திமுக-பாஜக கூட்டணி - ஒரு அரசியல் ஆருடம்

3 views
Skip to first unread message

Thevan

unread,
Mar 12, 2017, 8:29:29 AM3/12/17
to panbudan, mintamil
அதிமுகவில் அதிகாரம் தமிழர்களின் கைக்கு மாறியுள்ள நிலையில், திமுகவில்
எந்தக் காலத்திலும் அதிகாரம் தமிழர்களின் கைக்கு வர முடியாத நிலையில்,
தமிழகத்தில், தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து
பெற்ற வெற்றி, நீர்க்கரிமவாயு எடுக்க எதிர்ப்பு, மீனவர் சுட்டுக்
கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு என்று மக்கள் தாங்களாக தங்கள் உரிமைகளை
பாதுகாக்கும் தமிழ்த் தேசிய கருத்துக்களை முன்னெடுக்கும் நிலையில் ஐந்து
மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன.

பாஜக, உபியில் வரலாற்று வெற்றி, ஜார்க்கண்ட், மணிப்பூரில் வெற்றி என
வெற்றிகளை குவித்துள்ளது. இது காந்தி, நேரு, இந்திரா போன்றோர்
முன்னெடுத்த முஸ்லீம்களை அல்லது சிறுபான்மையினரை தூக்கிப் பிடிக்கும்
அரசியலுக்கு கிடைத்த அடி என்றே சொல்ல்லாம். இதை இப்படிச் சொன்னால்
இன்னும் சரியாக இருக்கும் குஜராத்தில் முஸ்லீம்கள் படுகொலைகளுக்குப்
பின்னர் மோதி ஒரு கொலைகாரன் என்ற பிரச்சாரம் ஊடகத்தாராலும், நடுநிலை,
முற்போக்கு ஆசாமிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அதனை குஜராத் மக்களும்
தூக்கி எறிந்து விட்டனர். ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஏற்கனவே தூக்கி
எறிந்து விட்டனர். தற்போது உபி, ஜார்கண்ட் மக்களும் தூக்கி எறிந்து
விட்டனர் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இது இந்து மதவாத அரசியல் என்ற குற்றச்சாட்டும், முஸ்லீம்-சிறுபான்மையினர்
பாதுகாப்பு மதவாத அரசியல் என இரண்டுமே தோல்வி பெற்றதையே காட்டுகிறது.
ஆனால் பாஜக தொடர்ந்து காங்கிரஸின் செயல்திட்ட வடிவிலேயே செயல்பட்டு
வருகிறது என்பதை மோதியே உறுதிப்படுத்தி வருகிறார். இதுபோன்ற பெரும்பான்மை
வெற்றி பெறும் அரசியல் கருத்துக்கள் இந்தியாவின் இதயப் பகுதி தவிர்த்த
பகுதிகளில் வாழும் மக்களுக்கு அச்சுறுத்தலாகவே அமையும். அவர்களின்
குரல்வலைகள் நெறிக்கப்பட அதிக வாய்ப்புகள் உருவாகும். வரலாறு அதையே
காட்டுகிறது.

சரி, தமிழக அரசியலுக்கு வருவோம். தமிழகத்தில் மக்கள் தன்னெழுச்சியாக
தங்கள் உரிமைகளை பாதுகாக்க ஒன்று திரளும்போது, அவர்கள் தமிழகத்தின்
அரசியல் அதிகாரம் தமிழர்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பதையும்
மறைமுகமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழராக இல்லாத ஸ்டாலின் தன்
ஆயுள் காலத்திற்குள் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற வெறியில்
இருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பை தொடர்ந்து அவரின் அரசியல்
கூத்துக்கள் இதை நிரூபிக்கின்றன. மேலும் அவர், திமுக ஆட்சியை
கைப்பற்றிவிடும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பேசி வருவதும் இதையே
காட்டுகிறது.

அதிமுகவில் ஜெ என்ற அரசியல் ஆளுமை மறைந்துவிட்ட நிலையில், தற்போதைக்கு
தேர்தல் நடத்தினால் அது திமுகவுக்கு சாதகமாகவே அமையும். எனவே ஸ்டாலின்
வெற்றிபெறுவது உறுதி. இது ஸ்டாலினின் ஆசையை பூர்த்தி செய்யும்.
திமுகவுக்கு கொள்கை என்று எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் பாஜகவுடன்
கூட்டணி வைப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஏற்கனவே கூட்டணி
வைத்தவர்கள்தானே?

அதிமுகவின் ஆட்சியைக் கலைப்பதால் பாஜகவுக்கு ஒன்றும் கிடைத்து
விடப்போவதில்லை. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைப்பதால் நிச்சயமாக
பாஜகவுக்கு லாபம். அதிமுகவின் ஆட்சியைக் கலைப்பதற்காக 70-60 இடங்களை
பேரம்பேசி பெறலாம். திமுகவின் வாக்கு வங்கியின் உதவியோடு 30-40 இடங்களை
வெல்லவும் செய்யலாம். அது பாஜகவுக்கு லாபம்தானே? ஆனால் தமிழர்களுக்கு?
தமிழர்கள் மீண்டும் ஒரு 50 ஆண்டுகாலம் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.
அந்நியர்கள் தொடர்ந்து தமிழர்கள் என்ற பெயரில் ஆட்டம்போடுவார்கள்.
••••••••••••••••••••••••••••••••

http://perumalthevan.blogspot.in/2017/03/blog-post_12.html
Reply all
Reply to author
Forward
0 new messages