பல்வரி நறைக்காய்

2 views
Skip to first unread message

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Jan 30, 2016, 1:41:14 AM1/30/16
to வல்லமை, thamizhamutham, tamil...@googlegroups.com, panbudan, zo...@googlegroups.com
பல்வரி நறைக்காய்
=============================================ருத்ரா இ,பரமசிவன்

பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம்
மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல்
களித்து ஆர்த்த கழிநெடு கங்குல்
மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை.
என்னென் கழறும் என்னறியும் தடம் கொல்.
இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் 
வெம்புலியன்ன ஊண் மறுக்கும்
கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும்
எனவாங்கு
தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌
நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ.
நன்மா தொன்மா நனிமா இலங்கை
நல்லியக்கோடன் யாழிய இசையின்
நலம் கெட செய்தனை எற்று எற்று
இவள் உள் உள் முரலும் இன்சிறைத்தும்பி
உயிர்விடும் காட்சி ஒக்குமோ ஓராய்.
இலஞ்சிக் கண்கள் ஈரம் சுரப்ப‌
சிறு புள்ளும் பெருகக்களிக்கும்
சீறிலைச் சிறு கான் வளைக்கும் குன்ற!
கடுகொள் மரப்பு நீங்கியே மீள்வாய்.
இருசீர்ப் பாணி கனைகுரல் விரிப்ப‌
படுமணி நடுங்க கதழ்பரி கலிமா
நெடுந்தேர் விரைபு ஆறு கடந்து ஏகி
மெல்லுடல் நைந்த‌ பீலிஇறையவள்
பிணி நீக்க ஈண்டு வருதி மன்னே.

================================================

தலவியின் பிரிவாற்றாமைத் துன்பம் கண்டு
தலைவன் மீண்டு தோழி வருமாறு பாடியது.
______________________________________________

விளக்கவுரை
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________

"வரிகள் மிக்க நறுமணக்காய் (சாதிக்காய்) தின்றாய் போலிருக்கிறது.அதனால் உன் தொண்டைவழியே வரும் அச்சொற்கள் இனிமையாய் இருந்தன.அந்த சொற்கூட்டங்களோடு நாம்  இருவரும் படுத்து  களித்த நீண்ட இரவுகள் மறந்தாயோ?மீண்டும் மீண்டும் நீ வராது நின்றதேன்?எதை நான் சொல்ல? இதன் காரணத்தின் வழி எனக்கு விளங்க வில்லையே!கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே.அது போல்மன உறுதி கொண்டவள் நான்.உண்ணப்போவதில்லை.காற்று உண்டு கூட  வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்"
என்று தலைவி கூறிக்கொண்டே போக தோழியும் சொல்லலுற்றாள்.

பல்துளைவழியே (நஞ்சு பாய்ச்சும்) பாம்பு கடித்தது போல் வலியுற்று துடிக்கிறாளோ? நல்ல பெரிய மற்றும் தொன்மை மிக்க பெரிய அந்த‌
இலங்கை (இப்போதைய திண்டிவனம்) நாட்டு "ந‌ல்லியக்கோடன்" யாழ் கொண்டு இசைத்து எல்லோரையும் மகிழ்விக்கும் அந்த நல்ல இயல்பை கெடுக்க வந்தவன் போல் இப்படி வராமல் இவளுக்கு துன்பம் செய்வது ஏன்? ஏன்? இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள் கொண்ட தும்பி போன்றது.அந்த இதயம் நின்று உயிர் நீங்கும் காட்சி காண சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்! அங்கங்கே காணும் இடங்கள் எல்லாம் சுனைகள் மிகுந்து (இலஞ்சிக்கண்கள்) நீர் வழிய சின்ன சின்னப்பறவைகள் கூட அதில் நனைந்து பெரு மகிழ்ச்சி கொள்ள சிற்றிலை மரங்களின் காடுகள் சூழும் குன்று நாட்டவனே! ஏதோ கடுமையான மறதி எனும் நச்சால் மரப்பு நோய் உற்றவனே!தெளிந்து எழுவாய்.உன் நெடுந்தேர் மணியின் நடுங்கும் ஒலி "கணீர் கணீர்"என்று இரட்டை தாள அலைவுகளோடு (இரு சீர்ப்பாணி கனைகுரல் விரிப்ப) வர பல வழிகள் கடந்து இங்கு வருவாயாக.இந்த மெல்லிய உடலாள் முன்கையில் இன்னும் மெல்லிதாய் "மயிற்பீலியின் வளையல்கள்"கூட பிணியுற்றது.
("பீலி இறையவள் பிணி").அந்நோய் நீக்க விரைந்து நீ வருவாய்.

=================================================================ருத்ரா இ.பரமசிவன்

N. Ganesan

unread,
Jan 30, 2016, 10:25:58 PM1/30/16
to வல்லமை, thamizh...@googlegroups.com, panb...@googlegroups.com, mintamil, housto...@googlegroups.com, pira...@googlegroups.com


On Friday, January 29, 2016 at 10:41:13 PM UTC-8, ருத்ரா (இ.பரமசிவன்) wrote:
பல்வரி நறைக்காய்
=============================================ருத்ரா இ,பரமசிவன்

பல்வரி நறைக்காய் தின்றனை போன்ம்
மிடற்றிய தீஞ்சொல் மூசும் பாயல்
களித்து ஆர்த்த கழிநெடு கங்குல்
மறந்தனை விடுத்தனை மாறு மாறு வருகை.
என்னென் கழறும் என்னறியும் தடம் கொல்.
இடம் வீழ்ந்த நெடுமா மறுக்கும் 
வெம்புலியன்ன ஊண் மறுக்கும்
கால்கொள் வாழ்வும் மறுத்துச்சாயும்
எனவாங்கு
தூம்புடை வல்லெயிற்று அரவு தீண்டிய‌
நோவு மிக்குற்று நோன்றனள் மாதோ.
நன்மா தொன்மா நனிமா இலங்கை

நல்ல கவிதை.

மாவிலிங்கை என்பது ஓவி (அ) ஓய்மா (ஓங்குமா - பாய்மா)
குடியினரின் குலச்சின்னமாதல் வேண்டும். மாவிலிங்கை
என்று பல ஊர்கள் தமிழ்நாட்டிலே உண்டு. திண்டிவனம் அருகிலும் உண்டு.

மாவிலிங்கை மரம் மாவிலங்கை மரம் என்றும் அழைக்கப்படுகிறது.
அந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அச்சில் கையாளப்பட்டுள்ளது.
அந்த ஊர் அரண்மனையில் (கோவிலில்) இருந்த மரம் எனலாம்

மாவிலிங்கை ஆங்கிலத்தில் ’லிங்கம் ட்ரீ’ எனப்படுகிறது.
சங்க காலத்தில் இலிங்கம் சிவனுடன் சேர்த்தப்படவில்லை.
குடிமல்லம் லிங்கம் போல மலரும் மலர்கள் மரம் முழுதும்
பூத்துக் குலுங்குவதால் இலிங்கமரம். மா = கருமை.
சிவனுடன் சேர்வதற்கு முன் இலிங்கம் வருணனுடன் சம்பந்தம்.
எனவே, மாவிலிங்கைக்கு வடமொழிப் பெயர்: வருண விருட்சம்.
மாவிலிங்கை/மாவிலங்கை கொண்டு குடிமல்லம் இலிங்கம்
நெய்தல் திணைத் தெய்வதம் என எழுதியுள்ளேன். தலையில்
தாழை சூடி உள்ள கிமு 3-ஆம் நூற்றாண்டு இலிங்கம் அது.
ரிலிஜியோஸா என விலங்கு, தாவரப் பெயர்கள் சிலவற்றுக்கே உண்டு,
கும்பிடுபூச்சி = மாண்டிஸ் ரிலிஜியோஸா.
உ-ம்: போதி மரத்தை ஃபிக்கஸ் ரிலிஜியோசா என்பர்.
இந்த மாவிலங்கை/மாவிலிங்கை மரம் = Crataeva religiosa
இவை மூன்றைத் தவிர தமிழில் ரிலிஜியோஸா எனப்
பெயர்கொண்டன எதுவும் இல்லை என்பதால் மாவிலிங்கையின்
முக்கியத்துவத்தை உணரலாம்.

அண்மை நூற்றாண்டுகளில் பிரேசில் நாடு தந்த கொடை
கேனன்பால் ட்ரீ. அதற்கு நாகலிங்க மரம் எனப் புதுப்பெயர்
சூட்டிவிட்டோம். ஆனால், தமிழன் என்றும் அறிந்த
லிங்க விருட்சம் (வருணனுக்குரியது) மாவிலிங்கை.
முதலில் வருணனுக்கும், பின்னர் சிவனுக்கும் உள்ள
லிங்கம் என்னும் குறி சங்க இலக்கியத்தில் இருப்பது
ஓய்மா/ஓவியர் தலைநகரப் பெயரிலாகும்.

மாவிலிங்கை - அதன் கருமையான வாதுகளை, அடிப்பாகத்தை,
மலரில் உள்ள இலிங்கத்தைக் காணலாம்.
முழுதும் பூத்துக் குலுங்குகையில் லிங்கமயம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 31, 2016, 9:33:18 AM1/31/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, DEV RAJ


On Sunday, January 31, 2016 at 5:06:37 AM UTC-8, ருத்ரா இ.பரமசிவன் wrote:



அன்புள்ள திரு.கணேசன் அவர்களே

மிக்க நன்றி.
இலங்கு என்றால் சிறப்புடன் (இங்கு நீர் வள நில வள சிறப்புடன்)
விளங்கு என்று தானே பொருள்.எனவே அந்த "பகுதிச்சொல்" தான்
நமது ஒரு பகுதியாக இருக்கும் "இலங்கை". இதன் மருவு சொல் தான் "இலஞ்சி" என்பது.இது நாம் அடிக்கடி உணரும் "தண்ணறும்"
சங்கத்தமிழ்ச்சொல்.எங்கள் உறவினர் தென்காசி அருகில் உள்ள‌
இலஞ்சி.குறவஞ்சிப்பாக்கள் எதிரொலிக்கும் ஊர் அது.டி.கே.சி எனும்
தமிழ்ச்சுவைத் திலகம் அவர்களது ஊரும் அதுவே.உங்கள் குறுங்கட்டுரை ஒரு பெருந்தொகுப்பின் "தீசிஸ்" எங்களுக்கு.

அன்புடன் ருத்ரா




நன்றி, குலசைக் கவிஞரே. கவிஞர் ஹரிகி ஹரியமுதம் தருகிறார். வடமொழி அறிந்த நண்பர்
தேவராஜன் (தேவ்) இலஞ்சிக்காரர்தான். தேவாமிருதம் மின் தமிழ் குழுமங்களில் தொடர்ந்து
பொழியவேண்டும். அன்புமடல்கள் பல என் இழையில் பார்த்திருப்பீர்கள்.

சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளைக்கு வாரிசு இல்லை.16 கிரவுண்ட் நிலம் அடையாறில்
என்பதாக நினைவு. அதை மகப்பேறு வார்ட் கட்ட நெல்லைக்கு எழுதிவைத்தார்.
அவரது தாயாதி ஜஸ்டிஸ் மகராஜன் அதை ராபிசே மறைவின்பின்னர் செய்தார்.
மகராஜனின் மாப்பிள்ளை உயர்திரு. ரத்னசபாபதி (செப்பறைக் கோயில் ஸ்வாமி பெயர்)
தமிழ்மரபு அறக்கட்டளை ‘மரபுச்செல்வர்’ பட்டம் அளித்தபோது என் சார்பில் பெற்றவர்
அந்த உங்கள் பகுதிக்காரர்தான்:

மகராஜனுக்கு டிகேசி எழுதிய கடிதங்கள் நூல் படித்திருக்கிறீர்களா?
சுமார் 2 லட்சம் நூல்கள் கேட்பாரின்றி கிடக்கின்றன. புதியதோர் உலகம்
செய்வோம் என்ற புரட்சிக்கவிஞர் சொன்னார்: ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா’.
வேரில் பழுத்த பலாவாக முதல் தளத்தில் கிடந்த பல நூல்கள், அரிய கட்டுரைகள், ஆவணங்கள்
சென்னைப் படுமழையில் அழிந்து பட்டனவாம். கவன்றேன். சில அவைபற்றி எழுதுகிறேன்.

உங்கள் சங்கச் சான்றோர் செய்யுள் போன்ற கவிதை கண்டபோழ்து
இலிங்கம் என்ற சங்கச் செய்யுளில் எங்கே ஒளிந்துள்ளது என்ற ஆராய்ச்சிபற்றிச்
சிறுகுறிப்பு அளிக்க அவாவினேன். அரங்கம் என்னும் தமிழ்ச் சொல்
ஆற்றிடைக்குறை, மேடை. இது அ- இழந்து ரங்கம் ஆகும்.
ரங்கம் ர- சொல்லாதவர்களால் லங்கா என ஆகிவிட்டது.
இது மீண்டும் ’ரி-பாரோ’ ஆகி இலங்கை நாடு எனப்படுகிறது.
அரங்கம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபுதான் லங்கா/இலங்கை (< அரங்கம்).
அப்போது, பால்ஸ் ஸ்ட்ரெய்ட்ஸ் ஒரு ஆறாக தான் தமிழர்
கருதினர். எனவே, அரங்கம் எனப் பெயரிட்டனர். அதனாற்றான்,
திரு அரங்கனின் கோபுரம் கட்டும்போது இலங்கை அழியுமோ
என்ற அச்சம் அவர்களுக்கு. பெரும்போர் அழிவுகள் ஏராளம்.
சிந்து சீ என்னும் ஈஞ்சை. இதுவே, சீழம்:ஈழம் எனும் பெயர். (சமணர்: அமணர் போல.)

ஆனால், நல்லியகோடன் என்னும் சிற்றரசனின் ஊர் மாவிலிங்கை/மாவிலங்கை
காவல்மரம் பற்றியது. மிக அரிதான இலிங்கம் பற்றிய குறிப்பு என விளக்க
முற்பட்டேன்.

காந்திக் கவிதை கண்டேன். வாழ்க.

பிற பின்! தங்கள்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 31, 2016, 9:38:50 AM1/31/16
to வல்லமை, mint...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com, pira...@googlegroups.com, rde...@gmail.com


On Sunday, January 31, 2016 at 5:06:37 AM UTC-8, ருத்ரா இ.பரமசிவன் wrote:



அன்புள்ள திரு.கணேசன் அவர்களே

மிக்க நன்றி.
இலங்கு என்றால் சிறப்புடன் (இங்கு நீர் வள நில வள சிறப்புடன்)
விளங்கு என்று தானே பொருள்.எனவே அந்த "பகுதிச்சொல்" தான்
நமது ஒரு பகுதியாக இருக்கும் "இலங்கை". இதன் மருவு சொல் தான் "இலஞ்சி" என்பது.இது நாம் அடிக்கடி உணரும் "தண்ணறும்"
சங்கத்தமிழ்ச்சொல்.எங்கள் உறவினர் தென்காசி அருகில் உள்ள‌
இலஞ்சி.குறவஞ்சிப்பாக்கள் எதிரொலிக்கும் ஊர் அது.டி.கே.சி எனும்
தமிழ்ச்சுவைத் திலகம் அவர்களது ஊரும் அதுவே.உங்கள் குறுங்கட்டுரை ஒரு பெருந்தொகுப்பின் "தீசிஸ்" எங்களுக்கு.

அன்புடன் ருத்ரா




நன்றி, குலசைக் கவிஞரே. கவிஞர் ஹரிகி ஹரியமுதம் தருகிறார். வடமொழி அறிந்த நண்பர்
தேவராஜன் (தேவ்) இலஞ்சிக்காரர்தான். தேவாமிருதம் மின் தமிழ் குழுமங்களில் தொடர்ந்து
பொழியவேண்டும். அன்புமடல்கள் பல என் இழையில் பார்த்திருப்பீர்கள்.

சொல்லின்செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளைக்கு வாரிசு இல்லை.16 கிரவுண்ட் நிலம் அடையாறில்
என்பதாக நினைவு. அதை மகப்பேறு வார்ட் கட்ட நெல்லைக்கு எழுதிவைத்தார்.
அவரது தாயாதி ஜஸ்டிஸ் மகராஜன் அதை ராபிசே மறைவின்பின்னர் செய்தார்.
மகராஜனின் மாப்பிள்ளை உயர்திரு. ரத்னசபாபதி (செப்பறைக் கோயில் ஸ்வாமி பெயர்)
தமிழ்மரபு அறக்கட்டளை ‘மரபுச்செல்வர்’ பட்டம் அளித்தபோது என் சார்பில் பெற்றவர்
அந்த உங்கள் பகுதிக்காரர்தான்:

தேவ் போன்றோர் ஏற்பாடு செய்து திவாஜி ஐயா போன்ற பெரியோர் வந்திருந்த ,
தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்ச்சி (சென்னையில்):
த.ம.அ வலைக்கண் தொடுப்பில் சொற்பொழிவுகளைக் கேட்கலாம்
Reply all
Reply to author
Forward
0 new messages