Re: சுரும்பரின் அட்டமா சித்தி!

3 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Nov 16, 2017, 10:27:55 AM11/16/17
to Santhavasantham, vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panb...@googlegroups.com


2017-11-16 5:08 GMT-08:00 ramaNi <sai...@gmail.com>:
சுரும்பு/சுரும்பர் = drone-க்குப் பொருத்தமான பெயர்.

drone-க்கு சுரும்பர் மிக அழகான தமிழ். வாழ்க.

இனிவரும் உலகம் சுரும்பர் உலகமே!

பாடலும் அருமை.

நா. கணேசன்
 

சுரும்பரின் அட்டமா சித்தி!
(இன்னிசைப் பஃறொடை வெண்பா)

அரும்பினைத் தேடி அலைந்தம ராதே
சுரும்பரின் சுக்கான் தொலைவில் விரும்பிய
வண்ணம் இயக்கிடும் வித்தகம் கைகொடுக்கக்
கண்ணிமைக் காதோர் கருவி படம்பிடிக்கும்
வண்ணமிகு காணொளியில் வாழ்வு.

[சுரும்பர் = drone]

--ரமணி, 16/11/2017

*****

To watch drone videos:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Nov 17, 2017, 11:21:07 AM11/17/17
to Santhavasantham, vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com, panb...@googlegroups.com, R Cheran, Mohamed Nuhman, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban
இரமணி:

சுரும்பரின் அட்டமா சித்தி!
(இன்னிசைப் பஃறொடை வெண்பா)

அரும்பினைத் தேடி அலைந்தம ராதே
சுரும்பரின் சுக்கான் தொலைவில் விரும்பிய
வண்ணம் இயக்கிடும் வித்தகம் கைகொடுக்கக்
கண்ணிமைக் காதோர் கருவி படம்பிடிக்கும்
வண்ணமிகு காணொளியில் வாழ்வு.

[சுரும்பர் = drone]

--ரமணி, 16/11/2017

*****

To watch drone videos:

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------


‘மகாகவி’ ருத்ரமூர்த்தி தமிழில் பல புதுமைகளைப் படைத்தவர். லிமெரிக் கவிதைகளைத் தமிழில் தந்தவர். சீத்தலைச் சாத்தனார் பற்றிய நாட்டார்கதையை சந்தியைவைத்து நுட்பமான குறும்பாச் செய்தவர். 
பாதசரம் எங்கே? - மகாகவி, ஈழம்
தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினையாக முன்பு தேரோட்டங்களில் இருந்த ஒன்றைக் கவிதையாக முதலில் பதிவுசெய்தவர் மகாகவி ருத்ரமூர்த்தி தான்.

அவரது மூத்த மகன், பேரா. கவிஞர் சேரன் (விண்ட்சர் பல்கலை, கனடா) இரமணியின் பாடலைப் படித்து ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார்:

2017-11-16 7:51 GMT-08:00 Cheran Rudhramoorthy <che...@uwindsor.ca>:
ஈழத்தில் போர் நடந்த போது மக்கள் இதனை வண்டு என்றுதான் அழைப்பார்கள். சுரும்பு/ சுரும்பரும் நன்று!!!!!

Sent from my Bell Samsung device over Canada's largest network.

-------

நான் சுரும்பர்/சுரும்பி என drone-கு தமிழாக்கத்தை விரும்பக் காரணமுண்டு. கோவையில் Coffee House என்பதை 1970களில் ‘குளம்பியகம்’ என தலைப்பலகையில் எழுதினார்கள். மாட்டின் குளம்பு போல இருப்பது காப்பிக்கொட்டை. எனவே, Coffee = குளம்பி என அருமையான செஞ்சொல் படைத்தார் பாவாணர் (சேலம் கல்லூரி). நாலு வஞ்சி என்று கொங்கு நாட்டார் வழக்கு. வஞ்சிக்கரூர், பெருவஞ்சி என்னும் தாராபுரம், மூலனூர், சேலம். சேலத்தை சேரலம் என்னும் பெயர் சுருங்கிவிட்டது என்றும் புலவர்கள் கூறுப.

Coffee = குளம்பி. அதுபோலே, Drone = சுரும்பர்/சுரும்பி அருமை.

நா. கணேசன்

2013 மடலாடல்:
அன்பின் வினைதீர்த்தான் ஐயா,

தமிழில் Coffee என்பதற்கும், Coffee House என்பதற்கும் அழகான சொற்கள்
உள்ளன. கோவையில் 70களிலேயே குளம்பியகம் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆடு, மாடுகளின் குளம்பு போல் விளங்கும் குளம்பி:
https://upload.wikimedia.org/wikipedia/commons/c/c5/Roasted_coffee_beans.jpg

Inline image 1

கால்நடைகளின் குளம்பு போல இருப்பதால் கோப்பியைத் தமிழில் குளம்பி என்பர்.
இச்சொல்லை அமைத்தவர் தேவநேயப் பாவாணர் என நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார்
- நெல்லைக் கண்ணன் 60-ஆம் ஆண்டுவிழாவில்:
http://nanjilnadan.com/2011/05/22/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/

“சொல் என்பது கண்டுபிடிப்பல்ல, உருவாவது. பிரேசில் நாட்டில் பயிரான
காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும்.

அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி
எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உனர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர்
காப்பியைக் குளம்பி எனும் சொல்லால் குறித்தார்.  குழம்பி என்றும்
கொட்டைவடி நீர் என்றும் கேவலப்படுத்தி பரிகசித்து, தமிழ்ச் சமூகம்
குளம்பி எனும் சொல்லை கொன்றுவிட்டது.”
- நாஞ்சில்நாடன்.

”அவர் மீண்டும் தழைக்கவேண்டின், தம் முன்னோ ரைப்போல் தமிழைப்
போற்றல்வேண்டும். ஆகவே, மோட்டார் என்பதை இயங்கி என்றும், காப்பி என்பதைக்
குளம்பி என்றும், தேநீர் என்பதைக் கொழுந்துநீர் என்றும், சொல்வதே
தக்கதாம்.” - பாவாணர், ஆதாரம்: தமிழ் வரலாறு.

தேநீர், குளம்பி (கோப்பி), குளம்பியகம் (கோப்பி ஹவுஸ்) - எனத் தமிழில்
வார்த்தைகள் அழகாக அமைந்துள்ளன.
இராமகி எழுதிய பாடலில் ‘குளம்பி’:
http://valavu.blogspot.com/2005/04/blog-post_30.html

குளம்பி குடித்து பணிபுகல்,
http://sivamaalaa.blogspot.com/2008/10/blog-post_9865.html

நவீன உணவுகள் சிலவற்றுக்கு தமிழ்ப்பெயர்கள்,
http://ularalmuthu.blogspot.com/2013/02/blog-post_10.html
தமிழில் எல்லாவற்றையும் சுருக்காய்ச் சொல்ல இயலும். தமிழர் பேச்சில்
பயன்படுத்துவரா?
என்பது ஊடகங்கள், பள்ளிகள் வழிநடத்தலில்.

நா. கணேசன்


வேந்தன் அரசு

unread,
Nov 17, 2017, 3:53:28 PM11/17/17
to vallamai, Santhavasantham, மின்தமிழ், housto...@googlegroups.com, panbudan, R Cheran, Mohamed Nuhman, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban
அஃறிணைகளுக்கு அஃறிணைப்பெயரைச்சூட்டணும்
சுரும்பி என்றே இருக்கலாம்

17 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 8:20 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages