய் என்னை ஏறிட்டார்.

அதன்பிறகு அவரும் நானும் இன்னும் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறோம். அவர்
அவராகவும் நான் தொடர்ந்து ஆர்.வேணுகோபாலனுமாகவே இன்னும் இருந்து
கொண்டிருக்கிறோம்.

ஆர்.வேணுகோபாலன்.

Ahamed Zubair A

unread,
Jul 27, 2014, 2:59:42 AM7/27/14
to பண்புடன்
உம்ம நக்கலுக்கு அளவே இல்லையா??? ;)))

PRASATH

unread,
Jul 28, 2014, 5:25:05 AM7/28/14
to பண்புடன்
:)))
 
சேட்டை... :)))

Jaisankar Jaganathan

unread,
Jul 28, 2014, 5:56:41 AM7/28/14
to panb...@googlegroups.com
//இனிமே என்ன சரியாகி என்ன ஆவப்போகுது?” என்றேன் நான். (ஸ்ரீதேவியின் மகளே
நடிக்க வந்தாச்சாம். டூ லேட்)//


அருமை. சூப்பர் ஜோக்

sadayan sabu

unread,
Jul 28, 2014, 7:05:03 AM7/28/14
to panbudan

மொதல்லே  பேர மாற்றும் வோய் ஸ்ரிதேவி பொண்ணோட நடிக்கலாம்ல

VJagadeesh

unread,
Jul 28, 2014, 9:39:25 AM7/28/14
to பண்புடன்
ஆர்யா மாதிரி ஆர்வ்வினு வச்சா சக்ஸஸ் ஆகும்னு நினைக்கிறேன்.

எதுக்கும் ஒரு நல்ல நியூமரலாஜிஸ்ட்டை பார்த்தா நல்லது


2014-07-28 16:35 GMT+05:30 sadayan sabu <sadaya...@gmail.com>:

மொதல்லே  பேர மாற்றும் வோய் ஸ்ரிதேவி பொண்ணோட நடிக்கலாம்ல

--

R.VENUGOPALAN

unread,
Aug 16, 2014, 11:36:31 AM8/16/14
to பண்புடன், தமிழ்த்தென்றல்

நீங்க நல்லவரா கெட்டவரா?


சென்ற ஞாயிறன்று குடும்பத்துடன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது, என் மகளின் கைபேசிக்கு அந்த அழைப்பு வந்தது. வரிசையில் நின்று திருமயிலை சென்றுவர டிக்கெட் எடுத்து வெளியேறியதும்…..


‘அப்பா, விஜய் டிவியிலேருந்து போன். ’நீயா நானா’விலே பேசக்கூப்பிடறாங்க?’ என்றாள் மகள்.


‘உன் நம்பர் அவங்களுக்கு எப்படி…?’


‘என் ஃப்ரெண்டு கொடுத்திருக்காப்பா…!’


‘ஓ.கே! உனக்குப் போகணும்னா தாராளமாப் போய்ப்பேசு! கான்ட்ரவர்ஸியலா எதுவும் சொல்லாதே. அவ்வளவுதான்.


அன்று இரவு வீடு திரும்பும்வரை அதுகுறித்து எதுவும் பேசவில்லை. படிக்கிற பெண், எதுவாக இருந்தாலும் பேசி விடுவாள் என்பதால், ‘இப்படிப்பேசு, அப்படிப்பேசு’ என்றெல்லாம் கட்டம்போடாமல் விட்டு விட்டேன். வீடு திரும்பியதும் விபரங்களைக் கேட்டறிந்து, ஆகஸ்ட் 12 அன்று ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் படப்பிடிப்பு என்றும் மதியம் 2 மணிக்குச் சென்று சேர்ந்து விட வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன்.


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி ஆடிஷனுக்காக, பஸ்பிடித்து திருச்சிக்குப் போய், வெயிலில் காய்ந்து, அங்கிருந்த அதிதமான கெடுபிடிகளில் நொந்து, இரவு பத்து மணிக்கு கடைசி ஆளாக காமிராவின் முன்பு நின்றுவிட்டு வெளியேறுகையில், ‘மொகம் ஃபோட்டோஜெனிக்கா இல்லை’ என்று முதுகில் பாய்ந்த கமெண்ட்டையும் கேட்டுவிட்டு, பஸ்ஸைப் பிடித்து சென்னை திரும்பிய அனுபவங்களெல்லாம் இருந்தாலும், ‘அதெல்லாம் வேணாம்’ என்று சொல்லி மகளின் உற்சாகத்தை ஒரே வாக்கியத்தில் மூழ்கடிக்க விரும்பவில்லை. இதுவும் ஒரு அனுபவம்தான்; போய்விட்டு வரட்டுமே என்று விட்டு விட்டேன்.


‘பஸ் புடிச்சுப் போயிக்கோ! சாயங்காலம் நான் வந்து பிக்-அப் பண்ணிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு செவ்வாய்க்கிழமை காலைவரை அதுகுறித்து எதுவும் பேசாமலும், யோசிக்காமலும் இருந்து விட்டேன்.


செவ்வாய் ! மதியம் சுமார் 2:00 மணிக்கு…


‘ரீச்ட் ஸ்டூடியோ’ என்று பொறுப்பாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள் மகள். ‘அடடா, காலையிலே ஒரு ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொல்லியிருக்கலாமே?’ என்று என்னை நானே நொந்துகொண்டு, நானே அழைத்தேன்.


‘கைதட்டலுக்காகப் பேசாதே! தெரிஞ்சதைச் சொல்லு, தெளிவாச் சொல்லு. Don’t beat around the bush’ என்றேன். ’சரிப்பா, போனை சுவிட்ச் –ஆஃப் பண்ணச் சொல்லியிருக்காங்க. அப்புறம் கால் பண்றேன்,’ என்று வைத்துவிட்டாள்.


மாலை சுமார் 6 மணிக்கு அலுவல்முடித்துக் கிளம்பியபோது மகளை அழைத்தேன். சுவிட்ச் ஆஃப்! சரி, நிகழ்ச்சி நடக்கிறது போலிருக்கிறது என்று எண்ணியவாறு திருவான்மியூரிலிருந்து வீடு நோக்கி வண்டியைச் செலுத்தினேன். திடீரென்று, வழியில் மகளிடமிருந்து மீண்டும் ஒரு குறுஞ்செய்தி – படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை! சே! ஆனால், திட்டமிட்டபடி நிகழ்ச்சி முடிந்திருக்க வேண்டிய இரவு ஒன்பது மணிக்குள் ஏற்கனவே முடிவு செய்திருந்தபடி சென்று விடுவது என்பதில் குறிப்பாக இருந்தேன்.


ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்குள் நுழைந்தபோது மணி ஏறத்தாழ ஓன்பது மணி. விஜய் டிவிக்காரர்கள் ஒரு மேஜையும் அரை டஜன் நாற்காலிகளும் போட்டவாறு செட்டுக்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கட்டளைப்படி கைபேசியை அணைத்துவிட்டு உள்ளே புகுந்தபோது, தரையெங்கும் எக்கச்சக்கமாக கேபிள்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது, சபரிமலை யாத்திரையின்போது கருவிலந்தோட்டில் முன்னெல்லாம் சாரைசாரையாக ஊர்ந்து போய்க்கொண்டிருந்த பாம்புகள் நினைவுக்கு வந்தன. கருப்புச்சீலைகளால் மூன்றுபக்கம் மறைத்திருந்தாலும், ராட்சத விளக்குகளின் வெளிச்சமும் கோபிநாத்தின் குரலும் தப்பித்து வந்து கொண்டிருந்தன.


அரங்குக்கு முன்பக்கம் வந்தபோது ஒளிமயமாக இருந்த அரங்கில் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட அந்த செட் தெரிந்தது. இருட்டுக்குள்  பார்வையாளர்களும் விஜய் டிவி ஊழியர்களும், பங்கேற்க வந்தவர்களுடன் வந்தவர்களும் ஒழுங்கின்றி திட்டுத்திட்டாக நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்தார்கள். எங்கே உட்காரலாம் என்று துழாவி ஒரு மூலையில் அமர்ந்தபோது, எனக்கு வலதுபக்கத்தில் ஒரு மேஜைபோட்டு ஐந்தாறு பேர்கள் அமர்ந்திருப்பதைக் கவனித்தேன்.


மேடையின் ஒரு பக்கத்தில் இளைஞர்கள் மட்டுமே அமர்ந்திருந்ததால், எதிர்ப்பக்கத்தில் அமர்ந்திருந்த மகளைக் கண்டுபிடிப்பதில் அதிக நேரம் செலவழிக்கவில்லை. ‘நல்ல பையன் என்றால் எப்படியிருக்கணும்? அவனுடைய அடையாளங்கள் என்னென்ன?’ என்று மேடையில் கோபிநாத் பேசப்பேச, என் முதுக்குப் பின்னாலிருந்து ‘பார்த்தவுடனே எப்படிக் கண்டுபிடிப்பீங்க?’ என்று ஒரு குரல் கேட்க, யாரென்று திரும்பிப் பார்ப்பதற்குள் மேடையில் கோபிநாத் கேட்டுக் கொண்டிருந்தார்.


பார்த்தவுடனே நல்லவன்னு எப்படிச் சொல்லுவீங்க?


இதென்ன, எதிரொலி முதலிலேயே வருகிறதா என்ன? இதைப் போலவே தொடர்ந்து பின்னாலிருந்து தொடர்ந்து இடைவிடாத கேள்விகளும், மறுப்புகளும், குறுக்கீடுகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே, திரும்பி கொஞ்சம் குறுகுறுப்புடன் கவனித்தபோதுதான் சிதம்பர ரகசியம் புரிபட்டது.


வேறொன்றுமில்லை. ஒரு மேஜைக்கு முன் நாற்காலி போட்டு அமர்ந்தவாறு, அதில் வைக்கப்பட்டிருக்கிற மானிட்டரில் நிகழ்ச்சியைப் பார்த்தபடி, அடுத்து யாரிடம் மைக்கைக் கொடுப்பது, யாரிடம் என்ன கேள்வி கேட்பது, யாரை எப்படி மடக்குவது, யாரை எப்படிக் கலாய்ப்பது என்பதுவரை என் பின்னால் இருந்த கூட்டத்தில் நடுநாயகமாக இருந்த இயக்குனர் முடிவு செய்வதையும், அதை இயர்போன் வழியாகக் கேட்டபடி, அப்படியே கோபிநாத் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதையும் நம்பவும் முடியாமல் அதிர்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருந்தேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், அம்பு கோட்டுப் போட்டுக் கொண்டு மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவ்வளவுதான். இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் சிறிது நேரத்தில், ‘ப்பூ, இம்புட்டுத்தானா?’ என்ற ஒரு சலிப்பு தட்டவே, சரி, மகள் என்னதான் பேசப்போகிறாள் என்ற ஆர்வத்தை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டு காத்திருந்தேன்.

      

    மகளிடம் மைக் சென்றதையும், அவள் என்னவோ சொல்ல மைக் அவளிடமிருந்து அடுத்தவருக்குக் கைமாறியதையும் கவனித்தேன். ‘நல்லவனைக் கண்டுபிடிப்பது எப்படி ? நல்லவனாய் இருப்பதில் உள்ள கஷ்டங்கள் என்னென்ன?’ என்று மேலும் ஒரிரு ரவுண்டுகள் விவாதம் நடந்தேற, நடுவில் சுடச்சுட டீ குடித்துவிட்டு பங்கேற்றவர்கள், நிகழ்ச்சி அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் காலதாமதமாகிற படபடப்பை மறக்க பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபடுவதை என்னால் ஊகிக்க முடிந்தது.


கர்ணனின் கவசகுண்டலத்துக்கு அடுத்தபடியாக, ஓட்டிப்பிறந்ததுபோல கோபிநாத் அணிகிற கோட்டைக் கழற்றிவிட்டு கொஞ்சம் ஆயாசமாக நின்றபோதெல்லாம் ‘சார், நான் உங்க ரசிகன்’ என்று சொல்லி கைகுலுக்கலாமா என்ற ஆசை, மற்றவர்களைப் போல எனக்கு மட்டும் வரவேயில்லை. ’உங்க இயர்போனுக்கு நான் ரசிகன்’ என்று கலாய்க்கலாமா என்று ஒரு நப்பாசை மட்டும் இருந்தது.

      

     இரவு மணி பத்து, பதினொன்றாகியும் நிகழ்ச்சி முடிவதாகத் தெரியவில்லை. அடுத்த இடைவெளியில் ‘அப்பா, போகலாம்பா, போரடிக்குது,’ என்று மகள் இறங்கிவந்து சொன்னாள். மதியம் 2 மணிக்குக் கிளம்பிய பெண், இரவு 11 ஆகியும் வரவில்லையென்றால் எப்படி? மனைவியிடமிருந்து ஒரு டஜன் அழைப்புக்கள் வந்து, ஏற்கனவே தளர்ந்து கொண்டிருந்த எனது பொறுமையை மேலும் தளர்த்தியது. வெளியே லேசாக மழை வேறு தூறிக் கொண்டிருந்தது.

     

     ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கத் தெரியாதவர்களுக்கு, ஊருக்கு உபதேசம் பண்ண என்ன அருகதை இருக்கிறது என்று எரிச்சல் மிகுந்தது.

      

     ஒழுங்காக தலைமுடியை வெட்டிக்கொள்ளாதவன் கெட்டவனா?

     

     அதிகமாக சினிமா பார்ப்பவன் கெட்டவனா?

     

     பெண்களுடன் பேசுகிறவன் கெட்டவனா?

   

     பார்த்துக் கொண்டிருந்த எனக்குச் சிரிப்புச் சிரிப்பாக வந்தது. இதே போல, ஒரு பெண் நல்லவள் என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஒரு விவாதம் வைக்கிற துணிச்சல் இவர்களுக்கு வருமா? ஆண்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்வதுபோல பெண்ணின் சரித்திரத்தை ஆராய்கிற சாகசத்தை இவர்கள் நிகழ்த்துவார்களா? அப்படியொரு விவாதம் நடந்தால், அதைப் பார்த்துவிட்டு எத்தனை பேர் சும்மாயிருப்பார்கள்?

 

     சரி, வந்தது வந்தாகி விட்டது. ஒரு நல்ல ஆண் என்பவன் யார்? அவனுக்குரிய சாமுத்ரிகா லட்சணங்கள் எவையெவை? ஒரு நல்லவனை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது? அவனுக்கு பழைய செய்தித்தாளை விடவும் கிலோவுக்கு ஐம்பது பைசாவாவது அதிகம் கொடுப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தெரிந்த கோபிநாத் அல்லது எவர் கண்ணுக்குமே திரையில் தென்படாத டைரக்டர் இருவரில் யாராவது பதிலளித்து சஞ்சலங்களைத் தீர்ப்பார்கள் என்று காத்திருந்து மணி அதிகாலை 01:00 ஆனதுதான் மிச்சம்.


      ’ஒரு நல்லவன் யாரென்று கண்டுபிடிக்க பெண்களுக்கும் தெரியவில்லை. நல்லவனாக இருப்பது எப்படியென்று ஆண்களுக்கும் தெரியவில்லை’ என்று முடிவாக, கோபிநாத் தீர்ப்பளித்தார். அதற்கு முன்பு இரண்டு சிறப்பு விருந்தினர்கள் வந்து தமிழ்ச்சமூகம் எப்படிச் சீரழிந்து போய்விட்டது என்பதைப் பற்றி ‘அந்தக்காலத்துலயெல்லாம்……’ என்று ஜல்லியடித்து கடுப்பேற்றினார்கள்.


      மொத்த நிகழ்ச்சியிலும் எனக்குப் பிடித்த ஒரே வார்த்தை; ‘பேக்-அப்!


   மென்மையாகத் தூறிக்கொண்டிருந்த மழையில், ஆற்காட்டு சாலையில் வீட்டை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது மகள் அந்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் படபடப்புடனும் நிறைய அசுவாரசியத்துடனும் சொல்லிக் கொண்டே வந்தாள். 100 அடி சாலை சந்திப்பில் நின்றபோது நான் கேட்டேன்.


      ’உண்மையிலேயே உங்களுக்கு நல்லவன்னா யாருன்னு கண்டுபிடிக்கத் தெரியலியா?’


      ’இல்லேப்பா, முதலிலேயே இப்படித்தான் பேசணும். தத்துவம் மாதிரிச் சொல்லக்கூடாது; சினிமாட்டிக்கா இருக்கக் கூடாது. அன்பு, பாசம், நேர்மை, நியாயம்னெல்லாம் பிளேடு போடக்கூடாதுன்னு சொல்லிட்டு, அதையெல்லாம் அவரே சொல்லி மடக்குறாரு! முடிவெட்டிக்காதவனைப் பத்திப் பேசினபோது ஒருத்தர் தோனி பத்திச் சொன்னாரு! அதெல்லாம் விதிவிலக்குன்னு சொல்லிட்டு கடைசியிலே நல்லவன்னா காந்தி மாதிரியிருக்கணும்னு அவங்க மட்டும் சொல்றாங்க. இப்படின்னு தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன்.’


      சிக்னலில் பச்சை விளக்கு பார்த்து வாகனத்தைக் கிளப்பினேன்.


      ’அப்போ உன்னாலே நல்லவன்னா யாருன்னு கண்டுபிடிக்க முடியும்னு சொல்றியா?’


      ’ஒ!’ என்றாள் மகள். ‘அங்கே ஒவ்வொருத்தரும் நல்லவனைப் பத்திப் பேசும்போதும் எனக்கு உன் ஞாபகம்தான் வந்தது.’


      வீட்டை நெருங்கும்போது எனக்குத் தோன்றியது.

      

    ’உண்மையிலேயே அங்கே பேசியதுபோல நல்லவன் யாருன்னு கண்டுபிடிக்கிறது கஷ்டமோ?’


**************************

Srimoorthy S

unread,
Aug 16, 2014, 11:43:22 AM8/16/14
to பண்புடன், தமிழ்த்தென்றல்
உங்க பொண்ணு நல்ல மெச்சூர்டு சார்.... கங்ராஜுலேசன்...

ஸ் பெ

unread,
Aug 16, 2014, 12:05:53 PM8/16/14
to panbudan
நல்ல ரைட்டிங் வேணுஜி..

'நீயா நானாவில்' மூன்று முறை பங்கேற்று இருக்கிறேன். முதன்முறை நீங்கள் சொன்ன அதே 'டைமிங்கில்' நடந்து, இரவு ற்றிப்ல்ஸ் அடித்தே வீடு வந்து சேர்ந்தோம்.. பிறகு பழகி விட்டது..

முதல்ல இருந்தே கவன்சீங்கன்னா, இன்னைக்கு எந்த தலைப்பு அப்பிடிங்கிரதையே ஸ்பாட்ல வந்து தான் கோபி கிட்ட ஆண்டனி சொல்லுவார்.. ஆனாலும் கோபி சமாளிப்பார், அது தான் அவரோடு ஆளுமை ;-)




2014-08-16 17:36 GMT+02:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:
க்கு முன்பக்கம் வந்தபோது ஒளிமயமாக இருந்த அரங்கில் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட அந்த செட் தெரிந்தது. இருட்டுக்குள்  பார்வையாளர்களும் விஜய் டிவி ஊழியர்களும், பங்கேற்க வந்தவர்களுடன் வந்தவர்களும் ஒழுங்கின்றி திட்டுத்திட்டாக நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்தார்கள். எங்கே உட்காரலாம் என்று துழாவி ஒரு மூலையில் அமர்ந்தபோது, எனக்கு வலதுபக்கத்தில் ஒரு மேஜைபோட்டு ஐந்தாறு பேர்கள் அமர்ந்திருப்பதைக் கவனித்தேன்.




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 16, 2014, 12:08:54 PM8/16/14
to panb...@googlegroups.com

2014-08-16 18:36 GMT+03:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:
நீங்க நல்லவரா கெட்டவரா?


ஒவ்வொரு மகளுக்கும் தன தந்தையே முதல் ஹீரோ என்ற கூற்றை
​ உங்களுடைய மகளின் சொல் நிருபித்திருக்கிறது

மற்றபடி நீயா நானா ஒளிப்பதிவு இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை ஒன்று சேர்த்து செய்வார்கள் என்றும் இது அடுத்த நாள் அதிகாலை வரை செல்லும் எனவும் ​
​பல பேர் முன்னாடியே பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கினர்

எனக்கு சரியாக பெயர் ஞாபகம் இல்லை ஆனால் சண் டி வியில் வந்த  சீரியல்
​ அதில் ஒரு டாக் ஷோ வரும் அதிலே இப்படி ஒரு சீன வரும் ஒருநபர் laugh, clap , பேச்சாளரை இடையூறு செய்து அடுத்து பேசவும், என கையில் போர்டுகளை வைத்து இருப்பார்
அவர் எந்த போர்டை தூக்கி கான்பிக்கிராரோ அதே போல பார்வையாளர்கள் செய்வார்கள் ​
அப்போது தான் ஓஹோ இப்படி தான் எமாற்றுகிரார்களோ என
​ தெரிந்து கொண்டேன்

என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Srimoorthy S

unread,
Aug 16, 2014, 12:11:44 PM8/16/14
to பண்புடன்
அந்த மூனு முறை பேச்சுக்கும் லிங்க்கு இருக்கா ஸ்பெ அங்கிள்?


--

BALAJI R

unread,
Aug 16, 2014, 12:14:01 PM8/16/14
to panb...@googlegroups.com

எப்போ டிவி ல வருமாம் வேணு ஐயா?

--

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 16, 2014, 12:28:09 PM8/16/14
to panb...@googlegroups.com

2014-08-16 19:11 GMT+03:00 Srimoorthy S <s.srim...@gmail.com>:
அந்த மூனு முறை பேச்சுக்கும் லிங்க்கு இருக்கா ஸ்பெ அங்கிள்?


Haja Muhiyadeen

unread,
Aug 17, 2014, 12:14:09 AM8/17/14
to பண்புடன்
ஒரு வீ ஐ பி பேட்டியை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய ஒயிட் போர்டில் பாய்ண்ட்ஸ் எழுதி வைத்து கொண்டு பார்த்து பார்த்து தான் பெட்டி அளித்தார். பேட்டிக்கே இப்படி> பேச சொனனால்?

இதெல்லாம் மீடியாவில் சகஜம். 

அவர்களுக்கு ரிசல்ட் தான் முக்கியம்



2014-08-16 18:36 GMT+03:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

--

R.VENUGOPALAN

unread,
Aug 17, 2014, 12:56:16 AM8/17/14
to பண்புடன்
2014-08-16 21:13 GMT+05:30 Srimoorthy S <s.srim...@gmail.com>:
உங்க பொண்ணு நல்ல மெச்சூர்டு சார்.... கங்ராஜுலேசன்...

மிக்க நன்றி ஸ்ரீமூர்த்தி. 

R.VENUGOPALAN

unread,
Aug 17, 2014, 1:02:12 AM8/17/14
to பண்புடன்
2014-08-16 21:35 GMT+05:30 ஸ் பெ <stalinf...@gmail.com>:
நல்ல ரைட்டிங் வேணுஜி..

 நன்றி ஸ்.பெ!  

'நீயா நானாவில்' மூன்று முறை பங்கேற்று இருக்கிறேன். முதன்முறை நீங்கள் சொன்ன அதே 'டைமிங்கில்' நடந்து, இரவு ற்றிப்ல்ஸ் அடித்தே வீடு வந்து சேர்ந்தோம்.. பிறகு பழகி விட்டது..

எனக்கும் அதுபற்றி நீங்கள் எழுதியது ஞாபகமிருக்கிறது.  

முதல்ல இருந்தே கவன்சீங்கன்னா, இன்னைக்கு எந்த தலைப்பு அப்பிடிங்கிரதையே ஸ்பாட்ல வந்து தான் கோபி கிட்ட ஆண்டனி சொல்லுவார்.. ஆனாலும் கோபி சமாளிப்பார், அது தான் அவரோடு ஆளுமை ;-)

அதுலே சந்தேகமேயில்லை. ஆனாலும், நான் உட்கார்ந்திருந்த இடம் தப்புன்னு தோணுது. :- 0




2014-08-16 17:36 GMT+02:00 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

க்கு முன்பக்கம் வந்தபோது ஒளிமயமாக இருந்த அரங்கில் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட அந்த செட் தெரிந்தது. இருட்டுக்குள்  பார்வையாளர்களும் விஜய் டிவி ஊழியர்களும், பங்கேற்க வந்தவர்களுடன் வந்தவர்களும் ஒழுங்கின்றி திட்டுத்திட்டாக நாற்காலிகள் போட்டு அமர்ந்திருந்தார்கள். எங்கே உட்காரலாம் என்று துழாவி ஒரு மூலையில் அமர்ந்தபோது, எனக்கு வலதுபக்கத்தில் ஒரு மேஜைபோட்டு ஐந்தாறு பேர்கள் அமர்ந்திருப்பதைக் கவனித்தேன்.




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
Aug 17, 2014, 1:08:34 AM8/17/14
to பண்புடன்
2014-08-16 21:38 GMT+05:30 ஹாஜா மொஹைதீன் <princ...@gmail.com>:


ஒவ்வொரு மகளுக்கும் தன தந்தையே முதல் ஹீரோ என்ற கூற்றை
​ உங்களுடைய மகளின் சொல் நிருபித்திருக்கிறது

ஆமாம். நான் ஒரு failed accountant என்று தெரிந்தும் துணிந்து காமர்ஸ் க்ரூப் படித்தவள்.  

மற்றபடி நீயா நானா ஒளிப்பதிவு இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை ஒன்று சேர்த்து செய்வார்கள் என்றும் இது அடுத்த நாள் அதிகாலை வரை செல்லும் எனவும் ​
​பல பேர் முன்னாடியே பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கினர்

கேள்விப்பட்டதுண்டு. ஆனால் நேரில் பார்க்கையில் கொஞ்சம் நெருடலாய் இருக்கவே....சல்தா ஹை.. 


எனக்கு சரியாக பெயர் ஞாபகம் இல்லை ஆனால் சண் டி வியில் வந்த  சீரியல்
​ அதில் ஒரு டாக் ஷோ வரும் அதிலே இப்படி ஒரு சீன வரும் ஒருநபர் laugh, clap , பேச்சாளரை இடையூறு செய்து அடுத்து பேசவும், என கையில் போர்டுகளை வைத்து இருப்பார்
அவர் எந்த போர்டை தூக்கி கான்பிக்கிராரோ அதே போல பார்வையாளர்கள் செய்வார்கள் ​
அப்போது தான் ஓஹோ இப்படி தான் எமாற்றுகிரார்களோ என
​ தெரிந்து கொண்டேன்

இது ஊடக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிற பொது விதிமுறையாகக் கூட இருக்கலாம். ஆனால், என்னமோ குறைவதுபோல் இருக்கிறது என்பது தான் உறுத்தல். மிக்க நன்றி. 

என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
Aug 17, 2014, 1:10:37 AM8/17/14
to பண்புடன்
2014-08-16 21:43 GMT+05:30 BALAJI R <mitr...@gmail.com>:

எப்போ டிவி ல வருமாம் வேணு ஐயா?


இன்று அனேகமாக ஒளிபரப்பாகலாம். 

R.VENUGOPALAN

unread,
Aug 17, 2014, 1:11:52 AM8/17/14
to பண்புடன்
2014-08-17 9:44 GMT+05:30 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>:
ஒரு வீ ஐ பி பேட்டியை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரிய ஒயிட் போர்டில் பாய்ண்ட்ஸ் எழுதி வைத்து கொண்டு பார்த்து பார்த்து தான் பெட்டி அளித்தார். பேட்டிக்கே இப்படி> பேச சொனனால்?

இதெல்லாம் மீடியாவில் சகஜம். 

அவர்களுக்கு ரிசல்ட் தான் முக்கியம்

சரியாய்ச் சொன்னீங்க. அந்த வகையில் அவர்களைத் தப்பு சொல்ல முடியாது. மிக்க நன்றி. 

BALAJI R

unread,
Aug 17, 2014, 1:52:18 AM8/17/14
to panb...@googlegroups.com

அனேகமா இன்று பார்க்கும் வாய்ப்பு இல்லை. எப்போ மறுஒளிபரப்பாகும்?

--

Haja Muhiyadeen

unread,
Aug 17, 2014, 1:53:29 AM8/17/14
to பண்புடன்
உங்கள் குழலில் பார்க்கலாம் நாளை. 

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 17, 2014, 1:56:40 AM8/17/14
to panb...@googlegroups.com

2014-08-17 8:53 GMT+03:00 Haja Muhiyadeen <muhiy...@gmail.com>:
உங்கள் குழலில் பார்க்கலாம் நாளை

சவூதி நேரம் இரவு எழரைக்கே கிடைக்கும் அந்த நிகழ்ச்சி

ஆனாலும் இத்தனை தமிழ்ப்பற்று
​, என்னை கொஞ்சம் புல்லரிக்க வைத்துவிட்டது ​

Yogesh J

unread,
Aug 17, 2014, 2:09:30 AM8/17/14
to panb...@googlegroups.com

எனக்கு புதுசான விஷயம் இது.
ஏற்கனவே மீடியா இந்தமாதிரி ஷோக்கல்ல நம்மல ஏமாத்துவாங்கன்னு தெரியும் பட் இவ்லோ அனியாயமாங்குரது கொஞ்சம் ஜீரனிக்கமுடியல.முட்டால் ரசிகர்கள் இருக்குரவரைக்கும் விஜை டீவியோட டி ஆர் பி குரையிரதுக்குவாய்ப்பே இல்ல!
எங்க அப்பா கிட்ட இத சொன்னதுக்கு உனக்கு எல்லாவிஷயத்த பத்தியும் தப்பான கண்ணோட்டம் தான் இருக்கு இதமாத்திக்கோனு அரமணிநேரம் மொக்க அட்வைஸ் கெடச்சதுதான் மிச்சம்.
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>  
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>  
>  
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
your friend yogesh
you can't study well with out
techknology, today!
you can't stand  steadily with out techknology, tomorrow
so keep learning

skype me
 romio.yogesh,
FB
yogeshyogi
twitter
romioyogesh
330.gif

Haja Muhiyadeen

unread,
Aug 17, 2014, 2:22:34 AM8/17/14
to பண்புடன்
சினிமாவிலும் இப்படித்தான். சூட்டிங் நடக்கும்போதே வசனம் சொல்லித்தருவதை பார்க்க முடியும்

330.gif

மஞ்சூர் ராசா

unread,
Aug 17, 2014, 3:46:30 AM8/17/14
to பண்புடன்
நேரடி நிகழ்ச்சிகள் தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இப்படிப்பட்டவையே.

Asif Meeran

unread,
Aug 18, 2014, 9:27:01 AM8/18/14
to பண்புடன்
வேணு ஐயாவின் எழுத்தும் அவரது மகளின் பக்குவம்மும்தான் சுவாரஸ்யம்
ஆண்டனியின் இடைச்செருகல்கள் கோபியை வழிநடத்துகின்றன எனினும் கோபிக்கேயுரிய தனித்த
ஆளுமையும் நிகழ்ச்சிக்கு மெருகுசேர்க்கின்றன

கோட்டு கோபி என்று அழைக்கப்படும் கோபிக்கு பிடிக்கவே பிடிக்காத வார்த்தை எது தெரியுமா?
“கோட்டு”தான். :-)

vishalam raman

unread,
Aug 18, 2014, 1:00:43 PM8/18/14
to panbudan
அன்பு வேணுகோபாலன் ஜி  ஐயோ இத்தனை விஷயங்கள் உள்ளே நடக்கிறதா ? வெளியிலே  ஒன்றும் தெரியாதபடி நடத்துவதும் சாமர்த்தியம் தான் . கோட்டு கோபியை உள்ளிருந்து ஆட்டுவிக்கும் மனிதருக்கு ஒரு சபாஷ் போடணும்.
நல்ல வேளை  நான் இதில் பங்கு பெற நினைத்த ஆசையை மாற்றிக்கொண்டேன் . மிகவும் விறுவிறுப்பாக சம்பவத்தை 
அழகாக வர்ணித்து எழுதியதற்கு வாழ்த்துகள்


--

மஞ்சூர் ராசா

unread,
Aug 19, 2014, 1:08:33 AM8/19/14
to பண்புடன்
விசாலம் அம்மா வணக்கம் நலமா

R.VENUGOPALAN

unread,
Sep 3, 2014, 8:20:19 AM9/3/14
to பண்புடன்

சந்திப்பு


மூன்று வருஷம் ஆகியிருக்குமா? இருக்கலாம்.


முக்கால் டிரவுசரும் டி-ஷர்ட்டுமாய் எதிரே அமர்ந்திருந்தவனே, நாற்பதாண்டுக்கும் மேலாகப் பரிச்சயமானவனாய் இருந்தும் அன்னியமாய்த் தென்பட்டான். ஆகவே, அவனது ஆடம்பரமான வீடும், அதன் நெருடலான அமைதியும், அவனும் அவனது மனைவியும் உரையாடிய ஆங்கிலமும், டீப்பாயின் மீதிருந்த வெளிநாட்டு மதுபானக்குப்பியும், முற்றிலும் அன்னியமாய்த் தெரிந்ததில் ஆச்சரியமில்லை.


ஒவ்வொரு முறையும் வைத்தியின் மனைவி வந்து ஐஸ், நொறுக்குத்தீனி, தண்ணீர் என்று வைத்தபோதெல்லாம் இவன் ‘தேங்க்ஸ் டியர்என்று நன்றி சொல்லிக் கொண்டிருந்தான். தாம்பத்யத்தில் இத்தகைய சம்பிரதாயங்களின் அவசியமென்னவென்று எனக்குள்ளிருந்த பட்டிக்காட்டான் சிரித்துக் கொண்டிருந்தான். இதை நானும் கடைபிடித்தால் என்னவள் என்ன செய்வாள் என்று மனதுக்குள் ஒரு வேடிக்கைச்சித்திரம் ஓடியது.


ஆர் யூ ஷ்யூர்? நீ குடிக்கலியாடா?வைத்தி என்னிடம் கேட்டபோது, எனது கண்கள் டீப்பாயின் மீதிருந்த அந்த ஒற்றைக்கோப்பையின் பொன்னிற பளபளப்பைக் கொஞ்சம் சபலத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன என்பது உண்மைதான்.


‘வேணாண்டாஎன்று சொல்லிவிட்டு சற்று சிரமத்துடன் எனது பார்வையைத் திருப்பினேன்.


என்னமோ போடா, இத்தனை வருசம் கழிச்சு மீட் பண்றோம், ரொம்பத்தான் பிகு பண்ணறாய் நீஎன்றவாறு அந்த கிளாஸை மிக நாசூக்காகப் பிடித்துத்தூக்கி ஒரு மடக்கு பருகிவிட்டுக் கீழே வைத்தான். டிவியில் செய்தி வரவே, ரிமோட்டை எடுத்து வேறு வேறு சேனல்களை மாற்றிப் பார்த்தான். இடையில் இந்தியா – ஆஸ்திரேலியா பழைய மேட்சின் மறு ஒளிபரப்பில் ஒரு கணம் நிறுத்தியவன், மீண்டும் அவசர அவசரமாக மாற்றி, தலையும் புரியாமல் காலும் புரியாமல், பின்னணியில் அபத்தமான சிரிப்புச்சத்தம் எரிச்சலூட்டிய ஏதோ ஒரு ஆங்கில நிகழ்ச்சியில் நிறுத்தினான்.


‘நீ பார்க்கிறதுண்டா இதெல்லாம்?


சுத்தமாப் புரியாது. பார்க்கிறதில்லை. ஒப்புக்கொண்டேன்.


‘கிறுக்கன்டா நீ!முன்னொரு காலத்தில் மூச்சுக்கு நூறு முறை அவன் என்னை விளித்த பட்டப்பெயரைச் சொல்லவும் சட்டென்று அவனுடன் இன்னும் கொஞ்சம் நெருங்கியதுபோல இருந்தது. ஏறத்தாழ இருபது ஆண்டுகள் கழித்து சந்தித்தும், எங்களது அந்த சந்திப்பு மிகவும் சம்பிரதாயமானதாக இருப்பதுபோலவே ஒரு உணர்வு அங்கிருந்து புறப்படும்வரை இருந்தது. நான் புறப்பட்டதும்...


டிரைவரை விட்டு உன்னை டிராப் பண்ணச் சொல்றேண்டாஎன்று நான் சொல்லச் சொல்லக் கேட்காமல் குரல்கொடுத்து டிரைவருக்குக் கட்டளையிட்டான் வைத்தி. ‘நானே வந்திருப்பேன். பட், குடிச்சிட்டா வண்டியெடுக்கறதில்லை. ஷி இஸ் ஆல்ஸோ வெரி ஃபஸ்ஸி அபவுட் தட்!என்று விளக்கமளித்துவிட்டு எழுந்து என்னுடன் கைகுலுக்கியவன் கண்களில் சற்றே ஈரம் கோர்த்திருந்த்து போலிருந்தது. அல்லது எனது கண்களில் தானோ...?


வைத்தி அதிக நாட்கள் சென்னையில் வசிக்கவில்லை. ஆறு அல்லது ஏழு மாதங்களில், அவனது அலுவலகத்தைக் கூண்டோடு மும்பைக்கு மாற்றியதும், ஒரு தொலைபேசி சம்பாஷணையுடன் எங்களது தொடர்பு முடிந்தது. ஆனால், அவனது பளபளக்கும் விசிட்டிங் கார்டு ஒரு முறை வீட்டில் தட்டுப்பட, மனைவி விசாரித்தாள்.


‘அது ஒரு பெரிய கதை; இன்னொரு நாளைக்குச் சொல்றேன். என் பால்ய சினேகிதன்என்று சுருக்கமாகச் சொன்னேன்.


ஒரு சில மாதங்கள் கழித்து ஒரு திருமணம். தம்பதி சமேதராய் நானும் போயிருந்தபோது, மாப்பிள்ளை வீட்டாரின் உறவுகளில் ஒரு பரிச்சயமான முகம் தெரிந்தது. அறுபது வயதுக்குக் குறைவில்லாத அந்தப் பெண்மணியை அவரது மூக்கு காட்டிக் கொடுத்தது. ஓரிரு முறை சரியாகப் பார்த்துவிட்டு, பிறகு துணிச்சலை வரவழைத்துவிட்டு நெருங்கினேன்.


‘நீங்க சரஸ்வதி தானே?


‘ஆமாம். நீ... நீங்க...?


‘என்னை அடையாளம் தெரியலையா? நான் வேணு...!


‘குண்டு வேணுவா?என்று கேட்டு உடனே சுதாரித்துக்கொண்டு, ‘சாரிடா, அப்படியே கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பழகிடுத்தா? தப்பா நினைச்சுண்டுடாதேடா!என்று முகம்சிவக்கச் சிரித்தாள்.


‘அதனாலென்ன, எல்லாரும் அப்படிச் சொல்லிச் சொல்லியே நான் இப்ப இப்படியாயிட்டேன் பாருங்கோ,என்று நானும் சொல்லிச் சிரிக்க, பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டோம். பிறகு...


‘இவதான் என்னோட பார்யாள். ஆசீர்வாதம் பண்ணுங்கோ அக்காஎன்று இருவரும் காலைத் தொட்டு வணங்கியதும் ஷேமமா இருங்கோஎன்ற சரஸ்வதியின் கண்களில், நிச்சயம் அவரது கண்களில் தான், நீர் கோர்த்திருந்த்து. விலாசம் கொடுத்துவிட்டு ‘அவசியம் வீட்டுக்கு வரணும்என்று வேண்டிக்கொண்டுவிட்டு, அன்று வீடுதிரும்புகையில் மீண்டும் மனைவி கேட்டாள்.


“அந்த அக்கா யாருன்னா..?


அது ஒரு பெரிய கதை; அப்புறம் சொல்றேன்.


மின்வெட்டு உச்சத்திலிருந்த ஒரு நாளில், மொத்தக் குடும்பமும் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தபோது, வைத்தியைப் பற்றிப் பேச்சுவர, அவனது கதையை அவிழ்க்க வேண்டிய தருணம் வந்தது.


வைத்தியின் அப்பா ராமசந்திர சாஸ்திரிகள் வேதவிற்பன்னர். அவரது மனைவி சீதா சாட்சாத் அன்னபூரணி. வைத்திதான் கடைக்குட்டி. அவனுக்கு முன்னால் சாவித்திரி என்று ஒரு தமக்கையும், ராஜாமணியென்று எல்லாருக்கும் மூத்தவனாய் ஒரு அண்ணனும். ராமசந்திர சாஸ்திரிகள் ராஜாமணியை அந்தக் காலத்திலேயே மெட்றாஸுக்கு அனுப்பி இஞ்சினீயரிங் படிக்க வைத்தார். அவனும் பின்னாளில் அரசு உத்தியோகத்துக்குச் சென்று வாழ்க்கையில் வெற்றி பெற்றான். எங்களது சிவராத்திரி நாடகங்களுக்கு ராஜாமணிதான் ஸ்கிரிப்ட் எழுதித்தருவான். அப்புறம் என்னென்னமோ படித்து கல்கத்தா போய்விட்டான். சாவித்திரிக்கு பதினெட்டு வயதிலேயே திருமணமாகி சமர்த்தாக பெங்களூரில் குடிபெயர்ந்து விட்டாள். வைத்தி மட்டும் ஊரிலேயே இருந்து எஸ்.எஸ்.எல்.ஸி வரை படித்தான்.


வைத்தி எம்.ஜி.ஆர் பக்தன். கொல்லைப்புறத்தில் கர்லாக்கட்டை சுற்றுவான். அப்பாவுக்குத் தெரியாமல் ஆற்றைக்கடந்து கோதைப்பிடாரம் சென்று சிலம்பம் கற்றுக்கொண்டான். பாலமோர் ரோட்டிலிருந்த கடையிலிருந்து பாதாம்பிசின் வாங்கிவந்து, தண்ணீரில் ஊறவைத்து பல்விளக்கியதும் விழுங்குவான். பிறகு வடிவீஸ்வரத்திலிருந்து ஓட ஆரம்பித்து, கோட்டாற்றைச் சுற்றி, கம்போளம் வழியாக ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர்கள் நாக்குத்தள்ளுமளவுக்கு ஓடிவருவான். மாடியில் உத்திரத்திலிருந்து ஒரு கயிறுகட்டி, அதில் ஓட்டைபோட்ட ரப்பர்பந்தைப் பொருத்தி, பேட்டிங் பயிற்சி நடத்துவான். கேரம்போர்டு, செஸ் போன்ற விளையாட்டுக்களெல்லாம் அவனைப் பொறுத்தவரை பெண்களுக்கானவை. பம்பைத்தலையுடன் மைதானத்தில் அவன் பௌலிங் போட ஓடிவரும்போது பேட்ஸ்மேன்களுக்குக் கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்கும். பேட்டிங்கிலும் குற்றம் சொல்வதற்கில்லை. மாலையில் பள்ளி முடிந்து திரும்புகையில் நகராட்சிப் பூங்காவில் பார் விளையாடுவான். எப்போதாவது அதிசயமாய்க் கோவிலுக்குள் சட்டையைக் கழற்றிவிட்டு அவன் வரும்போது, அவனது உடல்வாகுவைப் பார்த்து நெருங்கிய நண்பர்களே பொறாமைப்படுவார்கள். (நான் உட்பட!)


மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அப்போதுதான் தொடங்கியிருந்தன. பள்ளியின் அணியில் விளையாடும் ஆசையில் ட்ரில் மாஸ்டரைப் பார்க்கப்போயிருந்தான் வைத்தி. ‘கீரைத்தண்டும் தயிர்சோறும் திங்குறவனுங்க ஆடுற விளையாட்டில்லை இதுஎன்று வக்கிரமாக உதாசீனப்படுத்தப்படவே, முகம் சிவக்க நேராக தலைமையாசிரியர் அறைக்குள் சென்றான். அழுதுகொண்டே போனவன் சிரித்துக்கொண்டே வெளியே வந்தான்.


இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில், ட்ரில் மாஸ்டர் வேண்டுமென்றே வைத்தியை உட்காரவைக்க முடிவு செய்திருந்தார். ஆனால், மூன்றாவதாகவோ, நாலாவதாகவோ ஆடவேண்டிய கேசவன்குட்டி வருகிறவழியில் சைக்கிளோடு விழுந்து சிராய்த்துக்கொண்டதால், வைத்தி சேர்த்துக்கொள்ளப்பட்டான். அப்போதைக்கு மிகவும் பலமான பேட்டிங் என்று அஞ்சப்பட்ட டிவிடி பள்ளியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களைத் தூசுபோலத் துடைத்தான். மறுநாள் பேட்டிங் முறை வந்தபோது, சொற்பப்பந்துகளில் 40+ எடுத்து அணியை முன்னுக்குத் தள்ள உதவினான். அதன்பிறகு, ட்ரில் மாஸ்டர் எந்த அணியைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் பிள்ளையார் சுழிபோல வைத்தி அவசியம் இருந்தான்.


வைத்திக்குப் பிடித்ததெல்லாம் கிரிக்கெட், எம்.ஜி.ஆர் சினிமா. அவனது ஆசையெல்லாம் மெட்ராஸுக்குப் போய் கல்லூரிப்படிப்பைத் தொடர வேண்டும். கிரிக்கெட் ஆட வேண்டும். அட் லீஸ்ட், ரஞ்சியாவது ஆட வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, பல்லாண்டுகளாக அவன் செய்தித்தாள்களிலிருந்தும், பத்திரிகைகளிலிருந்தும் சேகரித்து ஒட்டிப் பத்திரப்படுத்தி வைத்திருந்த படங்களை, எம்.ஜி.ஆரிடம் காட்ட வேண்டும்.


எல்லாரும் உத்யோகத்துக்குப் போயிட்டா மனுஷாளுக்கு உபகர்மா செய்ய யாரு வருவா?ராமசந்திர சாஸ்திரிகள் சீறுவார். ‘என் தோப்பனார் என்னைப் படிக்க வைச்சிருந்தா இவ்வளவு புண்ணியம் சேர்த்திருப்பேனா? அவனை நான் காஞ்சீபுரத்துக்கு அனுப்பப்போறேன். அது தெரியாம, இவன் கிரிக்கெட் அது இதுன்னு பேத்திண்டு திரியறான்.


வைத்திக்கு வைதீகம் பிடிக்கவில்லை. ‘நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் புகையிலே வேகறதெல்லாம் ஒரு பொழப்பா? நேக்கு மெட்ராஸ் போணும். நீர் முடியாதுன்னு சொன்னா, நானே போயிடுவேன்என்று சண்டையிட்டான். வழக்கம்போல அப்பா,பிள்ளை சண்டையில் சீதாமாமி கண்ணீர் உகுத்தபடி அமைதியாய் இருப்பார்.


சங்கராச்சாரியார் கிராமத்துக்கு வந்த்தும், ராமசந்திர சாஸ்திரிகள் ஆசாரியாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ‘என் புள்ளையாண்டனைக் கரையேத்துங்கோ. அவனை உங்க காலடியிலேயே வைச்சுக்குங்கோஎன்று கண்ணீர்பெருக வேண்டி, வெற்றியும் பெற்றுவிட்டார். ஆனால், வீடு திரும்பியதும்தான் பூகம்பம் வெடித்தது.


“உமக்குக் கிறுக்குப் பிடிச்சிடுத்தா ஓய்?”வைத்தி சீறினான். ”நீர் சொன்னீர்ங்கிறதுக்காகத்தான் எல்லாத்தையும் கத்துண்டேன். நேக்கு இந்த வைதீகமெல்லாம் சரிப்படாது. அதெல்லாம் உம்மோட ஒழியட்டும். போனாப்போறதுன்னு சும்மாயிருந்தா, என்னை மடத்து உண்டியல்லேயே போட்டுட்டீரா? நீரும் ஆச்சு, உம்ம வைதீகமும் ஆச்சு. நான் கிளம்பறேன்.


வைத்தி வீட்டைவிட்டுக் கிளம்பிய சிலமணி நேரம் கழித்துத் திரும்பியபோது, ராமசந்திர சாஸ்திரிகள் ஷ்யாமளா பாலசுந்தரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த்து தெரிய வந்த்து. வாய் கோணி, ஒரு கால், ஒரு கை இழுத்திருக்க, பாதிப்பிரேதமாய்ப் படுத்திருந்தார் சாஸ்திரிகள்.


அடுத்த ஒரு சில மாதங்கள் வைத்தியின் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியமைத்த மாதங்கள். அப்பாவின் வைதீகப்பணியை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய கட்டாயம். படுத்த படுக்கையான அப்பாவையும், இடிவிழுந்தாற்போல குலைந்துபோயிருந்த அம்மாவையும் கடைத்தேற்ற வைத்தியின் கனவுகள் எல்லாம் பலியாகின. கிரிக்கெட், எம்.ஜி.ஆர் எல்லாம் எட்டாக்கனிகளாகின. கூடவே, அவன் மிகவும் விரும்பிய இன்னொரு ஜீவனிடமிருந்தும் அவன் மெல்ல மெல்ல விலக நேர்ந்தது.


வைத்திக்கு ஒரு சின்ன காதல் கதையிருந்த்து. கொஞ்சம் விரசமான கதை. அதே தெருவில் செவ்வாய் தோஷம் காரணமாய், திருமணமாகாமலிருந்த ஒரு முதிர்கன்னிக்கும் அவனுக்கும் ஒரு தினுசான உறவு இருந்தது. அவனைவிடவும் அவளுக்குப் பத்து வயது அதிகம். அவர்களின் ரகசியங்களில் பெரும்பாலானவை எனக்கும் தெரியும். மற்றவைகளில் நான் சாட்சி! அதெல்லாம் சட்டென்று வெட்டுப்பட்டது.


வைத்தி வேண்டாவெறுப்பாய் வைதீகம் செய்ய நேர்ந்தபோதிலும், அப்பாவுக்குப் பிள்ளையாய் செய்வதைத் திருந்தச் செய்தான். சைக்கிள் வாங்கினான்; நாகர்கோவிலுக்கு வெளியேயும் செல்ல நேரவே, ஒரு ராயல் என்ஃபீல்ட் புல்லட் வாங்கினான். நாளடைவில் அவன் பெயரே ‘புல்லட் வைத்திஎன்றானது.


வைத்தியின் முன்னாள் காதலியை, அவளைவிடவும் மிக அதிக வயதான ஒரு செவ்வாய்தோஷ மாப்பிள்ளைக்குக் கல்யாணம் செய்துவைத்தார்கள். அன்றைய தினம், வீடு திரும்பிய வைத்தி படுக்கையில் நாராய்க் கிழிந்து கிடந்த அப்பாவைப் பார்த்துக் கதறினான். ‘திருப்தியா உமக்கு? இது போதுமா?’.


பதிலளிக்கவும் முடியாமல் படுத்திருந்த சாஸ்திரிகள், பல மாதங்கள் கழித்து, ஊரெல்லாம் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த ஒரு தீபாவளியின் அதிகாலையில் கடைசி மூச்சை விட்டார். அவருக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து முடித்தபின், சீதாமாமி மூத்த மகனுடன் கிளம்பிவிட்டாள். அவரது வருஷாப்திகம் முடியும் முன்னரே நான் ஊரிலிருந்து கிளம்பியதால், ஒரு சில வருடங்களுக்கு வைத்தியுடன் எனக்குத் தொடர்பே இல்லாமல் போனது. ஆனால், 87-இன் ஆரம்பத்தில் தில்லியில் சந்தித்தோம்.


குடுமியை எடுத்திருந்தான். சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தபால் தந்தி இலாகா அமைச்சகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தான். விட்டகுறை தொட்டகுறை போல மீண்டும் எங்களது நட்பு தொடர்ந்தது. மாலையில் ஏதோ கம்ப்யூட்டர் படிப்பதாகவும் அமெரிக்கா போவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தவன், ஒரு நாள் ‘விசா கிடைச்சிடுச்சு. அடுத்த வாரம் போறேன்என்று சொன்னபோது, நான் இருந்த்து கான்பூரில்.


அத்துடன் எங்களது தொடர்பு முடிந்திருக்க வேண்டும்; முடியவில்லை. சினிமாக்களில் வருவதுபோல அவன் அமெரிக்காவுக்குச் சென்று ஏதோ ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, டாலர் டாலராக்க் குவித்து, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ஒரு பெங்காலிப்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, குழந்தைகள் பெற்று, வளர்த்து, திருமணம் செய்துகொடுத்து, அக்கடாவென்று மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியபோது சென்னையில் அவனைச் சந்திக்க நேர்ந்த்து.


அவனைச் சந்தித்தபோது ராமகிருஷ்ண சாஸ்திரிகளைப் பற்றியோ, அவனது வைதீக வாழ்க்கையைப் பற்றியோ கேட்க மனம் ஒப்பவில்லை. அவனது வினோதமான காதலைப் பற்றியும் கேட்கவில்லை. அவனது கிரிக்கெட் ஆர்வம் பற்றியும் கேட்கவில்லை. எனது தர்மசங்கடத்தைப் புரிந்து கொண்டவன்போல, அவனும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றித்தான் பேசினான்.


அந்தப் பொண்ணைப் பத்தி உங்க கிட்டே கேட்கலியா?என்று வினவினாள் என் மனைவி.


இல்லை!என்றேன் நான். “அவளும்தான் அவனைப் பத்தி என்கிட்டே கேட்கலை.


அவளை எப்போ பார்த்தீங்க?


எனது பதில் அதிர்ச்சியூட்டுமென்று தெரிந்திருந்தும் சொன்னேன்.


‘அதான் கல்யாணத்துலே பார்த்தோமே, மறந்திட்டியா?’ 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மஞ்சூர் ராசா

unread,
Sep 3, 2014, 8:52:36 AM9/3/14
to பண்புடன்
அசத்தலான கதை (நிஜம்!).   முடிவும் சூப்பர்.


--

Srimoorthy S

unread,
Sep 3, 2014, 8:55:28 AM9/3/14
to பண்புடன்
கதையின் உட்கருத்து எதுவும் புரியலை.

சட்டன் டர்ன் இந்த கதைல எது?

Asif Meeran

unread,
Sep 3, 2014, 9:19:19 AM9/3/14
to பண்புடன்
செம.. செம.. வழக்கம் போல அசத்தல் வேணுஜி


BALAJI R

unread,
Sep 3, 2014, 12:52:55 PM9/3/14
to panb...@googlegroups.com

உண்மையோ  உடான்சோ
நல்ல பொழுதுபோக்கு கதை வேணு ஐயா.

--

PRASATH

unread,
Sep 3, 2014, 2:09:43 PM9/3/14
to பண்புடன்
கதைக்கரு சூப்பர்...

ஆனால், கொஞ்சம் ஷார்டா கொடுத்திருக்கலாம்... கொஞ்சம் வளவள ரகம்...

R.VENUGOPALAN

unread,
Sep 3, 2014, 9:13:28 PM9/3/14
to பண்புடன்
2014-09-03 18:22 GMT+05:30 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>:
அசத்தலான கதை (நிஜம்!).   முடிவும் சூப்பர்.


 மிக்க நன்றி அண்ணல்.

It is loading more messages.
0 new messages