வைகுண்டராஜனின் கிறுகிறு கிராஃப்

202 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Aug 23, 2013, 6:18:02 AM8/23/13
to panbudan
பாரதி தம்பி, படம்: ஜெ.வேங்கடராஜ்

''கர்நாடகாவில் சுரங்கத் தொழில் மூலம் கனிமங்களை வெட்டி எடுக்கும் ரெட்டி சகோதரர்களைப் போல, மதுரையில் கிரானைட் வளத்தைக் அபகரித்த பி.ஆர்.பழனிச்சாமியைப் போல... தென் தமிழகக் கடற்கரையை இந்த வைகுண்டராஜன் முழுமையாக வசப்படுத்திவிட்டார்.

தூத்துக்குடியில் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் 15 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் தனி சாம்ராஜ்யமே நடக்கிறது. கடந்த 14 ஆண்டுகளில் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தோண்டி எடுத்திருக்கும் கனிம வளங்களின் மதிப்பு, சுமார் 96,120 கோடி ரூபாய். ஆனால், அரசுக்குக் கொடுப்பதோ 100 ஏக்கருக்கு 16 ரூபாய். இதைவிட மோசடி வேறு எங்கேனும் நடக்குமா?'' எனக் கொந்தளிப்புடன் கேட்கிறார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சுந்தரம்.

சர்க்காரியா கமிஷனில் 'கருணாநிதியை விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பு எழுதியவர் இவர். ஜெயலலிதாவுக்கு எதிரான நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கிலும் அரசுத் தரப்பு சாட்சி. கறாரான அரசு அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சுந்தரம், 'பொது மக்கள் நலன் மற்றும் குறைதீர்க்கும் அமைப்பின்’ மூலம் தனது சமூக நலச் செயல்பாடுகளை முன்னெடுக்கிறார்.  தூத்துக்குடி ஆட்சியராக இருந்த ஆஷிஸ்குமார், சமீபத்தில் அங்கிருந்து பணிமாறுதல் செய்யப்பட வைகுண்டராஜன்தான் காரணம் என்று பேசப்படும் நிலையில், கனிம மணல் கடத்தல் பிரச்னையில் தீவிரத்துடன் இயங்குகிறார் 72 வயதான சுந்தரம்.

''தென் தமிழகக் கடற்கரையில் இயற்கை சேமித்துவைத்துள்ள அரிய வகைக் கனிம வளங்களைத் தோண்டியெடுத்து, கப்பல் கப்பலாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு சொத்து சேர்த்துள்ளார் வைகுண்டராஜன். அவர் எந்தச் சட்டங்களையும் மதிப்பதே இல்லை. வருவாய்த் துறை தொடங்கி காவல் துறை, சுரங்கத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசியல்வாதிகள் என  எவரும் இதனை இதுவரை தடுக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் இந்த விஷயம் எனக்குத் தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை அறிவதற்காக நேரில் சென்றபோது மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எந்தவித அரசு விதிகளையும் மதிக்காமல் அந்தப் பகுதியில் வைகுண்டராஜன் தனி சாம்ராஜ்யமே நடத்திவருகிறார். அவருக்கென்று தனியாக சாலை அமைத்துள்ளார். எந்தப் பக்கம் திரும்பினாலும் கடற்கரையோரம் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டுக்கிடக்கிறது. கரையோர கடல் நீர் ரத்த சிவப்பில் சிவந்து இருக்கிறது. கோயில் நிலம், தேவாலய நிலம், அரசுப் புறம்போக்கு நிலம் என எதையுமே விட்டுவைக்காமல் அனைத்து நிலங்களையும் வளைத்துப்போட்டுக் கனிம வளங்கள் சூறையாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வரையிலும் உள்ள மொத்தக் கடற்கரையும் இவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. 1957-ம் ஆண்டின் சுரங்க விதிகளின்படி மனித உழைப்பைப் பயன்படுத்தி மட்டும்தான் இந்தக் கனிமங்களை எடுக்க வேண்டும். ஆனால், கடற்கரையோரம் முழுக்க நவீனரக இயந்திரங்கள் நாள் முழுக்க சுரண்டுகின்றன. இப்படி இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்!

அதன் பிறகு, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் 1,800 மனுக்கள் போட்டு, மேலும் அதிர்ச்சிகரமான பல உண்மைகளை தெரிந்துகொண்டேன். 'இருக்கன்துறை’ என்ற கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் அரசு நிலம், ஆண்டுக்கு வெறும் 16 ரூபாய்க்கு வைகுண்டராஜனுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மற்றொரு 40 ஏக்கர் நிலம் ஆண்டுக்கு ஒன்பது ரூபாய்க்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இவை இரண்டும் உதாரணங்கள்தான்... இதுபோல அந்தப் பகுதி முழுக்க வெவ்வேறு விலைகளில் சுமார் 260 ஹெக்டேர் நிலம் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது. இதுபோக, விவசாயிகளிடம் இருந்து குறைந்த தொகையில் விலைக்கு வாங்குவது, அரசு, கோயில், தேவாலயப் புறம்போக்கு நிலங்கள் என சுமார் 2,000 ஏக்கர் நிலத்தை அவர்கள் வைத்துள்ளனர்.

இந்த நிலங்களில் உள்ள மணலை சலித்துப் பிரித்து ஆண்டுக்கு 1.5 லட்சம் டன் கார்னெட், 2.25 லட்சம் டன் இல்மனைட், 1,200 டன் சிர்கான், 5,000 டன் ரூடைல் கனிமங்கள் உலகின் பல நாடுகளுக்கும் கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 1999-ம் ஆண்டில் இருந்து இவர்கள் ஏற்றுமதி செய்த கனிமங்களின் சந்தை விலையைக் கணக்கிட்டால், இப்போது வரை மொத்தம் 96,120 கோடி ரூபாய் மதிப்புக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. 99-ம் ஆண்டுக்கு முந்தைய வியாபாரக் கணக்கு எங்களிடம் இல்லை.

''தமிழக கடலோரத்தில் வைகுண்டராஜன் மட்டும்தான் சுரங்க உரிமம் பெற்றுள்ளாரா?''

''கிட்டத்தட்ட அப்படித்தான். கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டில் மொத்தம் 45 சுரங்க லீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 31, கார்னெட் லீஸ்கள். இதில் 24 லீஸ்கள் வைகுண்டராஜனின் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இல்மனைட் லீஸ் மொத்தம் 14 உள்ளது. இந்த 14-லும் வி.வி-யுடையது. சுரங்க லீஸுக்கு வேறு யார் விண்ணப்பித்தாலும் தரப்படுவது இல்லை.

கடந்த எட்டு ஆண்டுகளாக, தமிழ்நாட்டின் 86 சதவிகித சுரங்க லீஸ்களை ஒரே நபருக்கு வழங்குவதன் மர்மம் என்ன? அவர் என்ன, தமிழக அரசுக்குச் செல்லப்பிள்ளையா? தூத்துக்குடி மாவட்டக் கடலோரத்தில் நடப்பது வெறும் 15 சதவிகித சுரங்க வேலைகள்தான். திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் 65 சதவிகித வேலைகளும், கன்னியாகுமரி கடற்கரையில் 20 சதவிகித வேலைகளும் நடைபெறுகின்றன. அந்த 85 சதவிகித சுரங்கப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும் எனவும், அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் அங்குள்ள மீனவர்களும் மற்றவர்களும் போராடுகிறார்கள். அதைப்பற்றி கண்டுகொள்ளாமல், தூத்துக்குடியின் 15 சதவிகித சுரங்கக் குத்தகை பணிகளில் உள்ள முறைகேட்டை மட்டுமே விசாரிப்பதன் மூலம், மொத்த சூறையாடலின் அளவு குறைத்து மதிப்பிடப்படுகிறது. இது ஒரு நாடகம்!''

''இந்தக் கனிமங்களை எடுப்பதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?''

''கடற்கரையில் குவிக்கப்பட்டிருந்த மணல் குன்றுகளை இவர்கள் தோண்டி எடுத்துவிட்டதால், அந்த மூன்று மாவட்டங்களிலும் கடுமையான கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் படகு நிறுத்தவும், வலைகளைக் காயப்போடவும் பயன்படுத்திய இடங்கள் இன்று சுரங்கப் பணிகளுக்குப் போய்விட்டன. கடற்கரை ஓரத்தில் உள்ள நீர் முழுவதும் செந்நிறத்தில் ரத்தம் போல காட்சியளிக்கிறது. இதனால், மீன்வளம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பிரித்து எடுக்கும் கனிமங்களில் கதிரியக்கத்தன்மை கொண்ட கனிமங்களும் உண்டு. அவற்றை, எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் வெட்டவெளியில் கொட்டுவதால், அந்தப் பகுதியில் உள்ள ஏராளமானோரை புற்றுநோய் தாக்குகிறது. கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிட்டதால், நிலத்தடி நீர் உப்புநீராக மாறிவிட்டது. குடிநீருக்கு, பல கிலோமீட்டர்கள் அலைய வேண்டிய நிலை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்''

''இனி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?''

''தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஆறு மற்றும் கடலோர மணல் வளத்தை அள்ளுவதை தடை செய்து கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. இது வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கும் பொருந்தும். ஆகவே, அவர்களும் உடனடியாக நிறுத்தியாக வேண்டும். இதற்கு முன்பு வைகுண்டராஜனுக்கு அஞ்சிப் பேசவே பயந்த மக்கள், இப்போது துணிச்சலுடன் பேசுகின்றனர். இது ஒரு நல்ல அறிகுறி. இப்போது அரசு உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுரங்க லீஸ் உரிமங்களை முடக்க வேண்டும். அதைத் தொடர்ந்து பல்வேறு நிபுணர்களைக்கொண்ட குழுக்களை அமைத்து, நேரில் ஆய்வுசெய்து மதிப்பீடு செய்ய வேண்டும். சட்டத்தை மீறி இயற்கையைச் சுரண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக, இதற்கு உதவிய அரசு அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவதுடன் அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும். இப்படி நடந்த தவறுக்கு நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் என்றால், உரிய நிபுணர்களைக்கொண்டு ஆய்வுசெய்து, சீரழிந்த அந்தப் பகுதியின் மீன்பிடி வளம், விவசாயம் போன்றவற்றை சீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!''

வி.வி.மினரல்ஸ் இயந்திரங்கள் சுரண்டும் இயற்கை வளங்களைக் காக்க உடனடியாகச் செயல்பட வேண்டும் அரசு இயந்திரம்!


''சட்டப்படியே செயல்படுகிறோம்.!''

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் மீதான சுந்தரத்தின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியைத் தொடர்புகொண்டோம்.

''அரிய வகை மணல் தாதுக்களை எடுக்கும் அரசுப் பொதுத்துறை நிறுவனமான மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ-யிடம் இல்லாத உரிமம்கூட எங்களிடம் இருக்கிறது. எங்களின் 95 சதவிகித நிலங்கள் பட்டா நிலங்கள்; அவை யாரிடமும் மிரட்டி வாங்கப்பட்டவை அல்ல. புறம்போக்கு நிலம் என்றாலும்கூட, அதை சட்டப்படிதான் வாங்கித் தொழில் செய்கிறோம். எங்கள் தொழில் போட்டியாளர்கள், சமூகரீதியிலான எதிரிகள், பத்திரிகைத் துறையில் உள்ள எங்கள் எதிரிகள் போன்றோர் ஒன்றுசேர்ந்து, எங்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுந்தரத்தைப் பொறுத்தவரை, அவர் எங்கள் தொழில் போட்டியாளர் தயா தேவதாஸின் ஏஜென்ட். இதற்கு மேல் அவரைப் பொருட்படுத்துவதற்கு ஒன்றுமில்லை. அனைத்து விதங்களிலும் நாங்கள் சட்டப்படி செயல்படுவதால், யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை!'' என்று ஒரே மூச்சில் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பளித்தார்.  


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Aug 23, 2013, 6:21:57 AM8/23/13
to panbudan
இத்தனை வருடங்களாக ஏன் போராடவில்லை...
போராட்டகாரர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்..
போராட்டகாரர்களால் வேலைவாய்ப்பு பறிபோகிறது..
போராட்டக்காரர்களுக்கு அயல்நாட்டு பணம் வருகிறது..

என யாரும் கிளம்பி வராதவரைக்கும் சரிதான் :)


2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>

Yogesh J

unread,
Aug 23, 2013, 6:51:30 AM8/23/13
to panb...@googlegroups.com
எங்க ஊருல உள்ள மீணவர்கல்ல ஒரு கூட்டத்த அவர் விலைகொடுத்து வாங்குனதா கேல்வி!
எண்ணுடைய வகுப்பு மீணவ நன்பன் சொண்ணான்!
மீணவர்கள் மத்தில குலப்பத்த உண்டாக்கி வச்சு
ஒரு சிரு கூட்டத்தினர் அந்த மினரல்ஸ் நிருவனத்துக்கு ஆதரவா இருக்காங்கலாம்!
மற்றொரு கூட்டத்தினர் எதிர்ப்பா இருக்காங்கலாம்!

On 8/23/13, ஸ் பெ <stalinf...@gmail.com> wrote:
> இத்தனை வருடங்களாக ஏன் போராடவில்லை...
> போராட்டகாரர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்..
> போராட்டகாரர்களால் வேலைவாய்ப்பு பறிபோகிறது..
> போராட்டக்காரர்களுக்கு அயல்நாட்டு பணம் வருகிறது..
>
> என யாரும் கிளம்பி வராதவரைக்கும் சரிதான் :)
>
>
> 2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>
>
>>
>> --
>
> தோழமையுடன்
>
> ஸ்டாலின் பெலிக்ஸ்
> *
> --------------------------------------------------------------------------------------------------------------
> *
> *இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
> இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
> இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
> -------------------------------------------------------------------------------------------------------------------------
> *நொடியில் நொறுங்கியவனுக்காக......
> * <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
> ----------------------------------------------------------------------------------------------
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
your friend yogesh
you can't study well with out
techknology, today!
you can't stand steadily with out techknology, tomorrow
so keep learning

skype me
romio.yogesh, yogesh92
FB
yogeshyogi
twitter
romioyogesh

துரை.ந.உ

unread,
Aug 23, 2013, 10:48:13 PM8/23/13
to பண்புடன்



2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>

இத்தனை வருடங்களாக ஏன் போராடவில்லை...
போராட்டகாரர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்..
போராட்டகாரர்களால் வேலைவாய்ப்பு பறிபோகிறது..
போராட்டக்காரர்களுக்கு அயல்நாட்டு பணம் வருகிறது..

என யாரும் கிளம்பி வராதவரைக்கும் சரிதான் :)


:)

@ ஸ்மைலி செய்திக்கு மட்டுமல்ல ..புரிதலுக்கும் சேர்த்து ​​



2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

ஸ் பெ

unread,
Aug 24, 2013, 12:56:03 AM8/24/13
to panbudan
துரை ஐயா,

நானும் ஸ்மைலி போட்டிருப்பேன் பாருங்க..
தனி நபருடைய வளர்ச்சி எப்படி தேச வளர்ச்சி ஆகுமுன்னு கேக்க நினச்சி கேக்காம, 'என்னடா புரிதல் இது' எப்படின்னு போறீங்க.. அப்பிடி தானே??

இதுவரை எதிர்பக்கமாகவே சுத்திட்டு இருந்த கல் இப்ப தான் என் கையில கிடைச்சிருக்கு.. நானும் முடிஞ்ச தூரம் எறிஞ்சிக்கிறேன...



2013/8/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Yogesh J

unread,
Aug 24, 2013, 12:59:20 AM8/24/13
to panb...@googlegroups.com
துரை சார் நா சிரிக்கல பட் எனக்கு உன்மையாவே புரியல!
ஏன் இந்த திடீர் போராட்டம்?
கலெக்டர என் மாத்துனாங்க?
திரும்ப அம்மாவும் புது கலெக்டரும் ஞாயமான முரையில விசாரனை நடைபெறும்னு
ஏன் பேட்டி கொடுக்குராங்க?
ஞாயமான முறையில விசாரனை பண்ண நம்ம பழைய கலெக்டர் ஆஷிஸ்குமாரே போதாதா?

On 8/23/13, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:
> 2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>
>
>> இத்தனை வருடங்களாக ஏன் போராடவில்லை...
>> போராட்டகாரர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்..
>> போராட்டகாரர்களால் வேலைவாய்ப்பு பறிபோகிறது..
>> போராட்டக்காரர்களுக்கு அயல்நாட்டு பணம் வருகிறது..
>>
>> என யாரும் கிளம்பி வராதவரைக்கும் சரிதான் :)
>>
>
>
> :)
>
> @ ஸ்மைலி செய்திக்கு மட்டுமல்ல ..புரிதலுக்கும் சேர்த்து ​​
>
>>
>>
>>
>> 2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>
>>
>>>
>>> --
>>
>> தோழமையுடன்
>>
>> ஸ்டாலின் பெலிக்ஸ்
>> *
>> --------------------------------------------------------------------------------------------------------------
>> *
>> *இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
>> இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
>> இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
>>
>> -------------------------------------------------------------------------------------------------------------------------
>> *நொடியில் நொறுங்கியவனுக்காக......
>> * <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
>> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
>>
>> ----------------------------------------------------------------------------------------------
>>
>> --
>> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
>> வாக்கென்றால் சேரும் பழி'
>>
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>>
>> இணைய இதழ் : http://www.panbudan.com
>>
>
>
>
> --
> * -இனியொரு விதி செய்வோம்*
> * ”இனியாவது செய்வோம்” - **துரை.ந.உ
> *
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ :
> http://marabukkanavukal.blogspot.in/<http://marabukkanavukal.blogspot.com/>
> *குறள்........:* குறளும் காட்சியும்
> :http://visualkural.blogspot.<http://visualkural.blogspot.com>
> in
> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்'
> :http://duraikavithaikal.blogspot.<http://duraikavithaikal.blogspot.com>
> in
> *புகைப்படம் *: http://www.flickr.com/photos/duraian/
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--

Ahamed Zubair A

unread,
Aug 24, 2013, 1:19:17 AM8/24/13
to பண்புடன்
துரை மாம்ஸ்...

நீங்களும் அந்த ஊர்க்காரர் எனும் வகையில் என்ன செய்ய உத்தேசம்?


2013/8/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

துரை.ந.உ

unread,
Aug 24, 2013, 1:32:52 AM8/24/13
to பண்புடன்



2013/8/24 ஸ் பெ <stalinf...@gmail.com>

துரை ஐயா,

நானும் ஸ்மைலி போட்டிருப்பேன் பாருங்க..
தனி நபருடைய வளர்ச்சி எப்படி தேச வளர்ச்சி ஆகுமுன்னு கேக்க நினச்சி கேக்காம, 'என்னடா புரிதல் இது' எப்படின்னு போறீங்க.. அப்பிடி தானே??

:((((((((((((((((((((((((((((((((((((​​
​இதுவுமே மிகமிகத் தவறான புரிதல் ​
​.என்னோட மைண்ட வாய்ஸ் மாதிரி அதுக்கு ஒரு விளக்கமும் கொடுத்திருக்கீங்க பாருங்க ..அது இன்னும் கொடுமையான புரிதல்​..

​ஒரு தரம் குறைந்த , ஊழல் சம்பந்தப்பட்ட செய்தியோடு ... நீங்களே உங்களை ஒப்புமைப் படுத்தி (மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்ன்னு கூட வச்சிக்கலாம்) ...உங்களை குறைக்கிறீர்களே என்னும் ஆதங்கத்தில் சொன்னது மட்டுமே:(((

என்னோட மைண்ட்வாய்ஸ் எனக்கே புரியவில்லை என்பது வேறு விசயம் :(

​ஆனால் எதையுமே இந்தப்பாதையிலேயேதான் ​சிந்திப்பீர்கள் என்றால் .. இந்த விசயத்தில் அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லாதஎனக்கு இனி இங்கே வேலையில்லை


 
இதுவரை எதிர்பக்கமாகவே சுத்திட்டு இருந்த கல் இப்ப தான் என் கையில கிடைச்சிருக்கு.. நானும் முடிஞ்ச தூரம் எறிஞ்சிக்கிறேன...


​ நான் தான் சிக்கினேனா :((((
கல்லைக் கொண்டு எரியும் அளவுக்கு நான் ஒர்த் இல்ல 

இனிமே  திசைக்கே வரமாட்டேன்,,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்​
​.​

 

ஸ் பெ

unread,
Aug 24, 2013, 1:41:38 AM8/24/13
to panbudan
அட.. விட்டு தொலையுங்க..

நடக்கிற கலவரத்துல அப்பப்போ நீங்க வந்து மீசை முறுக்கல்லைன்னா நல்லா இருக்காது :)

2013/8/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
இனிமே  திசைக்கே வரமாட்டேன்,,,,அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்​



துரை.ந.உ

unread,
Aug 24, 2013, 1:42:53 AM8/24/13
to பண்புடன்



2013/8/24 Yogesh J <romio...@gmail.com>

துரை சார் நா சிரிக்கல பட் எனக்கு உன்மையாவே புரியல!
ஏன் இந்த திடீர் போராட்டம்?

என்ன பேராட்டம் .. ? எனக்குத் தெரியலியே 

​​
கலெக்டர என் மாத்துனாங்க?
திரும்ப அம்மாவும் புது கலெக்டரும் ஞாயமான முரையில விசாரனை நடைபெறும்னு
ஏன் பேட்டி கொடுக்குராங்க?
ஞாயமான முறையில விசாரனை பண்ண நம்ம பழைய கலெக்டர் ஆஷிஸ்குமாரே போதாதா?

​கேள்விகள் அனைத்துமே சி எம் செல்லுக்கானது ​

துரை.ந.உ

unread,
Aug 24, 2013, 1:45:51 AM8/24/13
to பண்புடன்



2013/8/24 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

துரை மாம்ஸ்...

நீங்களும் அந்த ஊர்க்காரர் எனும் வகையில் என்ன செய்ய உத்தேசம்?

ஏன்...ஏன்..இப்பிடி.. நீரெல்லாம் ஒரு மச்சானா ஓய் ......

கோத்துவுடதுக்குன்னே அலையுதீரேய்யா :(((((
 
​​

Ahamed Zubair A

unread,
Aug 24, 2013, 1:47:24 AM8/24/13
to பண்புடன்
மாம்ஸ்...

வெள்ளை வேட்டி சட்டைல நீங்க கையை கும்பிட்டிட்டு நின்னுக்கிட்டு, வைகுண்டராஜனை எதிர்ப்பதால் வைகுண்டம் போகவும் அஞ்சமாட்டோம்னு கட்டவுட் வைக்க காசெல்லாம் கொடுத்திட்டேன்...


2013/8/24 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--

Jaisankar Jaganathan

unread,
Aug 24, 2013, 1:48:20 AM8/24/13
to panb...@googlegroups.com
துரை அண்ணே
நீங்க போராடி மணல் கொள்ளையை தடுத்து நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது என் ஆசை. வாழ்த்துக்கல்

Arumbanavan A

unread,
Aug 24, 2013, 1:50:46 AM8/24/13
to பண்புடன்
 
 
வாழ்த்துக்கல்
இந்த "கல்" அப்புடின்னு   அழுத்தி சொல்றத பார்த்த எனக்கு என்னமோ...?
 
 
இந்த உலகம் உங்கள இன்னுமா  நம்பிகிட்டு இருக்கு மாம்ஸ்..... 


2013/8/24 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
துரை அண்ணே
நீங்க போராடி மணல் கொள்ளையை தடுத்து நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும் என்பது என் ஆசை. வாழ்த்துக்கல்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Jaisankar Jaganathan

unread,
Aug 24, 2013, 1:49:08 AM8/24/13
to panb...@googlegroups.com
//வைகுண்டராஜனை எதிர்ப்பதால் வைகுண்டம் போகவும் //

துரை அண்ணன் ஒரு சிவ பக்தர். கண்டிப்பா கைலாசம் தான் போவார்

Jaisankar Jaganathan

unread,
Aug 24, 2013, 1:51:22 AM8/24/13
to panb...@googlegroups.com
அது கல் திருட்டு இல்லை அரும்பு. மணல் திருட்டு. நியாயமா வாழ்த்துமணல்னு சொல்லனும்

ஸ் பெ

unread,
Aug 24, 2013, 1:52:53 AM8/24/13
to panbudan

சாமி படத்தில் வரும் 'பெருமாள்பிச்சை' கதாப்பாத்திரம் வைகுண்டராஜனை வைத்து சித்தரிக்கப்பட்டது என்று நண்பர் ஒருவர் சொல்ல கேட்டிருக்கிறேன்..

Jaisankar Jaganathan

unread,
Aug 24, 2013, 1:59:28 AM8/24/13
to panb...@googlegroups.com
வைகுண்ட ராஜன்
பெருமாள் பிச்சை

அருமையான காம்பினேஷன்

Ramesh Murugan

unread,
Aug 24, 2013, 2:00:20 AM8/24/13
to பண்புடன்
நாட்டின் உள்கட்ட அமைப்பு வளர்ச்சி திட்டமும் ஊழலும் ஒன்னா??? நல்ல ஒப்பீடு.

இதுவரை நாட்டின் எந்த ஊழலுக்கும் ஆதரவாக யாரும் இங்கே பேசியதாய் எனக்கு ஞாபகம் இல்லை.

2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>

இத்தனை வருடங்களாக ஏன் போராடவில்லை...
போராட்டகாரர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்..
போராட்டகாரர்களால் வேலைவாய்ப்பு பறிபோகிறது..
போராட்டக்காரர்களுக்கு அயல்நாட்டு பணம் வருகிறது..

என யாரும் கிளம்பி வராதவரைக்கும் சரிதான் :)

//


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

ஸ் பெ

unread,
Aug 24, 2013, 2:03:10 AM8/24/13
to panbudan

நேரடியாக கேட்டால் இல்லை என்று பதில் சொன்னாலும், தாது மணல் தோண்டல் பெறும் பிரச்னையை சுற்றி இருக்கும் கிராமங்களில் உருவாக்கி வருகிறது.



2013/8/24 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

பாலா BALAJI

unread,
Aug 24, 2013, 2:04:21 AM8/24/13
to panb...@googlegroups.com
அப்போ அந்த திரிஷா கதாபாத்திரம் யாரை வச்சி சித்தரிக்கப்பட்டது....

திரிஷா இல்லன்னா திவ்யாவை காதலிப்போர் சங்கம்...
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>  
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>  
>  
> இணைய இதழ் : http://www.panbudan.com
>

--
Life is Short... Keep SMILING...

Balaji.R

Jaisankar Jaganathan

unread,
Aug 24, 2013, 2:05:57 AM8/24/13
to panb...@googlegroups.com
ஒரு சின்ன சீன் கூட இல்லை அந்த படத்துல. திரிஷானைவ் வச்சு என்ன பண்ணுறது?

ஸ் பெ

unread,
Aug 24, 2013, 2:07:48 AM8/24/13
to panbudan
இயக்குனர் ஹரி கிட்ட கேட்டு சொல்றேன்...
:)

2013/8/24 பாலா BALAJI <mitr...@gmail.com>

அப்போ அந்த திரிஷா கதாபாத்திரம் யாரை வச்சி சித்தரிக்கப்பட்டது..




--

Ramesh Murugan

unread,
Aug 24, 2013, 2:11:24 AM8/24/13
to பண்புடன்
கனிம வளங்களை எடுப்பதைப் பொறுத்தளவில் அரசே எடுக்கனும், அரசே டெண்டர் முறையில் விற்கனும். தனியார்கிட்ட நிலத்தை ஒப்படச்சா நியாய தர்மங்களை எதிர்பார்க்க முடியாது. லாபநோக்கத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளும் தனியார் நிறுவனங்கள் எதுக்கு நியாய தர்மத்தைப் பற்றி கவலைப்படபோகுது?

2013/8/24 ஸ் பெ <stalinf...@gmail.com>

நேரடியாக கேட்டால் இல்லை என்று பதில் சொன்னாலும், தாது மணல் தோண்டல் பெறும் பிரச்னையை சுற்றி இருக்கும் கிராமங்களில் உருவாக்கி வருகிறது.

ஸ் பெ

unread,
Sep 2, 2013, 2:11:23 PM9/2/13
to panbudan
Inline images 1
௨௨.jpg

ஸ் பெ

unread,
Sep 2, 2013, 2:12:08 PM9/2/13
to panbudan
Inline images 1
த.jpg

ஸ் பெ

unread,
Sep 3, 2013, 3:00:42 AM9/3/13
to panbudan
Inline images 1
1.jpg

S.P. Mukilan

unread,
Sep 3, 2013, 3:04:40 AM9/3/13
to panb...@googlegroups.com

Vanakkam sir. Thayavuseythu ennai thangalathu panbudan kulumaththilirunthu vilakkida athaalmaiyudan vendukiren. Ini varum kaalangalil panbbudan sambanthappatta entha email thagavalum enakku anuppida venddaam enavum anbudan vendukiren. Vanakkam.

 



2013/9/3 ஸ் பெ <stalinf...@gmail.com>
Inline images 1
1.jpg

Ahamed Zubair A

unread,
Sep 3, 2013, 12:09:31 PM9/3/13
to பண்புடன்
அன்பு நண்பா,

எப்படியாவது நீங்கள் பண்புடனை விட்டு வெளியேறும் வழியைக் கண்டுபிடித்தால் எனக்கும் சொல்லித்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

#what_is_the_procedure_to_change_the_group? :)))


2013/9/3 S.P. Mukilan <kalaipp...@gmail.com>

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2013, 12:19:06 PM9/3/13
to panb...@googlegroups.com
ரொம்ப ஈஸீ சுபைர்.
அண்ணாசியை திட்டி எழுதுங்க. மாடரேட்ட்டர்ஸ் வாரினிங் குடுப்பாங்க. அவங்களையும் திட்டுங்க. தூக்கிடுவாங்க

Ahamed Zubair A

unread,
Sep 3, 2013, 12:21:47 PM9/3/13
to பண்புடன்
மாடரேட்டர்களெல்லாம் மடையர்கள்... அண்ணாச்சி ஒரு மாமாமடையர்.

#இப்ப தூக்கிடுவாங்களா க்ரூப்லேர்ந்து?

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2013, 12:24:27 PM9/3/13
to panb...@googlegroups.com
மடையர் என்பது மரியாதை. மடையன் என்பது சரி

Jaisankar Jaganathan

unread,
Sep 3, 2013, 12:32:55 PM9/3/13
to panb...@googlegroups.com
 மாமாமடையர். மாமா மடையர். சுபைர் என்ன இது? அண்ணாச்சி இனிமேல் உங்களை மாமாச்சி என்று இந்த உலகம் அன்போடு அழைக்கட்டும்

C.M உதயன்

unread,
Sep 3, 2013, 12:46:18 PM9/3/13
to பண்புடன்
ஆறுச்சாமியாக வரும் விக்ரம் கேரக்டர் கமிஷ்னர் ஜாங்கிட்டை சித்தரிப்பதாக இருக்கும்.

2013/8/24 ஸ் பெ <stalinf...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Sep 3, 2013, 2:45:54 PM9/3/13
to panb...@googlegroups.com


On Tuesday, September 3, 2013 12:34:40 PM UTC+5:30, kalaippattarai wrote:

Vanakkam sir. Thayavuseythu ennai thangalathu panbudan kulumaththilirunthu vilakkida athaalmaiyudan vendukiren. Ini varum kaalangalil panbbudan sambanthappatta entha email thagavalum enakku anuppida venddaam enavum anbudan vendukiren. Vanakkam.

எங்கள் அண்ணன் தானைத்தலைவர் ஜெயசங்கர் அவர்கள் இதற்கு பதில் அளிப்பார்.

Srimoorthy.S

unread,
Sep 3, 2013, 2:51:56 PM9/3/13
to பண்புடன்

அவருக்கு கேள்வி கேக்க மட்டும்தானே தெரியும்?

--

Iyappan Krishnan

unread,
Sep 3, 2013, 2:55:21 PM9/3/13
to பண்புடன்
சரி. அப்ப ஏன் விலகனும்னு அண்ணன் ஜெயசங்கர் கேட்பதற்கு வசதியாக தனி இழை திறந்து விடவும். #மொக்கையாக்கிட்டோம்னு ஸ்பெ மொறைச்சுப் பாக்குறது தெரியுதா ?

Srimoorthy.S

unread,
Sep 3, 2013, 2:58:00 PM9/3/13
to பண்புடன்

தெரியுது. ஆனாலும் என்ன செய்ய.

உள்ளூர ஊடுருவிய
மொக்கை முந்தும்போது
பாசமாவது பந்தமாவது

அட&#0;டே... கவுதை....

On Sep 4, 2013 12:25 AM, "Iyappan Krishnan" <jee...@gmail.com> wrote:
சரி. அப்ப ஏன் விலகனும்னு அண்ணன் ஜெயசங்கர் கேட்பதற்கு வசதியாக தனி இழை திறந்து விடவும். #மொக்கையாக்கிட்டோம்னு ஸ்பெ மொறைச்சுப் பாக்குறது தெரியுதா ?

Iyappan Krishnan

unread,
Sep 3, 2013, 2:58:49 PM9/3/13
to பண்புடன்
தனி இழை ஆரம்பிங்கப்பு. மொக்கப் போட்டு ரொம்பநாளாச்சு. கை குறுகுறுங்குது

Srimoorthy.S

unread,
Sep 3, 2013, 3:01:21 PM9/3/13
to பண்புடன்

தனி இழைல மொக்கை கிக்கு இல்ல. ஆங்காங்கே ஊடுருவி வரும் மொக்கைதான் கிக்கு.

எதெல்லாம் சீரியஸான இழைன்னு லிஸ்ட் எடுங்க . அதுல இருந்து நம்ம பணியை ஆரம்பிப்போம்.

On Sep 4, 2013 12:28 AM, "Iyappan Krishnan" <jee...@gmail.com> wrote:
தனி இழை ஆரம்பிங்கப்பு. மொக்கப் போட்டு ரொம்பநாளாச்சு. கை குறுகுறுங்குது

Arumbanavan A

unread,
Sep 4, 2013, 12:36:32 AM9/4/13
to பண்புடன்
அடிவாங்க போறது உறுதி...


2013/9/3 Srimoorthy.S <srimoo...@gmail.com>



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

ஸ் பெ

unread,
Sep 12, 2013, 6:52:49 AM9/12/13
to panbudan
கனிம மணல் கொள்ளையில் தமிழக அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு!

Posted Date : 13:45 (12/09/2013)Last updated : 13:45 (12/09/2013)

மதுரை: முறைகேடாக கனிம மணல் எடுத்ததில் தமிழக அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடற்கரையோரம் உள்ள கனி மணலை முறைகேடாக எடுப்பதாக வந்த புகாரை அடுத்து தமிழக அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. இதன் ஆய்வு அறிக்கை இதுவரை அரசிடம் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் இந்த மூன்று மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து, மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், முறைகேடாக கனிம மணல் எடுத்ததில் தமிழக அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். 


மேலும், கனிம மணல் முறைகேட்டில் ஈடுபட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

கனிம மணல் முறைகேடு இழப்பை கண்டறிய விஞ்ஞானிகள் குழுவை அமைக்க வேண்டும் என்றும், கனிம மணல் வழக்கை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார்.

ஸ் பெ

unread,
Sep 17, 2013, 10:59:45 AM9/17/13
to panbudan
தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ள தடை: ஜெயலலிதா உத்தரவு!
Posted Date : 13:06 (17/09/2013)Last updated : 16:21 (17/09/2013)

சென்னை: தமிழகம் முழுவதும் கனிம மணல் அள்ளுவதை நிறுத்த உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் கனிம நிறுவனங்களை ஆய்வு செய்ய, குழு அமைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதிலும் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கனிமங்களை அரசின் முறையான அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரங்க நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’, அதாவது ‘Beach Minerals’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை எடுக்கப்படுவதாக பெறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில்,  அரசு உயர் அதிகாரிகளுடன் இது குறித்து கலந்தாலோசித்த நான், தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, இது குறித்து ஒரு மாத காலத்திற்குள் ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு  உத்தரவிட்டேன்.

இது மட்டுமல்லாமல், இந்தச் சிறப்புக் குழுவின் ஆய்வு முடியும் வரை சுரங்க நடவடிக்கைகளை நிறுத்திவைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கனிமத் துறை உதவி இயக்குநருக்கும் உத்தரவிடும்படி நான் பணித்திருந்தேன்.

எனது உத்தரவின் பேரில், 1957 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங்களின் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் பிரிவு 24ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மேற்படி சிறப்புக் குழு விரிவான ஆய்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்டது.  இந்தச் சிறப்புக் குழுவில் முதுநிலை மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவை இணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதைத் தவிர, முதுநிலை துணை ஆட்சியர், நில அளவை உதவி இயக்குநர், நில அளவை ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது உதவி புவியியலாளர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அடங்கிய ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 

மேற்படி குழுக்கள், முதற்கட்டமாக 12.8.2013, 13.8.2013 மற்றும் 14.8.2013 ஆகிய நாட்களிலும், இரண்டாவது கட்டமாக 19.8.2013 மற்றும் 20.8.2013 ஆகிய நாட்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.  மூன்றாவது கட்டமாக, 29.8.2013 மற்றும் 30.8.2013 ஆகிய தேதிகளில் கனிம பகுப்புத் தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

4 மாவட்டங்களில் கனிம நிறுவனங்களை ஆய்வு செய்ய குழு

சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (17.9.2013) தலைமைச் செயலகத்தில் என்னிடம் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

இதனைப் பெற்றுக் கொண்ட நான், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கடற்கரை கனிமங்களான கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் ஆகியவற்றை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள குத்தகைதாரர்களால் பெருங்கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன். வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இந்தச் சிறப்புக் குழு செயல்படும்.

மேலும், மேற்படி ஆய்வு முடியும் வரை, கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் உரிய உத்தரவினை பிறப்பிக்கும்படி ஆணையிட்டுள்ளேன்.

இதர மாவட்டங்களில் உள்ள பெருங்கனிமக் குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அதன் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ஸ் பெ

unread,
Sep 26, 2013, 9:33:22 AM9/26/13
to panbudan
வைகுண்டராஜன் ஆதரவாளர்களால் விஜயகாந்த உருவபொம்மை எரிப்பு (படங்கள்)
Posted Date : 11:19 (25/09/2013)Last updated : 13:34 (25/09/2013)

தூத்துக்குடி: தாதுமணலை வைகுண்டராஜன் கொள்ளையடித்து வருவதாக பேசிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் உருவபொம்மையை அவரது ஆதரவாளர்கள் எரித்ததால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தே.மு.தி.க வின் 9ஆம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தபால்தந்தி காலனி மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தூத்துக்குடிக்கு வந்தது முதல் வைகுண்டராஜன் என்றுதான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். அவர் என்ன கட்டபொம்மன் வாரிசா?, வாஞ்சிநாதன் பரம்பரையா? அல்லது சுதந்திர போராட்ட தியாக குடும்பமா?.

கடவுள் கொடுத்த இயற்கை வளத்தை சுரண்டுகிறார்கள். இல்லை இல்லை அரசு அனுமதியுடன் சுரண்டி விடுகிறார்கள். ஒரு பக்கம் கிரானைட், ஒரு பக்கம் தாது மணல் கொள்ளை என மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கித்தவிக்கிறது தமிழகம்.

ஆனால், சில மீனவ அமைப்புகளும், சில சமூக அமைப்புகள் மட்டும் தாதுமணல் கொள்ளைக்கு எதிராக போராடி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15 சதவீதமும், நெல்லை மாவட்டத்தில் 65 சதவீதமும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 சதவீதமும் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதில் அதிகமாக நெல்லையில்தான் அளவற்ற கொள்ளை நடந்துள்ளது" என்று ஆவேசப்பட்டார்.

இறுதியாக பேசிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், "வைகுண்டராஜன் என்ற தனிமனிதன் 60 லட்சம் கோடி வரை தாது மணலில் சம்பாதித்துள்ளார் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன். ஆனால் அப்படிப்பட்ட வைகுண்டராஜனுக்கு ஆதரவாக கடந்த தி.மு.க ஆட்சியில் சட்டசபையில் அ.தி.மு.க கொறடா செங்கோட்டையன், "வைகுண்டராஜன் மீது தவறு இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்று 19.4.07 அன்று அவர் பேசியது அரசு பதிவில் உள்ளது.

ஆட்சியில் இல்லாத போதே வைகுண்டராஜனுக்கு ஆதரவு தெரிவித்தது அ.தி.மு.க. தற்பொழுது ஆளும்கட்சியாக இருந்து இரண்டாண்டுகள் மணல் கொள்ளைக்கு அமோக ஆதரவை அளித்து வருகிறது. அரசுக்கு 60 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள வைகுண்டராஜன் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? 100 ஏக்கர் இடத்தை பதினெட்டாயிரம் ரூபாய்க்கும், 40 ஏக்கர் இடத்தை நாற்பது ரூபாய்க்கும் குத்தகைக்கு எடுத்து பல கோடிகளை அள்ளியுள்ள மணல் கொள்ளை தலைவன் வைகுண்டராஜனை அரசு கண்டுகொள்ளாதது ஏன்? இதற்கு அரசும் துணை போகிறது.
 

முதலில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சோதனை நடத்திவிட்டு, பின் தன்னை மக்கள் குறைகூறக்கூடாது என்ற நோக்கில் தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் ஆய்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. மொத்தத்தில்  ஆய்வுகள், சோதனைகள் எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பதை மக்கள் உணர வேண்டும்" என்றார்.

இந்நிலையில், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோரின் தாது மணல் கொள்ளைக்கு எதிரான பேச்சைக் கண்டித்து, வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் நேற்று மாலை தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில், விஜயகாந்த் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து மத்தியபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் ஓடி விட்டனர். தாளமுத்துநகரைச் சேர்ந்த ரவி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து வழக்கறிஞரும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நிர்வாகியுமான செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தாது மணல் கொள்ளை குறித்து பேசிய தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்தின் செயலையும், பேச்சையும் வண்மையாக கண்டிக்கிறோம்.

தாது மணல் அள்ளப்படுவது நிறுத்தப்பட்டதால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட  மக்களும்,  மீனவ பெண்களும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தாது மணல் அள்ளுவதற்கான தடையை நீக்கி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்" என்றார்.

கூட்டம் முடிந்து பேனர்கள் மற்றும் மேடை கூட இன்னமும் பிரிக்கப்படாத நிலையில் விஜயகாந்தின் உருவபொம்மை எரிக்கப்பட்ட சம்பவம்  தே.மு.தி.க தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தாது மணல் விவகாரத்தில் ஆதரவாக ஒருதரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் தூத்துக்குடியே பரபரப்புடன் காணப்படுகிறது.

இ.கார்த்திகேயன் 

ஸ் பெ

unread,
Oct 8, 2013, 3:03:22 PM10/8/13
to panbudan
தாது மணற்கொள்ளை
(சிந்தனைக்கு உதவும் ஒரு தகவல் அட்டை)

[] இது சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் ஒரு மக்கள் நலத் தொழிலல்ல.
[] மக்கள் அனைவருக்குமான பொதுச் சொத்தை ஒரு தனிநபர் (அல்லது குடும்பம், கூட்டம்) சட்டத்தை அவமதித்து தான்தோன்றித்தனமாய் நடத்தும் களவு, கொள்ளை.
[] அதிகாரிகளுக்கும், அரசியல்வியாதிகளுக்கும் கோடி கோடியாய் லஞ்சம் கொடுத்து மக்களின் இயற்கை வளங்களை திட்டமிட்டுத் திருடும் கூட்டுக் களவு, தேச விரோதக் குற்றம்.
[] வெறும் 3,000 கூலித் தொழிலாளர்களுக்கும், ஓட்டுனர்களுக்கும் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. 50,000 பேருக்கு வேலை கொடுக்கிறோம் என்பது அப்பட்டமான பச்சைப் பொய் (உண்மையென்றால், தொழிலாளர் நலத் துறை உள்ளிட்ட ஆவணங்களை வெளியிடலாமே?)
[] மணல் ஆலைக் கழிவு நீரையும், ஏராளமான அமிலங்களையும் கடலுக்குள் கொட்டி கடல் விசத் தன்மை அடைகிறது. புனிதமான கடல் நீர் பொல்லா சொறிசிரங்கு நீராகிறது.
[] சயனைட், மெர்குரி போன்ற ஆபத்தான உலோகங்களால் கடலுணவு விசமாகிறது. உணவுப் பெட்டகம் நச்சுப் பேழையாகிறது.
[] அபாயமான விசத்தைக் கண்டு அறிவுள்ள கடல்வாழ் உயிர்கள் வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால், கடற் தொழில் பாதிக்கப்படுகிறது.
[] கடலோர மக்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது; ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுகிறார்கள்.
[] கரையோர மக்களின் உணவுப் பாதுகாப்பும், ஊட்டச் சத்துப் பாதுகாப்பும் பாதிக்கப்படுகின்றன.
[] கடற்கரை ஊர்கள் எங்கும் கடலரிப்பு, தொழிலிழப்பு, வீடிழப்பு, காடிழப்பு, கலாச்சார அடையாளங்கள் இழப்பு, உயிரிழப்பு, வாழ்வாதார இழப்பு, வரலாறிழப்பு, வகைப்படுத்தவொண்ணா பல்வேறு இழப்புக்கள்.
[] கடற்கரை அருகேயுள்ள மீனவ மற்றும் பிற சமூக ஊர்களெங்கும் புற்று நோய்கள், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, மனவளர்ச்சியற்றக் குழந்தைகள் பிறப்பு, பிற நோய்நொடிகள், அவதி, அவலம், அழுகை.
[] சாதியைச் சொல்லி, மதத்தைச் சொல்லி மக்களைப் பிரித்து, தனது களவு தங்குதடையின்றி நடக்க சமூக விரோத ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எச்சில் பொறுக்கித் தின்னும் இழி பிறவிகள் இந்த வேலையை வகையாக செய்து கொடுத்துக் கூலி பெறுகிறார்கள், குனிந்து நிற்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள், தோழர்களே!
[] எது முக்கியம்?: தனிநபர் பணவெறியா, அல்லது தமிழ் மக்களின் பொதுநலமா?
[] யார் முக்கியம்?: லஞ்சத்துக்காகக் கையேந்தி குனிந்து நிற்கும் கூலிக்காரர்களா, பஞ்சாயத்துத் தலைவர்களா, அரசியல்வியாதிகளா, அதிகாரிகளா; அல்லது இந்த மண்ணின் உரிமையாளர்களான தமிழ் மக்களா?
[] ஏன் நடவடிக்கையில்லை?: அணு உலைக்கு எதிராகப் போராடும் அமைதியான மக்கள் 2,27,000 மீது படுபயங்கரமான 350 வழக்குகள். ஆனால் நாட்டு வளத்தை சுரண்டித் தின்ற முதலாளிகள், லஞ்சம் பெறும் பஞ்சாயத்துத் தலைவர்கள், அரசியல்வியாதிகள், அதிகாரிகள் மீது ஒரு வழக்குக்கூட கிடையாது? மாவட்ட ஆட்சித் தலைவர் புகார் கொடுத்தும் நடவடிக்கையில்லை, ஏன்?

சிந்தியுங்கள் தோழர்களே! சீரழிந்து கிடக்கும் உங்கள் வாழ்க்கைப் பற்றி, சிதிலமடைந்து கிடக்கும் உங்கள் வளங்கள் பற்றி, வருங்காலம் பற்றி சிந்தியுங்கள்!!

ஸ் பெ

unread,
Oct 20, 2013, 1:35:40 AM10/20/13
to panbudan
'அப்போது காலம் கடந்திருக்கும்!'

Posted Date : 15:41 (19/10/2013)Last updated : 18:14 (19/10/2013)

-ஜூனியர் கோவணாண்டி

நாடு முழுவதும் கடலோரங்களிலும், ஆற்றுப்படுகைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அனுமதி பெறாமல் மணல் அள்ளுவதற்கு முழுமையான தடை விதித்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்த நிலையில், டெல்லியில் அக்டோபர் 18 அன்று நடைபெற்ற பசுமைத் தீர்ப்பாய நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில், ‘‘சில கோர்ட்டுகள், சில தீர்ப்பாயங்கள் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு 100 சதவிகிதம் தடை விதித்து இருப்பது வருந்தத்தக்கது. இது தவறு'' என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம்,''என் வீடும் நிலமும் தமிழ்நாட்டின் காவிரிக் கரையில்தான் இருக்கின்றன.

ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ஆற்றில் தண்ணீரே இருக்காது. மணல்தான் இருக்கும். குறைந்தபட்சம் 3 அடி முதல் 5 அடி வரை அந்த மண்ணை அகற்றாவிட்டால், தண்ணீர் வரும்போது வெள்ளம் வீணாக கடலுக்குத்தான் போய்ச் சேரும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும்... வளர்ச்சியும் சமநிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார்.

இதைப் படித்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி...இதேநிகழ்ச்சியில் பேசிய மற்றொரு நீதிபதி ஆர்.எம்.லோதா பேசியதைப் படித்ததும் சற்றே குறைந்தது.

''சமுதாயத்தின் சில பிரிவினர் கருதுவதுபோல் சுற்றுச்சூழல் கட்டுப்பாடு நடவடிக்கைகள், வர்த்தகத்துக்கு எதிரானது அல்ல. அது சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்கிற அக்கறையால் எடுக்கப்படும் நடவடிக்கைகளே'' என்று கூறியிருக்கிறார் லோதா.

மூன்று அடி ஆழத்துக்கு மட்டுமே ஆறுகளில் மணல் அள்ளப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், 25 அடி ஆழம் முதல் 30 ஆழம் வரை ஆறுகளில் மணலை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு, திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு, கரூரின் காவிரியாறு என்று சுற்றுலாவாக போய் பார்த்து வியந்து வரலாம்.

 

ஆட்களை வைத்து மட்டுமே மணலை அள்ள வேண்டும. பொக்லைன் எந்திரங்கள், 30-40 டன் உள்ள டிரக்குகள் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தி மணலை அள்ளக்கூடாது என்பதும் விதி.
ஆனால், எந்த ஆற்றிலும் பொக்லைன் இல்லாமலோ... கனரக டிரக்குகள் இல்லாமலோ மணல் அள்ளப்படுவதே இல்லை. இதையும் மேற்சொன்ன அனைத்து ஆறுகளிலும் கண்கூடாகவே காணலாம்.

இரவு நேரங்களில் மணல் அள்ளக்கூடாது என்பதும் விதி. மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை மணல் அள்ளக்கூடாது என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையே உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இவர்களோ... 24 மணி நேரமும் மணலைச் சுரண்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

'ஆறுகளில் மண் மேடிட்டால், அது வெள்ள நீரை வீணே கடலுக்குத்தான் கொண்டு செல்லவே உதவும்' என்று கவலைப்பட்டிருக்கும் தலைமை நீதிபதியின் கண்களுக்கு... 'இங்கே முழுக்க முழுக்க விதிமுறைகளை மீறி மட்டுமே மணல் சுரண்டப்படுகிறது' என்கிற விஷயம் மட்டும் தெரியாமல் போனது ஆச்சரியமே!

ஆற்றுமணலை அள்ளி அள்ளியே காவிரிக்கரையோ நிலத்தடி நீராதாரம் படுபாதாளத்துக்குப் போய்விட்டது. ஆனால், காவிரிக்கரையிலேயே தன் வீடு மற்றும் தோட்டத்தை வைத்திருக்கும் தலைமை நீதிபதிக்கு இதுவும் தெரியாமல் போய்விட்டது.

பெயருக்காக சட்டங்களைப் போட்டு வைத்துவிட்டு சகட்டு மேனிக்கு மீறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அரசாங்கமே இத்தனை விதிமீறல்களையும் செய்து, மணல் அள்ளிக் கொண்டிருக்கிறது. இந்திய அளவில் பெரும்பெரும் மணல் மாஃபியாக்கள் கைகோத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டு, இப்போதே டெல்டா மாவட்டங்களின் பெரும்பாலான ஊர்களில் நிலத்தடியில் கடல் நீர் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. மற்ற பிரதேசங்களில், நிலத்தடி நீர் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.


இத்தகைய நிலையில், தன்னார்வலர்களும்... சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கொதித்து எழுந்து அவ்வப்போது போராடிக் கொண்டுள்ளனர். நீதிமன்றத்தின் கதவுகளையும் தட்டிக் கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில்தான், பசுமை தீர்ப்பாயம், இந்தியா முழக்க மணல் அள்ள தடை போட்டிருக்கிறது. சொல்லப்போனால், இது தடையே அல்ல... சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி அள்ளக்கூடாது என்றுதான் கூறியிருக்கிறது.

ஆக, 'விதிமுறைகளைப் பின்பற்றி மணல் அள்ளுங்கள்' என்றுதான் சொல்லியிருக்கிறது பசுமைத் தீர்ப்பாயம். ஆனால், இதையே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவறு என்று வருத்தப்பட்டு பேசியிருப்பதுதான் விந்தை.

'தடை' என்று பசுமைத் தீர்ப்பாயம் சொன்னதால் மட்டும் எங்கேயும் மணல் அள்ளப்படாமல் இல்லை. வேண்டுமானால், கொள்ளையின் வேகம் குறைந்திருக்கலாம். இப்போது, இதைத் தவறு என்று தலைமை நீதிபதி கூறியிருப்பதால்... சீக்கிரமே இந்த சின்ன தடங்கல் கூட விலக்கி கொள்ளப்படலாம். ஆனால், அதன் பிறகு வேகமெடுக்கப் போகும் மணல் கொள்ளை... இந்த மாபெரும் பாரத கண்டத்தையே ஒரு பாலைவனமாக வெகு சீக்கிரமே மாற்றிவிடும்.

எது தவறு என்று அப்போது உணரும்போது... காலம் கடந்திருக்கும்!

ஸ் பெ

unread,
Oct 20, 2013, 6:54:38 AM10/20/13
to panbudan
ணல் கொள்ளையருக்கு எதிராக அறச்சீற்றத்துடன் முகநூலில் போராடும் உ.பிகளுக்கு சமர்ப்பணம்.

Inline images 1
untitled.JPG

Thamil Selvi

unread,
Oct 20, 2013, 7:14:10 AM10/20/13
to panb...@googlegroups.com
எது தவறு என்று அப்போது உணரும்போது... காலம் கடந்திருக்கும்! (பொருந்தும் உண்மை)

ஒரு வகையில் மணல் திருடக்கூடாது என்பது மணல் திருட்டு தடுப்பு அதிகாரிகளுக்கு லாபமும் கூட.

ஓடை பொரம்போக்கு நிலத்தில் இருந்து மணல் கொண்டு வந்த மாட்டு வண்டிக்காரர்களிடம் வருவாய் ஆய்வாளர் இருந்த பணத்தை பிடுங்கிக்கொண்டு கெஞ்சி கூத்தாடிய பின் மாட்டுவண்டியை விடுவித்ததாக செவி வழி செய்தி. வருந்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை.





2013/10/20 ஸ் பெ <stalinf...@gmail.com>

--

Iyappan Krishnan

unread,
Oct 20, 2013, 7:53:54 AM10/20/13
to பண்புடன்
வேலூர் பக்கம் போய்  பாருங்க. ஒரு நாளைக்கு 50 - 60 மாட்டுவண்டி.... #நாடும் நாட்டு மக்களும்....



Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


2013/10/20 Thamil Selvi <thamil...@gmail.com>

ப்ரியன்

unread,
Oct 20, 2013, 9:49:08 AM10/20/13
to panb...@googlegroups.com

இதே மாதிரி கோவை பக்கம் ஒருத்தர் இருக்கார் ... எந்த ஆட்சி வந்தாலும் மணல் மட்டும் அவருக்குதான்..

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Oct 20, 2013, 1:58:11 PM10/20/13
to panb...@googlegroups.com

அவருகிட்ட இருக்கிற இன்ப்ஃராஸ்டெரெக்சர் அப்படி ...

ஆயிரக்கணக்கான லாரிகளும், சில ஆயிரம் பொக்லைன், நூற்றுக்கணக்கான புல்டோசரும் யாரு வச்சிருக்காங்க....

--

ப்ரியன்

unread,
Oct 21, 2013, 4:32:31 AM10/21/13
to panb...@googlegroups.com
இன்ப்ஃராஸ்டெரெக்சர் மட்டும்தான் காரணமா?

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Oct 21, 2013, 4:53:30 AM10/21/13
to panb...@googlegroups.com

அதுதான் முதலில் இருக்குது.
மாற்றிப்பார்த்தும் மற்றவர்களால் முடியாததால்தான் அவர் கொடி தொடர்ந்து பறக்கிறது.

--

ராஜசுப்ரமணியன் S

unread,
Oct 21, 2013, 11:44:25 AM10/21/13
to panb...@googlegroups.com
அறியாமை எல்லாரிடமும் இருக்கிறது. We are ignorant in different subjects என்பது எழுதப்படாத விதி. ஆனால் பொருப்பில் உள்ளவர்கள் அறிந்ததைப் பேசவேண்டும்

Ahamed Zubair A

unread,
Oct 21, 2013, 1:08:33 PM10/21/13
to பண்புடன்
அண்ணே,

இவரு என்ன பொறுப்பில்லாமப் பேசிட்டாருன்னு நினைக்கிறீங்க?

அவரு அவரோட கருத்தை சொன்னாரு.

அதையே நீதிமன்றத்தில அவரு இருக்கைலேர்ந்து சொல்லி இருந்தா எல்லாத்தையும் மூடிட்டு, மேல் முறையீடு மட்டும் தான் போடணும்... வெளில பேசவே கூடாது.

ஆனா இவரு பொது மேடைல இதைப் பேசி இருக்காரு..

நீங்க விமர்சனம் பண்ணுங்க..

அதனாலான, சாதக பாதகங்களை அலசுங்க... லெட்ஸ் சீ...


2013/10/21 ராஜசுப்ரமணியன் S <subrama...@gmail.com>

ஸ் பெ

unread,
Nov 8, 2013, 6:08:09 AM11/8/13
to panbudan

தென் மாவட்டங்களில் நடக்கும் தாது மணல்கொள்ளை குறித்து ஆனந்த விகடன் 13-11-2013 தேதியிட்ட இதழில் வெளியான மனித உரிமைப் பாதுகாப்புக் கழக வழக்கறிஞர்  வாஞ்சிநாதனின் பேட்டி :

தாது மணல் கொள்ளைதாது மணல் கொள்ளைக்கு எதிராக மக்களின் போராட்டங்களும் எதிர்ப்புக் குரல்களும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தென் தமிழகக் கடலோரத்தில் கேட்கின்றன. தாது மணல் நிறுவனங்களைப் பற்றி பேசினால் உயிர் இருக்காது என்ற அச்சத்தில் உறைந்திருந்த மக்கள், வாய் திறந்து பேசத் தொடங்கியுள்ளனர். ககன்தீப் சிங் பேடி தலைமையிலான ஆய்வுக் குழுவினரை தங்கள் ஊருக்கும் ஆய்வுக்கு வரச்சொல்லி மக்கள் மனு கொடுத்த காட்சி, புத்தம் புதியது.

“ஆனால், ககன்தீப் சிங் பேடியின் ஆய்வே, வெறும் கண்துடைப்பு. மக்களை நம்ப வைத்துக் கணக்குக் காட்ட நடத்தப்படும் நாடகம். உண்மை யான பாதிப்பு மிகப் பிரமாண்டமானது. பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தாது வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஆபத்தான கதிரியக்கம்கொண்ட தனிமங்கள் அனுமதியின்றி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் வன்முறையாகச் சிதைக்கப்பட்டுள்ளது. இயற்கை சீரழிக்கப்பட்டுள்ளது. பலர் உயிர் இழந்துள்ளனர். இவை அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும். மொத்த தாது மணல் நிறுவனங்களும் இழுத்து மூடப்பட்டு அவர்களின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும். அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், இந்தக் கொள்ளைக்குத் துணைபோன அனைத்துத் துறை அரசு அதிகாரிகளும் கைதுசெய்யப்பட வேண்டும்!” என்கிறார் வாஞ்சிநாதன்.

தாது மணல் கொள்ளைதாது மணல் அள்ளப்படும் பகுதிகளில் நடத்தப்பட்ட உண்மை அறியும் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர். ‘மனித உரிமை பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பில் இருந்து சென்ற ஆய்வுக் குழுவினர், வி.வி. மினரல்ஸின் தாது மணல் ஆலைகளுக்குள் நுழைந்து அங்கு நடக்கும் முறைகேடுகளை புகைப்பட ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளனர். ஒரு தாது மணல் ஆலையின் உட்பு றங்களும் செயல்பாடுகளும் பதிவாகியிருப்பது இதுவே முதல்முறை. வாஞ்சிநாதனிடம் பேசிய போது…

“இந்த கார்னெட் மணல் தொழிலில், ஆரம்பத்தில் அரசு நிறுவனம் மட்டும்தான் ஈடுபட்டது. 1970-களுக்குப் பிறகுதான் இதில் தனியார் அனுமதிக்கப்பட்டனர். வைகுண்டராஜன் இந்தத் தொழிலுக்குள் நுழைந்ததும் இதன் பிறகுதான். கடலோரக் கிராமங்களில் ஊர் கமிட்டி முறை உள்ளது. இவர்கள்தான் பெரும்பாலான விஷயங்களைத் தீர்மானிப்பார்கள். வைகுண்டராஜன், ஊர் கமிட்டிகளில் உள்ளவர்களை பல்வேறு வழிகளில் வளைத்துப்போட்டு தன் ஆதரவாளர்களாக மாற்றுகிறார். இவருக்கு ஆதரவாக கடலோரத்தில் ஒரு குழு உருவாகிறது.

தாது மணல் கொள்ளைஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் இருப்பார்கள். அடியாள் போல என்று வைத்துக்கொள்ளலாம். வேறு வேலை எதுவும் அவர்களுக்குக் கிடையாது. மாதச் சம்பளம் மட்டும் வந்து விடும். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள், காவல் துறை அனைவரும் ஆதரவு. இந்தத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத் துறை, பொதுப்பணித் துறை, கனிமவளத் துறை, சுங்கத் துறை என அனைத்துத் துறைகளையும் தன் செல்வாக்கு எல்லைக்குள் கொண்டு வருகிறார். அவரைக் கேட்காமல் ஓர் அணுவும் அசையாது. இதுதான் வி.வி. என்ற பிரமாண்ட சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டிருப்பதன் பின்னணி.

இன்னொரு முக்கியமான விஷயம், அரசின் கொள்கை மாற்றம். 1990-களுக்கு முன்பு, இந்தத் தொழிலை செய்வதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. இயற்கை வளங்களை சீரழிக்கும் தொழிலைச் செய்ய வேண்டுமானால், பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

தாது மணல் கொள்ளை1991-ல் மன்மோகன் சிங் அரசு கொண்டு வந்த புதிய தாராளமயக் கொள்கை, இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. சட்டத்துக்குப் புறம்பானவையாக இருந்த அனைத்தும் சட்டபூர்வமானவையாக மாற்றப்பட்டன. சத்தீஸ்கரின் கனிம நிறுவனங்கள், கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள், தமிழ்நாட்டில் வி.வி.மினரல்ஸ் என நாடு தழுவிய அளவில் கனிம வளம் பெரும் அளவில் சுரண்டப்பட, அரசின் இந்தக் கொள்கை மாற்றம்தான் காரணம். ஆனால், பெரும் லாப ருசி பார்த்துவிட்ட நிறுவனங்கள், கொள்கை, சட்ட விதிகளுக்கு எல்லாம் உட்பட்டு இயங்குவது இல்லை. உதாரணம், கூடங்குளம் அணு உலையின் சுற்றுச்சுவரை ஒட்டி ‘பஞ்சல்’ என்ற கிராமம் இருக்கிறது. அணு உலையையும் இந்தக் கிராமத்தையும் ஒரு சுற்றுச் சுவர்தான் பிரிக்கிறது. அந்தச் சுவர் வரைக்கும் தாது மணலைத் தோண்டி எடுத்திருக்கிறது வி.வி. மினரல்ஸ். பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. இத்தனைக்கும் அது பாதுகாக்கப்பட்ட பகுதி. அங்கு 300 ஏக்கர், வி.வி-யின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

தாது மணல் கொள்ளைஎல்லா அரசியல் கட்சிகளும் வி.வி-க்கு ஆதரவாக இருக்கின்றன. கடந்த தி.மு.க. ஆட்சியில் வைகுண்டராஜன் மீது பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனே அதை எதிர்த்து, 19.04.2007 அன்று, அ.தி.மு.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். எதற்கும் அசைந்து கொடுக்காத ஜெயலலிதா, ‘வைகுண்டராஜன் மீதான நடவடிக்கை, ஜெயா டி.வி-யை முடக்கும் சதி’ என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். இது, எல்லா ஊடகங்களிலும் அப்போது வெளி வந்துள்ளது. அத்தகைய ஜெயலலிதா அரசு எடுக்கும் நடவடிக்கை நியாயமானதாக இருக்கும் என்று நம்புவதற்கு இல்லை. மக்களுக்கு இது மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது. பல ஊர்களில், ‘அரசு மட்டும் வி.வி. பக்கம் இல்லை என்றால், பத்தே நாட்களில் அனைத்து மணல் கம்பெனிகளையும் மூடிவிடுவோம்’ என்று மக்கள் சொல்கிறார்கள். அவர்களின் அச்சம் அரசை நினைத்துதான். ஏனென்றால், கடந்த காலங்களில் மணல் நிறுவனங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு மோசமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். அந்தக் காயத்தின் வடு இன்னும் அவர்களிடம் ஆற வில்லை.

தாது மணல் கொள்ளைஇப்படி சொல்வதால், ‘அ.தி.மு.க- தான் வி.வி-க்கு ஆதரவாக இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் இதை எதிர்க்கிறார்கள்’ என்று புரிந்துகொள்ளத் தேவை இல்லை. தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்னை எங்கேயோ எத்தியோப்பியா பக்கம் நடப்பதைப் போல மௌனம் காக்கின்றன. இந்து முன்னணியும் தென்னிந்திய திருச்சபையும் ஓரணியில் இணைந்து வைகுண்டராஜனை ஆதரித்து மனு கொடுக்கிறார்கள். சீமான், வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்துக்குச் சென்று கலந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார். ஆக, அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சுரண்டலுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்” என்ற வாஞ்சிநாதன், ஆய்வில் தாங்கள் கண்ட பல அதிர்ச்சித் தகவல்களையும் பகிர்ந்துகொண்டார்.

தாது மணல் கொள்ளை“தாது மணல் ஆலைகள் ஒவ்வொன்றும் பெரிய இரும்புக் கோட்டையைப் போல இருக்கின்றன. சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்குக் கூட உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதன் அருகே ஐந்து நிமிடங்கள் நின்றாலே, விசாரிக்க ஆள் வந்து விடுகிறார்கள். பெரியதாழை என்ற ஊரில் தாது மணல் சுரண்டப்பட்டதால், மொத்தக் கடற்கரையும் சிதைக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்தில் கழிவு மணலைக் கொட்டி நிரப்பி எதுவுமே நடக்காதது போல மாற்றியுள்ளனர். உவரி கடற்கரையிலும் இதே போல நடந்துள்ளது. பாம்பன் தீவு முதல் தூத்துக்குடி வரையிலான கடற்பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட கடற்பகுதி. பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழும் இந்தப் பகுதியை ‘மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகம்’ என்று அழைக்கின்றனர். மீனவர்கள், இந்தப் பகுதியில் பெரிய வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடித்தாலே கடும் தண்டனை உண்டு. ஆனால், இங்கு மோசமான விதிமீறல்களை நிகழ்த்தி தாது மணல் கழிவைத் திறந்து விடுகின்றனர்.

வாஞ்சிநாதன்

படம் : நன்றி ஆனந்த விகடன்

கடல் நீர் சிவப்பு நிறத்தில் மாறிக் கிடக்கிறது. ‘சிங்க இறால்’ என்ற நல்ல விலை போகக் கூடிய மீன் வகைகள் இந்தப் பகுதியில் நிறைய கிடைத்து வந்தன. இப்போது அவை கிட்டத்தட்ட அழிந்து விட்டன. ஆறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பெரியதாழைத் தூண்டில் வளைவு, தாது மணல் நிறுவனக் கழிவினால் மூடப்பட்டுவிட்டது. இதனால் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு பலருக்கு தலை, கால், தண்டுவடம் அடிபட்டு முடமாகியுள்ளனர்.

மணல் கழிவுகள் கடற்கரையில் மலைபோல் குவிவதால் மீனவர்களின் படகுகளைக் கரையேற்ற முடியவில்லை. சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய்… என விதவிதமான நோய்கள் மீனவர்களைத் தாக்குகின்றன.

இப்படி மொத்தக் கடலோரமும் சொல்ல முடியாத அளவுக்கு சிதைக்கப்பட்டுள்ளது. மதுரையில் பி.ஆர்.பழனிச்சாமி கிரானைட் வளத்தைக் கொள்ளை அடித்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். அதைவிட இங்கு 100 மடங்கு கொள்ளை நடந்துள்ளது. ஏன் இதுவரை வைகுண்டராஜனைக் கைது செய்யவில்லை? இப்போது மக்களிடையே சாதி, மதப் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்கும் வேலை நடந்து வருகிறது. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். தென் தமிழக மக்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும் கூட, இயற்கை வளங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகின்றனர். அவர்களுக்கு, அனைவரும் துணை நிற்க வேண்டும்!” என்கிறார் வாஞ்சிநாதன்!

- பாரதி தம்பி

நன்றி : ஆனந்த விகடன்

ஸ் பெ

unread,
Jan 3, 2014, 1:06:15 PM1/3/14
to panbudan
வைகுண்டராஜனை சி.பி.சி.ஐ.டி விசாரித்தது பற்றி ஒரு நாளிதழ் கூட செய்தி வெளியிட வில்லையே...

#பணம் பாதாளம் வரை பாயும்..

ஸ் பெ

unread,
Mar 18, 2014, 4:09:48 PM3/18/14
to panbudan

ஸ் பெ

unread,
Jul 5, 2014, 5:30:28 AM7/5/14
to panbudan

எத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா ?

JULY 5, 2014 BY SAVUKKU 3 COMMENTS

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து விதமான க்ரானைட் க்வாரி நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன என்று ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழகமெங்கும் வருவாய்த்துறை மற்றும் கனிமத்துறை அதிகாரிகள் பரபரப்பாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

???????????????????????????????

வருவாய்த்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தார் ஜெயலலிதா. அந்த ஆய்வுக்குழு தூத்துக்குடி மாவட்டத்தில் தாதுமணல் அள்ளுவது தொடர்பாக விரிவான ஆய்வுகளை நடத்தியது. அதன் பின், இந்த ஆய்வுக் குழு, கார்னெட், இலுமினைட், ரூட்டைல் போன்ற தாதுப்பொருட்கள் எடுப்பதில் நடந்த முறைகேடுகளை ஆய்வு செய்ய, திருநெல்வேலி, மதுரை, திருச்சி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களிலும் இந்த ஆய்வு விரிவுபடுத்தப்பட்டது.   இந்த ஆய்வுகள் இன்னும் முழுமையாக முடிவுபெறவில்லை. தமிழக அரசு, ஆய்வுக்கான ஆணைகளை வெளியிட்டபோது, தெளிவாக வெளியிடப்பட்ட ஆணை என்னவென்றால், விவி மினரெல்ஸ் மற்றும் ட்ரான்ஸ்வேர்ல்ட் கார்னெட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் போக்குவரத்து பர்மிட் வழங்கப்படக் கூடாது என்பதே.

போக்குவரத்து பர்மிட் வழங்கக் கூடாது என்பதுதான் முக்கியமான உத்தரவு. ஏனென்றால், ஏற்கனவே எடுத்து வைத்திருந்த கார்னெட், இலுமினைட் உள்ளிட்ட தாதுப் பொருட்களை வைகுண்டராஜனால் ஏற்றுமதி செய்ய இயலாது.

2LF1MA7309JEJLQfADafd5Ff

34WLaXA4C0B54JW7Ea988gM6

போக்குவரத்து பர்மிட்டை ரத்து செய்த தமிழக அரசு ஆணை

க்ரானைட், இலுமினைட், லைம்னைட், ஸிர்க்கான், ரூட்டைல் போன்ற விலை உயர்ந்த தாதுப்பொருட்களை எடுத்து ஏற்றுமதி செய்வதற்கு பல்வேறு விதி முறைகள் உள்ளன. இவற்றை வரண்முறை செய்ய பல்வேறு சட்டங்கள் உள்ளன. Mineral Conservation and Development Rules, 1988, Mines and Minerals (Development and Regulation ) Act, 1957. Mineral Concession Rules, 1960 என்பது போன்ற பல்வேறு சட்டங்கள் உள்ளன.   இந்த சட்டத்திட்டங்களின் படி, உரிய முறையில் விண்ணப்பித்து, உரிமம் பெற்ற பிறகே க்ரானைட் தொழிலில் ஈடுபடு முடியும்.

இப்படி பல கட்டுப்பாடுகள் உண்டு. இந்த விதிகள் அனைத்தையும் பின்பற்றுவது போல பின்பற்றியே தொழில் செய்து வருகிறார் வைகுண்டராஜன்.   வைகுண்டராஜனின் ஸ்டைலே தனி.   உதாரணத்துக்கு, சர்வே நம்பர் 210/23ல் க்வாரி நடக்கிறது என்று அனுமதி பெற்றுக் கொண்டு, அதைச் சுற்றி இருக்கும் அத்தனை இடங்களிலும் அள்ளி எடுப்பார்.   அவரை மீறி, ஒரு பயல் உள்ளே சென்று ஆய்வு நடத்த முடியாது.

தாதுமணல் எடுக்க தடை செய்து ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவே, அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் அளித்த அறிக்கைக்குப் பிறகுதான்.   தாதுமணல் கொள்ளை, குறிப்பாக, வைகுண்டராஜன் என்ற மணல் மாஃபியா தலைவன் நடத்தும் கொள்ளைகள் குறித்து விரிவாக அறிக்கை அளித்த ஆஷிஷ் குமார், இரண்டே நாட்களில் மாற்றப்பட்டார்.     ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றும் அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இந்த மாற்றம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தாதுமணல் கொள்ளளையையே ஒழிக்கப் போவது போல கமிட்டியெல்லாம் அறிவித்து அறிவிப்பு வெளியிட்டார் ஜெயலலிதா.

ககன்தீப் சிங் பேடியின் அறிக்கை அளிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. ஜெயலலிதா அந்த அறிக்கையை வைத்துக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். ஜெயா டிவியில் பங்குதாரராக இருக்கும் வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுப்பார் ஜெயலலிதா என்று நம்புவதே முட்டாள்த்தனம்.

ஜெயலலிதாவிடம் அறிக்கை அளிக்கும் ககன்தீப் சிங் பேடி

ஜெயலலிதாவிடம் அறிக்கை அளிக்கும் ககன்தீப் சிங் பேடி

ஒரு இடத்தில் கனிமவளங்களை வெட்டி எடுக்க, சம்பந்தப்பட்டவர் மாநில அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த மாவட்ட ஆட்சியர், அந்த விண்ணப்பத்தை பெற்று, சுரங்கம் மற்றும் கனிமவளத்துறையின் இயக்குநருக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்புவார்.   அந்த விண்ணப்பம் அரசின் தொழில் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.   மாநில அரசின் அனுமதி கிடைத்ததும் Mineral Concession Rules, 1960 விதி 22 (6)ன்படி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய அரசின் கனிமவளத்துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் கனிமவளத் துறை, ஐந்து ஆண்டுகளுக்கு கனிமவளம் குறிப்பிட்ட பகுதியில் கனிமங்களை எடுக்க, அனுமதி தரும். அந்த விண்ணப்பத்தில், எப்படி கனிமம் எடுக்கப் போகிறோம், எந்தெந்தப் பகுதியில் கனிமம் எடுக்கப் போகிறோம் என்பது குறித்து விரிவான திட்ட வரைவுகளையும் அனுப்ப வேண்டும். கிட்டத்தட்ட ஒரு வீடு கட்டுவதற்கான திட்ட வரைபடம் போல அனுப்பப்பட வேண்டும்.

ஐந்து ஆண்டு அனுமதி முடியும் தருவாயில், அது முடிவதற்கு 120 நாட்களுக்கு முன்பாக, மீண்டும் சம்பந்தப்பட்ட நிறுவனம், மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும்.   120 நாட்களுக்குள் விண்ணப்பிக்க தவறினால், விளக்கம் கேட்கப்பட்டு, கனிமம் எடுப்பதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இது தவிரவும், மத்திய அரசுக்கு நிறுவனம் அனுப்பிய திட்டத்தில் விதிமீறல் இருந்தால் தலையிட்டு, அனுமதியை ரத்து செய்யவும் உரிமை உண்டு. இதுதான் விதி.

வைகுண்டராஜனின் ட்ரான்ஸ்கார்நெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதி 31.03.2012 அன்று முடிவடைகிறது. டிசம்பர் 2011க்கு உள்ளாகவே மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், வைகுண்டராஜனை கேட்பதற்கு யார் இருக்கிறார்கள் ?   எந்த விண்ணப்பத்தையும் அந்த நிறுவனம் அனுப்பவில்லை.   இதையடுத்து உங்கள் கனிமவளம் எடுக்கும் அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டு, மத்திய கனிம வளத்துறை ஒரு அறிவிக்கையை அனுப்புகிறது.

உரிய காலத்தில் அனுமதி அளிக்காத காரணத்தால் மத்திய அரசு வைகுண்டராஜனுக்கு அனுப்பிய நோட்டீஸ்

உரிய காலத்தில் அனுமதி அளிக்காத காரணத்தால் மத்திய அரசு வைகுண்டராஜனுக்கு அனுப்பிய நோட்டீஸ்

இதையடுத்து தப்பும் தவறுமாக, அவசர அவசரமாக 01.10.2013 அன்று வைகுண்டராஜனின் நிறுவனம், இரண்டு வரைவுத் திட்டங்களை அனுப்புகிறது.   அந்த வரைவுத் திட்டத்தை ஆராய்ந்த மத்திய அரசு, உங்கள் வரைவுத் திட்டம் முழுக்க தப்பும் தவறுமாக இருக்கிறது.   இக்கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள தவறுகளை சரி செய்து அனுப்பினால் மட்டுமே, லைசென்ஸை புதுப்பிக்க முடியும் என்று கடிதம் அனுப்புகிறது.   மத்திய அரசு சுட்டிக்காட்டிய எந்தத் தவறையும் சரிசெய்யாமலேயே, குருட்டாம்போக்கில் ஒரு பதிலை மத்திய அரசுக்கு ட்ரான்ஸ்வேர்ல்ட் கார்நெட் நிறுவனம் அனுப்புகிறது.

மத்திய அரசு குறிப்பிட்டிருந்த எந்தத் தவறுகளையும் சரி செய்யாத காரணத்தால், விதிகளின்படி, கனிமவளம் எடுக்க ட்ரான்ஸ்வேர்ல்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்படுகிறது என்று மத்திய அரசு உத்தரவிடுகிறது. அந்த உத்தரவின் நகல் மாநில அரசுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த உத்தரவை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கே உள்ளது.

 

 

 

திட்ட வரைவை நிராகரித்த மத்திய அரசின் கடிதம்.

திட்ட வரைவை நிராகரித்த மத்திய அரசின் கடிதம்.

மத்திய அரசின் கடிதத்தின் அடிப்படையில் கனிம லைசென்ஸை ரத்துசெய்யும் மாநில அரசின் கடிதம்.

மத்திய அரசின் கடிதத்தின் அடிப்படையில் கனிம லைசென்ஸை ரத்துசெய்யும் மாநில அரசின் கடிதம்.

இந்த நேரத்தில்தான், வைகுண்டராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார்.   உயர்நீதிமன்றத்தை அணுகி, ஏராளமான முறைகேடுகள் நடந்த காரணத்தால் கனிம வளம் எடுக்க தடை செய்த மாநில அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரவில்லை. மாறாக, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோருகிறார்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க வேண்டும். மாநில அரசு ககன்தீப் சிங் பேடி தலைமையில் கமிட்டி அமைத்து, முறைகேடுகள் காரணமாக, கனிமவளம் எடுக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்து, கனிமங்களை லாரிகளில் எடுத்துச் செல்வதை தடை செய்தது தனி நடவடிக்கை. உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பாத காரணத்தால், மத்திய அரசு அனுமதியை ரத்து செய்தது தனி நடவடிக்கை. இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆனால், வைகுண்டராஜன் தனது மனுவில், மாநில அரசு தடை விதித்த காரணத்தால், மத்திய அரசு, சுரங்கத்துக்கான அனுமதியை ரத்து செய்து விட்டது என்று குறிப்பிடுகிறார்.

இப்போது சென்னை உயர்நீதிமன்றம் ஆராய வேண்டியது என்ன ?   மாநில அரசின் நடவடிக்கை காரணமாக மத்திய அரசு சுரங்க அனுமதியை ரத்து செய்ததா ?   மத்திய அரசின் உத்தரவு சட்டப்படி சரியா ? என்று ஆராய்ந்து சரி என்றும் சொல்லலாம். தவறு என்று உத்தரவையும் ரத்து செய்யலாம்.

இதற்கு சம்பந்தமே இல்லாமல் இது வரை வெட்டி வைத்திருந்த கனிமங்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கிறேன் என்று ஒரு நீதிபதி தீர்ப்பளித்தால் அது முட்டாள்த்தனமான தீர்ப்பா, உள்நோக்கம் கொண்ட தீர்ப்பா ?   ஏன் உள்நோக்கம் கொண்ட தீர்ப்பா என்ற சந்தேகம் வருகிறது என்றால், வைகுண்டராஜன் உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்ய வேண்டும் என்று கோருவது, மத்திய அரசின் சுரங்கத்துக்கான ரத்து செய்த உத்தரவை.   அது சரியா, தவறா என்று உத்தரவிடுவது மட்டுமே நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குள் வரும். ஏனென்றால், மாநில அரசின் உத்தரவுகளை எதிர்த்து, வைகுண்டராஜன் வழக்கே தாக்கல் செய்யவில்லை.

???????????????????????????????

சரி. இப்படி ஒரு சிறப்பான உத்தரவை பிறப்பித்த அந்த நீதி நாயகன் யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்குமே…..!!! அவர் வேறு யாருமல்ல. சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நீதிநாயகன் கர்ணன்தான் அது.

ஏப்ரல் 30 2014 அன்று, இது வரை வெட்டி வைத்திருந்த கனிமங்களை எடுத்துச் செல்வதற்கு, வைகுண்டராஜன் நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவிடுகிறார் நீதியரசர்.   மே மாதம் முழுக்க, வைகுண்டராஜன் இது வரை எடுத்து வைத்திருந்த கனிமங்களை வெளியேற்றி ஏற்றுமதி செய்து முடித்து விட்டார்.   கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் நீதிமன்றம் திறக்கப்பட்ட பிறகும், இதற்கான உத்தரவு கர்ணனால் நீடிக்கப்பட்டது.   தற்போது 7 ஜுன் வரை இந்த உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தாதுமணல் கொள்ளை குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது முதல் சூடு பிடித்த இந்த விவகாரம், தொடர்ந்துவிசாரணை வளையத்திலேயே இருந்து வருகிறது. ஆனால் விசாரணை தொடங்கியதுமே, தூத்துக்குடியில் இடைப் பட்ட ஒரு வாரத்திற்குள்ளே தாது மணல் கொள்ளையர்கள் பல்வேறு முறைகேடுகளை மறைத்தனர். ஆய்வு செய்ய சென்ற சிறப்புக் குழுவுடன் மீனவ மக்களும் உடன் சென்றதால் முறைகேடுகளை மறைத்தததை காட்டிக் கொடுத்து, பத்திரிக்கைகள் மூலம் இவை அம்பலமாகியது.

தூத்துக்குடி தாது மணல் கொள்ளை அம்பலமான பிறகு, நெல்லை மாவட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு முறைகேடான தடயங்களை எல்லாம் மூடி மறைத்தனர்.

தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான ஆட்களால், ஒவ்வொரு மீனவ கிராம மக்களையும் பிளவுபடுத்த எண்ணற்ற சதி வேலைகள் காவல்துறையினர் துணையோடு மேற்கொள்ளப் பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் அறிவிக்கப்படாத தாதுமணல் நிறுவன ஊழியர் போல் செயல்பட்டு வருகின்றனர்.

தாதுமணல் கொள்ளையை எதிர்த்து கடந்த ஆறு மாதமாக இடையறாது போராடி வந்த கூத்தென்குழி கிராமத்தில், சூன் 14ஆம் நாள் தாதுமணல் கொள்ளையர்களின் அடியாட்கள் காவல் துறை துணையுடன் ஊருக்குள் புகுந்து வெடிகுண்டு வீசி ஊரையே நிலை குலைய வைத்தனர்.

ஊர் மக்களை இந்த அளவுக்கு கடுமையாக மிரட்டி வைத்திருக்கும் வைகுண்டராஜன்தான் தற்போது நீதிமன்றம் மூலமாக அரசாங்கத்தையே மிரட்டி வருகிறார்.

இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக ஆஜராகி வாதாடிய, டி.என்.ராஜகோபாலன், இவ்வழக்கில் நடந்தவற்றை சரியாகவே வாதாடி பதிவு செய்துள்ளார்.   ஆனால், கர்ணனோ, தனக்கு சாதகமாக உண்மைகளை வளைத்து, வைகுண்டராஜனின் கொள்ளை தங்கு தடையின்றி நடக்க உதவி செய்துள்ளார். ஏற்கனவே எடுக்கப்பட்ட தாதுமணல்களை வைகுண்டராஜன் எடுத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிடும் கர்ணனுக்கு, வைகுண்டராஜன் ஏற்கனவே எடுத்த தாதுமணல்களை எடுக்கிறாரா, அல்லது புதிதாக தாதுமணல் அள்ளுகிறாரா என்பது தெரியுமா ?   கர்ணன் அங்கே நேராகச் சென்று பார்க்கப் போகிறாரா ?

மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், சார் நாங்கள்லாம் அந்தப் பக்கம் போகவே முடியாது. போனா உயிரோட வருவோமான்னு தெரியாது என்கிறார்.   இதுதான் யதாரத்த நிலைமை.

மாநில அரசின் உத்தரவுகளை எதிர்த்து வழக்கே தாக்கல் செய்யாத நிலையில், மாநில அரசு எடுக்கப்பட்ட தாது மணல்களை எடுத்துச் செல்ல தடை விதித்துள்ள நிலையில், தாதுமணலை எடுத்துச் செல்ல உத்தரவிட்டதன் மூலம், மாநில அரசின் தடை உத்தரவை செல்லாததாக்கி இருக்கிறார் கர்ண மகராஜா.

ddLd2YMrWa6eJtKAKK0N2Y4L

வைகுண்டராஜனின் கனிமங்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கும் நீதிபதி கர்ணனின் உத்தரவு.

இந்த வழக்கு கடந்த வாரம் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனித உரிமை பாதுகாப்பு நடுவத்தின் சார்பாக தங்களையும் இந்த வழக்கில் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமச்சந்திரன்.   அவர் தனது மனுவில், வழக்கறிஞர்களாகிய நாங்கள் ஒரு உண்மை அறியும் குழு அமைத்து, தாதுமணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 14.08.2013 முதல் 21.08.2013 வரை சுற்றிப் பார்த்தோம். அவ்வாறு நாங்கள் பார்வையிட்டபோது, விதிகளை மீறி இயந்திரங்களை பயன்படுத்தி தாதுமணல் அள்ளப்பட்டு வருவது தெரிய வந்தது.   மணலில் இருந்து தாதுக்களை பிரிக்கையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் அப்படியே கடலில் கலக்கப்பட்டது. இதன் காரணமாக, கடல் நீரே செந்நிறத்தில் மாறியுள்ளது.   இந்த ரசாயனங்களின் கலப்பின் காரணமாக, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் உருவாகிறது.

இது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, குழுவின் அறிக்கை நவம்பர் 2013ல் சமர்ப்பிக்கப்பட்டும், இது வரை வெளியாக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது வைகுண்டராஜன் நிறுவனத்தின் தாதுமணல்களை விடுவிக்கும் இந்த வழக்கில் எங்களையும் மனுதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

மீனாட்சி என்ற மனித உரிமை பாதுகாப்பு நடுவத்தைச் சேர்ந்த ஒரு இளம் வழக்கறிஞர் இந்த மனு குறித்து நீதிபதி கர்ணனிடம் கூறினார். வந்ததே கோபம் கர்ணனுக்கு…….   “யார் இந்த மனுதாரர் ?” என்றார். “இவர் அந்தப் பகுதியில் சமூக ஆர்வலர்” என்று கூறியதும் இன்னும் கோபமடைந்தார் கர்ணன்.

IMG_2153

நீதி நாயகன் கர்ணன்

“சமூக ஆர்வலர் என்றால் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாரா ? எப்போது பார்த்தாலும் விளம்பரத்திற்காக இது போன்ற மனுக்களை தாக்கல் செய்வதே உங்களுக்கெல்லாம் வேலையாகப் போய் விட்டது.   நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே உங்களுக்கு முழுநேர வேலையாகப் போய் விட்டது.

அரசாங்கம் லைசென்ஸ் தருகிறது.   அவர்கள் லைசென்ஸ் பெற்று கனிமங்களை அள்ளுகிறார்கள்.   உங்களுக்கு என்ன வந்தது ? கடல் எங்கே இருக்கிறது ? ஊர் எங்கே இருக்கிறது.   எதற்காக வந்து இங்கே தொல்லை தருகிறீர்கள் ? ” என்று 15 நிமிடம் கடுமையாக கத்தித் தீர்த்தார்.

அதன் பிறகு மத்திய அரசு வழக்கறிஞரின் பங்கு.   அவர் எழுந்து, இதற்கு பதில் மனு டெல்லியில் இருந்து ஒப்புதல் பெற்று வர வேண்டும். டெல்லிக்கு பதில் மனு அனுப்பியுள்ளோம்.   வந்ததும் தாக்கல் செய்கிறோம் என்று கூறியதும் லார்ட்ஷிப் கர்ணன் இன்னும் கோபமடைந்தார்.

“டெல்லியில் இருந்து பதில் மனு வரும் வரை நான் காத்திருக்க வேண்டுமா ?   என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…. இந்த நீதிமன்றத்தின் அதிகாரம் என்னவென்று தெரியுமா ?   நீங்கள் பதில் மனு தாக்கல் செய்தாலும், தாக்கல் செய்யாவிட்டாலும் நான் திங்கட்கிழமை தீர்ப்பு சொல்லத்தான் போகிறேன். இது போன்ற முக்கியமான வழக்குகளில் தாமதம் செய்ய இயலாது” என்றார்.

எது முக்கியமான வழக்கு.   வைகுண்டராஜன் முக்கி முக்கி மணல் கொள்ளை அடிப்பது கர்ணனுக்கு முக்கியமான வழக்காம்.

இது மட்டும் இல்லை. வைகுண்டராஜன் சார்பாக ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் ஏஆர்எல்.சுந்தரேஷ். இவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏஆர்.லட்சுமணனின் தந்தை.   இவரைப் பற்றி தனது தீர்ப்பில் குறிப்பிடுகையில் இப்படி குறிப்பிடுகிறார் கர்ணன்.

On considering the facts and circumstances of the case and arguments advanced by the highly competent senior counsel for the petitioner Mr.ARL.Sundaresan.

1எதற்கு இப்படி சுந்தரேசனுக்கு இப்படி ஒரு சொம்படிக்கிறார் கர்ணன் என்பது கர்ணனுக்கே வெளிச்சம்.

சரி.   கர்ணன் இப்படியெல்லாம் கொள்ளையடிக்கிறாரே…. இதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள் ? தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் சதீஷ் அக்னிஹோத்ரிதான்.

கர்ணன் எப்படிப்பட்ட நீதிபதி, அவர் மீது எத்தனை ஊழல் புகார்கள்.   பத்திரிக்கையாளர்களை அழைத்து நான் தலித் என்பதால் எனக்கு உயர்நீதிமன்றத்தில் நல்ல துறைகள் வழங்கப்படுவதில்லை என்று பேசுபவர் என்பதெல்லாம் தெரிந்தும், அவரை, மின்சாரம், நில ஆக்ரமிப்பு, கனிமம் மற்றும் சுரங்கம், வனம், கூட்டுறவு என்ற முக்கியமான வழக்குகளை கவனிக்க மனசாட்சி உள்ள யாராவது ஒரு தலைமை நீதிபதி நியமிப்பாரா ?   திருடனின் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு ?

கர்ணனைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தும், கோடைக்கால விடுமுறையில், அவரை ஜாமீன் வழங்க நியமித்ததும், அப்போது கர்ணன் யாருக்கெல்லாம் ஜாமீன் வழங்கினார் என்பதும் சவுக்கு வாசகர்கள் அறிந்ததே. குற்றவியல் நடைமுறைப் பிரிவுச் சட்டம் பிரிவு 482ன் கீழ், சி.டி.செல்வம் இழைத்த அநியாயங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்தும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும், வழக்குகளை மாற்றாமல், தொடர்ந்து சி.டி.செல்வமே கவனிக்க அனுமதித்தார் அக்னிஹோத்ரி.

???????????????????????????????

பொறுப்பு தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி

இதனால்தான் பஞ்சாப் உயர்நீதிமன்றத்திலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட இருந்தவரை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர விடாமல், ஜெயலலிதா மூலமாக தடுத்து வருகிறார் நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி.

இவரே சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக இருந்தால், நீதியை வைகுண்டத்துக்கு அனுப்பி வைத்து விட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார் போலும்.

சரி. இப்படியெல்லாம் நீதிபதி கர்ணன் வைகுண்டராஜன் வழக்கில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ? அவர் வைகுண்டராஜனிடம் லஞ்சம் வாங்கி விட்டு, இந்த வழக்கை விசாரிக்கிறாரா…. ? அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குகிறாரா என்ற அய்யம் எழும்.

நீதிபதி கர்ணன் லஞ்சம் வாங்கி விட்டுத்தான், வைகுண்டராஜனை கனிமக் கொள்ளை அடிக்க வைத்தாரா என்பதற்கான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை.   வரும் திங்கட்கிழமை முதல் 7 ஜுலை முதல், நீதிபதிகளுக்கான பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.   நீதிபதி கர்ணன் இதுவரை கவனித்து வந்த கனிமவளம் தொடர்பான வழக்குகளை கவனிக்க, நீதிபதி பி.ராஜேந்திரன் இனி கவனிப்பார்.

உடனே, வைகுண்டராஜன் வழக்கில் நியாயம் நடக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.   கனிமவளத்துறையே கர்ணன் நீதிமன்றத்திலிருந்து மாற்றப்பட்டாலும், வைகுண்டராஜன் வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பு என்று பட்டியலிடப்பட்டுள்ளது. போர்ட்ஃபோலியோ மாற்றப்பட்டாலும் ஒரு நீதிபதி இதற்கு முன் விசாரித்த வழக்கில் தீர்ப்பு எப்போது சொல்வார்கள் என்றால், மொத்த வாதப் பிரதிவாதங்களும் முடிந்த பிறகு, இரு தரப்பும் பதில் மனு தாக்கல் செய்த பிறகே தீர்ப்பு சொல்வார்கள்.

aiu

திங்கட்கிழமை நீதிபதி கர்ணன் அவர்களின் வழக்கு பட்டியல்

ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்த வழக்கில் மத்திய அரசு இது வரை பதில் மனுவே தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில் எப்படி திங்கட்கிழமை தீர்ப்பு சொல்லப் போகிறார் நீதிநாயகர் கர்ணன் ? இப்படி தனிப்பட்ட முறையில் வைகுண்டராஜன் வழக்கில் ஆர்வம் காட்ட வேண்டிய அவசியம் என்ன ?   இப்படி சம்பந்தம் இல்லாமல், சட்டவிரோதமாக ஒரு வழக்கில் கர்ணன் தீர்ப்பளிப்பதை, தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி ஏன் அனுமதிக்கிறார்…. ?

இதையெல்லாம் உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

சவுக்கு தளத்தை தடை செய்ய நீதிமன்றங்கள் ஏன் துடிதுடிக்கின்றன என்பது இப்போது புரிகிறதா ?
http://newsavukku.com/6791

ஸ் பெ

unread,
Jul 9, 2014, 2:23:10 PM7/9/14
to panbudan

திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்.

JULY 8, 2014 BY SAVUKKU 9 COMMENTS

சவுக்கில் “எத்தனை கோடி கொடுத்தாய் வைகுண்டராஜா ?” என்ற கட்டுரை வந்ததும், திங்கட்கிழமை இந்த வழக்கை, தனது போர்ட்ஃபோலியோ மாறினாலும் நீதிபதி கர்ணனே விசாரிக்கப் போகிறார் என்ற தகவலும் பதிவிட்டிருந்த பின்னாலும், தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

vaikundarajan (2)

இத்தனைக்கும், வெள்ளி அன்றே, மனித உரிமை பாதுகாப்பு நடுவம் சார்பாக, அதன் வழக்கறிஞர் மீனாட்சியை ஏகவனசத்தில் பேசி, அவமானப்படுத்திய விவகாரம் அத்தனையும் தலைமை நீதிபதியிடம் மனுவாக தரப்பட்டு, இந்த வழக்கை நீதிபதி கர்ணனிடம் இருந்து வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டிருந்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

திங்களன்று காலை 11 மணிக்கு சாவகாசமாக வந்தார் கர்ணன்.   வந்ததும், மத்திய அரசு வழக்கறிஞரைப் பார்த்து, பதில் மனு தயாரா என்று கேட்டார்.   அவர், பதில் மனுவின் ஒரு பக்கத்தில் மட்டும் அதிகாரி தவறாக கையெழுத்திட்டிருக்கிறார்.    இரண்டு நாள் அவகாசம் கொடுத்தால், அனைத்து பக்கங்களிலும் கையொப்பம் பெற்று வருகிறேன் என்றார்.

வெகுண்டெழுந்தார் கர்ணன்.   இதெல்லாம் ஒரு காரணமா ?   நீங்கள் ஏன் பதில் மனு தாக்கல் செய்வதில் தாமதம் செய்கிறீர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன்.    திங்கட்கிழமை, வேறு நீதிபதி வருவார், அவரிடம் தாக்கல் செய்யலாம் என்றுதானே உங்கள் திட்டம் ?  அது நடக்காது.   நான்தான் இந்த வழக்கை விசாரிப்பேன் என்று கூறி விட்டு, வைகுண்டராஜனின் வழக்கறிஞர் சுந்தரேசனை வாதிடச் சொன்னார்.

IMG_2197

அப்போது வழக்கில் சேர்த்துக் கொள்வதற்காக மனித உரிமை பாதுகாப்பு நடுவத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்காக சங்கரசுப்பு ஆஜரானார்.  எங்களது மனுவை படியுங்கள் என்று கூறியதும், நீதிபதி கர்ணன் கடும் கோபமடைந்தார்.  எந்த முகாந்திரத்தில் இந்த வழக்கில் சேர்கிறீர்கள் ?  மனுதாரருக்கம் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம் என்று கோபத்தோடு கேட்டார்.  மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார்.   மனுதாரர் உண்மை அறியும் குழு அமைத்து, பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்.  அந்தப் பகுதியின் சுற்றுச் சூழலே கடுமையான சேதமடைந்துள்ளது என்றார்.

உடனே வைகுண்டராஜனின் வழக்கறிஞர் சுந்தரேசன், இது இந்த மனுவின் வரையறைக்கு அப்பாற்பட்டது என்று கூறினார்.   ஆனால், மத்திய அரசின் அனுமதி ரத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தந்திரமாக மாநில அரசின் தடையை நீக்கியது மனுவின் வரம்புக்குள் வருமா வராதா என்பதை வசதியாக குறிப்பிட சுந்தரேசன் மறுத்து விட்டார்.

உடனே சங்கரசுப்பு, மனுவின் வரையரைக்குள் வருமா வராதா என்ற கேள்வியே இங்கு எழவில்லை.   ஒரு மாநில அரசு சட்டவிரோதமாக கனிமவளங்கள் அள்ளப்படுகின்றன என்ற அடிப்படையில் ஒரு ஆய்வை நடத்தி, அந்த ஆய்வின் அடிப்படையில், கனிமம் அள்ளுவதை தடை செய்துள்ளது.    அந்தத் தடையை விலக்கி, கனிமங்களை அள்ளுவதை இந்த நீதிமன்றம் அனுமதிப்பதன் மூலம், கனிமக் கொள்ளையர்களுக்கு இந்த நீதிமன்றம் உதவி செய்வதாக ஆகும் என்றார்.

வந்ததே கோபம் கர்ணனுக்கு.  இனி நான் இந்த வழக்கை விசாரிக்கப் போவதில்லை என்று எழுந்து விட்டார் என்று நினைக்காதீர்கள். உடனே தன்னுடைய சுருக்கெழுத்தரை அழைத்தார்.   என்ன துணிச்சல் உங்களுக்கு ?  நான் கனிமக் கொள்ளையர்களோடு தொடர்பில் இருக்கிறேன் என்று சொல்ல ? இப்போதே உடனடியாக நான் அவர்கள் கேட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உத்தரவி இட்டு விடுவேன்.   என்னுடைய அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது.

இப்படி சொன்னதும், சங்கரசுப்பு, மனுதாரரின் வாதத்தை கேட்க முடியாது என்று சொல்ல நீதிமன்றத்துக்கு உரிமை கிடையாது.  நான் கனிமக் கொள்ளையர்களுக்கு நீதிமன்றம் துணை போகிறது என்று சொல்லவில்லை.   நீதிமன்றம் துணை போய் விடக் கூடாதே என்று தான் சொன்னேன்.

உடனே நீதிபதி கர்ணன் எதற்கெடுத்தாலும் இப்படி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டே இருந்தால் எப்படி ?  கூடங்குளம் அணு உலைக்கு கூடத்தான் எதிர்ப்பு இருக்கிறது. அதற்காக அதை மூடி விடலாமா என்று கேட்டார். உடனே சங்கரசுப்பு, கூடங்குளம் அணு உலையை நடத்துவது அரசு.  இது தனிநபர் அடிக்கும் கொள்ளை.   இந்தக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம் என்றார்.

வைகுண்டராஜனால் அரசாங்கத்துக்கு எத்தனை வரி வருவாய் வருகிறது தெரியுமா ?  (அரசுக்கு வருமானமா ? அல்லது…….. ) அப்படிப்பட்டவர்கள் தொழில் செய்வதால்தான் அரசுக்கு வரி வருவாய் வருகிறது.  அப்படிப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் தொழில் எப்படி நடக்கும் என்றார்.  சங்கரசுப்புவோ, இந்தியாவில் வரியே செலுத்தாத தலித்துகள் மற்றும் பழங்குடியின மக்கள் 30 கோடிக்கு மேல் இருக்கிறார்கள். அவர்கள் வரி செலுத்தவில்லை என்பதற்காக அவர்களை கொன்று விடலாமா என்று கேட்டார்.  உடனே கர்ணன், தொழில் வளத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

தொழில் வளம் என்பது, சுற்றுச் சூழலை அழித்து வளர்ந்தால் அதை எதிர்க்க வேண்டியது எங்களது கடமை.  இந்த கனிமக் கொள்ளையின் காரணமாக அந்தப் பகுதியில் கடலே சிவப்பு நிறமாகி விட்டிருக்கிறது.   நாங்கள் தயாரித்த உண்மை அறியும் குழு அறிக்கையைப் பாருங்கள்.  அதில் பலர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.   பலருக்கு தோல் வியாதியும், கேன்சர் போன்ற நோய்களும் வந்திருக்கின்றன என்றார்.   கேன்சர் வந்தது என்பதற்கான ஆதாரம் எங்கே…… ?  மருத்துவ சான்றிதழ் எங்கே என்று கேட்டார் கர்ணன். உடனே பார்த்தசாரதி என்ற வழக்கறிஞர் எழுந்து, அந்தப் பகுதியில் உள்ள 10 ஆயிரம் பேர்களையும் மனுத்தாக்கல் செய்யச் சொல்கிறேன் இந்த கனிமக் கொள்ளையால் எத்தனை பாதிப்பு என்று எனக் கூறினார்.

165994_283330635097397_266382818_n

வழக்கறிஞர் பார்த்தசாரதி

மீண்டும் கோபம் வந்தது கர்ணனுக்கு.  என்ன செய்வீர்கள் ?  என்னைப் பற்றி நோட்டீஸ் போடுவீர்கள் அவ்வளவுதானே. என்னுடைய சர்வீஸில் எத்தனையோ பார்த்து விட்டேன்.   இதெல்லாம் எனக்கு சாதாரணம்.   நான் இதற்கெல்லாம் பயப்படுபவன் அல்ல.    நான் ஒரு அரசியல் அமைப்புச் சட்ட அதிகாரி.  என்னுடைய அதிகாரம் மிகப் பெரியது.   இதற்கெல்லாம் அசரும் நபர் நான் அல்ல என்று சகட்டு மேனிக்கு கத்தினார்.

வழக்கமாக ஒரு மணிக்கே எழுந்து சென்று விடுவார் நீதியரசர்.  இன்று காலை 11.30 முதல் 1.30 வரை அமர்ந்து இந்த வழக்கில் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தார்.   மதியம் ஆனதும், மீண்டும் இந்த வழக்கில் வாதங்கள் மதியம் தொடரும் என்றார்.

மனித உரிமை பாதுகாப்பு நடுவ வழக்கறிஞர்கள் மற்ற வேலையை எல்லாம் விட்டு விட்டு, 2.30 மணி முதல் நீதிமன்றத்தில் காத்திருந்தனர்.   இந்த வழக்கை எடுப்பார் என்று பார்த்தால், கர்ணன் இதைத் தவிர மற்ற வழக்குகளையெல்லாம் எடுத்து விசாரித்துக் கொண்டிருந்தார்.   மாலை ஆனதும், அந்த வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் என்று கூறினார். இந்த விஷயம் தெரியாத மனித உரிமை பாதுகாப்பு நடுவ வழக்கறிஞர்கள் 2.30 மணி முதல் தொடர்ந்து காத்திருந்தனர்.  ஆனால், வைகுண்டராஜனின் வழக்கறிஞர் சுந்தரேசனுக்கு இந்தத் தகவல் முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அவர் நீதிமன்றத்துக்கு மதியம் வரவேயில்லை.

வைகுண்டராஜன் அதிகமாக வரி கட்டுகிறார் என்று நீதிபதி கர்ணன் கவலைப்படுகிறார் என்றால் எந்த அளவுக்கு நாட்டின் சட்டத்தை விட, வைகுண்டராஜன் மீது அக்கறை கொண்டிருக்கிறார் என்று பாருங்கள்.

வி.வி.மினரெல் நிறுவனம் தங்கள் இணையதளத்தில் இந்தத் தாதுப் பொருட்களைப் பற்றி எப்படி குறிப்பிடுகிறது பாருங்கள்.

download

V.V. Mineral (VVM) is India’s largest Mining, Manufacturer and Exporter of Garnet & Ilmenite. At the global level, we are poised to rise above our number two position. VVM is the first private ILMENITE Exporter in India. Established in 1989, we have achieved significant market share in Europe, Middle East, East Asia, Australia and USA.

We owe our success to our primary objective -Customer Delight and Satisfaction – providing the best quality of Garnet, Ilmenite, Rutile and Zircon in lesser lead times at globally competitive prices.

வைகுண்டராஜன் கிட்டத்தட்ட இந்தத் தொழிலின் ஏகபோக முதலாளியாக இருக்கிறார்.    கார்னெட் மாஃபியாவின் ஒரே தலைவராக திகழ்கிறார் வைகுண்டராஜன்.  இவரது வலையில் விழாத பத்திரிக்கையாளர்களோ, அரசு ஊழியர்களோ, வழக்கறிஞர்களோ, நீதிபதிகளோ ஏறக்குறைய இல்லை என்றும் அளவுக்கு தமிழகத்தில் ஒரு தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.   இவருக்கு எதிராக எழுதினால், எழுதும் நபரை எப்படியாவது விலை கொடுத்து வாங்குவது, அல்லது மிரட்டுவது இதுதான் இவரது வாடிக்கை.   சமீபத்தில் கூட சவுக்கின் புகைப்படத்தைக் கேட்டு அலைந்துள்ளனர்.

இப்படி சுற்றுச் சூழலை கொள்ளையடித்து, மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்து, கோடி கோடியாக லாபம் சம்பாதித்து, அந்தப் பணத்தில்தான் தற்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியை விட, மிகச் சிறந்த தொழில்நுட்பத்தில் (Ultra High Definition) தொலைக்காட்சி செய்தி சேனல் தொடங்க உள்ளார்கள்.  தொலைக்காட்சி சேனல் தொடங்கினால், புதிய தலைமுறையின் பச்சமுத்து அடிக்கும் கல்விக் கொள்ளையை யாருமே கண்டு கொள்ளாதது போல, க்ரானைட் கொள்ளையையும் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் அல்லவா ?   ஊடக பலத்தை வைத்து மிரட்டலாம் அல்லவா ? நாங்கள் சுற்றுச் சூழலின் ஒரே பாதுகாவலர்கள் என்று சொல்லலாம் அல்லவா ?

சூழலை நாசம் செய்துவிட்டு, வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியம் உலக தண்ணீர் தினத்தைக் கொண்டாடுவதைப் பாருங்கள்.   சாத்தானின் வேதம் என்பது இதுதான்.

water-day

உலக தண்ணீர் தினம் கொண்டாடும் வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியம்

இணையதளத்தையும் தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு க்ரானைட் கொள்ளைக்கு தடை விதித்த பிறகு, http://vvmineral.wordpress.com/ என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் வைகுண்டராஜன், விவி மினரெல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு முழு நேர சொம்படிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதற்காகத்தான் இந்தப் புதிய செய்திச் சேனல்.   செய்திச் சேனலின் நிர்வாகத்தையும் முழுமையாக கவனிப்பதற்கு, தொழில் நேர்த்தியான நபர்கள் நியமிக்கப்படாமல், வைகுண்டராஜனுக்கு “நெருக்கமான”  பெண்மணி என்று கருதப்படும் சுப்புலட்சுமி என்ற பெண்மணியிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.   செப்டம்பர் முதல் இத்தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்க உள்ளது.

சூழலைப் பாழாக்கி, அந்தப் பகுதியையே சூறையாடி, அரசு அதிகாரிகளை  நுழைய விடாமல், அனைவரையும் மிரட்டி, ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கும் வைகுண்டராஜனுக்கு நீதிமன்றங்கள் எப்படி துணை போகின்றன பார்த்தீர்களா ?  வைகுண்டராஜனுக்கு எதிராக ஒரு கட்டுரையைக் கூட எந்த ஊடகத்திலும் வெளியிட முடியாத ஒரு மோசமான சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.

தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கும் நீதி நாயகர் கர்ணண் என்ன தீர்ப்பு வழங்குகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஸ் பெ

unread,
Aug 23, 2014, 4:11:14 AM8/23/14
to panbudan

வணக்கம் வைகுண்டராஜன்!

சமஸ்
COMMENT (65)   ·   PRINT   ·   T+  

கார் புறப்படுகிறது, உலகின் கனிமச் செழிப்பான கடற்கரைப் பகுதியை நோக்கி. கன்னியாகுமரி மாவட்டத்தின் மிடாலத்தில் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் வரையிலான சுமார் 150 கி.மீ. நீளக் கடற்கரையும் அதை ஒட்டியுள்ள கிராமங்களையும் தொடும் பயணம் இது.

பொதுவாக, இப்படிச் செல்லும்போது பகலில், வரிசையாக ஒவ்வொரு ஊராகச் சென்றுவிட்டு இரவில் திரும்பிவிடுவது வழக்கம். முதல் நாள் விட்ட இடத்திலிருந்து மறுநாள் பயணம் தொடங்கும். இந்தப் பயணத்தைப் பொறுத்த அளவில் வேறு மாதிரி திட்டமிட வேண்டியிருந்தது. முதல் நாள் அனுபவங்கள் அப்படி.

ஏ... யாருப்பா நீயீ?

ஊரில் உள்ளவர்கள்தான் கூப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வந்து உள்ளே அழைத்துச் செல்ல அஞ்சுகிறார்கள். "நீங்க எப்படியாச்சும் வீட்டுக்கு வந்துடுங்க... அங்கென எல்லாரையும் கூட்டி வெச்சிருக்கோம்."

பகலில் ஊருக்குள் நுழைவது அத்தனை எளிதாக இல்லை.

"அண்ணாச்சி, கார் கண்ணாடியை ஏத்திவிட்டு, தலையைக் கொஞ்சம் குனிஞ்சுக்குங்க. அங்கம் மரத்தடியில வண்டியை வெச்சிக்கிட்டு உட்கார்ந்திருக்குப் பாருங்க... அந்த ஆள் கண்ணுல பட்டோம்... தகவல் போயிடும்... அஞ்சு கிலோ மீட்டருக்கு ஒரு ஆள்னு இப்பிடி நிக்கும். ஊருக்குள்ளேயும் சலூன் கடையில, டீக்கடையிலேன்னு பேசிக்கிட்டு இருக்கற மாதிரி உட்கார்ந்திருக்கும். குனிஞ்சிக்கிடுங்க, குனிஞ்சுக்கிடுங்க..."

இப்படியெல்லாம் குனிந்து, மறைந்து சென்றும் பகல் பயணம் வேலைக்கு ஆகவில்லை. "ஐயா, எங்க ஊருல எந்தப் பிரச்சினையும் இல்ல; நீ ஒம் சோலியைப் பாத்துக்கிட்டுப் போய்யா... வெத்து மண்ணை எடுத்து வித்து, பொழப்பு கொடுக்குற மவராசனைப் போட்டுக்கொடுக்க வந்துட்டியளா?"

கூப்பிட்டுச் சென்றவர்கள் கும்பிட்டு, மீனவர்கள் வாழ்க்கைபற்றி எழுத வந்திருப்பதாகவும் மணல் விவகாரத் துக்கும் என் எழுத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லி, அங்கிருந்து திரும்ப அழைத்து வருகிறார்கள்.

"அண்ணாச்சி, இங்கெ எல்லாம் ஒண்ணோட மண்ணா கெடக்கு பாத்துக்கிங்க. அரசு அதிகாரிங்கள்ல ஆரம்பிச்சி ஊருல கொஞ்சம் வாயுள்ளவன் வரைக்கும் எல்லாத்துக்கும் காசு, காசு, காசு... அட, கரண்டு லைனுல எதாச்சும் பிரச்சனைன்னா கூட்டியார்ற லைன்மேனுக்கு கார் சவாரி, பிரியாணி, ஆயிரம் ரூவா ரொக்கம்னா பார்த்துக்குங்க. வாங்குற காசுக்குக் கொஞ்சமாச்சும் கூவணுமில்லா? அதாம் நடக்கி. இப்பிடி வரிச்சிக்கிட்டு வர்றவங்களைப் பார்த்துதான் ஊரே பயந்து கெடக்கு. போலீஸு கீலீஸு எல்லாம் ஒண்ணும் செல்லாது பார்த்துக்குங்க. மக்க பாவம் என்ன செய்யிம்? நமக்கு எதுக்குடா பொல்லாப்புனு நடுங்கிக் கெடக்கு."

ஆக, இப்போது பயணத் திட்டங்கள் வகுப்பது ஊர் மக்களின் பொறுப்பானது. "அண்ணாச்சி, இருட்டத் தொடங்கையில இங்கெருந்து கார்ல புறப்படுவோம். அங்கன போற வழியில ஒரு எடம் கெடக்கு. அங்கன எறங்கி, காரைத் திருப்பிவுட்டுட்டு, பாலத்தை ஒட்டி ரெண்டு மைல் நடந்தோம்னா, கிராமத்தைப் பின்னால போய்ச் சேர்ந்துடலாம். ‘......’ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துட்டோம்னா, அங்கன ஊர்ல உள்ள பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும். கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருங்க. பொறவு பொறப்பட்டோம்னா கடக்கரையோட நடக்கலாம்."

இது இந்தியாதானா?

கடற்கரையில், புதர்க்காடுகள் நடுவே புகுந்து இருட்டில் பயணம் தொடங்குகிறது. நிலா வெளிச்சம் மட்டுமே வழிகாட்டி. மண்ணில் கால் வைத்தால் பொதக் பொதக் என்று உள்வாங்குகிறது. தூரத்தில், ராட்சத இயந்திரங்கள் மணலை வாரி வாரி எடுத்து, டிரக்குகளை நிரப்புவதும் டிரக்குகள் வரிசையாகச் செல்வதும் தெரிகிறது. அலை சத்தத்தைத் தாண்டி மடேர் மடேர் என இயந்திரங்களின் சத்தம் காதை அறைகிறது. பெரியவர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. "ஒரே பாதையில போவாதீய. குறுக்க மறுக்க நடந்து கடந்து கொழப்பிவிட்டுப் போங்க. கால் தடம் காட்டிக்கொடுத்துடும்..."

கொஞ்ச தூரம் நடந்து கடக்க, எனக்கு சத்தீஸ்கர் பயண ஞாபகம் வந்தது. ‘இந்தியாவின் வண்ணங்கள்' தொடருக்காகச் சென்றிருந்தபோது அங்கே இதே போன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன். ஒருபுறம் சுரங்கங்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்கள் சூறையாடிக் கொண்டிருக்கும் பகுதியில், நாம் கால் வைக்கவே முடியாது.

இன்னொருபுறம் மாவோயிஸ்ட்டுகள் பகுதியிலும் வெளியாட்கள் சாமானியமாக நுழைய முடியாது. இங்கெல் லாம் காவல் துறை, நிர்வாகம் எல்லாம் ஒரு பெயருக்குத்தான். வல்லான் வகுத்ததே வாய்க்கால்.

தனி சாம்ராஜ்ஜியம்

நம் சமூகம் எந்த அளவுக்குக் கனிம மணல் விவகாரத் தையும் இந்தப் பகுதிகளில் நிலவும் சூழலையும் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை. உள்ளபடி இது ஒரு தனி சாம்ராஜ்ஜியம். ஒரு தனிமனிதன் உருவாக்கியிருக்கும் சாம்ராஜ்ஜியம். இன்றைக்குத் தென் தமிழகக் கடற்கரை முழுக்க அந்த மனிதரின் பெயரைத்தான் உச்சரிக்கிறது: வைகுண்டராஜன்.

ஒரு பெயரின் சக்தி

தமிழகக் கடற்கரையில் வைகுண்ட ராஜன் என்கிற பெயருக்கும் அவர் பிடியின் கீழ் இருக்கும் பகுதிக்கும் சர்வதேச அளவில் இன்றைக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன? அவருடைய ‘விவி மினரல்ஸ்' நிறுவனத்தின் இணைய தளம் சொல் லும் தகவல்கள் இவை:

"உலகில் அதிகமான கனிமப் பொருட்களும் மணலும் இந்தியாவில் கிடைக்கின்றன. உலகமெங்கும் கிடைக்கும் 46 கோடி டன் வள ஆதாரங் களில், இந்தியாவின் பங்கு 27.8 கோடி டன்கள். இவற்றில் உலகத் தரம் கொண்ட கனரக கனிமங்கள் 20 முதல் 30% இருப்பதாகவும் கணக்கிடப் பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கொடை

இந்தியாவிலேயே, 15 கி.மீ. நீள கடற்கரைப் பகுதியைக் கொண்டு அமைந்த ஒரே நிறுவனமான வி.வி.மினரல்ஸ், 40 ஆண்டுகள் சுரங்கக் குத்தகையின் கீழ் செயல்படுகிறது. மன்னார் வளைகுடாவின் நிலவியல் பண்புகள், தொடர்ந்து வீசும் அலை கள் மற்றும் கடற்கரை அமைப்பு ஆகியவற்றின் காரணமாக கார்னெட், இல்மனைட், ருடைல் மற்றும் ஜிர்கான் போன்ற கனிமப் பொருட்கள் அதிக அளவில் கிடைக்கும் பகுதியாக இது உள்ளது.

குறி: உலகின் முதலிடம்

இந்தியாவின் மிகப் பெரிய சுரங்க நிறுவனமான வி.வி. மினரல்ஸ் நிறுவனம், கார்னைட் மற்றும் இல்மனைட் கனிமங்களின் உற்பத்தி, ஏற்றுமதியிலும் முன்னணி நிறுவனம். உலக அளவில், இரண்டாம் இடத்தில் உள்ள எங்கள் நிறுவனம் மேலும் உயர்ந்த இடத்துக்குச் செல்வதில் முனைப்புடன் உள்ளது. இந்தியாவில் இல்மனைட் ஏற்றுமதி செய்யும் முதல் தனியார் நிறுவனம் வி.வி.எம். மேலும், நாட்டிலேயே, இல்மனைட் சுரங்கப் பணிகள் மற்றும் ஏற்றுமதிக்கான அங்கீகரிக்கப்பட்ட உரிமம் பெற்ற முதல் தனியார் நிறுவனமும் இதுதான்.

ராட்சத பலம்

வி.வி.எம். நிறுவனத்தில், வெட்டியெடுக்கப்பட்ட தாதுக் களைத் தரப்படுத்த, சுரங்கப் பகுதிகளுக்கு அருகிலேயே ஐந்து ஈர ஆலைகளும் ஆறு உலர் ஆலைகளும் அமைக் கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் எரீஸ், ரோடெக்ஸ் ஸ்க்ரீன்ஸ், ஆஸ்திரேலியாவின் லினெடெக்ஸ், கோரோனா ஸ்டாட், ஜெர்மனியின் மினாக்ஸ் நிறுவனங்களிலிருந்து தருவிக்கப்பட்ட இயந்திரங்கள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரச் சாதனங்கள், மாதம் ஒன்றுக்கு 14,000 மெட்ரிக் டன் கார்னெட், 20,000 மெட்ரிக் டன் இல்மனைட், 1000 மெட்ரிக் டன் ஜிக்ரான், 500 மெட்ரிக் டன் ருடைல் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப வெவ்வேறு வகையான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ட்ரக்குகள், டிப்பர்கள், புல்டோசர்கள் மற்றும் ட்ரெய்லர் வண்டிகள் யாவும் சொந்தமாக உள்ளன. இவை, கச்சாப் பொருட்களையும், உற்பத்திப் பொருட்களையும் குறித்த நேரத்தில் கொண்டுசெல்கின்றன.

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 5 கி.மீ. தொலைவுக் குள், கனிமப் பொருட்களை மிகப் பெரிய அளவில் சேமித்துவைக்கும் மூன்று பெரிய சேமிப்புக் கிடங்குகளையும் வி.வி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. சுமார் 3,00,000 முதல் 4,50,000 மெட்ரிக் டன் வரை கனரக கனிமப் பொருட்களை இந்தக் கிடங்குகளில் வைத்திருக்க முடியும்.

இலக்குகள்

ஆண்டுக்கு 1,50,000 மெட்ரிக் டன் கார்னெட் கற்கள் மற்றும் 2,25,000 மெட்ரிக் டன் இல்மினைட் ஆகியவற்றை, வி.வி.எம். நிறுவனம் உற்பத்திசெய்கிறது.

தூத்துக்குடி துறைமுகத்தில் முதன்முதலாக ஒரேநாளில் 4,700 மெட்ரிக் டன் இல்மினைட் கனிமத்தை ஏற்றுமதி செய்த நிறுவனம் வி.வி.எம். முந்தைய சாதனையை விட 60% அதிகம் இது. எதிர்காலத்தில், இதுபோன்ற சாதனைகளை இன்னும் அதிவேகத்தில் வி.வி.எம். நிறுவனம் இரட்டிப்பாக்கும்!"

இணையதளத்திலுள்ள இந்த ஒவ்வொரு வார்த்தைகளைப் படிக்கும்போதும் இருளில் கடலும், ராட்சச இயந்திரங்களின் ‘மடார் மடார்' சத்தமும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

(அலைகள் தழுவும்…)

-சமஸ், தொடர்புக்கு: sa...@thehindutamil.co.in

ஸ் பெ

unread,
Oct 9, 2014, 2:48:35 PM10/9/14
to panbudan

ஸ் பெ

unread,
Oct 14, 2014, 1:53:00 AM10/14/14
to panbudan


ஸ் பெ

unread,
Dec 4, 2014, 4:08:45 AM12/4/14
to panbudan

துவங்கியது வைகுண்டராஜனுக்கு எதிரான மக்கள் எழுச்சி

தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத் தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ் என்ற அதிகாரிக்கு தனது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி லஞ்சமாக வழங்கியுள்ளார் வைகுண்டராஜன்.

சுப்பையா அய்.ஏ.எஸ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர். சுப்பையாவின் தாயார் ஜானகியின் பெயரில் காரியாபட்டியில் ஒரு நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமியான சில லட்ச ரூபாய் மதிப்பேயுள்ள இந்த நிலத்தை சந்தை விலையை விட பல கோடி ரூபாய் அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் வைகுண்டராஜனும், அவரது அண்ணன் ஜெகதீசனும்.

வைகுண்டராஜனை கைது செய்

மிகவும் நூதனமாக நடந்த இந்த ஊழலுக்கு RC MAI 2012 A 0055-என்ற வழக்கு எண்ணில் 120-B IPC r/w 13(2) r/w 13(1)(e) of PC act 1988-ன் படி கடந்த 24.12.2012-ல் சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது. கடந்த 17.10.2014 அன்று சுப்பையாவின் சகோதரர் ஜெயராமன் சி.பி.அய்-ஆல் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார் வைகுண்டராஜன். மேற்படி முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது தலைமறைவாகியுள்ளார் வைகுண்டராஜன்.

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் கடந்த 20 வருடங்களாக நடத்திவரும் தாது மணல் கொள்ளையானது கனிம வளச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் கீழ் குற்றமாகும். குறிப்பாக அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோனோசைட்டில்தான் அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் தோரியம் உள்ளது. தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும்.

போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்குப் போடும் தமிழக அரசு வைகுண்டராஜனை இன்றுவரை பாதுகாத்து வருகிறது. கேரளாவிலும் தாது மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் மீது கேரள அரசின் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக அரசு கடந்த ஆகஸ்ட், 2013 முதல் தாதுமணல் அள்ளத் தடை விதித்தது. ஆனால் அதன்பின்பும் சுமார் நான்கு லட்சம் டன் தாது மணலை ஏற்றுமதி செய்துள்ளார் வைகுண்டராஜன்.

வைகுண்டராஜனை கைது செய்

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தாது மணல் ஏற்றுமதி அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் மூலமே நடைபெற்று வருகிறது. இதில் சட்டவிரோதமாக தோரியம் அனுப்பப்பட்டதும் உள்ளடங்கும். வைகுண்டராஜனின் மேற்படி சட்டவிரோத செயல்களுக்கு தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்து வருகிறார்கள்.

எழுத்துபூர்வ ஆவணங்கள் இருந்ததால் சி.பி.அய் வசம் மாட்டிக் கொண்டவர்தான் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ். தனது சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி ரூபாய் லஞ்சமாக சுப்பையாவிற்கு வழங்கியுள்ளார் வைகுண்டராஜன். இவ்வழக்கில் தற்போது மதுரை உயர்நீதிமன்றம் வைகுண்டராஜனின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த பின் வைகுண்டராஜனைக் கைது செய்ய சி.பி.அய் தனிப்படை அமைத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால் சி.பி.அய் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கவில்லை.

வைகுண்டராஜனை கைது செய்

வைகுண்டராஜன் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த நபர் அல்ல. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நடத்தி வருபவர். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி. புதிதாக தொலைக்காட்சி சேனல் கூட தொடங்கி இருப்பவர். இப்படிப்பட்ட நபர் தலைமறைவானார் என்று சொல்வது மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகவே வைகுண்டராஜன் தலைமறைவு உண்மை எனில்,

  • அவரை விசாரணைக்கு ஒத்துழைக்காத தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என சி.பி.அய் அறிவிக்க வேண்டும்.
  • வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் வைகுண்டராஜன் குடும்ப சொத்துக்களை முடக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • வைகுண்டராஜனின் தொலைக்காட்சி நிறுவனத்தை சீல் வைக்க வேண்டும்.

சி.பி.அய் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைகுண்டராஜன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களை அணுகியுள்ளதாக மக்கள் பேசுகிறார்கள். ஏற்கனவே ”மக்களின்” முதல்வரும், பினாமி முதல்வரும் வைகுண்டராஜனைப் பாதுகாத்து வருகிறார்கள்.

hrpc-demo-demanding-vaikundarajan-arrest-18

ஆகவே,

  • மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் இப்பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.
  • மத்திய அரசு நேர்மையாகச் செயல்படுகின்றதெனில் வைகுண்டராஜனை உடனே கைது செய்து, அவரது சொத்துக்களை முடக்க வேண்டும்.
  • இந்த லஞ்ச வழக்கோடு வைகுண்டராஜன் கடந்த 20 ஆண்டுகளாய் நிகழ்த்தி வந்துள்ள அனைத்துக் குற்றங்களையும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.
  • தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியிலிருந்த அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
  • குறிப்பாக கடந்த ஆகஸ்ட்,2013-ல் தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்து இன்றுவரை மேற்படி தடை அமலில் உள்ளது.ஆனால் தடைக் காலத்திலும் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தூத்துக்குடி துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த ஊழல் குறித்தும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.

- மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்காக வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதி, அரிராகவன், இராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.

தூத்துக்குடி துறைமுக கழகத்தலைவருக்கு 71/2 கோடி லஞ்சம்!
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு!
சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!

என்ற தலைப்பில்29.11.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துகுடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம். 10 நாட்களுக்கு முன்பே வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி மூன்று மாவட்டங்களிலும் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டது.

வைகுண்டராஜனை கைது செய்

கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் கொண்டுசெல்லப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டில் தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்றுள்ள கடலோர கிராமங்களான வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை மற்றும் அணு உலைக்கு எதிராக உறுதியாக போராடிவரும் இடிந்தகரை, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அங்குள்ள ஊர்க்கமிட்டிகளை சந்தித்தும், பாதிரியார்களை சந்தித்தும், களப்போராளிகளை சந்தித்தும் வைகுண்டராஜன் தலைமறைவு என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டு வரும் – தமிழக அரசு நாடகமாடிவரும் – தற்போதுள்ள சூழலை விளக்கி, உடனே எதிர்வினையாற்ற வேண்டிய கடமையை முன்வைத்தோம். அனைவரும் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் உத்தரவாதம் தந்தனர்.

அதேபோல் தூத்துக்குடியிலுள்ள விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களையும், பிற அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களையும் தொடர்பு கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம்..

வைகுண்டராஜனை கைது செய்

சனிக்கிழமை காலை 10.30 அளவில் ஒவ்வொறு பகுதியிலிருந்தும் வந்து அணிவகுத்தனர். அதில் வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களிலிருந்தும், இடிந்தகரை, கூடங்குளத்திலிருந்து பெண்கள் குழந்தைகளும்,  கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேனரை பிடித்து நிற்க, வந்திருந்தவர்கள் முழக்க அட்டைகளை உயர்த்திப்பிடிக்க அனைவரின் பார்வையையும் ஈர்க்கும்படி அணிவரிசை அமைந்தது. புரட்சிகர பாடல்களை 30 நிமிடம் ஒலிக்கவிட்டு சரியாக 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

கீழவைப்பார் மீனவர்கள் 10.00 மணிக்கே வந்துசேர்ந்தனர். வேம்பாரும், இடிந்தகரையும் தூத்துக்குடிக்கு இருவேறு எல்லைகளில் வடக்கு, தெற்கில் உள்ளது. குறிப்பாக சுமார் 100 கி.மீ தள்ளியுள்ள இடிந்தகரை கிராமத்திலிருந்து அதிகாலையில் அணிதிரண்டு புறப்பட்டு ஆர்ப்பட்டம் தொடங்கியவுடன் வந்து இணைந்தனர்.

நமக்கு முன்பாக இந்த அரசு தன் காவல்துறையை சீருடையிலும், சீருடை இல்லாமலும் களமிறக்கி வைகுண்டனுக்கு தொண்டூழியம் செய்ய முனைப்பு காட்டியது.

வைகுண்டராஜனை கைது செய்

ஆர்ப்பாட்டத்திற்கு சிவராச பூபதி (வழக்கறிஞர்) – செயலர் – மனித உரிமை பாதுகாப்பு மையம், குமரி மாவட்டம் – தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், “நாங்கள் வைகுண்டராஜனை கைது செய்யுமாறு மட்டுமல்ல கனிமவளக் கொள்ளையர்கள் அனைவருக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்று பதிவு செய்தார்.

“கடந்த ஆண்டுகளில் மீனவ இடிந்தகரையும், விவசாய கூடங்குளமும் அதாவது பரதவர்களும் நாடார்களும் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டனர்” என்று விளக்கினார். “அணு உலையை எதிர்த்து போராடும் மீனவர்கள்மீது கடலோரத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதை பார்த்த கூடங்குளம் நாடார் சாதியினர் உடனே தமது ஊரில் சாலையை மறித்து படைகளை முடக்கினர்; ரத்தமும் சிந்தினர்” என்பதையும், “அணு உலைக்கு எதிரான போராட்டம் போன்று தொடர்ந்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக போராடினால் மட்டுமே கனிமக்கொள்ளைக்கு முடிவுகட்ட முடியும்” என்றும் உரையாற்றி நிகழ்ச்சியை தலைமைதாங்கி நடத்தினார்.

அடுத்ததாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. விண்ணதிர முழக்கங்களை எழுப்பிய தோழர்கள் இந்த அரசு செய்யத்தவறியதை காட்சி வடிவில் தாம் செய்தனர். அதாவது வைகுண்டராஜனை (முகமூடி அணிவிக்கப்பட்ட தோழரை) கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர். இது மக்களின் கவனத்தை ஈர்த்து, சிந்திக்கத் தூண்டியது.

வைகுண்டராஜனை கைது செய்

அப்பொழுது காவல்துறை முகத்துக்கு அருகில் கேமராவை கொண்டுவந்து பதிவு செய்த்து அச்சுறுத்தவும், மக்களின் பார்வையை கெடுக்கும் விதமாக குறுக்கில் மறிக்கவும் முயன்றது. இது போராட்டத்தில் நின்றவர்களை கொதிக்க வைத்தது. முழக்கங்கள் குறிப்பாக காவல்துறையின் ‘மாமா’ வேலைக்கானதை அம்பலப்படுத்துவதாக வீச்சுடன் வெளிப்பட்டது.

தொடர்ந்து வேம்பார், பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த எழிலன் “சட்டம் அனைவருக்கும் சமம், அனைவரையும் பாதுகாக்கிறது என்பதால்தான் வைகுண்டராஜனையும் பாதுகாக்கிறது போல” என்று அரசின் ஆளும் வர்க்க விசுவாசத்தை சாடினார்.

hrpc-demo-demanding-vaikundarajan-arrest-07

கீழவைப்பாரை சேர்ந்த சார்லஸ் “எங்கள் ஊரில் நாங்கள் ஓடி விளையாடிய கடற்கரை இன்று இல்லை. கடலுக்குள் போய்விட்டது. தொடர்ந்து மணல் அள்ளினால் ஊருக்குள்ளும் கடல் புகும். மணல் கம்பெனியில் மலைபோல மணலை குவித்துவைத்துள்ளனர். இக்கம்பெனிகளை விரட்டியடித்தாக வேண்டும்” என்று அபாயத்தை விளக்கினார்.

hrpc-demo-demanding-vaikundarajan-arrest-06

அரி ராகவன் (வழக்கறிஞர்) – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்ட தலைவர் – பேசும்போது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ‘நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை இயங்கும். எதிர்த்தால் வழக்கு’ என்று சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய இதே அரசு இப்பொழுது லஞ்சம் தந்து கையும் களவுமாக மாட்டிய வைகுண்டராஜனை கைது செய்யவில்லையே அது ஏன்?” என்றும், லஞ்சம் வாங்குவதில் கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை கையாளும் வழிமுறைகளையும் இதில் வெளிப்படும் தனித்திறமைகளையும் அம்பலப்படுத்தினார்.

ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சண்முகவேல் பேசும்போது “மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் அனைத்து போரட்டங்களிலும் நாங்கள் உடன் இருப்போம்” என்று பதிவு செய்தார்.

ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சண்முகவேல்

வாஞ்சிநாதன் (வழக்கறிஞர்) –HRPC மதுரை மாவட்ட துணைச்செயலர் – பேசியபோது வைகுண்டராஜனின் கையாட்கள் எப்படி தம்மை பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டனர் என்பதையும் “நீங்கள் விலகிக்கொள்ள எத்தனை கோடி வேண்டும்” என்று விலைபேசியதையும் குறிப்பிட்டு “எத்தனை கோடி கொடுத்தாலும் விலைபோகாத ஆட்கள் நாட்டில் உள்ளனர் என்று இன்றாவது பார்த்துக்கொள்” என்று பதிவு செய்தார்.

வாஞ்சிநாதன் (வழக்கறிஞர்) –HRPC மதுரை மாவட்ட துணைச்செயலர்

இயற்கை வளம், கனிம வளம் சூறையாடப்படுவதை எதிர்த்து மக்கள் அணிதிரள்வதை தடுக்கும் சூழ்ச்சியாக வைகுண்டராஜனை நாடார் சாதியினரின் பிரதிநிதியாக முன்னிருத்த முயன்றனர் சிலர். ஆனால் எங்கள் பிரச்சாரத்தின்போது இதே தூத்துக்குடி மார்க்கெட்டில் கடுமையாக உழைத்து வாழும் வணிகர்கள் நிதிதந்து வாழ்த்தி தாம் நாட்டை நேசிப்பதை நிரூபித்துள்ளதையும், ஆனால் சில கைக்கூலிகள்தான் நாட்டை சூறையாடிவரும் வைகுண்டராஜனை கடுமையாக உழைத்து தொழில் செய்துவரும் நாடார் சமூகத்தின் பிரதிநியாக முன்னிருத்த முயற்சிப்பதையும் குறிப்பிட்டு சாடினார்.

“ரவுடிகளை ஏவி தாக்குவது பலிக்காது என்பதை உணர்ந்ததால்தான் வைகுண்டராஜன் அடக்கி வாசிக்கிறார். அவர் புத்திசாலி. ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் கலகத்தை தூண்ட முயற்சித்து சூடுபட்டிருக்கிறார் அல்லவா?” என்று ரவுடிகளின் வீரத்தை எள்ளிநகையாடினார். “நாங்கள் அடித்தால் திருப்பியடிப்பவர்கள்” என்று புரட்சிகர போர்க்குணத்தை முன்வைத்தார்.

“யாருக்கு தேவை தாது மணல்? இனியும் இக்கம்பெனிகளை செயல்படவிடலாமா?” என்று கேள்வி எழுப்பி இதற்கு முன்னுதாரணமான வகையில் BMC கம்பெனியை சூறையாடிய பெரியதாழை மக்களின் போர்க்குணத்தை முன்னுதாரணம் என்று குறிப்பிட்டு உயர்த்திப் பிடித்தார். இந்த அரசு தொடுத்துள்ள வழக்குகளை தமது அமைப்பான HRPC எதிர்த்து முறியடிக்க உதவும் என்றார்.

அணு உலையை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்திலும் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தும், தேசத்துரோக வழக்குகளை எதிர்கொண்டும், சிலர் உயிரையே தியாகம் செய்தும் போராடிவருவதை குறிப்பிட்டு, “நாட்டுக்காக போராடும்போது அதிகபட்சம் சிறைக்கு அனுப்பப்படுவோம்தான்; சிறை நம்மை என்ன செய்துவிடும்? அதற்காக நாம் வழக்கிற்கும், இழப்பிற்க்கும் அஞ்சக்கூடாது ; கனிமக்கொள்ளையர்களை தண்டிக்காமல் விட்டுவிடக்கூடாது; நம் ஊரைத்தாண்டி ஒரு மணல் லாரியும் செல்லமுடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்; அதற்கான போராட்ட கமிட்டிகளை அனைத்து கிராமங்களிலும் கட்டியமைப்போம்!” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

இடிந்தகரையை சேர்ந்த திருமதி மேரி பேசும்போது “அணு உலைக்கு எதிராக நாங்கள் பட்டினி கிடந்தும் துன்பங்களை சகித்தும் போராடி வருகிறோம். கடலுக்கு போனாத்தான் எங்களுக்கு பொழப்பு. நாட்டு மக்களுக்காக போராடுனா இந்த அரசு எங்களை தீவிரவாதின்னு சொல்லுது. அமெரிக்காவுல இருந்து காசு வாங்கறாங்கன்னு பழிபோடுது. எங்க புள்ளைங்க வெளிநாட்டிலிருந்து அனுப்பற பணம் இந்த அரசாங்கத்துக்கு தெரிஞ்சுதானே இவிங்க மூலமாத்தானே வருது. இதை எப்படி தப்புங்கறாங்க? நாங்க தப்பாக காசுவாங்குனதா இந்த அரசாலே நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள தயார்” என்று சவால் விட்டார். தமது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்த அரசை எச்சரிக்கும் விதமாக “அணு உலையை மட்டுமல்ல; சிறுநீரகத்தை சிதைக்கும், புற்றுநோயை பரப்பும் தாதுமணல் கம்பெனியை எதிர்த்தும் உறுதியாக போராடுவோம்” என்று முழங்கினார்.

இடிந்தகரை மேரி

இடிந்தகரை மீனவ மக்களின் போர்க்குணத்தை பதியவைத்த மேரி

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘பெண்கள் வீட்டை மட்டும் பார்த்தால் போதும்’ என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு ஆப்பறையும் விதமாகவும், வந்திருந்த ஜனநாயக சக்திகளை சிந்திக்க தூண்டும்படியும் முன்னுதாரணமானதாக இருந்தது இடிந்தகரை மீனவ பெண்களின் பங்களிப்பு. உணர்வுபூர்வமாக அவர்கள் எழுப்பிய முழக்கங்களும், அவர்களின் சார்பாக பேசிய திருமதி மேரியின் பேச்சும் பார்வையாளர்களை மட்டுமல்ல; உடன் நின்றிருந்த தோழர்களுக்கும் உணர்வூட்டி சிந்திக்கத்தூண்டியது.

இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் பங்கேற்புடன்தான் நடந்தது. குறிப்பாக ஆர்ப்பாட்ட செலவை ஈடுகட்ட பெரியதாழை ஊர்க்கமிட்டியினர் 3000.00ரூபாயும், கூடங்குளத்து மக்கள் 1000.00 ரூபாயும், பெரியசாமிபுரத்திலிருந்து 1000.00 ரூபாயும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 2000.00 ரூபாயும் தந்து போராட்டத்திலும் பங்கெடுத்ததை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளிட்ட புரட்சிகர அமைப்புத்தோழர்களும், எழுத்தாளர் குளச்சல் முகம்மது யூசூப் உள்ளிட்ட முற்போக்காளர்களும் பங்கெடுத்தனர்.

இறுதியாக ராமச்சந்திரன் (வழக்கறிஞர்) –செயலர் – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்டம் – நன்றியுரையாற்றினார்.

ராமச்சந்திரன் (வழக்கறிஞர்) –செயலர் – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்டம்

இந்த ஆர்ப்பாட்டம் தாதுமணல் கம்பெனிகளை அடித்து விரட்டும் தொடர் போராட்டத்துக்கான முன்னறிவிப்பாக அனைவர் மனதிலும் பதிந்தது.

press-2
press-1

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு
தூத்துக்குடி-நெல்லை-குமரி மாவட்டங்கள்

Reply all
Reply to author
Forward
0 new messages