அப்பா அடிச்சா அது தர்ம அடி.. (கவிதை) வித்யாசாகர்!

3 views
Skip to first unread message

வித்யாசாகர்

unread,
Apr 8, 2018, 9:20:32 AM4/8/18
to தமிழ் சிறகுகள், மின்தமிழ், தமிழ் பிரவாகம், தென்றல், பண்புடன், தமிழ் அமுதம், தமிழுலகம், வல்லமை, Gulf_tami...@yahoogroups.com, முத்தமிழ்


டித்தாலும் திட்டினாலும்
முண்டம் முண்டமென மண்டையில் கொட்டினாலும்
அப்பா வீட்டிலிருக்கும் நாட்கள் தான்
வசந்தமான நாட்கள்..

அப்பா கையில் அடி வாங்குவது
அவ்வப்பொழுது இறந்து பிறப்பதற்கு சமம்..

நம்மை புதிதாகப் பெற்றெடுக்கவே
அனுதினமும் நெஞ்சில் சுமக்கும் அம்மாக்களாகவே
நிறைய அப்பாக்களும் இருக்கிறார்கள்..

அப்பா திட்டுகையில் என்றேனும்
அப்பா அடிக்கையில் என்றேனும்
பாவம் அப்பா என்று யோசித்திருக்கிறீர்களா ?

உண்மையில் அப்பாக்கள் பாவம்
நான் அடிவாங்கிக்கொண்டு
தூங்குவதுபோல் விழித்திருப்பேன்,
பிள்ளை உறங்கிவிட்டானென வந்து
அப்பா அடித்த இடம் தடவி
பிள்ளைப் பாவமென்று முத்தமிடுவார்
எனக்கு மறுநாளும் அந்த முத்ததிற்காகவே
இன்னொரு அடிவாங்க அன்பூறும்..

விடிகாலையில் அப்பா
வேலைக்கு புறப்படுகையில் தரும்
ஒற்று முத்தததை விட
நாங்கள் உறங்குவதுபோல் நடிக்கையில்
அப்பா வேலைக்கு கிளம்பிவந்து
செல்லப் பாப்பாவெனச் சொல்லி
அழுந்த தரும் முத்தம் அப்படியொரு சுகமானது..

எங்கப்பா பெரிய ஹீரோவெல்லாம் இல்லை
ஆனால் நல்ல மனிதரென்று
எத்தனைப் பிள்ளைகள் புரிந்துள்ளீர்கள்?

காலம் முழுக்க
எனதம்மாவின் முந்தானைக்குள் விழாமல்
அவளை அடுப்படிக்குள் மட்டுமே அடைக்காமல்
அவருக்குச் சமமாக வைத்திருக்கும் என்னப்பா
எனக்கு கதாநாயகன் தான்..

அப்பா கொஞ்சும் கொஞ்சல்களைப் போல
உலகில் வேறு சிறந்த மகிழ்ச்சியில்லை,
அவர் மீசைக் குத்திய முத்தத்திற்கு ஈடு
உலகில் வேறு பரிசே கிடையாது,
அப்பாவின் வாசனைக்கு ஈடாக
இன்னொருவர் இனி பிறக்கப்போவதேயில்லை.,

உண்மையில்
எங்களை உயிராக்கியவள் அம்மா
அதை தனதுயிராக்கிக் கொண்டவர் அப்பா..
--------------------------------------------
வித்யாசாகர்
Reply all
Reply to author
Forward
0 new messages