நாம் ஏன் டைடன் நிலவில் குடியேற வேண்டும்?

2 views
Skip to first unread message

செல்வன்

unread,
Nov 27, 2016, 1:53:38 AM11/27/16
to செல்வன்
நாம் ஏன் டைடன் நிலவில் குடியேற வேண்டும்?

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடி செவ்வாயில் காலனி அமைக்கலாமா, நிலவில் காலனி அமைக்கலாமா என விவாதம் நடந்து வருகிறது. செவ்வாயில் குடியேற 100 பேர் தயாராக பெயர் கொடுத்து, பணமும் கட்டி தயாராக இருப்பதாக எல்லாம் செய்திகள் வந்தன.

ஆனால் செவ்வாயை விட நிலவை விட நாம் குடியேற தோதான இடம் டைடன் தான்.

டைடன் என்பது சனி கிரகத்தின் (Saturn) நிலவு. நிலப்பரப்பைல் நம் நிலவை விட 50% பெரியது. மெர்க்குரி கிரகத்தை விடவும் பெரியது. அது பாறையால் ஆன கிரகம். பாறைமேல் நீர் பனிக்கட்டியாக உறைந்துள்ளது. அதன் வளிமண்டலம் முழுக்க நைட்ரஜனால் ஆனது என்பதால் வேதிவினையால் அடிக்கடி அவை மீதேன் மற்றும் ஈதேன் ஆக மாறி டைடனெங்கும் திரவ மீதேனும், ஈதேனும் மழையாக பொழியும். திரவ மீதேன், ஈதேன் ஏரிகள், கடல்கள், ஆறுகள் எல்லாம் காணப்படும். ராக்கட்டில் இருந்து அதை பார்த்தால் ஏகப்பட்ட நீர், நிலைகள் நிரம்பிய பகுதியாக தெரிந்தாலும் அத்தனையும் மீதேன் மற்றும் ஈதேன் தான்.

(படத்தில் இருப்பது டைடனில் உள்ள மீதேன் ஏரிகள். பார்த்தால் பூமி மாதிரிதானே இருக்கு? ஆனால் சாட்டிலைட்டில் பறந்து டைடனில் எடுத்த படம் இதுன்னா நம்ப முடியுதா?அதில் போட் மாதிரி போவது அங்கே இறக்கபட்ட படகு. ஆராய்ச்சிக்காக)




மேலும் டைடனின் முக்கிய அட்வான்டேஜ் என்னன்னா அதன் அழகுதான். அதன் விண்ணில் சனிகிரகம் நம் நிலவை விட 11 மடங்கு பெரியதாக தெரியும் அழகை காண கண்கோடி வேண்டும். காண்க படம்




சரி இங்கே எப்படி மனிதன் வசிக்க முடியும்? ஏன் செவ்வாய், நிலவில் வசிக்க முடியாது?

செவ்வாய்க்கு அனுப்புவதாக சொல்லி பணம் வசூல் செய்தவர்கள் உங்களிடம் உண்மையை சொன்னார்களா இல்லையா என தெரியாது. ஆனால் சூரியனின் புற ஊதா கதிர்களின் தாக்கம் இருப்பதால் நம்மால் செவ்வாய், நிலவில் வசிக்க முடியாது. வசிப்பதனால் பூமிக்கடியில் சுரங்கம் தோன்டி வசிக்கலாம். ஆனால் சுரங்கத்தில் ஒரு பெரிய குடியிருப்பை அமைப்பது எல்லாம் எத்தனை கஸ்டமான வேலை? மேலும் செவ்வாயில் நீர் எல்லாம் இல்லை. ஆக இங்கே வசிப்பது இயலாது.

ஆனால் டைடனில் வளிமண்டலம் முழுக்க நைட்ரஜன் என்பதால் அது புற ஊதாகதிர்கள், ரேடியேஷனை தடுத்துவிடுகிறது. அதனால் டைடனின் மேற்பரப்பில் நம்மால் பிரச்சனையில்லாமல் வசிக்க இயலும்.

சரி..டைடனுக்கு பிளைட்டை போடலாமா என கேட்கிறீர்களா? சற்று பொறுக்கவும். அதில் சில அட்ஜெஸ்ட்மெண்டுகள் தேவை.

டைடனில் முதல் பிரச்சனை குளிர். குளிர் என்றால் உங்கூட்டு குளிர் எங்கூட்டு குளிர் அல்ல. மைனஸ் 300 டிகிரி பாரன்கீட் குளிர். அதனால் அண்டார்டிகா பகுதியில் விஞ்ஞானிகள் வசிப்பதுபோல ஸ்பெஷலான குளிர்தாங்கும் உடை அணிந்துதான் வசிக்கமுடியும்.

வளிமண்டலம் முழுக்க நைட்ரஜன் என்றால் மூச்சுவிடுவது எப்படி?

டைடன் முழுக்க உறைந்து இருக்கும் நீரில் இருந்து ஆக்சிஜனை பிரித்து எடுத்து சிலிண்டரில் அடைத்து மூச்சுவிட்டுகொள்ளலாம். இப்பவே டெல்லி, பெய்ஜிங்கில் எல்லாம் பொல்யூஷன் ஆகும் அளவை பார்த்து பீதியடைந்து பலரும் இன்னும் 10 ஆண்டுகளில் இங்கெல்லாம் ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்கிறார்கள். அதனால் இது பெரிய இன்கன்வீனியன்சாக இருக்காது.

சாப்பாடு, தண்ணிக்கு எல்லாம் என்ன செய்வது? விவசாயம் எப்படி நடக்கும்?

அதான் டைடன் முழுக்க பனிக்கட்டி இருக்கே? பூமியில் அல்லது செவ்வாய், நிலவில் இருந்து சில ஆயிரம் டன் லோடு மண்ணை டைடனுக்கு பெரிய ராக்கட்டுகளில் அனுப்பினால் வயல்வெளி தயார். அதன்மேலே மீதேன் மழை விழாமல் பிளாஸ்டிக்கில் கூரை அமைத்து, டைடனில் இருக்கும் நீரில் பிரச்சனையில்லாமல் முப்போகம் பயிர் செய்யலாம். ஆடுமாடுகளை வளர்க்கலாம். பேலியோ டயட் கூட ஈசியா பின்பற்றலாம் :-)

எரிபொருள், மின்சாரத்துக்கு எல்லாம் என்ன செய்வது?

டைடன் முழுக்க நைட்ரஜன், திரவ மீதேன், ஈதேன் என்பதை மறந்துவிடவேண்டாம். இதில் வேடிக்கை என்னவெனில் லிக்விட் மீதேன் தான் ராக்கெட் எரிபொருள். டைடனில் ராக்கட்டில் இறங்கி ஏரி நிறைய இருக்கும் லிக்விட் மீதேனை ராக்கெட்டின் எரிபொருள் டாங்கரில் ஊற்றிக்கொண்டு ஜாலியாக நட்சத்திர சுற்றுலா போகலாம். ஆக எரிபொருள் பிரச்சனையே இல்லை. விழும் மழையே ராக்கெட் எரிபொருள் தான். அதை வைத்து பிளாஸ்டிக் எல்லாம் எளிதில் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் வீடுகள், கட்டிடங்கள் கட்டி ஜமாய்க்கலாம். எரிபொருளை பயன்படுத்தி மின்சாரமும் தயாரிக்கலாம்.

ஆனால் டைடனில் நடமாட உங்களுக்கு சாலைகள், ரோடுகள் வேன்டியதே இல்லை. டைடனின் புபியீர்ப்பு சக்தி பூமியை விட 10 மடங்கு குறைவு என்பதால் சும்மா குதித்தால் ஐம்பது அடி உயரத்துக்கு குதிக்கலாம். கூட பிளாஸ்டிக் சிறகுகளை பெரியதாக கட்டிகொண்டால் கையாலேயே அவற்றை இயக்கி விண்ணில் எளிதில் பறக்கலாம். டைடன் கோயமுத்தூரில் இருந்து டைடன் சென்னைக்கு செல்லவேண்டும் எனில் ஜாலியாக ரெக்கையை கட்டிகொண்டு பறந்துவிடலாம். ரெக்கை அறுந்து கீழே விழுந்தாலும் அடியே படாது. ஏனெனில் மெதுவாக தான் கீழே விழுவீர்கள். ரொம்ப தூரம் போவது என்றால் ராக்கட்டில் ஜாலியாக பறக்கலாம். அதான் எரிபொருள் ப்ரி ஆச்சே?

ஆகா...இதையெல்லாம் ஒருத்தரும் இத்தனை நாள் சொல்லாம விட்டுட்டாங்களே? டைடன்ல நாலு கிரவுன்டு இடம் என்ன ரேட்டு, எப்ப பிளைட்டுனு கேகற்றிங்களா? :-) அதான் எனக்கும் தெரியலை. ஆனால் கூடிய சீக்கிரம் ஒரு சில நூறான்டுகளில் டைடனில் ரியல் எஸ்டேட் விற்பனை ஆரம்பம் ஆகலாம். செல்லாம போன ஐநூறு ரூவா, ஆயிரம் ரூவா நோட்டை வெச்சு டைடனில் ரியல் எஸ்டேட் வாங்கலாம்னு ஒரு உத்தரவுபோட்டா பலரும் இடத்தை வாங்கி குவிச்சிடமாட்டாங்க குவிச்சு? :-)

--
Reply all
Reply to author
Forward
0 new messages