இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..!

54 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Oct 11, 2014, 5:10:20 AM10/11/14
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்
வாழ்க உறவுகள் .... 
இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது  .
இந்த இழை மேலும் வளரத்  தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்  

கவனித்துக் கணித்த சில....!

396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்

397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு
 
398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி

(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது

400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

R.VENUGOPALAN

unread,
Oct 11, 2014, 5:46:25 AM10/11/14
to தமிழ்த்தென்றல், பண்புடன்
வாழ்த்துகள் கவிஞரே! வாசித்து ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் கருத்து சொல்லும் அளவுக்கு மரபு குறித்த அறிவு எனக்கு கம்மி. தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம். :-)

--
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்த்தென்றல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhthendr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--

R.VENUGOPALAN

ஹாஜா மொஹைதீன்

unread,
Oct 11, 2014, 5:56:07 AM10/11/14
to panb...@googlegroups.com

2014-10-11 12:09 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
வாழ்க உறவுகள் .... 
இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது  .
இந்த இழை மேலும் வளரத்  தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்  

வாழ்த்துக்கள் மாம்ஸ்

என்றென்றும் அன்புடன்
அபு அப்துல்லாஹ் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Sahul Hameed Usman

unread,
Oct 11, 2014, 6:36:31 AM10/11/14
to nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள்

மனதை கவர்ந்தது 

குறள்396)  கருவுற்ற வெண்மேகம் பெண் என்றால் 
பட் கருவுற காரணமாக 2 பேரு இருக்காங்களே 1) சூரியன் 2) கடல்
2 பேரு இருந்தா என்ன மக்களுக்கு  நல்லது நடக்குதான்னு பார்க்கணும்  ஆராயக்குடாதுதான் 

2014-10-11 12:09 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது

--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது உஸ்மான் 

துரை.ந.உ

unread,
Oct 11, 2014, 6:57:27 AM10/11/14
to தமிழ் சிறகுகள், nadp...@googlegroups.com, பண்புடன், தென்றல்

2014-10-11 16:06 GMT+05:30 Sahul Hameed Usman <sahu...@gmail.com>:

மனதை கவர்ந்தது 

குறள்396)  கருவுற்ற வெண்மேகம் பெண் என்றால் 
பட் கருவுற காரணமாக 2 பேரு இருக்காங்களே 1) சூரியன் 2) கடல்

​எய்யா...சாமி ... குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீரும் 
1) சூரியன் 2) கடல்- சேர்ந்து உருவாவதுதான் மேகம் ... இவங்க மேகத்துக்கு அம்மா, அப்பா

​குறள்ல என்ன கேட்டுருக்கேன்னுல்லாம் பாக்காம ​
எதப் போயி எங்கே கோத்துவிடுதீரு!!!!!!!!!!!!!!!

Sahul Hameed Usman

unread,
Oct 11, 2014, 7:54:42 AM10/11/14
to nadp...@googlegroups.com, தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல்

:)))

2014-10-11 13:57 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
எய்யா...சாமி ... குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீரும் 

Arumbanavan A

unread,
Oct 12, 2014, 1:55:32 AM10/12/14
to பண்புடன்
வாழ்த்துக்கள் மாம்ஸ்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Jaisankar Jaganathan

unread,
Oct 12, 2014, 1:58:27 AM10/12/14
to panb...@googlegroups.com
அரும்பு, துரை அண்ணன். 

இரண்டு பேரும் வாழ்த்து  சொல்லிக்கிறத பாத்தா டவுட்டா இருக்கு. ஒருத்தருக்கு ஒருத்தர் எப்பவுமெ வாழ்த்து சொல்லிக்கிறாஙக்.என்னவோ இருக்கு
regards,
jaisankar jaganathan

Arumbanavan A

unread,
Oct 12, 2014, 2:00:01 AM10/12/14
to பண்புடன்
இதுக்கு  பேரு தான் அமைதியா இருக்குறதா (ரீ டரா இருக்குறதா)?????????????????????

Jaisankar Jaganathan

unread,
Oct 12, 2014, 2:03:18 AM10/12/14
to panb...@googlegroups.com
நைட் 10 மணியில் இருந்து காலை 8 மணிவரை அமைதியா இருந்தேனே

Arumbanavan A

unread,
Oct 12, 2014, 2:13:04 AM10/12/14
to பண்புடன்
என்ன ஆச்சு உங்களுக்கு தயவுசெய்து மருத்துவரை அணுகவும்,இது உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும் நல்லது.

மொக்கை என்ற பெயரில் தாங்கள் செய்பவை மொக்கை அல்ல என்பதை தங்களுக்கு பலமுறை இலைமறை காய்மறைவாக தெரிவித்து இருக்கிறேன்,

இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன தான் செய்வது.???????????

துரை.ந.உ

unread,
Oct 14, 2014, 5:49:20 AM10/14/14
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

ஆணவம்

401)
சித்தர் இருப்பார்தன் உள்மறைந்து; பித்தர் 
பறப்பார்தன் ஆற்றல் வியந்து 

402)
வீழ்ந்தழிந்த சித்தாந்தம் வாழ்வதாய் எண்ணியே
வாழ்ந்திழிந்து போவோர் உளர்

403)
பகலில் விளக்கேற்றும் பித்தரைச் சுற்றி
இரவில் இருக்கும் இருட்டு

404)
தானென்னும் எண்ணம்தம் உள்கொண்டோர்; தானே
நகர்வதாய்ச் சொல்லும் நிழல்

405)
விட்டுக் கொடுப்பதால் கெட்டுவிட மாட்டாய்;
கெடவேண்டும் என்றால் மறு

துரை.ந.உ

unread,
Oct 14, 2014, 5:52:02 AM10/14/14
to பண்புடன், தமிழ்த்தென்றல்
வாழ்க ஐயா... மிக நன்றி

புரியும்படி எழுதுறேனான்னு மட்டும் சொல்லீருங்க :)0

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Oct 14, 2014, 5:52:39 AM10/14/14
to பண்புடன்
மிக நன்றி

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Oct 14, 2014, 5:53:12 AM10/14/14
to பண்புடன்
மிக நன்றி

2014-10-12 11:25 GMT+05:30 Arumbanavan A <arumb...@gmail.com>:

துரை.ந.உ

unread,
Oct 14, 2014, 5:53:25 AM10/14/14
to பண்புடன்
மிக நன்றி

Sahul Hameed Usman

unread,
Oct 14, 2014, 10:27:35 AM10/14/14
to tamizhs...@googlegroups.com, பண்புடன், தென்றல், நட்புடன்
 
403) இது மட்டும் தான் நல்லா புரியுது அண்ணே :)
பகலில் விளக்கு போடக்கூடாதுன்னு சொல்றீங்கோ
ரைட்
 
2014-10-14 12:48 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

403)
பகலில் விளக்கேற்றும் பித்தரைச் சுற்றி
இரவில் இருக்கும் இருட்டு

--
--

துரை.ந.உ

unread,
Oct 20, 2014, 1:53:24 AM10/20/14
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
அப்பப்போ வாங்கண்ணே :)

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Oct 20, 2014, 1:59:04 AM10/20/14
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

மடக்கு

(மடக்கு = ஒரு சொல், இரு பொருள்)
//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//

மடக்குக்குறள்:
(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )

406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்

407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்

408)
விலங்கும் சிறையும் தவறைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது

409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து

410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு

Sk Natarajan

unread,
Oct 22, 2014, 2:14:46 AM10/22/14
to தமிழ்ச் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
அருமை 
வாழ்த்துகள் 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

2014-10-20 11:28 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

மடக்கு

(மடக்கு = ஒரு சொல், இரு பொருள்)
//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//

மடக்குக்குறள்:

(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )

406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்

407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்

408)
விலங்கும் சிறையும் தவறைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது

409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து

410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு

--

யாக்கோப் ஆண்டனி

unread,
Oct 22, 2014, 2:36:39 AM10/22/14
to panb...@googlegroups.com
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து 

அருமை ......
தொடருங்கள்..... காத்திருக்கிறோம் 

துரை.ந.உ

unread,
Nov 10, 2014, 7:51:03 AM11/10/14
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
 மிக நன்று சாக்கி

2014-10-22 11:44 GMT+05:30 Sk Natarajan <sknatar...@gmail.com>:

துரை.ந.உ

unread,
Nov 10, 2014, 7:51:27 AM11/10/14
to பண்புடன்
மிக நன்றி

துரை.ந.உ

unread,
Nov 10, 2014, 8:38:32 AM11/10/14
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

இது அழகு

என்குறள் / பொருள் / 421 - 425

பார்வையே அழகு
_____________________

ஊனத்தை வென்றுஅதை உன்குறியீ(டு) என்றாக்கு;
கூன்தானே ஔவைக்(கு) அழகு

முத்துப்பல் காட்டிவரும் சிட்டுக்கள் கூட்டிவரும்
தெத்துப்பல் பாட்டி அழகு

நேர்த்தியாய் செய்யும் செயலுக்குள் நேரும் 
தவறுக்கும் சேரும் அழகு 

புதரோ பதரோ அழகருகே நின்றால்
அதற்கும் வருமாம் அழகு

இருக்கும் இடமே சிறப்பாம் ஒருவர்க்கு;
இரவே நிலவுக்(கு) அழகு

Sk Natarajan

unread,
Nov 11, 2014, 8:20:10 AM11/11/14
to தமிழ்ச் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
அருமை 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை    :  தமிழ் சுவாசம்     http://tamizhswasam.blogspot.in/
குழுமம்    :  தமிழ்ச்சிறகுகள்    http://groups.google.com/group/tamizhsiragugal

ஆரம்ப நிலையில் தான் அடுத்தவர் பாராட்டைப்  பெற மனம் நாடும்
அதற்கடுத்த நிலையில் மனம் புடம் போடப் பட்டு எதையும் தாங்கும்

துரை.ந.உ

unread,
Nov 14, 2014, 10:20:20 AM11/14/14
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
 நன்று

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jan 6, 2015, 8:27:04 AM1/6/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Jan 6, 2015, 11:43:27 PM1/6/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

கற்பனைச் சிறகடித்தால்.....

அழகியல் - சும்மா சில வரிகள் :

446)
கரையும் அலையும் உரசும் பொழுது;
கரையும் அலையும் மனது

447)
கரையில் உறங்கும் படகு: கடலுள் 
இறங்க விரியும் சிறகு

448)
கடலின் மடியில் இரவின் முடிவில்
நொடியில் விடியும் பொழுது

449)
உதிர்ந்த பிறகே உதிக்கும் சிறகு;
பறக்கத் துவங்கும் சருகு

450)
தாகம் தணிக்க விழுமாம் மழைவிழுது;
மேகமது மோதும் பொழுது

படங்களுடன் பார்க்க சுட்டியில் சொடுக்கவும் ( படத்தின் அளவு பெரியதாக இருப்பதால் இங்கே பதிவிட இயலவில்லை ) .. மன்னிக்கவும் :)

2015-01-06 18:56 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

யாக்கோப் ஆண்டனி

unread,
Jan 7, 2015, 1:28:39 AM1/7/15
to panb...@googlegroups.com

புதரோ பதரோ அழகருகே நின்றால்
அதற்கும் வருமாம் அழகு .... . 

அருமை .... 

வேந்தன் அரசு

unread,
Jan 7, 2015, 5:48:44 AM1/7/15
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
வளைதாண்டி வாழாது நண்டு

சூப்பரு

11 அக்டோபர், 2014 ’அன்று’ 5:09 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:
வாழ்க உறவுகள் .... 
இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது  .
இந்த இழை மேலும் வளரத்  தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்  

கவனித்துக் கணித்த சில....!

396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்

397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு
 
398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி

(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது

400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Jan 7, 2015, 5:52:18 AM1/7/15
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
துரை

அறிவியல், உடல்நலம் போன்ற தலைப்புகளில் குறள் எழுதுங்க

7 ஜனவரி, 2015 ’அன்று’ 5:48 முற்பகல் அன்று, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> எழுதியது:

துரை.ந.உ

unread,
Jan 8, 2015, 1:03:44 AM1/8/15
to பண்புடன்
2015-01-07 11:58 GMT+05:30 யாக்கோப் ஆண்டனி <yac...@gmail.com>:

புதரோ பதரோ அழகருகே நின்றால்
அதற்கும் வருமாம் அழகு .... . 

அருமை .... 

​மிக நன்றி ஐயா 
 
துரை.ந.உ

unread,
Jan 8, 2015, 6:05:52 AM1/8/15
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
2015-01-07 16:18 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
வளைதாண்டி வாழாது நண்டு

சூப்பரு

​ நன்றி​
 
​வேந்தே 

துரை.ந.உ

unread,
Jan 8, 2015, 6:06:41 AM1/8/15
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
2015-01-07 16:22 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
துரை

அறிவியல், உடல்நலம் போன்ற தலைப்புகளில் குறள் எழுதுங்க

​அப்படியே ஆகட்டும் வேந்தே 
 
துரை.ந.உ

unread,
Jan 13, 2015, 2:24:47 AM1/13/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

வாழ்வின் சுவை கூட்டச் சில துணுக்குகள் !

பொருள் - சுவைத்துத்தான் பாருங்களேன் !

456)
போகட்டும் விட்டொழி என்றுரைப்போர்; ஆகட்டும்
காத்திருப்போம் என்போர்க்கும் மேல்

457)
ஓர்வழியில் திட்டமிட்டுக் காத்திருப்போம்; வேறுவழி 
தேர்ந்தெடுத்துப் பாய்ந்திருக்கும் வாழ்வு

458)
எதிர்பார்த்து இருப்பது இழிவு;எதையும் முன்வந்து 
எதிர்கொண்டு வாழப் பழகு

459)
மாற்றத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள் உன்நிலையை;
தோற்றோடும் தோல்வி விரைந்து

460)
வெண்பனியைப் பார்க்க வழியில்லை என்றானால்
முன்பனியை ஏற்கப் பழகு

2015-01-07 10:13 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

துரை.ந.உ

unread,
Mar 9, 2015, 1:50:38 AM3/9/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

இனிது...இனிது....காதல் இனிது ...!

காதலதிகாரம் :
அவனதிகாரம் :
461)
​​வெண்பாவை என்கண்முன் துள்ளும் பொழுதெல்லாம்
​​வெண்பாவைத் துப்பும் மனது 

462)
​​பாவாடை​க் கட்டியே பாவையவள் முன்வந்தால்
​​பாவாடைக் கூட்டும்என் பேச்சு
 
அவளுக்குச் செய்தி :
463)
கண்ணாடி யின்மேல் விழுந்ததடி போல்உன்சொல்
என்னுள் விழுந்த தடி 

464)
கன்னிவைக்கும் கண்ணியென்பது உண்மையெனில் நானுந்தன்
கண்ணிமைக்கும் முன்குதிப்பேன் காண் 

465)
குறும்பாட்டை*க் கேட்பாயென்று ஓடோடி வந்தேன்;
குறும்பாட்டை**க் கேட்கிறாய் நீ
 
(*சிறு பாட்டு **​இள ஆடு)

அவளதிகாரம்
466)
தானே நுழைந்தானே என்னுள்ளே; தந்தானே
'தானே'*யும் தந்த விளைவு
 
(* - புயல்)

467)
மாமனை* ஒன்றுகட்டி வைத்திருக்கும் மாமனை
வென்றுகட்ட மாதெனை வாழ்த்து 

(* - பெரிய வீடு) 

468)
அவரைக் கொடிபோல் அடர்ந்தும் படர்ந்தும்
அவரைப் பிடிப்பேன் விரைந்து 

அவனுக்குச் செய்தி :
469)
நீர்சூழ்ந்தால் மண்ணாகும் பாழ்த்தீவு; நீர்சூழ்ந்தால்
நானாவேன் சர்க்கரைக்கூழ்ப் பாகு 

470)
நீரில்லா ஊரைப்போல் நீரில்லா நானும்தான்
நாறித்தான் போவேனாம் இங்கு

shylaja

unread,
Mar 9, 2015, 3:09:44 AM3/9/15
to பண்புடன்
படமும் பாடலும் அழகோ அழகு துரை.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
 
அன்புடன்
ஷைலஜா

//நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்

,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
///

பாரதி

Ahamed Zubair A

unread,
Mar 9, 2015, 4:30:24 AM3/9/15
to நட்புடன், பண்புடன், தென்றல், தமிழ் சிறகுகள்
பாவாடை​க் கட்டியே 

க் வரக்கூடாது...

எதுவுமே வரக்கூடாதுன்னு யாரும் சொல்லிடாதீங்க மக்களே.... :-))

2015-03-09 8:50 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

ருத்ரா

unread,
Mar 10, 2015, 7:51:29 AM3/10/15
to tamizhs...@googlegroups.com, panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, nadp...@googlegroups.com
அகநானூறு புறநானூறு போல்
"துரைநானூறு"பிம்பம் காட்டி
குறுநானூறு தந்த தங்கள் சாதனைக்கு
மனமார்ந்த பாராட்டுகள்.

வாழ்த்துக்களுடன்
ருத்ரா

(மூச்சு வாங்குகிறது.இப்போது தான் உங்களின் 400 ஆவது மைல் கல்லில் நிற்கிறேன்.நீங்களோ 500க்கு தாவிக் கொண்டிருக்கிறீர்கள். அகம் புறம் இரண்டுமே அலையடிக்கும் உங்கள் "அலை நானூறுகளை" நானூறு ஐநூறு என்று எண்ணிக்கொண்டிருக்க‌ முடியாது.உங்கள் குறள் அலைகள் ஓய்வதேல்லை)

On Saturday, October 11, 2014 at 2:10:18 AM UTC-7, துரை. ந.உ wrote:
வாழ்க உறவுகள் .... 
இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது  .
இந்த இழை மேலும் வளரத்  தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்  

கவனித்துக் கணித்த சில....!

396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்

397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு
 
398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி

(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)

399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது

400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு

துரை.ந.உ

unread,
Mar 31, 2015, 11:42:33 AM3/31/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

உனக்குள்ளும் ஒளிந்திருப்பார் இவர் :

471)
வேலையின்றி நின்றிருப்பார்; ஆனாலும் வெட்கமின்றி
நேரமில்லை என்றுரைப்பார் பார்

472)
இல்லாத ஒன்றை இருப்பதாய்ச் சொல்லியே
இல்லாதது செய்வார் இவர்

473)
ஆசை மலையளவு உள்ளிருந்தும் வீசை 
விலையென்ன என்பார் இவர்

474)
குறைவில் நிறைபொருள் சொல்வார்; நிறைய 
நிறைவின்றி பேசிடுவார் நின்று

475)
பூசணியைச் சோற்றில் மறைத்திடுவார் அன்(று);அதையே
காற்றில் கரைத்திடுவார் இன்று
,

துரை.ந.உ

unread,
Apr 1, 2015, 4:50:08 AM4/1/15
to பண்புடன்
 நன்றி அக்கா

துரை.ந.உ

unread,
Apr 1, 2015, 4:55:22 AM4/1/15
to தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல், நட்புடன்
வாழ்க ஐயா ....மிக மகிழ்ந்தேன் 

மிக நன்றி 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Arumbanavan A

unread,
Apr 4, 2015, 1:21:09 AM4/4/15
to பண்புடன்
மாம்ஸ் அருமை..
 
471.ரெண்டு பார் வேணுமா?(7 க்கு பிளான் பண்ணி இன்னொன்னு சேர்த்து கொண்டீர்களோ..:))
 
473.இதில் நீங்கள் எந்த வீசையை சொல்றீங்க?
 
475.புரியலை  மாம்ஸ் விம் ப்ளீஸ்..
 
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

துரை.ந.உ

unread,
Apr 4, 2015, 1:44:31 AM4/4/15
to பண்புடன்
2015-04-04 10:51 GMT+05:30 Arumbanavan A <arumb...@gmail.com>:
மாம்ஸ் அருமை..
 
471.ரெண்டு பார் வேணுமா?(7 க்கு பிளான் பண்ணி இன்னொன்னு சேர்த்து கொண்டீர்களோ..:))
​‘பார்’ இன்றி உலகேது அரும்பு ​
 
473.இதில் நீங்கள் எந்த வீசையை சொல்றீங்க?
​வெயிட்டு ​
 
475.புரியலை  மாம்ஸ் விம் ப்ளீஸ்..

​ஹை டக் :))

--

Arumbanavan A

unread,
Apr 4, 2015, 2:24:06 AM4/4/15
to பண்புடன்
 
அது சரி, இது பாரதி "பார்"   ....  நான் கூட "பார் "என்றதும் நம்பர் போட்ட கடையை சொல்றீங்களோன்னு நெனச்சுட்டேன்,
 
நம்ம நாட்டுல  இத்தனை பார் இருக்கே அதிகம் 1 சேர்த்தால் ஒன்னும் ஆகாதுன்னு போட்டுடீங்கலோன்னு நெனச்சேன்.:)))))

துரை.ந.உ

unread,
Apr 23, 2015, 12:09:19 AM4/23/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

http://marabukkanavukal.blogspot.in/2015/04/blog-post.html

இலவு காக்கும் உழவு ...!

476)
சாகுபடி வேண்டுமென்று சாயா(து) உழைத்திருப்பார்;
ஆகுமடி நல்விளைச்சல் அங்கு

477)
உழவுக்குப் பின்பும் களைவளர்ந்தால் உந்தன்
உழைப்பில் பிழையென்று கொள்

478)
வான்பொழிந்தும் மண்விளைந்தும் நல்லவிலை இல்லையெனில்
வீணாகும் ஏரின் உழைப்பு

479)
உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு 
அழுதால் நமக்கே இழுக்கு 

480)
விளைநிலம் எல்லாம் விலைநிலம் ஆனால்
நிலையென்ன ஆகும் இனி

Ganesh Kumar

unread,
Apr 23, 2015, 12:35:31 AM4/23/15
to panb...@googlegroups.com
ஓர்வழியில் திட்டமிட்டுக் காத்திருப்போம்; வேறுவழி
தேர்ந்தெடுத்துப் பாய்ந்திருக்கும் வாழ்வு :)

On 4/23/15, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
> http://marabukkanavukal.blogspot.in/2015/04/blog-post.html
> இலவு காக்கும் உழவு ...!
>
> <http://1.bp.blogspot.com/-gRAKYYDLUkA/VTfUtouY9OI/AAAAAAAALl4/qXVf_wKyqI4/s1600/emo%2Bagri.gif>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> *476)சாகுபடி வேண்டுமென்று சாயா(து) உழைத்திருப்பார்;ஆகுமடி நல்விளைச்சல்
> அங்கு477)உழவுக்குப் பின்பும் களைவளர்ந்தால் உந்தன்உழைப்பில் பிழையென்று
> கொள்478)வான்பொழிந்தும் மண்விளைந்தும் நல்லவிலை இல்லையெனில்வீணாகும் ஏரின்
> உழைப்பு479)உழுவான் விழுவான் எழுவான்; அவனிங்கு அழுதால் நமக்கே
> இழுக்கு 480)விளைநிலம் எல்லாம் விலைநிலம் ஆனால்நிலையென்ன ஆகும் இனி*
> <http://1.bp.blogspot.com/-iufHVr-5lew/VTfVFnSwO7I/AAAAAAAALmA/FacatxG3NLI/s1600/_treetoon%2BA%2Bsnt%2B(4).jpg>

shylaja

unread,
Apr 23, 2015, 12:37:36 AM4/23/15
to பண்புடன்
//உழவுக்குப் பின்பும் களைவளர்ந்தால் உந்தன்
உழைப்பில் பிழையென்று கொள்//

எல்லா உழைப்புக்கும் பொருத்தமானது ..அசத்தல் துரை!
--
 
அன்புடன்
ஷைலஜா

/"Success is a lousy teacher. It seduces smart people into thinking they can't lose."
- Bill Gates/

துரை.ந.உ

unread,
Apr 23, 2015, 9:48:23 AM4/23/15
to பண்புடன்
2015-04-23 10:05 GMT+05:30 Ganesh Kumar <mara...@gmail.com>:
ஓர்வழியில் திட்டமிட்டுக் காத்திருப்போம்; வேறுவழி
தேர்ந்தெடுத்துப் பாய்ந்திருக்கும் வாழ்வு :)

​என்னை எனக்கேவா :))

 நன்றி குரு 
 
துரை.ந.உ

unread,
Apr 23, 2015, 9:48:52 AM4/23/15
to பண்புடன்
 நன்றி அக்கா 

R.VENUGOPALAN

unread,
Apr 24, 2015, 1:34:48 AM4/24/15
to பண்புடன்
அசத்தல் கவிஞரே! 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--

R.VENUGOPALAN IYENGAR

துரை.ந.உ

unread,
Jun 13, 2015, 3:11:34 AM6/13/15
to பண்புடன்
 nantri aiyyaa 

துரை.ந.உ

unread,
Jun 13, 2015, 9:52:20 AM6/13/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

வாழ்க்கை ஒரு வட்டம் !

481)
எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்
அதனைப் புசிக்கும் எறும்பு

482)
மயிர்நீத்தால் வீழும் கவரிமான்; அந்த 
மயிர்சார்ந்து தான்வாழும் பேன்

483)
இளமைக்கு உணவாம் கனவு; கனவும்
வளரும் இளமையைத் தின்று

484)
ஆடால் அழியும் செடி;மரமாய் ஆனபின்பு 
ஓடியதன் கீழொதுங்கும் ஆடு

485)
புழுஉண்டு மீனாகும்; மீனுண்டு நாமாவோம்;
நாமாவோம் மீண்டும் புழு

துரை.ந.உ

unread,
Jun 15, 2015, 1:19:31 PM6/15/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

காதலின் கிர(க்)கத்தில் !

486)
சொல்லும் மொழியாலும் கொல்லும் விழியாலும்
வெல்லும் வழியறிவாள் பெண்

487)
பதுமையைப் போலிருப்பாள்; ஆற்றும் செயலால்
புதுமையின் எல்லை அவள்

488)
தூக்கத்தைத் தூவிவிட்டு ஏக்கத்தை ஏவுமவள்
நோக்கத்திற்கு ஊக்கம் கொடு

489)
மான்குட்டி தானிவள்; பூந்தொட்டித் தேனிவள்;
தேன்சிட்டென் வானவள் தான்

490)
வயலின்மேல் அஞ்சியவள் கால்வைக்கும் போது
வயலின்போல் கொஞ்சம் கொலுசு

துரை.ந.உ

unread,
Jun 15, 2015, 11:05:51 PM6/15/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்
490ல் ’கொஞ்சம்’ திருத்தம் ...

வயலின்மேல் அஞ்சியவள் கால்வைக்கும் போது
வயலின்போல் கொஞ்சும் கொலுசு

Ahamed Zubair A

unread,
Jun 16, 2015, 1:45:23 AM6/16/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
இலக்கணப் பிழை விட்டுட்டீரோன்னு நினைச்சேன்...

அவங்க ஏக்கத்தை ஏவுனா, தூங்குறது எப்படி?? :))

பொருள் பிழை தான் :))

PRASATH

unread,
Jun 16, 2015, 2:15:16 AM6/16/15
to tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan, தென்றல்

பெண்ணவள் தூங்கி பெரும்;ஏக்கம் தான்கொடுத்தாள்
அன்னவனுக்(கு) அஃதை அறி.

தூங்கிடும் பெண்ணவளின் தூக்கத்தின் நோக்கறிந்து
தூங்கிடுநீ என்றார் தொடர்ந்து.

--

Ahamed Zubair A

unread,
Jun 16, 2015, 3:38:58 AM6/16/15
to நட்புடன், தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல்

//பெண்ணவள் தூங்கி பெரும்;ஏக்கம் தான்கொடுத்தாள்

அன்னவனுக்(கு) அஃதை அறி.

தூங்கிடும் பெண்ணவளின் தூக்கத்தின் நோக்கறிந்து

தூங்கிடுநீ என்றார் தொடர்ந்து.//

இதெல்லாம் என்னன்னா,

வக்கற்ற ஆளெல்லாம் வக்கனை பேசத்தான்
தெக்கத்தி ஆளின் சதி :-))

துரை.ந.உ

unread,
Jun 17, 2015, 1:09:23 AM6/17/15
to தமிழ் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
2015-06-16 11:14 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
இலக்கணப் பிழை விட்டுட்டீரோன்னு நினைச்சேன்...

அவங்க ஏக்கத்தை ஏவுனா, தூங்குறது எப்படி?? :))

​அதுதானய்யா ட்விஸ்ட்டே ....
(உமக்கு ர்ர்ரொம்ப வயசாயிடுச்சோ)​
 
பொருள் பிழை தான் :))

2015-06-15 20:19 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
488)
தூக்கத்தைத் தூவிவிட்டு ஏக்கத்தை ஏவுமவள்
நோக்கத்திற்கு ஊக்கம் கொடு

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

துரை.ந.உ

unread,
Jun 17, 2015, 1:11:45 AM6/17/15
to நட்புடன், தமிழ் சிறகுகள், பண்புடன், தென்றல்
ஹா ஹா ஹா ....

2015-06-16 11:45 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:

பெண்ணவள் தூங்கி பெரும்;ஏக்கம் தான்கொடுத்தாள்
அன்னவனுக்(கு) அஃதை அறி.

​தூங்கிட்டாளா ...!!!!
 
தூங்கிடும் பெண்ணவளின் தூக்கத்தின் நோக்கறிந்து
தூங்கிடுநீ என்றார் தொடர்ந்து.

​தூங்கச் சொன்னேனா !!!!

அவ்வ்வ் .... எல்லாம் கொஞ்ச நாளானாத் தன்னாலத் தெரியும் ​
 
துரை.ந.உ

unread,
Jun 17, 2015, 1:17:04 AM6/17/15
to தமிழ் சிறகுகள், நட்புடன், பண்புடன், தென்றல்
என்னை எதுக்கய்யா கோத்து உடுதீரு .... மக்களே நம்ம்பாதீங்க ...இது அசுவின் குசுகுசு 

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தியாகு

unread,
Jun 17, 2015, 1:33:29 AM6/17/15
to பண்புடன்
பெண்ணவள் தூங்கி பெரும்;ஏக்கம் தான்கொடுத்தாள்
அன்னவனுக்(கு) அஃதை அறி

பெண்ணவள் தூங்கினால் பிறகு பெரும் குறட்டை தானே வரும்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
தியாகு

-

துரை.ந.உ

unread,
Jun 19, 2015, 3:51:10 AM6/19/15
to பண்புடன், தென்றல், நட்புடன், தமிழ் சிறகுகள்

கற்றதும்...பெற்றதும்.... !

491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட 
பிறகே வருமாம் அது

492)
கற்றடையும் கல்விக்கும்; வாழ்நாளில் பெற்றடையும்
கல்விக்கும் இல்லை தொடர்பு

493)
கற்றுவரும் பாடத்தைப் பற்றியிருந் தாலது 
பெற்றுத் தரும்நற் சிறப்பு

494)
வாக்கியம் நன்றாய் வருவதைக் காட்டிலும்
வாக்கின் நயமே சிறப்பு

495)
எழுத்தில் பிழையிருந்தால் தட்டி; கருத்தில்
களையிருந்தால் கொட்டித் திருத்து

Arumbanavan A

unread,
Jun 19, 2015, 11:13:09 PM6/19/15
to பண்புடன்
491)
பட்டம் அறிவைத் தருவதில்லை; பட்ட 
பிறகே வருமாம் அது

மாம்ஸ் இது யாருக்கோ சொன்னது மாதிரி இருக்கு..:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--

துரை.ந.உ

unread,
Jun 22, 2015, 1:41:33 AM6/22/15
to பண்புடன்
இது பாயிண்ட்டு 

துரை.ந.உ

unread,
Jun 22, 2015, 10:36:47 AM6/22/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
வாழ்க உறவுகள் .... 
தங்களின் ஆதரவு ஊக்கத்தின் பொருட்டு இதுவரையிலும் 500 குறள்கள் வரை வந்திருக்கிறது 

மிக நன்றி 

இறையே....இறையே....!

496)
இறைஇருப்பைப் பற்றி இருப்போரைச் சுற்றி
இருப்பது இறையின் முறை

497)
கோடியினுள் உன்னைத்தேர்ந் தானெனில் உள்மறைந்த
சேதியுண்டு என்பதை அறி

498)
தனியன்நான் என்று நினைப்பாய் எனில்நீ
இறைமறுப்போன் என்று பொருள்

499)
பரம்பொருளைப் போற்றி பெரும்பொருளைச் சாற்றி
பெறும்பொருளும் பாழாகும் நம்பு

500)
பெரும்பொருளைக் காட்டி வரம்பதிலாய்க் கேட்பாய்;
பரம்பொருளும் வைத்திருப்பார் ஆப்பு

Ahamed Zubair A

unread,
Jun 22, 2015, 2:48:10 PM6/22/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
ஆப்புன்னெல்லாம் ஈற்றடி வேணாம் மாம்ஸ்..

அப்படி இருந்தா பிற்காலத்தில மனப்பாடப்பகுதிக்கெல்லாம் வைக்க முடியாது... 

--
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்த்தென்றல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhthendr...@googlegroups.com.

துரை.ந.உ

unread,
Jun 24, 2015, 2:04:18 AM6/24/15
to நட்புடன், தென்றல், பண்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
2015-06-23 0:17 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
ஆப்புன்னெல்லாம் ஈற்றடி வேணாம் மாம்ஸ்..

அப்படி இருந்தா பிற்காலத்தில மனப்பாடப்பகுதிக்கெல்லாம் வைக்க முடியாது... 
​அப்படியே ஆகட்டும் அசு
( புள்ள ரொம்ப நல்ல புள்ள மாதிரி பேசுதே !!!!!!!!!)
 
துரை.ந.உ

unread,
Jun 24, 2015, 5:58:58 AM6/24/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Jun 24, 2015, 5:59:28 AM6/24/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
​501 --- 505

துரை.ந.உ

unread,
Jun 25, 2015, 1:50:23 PM6/25/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
படங்களின் அளவு பெரிதாக இருப்பதால்.... சுட்டியில் சென்று பார்த்தால் மகிழ்வேன் 

குழந்தை உலகும் .....வளர்ப்பு முறையும்....!

VJagadeesh

unread,
Jun 25, 2015, 9:55:47 PM6/25/15
to பண்புடன்

அந்த துஷ்டாத்மா மாதிரியே நீங்களும் பேருக்கு பின்னால் பல பல பட்டங்களை போட்டிருக்கிங்களே...

துரை.ந.உ

unread,
Jun 26, 2015, 5:49:16 AM6/26/15
to பண்புடன்
அது கொடுத்து வாங்குனது ...இது படிச்சு வாங்குனது :))

ஆமா...அதாரு ஆத்மா

2015-06-26 7:25 GMT+05:30 VJagadeesh <oms...@gmail.com>:

அந்த துஷ்டாத்மா மாதிரியே நீங்களும் பேருக்கு பின்னால் பல பல பட்டங்களை போட்டிருக்கிங்களே...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/

Ahamed Zubair A

unread,
Jun 27, 2015, 3:31:15 AM6/27/15
to பண்புடன்
:-))))))))))))))

துரை.ந.உ

unread,
Jun 28, 2015, 11:44:54 PM6/28/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
படங்களின் அளவு பெரிதாக இருப்பதால் /.... சுட்டியில் சென்று பார்த்தால் மகிழ்வேன்

உதவு....!

511)
இல்லாரின் அல்லலினை நீக்கநினை; நல்லாரின்
சொல்உனை வாழ்த்தும் நனை

512)
இல்லாரைக் காக்கும் செயலிலுன் பாதி
இழந்தாலும் இல்லை தவறு

513)
குறையை அணைக்கும் குணம்கொண்டோர்; அந்த
இறையின் அணைப்பிலிருப் பார்

514)
குறையும் இடமெல்லாம் அள்ளிஇறை; தானே
குறைவை நிறைக்கும் இறை

515)
தினம்தானம் செய்துவரும் நல்லோர் கணக்கில்
தனம்தானே சேர்ந்து விடும்

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 9:14:44 AM7/1/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2015, 9:15:51 AM7/1/15
to panb...@googlegroups.com
எப்படி அறிஞ்சீங்க துரை அண்ணே. (என்னை திட்டக்கூடாது) 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 11:57:40 AM7/1/15
to பண்புடன்
கண்ட இடத்தில்...கண்ட மாதிரி வாய்வைப்பது அழகல்ல ....
இனியும் உங்களின் பங்களிப்பை இந்த இழையில் நான் விரும்பவில்லை ....

புரிந்து கொண்டால் நன்றி 

Jaisankar Jaganathan

unread,
Jul 1, 2015, 12:15:45 PM7/1/15
to panb...@googlegroups.com
ok அண்ணா. இனிமேல் இந்த இழையில் நான் வரமாட்டேன். புரிஞ்சுக்கிட்டேன். 

Arumbanavan A

unread,
Jul 1, 2015, 11:26:55 PM7/1/15
to பண்புடன்
துரை மாம்ஸ் கோபம்....:)

இதை நேரில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை..:)

தியாகு

unread,
Jul 2, 2015, 6:05:08 AM7/2/15
to பண்புடன்
அவரே ஒரு படம் போடுவாரு :)
தியாகு

-

துரை.ந.உ

unread,
Jul 2, 2015, 7:58:10 AM7/2/15
to பண்புடன்
2015-07-02 15:35 GMT+05:30 தியாகு <seewty...@gmail.com>:
அவரே ஒரு படம் போடுவாரு :)

​போட்டாச்சு...போட்டாச்சு ​

துரை.ந.உ

unread,
Jul 3, 2015, 4:16:20 AM7/3/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்

துரை.ந.உ

unread,
Jul 7, 2015, 6:35:55 AM7/7/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
படங்களுடன் பார்க்க ,,http://marabukkanavukal.blogspot.in/2015/07/blog-post_7.html

முத்தம்...அதுவும் மொத்தம் !!

அவளதிகாரம் : முத்த தினம் 
526)

முன்வாயில் முற்றமதில் என்வாயில் வாய்வைத்தான்;
பின்சொன்னான் முத்தமது என்று

527)

இதழால் அவன்தீண்டும் அந்நொடியில் பெற்றேன் 
முதல்மழையைத் தொட்ட உணர்வு

528)

உன்மீசை குத்தும் பொழுது தொடர்கவென
என்ஆசை கத்தும் தொழுது

529)

தொப்பலாய்த் தான்நனைந்தேன்; என்னவனின் முத்தத்தால்
மொத்தம் உலர்ந்துவிட்டேன் நான்

துரை.ந.உ

unread,
Jul 11, 2015, 11:30:27 AM7/11/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
531) மாற்றமெது வந்தாலும் சற்றும் தடுமாற்றம் இன்றியதை ஏற்கப் பழகு 

துரை.ந.உ

unread,
Jul 18, 2015, 4:01:09 AM7/18/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
நீயே எடுத்துக் காட்டு...!
536)
தலைமறையும் முன்வாழ்ந்து காட்டு; தலைமுறையும் 
உன்தடத்தைப் பின்தொடரும் வாழ்வு

537)
உன்வரையில் உண்மையைக் கொண்டிருந்தால் இவ்வுலகில்
உள்ளவரை நன்மை தரும்

538)
தவறிழைக்க வாய்ப்பிருந்தும் தள்ளித் தவிர்ப்போரை
தெய்வமெனப் போற்றும் உலகு

539)
வீழ்வதுநீ என்றாலும் அங்(கு)அழுவோர் நால்வர் 
எனில்நீ இறைநிலைக்கும் மேல்

540)
தூற்றும் பகையோரின் துன்பம் துடைத்தெறி;
போற்றும் வகையமையும் வாழ்வு

துரை.ந.உ

unread,
Jul 18, 2015, 4:02:19 AM7/18/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் வாசல், தமிழ் சிறகுகள்
540)
தூற்றும் பகையோரின் துன்பம் துடைத்தெறி;
போற்றும் வகையமையும் வாழ்வு

துரை.ந.உ

unread,
Jul 20, 2015, 12:50:11 PM7/20/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
கொஞ்ச(சு)ம் கோபக்காரி....!
341)  முதல் 345) வரைக்கும்...

Arumbanavan A

unread,
Jul 20, 2015, 11:36:35 PM7/20/15
to பண்புடன்
சரியாதானே சொல்லி இருக்கீங்க..:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Jul 21, 2015, 2:42:00 AM7/21/15
to பண்புடன்
​பின்னே !

துரை.ந.உ

unread,
Jul 30, 2015, 10:14:53 AM7/30/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

###### கலாம் ......!!!!!!!!!

546)
அல்லாவின் பிள்ளைஇவர்; இவ்வுலகப் பிள்ளைநம்
எல்லார்க்கும் தந்தை இவர்

547)
வல்லவன் செல்லும் வழியெல்லாம் வாழ்வமையும்; 
புல்லும் இவன்கையில் கோல்

548)
விதைத்தவனுக்கு உண்டாம் உறக்கம்; புதைந்தாலும்
தூங்குவது இல்லை விதை

549)
பாவம் புதைக்கப் படும்தீவின் மத்தியில்
நேசம் விதைத்தனர் இன்று

550)
எட்டும் தொலைவிலின்று எட்டாம் அதிசயம்;
எட்டாத் தொலைவிலுண்டு ஏழு

551)
தெற்கில் உதித்து கிழக்கில் மறைந்தது
இரண்டாவது ஆதவன் ஒன்று

552)
கற்பிக்கும் போதேதம் சித்தம்போல் இவ்வுடலை 
நீத்தசித்தர் அற்புதத்தைப் பார்

553)
பத்திரிக்கைப் போட்டார்; அவர்பற்றிப் போடாதப் 
பத்திரிக்கை ஒன்றில்லை இன்று 

554)
உடலொன்றை நீத்தார்; உடன்பல கோடி 
உடலுக்குள் பூத்தார் இவர்

555)
தனியொருவன் பின்கூட்டம் கூடுமெனக் காட்ட
இனியொருவன் தேவையில்லை இங்கு

PRASATH

unread,
Jul 31, 2015, 10:34:33 PM7/31/15
to தென்றல், tamizhs...@googlegroups.com, பண்புடன், nadpudan, vallamai, மின்தமிழ்

வழமை போல அருமை ஐயா...

பத்திரிக்கை குறள் மிகவும் பிடித்தது...

( 555ல், ன், ர் ஆக இருந்திருக்கலாமோ...)

On 30-Jul-2015 7:44 pm, "துரை.ந.உ" <vce.pr...@gmail.com> wrote:

கலாம் கவிதைகள் அருமை

On 01-Aug-2015 7:12 am, "VETTAI ANANTHANARAYANAN" <gan...@gmail.com> wrote:
மறைந்த கலாம் பற்றிய அத்தனைக் குறள்களும் அருமை.

அனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

துரை.ந.உ

unread,
Aug 1, 2015, 2:36:47 AM8/1/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

மது.....து........த்து...........த்தூ...!!!!!!!!!!!!!!!

--- ஐயா . சசிபெருமாள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் ---

556)
பார்’என்று பாடிவைத்தான் பாரதி; பாருக்கு
அவர்பேரே வைப்போம் அதற்கு

557)
தண்ணி அடிப்பார்பார் தன்னை அழிப்பார்பார் 
இம்மண்ணில் எங்கும்பார் பார்

558)
பழமாக உண்போரைப் போற்றும்; ரசமாக
வேண்டுவோர்க்கு ஊற்றும் அரசு

559)
பாருக்குள் நோக்கும்நம் பிள்ளைகள்; பாருக்குள்
விக்கும்நாள் பார்க்கும் அரசு 

560)
மதுமீறிப் போகுமிடம் பேயாய் முதுகேறிப்
பாயும் அகத்திருக்கும் பாம்பு

துரை.ந.உ

unread,
Aug 1, 2015, 2:45:07 AM8/1/15
to வல்லமை, தென்றல், தமிழ் சிறகுகள், பண்புடன், nadpudan, மின்தமிழ்
 நன்றி ப்ரசாத்து 

2015-08-01 8:04 GMT+05:30 PRASATH <pras...@gmail.com>:

வழமை போல அருமை ஐயா...

பத்திரிக்கை குறள் மிகவும் பிடித்தது...

( 555ல், ன், ர் ஆக இருந்திருக்கலாமோ...)

​அது உரிமை ....

சூழலின் / உணர்ச்சியின் வெளிப்பாட்டின் வேகத்தை  அந்த -ன் -ல் வைத்தேன்  

துரை.ந.உ

unread,
Aug 2, 2015, 5:20:00 AM8/2/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

நட்பு....ட்பு.....பு........பூ ...!!!!!!!!!!

--- நட்பு தின வாழ்த்துகள் ---
561)
ஆகாயம் கீழிறங்கும் நீநம்பு; உறவுக்குள்
ஆதாயம் தேடாது நட்பு

562)
தாளும்தோள் தாங்குவான் தோழன்; அவனால்தான்
வாழுமிந்தப் பாழும் உலகு 

563)
வழிமொழிய மட்டுமல்ல; தப்பென்றால் உன்முன்
வழிமறித்தும் நிற்பதுதான் நட்பு

564)
உரிமை தரும்உறவைக் காட்டிலும் நன்றாம்
உறவை உருவாக்கும் நட்பு

565)
ஒருவர் பிரிந்தால் இறப்பது உறவாம்; 
இறந்தால் பிரிவதுதான் நட்பு

துரை.ந.உ

unread,
Aug 6, 2015, 11:50:56 AM8/6/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

என்னவளே.....அடி என்னவளே .!!

566)
உன்னில்தான் என்னைநான் கண்டுகொண்டேன்; இன்றுவரை
தன்னைத்தான் கண்டதில்லை கண்

567)
விடையில்லை என்றால் விதியில்லை; நீயில்லை
என்றால் இனியில்லை வாழ்வு

568)
விழலெனக்கு நீரிறைக்க வந்தவளின் பாத
நிழழுக்கு நானே நிழல்

569)
விதையின்றி வேரில்லை உந்தன் நினைவன்றி 
வேறில்லை என்னுலகில் பார்

570)
நாணவில்லை சொல்வதற்கு; வாய்ப்புவந்தால் வானவில்லைப்
போல்வளைவேன் நானவளின் முன்பு 

துரை.ந.உ

unread,
Aug 9, 2015, 11:33:40 PM8/9/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

http://marabukkanavukal.blogspot.in/2015/08/blog-post_9.html

இதுதான் வாழ்க்கை !

571)
யாருக்கோ காத்திருக்கும் உன்மடியில்

துரை.ந.உ

unread,
Aug 9, 2015, 11:37:44 PM8/9/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
571)
யாருக்கோ காத்திருக்கும் உன்மடியில் யார்யாரோ
வந்தமர்வார் என்பதுதான் வாழ்வு

572)
எதிர்பார்த்து இருப்பது எதிர்பாராப் போதுன்
எதிர்வந்து நிற்பதுதான் வாழ்வு

573)
விரும்பாத போதும் விரும்பியதை விட்டுத்
தரவேண்டும் என்பதுதான் வாழ்வு

574)
நான்நான்தான் நீநீதான் என்றால் அதுதாழ்வு; 
நான்நீநாம் என்பதுதான் வாழ்வு

575)
யாருமில்லை என்றால் அதுதாழ்வு; யாருக்கும் 
பாரமில்லை என்பதுதான் வாழ்வு 

துரை.ந.உ

unread,
Aug 19, 2015, 7:22:19 AM8/19/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

வந்து....எனக்கென வாய்த்தவளே...!

576)
அதுவேண்டும் என்பாள்; இதுவேண்டாம் என்பேன்;
அதுதான் நடக்கும் பிறகு

577)
புள்ளியிங்கு வேண்டாமே என்றுவைத்தேன் வேண்டுதலை;
துள்ளிவந்து வைத்தாள் அதை

578)
தலையாட்டச் சொன்னாள்; விளையாட்டாய்ச் செய்தேன்;
வினையாகிப் போனது அது 

579)
நான்வேண்டும் என்பதை நீவேண்டாம் என்பாய்;
அதுதானே வேண்டும் எனக்கு

580)
முன்நின்று கூறுவாள் பெண்எதையோ; கண்ணில்
தெரிவதோ வேறு கதை

துரை.ந.உ

unread,
Aug 21, 2015, 1:16:16 PM8/21/15
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

http://marabukkanavukal.blogspot.in/2015/08/blog-post_21.html

இரட்டை நாக்கர்...!

581 முதல் 585 வரை
It is loading more messages.
0 new messages