காலப்பயணம்

3 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jul 1, 2015, 10:50:23 AM7/1/15
to K Selvan
நேற்று திரையரங்கில் ஜுராஸிக் வர்ல்ட் மற்றும் டெர்மினேட்டர் ஜெனசிஸ் பார்த்தேன்.

காலசக்கரத்தில் ஏறி 1993 போன நினைவு. சுமார் 22 வருடத்துக்கு முன்பு கோவை சென்ட்ரலில் முதல் டெர்மினேட்ட்ரையும், முதல் ஜுராசிக் பார்க்கையும் பார்த்தேன்.

பார்த்துவிட்டு வந்து அடுத்த நாள் செய்திதாளை பிரித்து படித்தபோது "இளவரசி டயானா தன் குழந்தைகளை ஜுராசிக் பார்க் படம் பார்க்க திரையரங்குக்கு அழைத்துச்சென்றார்" என செய்தி இருந்தது.

"சரி..இங்கிலாந்து இளவரசி துவங்கி இந்தியாவின் குக்கிராமத்தில் இருப்பவர் வரை படம் அனைவரையும் கவர்ந்து விட்டது" என நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது நினைத்தால் சில விசயங்கள் நாடு, தேசம், பொருளாதாரம் தாண்டி உலகம் முழுவதையும் ஒன்றிணைப்பதி காண முடிகிறது. கலையும் அதில் ஒன்று. மன்னனும் மாடியில் அமர்ந்து நிலவை ரசிக்கிறான். ஏழையும் மண்குடிசையில் அமர்ந்து நிலவை ரசிக்கிறான்.

ஜுராஸிக் வர்ல்டில் முதல் பாகத்தில் இருந்த பிரமிப்பு இல்லை. அப்ப இது உலகின் முதல் டைனசார் படம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்காகவே ஓடின படம். இன்று அந்த பிரமிப்பு எல்லாம் இல்லை. குழந்தைகளுடன் கோடை விடுமுறையில் பார்க்கக்கூடிய படம்.அவ்வளவே

பிஜி 13 ரேட்டிங்குக்காக முத்த காட்சிகள் கூட கட். லேசுபாசாக ஒரே ஒரு கிஸ்....அவ்ளோதான். முழுக்க குழந்தைகள் பார்த்து ரசிக்கும் படம்.

முதல் படத்தில் இருந்த இன்னசன்ஸ் இதில் மிஸ்ஸீங்.....பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிரான டிரெண்டை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் முதலாளிகள் பணத்துக்காக இம்மாம் பெரிய ஜெனட்டிக்கலி மாடிபைடு டைனசாரை உருவாக்குவார்கள், உலகையே அழிப்பார்கள் என்ற கதையை வைத்து பன்னாட்டு சினிமா கம்பனி படம் எடுக்க, அதை ஏழை ரசிகர்கள் பணம் கொடுத்து பார்த்து கைதட்டி மகிழும் காமடி மற்றொருமுறை வெற்றிகரமாக நடந்தேறியது.

சகலகலா வல்லவனில் பார்த்த ஆணவம் பிடித்த ஹீரோயின், அவள் ஆணவத்தை அடக்கி ஆபத்திலிருந்து காப்பாறும் பண்புள்ள ஹீரோ இதிலும் உண்டு.




சரின்னு டெர்மினேட்டர் போனால் அங்கேயும் பன்னாட்டு சினிமா கம்பனி செய்யும் பன்னாட்டு கம்பனி எதிர்ப்பு பிரச்சாரம் தான். என்ன இப்ப ஸ்கைநெட் என்ற கம்பியூட்டர் புரக்ராமை வைத்து உலகையே அழிப்பது போன்ற கதை. பலகோடிகள் சம்பளம் வாங்கும் நடிகர்கள், ஏழைபங்காளர் வேசம் போட்டு, உலகை காப்பாற்ற பணகாரர்களுக்கு எதிராக ஏழைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து...

இதெல்லாம் ரஜினி நடிச்ச உழைப்பாளியிலேயே பார்த்துட்டோம் நாங்க

பல விசயங்கள் காலம், தேசம், பொருளாதாரம் தாண்டி உலகில் பொது என நினைவு வந்தது.

அதில் இம்மாதிரி டிராமா போடுவதும் ஒன்று போல :-)

இரண்டு படமும் நல்லா இருந்துச்சு. ஆனால் டெர்மினேட்டரில் 70 வயசு அர்னால்டுக்கு லிங்கா ரஜினி மாதிரி மேக்கப் போட்டு 20 வயசு அர்னால்டா முதல் காட்சியில் காட்டுகையில் பீதி ஏற்பட்டது. ஆனால் நல்லவேளை அந்த அர்னால்ட்டை சாகடித்துவிட்டு 60 வயது அர்னால்டு வந்ததும் "யப்பாடி" என மனதில் நிம்மதி வந்தது.

முந்தைய நாலு பாகங்களிலும் இருந்த சண்டைகாட்சிகளை சுட்டு, சற்றே மாற்றி, அதே வில்லன்களை, அதே மாதிரி கொல்கிறார்கள். முந்தைய நாலு படங்களையும் அரைமணிநேரத்தில் பார்த்த உணர்வு.

முந்தைய டெர்மினேட்டர்களில் வந்த சாரா கானரிடம் இருந்த குழப்பநிலை, மன உணர்வுகள் இதில் இல்லை. ஏதோ வீரமங்கை வேலுநாச்சியார் கேரக்டரில் நடிக்கும் உணர்வுடன், சராசரி பெண்ணாக நடிக்காமல் சூப்பர் கேர்ள் ரேஞ்சுக்கு பாத்திரம் நகர்ந்து நம்மை ஏமாற்றிவிடுகிறது.

படத்தை காப்பாற்றுவது அர்னால்டு மட்டுமே...ஆக்ஷன், நடிப்பு, நகைச்சுவை என அனைத்திலும் தன் பாணியை பதித்து படத்தை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்துகிறார் அர்னால்டு.

ஆக இரு படமும் ஒருமுறை பார்க்ககூடிய படங்களே

--

துரை.ந.உ

unread,
Jul 1, 2015, 10:55:11 AM7/1/15
to பண்புடன், K Selvan
​அப்போ ரெண்டும் போலியோ ?​

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/
Reply all
Reply to author
Forward
0 new messages