திருடப்பட்ட உணவுகள்

4 views
Skip to first unread message

செல்வன்

unread,
Feb 26, 2018, 10:52:21 AM2/26/18
to செல்வன்
பன்னாட்டு பெருவணிகர்கள் செய்ததில் மிகப்பெரும் திருட்டுதனம் என்பது நம் காலை உணவை நம்மிடம் இருந்து திருடியதுதான்.

முதலில் நம் நொறுக்குதீனிகளை திருடினார்கள். சாயந்திரம் சாப்பிட்ட சுண்டல், காபி, வடை, அடைக்கு பதில் பிஸ்கட், குக்கி, 2 மினிட் நூடில்ஸ் என மாறினோம். அதன்பின் காலை உணவாக இருந்த இட்டிலி, தோசைக்கு பதில் சீரியலும், ஓட்மிலும் உள்ளே புகுந்தது.

இப்ப என்னடாவென்றால் மதிய உணவு எல்லாம் வெளியே சபபிடுவது என ஆகிவிட்டது. ஆபிசுக்கு போகையில் டிபனில் உணவை எடுத்துக்கொண்டுபோவது ஏதோ காட்டுமிராண்டி வழ்ககமாக ஆகிவிட்டது. ஆபிசில் சாண்ட்விச் விற்கிறது, பரோட்டா இருக்கு...அப்புறம் எதுக்கு காலையில் எழுந்து மெனகெட்டு மதிய டிபனை சமைக்கவேண்டும் என்ற மனபான்மை வளர்ந்து வருகிறது.

நேற்று முந்தினம் இந்திய உணவகத்தில் ஒரு பார்ட்டிக்கு சமோசா வாங்க போயிருந்தேன். கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார்கள். என்னைபோல சமோசாவுக்கு இன்ன்னொருவரும் காத்திருந்தார். பேசுகையில் அந்த உணவ்கத்துக்கு ஒரு வாட்ஸாப் குழு இருப்பதாகவும், சமோசா சூடாக போடுகையில் வாட்ஸாப்பில் தகவல் வந்துவிடும் எனவும் உடனே ஆர்டர் போட்டு பிக் அப் செய்ய வருவதாகவும் கூறினார். சமோசாவை பெட்டி நிரைய பல்க் ஆக வாங்கிபோய் ப்ரீசரில் போட்டுவிடுவார். மாலை டீயுடன் சமோசா சாப்பிட்டால் டீ டைம் ஸ்னாக் செய்யும் வேலை முடிந்தது என்றார்.

டின்னருக்கு என்ன செய்வீர்கள் என கேட்டதுக்கு "காஸ்ட்கோவில் நான் விற்கிரார்கள். பீட்சா இருக்கு. சுவையான நூடில்ஸ் இருக்கு. சமையல் என்பது இப்பல்லாம் வீக் எண்டில் தான். அதுவும் வெளியே போய் சாப்பிடாத சமயம் தான். உணவகங்களில் கிடைப்பது போல எல்லாம் வீட்டில் வெரைட்டியகா செய்ய முடிவது இல்லை. பராத்தா தட்டுவது, ருமாலி ரொட்டி சுடுவது எல்லாம் சாத்தியமா? உணவகத்துக்கு போனால் வீட்டில் சாப்பிட முடியாத வெரைட்டியாக சாப்பிடலாம்" என்றார்.

ஆக மூன்று வேளை உணவுகளும், நொறுக்குதீனிகளும் இப்போது பன்னாட்டு கம்பனிகள் வசம் போய் சேர்ந்துவிட்டது. சமையல் என்பது இப்போது மைக்ரவேவில் சூடு பண்ணி சாப்பிடுவது தான் சமையல். 


ஆரோக்கியம், உடல்நலம் என்பதை பற்றியும் யாரும் அலட்டிகொள்வது கிடையாது. இதில் நம் ஊருக்கு உரித்தான தத்துவங்களையும் சேர்த்து அடித்து கலவையான ஒரு பிலாஸபி உருவாக்கிகொள்கிரார்கள். விரும்பியதை உண்கிறார்கள். வியாதி வந்தால் டகடரிடம் போய் ஊசி, மருந்து என போட்டுகொன்டு மீன்டும் நினைத்ததை உண்கிரார்கள். இப்படி ஒரு 70, 75 வயது வரை ஊசி, மருந்து மாத்திரை உதவியுடன் வாழ்ந்துவிட முடியும். அதன்பின் என்ன ஆனால் என்ன கவலை? போய்சேரவேண்டியதுதான். நூறுவயது வாழ்ந்து என்ன செய்யபோகிறோம் என தத்துவம் வேறு.

நாம் எல்லாம் நம் அம்மா மேல் அத்தனை பாசமாக இருக்க காரணங்களில் ஒன்று அவர்களின் சமையலை உன்டதுதான். நமக்காக சமைப்பவர்கள் மேல் நாம் பாசமாக இருப்போம் என்பது ஒரு அடிப்படை உளவியல். அந்த பாசம் எல்லாம் இப்போது மெக்டானல்ட்ச், டாமினோஸ், நூடில்ஸ் மேல் போய் மக்களும் உப்பிட்டவரை உளளவும் நினை என இந்த கம்பனிகல் மேல் பாசமாக இருக்கிறார்கள். 

நாகரிக உலகை தூர இருந்து பார்க்கவே பயமாக இருக்கிறது....அதனுள் வாழ்ந்தால் எப்படி இருக்கும் என யோசித்தால் தலையே சுற்றுகிறது.

--

செல்வன்

Ahamed Zubair A

unread,
Feb 27, 2018, 1:06:24 AM2/27/18
to பண்புடன், செல்வன்
மைக்ரோவேவ்ல சமைச்சதை சாப்பிடலாமா?

செல்வன்

unread,
Feb 27, 2018, 1:16:42 AM2/27/18
to Ahamed Zubair A, பண்புடன்
2018-02-27 0:05 GMT-06:00 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
மைக்ரோவேவ்ல சமைச்சதை சாப்பிடலாமா?

Ofcourse, yes 


2018-02-26 18:51 GMT+03:00 செல்வன் <hol...@gmail.com>:

ஆக மூன்று வேளை உணவுகளும், நொறுக்குதீனிகளும் இப்போது பன்னாட்டு கம்பனிகள் வசம் போய் சேர்ந்துவிட்டது. சமையல் என்பது இப்போது மைக்ரவேவில் சூடு பண்ணி சாப்பிடுவது தான் சமையல். 




--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages