எழுத்தாளர் ஜெயமோகன் பக்கங்கள்..

437 views
Skip to first unread message

ஸ் பெ

unread,
Jan 30, 2013, 10:56:09 AM1/30/13
to panbudan
எழுத்தாளர் ஜெமோகனின் எழுத்துகளில் சிலாகித்த, விமர்சிக்க நினைக்கும், பகிர நினைக்கும் படைப்புகளை இங்கே பகிர்ந்துக் கொள்வோம்..


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Jan 30, 2013, 10:56:48 AM1/30/13
to panbudan

வற்கீஸ் என் அண்ணாவுடன் படித்து தோற்று ஏழாம் வகுப்பில் என்னுடன் படிக்க வந்தான். என்னுடன் படித்த அவனது தம்பி சேவியர் என் தங்கையுடன் படிப்பதற்காகச் சென்றான். வற்கீஸின் அப்பா ராணுவ வீரராக ஓய்வுபெற்று அப்போது அருமனையில் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தார். அக்காலத்தில் அருமனையில் நான்கே டாக்ஸிகள். ஆகவே டாக்ஸி ஓட்டுவதென்பது ஒரு உயர்தொழில்நுட்ப வேலை. டிரைவர் ராஜு அவரது தைரியம், நிதானம், யார் என்றில்லாமல் உதவும் தன்மை ஆகியவற்றுக்காக புகழ்பெற்றிருந்தார். அவர் இறந்து இப்போது முப்பத்தைந்து வருடங்களாகின்றன, இன்றும் அவரை நினைவுகூர்பவர்கள் உண்டு.

டிரைவர் ராஜூ என் அப்பாவின் நண்பர். அப்பா அப்போது அருமனை சார்பதிவாளர் அலுவலகத்தில் வேலைபார்த்தார். ராஜூசாரும் வாயைத்திறந்து பேசும் பழக்கம் குறைவானவர். அப்பாவும் அப்படித்தான். இருவரும் சார்பதிவாளர் அலுவலகம் முன்னால் இருந்த டீக்கடையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சும்மா இருந்து நட்பை வளர்த்தார்கள். சிலசமயம் ராஜூசார் எங்கள் வீட்டுக்கு வருவார். ஒருமுறை பேரீச்சம் பழம் கொண்டுவந்து தந்தார், பேரீச்சம் பழம் அக்காலத்தில் மிகமிக அபூர்வமாகவே கிடைக்கும். அனேகமாக எடத்துவா சர்ச்சுக்கு அல்லது சவேரியார் திருவிழாவுக்குப் போகிறவர்கள் திருவனந்தபுரம் பீமாப்பள்ளி உறூசு நேர்ச்சைக்குப் போகிறவர்கள் கொண்டு வருவார்கள்.

என்னுடன் வற்கீஸ் படிக்க வந்தபின்புதான் அவன் ராஜூசாரின் மகன் என்று தெரிந்துகொண்டேன். அதற்கு முந்திய வருடமே அவர் இறந்துவிட்டிருந்தார். அவருக்கு ரத்த அழுத்தம் இருந்து திடீரென்று இதயத்தாக்குதல் வந்தது. ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் போன்றவற்றுக்கெல்லாம் அப்போது எங்களூரில் மருத்துவம் ஏதும் கிடையாது.

வற்கீஸ் அவனது அப்பா இறந்த நாள் முதல் நோயாளியாக இருந்தான். பள்ளிக்கு வரும் நாட்கள் குறைவு. குழந்தைகளுக்கான காசநோய் இருந்தது. வயிற்றுக்கோளாறுகள் உண்டு. ஆகவே படிப்பு அனேகமாக கிடையாது. எப்போதுமே நோயாளியின் பாவனை.  மெல்லிய குரலில் பெரிய மனிதர்களுக்குரிய நிதானத்துடன் பேசுவான். விளையாட்டுகளுக்கு வருவதில்லை.

என்னை மிகவும் கவர்ந்தது அவன் எண்ணை தேய்த்து மினுமினுவென வைத்து வரும் குருவிக்கூடு கிராப். அதைவிட கவர்ந்தது, அவன் தன் தம்பியிடம் வைத்திருந்த பிரியம். எங்கள் ஊரில் அண்ணாக்கள் தம்பிகளை டேய் என்று அதட்டுவார்கள். ஆனால் வற்கீஸ் ‘தம்பி’ என்று மட்டும்தான் கூப்பிடுவான். அவர்களுக்குள் மாற்றுக்கருத்தோ பிணக்கோ வருவதில்லை. என் அண்ணாவும் என் மீது பெரும் பிரியம் கொண்டவர்தான். ஆனால் அது அப்பா மகன் உறவு போல. என்னை அவர் கைக்குழந்தைபோல நடத்துவார். பதினொரு மணி இடைவேளையில் என்னைப்பார்த்தால் என் தலைமுடியை சீவிவிடுவார்.

ஆகவே நானும் வற்கீஸ¤ம் நண்பர்கள் ஆனோம். அவன் வீடு பள்ளிக்குப் பின்பக்கம் இரண்டு தோப்புகளுக்கு அப்பால் இருந்தது. போகும் வழியெல்லாம் ரப்பர் தோட்டம். ஒரு ‘விளை’க்குள் மரநிழலில் நான்கு கல்லறைகள். அவை சிமிண்ட் மெழுகி பளபளவென்றிருக்கும். அவற்றின்மீது படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருப்போம். மதியம் சாப்பிடுவதற்காக வற்கீஸ் அவன் வீட்டுக்குச் செல்லும்போது நானும் செல்வேன்.

வற்கீஸின் வீடு அக்காலத்து அளவுக்கு பெரியது. உயரமான திண்ணை. இருபக்கமும் சிறிய அறைகள். உள்ளே கூடம். அதை ஒட்டி சமையலறை. அவன் வீட்டில் அப்போது அவனுடைய மூத்த அண்ணா கோ-ஆபரேட்டிவ் வங்கியில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் சிறிய தொகை மட்டுமே வருமானம். அவன் அம்மா சிறிய அளவில் நாட்டு மருத்துவம் செய்வார். மிகக் கஷ்டமான ஒரு சூழல். குடும்பத்தலைவன் இல்லாமலாகும்போது அக்காலத்தில் குடும்பங்கள் அப்படியே குடைசாய்ந்துவிடுவது வழக்கம்.

வற்கீஸ¤க்கு உடன்பிறந்தோர் ஏழு. இரண்டு ஆண், ஐந்து பெண்.  மேலும் இரு அக்காக்கள் இருந்தார்கள். இரு தங்கைகள். மூச்சுத்திணறச்செய்யும் அத்தகைய ஒரு சூழலில் ஒவ்வொருவரும் பிறர் மீது வன்மம் கொண்டு பிராண்டி ரத்தம் கசியக் கசிய வாழ்வதே நம்மூரில் வழக்கம். வறுமையும் இயலாமையும் வன்முறையையே வடிகாலாலக் கொள்கின்றன.

மேலும் இப்போதை விட அக்காலகட்டத்தில் குடும்பங்களுக்குள் வன்முறை மிக அதிகம் என்று இன்று தோன்றுகிறது.  என் நினைவில் பெரும்பாலான வீடுகளில் அனேகமாக தினமும் பெரும் சண்டைகளும் அடிதடிகளும் நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவன் உச்சகட்ட வன்மத்துடன் வெறுத்து மாறி மாறி வசைபாடுவதே பெரும்பாலான அரட்டைகள். மாமியார் மருமகள் சண்டை, கணவன் மனைவி சண்டை, வளர்ந்த மகன்களுக்கும் தந்தைகளுக்கும் சண்டை, கல்யாணமாகாத மகள்களுக்கும் தாய்க்கும் சண்டை, சகோதரச் சண்டைகள்…. அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை வகைதொகையில்லாமல் அடித்துத் துவைப்பார்கள். பெற்றோர் அடித்து ரத்தகாயங்கள் ஏற்படுவதும் ஊனங்கள் ஏற்படுவதும்கூட சாதாரணம்.

ஆனால் வற்கீஸின் வீட்டில் ஒருவருக்கொருவர் இருந்த அன்பும், மென்மையான பழகும்முறையும் எனக்குப் பேராச்சரியமாக இருந்தது. அவனது அக்காக்கள் மிக உற்சாகமானவர்கள். அக்காலத்தில் கல்யாணமாகாத பெண்கள் இருக்கும் வீடுகளில் எல்லாம் ராணி வாராந்தரி இருக்கும். ராணிமுத்து வெளிவர ஆரம்பித்த காலம். இலங்கை வானொலியின் திரைப்படப்பாடல்களும் ஒலிநாடகங்களும் பிரபலம். அவற்றைப்பற்றி அக்காக்களுடன் அரட்டை அடிப்பேன். நான் படித்தவற்றைப்பற்றிப் பேசுவதற்கு ஆள்தேடி அலைந்த காலம் அது.

வற்கீஸின் அம்மா கறுப்பாக களையாக இருப்பார்கள். பேச்சு குறைவு. பெரும்பாலும் சற்றே வெட்கம் கலந்த சிரிப்புதான். அவர்களிடம் எனக்குத் தனியான பிரியமும், நெருக்கமும் இருந்தது. முக்கியமான காரணம் என்னை மிகச்சிறிய குழந்தைபோல நடத்தியது. எப்போது போனாலும் ஏதாவது ஒன்று தின்னக்கொடுப்பார். மாங்காய், தேங்காய்த்துண்டு,கொய்யாக்காய். நான் அவர்களிடம் கத்தி கதைகளை நடித்துக் காட்டுவேன். சிரித்துக்கொண்டே இருப்பார்.

அத்துடன் அவர்கள் வீட்டில் இருந்த கிறித்தவச் சூழலும் எனக்கு பெரும் கவர்ச்சியைக் கொடுத்தது. கிறித்தவச்சூழல் என்றால் கன்யாகுமரி மாவட்டத்தில் சில நுட்பமான வேறுபாடுகள் அன்று உண்டு. வெள்ளையர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் வழியாக அனைத்துக்கிறித்தவர்களிடமும் பரவிய சில வழக்கங்கள். சன்னல்களுக்கும் வாசல்களுக்கும் திரை போடுவது, டைனிங் டேபிள் அல்லது குறைந்த பட்சம் டெஸ்க், மேஜைகளுக்கு விரிப்பு, நுழையும் இடத்தில் கால்துடைக்கும் மெத்தை, எம்பிராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டைகள், செயற்கைப் பூஜாடி போன்ற அலங்காரப்பொருட்கள், சுவர்களில் பைபிள் வாசகங்கள் மலர்கள் போன்றவை. எண்பதுகளுக்குப்பின்னர்தான் அவை இந்து வீடுகளில் வேறு வடிவில் வந்து சேர்ந்தன.

நான் செல்லும் ஒவ்வொருமுறையும் வற்கீஸின் வீட்டில் ஏதாவது ஒன்று புதிதாக இருக்கும். துணிப்பொம்மை , துணியில் பின்னப்பட்ட பைபிள் வாசகம் என. வற்கீஸ் நன்றாகவே படம் வரைவான். வீட்டை ஒரு அழகான இடமாக வைத்துக்கொள்வது என்ற கருத்தே அக்காலத்தில் எனக்கு புதிது. எங்கள் வீடு சுத்தமாக ஆனால் காலியாக இருக்கும். புத்தகங்கள் மட்டுமே அடுக்குகளில் இருக்கும். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெரிதாகக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதனால் சாமிப்படங்கள் இருக்காது. என் அண்ணா குப்புறப்படுத்துச் சிரிக்கும் ஒரு புகைப்படம் மட்டும்தான்.

ஞாயிறுகூட அருமனை வாசகசாலைக்குப் போய்விட்டு அவன் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். ஒருநாள் போகாமல் இருந்தால்கூட அவன் அம்மா ‘ஏன் வரேல்ல?’ எனறு ஆதுரத்துடன் கேட்பார்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அவன் மூத்த அக்கா திருமணமாகி சென்னைக்குச் சென்றார்கள். அப்போதுதான் நாங்கள் முழுக்கோட்டில் இருந்து சொந்தவீடுகட்டி திருவரம்புக்குக் குடிபெயர்ந்தோம்.

பதினொன்றாம் வகுப்பில் நான் வென்றேன். வற்கீஸ் தோல்வியடைந்தான். நான் மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் புகுமுகவகுப்புக்கு சென்றேன். அவன் அருமனையிலேயே நாதன் ஸ்டுடியோ என்ற புகைப்படநிறுவனத்தில் பயிற்சியாளனாகச் சேர்ந்தான். நான் ஐந்து கிலோமீட்டர் நடந்து அருமனைக்கு வந்து அங்கிருந்து கல்லூரிக்குச் செல்லும் போது ஸ்டுடியோவில் உரிமையாளர் இல்லாவிட்டால் ஓரமாக ஒதுங்கி நின்று பேசிக்கொண்டிருப்போம். என்னுடைய ஆர்வங்கள் எதிலும் அவனுக்கு ஈடுபாடு இல்லை. இலக்கியம், அரசியல், சினிமா எதுவுமே தெரியாது. ஆனாலும் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அவன் வீட்டுக்குப் போவது குறைந்தது.

அதன்பின் நான் நாகர்கோயில் கல்லூரிக்குச் சென்றேன். அருமனைக்கு போக வாய்ப்பே இல்லை. இலக்கியமும் அரசியல் ஈடுபாடுகளும் ஆன்மீகப்பித்தும் சுழற்றியடித்தன. ஊரைவிட்டு ஓடிப்போனேன்.  என் அப்பா அம்மா இருவரும் தற்கொலைசெய்துகொண்ட பின்பு ஊருடன் இருந்த உறவு முற்றிலும் அறுந்தது. அதன்பின் ஒருமுறை எங்கள் சொத்துக்களில் எஞ்சியதை விற்க அருமனை சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தேன். வற்கீஸ் சாலையில் என்னைப் பார்த்துக் கைகளைப் பிடித்துக்கொண்டான். கண்களில் கண்ணீர். ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சநேரம் கழித்து நான் கைகளை விடுவித்துக்கொண்டு தலைகுனிந்து விலகிச் சென்றேன்.

அடுத்த சந்திப்பு என்னுடைய இன்னொரு நண்பனும் வகுப்புத்தோழனுமான விஸ்வநாதனின் திருமணத்தில். நான் காஸர்கோட்டில் இருந்து வந்திருந்தேன். அப்போது வற்கீஸ் மேனகா ஸ்டுடியோ என்ற சொந்த நிறுவனத்தைத் தொடங்கி விட்டிருந்தான். அதற்காக வங்கிக் கடனுக்கு அலைந்த அனுபவங்களைச் சொன்னான். சிறுவயதிலேயே இருந்த ஓவியத்திறன் கைகொடுத்தது.  அவனுடைய ஸ்டுடியோவுக்குச் சென்றேன். சேவியரும் அவனும் சேர்ந்து அந்த ஸ்டுடியோவை நடத்தினார்கள். அப்போதே அது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்திருந்தது. நாதன் ஸ்டுடியோவிலேயே வற்கீஸ் திறமையான புகைப்படக்காரனாகப் பெயர் வாங்கியிருந்தான்.

அன்றெல்லாம் கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள்தான் அதிகம். எடுத்த எதிர்பிரதி மீது தூரிகையால் அமிலத்தைத் தொட்டுத் தொட்டு வரைந்து படத்தை மேம்படுத்த வேண்டும். படம் எடுத்தபின்பு ”கன்னம் கொஞ்சம் கொழுகொழுண்ணுட்டு இருக்கணும் கேட்டுதா?” என்று கேட்டுக்கொள்வார்கள். புகைப்படம் அதற்குரியவரின் சாயலோடு இருப்பதைவிட அழகாக இருப்பதே முக்கியம். வற்கீஸ் தெளிவாக படத்தை வரைந்து கொடுப்பான். குறிப்பாக அவன் வரைந்த புகைப்படஓவியம் அழகு குறைந்த பெண்கள் திருமணமாக உதவியது. புகைப்படம் எடுப்பவர்களின் கிறுக்குகளைப்பற்றிச் சொன்னான். ஒரு ஆசாமி மீசைமீது இரு எலுமிச்சைப்பழங்களை நிறுத்தி வைத்து எடுக்க ஆசைப்பட்டார். நிற்கவேயில்லை. தூண்டிலுக்கு போடும் மெல்லிய பிளாஸ்டிக் நூலை வாங்கி அதை வைத்துக் கட்டி தலைமீது போட்டு தொங்கவிட்டு தந்திரக்காட்சியாகப் படம் எடுக்கப்பட்டது. பின்னர் நூல்  அமிலம் தொட்டு நீக்கப்பட்டது. அந்தக்கால கிரா·பிக்ஸ்!

அக்காலத்தில் வற்கீஸ் ஒரு ஆணழகனாக உருமாற ஆரம்பித்திருந்தான். இரவுபகலாக உடற்பயிற்சி. தோள்கள் கிண் என்று டி ஷர்ட்டுக்கு மேல் புடைத்து நின்றன. சட்டையைக் கழற்ற எந்நேரமும் ஆவல். வயிற்றில் அவன் உத்தேசித்த அளவு ‘கட்ஸ்’ வரவில்லை என்பதனால் அதிவேக பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறுவயதின் நோஞ்சான் வாழ்க்கைக்கு ஒரு பதில் போல இருந்தது அந்த வேகம். ஸ்டுடியோவில் அவன் முண்டா முறுக்கி நிற்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் இருந்தது.

மீண்டும் நான் வற்கீஸைச் சந்தித்தது ஐந்து வருடம் கழித்து என் திருமணத்தில். குமாரகோயிலில் அவன்தான் புகைப்படம் எடுத்தான். அப்போது அவனுடைய பொருளாதார நிலைமை பெரிதும் மேம்பட்டிருந்தது. அக்காக்களுக்குத் திருமணம்செய்து வைத்து தங்கைக்கும் பார்த்துக்கொண்டிருந்தான். குமரிமாவட்ட ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டிருந்தான். சாதாரணமாக கையைபிடித்தாலே நம்மை அப்படியே தூக்கி சுழற்ற வேண்டும் என்ற தினவு தோள்களில் இருந்தது. காளை போல வலிமையான தசைகள்.

அதன்பின் நான் தக்கலைக்கு வந்தபோதுதான் வற்கீஸ¤டன் உறவு உருவானது. அப்போது அவனுடைய ஸ்டுடியோ பெரிய நிறுவனமாக ஆகிவிட்டிருந்தது. மூன்று மாடிக்கட்டிடம் கட்டி அதில் ஸ்டுடியோவை வைத்திருந்தான். தங்கைகளுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்தான். ஒருமுறை என் பையனுடன் ஸ்டுடியோவுக்குச் சென்றுவிட்டு அவசரமாகத் திரும்பிவிட்டேன். அதன் பின் அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தேன்.

அவன் அண்ணாவின் மகள் திருமணத்துக்குச் சென்றபோதுதான் அவன் அக்காக்களையெல்லாம் மீண்டும் கண்டேன். பெரும்பாலும் யாருக்குமே என்னை தெரியவில்லை. முப்பது வருடங்கள் பின்னால் தாண்டி நினைவுகளைச் சொன்னபோது ”ஆமா…ஜெயனாக்குமே” என்று எங்கிருந்தோ என் பழைய முகத்தைத் தேடி எடுத்தார்கள். அவர்களும் அம்மாக்களும் பாட்டிகளும் ஆகி எங்கோ நகர்ந்து விட்டிருந்தார்கள். வற்கீஸின் அண்ணாவுக்கு மட்டும்தான் பெரிய மாற்றங்கள் இல்லை.

வற்கீஸ் தங்கைகளுக்கு திருமணங்கள் முடித்து தாமதமாகத்தான் திருமணம் செய்துகொண்டான். மூன்று குழந்தைகள். மூத்தவள் ஸ்டெ·பி நான்காம் வகுப்பு. நடுவே ஒரு பையன். கடைசிக்குழந்தைக்கு ஒருவயது. அழகிய சிரிப்புடன் ஆட்களை அடையாளம் காண ஆரம்பித்திருந்தது. ”பேரு என்ன தெரியுமா, ஜெய ஷரோன்” என்றாள் வற்கீஸின் மனைவி. ”வித்தியாசமா இருக்கு ”என்றேன். ”கூட்டுக்காரனுக்க பேரு வரணும்னு இட்டதாக்கும்” என்று சிரித்தாள்.

வற்கீஸ் வெட்கத்துடன் ”மூத்த ரெண்டுக்கும் மத்தவங்க இஷ்டப்படியாக்கும் பேரிட்டது. நமக்கும் ஒரு ஜெயன் வேணுணாக்கும் இது..” என்றான். நான் குழந்தையைக் கையில் வைத்தபடி கல்யாணத்தில் நடந்தேன். விஸ்வநாதனின் முதல் குழந்தை பெயர் ஜெயராம்.”உன் பேரு வரணும்ணு போட்டதாக்கும்”என்று சொல்வான். என் பெயரை குழந்தைகளுக்குப் போட்டதாக சில வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது ஆச்சரியம்தான். இவர்கள் இருவருக்கும் இன்றைய என் ஆளுமையுடன் தொடர்பே இல்லை. நான் எழுதிய ஒரு வரியைக்கூட அவர்கள் படித்ததில்லை. ஏன், என் எழுத்தாளன் என்ற அடையாளமே அவர்கள் அறிந்ததல்ல.

சொந்தக்காரர்களின் பெரும்கூட்டம். வற்கீஸ் இப்போது ஒரு ஊர்ப்பெரிய மனிதன். நாற்பத்தைந்து லட்சருபாய் மதிப்பில் அருமனையில் வீடு கட்டுகிறான். அதைவிட எந்நிலையிலும் எவரிடமும் மாறாத உண்மையான பிரியம் கொண்ட பேச்சும் நிதானமும் கொண்ட அபூர்வமான ஆளுமை அவன். அவனைக் கண்டதுமே மக்கள் மனம் மலர்கிறார்கள். அவனுடன் சாலையில் நடந்தால் பத்தடிக்கு ஒருவர் அவனிடம் நலம் விசாரிப்பார்கள்.

வற்கீஸின் அம்மா உள்ளே இருப்பதாக வற்கீஸ் வந்து சொன்னான். உள்ளே எட்டிப்பார்த்தேன். நிறையப் பெண்கள். ”இரு கூட்டிக்கிட்டு வாறேன்” என்றான். போகும்போதே எச்சரிக்கயாக ”அம்மைக்கு ஒண்ணும் ஓர்மை இல்லை…”என்றான். அவர்களுக்கு எண்பது வயது தாண்டிவிட்டது. பலவித நோய்கள். இரு அறுவைசிகிழ்ச்சைகள். பேரக்குழந்தைகளையும் சொந்தக்காரர்களையும் கூட நினைவில் நிறுத்த முடியவில்லை.

அம்மாவை வற்கீஸ் வெளியே கூட்டிவந்தான். ”ஆளு தெரியுதா அம்மா?” அவன் அம்மா என்னை பார்த்துப் பல் இல்லாத வாயால் மலர்ந்து சிரித்து ”பின்ன, அருமனைக்காரருக்க மகனாக்குமே” என்றார். முதல் மகிழ்ச்சிக்குப் பின் எனக்கு மலைப்பு ஏற்பட்டது. முப்பது வருடங்கள் முன்பு என் முகம் எப்படி இருந்திருக்கும். அந்த ஜெயமோகன் அல்ல இப்போதுள்ள நான். அம்மா என்னில் இருந்து அந்தக் கூச்சம் நிறைந்த, விளையாட்டுப்பையனை எப்படிக் கண்டடைந்தார்கள்? என் கையை வருடியபடி ”நல்லாருக்கியா? பிள்ளைய எத்தனை?” என்றார்கள். அதே வெட்கச்சிரிப்பு.

விடைபெறும்போது நான் அவர்களின் கைகளைப்பிடித்தபடி ”போய்ட்டு வாறேன்”என்றேன். அவர்கள் என் கைகளில் மாறி மாறி முத்தமிட்டார்கள். அந்த முத்தங்களின் தொடு உணர்வு காரில் நாகர்கோயில் வந்து சேர்வது வரை இருந்தது. வீடுவரை அந்த ஆச்சரியம் என்னிடம் இருந்தது, எப்படி அடையாளம் கண்டுகொண்டார்கள். பெற்ற தாயேகூட முப்பது வருடங்களில் முகம் மறந்துவிடுவாள் என்பார்கள்.

எழுத்தின் நடுவே என் மகனை ஏறிட்டுப் பார்த்த கணத்தில் ஒன்று தோன்றியது. நான் அவர்களைப் பிரிந்த அதே வயது. இவனைப்போல எதைப்பற்றியும் கவலை இல்லாதம், உற்சாகமே உருவான பையனாக இருந்திருப்பேன். வாழ்க்கையின் எந்த இருட்டையும் கண்டிராத கண்கள். எந்தத் தீமையின் நிழலும் படியாத மனம்.  அவர்களின் அன்றைய இக்கட்டான வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒளியுடன் வரும் ஒரு தேவதை போல் இருந்திருப்பேன்.

இப்போது வெகுதூரம் வந்துவிட்டேன். என் மனமும் ஆத்மாவும் சொற்களால் நிறைந்து கனத்துவிட்டிருக்கின்றன. ஆனாலும் என்னில் அந்த தேவதை கொஞ்சம் மிஞ்சியிருக்கக் கூடும். ஓர் அன்னை மட்டுமே கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்குக் கொஞ்சம்.

ஸ் பெ

unread,
Jan 30, 2013, 11:03:16 AM1/30/13
to panbudan
இந்த படைப்பை வாசித்த போது, ஊரில் நான் பார்த்த சில முகங்கள் ஞாபகத்தில் வந்து போனது... குமரி கிறிஸ்தவர்களின் வீடுகள் இப்படியப்படி இருக்கும் என விவரித்த போது எத்தனை நுணுக்கமான அவதானிப்பு இது என வியந்து போனேன்... நானே அவற்றை கடந்து வந்தபோது கூட இதற்க்கான பின்புலமான காரணங்களை சிந்தித்ததே இல்லை....
நானும் வர்கீசை எங்கேனும் சந்தித்திருப்பேன் என்றே தோன்றுகிறது....

2013/1/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

வற்கீஸின் அம்மா


ஸ் பெ

unread,
Jan 31, 2013, 4:25:16 AM1/31/13
to panbudan

முடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு

எம். முடிசூடியபெருமாள் பிள்ளை 1963ல் முதுகலை சமூகவியல் முடித்து தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி பூதப்பாண்டியில் ஆசிரியராக வேலைபார்க்கையில்தான் முனைவர் பட்ட ஆய்வுக்கு சேர்ந்தார். அன்று வளர்குழவியாக சமூகவியலின் இடுப்பில் அமர்ந்திருந்த மானுடவியலில் தெ.சக்ரபாணிக் கோனார் எம்.ஏ.டி.லிட். வழிகாட்டலில் மதுரைப்பல்கலைகழகத்தில்.

முதலில் தலைப்பு ஒன்றும் தகையவில்லை. பல கோணங்களில் யோசித்துப்பார்த்தார். மலைவாழ் மக்களைப்பற்றி ஆய்வுசெய்வது மரபு. ஆனால் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் சிவாலய தரிசனம் செய்தே ஆகவேண்டிய தீட்சை எடுத்த சைவராகையால் அது முடியாது. உள்ளூர் தாழ்குடிகளைப் பற்றி செய்யலாம்தான். ஆனால் அவர்களில் நந்தனார் தவிர பிறர் நீசர்கள் என பிள்ளைவாள் நம்பினார். நந்தனார் பற்றி ஆராய்வது சைவமே ஒழிய மானுடவியல் அல்ல.

அப்போதுதான் அழகியபாண்டிபுரத்தில் தன் அம்மாச்சனின் வீட்டுக் கல்திண்ணையில் மதியச்சாப்பாட்டின் சூடு அடங்க துண்டுவிரித்துப் படுத்துக் கிடந்தபோது தாழக்குடி சுப்பையாபிள்ளை அந்தக் கருத்தை முன்வைத்தார்.”ஏல மாப்ள நீ கண்ட கண்ட களுதைகளை போட்டு நோண்டிட்டுக் கெடக்குகதுக்கு பேயாம நம்ம வெள்ளாம்புள்ளையள பத்தி ஆராய்ச்சிசெய்லே…வேணுங்கிறத கேளு, சொல்லுகேன். பெண்டுபிள்ளையளப்பத்தி உன் மாமிட்டே கேளு, பிச்சுப் பரத்தி வைச்சுப்போடுவா. மிச்சத்துக்கு அடுக்களையிலே ஆச்சி வேற கெடக்கா…பின்ன என்ன வேணும்?”‘

முதலில் முச்சூபிள்ளைக்கு அது நல்ல யோசனையாகப்படவில்லை. வெள்ளாளர்களைப்பற்றி என்ன ஆராய வேண்டிக்கிடக்கிறது? ”சும்மா கெடயும் மாமா… நடக்கப்பட்ட காரியமா சொல்லும். இல்லேண்ணாலும் வெள்ளாப்பயலுகளைப்பத்தி என்னத்த எளுத? சாளைப்புளிமொளம் எப்ப்டி காச்சுகதுண்ணா? சோலி மயிரப் பாரும்”

”இல்லடே…நான் சொல்லுகது அதில்ல…” என்று தாசுப்பிள்ளை அருகே புரண்டுவந்தார். ”தாளி, இங்கிண இப்பம் நிண்ணவன் நடந்தவன்லாம் வெள்ளாளன்லா? வழிசுத்தம்ணு சொன்னா சிரிக்கானுக. அப்டி விட்டா பின்ன எலவாணியனும் வளைச்செட்டியும் நம்ம வாசலில வந்து நிண்ணு பொண்ணு கேப்பானுக….”

”அதுக்கு இப்ப என்ன செய்யணும்கியோ? அடிமாட்டுக்கு வைக்குததுமாதிரி சுத்த வெள்ளாளனுக்கு எல்லாம் காதில சூடுபோட்டு முத்திர வைக்கணும்கியேளா?” முச்சூப்பிள்ளை சொன்னார்.

”அதுவேண்டாம்லெ..இப்ப இருக்கபப்ட்ட வெள்ளாளன்ல அசல் யாரு, மூப்பு யாரு, என்னென்ன கூறு இருக்கு எல்லாத்தையும் எளுதி ஒரு புஸ்தகமாட்டு போட்டிரு…பின்ன ஒண்ணும்செய்ய முடியாதுல்லா? ” மேலும் நெருங்கி குரலைத்தாழ்த்தி ”நம்ம மேலத்தெரு அழகியநம்பியாபிள்ள எண்ணைக்கு பிள்ளைவாளானான்னு தெரியுமால ஒனக்கு? ஏல அவனுக பாண்டிநாட்டிலேருந்து வந்தவனுகள்லா? அங்க இவனுக யாரு என்னாண்ணு ஆரு கண்டா? நீ உனக்க எளுத்தில அவனுகளுக்கு ஒரு சவிட்டு வைக்கணும் கேட்டியா?”

இவ்வாறாக தலைப்பு உருவாகியது.”தமிழ்நாட்டு வெள்ளாளர் சமூக அமைப்பும் பிரிவுகளும் வாழ்க்கைமுறையும் – இனவரைவியல் நோக்கில்” ஆய்வு பதிந்து உடனே முதற்கட்ட தகவல்திரட்டில் பிள்ளைவாள் இறங்கினார். வெள்ளாளர் சாதியின் ஒரு குடும்பமரம் ஒன்றை போடுதல். தன்வீட்டு வாசிப்பறைச் சுவரிலேயே மரத்தின் அடியை வரைந்தார். ஆணிவேரை நன்றாக நீட்டி குமரிக்கண்டத்தில் வாழ்ந்த நியாண்டர்தால் குரங்குவரைக்கும் கொண்டுசென்று அடையாளம் செய்தார். மூன்று பக்கவேர்கள், சேரசோழ பாண்டியர்கள். சல்லிவேர்கள், பதினெண் வேளிர்கள். ”சல்லிப் பயக்க” என்று சொல்லி அவர்களுக்கு பெயர் சொல்லாமல் விட்டார். தாய்மரம் நாஞ்சிநாட்டு மருமக்கள்வழி வெள்ளாளர்களல்லாமல் யாராக இருக்க முடியும்? அ·தே ஆய்வின் விதையென்க.

நாஞ்சிநாட்டு மக்கள் வழி வெள்ளாளர்கள் தங்களை குமரிக்கண்ட ‘ராமபிதாகஸ்’ வம்சாவளியினர் என்றதை பிள்ளைவாள் ஏற்கவில்லை. ஆனால் முதல் ‘ஹோமோஎரக்டஸே’ நாங்கள்தான் என்று நெல்லைமாவட்ட சைவப்பிள்ளைமார் சொன்னபோது சற்று குழப்பமாகத்தான் இருந்தது. ”சீச்சீ அவனுகள்ட்ட அந்தப் பழக்கம்லாம் நானறிஞ்சவரை இல்லலே…. அதுக்கு நாம ஏர்வாடிப்பக்கமா போகணும் கேட்டியா? இவனுக அங்கிண இங்கிண போய் தொடுப்பு தொக்குவச்சு சீக்கு வாங்குவானுகளே ஒழிய…”என்று தாசுப்பிள்ளை ஐயப்பட்டார்.

சோழியவேளாளர்களின் குடுமி சும்மா ஆடாது என்ற தகவல் கிடைத்தது. துளுவ வேளாளர் துளுநாட்டிலிருந்துவந்தவர்கள். சரி, தொண்டைமண்டல வேளாளர்கள்? கொங்குவேளாளர்? கார்காத்த வேளாளர்கள் எண்ணிக்கையில் குறைவு. செல்வாக்கு அதிகம். ஆகவே அவர்கள்தான் வேளாளர்களில் உயர்சாதி என்றார்கள் அவர்கள். ”எவன் சொன்னான்?”என்றார் சிவ தீக்கை வாங்கி கழுத்தில் உருத்திராக்கமிட்டு முக்கொட்டை பட்டம் பெற்ற திருநெல்வேலிச் சைவக்குலமணி குத்தாலிங்கம் பிள்ளை ”அவனுக தாலிய பாத்தேரா? தேவமார் தாலிமாதிரி இருக்கும்…அவன்லாம் தேவன்மார்லா? கார் காத்தன்னா என்ன அர்த்தம்? இல்ல கேக்கேன். மழைக்கு காத்திருக்கிறதுண்ணுதானே? வே, அவனுக வானம்பாத்த பூமிக்காரனுகள்லா?”

கார்காத்தபிள்ளைவாள் குமரகுருப்பிள்ளை ஆவேசத்துடன் வெற்றிலை எச்சிலை எட்டித்துப்பிச் சொன்னதாவது ,”என்ன சொல்லுறானுக? கேக்க ஆளின்னேன்னா நாந்தான் அப்பன் நடராஜன் ஆடறதுக்கு மத்தளமடிச்சேன்னு சொல்லிருவானுக போல இருக்கே? இப்ப எழுதிக்கிடுங்க தம்பி. சோழியன்னா என்ன?அந்தக்காலத்திலே இவனுக நாகபட்டினம் காரைக்கால் கடக்கரையிலே சோழி பொறுக்கி கொண்டாந்து விக்கிறத எங்கப்பா கண்ணால பாத்திருக்காரு…சோழ ராஜாவா, இவனுகளா? நல்ல கணக்கு ஹெஹெஹெ”

துளுவ வேளாளர்தான் ராஜராஜசோழனுக்கு பெண்கொடுத்த வெங்கிநாட்டார் என்றனர் அவர்கள். ”குந்தவை எங்க குடும்பத்து மருமகளாக்குமே…அவ நினைவாலே நாங்க இப்பவும் எங்க கல்யாணங்களிலே பொண்ணை குந்தவைச்சுத்தான் தாலியக் கட்டுறது” கொங்கு கவுண்டர்கள் கன்னடதேசத்து குடியேறிகளான கவுடர்களே என சைவவேளாளர் வாதாட அவர்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு கோங்குமரத்தடியில் சிவபெருமானைக் கூடிய தேவகன்னிகை அங்கேயே பெற்றுப் போட்டுவிட்டுப்போன குழவியிலிருந்து உதித்த வம்சம் என்றார்கள்.

நாலைந்துமாதத்தில் ஒன்று தெரிந்தது எல்லா பிள்ளைமாருக்கும் அவர்கள்தான் அசல் என்றும் முதல் என்றும் நினைப்பு இருக்கிறது. தன் ஆய்வேட்டின் முதல் ஈவை பிள்ளைவாள் குறித்தார். ‘ஒருவன் தன் சாதியையே பூமியில் முதல் சாதி என்று நினைக்கிறான் என்பது அவன் பிராமணன் என்பதற்கு ஆதாரம். ஒருவன் தன் சாதிப்பிரிவே வேளாளர்களில் முதலானது, உண்மையானது என்று சொன்னான் என்றால் மட்டுமே அவன் உண்மையான வேளாளன்”

கொண்டைகட்டிப் பிள்ளைமார், கொடிக்கால் பிள்ளைமார், கீழ்நாட்டுப் பிள்ளைமார்,காரைக்காட்டுப்பிள்ளைமார், நரங்குடிப் பிள்ளைமார், அரும்பூர் பிள்ளைமார்,சிறுகுடிப் பிள்ளைமார், வீரக்குடிப் பிள்ளைமார், கோட்டைப் பிள்ளைமார், நீறுபூசிப் பிள்ளைமார், செந்தலைப்பிள்ளைமார், படைத்தலைப் பிள்ளைமார், வெள்ளிக்கைப்பிள்ளைமார், பவளக்கட்டிப்பிள்ளைமார், தொள்ளைக்காதுப்பிள்ளைமார், ஆற்றங்கரைப்பிள்ளைமார் என்று ‘மற்ற பிள்ளைமாரை விட மேலான’ பிள்ளைமாரின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காகப் பெருகியபடியே போயிற்று.வீட்டில் வரைந்த சாதிமரம் மச்சைத்தொட்டு பலகையில் மடங்கி விரிந்தது.

இதில் குறுக்கும் நெடுக்கும் பிரிவினைகள். சைவம் அசைவம். அசைவத்திற்குள் சைவம். ”நாங்கள்லாம் வெள்ளியும் புதனும் கறிகவிச்சி தொடமாட்டோம். கண்டகண்ட வரத்து-போக்கு வெள்ளாளனுகளைப்போல இல்ல. மொறையும் நெறையும் விடுகதில்ல” என்று அசல் நெடுங்காட்டுப்பிள்ளைமார்குலத்தைச் சேர்ந்த வள்ளியம்மைஆச்சி சொல்லியதில் உச்சிக்காட்டுப் பிள்ளைமார் குறிப்புணர்த்தப்பட்டிருப்பதை உணரும்படி பிள்ளைவாள் அதற்குள் தேறியிருந்தார். ஆனால் ”நாங்கள்லாம் சைவப்பிள்ளைமாரிலே ஒரு பிரிவு. செத்தாலும் சிக்கன் சிக்ஸ்டி·பைவ் மட்டும் தொடமாட்டோம்” என்று சோங்குடிப்பிள்ளைமார் சொன்னபோது அவருக்குச் சற்று குழப்பமாகவே இருந்தது என்பது உண்மையே.

இதேபோல சைவத்துக்குள் அசைவமும் உண்டு. சைவப்பிள்ளைமாரில் ஒருவகையான நூற்றுக்குடைய பிள்ளைமார் காளிக்கு படைத்த கோழி ஆடு மட்டுமே உண்பார்கள். மற்றபடி சுத்த சைவம். ஆத்திர அவரசரத்துக்கு என காளியை வீட்டிலேயே நிறுவியிருப்பார்கள். பயணங்கள் பெருத்து ஓட்டல்களும் அதிகரித்தபோது சிறிய காளி சிலையை இடுப்பில் வைத்திருந்ததாகவும் இப்போது கழுத்திலேயே போட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ”எல்லா பிள்ளைமாரும் சைவம்தான் கேட்டுக்கிடுங்கோ. என்னான்னாக்க சிவனுக்க சடையிலேருந்து பிறந்தவன் வெள்ளாளன். சிவன் எருதையும் யமன் எருமையையும் பரசுராமன் கலப்பையையும் குபேரன் தொப்பையையும் இவனுகளுக்கு குடுத்து அனுப்பினாகன்னு ஐதீகம்….”

”சொல்லப்போனா இந்த சைவம்கிறது என்ன? என்னப்பன் அம்மையப்பன் விடமுண்ட கண்டன் ஆனையைக் கொன்னு போர்த்தினானே?”என்று சிதம்பரசேவுகம்பிள்ளை கேட்டார். ”அந்தக்காலத்திலே காப்பி குடிக்கலாமா கூடாதாண்ணு ஒரு பிராது வந்தப்ப எங்கப்பா சிவஞானப்பேரொளி காசிநாதப்பிள்ளைவாள் ‘அவன் ஆலகாலம் உண்டவனல்லவோ, எல்லாத்தையும் அவனுக்கு அர்ப்பணித்து உண்பது சிவாயமே ஆம்’ அப்டீன்னு சொல்லி தீத்து வைச்சாஹ…” சிதம்பரசேவுகம்பிள்ளை நெகிழ்ந்தார் ”மருந்திலருமருந்துருவான பெருவிருந்தென்னப்பனல்லவோ?” பிள்ளைவாளுக்கு மேல்துண்டால் மறைத்து சற்றே ‘மருந்து அருந்தும்’ பழக்கமும் உண்டு. அ·து சிலசமயம் விருந்தாவது அவன் ஆடல். அப்போது சுட்டகருவாடும் சிவாயமே ஆம்.

கொண்டைகட்டிப் பிள்ளைமார் அந்தக்காலத்தில் பாண்டிய அவையில் கொண்டையுடன் செல்லும் உரிமை உடையவர்கள். இவர்களில் மூன்றுவகை. வலக்கொண்டை ,இடக்கொண்டை, நடுக்கொண்டை. வழுக்கையரும் சாதியால் கொண்டையரே. வலக்கொண்டையே இதில் மேலானது என்ற கூற்றை பிற இருவரும் மறுத்தாலும் சமீபமாக பின்கொண்டைகட்டிப் பிள்ளைமார் என்று ஒருவகையினர் கிளம்பியிருப்பது மோசடி என்றும், அவர்கள் பிள்ளைமாரே அல்ல என்றும் ஒரே குரலில் சொன்னார்கள். கொடிக்கால்பிள்ளைமார் மதுரை ராஜ்ஜியத்து சிவன்கோயில்களில் கொடிஏற்ற கம்பம் கொண்டுவரும் கௌரவம் பெற்றிருந்தவர்கள். இவர்களில் நுனிக்கொடிக்கால்பிள்ளை அடிக்கொடிக்கால் பிள்ளை என்ற இரு பெரும் பிரிவும் நடுக்கொடிக்கால்பிள்ளை என்ற சிறு பிரிவும் உள்ளன.

கோட்டைப்பிள்ளைமார் புகழ்பெற்றவர்கள். கோட்டைக்குள் மட்டுமே வாழ்வார்கள், வெளியே செல்வதே இல்லை. பெண்ணெடுப்பதும் கொடுப்பதும் உள்ளேயே. ஆகவே இவர்களை அறியாமலேயே வெளியே கோட்டைப்புறம் பிள்ளைமார் என்ற ஒரு தனிப்பிரிவு உருவாகிவந்தது. அது பின்னர் வலங்கோட்டை இடங்கோட்டை என்று இரண்டாகப்பிரிந்தது. நீறுபூசிப்பிள்ளைமார் என்பவர் சிவபண்டாரங்கள் என்றும் வைராவிகள் என்றும் சொல் உண்டு. இல்லை இவர்கள் சிவாச்சாரியார்கள் என்றும் சொல்வதுண்டு. அவர்கள் செந்தலைப்பிள்ளைமாரை ”அவனுக நேத்துவந்தவனுகள்லா? தம்பி நல்லா கேட்டுக்கிடுங்க. போர்ச்சுக்கல்காரனுக இந்தப்பக்கம் வந்து கோமணம் அவுத்த வகையில உருவானவனுக. செந்தலைன்னு சும்மாவா சொன்னான்?” என்றர்கள்.

ஆனால் ஊழிமுதற்றோன் ஆடிய கொடுகொட்டியில் அவன் சடையெல்லாம் செந்நிறம் கோண்டபோது உதித்தவர்கள் என்று அவர்கள் தரப்பு. ஆகவே அவர்கள் பாண்டியப்படை நடத்தியவர்களாகக் கருதப்படும் படைத்தலைப் பிள்ளைமாரை ஏற்பதில்லை ”தம்பி, என்ன பேச்சு பேசுதீக? அவனுக படைத்தலையானது எப்ப? அவனுகளை நேத்துவரை நாங்க தலைப்படைப் பிள்ளைமார்னுல்லா சொல்லுவோம்? தலைச்சுமையாட்டு பலசரக்கு கொண்டுவந்து விப்பானுக. தலையில படைபிடிச்சு கெடக்கும்….ஸ்ஸ்ஸ்ஸல்லிப்பயக்க!”

சிறுகுடிப் பிள்ளைமாரில் மேலைசிறுகுடி கீழைச்சிறுகுடி என்ற இருபிரிவு உண்டு. மேலைச்சிறுகுடிக்குள் வெற்றிலைக்காரர், பட்டக்காரர், இல்லக்காரர் என்று மூன்று பிரிவு. இதில் வெற்றிலைக்காரரில் மட்டும் வடக்குநாட்டார், மழவர், உருமால்காரர், செங்காலர், சுக்காலர், தெக்குநாட்டார், கச்சைக்காரர் என்று ஏழுபிரிவு. இதிலே வடக்குநாட்டாரில் மட்டும் மூலைக்காரர், கொடுங்குடி, மூவாலர், பச்சைகாட்டார், வீரளர், குடும்பக்காரர், சிவப்பர் என்று ஏழு வகை. இதில் மூலைக்காரரில் ஏழுவகை மேலும் உண்டு. அவர்கள் வாழைக்காரர், குடிகாப்போர், உடன்குடியார், செக்காளர், முத்தாளர், மூத்தாளர், நெடும்பாளர். இவர்களில் வாழைக்காரரில் மட்டும்…

தொள்ளைக்காதுப்பிள்ளைமார் சமணர்களாக இருந்து தாய்மதம் திரும்பியவர்கள் என்றார் ஆய்வாளர் அ.தா.கோ.க.சரவணமுத்து முதலியார். சமணர்களிடம் மட்டுமே காது துளையிட்டு நீட்டும் வழக்கம் இருந்தது என்பதை பழைய சிற்பங்கள் காட்டுகின்றன. இவர்கள் காது நீட்டும் பழக்கத்தை மேலும் சிலகாலம் நீட்டியிருக்கலாம். இவர்களில் இரு பிரிவு. வலத்தொள்ளை, இடத்தொள்ளை. இப்பிரிவுகள் நான்குநான்காக மேலும் பிரிகின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்துக்கு மாறி பதினெட்டாம் நூற்றாண்டில் தாய்மதம் திரும்பிய வேளாளரும் உண்டு. இவர்கள் எப்படி அழைக்கப்படுகிறார்கள் என்ற ஆய்வை பிள்ளைவாள் முடிக்கவில்லை

ஆற்றங்கரைப் பிள்ளைமார் பண்டு மீன்பிடித்தார்கள் என்பது கார்காத்தார்களின் அவதூறாக இருக்க வாய்ப்பில்லை என்று முச்சூப்பிள்ளைவாளுக்கு பட்டாலும் இவர்களில் கால்நனைச்சகுடி, குளிச்செழுந்த குடி, தடுக்கிவிழுந்த குடி என மூன்று உள்பிரிவுகள் உண்டு என்பதை அவர் முழுக்க நம்பவில்லை. ஆனால் 1972ல் கால்நனைச்சகுடிப் பிள்ளமாருக்கும் தடுக்கிவிழுந்த குடிப்பிள்ளைமாருக்கும் இடையே சாதிக்கலவரம் மூண்டு கோமதியாச்சியின் பாம்படக்காது அறுக்கப்பட்ட நிகழ்ச்சியானது மேற்படி பிரிவினை பொய்யல்ல என்பதற்கான வெள்ளிடைமலை ஆதாரமாக நிலைநிற்கிறது.

வெள்ளிக்கைப்பிள்ளைமார் பழைய பொற்கைபபண்டியன் அவையில் இருந்தவர்கள். அவன் கதவைத்தட்டியபோது பக்கத்திலே நின்ற இவர்களும் என்ன ஏதென்றறியாமல் கதவைத்தட்டப்போய் அவன் கையை வெட்டிக் கொண்டபோது தாங்களும் வேறுவழியில்லாமல் வெட்டிக் கொண்டு பின்னர் தங்கள் சக்திக்கு ஏற்ப வெள்ளியால் செய்துகொண்டார்கள். ஆம், இவர்களில் மூன்றுவகை. பத்துமாற்றுப்பிள்ளைமார், பத்தரை மாற்றுப்பிள்ளைமார், பதினாறுமாற்றுப்பிள்ளைமார். பதினாறுமாற்றுப்பிள்ளைமார் வீட்டில் மற்ற இருவரும் கைநனைப்பதில்லை. கைநனைக்காதவர்களை எதிரே கண்டால் கட்டித்தழுவி ‘மாப்ளே, எப்டி இருக்கிய? மருமகப்புள்ள சொம்மா இருக்காளா?” ”ஆமா மாமா, ஆச்சிக்கு மண்டையிடிக்கு கொறவுண்டா?” என்றெல்லாம் உருகி வழிவது பிள்ளைமார் பண்பாடு.

இதைத்தவிர ஒட்டுமொத்த பெரும்பிரிவினை ‘பஞ்சத்துப்பிள்ளை, பாம்பரைப்பிள்ளை’ என்பது. பரம்பரைப்பிள்ளைமார் ஒரே ஊரில் வாழ்ந்து தலைமுறைக்கு ஒருமுறை பிளந்தபடியே இருக்கும் ‘பதியெழுவறியா பழங்குடி’யினர். ஒரேயொரு குடும்பம் மட்டும் எஞ்சிய நல்லூர்ப்பிள்ளைமார் என்ற சாதியில் அப்பாவும் பிள்ளைகளும் இரு சாதிகளாகப் பிரிந்ததை பிள்ளைவாள் பதிவுசெய்திருக்கிறார். ”அவனுக நீசப்பயக்கள்லா? சாதிசுத்தம் கெடையாது. சோத்தத் தின்னுட்டு எலைய வழிச்சுத் தின்னுற கூட்டம்!”என்று அப்பா பையன்களைப் பற்றிச் சொன்னதாகவும் சொல்லியிருக்கிறார்.

பஞ்சத்துப்பிள்ளைமார் என்பவர் பிறர் அவசரத்துக்கு எல்லாம் தங்கள் பேருடன் பிள்ளைசேர்த்துக் கொள்வது. அதில் நாநூற்று எண்பத்திஎட்டு முதல்கட்ட சாதிகளும் ஒவ்வொரு சாதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபசாதிகளும் உண்டு என்க

பிள்ளைவாள் ஆய்வுக்காக தமிழ்நாடு முழுக்க பயணம் செய்தார். ”எத்தனை பெரிய தொலைநோக்கி வருகிறதோ அந்த அளவுக்கு அதிகமாக நட்சத்திரங்கள் விண்வெளியில் தெரியவருகின்றன என்பதுபோல எந்த அளவுக்கு பயணம்செய்து எந்த அளவுக்கு முயற்சிசெய்கிறோமோ அந்த அளவுக்கு பிள்ளைமாரும் கண்ணில் படுகிறார்கள். இது உலக ஆய்வாளர்களுக்கு என்றும் வற்றாத ஒரு ஜீவநதியின் ஊற்று.”என்பது அவரது முடிவடையா ஆய்வேட்டு முன்னுரைக் குறிப்பு

1986 டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முடிசூடியபெருமாள் பிள்ளை தன் ஆய்வேட்டிற்கான முன்வரைவை முடிக்காமலேயே காலமானார். ஆய்வுக்காக அவர் சேகரித்த தகவல்கள் ஏழு பெரிய மரப்பெட்டிகளிலாக அவருக்குப்பின் அவரது ஆய்வை முன்னெடுத்த க.சிவசுப்ரமணிய பிள்ளை எம்.ஏ அவர்களால் கொண்டுசெல்லப்பட்டது. சாதிமரம் மச்சுப்பலகை முழுக்கப்பரவி பக்கத்து அறைகளிலும் விரிந்து பரந்து கிடந்தது.

தன் ஆய்வேட்டிற்கான முன்வரைவில் வெள்ளாளப்பிள்ளைகளில் பதினெட்டுலட்சத்து எண்பத்து எட்டாயிரத்து அறுநூற்றுப் பன்னிரண்டு உட்பிரிவுகளை முடிசூடியபெருமாள் பிள்ளை எண்ணிக்கை வாரியாக பட்டியலிட்டிருந்தார். ஆய்வாளர்கள் செல்ல மேலும் வெகுதூரம் இருக்கிறது என்பது உண்மையாயினும் பிள்ளைமாரின் மொத்த எண்ணிக்கையை வைத்துப் பார்க்கையில் ஓர் உண்மை இடிக்கிறது. ஒரே பிள்ளைவாள் பல உட்பிரிவுகளில் ஒரேசமயம் திகழ வாய்ப்பு உண்டா என்ன?

தமிழ்ப் பயணி

unread,
Jan 31, 2013, 5:20:45 AM1/31/13
to பண்புடன்
இந்த இ​ழையில் எனக்கு ​வே​லையில்​லை தான்.. :) :)

இருந்தாலும்,
இப்படி எழுத விடக்கூடிய சமூக சூழ​லையும், எழுத கூடிய எழுத்தாள​ரையும்​ பெற்று இருக்கும் எனது மகிழ்ச்சியி​னை இங்​கே பதிவு ​செய்கி​றேன்.

2013/1/31 ஸ் பெ <stalinf...@gmail.com>

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
"மனிதர்களின் குறைபட்ட புரிதல்களை உள்ளபடியே எடுத்துக் கொண்டு அவற்றை மகத்தான மதங்களின் உண்மையான போதனைகளாக நினைக்க வேண்டாம். abcxyz உலகம் இப்போது சகோதரத்துவத்துடன் வாழ்கிறது என்று நீங்கள் என்னிடம் சொல்வீர்களா என்ன? அதன் போர்களையும் வெறுப்புகளையும் ஏழ்மையையும் அதன் குற்றங்களையும் நினைத்துப் பாருங்கள்."
- மகாத்மா காந்தி - காந்தி எனும் மனிதர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Feb 1, 2013, 2:12:23 PM2/1/13
to panb...@googlegroups.com

நடைபயணி

2002 ல் சிவகாசியில் நான் ஒரு கல்லூரியில் பேசுவதற்காகச் சென்றிருந்தேன். கல்லூரிகளில் பேசுவதென்பது மிகத் துன்பமான அனுபவம். அக்கல்லூரியில் நமக்குத்தெரிந்த ,நம் மீது உண்மையான பிரியம் கொண்ட வாசகர் எவரேனும் இல்லை என்றால் கல்லூரிகளைத் தவிர்ப்பதே நல்லது என்பது என் அனுபவம்.

ஏனென்றால் தமிழகத்துக்கல்லூரிகளைப்போலப் பாமரர்கள் உலவும் இடத்தை எங்குமே பார்க்கமுடியாது. வேறு எந்த அலுவலகத்திலும், ஏன் கருப்பட்டியோ கருவாடோ மொத்தவிற்பனைசெய்யும் இடத்தில்கூட, ஒரு குறைந்தபட்ச அறிவார்ந்த தன்மை இருக்கும். தினத்தந்தி வாசித்துவிட்டாவது தங்கள் கருத்துக்களைச் சொல்வார்கள். சென்ற இருபதாண்டுகளில் எழுத்து வாசிப்பு விவாதம் எதிலும் குறைந்ந்தபட்ச ஈடுபாடில்லாத, வேறு எந்த வேலைக்கும் லாயக்கில்லாத காரணத்தாலேயே ஆசிரியர்களாக வந்த பெருங்கூட்டம் நம் கல்லூரிகளை ஆக்ரமித்திருக்கிறது

அதைவிட தனியார் கல்லூரிகளின் தாளாளர்கள் என்ற அசட்டுப் பண்ணையார்களின் அலம்பல் தாங்கமுடியாது. அனேகமாக அவர் ஏதேனும் வியாபாரியாக, அல்லது அரசியல்வாதியாக இருப்பார். அந்தக்கல்லூரி அவரது கல்விவணிகவளாகமாக இருக்கும். சிலசமயம் அவர் பரம்பரைத் தாளாளராக இருப்பார். கல்லூரியை ஒரு கௌரவத்துக்காக நடத்திக்கொண்டிருப்பார்

அந்த வளாகத்துக்குள் அவர்கள் ஒருவகைக் குறுநில மன்னர்கள். அவர்களின் தாழ்வுணர்ச்சி ஊறிய மனத்துக்கு ஆறுதலாக அங்கே உள்ள அனைவருமே சந்தனம் பூசிவிட்டபடியே இருப்பார்கள். ஒருகட்டத்தில் அந்தப்புகழுரைகளை அவர்களே நம்பி தங்களை சேரசோழபாண்டிய வம்சம் என நினைத்துக்கொள்வார்கள். கல்லூரிக்குள் எந்தக் கல்வியாளர் வந்தாலும், எந்த சிந்தனையாளர் வந்தாலும் அவர்களை தங்களை விட ஒருபடி கீழே அமரச்செய்து அதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக எண்ணிக் குதூகலிப்பார்கள். அந்த சாதனையாளரை விட தாங்கள் ஒருபடி மேல் என்று தங்கள் மாணவர்களுக்குக் காட்டிவிட்டதாக எண்ணிக்கொள்வார்கள்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவர்களின் அபத்தமான தந்திரங்களை எழுத்தாளர்கள் ஒரு சபை நாகரீகம் கருதி ஏற்றுக்கொண்டு பேசாமல் சென்றுவிடுவார்கள். பிரபஞ்சன் அவருக்கிழைக்கப்பட்ட நுண்ணிய அவமதிப்புகளை சொல்லியிருக்கிறார். சுந்தர ராமசாமி அவ்வாறு அவமதிக்கப்படுவதை நானே கண்டிருக்கிறேன். மேடைக்கு ஓர் அசட்டு வைஸ்சான்ஸலர் வெள்ளைஅங்கியும் தொப்பியுமாக நுழைந்தபோது நாலைந்து அல்லக்கைகள் சுந்தரராமசாமியை வலுக்கட்டாயமாக எழுப்பி நிற்கவைத்துவிட்டதைக் கண்டு நான் கொதித்திருக்கிறேன்.

கல்லூரிகளில் பல்கலை மானியக்குழு கணக்கு காண்பிப்பதற்காக அமைக்கப்படும் இலக்கியநிகழ்ச்சிகளுக்குச் சென்றால் வெள்ளந்தியான பேராசிரியர்களையும் வெள்ளாட்டுக்கூட்டம் போன்ற மாணவர்களையும் கண்டு இந்தியாமீதும் தமிழ்மீதும் நம்பிக்கையை இழக்க நேரிடும். சிவகாசியில் எனக்கு அதுதான் நிகழ்ந்தது. என்னை மேடையில் அமரச்செய்து நாடகத்தனமாக ஏதோ சொல்லி வரவேற்றார்கள். நான் உரையாற்றி முடித்ததும் ‘கலை கலைக்காகவா மக்களுக்காகவா?’ ‘நீங்கள் ஏன் பாமரரும் படித்துணர்வதுபோல எழுதக்கூடாது?’ என்பதுபோன்று எல்லா கல்லூரிகளிலும் எல்லா அசடுகளும் ஐம்பதாண்டுக்காலமாகக் கேட்டுவரும் கேள்விகள்

தலைமை உரை நடந்துகொண்டிருந்தபோது வெள்ளைவெள்ளை உடையில் தாளாளர் உள்ளே நுழைந்தார். அதற்கு முன்னரே ‘நாட்டாமை கெளம்பியாச்சு..’ போன்ற அறிவிப்புகள் வெளியே ஒலித்ததை நான் கேட்டேன். மெல்ல, மிகமெல்ல, மிகமிகமெல்ல தாளாளர் நடந்து வந்துகொண்டே இருந்தார்.. சினிமாவின் ’ஸ்லோமோஷன்’ போல ஒரு மனிதர் நடக்கமுடியுமென்பதே எனக்கு திகிலாக இருந்தது. அவர் வந்ததும் அரங்கமே எழுந்து நின்றது. தலைவர் பேச்சை நிறுத்திவிட்டுத் தாளாளர் புகழ்பாட ஆரம்பித்தார்.

அவர் அவ்வளவு தாமதமாக, அரங்கின் மறு எல்லையில் தோன்றியதன் நோக்கமே எல்லாரையும் எழுந்துநிற்கச்செய்வதுதான். இரண்டாம்தர அரசியல்வாதிகள் எப்போதும் செய்யும் உத்தி அது. என் ரத்தம் முழுக்க தலைக்குள் பாய்ந்தது. நான் எழுந்திருக்கவில்லை. மேடையில் இறுக்கமாகக் கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தேன்.

தாளாளர் என்னைப்பார்த்தார். ஓரக்கண் பார்வை கூர்மையாக என்னை வருடிச்சென்றது. நேராகச்சென்று அவருக்குப் போடப்பட்டிருந்த சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்தார். அவர் உள்ளே வருவதற்கு முன் அந்த இருக்கை மேடையில் இருக்கவில்லை. ஒரேபோலத் தோன்றிய சாதாரண இருக்கைகள்தான் இருந்தன. அவர் அமர்ந்ததும் தாளாளர் அவருடைய கடுமையான பணிச்சுமைகளுக்கு நடுவே வந்து நிகழ்ச்சியை கௌரவித்தமைக்குத் தலைவர் கண்ணீர் மல்க நன்றி சொல்ல ஆரம்பித்தார்.

தாளாளர் அவரது உரையில் நான் அங்கே வந்தது பேசியது எதையுமே குறிப்பிடவில்லை. என்னைத் திரும்பியும் பார்க்கவில்லை. நான் புன்னகையுடன் பேசாமல் அமர்ந்திருந்தேன். ஆனால் மாணவர்கள் முழுக்க ரகசியமாகச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். தாளாளருக்கு உலா,தூது,கலம்பகம், பிள்ளைத்தமிழ், பரணி என்று பாமாலை சூட்டிக்கொண்டே இருந்தார்கள் பேராசிரியப்பெருமக்கள். அதைக்கேட்டால் அவர்கள் அவரைப்பற்றி அரைமணிநேரம் முன்புதான் கேள்விப்பட்டதுபோலத் தோன்றும்.

நான் மெல்ல கீழே இறங்கினேன். எப்படியும் என்னை எவரும் வழியனுப்பி வைக்கப்போவதில்லை என்பது தெரிந்தது. நானே போய்விடலாம் என நடந்தபோது கூட்டத்தில் இருந்து வந்த உயரமில்லாத மெலிந்த மனிதர் சிரித்தபடி வந்தார். கிராமத்து விவசாயி போன்ற தோற்றம். கையில் ஒரு தோல்பை

‘வணக்கம்…நல்லாப் பேசினீங்க’ என்றார்

நான் வணங்கினேன். அவர் தன்னை ‘ஜெகன்னாதராஜா’ என்று அறிமுகம் செய்துகொண்டார்.

பன்மொழிப்புலவர் மு.கு.ஜகன்னாத ராஜா.நான் அவரை நன்கறிவேன் என்று சொன்னதும் ‘அப்டியா…அப்டியா? ராஜபாளையத்துக்கு வாங்க’ என்றார். ’வருகிறேன்’ என்றேன். ‘இங்க காலேஜிலே எப்டி?’ என்றேன்

‘உங்களப்பாக்கத்தான் வந்தேன்’ என்றார். அது எனக்களிக்கப்பட்ட பெரிய கௌரவம் என நினைத்தேன்

ஜெகன்னாதராஜா மொழியாக்கம்செய்த ஆமுக்த மால்யதா என்ற நூலை நான் அப்போது வாசித்திருந்தேன். ஆண்டாளைப்பற்றி விஜயநகர மாமன்னர் கிருஷ்ண தேவராயர் எழுதியது அந்நூல். சூடிக்கொடுத்தமாலை என்று தமிழில் சொல்லலாம். அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். அவருக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்

‘இதையெல்லாம் நவீன இலக்கியவாதிகள் படிக்கிறாங்களா என்ன?’ என்றார்.

‘நாங்க படிக்காம பின்னே இந்தப் பேராசிரியர்களா படிக்கப்போறாங்க?’ என்று கேட்டேன். உரக்கச் சிரித்தார்.

ஓரமாக ஒதுங்கி நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஆந்திரத்தில் கோதாவரிக் கரையில் உள்ள சில ஆலயங்களில் ஆமுக்தமால்யதாவை ஓர் ஆசாரமாக சிலர் பாடிக்கேட்டிருப்பதைப்பற்றிச் சொன்னேன். நாம் சொல்லும் ஒவ்வொரு சிறுதகவலுக்கும் கண்களை விரித்து ஆச்சரியம் காட்டுவார். அதன்பின் அதனுடன் தொடர்புடைய அதைவிடப்பெரிய ஒரு தகவலைச் சொல்வார்

ஜகன்னாதராஜாவிடம் நான் பேசியபோது பிராகிருதம் குறித்து என் ஐயங்களை விவாதித்தேன். சம்ஸ்கிருதத்துக்கு முந்தைய மொழிவடிவமா பிராகிருந்தம் என்று கேட்டேன். அப்படித்தான் பொதுவாக சொல்வார்கள்.

இல்லை என்றார் ஜெகன்னாதராஜா. சம்ஸ்கிருதத்தின் எதிர்ப்பதம் பிராகிருதம் என்பதனால் அப்படிச் சொல்கிறார்கள். சம்ஸ்கிருதம் என்பது முன்னாலிருந்த வேத கால மொழியிலிருந்து அறிவுச்செயல்பாட்டுக்காக செய்யப்பட்ட நூல்மொழி. பிராகிருதம் மக்கள் பேசிக்கொண்டிருந்த மொழி.

பொதுவாக இன்று பலமொழிகளை சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தது [சம்ஸ்கிருத அபபிரஹ்ம்ஸம்] என்று சொல்கிறார்கள். மலையாளிகளில் சிலர் மலையாளத்தையே துணிந்து அப்படிச் சொல்வதுண்டு. என்று சொல்கிறார்கள்.ஆனால் இந்தியாவின் பெரும்பாலான மொழிகள் பிராகிருதத்தில் இருந்து வந்தவையே என்றார் ஜெகன்னாதராஜா

சம்ஸ்கிருதம் முழுமையான வளர்ச்சி அடைந்து பல கட்டங்களைத் தாண்டிய பின்னரும் பிராகிருதம் இருந்துகொண்டிருந்தது என்றார் அவர். பிராகிருதம் சம்ஸ்கிருதத்தின் பேச்சுவடிவம் என்பதே சரியாக இருக்கும் என்றும் பிராகிருதம் தொடர்ந்து சம்ஸ்கிருதத்துக்கு வேர்நிலமாக இருந்தது என்றும் சொன்னார். தெலுங்கு கன்னடம் இந்தி மைதிலி போஜ்புரி போன்ற பல மொழிகள் உருவானபின்னரே பிராகிருதம் அழிந்தது.

சிவகாசிக்கு வந்தபோது ஏதோ விளைபொருட்களை விற்பதற்காகக் கொண்டுவந்திருந்தார் போல. செல்பேசி அழைப்பு வந்ததும் ராஜபாளையத்துக்கு ஒருமுறை வரும்படி மீண்டும் அழைத்தபின் அவர் விடைபெற்றுச்சென்றார்

1933ல் ராஜபாளையத்தில் பிறந்தவர் மு.கு.ஜகன்னாத ராஜா. முறையான பெரிய கல்வி ஏதும் இல்லாதவரான ஜகன்னாத ராஜா ஏலக்காய் தோட்டம் வைத்திருந்தார். அதன் வருவாயில் வாழ்ந்தபடி மொழிகளைக் கற்றும் மொழியாக்கங்கள் செய்தும் வாழ்ந்தார். அவருக்கு தமிழ், பாலி, பிராகிருதம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் போன்ற பலமொழிகள் தெரிந்திருந்தன. உண்மையில் அவர் மறைவுடன் பாலியும் பிராகிருதமும் தெரிந்த கடைசித் தமிழரும் இல்லாமலாகிவிட்டார் என்று சொல்லலாம்.

எல்லாவகையிலும் ஜெகன்னாதராஜாவை ஒரு மொழியியல்பேராசிரியர் எனலாம். ஆனால் அவரை ஒரு கல்லூரியில் உரையாற்ற அழைக்கவே நம் கல்விச்சட்டங்கள் அனுமதிக்காது.மொழிகளைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் அவருக்கிருந்த ஆர்வம் எல்லையற்றது.

ஜகன்னாத ராஜா பிராகிருதத்தில் இருந்து கதாசப்தசதியை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழ் வாசகர்களின் கவனத்துக்கு வந்தாகவேண்டிய நூல் இது. இந்தப் புராதன நூலில் உள்ள பாடல்களின் அமைப்பும் சரி, கூறுமுறையும்சரி, அப்படியே அகநாநூறையும் நற்றிணையையும் ஒத்திருக்கின்றன. திணை-துறை அமைப்புகூட பெரும்பாலும் உள்ளது. அதைத் தமிழுக்கே உரிய அழகியல் என நாம் சொல்வது எந்த அளவுக்கு சரி என்று சிந்திக்கச் செய்வது அந்நூல்.

இவரது வஜ்ஜாலக்கம் என்ற பிராகிருத நீதிநூல் தமிழினி வெளியீடாக வெளிவந்துள்ளது. குறள் உள்பட உள்ள தமிழ் நீதிநூல் மரபை ஆராய்பவர்கள் கருத்தில்கொண்டாகவேண்டிய நூல் இது. தீகநிகாயம் உட்பட ஏராளமான பௌத்த நூல்களைப் பாலி மொழியில் இருந்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நான் எழுதிக்கொண்டிருக்கும் அசோகவனம் நாவலுக்காக ஜகன்னாதராஜாவின் சேமிப்பில் இருந்து பல நூல்களை வசந்தகுமார் படி எடுத்து அளித்தார். ராணி மங்கம்மாளைப்பற்றிய நூல்கள், விஜயரங்க சொக்கநாதன் எழுதிய நூல்கள். அவை மதுரைநாயக்கர் வரலாற்றைப்பற்றிய புதிய தெளிவுகளை அளித்தன.தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் இடையேயான பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றிய தகவல்களின் களஞ்சியமாக இருந்தார் ஜகன்னாத ராஜா.

நான் ஒருமுறை ராஜபாளையம் சென்று அவரைச் சந்தித்தேன். செல்பேசியில் அழைத்தபோது அவரே வந்து என்னை அழைத்துச்சென்று அவரது இல்லத்தில் இருந்த நூற்சேகரிப்பைக் காட்டினார். நான் அப்போதுதான் அம்பேத்கர் அவர்களின் புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலை ஆங்கிலம் வழியாகப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பௌத்தக் கலைச்சொற்கள் பற்றிய குழப்பம் எனக்கிருந்தது. நான் கேட்கக் கேட்க பதில் சொன்ன ஜெகன்னாதராஜா ஒருகட்டத்தில் நான் கேட்கச் சாத்தியமான கேள்விகளுக்கும் விளக்கமளித்தார். ஒரு கட்டத்தில் சம்ஸ்கிருதச் சொற்களுக்கும் பாலிமொழிச் சொற்களுக்கும் இடையேனான உறவின் விதிகள்கூட எனக்குப் பிடிபட ஆரம்பித்தன

அன்று அவர் தோட்டத்தில் ஏதோ விவசாயவேலை. நான் முன்னரே என் வருகையைச் சொல்லியிருக்கவில்லை. ஒருமணிநேரத்தில் நான் கிளம்பும்படியாயிற்று. அதன்பின் ஒவ்வொருமுறையும் அவரைச் சந்திக்க ராஜபாளையம் செல்லவேண்டுமென நினைப்பேன் என்றாலும் முடியவில்லை.

2008 ல் ஜெகன்னாதராஜா மரணமடைந்தார். அவரது மரணச்செய்தியை நான் கிட்டத்தட்ட ஒருமாதம் கழிந்தே அறிந்தேன். செய்தித்தாள்களில் செய்திகள் வரவில்லை. அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்களும் சொல்லவில்லை. தமிழினி இதழின் அஞ்சலிக்குறிப்பிலேயே அவரது மரணச்செய்தி என் கவனத்துக்கு வந்தது. அவரை நான் போதுமான அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்ற இழப்புணர்வு ஓங்கியது. அப்போதும் அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் என் வாசிப்பில் இருந்தது. இன்னும் ஆழமாக உள்ளே சென்றிருந்தேன். இன்னும் அதிக ஐயங்களுடன் இருந்தேன்.

நான் ராஜபாளையத்துக்கு அதன்பின்னர் சென்றது 2012 நவம்பரில். ராஜபாளையத்தில் நாற்று என்ற அமைப்பு என்னை உரையாற்ற அழைத்திருந்தது. ராஜபாளையம் என்றதுமே ஜெகன்னாதராஜா நினைவுக்கு வந்தார். அம்பேத்கரின் மகத்தான நூல் கூடவே நினைவில் எழுந்தது. அன்று ‘அம்பேத்கரின் தம்மம்’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். நான் ஆற்றிய மிகச்சிறந்த உரைகளில் ஒன்று அது. அந்த அரங்கில் அதற்கு எத்தனை செவிகள் இருந்தன என எனக்கு தெரியவில்லை. நான் அதை ஜெகன்னாதராஜாவுக்காக நிகழ்த்தினேன்.

அன்று பேருந்தில் திரும்பும்போது எனக்கு நான் ஜெகன்னாதராஜாவைச் சந்தித்த கல்லூரி நினைவுக்கு வந்தது. அஞ்ஞானத்தை மதில்கட்டித் தேக்கி அதில் நம் குழந்தைகளை நீச்சல்கற்க விடுகிறோம். ஞானம் கையில் தோல்பையுடன் தெருவில் அமைதியாக நடந்துசெல்கிறது

ஸ் பெ

unread,
Feb 1, 2013, 2:14:27 PM2/1/13
to panb...@googlegroups.com
எனக்கெனவோ எங்கள் கல்லூரியில் நடந்ததயும் இவர் சேர்த்து எழுதி இருப்பது போல ஒரு உணர்வு.. :)

எனக்கு என்ன தகுதி இருந்தது(இருக்கிறது!!) என்பதற்காக அன்று ஜெயமோகன் நிகழ்வை தலைமை தாங்கினேன்.. எதற்கு சுந்தர ராமசாமி நிகழ்வை தொகுத்து வழங்கினேன்.?%$^#%6

2013/2/1 ஸ் பெ <stalinf...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Feb 3, 2013, 6:55:05 AM2/3/13
to panb...@googlegroups.com
மக்கா...

வர்கீசு எல்லா ஊர்லயும் இருப்பாங்க...

கடின உழைப்புதான் வர்கீஸ்களை உருவாக்கி இருக்கு...



இன்னைக்கு கைதிகள்னு ஒரு கதை. அந்த கதையைப் படிச்சிட்டு பித்துபிடிச்சு உக்காந்திருக்கேன்.

எம்புட்டு நுணுக்கமா ஒரு வாழ்க்கையை எழுதி இருக்காருன்னு பாரு...


Cache லேர்ந்து எடுத்தேன்...

கைதிகள் [சிறுகதை]

சிறுகதை

February 1, 2013

எட்டாவது குழுவில் முதலில் கண்விழித்தது நான். ஆகவே முதலில் நான்தான் செய்தியைத் தெரிந்துகொண்டேன். கரகரத்த குரலில் எங்கோ யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதை வயர்லெஸ் ரேடியோ சொல்லிக்கொண்டிருந்தது. குழூக்குறி என் மண்டைக்குள் சென்று தீண்ட ஒரு நிமிடம் ஆகியது.

‘…நரி மாட்டிக்கொண்டு விட்டது’

நான் பரபரப்புடன் ஓடிப்போய் தரையில் கம்பிளிக்குவியலுக்குள் படுத்திருந்த நாராயணனை ஓங்கி உதைத்தேன். ‘ஆ!’ என்று அலறியபடி அவன் கண்விழிந்த்து எழுந்து அமர்ந்து மணல்பையைக் குத்துவது போலக் கைகளை ஆட்டியபடி ‘போ போ போ’ என்று கத்தினான். இந்த முகாமில் ஒவ்வொருவரும் பொந்துக்குள் அஞ்சி ஒடுங்கி ஒளிந்திருக்கும் காட்டுமிருகம் போலத்தான் இருக்கிறார்கள்.

’டேய்…நாந்தாண்டா..டேய் நாராயணா’

அவன் வாயைth துடைத்துக்கொண்டு ‘’ஏண்டா?’ என்று சலித்தபின் மீண்டும் படுக்கப்போனான்.

‘டேய் அவன் மாட்டியாச்சுடா…’

‘யாரு?’ என்றான்.

‘உங்க அப்பன் தெரவியம்..டேய் அவன்…நரி’

நாராயணன் வாய் திறந்தபடி நின்றுவிட்டது. ‘எப்ப?’ என்றான்.

’தெரியல்லை. ராத்திரின்னு நெனைக்கறேன்..இப்பதான் மைக்ல கேட்டேன். யாரோ எங்கேயோ சொல்லிட்டிருக்காங்க’

நாராயணன் ’சும்மா எதையாவது கேட்டிருப்பே.அவன் அப்டி மாட்டிக்கமாட்டாண்டா…’ என்றான்

எரிச்சலுடன் ’போடா’ என்றபின் எனக்கே சந்தேகம் வந்தது. மீண்டும் வயர்லெஸ் அருகே சென்று அந்த ஒலியைக் கூட்டி வைத்தேன். பரபரப்பான பேச்சொலிகள் ஒரு நெடுஞ்சாலை ஊர்வலம் போல ஓடிக்கொண்டிருந்தன. அந்தப் பரபரப்பே அதற்கான ஆதாரம் என்று தோன்றியது. நாராயணனுக்கும் அதுவே தோன்றிருக்கலாம், அவன் எழுந்து லுங்கியைக் கட்டியபடி வந்து வயர்லெஸ் அருகே இரும்புநாற்காலியில் அமர்ந்துகொண்டான்.

சிலகணங்களில் அந்த சொற்கள் மீண்டும் வந்தன. ‘நரிகளைப்பற்றி டேவ் விசாரித்தார். அவர் நரியின் ஆரோக்கியம் பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறார்…’

நாராயணன் பெருமூச்சுடன் ‘அதாண்டா, நூஸ் உண்மைதான்’ என்றான். மீண்டும் பெருமூச்சுவிட்டு ‘பாவண்டா’ என்றான்.

நான் அவனை பார்த்தேன். ‘பெருமாள எழுப்புடா…’ என்றான் நாராயணன்

நான் காம்ப் கட்டிலில் படுத்திருந்த பெருமாளைத் தோளைப்பிடித்து உசுப்பினேன். ரத்தம்போன்ற கண்களால் பார்த்து ‘ம்?’ என்றான்

‘அவன் மாட்டியாச்சுடா..மைக்ல சொல்றான்’ பெருமாள் ஒன்றுமே சொல்லாமல் எழுந்து லுங்கியைக் கட்டிக்கொண்டு வெளியே சென்று கூடாரத்துக்கு வெளியே நின்ற பெரிய கருவேலமரத்துக்கு அடியில் ஒன்றுக்கிருந்தான்.

‘இங்கதான் புடிச்சிருக்கானுக’ என்றான் நாராயணன். ’நேரா தர்மபுரிக்கு கொண்டுபோய்ட்டிருக்காங்க. அங்க வெண்ணாம்பட்டி பங்களாவுக்கு கொண்டு போவாங்கன்னு நெனைக்கறேன். கலெக்டரும் டிஎஸ்பியும் பாக்கணும்ல…’

பெருமாள் உள்ளே வந்து ‘எப்பல புடிச்சானுக?’ .

‘ராத்திரி’.

‘ஃபைட் உண்டோ?, எப்டியும் கன் வச்சிருப்பான்’ என்றான்.

‘தெரியல்ல…காயம்னு சொன்னாங்க…’ என்றேன்.

பெருமாள் சோம்பல் முறித்துக் கைகளை நீட்டி முதுகை நெளித்தான். ‘எளவெடுத்தவனுகள சுட்டுத்தள்ளினா நாம் நிம்மதியா வீடுகளுக்கு போய் பிள்ளைய மூஞ்சிகள பாக்கலாம். என்னெங்கியே?’ என்றான். நானே பலமுறை அந்த வார்த்தைகளைச் சொன்னவன்தான். ஆனால் அப்போது எனக்கு அது கசப்பை அளித்தது.

‘தேவசகாயம் வருவாரோ?’.

‘அனேகமா கெளம்பியிருப்பாரு…மத்தியான்னம் ரயிலு சேலத்துக்கு வந்திரும்…மூணுமணிக்கெல்லாம் அவரு நரிய பாத்திருவாரு’

‘பாவம்டே’ என்றான் நாராயணன்.

‘என்னலே பாவம்? சும்மா கெடக்காம குண்டிக்கொளுப்பிலே சர்க்காருக்க மேலே துபபக்கி தூக்கினானுவள்ல? கண்ட புஸ்தகத்தையும் படிச்சுகிட்டு சூத்து எளகி சாடினா இந்த மட்டும் நடக்கும்…என்ன வெளையாட்டா? சர்க்காராக்கும்…பின்ன மயித்துகதுக்காடே சர்க்காரு தோக்கும் குந்தமுமா நம்மள மாதிரி லெச்சம்பேருக்கு சம்பளம் குடுத்து வச்சிருக்கு..? இல்ல கேக்கேன்’

நான் அவனிடம் விவாதிக்க விரும்பவில்லை. பெருமாள் எப்போதுமே முரட்டுத்தனமானவன். தன்னுடைய சாப்பாடு தூக்கம் வேலை சம்பளம் தவிர வேறு நினைப்பே இல்லாதவன். அவனிடம் வாங்கும் பீடிக்குக் கூட அவனிடம் கணக்கு இருக்கும். ‘இது நாலாவது பீடியாக்கும் கேட்டுக்க. சும்மா. ஒரு இதுக்காக சொன்னேன். தெரிஞ்சிருக்கணும்லா?’ என்பான். பெருமாள் தன் பெட்டியில் இருந்து ஒரு பீடிக்கட்டை எடுத்து ஒரு பீடியை உருவியபின் திரும்பப் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு அதைப் பற்றவைத்துக்கொண்டான்

நாராயணன் ‘நார் நாரா வகுந்திருவானுக நாயிங்க…அதுக்குன்னே சிலபேரு இருக்கானுக முருகேசா.. ரசிச்சு ரசிச்சு செய்வானுக பாத்துக்க. ஒருநாளைக்கு தேர்ட்கேம்புக்கு போறேன். ரெண்டு சின்ன பொண்ணுகள போட்டு கிளிக்கானுக. அதுக ரெண்டும் களுத்து வெட்டுத ஆடுகள மாதிரி கெடந்து கூவி விளிக்குதுக பாரு…எனக்கு மூத்திரம் வந்து நின்னுட்டுது. காலும் கையும் நடுங்குது. நேரா பாத்ரூமுக்கு போய் வாந்தி எடுத்தேன்…’ என்றான்

‘செரி அத விடு’ என்றேன். என்னால் அந்த நினைப்புகளை அந்த நேரத்தில் நீட்டிக்க முடியவில்லை. ‘ரேடியோவப் போடுடே..பாட்ட கீட்டை கேப்போம்..’

’இப்பம் இங்க என்ன மயிரு பாட்டு கேக்குதது? கன்னடப்பாட்டு கிட்டினா யோகம்’ என்றான் பெருமாள். ரேடியோவை எடுத்து வைத்துக்கொண்டு அதை உருட்ட ஆரம்பித்தான். அது விதவிதமாக ஓசையிட்டு உளறி முனகி ஒரு கன்னடப்பாட்டின் நுனியைப் பற்றிக்கொண்டது. ராஜ்குமார் பாடிக்கொண்டிருந்தார்.

‘ராஜ்குமார் பாட்டுடா. வை’ என்றேன்.

’நம்ம பாட்டு மாதிரி இருக்கு’ என்றான் பெருமாள்.

’நம்ம பாட்டுதான்.. பாஷைதான் கன்னடம்’

பெருமாள் என்னைவிட முன்னதாகவே கர்நாடக எல்லைக்கு வந்துவிட்டவன், ஆனால் கன்னடம் சுத்தமாகப் புரியாது. முகாமிலேயே நான் ஒருவன் மட்டும்தான் கன்னடம் தெரிந்தவன்.

பெருமாள் எழுந்து தன் பெட்டிக்குள் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக, அதிகமாகப் போகாமல் பார்த்து ,கோபால் பல்பொடியைக் கையில் கொட்டிவிட்டு அந்தப் பொட்டலத்தைத் திரும்பப் பெட்டிக்குள் வைத்தான். மண்சட்டிச் சில்லு போல ஆகியிருந்த சிறிய லைபாய் சோப்புத்துண்டை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான். நான் நூதன் ஸ்டவ்வைப் பற்றவைத்தேன். திரிகளில் இரண்டு இறங்கி இருந்தமையால் ஒருபக்கமாக சிவப்பாக எரிந்தது. துடைப்பக்குச்சியை எடுத்து ஒடித்து ஸ்டவ்வின் மண்ணெண்ணை டேங்கில் விட்டு எடுத்து அதைக் கொளுத்தித் தாழ்ந்திருந்த திரிகளைப் பற்றவைத்தேன். சுடர் மீது அலுமினிய பாத்திரத்தை வைத்து மூன்று டம்ளர் தண்ணீரை விட்டேன். சுடர் நீலமாக ஆகிறதா என்று குனிந்து பார்த்தேன். பாத்திரத்தில் கரி படிந்திருந்தது.

’மாதையன் வாறப்ப ஒரு ஸ்டவ்வுத் திரிக்குச் சொல்லச் சொன்னேனே’ என்றான் நாராயணன்.

‘மறந்துடுது’ என்றேன்

’செரி, இனி என்ன ஒருவேளை நளைக்கேகூட நம்மள திருப்பி கூப்பிட்டாலும் ஆச்சு’ என்றான் அவன்.

’ஆனா காம்பு கொஞ்சநாள் இருக்குமுன்னு நினைக்கிறேன். அவனுக ஆளுங்க இன்னும் சிலபேரு இருப்பாங்கள்ல?’

‘எங்க? இந்த மீனு சிக்கினா அப்டியே செதைஞ்சிருவாங்க’

‘பழிக்குப்பழின்னு என்னமாம் ஆரம்பிப்பானுகளா? இவன் அவனுகளுக்க மாநிலக்கமிட்டி உறுப்பினராக்குமே’.

‘தெரியலை…அதுக்கெல்லாம் அவனுகளுக்கு சக்தி இருக்காது. இப்பமே வெதைய உடைச்சாச்சு…’ என்றான் . ஆனால் அவன் அமைதியானதைப்பார்த்தால் அவன் அதைப்பற்றித்தான் நினைக்கிறான் என்று தெரிந்தது.

’காப்பி போட்டச்சா?’ என்று பெருமாள் உள்ளே வந்தான். முகத்தை அவனுடைய சிவப்புத்துண்டை எடுத்துத்  துடைத்துக்கொண்டு ‘ குளிரு நல்லா இருக்குடே..மணி என்ன ஆச்சு இப்ப?’ என்றான்

‘ஆறு’ என்றேன். அவனுடைய நாகர்கோயில் பக்கம் டீயையும் காப்பி என்றே சொல்வார்கள். பால்பௌடர் டப்பாவில் இருந்து இரண்டு ஸ்பூன் அள்ளி சின்ன டம்ளரில் போட்டு கொஞ்சமாக் தண்ணீர் ஊற்றி பசையாக ஆக்கியபின் அதனுடன் டீயை கலந்தேன். பெருமாள் அவனே ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டான்.

நாராயணன் கைகளை தூக்கி சோம்பல் முறித்து ‘வாய் கழுவலைடா மச்சான்’ என்றான்.

‘அதை இப்ப சொல்லு…ஸ்டவ்வ அணைச்சாச்சு. டீ ஆறினா சூடுபண்ண முடியாது’ என்றேன்

நாராயணன் வெளியே போய் அதேவேகத்தில் கழுவிவிட்டு வந்து கோப்பையை எடுத்துக்கொண்டான். மூவரும் அவரவர் சிந்தனைகளில் மூழ்கி டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தோம். வயர்லெஸ்ஸில் ஏதேதோ குரல்கள். மேலும்மேலும் பரபரப்பு ஓடிக்கொண்டிருந்தது. ’கிண்டி கெளங்குகள எடுத்துப்போடுவானுகள்லா’ என்றான் பெருமாள். அவன் அதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறான் என எனக்கு தெரிந்திருந்தது.

நான் ‘இவன இன்னும் போட்டு அடிச்சு என்ன செய்ய? இதுக்குமேலே யாரையும் பிடிக்கவேண்டியதில்லைன்னுதானே சொன்னாங்க’ என்றேன்.

‘வடக்க பெரியதலைகளை எல்லாம் பிடிச்சாச்சு… இங்க கோதண்டராமனை பிடிச்சாச்சு… கிளைமாக்ஸ் முடிஞ்சாச்சுடா’

‘ஆந்திராவிலெ இன்னும் இருக்கானுக. கொண்டப்பள்ளி சீதாராமையா காட்டுக்குள்ளத்தான் இருக்கான். கம்மம் பக்கமா நல்ல டீம் சேந்திருக்குன்னு சொல்லுதானுக, கணக்குக்கு துப்பாக்கியும் வச்சிருக்கானாம்’ என்றான் பெருமாள்

‘அதைப்பத்தி இவனுக்கெல்லாம் ஒண்ணுமே தெரிஞ்சிருக்காது. தெரிஞ்சாலும் அது பெரிசா ஒண்ணும் இருக்காது. சும்மா போட்டு அடிச்சு சந்தோசப்படலாம்’ என்றேன்.’

‘இல்லடா, இவங்க தர்மபுரிய தேர்ந்தெடுத்ததே ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் பார்டரிலே இருக்குங்கிறதனாலத்தான். இங்க நடந்தது முழுக்க ஆந்திராவிலே இருந்து வந்ததுதான்..’

‘என்ன எளவோ’ என்றேன் சலிப்புடன்

’கொட்டைய ஒடைக்கணும் நாயிங்களை’ என்றான் பெருமாள்.

‘டேய் நீ இங்க இரு.. நாங்க ஓடைப்பக்கம் போயிட்டு வாறம்’ என்றேன்.

‘ஒடனே வரணும்…நானும் முட்டிக்கிட்டுதான் இருக்கேன். அங்க நிண்ணு கதைபேசப்படாது’ என்றான் பெருமாள். ’மணி ஏளாச்சு, இன்னும் இங்க விடியல்லை.நாறச்சனி பிடிச்ச காடு. நாசமாபோறதுக்கு’

பெருமாள் வசைபாட ஆரம்பித்தால் அதன்பின் வெகுநேரம் ஓயமாட்டான். இங்கே முகாம்களில் மனம் நிலையாக இருக்கும் போலீஸ்காரர்கள் சிலர்தான். பல முகாம்களில் பயங்கரமான சண்டைகள் வெடிக்கும். அடிதடியில் ரத்தம் கொட்டும், எலும்புகள் முறியும். இரண்டு வருடங்களில் எட்டு முறை கொலை நடந்திருக்கிறது. ஏழு கொலை துப்பாக்கியால் சுட்டுத்தான். எல்லாம் நக்சலைட் கணக்கில் ஏறிவிடும்.

ஒகேனேக்கல் பகுதிக்காடுகளில் பெரும்பாலும் அடர்த்தியான முட்புதர்கள்தான். மலைச்சரிவெல்லாம் கருவேலமரங்கள் பச்சைக்குடைகள் போல பரவி நின்றிருக்க தரைமுழுக்க சீமைக்கருவேலம் அலுமினியமுட்களுடன் பின்னிப்பிணைந்து படர்ந்திருக்கும். சில இடங்களில் மெல்ல முறுங்கிய பெரும் பட்டை இலைகளை விரித்து நிற்கும் சாம்பல்பூத்த பேய்க்கற்றாழைகள் கெட்டகனவில் வரும் ராட்சதப்பூக்கள் மாதிரி மலர்ந்திருக்கும்.

மலைச்சரிவுகளில் பன்றிகளால் பட்டை சிதைக்கப்பட்ட பழமையான வேங்கைமரங்கள். பெரும்பாலான மரங்களுக்கு பெயர் தெரியாது. எல்லா மரங்களுக்கும் இலைகள் புளியமர இலைகள் அளவுக்கு சிறியவை. எனவே காட்டுக்குள் சருகுகளே கிடையாது. கூழாங்கற்களும் செம்மண்ணும் கலந்த வெந்து வரண்ட மண்தான் எங்கும் விரிந்து விரிந்து கிடக்கும். இங்கே முள் இல்லாத மரங்களைப் பார்ப்பதே அரிது. மொத்தக்காட்டிலும் இலைகளை விட முட்களே அதிகம் என்று எனக்கு ஒருமுறை தோன்றியது

மலைகளின் நடுவே ஆழமான இடுக்குகளில் சன்னமாக வழிந்தோடும் ஓடைகள்தான் காட்டின் ஒரே நீராதாரம். மலைச்சரிவில் கூடாரமடித்திருக்கும் எங்களுக்கும் இந்தக்காட்டின் பிரதான மிருகமான காட்டுபன்றிகளுக்கும், மிகத்தற்செயலாக கண்ணில்படும் கேழைமான்களுக்கும், மலையிறங்கி வந்து திரும்பி மலைக்குச் சென்றுவிடும் செந்நாய்களுக்கும், எப்போதாவது அவ்வழியாகக் கடந்துசெல்லும் வரண்டு ஒடுங்கிய சிறிய யானைக்கூட்டங்களுக்கும் எல்லாம் அதுவே குடிநீர். நாங்கள் தண்ணீரை அள்ளி கொண்டுவந்து மணல் பெட்டியால் வடிகட்டி நன்றாகக் காய்ச்சி குடிப்போம்.

பிளாஸ்டிக் குடங்களுடன் நானும் கையில் ரைஃபிளுடன் நாராயணனும் மலை இறங்கி சென்றோம். முள்ளை வெட்டி ஒதுக்கி நாங்கள் உருவாக்கிய வழி தவிர வேறு வழியில் நடமாடவே முடியாதென்பதனால் இந்தக் காட்டில் வழிதவறுவதென்ற பேச்சுக்கே இடமில்லை. பூட்ஸ் அணியாமல் காட்டில் எங்கும் நடக்க முடியாது. தரையில் கிடக்கும் முட்களின் பூசணம் மிக அபாயகரமான விஷம். மரத்தில் நிற்கும் நுனிசிவந்த முள் குத்தினால் ரத்தகாயத்தோடு சரி.

மலைப்பிளவுக்குள் கரும்பாறையின் வெடிப்பு வழியாக நீர் சன்னமாக கொட்டும் ஒலி கேட்டது. கரிய பாறைப்பிளவை பார்க்கையில் அதை பெண்யானையின் பின்பக்கம் என்று நினைப்பதை என்னால் தடுக்க முடியாது. ’ஆனைமூத்திரத்தை நம்பி கெட்டுச்சோத்த அவுத்துட்டேம்ல’ என்று பெருமாள் சொன்ன பழமொழியும் நினைவுக்கு வரும். மலையின் மிக அந்தரங்கமான ஓர் இடம் அது. மேலே மலையின் எந்த சரிவிலிருந்து பார்த்தாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது. எங்கள் முகாம் அமைந்திருப்பதே அந்த ஊற்றை கண்காணிப்பதற்காகத்தான்.

ஓடையின் இருபக்கமும் ஈரமான செம்மண்ணில் பன்றிகளின் கூர்மையான குளம்புகள் நிறைந்திருந்தன. சில மான்சுவடுகளையும் கண்டேன். அங்கே வந்த ஒன்பது மாதங்களில் ஒரே ஒருமுறை சிறுத்தையின் காலடியை கண்டிருக்கிறேன். கருவேலங்குச்சியை கத்தியால் வெட்டி பல் தேய்த்துக்கொண்டு காட்டுக்குள் அமர்ந்துகொண்டோம். தூரத்தில் நாராயணன் தலை தெரிந்தது. ‘என்ன பண்ணுவாங்கன்னு நெனைக்கறே?’ என்றேன்.

‘முடிச்சிருவாங்க…விட்டு வச்சா வம்புல்லா?’ என்றான் நாராயணன்.

‘கொல்லுற அளவுக்கு என்னடா பண்ணினான்?’ என்றேன்.

‘அவன்மேல எட்டு கொலை வழக்கு இருக்கு’

‘அதெல்லாம் சும்மான்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்’

நாராயணன் துப்பிவிட்டு ‘அப்டிப்பாத்தா செயிலுக்கு போறவன், தூக்குல தொங்குறவன்ல நாலிலே ஒருத்தன் ஒண்ணும்தெரியாதவனாக்கும். அதை நினைச்சா நீ தொப்பிய களட்டிட்டு ஊருக்கு போயி வெள்ளாமைய பாக்கணும், நான் ஆலமரத்தடியிலே ஒக்காந்து கண்டவனுக்க அக்குள வழிக்கணும்’ என்றான்.

நான் பெருமூச்சு விட்டேன். ‘என்ன இருந்தாலும் கொல்லுறது தப்பாக்கும்’ என்றேன்.

’தப்பும் சரியும் பாக்கறவன் என்ன மயுத்துக்கு தொப்பிபோடவந்தே? வக்காளி, உனக்கெல்லாம் சர்க்காரு மாசாமாசம் குடுக்குத சமபளம் தெண்டம்’ .

ஒரு காற்று முட்கள் வழியாகச் சென்றது. மெல்லிய துணி ஒன்று முட்களால் கிழிபடும் ஒலி கேட்டது. அது மலை மெல்ல பெருமூச்சுவிடும் சத்தம் என்று எண்ணிக்கொண்டேன்.

‘சாவுறதுக்காகத்தானே அவனுக எறங்கினானுக…விடு’ என்றான் நாராயணன்.

இதையெல்லாம் ஏன் பேசிக்கொள்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. பேசிப்பேசி எல்லாவற்றையும் கொஞ்சம் இலகுவாக ஆக்கிக்கொள்கிறோமா? நான் கீழே சென்று கழுவிக்கொண்டேன். மேலேறும்போது நாராயணன் கழுவிக்கொள்ள இறங்கினான்.

நான் மேலே நின்றபடி ‘படிச்ச பையன்ல?’ என்றேன்.

‘படிப்பாக்குமே கெடுக்குறது’ என்று சொல்லி நாராயணன் எழுந்து மேலே வந்தான்.

நான் சட்டையையும் லுங்கியையும் கழட்டிவிட்டு துண்டை கட்டிக்கொண்டு நீரில் இறங்கினேன். கரையில் நாராயணன் நின்றுகொண்டான். ரைஃபிளை மடியில் வைத்துக்கொண்டான்

குடத்தில் நீரை அள்ளி தலையில் விட்டுக்கொண்டேன். நீர் குளிர்ந்து விரைக்கச்செய்யும்படி இருந்தது. உதடுகள் நடுங்க ஆரம்பித்தன. இந்த நீரில் சோப்பு நன்றாக நுரைக்காது. மீண்டும் நீரை விட்டுக்கொள்ளும்போது எனக்கு அவன் பெயர் நினைவுக்கு வந்தது. நரி என்றுதான் பல மாதங்களாகச் சொல்லி , நினைத்து வருகிறோம். பெயர் மறந்துவிட்டது. ’அப்பு’ இந்தப்பக்கம் அப்படி பெயர்கள் பொதுவாக கிடையாது. மாது, ராசு என்றுதான் இருக்கும்.

நான் நாராயணன்யிடம் ‘அவன் பேரு எனன் சொல்லு பாப்பம்’ .

‘சுப்பு இல்ல?’

நான் சிரித்து ‘நல்ல போலீஸு வேலை. டேய், அவன் பேரு அப்பு’ என்றென்.

‘பேர எங்க சொல்றது?’ என்றான் நாராயணன். ‘படிச்சிருக்கான்லே…பேசாம எங்கயாம் போயி ஒரு வாத்தியார் வேலைய பாத்துட்டு, ஒரு நல்ல குட்டியக் கெட்டிகிட்டு இருந்திரலாம்ணு தோணியிருக்கா பாரு’ என்றான்

‘இவன் பெரிய பகத்சிங்குல்ல…மீசையக்கூட அப்டித்தான் வச்சிருப்பானாம்…’ என்றேன்

நான் குடத்தில் நீர் அள்ளிக்கொண்டு காவடிபோல மூங்கிலில் மாட்டி இரு தோளிலும் எடுத்துக்கொண்டு மேலேறினேன்.

நாராயணன் என் பின்னால் வந்தான். ‘இந்த நாசமாப்போன ஊரிலே இவனுக இப்டி கெளம்பலைன்னாத்தான் ஆச்சரியம். பாத்தியா, ஒருத்தனுக்காவது சோறுதிங்குற களை இருக்கான்னு. பேய்கள மாதிரி இருக்கானுக. இந்த முள்ளுக்காட்டிலே எதை நம்பி உயிரோட இருககனுகண்ணே தெரியல்லை…’ என்றான். நான் மூச்சு இறுக எடை சுமந்ததனால் பதில் சொல்லவில்லை

‘இதில அடிமைத்தனம் வேற. பெண்ணாகரத்திலே ஒருத்தன் இருக்கான். எனனமோ ஒரு நாயுடு. எழுநூறு ஏக்கர் நெலம் வச்சிருக்கானாம். அவன் பண்ணையில மட்டும் நாநூறுபேர் வேலைபாக்கானுக. சம்பளம் கூலின்னு ஒண்ணும் கெடையாது. மத்தியான்னம் கேப்பக்களியும் கொழம்பும் உண்டு. வெலமுடிஞ்சு போறப்ப கேப்பையோ சோளமோ அப்ப எது தோணுதோ அது கொஞ்சம் குடுப்பாங்க. சிலசமயம் புளியங்கொட்டை. அதை வறுத்து ஊறவச்சு திங்கானுக. அதுக்கு மொதலாளி மொதலாளின்னு அவன் பண்ணையிலே போயி காவல் கெடக்கானுக. அந்தாளு எட்டு குதிர வச்சிருக்கான். நல்ல அசல் குதிர. மாந்தளிர் நெறம். பளபளன்னு அது நிக்கிறதபாத்தாலே அழகா இருக்கும். அதிலே ஏறி அவன் போறதப்பாத்தா மகாராஜா கெட்டான்’

‘ஏ, அங்க என்னடே செய்தீய?’ என்று மேலே பெருமாள் குரல் கேட்டது.

‘இவன் ஒருத்தன் மாக்கான்’ என்றான் நாராயணன். ‘ஒரு விவரமோ முறையோ இல்ல’

நான் ‘அவன் கஷ்டப்பட்டு மேல வந்தவன்டா’ என்றேன்.

‘மேல எங்க ? இப்டி காட்டுல துப்பாக்கியோட நிக்குறதுக்கா?’ என்றான் நாராயணன்.

‘அந்த அன்னக்காவடிங்கள மாதிரி கம்புக்கும் சோளத்துக்கும் அடிமவேல பாக்கறதவிட இது மேலத்தானே? எங்க அப்பாவும் பண்ணைக்கூலியா வேலை பாத்தவருதான்..இப்பதான் ரெண்டேக்கர் குத்தகைக்கு எடுத்து குடுத்திருக்கேன்’

‘கரும்பா?’

‘கொஞ்சம் நெல்லு…மிச்சத்துக்கு கரும்பு’ ‘

’இந்த பண்ணையாரு நாயிடு போனவருசம் ஒரு பொம்புளய கொதிக்கிற வெல்லப்பாகிலே போட்டுட்டான் தெரியுமா?’

‘அய்யோ’ என்று நின்றுவிட்டேன்.

‘கரும்பு காய்ச்சுற ஆளோட பொஞ்சாதிதான். அவன் காய்ச்சிட்டு இருக்கிறப்ப இவ அவன் ஒண்ணுக்கு போன நேரமா பாத்து கஞ்சிச் சட்டியிலே வெல்லப்பாக அள்ளியிருக்கா. பண்ணை பாத்துட்டு வந்திருக்கான். ஏற்கனவே அவனுக்கு சந்தேகம் இருந்திருக்கு. நேரா வந்தவன் ‘தேவ்டியா நாயே’ன்னு கத்திட்டு ஓடிவந்து எட்டி ஒரு ஒதை விட்டிருக்கான். அப்டியே உள்ள விழுந்திட்டா…

எனக்கு மூச்சு கெட்டியாக உள்ளேயே இருந்தது. அந்த மேடு செங்குத்தானது.

‘எடுத்து போட்டிருக்கிறத நான் பாத்தேன். தீயிலே வாட்டின கோளி மாதிரி உருகி உடைஞ்சு கெடக்கா. தூக்கி மண்ணிலே போட்டிருக்கானுக. முகம் முலை கையி காலுண்ணு ஒண்ணும் இல்ல… மொத்தமா கொழமொழன்னு ஆயாச்சு. ஆனா எங்கியோ உசிர் இருக்கு. ‘சக்கர சக்கரன்னு’ சத்தம் போட்டுட்டு தலைய ஆட்டுறா. அவளோட பையனுக்கு செல்லப்பேரு சக்கரையாம். அவ புருஷன் கையெல்லாம் வெல்லப்பாகுபட்டு வெந்து அந்தப்பக்கம் கெடக்கிறான். அவன் தான் ஓடிவந்து தூக்கினானாம்

‘அப்றம்?’ .

‘என்ன, கொஞ்ச நேரத்திலே செத்துட்டா. கேஸும் கெடையாது ஒண்ணும் கெடையாது. இன்ஸ்பெக்டரய்யாவுக்கும் ஸ்டேஷனுக்கும் சில்லறை விழுந்திருக்கும், வேற என்ன? அந்த ஆளுங்கதான் நடந்தத சொன்னாங்க…ஏழெட்டுபேர் பாத்திருக்காங்க உதைக்கிறத. எங்கிட்டு போயி சொல்றது? ‘சாமி சோறு இருக்கறவனுக்குதானே நாயம்’னு சொல்லுறான். சரிதானே? உனக்கும் எனக்கும் என்ன நியாயம் இருக்கு? மேல உள்ளவன் நக்கச்சொன்னா ‘சார் இம்பிடு சக்கார கெடைக்குமா’ன்னு கேக்கணும் நாம…’ நாராயணன் சொன்னான். ‘டேய் அவ விழுந்த அந்த சக்கரப்பாகைக்கூட வீணாக்காம வெல்லமாக்கிட்டானாம். அதை எவனோ சாமிக்கு பாயசமா பொங்கி படையல் போட்டிருப்பான். சாமியும் கண்ணமூடிட்டு அருள் புரிஞ்சிருக்கும்…என்ன சொல்லுறே?’

பெருமாள் அவனே பாய்ந்து கீழே வந்து துப்பாக்கியை வாங்கிக்கொண்டு கீழே சென்றான். நான் தண்ணீரை இறக்கி வைத்தேன். சப்பாத்தி மாவை எடுத்து பிசைய ஆரம்பித்தேன். நாலைந்து உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தன. மாவை ஊறவைத்துவிட்டு வெங்காயத்தை நறுக்கினேன்.

நாராயணன் கட்டிலில் அமர்ந்துகொண்டான். ‘காலாகாலமா இப்டித்தான் இருக்கானுக. மானம் மரியாத ஈன ரோஷம் ஒண்ணும் இவனுகளுக்கு இல்ல. அந்த செத்துப்போன குட்டியக்கூட பண்ணைதான் கொஞ்சநாள் வச்சிருந்தானாம். பிறகுதான் இவனுக்கு கட்டி வச்சிருக்கான். என்னத்தச் சொல்ல?’

‘நம்மூரிலயும் எல்லாம் இருவத்தஞ்சு வருசம் முன்னாடி இதே கதைதானே… ’ என்றேன். சப்பாத்தியை பரப்ப நாராயணன் உதவிசெய்தான். அதன்பின் அவன் மேலே பேசாமல் தனக்குள் ஆழ்ந்துவிட்டான். நான் விறகடுப்பை பொருத்தி சின்ன தாளால் வீசி வீசி எரியச்செய்தேன். உருளைக்கிழங்கை கம்பியில் குத்தி தீயில் சுட்டேன். தோல் வெந்த கிழங்கு சட்டென்று ஒரு அதிர்ச்சியை அளித்தது. அதை தொட முடியவில்லை. அப்படியே நீரில் முக்கி கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தேன். பின் தோலை வழித்துவிட்டு அதை நசுக்கி மாவாக்கினேன்.

‘முருகேசு’ என்றான் நாராயணன் ‘ஒருவேள இவனும் பகத்சிங்கு மாதிரித்தானோ. நாம என்னத்தைக் கண்டோம்?’

வெங்காயத்தையும் நசுக்கிய உளைக்கிழங்கையும் உப்பு பச்சைமிளகாய்யுடன் வாணலியில் போட்டு நன்றாக கடைந்து சூடாக்கி வேக விட்டேன். அதன்மீது கொஞ்சம் கடுகு தாளித்துக்கொட்டி இறக்கி வைத்தபின் அந்த தீயை கனலாக்கி அதிலேயே சப்பாத்தியை வாட்டி எடுத்தேன். ஆளுக்கு ஆறு சப்பாத்தி வரைக்கும் சாப்பிடுவோம். ஆனால் எனக்கு சாப்பிடத்தோன்றவில்லை. நாராயணன் அவனுக்கும் இரண்டு போதும் என்று சொன்னான். பெருமாள் மட்டும்தான் வழக்கம்போலச் சாப்பிட்டான்.

நான் என் ரைஃபிளுடனும் வயர்லெஸ் கருவியுடனும் சென்று வழக்கமான பாறை உச்சியில் அமர்ந்துகொண்டேன். அங்கே ஒரு பெரிய புளியமரம் தனியாக நின்றது. அதன் கீழே தார்ப்பாயால் ஒரு சிறிய மறைப்பு. இருபதடி தூரத்தில் நின்றால்கூட பாறை என்றுதான் தோன்றும். அதன் நிழலில் அமர்ந்துகொண்டு கீழே விரிந்துகிடந்த காட்டை பார்த்தேன். பிரம்மாண்டமான பன்றிகள் கிடப்பதுபோல இருபது முப்பது மலைகள் அலையலையாக தூரத்து நீலமலையடுக்குகள் வரை தெரிந்தன. பன்றிகளின் உடலில் மயிர் போல உதிரி மரங்கள்.

அந்த நிலத்தை நான் அங்கே அமர்ந்து நாள் முழுக்க பார்க்க ஆரம்பித்து எட்டு மாதமாகிறது. அந்தக்காட்சியை வெறுமை என்ற ஒரே சொல்லில் சொல்லிவிடலாம். காடு என்று சொல்லும்போது நினைவுக்கு வரும் எதுவுமே இல்லை. ஓங்கிய மரங்கள், பசுமை, இருட்டு, ஈரம் ஒன்றும் இல்லை. பெரிய முள்வெளி. உயிரசைவே நிகழாமல் விரிந்து கிடக்கும் நிலம். காலையில் கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும். பத்துமணி வாக்கில் பனி விலகி வெற்று வானத்தில் இருந்து வெயில் கொட்ட ஆரம்பித்ததும் வெறுமை பெருகியபடியே செல்லும்.

மதியத்தில் வானும் பூமியும் சேர்ந்து உருகி கண்ணாடிக்குழம்பாக கண்கூச ஒளிவிட்டுக்கொண்டிருக்கும். பின்மதியத்தில் நிலம் வெந்த வாசனை காற்றில் எழுந்து வரும். மேமாதம் என்றால் எங்காவது தீப்பிடித்து எரிந்து எரிவாடையும் புகையும் சாம்பல்துகள்களும் காற்றிலேறி வரும். பாறைப்பரப்புகளின் மீது ஈரமாக கானல் அலைபாயும். மாலையில் மெல்ல மெல்ல வானம் சிவந்து பழுத்து தீக்கனல்வெளியாகும். தூரத்தில் மாதேஸ்வரன்மலையடுக்குகள் நீலநிறம் கொள்ளும். நீலம் மேலும் மேலும் அடர்ந்து வரும். காற்றில் குளிர் கலக்கும். பின்பக்கமிருந்து காட்டை நோக்கி பறவைக்கூட்டங்கள் பறக்கும் காகிதக்குப்பைகள் போல மிதந்து செல்லும். பின்பு தீனமான பறவைக்குரல்களினாலான அந்தி. இருள் பரவியதும் காட்டின் ரீங்காரம் ஆரம்பிக்கும். அந்த ஒலியே காடாக ஆகி இரவெல்லாம் இருளுக்குள் கூடவே இருக்கும்.

அன்று என்னால் அமர முடியவில்லை. நிலைகொள்ளாமையுடன் கற்களை பொறுக்கி பள்ளத்தில் வீசிக்கொண்டிருந்தேன். கற்கள் எங்கோ உருண்டு உருண்டு விழும் ஒலி. கொஞ்சநேரம் தூரநோக்கியால் பள்ளத்தாக்கை ஆராய்ந்தேன். என் பக்கவாட்டில் புதரில் இருந்து ஒரு கீரி சாம்பல்நிறமான வாலை விடைத்தபடி இன்னொரு புதருக்குள் ஓடி மறைந்தது. நான் என் சிந்தனைகளை கொஞ்சமும் கவனிக்காமல் இருக்க பழகிவிட்டேன். எனக்குள் ஒயர்லெஸ் ஒலிப்பது போல யாரோ யாரிடமோ என ஏதோ உரையாடல் ஓடிக்கொண்டிருக்கும், முற்றிலும் கவனிக்கப்படாமல்.

டப்டப்டப் என்று தூரத்தில் எஸ்டி பைக் ஒலித்தது. கருப்பையாசார் என்று அந்த ஒலி சொன்னது. ஆம், நான் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ நடக்கப்போகிறது என்று என்னுடைய உள்மனம் சொல்லிக்கொண்டிருந்தது. எழுந்து தூரநோக்கியால் பார்த்தேன். பைக் வளைவில் திரும்புவது தெரிந்தது. அதில் சீருடையும் கறுப்புக்கண்ணாடியுமாக கருப்பையா வந்துகொண்டிருந்தார். நீலப்புகை அவர் வந்த வழிகளில் தேங்கி நின்று நீரில் துப்பிய பற்பசைநுரை போல மெல்ல பிரிந்தது.

நான் கூடார வாசலுக்குச் சென்றபோது கருப்பையா வந்து சேர்ந்திருந்தார். நாராயணனும் பெருமாளும் அவரை உள்ளே அழைத்துச்சென்றார்கள். மடியில் கிளிப் விடுவித்து வைத்திருந்த துப்பாக்கியை பூட்டி இடுப்பில் செருகியபின் அவர் கட்டிலில் அமர்ந்து கொண்டார். அவரது உடல் அளவுக்கு நாற்காலி போதாது.

நான் வாசலில் நின்றதும் ‘வாடா…எப்டிரா இருக்கே?’ என்றார்.

‘இருக்கேன் சார்’ என்றேன்.

கரிய முகத்தில் பெரிய வெண்ணிறப்பற்கள் தெரிய சிரித்து ‘நீ இருக்கேன்னு உன்னையப்பாத்தாலே தெரியுதுடா நாயே…’ என்றார்.

நான் நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். நூற்றுக்கணக்கான சிறு மருக்களும் பாலுண்ணிகளும் நிறைந்த கழுத்தும் முகமும், நெற்றியே இல்லாமல் நெருங்கி வந்த அடர்ந்த முள்ளம்பன்றி மயிரும் பரந்த மூக்கும் இருந்தாலும் கருப்பையா முகம் ஏதோ ஒரு களையை காட்டக்கூடியது. அவருக்கு நம்மை உண்மையிலேயே பிடிக்கும் என்பதனால் இருக்கலாம்.

‘டீ சாப்பிடுங்க சார்’ என்றேன்.

‘போடு’ என்றார்.

நாராயணன் ஸ்டவ்வை மூட்டி டீ போட ஆரம்பித்தான்.

‘என்னசார் செய்தி?’ என்றேன்.

‘வக்காளி, அப்ப நீ மைக்க கேக்கலியா?’

‘கேட்டேன்’

‘பின்ன?’

‘அதிலே மேக்கொண்டு என்ன?’

‘மேக்கொண்டு என்ன, பொலிதான்’

நான் பேசாமல் இருந்தேன்

‘என்ன?’

‘இல்ல சார்…’

‘என்ன இல்ல?டேய் அவனுக நம்மாள போட்டிருக்கானுகடா’

‘எத்தனை பேர சார்?’

‘ஏன் திருப்பத்தூரிலே வில்சனை குண்டுவீசி கொல்லலை?’

‘மொத்தம் இதுவரை மூணுபேரு…நாம இருபது முப்பதுபேர கொன்னாச்சே’

‘டேய் அந்தக்கணக்க போட்டிட்டிருந்தா வேலைககவாது. நாம அடிச்சாத்தான் நமக்கு அடிவிளாது, கேட்டியா?’

நான் ஒன்றும் சொல்லவில்லை. கருப்பையா மிக எளிமையான மனம் கொண்டவர். அவருக்கு என்ன சொல்லப்படுகிறதோ அதை முழுக்க நம்பி அதாகவே ஆகிவிடுபவர். அவரைப்போன்றவர்கள்தான் போலீஸுக்கு தேவை போல.

’சண்டை உண்டா சார்?’ என்றான் பெருமாள்.

‘சண்டையெல்லாம் இல்லடா. அவனே வந்து சரண்டர் ஆயிட்டான்’

‘உண்மையா?’

’ஆமா…ஆனா சும்மா சரண்டர் ஆயிடுவானா? ஆக வச்சோம்ல? தாளிய தேட ஆரம்பிச்சு எட்டுமாசமாகுது. எப்டியும் முந்நூறுபேர இண்டராகேட் பண்ணியாச்சு. ஒருத்தன்கூட மூச்சு விடலை. டேவ் எங்கள போட்டு வையறார். காதுகுடுத்து கேக்கமுடியாது. என்ன பண்றது? இனிமே பண்றதுக்கு ஒண்ணுமில்ல… இந்த சனியனுங்களோட ஆசனவாயிலயும் பொச்சிலயும் போடுறதுக்கு வாங்கின மொளகாப்பொடிக்கு தனி பில்லு எளுதணும்னு மாதையன் அண்ணைக்கு சொல்லி ஒரே சிரிப்பு பாத்துக்க… அடி, ஒதை, கொல்லு, நகத்த பிடுங்கு, சுண்ணியிலே ஈக்குச்சிய விட்டு சொளட்டு . என்ன பண்ணினாலும் ஒரு வார்த்தை சொல்லமாட்டானுக. சில கல்லுளிப்பயக்க ‘சொல்ல மாட்டேன் சாமி. அவரு எங்க கொலதெய்வம் முனியப்பசாமியாக்கும்னு நம்மகிட்டயே சொல்றான்…’

பெருமாள் ‘திமிரு’ என்றான்.‘சர்க்காருண்ணாக்க வெளையாட்டா நினைச்சுக்கிட்டனுக’.

கருப்பையா ’அப்பதான் மெட்ராஸிலே இருந்து மோகன்ராஜ்சார் காம்புக்கு வந்தார். இப்டி ஒரு பேரு அவனுக்கு இருக்குன்னா அவனுக்கும் இதே மாதிரி ஒரு பிரியம் இவங்கமேலே இருக்கணும்டா…ஒரு வழி இருக்கு. அதுக்கு ஆப்பரேஷன் ஸ்மோக்குன்னு பேருன்னார். பாம்ப புடிக்கறதுக்கு இருளர் பயக்க பொந்திலே பொகை போடுவானுங்க இல்ல, அதே டெக்னிக்கு. நேரா நாலு நியூஸ் பயக்கள வரச்சொல்லி பேப்பரிலே தெனமும் வகை வகையா எளுதவச்சாரு. போலீஸ் கொடுமை, போலீஸ் சித்திரவதை. அப்புவ தேடி போலீஸ் கிராமவாசிகளை அடிச்சு கொன்னிட்டிருக்காங்க… பொம்புளப்புள்ளைகள கொண்டு போயி கற்பழிக்கிறாங்க. பொச்சில ஆசிட்ட விடுறாங்க…தெனம் நியூஸுதான். பத்தே நாளு. நேரா வந்து நிக்கிறான்…’

‘எங்க?’

‘இங்க இல்ல. மாரண்டஹள்ளி ஸ்டேஷனிலே… சவத்துப்பய கொள்ளேகால், ராம்நகர் பக்கம் அலைஞ்சிட்டிருந்திருக்கான். நேத்து மத்தியான்னம் மூணு மூணரை மணிக்கு ஸ்டேஷனிலே ஒரு ஜோல்னாபையோட வந்து நின்னிட்டிருக்கான். நான்தான் அப்புன்னு சொன்னான். அங்க இருந்தது ராஜப்பாவும் முருகேசனும். அதான்யா மீசக்காரரு. அவருக்கு சந்தேகம். புடிச்சு வச்சுட்டு தகவல் குடுத்தாரு. கோபால் போயி பாத்ததும் தெரிஞ்சுட்டுது. எழுவத்தேழிலே அவனை இவுருதான் முதல்ல ஒரு சினன் கேஸுக்கு இண்டராகேட் பண்ணியிருக்காரு… நான் சரண்டர் ஆயாச்சு. எங்க ஊர்க்காரங்கள விட்டிருங்க. அவங்கள ஒண்ணும் பண்ணாதீங்கன்னு சொன்னானாம். நேரா தர்மபுரிக்கு கொண்டு போய்ட்டாங்க. அங்க டிஎஸ்பி வந்து பாத்தாரு. அவருகிட்டயும் அதைத்தான் சொல்லியிருக்கான். கலெக்டர் வந்து பாத்தப்பவும் அதேதான். வேற ஒண்ணுமே சொல்லலை. ‘உங்களுக்கு என்னைத்தானே வேணும். எங்க சனங்கள ஒண்ணும் பண்ணாதீங்க’ பாத்தியாடா திருட்டுநாயிக்கு அவன் சனங்க மேலே என்ன ஒரு இதுண்ணு? நம்ம தலைவனுங்க இருக்கானுங்களே’

‘டேவ் வந்தாச்சா?’ என்றான் நாராயணன்.

டீயை வாங்கி உறிஞ்சியபடி ‘அவரு சேலத்திலேதான் இருந்திருக்காரு. நேத்து சாயங்காலமே வந்தாச்சு. அவரு ஒரு நாலுமணிநேரம் இண்டராகேட் பண்ணியிருக்காரு. கொட்டைய உடைச்சாச்சு. ‘எங்காளுகள விட்டிருங்க…எனக்கு வேற ஒண்ணும் தெரியாது’ ரெண்டு வரிதான். விடியக்காலையிலே மோகன்ராஜ் சார் மெட்ராஸிலே இருந்து வந்திருக்காரு. அவரு ஒரு மணிநேரம் உக்காந்து பேசியிருக்காரு. வெளிய வந்து ‘வைப் அவுட் ஹிம்’னு சொல்லிட்டு காலையிலேயே சேலம் போயிட்டாரு.’

‘அப்ப அவ்ளவுதானா?’

‘பின்ன? டேய் இதோட இங்க இவனுகளுக்க கதை முடியுது. இன்னும் ஒரு ஏழெட்டுபேரு இருக்கானுக. லிஸ்டு போட்டாச்சுன்னு பேச்சு. இவன்கூட்டாளி பாலன்னு ஒருத்தன், அவன் ராயப்பேட்டையிலே இருக்கிறதா சொல்றாங்க. அவனை ஃபாலோ பண்ணிட்டிருக்காங்க. அப்டியே கொத்தா தூக்கிருவாங்க’ டம்ளரை திருப்பிக்கொடுத்து கருப்பையா மீசையை முறுக்கினார். ‘இங்க வந்து ஏற்பாடுகள் செய்றதுக்கு ஆர்டர் வந்திருக்குடா’

என் வயிறு தோல்பறைபோல அதிர்ந்தது. ‘இங்கியா?’

‘பின்ன? நம்ம டிஸ்டிரிக்டிலே வேற எங்க இந்த மாதிரி எடமிருக்கு? இங்கதான். நடுராத்திரியிலே கெளம்பி நாளைக்கு விடிகாலையில வந்திருவாங்க. அதுக்குள்ள செய்ய வேண்டியத செய்யணும்.’என்றார்

நான் பேசாமலேயே அமர்ந்திருந்தேன்

‘என்ன?’

‘எஸ் சார்’

கருப்பையா நாராயணனிடம் ‘நீயும் கூட போடா…சீக்கிரம். இங்க அவனுக வந்து சேரறதுக்கு சாயங்காலமாயிடும். காலையிலே குழி ரெடியா இருக்கணும்’

நான் ‘எஸ் சர்’ என்றேன்.

‘நான் இங்கியே இருக்கேன். பெருமாள் உங்கிட்ட சரக்கு இருக்குல்ல?’

‘இருக்கு சார்’

‘பொறிகிறி வச்சு காட்டுகோளி காடை கௌதாரி எதுனா போடுவீங்களாடா?’

‘சிக்குறதில்ல சார். இங்க பறவைகளே கம்மி’

‘என்னத்த காடோ என்ன எளவோ. மசிரு, சஹாராபாலைவனம் கெட்ட கேடாட்டுல்லடா இருக்கு’

நானும் நாராயணனும் மண்வெட்டிகளை எடுத்துக்கொண்டோம். பெருமாள் பிகாக்ஸை. ’குடிக்கத் தண்ணிய எடுத்துக்குங்கடா’ என்றார் கருப்பையா.

நாங்கள் இருபக்கமும் முட்கள் நீட்டி நின்ற இடுங்கிய பாதை வழியாக நடந்தோம்.

‘டேய், இதென்ன கட்டப்பாறை மாதிரில்லடே இருக்கு தரை….பன்னண்டடி ஆழம் வேணும்னு சொல்றானே நம்மாளு?’ என்றார் கருப்பையா.

‘பன்னண்டடியா? என்னது கெணறா வெட்டச்சொல்லுதாரு?’ என்றான் பெருமாள்

‘இல்லடே…காடுல்ல…ஏதுனா நாயோ நரியோ வந்து இளுத்துப்போட்டுட்டா வம்பாப்போயிரும்…அதான்..’

‘இங்க பன்னிரண்டடி வெட்ட ஒரு வாரமாவும் சார்’

‘வெட்டுங்கடே..நானும் வேணுமானா நின்னு ஒரு பிடி பிடிக்கேன்…எளவு மேலே உள்ள தெய்வங்கள்லா சொல்லுது…தொப்பிபோட்டவன் மறுத்துபேசமுடியுமாடே?’

பாறை இல்லை என்று தெரிந்த இடத்தை தேர்வுசெய்தோம். பெருமாள் பிக்ஆக்ஸால் நீள்சதுர வடிவத்தில் அடையாளப்படுத்திக்கொண்டான்

‘ஆரம்பிங்கடா…’ என்றார் கருப்பையா. ‘உஸ்ஸ்’ என்று அங்கே ஒரு சிறிய பாறையில் அமர்ந்துகொண்டார். ‘தண்ணிய எடுடா’ தண்ணீரை குடித்து கொஞ்சத்தை தலையில் விட்டுக்கொண்டார்.

நாராயணன் பிகாக்ஸால் எடுத்து நிலத்தை ஒருமுறை தட்டிவிட்டு, விலா எலும்புகள் தோலுக்குள் அலையலையாக ஓட தலைக்குமேல் அதை தூக்கி சட்டென்று வெட்டினான். மிகச்சரியாக நாராயணன் வரைந்த செவ்வகத்தின் கிழக்குமூலைப்புள்ளியில் வெட்டு விழுந்தது.

நாராயணன் வெட்ட பெருமாள் மண்ணை அள்ளி கொட்டினான். பின்னர் பெருமாள் வெட்ட நாராயணன் மண்ணை அள்ளிக்கொட்டினான். நான் மண்ணை அள்ளி குவித்தேன்.

‘சரக்க எடுடா பெருமாளு’ என்றார் கருப்பையா. அவர் வெற்றுச் சாராயமாகவே குடிக்கக்கூடியவர். மூவரும் அமர்ந்துகொண்டோம். நான் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்குடித்தேன். நாராயணனும் பெருமாளும் வேண்டாம் என்றார்கள். .

முழங்காலளவு ஆழம் வந்தபோது இருட்டிவிட்டது. நான் அரிக்கேன் விளக்கை கொளுத்தி மரக்கிளையில் மாட்டினேன். காட்டுக்குள் இவவ்ளவு பறவைகள் இருக்கும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விளக்கொளி அவற்றை பயமுறுத்தியதனால் மரங்களுக்கு மேலே அவை கலைந்துகலைந்து எழுந்து அமர்ந்துகொண்டிருந்தன. புதர்களுக்குள் சரசரவென்று எவையோ சென்றன. பெருமாள் காகிதத்தில் சுருட்டிக் கொண்டுவந்திருந்த சப்பாத்திகளை எதுவும் தொட்டுக்கொள்ளாமல் சாப்பிட்டோம். நாராயணன் சென்று கொஞ்சம் புளியமரத்தளிர்களை பறித்துக்கொண்டுவந்து அவற்றை சப்பாத்தியுடன் சேர்த்து மென்று தின்றான். இருவரும் மீண்டும் கொஞ்சம் சாராயம் குடித்துக்கொண்டார்கள்.

இடுப்பளவுக்குமேல் மண் இறுகி இருந்தது. வெட்டு விழும்போது அந்தப்பகுதி முழுக்க மண்ணின் அதிர்வு பரவியது. இரவு ஏற ஏற நன்றாகவே குளிர் அடித்தது. நாராயணன் சென்று ஒரு காய்ந்த மரத்தை தூக்கி வந்து பிக்ஆக்ஸாலேயே உடைத்து போட்டு தீமூட்டினான். தீயருகே நாங்கள் சூழ்ந்து அமர்ந்து கொண்டோம். பெருமாள் டீத்தூளும் சீனியும் கொண்டுவந்திருந்தான். தகரக்கோப்பையை தீமேல் காட்டி நீரை கொதிக்கச்செய்து கறுப்புடீ போட்டு நாராயணன் பெருமாள் இருவரும் குடித்தார்கள்.நான் சாராயத்தை லேசாக சூடு படுத்தி குடித்தேன்.

கருப்பையா படுத்துவிட்டிருந்தார். என் உடல் அந்தக்குளிரிலும் கொதித்து வியர்வை வழிந்தது. மூவரும் வாயாலும் மூக்காலும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தோம். என் காதுகளும் கண்களும் கூட மூச்சை சீறுவதுபோல உணர்ந்தேன்

சற்று அமர்ந்து கொண்டேன். வானத்தில் நிறைய நட்சத்திரங்கள். நான் முழக்கோல் நட்சத்திரத்தை மட்டும் அடையாளம் கண்டேன். பொட்டலில் ஆடுமேய்க்கச்சென்று பட்டி அடித்து தங்கும்போது அப்பச்சி நிறைய நட்சத்திரங்களுக்கு பெயர் சொல்லிதந்திருக்கிறார். எல்லாம் மறந்து போய்விட்டது. ஆனால் வானம் வெள்ளாட்டுகூட்டங்கள் மேயும் ஒரு பெரிய பொட்டல் என்று நினைப்பது மட்டும் மனதில் தங்கிவிட்டது.

‘டேய் எந்திரி…. இந்தா நாலடி ஆகல்லை… வெள்ளிமீனு இப்ப வந்திரும்’

நள்ளிரவு தாண்டியபோது குழி ஆறடிக்கு கீழே சென்றிருந்தது. நாராயணன் இரு மரக்கிளைகளை வெட்டி குறுக்கே குச்சிகள் வைத்து கட்டி ஏணி செய்திருந்தான். கூடைகளில் நாராயணன் வெட்டி தூக்கி வந்து கொடுத்த மண்ணை பெருமாள் வாங்கி கொட்டினான். குளிரிலும் இருவரது வெற்று உடம்புகளும் வியர்வையில் பளபளத்தன. பேச்சே இல்லாமல் இருவரும் பேய்கள் போல வேலைசெய்துகொண்டிருந்தார்கள். நான் இன்னொரு பெரிய மரத்தடியை தூக்கி நெருப்பில் போட்டேன்.

சட்டென்று பெருமாள் தன் கையில் இருந்த கூடையை சுழற்றி வீசினான். ஓடிப்போய்அந்த கூடையை அழுத்திப்பிடித்துக்கொண்டான். ‘என்ன?’ என்றேன்.

‘முசல்’ கூடையை மெல்ல இரண்டு இஞ்சு தூக்கியபோது முயல் வெளியே பாயமுயன்று காதுகளை வெளியே விட அவன் அதன் காதைப்பற்றிக்கொண்டான்.

சாம்பல்நிறமான குண்டு முயல். கைக்குழந்தைபோல கைகால்களை வைத்துக்கொண்டு பஞ்சுபோல அடிவயிற்றுடன் நெருப்பு பிரதிபலித்த சிறியமணிக்கண்களுடன் பார்த்தது. வால் வெட் வெட் என ஆடியது. பெரிய முன்பற்கள் தெரிய அது முறுவலிப்பதுபோல தோன்றியது. பெருமாள் அதை காலால் மிதித்துப் பிடித்துக்கொண்டு கழுத்தை வேகமாக முறுக்கி முறித்தான். கால்கள் உதறிக்கொண்டபின் அடங்கியது. அவன் இடுப்பில் இருந்து கத்தியை எடுத்து அதன் வெண்ணிறமான வயிற்றை கிழித்து குடலை கையாலேயே பிய்த்து வெளியே பிடுங்கி புதரில் வீசினான். ஒரு குச்சியை எடுத்து அதில் அதை செருகி தீயில் காட்டி சுட ஆரம்பித்தான்.

நாராயணன் மேலே ஏறி வந்தான். சாராயப்புட்டியை கையோடு எடுத்துவந்தான். இருவருமாக அதை மிதமான சூட்டில் சுட்டார்கள். அதன் தோல் கருகி வழிந்து கொழுப்பு தீயில் சொட்டி தீ நீலமாக வெடித்தது. சூடான முயலை வெளியே எடுத்து கருகிய காதுகளையும் கால்களையும் பிய்த்து முறுமுறுவென அப்பளம் வற்றல் தின்பது போல தின்று புட்டியில் இருந்து சாராயத்தையும் குடித்துக்கொண்டார்கள்.

கடைசித்துளி சாராயத்தையும் குடித்துவிட்டு மீண்டும் வேலையை ஆரம்பித்தார்கள். நான் எத்தனையோ காலமாக, பிறந்ததில் இருந்தே அங்கே மண்ணை வாங்கிக்கொட்டிக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தேன். என் உடல் வியர்வையாக உருகிச் சொட்டிக் கொண்டிருந்தது. இருட்டுக்குள் யார்யாரோ என்னை பார்த்துக்கொண்டிருப்பதாக தோன்றியது.

எங்கள் நிழல்கள் சுற்றியிருந்த இருண்ட காட்டின் திரையில் பெரிய சினிமா போல ஆடிக்கொண்டிருந்தன. பூதங்கள் போல. நடுவே தீ தழல்விட்டது. சிலசமயம் எதையோ சொல்ல வருவது போல வெடித்தது. பின்னர் எரிந்து கனன்று சாம்பல் மூடி அணைந்தது. பூனைபோல உர்ர்ர் என்று ஒலித்துக்கொண்டிருந்தது. எவ்வளவுநேரம்,எவ்வளவு மண்!

மலையிறங்கி வந்த குளிர்காற்றில் கங்கு சிவந்து சீறி தழல் எழுந்தது. மேலே நின்ற நாராயணன் என்னிட்ம் ’சோலி முடிஞ்சுது’ என்றான்.

நான் சென்று எட்டிப்பார்த்தேன். ‘எவ்ளவு ஆழம் வரும்டா?’

அவனைவிட நான்கு அடிக்கு மேல் ஆழம் இருந்தது

‘பத்தடி’ என்றான்.

‘பன்னிரண்டு அடிவேணும்ல?

‘இன்னும் தோண்டினா நீயும்நானும் இதிலே அடங்கிருவோம்…போதும்’

‘இல்ல…வந்து பாத்ததுமே வாயால பீய கக்க ஆரம்பிப்பானுக….வெட்டலாம்டா’

பெருமாள், ’ஒரு ரெண்டடிதானே…’ என்றான்

‘என்னடா பொழைப்பு இது…நாம யாரு? அடிமையா, வெட்டியானா?’

நான் ஒன்றும் சொல்லவில்லை. மூர்க்கமான வேகத்துடன் வெட்டிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்து மண்வெட்டியுடன் அப்படியே விழுந்துவிட்டேன். அவர்கள் இருவரும் உடனே அந்த வெட்டிபோட்ட மண்ணிலேயே படுத்து உடனே தூங்கிவிட்டார்கள்.

நான் எழுந்தபோது தீ சிவந்த ஒற்றைக்கண் போல இமைத்துக்கொண்டிருந்தது. தீயை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். தண்ணீர் குடித்தேன். எழுந்துசென்று சிறுநீர்கழிக்க அமர்ந்தபோது புதர்க்குள் மெல்லிய பளபளப்புடன் அசைவைக் கண்டு எழுந்து நின்றேன். பாம்புதான். அந்த முயலின் குடலை விழுங்கிக்கொண்டிருந்தது. அதையே பார்த்தேன். உணவை மொத்த உடலாலும் வளைந்து நெளிந்து அது உள்ளே செலுத்தியது. பதற்றமா ருசியா என்று தெரியவில்லை, வால் நெளிநெளிந்தது. அது திரும்பிச் செல்லும்வரை அமர்ந்திருந்தேன்

கொஞ்சநேரத்தில் காற்று கீழிருந்து வர ஆரம்பித்தது. அப்போது குளிர் கொஞ்சம் குறைந்தது. வந்தகாற்றில் நீர் மணம் இருந்தது. ஒகேனேக்கல் அருவிகளின் ஓசை மெலிதாகக் கேட்டது. காற்று பலமாக வீசியபோது நன்றாகவே கேட்டது. காற்று நின்றதும் குளிர் கூடும் விந்தையை கவனித்தேன். கீழ்வானில் விடிவெள்ளி தெரிகிறதா என்று பார்த்தேன். கொஞ்சம் மேகம் இருக்கும்போல. தெரியவில்லை. காத்திருந்தேன். விடிவெள்ளி தெரிந்ததும் இன்னொரு கருப்பு டீ போட்டு குடித்தேன்.

‘டேய்,எந்திரிங்கடா…இன்னும் ஒரடி…டேய்’ என அவர்களை எழுப்பினேன்.

பெருமாள் செக்கச்சிவந்த கண்களால் என்னைப்பார்த்து ‘என்னடா?’ என்றான்

‘குழிடா…வா..’

‘என குழி?’

‘டேய் எந்திரிடா’ என்று ஓங்கி ஓர் உதை விட்டேன்

பெருமாள் குழியை அப்போதுதான் பார்த்தான். பதறி எழுந்து பிக்ஆக்ஸை எடுத்தான்.

மண் இப்போது சற்றே ஈரப்பசையுடன் , சுண்ணாம்புமணத்துடன் இருந்தது. பெருமாள் ஒரு கல்லை எடுத்து வாயில்போட்டுக்கொண்டான்

‘என்னடா?’

‘கல்கண்டுக்கல்லுடா…குளிர்ச்சியா இருக்கும்…தேரைக்கல்லுண்ணூ எங்கப்பா சொல்லுவாரு..’

பெருமாளின் தொம்பர்சாதி. தலைமுறை தலைமுறையாக கிணறுவெட்டுவதுதான் வேலை. இப்போது எவரும் கிணறுவெட்டுவதில்லை. கக்கூஸ்தான்.

வானத்தில் சிவப்புத்தீற்றல்கள் எழ ஆரம்பித்தன. எங்கள் கைகளில் தொடுஉணர்ச்சிகூட இல்லை.

‘பன்னிரண்டடி இருக்கும்டா’

’அரையடி கூட்டியே வெட்டிருவோம்டா…வம்பு எதுக்கு’

குழி தயாரானபோது நிழல்களே இல்லாத மெல்லிய காலைவெளிச்சத்தில் காடு துல்லியமாக இருந்தது. ஒவ்வொரு முள்நுனியையும் துல்லியமாக பார்த்துவிடலாம்போலிருந்தது. காற்று அங்கேயே சுற்றிச்சுற்றி வந்தது. சின்னக்குழந்தை விளையாடுவதுபோல.

நான் புதருக்குள் சென்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது ஒயர்லெஸ்ஸில் ரீங்காரத்துடன் கருப்பையாவின் எண் அழைக்கப்படுவதை கேட்டேன். ‘பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர். பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர் கேக்குதா….பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர் அய்யா பேசணும்கிறாங்க…சார். பி த்ரீ டிகே..சார்.. பி த்ரீ பித்ரீ டிகெ டிகெ ஓவர்’

நான் சென்று கருப்பையாவை எழுப்பினேன். அவர் ‘ப்போ ‘ என்று குழறி திரும்பிப்படுத்தவர் நான் மீண்டும் உசுப்புவதற்குள் சட்டென்று எழுந்து அமர்ந்து ‘கால் வந்திருக்கா?’ என்றார்.

நான் வயர்லெஸை கொடுத்தேன்.

‘பி த்ரீ டிகெ ஸ்பீங்கிங்…ஓவர்…’ என்றார். ‘அய்யா’ என்றார் ‘ஆமாங்கய்யா எல்லாம் ரெடி…ஆமாங்கய்யா .காட்டுக்குள்ள. இல்லீங்கய்யா ….ஆமா . மூணுபேருங்கய்யா…ஆமாங்கய்யா.. ஆமாங்கய்யா’

எழுந்து ‘மூணு மணிக்கே கெளம்பிட்டாங்கடா…இன்னும் ஒன்னவரிலே வந்திருவாங்க…போயி கக்கூஸ் கிக்கூஸ் போயி பல்லக்கில்ல வெளக்கி ரெடியா இரு…..நாம டெண்டுக்கு போவம்’ என்றார்.

நான் பெருமாளையும் நாராயணனையும் எழுப்பினேன். பெருமாள் வழக்கம் போல எழுந்து ஒன்றும் பேசாமல் சிறுநீர் கழிக்கச்சென்றான்.

நானும் கருப்பையாவும் காட்டுக்குள் நடந்து கொஞ்சம் முட்கீறல்களுடன் டெண்டுக்கு வந்து சேர்ந்தோம். கருப்பையா உள்ளே சென்று ‘துண்டு, சோப்பு இருக்காடா?’ என்றார்.

‘இருக்கு சார்’ என்று எடுத்துக்கொடுத்தேன். கீழே ஓடைக்குச் சென்று மலம்கழித்து பல்தேய்த்தோம்.

கருப்பையா ‘அம்மா …’ என்று வீரிட்டபடியே இருந்தார். ‘டேய், மூலம் இல்லா போலீஸ்காரன் ஒளுங்கா வேலைசெய்யலேண்ணாக்கும் அர்த்தம் கேட்டியா?’ என்று அவர் சொல்வதுண்டு.

திருப்பி ஏறும்போது கருப்பையா பலமுறை நின்று மூச்சுவாங்கினார். அவரது எடையுடன் அவர் ஏறுவதே ஆச்சரியம்தான். நான் டீ போட்டுக்கொண்டிருந்தபோது வயர்லெஸ்ஸில் ஜீப் நெருங்கிவிட்ட செய்தி வந்தது.

நான் திடீரென்று ஒன்று தோன்றி மலைப்பாதையில் மேலே சென்றேன். இரு வளைவுகள் முன்னால் சென்று நின்றேன். செம்புழுதி பின்பக்கம் சுருண்டு எழ ஒரு ஜீப்பும் வேனும் வருவதைக் கண்டேன். தூரத்துக் காட்டுக்குள் அப்போதுதான் விடிய ஆரம்பித்திருந்தது. பனிமூட்டம் விலகவில்லை. வண்டிகள் பனியின் திரையில் இருந்து புதிதாக உருவாகி வருவது போல வந்தன.

வேனும் ஜீப்பும் முன்னால் சென்று முகாமை அணுகின. நான் பின்னால் ஓடினேன். சரிவிறங்கி அவை எட்டும் முன்னரே முகாமுக்கு முன் வந்துசேர்ந்தேன்,

ஜீப்பும் வேனும் வந்தன. அலையில் படகு போல வந்த ஜீப்பின் ஓரத்தில் டிஎஸ்பி அமர்ந்து சிரித்துக்கொண்டே என்னிடம் ‘என்னய்யா?’ என்றார்.

நான் புன்னகை செய்தேன். முகாமுக்கு முன்னால் ஜீப்பும் வேனும் நின்றன. கருப்பையாவும் பெருமாளும் ஓடிவந்தனர். நாராயணன் டீ போடுகிறான் என ஊகித்தேன்.

டிஎஸ்பி இறங்கி கைகளை தூக்கி சோம்பல் முறித்தார். ’என்ன கருப்பு எப்டி இருக்கே?’

‘நல்லா இருக்கேங்கய்யா’

‘மெலிஞ்சுபோய்ட்டியே’

கருப்பையா நெளிவது போல பாவனைசெய்து சிரித்தார்.

பின்னால் இறங்கி வந்த எஸ்ஐ கண்ணப்பன் ’நாலுவேளைக்கு மேலெ சோறு எறங்கலையாம்… வருத்தப்படுறார்’ என்றார்.

டிஎஸ்பி உரக்கச்சிரித்தபின் கருப்பையா சிரித்தமுகமாக இருக்கும்போதே சட்டென்று சீரியஸாகி ‘என்ன வேலை முடிஞ்சாச்சா?’ என்றார்.

‘முடிஞ்சாச்சு சர். ரெண்டுபேர் அங்க நிக்கிறாங்க’ என்றார் கருப்பையா சிரிப்பை அணைத்து.

’அப்ப அயிட்டத்த நேரா அங்கியே கொண்டு போயிருவோம். டைமில்ல. விடிஞ்சிரும் இப்ப’ என்றபின் கண்ணப்பனிடம் ‘எறக்குய்யா’ என்றார்.

நான் மனம் படபடக்க வேன் கதவை பார்த்தேன். டிஎஸ்பி கண்காட்டவும் ஜீப்டிரைவர் சாமிக்கண்ணு வேனுக்கு அருகே சென்று கதவை திறந்தார். சில கணங்கள் எனக்கு வெறும் உடலசைவுகள்தான் தெரிந்தன. இரு காக்கி உடைகள் வெளியே வந்தன. ஆயுதப்படை காவலர்கள். அவர்கள் உள்ளே இருக்கை நடுவே இரும்புத்தரையில் படுத்திருந்த ஒர் இளைஞனை சாக்குமூட்டையை இழுப்பது போல இழுத்து வெளியே போட்டார்கள். கீழே விழுந்ததும் அவன் முனகியபடி மெல்ல அசைந்து எழுந்து அமர்ந்து வேனின் திறந்த கதவை பிடித்துக்கொண்டான்.

கரிய இளைஞன். இன்னும் கனக்காத பூச்சு மீசை. அடர்த்தி குறைந்த மென்மையான தலைமயிர் நெற்றிமேல் விழுந்து கிடந்தது. மெலிந்த உடல். கழுத்திலும் மார்புகூட்டிலும் எலும்பு தெரிந்தது. இவனா என்று தோன்றியது. தருமபுரியில் ஏதாவது கல்லூரியில் பீஏ சரித்திரம் படிக்கிறான் என்று சொல்லியிருந்தால் நம்ப முடியும்.

‘எந்திரிடா’ என்று டிஎஸ்பி அவனை உதைத்தார். அவன் கதவை பிடித்து தள்ளாடி எழுந்து நின்றான். வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தான். அது முழுக்க ரத்தம் காய்ந்து கரிய விழுதுகளாகிப் படிந்திருந்தது. உதடுகள் உடைந்து வீங்கி ரத்தக்கட்டி போல தொங்கின. இடதுகாதுமடல் கிழிந்து பிளந்து நின்றது. அவன் கொஞ்சம் தள்ளாடியபின் மீண்டும் விழுந்துவிட்டான். கண்ரப்பைகள் வீங்கி நீலம்பாரித்திருக்க கண்களுக்குக் கீழே நீர்ப்பைகள் தொங்கின

டிஎஸ்பி ‘டேய், அவன் நடந்துகிட மாட்டான்…தூக்கச் சொல்லுங்க’ என்றார். ‘அந்த வேட்டிசட்டைய அவுத்துடுங்க..டிரெஸ் ஒண்ணும் வேண்டாம்… அப்றம் அது வேற எசகுபெசகா எவிடென்ஸ் ஆயிடப்போகுது’ .

இரு ஆயுதப்படைக்காரர்களும் அவனை கீழே புரட்டி அவன் சட்டையையும் வேட்டியையும் கழட்டினார்கள். உள்ளாடைகள் ஏதும் இல்லை. அவன் நிர்வாணமாக மண்ணில் கிடந்தான். உடம்பு முழுக்க வரிவரியாக அடிபட்டு கன்றிய, தோல்கிழிந்து குருதியுடன் உலர்ந்த வடுக்கள். இடைவெளியே இல்லாமல் கால் முதல் முகம் வரை அவை பரவியிருந்தன. உடலில் ஒரு சிறைக்கூண்டு படிந்ததுபோல. பத்து கைவிரல்களும் பத்து கால்விரல்களும் நுனிகளில் ரத்தத்துடன் சதைந்து வத்தல் மிளகாய்கள் போல இருந்தன.

‘டேய் அவனுக்கு தண்ணியோ டீயோ வேணுமானா குடு’ என்றார் டிஎஸ்பி

நான் அவனிடம் குனிந்து ’தண்ணி?’ என்றேன்

அவன் தலையசைத்தான்

‘டீ சாப்புடுறியா?’

‘ம்’

நாராயணனிடம் நான் டீ கொடுக்கச் சொன்னேன். டிஎஸ்பியும் எஸ்ஐ கண்ணப்பனும் மூங்கிலால் செய்யப்பட்ட பெஞ்சில் அமர்ந்துகொண்டார்கள். கருப்பையா அருகே கைகட்டி நின்றார். டிஎஸ்பி கண்ணப்பனிடம் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல அவர் தன் தோல்பையில் இருந்து ஒரு நாட்டுத்துப்பாக்கியை வெளியே எடுத்தார். கோழியின் கழுத்தை முறிப்பதுபோல அதன் குழாயை பெயர்த்து உள்ளே குண்டை போட்டார். சிறிய குச்சியால் மெழுகுத்திரவத்தை தொட்டு குழாய்க்குள் பூசினார்.

நாராயணன் கண்ணாடி டம்ளர்களில் கருப்புடீயை ஊற்றி அவர்கள் இருவருக்கும் கொண்டு சென்று கொடுத்தான். இன்னொரு டம்ளரை பெருமாள் எடுத்துச்சென்று அவனுக்குக் கொடுத்தான். அவனுடைய மணிக்கட்டு வீங்கி குழந்தையின் கைகளைப்போலிருந்தது. விரல்கள் மரத்திருந்தன. டம்ளரை அவனால் வாங்க முடியவில்லை. பெருமாள் அவனே டம்ளரைப்பற்றி அவன் வாயில் வைத்தான். மெலிந்த கழுத்தில் நரம்புகள் அசைய அவன் டீயை ஆவலுடன் குடித்தான். அடிபட்டு வீங்கிய உதடுகளில் சூடான டீ பட்டபோது அவன் சற்று முனகியபடி தலைகுனிந்தான். கையில் டீயுடன் பெருமாள் காத்து நின்றான்.

அவன் டீயை முழுக்கக் குடித்துவிட்டு மெல்லிய புன்னகையுடன் பெருமாளிடம் ஏதோ சொன்னான். பெருமாள் ஏதோ புரியாத மந்திரம் கேட்டவன்போல தலையை அசைத்தான். அவ்வளவு அடிபட்டு சிதிலமடைந்திருந்தபோதிலும் அந்த முகத்தில் புன்னகை வர முடிந்தது ஆச்சரியம்தான் என நினைத்துக்கொண்டேன். நாராயணன் டிரைவருக்கும் ஆயுதப்படை போலீஸ்காரர்களுக்கும் டீ கொண்டு சென்று கொடுத்துவந்தான்.

‘அவனுகளுக்கு என்ன ஏது ஒண்ணும் தெரியவேண்டாம்…என்னடா?’ என்றார் கண்ணப்பன். நாராயணன் தலையசைத்தான்.

டிஎஸ்பி ”போலாம்டா’ என்றார்

நாராயணனும் கருப்பையாவும் சேர்ந்து அவன் இரு கைகளையும் சேர்த்து கட்டினார்கள். பின்னர் இரு கால்களையும் சேர்த்து கட்டினார்கள். டிஎஸ்பி என்னிடம் ’டெண்டு குச்சி ஒண்ணை எடுய்யா’ என்றார். நான் உள்ளே சென்று எடுத்துக்கொண்டு சென்று கொடுத்தேன் அவனை புரட்டிப்போட்டு அவன் கைகால்கள் நடுவே குச்சியை செலுத்தினார்கள். குச்சி அவன் விதைகளில் பட்டு அவன் அலறினான். அப்போதுதான் நான் விதைகளை பார்த்தேன், பலூன்போல வீங்கி ஒரு பெரிய கொட்டைத்தேங்காய் அளவுக்கு சிவந்தும் நீலமோடியும் இருந்தன.

அவனை பன்றியை தூக்குவது போல இருவர் தூக்கிக்கொண்டார்கள். நான் டிஎஸ்பியின் பெட்டியை தூக்கிக்கொண்டேன். நாங்கள் காட்டுக்குள் நடக்க ஆரம்பித்தோம்

ஒவ்வொரு அசைவுக்கும் அவன் வலியுடன் முனகினான். தலை அண்ணாந்தது போல தரை நோக்கி தொங்க மெலிந்த கழுத்தில் குரல்வளை புடைத்து தெரிந்தது. வாய் திறந்து கறைபடிந்த பெரிய பற்கள் தெரிந்தன. தருமபுரிக்குரிய ஃப்ளூரைட் பல்கறை.

நான் வழிகாட்டி முன்னால் சென்றேன். அவர்கள் எனக்குப்பின்னால் வந்தார்கள். புதர்களை வெட்டி வெட்டி வழியை பெரியதாக்கியபடியே போனேன். புதருக்குள் இருந்து ஏதோ சிறிய பறவை ரிவீட் என்றபடி அதிர்ச்சி அடைந்தது போல படபடவென சிறகடித்துக்கொண்டு எழுந்து காற்றில் சுற்றி இன்னொரு கிளைக்குச் சென்று அமர்ந்தது.நாங்கள் முன்னால் சென்றபோது இன்னொரு பறவை அதேபோல ரிவீட் என்று சொன்னபடி எங்கள் முன்னால் பறந்து வானில் தத்தளித்து சுழன்று கிளையில் சென்று அமர்ந்தது. மூன்றாவது முறை நான் உணர்ந்தேன், அந்த பறவையேதான். அது எங்களை பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

ஆச்சரியமாக இருந்தது. நான் காட்டுக்குள் தங்க ஆரம்பித்து ஒருவருடம் ஆகிறது. எட்டுமாதமாக இங்கேதான் இருக்கிறேன். ஆனால் எனக்கு காட்டைபப்ற்றியும் பறவைகளைப்பற்றியும் எதுவுமே தெரியாது. பறவை அப்படி மனிதர்களை தொடர்ந்து வருமா என்ன? என் பிரமையா? இல்லை, உண்மையிலேயே அது சத்தம்போட்டு சிறகடித்து எங்களை பார்த்தபடி எங்களுக்கு முன்னால்சென்று மரங்களில் அமர்ந்துகொண்டு கூடவே வந்தது. என்னைத்தவிர எவரும் அதைக் கவனிக்கவில்லை

சிறிய குருவி. கைப்பிடி மயிரை எடுத்து உருளையாக சுற்றியது போல இருந்தது. சிறகுகளின் அடியிலும் வால் நுனியிலும் மட்டும் சாம்பல் நிறம். கண்களுக்கு மேலே இரு கோதுமைமணிகளை ஒட்டிவைத்தது போல பொன்னிறமான வட்டம். சிறகடித்து எழுவதும் திரும்பி அமர்வதும் சட்சட்டென்று துடிப்பாக இருந்தன. பறக்கும்போது அது டிர்ரீட் என்று சத்தம்போடுவது சிலசமயம் பின்னாலும் சிலசமயம் பக்கவாட்டிலும் கேட்பது போல இருந்தது. கூரிய குரல். கண்ணாடியில் கையை உரசுவது போல உடம்பை கூசவைக்கும் கூர்மை.

குழி வெட்டப்பட்ட இடத்தை அடைந்தபோது இருவரும் வியர்வை வழிய மூச்சிரைத்துக்கொண்டிருந்தார்கள். குழி சிவந்த பெரிய வாய் போல திறந்து காத்திருந்தது. விரிந்த உதடுகள் போல அள்ளிப்போடப்பட்ட மண்

குழியின் அருகே கொண்டு சென்று அவனைப்போட்டு கட்டுகளை அவிழ்த்தபோது நான் அந்த ரிவிட் என்ற குரலைக் கேட்டேன். கரியகுருவி அங்கே வந்துவிட்டிருந்தது. மரங்கள் தோறும் மாறி மாறி அமர்ந்துகொண்டு அது குரலெழுப்பியது.

இப்போது டிஎஸ்பி அதை கவனித்தார். ‘என்னடாது, அந்தகுருவி பின்னாடியே வந்து சத்தம்போடுது?’ என்றார்.

‘காட்டு குருவிசார்…எதுனா பாத்தா பின்னாடி வந்திரும்’என்றான் பெருமாள்.

‘பத்திவிடு அத..சனியன், என்ன சத்தம்போடுது’

நான் கற்களை பொறுக்கி அதை எறிந்தேன். ஆனால் தன்னை எவரும் கல்லால் அடித்துவிடமுடியாது என்று அதற்குத் தெரிந்திருந்தது

அப்புவை தூக்கி அமரச்செய்தார்கள். ‘டேய் தண்ணி குடிக்கிறியாடா?’ என்றார் டிஎஸ்பி

‘ம்’; என்றான்.

நாராயணன் தண்ணீரை அவன் உதடுகளில் வைக்க வீங்கிய உதடுகளை குவிக்கமுடியாமல் நீர் கன்னங்களில் வழிந்தது. தொண்டை ஏறி இறங்கியது. நான் அப்போதுதான் அவனுடைய கண்களை பார்த்தேன். ஆள் மாறி வேறு யாரோ இளைஞனைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்று தோன்றியது. அத்தனை களங்கமற்ற கிராமியத்தனமான கண்கள். தருமபுரி பஸ்நிலையத்தைப் பார்த்தாலே பிரமித்து பார்க்கும் குழந்தைக் கண்கள்.

அவனால் நீரை பற்றி உறிஞ்சி உள்ளே அனுப்ப முடியவில்லை. வாயில் உணர்ச்சியே இருக்காதென்று பட்டது. நாராயணன் டம்ளரை அவன் பற்கள் நடுவே செலுத்தி நீரை நன்றாக உள்ளே விட்டான். அவன் குடிக்கும் ஒலி மட்டும் அந்த அமைதியில் அத்தனை துல்லியமாக கேட்டது. எனக்கு அந்த ஒலி குமட்டலெடுப்பது போல உடலை உலுக்கியது. பெருமாள் மிகவும் பின்னால் சென்று கருவேல மரத்தை பற்றியபடி நின்றிருந்தான். அவன் முகம் செத்த சவம்போல வெளிறிப்போயிருந்தது.

டிஎஸ்பி எரிச்சலுடன் ‘டேய் அந்த சனியனை தொரத்துங்கடா’ என்றார்.

‘போகமாட்டேங்குது சார்’ என்றேன்.

டிஎஸ்பி பெருமாளிடம் “டேய் , அங்க என்ன செய்றே? வா…’ என்றார்.

பெருமாளும் கருப்பையாவும் அவனை இழுத்துக்கொண்டு சென்று அந்த குழி அருகே போட்டார்கள். அவன் உடம்பு மிக மெலிந்து வயிறு கைப்பிடி அளவுதான் இருந்தது. முடியில்லாத மார்பில் இருந்து மெல்லிய ரோமப்படலம் அடிவயிற்றை நோக்கி இறங்கியது. இடுப்பில் ஒரு சிறிய சரடு கட்டியிருந்தான். ‘டேய் அந்த சரடை அறுத்திரு’ என்றார் டிஎஸ்பி.

நான் குனிந்து அதை பிடித்து இழுத்தேன். இரட்டைச்சரடு. அவன் ஆஆ என்று அலறினான். அவன் உடலில் ரத்தம் கன்றாத இடமே இல்லை. என் கையில் இருந்த சிறிய கத்தியால் அதை வெட்டி எடுத்தேன். அவன் என்னை நோக்கி மெல்ல புன்னகைசெய்து ‘தாங்ஸ்’ என்றான். அந்தபுன்னகையுடன் சேர்ந்து சிரித்த கண்கள் அவற்றில் இருந்த இளமையையும் கிராமியத்தன்மையையும் கைவிட்டுவிட்டு ஆழமாக மாறி ஒளிவிட்டன என்று எனக்கு பட்டது. அக்கண்களை சந்திப்பதை விலக்கி ,கைகள் நடுங்க நான் எழுந்துகொண்டேன்.

நிலைகொள்ளாமல் பறவை காற்றில் சிறகடித்துக்கொண்டே இருந்தது. அதன் சிறகோசை என் தோளுக்கு பின்னால் மிக அருகே கேட்பது போலிருந்தது. அதன் குரல் கூழாங்கற்கள் போல என் முதுகில் விழுவதாக உணர்ந்தேன்.

‘என்னாச்சுடா?’ என்றார் டிஎஸ்பி.

’ஆச்சு சார்’ நாராயணன் மேலேறி வந்தான்.

‘போட்டிருடா கண்ணப்பா’

அப்பு இப்போது இலகுவாகியிருந்தான். அவன் கண்கள் ஒருகணம் என்னை நோக்கியபின் கண்ணப்பனை நோக்கின. கண்ணப்பன் அந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து அப்புவை குறிபார்த்தார். துப்பாக்கியை தழைத்து பார்வையை விலக்கிய கண்ணப்பன் சுட முடியாது திரும்பிவிடுவார் என நான் நினைத்தேன். ஆனால் அவர் சட்டென்று அப்புவின் மார்பில் சுட்டார்.

அந்தக்குருவி படபடத்து மரக்கிளைகளில் உரசி பதறுவதை உணர்ந்தேன். அதன் மென்சிறகுகள் முட்களில் சிக்கிக்கொண்டனவா என நினைத்தேன்.

அப்புவின் உடல் இருமுறை எம்பியது. கைகால்கள் நான்குபக்கமும் பரபரத்தன. குதிகால்கள் மண்ணை உரசி பின்பு அடங்கின. கழுத்தில் மட்டும் ஒரு துடிப்பு கொஞ்சநேரம் இருந்தது. வாயோரம் கடைசியாக ஒருமுறை அதிர்ந்து இழுத்துக்கொள்ள அசைவின்மை காலில் இருந்து மெல்லிய படலமாக பரவி முகத்தை மூடியது

அவன் மார்பில் சற்றுப்பெரிய ஒரு குங்குமப்பொட்டு போல மிகச்சிறிய துளை. அதில் செங்குமிழி வெடித்து குருதி கொழுமையாக விலாவெலும்பில் வழிந்தது. ரத்தத்தின் எரியும் வீச்சம் எழுந்தது. குருவி எங்கள் தலைக்குமேல் குறுக்கும் நெடுக்குமாக வேகமாக பறந்தது. எங்கள் கண்களை குத்திவிடுமோ என்று பயம் வந்தது. நாராயணன் கூடையை எடுத்து அதை அடிக்க முயன்றான். அது பறந்தவேகத்திலேயே திசை திருப்பி தப்பியது.

நானும் நாராயணனுமாக அப்புவின் உடலைப்புரட்டி குழிக்குஉள்ளே போட்டோம். உடம்பில் சூடு இருந்ததனால் அதை ஒரு சடலம் என்று எண்ண முடியவில்லை. சடலம் குழிக்குள் பொத்தென்று குப்புற விழுந்தது. அதன் கைகள் நம்ப்முடியாத கோணத்தில் ஒடிந்து மடங்கின. அப்போதுகூட அவன் எழுந்துவிடுவான் என்ற எண்ணம் வந்தது

நாராயணன் மண்வெட்டியால் மண்ணை அள்ளி அள்ளிக்கொட்டினான். குழி நிரம்புவதை நான் பார்த்து நின்றேன். அவன் களைத்தபோது நான் மண்ணைத்தள்ளினேன். என் தலைக்குமேலே அந்த சிறியகுருவி சிறகடித்து கலைந்து சுற்றி வந்தது. தன் முட்டைகள் உள்ள கூடு கலைக்கப்படுவதைப் பார்த்தால்தான் குருவிகள் அப்படி தட்டழிந்து சுற்றிவரும். இருமுறை மிகவும் கீழே என்னை மோதுமளவுக்கு வந்தது. நிமிர்ந்து அதை கைவீசி விலக்கினேன்.

மண்ணால் குழியை மூடி சிறியமேடாக ஆக்கி அதை மிதித்து அழுத்தினேன். பின்னர் விளக்கில் இருந்த மண்ணெண்ணையை எடுத்தும் அந்த மண்ணில் தெளித்து பரப்பினேன். காட்டில் புதைப்பதன் பெரிய சிக்கலே மிருகங்கள் தோண்டி எடுத்துவிடும் என்பதுதான். செந்நாய்கள் பன்னிரண்டடி தூரம் செல்லாதுதான். ஆனாலும் மண்ணெண்ணை வாடை இருந்தால் இன்னும் கொஞ்சம் உறுதி.

ரைஃபிள்களையும் விளக்கையும் புட்டிகளையும் பிறபொருட்களையும் பொறுக்கிக்கொண்டோம்.

‘டேய் இன்னொருவாட்டி பாருங்க…இங்க ஒரு பொருள் இருக்ககூடாது’ என்றார் டிஎஸ்பி

திரும்பி நடக்கும்போது கருப்பையா என்னருகே துருத்தி போல மூச்சு இரைக்க நடந்து வந்தார். டிஎஸ்பி ஒரு சிகரெட் பற்றவைத்து கண்ணப்பனுக்கும் ஒன்று கொடுத்தார்.

கருப்பையா என்னிடம் ‘என்ன பொழைப்பு என்ன?’ என்றார் மெல்ல.

நான் ஒன்றும் சொல்லவில்லை.

‘கொன்னா பாவம் தின்னா தீரும்பாங்க. சரி, செயிலிலே தூக்கில போடுறவனுக்கு என்ன பாவம் வரப்போவுது?’ என்று மீண்டும் சொன்னார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை. எப்படியோ சமாதானப்படுத்திக்கொள்ள முயல்கிறார், அவரது மண்டைக்குள் சொற்கள் எழவில்லை என்று தோன்றியது

அந்த குருவி என்னை தொடர்ந்து வருவதை உணர்ந்தேன். வேறு வேறு மரங்களில் சிறகடித்து வந்து அமர்ந்தபடி ‘டிர்ர்ர்யூ’ என்று அது திரும்பத்திரும்ப கூவிக்கொண்டிருந்தது. ஒரு மரத்தில் அமர்ந்தபின் அந்த எல்லையை தாண்டி வரவில்லை. அது வருகிறதா என திரும்பித்திரும்பிப் பார்த்தேன். வரவில்லை என்று தெரிந்ததும் ஆறுதல் ஏற்பட்டது

முகாமுக்கு வந்து சேர்ந்தோம். டிஎஸ்பி ’ அப்ப நாம கெளம்பிருவோம்டா… ’ என்றார்

கண்ணப்பன் “சார்’ என்றார்

கண்ணப்பனிடம் ‘தர்மபுரி வாறியா?’ என்றார்.

‘எஸ் சர்’

‘நம்ம வீட்டுக்கு வா. சாந்தி ஊரிலே இல்ல. ஸ்காட்ச் ரெண்டு வச்சிருக்கேன்’

‘வாறேன் சார்’

டிஎஸ்பி நாராயணனிடம் ‘டேய், ரிவெர்ட் ஆடர் வர்ர வரை இங்கே காம்ப் இருக்கும்… பாத்துக்கங்க…எல்லாம் வழக்கம்போல…’ என்றார்

‘எஸ் சார்’

டிஎஸ்பி முற்றத்துக்கு வந்தபோது சரிந்த கல் மீது அமர்ந்திருந்தஆயுதப்படை காவலர்கள் எழுந்து தொப்பிகளை வைத்துக்கொண்டனர். ஜீப்பில் டிஎஸ்பி ஏறிக்கொண்டார். கண்ணப்பன் பின்னால் ஏறியதும் ஜீப் கிளம்பியது. ஆயுதப்படைக்காவலர்கள் வேனில் ஏறிக்கொண்டு பின்னால் கதவை சாத்தினார்கள். ஜீப் அதிர்ந்து டப் டப் என புகை விட்டது. துப்பாக்கிக்குண்டு வெடிப்பதுபோல

அந்த பறவையை நினைத்தேன். அதன் ஒலி கேட்கவில்லை. ஆனால் இப்போது அது ஏமாற்றத்தை அளித்தது.

கருப்பையா என்னிடம் ‘பாத்துக்கடே…வாறேன்’ என்று சொல்லி பைக்கை கிளப்பினார்.

அவை தூசுப்படலம் பின்னால் நீண்டு பறக்க புழுதிச்சாலையில் செல்வதை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். விசித்திரமான மூன்று பறவைகள், நீண்ட செந்நிறமான இறகுவாலுடன் கூடியவை.

பின்பு திரும்பி வந்து பெஞ்சில் அமர்ந்தேன்

நாராயணன் ‘டீ போடவா?’ என்றான்

‘போடு’ என்றேன்

பெருமாள் ஒரு பீடியை பற்றவைத்தான்

‘பெருமாள்ட்ட அவன் என்ன சொல்லியிருக்கான் தெரியுமா?’நாராயணன் கேட்டான்.

‘ம்?’என்றேன்

பெருமாள் ‘ஒண்ணுமில்ல…என்னமோ சொன்னான்’ என்றான்

‘என்ன?’

‘என்னமோ … ’

‘சொல்லு’

‘இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்? -ன்னு கேட்டான்’

நான் ‘ஓ’ என்றேன் அர்த்தமில்லாமல்.

நாராயணன் ‘முட்டாப்பய’ என்று சொல்லி ஸ்டவ்வை பற்றவைத்தான். பெருமாள் பீடியை மிக ஆழமாக இழுத்தான். இதயம்வரை அந்தப் புகை செல்லவேண்டும் என விரும்புகிறவன்போல.

[முற்றும்]




2013/1/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Feb 3, 2013, 7:07:55 AM2/3/13
to panb...@googlegroups.com

Ahamed Zubair A

unread,
Feb 3, 2013, 7:14:52 AM2/3/13
to panb...@googlegroups.com
தலைவர்களுக்கெல்லாம் தகுதி தேவை இல்லை மச்சி :)))

#ஜஸ்ட் கிட்டிங் ;))

2013/2/1 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ் பெ

unread,
Feb 4, 2013, 2:30:19 AM2/4/13
to panb...@googlegroups.com
லக்ஷ்மி அண்ணியோட ஒரு பதிவில் திரு.பைத்தியக்காரன் அவர்களின் பின்னூட்டம்..


திரைக்கதை, விஷூவலாகும் பரிணாம வளர்ச்சிக்கு தெரிஞ்ச உதாரணங்களையே பார்க்கலாம்.

'முதல்வன்' படத்தோட க்ளைமாக்ஸ்ல சுஜாதா எழுதின வசனம், 'தட் வாஸ் எ குட் இண்டர்வியூ'.

இதை இயக்குநர் ஷங்கர், பிக்சரைஸ் பண்ணும்போது குண்டடிப்பட்ட ரகுவரன் இந்த வசனத்தை உச்சரித்தபடியே இறப்பது மாதிரி மட்டும் வைக்கலை. பதிலா, ஆரம்பத்துல அர்ஜுன் எடுத்த பேட்டியோட க்ளிப்பிங்ஸை கறுப்பு - வெள்ளைல சில நொடிகள் காண்பிக்கிறா மாதிரியும் கொண்டு வந்தாரு. இது ஸ்கிரிப்டல இல்லாத விஷயம். ஆனா, ரைட்டர் சொல்ல வர்ற விஷயத்தை இன்னும் அதிகமா கவனப்படுத்தின இடம்.

அதேபோலதான் 'அந்நியன்'.

அம்பி, ஆயிரம் பேரை அடிக்கிற அளவுக்கு பலசாலியா மாறிட்டான்னு கதாநாயகி சதா புரிஞ்சுக்கறா. சுஜாதா எழுதின லைன் - காட்சி - இதுதான்.

இதை ஷங்கர், ஓர் அரங்கத்துக்குள்ள மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிஞ்ச பலபேரை அம்பி அடித்து நொறுக்குவதை சதா பார்க்கிற மாதிரி எடுத்திருந்தார். இதை ரைட்டரான சுஜாதா விஷூவலைஸ் பண்ணலை. ஆனா, ஷங்கர் அதை செய்தார்.

இந்த இரண்டு படங்களோட அரசியல் பத்தி இங்க சொல்ல வரலை. ரைட்டருக்கும், இயக்குநருக்கும் கெமிஸ்ட்ரி - ஹார்மோனி - சரியா இருந்தா அது எந்தளவுக்கு வெளிப்படும்னு உணர்ந்ததை புரிய வைக்க முயற்சி பண்ணறேன்.

இதை கதாசிரியர் ஆர்.செல்வராஜ் - பாரதிராஜா காம்பினேஷன்லயும் பார்க்கலாம். எத்தனையோ இயக்குநர்களோட ஆர்.செல்வராஜ் பணிபுரிஞ்சிருக்காரு. ஆனா, பாரதிராஜாவோட அவர் இணைந்த தருணங்கள்தான் அதிக அளவுல அவருக்கு புகழை தேடி கொடுத்திருக்கு.

ஜெமோவோட ஸ்கிரிப்டுக்கும் எடுத்துக்காட்டு தமிழ்ல இருக்கு. 'அங்காடி தெரு' பேப்பர் ஓர்குல ஜெயமோகன் எழுதின லைன், 'சுனாமியில் இறந்தவர்களை போல் ஊழியர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்'. இந்த லைனை வசந்த பாலன் எப்படி விஷூவலைஸ் செய்திருந்தாருனு உங்களுக்கே தெரியும்.

அதே படத்துல 'கடல்ல தத்தளித்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு அதிலிருந்து தப்பிக்க துடுப்பு கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. நிம்மதியாக உறங்கினாள்'னு ஜெமோ எழுதியிருந்தாரு. இதை ஸ்கேலை அணைச்சுகிட்டு அஞ்சலி தூங்கறா மாதிரி வசந்த பாலன் எடுத்திருந்தாரு. அந்த ஸ்கேல் பத்தின காட்சி அந்த படத்தோட முந்தைய காட்சிகள்ல வந்திருக்கும். ஸோ, வசனம் இல்லாத அந்த உணர்வை - ரைட்டர் கடத்த வந்தா மாதிரியே - ரசிகனுக்கு இயக்குநர் கொண்டு போயிருப்பாரு.

மேலே சொன்ன உதாரணங்கள்ல சுஜாதா போர்ஷன், அவரே எழுதினது. 'அங்காடி தெரு' ஸ்கிரிப்டை படிச்சதுனால எடுத்துக்காட்டுக்கு இங்க பயன்படுத்தினேன்.

இந்த அடிப்படைலதான் 'ஓழிமுறி' வருது. எழுத்தாளர் ஜெயமோகனோட கதை, வசனத்துக்கு சேதாரம் ஏற்படாம அந்தப் பட இயக்குநர் இயக்கியிருந்தாரு. விஷூவலைஸ் செய்திருந்தாரு. அது முழுக்க முழுக்க ரைட்டரோட படமாதான் தோணுது.

கடல் அப்படி இல்லை. எழுத்தாளர் நிறைய ஸ்கோப் கொடுத்தும் அதை விஷூவலைஸ் பண்ண இயக்குநர் தவறிட்டதாவே நினைக்கறேன். இறந்த அம்மாவோட கால்களை புதைக்கறதுக்கு முன்னாடி வெட்டறதை சின்னப் பையன் பாக்கறான். பின்னாடி ஓரிடத்துல அம்மாவோட கால்களை அவன் பிடிச்சு விட்டதை ப்ளாஷ்பேக்கா காண்பிப்பாங்க.

அதே போல கவுதம் கார்த்திக், நேருக்கு நேரா பிரசவத்தை பாக்கற கட்டம்... அவன் தன் கைகள்ல ஏந்துவது பிறந்த குழந்தையை இல்ல. ஜனித்த தேவகுமாரனை. இந்த இடத்துல பின்னணில சிலுவை இருக்கணும், இருந்தது. ஏசு கிறிஸ்துவோட கரம், கவுதம் கார்த்திக்கை ஆசிர்வதிக்கணும், ஆசிர்வதித்தது. பின்னணில ஏசு பாடலோட தீம் ஒலிக்கணும், ஒலித்தது.

இதே போன்ற சிலுவைதான் க்ளைமாக்ஸ்ல ஊர்வலமா கொண்டு செல்லப்படணும், பட்டது. கடைசி ஷாட்ல சிலுவையோட கரம், அந்த கிராமத்தையே ஆசிர்வதிக்கிறா மாதிரி இருக்கணும், இருந்தது...

ஆனா, ஸ்கிரிப்டுல இருந்த இந்த விஷயங்கள் அழுத்தமா ரசிகனுக்கு கடத்தப்படவே இல்லை. படம் முழுக்க இப்படி நிறைய பட்டியலிட்டுகிட்டே போகலாம்.

அதனாலதான் 'கடல்' சரியில்லாததுக்கு டைரக்டர் காரணம்னு டைப் செஞ்சேன்.

பி.கு:

ஜெமோதான் பேசு பொருள். இந்த ப்ளஸுக்கும், மறுமொழிக்கும். அதனால கொஞ்சம் பேசா பொருளையும் இங்கயே பேசிடலாம் ;-)

ஜெமோ தன் படைப்புகள் வழியா தொடர்ந்து தன் ஆதி தாயை - தாய் வழி சமூகத்தை - தேடிகிட்டு இருக்கறதாதான் நினைக்கறேன். காந்தியை பத்தி பேசினாலும் சரி, அண்ணா ஹசாரேவை முதன்மைப்படுத்தினாலும் சரி, இந்து ஞான மரபை அலசினாலும் சரி அல்லது சிறுகதை, நாவல்கள் எழுதினாலும் சரி -

தொடர்ந்து ஆதி தாயைதான் தேடறாரு. புரிஞ்சுக்க முயற்சி பண்ணறாரு. இதுக்காக தாஸ்தோவஸ்கி - டால்ஸ்டாய்க்கு இடையிலான பாலத்தை அமைக்கிறாரு.

ஜெமோவோட சிறுகதை அல்லது புதினத்துல ஒரு கதாபாத்திரத்தோட பரிணாம வளர்ச்சிக்கு அல்லது ஒரு நிகழ்வுக்கு காரணம் - விளைவா பெண்கள் இருப்பாங்க அல்லது பெண் தன்மையா நம்பப்படுகிற விஷயங்கள் இருக்கும்.

அன்பு, நேசம், பாசம், கோபம், ஆக்ரோஷம், வெறுமை, தவிப்பு மாதிரியான அனைத்து உணர்வுகள் - உணர்ச்சிகள் பெண்களை சூழும்போது அது என்னவா மாறுது... ஆண்கள் இதை ஏற்க மறுக்கும்போது அதே உணர்வுகள் என்ன வடிவம் கொள்ளுது, இயக்கத்தை எப்படி செயல்படுத்துதுனு தொடர்ந்து பேசறாரு.

அ புனைவுல -கட்டுரைகள்ல - இதையே சூழலோட குணநலனா விரிவு படுத்தி உரையாடறாரு.

நித்ய சைதன்ய யதி உட்பட ஜெமோ யாரை எல்லாம் முன்னிலைப்படுத்தி பேசறாரோ அவங்க எல்லார்கிட்டயும் தன் ஆதி தாயை அவர் பார்த்த நொடிகளை, கழுவும் நீரில் நழுவிய மீனாக அதை தவறவிட்ட தருணத்தை  வெவ்வேறு வார்த்தைகள்ல அவர் வெளிப்படுத்திகிட்டே இருக்கறதை பார்க்கலாம்.

சுருக்கமா சொல்றதுனா பிரபஞ்சத்தையே ஆதி தாயா பாக்கறாரு.

இப்படி பொதுப்படையா சொல்லலாமானு தெரியலை. ஆனா, இப்படித்தான் ஜெமோவை அணுகறேன்.

ஒருவகைல இது சாக்த வழிபாட்டோட எக்ஸ்டென்ஷன். ஆகம முறைப்படி இல்லா தச மகா வித்யா; நவாவர்ண பூஜை.

'கன்னியாகுமரி', 'கொற்றவை' நாவல்கள்ல இது தூக்கலா இருக்கும். 'காடு' ஒரு கட்டத்துக்கு பிறகு தாயாவே விரிந்து விடும்.

சிவன் - சக்தி இனக்குழு வழியா தொடங்கற 'கொற்றவை' மெல்ல கண்ணகியை மையம் கொண்டு இறுதில இந்த காலகட்டத்துல வந்து நிற்கும். அப்ப அந்த நாவல் அப்படியே யு டர்ன் அடிக்கும்.

ஜெமோவோட இந்த பார்வையை, அணுகுமுறையை, அரசியலை பொது தளத்துல விவாதிக்கணும், உரையாடணும்னு ரொம்ப நாளா ஆசை.

அதுக்கு அவரோட ஸ்கிரிப்டை துல்லியமா விஷூவலைஸ் பண்ற இயக்குநர் தேவை

மோரு

unread,
Feb 4, 2013, 2:39:49 AM2/4/13
to பண்புடன்
சரியாத்தான் சொல்லிருக்காருன்னு நினைக்கிறேன்.

2013/2/4 ஸ் பெ <stalinf...@gmail.com>

லக்ஷ்மி அண்ணியோட ஒரு பதிவில் திரு.பைத்தியக்காரன் அவர்களின் பின்னூட்டம்..




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

ஸ் பெ

unread,
May 27, 2013, 3:36:48 PM5/27/13
to panbudan

இப்படி இருக்கிறார்கள்…

பொது

May 27, 2013

பாண்டிச்சேரி சென்றிருந்தபோது ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பர் நல்லவாசகர், இனியவர்.இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள்மீது ஏறி அமர்ந்து காதைக்கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான்.

தன் பக்கத்துவீட்டுக்காரர் நல்லவாசகர் என்றும் அவருக்கும் சங்கசித்திரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றும் நண்பர் சொன்னார். அந்த பக்கத்துவீட்டுக்காரர் நான் பாண்டிச்சேரி வந்திருப்பதை அறிந்து சந்திக்கவிரும்புவதாகவும் சொன்னார். பார்ப்போம் என்று நான் சொன்னேன். அநத பக்கத்துவீட்டுக்காரர் ஒருகாலத்தைய திமுகக் காரர். அண்ணாத்துரை எழுதிய எல்லா நூல்களையும் வாசித்தவர், இன்றும் வாசிப்பவர் என்றார் நண்பர். அவர் என்னிடம் நிறைய ஐயங்களைக் கேட்க விரும்புவதாகச் சொன்னார். கேட்கலாமே என்றேன் நான்.

நான் ரமேஷை பார்த்துவிட்டு நண்பர் வீட்டுக்கு வந்தேன். நாஞ்சில்நாடனும் தேவதேவனும் களைத்திருந்ததனால் கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பினர். ஆகவே அவர்கள் நண்பர் வீட்டிலேயே இருந்தனர். நான் உள்ளே நுழைந்ததுமே நாஞ்சில் மிக மிக கோபம் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவர் அமர்ந்திருந்த விதம் அதைக் காட்டியது. நான் அவர் உடலசைவுகளை நன்கறிவேன். அருகே பீதியடைந்த குழந்தை மாதிரி தேவதேவன்

நாஞ்சிலிடம் அந்த பக்கத்துவீட்டுக்காரர் உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்தார். கைநீட்டி, விரலை ஆட்டி, நாலாந்தர ஆசிரியர்கள் கற்பிக்கும் தொனியில் ‘நான் சொல்றது சரியா விளங்குதா? நல்லா கவனிச்சு கேட்கணும்… கண்ணதாசன் எழுதின கவிதை இது…. என்ன புரியுதா? சொல்லுங்க…புரியுதா இல்லியா?’

நாஞ்சில் கண்களில் கனலுடன் ’சொல்லுங்க’ என்றார்

‘நீங்க என்ன சாதி?’ என்றார் பக்கத்துவீட்டுக்காரர்.

‘அதை ஏன் நான் சொல்லணும்?’ என்றார் நாஞ்சில்

‘இல்ல, ஒருத்தர் கருத்த தெரிஞ்சுக்கிடணுமானா சாதிய தெரிஞ்சாகணும்’ என்றார் பக்கத்துவீட்டுக்காரர்

‘சொல்ற உத்தேசம் இல்ல’

அப்போதுதான் நான் உள்ளே வந்தேன். ‘இவருதான் ஜெயமோகன். சங்கசித்திரங்கள் எழுதினவர்’ என்றார் நண்பர்

‘அடேடே…நீங்களா ? வாங்க வாங்க..சந்தோஷம்…நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்’

நான் கைகுலுக்கிவிட்டு அவரை தவிர்த்து என் பெட்டியை நோக்கிச் சென்றேன்

‘உங்கள மாதிரி யங் பீப்பிள் நான் சொல்றத கேக்கணும்…’

‘சொல்லுங்க’ என்றேன்

‘கொஞ்சம் கவனிங்க…நான் சொல்றேன்ல?’ என்றார் அதட்டலாக.

நாஞ்சில் ‘நான் சந்திரன் கூட கொஞ்சம் வெளியே போய்ட்டு வாறேன்…’ என்றார். அவர் கோபத்தில் இருக்கும்போது செய்வதுதான். கொஞ்சம் திரவம் விட்டு குளிரச்செய்துவிட்டு வருவார் என ஊகித்தேன். அவர் கிளம்பிச் சென்றார். தேவதேவன் பரிதாபமாக அமர்ந்திருந்தார்

‘உக்காருங்க சார்…நான் சில சந்தேகங்களை கேக்கிறேன்…தெரிஞ்சுதுன்னா சொல்லுங்க…நான் ரொம்ப சாதாரணமான ஆளு….நீங்க ரைட்டர்….சொல்லுங்க’

நான் அமர்ந்துகொண்டு ‘சொல்லுங்க’ என்றேன்.

என்னுடைய கோபம் கொதித்துக்கொண்டிருந்தது. நாஞ்சில்நாடனையோ தேவதேவனையோ அவம்திக்கும் ஒரு சொல்லை என் முன் ஒரு ஆசாமி சொல்வதை என்னால் சகிக்க முடியாது. ஆனால் இது இன்னொருவர் இல்லம். அதைவிட ஒருவேளை இந்த ஆசாமிக்குள் ஏதேனும் கொஞ்சம் விஷயம் இருக்கலாம். அவருக்கு நடந்துகொள்ள தெரியாமலிருக்கலாம். ஒரு விஷயமறிந்த மனிதரில் இருக்கும் எல்லா கோணல்களும் சகித்துக்கொள்ளத்தக்கவைதான்.

‘நீங்க ஒரு ரைட்டர்…நான் சில கேல்விகளை கேட்கணும்…’

‘சொல்லுங்க’ என்றேன்.

அவர் ஒரு காகிதத்தை எடுத்தார். வினாக்களை எழுதிக்கொண்டு வந்திருந்தார். முதல்கேள்வி ‘தம்பீ நான் படித்தேன் காஞ்சியிலே நேத்து – என்று வாலி எழுதியிருக்கிறாரே அந்த காஞ்சி என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? தெரிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி நல்லா யோசிச்சு சொல்லுங்க…’

நான் என்னை கட்டுப்படுத்திக்கொண்டேன். அந்தக் கேள்வியை அவர் எல்லரிடமும் கேட்பார் என்று நண்பர் முன்னரே சொல்லியிருந்தார். ‘வாலி சமீபத்திலே டிவியிலேயே சொன்னார்…காஞ்சின்னு ஒரு பத்திரிகையை அண்ணாத்துரை நடத்தினார். அதைத்தான் அவர் எழுதியிருக்கார்’ என்றேன்

‘ஓ’ என்றார். ‘சரி…இப்ப இன்னொரு கேள்வி… தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டான் மரத்திலேன்னு கண்ணதாசன் பாட்டு இருக்கே…அதிலே தூங்குறதுன்னா என்ன?…தெரிஞ்சா சொல்லுங்க…நல்லா யோசிச்சு சொல்லணும்’

நான் எரிச்சலை வெளிக்காட்டி ‘இந்தமாதிரி சினிமாப்பாட்டு ஆராய்ச்சில எல்லாம் எனக்கு ஆர்வமில்ல…ஏதாவது வாசிச்சிருந்தா அதைச் சொல்லுங்க’ என்றேன்

‘சினிமாப்பாட்டா? இது கண்ணதாசன் எழுதின கவிதை… அர்த்தம் தெரிஞ்சா சொல்லுங்க…இல்ல தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு மெதுவாச் சொல்லுங்க’

‘தூங்குறதுன்னா தொங்குறது’

நான் சொன்னது தூங்குதல் என்று கேட்டிருக்கும், கண்கள் மின்ன ’என்ன? சொல்லுங்க’ என்றார்

‘தூங்குதல்னா பழைய தமிழிலயும் மலையாளத்திலயும் தொங்குகிறதுன்னு அர்த்தம்..’ என்றேன்

‘சரிதான்…கரெக்ட்…’ என்றார் ஏமாற்றத்துடன். காகிதத்தைப்பார்த்து ‘தமிழ் ஸ்கிரிப்ட் எப்ப வந்ததுன்னு சொல்லுங்க. சம்ஸ்கிருதம் ஸ்கிரிப்டு எப்ப வந்ததுன்னு சொல்லுங்க’

‘ஸ்கிரிப்டுன்னா என்ன உத்தேசிக்கிறீங்க?’

‘தமிழ்…தமிழ் ஸ்கிரிப்டு…’

‘எழுத்துவடிவைச் சொல்றீங்களா?’

‘ஆமா’

‘சோழர் காலத்திலே…அதாவது பத்தாம் நூற்றாண்டு வாக்கிலே’

‘என்னய்யா சொல்றீங்க? தமிழ் தோன்றினது பி.சியிலே…பிசின்னா என்ன தெரியுமா? கல்வெட்டு எழுதுற காலகட்டம்! அப்ப வந்திருக்கு தமிழ்’

‘பத்தாம் நூற்றாண்க்கு முன்னாடி வட்டெழுத்திலே தமிழ எழுதினாங்க…கிபி ஒண்ணாம் நூற்றாண்டுக்கு முன்னாடி பிராமியிலே’

‘நான் பிராமியைச் சொல்லலை…நான் தமிழப்பத்தி சொன்னேன்…தமிழ எப்டி எழுதினாங்க? நல்லா சிந்திச்சு சொல்லணும்…தேவைப்பட்டா டைம் எடுத்துக்கிடுங்க’

ஆசாமி முழுமையாகவே ஒரு வெத்துவேட்டு என்று தெரிந்தது. ஆனால் இவர் இந்த ஒன்றேமுக்கால் தகவல்களைக் கொண்டு இப்பிராந்தியத்தில் ஒரு ‘அறிஞராக’ உலவி வருகிறார். அந்த அசட்டுத்தன்னம்பிக்கையுடன் நாஞ்சில்நாடனுக்கு ஞானம் அளிக்க வந்திருக்கிறார்.

‘பி.சியிலே சம்ஸ்கிருதமே கெடையாது…அப்ப அதை யாரும் எழுதலை…மொத்தம் மூணு ஸ்கிரிப்டு இருக்கு. சம்ஸ்கிருதம் பிராகிருதம் அராமிக்…பாலி ஸ்கிருப்டு…பாலி…தெரியுமா? பாலி…கேள்விப்பட்டிருக்கீங்களா?’

அவரை கிளப்பி விட்டுவிடவேண்டுமென நினைத்தேன் .’இங்க பாருங்க, நீங்க இவ்வளவு நேரம் இங்க சொல்லிட்டிருந்தது முழுக்க முட்டாள்தனம்…உங்கள நீங்களே இப்டி அவமானப்படுத்திக்காதீங்க…கெளம்புங்க’

அவர் ‘நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியலைன்னா அதைச் சொல்லுங்க…நான் கேக்கிறத நீங்க நல்லா புரிஞ்சுகிடணும்’ என்றார்

‘இங்க பாருங்க…நானோ நாஞ்சில்நாடனோ இவரோ பல வருஷங்களா நெறைய வாசிச்சுத்தான் இந்த அளவுக்கு ஆகியிருக்கோம். நாங்க எழுதினத எங்கியாவது கொஞ்சம் வாசிச்சுப்பாருங்க…சும்மா உளறிட்டிருக்காதீங்க’

‘ஆமா…நீங்க ரைட்டர்ஸ்…நான் அந்தக்காலத்திலேயே அறிஞர் அண்ணா ஸ்பீச்செல்லாம் கேட்டவன்…கேள்விகளை நல்லா கவனியுங்க…அதாவது…’

நான் முடிவுசெய்தேன். இனி இந்த ஆளை இப்படி விடக்கூடாது. நான் இங்கே விருந்தினர் என்பதல்ல முக்கியம். இந்த மொண்ணைத்தனத்தை எங்கே நிறுத்துவது என்பதுதான். என் கோபம் தலைக்குள் அமிலம்போல நிரம்பியது. நாஞ்சில்நாடன் எழுந்து செல்லும்போது அவர் முகத்திலிருந்த கசப்பை நினைவுகூர்ந்தேன். சடென்று என் கட்டுப்பாடு அறுந்தது

‘வாய மூடுங்க..என்னய்யா நினைச்சிருக்கே நீ? நீ யாரு? ஒரு புத்தகம் ஒழுங்கா படிச்சிருப்பியா? உன்னோட வாழ்க்கையிலே ஒரு எழுத்தாளன நேரில பாத்திருக்கியா? உன் எதிர்ல உக்காந்திருந்தது நாஞ்சில்நாடன்… அவரு யாருன்னு தெரியுமா உனக்கு? தெரியுமாய்யா? அவருக்கு நீ கைய நீட்டி கிளாஸ் எடுக்கிறே…அவர் சொல்ற ஒரு வார்த்தைய நீ கேக்க ரெடியா இல்ல…ஆனா நீ கொண்டுவந்து அவர் மேல போடுற குப்பைய அவர் சகிச்சிட்டிருக்கணும் இல்ல?’ என்றேன்

அவர் எதிர்பார்க்கவில்லை. வாயடைந்துபோய் ‘நீ பாத்துப்பேசணும்…நான் …நான் பேசத்தான் வந்தேன்’ என்றார்

‘என்னய்யா பேசணும்? பேச நீ யாரு? நாஞ்சில்நாடன் முன்னாடி இப்டி உக்காந்து பேச நீ யாருய்யா? வாய அளக்கிறியா? ஒருத்தர் முன்னாடி வந்து உக்காருறதுக்கு முன்னாடி அவரு யாருன்னு தெரிஞ்சுக்கிடமாட்டியா? ஒரு ஸ்காலர் முன்னாடி வந்து வாயத்திறக்கிறதுக்கு முன்ன உனக்கு என்ன தெரியும்னு ஒரு நிமிஷம் யோசிக்கமாட்டியா? நம்ம நாட்டில மட்டும் ஏன் இப்டி வடிகட்டின முட்டாளுங்க கூச்சநாச்சமில்லாம திரிய முடியுது..’

‘ஆமா நான் முட்டாள்தான்…நீ பெரிய புத்திசாலி’

‘ஆமாய்யா நான் புத்திசாலிதான்… நீ வெத்துமுட்டாள். ஏன்னா நான் என்னோட எடம் என்னன்னு தெரிஞ்சவன். அந்த எல்லைய மீறி எங்கயும் போயி அவமானப்பட மாட்டேன்…ஒரு அறிஞன் முன்னாடி என்ன பேசணும் எப்டி பேசணும்னு எனக்கு தெரியும்… உன்னை மாதிரி முட்டாளுக்குத்தான் தான் ஒரு முட்டாளுன்னுகூட தெரியாது….இப்ப நாஞ்சில் எந்திரிச்சு போனாரே, அவரு உன்னை முட்டாள்னு மனசுக்குள்ள திட்டிட்டுதான் போனார். அவரை விட எனக்கு உன் மேல கொஞ்சம் இரக்கம் ஜாஸ்தி. அதனால நான் உங்கிட்ட சொல்றேன். நீ ஒரு முட்டாள். அந்த ஒண்ணை மட்டுமாவது தெரிஞ்சுக்கிட்டேன்னா மேற்கொண்டு அவமானப்படாம இருப்பே…’

‘எனக்கு எழுபது வயசாச்சு…அதை நீ நினைக்கலை’

‘எந்திரிச்சு போய்யா…. எழுபது வயசுவரை மூளைய காலிச்சட்டி மாதிரி வச்சிருந்தா நீ பெரியாளாயிடுவியா? போய்யா” என்றேன்

சமீபத்தில் எப்போதும் ஒரு மனிதனிடம் நான் அந்த அளவுக்குக் கோபம் கொண்டதில்லை. சற்று நேரம் என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சினம் எதுவானாலும் அது சரியானதல்ல. ஆனால் சிறுமையின் முன் சினத்தை கட்டுப்படுத்துவதென்பது என் வரையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. அதற்கு நான் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும்..

அவரது அசட்டுத்தனத்தை ஒருபோதும் அவர் புரிந்துகொள்ள மாட்டார். அறிவுத்துறை என்று ஒன்று உண்டு, அதில் எதையாவது அறிவதனூடாகவே நுழைய முடியும் என்ற எளிய உண்மையை ஒரு சராசரித்தமிழனுக்குச் சொல்லிப்புரியவைக்க முடியாது. அவனுடைய அசட்டுத்தன்னம்பிக்கை அவனை கவசமாக நின்று காக்கும். அதற்குள் நின்றபடி அவன் எவரைப்பற்றியும் கருத்துச் சொல்வான். எவரையும் கிண்டலடிப்பான். ஆலோசனைகளும் மாற்றுக்கருத்துக்களும் தெரிவிப்பான்.இணையத்தில் இந்த ஆசாமியைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவர் இனிமேல் நவீன எழுத்தாளர்கள் என்றால் ஒருவகை போக்கிரிகள் என்றாவது நினைப்பார். நெருங்க யோசிப்பார். தமிழகத்தில் அந்த ஒரு பாவனை மட்டுமே எழுத்தாளனுக்கு இன்று காவல்.

அவர் சென்றபின் கொஞ்ச நேரம் ஆகியது நான் குளிர.

தேவதேவன் ‘நான் நாஞ்சில்கிட்ட சொன்னேன்…ஜெயமோகன் வாறதுக்குள்ள இந்தாளை கிளப்பி விடுங்கன்னு…அவர் நல்லா முயற்சி செஞ்சார். இவர் போகமாட்டேன்னார்’ என்றார்.

‘எதுக்காக நாஞ்சில்நாடன் கிட்ட சாதி கேட்டார்?’ என்றேன்

‘ரொம்பநேரம் நாஞ்சில்நாடனை அவமானப்படுத்துற மாதிரி என்னென்னமோ கேட்டிட்டிருந்தார். அண்ணாத்துரைக்கு அமெரிக்காவிலே டாக்டர் பட்டம் குடுத்தாங்கன்னெல்லாம் என்னென்னமோ சொன்னார். எல்லாம் வழக்கமா திமுக மேடையிலே சொல்றது….நாஞ்சில் எல்லாத்தையும் கேட்டுட்டு சும்மா இருந்தார். இவரு சட்டுன்னு தலித்துக்களைப்பத்தி கேவலமா பேச ஆரம்பிச்சார். அவங்கள்லாம் மனுஷங்களே கெடையாது. அவங்கள மேல கொண்டுவந்தா நாடு அழிஞ்சிரும்னு ஆரம்பிச்சார்…அப்பதான் நாஞ்சில் கொஞ்சம் கடுமையா சொன்னார். ஆனா இவரு அதையெல்லாம் கேக்கலை’

பத்தாதாண்டுகளுக்கு முன்பென்றால் அந்தப்பேச்சுக்கு நான் கண்டிப்பாக அறையாமல் அனுப்பியிருக்க மாட்டேன்.அப்படி அறைந்த பல நிகழ்ச்சிகள் செய்தியாகியிருக்கின்றன. இன்று எங்கோ இந்த கீழ்மக்களைப்பற்றிய ஆழமான ஒரு கசப்பு குடியேறிவிட்டிருக்கிறது.ஆனால் அவர்களை அக்கணமே மறக்கவும் பழகியிருக்கிறேன்.

எங்கும் நிறைந்திருக்கிறார்கள் இவர்கள். ஆகவே எங்கும் நான் என்னை எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வதில்லை. எவரிடமும் என்னை அப்படி அறிமுகம் செய்ய அனுமதிப்பதுமில்லை. எத்தனை அனுபவங்கள் !

இதேபோன்ற ஓர் அனுபவம் ஒருமுறை அ.கா.பெருமாளுடன் ரயிலில் சென்றபோது நிகழ்ந்தது.நானும் அ.கா.பெருமாளும் ரயிலில் பேசிக்கொண்டே சென்னை சென்றுகொண்டிருந்தோம். ஒருவர் தன்னை ஓர் ஆடிட்டர் என்று அறிமுகம் செய்துகொண்டார். ‘சார் யாரு?’ என்றார்.

நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு ‘இவரு அ.கா. பெருமாள். தமிழகத்திலே இப்ப இருக்கிற பெரிய ஹிஸ்டாரியன். சுசீந்திரம் தாணுமாலையப்பெருமாள் கோயிலைப்பத்தி ஒரு புத்தகம் எழுதியிருக்கார். அதுக்காக தமிழக அரசு விருது கிடைச்சிருக்கு…அதை வாங்க சென்னை போறார்’ என்றி சொல்லி புத்தகத்தையும் காட்டினேன்

அந்த ஆள் புத்தகத்தை கையால் வாங்கவில்லை. உரத்த குரலில் ஆரம்பித்தார் . ‘சுசீந்திரம் கோயிலுக்கு நான் நாலஞ்சுவாட்டி போயிருக்கேன். அற்புதமான கோயில். அதோட சிறப்பு என்னன்னா அதிலே சிவன் விஷ்ணு பிரம்மா மூணு சாமியும் ஒண்ணா இருக்கு….நல்லா கேட்டுக்கிடுங்க…மூணு சாமி. கோயிலிலே ஒரு விசேஷம் என்னன்னா..’ என்று பேச ஆரம்பித்தார்

கிட்டத்தட்ட அரைமணிநேரம். அசட்டு தெருச்செய்திகளாக கொட்டினார். ஒரு கட்டத்தில் நான் எரிச்சலுடன் இடைபுகுந்து ‘சார் இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்…நீங்க போங்க’ என்றேன்.

‘நான் சொல்றத கேளுங்க…சுசீந்திரம் பக்கம் கற்காடுன்னு ஒரு கிராமம். அங்கே…’ என்று அவர் மேலும் ஆரம்பித்து அரைமணி நேரம் பேசினார்

சட்டென்று நான் பொறுமை இழந்தேன். ‘ஏய்யா, உன்னோட கோழிமுட்டை வாழ்க்கையிலே இதுவரை ஒரு ஹிஸ்டாரியனை பாத்திருக்கியா? அப்டி பாக்கிறப்ப அவர் ஒருவார்த்தை பேசிக்கேக்கணும்னு உனக்கு நெனைப்பில்லை…நீ தெரிஞ்சு வச்சிருக்கிற அச்சுபிச்சு விஷயங்களை அவர்கிட்ட கொட்டணும், இல்லியா? வாழ்க்கையிலே புதிசா ஒரு வரிகூட தெரிஞ்சுக்கிட மாட்டியா?’ என்று ஆரம்பித்து கடித்து குதறிவிட்டேன்

அப்படியே தளர்ந்து போய் படுத்துவிட்டார். அவர் வாழ்க்கையில் அப்படி எவரும் நேரடியாகப் பேசியிருக்க மாட்டார்கள்.நான் திட்டியதைக்கேட்டு அவரைவிட அ.கா.பெருமாள் ஆடிப்போய்விட்டார். ‘அப்டியெல்லாம் சொல்லியிருக்கவேண்டாம்…நம்மாளுகளோட கொணம் இதுன்னு தெரிஞ்சதுதானே?’ என்றார்

ஆனால் அரைமணிநேரம் கழித்து அந்த ஆடிட்டரின் மகள் என்னைக் கடந்துசெல்லும்போது அந்தரங்கமாக ஒரு புன்னகை புரிந்துவிட்டுப்போனாள்.

அதற்கு முன் ஒருவர் சுந்தர ராமசாமியை பார்க்கவந்தபோதும் இது நிகழ்ந்திருக்கிறது. இரண்டுமணிநேரம் அவர் சுந்தர ராமசாமிக்கு தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் மௌனி என்று சிலர் கதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று கற்பித்தார்.சுந்தர ராமசாமி அவசியம் எட்கார் ஆலன்போ கதைகளை வாசிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். ராமசாமி ஒரு ‘வாங்கோ’ தவிர புன்னகை மட்டுமே அளிக்க முடிந்தது.

அவர் கிளம்பும்போது ராமசாமி அறியாமல் நான் பின்னால் சென்றேன். காரில் ஏறப்போன பேராசிரியரை மடக்கி அவர் தன் வாழ்நாளில் கேட்டிராத நாஞ்சில்நாட்டு தமிழில் சில கேள்விகளைக் கேட்டேன். அதன்பின் அவரை ஒருமுறை நான் ஒரு கல்லூரியில் சந்தித்தபோது அவர் முகம் வெளிறியதிலிருந்து நாஞ்சில்தமிழின் வல்லமையை புரிந்துகொண்டேன்.

மீண்டும் மீண்டும் இதேதான் நிகழ்கிறது இங்கே. ஒருவருக்குக் கூட ‘நீங்கள் எழுதுவதென்ன?’ என்று கேட்கத்தோன்றுவதில்லை. வாசித்தவர்கள் , வசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் மிகக் குறைவு. ஆனால் வாசிக்காதவருக்கு தான் ஒன்றும் வாசிப்பதில்லை என்ற விஷயம் கூடவா தெரியாது?

சொல்லப்போனால் இது ஒரு தமிழ்நாட்டுப் பொது மனநோய். 2010ல் கனடாவில் உஷா மதிவாணன் என்னை ஒரு இந்தியத்தமிழ்நண்பர் குழுவுக்கு அவர்கள் அழைப்பின் பேரில் விருந்தினராக அழைத்துச்சென்றார். என்னை அழைத்தவர்கள் ஈழத்தமிழர்கள். அவர்களின் மூன்று சந்திப்புக்கூட்டங்களில் நான் பேசினேன். தங்களிடமும் எழுத்தாளர் வந்து ஒரு நாள் பேசவேண்டுமென இந்தியத்தமிழர்கள் விரும்பினார்கள் என்று சொன்னார்கள்.

அன்று அங்கிருந்தவர்களில் பாதிப்பேர் மருத்துவர்கள், மீதிப்பேர் பொறியாளர்கள். எனக்கு முன்னதாகத் தெரிந்த நண்பர் வெங்கட் தவிர பிறர் என்னை அறிந்திருக்கவில்லை, அதற்கான எந்த முயற்சியும் அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கவுமில்லை.

நான் ஏதாவது பேசவேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களே பேசிக்கொண்டிருந்தார்கள். எந்த ஒரு புலம்பெயர் தமிழனும் பேசும் விஷயங்கள். ‘நல்லவேளை இந்தியாவிலிருந்து வந்தோம்’ என்று ஒரு சொற்றொடர். ஊரில் இருந்த நாட்களை நினைத்து நெகிழ்ந்து அடுத்த சொற்றொடர். அதன்பின் சாப்பாடு ,சினிமா, தொழில். நான் அவர்கள் பேசும் அந்த அற்பத்தகவல்களை கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன்.

பேச்சில் அற்புதமான தெறிப்புகள். ‘சுந்தர ராமசாமி இங்கே எங்க வீட்டுக்கு வந்திருக்கிறார்.சாப்படெல்லாம் போட்டிருக்கோம்’ என்றார் ஒரு பேர்வழி.

நான் ‘சுராவா? இங்கே வந்திருக்காரா?’ என்றேன். அந்த ஆளை சுரா பத்துநிமிடம் தாங்கிக்கொண்டிருக்கமாட்டார்.

இன்னொருவர், ‘இல்ல அவரு வேற ஒருத்தர். வேம்பூர் ராமசாமி… ‘ என்று ஏதோ ஒரு பெயரைச் சொன்னார்

டாக்டர் ஏப்பம் விட்டு ‘அப்டியா ரெண்டும் வேறுவேறா…இவரும் நல்ல ரைட்டர்தான்….கவிதையெல்லாம் எழுதுறார்…இப்பக்கூட நெறைய பேரு புதுசா வந்து என்னமோ எழுதுறாங்க…சுஜாதா பாலகுமாரன்…’ என்றார்

அந்த அசமஞ்சத்தனத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஏதாவது ஒரு துறையில் கொஞ்சம் பணம் ஈட்டுமளவுக்கு சூழல் இருந்தால், ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கிவிட்டால் தன்னை வாழ்க்கையில் வெற்றியடைந்தவர் என நினைத்துக்கொள்வார்கள். அதன்பின் எதுவும் தெரிந்துகொள்ளும் ஆர்வமிருப்பதில்லை. தெரியாதென்ற தகவல்கூட தெரியாது. ஆகவே எங்கும் மிதந்துகொண்டே நுழைய தயங்கமாட்டார்கள்.

நாஞ்சில் அமெரிக்காவில்கூட இப்படி ஒரு ஆசாமியை பார்த்ததாக அவருக்கே உரிய நக்கலுடன் சொன்னார். ‘நீ அமெரிக்கா வருவதற்கு முன் அமெரிக்கா பற்றி எத்தனை நூல்களை வாசித்தாய்?’ என்று ஒருவர் நாஞ்சில்நாடனிடம் கேட்டாராம். அவர் நாஞ்சில்நாடனின் ஒரு வரியைக்கூட வாசித்ததில்லை. அதைப்பற்றி அவருக்கு கவலையுமில்லை. ‘நீங்கள் நாஞ்சில்சம்பத் என்று நினைத்தேன்’ என்றாராம். அவர் அங்கே வசிப்பதனால் வாசிக்க நேர்ந்த சில்லறைப் புத்தகங்களை நாஞ்சில் வாசிக்கவில்லை என்று சுட்டிக்காட்டி ஒரு அற்பப்பெருமிதத்தை அடைந்து திரும்பும் நோக்கம்.

இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? நான் கனடாவிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் விமானநிலையக் காவலர்களில் இருந்து பரிசாரகர்கள் வரை விதவிதமான வெள்ளையர்களைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஓர் எழுத்தாளன் என்பவனின் இடமென்ன என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதையே கண்டிருக்கிறேன். மிகமிகக் கறாரான ஆஸ்திரேலிய சுங்கத்துறையில்கூட எழுத்தாளன் என்றதுமே ஊழியர்களின் பாவனையில் மரியாதை வருவதை கவனித்திருக்கிறேன்.

ஏன், என் இதுநாள்வரையிலான இலக்கியவாழ்க்கையில் எழுத்தாளன்மீது மதிப்பில்லாத, அவன் இடமென்ன என்று அறியாத ஒரே ஒரு ஈழத்தமிழரைக்கூட சந்தித்ததில்லை. ஒரு வரிகூட வாசிக்காத ஈழத்தமிழர்களை நூற்றுக்கணக்கில் சந்தித்திருக்கிறேன். கடுமையான கருத்துமுரண்பாட்டுடன் கோபம் கொண்டு என்னிடம் பேசவந்தவர்களையும் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் எழுத்தாளன் என்ற மதிப்பை இழந்து ஒரு சொல் சொன்னதில்லை, ஒருமெல்லிய பாவனைகூட வந்ததில்லை.

அதைவிட முக்கியமாக ஓர் ஈழத்தமிழர் அப்படிச் செய்யக்கூடும் என்ற சிறிய ஐயம் கூட எனக்கு வந்ததில்லை.
ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்துகொள்ள் எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன ,அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும்.

நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்புஇறுக்கமா அது?

ஸ் பெ

unread,
May 27, 2013, 3:40:58 PM5/27/13
to panbudan

ரசனாவாத இலக்கியமும் வாசக அடிமைத்தனமும் திமுக மூடரும்

மே 27, 2013 — Valarmathi

ஜெயமோகனின் “இப்படி இருக்கிறார்கள்”  கட்டுரையில் வரும் முக்கிய பாத்திரம் ஒரு தி.மு.க காரர். அண்ணாவின் நூல்களையும் கண்ணதாசனின் பாடல்களையும் விட்டால் அவருக்கு வேறு எதுவும் பேச இல்லை. அவை தாண்டி ”நவீன இலக்கிய வாசனையற்ற” ஒரு “முட்டாள்” தி.மு.க “அதிகப்பிரசங்கி”, நவீன இலக்கியத்தின் “சாதனையாளர்களை” நோக்கி அசட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்கிறார்.

ஜெயமோகனோ, இந்தியத் தத்துவ ஞான மரபையும், சங்க இலக்கியத்தையும், தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையிலும் நேரடியாக வாசிக்காமலேயே (மலையாளத்தில் எழுதப்பட்ட கோனார் நோட்ஸ்கள் மூலமாக வாசித்து) கரைத்துக் குடித்தும் திண்ணைப் பேச்சுகளில் அறிந்தும் கருத்து உதிர்ப்பவர். அவரது கட்டுரையின் பாத்திரமான திமுக – காரர் கேட்கும் அசட்டுத்தனமான கேள்விகளை விடப் பன்மடங்கு அசட்டுத்தனமான, குரூரமான, இந்துத்துவச் சார்பான கருத்துக்களை சகட்டு மேனிக்கு உதிர்த்துச் செல்பவர். அவை குறித்து எவர் எவ்வளவு தெளிவான, நியாயமான, அறிவுப்பூர்வமான கேள்விகளை தர்க்க நியாயங்களோடும் ஆதாரங்களோடும் எழுப்பினாலும் சட்டென்று கேள்வி கேட்பவர்களை நோக்கி பாய்ந்து நான்கு தாக்குதல்களைத் தொடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல, அடுத்த “ஆராய்ச்சிக்” கட்டுரையை எழுதுவதில் முனைந்துவிடுபவர்.

அதாகப்பட்டது, எவ்வளவு அறியாமை கொண்ட ஆணவத்தில் நடந்து கொள்கிற நபரகாக அந்தத் திமுக-காரரைச் சித்தரித்திருக்கிறாரோ, அதன் பன்மடங்கு ஆணவ உருக்கொண்ட “ஆளுமை”.

அறியாமை சுடர் விட்டு ஒளிரும் இந்த “ஆளுமை”யின் பேதமையைக் குறிக்க சில எடுத்துக் காட்டுகள்.

இலக்கியம் தொடர்பாக: Meta – fiction என்பது தெரியாமல், Meta – novel என்று திருவாய் மலர்ந்தருளிய “எழுத்தாள மேதை”. (இது 2000 ஆண்டில்)  Epistemology என்ற புலம் எது குறித்தது என்பதும் அறியாதவர் – அச்சொல்லின் ஸ்பெல்லிங்கும் அறியாதவர் (இதுவும் 2000 ஆம் ஆண்டு).

Popular Literature என்பதை பரப்பிய இலக்கியம் என்றும் Populism என்பதை ”பரப்பியம்” என்றும் பரப்பிய பெரும் மேதை. பொன்னியின் செல்வன் நாவலை “பரப்பிய இலக்கியத்திற்குள்” வரும் “க்ளாசிக்” எனும் அளவிற்கு இலக்கிய ரசனை முற்றியவர். (இது 2010 இல்) இந்தப் பத்து வருடங்களில் இவரின் இலக்கிய ரசனை மாறவேயில்லை. அந்த அளவிற்கு அறியாமை எனும் சுடரொளியை தன் ஆன்மாவிற்குள் கரைத்துக் கொண்டவர்.

மிருகங்களுக்கும் ஆன்ம நெருக்கடி உண்டாகும் என்பதை முதன் முதலாக உலகுக்கு உய்த்தியவர். (இது சில நாட்களுக்கு முன்பாக)

நாட்டாரியலுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர். ”தமிழகத்திலே இப்ப இருக்கிற பெரிய ஹிஸ்டாரியன்” என்று நாட்டாரியல் ஆய்வாளர் அ. கா. பெருமாளுக்கு சர்ட்டிபிக்கேட் தரும் அளவு அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்த மாமேதை. தான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களாகச் சில வருடங்களுக்கு முன்பாக இவர் தந்திருந்த ஆசிரியர் பட்டியலை வாசித்து மூர்ச்சையடைந்த விபத்தும் எனக்கு நேர்ந்திருக்கிறது.

இன்னும் பலப்பல எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஜெயமோகன் எதற்கும் அசரமாட்டார். “ஆன்ம தரிசனத்தில்” அவர் மூழ்கி எடுக்கும் கழிவுகளை தமிழ் எழுத்து உலகின் மீதும் வாசகர்கள் மீதும் வாறி இறைத்து திரும்பிப் பார்க்காமல் நடைபோட்டுக் கொண்டே இருப்பார்.

அவர் உதிர்த்துச் செல்லும் அபிப்பிராய முத்துக்களின் மூலம்  பற்றிச் சுருக்கமாகக் கூறுவதென்றால் இரண்டு புள்ளிகளைக் குறிப்பிடலாம்.

முதலாவதாக, ஜெயமோகனின் அறிவுத்துறை ”விசாலத்தின்” எல்லையானது தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையில் அவர்களது எழுத்துக்கள் எதையும் வாசிக்காமலேயே இலக்கியத் திண்ணைப் பேச்சுகளில் கேட்ட செய்திகளையும் மலையாள கோனார் நோட்சுகளில் வாசித்தவற்றையும் தமிழில் உதிர்ப்பது என்ற அளவில் நிற்பது.

இரண்டாவது, அவருடைய இலக்கிய ரசனை மூலவர்கள், அவரே ஒப்புக் கொண்டிருப்பதிலிருந்து ரசிகமணி டிகேசியும் கல்கியும். அவர்களின் தற்காலத்தைய அவதாரமே ஜெயமோகன். டிகேசியின் கம்பரசக் கதாகாலட்சேப வகைப்பட்ட இலக்கிய ரசனையின் அடியாக, அவரது அடிப்பொடியாக எழுதிய (தமிழ் இசை “ரசனையை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றிய) தலையணை நாவல்களை எழுதிக் குவிப்பதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொண்டிருந்த கல்கியின் மிகச் சரியான வாரிசு.

ஜெயமோகனை உச்சிமுகர்ந்து கொண்டாடும் வாசகர்களின் எல்லையும் கல்கி வாசகர் வட்ட எல்லையே. அவர்கள், கல்கியை விளாசி அக்காலத்தில், புதுமைப்பித்தன் எழுதிய “ரஸ மட்டம்” கட்டுரையை வாசிப்பது நல்லது.

தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட பின் – அமைப்பியல் விமர்சனம்  ரசனாவாத இலக்கிய நுகர்வின்  சாதகமான சில அணுகுமுறைகளையும் சேர்த்து வீழ்த்தி “குடலாபரேஷன்”  அணுகுமுறையாகத் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் வைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அத்தகைய “குடலாபரேஷன்” அணுகுமுறையின் எதிர் விளைவாகத்தான் ஜெயமோகன் இன்று மேலும் வலுவாக ரசனாவாத இலக்கிய அணுகுமுறையை முன்வைப்பதும் அதற்கு வாசகர்களிடத்தில் வரவேற்பு கிடைப்பதும். புதுமைப்பித்தனின் “ரஸ மட்டம்” கட்டுரையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, ரசனாவாத அணுகுமுறையின் சில சாதக அம்சங்களையும் எடுத்துக் கொண்டு, பின் அமைப்பியல் நோக்கை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது என்பது எனது எண்ணம்.

ஜெயமோகனின் கட்டுரையில் அவரது வழமையான திராவிட இயக்க எதிர்ப்பு காழ்ப்புணர்வு அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. அதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை. இதில் சப் – டெக்ஸ்டாக, திராவிட இயக்கத்து கருத்தியலாளர்கள், செயல்பாட்டாளர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்ற விஷ ஊசியும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு நைச்சியமான ஜால்ராவும் அடிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக, ஜெயமோகனின் ரசனாவாத இலக்கிய அணுகுமுறையும் வாசகர்களிடத்தில் அவர் கோரும் கேள்விக்கு இடமற்ற பற்றுறுதியும் (அடிமைத்தனம் என்று சொன்னால் பலருக்கு அதீதமாகப் படலாம் என்பதால் பற்றுறுதி என்கிறேன்) எத்தகைய வகைப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு எடுத்துக் காட்டைத் தருவது உதவியாக இருக்கும்.

ஜெயமோகன் காழ்ப்பைக் கக்கும் அதே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த,  - குறிப்பாக திமுக சாய்வு கொண்ட, ஒரு தமிழ் இலக்கண ஆய்வாளரின் நூலில் இருந்து இந்த விவரிப்பைச் சற்று எளிமைப்படுத்தித் தருகிறேன். நூலாகப்பட்டது, திரு. மு. வை. அரவிந்தன் அவர்கள் எழுதிய ”உரையாசிரியர்கள்”.

தமிழ் இலக்கண நூல்களுக்கு உரை நூல்கள் எழுதுவது தமிழ் இலக்கண மரபின் நீண்ட வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணிகளால் (சமணத்தின் மீதான தாக்குதல், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், மேலும் பல காரணிகள்) அவசியமாக இருந்தது. அவ்வாறு எழுதப்பட்ட உரை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படுவது (உண்மை இல்லை எனினும்) ”இறையனார் அகப்பொருள்” என அழைக்கப்பெறும் உரை நூல். இறைவனால் எழுதப்பட்ட நூல் என்பது தொன்மம் (திருவிளையாடல் தருமிக்கு மண்டபத்தில் பாட்டெழுதிக் கொடுத்துவிட்டு இறைவனாரான சோமசுந்தரக் கடவுள் செய்த அடுத்த வேலை இந்த உரையை எழுதியதாம்).

அவ்வுரைக்கு உரை எழுதப்பட்டது குறித்தும் ஒரு தொன்மக் கதை இருக்கிறது.

பாண்டிய மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவனார் சோமசுந்தரக் கடவுளானவர், “அகப்பொருள்” உரையை எழுதிக் கொடுத்த பிறகு, அதற்கு ஒரு சிறந்த உரையை எழுதித் தருமாறு, பாண்டிய மன்னன் தனது புலவர்களிடத்தில் வேண்டினான். அவன் வேண்டுதலுக்கு இணங்கி சங்கப் புலவர்கள் யாவரும் ஆளுக்கொரு உரை எழுதினர். ஆனால், அவற்றுள் எது சிறந்த உரை என்ற கருத்தொருமிப்பு உருவாகவில்லை. அவரவர் உரையே சிறந்தது என்று ஒவ்வொருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, இறைவனாகப்பட்டவர், அசிரீரியாக பின்வருமாறு கூறுகிறார். அவ்வூர் உப்பூரி குடிகிழார் என்பவருக்கு உருத்திரசன்மன் என்று ஒரு மகன் இருக்கிறான். செவி கேளாத ஊமை அவன் (பேசவியலாமையோடு கேட்கும் திறனும் இருக்காது). குமார தெய்வத்தின் அவதாரம். ஒரு சாபத்தினால் இவ்வாறு பிறந்திருக்கிறான். அவனை தீர்ப்பாசனத்தில் அமர வைத்து, அவன் முன்பாக, ஒவ்வொரு புலவரும் தமது உரையை வாசிக்கட்டும். சிறந்த உரை வாசிக்கப்படும் போது, அவன் மெய்சிலிர்த்து குடம் குடமாய் கண்ணீர் வார்ப்பான். சாதா உரை என்றால் உணர்ச்சியற்று இருப்பான். அதிலிருந்து கண்டு கொள்க என்கிறார்.

அவ்வாறே மன்னனும் புலவர்களும் செய்கின்றனர்.

புலவர்கள் ஒவ்வொருவராக தமது உரைகளை வாசிக்க, மதுரை மருதனிளநாகனார் எனும் புலவர் தமது உரையை வாசிக்கும்போது, அந்த ஊமைச் சிறுவன், சில இடங்களில் மெய் சிலிர்த்து கண்ணீர் விடுகிறான். நக்கீரனார் தமது உரையை வாசிக்கும்போது, ஒவ்வொரு பதந்தோறும் கண்ணீர் வார்த்து மெய் சிலிர்க்கிறான். நக்கீரனார் உரையே சிறந்த உரை என்று தேர்வு செய்யப்படுகிறது.

இத்தொன்மம், ஆசிரியன் – உரையாசிரியன் (விமர்சகர்) – வாசகன் என்ற எழுத்து – வாசகத் தொடர்ச்சி நிலை குறித்து நூற்றாண்டுகளாக தமிழ் இலக்கிய மரபில் நிலவி வந்திருக்கும் – ஆதிக்கத்தில் இருந்திருக்கும் கருத்து நிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆசிரியனின் எழுத்தை சாதாரண வாசகனால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. அதை விளக்கப்படுத்தும் பணி உரை ஆசிரியனுக்குரியது (விமர்சகருக்கு). உரை ஆசிரியனால், விளக்கபெறும் பிரதியை காது கேளாத, வாய் பேச இயலாத வாசகன் உணர்ந்து, குடம் குடமாகக் கண்ணீர் உகுத்து, மெய்சிலிர்த்து உணர்ச்சிவயமாக நுகர வேண்டும்.

இம்மரபின் தொடர்ச்சிதான் டிகேசி-யும் அவரது வாரிசான கல்கி-யும். இவர்களின் தற்காலத்தைய அவதாரம்தான் ஜெயமோகன். ஒரு சிறிய கூடுதல் விஷயம்  என்னவென்றால், ஜெயமோகன் தனது “படைப்பு”கள் மட்டுமல்லாது பிறரின் படைப்புகளும் இப்படியாகத்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று “உரை” வாசிக்கும் வேலையையும் தனது பிறவி மோட்சக் கடமையாக மேற்கொண்டிருக்கிறார் என்பதுவே.

தமிழில் அட்டை காப்பியாக இறக்குமதி செய்யப்பட்ட ”குடலாபரேஷன்” அமைப்பியல் மற்றும் பின் – அமைப்பியல் எழுத்தாளர்களுமே இவ்வகையான போக்கில் இருந்து விடுபட்டவர்கள் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழவன் தனது நாவலுக்கு தானே எழுதிய “பொழிப்புரை”.

ஜெயமோகனின் குரூரமான ரசனாவாத இலக்கிய அணுகுமுறையில் இருந்து விடுபடுவதோடு, அட்டை காப்பி பின் – அமைப்பியல் அணுகுமுறையின் “குடலாபரேஷன்” ஆய்வுகளில் இருந்தும் விடுபடவேண்டும் என்ற காத்திரமான அவசியம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

மேற்கத்திய அறிவுச்சூழலில் உருவான கருத்தமைவுகளை உள்வாங்கிக் கொண்டு நமது சூழலுக்குப் பொருத்தமான கருத்தமைவுகளை உருவாக்கவேண்டிய மிகக்கடினமான பணியின் ஒரு கண்ணி அது.

Pleasure of the text – என்ற கருத்தாக்கம் முன்வைக்கும்  எழுத்துடனான வாசக உறவுக்கும் ரசனாவாத இலக்கிய அணுகுமுறை முன்வைக்கும் உணர்ச்சித் ததும்பலுக்கும் பல மைல்கள் இடைவெளி உண்டு. அது ஜெயமோகனுக்குப் புரியவே புரியாது. பின் – அமைப்பியல் விமர்சனத்தை காப்பி – பேஸ்ட் செய்த அதிநவீன மேதாவிகளுக்கும் பிடிபடவில்லை.  அதனால்தான் அவர்கள் ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” நாவல் நோபல் பரிசு பெறத்தக்கது என்று பாராட்டினார்கள். இன்னும் பல கழிவுகளையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடலாபரேஷனும் செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் புனைவு எழுத்துகளுக்கு தாமே நோட்ஸுகளும் அருளிக் கொண்டிருக்கிறார்கள்.

———

குறிப்பு: திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளின் சந்தர்ப்பவாதம், திருகுத்தனம் குறித்தான எனது விமர்சனங்கள், இங்கு குறித்திருப்பவற்றால் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது.

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
May 27, 2013, 11:12:55 PM5/27/13
to panb...@googlegroups.com
சுபைர் அவர்களே.

"கைதிகளை"ப் பற்றிய 
ஜெயமோகனின் சிறுகதை
சிறுகதை அல்ல.
சிறுத்தை.
சமுதாய அவ‌ல‌த்தின்
இண்டு இடுக்கு ஒவ்வொன்றும்
தீப்புள்ளி போல் போர்த்தியிருக்கும்
ஒரு ஆழ்வெறியின்
சிறுத்தையாக உலவவிட்டு
அங்கு
அடைத்துக்காட்டியிருக்கிறார்.

த‌மிழை நுங்கு என்று
இனிமையாக 
கவிதை சொல்ல‌லாம்.
ஆனால்
அது தீக்க‌ங்குக‌ளாக‌
சுட்டெரிக்க‌ வேண்டிய‌வ‌ற்றை 
சுட்டெரிக்க வேண்டும்.
பிர‌ச்னைக‌ளை
பிரேத‌ங்க‌ளாக‌ கிட‌த்திவைத்து
உத்த‌ர‌க்கிரியைக்காக‌
உட்கார்ந்து கொண்டிருப்ப‌தில்
ப‌ய‌னில்லை.
அவ‌ர் சொல்லாட‌ல்
அசிங்க‌மாய் அங்கே இங்கே
வெற்றிலை குத‌ப்பி
துப்பிய‌து போல் இருந்தாலும் 
அது
ஒரு எரிம‌லை லாவாவின்
எச்சில். 
ம‌றைவாய் புதைத்து வைத்த‌ 
நம் ச‌முதாய‌த்தின் 
முக‌ம் க‌ண்டு
ந‌ம் அறியாமையின் அச்சம்
மேலும் மேலும் ப‌ட‌ர்கின்ற‌து.
க‌திர் விரிக்க‌ வேண்டிய‌வை
க‌ட‌லை தின்று கொண்டிருக்கின்றன.
அந்த வலியைக் காட்டியிருக்கும்
அவ‌ர‌து ஓவ்வொரு எழுத்தும்
"கூட‌ங்குள‌ம்".

===============================================ருத்ரா.

அக‌ம‌து சுபைர் அவ‌ர்க‌ளே

துரை.ந.உ

unread,
May 27, 2013, 11:32:03 PM5/27/13
to பண்புடன்

2013/5/28 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்துகொள்ள் எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன ,அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும்.

நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்?

​​
நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்புஇறுக்கமா அது?


​எப்படி இப்படி பொத்தாம் பொதுவாக தமிழகத்தமிழர்கள் என்று அனைவரையும் இவரால் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற முடிகிறது :(((

​அவர் குறிப்பிட்டிருக்கும் ‘ நம்மிடம்’ என்னும் சொல்லுக்குள் அவரும் இருப்பதாகவே உணர்த்தும் வெளிப்பாடே ..இந்தக் கடைசி இரண்டு பத்திகளும் 





--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

Naresh Kumar

unread,
May 28, 2013, 12:15:56 AM5/28/13
to பண்புடன்
வழக்கம் போல ஜெமோவிற்கு ஆப்பு வைக்க, ஜெமோவே வாய்ப்பு ஏற்படுத்தினார் போல இருக்கும் கட்டுரை!

ஆனாலும், எழுத்தாளனை மதிப்பதில்லை என்ற புலம்பலோ, நாஞ்சில் நாடன் அமைதியாக போனாலும், தான்  வீறு கொண்டு ஒரு திமுக தொண்டனை புரட்டி எடுத்ததாக பில்டப் கொடுக்கும் காட்சிகளிலும் லைட்டா சாரு டச் தெரியுதே! எனக்கும் மட்டும்தானா???

துரை.ந.உ

unread,
May 28, 2013, 12:17:49 AM5/28/13
to பண்புடன்
டச்சா ... நான் இது மாறுவேசத்துல வந்த சாருவோன்னே சந்தேகப்பட்டேன் :)


2013/5/28 Naresh Kumar <meet...@gmail.com>
வழக்கம் போல ஜெமோவிற்கு ஆப்பு வைக்க, ஜெமோவே வாய்ப்பு ஏற்படுத்தினார் போல இருக்கும் கட்டுரை!

ஆனாலும், எழுத்தாளனை மதிப்பதில்லை என்ற புலம்பலோ, நாஞ்சில் நாடன் அமைதியாக போனாலும், தான்  வீறு கொண்டு ஒரு திமுக தொண்டனை புரட்டி எடுத்ததாக பில்டப் கொடுக்கும் காட்சிகளிலும் லைட்டா சாரு டச் தெரியுதே! எனக்கும் மட்டும்தானா???

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

ஸ் பெ

unread,
May 28, 2013, 2:18:35 AM5/28/13
to panbudan

என்னுடைய சமீபத்திய பிளஸ்

ஸ் பெ

Shared publicly  -  26 May 2013
குமரி மாவட்டத்தின் மிகமுக்கியமான மலைவாழ் பழங்குடிகளான காணி சமூகத்தினர் பற்றி யாரேனும் உக்கிரமாக பதிவு செய்திருக்கிறார்களா என யோசித்த போது, ஒன்றுமே நினைவில் இல்லை. 

ஜெமோ, மிக அனாயசமாக நாஞ்சில் வட்டார வழக்கை, வாழ்வியலை தனது சிறுகதைகளின் வழி பதிவு செய்பவர் என்ற பிம்பம் பலருக்கும் உண்டு(எனக்கும்!). 'ரப்பர்' நாவலில் அவர் உருவாக்கிய லாரன்ஸ் என்ற ஆதிவாசி கதாப்பாத்திரம் குறித்து எனக்கு கடுமையான மாற்றுக்கருத்து உண்டு. இன்று ரப்பரை அவர் மறுஆய்வுக்கு உட்படுத்துவாரேயானால் அவரும் இதை மறுக்கமாட்டார் என்றே நம்புகிறேன். காடு?!!!?!?

இயக்குனர் பாலாவையும், ஜெயமோகனையும் இங்கே ஒப்பிட்டு பார்க்க வேண்டியதாகிறது. விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலுக்கு, தனது பிரத்தியேக திரைமொழியின் மூலம், வேறு ஒரு உலகத்திற்கு நம்மை பாலா கூட்டிச் சென்றாலும் எங்கோ அதன் ஆன்மா சிதைபட்டு சினிமாத்தனம் சற்றே மேலோங்கி நிற்கும். ஜெயமோகன் தான் சாராத சமூக மக்களின் வாழ்வியலை சிறுகதைகளின் முன்வைக்கும் போது, அப்படியான ஒரு உணர்வையே அவருடைய எழுத்து எனக்கு தருகிறது. (நண்பர் 'ஓடியன்' லக்ஷ்மன் தனது 'கும்கி' குறித்தான விமர்சனத்தில் இதுபோன்ற முரண்பாடுகளை சுட்டிக் காட்டி இருப்பார்). 

தொலைகாட்சிகள் கிராமங்களில் ஊடுருவாத நாட்களின், யாரேனும் ஒருவருடைய வீட்டுத் திண்ணையில் இருந்து பெரியவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். அன்றைய தினத்தினுடைய வேலை அனுபவம் துவங்கி பழங்கதைகள் வரை சுற்றி வரும்.  'தேன் வேட்டையில் காணிகள் எடுக்கும் யுக்தி, பல்வேறு காலநிலைகளின் மலைகளில் தங்களை சமாளித்து வாழும் தன்மை, காணிகள், காட்டை விட்டு கிளம்பும் போது கூட்டி வரும் பேய்கள், உள்ளூர் பேய்களை அடக்குவது' என சமூக படிநிலையில் உலகம் காணிகளை எங்கோ வைத்திருந்தாலும், பெரியவர்களின் பேச்சில் அவர்கள் குறித்து மிகபிரமாண்டமான சித்திரமே விரியும்.

ஜெயமோகன் 'காடு' நாவலிலும் இப்பழங்குடித் தன்மையை வேவ்வறு காட்சிகளில் பதிவு செய்திருப்பார் என்றாலும், ஒரு விஷயத்தை செவிவழி செய்தியாய் கேட்டு அதை மற்றொரு தளத்தில் கடத்தும் அவரது எழுத்தில் சிறுமுலாம் பூசப்படும் தொனியை என்னால் உணர முடிகிறது. 

மிகபிரமாண்டமான சில நூற்றாண்டு சமூகவாழ்க்கையின் பெருமிதங்களை நினைவில் வைத்துக் கொண்டு, இன்று மாற்று சமூகங்களின் எதார்த்த வாழ்வியலோடு கைகோர்த்து நகர வேண்டிய ஒரு சூழலில், ஒரு பெரும்பழங்குடியின் வாழ்வியலை யாரால்  அப்பட்டமாக பதிவு செய்து விட முடியும் என்று நினைக்கிறீர்கள் ?

https://plus.google.com/u/0/111017180608431193225/posts/ZGaFCoux69J

வில்லன்

unread,
May 28, 2013, 5:37:46 AM5/28/13
to panb...@googlegroups.com
நீங்க (ஜெமோ ) வரதுக்குள்ள அனுப்பிட முயற்சி பண்ணோம்னும்போதே தெரியலையா
ஜெ.மோ எவ்ளோ டெரர்னு!

சாரு சொன்னா கிண்டல் பண்றதும், ஜெமோ சொன்னா சீரிய எதிர் வினையாற்றுவதும்
தமிழர்களின் தரத்தை நிர்ணயிக்கிறது.

பை
கன்வெர்ட்டடு மலையாளி!
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>


--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக
முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
May 28, 2013, 1:04:17 PM5/28/13
to panb...@googlegroups.com
அன்புள்ள‌ கால‌ப்ப‌ற‌வை அவ‌ர்க‌ளே!

ஜெய‌மோக‌ன் ப‌க்க‌ங்க‌ள்
ப‌டிக்க‌ ப‌டிக்க‌
இல‌க்கிய‌ தாக‌ம் தூண்ட‌ச்செய்யும்
அற்புத‌மான‌ ப‌க்க‌ங்க‌ள்.
ஆனாலும்
ப‌க்க‌ங்க‌ளை புர‌ட்டும்போது
அவ‌ற்றிற்கு
"ம‌று ப‌க்க‌ங்க‌ளும்" உண்டு அல்லவா?
அவ‌ர‌து
"இவ‌ர்க‌ள் இப்ப‌டித்தான்"ல்
"அவ‌ரும் அப்ப‌டித்தான்"
என்னும் ம‌றுப‌க்க‌மே இது.

திரு.ஜெயமோகன் அவர்கள்
தமிழ் இலக்கியத்துக்கு
செறிவு ஊட்டியிருக்கிறார்
என்ப‌து உண்மையிலும் உண்மை.

தமிழுக்கு அவர்
ஒரு "தீர்த்தங்கர்" அல்லது 
"ஸென் புத்தர்"
என்று வாசகர்கள் 
பட்டம் கொடுத்திருந்தாலும்
அது ஒன்றும் மிகையில்லை

ஆனால்
த‌மிழுக்கும் ஒரு நெஞ்சு உண்டு
என்று நினைக்கும்
நெஞ்சு தான் அவ‌ர்க்கில்லை.

த‌மிழையே அழ‌கிய "பிச்சுவா" ஆக்க‌
தமிழையே சாணை தீட்டும்
கல்லாக்கிக்கொண்டவர்.

இவர் 
தமிழ் இலக்கிய 
கலைஞர்கள் மீது
ந‌ச்சு உமிழ்வ‌து ஏன்?

அந்த தமிழ் நெஞ்சுகளில் 
இவர் தமிழ்ப்பிச்சுவாக்களை
பாய்ச்சுவ‌து ஏன்?

"சில‌ க‌ன‌க‌ விச‌ய‌ர்க‌ளின்"
கைப்பாவையாகி
ஒரு "சேர" அர‌ச‌ன்
பாண்டிய‌ சோழ ம‌ன்ன‌ர்க‌ளின்
த‌லையில் க‌ல் ஏற்றி க‌ளிக்கும்
காட்சிக‌ள் என்று
எடுத்துக்கொள்ளவேண்டியது தான்.

த‌மிழுக்கும் அமுதென்று பேர்.
அந்த‌ த‌மிழின் அழிவிற்கும்
த‌மிழாலே வாளேந்தும் இந்த‌
த‌மிழுக்கு ந‌ஞ்சென்று பேர்.


தமிழகத்தமிழர்கள் நிச்சயம்
மன நல மருத்துவ மனைக்கு
செல்லவேண்டும் தான்

அங்கே அட்மிட் ஆகியிருக்கும் 
அந்த இன்னொரு தமிழனுக்கு
ஆறுத‌ல் சொல்ல.


மூன்று த‌மிழ‌ராய் மூலைக்கு மூலை
சித‌றிக்கிட‌ந்த‌ சிதில‌ம் தான்
த‌மிழ‌ன் வ‌ர‌லாறு.
ஒருவ‌னை ஒருவ‌ன்
க‌ழுவில் ஏற்றுவ‌தும்
"க‌ற்றுணைப்பூட்டி க‌ட‌லில் பாய்ச்சுவ‌தும்"
அது பாராய‌ண‌ம் ஆகுவ‌துமே
நாம் பார்க்கும் காட்சிக‌ள்.
இத‌ற்கு அக்கினி வ‌ள‌ர்த்து
"ய‌க்ஞ‌ம்"செய்து 
மூல‌ ம‌ந்திர‌ம் சொன்ன‌வ‌ர்களே
இன்னும் இங்கே 
படம் காட்டும்
"மாயா ஜால‌"விட்ட‌லாச்சாரியார்க‌ளாக‌
இருக்கிறார்க‌ள் என்ப‌தே
உள்ளார்ந்த‌ அர‌சிய‌ல்.

ம‌லையாழ‌த்த‌மிழ‌ன்
உண்மையிலேயே
ஆழ‌மான‌ சிந்த‌னையின் 
சித்த‌ன் தான்.
அருக‌ன் தான்.

அத‌ற்காக "க‌ல்கியின்"
நாக‌ந‌ந்தி வேட‌மேற்று
இப்ப‌டி
பிச்சுவாக்க‌ளை ஏந்தியிருக்கும்
பிட்சுக்க‌ள் ஆகத் தேவையில்லை.


=========================================================ருத்ரா


On Wednesday, January 30, 2013 7:56:09 AM UTC-8, காலப் பறவை wrote:

ஸ் பெ

unread,
May 28, 2013, 3:37:21 PM5/28/13
to panbudan

கட்டுரையின் சாரம்சத்தில் நெருடிய சில வரிகளுக்காக மட்டும்..

ஜெயமோகன் கட்டுரையில் சுட்டிக் காட்டும் தெய்வநாயகம், சாதுசெல்லப்பா போன்றவர்களைக் குறித்து நன்றாக அறிந்திருந்தும் மதமாற்றம்=தமிழக கிறிஸ்தவர்கள் என்பதை எதற்கு தொடர்ந்து நிறுவ முயல்கிறார் என்று தான் விளங்கவில்லை. மேலே சுட்டிகாட்டிய இருவரும் எந்த பெரிய கிறிஸ்தவ பிரிவுகளின் (ஆர்.சி, சி.எஸ்.ஐ......) பிரதிநிதிகள்  இல்லை என்றாலும், தொடர்ச்சியாக கிறிஸ்தவர்கள்=தெய்வநாயகம், சாதுசெல்லப்பா என்று சுட்டுவதின்  அவசியம் என்னவோ??

//இந்த நூறாண்டுக்கால மோசடிப் பிரச்சாரத்தின் காரணமாகவே கிறித்தவ மதம் வேதம் என்ற சொல்லைக் கவர்ந்துகொண்டது. தங்களுடையது உண்மையான வேதம் என்று கிறித்தவர்கள் நம்ப ஆரம்பித்தனர். வேதக்காரர்கள் என்றால் கிறித்தவர்கள் என்ற அர்த்தம் உருவாகியது. வேதமாணிக்கம் என்றெல்லாம் அவர்கள் பெயர்சூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.//

நாட்டாரியல் ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன் தன்னுடைய ' கிறிஸ்தவமும் தமிழ்ச் சூழலும்' என்ற புத்தகத்தில் இதுகுறித்து விரிவாக எழுதி இருப்பார். நாட்டாரியல் தெய்வங்களை சாமியாக கும்பிட்டுக் கொண்டிருந்த பண்டைய சமூகங்களுக்கு 'வேதம்' என்பது தங்கள் சாதிக்கு அப்பாற்பட்டது என்ற கட்டமைப்பே உருவாக்கப்பட்டிருந்தது. வேதம் குறித்து கற்கவோ, பேசவோ அவர்களுக்கான எந்த வாய்ப்பும் தரப்படவில்லை. அந்த சூழ்நிலையில் தான் ரோமன் கிறிஸ்தவம் மெல்லப்  பரவ துவங்குகிறது. "அவன் உனக்கு வேதத்தை கற்றுத் தரமறுக்கிறானா, இதோ பிடி உனக்கான வேதத்தை" என்று தான் சாமானிய மக்களிடம் பைபிள்  வேதாகமம் ஆகிறது, ரோமன் கத்தோலிக்க கோயில்கள் 'வேதகோயில்' ஆகிறது, ரோமன் கத்தோலிக்கத்தை பின்பற்றுப்பவர்கள் 'வேதக்காரர்கள்' ஆகிறார்கள். 

இன்றைய 'நவீன' ஹிந்துக்கள் 'அட என்ன ஒரு மோசடி' என புலம்பலாம்... "நானூறு ஆண்டுகளுக்கு முன் 'நீங்கள் இன்று பழம்பெருமை பேசும் வேதங்கள்' எந்த அளவுக்கு சாமானியர்களிடம் போதிக்கப்பட்டு இருந்தது" என்ற மறுகேள்வி இங்கே அவசியமாகிறது.  .

தமிழ்ப் பயணி

unread,
May 28, 2013, 10:49:09 PM5/28/13
to பண்புடன்

பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன்.

தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கிப் போட்டுப் புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை.

சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மதப் பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு மீட்பர் தோன்றுவாரென்றும் அவர் மனிதகுல விடுதலைக்காக பலியாவார் என்றும் சொல்லுவாதாகப் பிரசங்கித்து வருகின்றார். அப்படிப்பட்ட பிரஜாபதி ஏசுவேயல்லாமல் வேறொருவரும் இல்லை என்றும் பிரசங்கித்து வருகின்றார். தாங்கள் கீழ்காணும் காணொளியையும் பின்னூட்டத்தையும் பரிசீலித்து உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன். எனது பல குழப்பங்களை உங்கள் பதிவுகள் தீர்த்து வைத்திருக்கின்றன.

http://www.youtube.com/watch?v=DRGY9I34nTo

நான் எந்த மத நம்பிக்கையும் கொண்டவனில்லை. தனிப்பட்ட முறையில் கௌதம புத்தரும் கீதை சொன்ன கிருஷ்ணரும் என்னைக் கவர்ந்தவர்கள்.

நான் பிழைப்புக்காக ஆங்கில மொழியையே தின வாழ்வில் அதிகம் பயன்படுத்தி வருபவன். எனவே எனது கடிதத்தில் பல பிழைகள் காணப்படலாம். தயவுசெய்து மன்னிக்கவும்.

நன்றி
ஸ்ரீனிவாசன்.

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

சாதுசெல்லப்பாவின் இந்த வகையான பேச்சுக்கள் மதமாற்றத்துக்கான கீழ்த்தர மோசடிகளே அன்றி எந்தவிதமான அறிவார்ந்த அடிப்படைகளும் கொண்டவை அல்ல. இத்தகைய பிரச்சாரம் நீண்டகாலமாகவே நிகழ்ந்துவருகிறது.சிலவருடங்களுக்கு முன்னர் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி வளாகத்தில் பிரஜாபதி என்ற நாடகம் நடைபெற்றது. பிரம்மாண்டமான பொருட்செலவில் அமைக்கப்பட்ட நாடகம். பெரும்கூட்டம்

இந்தப் பிரஜாபதி மோசடி எப்படி கேரளத்தில் உருவாகி மெல்ல இந்தியாவெங்கும் கொண்டுசெல்லப்படுகிறது என்று கேரளப் பகுத்தறிவாளரான சனல் இடமறுகு எழுதியிருக்கிறார். சமீபத்தில் ரராஜீவ் மல்ஹோத்ரா- அரவிந்தன்நீலகண்டன் எழுதிய Breaking India [ ‘உடையும் இந்தியா. கிழக்கு பதிப்பகம்] நூலில் இதைப்பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன

இந்த வரலாற்றைப் பார்ப்போம். இந்தியாவில் கிறித்தவமதம் பரப்பப்பட ஆரம்பித்தபோதே இந்துமதத்தின் மூலநூல்களை விருப்பபடி திரித்து அவற்றுக்குள் கிறித்தவத்தைக் கொண்டுவரும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன. காரணம் இந்து ஞானநூல்கள் ஏராளமானவை. அவற்றில் கணிசமானவை அறிஞர்களே அறிந்த நுட்பமான தத்துவநூல்கள்.கிறித்தவ மதம் இலக்காக்கிய எளிய மக்களுக்கு அந்நூல்களுடன் நேரடி உறவு கிடையாது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மதம்பரப்ப வந்த ராபர்ட் டி நொபிலி என்ற பாதிரியார் [ 1577-1656] உண்மையில் இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசுர்வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரச்சாரம்செய்தார். அவரே ஒரு நூலை உருவாக்கி அந்நூலின் ‘தொன்மையான’ சுவடியை ஐரோப்பாவுக்கும் கொண்டுசென்றார். புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு மகத்தான ஞானநூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர்

நூறாண்டுக்காலம் இந்த மோசடி புகழுடன் இருந்தது. 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டுபிடித்தார். தொடர்ந்து பல ஆதாரபூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூறாண்டுக்கால மோசடிப் பிரச்சாரத்தின் காரணமாகவே கிறித்தவ மதம் வேதம் என்ற சொல்லைக் கவர்ந்துகொண்டது. தங்களுடையது உண்மையான வேதம் என்று கிறித்தவர்கள் நம்ப ஆரம்பித்தனர். வேதக்காரர்கள் என்றால் கிறித்தவர்கள் என்ற அர்த்தம் உருவாகியது. வேதமாணிக்கம் என்றெல்லாம் அவர்கள் பெயர்சூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.

நொபிலியின் மோசடி அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்ட வரலாற்றை மெல்லமெல்ல மறைத்துவிட்டனர்.மட்டுமல்ல நொபிலியின் முயற்சி உன்னத நோக்கம் கொண்டதே என்றுகூட மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் எழுதினார்கள். வேதம் என்ற சொல் இந்துமதத்தில் உள்ள நான்கு நூல்களை மட்டுமே குறிப்பிடுவது என்று அறிந்த இந்துக்களே இன்று அபூர்வம்.

இதே வகையான முயற்சிகள் எப்போதும் தொடர்ந்து நிகழ்ந்தபடியே வருகின்றன. திருக்குறள் என்பது ஒரு கிறித்தவநூலே என்றும் அதன் மூலச்சுவடி தனக்கு கிடைத்துள்ளது என்றும் 1972இல் கணேசய்யர் என்பவர் சொல்ல அவரை அன்றைய மைலாப்பூர் பேராயர் அருளப்பா ஊடகங்கள் முன் நிறுத்தினார். உலகமெங்கும் கொண்டுசென்றார். பெரும் முயற்சியுடன் அந்த மோசடி முறியடிக்கப்பட்ட்து

சென்ற சில ஆண்டுகளாக புனித தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் என்றும் அவர் இங்கே பரப்பிய கிறித்தவ மதத்தின் திரிந்த வடிவமே இந்து, பௌத்த மதங்கள் என்றும் ஒரு பெரும் பிரச்சாரம் தெய்வநாயகம் என்பவராலும் அவரை ஆதரிக்கும் கிறித்தவ அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுகிறது. எல்லா இந்து நூல்களும் கிறித்தவ தத்துவத்தைச் சொல்லும் திரிபுபட்ட நூல்களே என்பது அவர்களின் வாதம்

இந்தவரிசையில் வருவதே இந்த பிரஜாபதி என்ற மோசடி. கேரள ஏசுசபைப் பாதிரியாரான ரெய்முண்டோ பணிக்கர் என்பவரால் இது முதலில் முன்வைக்கப்பட்டது. கிறிஸ்துவின் மறுவருகை, உயிர்த்தெழுதல் பற்றி ரிக்வேதம் சொல்கிறது என்றும் அதை பிராமணர்கள் மறைக்கிறார்கள் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார்.அதிகாரபூர்வ கிறித்தவ திருச்சபையால் இது நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து இதைச் சொல்லிக்கொண்டிருந்தார்

இருபதாண்டுகளுக்கு முன்னர் உதிரி பெந்தெகொஸ்தே சபைகள் வலிமையுடன் பரவ ஆரம்பித்தபோது சிலர் இதை மீண்டும் சொல்ல ஆரம்பித்தனர். இப்படி சொன்னவர்களில் பலர் விசித்திரமானவர்கள். உலகம் அழிவதை முன்னறிவித்து அதிலிருந்து தப்ப விரும்புபவர்களை அழைத்துச்சென்று ஒரு கம்யுன் அமைத்துக்கொண்ட பாலாசீர் லாரி போன்ற நிழலான கிறித்தவ தீர்க்கதரிசிகள் இதை அரிய ஞானக்கண்டுபிடிப்பாக முன்வைத்தனர். இவ்வரிசையில் வருபவர் சாதுசெல்லப்பா

ஒரு இந்துத் துறவி போன்ற வேடத்தில் உள்ள இவர் தனக்கென ஒரு திருச்சபையை நடத்திவருகிறார்.தன்னை பிராமணன் என்றும் வேதங்களைக் கற்றுத்தேர்ந்து கிறித்தவராக ஆனவர் என்றும் சொல்கிறார். 2009இல் கிறித்தவ பிராமணர் அமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கிப் பிரச்சினை வரவே கைவிட்டார்.இவரது இலக்கு போரில் பாதிக்கப்பட்டு மனம்கசந்த நிலையில் இருக்கும் இலங்கைத்தமிழர்களே.

சாதுசெல்லப்பாவின் வழி மிக எளியது. அடிப்படைவாசிப்போ தர்க்கபுத்தியோ கொண்ட ஒருவர் அவரது பேச்சுகளைக் கேட்டு அருவருக்கவே செய்வார்.அவரது இலக்கு, ஏதுமறியாத பாமரர்கள்தான்.சமீபகாலமாகத் தொலைக்காட்சி ஊடகத்தை வலுவாக இவர் பயன்படுத்தி வருகிறார். தமிழகத்தின் திராவிட அமைப்புகள், இடதுசாரிகள்கூட இவரை ஆதரிக்கிறார்கள்

சாது செல்லப்பாவின் மதமாற்ற நோக்கத்தை ஒப்புக்கொள்ளும் கிறித்தவர்களில்கூடக் கணிசமானவர்கள் அவர் வேதங்களும் , சைவ ஆகமங்களும் எல்லாமே ஏசுவைப்பற்றித்தான் சொல்கின்றன என்று சொல்வதைக் கடுமையாக கண்டிக்கிறார்கள். காரணம் தூய கிறித்தவ நோக்கில் பைபிள் அன்றி எந்த பிறநூலும் அதிகாரபூர்வமானவை அல்ல.பைபிள் சரி என்பதனாலேயே பிற அனைத்தும் பிழையானவை, தவறானவை. அவை எதற்கும் உதவாத குப்பைகளாகவே இருக்கமுடியும். ஆகவே அவற்றை மேற்கோள்காட்டுவதும் ஆராய்வதும் பைபிளுக்கு எதிரான பெரும்பாவம்

சாதுசெல்லப்பாவின் கூற்றுக்களைப் பரிசீலிக்கும் ஒரு மரபான கிறித்தவ ஆய்வுதளம் இப்படிச் சொல்கிறது

இரண்டாம் முறை, திருமறையைக் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் தெளிவான, அழிவற்ற, அதிகாரம் கொண்ட ஒரே நூலாக ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் எதையும் ஆராய முற்படுகின்றது. ஆகவே, திருமறையோடு ஒத்துப் போகாத எதுவும், திருமறை நிராகரிக்கும் எதுவும், கர்த்தருடைய வழிகள் அல்ல என்ற தீர்மானத்திற்கு வருகின்றது. இம்முறையைப் பொறுத்தவரையில் வரலாறு, கல்வெட்டுகள், மனிதர்களால் எழுதப்பட்ட ஆதி நூல்கள், பரம்பரையாக வாய்வழி வந்த போதனைகள், நம்பிக்கைகள் அனைத்துமே திருமறைக்கு ஒப்பான அதிகாரம் கொண்டவையல்ல. இவற்றைவிட திருமறையே மேலான, உறுதியான அதிகாரம் கொண்ட கர்த்தருடைய வார்த்தை. இதன் அடிப்படையில் இந்திய வேதங்களும், வரலாற்று அம்சங்களும் திருமறைக்கு நிகரான எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அவை கறைபடிந்தவை; அவற்றின் அடிப்படையில் சத்தியத்தை நிரூபிக்க முயல்வது சத்தியத்திற்கு எதிரான முறையாகும்.

ஆகவே இந்த மோசடி கிறித்தவர்களுக்காகச் செய்யப்படுவது அல்ல என்பது தெளிவு. இது இந்துக்களை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படுகிறது. இந்து நூல்களை நம்பும் ஒருவரிடமே இது பேசுகிறது. அவர் மதம் மாறிவிட்டாரென்றால் மெல்லமெல்ல இந்து நூல்கள் ‘கறைபடிந்தவை’ என்றும் பைபிள் மட்டுமே ஒரே உண்மையான நூல் என்றும் அவர் நம்பவைக்கப்படுவார்.

இந்துமதத்தினரே இந்துமதம் பற்றி ஏதுமறியாமலிருப்பதே இத்தகைய மோசடிகள் செல்லுபடியாகும் நிலையை உருவாக்குகிறது. இந்துமதத்தின் ஞானமரபைப்பற்றிப் பேசுபவர்களே இன்றில்லை. வெறும் பக்திநெகிழ்ச்சி, சடங்குகள் ,சோதிடங்களையே இங்குள்ள ஆன்மீகப்பேச்சாளர்கள் முன்வைக்கிறார்கள். கூடவே நாத்திகப் பகுத்தறிவு என்ற பேரில் இந்துஞானமரபுக்கு எதிராக வளர்க்கப்பட்டுள்ள காழ்ப்பும் இவர்களுக்கு உதவியாகிறது

பிரஜாபதி என்றால் யார்? பௌராணிக அடிப்படையில் சொன்னால் பிரஜாபதி என்பவர் படைப்புச் சக்தியின் ஒரு துளி. பிரபஞ்ச சிருஷ்டிக்கு வெவ்வேறு பிரஜாபதிகள் வெவ்வேறு வகையில் தேவையாக இருந்திருக்கிறார்கள். 21 பிரஜாபதிகள் உண்டு என்பது பௌராணிக தரப்பு. மகாபார்தம் சாந்திபர்வத்தில் அவர்களின் பட்டியல் உள்ளது

முதல் பிரஜாபதி பிரம்மாவேதான்.ருத்ரன், மனு, தக்‌ஷன்,பிருகு, தர்மன், தபன்,யமன்,மரீசி, ஆங்கிரஸ்,அத்ரி, புலஸ்த்யன், புலகன்,கிருது, வசிஷ்டன்,பரமேஷ்டி, சூரியன்,சந்திரன் கர்தமன், குரோதன், விக்ரீதன் என அவர்களை குறிப்பிடுகிறது மகாபாரதம்.

இந்தப்பட்டியலைப்பார்க்கையிலே தெரியும், பிரஜாபதி என்பதற்கு என்ன அர்த்தம் வேதங்களில் கொடுக்கப்ப்ட்டுள்ளது என.இவர்களில் பெரும்பாலானவர்கள் ரிஷிகள். பிரம்மா, ருத்ரன் இருவரும் தெய்வங்கள்.சூரியன்,சந்திரன் இருவரும் இயற்கைவடிவங்கள். அதாவது ஒரு வம்சத்தை, அல்லது குலத்தை, அல்லது குருமரபை உருவாக்கியவர்களே இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.பிரஜாபதிகள் என்றால் ‘தொன்மையான தந்தையர்’ என்று எடுத்துக்கொள்வதே சரியானதாகும்.

வேதங்கள் மூன்று வகையான கடவுள் உருவகங்களை முன்வைக்கின்றன. வேதம் சொல்லும் முழுமுதல் கடவுள் என்றால் அது பிரம்மம்தான். பிரம்மம் முழுமையாக அறியப்பட முடியாததும் விளக்கப்பட முடியாததுமான பிரபஞ்ச மூலம். அதை ஓர் ஆற்றல் என்றோ இருப்பு என்றோ கூடச் சொல்லிவிடமுடியாது. அது என்ற சொல்லால் வேதம் அதைக் குறிப்பிடுகிறது. வேதத்தின் கடவுள் அதுமட்டுமே

அந்த பிரம்மத்தின் அல்லது பரம்பொருளின் பல்வேறு தோற்றநிலைகளாகப் பலவகை தெய்வங்களை வேதங்கள் குறிப்பிடுகின்றன. அவையெல்லாம் நாம் அறியும் சாத்தியங்களால் உருவகிக்கப்படுபவையே. அவர்களில் இந்திரன்,வருணன் போன்ற தேவர்கள் உண்டு.அவர்கள் குறிப்பிட்ட செயல்களுக்கு உரியவர்கள். பிரபஞ்சத்தைப் படைத்தவர்கள் அல்ல. ராத்ரிதேவி , உஷாதேவி என காலங்களையும் பருவங்களையும் கடவுள்களாக உருவகித்திருப்பதும் உண்டு. சூரியன், சந்திரன் போன்ற இயற்கைஇருப்புகளும் உண்டு.

பிரஜாபதி இந்த எவ்வகையிலும் சேரும் தெய்வம் அல்ல. பிரஜாபதி என்பவர் படைப்புக்குக் காரணமாக அமைந்த ஒருவர், குரு அல்லது மூதாதை- அவ்வளவுதான்.

வேதங்களைக் கூர்ந்து வாசித்தால் மேலும் பல பிரஜாபதிகளைக் காணமுடியும். பெயரே இல்லாமல் வெறுமே பிரஜாபதி என்ற சொல்லால் சுட்டக்கூடியவர்களும் உண்டு. அதாவது வேதங்களின்பிரஜாபதி என்பது ஒரு கருதுகோள். பிரபஞ்சத்தை ஒரு காடு என்று கொண்டால் பிரஜாபதி அந்த மரங்களின் விதை.வேதங்களின்படி ஒரு கருத்து ஒரு பிரஜாபதியாக ஆகிறது. அவரில் இருந்து சிருஷ்டி நிகழ்கிறது.

வேதங்கள் பிரஜாபதியை வைஸ்வாநரன் என்றும் சொல்கின்றன. பிரபஞ்சமனிதன், பேருருமனிதன் என்று மொழிபெயர்க்கலாம். அதாவது ஒரு மனிதத்திரளின் தொடக்கமும் பிரஜாபதியே, அந்த ஒட்டுமொத்தத் திரளும்கூட பிரஜாபதியே.

சில பாடல்களில் பிரம்மா பிரஜாபதியைப் பிறப்பித்து சிருஷ்டியைச் செய்ததாக வருகிறது. சில பாடல்களில் பிரஜாபதி மனிதகுலத்தின் முதல்குழந்தை என்ற பொருளில் வருகிறது. இப்படிச் சொல்லலாம், பிரஜாபதி என்பது வேதங்கள் உருவாக்கிக்கொண்ட ஒரு கவித்துவமான படிமம், ஓர் உருவகம். அதைப்பயன்படுத்தி அவர்கள் வெவ்வேறு வகையில் சிருஷ்டி என்பதை விளக்கமுயன்றார்கள். நவீன அறிவியல் அணு என்றோ குவாண்டம் என்றோ உருவகிப்பதைப்போல.

இன்றுகூட வேண்டுமென்றால் அந்த உருவகத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.முதல் பாக்டீரியா ஒரு பிரஜாபதி. முதல் முதலாக உருவான குளோனிங் ஆடு ஒரு பிரஜாபதி, அது பிற ஆடுகளை உருவாக்குமென்றால்.

வேதங்களில் பிறந்ததுமே ஃபாண் என அழும் பிரஜாபதியை நாம் காண்கிறோம். பிறந்ததுமே புசிக்க ஆரம்பிக்கும் பிரஜாபதியைப்பார்க்கிறோம். அவையெல்லாமே சிருஷ்டியின் குறியீடுகள். சில ரிக்வேதப்பாடல்கள் விதையையே பிரஜாபதி என்று உருவகிக்கின்றன.அது இறந்து இன்னொன்றை உருவாக்குகின்றது. ஒருவகையில் அது உயிர்த்தெழுகிறது. அந்த வரியைப் பிடித்துக்கொண்டு அது ஏசு உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது என்று சொல்ல முனைவதெல்லாம் அசட்டுத்தனம் அல்ல, இந்திய ஏழைகளின் அசட்டுத்தனம் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களின் அயோக்கியத்தனம்

வேதங்களில் ஈசா என்று வந்தால் அது ஏசுவைக் குறிக்கிறது என்றும் முகமது அல்லது நபி என்று மாற்றிக்கொள்ளத்தக்க ஒலி வந்தால் நபியைக்குறிக்கிறது என்றும் சமீபகாலமாக மேடைகளில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெய என்று வருவதெல்லாம் புரட்சித்தலைவியையும் கருணா என்று வருவதெல்லாம் தானைத்தலைவரையும் குறிக்கிறது, அவர்களின் வருகை வேதங்களால் முன்னறிவிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் மேடைப்பேச்சுகள் கேட்கும் நாள் தொலைவில் இல்லை. கஷ்டகாலத்துக்கு ஸ்டாலின் என்று எங்காவது இருக்கப்போகிறது என்றும் அச்சமாக இருக்கிறது

ஜெ



2013/5/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
May 29, 2013, 7:51:10 AM5/29/13
to panb...@googlegroups.com
"இப்படி இருக்கிறார்கள்"

நண்பர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய "இப்படி இருக்கிறார்கள்" கட்டுரையின் உதவியுடன் அதிக வெளிச்சத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அதிகச் சூட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என நான் அஞ்சுகிறேன்.

அவருடைய ஒரு கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை. "எழுத்தாளன் என்றால் என்ன, அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் [வெள்ளையர்கள், ஈழத் தமிழர்கள், மலயாளிகள், கன்னடர்கள்] ...தெரியும். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?"

எழுத்தாளன் என்பவன்/என்பவள் உயர்வானவர், உயர்குடிப் பிறப்பு, அசாதாரணமான அறிவு சிகாமணி, அவரிடம் சற்று விலகியே நிற்க வேண்டும், கவனமாகப் பேச வேண்டும், மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைப்பது ஒரு மேட்டுக்குடி (elitist) சிந்தனை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. முட்டாள்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள், அவர்களைக் கையாள்வது ஒரு கலை; ஒரு நல்ல எழுத்தாளர் இதை அவசியம் அறிந்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒருசில முட்டாள்கள் கையில் தான் அனுபவித்த வேதனைக்கு ஓர் ஒட்டு மொத்த இனத்தையேப் பழிப்பது தவறு.

ஆனால் அதே நேரம் நண்பர் ஜெமோ அவர்கள் சொல்லும் இன்னொரு கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. "வாசித்தவர்கள் , வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் மிகக் குறைவு. ஆனால் வாசிக்காதவருக்கு தான் ஒன்றும் வாசிப்பதில்லை என்ற விஷயம் கூடவா தெரியாது?

சொல்லப்போனால் இது ஒரு தமிழ்நாட்டுப் பொது மனநோய்."

இது மிகவும் உண்மை. சாதாரணத் தமிழர்களை விட்டுவிடுவோம். ஒரு கல்லூரிப் பேராசிரியரை இனி நீங்கள் சந்திக்கும்போது "நீங்கள் தற்போது என்னப் புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்றுக் கேளுங்கள். பதில் கேவலமானதாகவே இருக்கும்! ஆனால் நீட்டி முழக்குவதற்கு ஒன்றும் குறைவு இருக்காது. பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்குப் போகும்போது நான் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு. பலமுறை எனக்குக் கிடைத்த பதில்: "சிறுவர் மலர்".

இந்த நோய்க்கு வைத்தியம் பார்ப்பது மிக மிக முக்கியம். எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களும், களப் பணியாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பது நல்லது. ஜெயமோகனைத் தாக்குவதை விட்டுவிட்டு பிரச்சினையைத் தாக்குவோம். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறந்த, உயர்ந்த எழுத்தாளர்களில் ஒருவரான எனது அன்பிற்கினிய (ஆனால் கருத்து வேறுபாடுகள் கொண்ட) நண்பர் ஜெயமோகன் அவர்கள் தனது ஆளுமையை, அங்கீகாரத்தை, புகழை, திறமைகளை பயன்படுத்தி "தமிழக ஆசிரியர்/மாணவர் வாசிப்பு இயக்கம்" ஒன்றைத் துவங்கி முன்னின்று நடத்த வேண்டும் என்பது என்னுடைய அன்பான விண்ணப்பம். உங்கள் பின்னால் ஒரு படையாகத் திரள்கிறோம்.

வணக்கத்துடன்,
சுப. உதயகுமாரன்
இடிந்தகரை
மே 28, 2013

Asif Meeran AJ

unread,
May 29, 2013, 8:55:31 AM5/29/13
to பண்புடன்

நன்றி: http://www.nisaptham.com/2013/05/blog-post_29.html

இலக்கிய உலகின் பவர்ஸ்டார்கள்

‘உலகத்திலேயே என்னை அடிச்சுக்க ஆள் இல்லை என்று யாராவது பீற்றிக் கொள்வார்களா?’ - இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் அதைவிட முட்டாள்த்தனமான கேள்வி வேறு இருக்கவே முடியாது. நாம் பார்க்கிற ஆட்களில் தொண்ணூற்றைந்து சதவீத ஆட்கள் இப்படித்தானே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்- இதை எழுதிக் கொண்டிருப்பவன் உட்பட. 

புண்ணாக்கு, தவிடு, பருத்திக் கொட்டை விற்பவர்களிலிருந்து டிவியில் சாயந்திரம் ஆனால் முகம் காட்டுபவர்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் இப்படியே நினைத்துக் கொண்டிருந்தால் உலகம் என்னதான் ஆகும்? சத்தியமாகத் தெரியவில்லை. ஒரு நாள் இல்லாவிட்டாலும் இன்னொரு நாள் பூமாதேவி பெருமொத்தமாக வாயைத் திறந்து நம்மை எல்லாம் விழுங்கினால் தவிர இந்த கண்றாவிகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை போலிருக்கிறது.

‘ஒபாமாவைவிட சக்தி வாய்ந்த மனிதன் இருக்க முடியாது’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அமத்தா ‘அவன் யாரு ஒவாமா?’ என்று நோஸ்கட் விடுகிறார். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து வேட்டைகாரன்புதூர் வரைக்கும் அறுநூற்று சொச்சம் கோடி மக்களுக்கும் தெரிந்த ஒரு பெர்சனாலிட்டி இருக்க வாய்ப்பிருக்கிறதா? யேசுநாதரைக் கூட தெரியாத ஆட்கள் வாழும் இந்த உலகத்தில் எல்லோருக்கும் தெரிந்த ‘ஆல் இன் ஆல்’ அப்பாடக்கருக்கு வாய்ப்பே இல்லை. 

உலக அளவில் வேண்டாம். இந்திய அளவில்? அதுவும் சந்தேகம்தான். அமிதாப்பச்சனையோ அல்லது ஆமிர்கானையோ கூட எங்கள் ஊர் ஆட்களுக்குத் தெரிவதில்லை. ரூபாய் நோட்டில் இருக்கும் பொக்கை வாய் தாத்தாவைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் உலக அளவில் அல்லது இந்திய அளவில் என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். மாநில அளவில் அல்லது மாவட்ட அளவில் அத்தனை பேருக்கும் தெரிந்த ஆட்கள் இருக்கிறார்களா? வேண்டுமானால் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், ரஜினிகாந்தையும் சொல்லலாம். 

மற்றபடி ஜெயமோகனையும், நாஞ்சில்நாடனையும், மனுஷ்ய புத்திரனையும் மொத்தமாக எத்தனை பேருக்குத் தெரியும்? முப்பதாயிரம் பேருக்குத் தெரியுமா? அவர்கள் ஆசையை ஏன் கெடுப்பானேன்? அதிகபட்சமாக ஒரு லட்சம் பேருக்கு தெரியும் என்று வைத்துக் கொள்ளலாம். அதுவும் இந்த இண்டர்நெட்டும், ஃபேஸ்புக்கும், தனியார் சேனல்களும் வந்திருப்பதனால் தெரிந்து வைத்திருப்பார்கள். இல்லையென்றால் சிறுபத்திரிக்கைகள் வாசிக்கும் முந்நூற்று சொச்சம் பேர்களைத் தவிர்த்தால் இவர்களையெல்லாம் சீண்டுவதற்கு ஆளே இருந்திருக்க மாட்டார்கள்.

இந்த ரேஞ்சில் பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு ஒருவர் “என் முன்னால் பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது” என்று கேட்கிறார். இன்னொருவர் விகடன் பேட்டியில் “எனது ஃபேஸ்புக் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டை ரிஜக்ட் செய்யும் ஒருத்தன் இதுவரை பொறக்கலை. இனிமேலும் பொறப்பான்னு நினைக்கலை” என்கிறார். இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இந்த அகங்காரமும், ஆணவமும் வந்து அமர்ந்து கொள்கிறது என்று புரியவில்லை. 

சிங்கம் சிலுப்பிக்கிட்டு வருது, மீசையை முறுக்கிக்கிட்டு வருது அலம்பிக் கொண்டிருந்த ஜெயகாந்தனே கூட சென்ற ஆட்சியில் தன் மகனுக்கு அரசுப் பணி வாங்க குழைந்ததை பார்த்தவர்கள்தானே நாம்?

படைப்பு ரீதியாக இவர்கள் மீதெல்லாம் என் நம்பிக்கையும், மரியாதையும் எந்தவிதத்திலும் குறைந்ததில்லை. மனுஷ்ய புத்திரன்தான் எனது  ‘நவீன இலக்கியத்தின் நுழைவாயில்’ என்று சொல்லிக் கொள்வதிலும், என்னளவில் சமகால நவீன தமிழ் இலக்கியத்தில் ஜெயமோகன்தான் மிக முக்கியமான ஆளுமை என்பதிலும் எந்தக் காலத்திலும் மாறுதல் வரப் போவதில்லை. ஆனால் இவர்கள் தங்களுக்குத் தாங்களே பீடம் கட்டிக் கொள்வதையும், பிம்பம் அமைத்துக் கொள்வதையும்தான் பார்க்க சகிக்கவில்லை. 

அரசியல்வாதிக்கு போஸ்டர் அடிக்க சில அல்லக்கைகள் எப்பொழுதும் இருப்பார்கள். சினிமாக்காரனுக்கு பாலாபிஷேகம் செய்ய குடும்பத்தை அடமானம் வைத்த சில தறுதலைகள் உண்டு. ஆனால் இந்த எழுத்தாளர்களின் நிலைதான் பரிதாபம். அவர்களுக்கென அல்லக்கைகள் யாருமே இருப்பதில்லை. தமக்குத்தாமே பாலாபிஷேகம் செய்து கொள்வதாக மண்ணை வாரி தலையில் போட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. தனக்குத்தானே போஸ்டர் அடிப்பதாக நினைத்து அடுத்தவர்களுக்கான  ‘காமெடி பீஸாக’ தங்களை உருமாற்றம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அடுத்தவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ கவிஞர், காவியப்பேரரசு போன்ற பட்டங்களை சூட்டிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் தம்மை என்னவோ உலகை ரட்சிக்க வந்த பிதாமகனைப்போலவும் எதிரில் நிற்பவர்கள் அத்தனை பேரையும் பாவிகளாகவும் நினைத்து அடுத்தவர்களை கலாய்ப்பதைப் பார்ப்பதற்குதான் கூச்சமாக இருக்கிறது.

யாராவது மொக்கையர்கள் ஓவராக பேசும் போது கோபமே வரக்கூடாது என்று சொல்ல வரவில்லை. ஆனால்  ‘டேய்..நான் யார் தெரியுமா?என்கிட்டேயேவா?’ என்றெல்லாம் வெளிப்படையாக எழுதி தனக்கான ‘பில்ட் அப்’ஐ உருவாக்கிக் கொள்ள வேண்டியதில்லை என நினைக்கிறேன். கொஞ்ச காலத்திற்கு முன்பிலிருந்து இந்த் வேலையை சாரு நிவேதிதா செய்துவந்தார். ‘ஃபோன் செய்து என்னை டார்ச்சர் செய்யாதீர்கள்; மின்னஞ்சலில் மொன்னையான கேள்விகளை கேட்கிறார்கள்’ என்று டபாய்த்துக் கொண்டிருந்த போது ‘பவர் ஸ்டார் வகையறா போலிருக்கிறது’ என்று அவரிடமிருந்து ஒதுங்கிப் போனார்கள். இப்பொழுது என்னடாவென்றால் ஆளாளுக்கு பவர்ஸ்டார் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் இவர்களிடமெல்லாம்  ஏதாவது கேள்வி கேட்கலாம் அல்லது பேசலாம் என்று நினைப்பவன் கூட ‘இதைக் கேட்கலாமா? கூடாதா? இது நல்ல கேள்வியா? கெட்ட கேள்வியா’ என்ற குழம்பிப் போவான். எழுத்தாளர்கள் என்பவர்கள் உலகில் எழுதப்படும் ஒவ்வொரு வரியையும் வாசித்தவர்கள் என்று வாசகனை நம்பவைப்பதில் எழுத்தாளர்கள் அடையும் லாபம் என்ன? நல்ல வாசகர்கள் எழுத்தாளர்களை விடவும் அதிகம் வாசிக்கிறார்கள் என்பது தெரியாதா என்ன? 

நூறு புத்தகங்களை எழுதியதாலும், பல புத்தகங்களை வாசித்திருப்பதாலும் மட்டுமே விவசாயியை விடவோ, கட்டட வேலைக்காரனைவிடவோ எழுத்தாளன் எந்தவிதத்திலும் உயர்ந்தவன் இல்லை. அவர்கள் ‘உருப்படியாக’ செய்யும் வேலையில் பத்தில் ஒரு பங்கு கூட So called எழுத்தாளர்கள் செய்வதில்லை என்பதுதானே நிதர்சனம்? வாள் முனையைவிட பேனா முனை உயர்ந்தது போன்ற ‘பிட்டு’க்களை இந்தக்காலத்திலும் நம்ப வேண்டியதில்லை என்று அனைவருக்குமே தெரியும். பிறகு எதற்கு பொதுவெளியில் இத்தனை அல்டாப்புகள்?

தினம் தினம் டிவியில் வருவதால் தான் பாப்புலர் ஆகிவிட்டதாக நம்புவதைவிடவும் காமெடி வேறு எதுவும் இருக்க முடியுமா? ராமராஜன் அடையாத ‘ரீச்’சையா இந்த டிவிக்கள் கொடுத்துவிடுகின்றன? ஆனானப்பட்ட அவரையே சீட்டியடிக்க வைத்ததுதான் இந்தச் சமூகம். 

அத்தனை அழிச்சாட்டியங்களையும், அலட்டல்களையும் நிறுத்திவிட்டு எழுதுவதை மட்டுமே செய்து கொண்டிருந்தாலும் கூட எழுத்தாளர்களுக்கான ‘உண்மையான’மரியாதை இருந்து கொண்டிருக்கும். இதையெல்லாம் என்னைப் போன்ற பொடியன் சொல்ல வேண்டுமா என்ன? பெரியவர்களுக்கு தெரியாததா? என்னமோ செய்யுங்க!

நேற்று பெய்த மழையில் இன்னும் முளைக்கவே முளைக்காத என்னைப் போன்ற காளான்கள் போலியாக கட்டமைக்கப்படும் பிம்பங்களை பற்றி ஏதாவது பேசப் போக ‘புளிச்ச ஏப்பம் விடும் இணைய மொக்கைகள்’ போன்ற வசவுகளை வாங்கிக் கட்ட கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் நேற்றைய எனது பிரார்த்தனையோடு இன்றைய பத்தியை முடித்துக் கொள்கிறேன்.

Oh My God! வறட்சி, பஞ்சம், பட்டினி, பவர்கட், குற்றச்செயல்கள், வன்மம், அக்கிரமம், துரோகம், சூதாட்டம், ஐபிஎல் என சகலத்தையும் என் மக்களே சமாளித்துக் கொள்வார்கள். நீ அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால் தயவு செய்து இந்த எழுத்தாளர்களிடமிருந்து மட்டும் காப்பாற்றிவிடு!

ஸ் பெ

unread,
May 29, 2013, 9:12:18 AM5/29/13
to panbudan
ஊரில், எனது பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு இவர்களை கூட தெரியாது..
காமராசர் தெரியும், கை தெரியும் அப்புறம் சக்கரம், திருமேனி, யாமான் இன்னும்பிற.. :)

2013/5/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
வேண்டுமானால்  ஜெயலலிதாவையும், ரஜினிகாந்தையும் சொல்லலாம். 

ஸ் பெ

unread,
May 29, 2013, 9:13:31 AM5/29/13
to panbudan
அட இது விடுங்க.. இந்தியாவை கூட தெரியாம ஓட்டு பொடுறாருன்னா பாருங்களேன்..

# gappula லாரி வோட்டுறது :))


2013/5/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
May 29, 2013, 10:09:46 AM5/29/13
to panb...@googlegroups.com
சமீபத்தில் இவ்வளவு கலாசி ஒரு பதிவு நான் படிக்கல...
 
வாய்ப்பே இல்ல.... நன்றி அண்ணாச்சி... :) :)

2013/5/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>

இலக்கிய உலகின் பவர்ஸ்டார்கள்

தமிழ்ப் பயணி

unread,
May 29, 2013, 12:24:27 PM5/29/13
to பண்புடன்
அண்ணாச்சி வர வர ​கொஞ்சங்கூட மு​றையா ​செய்யறதில்​லே.. :)
ஒரு விசயத்​தை ​செய்யறதுன்னு ஆகிட்டா சரியா ​செய்யனும்... :) :)

ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு !

in இலக்கிய விமரிசனங்கள், கம்யூனிசக் கல்வி, பதிவுலகம் by வினவு, May 29, 2013

ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?


ஜெயமோகன்

சீமைச்சாராயத்திற்கும், அரவிந்த ‘சாமியின்’ ஆரோவில் ஆன்மீக மணத்திற்கும் புகழ் பெற்ற பாண்டிச்சேரியில் இருந்து நமது விசாரணையைத் துவங்க வேண்டியிருக்கிறது.

மலையாள சினிமா வேலையின் பொருட்டு பலநாட்களாக கேரளத்தில் இருக்கும் ஜெயமோகன் திருவனந்தபுரத்தில் விமானம் பிடித்து சென்னை வந்து, காரில் புதுச்சேரி செல்கிறார். அங்கே அவரது ‘வாசகர்’ சுனில் கிருஷ்ணனது திருமணம். அதில் பங்கேற்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் மற்றும் ஜெயமோகனது அபிமானிகள் ஒரு 25 பேரும் வருகின்றனர். ஜமா களை கட்டுகிறது.

முதலில் ஒன்றைச் சொல்லிவிடுவோம். ஜெயமோகனது ஊட்டி குருகுல கோடைக்கால முகாமிற்கு வருவதற்கே ஏகப்பட்ட கண்டிஷன்கள் உண்டு. அந்த நிபந்தனைகளை ஏற்றுச் செல்ல விரும்பும் அப்பிராணிகளின் நிலை குறித்து வினவிலும் விரிவாக எழுதியிருக்கிறோம். அது போல ஜெயமோகனது உள்வட்டத்தில் பங்கேற்றால்தான், நான்ஸ்டாப்பாக அவர் பேசும் (எல்லாம் ஏற்கனவே எழுதியவைதான்) கீறோபதேசத்தை (கீறோபதேசம் – கீறல் விழுந்த ரிக்கார்டு பிளேயர்) கேட்கும் பாக்கியம் உண்டு. சரி அண்ணனது உள்வட்டத்தில் பங்கேற்க என்ன தகுதி வேண்டும்?

ஒன்று அவர் எழுதிய ஏதாவதொன்றை படித்திருக்க வேண்டும். பிறகு அப்படி படித்ததை உள்ளொளி, தரிசனம், ஏகப்பட்ட திறப்பிற்கு காரணம் என்று எழுதியோ, பேசியோ அண்ணனது காதடியிலோ இல்லை கண்ணடியிலோ சமர்ப்பிக்க வேண்டும். அப்புறம் அண்ணன் அவற்றை இழுத்து இன்னும் கொஞ்சம் பேசி தீட்சை அளிப்பார். பிறகென்ன, அவரது வீட்டு நாயை கொஞ்சும் பாக்கியத்திலிருந்து அருகர் பாதையை அளந்து போகும் மகா பாக்கியம் வரை கண்டிப்பாக கிடைக்கும். ஆனாலும் கண்டிஷன்ஸ் அப்ளை உண்டு. அது, அன்னாரது கிச்சன் கேபினட்டில் நீடிக்க வேண்டுமென்றால் சாகும் வரை காதுகளையும், மூளையின் பதிவு நரம்புகளையும் பட்டா போட்டு எழுதிக்கொடுத்து விடவேண்டும். பொறுக்கமாட்டாமல், “போதும் தல ரொம்ப போரடிக்கிறது” மாதிரி ஏதாவது பேசிவிட்டால் விஷ்ணுபுரம் குருகுலத்திலிருந்து மெமோ இல்லாமலேயே நீங்கள் நீக்கப்படுவீர்கள்.

ஏன் வினவு, ஜிங்குச்சாதான் அண்ணனுக்கு பிடித்த இசை என்று ஒருவரியில் முடிப்பதை விட்டு இழுக்கிறீர்களே என்று கோபப்படாதீர்கள், இனி விசயத்திற்கு வருவோம்.

பாண்டிச்சேரி திருமண நாயகனான சுனில் கிருஷ்ணன் லேசுப்பட்ட ஆளல்ல. ‘அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் கவரப்பட்டு பிறகு அதற்கென்று ஒரு இணைய தளம் ஆரம்பித்து இன்று அதை காந்தியின் பெயரில், தமிழில் ஒரு முக்கிய இணைய தளமாக மாற்றி காந்தி குறித்த வார்த்தைகளை சலிப்பில்லாமல் ஏற்றி வருபவர். காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக பணிபுரிபவர்’. குடும்பமே ஆயுர்வேத பரம்பரைதானாம்.

அண்ணா ஹசாரேவை பார்க்க வரும் நகரத்து அம்பிகளை நம்பி அவரது மகாராஷ்டிரா ராலேகான்சித்தி கிராமத்தில் நாலைந்து டீக்கடை போட்டவர்களே திவாலான நிலையில் சுனிலின் விடாப்பிடியான போக்கு ஆச்சரியமானதுதான். அதுவும் அரவிந்த் கேஜ்ரிவாலை பார்ப்பேன், பார்க்க மாட்டேன், அவரது கட்சிக்கு வாக்கு கேட்பேன், கேட்கமாட்டேன் என்று காமடி கைப்புள்ளையாக டீம் அண்ணா பலூன் புஸ்ஸாகி விட்ட நிலையில் அவரையும், காந்தியையும் உலக அளவில் 18 இலட்சமாவது இணைய தள பிரபலத்துடன் நடத்துவது போற்றுதலுக்குரியது.

சுனில் திருமணம் குறித்த ஜெயமோகன் பதிவைப் படித்த போது சட்டென்று தோன்றியது, திருமணத்தின் புகைப்படங்களைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம். ஒரு ஆயுர்வேத மருத்துவர், காந்தியவாதி, ஜெமோவின் சீடர் எப்படி தோற்றமளிப்பார் என்று ஒரு எதிர்பார்ப்பு. ஆள் பாதியென்றால் ஆடை பாதியல்லவா! மடிசாரா, கச்சமா, வேட்டியா, காந்தி குல்லாயா, குர்தாவா, பைஜமாவா என்றெல்லாம் யூகித்தவாறு சுனிலைப் பார்த்தால்… ஐயோ என்ன கொடுமை இது, கிறித்தவ ஐரோப்பிய மையவாத காலனியாதிக்கத்தின் கொடையான சூட்டு, கோட்டு, டை, ஷூ (புகைப்படத்தில் ஷு இல்லையே என்று கேட்காதீர்கள், சூட்டு போட்டுவிட்டு ஹவாய் செருப்பு போடமாட்டார்கள் என்று நம்புவோம்) சகிதம் காட்சியளிக்கிறார்.

இவ்வளவுதானா காந்திய, ஆயுர்வேத, ஜெயமோகன, பாரத அபிமானம் என்று வெறுத்துப் போனது. சரி சரி, தலயே மங்காத்தாவில் “இன்னும் எவ்வளவு நாளைக்கு நல்லவனாகவே நடிப்பது” என்று வில்லனாக பொளந்து கட்டும் போது காந்தியெல்லாம் எம்மாத்திரம் என்று சமாதானம் செய்தபடி இந்த திருமணத்தின் சிறப்பு என்ன என்று கண்டுபிடிக்க முனைந்தேன்.

ரொம்ப நுண்ணுணர்வோடு, சலித்துப் பார்த்தாலும் இரண்டு சங்கதிகள்தான் கிடைத்தன. ஒன்று சுனிலுக்கு மணப்பெண்ணை பிடித்திருந்ததால் மகிழ்ச்சியுடன் காட்சியளித்தார். இரண்டு, தேங்காய் போட்ட தாம்பூலப்பையில் ஜெயமோகனது நூல் ஒன்றையும் அன்பளிப்பாக அனைவருக்கும் வழங்கியிருக்கிறார். பிறகு, இலவசமாக நூல் கொடுத்தால் படிப்பார்களா, பரணில் வைப்பார்களா என்றெல்லாம் ஜெயமோகனது தத்துவ விசாரணைகள்.

தீவிர கம்யூனிஸ்ட் எனும் காட்டானாக விதிக்கப்பட்டதனாலோ என்னவோ சாதி மறுப்புத் திருமணமா, வரதட்சணை இல்லையா, தாலி இல்லையா, சடங்கு சம்பிரதாயங்கள் இல்லையா அல்லது குறைச்சலா, எளிய முறையில் திருமணம் நடந்ததா என்று முன்முடிவுடன் தேடிப்பார்த்தால் எதுவும் எழுதப்படவில்லை. ஜெமோவைப் பொறுத்தவரை அவருடைய நூல் கொடுக்கப்பட்டதே மாபெரும் புரட்சிகர நடவடிக்கை. ஜெயமோகன் எந்த விசயத்தை பார்த்தாலும், கேட்டாலும், கலந்து கொண்டாலும் அதில் தனக்கு என்ன இடம் என்று மட்டும் பார்ப்பார் போலும். இந்தப் பார்வைதான் இனி வர இருக்கும் பிரச்சினைக்கு ஒரு முன்னோட்டம்.

என்ன பிரச்சினை? திருமணம் முடிந்த பிறகு புதுச்சேரியில் ஒரு நண்பரை சந்திக்க எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தேவதேவன் சகிதம் சென்றிருக்கிறார் அண்ணன் ஜெயமோகன். அந்த நண்பர் யார்? ஜெயமோகன் ஸ்டைலில் சொன்னால் வாசிப்பு, ஓவியம், இசை என்று நுண்ணுணர்வு மிக்கவர். இந்த நுண் இல்லாத பன்னுகளுக்கெல்லாம் அண்ணனது நட்பு வட்டத்தில் அனுமதி இல்லை என்பதை ஏற்கனவே பார்த்து விட்டோம்.

அந்த நுண்ணுணர்வு மிக்க நண்பரின் பக்கத்து வீட்டுக்காரர் ஒரு எழுபது வயது பெரியவர், புதுச்சேரியில் எழுந்தருளியிருக்கும் படைப்பாளிகளை சந்திக்க வேண்டும் என்று கேட்டு விரும்பி வந்திருக்கிறார். ஜெயமோகன் சொல்லியிருக்கும் விசயங்களின் படி பார்த்தால் அந்த பெரியவர் ஏதோ சில திமுக கூட்டங்களுக்கு, அதுவும் அண்ணாத்துரை காலத்தில் சென்று கேட்டவர், சில பல நூல்கள், சேதிகள் அறிந்தவர். முக்கியமாக தான் கற்றவற்றை கொட்டுவதற்கு மைக்கோ, ஆம்பிளிஃபயரோ, ஸ்பீக்கரோ குறைந்த பட்சம் ஃபேஸ்புக்கில் கணக்கோ கொண்டவரல்ல. எழுத்தாளர்கள் என்றதும் அவர்களிடம் தனது திறமையை பறைசாற்ற விரும்பியிருக்கிறார்.

ஜெயமோகன் புரிந்து கொண்ட விதப்படி சொன்னால் இந்தப் பெரியவர் சரக்கே இல்லாமல் பேசி பிளேடு போடக்கூடிய ஒரு மொக்கை. (டிஸ்கி: இதை எல்லாம் ஜெயமோகன் சொன்ன ஒருதரப்பான விவரங்கள் அடிப்படையில் மட்டும் பேசுகிறோம். உண்மையில் அந்த பெரியவர் தரப்பு வாதம் என்ன என்று கேட்டுப் பெறும் வாய்ப்பு நமக்கில்லை. அதனால் அந்தப் பெரியவர் மன்னிக்க வேண்டும். முக்கியமாக, இங்கு விவாதப் பொருள் அவர் அல்ல.)

இத்தகைய பிளேடு மொக்கைகள் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறார்கள் என்று பொதுவில் சொல்லலாம். எனினும் யார் மொக்கை, எது மொண்ணைத்தனம் என்ற அளவு கோல் வர்க்கத்திற்கேற்ப மாறுபடும். அண்ணன் ஜெயமோகனோ, இல்லை அண்ணன் அதியமானோ, ஏன் தம்பி வினவு கூட சமயத்தில் சிலருக்கு மொக்கையாகத் தோன்றலாம். இங்கே நாம் அது குறித்து ஆராயவில்லை.

அந்த பெரியவர் முதலில் நாஞ்சில் நாடனிடம் பிளேடு போடுகிறார். பொறுக்கமாட்டாமல் நாஞ்சில் முடித்துக் கொண்டு வெளியேறுகிறார். அப்போது உள்ளே வரும் ஜெயமோகன், அடக்கப்பட்ட கோபத்தை தணிப்பதற்காக தீர்த்தம் சாப்பிடப் போகும் நாஞ்சிலின் துயரார்ந்த முகத்தைப் பார்த்து சினம் கொள்கிறார். பெரியவர் வெற்றிகரமான தனது பிளேடை ஜெயமோகனிடமும் போடுகிறார். காஞ்சிக்கு என்ன அர்த்தம், தூங்குதலா, தொங்குதலா, வட்ட எழுத்து, பிராமி எழுத்து என்று ஏதேதோ கேட்கிறார். ஆரம்பத்தில் சட்டு பட்டென்று சரியான பதில் சொல்லும் ஜெயமோகன் இறுதியில் இது சரிப்பட்டு வராது என்று அறம் பாடுகிறார்.

எழுபது வயசிலும் மூளையை காலிசட்டியாக வைத்திருக்கும் முட்டாளே என்று வசைபாடி, எழுத்தாளர்களெல்லாம் எவ்வளவு படித்து எழுதியவர்கள் என்று வகுப்பெடுத்துவிட்டு, என்னையோ, நாஞ்சிலையோ ஒரு வரியாவது படித்திருக்கிறாயா என்று சீறிவிட்டு கற்றாய்ந்த சான்றோரை மதிக்கத் தெரியாத முண்டமே என்று விரட்டுகிறார்.

பிளேடுகளை எதிர் கொள்வது ஒரு கலை. ஒரு எளிய கிண்டல் மூலமோ, திசைதிருப்பல் மூலமோ அவர்களை சீண்டிவிட்டு நிறுத்தலாம். இல்லையென்றால் எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தப்பிக்கலாம். அதற்கெல்லாம் உலகோடு ஒட்ட ஒழுகும் யதார்த்தவாதியாக இருக்க வேண்டும். ஆனால் எப்போதும் டைட்டாகவே இருக்கும் ஜெயமோகன் இத்தகைய பிளேடுகளோடு உரசும்போது எளிதில் தீப்பற்றிக் கொள்கிறார். போகட்டும்.

இங்கே ஒரு மொக்கையிடம் ஜெயமோகன் கோபம் கொண்டது கூட பிரச்சினை இல்லை. அது ஒரு குறையுமில்லை. ஆனால் இந்த சம்பவத்தை விரிவாக எழுதியிருக்கும் ஜெயமோகன் தனக்கு அந்தப் பெரியவரால் நேர்ந்திருக்கும் அபகீர்த்தியின் பொருட்டு முழு தமிழகத்திற்கும் சாபம் விடுகிறார். எழுத்தாளனை மதிக்கத் தெரியாத, முட்டாள்தனம் நிரம்பி வழியும், அறிவை தெரிந்து கொள்ள விரும்பாத என்று உண்டு இல்லையென பிய்த்து விடுகிறார். இவர்கள்தான் தமிழ் இணையத்தையும் நிறைக்கிறார்கள் என்றும் சேர்க்கிறார். இங்குதான் நமக்கு ஒரு கேள்வி வருகிறது. பெரியவரது பிளேடாவது கொஞ்சம் எரிச்சலைத்தான் தருகிறது. ஜெயமோகனதுவோ உடலையே அறுத்து இரத்தம் வரவழைக்கிறது. எனில் எது ஆபத்தான பிளேடு?

ஏற்கனவே ஒரு முறை கேரளம் சென்ற ஜெயமோகன் ஒரு ஓட்டலுக்குச் சென்று அலட்சியமாக “எந்தா வேண்டே” என்று கேட்ட ஒரு பரிசாரகரை வைத்து முழு கேரளத்தின் அடிமைத்தனம், தாழ்வு மனப்பான்மை, அதற்கு காரணமான இடது சாரி வரலாறு, தொழிற்சங்க ஆதிக்கம் என்று பெரும் தத்துவ ஆய்வு செய்து படுத்தி எடுத்திருக்கிறார். அது குறித்து வினவில் வந்த கட்டுரையை படித்துப் பாருங்கள். இப்போதும அதுவே மீண்டும் நடக்கிறது. ஒரு மொக்கையிடம் கோபப்படும் ஜெயமோகன் முழு தமிழ்நாடும் மொக்கையே என்று சாபம் விடுகிறார். அதுவும், தான் ஒரு எழுத்தாளன் என்பதை வெள்ளைக்காரர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் மதிக்கிறார்கள், தமிழ்நாட்டில் அது சாத்தியமே இல்லை என்று தீர்ப்பளிக்கிறார்.

தனது அப்பாவின் சர்வாதிகாரத்தை வைத்து உலக சர்வாதிகாரிகளை ‘ஆய்வு’ செய்த சுந்தர ராமசாமியின் மாணவர் வேறு எப்படி பேசுவார்? எனில் ஜெயமோகனது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பாமரர்கள் அவருக்கு ஏதாவது குறைகளை அறிந்தோ அறியாமலோ செய்து விட்டால் அதன் விளைவுகளை முழு சமூகமும், மக்களும் சுமக்க வேண்டியிருக்கும். நாகர்கோவில் நகரசுத்தி தொழிலாளி என்றாவது ஒருநாள் ஜெமோவின் பார்வதிபுரத்து வீட்டின் குப்பையை எடுக்க மறந்துவிட்டார் என்றால் இந்த உலகை குப்பைக் கூளமாக்கி வரும் மனித குலத்தின் அழுக்கு சாரம் குறித்து ஒரு தத்துவவிசாரம் புகழ்பெற்ற அந்த கீபோர்டில் உதிப்பது உறுதி. குப்பை எடுக்குற அண்ணே, பாத்து குப்பையை எடுத்து நம்ம மக்களோட மானத்தை காப்பாத்துங்கண்ணே!

இனி நமது குறுக்கு விசாரணையை தொடங்குவோம்.

அந்த மொக்கை பெரியவரை அறிமுகப்படுத்திய ஜெமோவின் நுண்ணுணர்வு மிக்க புதுச்சேரி நண்பரை விசாரிப்போம். இவ்வளவு நுண்மாண் புலத்து அறிவார்ந்த நண்பர், எழுத்தாளர்கள் அந்த பிளேடு பெரியவரை சந்திக்க ஏன் அனுமதிக்கிறார்? உலகம் போற்றும் உத்தம எழுத்தாளரை கடித்துக் குதறும் அந்த அற்பத்தை அற்பமென்று ஏன் மதிப்பிடத் தெரியவில்லை? இதற்கு ஜெயமோகன் கூறும் சமாதானம், “இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள் மீது ஏறி அமர்ந்து காதைக் கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான்.” சரி இதுதான் உண்மையென்றால் ஜெயமோகனும் கூட அந்த அப்பாவியின் காதை ஏறிக்கடித்துதானே இமேஜை திணித்திருக்க வேண்டும்?

அல்லது, இவ்வளவு நாட்கள் அந்த நண்பர் ஜெமோவை வாசித்து எதையும் பெறவில்லை என்றாவது கூறவேண்டும். ஒரு மனிதன் நல்லதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெறும்போது அவன் ஏன் கெட்டதை கண்டுபிடிக்கவில்லை என்ற கேள்வி வருகிறதல்லவா? அந்த கெட்டதை மதிப்பிடும் அளவுக்குக் கூட அந்த நல்லது லாயக்கில்லை என்றால் அந்த நல்லதின் யோக்கியதை என்ன? நியாயமாக, அந்த மொக்கையிடம் இந்த எழுத்தாளர்களை தவிக்க விட்ட குற்றத்திற்காக அந்த நண்பரை விஷ்ணுபுரம் சிஐடி அரங்கசாமியை விட்டு விசாரித்து, குறைந்த பட்சம் மெமோவாவது கொடுத்திருக்க வேண்டுமே? சாரமாகச் சொன்னால் அந்த நண்பர் ஜெயமோகனையும் ரசிக்கிறார், அந்த பெரியவரையும் ரசிக்கிறார். இதையே “நான் பாலகுமாரனையும் ரசிப்பேன், ரமணி சந்திரனையும் ரசிப்பேன், ஜெயமோகனையும் ரசிப்பேன்” என்று ஒரே போடாக நம்ம ராம்ஜி யாஹூ போட்டதும் பின்னூட்டப் பெட்டி ஒரே புண்ணூட்டப் பெட்டியாகவிட்டது என்று அழுது கொண்டு அண்ணன் ஜெயமோகன் மறுமொழி ஜனநாயகத்தையே தூக்கவில்லையா?

ஆகவே அந்தப் பெரியவர் மொக்கை இல்லை என்று ஜெயமோகனது நுண்ணுணர்வு மிக்க நண்பரே கூறிவிட்டார். எனவே அந்த பெரியவரையும், தமிழர்களையும் கடித்துக் குதறுவதற்குப் பதில் நண்பரை திருத்தும் வேலையை பார்ப்பது சாலச்சிறந்தது. இப்படியெல்லாம் திருத்தப் புகுந்தால் விரைவிலேயே விஷ்ணுபுரம் வட்டம் என்பது ஜெயமோகானந்தா எனும் மூலவர் மட்டும் அனாதையாக அம்போவென உலாவரும் இடமாவது உறுதி.

அந்தப் பெரியவர் தன்னை சிறுமைப்படுத்தியதற்கு கூட ஜெயமோகன் கோபப்படவில்லையாம். முக்கியமாக நாஞ்சில் நாடனை வறுத்தெடுத்ததுதான் அவரது ஆத்திரத்தை அடக்கமாட்டாமல் பொங்க வைத்ததாம். அப்படி என்ன நடந்தது? அந்தப் பெரியவர் தலித்துக்களை பற்றி இழிவாக பேசினாராம். இது பொறுக்காமல் நாஞ்சில் நாடன் சிலவற்றை கடுமையாக பேசினாராம். இறுதியில் பெரியவர் “நீ என்ன சாதி” என்று நாஞ்சிலைக் கேட்க “அதைச் சொல்லும் உசிதமில்லை” என்று மறுத்து விட்டாராம். பிறகுதான் தீர்த்தம் அடித்து சினத்தை குறைக்க வெளியேறியிருக்கிறார்.

இங்கே ஒரு முற்போக்கு சென்டிமெண்ட் தந்திரம் உள்ளது. அதாவது தனது கோபம் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் அநீதியை எதிர்த்து எழும்பியிருக்கிறது என்று காட்டுகிறார் அண்ணன் ஜெமோ. பரவாயில்லை இந்துத்துவவாதிகள் இத்தனை ஆண்டுகள் கழித்து இத்தகைய நேயத்தை காட்டுகிறார்களே என்று மகிழ்ச்சி அடையாதீர்கள். கருவாடு எந்த காலத்திலும் மீனாகாது (உபயம் : காளிமுத்து), இதிலும் நிறைய உள்குத்து அடங்கியிருக்கிறது. முதலில் நாஞ்சில் நாடன் தனது நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் எனும் சாதியையோ அது தரும் சலுகைகளையோ துறந்தவர் அல்ல. இந்த சாதி பார்ப்பனியத்தின் கொடிய வழக்கங்களை இன்றும் பின்பற்றும் ஒரு ‘உயர்’ சாதி. இப்படி இருக்கையில் அந்தப் பெரியவர் கேட்கையில் சாதியை சொல்லாமல் விட்டது ஒன்றும் சாதி மறுப்புக் கொள்கையின் பாற்பட்டதல்ல.

முக்கியமாக தனது மகள் 600க்கு 596 (கட் ஆஃப்பா தெரியவில்லை) எடுத்தும், தான் பிறந்த சாதி காரணமாக அவளுக்கு மருத்துவர் படிப்பு கிடைக்கவில்லை என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார் நாஞ்சில் நாடன். பிறகு கவிஞர் அப்துல் ரகுமானைப் பார்த்து எழுத்தாளர் கோட்டாவில் (திமுக செல்வாக்கு) எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி கவிஞர் அப்துல் ரகுமான் ஒரு ஆண்மையுள்ள கவிஞர் என்ற வேறு முதுகு சொறிந்திருக்கிறார். இதை பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் அவரது தளத்தில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக அந்தக் கூட்டத்திற்கு போகாமல் இருந்திருந்தாலாவது நாஞ்சில் நாடனைப் பற்றிய மதிப்பு குறையாமல் இருந்திருக்கும் என்று வருத்தப்படுகிறார் கவிதா. நமது எழுத்தாளர்களுக்கும் அவர்களது புகழுக்கும் கவிதாவைப் போன்றவர்கள் பெருந்தன்மையுடன் அளித்து வரும் சலுகையைப் பாருங்கள்!

போகட்டும், நாஞ்சில்நாடன் சொல்லியிருக்கும் இந்த ‘உயர்’ சாதியில் பிறந்ததால் எங்களுக்கு ஒன்றுமே இல்லை எனும் ஒப்பாரி உண்மையில் தாழ்த்தப்பட்ட மற்றும் சூத்திர மக்கள் மீதான சாதி ஆதிக்க வன்மமாகும். நாஞ்சில்நாடன் மகளுக்கு மருத்துவர் சீட்டுதான் கிடைக்கவில்லை. அதுவும் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து கிடைத்து விடுகிறது. ஆனால் சேலம் கட்டியநாயக்கன்பட்டியிலுள்ள தாழ்த்தப்பட்ட சிறுமி தனத்திற்கு பள்ளியில் குடிநீரே கிடைக்கவில்லை. ஆதிக்க சாதியினர் குடிக்கும் பானையில் மொண்டு குடித்தாள் என்று ஆசிரியரால் தாக்கப்பட்டு கண் போகும் நிலையில் இருந்தாள் தனம். அந்த நேரம் அந்த கிராமத்திற்கு சென்று செய்தி சேகரித்திருக்கிறேன். இன்று தனம் ஏதோ விவசாய வேலை செய்து கொண்டு குடும்பத்துடன் வாழ்கிறாள். நாஞ்சில் நாடன் மகள் டாக்டராகி மருத்துவம் பார்க்கிறாள். தாழ்த்தப்பட்ட மக்கள் பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் விரட்டப்படுகிறார்கள். நாஞ்சில் நாட்டு வேளாளர்கள், மருத்துவம் மறுக்கப்பட்டால் கணினி படித்து அமெரிக்கா சென்றுவிடுகிறார்கள். இதுதான் உண்மை.

ஆக தாழ்த்தப்பட்ட மக்களை இட ஒதுக்கீட்டின் பெயரில் இழிவுபடுத்தியது அந்த பெரியவர் மட்டுமல்ல, நாஞ்சில் நாடனும் கூடத்தான். இப்பேற்பட்ட மனிதன் மீது ஜெயமோகன் கொண்டிருக்கும் அபிமானத்தின் தரம் என்ன என்பது இப்போதாவது புரிகிறதல்லவா? சாதி மத பிற்போக்குத் தனங்களோடுதான் இவர்கள் வாழ்கிறார்கள்.

ஏதோ நாஞ்சில் நாடன் மட்டும்தான் பார்க்கவேண்டியவர்களை பார்த்து முதுகு சொறியவேண்டியவர்களை சொறிந்து காரியம் சாதித்துக் கொள்கிறவர் என்று நினைத்துவிடாதீர்கள். அநேக சிறுபத்திரிகை எழுத்தாளர்களும் அப்படித்தான். ஜெயமோகனது மலேசியா, ஆஸ்திரேலியா பயணங்களுக்கு புரவலர்கள் யார் அவர்களது பின்னணி என்ன என்று பார்த்தாலும் அது நிரூபணமாகிறது.

முள்ளிவாய்க்கால் போர் நடந்து கொண்டிருக்கும் போது ஈழத்தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட நாட்களில் ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டைப் பற்றி உருகி மருகி தொடரே எழுதியிருக்கிறார் ஜெயமோகன். அவரை வரவேற்று உபசரித்த டாக்டர் நோயல் நடேசன் எனும் ஈழத்தமிழர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர், போருக்கு பிந்தைய வன்னி முகாம்களைப் பார்த்து விட்டு அவை உலகத்தரத்தில் இருப்பதாக பாராட்டியவர் என்று இனியொரு தளத்தில் அசோக் யோகன் என்பவர் எழுதியிருக்கிறார்.

ஜெயமோகன் அளவுப்படி ஒருவர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளராக இருப்பது குற்றமில்லை, அவர் விஷ்ணுபுரத்தை படித்திருக்கிறாரா என்பதுதான் முக்கியமானது. மலேசியாவில் ஒருவர் ஊழல் செய்திருக்கிறாரா என்பது பிரச்சினையல்ல, அவர் அறம் கதைகளை கொண்டாடுகிறாரா என்பதுதான் அளவுகோல். எனில் ஜெயமோகனது அறம் எது, அதன் தரம் என்ன என்பதை வாசகரே முடிவு செய்து கொள்ளலாம்.

இதே பெரியவரை பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்தித்திருந்தால் அறைந்திருப்பேன் என்று எழுதும் ஜெயமோகன் இன்று நிறையவே பக்குவம் அடைந்துவிட்டதாக கூறுகிறார்.

இறுதியாக “அவரது அசட்டுத்தனத்தை ஒருபோதும் அவர் புரிந்து கொள்ள மாட்டார். அறிவுத்துறை என்று ஒன்று உண்டு, அதில் எதையாவது அறிவதனூடாகவே நுழைய முடியும் என்ற எளிய உண்மையை ஒரு சராசரித் தமிழனுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. அவனுடைய அசட்டுத் தன்னம்பிக்கை அவனை கவசமாக நின்று காக்கும். அதற்குள் நின்றபடி அவன் எவரைப்பற்றியும் கருத்து சொல்வான். எவரையும் கிண்டலடிப்பான். ஆலோசனைகளும் மாற்றுக்கருத்துக்களும் தெரிவிப்பான். இணையத்தில் இந்த ஆசாமியைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் உலவிக்கொண்டிருக்கிறார்கள்…. ஒரு வெள்ளையரிடம், ஈழத்தமிழரிடம் , மலையாளியிடம், கன்னடனிடம் என்னை எழுத்தாளன் என அறிமுகம் செய்து கொள்ள எனக்கு தயக்கமில்லை. ஆனால் ஒருபோதும் தமிழகத் தமிழரிடம் அப்படி என்னை முன்வைக்கும் தைரியம் வருவதில்லை. ஏனென்றால் எழுத்தாளன் என்றால் என்ன, அவனிடம் எதைப்பேசலாம், எதைப் பேசக்கூடாதென்று அவர்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?” என்று முடிக்கிறார்.

jeyamohan-ooty

மேற்கண்ட தத்துவ முத்துக்கள் எதுவும் புதியவை அல்ல. காலஞ்சென்ற சுந்தரராமசாமியிலிருந்து, “நானெல்லாம் ஷிட்னி ஷெல்டனோடு காபி சாப்பிட வேண்டிய ஆள், ஃபூக்கோ, தெரிதாவோடு ரெமிமார்ட்டின் அருந்த வேண்டிய ஆள், இங்கே வேறுவழியின்றி தமிழ் சுண்டக்கஞ்சியை குடிக்கிறேன்” என்று புலம்பும் சாருநிவேதிதா வரை அனேக சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் கூறிவரும் அரதப்பழசான கருத்து. புலவனை மதிக்கத்தெரியாத மன்னன், ஊர், மக்கள் என்று இந்த அறிவு மற்றும் கோமாளித்தனமான மேட்டிமைத்தனம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவும் உண்டு. ஓரளவு ஜனநாயகத்திற்கு பழக்கப்பட்ட மேற்குலகில் இத்தகைய அசட்டுத்தனங்கள் தற்போது குறைந்திருக்கலாம். அடிமைகள் அதிகம் வாழும் நம்மைப்போன்ற ஏழை நாடுகளில் அதுவும் அறிவை சாதிரீதியாக பிரித்து வைத்திருக்கும் பார்ப்பனியத்தின் மண்ணில் இந்த அறிவுப் பணக்காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.

லீனா மணிமேகலையின் கவிதை குறித்து எழுதப்பட்ட வினவு கட்டுரைக்கு நள்ளிரவில் அழைத்து ஒருமையில் திட்டிய கவிஞர் செல்மா பிரியதர்ஷன் திரும்பத் திரும்பக் கேட்ட கேள்வி, “உனக்கு கவிதை, இலக்கியம் குறித்து என்ன தெரியும்? லீனா மணிமேகலையின் கவிதை குறித்து விமரிசிக்க நீ யார்?”

இதையே சினிமா குறித்து உனக்கு என்ன தெரியும், ஓவியம் குறித்து என்ன தெரியும் என்று பலமுறை வேறு வேறு தருணங்களில் கேட்டிருக்கிறேன். இவை குறித்து நாம் ஏதும் விமரிசித்தால் அந்த விமரிசனத்திற்கு பதில் தராமல் கேள்வி கேட்பவனது தரம் என்ன என்று கேட்கிறார்கள் இந்த அறிவாளிகள். ஒரு படைப்பு குறித்து வரும் விமர்சனங்களை பரிசீலிக்கும் ஜனநாயகம் இவர்களிடம் இல்லை. மாறாக, விமர்சனம் எழுதுபவனின் தரம் என்ன, அவனுக்கு என்ன உரிமை உள்ளது என்று மறுக்கும் பாசிசத்தையே முன் வைக்கிறார்கள். இதற்கு அந்த காலத்து பார்ப்பனீயம் முதல் இந்தக் காலத்து சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் வரை விதிவிலக்கல்ல.

உண்மையில், இந்தத் தமிழ் எழுத்தாளர்கள் எதிர்பார்ப்பது அவர்களது நூல்களைப்படித்து விட்டு மானே, தேனே என்று ஜால்ரா போடுவதை மட்டும். மீறினால் பாய்ந்து குதறி எடுத்துவிடுகிறார்கள்.

அந்தப் பெரியவர், குறிப்பிட்ட துறை சார்ந்து முழுமையாக வாசிக்காமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு ஆட்டம் போடுகிறார் என்று ஜெயமோகன் கோபப்படுகிறாரே அதே போல மற்ற துறை சார்ந்தவர்களுக்கும் ஜெயமோகன் மீது வரலாம் இல்லையா?

ஏன் இந்த வரலாம்? இதோ ஆதாரம். காரல் மார்க்ஸ் ஒரு காட்டுமிராண்டி, மனைவியையும், மகளையும் வெறி கொண்டு அடிப்பவர், இதனாலேயே அவரை காட்டுமிராண்டியெனும் பொருள் கொண்ட மூர் என்ற வார்த்தையால் அழைப்பார்கள் என்று ஜெயமோகன் ஒரு முறை எழுதியிருந்தார். முதலில் இது ஜெயமோகனது சொந்த சரக்கு அல்ல. மார்க்சியத்தை பற்றி பில்லியன் கணக்கில் இருக்கும் மேற்குலக அவதூறுகளை, அதுவும் அரவிந்தன் நீலகண்டன் போன்ற அற்பங்கள் எடுத்துக் கொடுத்ததை காப்பி பேஸ்ட் செய்கிறார். சொந்த முறையில் தெரிந்து கொண்டு எழுதும் எவரும் இத்தகைய அசட்டுத்தனங்களை செய்வதில்லை.

ஐரோப்பாவில் குறிப்பாக ஸ்பெயினில் சில நூற்றாண்டுகள் இசுலாமியரது ஆட்சி நடக்கிறது. அங்கே கற்றறிந்த சான்றோர்களை மூர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இப்படித்தான் ஐரோப்பிய இலக்கிய வட்டாரங்களின் அறிஞர்களை குறிக்கும் சொல்லாக மூர் நுழைகிறது. அதன்படி கார்ல் மார்க்ஸ் நட்பு வட்டாரத்தில் அவரை மூர் என்று செல்லமாக அழைப்பார்கள். இப்படித்தான் மார்க்சின் மகள்கள் மட்டுமில்லை, எங்கெல்சும் கூட மூர் என்று அன்போடு அழைத்து பல கடிதங்களில் எழுதியிருக்கிறார்.

இதுதான் ஜெயமோகனது ஆய்வுத் திறம் என்றால், அந்த புதுச்சேரி பெரியவர் மட்டும் என்ன பாவம் செய்தார்?

வேறு எதனையும் விட உண்மையான கம்யூனிச அறிவே தனது (மேட்டிமைத்தனமான) ஆன்மாவை குறி வைத்து அடிக்கிறது என்பதால் ஜெயமோகன் மார்க்சியம் குறித்து மிக மிக வெறுப்புணர்வை சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த வெறுப்புதான் இத்தகைய அற்பத்தனங்களை எழுத வைக்கிறது; அறிவால் எதிர்கொள்ள முடியாத போது இத்தகைய பூச்சாண்டிகளை வைத்து சமாதானம் அடைகிறது. கம்யூனிசம் குறித்த ஜெயமோகனது உளறல்கள் இந்த ரகம். எனினும் இதற்காக நாங்கள் அவரை என்றைக்காவது அடித்திருக்கிறோமா, இல்லை டேய் முட்டாளே ஒரு புக்கு ஒழுங்கா படிச்சிருப்பியாடா, எடத்தை காலிபண்ணு என்றுதான் வசைபாடியிருக்கிறோமா? இல்லையே. சகித்துக் கொண்டு மரியாதையாகத்தானே எழுதுகிறோம்?

அதே போல அரசியல், மார்க்சியம் தவிர பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள் கூட ஜெயமோகனைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம். இதில் ஜெயமோகனுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்று பார்த்தால் அங்கே நார்சிசம் ஒளிந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது.

காரல் மார்க்ஸை மூர் என்று காட்டுமிராண்டித்தனமாக அழைத்து சுயஇன்பம் காணும் ஜெயமோகன், கைலாயம் சென்ற மூப்பனாரை மிகவும் நுட்பமான ரசனை உடையவர், அரசியல்வாதிகளில் ஒரு மாணிக்கம் என்றெல்லாம் சிவசங்கரி ரேஞ்சுக்கு வெண்பாவே பாடியிருக்கிறார். உண்மையில் மூப்பனாரின் ரசனை அல்லது பொறுக்கித்தனத்தின் யோக்கியதையை கோடம்பாக்கத்திலும், அவரது பண்ணையார்தனத்தை தஞ்சாவூரிலும் விசாரித்துப் பார்த்தால் தெரியவரும். எனினும் நம்மைப் போன்ற பாமரர்கள் மூப்பனார் குறித்து கொண்டிருக்கும் அறிவை விட ஜெயமோகனது மேம்பட்டது என்று ஒத்துக் கொள்ள வேண்டுமாம்.

உண்மையில் அறிவு தொடர்பாக மற்றவர்களிடம் பேசுவதும், அல்லது புரிய வைப்பது, ரசிக்க வைப்பது, கற்றுக் கொடுக்க வைப்பதும், இவையெல்லாம் கூட வர்க்க கண்ணோட்டத்திற்கேற்ப மாறுபடுகிறது. சிறு பத்திரிகை எழுத்தாளர்களும், கம்யூனிஸ்டுகளும் இதில் பாரிய அளவில் முரண்படுகிறார்கள்.

“மக்களிடம் இருந்து கற்றுக் கொண்டு கற்பிக்கவும் செய்ய வேண்டும்” என்றார் மாவோ. காரணம் கம்யூனிஸ்டுகளின் சமூகம் குறித்த அறிவு நடைமுறையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதால் அது வெற்றியடைய வேண்டுமென்றால் மக்களால் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் அதை மீளாய்வு செய்து கொள்ளும் கடமையும் அவர்களுக்கு இருக்கிறது. இதுதான் கற்பது, கற்பிப்பது என்று செயல்படுகிறது.

ஒரு சிறுபத்திரிகையாளனோ தனது அறிவு ரசிக்கப்பட வேண்டும் என்று மட்டும் விரும்புகிறான். மற்றவர்களை எப்படி ரசிக்க வைக்க முடியும், அதற்கான திறமை எது என தேடிப்பிடித்து கற்கிறான். பிறகு தன்னை ரசிப்பது எப்படி என்று பாடமும் எடுக்கிறான். அப்படியும் வரவேற்பு இல்லையென்றால் இந்த நாட்டின் ரசனை சரியில்லை, மட்டரகமான சமூகம், என்று இறுதியில் கோபம் கொள்கிறான். ஒருவேளை தன்னை ரசிப்பவன் பாபு பஜ்ரங்கி (குஜராத் இந்துமதவெறியன்) போன்ற பச்சைக் கொலைகாரனாகவோ, இல்லை பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற சுரண்டல் முதலாளியாகவோ இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களது சமூகக் குற்றத்தை கண்டு கொள்ளாமல் விடுகிறான். அவர்கள் காசில் சுற்றுலாவும் போகிறான். விருதும் வாங்கிக் கொள்கிறான். இதுதான் காலம் தோறும் புலவர் மரபினர் செய்து வரும் பிழைப்பு வாதம்.

ஒரு நாட்டின் தரம் அதாவது மக்களின் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டம் தற்போது பின்னடைவு கண்டிருக்கிறது என்பதற்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்? ஈழத்தின் போராட்டம் குறித்தோ அதன் பின்னடைவு குறித்தோ ஒருவர் கதை எழுதலாம். ஆனால், அப்படி கதை எழுதுவதின் ஊடாக ஈழப் போராட்டம் வளர்ந்து விடாது. அல்லது ஈழத் தமிழரின் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. அரசியல், சமூகப் போராட்டங்களின் தரம், மக்கள் எந்த அரசியலின் கீழ் எந்த அளவு அணிதிரட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது தீர்மானிக்கப்படுகிறது. சரி, அரசியலுக்கு இது பொருந்துமென்றால் பண்பாடு குறித்த அறிவுக்கு எழுத்தாளர்கள் தேவைதானே என்று கேட்கலாம்.

இல்லை, இங்கேயும் அது நிபந்தனை அல்ல என்கிறோம். தமிழகத்தில் சுந்தர ராமசாமியோ இல்லை நாஞ்சில் நாடனோ இல்லை ஜெயமோகனே கூட பிறக்கவில்லை என்றால் இங்கே ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அவர்கள் இல்லை என்பதால் இங்கே இப்போது மக்கள் செய்து கொண்டிருப்பதெல்லாம் ஒன்றும் மாறிவிடாது. இல்லை என்றால் இத்தகைய எழுத்தாளர்கள் தமிழக பண்பாட்டுச் சூழலில் என்ன மாற்றத்தை எங்கே யாரால் என்னவிதமாக மாற்றினார்கள் என்று விளக்க வேண்டும். மாறாக, நாங்கள் இல்லை என்றால் மக்கள் காய்ந்து போய் கதறுவார்கள் என்று உளறக்கூடாது. நாங்கள்தான் தாம்பூலப் பையில் இலவசமாக புக் போடும் பழக்கத்தை கொண்டு வந்தோம் என்று கூட சொல்ல முடியாது. இவையெல்லாம் திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றோ சாதித்தவை. குறிப்பாக தற்போதைய புரட்சிகர திருமணங்களில் பரிசுப் பொருட்கள் என்பதே புத்தகங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலை வந்து விட்டது.

பண்பாட்டு அறிவு என்பது சமூகம் கூட்டுத்துவமாக இருந்தால் மட்டுமே இருப்பும், முன்னேற்றமும் சாத்தியம் என்பதை பண்படுத்தும் நோக்கில் வளரும், விரியும் தன்மை கொண்டது. அது அரசியல், பொருளாதார போராட்டங்களிலிருந்தே வலிமை பெறுகிறது. பண்பாடு என்பது ஓய்வுநேரத்தில் ஒயினை பருகியவாறு கம்ப ராமாயணத்தையோ இல்லை விஷ்ணுபுராணத்தையோ இல்லை ஜீனத் அமனையோ ரசிப்பது அல்ல. இவையெல்லாம், துண்டிக்கப்பட்ட இயக்க நிலையிலிருந்து கற்பித்துக் கொண்ட மயக்கங்களை வைத்து, சுய இன்பம் அடையும் மூளையின் மூடுண்ட நிலை. அந்த நிலையிலிருந்து, திட்டமிடப்பட்ட படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு தரும் புதிரின் அளவுக்குத்தான் ரசிக்க முடியும். பிறகு அந்த புதிர் உடைபடும் போது ரசனை மாறிவிடும்.

அல்லது ஒரு நூல் அல்லது கதை அல்லது கவிதையை வைத்து பண்பாட்டின் வேர் வளருவதில்லை. சரியாகச் சொன்னால் அப்படி வளரும் வேரைத்தான் ஒரு இலக்கியம் பிரதிபலிக்குமே அன்றி தன்னளவில் அவற்றிற்கு அப்படி ஒரு சக்தி கிடையாது.

இன்னும் எளிமையாகச் சொன்னால் தமிழ்நாட்டில் சாதி வெறி, மதவெறி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், வர்க்க சுரண்டல், இவற்றினை எதிர்த்து நாம் எப்படி மாறியிருக்கிறோம் அல்லது மாறவில்லை என்பதுதான் நமது பண்பாடு குறித்த தரமே அன்றி தமிழகம் எழுத்தாளர்களை மதிக்கவில்லை என்பதல்ல. அதனால்தான் மார்க்சியமோ அல்லது பெரியார், அம்பேத்காரோ ஒரு சில தனி மூளைகள் தவம் செய்து சூப்பர் பவரால் தோற்றுவிக்கப்படவில்லை. குறிப்பிட்ட வரலாற்றுக் காலம் தோற்றுவிக்கும் சமூக உந்து நிலையிலிருந்து அவர்கள் தவிர்க்க முடியாமல் பிறக்கிறார்கள். அனைத்திற்கும் அடிநாதமான அரசியல் வாழ்க்கையின் விதியே இதுதான் எனும் போது அதன் செல்வாக்கில் இருக்கும் இலக்கியம் மட்டும் விதிவிலக்கல்ல.

இதனால் இலக்கியம் இன்னபிற அறிவுத்துறைகளை குறைத்து மதிப்பிடுவதாக பொருள் இல்லை. அல்லது அனைவரும் இவற்றை புறந்தள்ளி வாழவேண்டும் என்றும் பொருள் அல்ல. அறிவு சார்ந்து கிடைக்கும் எதனையும் படிக்க வேண்டும், அப்படி படிக்க முடியாத படி முதலாளித்துவத்தின் பாப்கார்ன் தலைமுறையாக நாம் மாற்றப்படுகிறோம் என்பதே நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை. ஆனால் ஒரு நாட்டுமக்களது அரசியல் போராட்டத்தின் வீச்சோடுதான் இத்தகைய அறிவு வாசிப்பு வளருவதோ, பலனளிப்பதோ இருக்குமே அன்றி வாசிப்பே முதல் நிபந்தனை அல்ல.

முகநூலில் பலரும் ஜெயமோகனது அகங்காரத்தை அழகாகவும், நுட்பமாகவும் கண்டித்திருக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல ஒரு சமூகத்தில் டீ மாஸ்டர், நகர சுத்தித் தொழிலாளி, தச்சுத் தொழிலாளி போல எழுத்தாளனும் ஒரு அங்கம். அங்கங்களில் உயர்வு தாழ்வு காண்பது பார்ப்பனியம் மட்டுமே உருவாக்கியிருக்கும் வர்ண பேதம். சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் இன்னமும் அப்படித்தான் பார்ப்பனியத்தின் செல்வாக்கில்தான் கட்டுண்டு கிடக்கிறார்கள். அதனால்தான் ஜெயமோகனது சூப்பர் ஈகோ எழுத்தாளர் நிலையை எளியவர்கள் மறுக்கும்போது இந்துத்துவ வெறியர்களான ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் களத்திற்கு வருகின்றனர்.

இப்படி இணையம் முழுவதும் நமது செல்வாக்கு குறைவாக இருக்கிறது என்பதே ஜெயமோகனது ஆத்திரத்திற்கு காரணம். இப்படி பலரும் கேள்வி கேட்பது, விமரிசிப்பது எல்லாம் அடிமைத்தனம் விதிக்கப்பட்டிருக்கும் நமது சமூகத்தில் ஜனநாயகம் வளர வழிவகுக்கும் என்ற எளிய பாடம் கூட அவருக்குத் தெரியவில்லை. இதனால் இணையத்திலோ இல்லை சமூகத்திலோ மொக்கைகள் இல்லை என்று கூறவில்லை. ஆனால் படிப்பு, ஆர்வம், அரசியல் அனைத்தும் அனைவரிடமும் இப்படி மொக்கையாகத்தான் ஆரம்பிக்கின்றன என்பதால் இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போகும் ஒரு நிலை. சமூகத்தை மாற்ற விரும்பவர்கள் இதை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

மொக்கைகள் கூட பரவாயில்லை. ஜெயமோகனது எழுத்தை படித்து விட்டு வாழ்க்கைப் பிரச்சினை குறித்து கிரிமினல்கள் அருளுரை கேட்டால் கூட அவர் மறுப்பதில்லை. திமுகவிலோ, இல்லை அதிமுகவிலோ முப்பது வயது வரை தீவிரமாக செயல்பட்ட ஒருவர் அதைத் துறந்து ஆன்மீகம், ஜோசியம் என்று மாறி, பிறகு தொழில் செய்து சம்பாதித்து குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்து விட்டு தற்போது புதிய தலைமுறை – எஸ்ஆர்எம் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியில் மாநிலப் பொறுப்பில் இருந்து கொண்டு மாத ஊதியத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறார்.

இதையெல்லாம் குறிப்பிட்டு விட்டு வாழ்க்கையில் நான் எதை இழந்தேன் என்ற குழப்பம் அவருக்கு வருகிறது. இதனால் தன்னை அருச்சுனனாகவும் ஜெமோவை கிருஷ்ணாகவும் நினைத்து கீதை கேட்கிறார். ஜெமோவும் வாழ்க்கையென்றால் இப்படித்தான், இங்கே ஒற்றைப்படையான நோக்கம் கொண்டு ஒருவர் வாழ்ந்து விளைவை தேட முடியாது, அது இது என்று அடித்து விடுகிறார். ஜெயமோகன் என்ன கூறினார் என்பது பிரச்சினையில்லை. ஒரு கிரிமினலை எப்படிப் பார்க்கிறார் என்பதுதான் முக்கியமானது.

திமுக, அதிமுக போன்ற ஆளும் வர்க்க கட்சிகளில் குறிப்பிட்ட பொறுப்புகளில் இருக்கும் ஒருவன் நிச்சயம் பிழைப்புவாதியாகத்தான் இருப்பான். அதனால்தான் நடுத்தர வர்க்கத்தின் ஆயுட்கால சேமிப்பை பிடுங்கிக் கொண்டு கல்லூரியும், கட்சியும் நடத்தும் பச்சமுத்துவின் கட்சியில் வெட்கம் கெட்டு இருக்கிறான். இடையில் ஜோசியம் எனும் உலக மகா ஃபிராடு தொழிலிலும் ஈடுபடுகிறான். இத்தகைய அப்பட்டமான சந்தர்ப்பவாதிக்கு வந்திருக்கும் குழப்பம் என்னவாக இருக்கும்? மற்றவனெல்லாம் மாளிகை, இனோவா, ரியல் எஸ்டேட் என்று பிச்சு உதறும் போது எனக்கு ஏன் அவை கிடைக்கவில்லை என்பதுதான்.

ஆயுசு முழுக்க உழைத்துப் பிழைக்கும் மக்கள் வாழும் நாட்டில் இத்தகைய ஒட்டுண்ணிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும். ஆனால், அந்த கிரிமினலை அரவணைத்து உச்சி முகர்ந்து ஆறுதல் சொல்கிறார் ஜெயமோகன். இதுதான் ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் உருவாக்கியிருக்கும் அறிவார்ந்த சமூகத்தின் லட்சணம்.

எங்களைப் போன்ற ‘பாமர’ கம்யூனிஸ்டுகள் சேர்ந்து இயங்கும் சமூகமும், மனிதர்களும் எப்படி இருப்பார்கள்?

மே 19 அன்று எங்களுக்கு வந்த மின்னஞ்சலை பெயரை தவிர்த்து இங்கே தருகிறோம்.

“வினவு தோழர்களுக்கு வணக்கம்,

கடந்த மூன்று வருடங்களாக தங்களின் தளத்தை படித்து வருகிறேன். பிற்போக்கான நிலையில் இருந்த என் சிந்தனையை மாற்றி அமைத்ததில் தங்களின் தளத்திற்க்கு பெரும் பங்கு உண்டு. அரசியல் தளத்தில் மட்டுமல்லாது பண்பாட்டு தளத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சிந்தனை மாற்றம் ஏட்டுச்சுரைக்காயாய் இல்லாமல், பெளதீக மாற்றமும் பெற்றது. ஆம், வரும் ______(தேதியில்) எனக்கு திருமணம். சாதி சடங்குகள் எதுவுமின்றி எளிமையான முறையில், தங்கள் அமைப்புத் தோழர் ஒருவரின் மகளுடன் திருமணம் நடைபெறவிருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன் எனக்கு இம்மாதிரியான திருமணம் நடைபெறும் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் சிரித்திருப்பேன். இன்று இத்திருமணம் என் வாழ்வில் நடைபெறவிருப்பதிற்கு தங்களின் தளத்திற்ககும் ஒரு மிகமுக்கிய பங்குண்டு. இத்துடன் திருமண அழைப்பிதழை இணைத்துள்ளேன். என் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு வினவு தோழர்களை அன்புடன் அழைக்கிறேன்.”

கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.
______________________________________________________
பின்குறிப்பு : தலைப்புக்கு என்ன பொருள்? கட்அவுட் என்பது ஜெயலலிதாவையும் கீபோர்ட் என்பது ஜெயமோகனையும் குறிக்கின்றது. தற்போதைய நிலவரப்படி கட்அவுட்டை கீபோர்டு முந்தியிருக்கிறது. ஏன், எப்படி என்பதை ‘அறிவார்ந்த’ வாசகர்களே புரிந்து கொள்ளலாம்.



2013/5/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>

இலக்கிய உலகின் பவர்ஸ்டார்கள்

--

Ramesh Murugan

unread,
May 30, 2013, 3:26:20 AM5/30/13
to பண்புடன்
பாவம் ஜெமோ.
தெரியாத்தனமா எதையோ எழுத, எல்லார்கிட்டேயும் வாங்கிக்கட்டிக்கிறாரு.

2013/5/29 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

பின்குறிப்பு : தலைப்புக்கு என்ன பொருள்? கட்அவுட் என்பது ஜெயலலிதாவையும் கீபோர்ட் என்பது ஜெயமோகனையும் குறிக்கின்றது. தற்போதைய நிலவரப்படி கட்அவுட்டை கீபோர்டு முந்தியிருக்கிறது. ஏன், எப்படி என்பதை ‘அறிவார்ந்த’ வாசகர்களே புரிந்து கொள்ளலாம்.

//


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

தமிழ்ப் பயணி

unread,
May 30, 2013, 3:35:44 AM5/30/13
to பண்புடன்
2013/5/30 Ramesh Murugan <rames...@gmail.com>

பாவம் ஜெமோ.
தெரியாத்தனமா எதையோ எழுத, எல்லார்கிட்டேயும் வாங்கிக்கட்டிக்கிறாரு.

இதுக்​கெல்லாம் பயந்தா அவரு ​ஜெ​மோ இல்​லைங்க​ளே.. :) :)

எனக்கு இரண்டு நாளா நம்ம குழுமத்தி​லே நாம்(ன்) கவிஜ எழுதிய இருவர்க​ளை படுத்திய பாட்​டை இதனுடன்
ஒப்பிட்டு மனம் ​நொந்துகிட்​டேன்.

என்ன இருந்தாலும் நாம நல்லவங்க... கனவான்கள் இல்​லையா..
அதனால் குழுமத்தின் ​பொது நலன் கருதி தான் ​செஞ்​சோமுன்னு தீர்ப்பு ​கொடுத்துகிட்​டேன்.. :) :) :)

Ramesh Murugan

unread,
May 30, 2013, 3:43:52 AM5/30/13
to பண்புடன்
:))

2013/5/30 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>


என்ன இருந்தாலும் நாம நல்லவங்க... கனவான்கள் இல்​லையா..
அதனால் குழுமத்தின் ​பொது நலன் கருதி தான் ​செஞ்​சோமுன்னு தீர்ப்பு ​கொடுத்துகிட்​டேன்.. :) :) :)

ஸ் பெ

unread,
May 30, 2013, 3:48:59 AM5/30/13
to panbudan
ஒரே இழையில போடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமாயா?
-இப்படிக்கு 
யாரோ 
:))

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 

ஸ் பெ

unread,
May 30, 2013, 4:28:15 AM5/30/13
to panbudan
எழுத்தாளர்கள் ஏசுநாதர் என்பது மாதிரி Manushya Puthiran ஸ்டேட்டஸ் போட்டாலும் ‘லைக்’ போடுகிறார்கள். அதை எதிர்த்து எழுத்தாளர்களும் எங்களைமாதிரிதான் என்று நான் ஸ்டேட்டஸ் போட்டாலும் அதே ஆட்களில் சிலர் ‘லைக்’ போடுகிறார்கள். இவர்களையெல்லாம் நம்பி கொலைகூட செய்யமுடியாது போலிருக்கு :-(

சுயசிந்தனையோ, சூடு, சொரணையோ இல்லாத இம்மாதிரி ஆட்களுக்கு மாரடிப்பதைவிட பேசாம ஜெயமோகனின் பஜனை கோஷ்டியில் சேர்ந்து நானும் எழுத்தாளர் ஆயிடலாமா என்று யோசிக்கிறேன்.


Senthil Kumar ஒரு முறை நீங்கள் சாருவை ஜஸ்ட் லைக் தட் பதிவர்கள் சந்திப்பிற்கு வர முடியுமான்னு கேட்டதற்கு உங்களை காய்ச்சி எடுத்ததை நியாபகப் படுத்துகிறேன்... எழுத்தாளன் என்றால் அவ்வளவு மட்டமா போயிட்டானா, ஒரு மரியாதை வேண்டாமா, ஃபோன்ல கூப்பிடுறது தான் மரியாதையா? ரஜினியை இப்படி கூப்பிடுவீங்களான்னு சாரு ஆன்லைன்ல உங்கலை வறுத்தெடுத்து சாரு பதிவு போட.. அதுக்கு நீங்களும் ஆமாம், தப்பு தான். உங்களை மாதிரி எழுத்தாளரை கூப்பிடுறதுக்கு தனியா ஒரு முறை இருக்கு, எங்களுக்கு தான் அது தெரியலைன்னு சமாதானம் செய்ய ஒரு கல்யாண சிறுகதை எல்லாம் எழுதினது நியாபகம் இருக்கா யுவா ??

ஒரு நாலு வருஷம் இருக்குமா, இது நடந்து ??

ஸ் பெ

unread,
May 30, 2013, 6:22:27 AM5/30/13
to panbudan
எழுத்தாளரை அவமானப்படுத்தி விட்டார்கள் என்ற விவாதம் சில நாட்களாக இணையதளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்வக்கோளாறு மிகுந்த, அதே நேரத்தில் வாசிப்பு பழக்கம் இல்லாத சராசரி மனிதனை எப்படி எதிர்கொள்வது என்பதை அவமானப்படும் எழுத்தாளர்கள் நன்றாக அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தம்பி.... நீங்க பெரிய ஆளு.... உங்களிடத்தில் வாய் கொடுத்து தப்பவே முடியாது என்று கேள்வி கேட்டவர் ஓட வேண்டும். அல்லது அப்படியானவர்களை தவிர்த்து விட வேண்டும். இதுவே சிறந்த வழி முறை என்பது என் கருத்து. ஆனால் சாராசரி மனிதரிடம் அடைந்த அவமானம் பற்றி பேசுபவர்கள் ஓர் எழுத்தாளன் சக எழுத்தாளனை அவமானப்படுத்துவதும், சிற்றிதழ் ஆசிரியர் மற்ற எழுத்தாளர்களை மட்டம் தட்டுவதும், அவமதிப்பதும், இன்னும் சற்று கூடுதலாக பதிப்பாளன் எழுத்தாளனுக்கு ராயல்டி கொடுக்காமல் அவமானப்படுத்துவதும் தமிழில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இது பற்றியும் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட இது தான் மிக முக்கியமாக இருக்கிறது.

ஸ் பெ

unread,
Jun 2, 2013, 2:55:42 PM6/2/13
to panbudan

மாடல்ல மற்றையவை

நகைச்சுவை

February 26, 2012

நாகர்கோயில் பண்பலை வானொலியைக் காலையில் அருண்மொழி கேட்பாள். அதில் ஒரு வரி ஒரு வார்த்தைகூட அவள் காதில் விழாது. காரணம் அவள் அதைக்கேட்பதே நேரம் காட்டும் ஒலியாகத்தான். காலையில் அலுவலகம் செல்வதற்காக அவள் பதினாறு கைகளுடன் வேலை செய்துகொண்டிருக்கும்போது குறைந்து குறைந்து வரும் நேரத்தை அது அவளுக்கு ஒலித்துக்காட்டுகிறது. காலை எழுந்ததும் ‘ஏ ரீங்கா ரிங்கா’ போன்ற கனிவுகொடுக்கும் பாடல்கள். கீழே பேப்பர் வாசிக்க வரும்போது அதை நானும் கேட்பேன். அவ்வப்போது சில விஷயங்கள் காதில் நுழையும். மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களின் பேட்டி போல.

பேட்டியாளர் கனத்த ரேடியோக்குரலில் கேட்க மண்ணடிக்கோணத்தார் தன் முன்னால் மைக் இருப்பதை சில கணங்களில் மறந்து விட்டதாகத் தெரிந்தது. ‘வணக்கம் திரு மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களே. நீங்கள் பால்மாடுகள் வளர்ப்பதில் நீண்ட அனுபவம் உடைய மூத்தவிவசாயி என்றமுறையில் நாகர்கோயில் பண்பலை வானொலிக்காக உங்களை பேட்டி எடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’. ‘வோ…சேரி’ .

‘நன்றி. நீங்கள் இந்தமாதிரி பால்மாடுகளை எவ்வளவு வருடங்களாக வளர்த்துவருகிறீர்கள்?’. ‘அது கெடக்குல்லா ஒருபாடு காலம்…கொறே காலமாச்சு கேட்டியளா?’. ‘எவ்வளவு வருடம் என சொல்லமுடியுமா?’. ‘நான் சின்னபிள்ளையா இருக்கும்பம் தொடங்கினதாக்கும்.’. ‘உங்கள் வயது எவ்வளவு?’ ..‘எளுவது இருக்குமா? நீங்க என்ன நினைக்குதிய?’. ‘அப்படியென்றால் கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக நீங்கள் மாடு வளர்த்து வருகிறீர்கள் என்று சொல்லலாமா?’. ‘இல்ல பிள்ள, எனக்க அப்பனும் மாடாக்கும் வளத்தது..’

‘நன்றி…இந்த எழுபதுவருட அனுபவத்தில் நீங்கள் சில கருத்துக்களைச் சொல்ல முடியுமா?’. ‘வோ.’. ‘சொல்லுங்கள்.’ ‘மாடு வளக்கியது நல்லதாக்கும்.’ .’சரி…நீங்கள் எவ்வளவு மாடுகளை வளர்க்கிறீர்கள்?’. ‘நாலு…மூணு ஜேழ்சி ஒரு கூஸா…பிறவு ஒரு எருமையும் உண்டு…அதுகளுக்க கண்ணுகுட்டிகளை சேக்கபிடாதா சேக்கலாமா?’ . ‘நன்றி ஐயா…நீங்கள் மாடு வளர்க்கும் முறையை விளக்க முடியுமா?’ . ‘செம்மையா வளக்குதேன்..வோ’

‘அதில்லை…நீங்கள் காலையில் எழுந்ததும் மாடுகளை கவனிப்பீர்களா?’. ‘வோ…நான் காலத்த ஒரு நாலுமணிக்கு எந்திரிப்பேன்…ஒடனே பாலுகறவையாக்கும்…கறந்து தீர எப்பிடியும் அஞ்சு ஆவும்…..பாலைக்கொண்டுசெண்ணு கடைகளிலே குடுத்திட்டு ஆறரைக்கு வந்திருவேன்…’ ‘வந்ததும் என்ன செய்வீர்கள்?’. ‘பளஞ்சி குடிப்பேன்’. ‘இல்லை ஐயா…மாடுகளுக்கு என்ன செய்வீர்கள்? “. ‘மாடுகள குளிப்பாட்டுவேன்….மாடுகள காலம்ப்ற குளிப்பாட்டுகது நல்லதாக்கும்…சாணமெல்லாம் இருக்கும் பாத்தியளா? எல்லாம் நல்லா வைக்கப்பிரி இட்டு தேச்சு களுவினா நல்லா மேயும்..இல்லேண்ணா அதில ஈச்சயும் உண்ணியும் கடிச்சு மேயாது பாத்துக்கிடுங்க’

‘எத்தனை மணிக்கு குளிப்பாட்டி முடிப்பீர்கள்?’. ‘ஆத்தில கொண்டுபோயி குளிப்பாட்டி வாறதுக்கு எப்பிடியும் எட்டாயிடும்…’. ‘பிறகு என்ன செய்வீர்கள்?’. ‘உடனே மாடுகளுக்கு வெள்ளம் குடுக்கணும்லா? நல்லா புண்ணாக்கும் கஞ்சிவெள்ளமும் எல்லாம் இட்டு கலக்கி குடுப்பேன்…எள்ளுப்புண்ணாக்கு நல்லது. தேங்காப்புண்ணாக்கு வெல கூடுதலாக்கும்.’. ‘அரிய கருத்து ஐயா…அதன்பின் என்ன செய்வீர்கள்?’ .‘மாடுகள கொண்டு போயி வயலிலயோ இல்லேண்ணா வெளையிலயோ கெட்டுவேன்…மேயணும்லா?’

‘சரி, நீங்கள் என்ன செய்வீர்கள்?’. ‘நான் கடவத்த எடுத்துகிட்டு புல்லு பறிக்க போவேன்லா?’. ‘எப்போது திரும்பி வருவீர்கள்?’. ‘அது ஆவும், ஒரு மூணு நாலு மணி…நாலுமாட்டுக்கும் புல்லு வேணும்லா? கறக்குத மாட்டுக்கு நல்லா பச்சப்புல்லு வேணும்…உணக்க வைக்கலு தின்னா அது பீச்சும்.. பாலு அம்பிடும் பீச்சலாட்டு போயிரும்லா?’. ‘முக்கியமான கருத்து ஐயா…அதன்பின்னர் என்ன செய்வீர்கள்?’. ‘பருத்திக்குரு ஊறவச்சுகிட்டாக்கும் நான் புல்லறுக்க போறது…அதை ஆட்டுக்கல்லிலே இட்டு ஆட்டி பாலெடுப்பேன்…பசுவுக்கு பருத்திப்பால் நல்லதாக்கும்…பாலு ஊறும்’

‘முக்கியமான தகவல் ஐயா…அதை கொடுத்து முடித்ததும் என்ன செய்வீர்கள்?’ ‘சாயங்காலம் பாலுகறக்கணுமே? அதை கறந்து கொண்டு கடையிலே குடுத்திட்டு ஒரு அஞ்சரைக்கு வந்திருவேன்…. வந்ததும் மாடுகள பின்னயும் குளிப்பாட்டுவேன்.’.’இரண்டுமுறை குளிப்பாட்டுவீர்களா?’. ‘ மேயும்பம் சாணம் பட்டிருக்கும்லா…அப்டியே கெட்டினா கொசு கடிக்குமே..’ . ‘சரி ஐயா.’. ‘கொசுவும் ஈச்சயும் கடிச்சு ரெத்தம் உறிஞ்சினா பசு தீனி எடுக்காம நிக்கும்.. அதனால சாயங்காலம் அதுக்க ஒப்பம் தொளுத்தில இருப்பேன்…’

‘இருந்து என்ன செய்வீர்கள்?’ ‘பொகை போடுகது…பலசரக்கு கடையிலே போயி நல்லா உள்ளித்தோலு கொண்டுவருவேன்…அதை தீயில போட்டாக்கும் பொகையிடுகது…’ ‘உள்ளித்தோல் என்றால் என்ன என்று சொல்ல இயலுமா?’. ‘உள்ளிண்ணா சவாளாவாக்கும்.’ .‘சவாளா என்றால்?’. ‘சவாளாண்ணா இந்த இது இருக்குல்லா… பெல்லாரி…’. ‘மன்னிக்கவேண்டும், பெல்லாரி என்றால் என்ன?’ .‘பெல்லாரிண்ணாக்க … பெரியவெங்காயம்ணு பாண்டியில சொல்லுவானுகள்லா?’. ‘பெரிய வெங்காயம்…சரி…அதன் தோலைப் போட்டு புகை போடுவீர்கள்…பிறகு?’. ‘பிறவு ஒரு சுருளு கொசுமருந்தும் கொளுத்தி வைக்கணும்…’ . ‘ஏன்?’ .‘பொகைத்தீ அணஞ்சிரும்லா?’

‘இப்படி எவ்வளவு நேரம் செய்வீர்கள்?’ .’எவ்வளவு நேரம்ணு இல்ல…ஒறக்கம் வாறது வரைக்கும் செய்யிலாம்.’ .‘எப்போது உறக்கம் வரும்?’ .‘மேஞ்ச பசுவில்லா? ஒரு பத்துபத்தரைக்கு உறங்கிரும்…அதுக்குப்பிறவு நான் போயி வெந்நி போட்டு குளிச்சிட்டு இம்பிடு சுக்கும்வெள்ளம் குடிச்சிட்டு படுப்பேன்…காலத்த எந்திரிக்கணும்லா?’ .‘பசுக்களை அருமையாக வளர்க்கிறீர்கள் ஐயா.’.  ‘வோ, நான் அதுகள பெத்த பிள்ளையள மாதிரியாக்கும் வளக்குதது…’

‘நன்றி ஐயா…மாடுகளை பராமரிப்பது பற்றி அருமையாக விளக்கினீர்கள்…இந்த பால்மாடு வளர்ப்பால் உங்களுக்கு எவ்வளவு வருடாந்தர நிகர ஆதாயம் கிடைக்கிறது?’ . ‘என்ன சொன்னிய?’. ‘அதாவது உங்களுக்கு கிடைக்கும் லாபம் என்ன?’. ‘வோ?’. ‘லாபம்? என்ன லாபம் ?’ . ‘லாபமா? நட்டம்! ’

‘மன்னிக்கவும் ஐயா…பசுக்களை வளர்ப்பதனால் உங்கள் நிகர லாபம்..’. ‘மாசம் ஒரு ரெண்டாயிரம் ரூவா வரை கைநட்டம் வரும். அத எனக்க மவன் குடுப்பான்…அவன் பள்ளிக்கொடத்திலே வாத்தியாராக்கும்…பணம் தாறப்ப நாலு கடுத்தவார்த்த சொல்லுவான்…ஆனா தருவான். நல்ல பயலாக்கும்…’

‘விவசாயிகள் பால்மாடு வளர்ப்பதில் உள்ள நிகர லாபம்.. அதாவது..’ .’பிள்ள இஞ்ச பாக்கணும்…லாபம் பாத்தா பசுவ வளக்கமுடியாது… லாபத்தக் கண்டா நாம பிள்ளையள வளக்கோம்? என்ன சொல்லுதிய?’. ‘வணக்கம் ஐயா. அருமையான கருத்துக்களை சிறப்பாக எடுத்துச்சொன்னீர்கள். நன்றி. வணக்கம் நேயர்களே. இதுவரை பால்மாடு வளர்ப்பதைப்பற்றி தெரிந்துகொள்வதற்காக விவசாயி மண்ணடிக்கோணம் அம்புறோஸ் அவர்களைச் சந்தித்தோம்…’

ஸ் பெ

unread,
Jun 2, 2013, 4:08:05 PM6/2/13
to panbudan

ஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?

பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு -

நான் உங்களது திருச்சி நட்புகூடலில் கலந்து கொண்டேன். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இத்தனை எளிதாக கிடைக்கும் என்று நினைக்கவில்லை. மிக மகிழ்ச்சி.

உங்களிடம் நான் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்கவில்லை. அனால் கேட்க நினைத்து கேட்காமல் விட்ட ஒரு கேள்வி…

நீங்கள் M.S.சுப்புலட்சுமி அவர்களது பூர்வீக வாழ்கையை விரிவாக எழுதி இருந்தீர்கள், அவரது ஆரம்ப கால வாழ்கை என்னைபோல பலரும் அறியாத ஒன்று. அதை சுப்புலட்சுமி அவர்களும் மறக்கவும் மறைக்கவும் விரும்பி இருக்கலாம். நீங்கள் அவர் மறைக்க முயன்ற சில தகவல்களை வெளிக்கொண்டு வருவதில் என்ன நன்மை இருக்கமுடியும்?

நான் உங்களது பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் மிக விரும்பி படிக்கின்றேன். ஆனால் நீங்கள் இதை எழுதியதின் நோக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்

இந்தக்கேள்விக்கு இந்த தளத்திலேயே நான்குமுறை பதில் சொல்லியிருக்கிறேன்.

இரண்டு கேள்விகள் நம் சூழலில் இருந்து திரும்பத் திரும்ப வருகின்றன. ஒன்று, இறந்தவர்களைப்பற்றி ஏன் எதிர்மறையான விஷயங்களைச் சொல்ல வேண்டும்? இரண்டு, ஒருவர் சொல்ல விரும்பாத விஷயங்களை ஏன் கண்டுபிடிக்க வேண்டும்?

இந்த இரண்டு கேள்விகளும் நம்முடைய நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அன்றாட செயல்பாடுகளுக்காக உருவாக்கிக் கொண்ட சில மனநிலைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இந்த மனநிலை சரியானதே. இறந்தவர்கள் மீதான கோபதாபங்களை வைத்துக்கொள்வதும் சரி ,பிறரது அந்தரங்கங்களை தோண்டிக் கொண்டிருப்பதும் சரி சரியான மனநிலைகளே அல்ல.

ஆனால் வரலாறு முற்றிலும் வேறானது. வரலாற்றுக்கு இந்த நடுத்தர வர்க்க அன்றாட ஒழுக்க நெறிகள் செல்லாது. வரலாறு உண்மைகளை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். ஆகவே வரலாற்றாய்வாளன் உண்மைகளை நோக்கி மட்டுமே செல்லவேண்டும்.

ஏனென்றால் வரலாற்றை நாம் ஆராய்வது இன்றும் நாளையும் நமக்குத் தேவையான விழுமியங்களையும் சிந்தனைகளையும் அடைவதற்காக. உண்மையில் இருந்து அடைந்தவையாக இருந்தால்தான் அவற்றுக்கு மதிப்பு. பொய்யில் இருந்து வந்தவையாக இருந்தால் அவையும் பொய்யே. அந்தப் பொய்கள் நம்மை தவறாக வழி நடத்தும். அழிவுக்குக் கொண்டு செல்லும்

ஆகவே ஒரு விஷயம் வரலாறாக ஆகிவிட்டிருக்கிறதென்றால் அது உண்மையாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் மேலைநாட்டுச்சூழலில் உள்ளது. இந்த மதிப்பீடு அங்கே பதினெட்டாம் நூற்றாண்டிலேயே உருவாகி வந்து விட்டது. ஒவ்வொரு தலைவரைப் பற்றியும் சிந்தனையாளரைப் பற்றியும் கறாரான வரலாற்று உண்மைகள் கண்டடைந்து முன்வைக்கப் படுகின்றன. வரலாற்றின் ஒவ்வொரு தருணம் பற்றியும் உண்மைகள் ஆராய்ந்து சொல்லப் படுகின்றன.

நம்முடைய கல்வி முறையின் கோளாறு காரணமாக அவ்வாறு மேலைநாட்டினர் எழுதிய வரலாற்றின் தகவல்களைத்தான் நமக்குத் தருகிறார்கள். அவற்றை மனப்பாடம் செய்து ஒப்பிக்கச் சொல்கிறார்கள். அந்த வரலாற்றை எழுதும் முறையை, அந்த மனநிலையை நமக்குக் கற்பிப்பதில்லை. ஆகவேதான் படித்தவர்கள் கூட இந்தக்கேள்வியைக் கேட்கிறார்கள்.

நாம் இன்னும் நம்முடைய பழங்குடி- நிலப்பிரபுத்துவ மனநிலைகளிலேயே இருக்கிறோம். நீத்தார் வழிபாடு மூத்தார் வழிபாட்டு மனநிலைகளையே வரலாற்றிலும் போட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகவே தான் இங்கே இன்னும் வரலாறுகள் அரிதாகவே எழுதப் படுகின்றன. காமராஜ் பற்றியோ அண்ணாத்துரை பற்றியோ ஒரு உண்மையான வரலாறு இன்னமும் இங்கு எழுதப்படவில்லை. நம்முடைய பழங்குடி மனநிலை நம்மை எழுதவும் விடாது

ஏன் இந்திய சீனப் போர் பற்றி அல்லது இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஒரு கறாரான வரலாறு நம்மிடம் இல்லை. இருப்பவை ஒற்றைப்படையான புகழ்பாடல்கள். காரணம் இதுதான் இறந்தவர்களைப்பற்றி நல்லதுதான் சொல்லவேண்டும் என்ற எண்ணம்.அவை வரலாறுகளே அல்ல, புராணங்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி ஒரு வரலாற்று ஆளுமையாக இல்லை என்றால் , சாதாரணமான ஒரு பெண்மணி என்றால் அவரைப்பற்றி ஏதும் எழுதப்படவேண்டியதில்லை. அவரைப்பற்றி வரலாறு எழுதப்படும் என்றால் அது உண்மையாகத்தான் எழுதப்பட வேண்டும். சுப்புலட்சுமியின் வரலாறு ஏற்கனவே பலமுறை பலரால் எழுதப்பட்டது. தமிழ் பண்பாட்டு வரலாற்றின் ஓர் அத்தியாயம் அது.அப்போதுதான் உண்மையான வரலாறு என்ன என்ற வினா எழுகிறது. அதைத்தான் டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் எழுதினார்.

ஏன் உண்மையான வரலாறு தேவை? ஏனென்றால் அந்த வரலாற்றில் நம் உண்மையான கடந்த காலம் உள்ளது. கடந்தகாலத்தின் சிக்கல்களும் தீர்வுகளும் உள்ளன. வரலாறு என்பது உண்மையில் ஒரு பெரிய கட்டமைப்பு. அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு, சமூக வரலாறு , தனிமனிதர்களின் வரலாறு எல்லாம் ஒன்றுதான். ஒன்றைக்கொண்டு இன்னொன்று முழுமைப் படுத்தப்படவேண்டும். சுப்புலட்சுமியின் வரலாறு நம்முடைய சமூக வரலாற்றின் ஒருபகுதி. நம் பண்பாட்டு வரலாற்றின் ஒரு பகுதி. ஆகவே தமிழ் வரலாற்றின் ஒரு பகுதி. அவரது வரலாற்றை எழுதுவதன் வழியாக நாம் நம் வரலாற்றைத்தான் எழுதி முழுமைப்படுத்திக் கொள்கிறோம்.

இதையெல்லாம் திரும்பத்திரும்பக் கேள்விக்குறியதாக்குபவர்கள் வரலாற்றை பொய்யாக எழுத நினைப்பவர்கள். வரலாற்றை தங்கள் சுயநலத்துக்காக மறைக்கவும் சிலபகுதிகளை திரிக்கவும் ஆசைப்படுபவர்கள். பொய்யான வரலாற்றை எழுதி அதை சுயநலநோக்குடன் நிறுவப் பாடுபடுபவர்கள்.

ஒருவர் என்னவாக தன்னை முன்வைத்தார் என்பதோ அவரை மற்றவர்கள் எப்படிச் சித்தரித்தார்கள் என்பதோ அல்ல வரலாறு. உண்மையில் அவர் யார், அவரது வாழ்க்கை என்ன என்பதுதான் வரலாறு. உண்மை ஒருபோதும் ஒருவரை கீழிறக்காது. அவர் எவரோ அவராகவே அவரைக் காட்டும். நாம் ஒருவரை மதிப்பதும் மதிக்காததும் நம்முடைய மனப்பிம்பங்களின் அடிப்படையில் இருக்கவேண்டியதில்லை. உண்மையின் அடிப்படையில் இருக்கட்டும்.

வரலாற்றெழுத்து என்பது எப்போதும் சுயநலமிகளின் அரைகுறை வரலாறுகளுக்கு எதிராக உண்மையைக்கொண்டு சென்று நிறுத்தும் போர்தான்

ஜெ

ருத்ரா (இ.பரமசிவன்)

unread,
Jun 4, 2013, 3:32:03 PM6/4/13
to panb...@googlegroups.com
ரொம்பவே கடுவாக்களி ஆடுகிறார்.தனக்கு வேண்டிய டுபாக்கூர்களை இமயவான் என்பதும் வேண்டாதவர்களை ரகசியமான வசவுகளின் சொற்களில் 
துவட்டுவதுமே இவருக்கு தெரிந்த வரலாறு விமர்சனம்.அப்படி செய்து விட்டு வேண்டுதல் வேண்டாமை இன்றி தான் தமிழ்ச்சொல் கொண்டு செதுக்கினேன்
என்று "பாயிண்டு"கள் அடுக்குவதும் ஜெயமோகன் அவர்களின் சிறுபிள்ளைத்தனமான செப்பு விளையாட்டு.இதே விளையாட்டை ஜெய்காந்தன் செய்யும் போது அதில் ஒரு உலக ஆளுமையின் வாசம் இருக்கும்.உலக மானுட நேசத்தின் சீற்றம் இருக்கும்.அதில் இருப்பது ஒரு இலக்கியத்தின் டெமோகிரேசி.இவரிடம் இருப்பதோ வெறும் "ஜெமோ"க்ரேஸி".பேனாவை பத்திரமாக வைத்து விட்டு சம்மட்டியை கொணர்ந்து "கல்லுளி மங்கன்"வந்து விட்டான்; இனி காடு மேடெல்லாம் தவிடு பொடி என்று எழுதுவதில் என்ன இருக்கிறது.

=========================ருத்ரா

On Wednesday, January 30, 2013 7:56:09 AM UTC-8, காலப் பறவை wrote:
எழுத்தாளர் ஜெமோகனின் எழுத்துகளில் சிலாகித்த, விமர்சிக்க நினைக்கும், பகிர நினைக்கும் படைப்புகளை இங்கே பகிர்ந்துக் கொள்வோம்..

Ahamed Zubair A

unread,
Jun 4, 2013, 3:42:30 PM6/4/13
to பண்புடன்
அருமையான வார்த்தைக் கோவைகள்...

ருத்ரா... இப்படியே எழுதுங்கள்... படிக்க சுகானுபவமாக இருக்கிறது..... (கவிதைகள் அல்ல..)


2013/6/4 ருத்ரா (இ.பரமசிவன்) <eps...@gmail.com>
--

arunkumarkapollo

unread,
Jun 5, 2013, 12:47:25 AM6/5/13
to பண்புடன்

2013/6/5 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

ருத்ரா... இப்படியே எழுதுங்கள்... படிக்க சுகானுபவமாக இருக்கிறது..... (கவிதைகள் அல்ல..)

+11


--
K.Arunkumar
Co-Ordinator - Branding
HCS - Department
Apollo Speciality Hospitals.

Ahamed Zubair A

unread,
Jun 6, 2013, 1:43:02 AM6/6/13
to பண்புடன்
துரை மாம்ஸ்...

தமிழ்ல மட்டும் தான் “எழுத்தாளன்”... எழுத்தை ஆளுகிறாராம்... உதாரணமா இங்க்லீசுல ரைட்டர் தான்.... அதனால தமிழ்ல இவங்கள்லாம் பெரிய அறிவாளிச் சமூகம்னு நினைப்பு....

இதுக்கெல்லாம் பொங்கலா வைக்க முடியும்???

கெளம்புங்க கெளம்புங்க... புள்ளைக்கு காலேஜ்ல சீட் வாங்குற வழியைப் பாருங்க ;)))




2013/5/28 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

--

வில்லன்

unread,
Jun 6, 2013, 1:30:08 PM6/6/13
to panb...@googlegroups.com
இன்னும் ஜெமோதானா? லார்டு மனிதக்குமாரனைலாம் சீன்டமாட்டிங்களா யாரும்.?

--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக
முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

ஸ் பெ

unread,
Aug 23, 2013, 11:34:07 AM8/23/13
to panbudan

புறப்பாடு 5, கருத்தீண்டல்

அனுபவம்

August 23, 2013

சாயங்காலம் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தபோது விடுதியறை வாசலில் ஒரு கரியபெண் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும் பூனைபோல சத்தமில்லா நாசூக்குடன் எழுந்தாள். பார்த்ததுமே அவள் ஜானுக்கு உறவு என்று புரிந்துகொண்டேன். பதினாறுவயதிருக்கும். பெரிய கண்கள். கலைந்துபறக்கும் கூந்தல். கையில் ஒரு சிறிய பை.

அறையைப்பூட்டி சாவியை கட்டளைக்குமேலேயே வைத்துவிட்டுச் செல்வோம். அறைக்குள் எவருக்கும் திருட்டுபோகுமளவுக்கு உடைமைகள் ஏதும் இல்லை. சாவியைஎடுத்து திறந்தபடி ‘ஜானுக்க தங்கச்சியா?’ என்றேன்.

‘ஓம்…அம்ம சொல்லிச்சு…’ என்று மெல்லிய குரலில் இழுத்தாள். ஐந்துவயதுப்பெண்ணின் குரல்.

‘ஜான் வாறதுக்கு நேரமாவும்லா? அவன் சோலிக்குப்போயிட்டுதான் வருவான்’

அவள் ஒன்றும் சொல்லவில்லை

அறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தேன். அவள் வெளியே சுவரோடு ஒட்டியவள்போல நின்றிருந்தாள். நீலநிறமான சட்டையும் பாவாடையும் அணிந்திருந்தாள். மிகமெலிந்த பெண். மலைப்பகுதிகளில் ஆணும்பெண்ணும் குழந்தைகளும் எல்லாருமே மெலிந்துதான் இருப்பார்கள். மாடுகள் மட்டும்தான் கொழுத்திருக்கும்

‘உள்ள வந்து இருக்கியாட்டீ?’ என்றேன்

‘வேண்டாம்’ என்றாள்

அவளை பார்ப்பதை தவிர்த்தேன். ‘உனக்க பேரு என்ன?’

‘மேரி’

‘எத்தனாம் கிளாஸு படிக்கே?’

‘படிக்கேல்ல’

‘ஏன்?’

‘அங்கிண பெரிய பள்ளிக்கூடம் இல்லல்லா?’

‘சின்னப்பள்ளிக்கூடம் தீருத வரைக்கும் படிச்சியோ?’

’ம்’

‘பைபிளு படிப்பியா?’

அவள் ஒன்றும் சொல்லவில்லை

‘ஏம்டீ?’

அதற்கும் பதில் சொல்லவில்லை

அவளைப்பார்த்தேன். உடம்பும் முகமும் தெரியவில்லை. நீலச்சட்டையின் விளிம்பு மட்டும்தான் தெரிந்தது

’படிக்க நேரமில்லியோ?’

‘மலையில உள்ள பள்ளிக்கூடத்திலே உப்புமாவு மட்டும்தான் குடுப்பாவ….படிக்கச் சொல்லிக்குடுக்கமாட்டாவ’

குழம்பி ‘ஏன்?’ என்றேன்

‘அங்கிண வாத்திமாரு இல்லல்லா??’

‘ஓ’

‘அப்புக்குட்டி மட்டும்தான் அங்கிண இருப்பாரு…அவருக்கும் வைவிளு படிக்கத்தெரியாது’

மலைப்பகுதிகளிலும் உள்பகுதி கிராமங்களிலும் உள்ள பள்ளிகளைப்பற்றி அப்போது எனக்கு ஒன்றும் தெரியாது. பிறகு சேவைநிறுவனங்களுடன் அலைந்து திரிந்து நேரில் அவை செயல்படும் விதத்தை அறிந்துகொண்டேன். அங்கே அனேகமாக எந்தப்பள்ளியிலும் ஆசிரியர்கள் செல்வதில்லை. சம்பளத்தில் ஒருபகுதியை மேலதிகாரிகளுக்குக் கொடுத்துவிட்டால் வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிப்பார்கள். மதிய உணவு ஒழுங்காகக் கொடுக்கப்பட்டால் மக்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததைப்பற்றி கேட்கமாட்டார்கள். ஐந்தாம் வகுப்புவரை படிக்காத பிள்ளைகள் மலையில் கிடையாது. ஆனால் அ எழுதத்தெரிந்த ஒரு பிள்ளைகூட இருக்காது.

காரணம் ஆசிரியர்பயிற்சி பெற்று வேலைக்குள் நுழைபவர்களில் பெரும்பாலானவர்கள் நாகர்கோயில் ‘டவுண்’காரர்கள். அவர்களுக்கு மலைப்பகுதி என்பது நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு தொலைவானது. சென்றகாலங்களில் மலேரியாவும் காலராவும் ஆட்சிசெய்த பகுதிகள். ஆகவே மலை என நினைத்தாலே குலைநடுங்குவார்கள். நாகர்கோயிலில் நின்று பார்த்தால் விஷநீலத்தில் மேற்கிலும் தெற்கிலும் எழுந்து தெரியும் மலைகள் அவர்களை எப்போதுமே அச்சுறுத்தும். ‘மலைவெள்ளம் ஆத்தில வந்தா வெந்நி வச்சு வீட்டிலயே குளிக்குத ஆளுக. பின்னல்லா மலையில செண்ணு சோலி செய்யுகது?’ என்று ஒரு கல்வியதிகாரி சொன்னார்

‘…பின்ன ஜான் எப்ப்டி படிச்சான்?” என்றேன்

‘அவனுக்கு பாதரு சொல்லிக்குடுத்தாருல்லா?’ என்றாள் மேரி

நேரமாகிக்கொண்டிருந்தது. விடுதியில் எட்டுமணிக்குமேல்தான் கொஞ்சமாவது மனித நடமாட்டம் இருக்கும். நானேகூட புத்தகத்தை வைத்துவிட்டு நூலகம் போகத்தான் வந்தேன். ஆனால் இந்தப்பெண்ணை இங்கே தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது என்று தெரியவில்லை.

’சும்மாதான் வந்தியா?’

‘அம்மை சொன்னா…’

‘எதுக்கு…’

அவள் மிகவும் குரலைத்தாழ்த்தி ‘ரூவா’ என்றாள்.

‘எம்பிடு?’

‘அம்பது…’ என்றபின் ‘அம்மைக்கு மேலுசொகமில்ல’ என்றாள்

‘என்ன?’

‘துள்ளப்பனி….மிசனுக்கார ஆசுபத்ரி மருந்தாக்கும் குடிச்சியது’

எழுந்து என் பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஐந்து பத்துரூபாய்களை எடுத்தேன். ‘இந்தா இத கொண்டுட்டுப்போயி குடு’

‘அய்யோ…’

’இங்கபாரு குட்டி, நீ இங்க ராத்திரி நிக்கமுடியாது. கேட்டியா?’

அவள் பேசாமல் நின்றாள்

’ஜான்கிட்ட சொல்லுதேன். நீ போ. அவன் வாறதுக்கு ராத்திரி ஆவும்’

அவள் மெல்ல உள்ளே வந்து பணத்தை வாங்கிக்கொண்டாள். மிகமெலிந்த கைகள். உள்ளங்கை வாழைப்பூ நிறமாக இருந்தது

‘அம்மைக்கிட்ட சொல்லு ஜான் நல்லா இருக்கான் எண்ணு…என்னட்டி?

’சொல்லுதேன்’

சட்டென்று அவள் கண்கள் என் கண்களைச் சந்தித்தன. என் மனம் அதிர்ந்தது. இரு கூரிய கத்திமுனைகள் நுனியில் மட்டும் உரசிச்சென்றதுபோல. அவள் சிறுமி அல்ல என்று அறிந்தேன். நான் சிறுவன் அல்ல என்றும்.

அந்தசிந்தனைகளின் நுனியில் அவள் எப்படி எந்நேரத்தில் சென்று சேர்வாள் என்ற எண்ணம் எழுந்தது. ‘ஏம்டீ நெடுமங்காட்டு பஸ்ஸிலெயா போவே?’

‘ஓம்’

‘அது வெலக்குக்குபோறப்ப எட்டுமணி ஆயிருமே. அதுக்குமேலே ஏழெட்டு கிலோமீட்டர் நடக்கணும்லா?’

’வெலக்கிலே கோயிலு இருக்குல்லா? அங்கிண தங்கிட்டு காலம்ப்ற போவேன்….’

சர்ச்சில் அப்படி நிறையபேர் தங்கியிருப்பார்கள். ‘பைசவா பத்திரமா வச்சுக்கோ’ என்றேன்.

‘ஓம்’

‘எங்க வப்பே?’

மீன்கொத்தி தொட்டெழுந்த தடாகம்போல கண்கள் அதிர்ந்தன. ‘உள்ளுக்கு’ என்றாள்

‘ஓ’ என்றேன்

அவள் வெளியே சென்று அதேபோல நின்றாள். இப்போது எனக்கு அறை கனமான புழுக்கமான காற்றால் நிறைந்திருப்பது போலிருந்தது.

‘சாயை குடிச்சுதியா?’

‘வேண்டாம்’

‘செரி அப்பம் போ’

அவள் ‘வாறேன்’ என்றாள்.

அவள் வராந்தாவைத்தாண்டிச் செல்வதை பார்த்தேன். அவள் மறைந்ததும் ஆசுவாசம் கொண்டேன். கட்டிலில் படுத்துக்கொண்டேன். கூரையில் மழைநீர் வளையங்கள் காட்டுமரத்தில் சப்பைக்காளான்கல் பூத்திருப்பது போல உலர்ந்திருந்தன. அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஜான் இரவு எட்டுமணிக்கு மேல்தான் வந்தான். நடை சரியில்லாமல் இருந்தது. வந்ததுமே நாற்காலியில் அமர்ந்துகொண்டு பைபிளை எடுத்து பிரித்தான்

‘ஏம்லே?’ என்றேன்

‘ஏசு சோதிக்காரு’

‘என்னலே ?’

காலைக்காட்டினான். அழுக்குத்துணியால் கட்டு போட்டிருந்தான்.

‘என்னல ஆச்சு?’

ஆணியை மிதித்துவிட்டானாம். சாயங்காலம் வகுப்பு முடிந்ததும் சிமிண்ட் வார்ப்பு முடிந்த கட்டிடம் ஒன்றுக்கு தண்ணீர்விடுவதற்காகச் சென்றிருக்கிறான். கீழே கிடந்த பலகையில் நீட்டியிருந்த ஆணி ஏறிவிட்டது

‘ரெத்தம் வந்ததா?’

’உள்ள ரெத்தம் எல்லாம் போயாச்சுலே…இனி ஊறினாத்தான் உண்டு’

’காலக்காட்டுலே”

‘லே நோவுதுலே’

கட்டை மெல்ல அவிழ்த்தேன். உடனே என் கையெல்லாம் ரத்தம்

‘கெட்டுலே…லே கெட்டு கெட்டு’

இறுக்கிக் கட்டினேன்

‘என்ன மருந்துலே வச்சே?’

‘கெட்டுமேலே ஒண்ணுக்கடிச்சேன்…பொறுத்திரும்’

மலையில் அது ஒருவழக்கம். எந்தக்காயம் மீதும் உடனே சிறுநீர் கழித்துவிடுவார்கள்

‘நீவா நாம கோட்டாறு ஆசுபத்திரிக்கு போவம்…’

’இதுக்கு என்னத்துக்கு மருந்து…நான் படாத முள்ளா? போலே’

மீண்டும் மீண்டும் சொன்னேன். துரு ரத்தத்தில் கலந்தால் உயிருக்கே ஆபத்து என்றேன்.

‘பைசா கேப்பாவனுகளா?’

‘சர்க்கார் ஆசுபத்திரில்லா, கேக்கமாட்டாவ. கேட்டா குடுக்கேன். எனக்க கையிலே ரூவா இருக்கு’

அவன் கிளம்பினான். படி இறங்கும்போது அவனால் நடக்கமுடியவில்லை என்று கண்டேன். ‘ஏசுவே ராசாவே’ என்று முனகிக்கொண்டே இருந்தான்

குறுக்குவழியாக கோட்டாறுக்கு நடந்தோம். மூன்று கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவனை தோளோடு தாங்கிக்கொண்டேன். ஒவ்வொரு அடிக்கும் ‘ஏசுவே ராசாவே’ என்று சொன்னான்

கோட்டாறு ஆஸ்பத்திரிக்குச் சென்று சேரும்போது பத்துமணி. அந்நேரத்திலும் அங்கே கூட்டம் நிறைந்திருந்தது. அதிகமும் நடுவயதுப்பெண்கள். தூக்குவாளிகள் ஒயர்கூடைகள் புட்டிகளுடன் அலைந்துகொண்டிருந்தார்கள்.

ஒரு நர்ஸ் ‘அய்யய்ய. இங்க என்ன ரெத்தம்? லே அந்தால போலே…அந்தால போ’ என்றாள்

‘எங்க?’ என்றேன்

‘எங்கியாம் போ…லே போலே’ என்றபடி சென்றுவிட்டாள்

இன்னொரு நர்ஸிடம் கேட்டேன். அவளும் ‘அந்தால போலே…இஞ்ச நிக்கப்பிடாது’ என்றாள்

சட்டென்று எழுந்த கோபத்துடன் ‘எங்கபோணும். அதச் சொல்லுங்க’ என்றேன்

‘என்னலே?’ என்று அந்த நர்ஸ் கோபமாக நிமிர்ந்தாள்.

‘கேட்ட கேள்விக்கு பதிலச்சொல்லுங்க. ஓப்பி எங்க?’ என்றேன்

அவள் கண்கள் மாறின. அவள் என் சாதியை ஊகித்துவிட்டாள். ‘ஓப்பி அங்க…அங்க மாணிக்கம்னு ஒரு ஆளு உண்டு…கேளுங்க’ என்றாள்.

‘நீங்க வந்து சொல்லுங்க’ என்றேன் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தபடி.

‘வாறேன்’ என்றாள் கண்களை திருப்பியபடி.

அவளுக்குப்பின்னால் சென்றபோது ஜான் ‘நீ வரேல்லண்னா என்னைய நாய தொரத்துகது மாதிரி தொரத்துவா’ என்றான்

‘பேசுத மாதிரி பேசணும்லே’

‘பேசணும்லா? லே, அதுக்கு நம்ம கையில பைசா இருந்தா மட்டும்போராது. நம்ம அப்பன் தாத்தன் கையிலயும் பைசா இருந்திருக்கணும் கேட்டியா?’

நர்ஸே புண்கட்டுமிடத்திலிருந்த மாணிக்கத்தை கூப்பிட்டு புண்ணை கழுவி கட்டும்படிச் சொன்னாள். அவள் என்னைத்தான் சுட்டிக்காட்டினாள். மாணிக்கம் என்னைப்பார்த்து வந்து ‘ஆருக்காக்கும் புண்ணு?’ என்றான்

‘இவனுக்கு….காலிலே ஒரு ஆணி குத்திப்போட்டு’

‘ஆணிகுத்தாத ஆளுண்டா நாட்டிலே? இவனாரு? வீட்டு சோலிக்காரனா?’

‘இல்ல சேந்து படிக்கோம்’

‘ஓ’ என்றார். அந்த ஓவுக்கு என்ன பொருள் என்று தெரியவில்லை

ஜான் தரையில் அமர்ந்துவிட்டான். காலை நீட்டிக்கொண்டு ‘ஏசுவே ஏசுவே’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

‘நான் மாணிக்கமாக்கும். ஏசுவில்ல’ என்றபடி மாணிக்கம் துணிச்சுருளை எடுத்தார். அவர் ஒரு புட்டியைத்திறந்தபோது சாராயவீச்சம் எழுந்தது. ஜானின் கட்டை அவிழ்த்துவீசினார். ரத்தம் வழிய வழிய காயத்தைத் துடைத்து கிரீஸ்போன்ற ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து அதில் வைத்து அழுத்திக்கட்டினார். ஜான் ‘ஏசுவே எனக்க ஏசுவே!’ என்று கூச்சலிட்டான்.

‘ஆணிகுத்துகது பாம்பு கடிக்கப்பட்டது மாதிரியாக்கும்…வெசமெறக்கணும்’ என்றார் மாணிக்கம்

ஒரு சின்னவயசு நர்ஸ் வந்து ‘கையக்காட்டுலே’ என்றாள்

ஜான் ‘வேண்டாம்’ என்றான்

‘லே கையக்காட்டு’ என்றார் மாணிக்கம்

ஜான் முகத்தைத் திருப்பிக்கொண்டு புஜத்தைக்காட்டினான். அவள் அதில் ஒரு ஊசியைப்போட்டாள். வழக்கமாக ஊசி போடுவது போல அல்ல. ஊசியை கிட்டத்தட்ட புஜம்மீது எறிந்தாள். அதன்பின் ஒரே அழுத்து. பஞ்சை வைத்துவிட்டு ‘பிடிச்சுக்கோ’ என்றபின் போய்விட்டாள்

’போலாமா?’ என்றேன்

‘போலாம்…பளுப்பு வராது. வந்தா மறுக்கா வந்து காட்டுங்க’

ஜானைப்பிடித்து எழுப்பினேன்

‘ஏமானே, வெள்ளம்குடிக்கதுக்குச் சில்லற?’

பையிலிருந்து இரண்டுரூபாய் எடுத்து மாணிக்கத்துக்குக் கொடுத்தேன்.

திரும்பி வரும் வழியில் நாலைந்து இடங்களில் ஜான் நின்றான். ‘லே தலையச் சுத்துது கேட்டியா?’

‘ரெத்தம் போயிருக்குலே…’

‘பாவங்கள ஏசு சோதிப்பாருலே’ ஜான் மூச்சிரைத்தான். ‘சுத்திச் சுத்தி வருதுலே’

‘ஆஸ்டலுக்குப்போயி சோறு திண்ணா செரியாயிரும்’ என்றேன்

மீனாட்சிபுரம் தாண்டவே ஒருமணி நேரம் ஆகிவிட்டது. ‘லே ஜான் உனக்க தங்கச்சி வந்திருந்தா கேட்டியா?’ என்றேன் . சாலை இருட்டில் மின்கம்பத்தைப்பிடித்தபடி நின்றிருந்தான்

‘என்னத்துக்கு வந்தா ?’

‘உனக்க அம்மைக்குச் சுகமில்லியாம்…அம்பது ரூவா வேணும்னு சொன்னா’

‘லே, அது கிளவிக்க அடவாக்கும்…அவளுக்கு ஒரு தீனமும் இல்ல. நான் இஞ்ச டவுணிலே சம்பாதிச்சு ஜாளியடிக்கேண்ணாக்கும் அவ நினைக்கா….’

‘அம்பது ரூவா குடுத்தேன்’

‘அம்பது ரூவாயா?’

‘எனக்க கதையெளுத்துபணம் கையில இருந்தது’

‘கிளவி பொன்னு சேக்குகாலே….மொவள கெட்டிக்குடுக்கதுக்கு. தின்னமாட்டா .நல்ல துணி எடுக்கமாட்டா. கிறிஸ்மஸுக்கு கூட மனசறிஞ்சு கஞ்சி குடிச்சமாட்டா’

’ஆர கெட்டிக்குடுக்கதுக்கு?’

‘இந்தக்குட்டிய….இவளுக்கு இப்பம் பதினாறுல்லா? அடுத்த வருசம் அனுப்பிப்போடணும்னு சொல்லுதா’

விடுதிக்கு வந்தபோது ஜானுக்கு குமட்டல் இருந்தது. அறைக்குள் சந்திரனும் அருமையும் இருந்தனர். அவர்கள் தூங்க ஆரம்பித்த நேரம். ஜானைக்கண்டதும் எழுந்து வந்தனர்.அருமை, ஜானுக்கு சோற்றை நீர்விட்டு பிசைந்து கஞ்சியாக்கி ஓரிருவாய்கள் ஊட்டினான். ஜான் குமட்டியதும் விட்டுவிட்டான்.

நானும் ஜானும் தரையில் படுத்துக்கொண்டோம். ஜான் படுத்துக்கொண்டு ‘லே அரும, வைவிள எடுத்து தலையணைக்கு அடியிலே வையிலே’ என்றான்

பைபிளை ஒரு கையால் வருடிக்கொண்டே இருந்தபின் ஜான் தூங்கிவிட்டான். சிறிதுநேரம் இருட்டுக்குள் தெரிந்த அடிக்கூரையை பார்த்துக்கொண்டிருந்தேன். வெளியே வேப்பமரம் சிலிசிலுத்தது. பின்னர் கனவில் மேரியைக் கண்டேன். நானும் அவளும் ஒரு மலையடிவாரத்தில் நடந்துகொண்டிருந்தோம். ஆனால் அந்த நடை காற்றில் நீந்திச்செல்வதுபோல இலகுவாக இருந்தது. மேரி கையில் ஒரு பெட்டி வைத்திருந்தாள்

‘அதுக்குள்ள என்னட்டீ?’ என்றேன்

‘வடை.சுறுக்கா பணியாரம் எல்லாம் இருக்கு’

’தருவியா?’

‘இல்ல. ஏசுவுக்கு குடுக்கதுக்காக்கும்’

காற்று சுழன்றடித்தது. என் கை எதிலோ மாட்டிக்கொண்டது. இல்லை, என் கையை யாரோ பிடித்து இழுத்தார்கள். விழித்துக்கொண்டேன். ஜான் என் கையைப்பிடித்திருந்தான்.

‘ஏம்லே?’ என்றேன்

ஜான் சொன்னது புரியவில்லை. கொளகொளவென்று ஒரு சத்தம் குரலுடன் கலந்துவிட்டதுபோல

எழுந்து விளக்கைப்போட்டு திரும்பியவன் அலறியபடி பின்னால் நகர்ந்தேன். என்னருகே புதிய ஒருவன் படுத்திருந்தான்.

அருமை பாய்ந்து எழுந்து “என்னலே?’ என்றான்

‘இவன்…’ என்று பீதியுடன் சுட்டிக்காட்டினேன்.

அருமை ‘ஆருல இவன்? இஞ்ச எப்டி வந்தான்?’ என்றதுமே புரிந்துகொண்டு ‘லே, இவன் ஜான்லே’ என்றான்

ஜான் இருமடங்காக இருந்தான். முகம் உப்பி வெளிறி உருண்டிருந்தது. சீனர்களைப்போல இடுங்கிய கண்கள். மூக்குபரந்து செம்புள்ளிகளுடன் இருந்தது. உதடு தடித்து தொங்கியது. தாடைத்தசை கீழிறங்கி கழுத்து இடுங்கி உடம்பே உப்பி ஒரு பூதாகரக் குழந்தை போலிருந்தான். விரல்கள்கூட உப்பி உருண்டிருந்தன. குழந்தைபோலவே கைகால்களை ஆட்டி ததும்பிக்கொண்டிருந்தான். கொளகொளவென வாயிலிருந்து ஒரு குரல் ஒலித்தது

சந்திரன் எழுந்து அருமையிடம் ‘லே…என்னலே” என்றான். ஜானை அருமை சுட்டிக்காட்டியதும் ‘அய்யோ’ என்று கதறினான்

அருமை ”இது மலைவாதையாக்கும்லே….பேயி’ என்றான்

’இல்லலே, இண்ணைக்கு அந்த நர்சு குடுத்த ஊசி தப்பிப்போச்சு…வாறப்பமே தலை சுத்துதுண்ணு சொன்னான்’

‘செத்திருவானாலே?’ என்றான் சந்திரன் அழுகையின் விளிம்பில் நின்று.

‘நெல்சன் சகாவு இப்பம் எங்கல இருப்பாரு?’

‘நாகராஜாகோயிலுக்கு அந்தால கம்மூணிஸ்டு ஆப்பீஸுண்டு…அங்கிண இருந்தாலும் இருப்பாரு’ அருமை இறங்கி ஓடினான்.

அதற்குள் அறைமுழுக்க பையன்கள் குழுமிவிட்டார்கள். ‘இது தடிக்காரன்கோணம் சாயிப்புக்க பேயாக்கும்…நான் ஆளைக்கண்டிட்டுண்டு….இதுமாதிரித்தான் இருப்பாரு…ஆனை சவிட்டிச் செத்தாரு’ என்றான் ஒருவன்

நெல்சன் வரும் ஒலி தொலைவிலேயே கேட்டது. ‘லே வெலகுங்கலே…ஒற்ற ஒருத்தன் இங்கிண நிக்கப்பிடாது…லே மாறுலே’

நெல்சன் வந்து எட்டிப்பார்த்ததுமே ‘லே, இது அலெர்ஜியாக்கும்….மருந்து மாறிப்போச்சு….லே இங்கிண போண் எங்க இருக்கு?’ என்றான்

‘வார்டன் ரூமிலே போண் உண்டும்’

வார்டன் சாம்ராஜ் ஒரு களியக்காவிளைககாரர். நடுநிலை ஆசிரியர் வேலை. பகுதிநேர பெந்தெகொஸ்செதே ஊழியம். கூடவே வார்டன் பொறுப்பு. ஆகவே வார்டன் வேலையை சமையற்கார அந்தோணிக்கே கொடுத்துவிட்டிருந்தார். அவருக்குண்டான பங்குப்பணத்தை நாலாம்தேதி பள்ளிக்குக் கொண்டுசென்று கொடுக்கவேண்டும். வார்டனின் அறையை நேசையன் என்ற இன்னொரு ஆசிரியருக்கு சகாய வாடகைக்குக் கொடுத்திருந்தார். கட்டில், கொசுவலை ,மேஜை, நாற்காலி இணைக்கப்பட்ட கழிவறை எல்லாம் உடைய வசதியான அறை. நேசையன் மாலை ஐந்துமணிக்கு வந்து கதவைமூடிக்கொண்டால் ரேடியோவின் எட்டரை மணி வரை பாட்டு கேட்பார். ஒன்பதுக்கெல்லாம் தூங்கிவிடுவார். எக்காரணம் கொண்டும் கதவைத்திறப்பதில்லை

நெல்சன் வார்டன் அறைமுன் சென்று நின்று ‘வே கதவத்தெறவும்வே’ என்றான்.

சன்னலைத் திறந்து நேசையன் ‘லே, இஞ்சவந்து சல்லியம் செய்யப்பிடாது…போலீசிலே சொல்லுவேன்’ என்றார்

‘வே, ஒருத்தன் சாவக்கெடக்கான்வே…வேற எங்கயும் போண் இல்ல …கதவத்தெறவும் வே’

‘எனக்கு இதில காரியமில்ல’ என்றபடி நேசையன் ஜன்னலைமூடிக்கொண்டார்

நெல்சன் ஆவேசமாக பாய்ந்து கதவை ஓங்கி மிதித்தான். கதவு அதிர்ந்தது. மீண்டும் இரண்டு உதை ‘லே ஒரு பெஞ்ச நவுத்திக்கொண்டாங்கலே…ஒடைப்போம்’

நேசையன் கதவைத்திறந்து ‘போக்கிரித்தனம் செய்யப்பிடாது-’ என ஆரம்பிப்பதற்குள் நெல்சன் அவரது கன்னம் கண் காது எல்லாவற்றையும் சேர்ந்து பளாரென்று ஓர் அறை விட்டான். அவர் ‘எக்கம்மோ….என்னைய கொல்றாண்டோ’ என்று அலறியபடி அப்படியே அமர்ந்துவிட்டார். மொத்தக்கூட்டமும் ஆரவாரம் செய்தது

திரும்ப ஜானைநோக்கி ஓடினேன். ஜான் கைகளை குழந்தைபோலவே ஆட்டினான். அவன் கையைப்பிடித்தேன். அவன் கொளக் கொளக் என்று சொன்னது என்ன என்று எனக்குப்புரிந்தது. என்பெயரை. என் உடம்பு குளிர்ந்தது.

நெல்சன் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரச்சொன்னான். முதலில் அங்கே தூங்கிக்கொண்டிருந்த சின்னடாக்டர் ஏதோ சமாளிப்பாகப் பேசியதாகவும் ஐந்து நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றால் எம்.எல்.ஏ ஹேமச்சந்திரன் அங்கே வருவார் என்று சொன்னதும் டாக்டர் பதறியடித்து ஆம்புலன்ஸ் அனுப்புவதாகச் சொன்னதாகவும் பிறகு அறிந்தேன்.

இருபது நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. சிவப்பு விளக்கு தலைக்குமேல் சுழல அது முற்றத்தில் நின்றது. தூளிக்கட்டிலைத் தூக்கிவந்த இரு சிப்பந்திகள் மேலே வந்து ‘எங்க பேசண்டு?’ என்றார்கள்.

நெல்சன் “இந்நா கெடக்கான்….பாத்து செய்யுங்க…பயலுக்கு வல்லதும் ஆனா பிறகு ஒற்ற ஒருத்தன் டாக்டர்ணு சொல்லி நடக்கமாட்டான் இஞ்ச’ என்றான்

‘பென்சிலின் அலர்ஜியாக்கும்…. டெஸ்ட் டோஸு குடுக்காம ஏத்திப்பிட்டாவ’ என்றார் முதிய சிப்பந்தி

‘லே செத்திருவானால? ’ என்றான் அருமை என் கையைப்பிடித்தபடி.

‘சின்னவயசுதாலா?’

ஜான் அருகே அந்த தூளிக்கட்டிலை வைத்து அவனை இயல்பாகப் புரட்டி அதில் ஏற்றி தூக்கிக்கொண்டு இறங்கினார்கள். வண்டிக்குள் அவனை ஏற்றிக்கொண்டார்கள்.

‘லே ஜெயா நீயும் கேறு….நாங்க பொறத்தால வாறம்’ என்றான் நெல்சன்

ஏறிக்கொண்டேன். ஜான் கையை நீட்டி துழாவிக்கொண்டே இருந்தான். அவன் கையைப்பிடித்துக்கொண்டேன். வண்டி மிகையாகக் குலுங்கியது. இரு சிப்பந்திகளும் சாதாரணமாக ஏதோ பேசிக்கொண்டார்கள்.

ஜான் நேராக உள்ளே கொண்டுசெல்லப்பட்டான். சற்று நேரத்தில் நெல்சனும் சகாவு திவாகரனும் நான்கு ரப்பர்த்தொழிற்சங்க ஊழியர்களும் வந்து சேர்ந்தனர். பெரிய டாக்டரை அவரது வீட்டுக்கே சென்று கூட்டிவந்தார்கள்.

நான் என்ன செய்வதென்று தெரியாமல் பெர்ஞ்சில் அமர்ந்திருந்தேன். அங்கே ஏற்கனவே இருந்த ஒரு கிழவி என்னிடம் ‘அடிபிடிக்கேஸா மக்கா?’ என்றாள் ஆவலாக.

பெரியடாக்டர் வழுக்கையும் தொப்பையுமான குண்டு மனிதர். வெள்ளைவெளேரென்று இருந்தார். வெளியே வந்து திவாகரனிடம் ‘முறிமருந்து போட்டாச்சு….ஒண்ணும் பிரச்சினையில்ல…நாளைக்குச் செரியாயிருவான்’ என்றார்

‘அந்த ஊசிபோட்ட தேவ்டியாள பாக்கணுமே’ என்றான் நெல்சன். திவாகரன் அவனை தோளைத்தொட்டு அடக்கினார்.

‘அவ நல்லதுக்காகத்தான் போட்டிருக்கா….டெஸ்ட் ஊசி போட்டு பாத்திருக்கணும்…அது அவ நெனைப்புல வரல்ல….இந்த ஊசியும் பென்சிலின் மாதிரியாக்கும். ஆனால் பென்சிலின் இல்ல. கேட்டா பென்சிலின் ஊசிக்குமட்டும்தான் டெஸ்டுன்னு நினைச்சேன்னு சொல்லுதா…நல்ல குட்டிதான்’ என்றார் டாக்டர்

டாக்டர் சென்றபின் மேலும் அரைமணிநேரமாகியது அனைவருக்கும் நிலைமையை விளக்க.

‘ஈ நேரத்தில் இவிடே சாயை கிட்டுமோடா?’ என்றார் தோழர் திவாகரன்

‘பஸ் ஸ்டாண்டுக்கு போனா குடிக்கிலாம் தோளர்’

நெல்சன் என்னிடம் ‘லே நீ இங்க இரி…’ என்றான். தலையசைத்தேன். அவர்கள் கூட்டமாகக் கிளம்பிச்சென்றார்கள். ஆஸ்பத்திரி வளாகம் மெல்ல அமைதி அடைந்தது. காலை நீட்டிக்கொண்டேன். சற்று நேரத்தில் நான்குபக்கமிருந்தும் பிசின் மாதிரி தூக்கம் வந்து மூடியது. கைவிரல்கள் ஒட்டிக்கொண்டன. கால்கள் சிக்கிக்கொண்டன. உதடுகளைக்கூட அசைக்கமுடியவில்லை. ஆனால் ஆஸ்பத்திரியை மூடிய கண்களுக்குள் உணர்ந்துகொண்டிருந்தேன். என்னருகே அமர்ந்திருந்த மேரி ‘என்னைய கெட்டிக்குடுக்க பொன்னு வேணும்லா?’ என்றாள்.

மறுநாள் காலையில் நர்ஸ் ஏதோ விசாரிப்பதை வெகுதொலைவிலிருந்து கேட்டேன்.. ஜான் என்ற சொல் பலமுறை காதில் விழுந்ததும் பதறி எழுந்து வாயைத்துடைத்து ‘நானாக்கும்….நானாக்கும் ஜானுக்க ஆளு’ என்றேன்

‘சாயையோ காப்பியோ வாங்கிக்குடுங்க…போதம் வந்தாச்சு’

உள்ளே சென்றேன். உள்ளே தீவிர சிகிழ்ச்சைக்கு உள்ளாகும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் படுத்திருந்தனர். விழித்திருந்தவர்கள் சிலர்தான். ஒரு பெண்மணி அர்த்தமில்லா வெறிப்பு கொண்ட கண்களால் என்னை பார்த்தாள். என் நடையை அவள் கண்ணசைவு தொடர்ந்துவந்தது. ஜானை பார்ப்பது பற்றி நினைத்தபோது இதயம் துடித்தது

ஜான் வீக்கமெல்லாம் வடிந்திருந்தான். முகத்தில் ஒரு அதைப்பு மிச்சமிருந்தது. வாய்க்கு இருபக்கமும் அழுத்தமான கோடுகள். கண்களுக்குக் கீழே சுருக்கம். தோல்முழுக்க கொசுக்கடிபோன்ற புள்ளிகள். ஜானேதான். ஆனால் பெருவெள்ளம் வந்து வடிந்த ஆறுபோல சேறும் குப்பையும் படிந்திருந்தான் என்று பட்டது

‘லே ஜான்’ என்றபடி கட்டில் விளிம்பில் அமர்ந்தேன். “பயப்படுத்திப்போட்டேலே’

‘சர்க்காரு ஊசி வேண்டாம்ணுல்லா சொன்னேன்…நீயில்லா கூட்டிட்டுவந்தே?’

‘ஒரு தப்பு நடந்ததாக்கும்லே…அந்த நர்சுக்கமேலே தப்பில்ல கேட்டியா? புதிய மருந்த குத்திவச்சுப்போட்டா’

‘ஏசு சோதிக்காரு’ என்றான் ஜான் ‘லே,நீ ஹாஸ்டலுக்குப்போயி எனக்க வைவிள எடுத்திட்டுவா’

‘சாயை வேங்கிக்குடுக்கச் சொன்னா தொப்பிக்காரி….சாயையா காப்பியா?’

‘லே இங்கிண ஹார்லிக்ஸ் கிட்டும் கேட்டியா?’

‘வேங்கிட்டு வாறேன்’ என்றேன் ‘நல்லகாலம்லே, ராத்திரி கொண்டுவந்ததனால தப்பினே. காலம்பற பாத்திருந்தா இந்நேரம்–’

‘எனக்கு வெள்ளத்தில முங்கிப்போற மாதிரி இருந்தது. சூடான வெள்ளம். மூக்கும் வாயும் எல்லாம் வெள்ளம் கேறிப்போச்சு. அப்பமாக்கும் கைய நீட்டி உனக்க காலைப் பிடிச்சேன்… தலைக்குமேலே நீங்க ரெண்டாளும் நீந்தி போனிய..’

‘ரெண்டாளும்னா? ஆரு?’

ஜான் குழம்பி அவன் சொன்னதை அவனே கவனித்து என்னைப்பார்த்தான். பின் பார்வையைத் திருப்பி. ‘நீயும் மேரியும்’ என்றான்.

Sahul Hameed Usman

unread,
Aug 23, 2013, 12:49:00 PM8/23/13
to panb...@googlegroups.com

கதை நல்லா இருக்கு, பட் இந்த ட்ரீட்மென்ட் கற்பனைக்கு எழுதுனதா, அல்லது  உண்மையிலே அப்படி ஒரு வழக்கம் உள்ள கிராமங்கள் இன்னும் இருக்குதா அண்ணே 


 
2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>

‘கெட்டுமேலே ஒண்ணுக்கடிச்சேன்…பொறுத்திரும்’

மலையில் அது ஒருவழக்கம். எந்தக்காயம் மீதும் உடனே சிறுநீர் கழித்துவிடுவார்கள்





--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

ஸ் பெ

unread,
Aug 23, 2013, 3:24:43 PM8/23/13
to panbudan
என்ன ட்ரீட்மென்ட்? மாத்தி ஊசி போடுறதா?


2013/8/23 Sahul Hameed Usman <sahu...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ramesh Murugan

unread,
Aug 25, 2013, 5:24:53 AM8/25/13
to பண்புடன்
நல்லா எழுதிருக்காரு. ஆனா தெற்கத்திக்காரவங்களைத் தவிர மற்றவங்களுக்கு புரியுமான்னு தெரியல.

Sahul Hameed Usman

unread,
Aug 25, 2013, 6:20:17 AM8/25/13
to panb...@googlegroups.com
 
உச்சா போற ட்ரீட்மென்ட் அண்ணே
 

 
2013/8/23 ஸ் பெ <stalinf...@gmail.com>
என்ன ட்ரீட்மென்ட்? மாத்தி ஊசி போடுறதா?



Ramesh Murugan

unread,
Aug 25, 2013, 6:34:50 AM8/25/13
to பண்புடன்
உடலில் காயம் ஏற்பட்டால் மண்ணை எச்சிலில் குழப்பி காயத்தில் வைப்பது, அடுப்பின் மேல் படிந்திருக்கும் கரியை வைப்பது, சாம்பலை வைப்பது, தேங்காய் எண்ணெய், மண்ணென்னை, மாட்டு மூத்திரம் வைப்பதெல்லம் மிக இயல்பான முதலுதவி விசயம்.

கடந்த 15 வருசத்துக்குள்ள அது வழக்கொழிஞ்சி போச்சி.

2013/8/25 Sahul Hameed Usman <sahu...@gmail.com>

உச்சா போற ட்ரீட்மென்ட் அண்ணே

//

Sahul Hameed Usman

unread,
Aug 25, 2013, 6:46:13 AM8/25/13
to panb...@googlegroups.com
 
இது கேள்வி பட்டிருக்கேன் அண்ணே
 
எங்க ஊரில் ரிடயர்டான ஒரு பள்ளிகூட  ஹெட் மாஸ்டர் தேள் கடிக்கு மருந்து வச்சிருந்தார்
(இப்ப அவர் இல்லை)
 
தேள் கடியோ, தேனீ, பாம்பு கொட்டினாலோ முதல் உதவி அவரிடம்தான் போவோம் (நைட் எத்தனை மணி ஆனாலும் கதவு திறந்து உதவி செய்வார் ப்ரீயாக)
 
சின்ன பாட்டிலில் இளஞ்சிவப்புகலரில் அந்த மருந்து இருக்கும் (பேரு தெரியாது)அதை தடவினால் ஒரு மணி நேரத்தில் வலி முழுமையாக குணமாகும்
 
ஒரு சில தாத்தா பாட்டி வைத்தியங்கள் முதலுதவிக்கு நல்ல உதவும்
 
 
 
 

 
2013/8/25 Ramesh Murugan <rames...@gmail.com>

தேங்காய் எண்ணெய், மண்ணென்னை

ஸ் பெ

unread,
Aug 25, 2013, 7:03:46 AM8/25/13
to panbudan
மொழிவாரியான பிரிவினைகளுக்கு எதிராக கிளர்ந்து எழும் ஜெமோவின் பேனா, இங்கே அமைதி காக்கிறது.. :)




உருது தேசம்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

பாகிஸ்தானில் உருதுமுஸ்லிம்களுக்கான தனிநாடொன்றை உருவாக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்று அந்நாட்டின் இந்தியாவிலிருந்து குடியேறிய முஹாஜிர்களின் கட்சியான எம்.கியூ.எம் இன் தலைவர் அல்டாஃப் ஹுசைன் எச்சரித்துள்ளார்.வாக்களிக்கப்பட்ட நாட்டை நம்பி சென்ற உருதுமுஸ்லிம்கள் இன்று அந்நாட்டிலேயே இரண்டாந்தர, அவ்வாறு கூட கூறமுடியாது,மூன்றாம்தர குடிமக்கள் ஆகிவிட்டார்கள்.இந்திய பிரிவினை எந்த உருதுமுஸ்லிம்களை மையமாககொண்டு செய்யப்பட்டதோ அவர்களை அது இரு தேசங்களுக்கு மத்தியில் பிரித்து அரசியல் பலமற்றவர்களாக செய்ததைத் தவிர வேறெந்த நன்மையையும் அளிக்கவில்லை.இந்த பிரிவினையால் நன்மை அடைந்தவர்கள் பஞ்சாபி முஸ்லிம்களும்,வங்காளி முஸ்லிம்களும் மட்டுமேயாவர்.

இந்தியாவிலுள்ள உருது பேசும் முஸ்லிம்களுக்கும்,பாகிஸ்தானில் உள்ள கராச்சியை மையமாகக் கொண்ட உருது பேசும் முஹாஜிர்களுக்கும் மொழியை அடிப்படையாகக் கொண்ட தனிநாடொன்று கராச்சியை உள்ளடக்கிய தெற்கு சிந்து பகுதியில் அமைப்பதே நீண்டகால நோக்கில் இந்தியாவிற்கும் உருதுமுஸ்லிம்களுக்கும் நன்மை பயக்கும்.இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு குஜராத்தின் கட்ச் பகுதியில் நில விட்டுக்கொடுப்பை செய்யலாம்.இந்த உருதுதேஷ் அல்லது உருதுஸ்தான் மொழியை அடிப்படையாககொண்டு அமைவதனால் பெருமளவிற்கு மத அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துவதாகவும் அமையக்கூடும்.இந்திய,பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட மானிடப்பேரழிவினைப் பாடமாகக்கொண்டு மக்கள் இடப்பெயர்வை மிகவும் திட்டமிட்டும் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு இதை செய்ய முடியுமாயின் தெற்காசியாவில் அனைத்து மக்களும் வெறுப்புகளை களைந்து சமாதானமும் செழிப்புமாக வாழக்கூடிய எதிர்காலம் இலகுவாக உருவாகும்.

இதனை விடுத்து பாகிஸ்தானில் வாழும் உருது பேசும் மக்களுக்கு மாத்திரம் கராச்சியை மையமாகக்கொண்ட ஜின்னாபூர் என்ற தனிநாடொன்றை உருவாக்குவது பெரிய மாற்றங்கள் எதனையும் கொண்டுவரமா என்பது சந்தேகம்தான்.

http://www.thenews.com.pk/article-100684-Separate-Karachi-from-Pakistan-if-you-dont-like-MQM-mandate:-Altaf

http://dividepakistan.blogspot.ae/

சிவேந்திரன்

ஸ் பெ

unread,
Aug 31, 2013, 2:02:02 PM8/31/13
to panbudan
ஜெயமோகன், மனுஷ்யபுத்திரனை முன்வைத்து எழுதின கட்டுரை கிடைக்குமா?

Siddharth Venkatesan

unread,
Sep 1, 2013, 1:18:24 AM9/1/13
to panbudan
http://www.jeyamohan.in/?p=5764

ஸ்டாலின்... ”கடவுளற்றவனின் பக்தி கதைகள்” என்ற பெயரில் 4 கட்டுரைகள் எழுதினார். இந்த சுட்டியை பிடித்து மற்ற கட்டுரைகளுக்கு செல்லலாம். 


2013/8/31 ஸ் பெ <stalinf...@gmail.com>
ஜெயமோகன், மனுஷ்யபுத்திரனை முன்வைத்து எழுதின கட்டுரை கிடைக்குமா?

--

ஸ் பெ

unread,
Sep 1, 2013, 7:30:32 AM9/1/13
to panbudan
நன்றி சித்தார்த்...


2013/9/1 Siddharth Venkatesan <neota...@gmail.com>

ஸ் பெ

unread,
Nov 20, 2013, 2:52:49 AM11/20/13
to panbudan

இந்துத்துவம், மோதி:ஒரு கடிதம்

 

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு
கிறிஸ்துவர் மீது தாக்குதல் என்ற பகுதியில் சந்தோஷ் என்பவர் எழுதி வெளியாகியிருந்த கடிதத்தையும் அதற்கான உங்களது ரத்தின சுருக்கமான பதிலையும் படித்தேன். தான் என்ன எழுதுகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உணந்த மற்றும் புரிந்த நிலையில் எழுதப்பட்ட கடிதமாக அது தெரியவில்லை. பிரவீன் தொகாடியா, ஆர்.பீ.வீ.எஸ்.மணியன், அசோக் சிங்கால், ராமகோபாலன் ஆகியோர் இந்து மதத்தைப் பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாதவர்கள், வெறும் துவேஷத்தை கக்குகிறவர்கள், தங்கள் பேசுவது அபத்தம் என்பதையே உணராதவர்கள் என்றெல்லாம் சொல்கிற இவருக்கு அவர்களிடமிருந்து மாறுபட்ட புரிதல் ஒன்று இருக்குமாயின் அதற்கு இக் கடிதத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மதச்சார்பின்மை பற்றி, இந்துக்களும், இந்து மதமும் வஞ்சிக்கப்படுவது பற்றி, முஸ்லிம்கள் பற்றி அவர்கள் என்ன கூறுகிறார்களோ அதையே ஒரு வார்த்தை பிசகாமல் கூறுகிறார் இவர். இவரது அபத்தமான வாதம் இவருக்கு புரியாது இருப்பது ஆச்சர்யமல்ல. ஆனால் உங்களுக்கு புரியாதது ஏன்? மோடி பற்றிய சந்தோஷின் கருத்து தான் உங்களது கருத்துமா? நீங்கள் சொல்லும் விஷயங்கள் அப்படியே என் எண்ணங்களை பிரதிபலிக்கின்றன என்று கூறியிருக்கிறீர்கள். மோடிக்காக இவர் அவ்வளவு வாதடி என்ன பயன்? 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த முஸ்லிம்கள் படுகொலைப் பற்றி கரண் தாப்பர் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் சொல்ல முடியாது நேர்காணலின் ஐந்தாவது நிமிடத்திலேயே வெளியேறிவர் மோடி. மோடிக்குத் தெரியும் தனது அரசின் செயலை தன்னைப் போன்ற மற்றொரு இந்துத்துவாவாதியிடம் மட்டுமே நியாயப்படுத்த முடியும் என்பது.
அடுத்ததாக, சர்வோத்தமன் என்பவரின் கடிதத்திற்கு எழுதியுள்ள பதிலில் ஸ்டாலினுக்கு கம்யூனிசம் கட்டிய கப்பத்தை பஜ்ரங்கதள்ளுக்கு ஆர்.எஸ்.எஸ். கட்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த பதிலின் மூலம் கம்யூனிசம் பற்றிய உங்கள் மிகத் தவறான புரிதல் மட்டும் வெளிப்படவில்லை. ஏதோ ஆர்.எஸ்.எஸ். சிறந்த தத்துவம் மட்டும் நல்ல கொள்கைகளை அடித்தளமாக கொண்ட இயக்கம் என்பதாகவும் பஜ்ரங்தள், பா.ஜ.க. போன்ற அமைப்புகளும் அவற்றின் செயல்பாடுகளுமே அதற்கு கெட்ட பெயர் கொண்டு வருவது போலவும் சித்தரித்திருக்கிறீர்கள். தயவு செய்து, சாவர்க்கர், கோல்வால்கர் ஆகியோரின் சிந்தனைகளிலிருந்து பஜ்ரங்தள், பா.ஜ.க. எவ்வாறு விலகிப் போய் விட்டது, ஆனால் ஆர்.எஸ்.எஸ். அவர்களின் சிந்தனைகளிலிருந்து விலகாமல் எவ்வாறு பின்பற்றுகிறது என்பதை நீங்கள் விளக்க வேண்டும். மார்க்ஸின் கம்யூனிசத்திற்கும் ஸ்டாலினியத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை மார்க்ஸின் சிந்தனைகளை அறிந்த ஒருவரால் எளிதில் நிறுவ முடியும் (ரோசா லக்ஸம்பர்க் முதற்கொண்டு ஏராளமான இடதுசாரி கம்யூனிஸ்டுகள் போல்விஷசத்தின் பல அம்சங்களை கடுமையாக தாக்கியும், முரண்பட்டும் வந்திருக்கிறார்கள்). ஆர்.எஸ்.எஸ்.க்கும் பஜ்ரங்தள், பா.ஜ.க. மற்றும் வி.எச்.பி. போன்ற அமைப்புகளுக்கும் இருக்கும் உறவு என்பது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் வெகுஜன அமைப்புகளுக்கும் இருக்கும் உறவைப் போன்றது. ஒரு வெகுஜன அமைப்பு தவறிழைக்கும் போது அதை கண்டிப்பதும், சரியான பாதைக்கு திருப்புவதும் அதன் தாய் அமைப்பின் கடமை. இதுவரை ஆர்.எஸ்.எஸ். தனது பரிவார அமைப்புகளின் எந்த நடவடிக்கையையும் கண்டித்ததில்லை. வேலைநிறுத்தம் தொழில் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று புத்ததேவ் பட்டாச்சார்ய கருத்து தெரிவித்த போது அக் கட்சியின் தலைமைக் குழு அவரை வெளிப்படையாக கண்டித்தது. புத்ததேவும் மன்னிப்பு கோரினார். இது ஒருவர் கட்சியிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதற்கு அடுத்தபடியான கடுமையான நடவடிக்கை. சி.ஐ.டி.யூ.வின் தலைவர் எம்.கே. பாந்தே அணுசக்தி ஒப்பந்தத்தையும் முஸ்லிம்களையும் இணைத்து பேசிய போதும் அக் கட்சி உடனடியாக அவரை திருத்தியது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
இந்துத்துவா சிந்தனையைப் பற்றிய உங்கள் புரிதலைப் பற்றி நீங்கள் விரிவாக எழுதுவது நல்லது. அதிலு அபத்தமான கடிதங்களுக்கு இப்படி ரத்தின சுருக்கமாக பதில் எழுதாதீர்கள்.
இப்படிக்கு
க. திருநாவுக்கரசு
உதவி ஆசிரியர்
த சன்டே இந்தியன்
புது தில்லி 110017.

அன்புள்ள திருநாவுக்கரசு,

தங்கள் கடிதம் கண்டேன்.

பயணத்தில் இருந்தமையால் சந்தோஷ¤க்கு நானெழுதிய பதில் சுருக்கமாக அமைந்ததனால் உங்கள் புரிதலில் இடறல்கள் இருப்பதை நான் உணர்கிறேன். என்னுடைய கருத்துக்களை நான் எப்போதும் தொடர்ச்சியாக ஆணித்தரமாகச் சொல்லியே வந்திருக்கிரேன். நான் உடன்படுவது என்ன என்பதை அந்த என் கருத்துப்புலத்தில் வைத்தே பார்க்க வேண்டும். அதற்கு இவ்விணையதளத்திலேயே பல கட்டுரைகள் உள்ளன. ஏன் இவ்விவாதத்துக்கு முகாந்திரமான கட்டுரையே போதும்.அன்றி, அக்கடிதத்துக்கு கீழே உள்ள அடிக்குறிப்பாக மட்டும் கண்டு மேலே விவாதிப்பது பொருளற்றது.

என் இணைய தளத்தில் அரசியல் விவாதம் வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்தமைக்குக் காரணம் என்பது இதுவே, அவ்விவாதம் எப்போதுமே இவ்வாறு பரஸ்பர அவநம்பிக்கை, தவறான புரிதலின் அடிப்படையில் நடந்து வீணாக நேரத்தையும் உழைப்பையும் செலவிடுவதில் சென்று முடியும். சிற்றிதழ்கள், இணையம் எங்கும் நிகழ்வது இதுவே. ஓர் எழுத்தாளனாக நான் அப்படி வீணாகி விட முடியாது.  ஆகவே நான் அரசியல் விவாதங்களுக்கு தயாராக இல்லை என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். கிறித்தவர் மீதான தாக்குதலுக்கு எதிராக நான் எழுதியது  அரசியலை மீறிய ஓர் அற அடிப்படை அதில் இருப்பதனாலும் எழுதவேண்டாமென எண்ணியும் எழுதும் மன உந்துதல் ஏற்பட்டமையாலுமே. கிறித்தவமும் கிறிஸ்துவும் என் ஆன்மீகமான சாராம்சத்தில் உறைகிறார்கள்.

திரு சந்தோஷ் எழுதிய வெளிப்படடையான கடிதத்தைக்கூட இந்துத்துவ கடிதமாகக் காணும் உங்கள் அரசியலை நான் புரிந்துகொள்கிறேன். தமிழகத்தின் சுமையே இதுதானே. நீங்கள் நினைப்பதை பிறர் நினைக்காவிட்டால் கிளம்பிவிடுவீர்கள்.

நான் சந்தோஷிடம் எதை ஏற்கிறேன் என்பதை வெளிப்படையாகவே பட்டியலிட்டுவிடுகிறேன். ராமகோபாலன், ஆர்.பி.வி.எஸ்.மணியன் போன்றவர்களுக்கு இந்து மெய்ஞான மரபில் அடிப்படைப் பரிச்சயமோ அதன் மீது மதிப்போ இருக்க நியாயமில்லை என்பதையே அவர்களின் வெறி கொண்ட பேச்சுகள் காட்டுகின்றன என்ற அவரது கூற்றையே நான் முழுமையாக ஏற்று ஆமோதித்திருக்கிறேன். அவர்களை இந்துஞானமரபின் காப்பாளர்களாகவும்  பிரதிநிதிகளாகவும் கருதுவது இந்து ஞானமரபுக்கு இழைக்கும் பெரும் அநீதி.  என் கட்டுரையில் இந்துத்துவ முல்லாக்கள் என நான் அவர்களையும் அவர்களைப்போன்றவர்களையும்தான் சொல்கிறேன். சந்தோஷின் அந்த சினம்  ஒரு சராசரி இந்துவின் மனச்சான்று சார்ந்தது.

மறுபக்கம் நம்முடைய பிரபல ஊடகங்கள் முழுக்கமுழுக்க ஓரம் சார்ந்தவையாக உள்ளன, அவற்றுக்கு எந்தவிதமான அற அடிப்படையும் இல்லை என்பதே  என் எண்ணம். சந்தோஷ் சொல்லும் இதை நானே என் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். ஆங்கில இதழாளர்களில் கணிசமானவர்கள் அடிப்படை நேர்மை இல்லாத கூலிப்படையினர். அவர்களுக்கு அளிக்கப்படும் ‘விலை’ என்ன என்றெல்லாம் அவர்களுடன் இத்தனை வருடங்களாக புழங்கும் நான் அறிவேன். பெரும்பாலான கட்டுரைகளில் அவர்கள் செய்திகளைச் சொல்வதில்லை, திட்டமிட்டு வெறுப்புப் பிரச்சாரத்தையே முன்வைக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு ‘தூண்டுதல்’ அளிக்கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு ,குஜராத் கலவரம் ஆகியவற்றில் இந்துத்துவர்களின் செயல்களைப்பற்றிய என் கடுமையான வருத்தத்தை, ஆதங்கத்தை, கண்டனத்தை நான் பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் நம் ஆங்கில இதழ்கள் அச்சம்பவங்களை  அதன் பின்னர் எடுத்துக்கொண்டு முன்வைக்கும் முறை இந்த தேசத்தை அழிவுக்கு இட்டுச்செல்லும் நோக்கம் கொண்டது. முஸ்லீம்களுக்கு இந்திய ஜனநாயக அமைப்பிலும், இங்குள்ள அரசு அமைப்பிலும், இங்குள்ள நீதி அமைப்பிலும், சராசரி இந்துவின் நீதியுணர்விலும் எதிலும் நியாயம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணத்தையே மீண்டும் மீண்டும் அவை பதிவுசெய்கின்றன.

அக்கருத்துக்களை நாடெங்கும்  வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அடிப்படைவாத இதழ்கள் மறு பிரசுரம் செய்கின்றன.  ஒரு மாதம் குறைந்தது 10 இஸ்லாமிய தீவிர நோக்குள்ள இதழ்களை நான் படிக்கிறேன். அவை  அருந்ததி ராயையும்,  ராஜ் தீப் சர்தேசாயையும்  அ.மார்க்ஸையும் எல்லாம் மேற்கோள் காட்டி இந்திய தேசமும் மக்களும்  ஒட்டுமொத்தமாகவே இஸ்லாமியருக்கு எதிரானவை என எழுதுவதையே மீண்டும் மீண்டும் நான் வாசிக்கிறேன். இதன் மூலம் இந்திய இஸ்லாமியர் மனதில் கடந்த பல வருடங்களாக இந்திய வெறுப்பும் மத வெறுப்பும் பாதுகாப்பின்மையும் இங்குள்ள ஊடகங்களால் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவையே இன்று தீவிரவாதம் உள்நாட்டிலேயே மலைபோல எழுவதற்கான காரணம்.  இந்த நாடு என்றாவது உள்நாட்டுப் போரால் அழியும் என்றால் அதற்கு மோதி பாணி அரசியல் வாதிகள் பாதி காரணம் என்றால் நமது இதழாளர்கள், அறிவுஜீவிகள் மீதிக்காரணம் என்றே நான் எண்ணுகிறேன். இதைப்பற்றிய சந்தோஷின் ஆதங்கத்தை நான் முழுமையாகவே ஏற்கிறேன்.

மோதி குறித்த சந்தோஷின் கருத்தை நான் ஏற்கவில்லை. மோதியை ஒரு தரமான அரசியல்வாதியாக நான் எண்ணவும் இல்லை. வன்முறைப்பின்னணி கொண்ட எந்த அரசியல்வாதியையும் என்னால் எவ்வகையிலும் ஏற்க இயலாது. இந்துத்துவ அரசியலில் ‘பஜ்ரங்தள்மய’ மாதலின் முகம் அவர்.  என் கட்டுரையில் அவரையே நான் கடுமையாக நிராகரித்து இருக்கிறேன் என்பதை எவரும் உணரலாம். மேலும் நேரடியாக குஜராத்தில் பயணம் செய்தவன் என்றமுறையில் குஜராத்தின் வளர்ச்சி பற்றிய பிரச்சாரம் மிகையானது என நான் உறுதியாகவே சொல்வேன். ராஜஸ்தானை ஒட்டிய குஜராத்தே இன்றும் இந்தியாவின் மிக தரித்திரமான பகுதி.  மோதியைப்பற்றிய ஆங்கில இதழ்களின் ஒருதலைப்பட்ச பிரச்சாரத்தின் மறுபக்கமாக உருவாக்கப்படும் பிரச்சாரத்தை சந்தோஷ் நம்புகிறார்.  ஒரு எளிய வாசகன் அந்த இடம் நோக்கி தள்ளப்படுவதை நான் புரிந்து கொள்கிறேன். உண்மையில் ஆங்கில இதழ்களின் காழ்ப்பையே தன் அரசியல் வெற்றிக்கான முதலீடாக எடுத்துக்கொள்கிறார் மோதி.

இந்து மனம் என்பதே இன்று நம் முதிரா அறிவுஜீவிகளால் அவமதிக்கப்பட்டு கூண்டிலேற்றப்பட்டிருக்கிறது. அதை சாதி வெறி மட்டுமே மரபாகக் கொண்ட, எந்த விதமான சிந்தனைப்புலமும் இல்லாத, வன்முறை மிக்க, பழமைவாத கருத்துக்குப்பையாக மட்டுமே காண நம்மை அவர்கள் நிர்பந்திக்கிறார்கள். சராசரி இந்துவின் ஆன்மீக எண்ணமும் கருணையும் நீதியும் கூட எள்ளி நகையாடப்படுகின்றன.  உடனடியாக அழிக்கப்படவேண்டிய ஒரு நச்சு சக்தி மட்டுமே இந்துமரபு என்று சொல்லும் நம் அறிவுஜீவிகள் அப்படி ஏற்காத ஒவ்வொருவரையும் இந்துத்துவ அரசியலை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டிப்பாக இந்த ஒருபக்கம் சார்ந்த, உள்நோக்கம் கொண்ட, பிரச்சாரத்துக்கு எதிர்வினை இருக்கும். அந்த கோபத்தை நான் சந்தோஷின் கடிதத்தில் காண்கிறேன். அவர் தன்னை இந்துத்துவ அரசியலில்  இருந்து எத்தனை தீவிரமாக விலக்கிக் கொள்கிறார் என்பதற்கு அவரது கடிதமே சான்று. ஆனால் மறுபக்கம் அவர் சார்ந்த சமூகம் மீது வைக்கப்படும் அநீதியான குற்றச்சாட்டு அவரை கொதிப்படைய வைக்கிறது. இன்றைய சராசரி இந்து இளைஞனின் உதாரண மனம் இது.  உங்களைப் போன்றவர்கள் அவர்களை இந்துத்துவ அரசியலை நோக்கி தள்ளுகிறீர்கள். உங்கள் கடிதத்தில் கூட அதையே செய்கிறீர்கள். இந்தியா எதிர்நோக்க்கியிருக்கும் ஆபத்தே இதுதான்.

**

இன்னொரு கடிதத்தில் நான் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருக்கும் கோணலின் விஸ்வரூபமே பஜ்ரங்தள் என்று. விதை அங்கேதான் உள்ளது என்று. அது வேறு இது வேறு என்றல்ல. ஏன், என் முதல் கட்டுரையில் மிக விரிவான முறையில் இதை விவாதித்திருக்கிறேன். அதைக்கூட கவனிக்கமுடியாத அரசியல் மூர்க்கத்துடன் விவாதிப்பதையே நான் வீண் என்கிறேன்.

ஸ்டாலினுக்கும் லெனினுக்கும் சம்பந்தம் இல்லை என்ற உங்கள் கூற்றையெல்லாம் இப்போது விவாதிக்க அவகாசமில்லை. ஐம்பதாண்டுக்காலம் இருவரும் ஒன்றே என்று உலகக் கம்யூனிஸ்டுகள் வாதாடினார்கள். இன்றும் உலகில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் மிகப்பெரும்பாலானவை ஸ்டாலினை லெனினின் இன்றியமையாத நீட்சி என்றே நினைக்கின்றன. நம்முடைய எல்லா கம்யூனிஸ்டுக் கட்சிகளும் அதையே சொல்கின்றன. நீங்கள் அவர்களுடன் விவாதிக்க மாட்டீர்கள். ஸ்டாலினின் அழிவுத்தாண்டவத்தை எவராவது எடுத்துச் சொன்னால் மட்டும் லெனினைக் காப்பாற்ற முன்வருவீர்கள்.

கருத்தியக்கத்தை இயந்திரத்தனமாக அணுகும் மூர்க்கம், ஜனநாயக மறுப்பு, மையப்படுத்தப்பட்ட அதிகாரம் போன்று லெனினிடம் இருந்த ஒடுக்குமுறை அம்சங்களே ஸ்டாலினில் உச்சம் பெற்றன. அவை மார்க்ஸியத்தின் அரசியல் திட்டத்தில் உள்ளுறையாகவே இருந்தன.அதை மிக விரிவாகவே என் நாவலில் பேசியிருக்கிறேன். மேலைநாட்டினர் சொன்னால்தான் நீங்கள் மேற்கோள் மூலம் நம்புவீர்கள் என்றால் ஜீன் பால் சார்த்ர் முதல் ஐசக் டொய்ட்ஷர் வரை ஒரு பெரும் வரிசை ஆய்வாளார்கள் உள்ளார்கள்.படியுங்கள்.

*

நான் இந்து ஞான மரபை என் பாரம்பரியமாக எண்ணுபவன். அதன் தத்துவச் செல்வம், அதன் கலைகள், அதன் பேரிலக்கியங்கள் மானுடத்தின் சொத்து என்று உணர்ந்தவன்.  அது இல்லாவிட்டால் நான் வெறும் ஐரோப்பிய நகலாக வெறும் நுகர்வோனாக மாறிவிடுவேன் என நினைப்பவன். என் படைப்பியக்கத்தின் வேர்நிலமே அது என நம்புகிறவன்.

இம்மரபு  இந்த நிலத்தில் மிகச்சிக்கலான ஒரு முரணியக்கம் மூலம் உருவாகி வளார்ந்தது. அதன் சமூகவியல் வளர்ச்சி, அதன் தத்துவ வளர்ச்சி எல்லாவற்றையும் முரணியக்கம் என்ற கோணத்தில் அணுகினால்தான் புரிந்துகொள்ள முடியும். ஒன்றுக்கொன்று முரண்படும் பல்வேறு கூறுகள் கொண்டும் கொடுத்தும் வென்றும் அடங்கியும் நூற்றாண்டுகளாக பரிணாம வளர்ச்சிபெற்ற நாகரீகம் இது. அதில் உள்ள அநீதிகள் அழிவுகள் அனைத்தும் எனக்கு தெரியும். அத்தகைய அநீதியும் அழிவும் இல்லாத பண்பாடே இல்லை என்று நான் எண்ணுகிறேன். நவீன மனம் அந்த அழிவின் அநீதியின் வேர்களைக் களைந்து  மரபின்  சாரத்தை மீட்டெடுக்கும்.

இன்று இந்தப் பண்பாட்டில் உள்ள எல்லாக் கூறுகளும் இதன் இன்றியமையாத உறுப்புகளே என்று எண்ணும் பக்குவம் உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன். வென்றவையும் தோற்றவையும் எல்லாமே இணையான முக்கியத்துவம் பெற வேண்டும். ஒவ்வொன்றும் அதற்கான தனித்துவத்துடன் இயங்கும் வெளியாக இந்து ஞான மரபு இருந்தாக வேண்டும். ஒரு நிறுவனமாக அல்லாமல் ஒரு மாபெரும் உரையாடலாக இந்து ஞானமரபு நிகழ வேண்டும். அப்படி இந்து ஞான மரபை அணுகிய நாராயண குருவும் அவரதுமாணவர்களான நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் ஓஷோ போன்றவர்களும்தான் என் முன்னுதாரணங்கள்.

இதற்குத் தடையாக இருப்பது இந்துஞான மரபை ஒரு ஒற்றைப்படையான கட்டமைப்பாக அணுகும் போக்கு ஆகும். இந்து ஞானமரபு அளிக்கும் எல்லையற்ற சுதந்திரத்தை இவ்வணுகுமுறையானது இல்லாமல் செய்கிறது. அதன்மூலம் காலப்போக்கில் இந்துஞானமரபை அது அழிக்கும். இந்த ஒற்றைப்படை நோக்குக்கு எதிராகவே இந்த இணையதளத்தில் மீண்டும் மீண்டும் நான் எழுதி வருகிறேன்.

இந்துத்துவ அரசியல் இந்து மரபின் அடையாளங்களை அரசியலாக்கம் செய்வதன் மூலம் இந்த ஒற்றைப்படையாக்கத்தை நிகழ்த்துவதனால் அதை நான் அபாயகரமானதாக அணுகுகிறேன். அதன் வன்முறை காரணமாக அதை எதிர்க்கிறேன். அதேசமயம் இந்து மரபையே அழித்தாக வேண்டுமென செயல்படும் நம்முடைய கூலிப்படை அறிவுஜீவிகளை இந்து மரபில் வேரூன்றியவன் என்ற முறையில் எதிர்க்கிறேன். ஆகவே அவர்களால் இந்துத்துவன் என்று முத்திரை குத்தப்படுகிறேன். அதைப்பற்றி எனக்கு இம்மி கூட கவலை இல்லை. எழுத்தாளனுக்கு சமகாலத்தில் பெரும்பான்மை அங்கீகாரம் பெற்றாகவேண்டுமென கட்டாயம் ஏதும் இல்லை.

*

இந்த விவாதத்தை இங்கே நிறுத்திக் கொள்ளலாமென நினைக்கிறேன். நான் அரசியல் விவாதங்களில் நீச்சலிட விரும்புகிறவன் அல்ல.

Ramesh Murugan

unread,
Nov 20, 2013, 3:12:25 AM11/20/13
to பண்புடன்

ஒண்டர்ஃபுல்.

தமிழ்ப் பயணி

unread,
Nov 20, 2013, 5:37:53 AM11/20/13
to பண்புடன்

2013/11/20 Ramesh Murugan <rames...@gmail.com>

ஒண்டர்ஃபுல்.

+1


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’
- ​சோமன், விஷ்ணுபுரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Sep 21, 2014, 4:06:08 PM9/21/14
to panbudan

ஆணியம்?


 
 

ஆசிரியருக்கு ,

“இனிமேல் வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலை பேருரைகள், கருத்தரங்கத் தலைமை ஏற்புகள் போன்றவற்றில் குட்டிரேவதி, சல்மா, சுகிர்தராணி போன்றவர்களிடம் சபையோர் எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்திற்குள் மட்டுமே கேள்விகளைக் கேட்கவேண்டும் என்றும், மேலதிகமாக அவள் விகடன்,மங்கையர் மலர் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் முன்னரே சொல்லிவிட்டால் என்ன?”

உங்களை ஒரு ஆணாதிக்கர் என கூறுவதில் பொருள் உள்ளது போலத் தெரிகிறது . 15 ஆண்டுகளுக்குள் எழுத வந்த எத்தனை ஆண்களிடம் நீங்கள் முன்வைக்கும் வாசிப்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் ?

நாஞ்சில் நாடன் முதல் சாரு வரை வைக்கும் குற்றச் சாட்டு இன்றைய எழுத்தாளர்களிடம் வாசிப்பில்லை என்பதே , இதில் ஆண் பெண் பாகுபாடில்லை. நான் அறிந்த உங்களின் சிறந்த இலக்கிய வாசகர்கள் கூட இதே கருத்தை தான் சொல்கிறார்கள்.

நவீன காலத்தில் அறிவுத் தளத்தில் வாசகர் -எழுத்தாளர் இடைவெளி குறுகி தற்போது தீவிர வாசகர்கர்கள் அறிவு சேகரத்திலும், பல்துறை வாசிப்பிலும், சிந்திக்கும் திறனிலும் முந்திச் சென்று கொண்டிருக்கின்றனர். உங்களைப் போல வெகு அரிதான சில எழுத்தாளர்கள் மட்டும் தான் மிஞ்சி இருக்கிறீர்கள்.

15 ஆண்டுக்குள் எழுத வந்த ஆண் எழுத்தாளர் ஒருவர் நீங்கள் முன்வைக்கும் அளவுகோல் படி வாசிப்புடையவர் என ஒருவர் பெயரையாவது உங்களால் குறிப்பிட முடியுமா ? அப்படி குறிப்பிட்டால் தான் மேற்சொன்ன உங்களின் கூற்று ஏற்கத்தக்கது.

கிருஷ்ணன்.

அன்புள்ள கிருஷ்ணன்

நான் சொல்வது வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலைப்பேருரைகள், கருத்தரங்கத் தலைமைகள் வகிக்கும் பெண் எழுத்தாளர்களுக்கான தகுதிகள். அப்படி எந்த ஆண் இளம் எழுத்தாளருக்காவது வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றனவா? கிடைத்திருந்தால் அதைப்பற்றிப் பேசலாம். மற்றபடி அவரவருக்கு ஆவதை எழுதுகிறார்கள். அதிலென்ன?

மேலும் நனைந்தபின் குளிர் எதற்கு? ஒரு வகுப்புவாத, சாதியவாத, பிற்போக்கு, திரிபுவாத, சனாதன, பூர்ஷுவா, அழகியல்வாத, பாரம்பரியவாத, ஆணாதிக்கவாத, அயோக்கிய, நயவஞ்சக, மலையாளி, மனநோயாளி சொல்லும் வாதமாகவே எடுத்துக்கொள்ளுங்கள். இது ஜனநாயகம் அல்லவா? இதில் எங்களுக்கும் ஒரு குரல் உண்டுதானே? நாங்களும் நாலைந்துபேர் இங்கே இருக்கிறோம் அல்லவா?

ஜெ

http://www.jeyamohan.in/?p=61391

Asif Meeran

unread,
Sep 22, 2014, 12:07:23 AM9/22/14
to பண்புடன்
நான் சொல்வது வெளிநாட்டுப்பயணங்கள், பல்கலைப்பேருரைகள், கருத்தரங்கத் தலைமைகள் வகிக்கும் பெண் எழுத்தாளர்களுக்கான தகுதிகள். அப்படி எந்த ஆண் இளம் எழுத்தாளருக்காவது வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றனவா? கிடைத்திருந்தால் அதைப்பற்றிப் பேசலாம். மற்றபடி அவரவருக்கு ஆவதை எழுதுகிறார்கள். அதிலென்ன?

 இது ஜனநாயகம் அல்லவா? இதில் எங்களுக்கும் ஒரு குரல் உண்டுதானே? நாங்களும் நாலைந்துபேர் இங்கே இருக்கிறோம் அல்லவா?


 ஒண்ணாங்கிளாஸ் :-)

ஸ் பெ

unread,
Oct 16, 2015, 10:27:35 AM10/16/15
to panbudan

ஆசான் ஜெயமோகனின் சமூகம் சார்ந்த எழுத்துகளை இனியும் படித்தால் மூளையில் விஷம் ஏறிவிடும் என்பதால் நான் அவரை படிப்பதை எப்போதோ நிறுத்திவிட்டேன். எழுத்தாளர் கல்புர்கிகொலை செய்யப்பட்ட சம்பவம், உ.பி.யில் பசுவை கொன்றதாக வதந்தி பரப்பி இஸ்லாமியர் கொலை செய்யப்பட்டது பற்றி ஆசான் வழக்கம் போல் கொட்டியிருக்கும் விஷத்துக்கு Rajagopal Subramaniam கடுமையாக, ஆனால் நிதானம் தவறாமல் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். சற்றே நீண்ட, ஆனால் முக்கியமான பதிவு. நண்பர்கள் கண்டிப்பாக படிக்கவும். இனி ராஜகோபால்:

"அன்பின் ஜெயமோகன்,

உங்கள் எழுத்துகளை தொடர்ச்சியாக வாசித்து வந்தாலும் இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். நான் தொழில்முறை எழுத்தாளன் இல்லை என்பதால் கோர்வையாக எழுத இயலாது. மொழியும் தட்டையாகதான் இருக்கும். பொறுத்தருள்க. நெருங்கிய நண்பர்கள் அனைவரும் தங்களின் இந்து மத அரசியல் சாய்வு காரணமாக முழுக்க நிராகரிப்பார்கள், அவர்களிடம் நான் சொல்வது, "இலக்கியம் மனிதனை பண்படுத்தும். 'யானை டாக்டரை' படித்தபின் எவ்வளவு பெரிய குடிகாரனாக இருந்தாலும் காட்டில் பாட்டிலை உடைத்து வீச மாட்டான். எனவே அரசியல் சாய்வு காரணமாக ஒரு இலக்கியவாதியை முழுவதும் நிராகரிக்க முடியாது, கூடாது" என்று.

கல்புர்கி மற்றும் தாத்ரி சம்பவங்களுக்கு எதிராக எழுத்தாளர்கள் விருதுகளை திருப்பியளிப்பது தொடர்பாக தாங்கள் ஆற்றிவரும் எதிர்வினைகளை தொடர்ச்சியாக படித்து வருகிறேன். இது தொடர்பாக எனக்கு சில அடிப்படை கேள்விகள் உள்ளது. ஏனெனில், இதுநாள்வரை நான் நம்பிக்கொண்டிருக்கும் அறங்களுக்கும் விழுமியங்களுக்கும் எதிராக உங்கள் கட்டுரை இருப்பது போல தோன்றுகிறது. நான் எந்தக் கட்சியையும், எந்தக் குழுவையும் சாராதவன். இடதுசாரி சாய்வு உள்ளவன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எனவே இக்கடிதத்தை படித்து என் கேள்விகளுக்கு பதிலளித்தால் மகிழ்ச்சியடைவேன். இனி தங்களின் கட்டுரையின் பகுதியும் என் கேள்விகளும்:

//இவ்விரு நிகழ்வுகளுமே காங்கிரஸும் சமாஜ்வாதியும் ஆளும் மாநிலங்களில் நடந்தவை. ஒரு குற்றநிகழ்வாக கண்டு நேரடியான கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பு அம்மாநில அரசுகளுக்கு உள்ளது...காங்கிரஸ் அரசு என்பதனால் இன்றுவரை சரியாகக் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்றாலும், கர்நாடக அரசு மீதோ காவல்துறைமீதோ நம் எழுத்தாளர்கள் குற்றம்சாட்டவில்லை.//

எழுத்தாளர் கல்புர்கி கொல்லப்பட்டதும், முகமது அக்லக் கொல்லப்பட்டதும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்களா அல்லது குற்றவாளிகளை கைது செய்ய கோரும் போராட்டமா, மாநில அரசை குறை சொல்வதற்கு? கல்புர்கி சொத்து தகராறு காரணமாகவோ அல்லது தனிப்பட்ட விரோதங்களுக்காகவா கொலை செய்யப்பட்டார்? மாட்டிறைச்சி வதந்தியால் கொல்லப்பட்டவருக்கும் கொலை செய்தவர்களுக்கும் ஏதாவது தனிப்பட்ட விரோதம் உண்டா? இந்து அடிப்படைவாதம் சார்ந்த சகிப்புத்தன்மை இல்லாத சில நபர்களால்தானே கொல்லப்பட்டார்? இந்து பாசிசத்திற்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிரான எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படுவது மோடி தலைமையிலான ஆட்சி பதவிக்கு வந்ததற்கு பின்பு தானே? தங்கள் அளவுகோலின்படி காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சனம் செய்யக்கூடாது, போராட்டம் நடத்தக் கூடாது, பாதுகாப்பு குறைவுக்காக அப்போதிருந்த காங்கிரஸ் அரசுதான் பொறுப்பு என்று கொள்ளலாமா? சில மாதங்களுக்கு முன்பு பூணூல் அறுக்கப்பட்ட சம்பவத்திற்கு வெறுப்புக் குற்றம் என்று பத்ரி உட்பட இந்து மத ஆதரவாளர்கள் எப்போதோ இறந்த பெரியாரை இழுத்து திராவிட இயக்கங்களை குற்றம் சொன்னது எதனால்?

//இதில் பாரதிய ஜனதாக்கட்சியின் பிழைகள் என்ன? கல்பூர்கி கொலையை கர்நாடக பாரதிய ஜனதா கட்சியும் அதன் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். கல்பூர்கிக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் அங்குள்ள உதிரி சாதிய -இந்துத்துவக் குழுக்களின் வன்முறைப்பேச்சு பாரதிய ஜனதா தரப்பின் குரலாக தேசிய ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டது.அதையொட்டியே எதிர்ப்புகள் எழுகின்றன//

மதத்தின் பெயரால் நடக்கும் குற்றங்களுக்கும் வெறுப்பை விதைத்து அறுவடை செய்யும் பா.ஜ.கவினருக்கும் சம்பந்தமே இல்லையா? தாத்ரி சம்பவத்தில் பா .ஜ.க உறுப்பினர்களும், அவர்களின் உறவினர்களும் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பது தங்களுக்கு தெரியாதா? அனைத்து சம்பவங்களும் வெறும் இந்துத்துவ உதிரிகளின் செயல்கள் என்றால் இந்தியாவின் ஒற்றுமைக்கே பங்கம் விளைவித்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு யார் காரணம்? அத்வானி யார்? கல்யாண்சிங் யார்? முரளி மனோகர் ஜோஷி யார்? உமா பாரதி யார்? இவர்களின் பேச்சிற்கும், அரசியல் நடவடிக்கைகளுக்கும் பாபர் மசூதி இடிப்பிற்கும் சம்பந்தம் இல்லையா? குஜராத்தில் நடைபெற்ற இனப் படுகொலைக்கும், மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தொடர்பு இல்லை என்று கருதுகிறீர்களா?

//பாரதிய ஜனதா ஒரு தெளிவான முதலாளித்துவ பொருளியலை, திட்டவட்டமான நிர்வாகத்தை உருவாக்க முயல்கிறது.//

எப்படி? கட்டாயமாக விவசாயிகளின் சம்மதமின்றி நிலத்தை பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது போன்றா? அல்லது அடானி போன்ற பெரு நிறுவனங்களுக்காக நாட்டின் வளங்களை சல்லிசான விலைக்கு விற்பதா போன்றா ?

//எழுத்தாளர்களைத் தாக்குவதற்கு எதிராக எழுத்தாளர்கள் குரல்கொடுப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால் இவ்வெதிர்ப்பால் என்ன பயன்? ஒன்றுமே இல்லை என்பதே உண்மை. ஏன்? இந்த எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் சென்ற தேர்தலில் மோடிக்கு வாக்களிக்கக் கூடாது என்று பொதுக் கோரிக்கை விடுத்தார்கள். அப்போதே அவர்களின் நடுநிலைமை அழிந்துவிட்டது. தனிமனிதர்களாக அவர்கள் அரசியலில் ஈடுபடுவதைப்போன்றதல்ல அது. அது எழுத்தாளர்களாக தங்களை முன்வைத்து அவர்கள் செய்தது. அப்போதே அவர்கள் கட்சி –தேர்தல் அரசியலில் ஒரு தரப்பாக ஆகிவிட்டனர். மோடியோ பாரதிய ஜனதாவோ அவர்களை எதிர்க்கட்சியாக மட்டுமே பார்க்கமுடியும். சமன்செய்து சீர்தூக்கிச் சொல்லும் சான்றோராக பேசும் தகுதியை அவர்கள் இழந்துவிட்டனர்//

கலவரங்களின் மூலம் ஆட்சியை பிடிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் மோடி தலைமையை எதிர்ப்பதை தவிர நடுநிலையாளர்களுக்கு வேறு பணி உள்ளதா? மோடியை எதிர்த்தால் காங்கிரசுக்கு ஆதரவானவர்கள் என்பது இருபடித்தானது இல்லையா? மூன்றாவது குரலுக்காக சாட்டை சுழற்றும் நீங்கள் சமூகத்தின் மனசாட்சியாக இருக்கும் சில எழுத்தாளர்கள் மோடி அரசை எதிர்த்தால் சான்றோராக இருக்கும் தகுதி இழந்து விடுகிறார்கள் என்பது எப்படி? விருதை திருப்பியளிக்கும் எதிர்ப்பு என்பது வெறும் அடையாள ரீதியிலான எதிர்ப்பு என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ச்சியாக எழுத்தாளர்கள் செய்ததால் தற்போது சர்வதேச கவனம் கிடைத்திருப்பது பயன் இல்லையா? இது போன்ற கவனம் கிடைப்பதற்கு இந்தியாவில் எவ்வளவு போராட்டங்கள் செய்ய வேண்டியிருக்கும்? சார்த்தர் என்ன பயனுக்காக நோபல் பரிசை நிராகரித்தார்? தாகூர் என்ன பலனுக்காக நைட் பட்டத்தை ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து திருப்பியளித்தார்?

//இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில், மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல் கும்பல்தான் இது. சென்ற ஆட்சிக்காலத்தில் அவர்களை அண்டி வாழ்ந்து லாபங்களை அடைந்தவர்கள், இப்போது விசுவாசத்தைக் காட்டுகிறார்கள் என்றே பாரதிய ஜனதா இதை நோக்குகிறது//

'மோடியின் அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில்' என்று குறிப்பிட்டாலும் அதையே நீங்களும் வழிமொழிகிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். தற்போது வரை 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் விருதை திருப்பியளித்திருக்கிறார்கள். அனைவருமே, 'சென்ற ஆட்சிக்காலத்திற்கு ஆதரவராக இருந்தனர்', 'அரசியல் காரணங்களுக்காக' தான் என்பதை எப்படி எவ்வித ஆதாரமும் இல்லாமல் உங்களால் கூற முடிகிறது? (இப்படி கேள்வி வரும் என்று தான் முன்னெச்சரிக்கையாக பாஜகவை துணைக்கு அழைத்திருக்கிறீர்களா?) அந்த 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்திருக்கிறீர்களா? நாளைக்கே உங்களுக்கு சாகித்ய அகாடமியோ அல்லது ஞான பீடமோ கிடைத்தால் உங்களின் எழுத்துக்களுக்காக அன்றி இந்துத்துவ ஆளும் அரசை அண்டி வாழ்ந்ததால்தான் கிடைத்தது என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

//திமுகவிடம் பலமுறை தனிப்பட்ட முறையில் மன்றாடியதாகவும் தலைமை சொல்லவேண்டும் என எம்.பிக்கள் சொன்னார்கள் என்றும் தலைமை அவ்விஷயத்தைப் பேசவே விரும்பவில்லை என்றும் அநத காங்கிரஸ் முக்கியஸ்தர் சொல்லி வருந்தினார். இங்கே ஒரு பஞ்சாயத்துத் தலைவர் கூட ராஜினாமா செய்யவில்லை. உண்மையில் ராஜினாமா மூலம் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான மிகச் சரியான இடம் அதுதான்//

மொத்த கட்டுரையில் நான் உடன்படும் ஒரே விஷயம் இதுதான். ஆனால் குஜராத் இனப்படுகொலை முதல் ஈழப் படுகொலைவரை எதிர்க்கும் நடுநிலையாளர்கள்தான், விருதை திருப்பியளிப்பவர்களையும் ஆதரிக்கிறார்கள். திருப்பியளிப்பவர்கள் இழிவுபடுத்துவதையும் எதிர்க்கிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?

//இன்று மோடி அல்லது பாரதிய ஜனதாவின் நோக்கில் மக்கள் தங்கள் கோரிக்கையை நிராகரித்ததைக் கூட ஏற்றுக்கொள்ளாமல் கூச்சலிடும் சிறிய அரசியல் கும்பல்தான் இது…

கூட்டம் கூடுவது, கோஷமிடுவது, சேர்ந்து செயல்படுவது, எல்லாரும் செய்வதற்கக ஒன்றைச்செய்வது, பொதுவான குரல்களை தானும் எதிரொலிப்பது போன்றவை எழுத்தாளனுக்குரிய செயல்கள் அல்ல என்பது என் எண்ணம்…//

ஒரே கட்டுரையில் உள்ள மேற்கண்ட இரு வாக்கியங்களுக்கும் உள்ள முரண்பாட்டை உணர முடியவில்லையா? எது பொதுவான குரல்? ஆட்டுமந்தைகளை போல மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஓட்டளித்து மதவெறியர்களையும் சாதிவெறியர்களையும் பதவியில் அமர்த்துவதா? அல்லது வெகுஜன மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஒரு சில எழுத்தாளர்கள் உணர்வெழுச்சியால் உந்தப்பட்டு விருதை திருப்பியளிப்பதா?

//எம்.டி.வாசுதேவன் நாயரோ, ஆற்றூர் ரவிவர்மாவோ, யு.ஏ.காதரோ, புனத்தில் குஞ்ஞப்துல்லாவோ, எம்.முகுந்தனோ எதிர்வினை ஏதும் ஆற்றவில்லை என்பதையே நான் சுட்டிக்காட்டுகிறேன். சச்சிதானந்தனைச் சுட்டிக்காட்டி எம்.டி.வாசுதேவன் நாயரை எவரும் பிழைப்புவாதி என அங்கே வசைபாடவுமில்லை. நான் சொல்லவிழைவது அதை மட்டுமே//

எனக்கும் விருதை திருப்பியளிக்காத எழுத்தாளர்களை வசைபாடுவதில் உடன்பாடில்லைதான். ஆனால் திருப்பியளித்த எழுத்தாளர்களை 'வெறும் அரசியல் கும்பல்', 'அண்டிப் பிழைத்தவர்கள்,' 'விசுவாசம் காட்டுகிறார்கள்' என்று இழிவுபடுத்துவது ஏன் என்பதே என் பிரதான கேள்வி?"

yesu rajan

unread,
Oct 17, 2015, 4:24:03 AM10/17/15
to பண்புடன்
//எனக்கும் விருதை திருப்பியளிக்காத எழுத்தாளர்களை வசைபாடுவதில் உடன்பாடில்லைதான். ஆனால் திருப்பியளித்த எழுத்தாளர்களை 'வெறும் அரசியல் கும்பல்', 'அண்டிப் பிழைத்தவர்கள்,' 'விசுவாசம் காட்டுகிறார்கள்' என்று இழிவுபடுத்துவது ஏன் என்பதே என் பிரதான கேள்வி?"//

அருமை ஆனால் அவருக்கு புரியனுமே


யேசுராஜன்

--

ஸ் பெ

unread,
Oct 26, 2016, 9:48:28 AM10/26/16
to panbudan

தேவாங்கு

பொது

October 26, 2016


ஜெ

 

இணையத்தில் இந்த வீடியோவைப்பார்த்தேன். இந்தியன் வங்கியின் கவுண்டரில் ஒரு அம்மாள் வேலைபார்க்கும் அழகு

 

இந்தியாவின் தேசியமயமாக்கப்பட்ட அத்தனை வங்கிகளிலும் பெரும்பாலான பெண்கள் இந்த லட்சணத்திலேதான் இருக்கிறார்கள். ஒன்றுமே செய்யமுடியாது

 

காடு நாவலிலே ஒரு காட்சி வரும். தேவாங்கைப்பிடித்துக்கொண்டுவந்து வைப்பார்கள். குட்ட்ப்பன் சொல்வான் ‘நல்ல சுறுசுறுப்பு. சர்க்கார் ஆபீஸிலே கொண்டுபோய் உக்கார வைக்கணும்’ என்று

 

நாளுக்கு மூன்றுமுறை தேசியவங்கிகளுக்குப் போகிறவன் நான். வயிறு எரிகிறது

 

செந்தில்ராஜ்

சென்னை

 

 

அன்புள்ள செந்தில்ராஜ்

 

நியாயப்படி இந்தக்கிழவியை அப்படியே கப்பென்று கழுத்தோடு பிடித்து வெளியே தள்ளி மிச்ச காசைக்கொடுத்து அனுப்பவேண்டும். வீட்டில் கீரை ஆய்வதைக்கூட இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்யும்போல

 

இது திறமையின்மை மட்டும் அல்ல. நெடுங்காலமாக மூளையை எதற்குமே பயன்படுத்தாமல் வைத்திருக்கும்போது ஏற்படும் சோம்பல். அதைவிட முக்கியமாக எதிரே நிற்பவர்களைப்பற்றிய பரிபூர்ணமான அலட்சியம்

 

எனக்கு இரு தேசியவங்கிகளில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கியிலும் ஸ்டேட் வங்கியிரும் இதே அனுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. நேற்றுகூட. இவைகளை அவர்களால் ஒன்றுமே செய்யமுடியாது, சோஷலிசம்!

 

ஜெ

Ahamed Zubair A

unread,
Oct 27, 2016, 1:15:54 AM10/27/16
to பண்புடன்
காபி பேஸ்ட் மட்டும் அனுப்பாம கருத்துகளையும் எழுதேண்டா....

--

ஸ் பெ

unread,
Oct 29, 2016, 7:55:22 AM10/29/16
to panbudan

ஒரு மன்னிப்பு

பொது

October 29, 2016


வங்கி முதலிய சேவையிடங்களில் [நான் பணியாற்றிய நிறுவனத்திலும்கூட] மிகப்பெரிய பணிச்சிக்கல் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் எதையுமே கற்றுக்கொள்ள மறுக்கும்  ஊழியர்கள். மீண்டும் மீண்டும் அவர்களுக்குப் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். ஆனால் பயனிருக்காது. கவனக்குறைவு, அலட்சியம் இரண்டினாலேயே அனேகமாக வேலைக்குத்தகுதியற்றவர்கள். இவர்களில் மதுஅடிமைகள், நடுவயது கடந்த பெண்கள் அதிகம்.

 

ஆனால் தொழிற்சங்க உரிமைகள் இவர்களைப் பாதுகாக்கின்றன – தொழிற்சங்கத்தில் இருந்தவரை நானும் அதை ஆதரித்திருக்கிறேன். இது இன்றைய அரசுத்துறைகளில் உண்மையிலேயே உள்ள மிகப்பெரிய சிக்கல்.இவ்விருசாராரையும் பற்றி பலமுறை எழுதியும் இருக்கிறேன்.

 

இந்தப்பக்கம் மக்களுடன் மக்களாக நின்று பார்க்கையில் இது மிகப்பெரிய வதை. உண்மையை ஓரளவேனும் ஒத்துக்கொள்ளக்கூடிய எவருக்கும் இது தெரியும். அரசியல்சரிகளைப் பேசுவது வேறு விஷயம். அதைப்பேச வேறு பலர் இருக்கிறார்கள். என் அனுபவம், எண்ணத்தையே நான் எப்போதும் பேச நினைக்கிறேன். கூடுமானவரை என் எழுத்து என்பது நேரடியான உணர்வுப்பதிவுதான். நான் என்னை ஆன்றடங்கிய சிந்தனையாளனாக எப்போதும் முன்வைப்பதில்லை, நான் அப்படிப்பட்டவன் அல்ல. நான் உணர்வுரீதியான எழுத்தாளன் மட்டுமே.

 

அன்றுகாலை வங்கியில் எனக்கு ஏற்பட்ட இதே போன்ற அனுபவம் அது சார்ந்து வந்த மின்னஞ்சலுடன் சேர்ந்துகொண்டதனால் எரிச்சலில் இட்ட பதிவு அது. அந்தப்பதிவின் கோபமான சொற்கள் பிழையானவை என்று உணர்கிறேன்.  பி.ஏ.கிருஷ்ணன், இரா முருகன் போன்றவர்கள் எழுதியிருந்தனர். ஆகவே அப்பதிவை நீக்கும்படிச் சொன்னேன் [நான் காஞ்சிபுரம் வேலூர் பகுதியில் சமணக்கோயில்களைப் பார்க்கும் பயணத்திற்குப்பின் இன்றுகாலை தான் நாகர்கோயில் வந்தேன்]  . அதனால் புண்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

 

எப்படியானாலும் நாளும் வசை வருகிறது. உரிய காரணத்தோடு வசை இப்படி எப்போதாவதுதான் வருகிறது. அந்தவகையில் நல்லதே

 

*

 

ஜெ

 http://www.jeyamohan.in/91804#.WBSNzy197IU

தியாகு

unread,
Oct 31, 2016, 12:21:32 AM10/31/16
to பண்புடன்
achinka paddaanda autokaran :);)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

ஸ் பெ

unread,
Jun 15, 2017, 12:25:34 PM6/15/17
to panbudan

ஜெயமோகனின் அண்டப்புழுகும் ஆகாசப்புழுகும்….

நண்பர்களே….

ஜெயமோகன், ”கோவில்-நிலம்-சாதி” பற்றி எழுதிய புழுகுரையில் அவருடைய தன்மைக்கு ஏற்ப நூலின் கருத்தையே மாற்றிவிடுகிறார். இத்தகைய செயலை அவருடைய சிந்தனையற்ற அடிவருடிகள் ஆராதித்து அகம் மகிழலாம். ஆனால் சுயசிந்தனையுள்ள ஒரு எளிய வாசகனைக்கூட ஜெயமோகனால் என்றும் ஏமாற்றவே முடியாது.

”கோவில் நிலம் சாதி” நூலின் மையக் கருத்தே தமிழக வரலாற்றில் காலங்காலமாக ஆளும்வர்க்கங்களாக எந்த வகையான சாதிகள் இடம்பெற்றன என்பதுதான். சான்றாதாரங்களின் அடிப்படையில் சங்க காலத்தில் இருந்து 1920 வரை பார்ப்பன + சூத்திர உயர்சாதியினர்தான் ஆளும்வர்க்கங்களாக இடம்பெற்று இருந்தனர். தமிழ்ச்சாதிகளை காலங்காலமாக பார்ப்பனர்கள் மட்டுமே சுரண்டினார்கள் என்ற மிகப்பெரிய புழுகை, என் நூலில் இருப்பதாக ஜெயமோகன் அவிழ்த்து விடுகிறார். இன்னொருவர் கட்டுரையை தன் மனைவி எழுதியது என்று கூச்சநாச்சமின்றி பத்திரிக்கைகளில் வெளியிட்டவர்தான் ஜெயமோகன். அசந்தவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் அனுபவமிக்கவர் ஜெயமோகன்.

குறிப்பு

விஷ்ணுபுரம் நாவல் வந்த பொழுதில் நண்பர் அதியமான் சென்னையில் அந்நூலின் மீதான ஒரு விமர்சனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் ஜெயமோகனின் விசிலடிச்சான் குஞ்சுகள் அந்நூலை ஆஹா ஓஹோ என்று தலையில் தூக்கி ஆடின. அந்த நூலை ஆய்வு செய்ததில் தமிழக, அரசியல் வரலாறு, மத வரலாறு, புவியியல் வரலாறு போன்ற பல முக்கியமான கூறுகளில் கிஞ்சித்தும் அறிவில்லாத ஒருவர் எழுதிய நூலாகத்தான் விஷ்ணுபுரம் உள்ளது என்று நான் ஆதாரங்களுடன் அந்த விமர்சனக் கூட்டத்தில் பேசினேன். அப்பொழுதே இந்தப் பேச்சை ஒரு நூலாக எழுதுவேன் என்றும் குறிப்பிட்டேன். அந்த நூல் தான் ”கோவில் நிலம் சாதி”.

Reply all
Reply to author
Forward
0 new messages