நரேஷின் பதிவுகள்!

21 views
Skip to first unread message

Naresh Kumar

unread,
Aug 12, 2015, 6:58:39 AM8/12/15
to பண்புடன்
//நந்தாளர் இல்லாத குறை போக்க ஊர்க்குருவியொன்று முயற்சி செய்கிறது :-))
ஆனாலும் அந்தக் கழுகு கழுகுதான் :-)

ஆனாலும் நரேஷ் தொடர்ந்து பல விசயங்களை எழுதுவது மகிழ்ச்சியாகவுமிருக்கிறது//

அண்ணாச்சி, +1 படிக்கும் சமயத்தில் பள்ளியில் ஒரு பேச்சுப் போட்டி வந்தது!

பேச்சுப் போட்டி என்றாலே எப்போதும் இருக்க வேண்டிய, நான் விரும்பும் தலைவர் அந்த வருடமும் இருந்தது. ஆனால், வித்தியாசமாக  புதிதாக இரண்டு தலைப்புகள் இருந்தன. ஒன்று இளைஞர் சமுதாயம், இன்னொன்று சினிமா பாடல்கள் கெட்டதா என்று!

வழமையான தமிழ் இலக்கிய மன்றப் போட்டிகளில் இருந்து அந்த தலைப்புகள் அறிவிக்கப்பட்டதே பெரிய விஷயம். ஏனெனில் டெம்ளேட்டான‌ போட்டிகளையும், தலைப்புகளையும் கொடுத்து வந்தவர்கள் இலக்கிய மன்றக் குழுவினர். அவர்களது அதிகபட்ச புரட்சியான தலைப்பே, அரசியல் நல்லதா என்பதுதான். ஆனால், இந்த முறை குழு மாறியிருந்தது. இந்த முறை கொஞ்சம் மாடர்ன் சிந்தனைகளை ஊக்குவிக்கும், பருவ வயதில் ஏற்படும் ஆண் பெண் இனக் கவர்ச்சியை, சந்தேகங்களை எளிதில் தங்களுடன் பகிரக் கூடிய சுதந்திரத்தையும், தோழமையயும் ஏற்படுத்திய இரு ஆசிரியர்கள் புதிதாய் அந்தக் குழுவில் வந்ததுதான் அந்த மாற்றத்திற்குக் காரணம்! அதுவும் இளைஞர்களையும், சினிமாவையும் பேச்சுப் போட்டி தலைப்புகளில் கொன்டு வந்தது, பழம் பெருமை பேசும் ஆசிரியர்களுக்கு முகச் சுழிப்பையே ஏற்படுத்தியது.

இதில் புதிதாக பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாண‌வர்கள் பெரும்பாலும், ஏதாவது தமிழ் பாடபுத்தகத்தில் வந்திருக்கும் பாடத்தை மனப்பாடம் செய்து வந்து அப்படியே ஒப்பிப்பார்கள். இவர்கள் பேச்சு வெறிக்கு மாட்டிக் கொள்பவர்கள் பெரும்பாலும், காந்தியடிகள், வ உ சி, ஜவர்ஹலால் நேரு, சில சமயம் எம் ஜி ஆர், காமராசர் வெகு அரிதாக‌ பகத்சிங், நேதாஜி,அன்னை தெரசா ஆகியோர் மாட்டுவர். 

இந்த பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டிகளையெல்லாம் கேட்பதில் இருக்கும் கொடுமை என்னவென்றால், ஒரே பாட்டையோ, ஒரே தலைவரையோ, அதிலும் அவரைப் பற்றிய ஒரே கருத்துக்களையோ திரும்பத் திரும்ப கேட்க வேண்டி வரும்! ஏற்கனவே படித்த வாக்கியங்களை அவர்கள் உணர்ச்சி பொங்க பேசும் பொழுது, உட்கார்ந்திருக்கும் கூட்டம், உணர்ச்சி வெளுத்துக் காத்திருக்கும்! காந்தியடிகளை ஒரு சிலருக்கு பிடிக்காமல் போவதற்கு இதுவும் கூட காரணமாக இருக்கக் கூடும்! திரும்பத் திரும்பக் கேட்டு,  'தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே' பாடல், சில வருடங்களுக்கு எனக்கே பிடிக்காமல் இருந்தது!

ஓரளவு வித்தியாசத்தைக் காட்டும், தொடந்து பேச்சுப் போட்டிகளில் பங்குகொள்ளுவோர், இதனை நன்கு உணர்ந்து சற்றேனும் மாறுபட்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பர். மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, கோகலே, ராஜாராம் மோகன்ராய்,  இல்லாவிடின், என் தலைவர் அரசியல் தலைவர் அல்ல, அறிவியல் விஞ்ஞானி என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்று சிலரை அறிமுகப்படுத்துவர். அப்பொழுது, அதுவே பெரிய விஷயம். ஏனெனில், இணையம் என்ற வார்த்தையையே கேள்விப்படிருக்காத காலம். உதவியாக இருப்பது நூலகம் மட்டுமே!

இந்த கொடுமைகளை நன்கு உணர்ந்ததாலேயோ என்னமோ, அந்தக் குழு, வழமையான, அகர வரிசைப் படி பெயர் கொடுத்தவர்களை பேசச் சொல்லாமல், முன்பே தலைப்புகளை வாங்கி, காந்தி, நேரு போன்றோருக்கு மத்தியில் மார்டின் லூதர் கிங் என்று கலந்து கட்டி வரிசை எண்களை கொடுத்தனர்.

ஆசிரியர்கள் மத்தியிலே மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவே இவ்வளவு காலம் ஆகும் பொழுது, மாணவர்கள் மத்தியில் அது உடனே வந்து விடுமா என்ன?  மொத்த போட்டியாளர்களில் இருவரைத் தவிர்த்து மற்ற அனைவரும் தேர்ந்தெடுத்தது 'நான் விரும்பும் தலைவரே'! ஒரே ஒருவர் இளைஞர் சமுதாயமும், இன்னொருவர் சினிமாப் பாடல்கள் தலைப்பும் தேர்ந்தெடுத்திருந்தனர்!

அந்தக் குழுவிற்கே ஆச்சரியமும், மகிழ்ச்சியும். ஏனெனில் அவர்களே இந்த முறை இந்த தலைப்பை யாரும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றே எண்ணியிருந்தனர். ஆகையால், இளைஞர் சமுதாயம் பற்றி கடைசிக்கு முன்பும், சினிமா பாடல்களைப் பற்றி கடைசியாகவும் பேசச் சொல்லியிருந்தனர். குறைந்த பட்சம் தலைப்பாவது கேட்பவர்களை உட்கார வைக்கும் என்று கூட நினைத்திருக்கும்.

அந்த ரெண்டு பேர் யாருன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இளைஞர் சமுதாயம் தேர்ந்தெடுத்தது வாஸ்கோடகாமா, சினிமா பாடல்களைத் தேர்ந்தெடுத்தது அடியேனே!

வழமையான பேச்சுப் போட்டி, வீர முழக்கங்கள், மறந்து போன பாயிண்ட்டுகள், வுட்டுடுங்கடா என்று கெஞ்சாத குறையாக உட்கார்ந்திருந்த மாணவர்களுக்கு மத்தியில், கடைசிக்கு முன்னதாக வாஸ்கோடகாமா பேசினார். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுந்து உட்கார வைத்தது அந்த பேச்சு! அவ்ளோ புரட்சி பேச்சுல! மிகுந்த கைத் தட்டல்களை அள்ளியது!

கடைசியாக என்னுடைய பேச்சு. பேச்சு போட்டியிலேயே, மனிதன் மனிதன், மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும், வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்ன்னு ஆடுதுன்னு, பாடல்களைப் பாடி (?) செம்புலப் பெயர் நீர் போல விஷயத்தை வைரமுத்து கையாண்ட விதம்,  எல்லாத்துக்கும் மேல காதலை எவ்ளோ அழகாச் சொல்லியிருக்காங்கன்னு கலந்து கட்டி பேசுனேன். கொஞ்ச பழமையான ஆளுங்களுக்கு அது பெரிய புகைச்சலா இருந்தது. ஆனா, மாணவர்கள் மத்தியில் எனக்கு மிகப் பெரிய கைத்தட்டலும், ஆதரவும் கிடைத்தது. என்னுடைய‌ ஜூனியர்கள் சிலர் இப்பொழுதும் என்னை சந்திக்கும் பொழுது, அந்த விஷயத்தை குறிப்புட்டுச் சொல்லுவர்.

சரிடா பக்கி, இப்ப எதுக்கு இவ்ளோ அளக்குறன்னுதானே கேக்குறீங்க. ஒண்ணுமில்லை அப்பொழுதே, போட்டி முடிந்த பின் வாஸ்கோடகாமாவிற்கு அறிவுஜீவி பட்டம் கிடைத்தது. அவனுடைய பேச்சு, அந்த குழுவிடம் அதிக பாராட்டையும் பெற்றது.

ஆங், சொல்ல மறந்துட்டேன். அந்தப் போட்டியில், முதல் பரிசு வாஸ்கோடகாமாவிற்கு, இரண்டாம் பரிசு வேறு யாருக்கோ!

--

Naresh Kumar

unread,
Aug 12, 2015, 7:27:08 AM8/12/15
to பண்புடன்
இன்றைய மிகச் சிறந்த மூன்று செய்திகள்!

சுஷ்மா சுவராஜ்:
லலித் மோடியை தலைமறைவு குற்றவாளி என்று எந்த ஒரு நீதிமன்றமும் பிரகடனம் செய்யவில்லை. லலித் மோடியின் விசாவைப் பெறுவதற்கான வழக்கறிஞராக எனது கணவர் செயல்படவில்லை. 

லலித் மோடிக்கு மொத்தம் 11 வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் என் மகள். அவர் லலித் மோடியிடம் பணம் பெறவில்லை. தற்போது நீதி கிடைக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு அல்ல.. எனக்குத்தான்!!!

ஆலியா பட்:
ஷான்தார் படத்தில் வரும் பிகினி காட்சிக்காக நான் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தேன். அந்த காட்சி சிறியது என்றாலும் அதற்காக நான் கடுமையாக உழைத்தேன் என்று கூறியுள்ளார் ஆலியா. ஷான்தார் படத்தில் எனக்கு ஜாலியான கதாபாத்திரம். அதே சமயம் புத்திசாலியான கதாபாத்திரம் (?) 

குளிர் அதிகமாக இருந்த நாள் அன்று பிகினி காட்சியை படமாக்கினோம். எப்பொழுது காட்சி முடியும் உடனே ஆடையை உடுத்தலாம் என்று ஆலியா தயாராக இருந்தார் என்று இயக்குனர் விகாஷ் பெஹல் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசாந்த்:
இன்றோ அல்லது நாளையோ என் மீதான தடை நீக்கப்படாவிட்டாலும் கூட நிச்சயம் தடை நீங்கும். நிச்சயமாக 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக நான் விளையாடுவேன்.

மஞ்சூர் ராசா

unread,
Aug 12, 2015, 7:44:39 AM8/12/15
to பண்புடன்
ஆனா இந்த அளப்பு சுவாரஸ்யமா இருக்கு நரேஷ்.  அதுக்கு பண்புடன் தலைவர் அண்ணாச்சி 
பிரியாணி வாங்கி கொடுப்பார். 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Aug 12, 2015, 7:54:30 AM8/12/15
to பண்புடன்
velkam naku sir 
--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Naresh Kumar

unread,
Aug 12, 2015, 9:03:15 AM8/12/15
to பண்புடன்
Sir ah :) :)

Asif Meeran

unread,
Aug 12, 2015, 9:57:10 AM8/12/15
to பண்புடன்
அன்னைக்கே அவன் அந்தப் பேச்சு பேசுவான்னு சொல்வாங்களே.. அது இவனைத்தானா? :-))

நானும் பேச்சுப் போட்டியில் பேசுறதுக்காக பேர் கொடுத்திருந்தேன். எனக்கு நாலு பக்கம் எழுதித் தந்து மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்
ஆசிரியர் சொல்லித் தந்தபடி வானத்தில் வட்ட நிலாபோல ஒளிவீசி அம்ர்ந்திருக்கும் நடுவர் அவர்களே என்று பேச ஆரம்பிக்கும்போதே 120 டெஸிபல்
சத்தத்துடன் ஆரம்பித்து நன்றி என்று முடிக்கும்போது  தொண்டை கிழிந்து போயிருக்கும் கேட்பவன் காதும்தான்

போட்டியன்று காலை வாப்பா ஊருக்கு வந்திருந்தார்கள். பேச்சுப் போட்டியில் பேசுகிறேன் என்றதும் சொல்லிக்காட்டு என்றதும்தான் தாமதம்
அப்படியே வானத்தில் தொடங்கி நன்றி வரை ஒரே மூச்சில் முடித்ததும் என்னைப் பார்த்து சிரித்து விட்டு இப்படி பேசக் கூடாது. நடுவர், ஆசிரியர் மாணவர்களை
அழைக்கும்போது மென் குரலில் தொடங்கி எப்படி அழுத்தமாக பின்னர் குரல் உயர்த்தி ஆனால் கத்தாமல் பேச வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். அப்போதே
எனக்குப் புரிந்து விட்டதுஇது விளங்காதென்று. ஏனெனில் அதுவரை எவரும் பேச்சு போட்டியில் அப்படி பேசி நான் கேட்டதில்லை  எவன் சத்தம் அதிகமாக இருக்கோ
அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும்

இப்போது ஒரே குழப்பம் எனக்கு. இருந்தும் வேறு வழியில்லாமல் வாப்பா சொன்னது போலவே பேசினேன் எனக்கே நான் பேசியதில் நம்பிக்கையில்லை
பரிசு கிடைக்குமா கிடைக்காதா என்று ஒரே குழப்பம். ஒருவகையாக போட்டி முடிந்தது. அறிவிப்பும் வந்தது. உரக்கக் கத்தாததால் எனக்கு பரிசு கிடைக்கவில்லை
என் ஆசிரியர் கூப்பிட்டு என்னை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார். ஏம்ல அப்படி பேசுனே? உனக்கு எவ்வளவு கஷ்டப்ப்ட்டு சொல்லிக்கொடுத்தேன்னு திட்டி
தீர்த்து விட்டார். எனக்கு வாப்பா மீது வந்த கோபத்திற்கு அளவே கிடையாது

சில காலம் கழிந்து அதே பள்ளியில் இம்முறை வானத்து நிலாவாக நான் அமர்ந்திருந்தேன் இருபது வருடங்களானாலும் அதே போல நாராசமாகக் கத்திக்கொண்டு
பேசுவதை எவனும் நிறுத்தவில்லை. ஒரு பையன் மட்டும் மென்மையாக ஆனால் அழுத்தமாக நாடகத்தன்மை இன்றி பேசினான். அவனுக்கு 8 மதிப்பெண்கள் வழங்கினேன்
ஆனாலும் அவனுக்குப் பரிசு கிடைக்கவில்லை. ஏனெமில்மீதமிருந்த இரண்டு நடுவர்களும் அவனுக்கு மூன்று மதிப்பெண்களே வழங்கியிருந்தார்கள் :-))

இந்த நாடு வெளங்கிடும்னு நெனச்சுகிட்டேன்



Naresh Kumar

unread,
Aug 12, 2015, 10:01:23 AM8/12/15
to பண்புடன்
இன்னும் சிச்சுவேஷனே மாறலை போல? :)

Naresh Kumar

unread,
Aug 12, 2015, 10:11:59 AM8/12/15
to பண்புடன்
Is it?
Help.jpg

Naresh Kumar

unread,
Aug 13, 2015, 4:39:55 AM8/13/15
to பண்புடன்
தேசிய ஒருமைப்பாடு வாழ்க! புரட்சியும் வாழ்க!

ஆகவே, இந்த வருடம், சுதந்திர தினம் சனிக்கிழமையில் வருவதால், தேச உணர்ச்சி பீறிடும் பதிவுகளும்,  காந்தியெல்லாம் ஒரு ஆளா என்று புரட்சி வெடிக்கும் பதிவுகளும், இரண்டிற்குமான எதிர்வினைகளும் குறைவாகவே இருக்குமென்று சோஷியல்மீடியா நிலை அறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது!

அதே சமயம், போகிற போக்கில் கருத்து சொல்லும் கந்தசாமிகள் நிறைந்த சமூகம் என்பதால், வெள்ளிக்கிழமை மதியம் முதல் இரவு வரை, தேசியமும், புரட்சியும் ஒரே சமயத்தில் பீறிட்டுக் கிளம்பும் பதிவுகள் அதிகம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் குறைவு என்றே தோன்றுவதாக மையம் தெரிவித்துள்ளது.

அதனால்தானோ என்னமோ, இந்திய கிரிக்கெட் அணியும், இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டியை மட்டும் விளையாடினால் போதும் என்று இந்திய தேசிய கார்பரேட் நிறுவனமான பிசிசிஐயும் முடிவு செய்திருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களை சற்றேனும் திசை திருப்ப வாலு படம் ரீலீஸ் செய்ய அனுமதித்திருப்பதாகவும், தனுஷ், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களை சேனல்கள் ஒளிபரப்பு செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அம்மையம் தெரிவித்தது!

மேலும், பாபநாசம் படம் ஒளிபரப்பப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், பாபநாசம் வெற்றிப்படம், கொஞ்சம் சமூகப் பிரச்சினையை வேறு பேசுகிறது, சமூகத்தில் இப்பொழுது பெரிய பிரச்சினை எதுவும் இருக்கவில்லை என்பதாலும், ஒரு வாரம் முன்பே மதுவிலக்குப் புரட்சி பெரிதாக எழுந்து ஓரளவு அடங்கியிருப்பதாலும், மேலும் அப்துல்கலாம் மரணம், சுந்தர் பிச்சை கூகுள் சீஈஓ போன்ற காரணங்களுக்காக மக்கள் ஏற்கனவே ஓரளவு தேசிய உணர்ச்சியில் மிதந்து கிடப்பதாலும், அதற்க்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றும், வேண்டுமானால், உத்தமவில்லன் போன்ற சற்றே தோல்வியடைந்த திரைப்படங்கள் ஒளிபரப்ப வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்! 
Revolution.jpg

Naresh Kumar

unread,
Aug 13, 2015, 6:23:27 AM8/13/15
to பண்புடன்
ஃபிராடுத்தனம் பண்ற‌து அவ்ளோ ஈசி இல்ல, அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும்! 

இந்த வசனம் எங்க பொருந்துதோ இல்லியோ, ஒரு சிலரோட பேச்சுக்களை  விவாதங்களில் கேக்குறப்ப நல்லா பொருந்துது. இன்னிக்கு காலையில் ஒரு அதிமுக காரரு, திமுக ஆட்சியில மின்வெட்டு செய்யுறதுக்குனே ஒரு அமைச்சரு இருந்தாரு, மின்வெட்டு மோசமா இருந்ததுன்னு சிரிக்காம பேசிட்டிருக்காரு!

R.VENUGOPALAN

unread,
Aug 13, 2015, 12:21:32 PM8/13/15
to பண்புடன்
2015-08-13 14:09 GMT+05:30 Naresh Kumar <meet...@gmail.com>:
தேசிய ஒருமைப்பாடு வாழ்க! புரட்சியும் வாழ்க!


அதே சமயம், போகிற போக்கில் கருத்து சொல்லும் கந்தசாமிகள் நிறைந்த சமூகம் என்பதால், வெள்ளிக்கிழமை மதியம் முதல் இரவு வரை, தேசியமும், புரட்சியும் ஒரே சமயத்தில் பீறிட்டுக் கிளம்பும் பதிவுகள் அதிகம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் குறைவு என்றே தோன்றுவதாக மையம் தெரிவித்துள்ளது.

காரணம், சனிக்கிழமையன்று டாஸ்மாக்குக்கு விடுமுறை என்று அறிவித்ததால் இருக்குமோ? 
 

அதனால்தானோ என்னமோ, இந்திய கிரிக்கெட் அணியும், இந்தக் காலகட்டத்தில் டெஸ்ட் போட்டியை மட்டும் விளையாடினால் போதும் என்று இந்திய தேசிய கார்பரேட் நிறுவனமான பிசிசிஐயும் முடிவு செய்திருந்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களை சற்றேனும் திசை திருப்ப வாலு படம் ரீலீஸ் செய்ய அனுமதித்திருப்பதாகவும், தனுஷ், ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களை சேனல்கள் ஒளிபரப்பு செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அம்மையம் தெரிவித்தது!

அத்துடன் ‘சுதந்திரம்’ குறித்த நகைச்சுவைப் பட்டிமன்றமும் உண்டு. :-) 

R.VENUGOPALAN IYENGAR



Naresh Kumar

unread,
Aug 14, 2015, 4:30:06 AM8/14/15
to பண்புடன்
ஏமாத்துறது அவ்ளோ ஈசி இல்ல, அதுக்கு குருட்டுத்தனமான முட்டாள்தனமும், புத்திசாலித்தனமான முரட்டுத்தனமும் வேணும்! 

சூது கவ்வும் படத்தில் வரும் வசனமேதான்!

இந்த வசனம் எங்க பொருந்துதோ இல்லியோ, ஒரு சிலரோட பேச்சுக்களை  விவாதங்களில் கேக்குறப்ப நல்லா பொருந்துது. இன்னிக்கு காலையில் ஒரு அதிமுக காரரு, திமுக ஆட்சியில'தான்' மின்வெட்டு செய்யுறதுக்குனே ஒரு அமைச்சரு இருந்தாரு, மின்வெட்டு மோசமா இருந்ததுன்னு சிரிக்காம பேசிட்டிருக்காரு!

ஸ் பெ

unread,
Aug 16, 2015, 2:34:35 AM8/16/15
to panbudan
சூப்பர் நரேஷ்..

Naresh Kumar

unread,
Aug 19, 2015, 1:31:44 AM8/19/15
to பண்புடன்

முதல்ல, வைகோ பையன் சிகரெட் கம்பெனி நடத்துறார்னு சொல்லி டாஸ்மாக் அரசின் செயலை மறைக்கப் பாத்தாங்க!

வைகோவும், அதுக்கு ஏத்தா மாதிரியே, திருமாவையும், காவலர்களையும் திட்டி, கவனத்தை ஈர்த்தாரு!

இத்தனை நாளா சீன்ல இருந்த நம்ம மேல, லைம் லைட் உழுவலியேன்னு யோசிச்ச காடுவெட்டி கோஷ்டி, வழக்கம் போல ஊரைக் கொளுத்துனாங்க!

அதுக்குப்பறமும், அங்கங்க எதுவும் மிச்சம் மீதி பேசாம இருக்கனுங்கிறதுக்காக, இப்ப ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை! ஈவிகேஎஸ்சும், நான் தப்பே செய்யவில்லை எதற்கு மன்னிப்பு என்று, தானும் ரவுடி என்று நினைக்கப் பார்க்கிறார்!

மாணவர்கள் போராடலாமா, வன்முறை செய்யலாமா என்று பேசிய‌ எந்த புனிதர்களும் தற்போதைய அதிமுகவின் செயல்களைப் பற்றி வாயைத் தொறக்கவே இல்லை! சந்திரலேகா, சென்னாரெட்டி, சுப்பிரமணிய சுவாமி, ஜானகி அம்மையார் மேல் குற்றம் போன்ற பிரச்சினைகளையும் வசதியா எல்லாரும் மறந்து விட்டனர்!

வக்கிரம் என்பது இளங்கோவன் சொன்ன வார்த்தைகளில் மட்டுமில்லை! ராஜிவ்காந்திங்கிற அதிமுக ஆளை வைச்சு, ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கைது செய்யனும்னு, அதே சசி பெருமாள் பாணியில் செல்ஃபோன் டவர்ல ஏறி போராட்டம்னு அறிவிக்கிற செயல்களிலும் இருக்கிறது!

இப்ப மது பிரச்சினையும்  மறைந்துவிட்டது!. ஜெயலலிதா உண்மையிலேயே ஆக்டிவாக செயல்படுகிறாரா என்கிற கேள்வியும் மறைந்துவிட்டது!

#ஆனாலும் அவிங்க வாசிக்கிறதையும், இவிங்க ஆடுறதையும் பாக்கும் பொழுது அப்படியே தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணேசன், பத்மினியைப் பாக்குற மாதிரியே இருக்கு!

Naresh Kumar

unread,
Aug 20, 2015, 6:39:12 AM8/20/15
to பண்புடன்

10 நாளா பொறுப்பா நடந்துகிட்டு இருக்குறது கேப்டன் மட்டுந்தான்! ஆனாலும், அவரை மட்டம் தட்டும் செயல்களும், காமெடிக் காட்சிகள் மட்டுந்தான் வெளிய வருது!

நம்மாளுங்களுக்கும், ரோட்டை மறிச்சு பிரச்சினை பண்ணாதான் என்னான்னு பாக்குறாங்க! (அதுவும் பாக்குற‌து மட்டுந்தான்!)

"உன்னை தினம் தேடும் தலைவன்
இன்று கவி பாடும் கலைஞன்
காவல் வரும் போது கையில் விலங்கேது
கால்கள் நடமாடட்டும்...
லாலாலா லாலா லாலா லாலா..."

ஆகஸ்ட் 20.
சட்டசபையில் என்னைப்பற்றி என்னென்னமோ சொல்லியிருக்கார் முதல்வர் ஜெயலலிதா. ஒரு ஆண் மகனை, ஒரு பெண் விமர்சிக்கலாம். ஆனால், ஒரு பெண்ணை ஆண்கள் விமர்சிக்க கூடாது என்பது எப்படி சரியாக இருக்கும். 
தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தை திசை திருப்புவதற்காகவே, ஆளுங்கட்சியினர் தற்போது புதிய போராட்டத்தை நடத்துகின்றனர்.

ஆகஸ்ட் 19.
அதிமுகவினரை ஜெ. கட்டுப்படுத்த வேண்டும். 
அரசியல் ரீதியான கருத்து விமர்சனத்தில் தனிமனித தாக்குதலை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதே தேமுதிகவின் நிலைப்பாடு.
இதுபோல நீங்கள் பிற கட்சித்தலைவர்கள் மீது தொடுக்கின்ற தனிமனித தாக்குதலுக்காக, தேமுதிக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியின் தொண்டர்களும், அதிமுகவினரைப் போலவே சட்டத்தை கையில் எடுத்தால், காவல்துறை இதுபோல் வேடிக்கைப் பார்க்குமா?

ஆகஸ்ட் 18
ஒருபுறம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிவிட்டு, மறுபுறம் டாஸ்மாக் மதுவால் பெண்களின் தாலியை பறிக்கும் செயல் குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுக்கிறது.

ஆகஸ்ட் 16
முதல்வர் சுதந்திர தின உரையில் மக்களுக்குப் பயன்தரும் அறிவிப்புகள் இல்லை. சட்ட மன்றத்தில் எப்படி நடைமுறை படுத்த முடியாத திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பாரோ, அதேபோன்று சுதந்திர தின உரையும், சுய விளம்பரத்திற்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, மக்களுக்குப் பயன்தரும் எந்த ஒரு அறிவிப்பும், இந்த சுதந்திரதின உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

ஆகஸ்ட் 14
தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்து விஜயகாந்த் வழக்கு : உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இக்குழுக் கூட்டத்தை அவசர கதியில் ரகசியமாக நடத்தியுள்ளனர். ஆளுங்கட்சிக்கும், அரசுக்கும் செய்த சேவைக்காக அனுகூலம் செய்யும் வகையில் மேற்கண்ட 3 பேரையும் நியமித்துள்ளனர்.

VJagadeesh

unread,
Aug 20, 2015, 7:33:11 AM8/20/15
to பண்புடன்

சட்டமன்ற நிகழ்வை ஒளிபரப்ப உரிமைக்கேட்டு மேல் முறையீடும் நடந்திருக்கு கேப்டன் சார்பா.

--

Naresh Kumar

unread,
Aug 20, 2015, 7:45:08 AM8/20/15
to பண்புடன்
:))))

Naresh Kumar

unread,
Aug 27, 2015, 2:04:39 AM8/27/15
to பண்புடன்

சொல்லி வைத்தாற் போன்று நேத்து எல்லா டிவிகளிலும், சென்சஸ் சொல்லுவது என்ன என்பதுதான் விவாதம்!

புதிய தலைமுறையில், பாஜக ஆதரவாளர்னு (இந்த அடைமொழியை எங்கிருந்து புடிக்கிறாங்க) ஒருத்தர், விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கனும்னு ஆர்ப்பாட்டம் பண்ண இஸ்லாமிய க்ரூப்புலருந்து ஒருத்தரு (பேரு மறந்து போச்சு), ஒரு பேராசிரியர் அப்புறம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அருணன்!

கம்யூனிஸ்ட் கட்சியின் மேல் எப்பொழுதும் ஏற்படும் பரிதாபம் அப்பொழுதும் அருணன் மேல் வந்தது! இவரு விவாதத்துல ஐடியலிஸ்ட் பாயிண்ட்டுகளோட பேசுவாரே, இப்போதைய ட்ரெண்டுக்கு, அது வெளங்காதேன்னு பாவமா இருந்துச்சு!

இந்துக்களின் அடையாளத்தை முன்னிறுத்துகின்ற அந்த பாஜக ஆதரவாளர்க்கு, க்ரோத்துக்கும், மக்கள் தொகைக்குமே முழு வித்தியாசம் தெரியலை. வாய்க்கு வந்த வார்த்தைகளை எல்லாம் வெச்சு ஒப்பேத்திட்டிருந்தார், ஆனா தீம் என்னான்னா, நாங்க ஏற்கனவே சொன்னா மாதிரி, முஸ்லீம்களின் மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக இருக்கிறதுங்கிரது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுன்னு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிட்டிருந்தாரு!

அடுத்து பேசிய இஸ்லாமியரோ சம்பந்தமே இல்லாம இந்து மதத்தில் இருக்கும் வர்ணாசிரம பிரிவு, ஒருத்தரால இந்துவா மாற முடியாது, ஏன்னா எந்த ஜாதிக்குன்னு மாறுவாங்க, ஆனா தமிழ்நாட்டுலியே பெரியார்தாசன், யுவன் சங்கர் ராஜா, நடிகை மோனிகால்லாம் இஸ்லாமுக்கு மாறுனாங்கன்னு ஆரம்பிச்சாரு!

இரு மதங்களை ரெப்ரசெண்ட் செய்யும் இந்த இருவருமே, இன்னொரு மதத்தைப் பற்றி குற்றம் சொல்லுவதிலே மட்டுமே அதிக கவனம் செலுத்தினர்!

பிஜேபி மதச்சார்பற்ற கட்சி என்று சொன்னால், இந்தியாவின் பெரும்பான்மையான‌ இந்துக்கள் சிரித்து விடக் கூடிய அளவிற்கு அவர்களுடைய சார்பு நிலை, இன்னொரு மதத்திற்கு எதிராக அவ‌ர்கள் எடுக்கும் முன்னெடுப்புகள் எல்லாவற்றையும் பலரும் அறிந்தே வைத்திருக்கின்றனர்!

ஆனால், பிஜேபி பேச்சாளர்கள் செய்யும் அதே வேலையை இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் முன்னெடுக்கும் போது எரிச்சலே மிஞ்சுகிற‌து.

பொது ஜன சமூகத்தின் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான‌ ஒரு கருத்தியலை, மனப்பான்மையை பிஜேபி மற்றும் இதர இந்துத்துவா கட்சிகள் முன்னெடுப்பது வேறு விஷயம். ஆனால் அதற்கு சாதகமான சூழ்நிலையை, செய‌லை இந்த இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து செய்து கொண்டேதான் இருக்கின்றன!

ஏற்கனவே, அப்துல்கலாமை ஒரு முஸ்லீமாகக் கூட ஏற்றுக் கொள்ளாத அமைப்புகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில், இந்தப் போக்கு செல்லும் திசை கவலையைத்தான் அளிக்கிறது!

இது போன்ற அமைப்புகளினால், மக்களுக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ, அந்த அமைப்புகளுக்கும், பிஜேபிக்கும் கண்டிப்பாக பயன் இருக்கிறது!



Naresh Kumar

unread,
Nov 16, 2015, 4:45:22 AM11/16/15
to பண்புடன்
இந்த அடைமழை வெள்ளத்தில்,

முரட்டு திமுக தொண்டர்கள், அதிமுக அரசு என்ன செய்தது என்று கேள்வி எழுப்புவார்கள்? முதல்வர் பார்வையிடக் கூட வரவில்லை என்று நக்கல் அடிப்பார்கள்!

புத்திசாலி திமுக தலைவர்கள், தங்கள் தொகுதி, ஏரியாக்களின் நிலையை முன்னின்று, சொந்தக் காசிலேனும் சீர் படுத்துவர் (படுத்தலாம்)!

கண்மூடித்தனமான அதிமுக பக்தர்கள், 2008 வெள்ள அறிக்கையை வாசிப்பர். வெள்ளம் இயல்புதான் என்று கள்ளம் புரிவர்!

அறிவாளி அதிமுக தலைவர்கள், அரசின் காசில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வர்!

ஆறுகளை குறைந்த விலைக்கு குளிபான நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் அரசு ஆட்சி செய்கையில், இந்த நிலைமைகள் ஏற்படுவது இயல்பே!

ஆனால் அவசரக் காலங்களில் கூட, அடிப்படை மீட்பு, நிவாரண உதவிகளை ஏற்பாடு செய்ய அரசு மெத்தனம் காட்டுமேயானால், அது அரசின் கர்வத்தை மட்டுமல்ல, மக்களின் சுரணையற்ற தன்மையுமே காட்டுகிறது!

ஒரு வேளை, மேல் மாடி வீடுகளில் இருந்து கொண்டு, அடித்தள வீட்டு மக்களின் நிலைகளை வேடிக்கை மட்டுமே பார்ப்பீர்களேயானில், நீங்கள் எந்த நிவாரண உதவிகளுக்கும் தகுதியற்றவர்களே!

sankaran

unread,
Nov 16, 2015, 4:49:28 AM11/16/15
to panb...@googlegroups.com
மழை வந்தால் வெள்ளம் வரத்தான் செய்யும் என்றூ தமிழக முதல்வர் ஸ்டேட்மெண்ட் விட்டுருக்காரே. பாக்கலையா

Naresh Kumar

unread,
Nov 30, 2015, 4:31:00 AM11/30/15
to பண்புடன்

ஐநாக்ஸ் தியேட்டர்களில் முன்பெல்லாம் படம் முடிந்த உடன் தேசிய கீதம் போடுவார்கள்! பலர் அதை மதிப்பதில்லை என்ற காரணத்தினால் சில தியேட்டர்களில் அதைப் போடுவதில்லை என்று கேள்வி!

சில தியேட்டர்களில், இதைத் தவிர்க்க படம் போடுவதற்க்கு முன்பே போடுகிறார்கள்! ரெகுலரா, அந்த தியேட்டர்களுக்கு செல்பவர்கள், அதை உணர்ந்து, பாப்கார்ன் இன்ன பிறவற்றை வாங்கி தேசிய கீதம் முடிந்த உடன் உள்ளே வருவர்!

ஒரு மாதத்திற்க்கு முன்பு, எனது குழந்தையின் விளையாட்டு தின நிகழ்ச்சியின் முடிவில், தேசிய கீதத்தின் போது பலர் நிற்கையில், பலர் அந்தத் தருணத்தை பயன்படுத்தி பேருந்தில் இடம் பிடிக்க ஓடிக் கொண்டிருந்தனர்!

கேரள உயர்நீதிமன்றம் என்று நினைக்கிறேன், பள்ளிகளில் தேசியகீதம் கட்டாயமில்லை, அரசும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் கூறியிருக்கிறது!

எந்த கிரிக்கெட் முதலான போட்டிகளின் வழியே தேச பக்தி ஊட்டப்படுகின்றதோ, அந்தப் போட்டிகளில் தேசியகீதம் பாடும் பொழுது, பலரும் ஜாலியாக சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

பாரிசில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு, அஞ்சலி செலுத்த ஒன்று கூடிய மக்கள், தன்னிச்சையாக, கண்களில் நீர் வழிய அந்நாட்டு தேசிய கீதத்தை பாடினர்!

கடைசியாக, நம் நாட்டின் தேசிய விலங்கு புலி!

ஸ் பெ

unread,
Nov 30, 2015, 4:55:41 AM11/30/15
to panbudan
உலகமயமாக்கல் உலகில் தேசபக்தி என்பது ஒரு ஹம்பக் ;-)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

துரை.ந.உ

unread,
Nov 30, 2015, 4:59:54 AM11/30/15
to பண்புடன்
’கற்பிதம்’ன்னு  வந்திருக்கணும் 
:)

Naresh Kumar

unread,
Nov 30, 2015, 5:10:26 AM11/30/15
to பண்புடன்
:)

ஒரு க்ரூப்பு அதே வீடியோவை சேர் பண்ணி, பாத்தீங்களா இவிங்க திமிரை, இதைக் கேட்டா சகிப்புத் தன்மையில்லையான்னு பொங்குறாங்க!

இன்னொரு க்ரூப்பு, அதே வீடியோவுக்கு, எல்லாம் சேந்து துரத்துனா சகிப்புத் தன்மை இல்லைன்னுதான் அர்த்தம்னு சொல்லுறாங்க!

துரை.ந.உ

unread,
Nov 30, 2015, 5:14:49 AM11/30/15
to பண்புடன்
மொத்தத்தில் கிறுக்குத்தன்மை கூடிவிட்டது 


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
Reply all
Reply to author
Forward
0 new messages