Re: [MinTamil] ஆண்டுப் பிறப்பு முதல்நாள் - இந்திய அரசின் நாள்காட்டி

0 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 22, 2018, 6:19:12 PM4/22/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan, tiruva...@googlegroups.com


2018-04-21 22:22 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2018-04-17 17:56 GMT-07:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>
> ஆண்டு என்பது என்ன?
> ஞாயிற்றின் ஒரு சூழற்சி ஒரு ஆண்டு.
>
> துவக்கம் என்பது என்ன?
> முதல் இடத்தில் இருந்து துவங்கி ஒரு வட்டம் அடித்து மீண்டும் துவங்கிய இடத்திற்கே வருவது.
>
> வட்டமான பாதையில் எது துவக்கத்திற்கான இடம்?
> பண்டைத் தமிழரின் இலக்கியமான நெடுநல்வாடையில்,
> “திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
> விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
> முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
> உரோகிணி நினைவனள் நோக்கி”
>
> எனவே பந்துபோன்ற வானத்தில், ஒன்பது கோள்களுக்குமான பாதைகளை உடைய  27 நட்சத்திரங்களை உள்ளடக்கிய 12 இராசிகளில் ஆடு தலையானது என்பது தமிழருடைய வானியில் கருத்து.
>
> ஆண்டின் துவக்கம் என்ன?
> ஞாயிறு முதல் இராசியில் முதல் நட்சத்திரத்தில் பயணிக்கும் நாளே ஆண்டின் துவக்கம்.
>
> ஞாயிறு முதல் இராசியில் முதல் நட்சத்திரத்தில் என்று பயணிக்கிறது?
> சித்திரை முதல்நாள் பயணிக்கிறது.
>
> எனவே,
> சித்திரை முதல் நாளன்று, முதல் இராசியான ஆட்டில் (மேஷத்தில்) முதல் நட்சத்திரமான அசுபதியில் ஞாயிறு பயணிக்கின்ற காரணத்தினால் “சித்திரை முதல்நாள்தான் ஆண்டின் துவக்கம்” என்கிறேன்.
>
> மேற்கண்ட கருத்துகளில் மறுப்பு இருந்தால் மேற்கொண்டும் பேசலாம் ஐயா.

மணிமேகலை காப்பியக் காலம் வராஹமிஹிரர், பிரம்மகுப்தர் போன்ற ஜ்யௌதிஷர்களுக்கு முற்பட்டது என்ற் காட்ட ஸ்ரீமத் உ.வே.சாமிநாதையரின் மணிமேகலைக் குறிப்புகளும்,
சீத்தலைச் சாத்தனார் அடிகளும் படிக்க வேண்டுகிறேன். மணிமேகலைக் காலம் வரை கூட தமிழர்களுக்கு முதல் நக்ஷத்திரம் கார்த்திகை தான். கி.மு. 2300 - கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை.
அதன் பின்னரே பிரம்மகுப்தர் போன்றோர் அசுவனிக்கு முற்செலுத்தினார்கள் கார்த்திகையில் இருந்து. எனவே, சித்திரை முதல் நட்சத்திரம் என்ற ஆவுடையார்கோயில் சிற்பத்தை விட்டுவிடலாம்.
மேஷாயனம் சிந்து, வேத, சங்க, சிலம்பு, மேகலை காலங்களில் நமக்கு திருக்கார்த்திகை நட்சத்திரத்தில் தான் இருந்திருக்கும். பின்னர் சித்திரைக்கு மாறிவிட்டது. இன்றுதான்
வசந்த (அ) இளவேனில் அரைநாள். நாம் ஏப்ரல் 14-ஆம் தேதி என்று தவறாகக் கொண்டாடுகிறோம். இப்போதெல்லாம் முதல் நக்ஷத்திரம் என்று ரேவதியைக் கொண்டு மேஷாயனம் தொடங்கலாம்.

இன்று: வசந்த (அ) இளவேனில் அரைநாள். அரைநாள் = Vernal Equinox. அரைநாள் சங்கப் புலவோர் கையாண்ட பெயர்.
இதுபற்றிப் பேரா. ப. பாண்டியராஜா கட்டுரைக்கு அளித்த பின்னூட்டில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளேன்
ஸம்மர் ஸால்ஸ்டைஸ் = நெடுநாள்.  ஆண்டிலேயே நீண்ட பகல் கொண்டதால் இப் பரிந்துரை.
Autumnal Equinox = கார்/(வருஷருது) அரைநாள்
விண்ட்டர் ஸால்ஸ்டைஸ் = குறுநாள் . ஆண்டில் குறுகிய நாள்.

இதையே, ஜோதிஷ சாத்திரப் படி,

வசந்த (அ) இளவேனில் அரைநாள். அரைநாள் = Vernal Equinox.  = மேஷாயனம்/மேடாயனம்

ஸம்மர் ஸால்ஸ்டைஸ் = நெடுநாள். = கடகாயனம்

கார்/(வருஷருது) அரைநாள்  = துலாயனம்

விண்ட்டர் ஸால்ஸ்டைஸ் = குறுநாள்  = மகராயனம்.




 
ஆவுடையார் கோயிலே ஒரு மிமோரியல் கோயில். காலத்தால் பிற்பட்ட கட்டிடம் ஆகும்.
அதனால் சங்க கால (அ) அதற்கும் முந்தைய முதல் நட்சத்திரம் அறியப் பயன்படாது.

நா. கணேசன்
Senior Scientist, Loads and Dynamics, Space Structures

>
> அன்பன்
> கி.காளைராசன்
>
>  

Reply all
Reply to author
Forward
0 new messages