மாட்டிறைச்சி தடை நியாயமானதா?

4 views
Skip to first unread message

செல்வன்

unread,
May 29, 2017, 2:25:06 AM5/29/17
to செல்வன்
மாட்டிறைச்சி தடை பண்பாட்டு, ஆரோக்கிய, பொருளாதார, சமூகரீதியில் நியாயமானதா?

பதிலை அறிய கடைசி பத்திக்கு போக வேண்டாம். பதில் இல்லை என்பதே :-) சஸ்பென்ஸ் உடைந்த மகிழ்ச்சியுடன் எப்படி என்பதை காண்போம்.

துவங்குமுன்: டிஸ்கி-> இது அரசியல் பதிவு அல்ல. அதனால் அரசியல், கட்சிகள், ஜாதி, இனம், மத ரீதியில் இதை அணுகவோ, படிக்கவோ வேண்டியதில்லை. பின்னூட்டங்களிலும் இதெல்லாம் வேண்டாம்.

முதற்கண்: மாட்டிறைச்சி இந்திய பண்பாட்டுக்கு எதிரானதா?

பண்பாடு என்பதில் சமயமும் அடங்கும். இந்தியாவுக்கு ஒற்றைபண்பாடு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. வேதமரபு இங்கே நிலவிய மரபுகளில் ஒன்று. வேதமரபுக்கு சற்றும் குறையாத தொன்மையான மரபுகளாக சமணம், பவுத்தம், பழங்குடி மரபுகள் இங்கே நிலவின.

இதில் காலத்தால் வேதமரபுக்கு முற்பட்டது என அனைவரும் ஏற்கும் நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகம். அவர்களின் முக்கிய உணவு மாட்டிறைச்சி. அவர்கள் விவசாயகுடி மக்கள். மாடுகளை உழவுக்கும், பாலுக்கும் பயன்படுத்தினார்கள். அவர்கள் உணவில் அதனால் மாடுகள், எருமைகள், வேட்டைமிருகங்கள் பெரும்பங்கு வகித்ததாக அனைத்து அகழ்வாராய்ச்சி முடிவுகளும் தெரிவிக்கின்றன. எருமைகளை சிவன் போன்ற ஒரு தெய்வத்துக்கு (ப்ரோட்டோ சிவன்) பலி கொடுக்கும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியே நேபாளத்தில் இன்றும் நடந்துவரும் எருமையை பலியிடும் காந்திமயி விழா என கருதவும் இடமுண்டு. எருமைகளை பலியிடும் வழக்கம் கர்நாடகாவிலும் உண்டு. கொங்குமன்டலத்தில் காங்கேயம் அருகே உள்ள கண்ணபுரம் கிராமத்திலும் எருமைகளை பலியிடும் வழக்கம் இருந்து நூறான்டுகளுக்கு முன்புதான் நின்றிருக்கிறது.



இப்போது ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகம் இந்திய மரபு சார்ந்ததா இல்லையா எனும் சிக்கலான கேள்விக்கு மாட்டிறைச்சி தடைகோருவோர் விளக்கமளிக்க கடைமைப்பட்டுள்ளனர். விளக்கம் நமக்கு வேண்டியதில்லை. அவர்களே யோசித்துக்கொள்ளவேண்டியதுதான். இப்படி பலிகொடுக்கும் வழக்கம் வேதகாலத்துக்கும் முற்பட்ட தொல்மரபாக இருக்கையில், அது இந்திய மரபு சார்ந்தது அல்ல என கூறுவது சரிதானா?

தமிழ் மரபு என எடுத்துக்கொண்டால் விவசாயம் சார்ந்த மண் என்பதால் மாடுகளை பலியிடும் வழக்கம் இல்லை. சங்ககால தமிழ் நூல்கள் பலவும் மாடுகளை உயர்ந்தவையாக, புனிதமாக கூறுகின்றன

சான்றாக மதுரையை எரிக்கும் கண்ணகி "பார்ப்பனர்,அறவோர்,பசு,பத்தினிப் பெண்கள்,மூத்தோர்,குழவி ஆகியோரை விட்டு தீத்திறத்தோர் பக்கமே சேர்க" என நெருப்புக்கு ஆணையிடுகிறாள்.

அதே சமயம் மாட்டிறைச்சி சங்ககாலத்தில் தடுக்கபடவும் இல்லை. ஒரு காளையை அடித்து ஊர்முழுக்க உண்ட கதையை பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது.

கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
இல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப

அதாவது எதிரிநாட்டு மன்னன் நாட்டில் புகுந்து ஆநிரை கவர்ந்து அதில் ஒரு காளையை (மத விடை) ஊரே கூடி வெட்டி விருந்துண்டது என்கிறது பெரும்பாணாற்றுப்படை

நற்றிணை 310ம் பாடலில்

கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை

வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே.

"கன்றுபெறும் பாணன் அதை கொன்று விரைந்துரித்து உண்ணுவதை" இந்த நற்றிணைப்பாடல் குறிக்கிறது

அகநானூறு 249ல் மழவர் மாடுகளை உண்டதைக் கீழ்காணும் பாடல் சுட்டுகிறது

பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகா வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக்களந் துழைஇய துகள்வாய்க் கோடை

உரை: மயிலின் சிறகாற் றொடுத்தலையுடைய மாலையை அணிந்த மழவர்பல பூக்களையுடைய காட்டில் சுருங்கிய நிழலில் தங்கி, இளைய பசுவினைக் (நாகு ஆ) கொன்று,அதன் ஊனைத் தின்ற இடமாய, புலால் வீசும் இடத்தினைத் துழாவிய புழுதியைத் தன்னிடத்தே கொண்ட மேல் காற்றின் ஒலியினை

ஆக தமிழ்மரபு என எடுத்துக்கொண்டாலும் "மாடுகளை புனிதமாக மதிக்கும் மரபும், மாடுகளை கொன்று உண்ணும் மரபும் ஒருங்கேயே இருந்துவந்துள்ளன" என்பதையே அறியலாம். அதாவது கண்ணகி போன்ற வணிகர்கள் மரபில் பசு புனிதமானது, மழவர்கள், பாணர்கள் மரபில் பசு உண்ணதக்கது. மழவர்கள், பாணர்கள் ஆகியோரின் மரபில் அன்றைய தமிழ் மன்னர்களோ, மக்களோ தலையிடவில்லை. பெருந்தன்மையாக "உன் மரபு உனக்கு, என் மரபு எனக்கு" என்றே வாழ்ந்துவந்துள்ளனர்.

அன்றைய பாணர்கள் மிகுந்த மதிப்புக்குரியவர்கள், புலவர்கள், கலைஞர்கள். மன்னன் கரிகாலனே நேரடியாக பாணர் ஒருவரை வரவேற்று விருந்தளித்து உபசரித்த காட்சியை பெரும்பாணாற்றுப்படை விளக்குகிறது. சங்கதமிழகத்தில் சாதிகள் இருந்தன. ஆனால் வருணாசிரம உயர்வுதாழ்வு அன்று இல்லை. அன்றைய சாதிகள் இன்றைய சாதிகளை போல இறுகியதன்மை கொன்டவையாக இல்லாமல் நெகிழ்ச்சியுடன் இருந்தன. அது வேறு கதை

வேதமரபு என எடுத்துகொண்டாலும் பசு கொல்லபடகூடாது என மனுநீதியில் கூறபட்டாலும் மதுபர்க்கம் போன்ற சடங்குகளில் பசு கொல்லபட்டு குரு, மன்னர் முதலானோருக்கு உணவாக அளிககப்ட்டே வந்துள்ளது. உயர்ந்த, புனிதமான மிருகம் என்பதால் உயர்ந்தவரான குரு ஒருவரது இல்லத்துக்கு வருகை தந்தால் அவருக்கு மாட்டிறைச்சி, அதிலும் இளைய கன்றின் இறைச்சி அளிக்கபட்டேஆகவேண்டும் என்பதே மதுபர்க்கம்.

யாகங்களில் பசுக்கள் பலியிடபட்டன. பின்னாளில் புத்தர் இதை கண்டு மனம் வெதும்பி இதை கடுமையாக கண்டிக்கிறார். அதன்பின் அசோகர் மன்னாரனபின் தான் யாகங்களில் பசுவை பலியிடுவதை தடுத்து சட்டமியற்றுகிறார். ஆப்கானிஸ்தான் முதல் கர்நாடகம் வரை பரந்து விருந்திருந்த மாபெரும் பேரரசர் அசோகர். பவுத்த சமயம் சார்ந்த இம்மன்னர் தான் இந்தியாவின் முதல் பசுவதை தடைசட்ட்டத்தை பிறப்பிக்கிரார். சமனர்கள் ஒருபடி மேலே போய் கொல்லாமை நோன்பையே வலியுறுத்திகிறார்கள். உலகின் முதல் சைவர் என மகாவீரருக்கு முந்தைய தீர்த்தங்கரரான பார்சுவநாதரை சொல்லலாம். அடுத்து வர்த்தமான மகாவீரர் காலத்தில் சமணம் நாடெங்கும் பரவுகிறது

இந்த இரு சமயங்களும் இந்து சமயத்தின் மேல் சுமார் 400 ஆண்டுகள் செலுத்திய ஆதிக்கத்தின் விளைவே மாட்டுக்கறி உண்ணாமையும், மரக்கறி உணவும் இந்துமதத்தில் நுழைந்தன. இன்றைக்கும் இந்துசமயம் சீக்கிய சமயத்தின் மேல் செலுத்தும் ஆதிக்கத்தின் விளைவாக சீக்கியர்களும் பீஃப் உண்ணமல் இருப்பதை காணலாம். இந்து தெய்வங்கள் அனுமான், துர்க்கை, அம்பிகை, இலக்குமி ஆகியோர் சமண, பவுத்த மதங்களில் இருப்பதையும், புத்தர் அவதாரமாக இந்துமதத்தால் கடன்வாங்கபட்டதையும் கூறலாம். ஆக இச்சமயங்களுக்குள் கலாசார ரிதியான கொடுக்கல் வாங்கல் நிகழ்ந்துள்ளது அல்லது இம்மூன்று சமயங்களும் ஒரே சமயத்தில் கோ-இவால்வ் ஆகின எனவும் கூறலாம்.

ஆனால் மாட்டிரைச்சி தடை என்பதும், மரக்கறி உணவும் நிச்சயமாக தீயை வணங்கி, மீனவர், வேடர்களை ரிஷிகளாக கொண்ட, நாடோடிகளான ஆரியர்களின் மரபே கிடையாது, வேதமரபும் கிடையாது. அது சமண/பவுத்த மரபு. அதைத்தான் இந்துக்கள் மேல் இப்போது இந்த உத்தரவின் மூலம் திணிக்கும் முயற்சி நடக்கிறது.

சமணர் அல்லாத யாரும் மரக்கறி உணவை பின்பற்றூம் அவசியம் பண்பாட்டு ரீதியில் இல்லை. பவுத்தர் அல்லாத யாரும் அசோகர் அன்று போட்ட உத்தரவுக்கு இன்று கட்டுப்படும் அவசியமும் இல்லை.

அசோகரின் மகளே நேரடியாக இலங்கை சென்று பவுத்தத்தை பரப்பினார். அதனால் இன்றும் இலங்கையில் பவுத்தபிட்சுக்கள் மாட்டிரைச்சிக்கு எதிராக உள்லார்கள். ராஜபக்சே காலத்தில் நாடுமுழுக்க மாட்டிரைச்சிக்கு தடி விதிக்க முயற்சி நடந்து கைகூடவில்லை. ஒரு புத்தபிட்சு மாட்டிரைச்சியை தடைசெய்யவேண்டும் என கோரி தீக்குளித்து உயிரை கூட விட்டார். யுடியூபில் விடியோவை காணலாம்.




ஆக மரபு/பண்பாட்டு ரீதியில் மாட்டிரைச்சியை தடுக்கும் காரணிகள் எதுவுமே கிடையாது. சமண/பவுத்த மரபை நம் மேல் திணிப்பதாக இருந்தால் தவிர்த்து. இந்துக்கள் ஏன் சமண/பவுத்த நெறியை பின்பற்றவேண்டும் என எனக்கு புரியவும் இல்லை.

அடுத்த பகுதிகளில் பொருளாதாரம்/ஜீவகாருண்யம் போன்ற கோணங்களில் இதை ஆராய்வோம்

--

செல்வன்

unread,
May 29, 2017, 3:11:55 PM5/29/17
to செல்வன்
மாட்டிறைச்சி தடை பண்பாட்டு, ஆரோக்கிய, பொருளாதார, சமூகரீதியில் நியாயமானதா?- 2

ஆரோக்கியம்:

மிக, மிக அரிதாக கிடைக்கும் கருங்குரங்கு ரத்தம், சீல் போன்ற பொருக்ட்ளை எல்லாம் விட்டுவிட்டு கமர்சியலாக கிடைக்கும் உணவுகளை எடுத்தால் உலகின் மிக, மிக ஆரோக்கியமான உணவு மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும்தான் (எருமை, பைசன் உட்பட). அடுத்த நிலையில் லேம்ப், ஆட்டிறைச்சி வரும். சுவை என எடுத்துக்கொண்டால் நபரை பொறுத்தும், டேஸ்டை பொறுத்தும் சுவை மாறுமெனினும் உலகின் மிக சுவையான உணவுகளில் ஸ்டேக்கும், பேகனும் முதன்மை இடம்பெறும். ஆனால் பேகனுக்கு ரசிகர்கள் அதிகம் :-)

அதனால் தான் உலகில் அதிகம் உண்ணப்படும் இறைச்சியில் முதலிடம் மாட்டிறைச்சிக்கும், மிக க்ளோஸ் ஆன இரண்டாமிடம் பன்றி இறைச்சிக்கும் இருக்கிறது. மாட்டிறைச்சியை விட ஆரோக்கியமான உணவை (புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்) அடிப்படையில் தேட ரொம்ப சிரமப்படவேண்டும். ஆக உடல்நலம் எனும் ரீதியில் பார்த்தால் உலகின் மிக, மிக ஆரோக்கிய உணவுகளில் ஒன்றுக்கு தடை விதிப்பது மிக, மிகப் பிழையானது.

ஜீவகாருண்யம்- கோமாதா- பால் தரும் பசு: வாதங்கள்

விவசாயகுடிமக்கள் பசுவை தெய்வமாக வணங்குகிறார்கள். பொங்கலன்று மாட்டு கொம்புகளுக்கு வர்ணம் பூசுகிறார்கள். மாடு என்றால் செல்வம் என்றே பொருள். ஆக பசுமாடு விவசாயபெருங்குமக்களுக்கு புனிதமானது எனும் வாதத்தை எடுப்போம்.

பசு விவசாயிகளுக்கு மிக முக்கியமான மிருகம், செல்வம். பசுக்களை அழிப்பது நாட்டின் செல்வத்தை அழிப்பதற்கு ஒப்பானது. அதனால் தான் மதுரையை எரித்த கண்ணகி கூட பசுவை அழிக்கவேண்டாம் என தீயிடம் கூறுகிறாள். அதே சமயம் பசு "வழிபடத்தகுந்தௌயிரினம், தாய்க்கு சமமானது" என சிலம்பிலோ, குறளிலோ, சங்க இலக்கியத்திலோ, ஏன் பக்தி இலக்கியங்களிலோ கூட இல்லை

"கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்" என பசுக்களை நாட்டின் வளத்தின் ஒரு பகுதியாக, மக்களின் வாழ்க்கைமுறையில் கொண்டாடும் விதங்களில் தான் நம் இலக்கியங்கள் கூறுகின்றன. பசுவிற்கு மரியாதை அளிக்கபட்டது, கொன்டாடபட்டது, செல்வத்தின் அறிகுறியாக கருதபட்டது. ஆனால் தெய்வமாக அல்லது தாயாக கருதபடவில்லை. வணங்கப்படவில்லை. இந்த வேறுபாடு மிக முக்கியமானதாகும்.

"கோமாதா எங்கள் குலமாதா" எல்லாம் மிக, மிக பிற்காலம். கோமாதாவில் வரும் மாதா தமிழ் சொல் அல்ல. கோமாதாவுக்கு ஒப்பான பசுத்தாய், ஆவன்னை என்பது போன்ற எந்த சொல்லும் தமிழில் இல்லை. பசுவை தாயாக, தெய்வமாக மதிக்கும் மரபு தமிழ்மண்ணில் இல்லை. அதை உயர்ந்த செல்வமாக, வளமையின் அறிகுறியாக, அன்புக்குகந்த ஒரு பிராணியாகவே கருதினார்கள். ஆனால் பசு தாய்க்கு ஒப்பானது என சொல்பவர்கள் தமிழ்மரபில் இல்லாத ஒரு விசயத்தைதான் சொல்கிறார்கள். தாய்க்கு எப்படி ஒரு பிராணி ஈடாகமுடியும்? அது என்னதான் செல்லபிராணியாக இருப்பினும்?

பசு விவசாயிகளின் வாழ்வில் முக்கிய அங்கம். விவசாயிகளின் வாழ்க்கையை அறிந்த யாரும் பசுக்களை போற்றும், பொங்கல் கொன்டாடும் அதெ விவசாயி அதை விற்கவும் செய்வான் என்பதை உணர்வார்கள். விற்பதால் பசு கொல்லபடும் என்பதை விவசாயி அறிந்தே இருக்கிறார். இத்தனை நாள் வளர்த்த மாடு விற்க்கபடும் நாள் விவசாயிகளின் வீட்டில் ஒரு துயரமான நாள். மனதிற்குள்ளாவது அழுது, கண்ணீர் வடித்தபடிதான் அவர்களும், அவர்கள் குடும்ப உறுப்பினர்களும் பசுக்களை விற்பார்கள். அவர்களை பொறுத்தவரை அது அப்பசு இறக்கும் நாள். வீட்டில் இறந்த வயதான பெரியவர்களை வழியனுப்பி வைப்பதுபோல் தான் அது. பிறப்பும், இறப்பும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதிகள். இப்படி ஒரு தத்துவார்த்தமான விதங்களில் தான் மக்கள் அடிமாடாக பசு விற்கபடுவதை பிராக்டிக்கலாக எடுத்துகொண்டார்கள்.

செல்வம், சொத்து என்கையில் சொத்தை விற்பதும், வேறு ஒரு சொத்தை வாங்குவது போல் தான் இதுவும். வாழும்வரை தாத்தா,பாட்டி இருந்த வீடு என வீட்டை கொன்டாடி மகிழ்கிறோம். அதை ஒரு சமயம் விற்றுவிட்டு வேறுவீட்டில் குடியேறத்தான் செய்கிறோம். அதுபோல் தான் இதுவும்.

குடியானவர்களின் பொருளாதாரமே இப்படி மாடுகளை வாங்கி, பயனுள்ளவரை வைத்திருந்து, அதன்பின் விற்பதில் தான் அடங்கி உள்ளது. 50 வருடம் வைத்திருந்த மெசின் என சொல்லி எந்த கம்பனியிலாவது பழைய எந்திரங்களை விற்காமல் அப்படியே வைத்திருக்கிறார்களா? இயந்திரங்கள் ஓடும்வரை ஆயுதபூஜை எல்லாம் கொன்டாடி, எண்ணெய் போட்டு துடைத்து வைப்பார்கள். விற்பது என்றால் அந்த சென்டிமெண்ட்டை பார்க்காமல் விற்கத்தான் செய்வார்க்ள். விவசாயிகளும் அப்படித்தான். அவர்களுக்கு மாடு தொழில் செய்ய பயன்படும் ஒரு உயிருள்ள இயந்திரம். உயிர் என்பதால் சற்று செண்டிமெண்ட் பார்க்கிரார்கள். ஆனால் அதையே பலவீனமாக பயன்படுத்தி அவர்களை குற்ற உனர்வுக்குள் தள்ள முயல்வது அத்தொழிலையே நசித்துபோக செய்துவிடும். பால் அருந்தும் ஒவ்வொருவரும் விவசாயிகளின் இந்த உணவுசங்கிலியில் அடங்கவே செய்கிறோம்.

பிராக்டிக்கலாக பார்த்தால் காளைக்கன்றுகளை விற்பதும், பால் கறப்பு நின்று போன மாடுகளை அடிமாடுகளாக விற்பதும் விவசாயதொழிலில் அவசியம். அதை செய்யகூடாது என்றால் மாடுகளுக்கு தீனி போட்டு கட்டுபடி ஆகாமல் அவர்கள் பிழைப்பு படுத்துவிடும். கோசாலைகளில் கொண்டுபோய் விடலாம் என சொல்லவேண்டாம். இந்தியாவில் உள்ள மாடுகளின் எண்ணிக்கைக்கும், கோசாலைகள் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை. மேலும் கோசாலைகளில் சேர்க்கும் மாடுகளும் வயது முதிர்ந்து, வியாதி முற்றி, சிகிச்சை இன்றி இறக்கத்தான் செய்கின்றன. அங்கெயும் நோய் முற்றிய மாடுகளை கருணைக்கொலை என்பது போல செய்யத்தான் செய்கிரார்கள். என்ன வெட்டிகொல்வதில்லை. அதற்கு பதில் தீவனம் போடாமல், சிகிச்சை அளிக்காமல் சாகவிடுகிறார்கள்.

மனிதனை அன்றி உலகில் எந்த உயிரினத்துக்கும் வயது ஆகி மரணம் அடைவது எனும் நிலை இல்லை. அனைத்து உயிரினங்களும் கொல்லபட்டு, இன்னொரு உயிரினத்துக்கு உணவாகி இறக்கவே செய்கின்றன. 

மாட்டிரைச்சியை தடுத்தால் பால்வளம் பெருகுமா?

இப்படி சொல்கிறவர்கள் பால்வளம் மிகுதியாக இருக்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தான் மாட்டிரைச்சியும் அதிகமாக உண்ணபடுவது எப்படி என்பதை விளக்கவேண்டும்.

விவசாயிகள் முட்டாள்கள் அல்ல. பால்தரும் பசுமாட்டை பைத்தியகாரன் கூட விற்கபட்டான். காளைக்கன்றுகள், அடிமாடுகள் அல்லது இறைச்சிக்கென்றே பிரத்யெகமாக வரும் மாடுகள் மட்டுமெ சந்தைக்கு வருகின்றன. வெகு, வெகு அரிதாக சில பசுக்கள் வரலாம். அவை வரகாரணமும் எலும்புமுறிவு, பால் சரியாக சுரக்காதது போன்றகாரணமாக இருக்கலாம். ஆக ஒட்டுமொத்தமாக பால்வளத்தை காக்கவே மாட்டிரைச்சி தடை என்பது பொருந்தாத வாதம். பால்வளத்தை பெருக்க மாட்டுவணிகம் நல்லபடி நடப்பது அவசியம்.

மற்றபடி:

அரசியல்ரீதியில் இது நோ-பிரெய்னர். தமிழ்நாடு, கேரளாவில் இதை எதிர்த்தாலும் அந்த இரண்டுமாநிலங்களும் தற்போதைய மத்திய அரசுக்கு ஆட்சி அமைக்க அவசியமற்றவை. வடக்கே நானறிந்தவரை மாட்டிரைச்சி என்பது அரசியல் பிரச்சனையே அல்ல. முலாயம் சிங்க் யாதவின் மருமகள் ட்விட்டரில் மாட்டை கொல்பவர்கள் சாத்தானுக்கு ஒப்பானவர்கள் என்ப்து போல ட்விட்டர் அனுப்பியிருந்தார். லாலுபிரசாத் யாதவ் பீகார் தேர்தல் சமயம் மாட்டிரைச்சி உண்பது சரி என்பது போல சொல்லிவிட்டு பின் 'சாத்தான் என் வாயில் புகுந்து அப்படி சொல்ல்வைத்துவிட்டது' என மன்னிப்பு கேட்டார். காரணம் இவர்களின் சாதியினரான "யாதவ்கள்" மாடுகளை தெய்வமாக மதிப்பவர்கள்.

டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்த சமயம் டெல்லி காங்கிரஸ் அரசு விளையாட்டு வீரர்களுக்கு பீஃப் உணவாக கொடுக்கக்கபடகூடாது என சட்டம் இயற்றியது. ஆக வடக்கே இது தமிழகம், கர்நாடகாவில் இருப்பது போன்ற பிளவை ஏற்படுத்தும் பிரச்சனையே அல்ல. வடக்கே நிலவும் மரபுகளும், நம்பிக்கைகளும் வேறானவை. அவர்களால் அதைதாண்டி இப்பிரச்சனையை ஒரு பன்முகத்தன்மை கொன்ட பார்வையில் அணுகமுடிவது இல்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அப்படிப்பட்ட பார்வை இருப்பதே அவசியம். அவர்களும் ஜல்லிகட்டு, இந்தி எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் கூட தமிழ்க நிலையை புரிந்துகொண்டு உத்தரவுகளை வாபஸ் வாங்கினார்கள். ஆனால் இது அவர்களுக்கு வாபஸ் வாங்கமுடியாத உணர்வுகரமான பிரச்சனை. பெடாவின் லாபியும் இதில் மிகுதியாக இருப்பதாக கருதுகிறேன்.

மற்றபடி இதை வைத்து தேர்தலில் ஆதரவு- எதிர்ப்பு என எப்படியும் பெரிய இம்பாக்ட் இருக்கும் என கணிக்கமுடியாது

Imsai Arasi

unread,
May 31, 2017, 1:33:39 PM5/31/17
to பண்புடன்
வள்ளுவரின் புலால் உண்ணாமை பற்றி உங்கள் கருத்து.... அத போட்டே சாவடிக்குறாங்க FB பக்தாஸ் சிலர்!

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Reply all
Reply to author
Forward
0 new messages