சமண விவேகானந்தர்

5 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jul 11, 2016, 2:05:46 AM7/11/16
to mintamil, vallamai, பண்புடன், tamil...@googlegroups.com

சமண விவேகானந்தர்

இன்று சிகாகோ பார்ட்லட் நகர சமண மையம் சென்றேன். அங்கே வீர்சந்த் காந்தி என்பவரின் திரூருவச்சிலை நிறுவப்பட்டிருந்தது. விசாரித்ததில் அவர் சமண விவேகாநந்தர் என தெரிய வந்தது.

ஆம்....விவேகானந்தர் கலந்து கொண்ட உலகசமய பாரிலிமெண்ட் 1893ல் சமண சமயம் சார்பாக கலந்து கொண்டவர் வீர்சந்த் காந்தி. அதில் கலந்துகொண்ட இந்தியர்கள் இவர்கள் இருவர் மட்டுமே. (சீக்கிய சமயம் அழைக்கபடவில்லை. பவுத்த சமய சார்பில் இலங்கையின் அனகாரிக தர்மபாலர் கலந்துகொண்டார்)

காந்தி சாதியினர் சமணர்கள். மகாத்மா காந்தி வீட்டினர் சமணத்தில் இருந்து இந்துமதத்துக்கு முன்பு கன்வர்ட் ஆனவர்கள் எனப்படுவதுண்டு. நம் வீர்சந்த் காந்தி மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர். அப்போது மகாத்மா காந்தி புகழ் பெறாத எளிய மனிதரே.

வீர்சந்த் காந்தி புகழ் பெற்ற வக்கீல். பார்ஸி, ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, பிராகிருதம், சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளை பேசுவார். சர்வதேச சமய பார்லிமண்டுக்கு சமண மதம் சார்பில் யாரை அனுப்புவது என தேடுகையில் கடல் கடந்து செல்ல கூடாது எனும் நெறியால் சமண முநிவர்கள் யாரும் போக முன்வரவில்லை. இவர் துணிந்து முன்வந்தார். அதற்காக கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானார். பின்னாளில் அதை கேட்டு கடும் கோபத்துக்கு உள்ளான விவேகானந்தர் " சிகாகோவின் கடும் குளிரிலும் வெறும் காய்கறிகளை மட்டுமே உண்டு சைவ உணவு நெறி காத்தவர் வீர்சந்த் காந்தி. அவரை இப்படி முட்டாள்தனமாக விமர்சிக்கிறீர்களே" என கடிந்தார்.

வீர்சந்த் காந்தி சிறப்பாந உரையை சிகாகோவில் நிகழ்த்தினார். அவர் அத்துடன் நில்லாது ஒரு வருடம் அமெரிக்காவில் தங்கி சமண மதத்தை அமெரிக்காவில் ஸ்தாபித்தார். விவேகானந்தர் சீடராக சகோதரி நிவேதித்தா ஆனது போல் திருமதி ஹோவர்டு எனும் அமெரிக்க பெண் இவர் சீடர் ஆனார். அதன்பின் லண்டன் சென்று அங்கேயும் சமண சமயத்தை ஸ்தாபித்தார்.

இதை எல்லாம் செய்கையில் அவர் வயது 28 மட்டுமே.

அதன்பிந் இந்தியா திரும்பி பிகாரில் சமணஸ்தலம் ஒன்றின் அருகே பன்றி நெய் எடுக்கும் தொழிற்சாலை ஒன்றை ஒரு ஆங்கிலேயர் நிறுவுவதை அறிந்து கடும் கோபம் கொண்டு அதை எதிர்த்து போராடி நிறுத்தினார். 1901ம் ஆண்டு தன் 37வது வயதில் விவேகானன்தர் போல இளவயதில் மரணமடைந்தார்.

விவேகானந்தர் போல இவரும் தேசபக்தர். இந்தியா விடுதலை அடையும், அடைந்து உலகசமாதனத்துக்கு பாடுபடும் என இந்திய சுதந்திர போராடடமே துவங்காத அந்த காலகட்டத்தில் இவர் நம்பிக்கையுடன் இருந்தார்.

அதனால் இவரை சமணவிவேகானந்தர் என்பது பொருத்தம் தானே?

சிகாகோ ஜெயின் ஆலயத்தில் உள்ள இவரது திரூ உருவ சிலையை படத்தில் காணலாம்

20160710_111748.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages