Re: [வல்லமை] செக்கர் நிறத்த பறவைகள் - சக்கரவாகம்

3 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 17, 2016, 9:17:53 AM6/17/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, theodore...@gmail.com, muela...@gmail.com, Santhavasantham, panb...@googlegroups.com, pira...@googlegroups.com, eramurukan ramasami
பல நூற்றாண்டுகளாக, மக்கள் வழக்கில் வழங்கும் செம்பருந்து எனுஞ்சொல் உள்ள அழகிய நாட்டுப்பாடல்,
பெர்சி மெக்குயீன் என்பவரால் 19-ஆம் நூற்றாண்டில் தொகுத்த ஏடுகளில் உள்ளது. அவற்றில் சில வாகீச கலாநிதி கிவாஜ
அவர்களால் ‘மலையருவி’ என்ற பெயரில் அச்சில் பதிக்கப்பெற்றது.

33 பாடல் கொண்ட நாட்டார் பாடலில் ஒருபாட்டு:
ஊர்க்குருவி வேசங் கொண்டு
        உயரப் பறந்தியிண்ணாச்
    செம்பருந்து வேசங்கொண்டு
        செந்தூக்காத் தூக்கிடுவேன்
    அன்னமே பொன்னம்மா
        கண்ணி ரண்டும்சோருதடி
                    அன்னமே ஏ ஏ. 
        


(பாடல் முழுதும் படிக்க: http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=234&pno=66 )

33 பாடல்கள் கொண்ட அந்த நாட்டார் பாடலை ஒரு சினிமாவில் அழகாகப் பயன்படுத்தியுளர்.
சினிமாப் பாட்டு எழுதினவர் ஆர் என அறிய ஆவல்.
(அ)

இரா. முருகன் (சிவகங்கை) இச் சினிமாப் பாட்டின் வரலாற்றை எழுதியுள்ளார்.
கூடுதற் குறிப்பு: யார் எழுதினாரோ அவர் ‘மலையருவி’ புத்தகத்தைப் படித்தவர் ஆவார். ~NG

அழகான பாடல். ’நாலு வேலி நிலம்’ படம்.

இந்தப் படம் பற்றி முன்னொரு முறை எழுதியது -

தமிழ்த் திரையிசையின் வரலாற்றில் ஈடுபாடு கொண்ட இரண்டு இளம் நண்பர்கள் எனக்கு உண்டு. நாங்கள், தி.ஜானகிராமன் எழுதி, சிறந்த நாடக, திரைப்படக் கலைஞரான எஸ்.வி.சகஸ்ரநாமத்தால் தன் சேவா ஸ்டேஜ் குழுவினரின் நாடகமாகவும், பின் அவராலேயே திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்ட 'நாலு வேலி நிலம் ' பற்றி அண்மையில் பேசிக் கொண்டிருந்தோம்.

தஞ்சைக் கிராமத்தைக் களனாகக் கொண்டு உருவான அப்படத்தில் வரும் ஓர் அழகான காதல் பாடல் - திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியது. மாட்டு வண்டியில் போய்க் கொண்டே பாடுகிற காதலன் முத்துராமன் என்கிறார் நண்பர். நாயகி யாரென்று தெரியவில்லை. இந்த இனிமையான பாடல் முழுக்க மாட்டு வண்டியின் காளை மணியோசை இசைந்து வரும் அழகே தனி. பாடலும் அழகுதான்.

காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல் எனக்கு 'பாபி ' இந்திப் படத்தில் வரும் 'ஜூட் போலே கவ்வா காடே - காலே கவ்வே ஸே டரியா ' வை நினைவு படுத்தும்.

பாடல் முழுவதையும் தன் நினைவிலிருந்து கொடுத்த நண்பருக்கு நன்றி. நீங்களும் ரசிக்க அது இங்கே -

காதல்

-------

ஊரும் உறங்கையிலே

உற்றாரும் தூங்கையிலே

நல்ல பாம்பு வேடம் கொண்டு

நான் வருவேன் சாமத்திலே.

நல்ல பாம்பு வேடம் கொண்டு

நடுச் சாமம் வந்தாயானால்

ஊர்க்குருவி வேடம் கொண்டு

உயரத்தில் பறந்திடுவேன்.

ஊர்க்குருவி வேடம் கொண்டு

உயரத்தில் பறந்தாயானால்

செம்பருந்து வேடம் கொண்டு

செந்தூக்காய்த் தூக்கிடுவேன்.

செம்பருந்து வேடம் கொண்டு

செந்தூக்காய்த் தூக்க வந்தால்

பூமியைக் கீறியல்லோ

புல்லாய் முளைத்திடுவேன்.

பூமியைக் கீறியல்லோ

புல்லாய் முளைத்தாயானால்

காராம்பசு வேடம் கொண்டு

கடித்திடுவேன் அந்தப் புல்லை.

காராம்பசு நீயானால்

கழுத்து மணி நானாவேன்.

ஆல மரத்தடியில்

அரளிச் செடியாவேன்.

ஆல மரம் உறங்க

அடி மரத்தில் வண்டுறங்க

உன் மடியில் நானுறங்க

என்ன வரம் பெற்றேண்டி!

அத்தி மரமும் ஆவேன்

அத்தனையும் பிஞ்சாவேன்.

நத்தி வரும் மச்சானுக்கு

முத்துச் சரம் நானாவேன்.

கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாடலாக இருக்கலாம் என்றார் நண்பர். இசை கே.வி.மகாதேவன். (சேவா ஸ்டேஜ் ஆத்மநாதனாகவும் இருக்கலாம்).

இது பற்றி, எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் மருமகனும், தமிழ்ப் புதுக்கவிதையில் முன்னோடியுமான கவிஞர் - ஓவியர் சு.வைதீஸ்வரன் அவர்கள் என்னிடம் சொன்னது இது -

'நாலு வேலி நிலம் திரைப் படத்தை திரும்ப நினைத்துப் பார்க்கும்போது எனக்குள் சோகம் கவ்விக் கொள்ளுகிறது..

தகவல்கள் துல்லியமாக ஞாபகம் இல்லை. பாடலை இன்று படிக்கும் போது அதை ஒரு நாடோடிப் பாடல் தொகுப்பில் கண்டு பிடித்து விடலாம் என்று தோன்றுகிறது.

ஒரு படத்திற்கு பாடலாசிரியர் என்று பொதுவாக ஒருவர் பெயரை திரையில் காண்பித்தாலும் சில இடைச் செருகல் பாட்டுக்களும் அவருடைய பங்களிப்பாகவே தோற்றம் கொண்டு விடுகின்றன. இன்றைய சினிமாவில் கூட இப்படிப் பட்ட சந்தர்ப்பங்கள் நேரிடுகின்றன....

நாலு வேலி நிலத்தில் நான் போலிஸ் இன்ஸ்பெக்டராக நான்கு நிமிடங்கள் தோன்றி நம்பி மோசம் போன எஸ்.வி.சுப்பையாவை பார்த்து நாலு வார்த்தை பேசுகிறேன். எஸ்.வி. சுப்பையா அந்த சில நிமிஷங்களில் தன் பாத்திரத்தோடு ஒன்றி நடிப்பதற்காக எவ்வளவு முனைப்புடன் செயல் பட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. நல்ல நடிகர்.

இந்தப் படம் திரு எஸ்.வி. ஸஹஸ்ரநாமத்தின் வாழ்க்கையில் ஒரு பெரிய அதிச்சியை ஏற்படுத்தி விட்டது..

ஒரு தடவை இந்தப் படத்தை தொலைக் காட்சியில் ஒளி பரப்பு செய்தார்கள். 10 வருடங்களுக்கு முன்பு. மறுபடியும் திரையிடப் பட்டால் ஸ்வாரஸ்யமாக இருக்கும். '

'நாலு வேலி நிலம் ' பற்றி இதுவரை நான் அறியாத தகவல் ஒன்றை நண்பர் கொடுத்தார். அது இதுதான் -

படம் சரியாக ஓடாததால், டிஸ்ட்ரிப்யூட்டர்களிடம் வாங்கிய பணத்தை எஸ்.வி.சகஸ்ரநாமம் திருப்பிக் கொடுத்து விட்டாராம்.



On Friday, June 17, 2016 at 5:55:31 AM UTC-7, N. Ganesan wrote:

கருடன் (கருளன்/கலுழன்) இன்னொரு பெயர் உவணம், சங்க இலக்கியச் சொல். ஸுபர்ண > உவண- என்பார் வையாபுரிப்பிள்ளை.

செம்பருந்து - இரணியவதைப் பரணி பாடல் காட்டினேன். பதிப்பாசிரியர்: நா. வரதராஜுலு நாயுடு அக்கௌண்ட்டிங்கில்
இந்தியாவில் உயர்பதவி வகித்தவர். எல் ஐ சி பில்டிங் மற்ற ஊர்களுக்குப் போகாமல் சென்னை வர அவர் முயற்சி காரணம்.
அவரது பாட்டனார் முத்துநாயுடு (வேணுகோபாலநாயுடு) இரணியவதைப்பரணி, மாறனகப்பொருள், ஆண்டாள் பிள்ளைத்தமிழ், .... போன்றன
ஏட்டிலிருந்து பதிப்பித்தவர். நா. வ. குடும்பத்தை நன்கறிவேன். கடைசியாய் கோவைப்புதூரில் இருந்தார். தமிழிசை அறிஞர்
குடந்தை ப. சுந்தரேசனாரை ஆதரித்தவர். அவரால், நா. மகாலிங்கத்துக்கு குடந்தையார் சினேகம் கிடைத்தது. தெய்வசிகாமணிக்
கவுண்டரிடம் ஏடுகள் வாங்குவது கடினம்: நா. ம. சாதித்தார், குடந்தை சுந்தரேசனாரை வைத்து “பஞ்சமரபு” பதிப்பித்தார்.

கிருஷ்ணன்(விஷ்ணு) வாஹனம் எனவே, கிருஷ்ணப்பருந்து (மலையாளத்தில்).

செம்பருந்து - கருடனின் தமிழ்ப் பெயர்:

இரணியவதைப்பரணி
        வெம்பகைஞர் உடல்உகுசெம் புனலூடு ஆடி
            வெள்நிணமும் பசுந்துளவும் விரவி நாறச்
        
செம்பருந்து விருந்தாரச் சிறைவண்டு ஆர்க்கும்
            தெய்வநெடுஞ் சுடர்வடிவாள் சிந்தை செய்வாம்:   


எருவை - செம்பருந்து (எரி போன்ற நிறத்தால் வரும் ஆகுபெயர்) - பாவாணர் கருத்து


எருவை = செம்பருந்து (கருடன்) என்பதற்கு இலக்கியச் சான்று சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் பாடல்.
உவேசா பதிப்பின் பின்னர் சுன்னாகப் பெரும்புலவர் கருத்துக்கள் எழுதுவார், இரண்டாம் பதிப்பில்
உவேசா அவற்றைக் கையாண்டிருக்கிறார்.

 தமிழாசான் ஜோசப் விஜு சுண்ணாகம் புலவரின் பாடல் - நான்கே அடிகளில் இராமாயணம் - தந்துள்ளார்:
தாதையார் சொலராமன் காடு போதல்
    சார்ந்துளபொன் மானெனுமா ரீசன் சாதல்
சீதையார் பிரிவுஎருவை மரணம் பானு
    சேயொடுநட் புக்கோடல் வாலி வீடல்
ஓதநீர்க் கடற்பரப்பை அநுமன் தாண்டல்
    உயரிலங்கை நகரெரியால் வேகக் காண்டல்
பாதகராம் அரக்கரெலாம் இறக்கத் தாக்கல்
    பாக்கிய ராமாயணச்சீர் காதை யீதே!
எருவை = செம்பருந்து (கருடன்), தழலெரி போலும் வண்ணத்தான் வந்த ஆகுபெயர் எருவை.

எல்லா பருந்து, கழுகு, வல்லூறு வகைகளும் எருவை எனச் சொல்லமுடியாது.
எரி நிறத்தில் உள்ளவை, பிரதானமாக கருடன்,  எருவை எனலாம்.

சங்கப்பாடல்களில் எருவைப்புள்[தொகு]

எருவை ஒரு புலால் உண்ணி.[1]
எருவையின் மூக்கு வளைந்திருக்கும்.[2]
கழுகு வேறு. செஞ்செவி எருவை வேறு.[3]
எருவை வேறு, பருந்து வேறு. எருவைக்குத் தலை பெரிதாக இருக்கும்.[4]
இரத்த நிறம் கொண்ட எருவை ஒருவகை.[5]
இதனைக் குருதி நிறம் கொண்ட எருவை என்னும் பொருள் படும்படிக் குருதி எருவை எனக் குறிப்பிடுவர். [6]
கழுத்து வெள்ளையாய் இருக்கும் எருவை இனமும் உண்டு.[7] இதனை இக்காலத்தில் கருடன் என்கின்றனர்.
பெண்-எருவையின் கழுத்தில் புள்ளிச் சிறகுகள் இருக்கும். ஆண்-எருவை எழால் என்னும் புல்லூறு-பறவையோடு சேர்ந்து பறப்பது உண்டு.[8]
எருவை உயிருள்ள மனிதர்களையும் தாக்கும்.[9]
காட்டு வழியில் செல்வோர் எருவையிடம் கவனமாக இருக்க வேண்டும். [10]
ஆண்-எருவையைச் சேவல் என்பர்.[11]
எருவையின் சிறகு வலிமையானது.[12]
பறையொலி கேட்டால் எருவை பறந்து ஓடும்.[13]
போர்க்களங்களில் இறந்தவர்களின் பிணத்தைத் தின்பதற்காக வானில் வட்டமிடும்.[14]
போர் வெற்றியின் அடையாளமாக நடப்படும் வெற்றித் தூணை எருவை தன் இருக்கையாகப் பயன்படுத்திக் கொள்ளும். [15]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Jump up நிணன் அருந்து செஞ்செவி எருவை - புறம் 373
  2. Jump up கொடுவாய்ப் பேடைக்கு அல்கு இரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை - அகம் 3
  3. Jump up கழுகொடு செஞ்செவி எருவை திரிதரும் - புறம் 370
  4. Jump up கொலைவில் ஆடவர் போலப், பலவுடன் பெருந்தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அஞ்சுரம் – அகம் 97
  5. Jump up நெய்த்தோர் அன்ன செவ்விய எருவை - ஐங்குறுநூறு 335
  6. Jump up குரூஉச்சிறை எருவை குருதி ஆர - பதிற்றுப்பத்து 67
  7. Jump up வால்நிற எருத்தின் அணிந்த போலும் செஞ்செவி எருவை - அகம் 193
  8. Jump up புள்ளி எருத்தின் புன்புடை எருவைப்பெடை புணர் சேவல் குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய - பதிற்றுப்பத்து 36
  9. Jump up தறுகணாளர் குடர் தரீஇ, தெறுவர செஞ்செவி எருவை அஞ்சுவர இறுக்கும் - அகம் 77
  10. Jump up இனம் தீர் எருவை ஆடு செவி நோக்கும் (வம்பலர்) - அகம் 285
  11. Jump up எருவைச் சேவல் - நற்றிணை 298
  12. Jump up எருவை இருஞ்சிறை இரீஇய - அகம் 291
  13. Jump up சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும் - அகம் 297
  14. Jump up பறந்தலை விசும்பு ஆடு எருவை - புறம் 64
  15. Jump up எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண் - புறம் 224

(நன்றி:  தமிழ் விக்கி)


Reply all
Reply to author
Forward
0 new messages