தொலைநிலைக் கல்வி

1,083 views
Skip to first unread message

Ahamed Zubair A

unread,
Oct 17, 2008, 11:29:52 AM10/17/08
to panb...@googlegroups.com
என்னை ஒரு மொக்கை எழுத்தாளனாக மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு, அந்த எண்ணத்தை மாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
 
இந்தியாவில் வழங்கப்படும் தொலைநிலைக் கல்விகளுக்கான ஒரு சாளரமாக ஒரு இழையை உருவாக்க விழைந்ததின் முடிவு தான் இந்த இழை.
 
நமது கல்வி நிலையைப் பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு 20 வயதுக்குப் பிறகு படிப்பது என்பதே ஒரு பாவமான செயல் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள்.
 
ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான எதிர்பார்ப்புகள், அதற்கான முயற்சிகள் என்று எண்ணங்கள் இருப்பினும், வாழ்வு அதன் போக்கில் தான் போய்க்கொண்டிருக்கிறது..வாழ்வை கட்டிப்பிடித்து அதன் வழியிலிருந்து திருப்ப மிகக்கடுமையான முயற்சிகள் தேவையாயிருக்கிறது.
 
கல்லூரியிலிருந்து வெளிவந்து 4 ஆண்டுகளே ஆனாலும், இப்போது கல்லூரியிலிருந்து வெளிவரும் மாணவர்களுடன் போட்டியிட முடியவில்லை. அவர்களுக்கான வாய்ப்புகளும், வானமும் மிகவும் பெரியதாய் இருக்கிறது.
 
வயசாயிடுச்சி, இனிமே போய் படிக்கிறதெல்லாம் முடியாதுன்னு சொல்றவங்களுக்கு ஒரு வாய்க்காலாகத்தான் இந்த இழை பயன்பட வேண்டும் என்பது என் அவா.
 
நாங்க தான் நிறைய படிக்கிறோமே இத ஏன் தொலை நிலைக் கல்வின்னு ஒரு கட்டுக்குள் படிக்க வேண்டுமென்பவர்கள் தன்னைச்சுற்றி ஒரு முறை பார்க்கட்டும். நாம் படித்ததெல்லாம் ஒரு பட்டமாக, பட்டயமாக வைத்துக்கொள்ளலாமே...
 
உலகம் முன்னேறும் வேகத்திற்கு நாம் ஈடு கொடுக்காதபோது நம்மை கசடாக ஒதுக்கிவிடும் அபாயம் இருக்கிறது.
 
என்ன நண்பர்களே ஏதேனும் கருத்து வேறுபாடுகள்???
 
மிக முக்கியமான விஷயம், எனக்கு விமர்சனங்காள் வேண்டும்.. அது இல்லாத போது யாருக்காக இதை எழுதுகிறோம் என்று ஒரு எண்ணம் தோன்றினால் அந்த இடத்திலேயே இதை நிறுத்தவேண்டிய சாத்தியம் அதிகம்..
 
நான் இதுவரை நிறைய பாராட்டுக்கள்/விமர்சனங்கள் பெற்று இப்போது அதுவே அளவுக்கு அதிகமாய் போன தளத்திலிருந்தோ, அல்லது பாராட்டுக்கள்/விமர்சனங்கள் பாதிக்காத ஒரு தளத்திலிருந்தோ வரவில்லை. பாராட்டுக்களுடன், விமர்சனங்களும் தேவை.
 
புரிதலுக்கு மீண்டும் நன்றிகள்.

ஆசாத்

unread,
Oct 17, 2008, 11:43:23 AM10/17/08
to பண்புடன்
> <ahamedzub...@gmail.com> wrote:
> உலகம் முன்னேறும் வேகத்திற்கு நாம் ஈடு கொடுக்காதபோது நம்மை கசடாக
> ஒதுக்கிவிடும் அபாயம் இருக்கிறது.

இனிய சுபைர்,

தொலைநிலைக்கல்வியின் பலனை அனுபவித்துக்கொண்டிருப்பவன் நான். இங்கே
(துபாய்) வருவதற்கான விசா புறத்திட்டு மேலாளர் (ப்ராஜெக் மேனேஜர்) என்றே
எடுக்கப்பட்டது. இங்குதான் உங்களுக்குத் தெரியுமல்லவா, அனைத்து கல்வித்
தகுதிகளும் எம்போஸ்ட் (எமிரேட்ஸ் போஸ்ட்) என்னும் அரசு நிறுவனம் வழியாக
உரிய பல்கலைக் கழகத்தில் சரிபார்க்கப்படும். எனது கல்வித் தகுதியை
எம்போஸ்ட்டார் சரிபார்த்த பின்னரே வேலை செய்யும் உரிமம் (பத்தாக்கா -
அரபியில்) வழங்கப்பட்டது.

அந்தக் கல்வித்தகுதி தொலைநிலைக்கல்வியால் வந்ததுதான்.

(தொலைநிலைக் கல்வியில்லையேல், வேறு ஏதாவது ஒரு வழியில்
பிழைத்துக்கொண்டுதான் இருப்பேன் அதுவேறு விஷயம்)

இன்றைக்கு +2 முடித்து வணிகவியல் இளங்கலையை மாலைநேரக் கல்லூரியில்
பயின்று, சான்றிதழ் கணக்காயர் (சி.ஏ.) படிப்பிற்கான அடிப்படையை
சென்னையில் பயின்று, வணிகவியல் இளங்கலையை முடிக்கும்போது, கணக்காயர்
இடைநிலைக்கும் (சி.ஏ. இன்டர்) தயாராகியிருக்கும் சில மாணவர்களைக்
கண்டிருக்கிறேன்.

தொலைநிலைக்கல்வியையும், மாலைநேரக்கல்லூரியையும் ஒருமாதிரியாகப்
பார்த்ததெல்லாம் ஒருகாலம். இப்பொழுதெல்லாம் அது கரஸ்ல பண்ணேன், இது கரஸ்ல
பண்ணேன் என்பதைச் சொல்வதும் மாணவர்களின் கிரீடத்தில் சிறகாக
இருக்கின்றது.

அன்புடன்
ஆசாத்

ஆசாத்

unread,
Oct 17, 2008, 11:47:42 AM10/17/08
to பண்புடன்
> <banua...@gmail.com> wrote:
> புறத்திட்டு மேலாளர் (ப்ராஜெக் மேனேஜர்) என்றே
> எடுக்கப்பட்டது.

அன்புடையீர்,

இது தகவல்தொழில்நுட்ப புறத்திட்டு அன்று; பொறியியல் புறத்திட்டு.

N Suresh

unread,
Oct 17, 2008, 11:50:36 AM10/17/08
to panb...@googlegroups.com
இதுவரை ஒழுங்காக எழுதி வந்த தாங்கள் இந்த இனிய மடலில் திடீரென்று ஒரு
ப்ரேக் போட்டு இந்த மடலே மொக்கை மடல் என்று சொன்னீர்கள் பாருங்கள்,,
ஆகா!! பாராட்டுகிறேன். மொக்கையென்றால் மொட்டை மாடியிலிருந்து மொனலிசா
புன்னைகைக்கு கைகளை அசைப்பதா இல்லை இது போன்ற மடல்களே என்று சொல்லும்
நேரம் மழை வருகிறது அதற்கொரு கவிதை... அப்போதே ஒரு மலர் மலர்கிறது....
எல்லாம் சேர்ந்து ஒரு மொக்கை என்ற புள்ளியில் நிற்கிறது போன்ற புள்ளிகள்
இருக்கும் இந்நாட்டில் எப்படித்தான் புளி விலை ஒரு கிலோ ஒரு கோடி என்று
விற்காமல் இருக்கும் என்று நன்கு யோசித்து பொருளாதாரத்தைப் பற்றி
எல்லோரும் அஞல் வழி கல்வி பயிலவேண்டும் என்று சொல்கின்ற இந்த மடல் அதீத
பாராட்டிற்குறியது என்று எல்லோரும் ஒப்புக்கொள்வார்கள் என்பதில் சந்தேகம்
என்ன??? :-))

இப்படியெல்லாம் எழுத எனக்கு தெரியலையே ஐயா!!!
நான் என்னத்தே சொல்வேன்.. எபபடி அழுவேன்.. ஏ ..ஏஎ... ஆ ஆஅ
ஒப்பாரி பாடி நான் பின்னுட்டம் இடவா ...ஆஆ ஔச்ச்.
இப்படி பாடவச்ச மடல நான் என்ன சொல்லா ஆஆஆ ஔச்ச்....

:-((((((((((((((((((((

N Suresh

unread,
Oct 17, 2008, 11:53:38 AM10/17/08
to panb...@googlegroups.com
அன்புள்ள சுபைர் என்று எழுத மறந்துட்டேன்:-)) மன்னிக்கனும்.
கீழ்காணும் மடல் ஐயா சுபைருக்கே தான்:-))

Ahamed Zubair A

unread,
Oct 17, 2008, 11:56:23 AM10/17/08
to panb...@googlegroups.com
அதுமேல்க்காணும் மடல்னுல இருக்கணும்...
 
அன்புடன்,
சுபைர்

Ahamed Zubair A

unread,
Oct 18, 2008, 8:25:05 AM10/18/08
to panb...@googlegroups.com
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில், IGNOU.
 
புதிதாக ஒரு படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
 
சான்றிதழ் படிப்பு (6 மாதம்)..
 
90% வலைமனையில் படிக்கக்கூடிய வாய்ப்பு...
 
படிப்பின் பெயர்
 
முதுநிலை மேலாண்மை புறத்தெற்று மானவச் சான்றிதழ்
 
Post Graduate Certificate in Project Management (PGCPM). (இப்படி தமிழ்ல சொல்லியிருக்கலாம் ;-))
 
இந்தப் படிப்பு இந்திய புறத்தெற்று மானவ அமைப்பின் அங்கீகாரம் பெற்றது. (International Project management Association - IPMA, Netherlands and Project Management Association in India)
 
4 பாடப்பிரிவுகள்.. ஒரு பிரிவின் பாடங்கள் முடிந்ததும் தேர்வு..பிறகு அடுத்த பாடம்.. அத்தனையும் இணையதளத்தில்.
 
மொத்தமாக 4 பாடப்பிரிவும் முடிந்தவுடன், தேர்வு..2 மணி நேரம்..
 
தேர்வுகள் அங்கீகரிக்கப்பட்ட மையங்களில். 6 மாதத்திற்கு ஒரு முறை..
 
கல்விக்கட்டணம் - 6100 ரூபாய் மட்டும்.
 
இன்னும் என்ன தயக்கம் சேரலாம் தானே??
 
வலை முகவரிகள்..
 
 
படிப்பு வழங்கப்படும் முகவரி..
 

ஆசாத்

unread,
Oct 18, 2008, 11:16:04 AM10/18/08
to பண்புடன்
> <ahamedzub...@gmail.com> wrote:
> முதுநிலை மேலாண்மை புறத்தெற்று மானவச் சான்றிதழ்
> Post Graduate Certificate in Project Management (PGCPM

முதுநிலை பட்டச்சான்றிதழ் - புறத்திட்டு மானகை

Ahamed Zubair A

unread,
Oct 18, 2008, 11:50:25 AM10/18/08
to panb...@googlegroups.com
ஓ..இந்த இழையை படிக்கக்கூட செய்றீங்களா??
 
ஒரு பதிலும் வராம யாரும் படிக்கலையோன்னு நினைச்சேன்..

2008/10/18 ஆசாத் <banu...@gmail.com>

ஆசாத்

unread,
Oct 18, 2008, 2:09:00 PM10/18/08
to பண்புடன்
> <ahamedzub...@gmail.com> wrote:
> ஓ..இந்த இழையை படிக்கக்கூட செய்றீங்களா??

ராஸ்ஸா,

இப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா. குழுமத்துல வர்ர எல்லா மடலையும்
எல்லாரும் படிக்கணும், எல்லாரும் பின்னூட்டம் போடணும்னு இருந்துச்சுன்னு
வைங்க, ஆணியெல்லாம் புடுங்காம வூட்ல உக்காந்து குழுமத்துல வர்ர
மடலுங்களுக்கு பின்னூட்டம் போட்டுக்குனுதான் இருக்கணும். அப்புறம்
அதுக்கு அகலப்பாட்டைக்கு கட்டணம் கட்ட எங்கேர்ந்து துட்டு கொணார்ரது?

எல்லாரும் எல்லாத்தையும் படிக்கணும்னு நெனைக்கவும் கூடாது, பின்னூட்டம்
வந்து வுழுந்தாத்தான் எழுதறதுக்கு அர்த்தம் இருக்குன்னு நெனைக்கவும்
கூடாது. நாம பாட்டுக்கு எழுதணும். எழுதறத நல்லா எழுத முயற்சி பண்ணனும்.
அப்பப்ப மெனக்கெடணும், சுட்டியெல்லாம் எடுத்து வெட்டி
ஒட்டுனீங்கல்ல...அந்த மாதிரி.

படிச்சா படிக்றாங்க படிக்கலேன்னா படிக்கல, பின்னூட்டம் போட்டா போடறாங்க
போடலேன்னா இல்ல...சல்தாஹைன்னு வுட்டுட்டுப் போக மொதல்ல கத்துக்கணும்.
'டோண்ட் க்ரை ஓவர் எ ஃப்ளாட் ஜோக்' அப்படீன்னு டோஸ்ட்மாஸ்ட்ர்ஸ்ல
சொல்லுவோம். ஒருஜோக்குக்கு சிரிக்கலையா, அதுக்காகக் கவலைப்பட்டு அந்த
ஜோக்க விளக்கிக்கினு சிரமமேபடக்கூடாது, அடுத்ததுக்கு போயிறணும்.

இழைலயும் அப்படித்தான் விட்டுட்டுப் போய்க்கினே இருக்கணும்.

இப்பக்கூட பாருங்க, 'புறத்தெற்று' புறத்திட்டு - அப்படீன்னு சரியா
எழுதுனேன், அதுக்கு எதுனாச்சும் பதில் சொன்னீங்களா? இல்ல.

'மானவ' மானகை - அப்படீன்னு மாத்தி எழுதுனேன், அது ஏன் என்னா எங்கேர்ந்து
அப்படிச் சொல்றீங்க அப்படி இப்படி எதுனாச்சும் தமிழாக்கத்துல பின்னூட்டம்
போட்டீங்களா? இல்லியே.

சும்மனாச்சும் குன்சா *படிக்றீங்களா* அப்படீன்னு நக்கலோ கோவமோ கிண்டலோ
சலிப்போ ஏதோ ஒண்ணு இருக்ற பின்னூட்டம்தான போட்டீங்க. அதுக்கு நான்
வருத்தப்படக்கூடாது, இப்படிப் பொறுமையா எழுதணும்னு தோணுச்சுன்னா
எழுதணும், இல்லேன்னா சல்தாஹைன்னு போயிரணும்.

குழுமம் ராஸ்ஸா, குழுமம். முன்னூத்திச்சொச்சம் மக்கள் உலாவா எடம், நம்ம
இவ்ளோ கஷ்டப்படறோம் நம்ம மேல வெளிச்சம் வுழலியேன்னு நெனைக்கக்கூடாது.
பாவனா மேல வுழுந்துச்சுல்ல, அவ்வளவுதான். இதுனால வுட்றாதீங்க, தொடர்ந்து
இந்த இழையை புதுப்பிச்சுக்கினே இருங்க. ஒருநாளைக்கு ரெண்டு மடல் வர்ர
மாதிரி பாத்துக்கங்க, கூகிள கொஞ்சம் கவனிச்சு தோராயமா எத்தினிபேரு உங்க
மடல்களப் பாக்குறாங்கன்னு சும்மா ஒரு கண்ணு வைங்க.

சொல்லணும்னு தோணுச்சு சொல்றேன். புடிச்சா எடுத்துக்கோங்க, 'பெருசு
அடங்குயா'ன்னு சொல்லணுமா சொல்லிக்கங்க.

ezhil

unread,
Oct 18, 2008, 2:18:55 PM10/18/08
to panb...@googlegroups.com
அருமையாக, இதமாக சொல்லியிருக்கிறீர்கள், ஆசாத்!

Ahamed Zubair A

unread,
Oct 18, 2008, 3:28:06 PM10/18/08
to panb...@googlegroups.com
ஆசாத் அண்ணன்,
 
//ஓ..இந்த இழையை படிக்கக்கூட செய்றீங்களா??//
பாவனா இழைக்கும், அதன் தொடர்ச்சிக்கும் கிடைத்த வரவேற்பு இந்த முயற்சிக்கு இல்லை எனும்போது கொஞ்சம் ஆதங்கம் இருப்பது இயல்பு.
 
சில பல தளங்களை, எழுத்துலகங்களை காணாத என்போன்றவர்கள் எழுதும்போது அத்ற்கான வரவேற்பு இருக்கிறதா?? என்ற ஆசை இருக்கவேண்டும். இல்லை, அப்படில்லாம் இல்லை, யார் கவனிச்சா என்ன?? கவனிக்காட்டி என்ன?? என்று போவதாக இருந்தால், குழுமத்தில் எழுத வேண்டிய அவசியம் இருக்காது,
 
வீட்டில் கிடக்கும் ஆயிரம் நோட்டுப்புத்தகங்களில் எழுதி வைத்திருக்கலாம். சிலருக்கு பயன்படுமே என்ற ஆசையில் எழுதும்போது, அதன் மெய்யான எண்ணம் சென்றடையாவிட்டால் என் எழுத்தால் எந்த பயனும் இருக்காது.
 
குழுமத்தினை விட சிறப்பானதொரு வகையில் என் ஆதங்கத்தை/எண்ணங்களை பகிர்ந்திருக்கலாம். இந்த வார்த்தையை நான் உங்களிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கலாம்.
 
புறத்தெற்று என்பது மருவி புறத்திட்டு என எடுத்தாளப்பட்டுள்ளது. அந்த "திட்டு" என்பது திட்டமிடல் உள்ளிட்ட பலவாறான சொல்களுக்கு காரணியாக இருப்பதால், புறத்திட்டு என்பதே சரி. மானகை என்பதும் அப்படியே..
 
சில ஆண்டுகளுக்கு முன் என் நினைவுக்கிட்டங்கியில், இருத்தியிருந்த சொற்களை எடுத்தாண்டிருந்தேன். இனி கவனமாக இருக்கவேண்டும்.
 
புறத்திட்டு மானகை என்பதற்கான விளக்கம் ஐயா இராம.கி. அவர்களின் வலைப்பூவிலிருந்து..
 
 
தவறினை சுட்டிக்காட்டியதற்கும், அழகான ஆலோசனைகளுக்கும் நன்றி.
 
அன்புடன்,
சுபைர்
 
2008/10/18 ஆசாத் banu...@gmail.com


இப்பக்கூட பாருங்க, 'புறத்தெற்று' புறத்திட்டு - அப்படீன்னு சரியா
எழுதுனேன், அதுக்கு எதுனாச்சும் பதில் சொன்னீங்களா? இல்ல.

'மானவ' மானகை - அப்படீன்னு மாத்தி எழுதுனேன், அது ஏன் என்னா எங்கேர்ந்து
அப்படிச் சொல்றீங்க அப்படி இப்படி எதுனாச்சும் தமிழாக்கத்துல பின்னூட்டம்
போட்டீங்களா? இல்லியே.

Ahamed Zubair A

unread,
Oct 18, 2008, 4:16:33 PM10/18/08
to panb...@googlegroups.com
பல்கலைக் கழகங்களை பல வகைகளில் பிரிக்கலாம்.
 
அரசின் உதவியைப் பொறுத்து,
 
1. மத்திய பல்கலைக்கழகங்கள்
2. மாநில பல்கலைக்கழகங்கள்
3. தனியார் பல்கலலக்கழகங்கள்
 
தனியார் பல்கலைக்கழகங்களிலும் அரசின் உதவி இருக்கத்தான் செய்யும்.
 
கல்விமுறையைப் பொறுத்து,
 
1. திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள்
2. சாதாரண பல்கலைக்கழகங்கள்
 
ஒவ்வொரு கல்வி நிறுவனமும், பல்கலைக்கழகங்களுடன் இணைந்தோ அல்லது அதன் அங்கீகாரத்துடனோ இருக்கவேண்டியது முக்கியம்.
 
இந்தியாவின் கல்வி முறை
 
10+2+3+2+3
 
10 - பத்தாம் வகுப்பு வரை
2 - அடுத்த இரண்டு ஆண்டுகள்
3 - இளநிலை படிப்பு (பொறியியல் 4 ஆண்டுகள், மருத்துவம் 5.5 ஆண்டுகள், ஆர்க்கிடெக்ட் - 5 ஆண்டுகள் போன்ற சில வித்தியாசங்களும் உண்டு)
2 - முதுநிலை இரண்டு ஆண்டுகள்
3 - முனைவர் (இதில் 1 ஆண்டு M.Phil. ஆகவும் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆராய்ச்சிக்கும் செலவிடலாம்).
 
இங்கு குறிப்பிட வேண்டிய அம்சம், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதற்கான வரைமுறைகளை வைத்திருக்கிறது. அதன்படி செயலாற்றுகிறது.
 
இங்கு, திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களைப் பற்றி காண்போம்.
 
எந்தவொரு அடிப்படை கல்வியும் இல்லாத ஒருவர் 21 வயது நிரம்பினால் நேரடியாக பட்டப்படிப்பில் சேரலாம். இது திறந்தவெளிக்கல்வியின் சிறப்பம்சம்.
 
மத்திய அரசின் திறந்தவெளிப் பல்கலைக் கழகம் - இந்திராகந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் (Ignou)
 
மாநில அரசின் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:
,
1.

DR. B.R. AMBEDKAR OPEN UNIVERSITY (BRAOU), HYDERABAD, A.P.

2. VARDHMAN MAHAVEER OPEN UNIVERSITY (VMOU), KOTA, RAJASTHAN
3. NALANDA OPEN UNIVERSITY (NOU). PATNA, BIHAR
4. YASHWANTRAO CHAVAN MAHARAHSTRA OPEN UNIVERSITY (YCMOU), NASHIK, MAHARASHTRA
5. MADHYA PRADESH BHOJ OPEN UNIVERSITY (MPBOU), BHOPAL, M.P.
6. DR. BABASAHEB AMBEDKAR OPEN UNIVERSITY (BAOU), AHMEDABAD, GUJARAT
7. KARNATAKA STATE OPEN UNIVERSITY (KSOU), MYSORE, KARNATAKA
8. NETAJI SUBHAS OPEN UNIVERSITY (NSOU), KOLKATA, W.B.
9. U.P. RAJARSHI TANDON OPEN UNIVERSITY (UPRTOU), ALLAHABAD, U.P.
10. TAMIL NADU OPEN UNIVERSITY (TNOU), CHENNAI, TAMIL NADU
11. PT. SUNDERLAL SHARMA OPEN UNIVERSITY (PSSOU), BILASPUR, CHHATTISGARH
12. UTTARANCHAL OPEN UNIVERSITY, HALDWANI, (NAINITAlL), UTTARANCHAL
13. K. K. Handique State University,Guwahati, Assam
 
ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், மஹராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, மேற்கு வங்காளம், உத்திர பிரதேசம், தமிழ்நாடு, சட்டீஸ்கர், உத்தராஞ்சல் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்கள் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களை திறந்துள்ளன.
 
அடுத்த இழையில் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தினைப் பற்றிப் பார்ப்போம்.

jmms

unread,
Oct 18, 2008, 11:35:27 PM10/18/08
to panb...@googlegroups.com
மிக உபயோகமான இழை.. நல்ல காரியம் செய்கிறீர்கள். வாழ்க வளர்க...

ஆசாத்

unread,
Oct 19, 2008, 4:53:03 AM10/19/08
to பண்புடன்
> மிக உபயோகமான இழை.

அப்புறம் என்னாங்க சுபைர். இதோ மக்கள் படிக்றாங்க, தகவல்களத் தந்துக்கினே
இருங்க.

Ahamed Zubair A

unread,
Oct 19, 2008, 8:54:16 AM10/19/08
to panb...@googlegroups.com
திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களின் முக்கிய கூறு, நமக்கான நேரத்தில் விரும்பிய நேரத்தில், விரும்பிய பாடங்களைப் படிக்கலாம்.
 
தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்பட்டு வரும் பாடப் பிரிவுகள்..
 
1. முதுநிலைப்பாடங்கள்.
 
M.B.A. (முதுநிலை தொழில் மேலாண்மை) - இரண்டாண்டு - 7,500 ரூபாய் ஆண்டுக்கட்டணம்
 
M.B.A in Shipping and Logistics Management (முதுநிலை தொழில் மேலாண்மை சிறப்புப்பாடம் - கடல் மற்றும் தரைசார் ஏற்றுமதி/இறக்குமதி) - வேலைவாய்ப்பு அதிகமுள்ள பாடம் - இரண்டாண்டுகள்
 
M.A. (முதுநிலை கலைப்பாடங்கள் - தமிழ், ஆங்கிலம், வரலாறு, மக்கள் நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல், பொருளியல் மற்றும் உளவியல்) - இரண்டாண்டு - 1,500 ரூபாய் ஆண்டுக்கட்டணம்
     M.A - English    M.A - Tamil     M.A - History
     M.A - Public Administration   M.A - Political Science      
     M.A - Sociology    M.A - Economics   M.Sc - Psychology

முதுநிலை வர்த்தகம் (M.Com) - இரண்டாண்டு - 1,500 ரூபாய் ஆண்டுக்கட்டணம்
 
முதுநிலை கணிதவியல் (M.Sc. Mathematics) - இரண்டாண்டு - 1,500 ரூபாய் ஆண்டுக்கட்டணம்
 
முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் (M.C.A.) - மூன்றாண்டுகள் - 12,000 ரூபாய் ஆண்டுக்கட்டணம்
 
2. இளநிலைப் பாடங்கள்
 
மேல் குறிப்பிட்ட பாடங்களுடன்,
 
இளநிலை சமூக சேவை, இளநிலை சுற்றுலா, இளநிலை இலக்கியம், இளநிலை அறிவியல் (விருந்தோம்பல் மற்றும் விடுதி மேலாண்மை)
 
மூன்றாண்டு படிப்புகள் - ஆண்டுக்கட்டணம் - 2,500 ரூபாய் முதல் 6,500 ரூபாய் வரை.
 
3. இளநிலை கல்வியியல்
 
4. மற்றும் சில சான்றிதழ், பட்டைய படிப்புகள்
 
மேற்குறிப்பிட்ட அத்தனை பாடப்பிரிவுகளும் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றவை. இவை மூலம் மத்திய் மாநில அரசுகளின் போட்டித்தேர்வுகளின் பங்குகொள்ளவும் இயலும்.
 
இந்த பாடப் பிரிவுகளுள் சிறப்பானது என நான் கருதுவது,
 
//M.B.A in Shipping and Logistics Management (முதுநிலை தொழில் மேலாண்மை சிறப்புப்பாடம் - கடல் மற்றும் தரைசார் ஏற்றுமதி/இறக்குமதி) - வேலைவாய்ப்பு அதிகமுள்ள பாடம் - இரண்டாண்டுகள்//
 
To provide a holistic view of the sector, integrating various aspects viz, Ship Management, Liner Shipping, Ship Agency Management, Port & Terminal Management, Maritime Law, Maritime Economics, Freight Forwarding, Logistics and Supply Chain Management.
 
இன்றைய நாட்களில் தாராள மயமாக்கல் சந்தைகளையும், வாய்ப்புகளையும் திறந்திருக்கிறது. ஏற்றுமதி, இறக்குமதிக் கொள்கைகளின் மாற்றங்கள் சந்தைகளில் சிறப்பான போட்டியை உருவாக்கி இருக்கிறது.
 
இந்த பாடம் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டியதில்லை. இந்த பாடத்தின் மூலம் பல புதிய வாய்ப்புகள் நம்மைச் சுற்றி இருப்பதை உணரலாம்.
 
கடல்சார் துறைகள் மட்டுமின்றி, கொள்முதல் துறைகளிலும் புகுந்து விளையாடலாம்.
 
கடல்போல் வாய்ப்புகள் குவிந்து கிடக்க கரையில் என்ன வேடிக்கை???
 
மற்ற விவரங்கள்,
 
 
அன்புடன்,
சுபைர்
 
2008/10/19 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

lucky shajahan

unread,
Oct 19, 2008, 9:33:18 AM10/19/08
to panb...@googlegroups.com
பயனுள்ள பதிவு சுபைர்.. நான் இங்கு ரியாத் - சௌதி அரேபியாவிலிருந்து
MBA படிக்க இயலுமா?
 
நீங்கள் குறிப்பிட்டது தவிர வேறு ஏதும் தொழில்நுட்ப துறை தொடர்பாக
படிக்க இயலுமா?
 
தொடருங்கள்.. ஆர்வமுடன் காத்திருக்கிறேன்


 
2008/10/19, Ahamed Zubair A ahamed...@gmail.com:
--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

Ahamed Zubair A

unread,
Oct 19, 2008, 10:07:55 AM10/19/08
to panb...@googlegroups.com
நான் சவூதியில் இருக்கும் போதுதான் MBA (Finance) படித்தேன். அது அழகப்பா பல்கலைக் கழகத்தில்..
 
அதற்கு இந்தியாவில் ஒரு ஆள் இருக்க வேண்டும். DD எடுப்பதற்கும், நீங்கள் அனுப்பும் விண்ணப்பங்களை சேர்ப்பிப்பதற்கும்..
 
அழகப்பா பல்கலைக்கழகத்தை நான் தேர்ந்தெடுத்ததின் பிண்ணனி
 
1. அறந்தாங்கிக்கு பக்கம் (காரைக்குடி 30 KM - அப்பா அடிக்கடி போய் வரலாம்)
2. நுழைவுத்தேர்வு இல்லை.
3. கடைசி செமஸ்டரில் ப்ராஜக்ட் கட்டாயம் இல்லை.
4. நேர்முக வகுப்புகள் கட்டாயம் இல்லை
5. பரீட்சை காலங்கள் சுலபமாக கணிக்கலாம். (ஜூன் அல்லது டிசம்பர் மாதங்கள்)
6. தமிழகம் முழுக்க கல்விமையங்கள் உள்ளன.
 
மேலதிக தகவல்கள்
 
 
இல்லைங்க, என்னால முடியாது நான் ஊருக்கு போனா படிக்க முடியாதுன்னு நினைச்சா,
 
இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகம் இருக்கவே இருக்கு...
 
 
இதில என்ன பிரச்சினைன்னா காசு...ஒரு கோர்ஸ் 940 சவூதி ரியால். மொத்தம் 21 கோர்ஸ் முடிச்சா  தான் பட்டம்.. 940 x 21 = இதுக்கு ஊர்ல ஒரு கார் வாங்கிடலாம்.
 
MBA படிப்பு படிக்க ஏத்த இடம் இந்தியா..
 
ஒரு முக்கியமான விஷயம், இந்த நேரத்தில எந்த தனியார் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்துடாதீங்க.
 
மத்திய அரசின் கவனத்தில் உள்ள ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டால், தனியார் பல்கலைக்கழகங்களின் தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூடப்படக்கூடிய அபாயம் இருக்கிறது.
 
அதனால, MBA அங்கீகரிக்கப்பட்ட அரசு பல்கலைக் கழகங்களில் படிப்பதே சாலச் சிறந்தது.
 
அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைய முகவரி
 
 
உங்களின் //நீங்கள் குறிப்பிட்டது தவிர வேறு ஏதும் தொழில்நுட்ப துறை தொடர்பாக படிக்க இயலுமா?// - விடை அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்.
 
அன்புடன்,
சுபைர்
 
2008/10/19 lucky shajahan <luckys...@gmail.com>
 
பயனுள்ள பதிவு சுபைர்.. நான் இங்கு ரியாத் - சௌதி அரேபியாவிலிருந்து
MBA படிக்க இயலுமா?
  

lucky shajahan

unread,
Oct 19, 2008, 10:12:27 AM10/19/08
to panb...@googlegroups.com
நன்றி சுபைர்,
 
ஒவ்வொரு விடுப்பின் போதும் அது படிக்க வேண்டும் இது படிக்க வேண்டும்
என்றுதான் ஆர்வமுடன் விமானத்தில் கால்வைப்பேன்.
 
சென்ற முறை எந்த சூழலில் விமானத்தில் கால் வைத்தேன் என்பதை
ஆசாத் அண்ணன் மட்டுமே அறிவார் :-)
 
ஒரு வருடத்துக்குள்ளாக ஊரில் இருந்தும் ஒரு செல்லரித்த ஆணி
கூட பிடுங்க இயலவில்லை.
 
நிறைய படிக்க நினைக்கிறேன்.ஆனால் ஊர் அதற்கு சரியல்ல.. இப்போது
இரண்டு வருடத்திற்கு மேலான நேரம் இருக்கிறது..
 
இன்ஷா அல்லாஹ் உங்கள் பதிவுகள் உதவக்கூடும்.பார்ப்போம்.
 
2008/10/19, Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
நான் சவூதியில் இருக்கும் போதுதான் MBA (Finance) படித்தேன். அது அழகப்பா பல்கலைக் கழகத்தில்..

Ahamed Zubair A

unread,
Oct 19, 2008, 12:59:36 PM10/19/08
to panb...@googlegroups.com
என்னைக் கேட்டால்,
 
அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA படிப்பது சுலபம். அந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தில் கிடைக்கிறது.
 
அதனை பதிவிறக்கி, தேவையான சான்றிதழ்களுடன், DD அனுப்பினால் போதும்.
 
இதற்கு இந்தியாவில் ஒரு ஆள் இருப்பது உசிதம். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.
 
2 ஆண்டுகளில் 4 செமஸ்டர்கள், 2 ஆண்டுக்கட்டணம்.
 
இந்த பணத்தினை மட்டும் முறையாக கட்டினால் போதும். நீங்கள் போக வேண்டிய அவசியம் இல்லை.
 
என் விஷயத்தில், அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இறுதித்தேர்வு வரை 2 ஆண்டுகள், பல்கலைக்கழக படியெடுத்து வைத்ததில்லை.
 
2ம் ஆண்டு முடிந்த பிறகு நேரடியாக பரீட்சையில் அமர்ந்தேன். 21 பாடங்கள்..5 நாட்கள் காலை, மாலை இரு வேளை பரீட்சை. அடுத்த 11 நாட்கள் காலை. மொத்தம் 21 பாடங்கள் - 16 நாட்கள்.
 
அதில் 20 பாடங்கள் தேர்ச்சி. ஒரு பாடம் அவுட். பிறகு அடுத்த செமஸ்டரில் அந்த பாடம் மட்டும் எழுதினேன்.
 
மொத்தத்தில் MBA எனக்கு 17 நாட்கள் மட்டுமே. (அப்டின்னா அது எந்த மாதிரி பல்கலைக்கழகம்னு புரிஞ்சுக்கங்க:-))
 
அதில் நான் செய்த மிகப்பெரிய தவறு மதிப்பெண்களைப் பற்றி சிந்திக்காது எழுதியதுதான்.
 
54.5% மட்டும் கிடைத்தது. மேற்படிப்பிற்கு தேவை 55%. அப்புறம் வேறு ஏதாவது ரூட் எடுக்கணும்.
 
எனவே விளையாட்டாக படித்தாலும் பாஸாகிவிடலாம். ஆனால் மேற்படிப்பு பற்றி யோசிப்பவர்கள் கொஞ்சம் கவனமாக படிப்பது நல்லது.
 
அன்புடன்,
சுபைர்
 
 
2008/10/19 lucky shajahan luckys...@gmail.com
 
இப்போது இரண்டு வருடத்திற்கு மேலான நேரம் இருக்கிறது..

Ahamed Zubair A

unread,
Oct 19, 2008, 1:37:31 PM10/19/08
to panb...@googlegroups.com
தொழில் நுட்பத் துறையில், கணிணித்துறையில் மட்டுமே தற்போது முதுநிலைப் படிப்புகள் தொலைதூரக் கல்வியில் வழங்கப்பட்டு வருகின்றன.
 
இளநிலை தொழிநுட்பம் பற்றி எழுதுவதாய் இருப்பின்,
 
1. IGNOU தரும் இரண்டு பாடங்கள் இருக்கிறது (www.ignou.ac.in)
 
BTCM - Bachelor of Technology in Civil (Construction Management)
BTWRE - Bachelor of Technology in Civil (Water Resource Engineering)
 
2. Institution of Engineers in India - IEI - கொல்கத்தாவை தலைமையகமாய் கொண்டு இயங்கும் இந்த அமைப்பில் அனைத்துவகை இளங்கலை தொழில்நுட்பப் பாடங்களும் படிக்கலாம்.  (www.ieindia.org)
 
அந்த படிப்பின் பெயர் AMIE - Associate Member of Institution of Engineers (Its equivalent to B.E./B.Tech - offered by Regular colleges) 
 
3. Birla Institute of Technology & Science (BITS) - Pilani (www.bits-pilani.ac.in) மற்றும் (http://www.bits-pilani.ac.in/dlp-home/)
 
இது ஒரு அரசு உதவி பெறும் தனியார் தன்னிகர் பல்கலைக்கழகம். இங்கு சில பல நிறுவனங்களுடன் இணைந்து பல தொலை தூரக் கல்வி வகுப்புகள் நடைபெறுகிறது.
 
இளங்கலை பொறியியல் தொழில்நுட்பம் B.S. (Engineering Technology) - தற்போது அட்மிஷன் நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆண்டுகள் படிப்பு. துபாய் உள்ளிட்ட இடங்களில் பரீட்சைகள் நடத்தப்படும்.
 
மேற்குறிப்பிட்ட மூன்று பாடங்களும் அங்கீகாரம் பெற்ற பாடங்கள். மிக அண்மையில் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் (AICTE) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது என்று கூறியுள்ளனர். ஆனால், மேற்குறிப்பிட்ட மூன்றிற்கும் அங்கீகாரம் அளித்துள்ளனர். அது ஏனெனில்,
 
1. மற்ற படிப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த மூன்று அமைப்பும் பாடங்கள் நடத்துகின்றன.
2. Assignments கட்டாயம்.
3. முறையான கல்வி.
 
நான் அழகப்பாவில் MBA வாங்கியது போல் இங்கு முடியாது.
 
இவைதவிர ஆந்திரா பல்கலைக்கழகம், கர்நாடகா பல்கலைக்கழகங்களில் பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது (தொலைதூர படிப்பாக). இதற்கான அங்கீகாரம் நிலுவையில் இருக்கிறது.
 
முதுநிலைப் படிப்பு பற்றி எழுதுவதானால்,
 
1. IEI - Post graduate Diploma - முதுநிலை பட்டயம் - இரண்டு ஆண்டு படிப்பு. அது முதுநிலை பட்டமாக மாற்ற ஒரு ஆய்வறிக்கை சம்ர்ப்பிக்க வேண்டும் - 2 ஆண்டுகள் முடிந்த பின். (www.ieindia.org)
 
2. அண்ணா பல்கலைக்கழகங்கள் - தமிழகம் முழுக்க
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப தொலைதூரப்படிப்புகள் (www.annauniv.edu)
 
M.Sc.
  • Computer Science 
  • Computer Technology 
  • Information Technology
  • Software Engineering
கோவை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப தொலைதூரப்படிப்புகள் (http://www.annauniv.ac.in/))
 
மேற்கூறிய படிப்புகளுடன் Software Project & Quality Management படிப்பும் வழங்கப்படுகிறது
 
3. மேலும் சில படிப்புகள் - கணிணி துறையிலேயே இருக்கின்றன.
 
அனைத்து பல்கலைக்கழகங்களும்
 
M.C.A. படிப்பினையும் M.Sc. (Computer Science) படிப்பினையும் தொலைதூர படிப்பாக வழங்குகின்றன.
 
அன்புடன்,
சுபைர்
 
 
2008/10/19 lucky shajahan luckys...@gmail.com

Gokul Kumaran

unread,
Oct 19, 2008, 4:28:16 PM10/19/08
to panb...@googlegroups.com
2008/10/19 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
என்னைக் கேட்டால்,
 
அழகப்பா பல்கலைக்கழகத்தில் MBA படிப்பது சுலபம். அந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விண்ணப்பங்களும் இணையத்தில் கிடைக்கிறது.
 

வெறும் வயதை அடிப்படையாகக் கொண்டு திறந்தவெளிப்பல்கலைக் கழகங்களில் UG டிகிரி படிப்பது போல், எம்.பி.ஏ-வும் படிக்க இயலுமா? அதாவது எந்தவொரு UG டிகிரியும் இல்லாமல், நேரடியாக எம்.பி.ஏ. படிக்க இயலுமா?


--
ப்ரியத்துடன்,
கோகுல்

Asif Meeran AJ

unread,
Oct 20, 2008, 8:09:33 AM10/20/08
to panb...@googlegroups.com
மொத்தத்தில் MBA எனக்கு 17 நாட்கள் மட்டுமே. (அப்டின்னா அது எந்த மாதிரி பல்கலைக்கழகம்னு புரிஞ்சுக்கங்க:-))

எனக்கு தொலைதூர கல்வி அஞ்சலில் துளியும் நம்பிக்கை இல்லாமல் போனது இது போன்ற கேலிக்கூத்துகளால்தாம். நானும் ஒருமுறை பலகலைக்கழகம் ஒன்றில் விண்ணப்பித்திருந்தேன். ஆரம்பமெல்லாம் படு ஜோராக இருந்தது. புத்தகங்கள் வரத் துவங்கின. ஆர்வமாகப் படித்தேன். நானே விரும்பி எடுத்த துறையென்பதால் மேலதிக விபரங்களையும் புரிந்து கொண்டு தினமும் பாடங்களை வாசிக்கத் துவங்கினேன். பாடத்தின் கடைசியில் பயிற்சித்தாளும் அதை முறையாகப் பூர்த்தி செய்து சென்னையிலுள்ள அவர்களது நேரடி கல்விக்கூடத்தில் சேர்ப்பதற்கான நாளும் குறிக்கப்பட்டிருந்தது

மிகுந்த் ஆர்வத்துடன் அதனைச் செய்து முடித்தேன் கல்லூரியில் கூட இது போல 'அஸைன்மெண்டுகளை' ஒழுங்காகச் செய்ததில்லை. குறிப்பிட்ட நாளில் அவர்களது அலுவல் சென்றேன் பாடங்களை ஒப்படைக்க.
அங்கிருந்த ஊழியர் அதை எடுத்து ஓரமாக வைத்துக் கொண்டே 'இதுக்கெல்லாம் அவசியமில்ல சார். அது சும்மா சொல்வாங்க.கண்துடைப்புக்கு -  கடேசில பரிட்சை எழுதுங்க போதும்'ன்னாரு. அதோடு விட்டொழித்தேன்

என் தம்பி இங்கே எம்,பி.ஏ படிக்கிறான். (Xaviers Labour Relations Institue ) வாரம் முழுதும் ஆறு நாட்கள் மூன்று மணி நேரம் தினமும். வார இறுதியிலும் கூட ஏதேனும் புறத்திட்டுகள். வேலை முடிந்து அங்கு ஓடி அல்லாடி களைத்து திரும்பி அவ்வளவு கடினம். போதாக்குறைக்கு 60000 திர்ஹாம்கள் ஆண்டுக்கு - கிட்டத்தட்ட ஏழரை லட்ச ரூபாய்.
இதில் பாதி கொடுத்திருந்தால் வகைக்கொன்றாக் அநலைந்து எம்பிஏ வாங்கிக் கொடுத்திருப்பேனே என்று அவனிடம் நான் கிண்டல்செய்வது வழக்கம் :-)

அவன் வாங்கப் போவதும் எம்.பி,ஏ
சுபைர் வாங்கியதும் எம்.பி.ஏ என்றால் என்ன எழவு வித்தியாசம்ய்யா இந்தக் கல்வியில்??

இதை உற்சாகக் குறைவுக்காக கேட்கவில்லை
உண்மையிலேயே தொலை தூரக் கல்வியகங்கள் தரும் கல்வியின் நம்பகத்தன்மையின்

Asif Meeran AJ

unread,
Oct 20, 2008, 8:12:43 AM10/20/08
to panb...@googlegroups.com
இதை உற்சாகக் குறைவுக்காக கேட்கவில்லை
உண்மையிலேயே தொலை தூரக் கல்வியகங்கள் தரும் கல்வியின் நம்பகத்தன்மை எம்மாதிரியானது என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்டேன்.

எனக்குப் பின்னாலும் ஒரு எம்பிஏ சேர்த்துக் கொள்ளலாமென்றிருந்த எண்ணம் எப்போதோ போய் விட்டது. :-(

Kasali Mohammed

unread,
Oct 20, 2008, 8:15:55 AM10/20/08
to panb...@googlegroups.com
Yov Asif,
 
I'm studying MBA in Anna University. Really its nice to attend classya.
 
kasali

 

Ahamed Zubair A

unread,
Oct 20, 2008, 9:52:15 AM10/20/08
to panb...@googlegroups.com
கோகுல்,
 
தற்போதைய இந்திய கல்விக்கொள்கை மேற்படிப்பு படிப்பதற்கு இளநிலைப் பட்டம் அல்லது பட்டயப்படிப்பை கட்டாயமாக்கியிருக்கிறது.
 
இளநிலைப் பட்டம் இருப்பின் வேலை அனுபவம் கட்டாயமில்லை.
 
பட்டயம் (Diploma) மட்டும் இருந்தால் வேலை அனுபவம் தேவை. கட்டாயம்.
 
ஆனால், அமெரிக்க/ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் MBA படிப்பை இளநிலை படிப்பு இல்லாதபோது தருகிறது.
 
அதில் குறிப்பிட வேண்டிய பல்கலைக்கழகங்கள்,
 
Edinburgh Business School
James Cook University (Australia)
University of Western Australia
Capilano College
Manchester Business school
 
என்னைப் பொறுத்தவரை இளங்கலை படித்த பிறகு, MBA படிப்பது சாலச் சிறந்தது.
 
அன்புடன்,
சுபைர்
 
2008/10/20 Gokul Kumaran <gokul...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Oct 20, 2008, 11:05:23 AM10/20/08
to panb...@googlegroups.com


2008/10/20 Asif Meeran AJ <asifm...@gmail.com>


மொத்தத்தில் MBA எனக்கு 17 நாட்கள் மட்டுமே. (அப்டின்னா அது எந்த மாதிரி பல்கலைக்கழகம்னு புரிஞ்சுக்கங்க:-))

எனக்கு தொலைதூர கல்வி அஞ்சலில் துளியும் நம்பிக்கை இல்லாமல் போனது இது போன்ற கேலிக்கூத்துகளால்தாம்.
 
உண்மைதான், சுபைர் போன்ற அரைவேக்காட்டுக்கள், தொழில் துறையில் 2 ஆண்டுகள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் துணை மேலாளர் பதவியில் இருப்பவர், மேலாண்மை பற்றி அறியாதவர்கள், MBA படிப்பு படிக்க கஷ்டம் தான் பட வேண்டும். இப்படி போனோமா, வந்தாமான்னு எப்படி இருக்கலாம்?

//அவன் வாங்கப் போவதும் எம்.பி,ஏ, சுபைர் வாங்கியதும் எம்.பி.ஏ என்றால் என்ன எழவு வித்தியாசம்ய்யா இந்தக் கல்வியில்??//

சர்தான்...சுபைரே படிச்சிட்டான்..இனி யார்தான் படிக்க முடியாதுன்னு எடுத்துக்கங்க அண்ணாச்சி..
 

//இதை உற்சாகக் குறைவுக்காக கேட்கவில்லை
உண்மையிலேயே தொலை தூரக் கல்வியகங்கள் தரும் கல்வியின் நம்பகத்தன்மை எம்மாதிரியானது என்பதைப் புரிந்து கொள்ளவே கேட்டேன்//
 
அதானே, மத்திய அரசின் வேலைவாய்ப்புத் தேர்வுகள் எல்லாம் ரொம்பவும் சுலபம் தான். அதனால் தான் இதுபோன்ற படிப்புகள் அதன் தரத்தை குறைத்துவிடும்  :-)
 
நாங்கள் வேலை பார்த்துக்கொண்டு படிப்பதால் இந்த சலுகை. வீட்டில் இருந்து படித்தால் இதுபோன்ற புறத்திட்டுக்கள், செய்யலாம்.
 
எங்களுக்கு ஒரு சின்ன பதவிஉயர்வு மட்டுமே கிடைக்கும். ஆனால் MBA முழுநேர படிப்பு படித்து வருபவர்கள் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம். அதற்காக கொஞ்சமாவது கஷ்டப்படட்டுமே...!!!

ஆசாத்

unread,
Oct 20, 2008, 12:24:18 PM10/20/08
to பண்புடன்
> <asifmee...@gmail.com> wrote:
> அவன் வாங்கப் போவதும் எம்.பி,ஏ சுபைர் வாங்கியதும் எம்.பி.ஏ என்றால் என்ன எழவு வித்தியாசம்ய்யா இந்தக்
> கல்வியில்??

இனிய ஆசிப்,

எந்த ஒரு கல்வியின் நோக்கமும், அறிவை வளர்ப்பதுதான். தொலைநிலையாகட்டும்,
முழுநேரமாகட்டும், மாலைநேரமாகட்டும் எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட
துறையில் உங்களை நெறிப்படுத்தவே கல்வி உதவும்.

படிக்கின்ற பல்கலைக்கழகத்திற்கேற்ப திறனிலும் மாறுபாடுகள் உண்டு,
வேலைவாய்ப்பிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. ஆனால், அவை துவக்கநிலையில்தான்
மாறுபாட்டைக் கொணரும். நாள்பட்ட பங்களிப்பில் தனிப்பட்ட திறன்களே
தொழிலில் முன்னிறுத்தும்.

விவரத்திற்கு வருகிறேன்.

உங்களுக்கு நினைவிருக்கலாம், பழைய ராயர் காப்பி க்ளப்பில் இந்த
மாலைநேரக்கல்வி முழுநேரக்கல்வி குறித்து ஓரிரு இழைகளில் நண்பர் காசியுடன்
பேசியிருக்கிறேன். முழுநேரக் கல்வி பயின்றவர்கள் மாலைநேரக் கல்வி
பயின்றவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. அதுவே தொடர்ந்து தொலைநிலைக்கும்
வந்துவிட்டது.

நானறிந்த வரையில் ஒருநேரத்தில் தனியார் பொறியியற் கல்லூரியிலிருந்து
வரும் பொறியாளர்களை கிண்டி மாணவர்களைவிடவும் குறைவாக வைத்துப்
பார்த்திருக்கிறார்கள். நாளடைவில் அது மாறிவிட்டது. இன்றைக்கு தொலைநிலையை
சற்றுக் குறைவாகத்தான் பார்க்கிறார்கள். நாளடைவில் இதுவும் மாறும்.

தொலைநிலையோ, முழுநேரமோ நமது தொழில்திறனுக்கும், தாக்குப்பிடிக்கும்
திறனுக்கும் ஏற்றவாறே முன்னேற்றமும் வருமானமும் அமையும்.

அன்புடன்
ஆசாத்

Ahamed Zubair A

unread,
Oct 20, 2008, 1:03:28 PM10/20/08
to panb...@googlegroups.com
தொலைநிலைக் கல்வி தரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தற்போது சேர்க்கை நடைபெறுகிறது.
 
பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இம்மாத இறுதி கெடுவாக அளிக்கப்பட்டுள்ளது.
 
படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் உடனடியாக முயற்சி எடுங்கள்.
 
முக்கியமான இரண்டு காரணிகள் கவனத்தில் கொள்ளவும்,
 
 
1. மத்திய/மாநில அரசின் அங்கீகாரம் - www.dec.ac.in/
 
சில பல்கலைக்கழகங்கள் UGC அங்கீகாரம் பெற்றிருந்தாலும், அவை தொலைநிலைக்கல்வி வழங்க DEC அங்கீகாரம் தேவை.
 
2. ஓராண்டு MBA மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. அதில் சேருதல் உங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. அரசின் அங்கீகாரம் இல்லாத படிப்புகளை பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை.

Gokul Kumaran

unread,
Oct 20, 2008, 1:39:05 PM10/20/08
to panb...@googlegroups.com
2008/10/20 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
கோகுல்,
 
தற்போதைய இந்திய கல்விக்கொள்கை மேற்படிப்பு படிப்பதற்கு இளநிலைப் பட்டம் அல்லது பட்டயப்படிப்பை கட்டாயமாக்கியிருக்கிறது.
 
இளநிலைப் பட்டம் இருப்பின் வேலை அனுபவம் கட்டாயமில்லை.
 
பட்டயம் (Diploma) மட்டும் இருந்தால் வேலை அனுபவம் தேவை. கட்டாயம்.
 

என்னிடம் மெக்கானிக்கல் என்ஜினியரிங் டிப்ளமோ இருக்கிறது. மற்றும் இந்திய கப்பல் படையில் 15 வருடங்கள் பணியாற்றியுள்ளேன். இந்திய கப்பல் படை தந்த கிராஜுவேஷன் ஈக்வலண்ட் சர்டிபிகேட் இருக்கிறது.

இதை மட்டும் வைத்துக்கொண்டு, இளங்கலை டிகிரி இல்லாமல், இந்தியப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.ஏ. படிக்க இயலுமா? இயலும் எனில் எந்த பல்கலைக்கழகம் அந்த வசதியைத் தருகிறது?

செல்வன்

unread,
Oct 20, 2008, 6:59:25 PM10/20/08
to panb...@googlegroups.com

ஸ்டார்பக்ஸில் 250 ரூபாய்க்கு காபி வாங்கலாம்.கையேந்திபவனில் 2 ரூபாய்க்கும் காபி வாங்கலாம்...இரண்டுக்கும் பெயர் காப்பிதான்.

ஹார்வர்டில் எம்பிஏ படித்தாலும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைகழகத்தில் படித்தாலும் எம்பிஏ எம்பிஏ தான்.

இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஏஏசிஎஸ்பி எனும் அமைப்பால் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் எம்பிஏ படிப்பது முதல் தரம்.
அதிலும் தரம் வேண்டுமென்றால் பிசினஸ் வீக் போன்ற பத்திரிக்கைகள் வெளியிடும் தரப்பட்டியலை கவனிக்கலாம்.

இந்தியாவில் எந்த எம்பிஏவுக்கும் ஏசிஎஸ்பி அங்கீகாரம் இல்லை.அதனால் உலகதரம் வாய்ந்த எம்பிஏ இந்தியாவில் கிடையாது.

இந்தியாளவில் தரக்கட்டுப்பாடு அமைப்பாக நாக் (NAAC) செயல்படுகிறது.ஏ, எ+, பி, பி+ என்ற அளவீடுகளை வழங்குகிறது.நாக்கால் தரக்கட்டுபாடு செய்யப்படாத பல்கலைகழகங்களின் டிகிரிக்கு மதிப்பே இல்லை.அவுட்லுக்,பிசினஸ்டுடே போன்ற பத்திரிக்கைகளும் எம்பிஏ டிகிரி வழங்கும் பள்ளிகளின் தரத்தை நிர்ணயிக்கின்றன

மற்றபடி தொலைதொடர்பு எம்பிஏ என்றால் அதற்கு உலகெங்கும் மதிப்பு குறைவுதான்.பிரமோஷனுக்கு படிப்பது வேறு விஷயம்.


--
செல்வன்

www.holyox.tk

செல்வன்

unread,
Oct 20, 2008, 8:22:12 PM10/20/08
to panb...@googlegroups.com
AACSB accrediated schools
 
 
நாக் அமைப்பால் அங்கீகாரம் செய்யப்பட்ட தமிழக பல்கலைகழகங்கள் 19 மட்டுமே.
 
இதிலும் ஏ, ஏபிளஸ், பைவ் ஸ்டார் ரேட்டிங் பெற்ற பல்கலைகழகங்களில் படித்தால் தான் உங்கள் டிகிரிக்கு மதிப்பு.இல்லையெனில் "பட்டம் பறக்கட்டும்" கதைதான்.

Alagappa University, Alagappa Nagar, Karaikudi - 630003
A
2 Anna University, , Chennai
Five Star
3 Annamalai University (RE-ACCREDITED) , Annamalainagar
B++
4 Avinashilingam University for Women (RE-ACCREDITED) , Coimbatore
B++
5 Bharath University, No. 173, Agharam Road, Selaiyur,, Chennai
B
6 Bharathiar University,, Coimbatore
A
7 Bharathidasan University, , Tiruchirappalli
A
8 Dr. M. G. R. University, Periyar E. V. R. High Road (NH4 Highway), Maduravoyal, , Chennai - 600095
B+
9 Gandhigram Rural University , Dindigul
Five Star
10 Madurai Kamaraj University (RE-ACCREDITED), Madurai,
A
11 Manonmaniam Sundaranar University, , Tirunelveli
B++
12 Mother Teresa Womens University, Anandagiri, Kodaikanal - 624101
B++
13 Periyar University, Karuppur, , Salem - 636011
B+
14 Sathyabama University, Jeppiaar Nagar, Old Mamallapuram Road, Chennai - 600119
B++
15 Shanmugha Arts, Science, Technology and Research Academy University(SASTRA), , Tirumalaisamudram,
B+
16 SRM Univesity, SRM Nagar, Dist. Kancheepuram, Kattankulathur
B+
17 Tamil University, Trichy Road, Thanjavur - 613005
B++
18 University of Madras (RE-ACCREDITED) , Chennai
A
19 V.I.T University , Vellore
B+

 


ஆசாத்

unread,
Oct 21, 2008, 12:16:02 AM10/21/08
to பண்புடன்
> மற்றபடி தொலைதொடர்பு எம்பிஏ என்றால் அதற்கு உலகெங்கும் மதிப்பு
> குறைவுதான்.பிரமோஷனுக்கு படிப்பது வேறு விஷயம்.

வழிமொழிகின்றேன்.

ஏற்கெனவே பணியிலிருப்போர்க்கு தொலைதொடர்பன்றி வேறு மார்க்கம் இல்லை.

பணியிலிருப்போரின் மேற்படிப்புகளை, அந்தத்துறையில் அவர்களுக்கு இருக்கும்
ஆர்வத்தின் வெளிப்பாடாகவும், முன்னேறுவதில் இருக்கும் விருப்பத்தின்
வெளிப்பாடாகவும் மனிதவளப் பிரிவுகள் எடுத்துக்கொள்கின்றன.



Ahamed Zubair A

unread,
Oct 22, 2008, 12:39:19 AM10/22/08
to panb...@googlegroups.com
கோகுல் ஐயா,
 
கொஞ்சம் ஆணிகள் அதிகமாகி விட்டது...
 
எனது முழுமையான பதிலுக்கு முன்,
 
எந்த இடத்தில் வசிக்கிறீர்கள்???
 
தேர்வு எழுதவேண்டுமென்றால் கல்வி மையங்களில் சென்று 1 வாரம் தங்கி இருக்க முடியுமா??
 
தங்களின் "கப்பல் படை தந்த கிராஜுவேஷன் ஈக்வலண்ட் சர்டிபிகேட்" எந்த பாடத்தில்?? எந்த ஆண்டு?? அல்லது முழு பெயர் ஆங்கிலத்தில் தர இயலுமா?? சர்ட்டிஃபிகேட் வழங்கிய அமைப்பின் பெயர்...ஏனெனில் கப்பல் படையில் சர்ட்டிஃபிகேட் 4 அமைப்புகள் வழங்குகின்றன...
 
அன்புடன்,
சுபைர்
2008/10/20 Gokul Kumaran <gokul...@gmail.com>
2008/10/20 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Gokul Kumaran

unread,
Oct 22, 2008, 1:07:21 AM10/22/08
to panb...@googlegroups.com
2008/10/22 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

கோகுல் ஐயா,
 
கொஞ்சம் ஆணிகள் அதிகமாகி விட்டது...
 
எனது முழுமையான பதிலுக்கு முன்,
 
எந்த இடத்தில் வசிக்கிறீர்கள்???
 
தேர்வு எழுதவேண்டுமென்றால் கல்வி மையங்களில் சென்று 1 வாரம் தங்கி இருக்க முடியுமா??
 
தங்களின் "கப்பல் படை தந்த கிராஜுவேஷன் ஈக்வலண்ட் சர்டிபிகேட்" எந்த பாடத்தில்?? எந்த ஆண்டு?? அல்லது முழு பெயர் ஆங்கிலத்தில் தர இயலுமா?? சர்ட்டிஃபிகேட் வழங்கிய அமைப்பின் பெயர்...ஏனெனில் கப்பல் படையில் சர்ட்டிஃபிகேட் 4 அமைப்புகள் வழங்குகின்றன...
 

நான் வசிப்பது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில். இன்னும் ஒரு மாதத்திற்குள் துபாய்க்குச் செல்வேன் என்று நினைக்கிறேன். விசாவுக்காகக் காத்திருக்கிறேன்.

கப்பல் படை தந்தது எந்த பாடத்திலும் அல்ல.

அந்த சர்டிபிகேட்டில் சொல்லியிருப்பது என்னவென்றால், "A matriculate ex serviceman who has put in not less than 15 year of service in the armed forces of the union may be considered eligible for the post for which the essential educational qualification prescribed is graduation" (vide Gazzette of India no.9 dated 1st March 1986)

Ahamed Zubair A

unread,
Oct 22, 2008, 2:36:54 AM10/22/08
to panb...@googlegroups.com
துபாய் வருகிறீர்களா?? சரிதான்..
 
உங்கள் சர்ட்டிபிகேட் வாசகம் சொல்வது முழுமையாக வேலை வாய்ப்புக்காக மட்டுமே..
 
எனவே அது மேற்படிப்புக்கு உதவுமா என்பது ஐயமே!!..
 
பரவாயில்லை..
 
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற PGDBA - Equivalent to MBA படிப்புகள் வழங்கப்படும் தன்னிகர் பல்கலைக்கழகங்கள், (பட்டயமும் 3 ஆண்டுகள் அனுபவமும் பெற்றவர்களுக்கு)
 
1. வெலிங்கர் மேலாண்மை கல்லூரி (www.welingkaronline.org)
2. சிம்பியாஸிஸ் மேலாண்மை கல்லூரி (www.scdl.net)
 
இன்னும் 2 கல்லூரிகள் மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாமல் வழங்கி வருகின்றன.
 
அன்புடன்,
சுபைர்

2008/10/22 Gokul Kumaran gokul...@gmail.com

Ahamed Zubair A

unread,
Oct 22, 2008, 4:05:12 PM10/22/08
to panb...@googlegroups.com
இலக்கில்லாமல் பயணிக்கும் காட்டருவியாய் எண்ணங்கள் சிதறும்போது அது உபயோகமில்லாது போகும் சாத்தியங்கள் அதிகம் இருக்கின்றன.
 
அதுபோன்ற கணங்களில் இழுத்து பிடித்து எண்ணங்களை எடுத்து வருதல் கொஞ்சம் கடினம்.
 
ஆணி பிடுங்கும் நண்பர்களுள் 3 பேர் விடுமுறை காலத்தில்.. இன்னும் ஓரிரு வாரங்கள் அவர்களின் ஆணியையும் சேர்த்து பிடுங்க வேண்டும்..
 
அதனால் முன்னைப்போல் அதிகமான மடல்கள் எழுத இயலாது..115 நாட்களுக்கு மட்டும்..
 
சரி..விஷயத்துக்கு வருவோம்..
 
நாம் பார்த்துக்கொண்டிருந்தது திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள்
 
அதிலும் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகம் மட்டுமே பார்த்திருக்கிறோம். அதிலுள்ள படிப்புகளையும் முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.
 
தமிழகத்தின் எந்த அரசு உதவி பெறும் பல்கலைக்கழகத்திலும் M.Phil. தொலைதூரக் கல்வியாக வழங்கப்படாது.
 
 
இந்த விதி தமிழக திறந்தவெளிப் பல்கலைக்கழகத்திற்கு இல்லை. தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் M.Phil. படிப்பும் வழங்கப்படுகிறது.
 
தனியார் பலகலைக்கழகங்களில், குறிப்பாக சேலம் வினாயகா மிஷன் பலகலைக்கழகத்தில் M.Phil. படிப்பு தொலைதூர படிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.www.vinayakamission.com அல்லது www.vmrf.edu.in
 
M.Phil படிப்பு 3 பாடங்களும் அதற்கான் தேர்வும், மற்றும் ஒரு ஆய்வுக்கட்டுரையும் உள்ளடக்கியது.
 
வினாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில்,
 
71 - இளங்கலை
77 - முதுநிலை
33 - முதுநிலை பட்டயம்
39 - பட்டையம்
20 - சான்றிதழ்
38 - ஆய்வியல் நிறைஞர் (M.Phil)
 
படிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்வியாண்டு மற்றும் காலண்டர் ஆண்டுகளாக சேர்க்கையும் உண்டு.
 
மீண்டும் அடுத்த வாரம் - மற்றுமொரு பல்கலைக்கழகத்துடன் சந்திக்கும்வரை (இன்ஷா அல்லாஹ்)
 
சுபைர்
 
 
//மாநில அரசின் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:
1.DR. B.R. AMBEDKAR OPEN UNIVERSITY (BRAOU), HYDERABAD, A.P.
2.VARDHMAN MAHAVEER OPEN UNIVERSITY (VMOU), KOTA, RAJASTHAN
3.NALANDA OPEN UNIVERSITY (NOU). PATNA, BIHAR
4.YASHWANTRAO CHAVAN MAHARAHSTRA OPEN UNIVERSITY (YCMOU), NASHIK, MAHARASHTRA
5.MADHYA PRADESH BHOJ OPEN UNIVERSITY (MPBOU), BHOPAL, M.P.
6.DR. BABASAHEB AMBEDKAR OPEN UNIVERSITY (BAOU), AHMEDABAD, GUJARAT
7.KARNATAKA STATE OPEN UNIVERSITY (KSOU), MYSORE, KARNATAKA
8.NETAJI SUBHAS OPEN UNIVERSITY (NSOU), KOLKATA, W.B.
9.U.P. RAJARSHI TANDON OPEN UNIVERSITY (UPRTOU), ALLAHABAD, U.P.
10.TAMIL NADU OPEN UNIVERSITY (TNOU), CHENNAI, TAMIL NADU
11.PT. SUNDERLAL SHARMA OPEN UNIVERSITY (PSSOU), BILASPUR, CHHATTISGARH
12.UTTARANCHAL OPEN UNIVERSITY, HALDWANI, (NAINITAlL), UTTARANCHAL
13.K. K. Handique State University,Guwahati, Assam//

Ahamed Zubair A

unread,
Oct 22, 2008, 4:06:45 PM10/22/08
to panb...@googlegroups.com
15 நாட்கள் மட்டும் என்பது 115 நாட்கள் என பதிவாகிவிட்டது.. தவறுக்கு வருந்துகிறேன்.

2008/10/23 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Oct 27, 2008, 1:27:55 AM10/27/08
to panb...@googlegroups.com
இந்த வாரம்
 
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் - ஹைதராபாத், ஆந்திரா.. www.braou.ac.in
 
BA, B.Com, BSc, MSc இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களும்,
 
லைப்ரரி மற்றும் தகவல் அறிவியல் இளநிலை பாடமும் வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய சிறப்பம்சம், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள GRADE - தொலைதூரக் கல்விக்கான G, ராம் ரெட்டி ஆராய்ச்சி மையம் (G. Ram reddy Research Academy for Distance Education)
 
இங்கு, Ph.D. முனைவர் பாடமும், M. Phil ஆய்வியல் நிறைஞர் பாடமும், தொலைதூர மற்றும் திறந்தவெளிப் பாடங்களில் வழங்கப்படுகிறது. (Open & Distance Education ODE)
 
இந்த பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அனனத்து கல்வி மையங்களும் ஆந்திராவில் மட்டுமே இருக்கிறது.
 
இந்த பல்கலைக்கழகம் ஆந்திரா பிரதேச திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எனவும் அழைக்கப்படுகிறது.

N Suresh

unread,
Oct 28, 2008, 6:14:34 AM10/28/08
to panb...@googlegroups.com
தகவலகளுக்கு மிக்க நன்றி
அன்புடன் என் சுரேஷ்

On 27/10/2008, Ahamed Zubair A <ahamed...@gmail.com> wrote:
> இந்த வாரம்
>
> *டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் - ஹைதராபாத்,
> ஆந்திரா.. *www.braou.ac.in


>
> BA, B.Com, BSc, MSc இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களும்,
>
> லைப்ரரி மற்றும் தகவல் அறிவியல் இளநிலை பாடமும் வழங்கப்பட்டு வருகிறது.
>
> இந்த பல்கலைக்கழகத்தின் மிக முக்கிய சிறப்பம்சம், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள
> GRADE - தொலைதூரக் கல்விக்கான G, ராம் ரெட்டி ஆராய்ச்சி மையம் (G. Ram reddy
> Research Academy for Distance Education)
>
> இங்கு, Ph.D. முனைவர் பாடமும், M. Phil ஆய்வியல் நிறைஞர் பாடமும், தொலைதூர
> மற்றும் திறந்தவெளிப் பாடங்களில் வழங்கப்படுகிறது. (Open & Distance Education
> ODE)
>
> இந்த பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை அனனத்து கல்வி மையங்களும் ஆந்திராவில்
> மட்டுமே இருக்கிறது.
>
> இந்த பல்கலைக்கழகம் ஆந்திரா பிரதேச திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எனவும்
> அழைக்கப்படுகிறது.
>
>
> //மாநில அரசின் திறந்தவெளிப் பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:
>
>>

>> *1.DR. B.R. AMBEDKAR OPEN UNIVERSITY (BRAOU), HYDERABAD, A.P.
>> *2.VARDHMAN MAHAVEER OPEN UNIVERSITY (VMOU), KOTA, RAJASTHAN


>> 3.NALANDA OPEN UNIVERSITY (NOU). PATNA, BIHAR
>> 4.YASHWANTRAO CHAVAN MAHARAHSTRA OPEN UNIVERSITY (YCMOU), NASHIK,
>> MAHARASHTRA
>> 5.MADHYA PRADESH BHOJ OPEN UNIVERSITY (MPBOU), BHOPAL, M.P.
>> 6.DR. BABASAHEB AMBEDKAR OPEN UNIVERSITY (BAOU), AHMEDABAD, GUJARAT
>> 7.KARNATAKA STATE OPEN UNIVERSITY (KSOU), MYSORE, KARNATAKA
>> 8.NETAJI SUBHAS OPEN UNIVERSITY (NSOU), KOLKATA, W.B.
>> 9.U.P. RAJARSHI TANDON OPEN UNIVERSITY (UPRTOU), ALLAHABAD, U.P.

>> *10.TAMIL NADU OPEN UNIVERSITY (TNOU), CHENNAI, TAMIL NADU
>> *11.PT <http://11.pt/>. SUNDERLAL SHARMA OPEN UNIVERSITY (PSSOU),

Ahamed Zubair A

unread,
Oct 29, 2008, 2:04:38 PM10/29/08
to panb...@googlegroups.com
இப்ப IGNOUல கன்வர்ஜன்ஸ்னு ஒரு திட்டம் ஆரம்பிச்சிருக்காங்க..
 
அதாவது,
 
ஒரு முழு நேரக் கல்லூரி - IGNOU அங்கீகரித்த தொலைநிலைக்கல்வி மையமாக செயல்படலாம். அதாவது, நாள் பூரா இன்னா க்ளாஸ் எடுக்கிறாங்களோ மத்த பசங்களுக்கு, அதேமாரி, IGNOU பசங்களுக்கும் எடுப்பாங்கோ..
 
இதுனால இன்னா ப்ரயோஜனம்,
 
1. உங்க பக்கத்துல இருக்க காலேசுக்கு போய் சாய்ங்காலம், அல்லாங்ககட்டி லீவு நாளுக்கு போய் படிச்சுக்கலாம்.
 
2. அதே காலேசுல முழுநேரம் படிக்கிற பசங்க, அவங்க என்ன பாடம் படிக்கிறாங்களோ அது ஈக்வலண்ட் படிப்ப அதே காலேஜ்ல படிக்கலாம். அதாவது, B.Sc. பசங்க B.A. படிக்கலாம், M.C.A. பசங்க M.B.A. படிக்கலாம்..அவங்களுக்கு வருஷம் மிச்சம், டிகிரியும் கிடைக்கும்.
 
3. IGNOU வழங்கும் அத்தனை பாடங்களும் இந்த முறை மூலம் வழங்கப்படுகிறது.
 
தமிழ்நாட்டுல நிறைய காலேசுல இது ஆரம்பிச்சிருக்காங்க,
 
குறிப்பா, திருச்சி ஜமால் முகம்மது, PRIST பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், மதுரைல 2 - 3 காலேசு எல்லாத்திலயும் ஆரம்பிச்சிருக்காங்க..
 
ஒவ்வொரு காலேசும் சில பாடங்கள் சொல்லித்தரும்.

ஆசாத்

unread,
Oct 29, 2008, 2:25:42 PM10/29/08
to பண்புடன்
சுபைர்,

பிட்டிபிட்டாத் தர்ர இந்தத் தகவல்களக் கொஞ்சம் கோவையாவும் எழுதி
வெய்ங்கப்பா. மெய்யாலுமே நல்லா இருக்கு. மொத்தமா ஒரு எடத்துல பதிஞ்சு
வெச்சீங்கன்னா, படிக்கணும்னு நெனைக்ரவங்களுக்கு பிரயோசனமா இருக்கும்.

Ahamed Zubair A

unread,
Oct 30, 2008, 3:12:05 PM10/30/08
to panb...@googlegroups.com
இக்னோல வெகு சீக்கிரத்தில புதுசா 4 பாடம் நடத்தப் போறாங்களாம்..தொலைநிலைக்கல்வில...
 
 
என்னென்ன பாடம்னா,
  1. M. Tech (Construction Management)
  2. Diploma in Basic Shoe Making Technology fo IGNOU -FDDI Project.
  3. B. Tech. Aeronautical Engineering.
  4. Certificate in Craft and Design (Bamboo)
இதுல ஸ்பெஷல் என்னான்னா,
 
M.Tech பாடம்லாம் தொலைநிலையா வழங்கக்கூடாதுன்னு ஒரு கருத்து இருந்துச்சு. அத அடிச்சு தூள் பண்ணிட்ட இரண்டாவது முயற்சி...
 
முதல் முயற்சி என்னாங்கிறீங்களா??
 
IEI - Indian Institute of Engineers in India - Kolkata  www.ieindia.org
 
 
இங்க 2 வருஷம் - முதுநிலை பட்டயம் படிக்கணும். அப்புறம் 6 மாசத்தில ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிச்சா M.Tech. இது இப்ப நடந்துட்டிருக்கு.
 
அப்புறம் ஏரோநாட்டிகல் - ஹ்ம்.. அதுகூட இப்ப தொலைநிலைக்கல்வியா வழங்கப்படப்போகுது..
 
பார்க்கலாம், இக்னோ என்ன பண்ண போறாங்கன்னு!!...

Ahamed Zubair A

unread,
Nov 1, 2008, 11:40:03 AM11/1/08
to panb...@googlegroups.com
இந்த தலைப்பில வர்ற இழையை யாரும் சட்டை செய்யிறதில்லன்னு (ஏன் ஒரு பேண்ட், ட்ரவுசர்லாம் செய்யிறதில்ல) மனசுக்கு கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு.
 
அப்புறம் நம்ம அண்ணன் ஆசாத் ஆறுதல் சொன்னாரு. ஒரு ரூட்டும் சொல்லிக்கொடுத்தார்.. இருக்கிற 1008 (அது என்ன ஆயிரத்து எட்டு..ஆயிரத்து ஒன்பது, பத்துலாம் இல்லாம??) வேலையில உனக்கு பதில் சொல்லிட்டிருக்க முடியாது ஆனா படிப்பாங்கன்னு சொன்னாரு.
 
இங்க ஒரு ஸ்கிரீன் ஷாட் வச்சிருக்கேன் பாருங்க மக்கா..211 பேர் படிச்சிருக்காங்க.. ஒரு ஆள் பதில் எழுதல.. நல்லா இருங்கடே... :-)
 
நான் ஊதுற சங்க ஊதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..
Screen shot.doc

jmms

unread,
Nov 1, 2008, 1:09:09 PM11/1/08
to panb...@googlegroups.com
மிக நல்ல உபயோகமான இழை... என்னத்த பதில் போடன்னுதான்   போடலை..
 
 
நல்ல காரியங்களுக்கு வரவேற்பு இல்லாட்டியும் தொடரணும்... ( அப்ப வார பதிலெல்லாம் கெட்ட காரியமான்னு பார்த்திபன் மாதிரி கேக்கப்டாது..)
 
உங்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கண்டிப்பா இருக்குமே...:)
 
 
 
தொடருங்கள்  ..

ஆசாத்

unread,
Nov 1, 2008, 1:50:36 PM11/1/08
to பண்புடன்
> <ahamedzub...@gmail.com> wrote:
> நான் ஊதுற சங்க ஊதுறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Ahamed Zubair A

unread,
Nov 7, 2008, 2:10:29 PM11/7/08
to panb...@googlegroups.com
முனைவர் பட்டம் என்பது சிலருக்கு சுலபமாய் கிடைத்துவிடும். குருவி மாதிரி ஒரு படத்தில் நடித்தாலேகூட கிடடத்துவிடலாம்..ஒரு கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வந்தால் கிடைக்கலாம். அல்லது ஒரு நகர மேயராய் இருந்தால் கிடைக்கலாம்..ஆனா படிச்சு வாங்கிறதுன்றது ரொம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம்..அதுவும் நம்ம மாதிரி ஆணி பிடுங்கிற இடத்தில இருந்துகிட்டு படிக்க முடியுமா???
 
முடியுங்க...இவன் ஏதாவது இக்னோ படிப்ப சொல்லுவான்னு நினைச்சா, அது மட்டும் இல்லைங்க..இன்னொரு அமைப்பும் இருக்கு..
 
அது தான், "அனைத்திந்திய மேலாண்மை கூட்டமைப்பு" - All India Management Association.
 
இங்க, முனைவர் படிப்பின் முக்கிய பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வு நடக்கிறது. பிறகு அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பித்து, அந்த தேர்விலும் வெற்றி பெற்றால் முனைவர் பட்டம் அலிகார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும்.
 
ரொம்ப சுலபமா இருக்கே...அப்டின்னு நினைக்கிறீங்களா?? ஆமாங்க சுலபம்தான்
 
எங்கிட்ட பட்ட மேற்படிப்பு இல்லைங்களே?? அப்டின்னு வருத்தப்படாதீங்க..பட்ட மேற்படிப்பில் 55% மதிப்பெண்ணும் பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்ணும் அதற்கு மேலுள்ளவர்களும் 
 
அல்லது
 
தொழிற்கல்வியில் பட்டப் படிப்புடன் 55% மதிப்பெண் இருக்கவேண்டும்..
 
இதுல ஒன்னு இருக்கு, போதுமான்னு கேட்டா அதுவும் பத்தாது..
 
பட்டப் படிப்புக்கு பிறகு, 5 வருஷம் வேலை அனுபவம் இருக்கணும் இல்லாட்டா, 3 வருஷம் ஏதாவது கல்லூரியில் பாடம் நடத்தியிருக்கணும்.
 
R-MAT (Research Management Aptitute test) ன்னு ஒரு நுழைவுத்தேர்வு இருக்கு. அது வருஷத்தில் மே அல்லது டிசம்பர் மாசம் நடக்கும். அப்புறம் நேர்முகத்தேர்வு. இதுல நேர்முகத்தேர்வு கூட சில சமயம் தொலைபேசித்தேர்வாக நடத்தப்படும்.
 
இதுல பாசாகிட்டா, ஒரு 5 நாள் புரொகிராம் டெல்லில நடக்கும் (கட்டாயமா போகணும்). அதுக்கப்புறம் முதலாண்டுத்தேர்வு.
 
அதுக்கப்புறம் அலிகார் பல்கலைக்கழகத்தில் உங்க ஆய்வு செய்யப்போற பாடத்தோட அனுமதி வாங்கிட்டு, ஜெகஜோதியா ஆரம்பிச்சிடலாம் ஆய்வ..
 
மலையை உடைக்கணும்னாலும் முதல்ல ஒரு சின்ன உளிய கொண்டுதான் ஆரம்பிக்கணும். மேலதிக விபரங்கள்,
 

ஆசாத்

unread,
Nov 7, 2008, 11:22:11 PM11/7/08
to பண்புடன்
சுபைரு,

நான் சொல்ற மாதிரி இத தனியா சேமிச்சுக்கிட்டு வறீங்கல்ல. ஒருநாளைக்கு
உக்காந்து கொஞ்சம் எடிட் பண்ணுங்க. இந்த உரையாடல் அப்படீன்ற
மேட்டரெல்லாம் இல்லாம அப்படியே வெவரத்துக்கு படிக்ற மாதிரி எடிட்
பண்ணுங்க. இந்தக் கட்டுரைகளோட எல்லை குழுமமோ ப்ளாகோ கெடையாது, அத மட்டும்
புரிஞ்சுக்கோங்க.

Ahamed Zubair A

unread,
Nov 7, 2008, 11:25:52 PM11/7/08
to panb...@googlegroups.com
அண்ணா,
 
விவரத்துக்கு படிக்கிற மாதிரி எழுதுனா கொஞ்சம் போரடிக்குது.. படிக்கிறதுக்கும்..எழுதுறதுக்கும்..
 
அதான் உரையாடல் நடைல எழுதுனேன்..
 
அப்புறம், இதெல்லாம் சேத்துக்கிட்டுதான் வர்றேன்.
 
நன்றி.
 
சுபைர்

2008/11/8 ஆசாத் <banu...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Nov 16, 2008, 11:26:12 PM11/16/08
to panb...@googlegroups.com
நேற்றைக்கு முன் தினம் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் கூட்டம் நடந்தது.
 
அதன் முக்கிய முடிவுகள்,

1. தனியார் பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்டம் விரிவுரையாளருக்கான முதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படாது.
 
2. விரிவுரையாளராக வேண்டுமெனில் NET முதலான போட்டித்தேர்வுகளில் தேர்வாக வேண்டும்.
 
அன்புடன்,
சுபைர்
 

Ahamed Zubair A

unread,
Nov 25, 2008, 10:50:17 AM11/25/08
to panb...@googlegroups.com
இக்னோவில் M.B.A. முதலான மேலாண்மைப் படிப்புகளுக்கு இதுநாள் வரை இருந்துவந்த, 3 ஆண்டுகள் கட்டாய வேலை அனுபவம் தேவை என்ற நிலை நீக்கப்பட்டுள்ளது.
 
அதாவது கால்லூரியில் இருந்து வெளிவந்தவுடன் அப்படியே IGNOU-MBAல சேரலாம்.
 
அதற்கும் ஒரு தடைக்கல் இருக்கிறது, நுழைவுத்தேர்வு. OPENMAT எனும் நுழைவுத்தேர்வு எழுதி தேர்வானவர்கள் மட்டுமே IGNOU-MBA சேர முடியும்.
 
அதிலும் ஒரு சலுகையை IGNOU தந்துள்ளது. அரசின் அங்கீகாரத்தின் ஏதாவது ஒரு நுழைவுத்தேர்வு எழுதியவர்கள் OPENMAT எழுதத்தேவையில்லை என்பதுதான் அது.
 
அதாவது, CAT, TANCET முதலான தேர்வுகள் எழுதியிருப்பின் OPENMAT தேவையில்லை..
 
தற்போது, 2009 - ஜூலை மாதத்திற்கான சேர்க்கை ஆரம்பிக்கிறது. அதன் முதற்கட்டமாக, OPENMAT தேர்வுக்கான படிவம் வழங்கப்பட்டு வருகிறது. 
 
டிசம்பர் 20ம் தேதிக்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் இக்னோ சென்றடைய வேண்டும்.
 
மேலதிக விபரங்களுக்கு,
 
 
//For the first time in the history of Indira Gandhi National Open University (IGNOU) the minimum eligibility for admission to MBA and other PG Diplomas in Management have been relaxed announced Prof. V. N. Rajasekharan Pillai, Vice Chancellor.

Now fresh graduates with 50% marks for general category and 45% for reserved category are eligible for OPENMAT entrance test of IGNOU.

The essential clause of 3 years experience in Supervisory and Managerial category for graduates has been removed. Even those graduates who have successfully cleared the entrance test for admission into the Management programmes conducted by recognized institutions like CAT, MAT and State level tests conducted by State Government etc. need not sit for the OPENMAT entrance test of IGNOU.

There is no age bar for any of the following programmes, the admission of which has opened.

  • Master of Business Administration (MBA)
  • Diploma in Management (DIM)
  • Post Graduate Diploma in Management (PGDIM)
  • Post Graduate Diploma in Human Resource Management (PGDHRM)
  • Post Graduate Diploma in Financial Management (PGDFM)
  • Post Graduate Diploma in Operations Management (PGDOM)
  • Post Graduate Diploma in Marketing Management (PGDMM)

All the above programmes have multi-media design, and technology aided delivery systems. These are offered through countrywide network of study centres. The University will be admitting the students for the above degree/diplomas in Management starting from July 2009 through an Entrance Test 'OPENMAT-XXV' to be held on Sunday, the 01st February, 2009 all over the country.

'Student Handbook & Prospectus for Management Programme', can be obtained from the Registrar (SED), IGNOU, Maidan Garhi, New Delhi-110068 and from all the Regional Centres of IGNOU by sending a sum of Rs.550/- through Demand Draft/IPO in favour of IGNOU payable at New Delhi/city of concerned Regional Centre or by paying Rs.550/-in cash at the respective sale counters. Last date for receipt of request for 'PROSPECTUS' by post is 20th December, 2008.

Application form and prospectus can also be downloaded from the website: www.ignou.ac.in and sent alongwith a DD/IPO for Rs.500/-in favour of IGNOU payable at New Delhi by Registered/Speed Post to: Registrar (SED), Block-12, IGNOU, Maidan Garhi, New Delhi-68.

Filled in form for Entrance Test 'OPENMAT-XXV' must reach, the Registrar (SED), IGNOU, Maidan Garhi, New Delhi-110068, by Registered post/Speed Post on or before 31st December, 2008.//

Ahamed Zubair A

unread,
Dec 7, 2008, 2:36:23 AM12/7/08
to panb...@googlegroups.com
நம்ம மக்களுக்கு இந்த மாவட்ட கலெக்டர்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும்..

அதுக்கான அறிவிப்பை இப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கு...இதுல கலெக்டர் தவிர பிற பணிகளுக்கும் தேர்வு நடக்கும்..

www.upsc.gov.inவலையில் "What's new" பகுதியில், "Notifications" பகுதியில் "Civil Services Examinations 2009" கிளிக்கவும்.

மற்ற விவரங்கள் பூரணமாய் இருக்கிறது.

அதாவது,

எந்தெந்த பணிக்கு தேர்வு, அதற்கான தகுதி என்ன?, எங்கு விண்ணப்பங்கள் கிடைக்கும், என்ன முறையான தேர்வு, எல்லா விபரங்களும்..

இதை ஏண்டா இங்க எழுதியிருக்கேன்னு பாக்குறீங்களா?? இதுவும் ஒரு கல்வி மாதிரிதான்..எல்லா தேர்வும் முடிஞ்ச பிறகு நீங்க பாஸாகியாச்சுன்னா, சரியான ட்ரையினிங் இருக்கு..

யாருக்குத்தெரியும் 2009ல் ஒரு கலெக்டர் பண்புடன்ல இருந்து கூட வரலாம்...

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி ஜனவரி 5, 2009.

வாழ்த்துக்கள் முயல்பவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும்..

அன்புடன்,
சுபைர்


2008/11/25 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

jmms

unread,
Dec 7, 2008, 4:49:05 AM12/7/08
to panb...@googlegroups.com
உபயோகமான தகவல் . நன்றி...

Ahamed Zubair A

unread,
Dec 9, 2008, 11:05:29 AM12/9/08
to panb...@googlegroups.com
அனைத்து தமிழக பல்கலைக்கழகங்களின் தொலைதூர கல்வி இயக்ககங்களும் காலண்டர் முறைக் கல்வியாண்டின் சேர்க்கைக்கான கடைசி தேதியை இம்மாத இறுதிவரை நீட்டித்திருக்கிறது..

சேரும் விருப்பமுள்ளவர்கள் அந்தந்த பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கல்விமையங்களை அணுகவும்.
 
அன்புடன்,
சுபைர்
2008/12/7 jmms <jmms...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Dec 9, 2008, 12:54:29 PM12/9/08
to panb...@googlegroups.com
மத்திய அரசின் புதிய கொள்கைகளின்படி,
 
மேற்படிப்பிற்கான சேர்க்கை சதவீதm 2015ம் ஆண்டிற்குள் தற்போதைய 7%-த்திலிருந்து 15% ஆக உயர்த்தப்படும்.
 
இது தொலைநிலை மற்றும் திறந்த நிலைப் படிப்புகளின் மூலமே சாத்தியம் என்ற நிலைக்கு மத்திய அரசு வந்திருக்கிறது.
 
இதன் மூலம் சிறப்பான பல புதிய அம்சங்கள் தொலைநிலைக்கல்விக்கு கிடைக்கும்.
 
அதில் குறிப்பிடத்தக்கதாக நான் கருதுவது,
 
Walk in Exams - விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதும் முறை.
 
இங்கே இருக்கும் பலருக்கும் சேர்ந்தார்போல் விடுமுறை என்பது கிடைப்பது அரிது. அதுபோன்ற நிலையில் விரும்பும்போது தேர்வு எழுதலாம் என்பது ஒரு வரப்பிரசாதம்.
 
இது பரீட்சார்த்தமாக சில பாடப்பிரிவுகளுக்கு ஆரம்பிக்கப் பட்டுள்ளது. விரைவில் விரிவுபடுத்தப்படும் என இக்னோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 
எது எப்படியோ, கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிந்துபோவதில்லை. கற்றுக்கொண்டே இருக்கவேண்டும்.. அதுதான் நம் இருத்தலை ஞாபகமூட்டிக் கொண்டிருக்கும்.
அன்புடன்,
சுபைர்
2008/12/9 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Dec 10, 2008, 3:56:36 AM12/10/08
to panb...@googlegroups.com
சுபைர்

எவ்வித 'வன்மமும்' இல்லாமல் நீங்கள் எழுதும் இந்த இழை மிக உபயோகமாக இருக்கிறது :-)

Ahamed Zubair A

unread,
Dec 10, 2008, 4:00:30 AM12/10/08
to panb...@googlegroups.com
வன்மம் என்பது இயலாதவன் மீதுதான் வெடிக்கும், இங்கே வெடிக்காதிருப்பது அனைவராலும் இயலும் என்பதாலோ??

(டேய் இங்கேயும் மொக்கை போடதடா சுபைர்னு மனசாட்சி சொல்லுதுப்பா..)

2008/12/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Dec 10, 2008, 4:16:18 AM12/10/08
to panb...@googlegroups.com
அன்பு நண்பரே இந்த ஓபிஸி கிரீமி லேயர் நான் கிரீமி லேயர் என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா?

வெளிநாட்டில் இருப்பவர்கள் எந்த லேயரில் வருவார்கள்?

Ahamed Zubair A

unread,
Dec 10, 2008, 1:33:49 PM12/10/08
to panb...@googlegroups.com
இப்பொழுது கிரீமி லேயர் என்பதற்கான வரைமுறை:

குடும்பத்திற்கான ஆண்டு வருமானம் இந்திய ரூபாயின் மதிப்பில் நான்கரை லட்சத்திற்கு குறைவாக இருப்பவர்கள் மட்டுமே கிரீமி லேயரில் இடம்பெறுவதில்லை..

அதாவது மாத வருமானம் ரூபாய் 37,500 இருப்பின் அவர் கிரீமி லேயரில் இடம்பெறுவார்.

1993ம் ஆண்டு வரை கிரீமி லேயர் என்பது ஒரு லட்ச ரூபாயாகும்.

உங்கள் ஆண்டு வருமானம் நான்கரை லட்ச ரூபாய்க்கும் குறைவெனில் நீங்கள் கிரீமி லேயரில் இல்லை.

மத்திய அரசின் கீழ் செயல்படும் உயர்கல்வி நிறுவனங்களில் இந்த கிரீமி லேயருக்கான இட ஒதுக்கீடு இந்த கல்வியாண்டு முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.



//Income of the parents from the salaries and from the other Sources [other than salaries and agricultural land] is determined separately. If either the income of the parents from the salaries or the income of the parents from other sources [other than salaries and agricultural land] exceeds the limit of Rs.2.5 lakh per annum for a period of three consecutive years, the sons and daughters of such persons shall be treated to fall in creamy layer. But the sons and daughters of parents whose income from salary is also less than Rs.2.5 lakh per annum and income from other sources is also less than Rs.2.5 lakh per annum will not be treated as falling in creamy layer even if sum of the income from salaries and the income from the other sources is more than Rs.2.5 lakh per annum for period of three consecutive years. It may be noted that income from agricultural land is not taken into account while applying the Test.// 

மூன்றாண்டுகளாக தொடர்ந்து 4.5 லட்ச ரூபாய் ஆண்டு வருமானமிருப்பின் அந்த குடும்பம் கிரீமி லேயரில் வரும். இதில் சம்பளம் தவிர மற்ற வகையில் பெறும் வருமானமே கணக்கிலெடுக்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் பணிகளில் குறிப்பிட்ட தகுதிக்கு நிகரான பணியிலுள்ளவர்களும் கிரீமி லேயராக கணக்கில் கொள்ளப்படுவர்.
 
இந்த வகை கிரீமி லேயருக்கான தெளிவான கட்டமைப்பு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இல்லை என்பேன். நாமெல்லாம் NRI என்ற வகையில் வந்துவிடுவோம். அங்கே ஓபிஸி, எஸ்ஸி, எஸ்டி எல்லாம் இல்லை.
 
அன்புடன்,
சுபைர்


2008/12/10 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

மஞ்சூர் ராசா

unread,
Dec 10, 2008, 2:03:30 PM12/10/08
to panb...@googlegroups.com
என் மகள் இந்தியாவில் படிக்கிறாள் எனில் எப்படி என் ஆர் ஐ? இது எல்லா கல்லூரிகளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை.

கிரீமி லேயர் என்று தான் நினைக்கிறேன்

jmms

unread,
Dec 10, 2008, 11:01:33 PM12/10/08
to panb...@googlegroups.com


2008/12/11 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

என் மகள் இந்தியாவில் படிக்கிறாள் எனில் எப்படி என் ஆர் ஐ? இது எல்லா கல்லூரிகளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை.

பொருந்தாது என நினைக்கிறேன். பள்ளிப்படிப்பு வெளிநாட்டில் இருக்கவேண்டும் என்.ஆர்.ஐ தகுதிபெற...


கிரீமி லேயர் என்று தான் நினைக்கிறேன்





--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

Ahamed Zubair A

unread,
Dec 12, 2008, 4:44:33 AM12/12/08
to panb...@googlegroups.com
மஞ்சூர் அண்ணா,
 
முதலாவதாக, தங்கள் மகள் எந்த படிப்பிற்கான முயற்சியில் இருக்கிறார் (பொறியியல் இளநிலை அல்லது வேறேதாவது) என்று பிடிபடவில்லை. நான் பொறியியல் படிப்பையே எடுத்துக்கொண்டு இங்கு கருத்திற்கு வருகிறேன்.
 
இந்திய அரசின் பொறியியல் படிப்பிற்கான நடுவண் மையம் AICTE (All India Council Education) NRI - முறைக்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளது (தளர்த்தியுள்ளது).
 
அதாவது, 12ம் வகுப்பில் தேர்ச்சி மட்டும் போதும். US$1000 - அமெரிக்க டாலர் 1000 மற்றும் சில பல கோப்புகள் கொடுக்கப்படவேண்டும். என்னென்ன கோப்புகள் தேவை என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வலையிணைப்பை அழுத்தவும்.
 
மற்றவகையில் MERIT - நிலை கட்டாயம் பயன்படுத்தப்படும். அதாவது நமது மதிப்பெண் குறைந்த பட்சம் 55% இருக்கவேண்டும் முதலானவை. NRIல் அது இல்லை.
 
NRI என்பது பணம் இருந்து போதிய மதிப்பெண் இல்லாதபோது உபயோகப்படுத்தக்கூடியது. உங்கள் மகள் (என்போல் :-)) படிக்கின்ற பிள்ளையாக இருக்கும் பட்சத்தில் NRIயோ அல்லது OBCயோ தேவையில்லை.
 
என் தம்பி அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தான். தேர்வு சமயத்தில் உடல் நலக்குறைவு காரணமாய் சரியான மதிப்பெண் பெற முடியவில்லை. எனினும், நான் NRI என்பதால் அவனுக்கு NRI கோட்டவிலேயே சீட் வாங்கியாயிற்று.. இப்போது பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

அதனால் சாந்தி பாட்டி சொல்வதைப்போல், NRI கோட்டாவிற்கு பள்ளிப்படிப்பு வெளிநாட்டில் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. அந்த மாணவரின் இரத்த சொந்தம் அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, மாமா, அத்தை, இவர்களில் யாராவது ஒருவர் மட்டுமே ஸ்பான்சராகலாம். அந்த ஸ்பான்சர் NRI ஆக இருக்கவேண்டும். அம்புட்டுதேன்.
 
NRI கோட்டா கிட்டத்தட்ட எல்லா கல்லூரிகளிலும் இருக்கிறது. கல்லூரியைப் பொறுத்து நன்கொடை அளவு வித்தியாசப்படும். சுமார் 50,000/- ரூபாய் முதல் சில பல லகரங்களை நன்கொடையாக கேட்பார்கள் (NRI கோட்டாவில்)
 
மேலதிக விபரங்கள்,
 
 
அன்புடன்,
சுபைர்
 
2008/12/10 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
என் மகள் இந்தியாவில் படிக்கிறாள் எனில் எப்படி என் ஆர் ஐ? இது எல்லா கல்லூரிகளுக்கும் பொருந்துமா என தெரியவில்லை.

jmms

unread,
Dec 12, 2008, 8:36:36 AM12/12/08
to panb...@googlegroups.com
On 12/11/08, Ahamed Zubair A <ahamed...@gmail.com> wrote:
மஞ்சூர் அண்ணா,
 
முதலாவதாக, தங்கள் மகள் எந்த படிப்பிற்கான முயற்சியில் இருக்கிறார் (பொறியியல் இளநிலை அல்லது வேறேதாவது) என்று பிடிபடவில்லை. நான் பொறியியல் படிப்பையே எடுத்துக்கொண்டு இங்கு கருத்திற்கு வருகிறேன்.
 
இந்திய அரசின் பொறியியல் படிப்பிற்கான நடுவண் மையம் AICTE (All India Council Education) NRI - முறைக்காக சில நிபந்தனைகளை விதித்துள்ளது (தளர்த்தியுள்ளது).
 
அதாவது, 12ம் வகுப்பில் தேர்ச்சி மட்டும் போதும். US$1000 - அமெரிக்க டாலர் 1000 மற்றும் சில பல கோப்புகள் கொடுக்கப்படவேண்டும். என்னென்ன கோப்புகள் தேவை என்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வலையிணைப்பை அழுத்தவும்.
 
மற்றவகையில் MERIT - நிலை கட்டாயம் பயன்படுத்தப்படும். அதாவது நமது மதிப்பெண் குறைந்த பட்சம் 55% இருக்கவேண்டும் முதலானவை. NRIல் அது இல்லை.
 
NRI என்பது பணம் இருந்து போதிய மதிப்பெண் இல்லாதபோது உபயோகப்படுத்தக்கூடியது. உங்கள் மகள் (என்போல் :-)) படிக்கின்ற பிள்ளையாக இருக்கும் பட்சத்தில் NRIயோ அல்லது OBCயோ தேவையில்லை.
 
என் தம்பி அறந்தாங்கி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் படித்தான். தேர்வு சமயத்தில் உடல் நலக்குறைவு காரணமாய் சரியான மதிப்பெண் பெற முடியவில்லை. எனினும், நான் NRI என்பதால் அவனுக்கு NRI கோட்டவிலேயே சீட் வாங்கியாயிற்று.. இப்போது பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.

அதனால் சாந்தி பாட்டி சொல்வதைப்போல், NRI கோட்டாவிற்கு பள்ளிப்படிப்பு வெளிநாட்டில் இருக்கவேண்டும் என்ற தேவையில்லை. அந்த மாணவரின் இரத்த சொந்தம் அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி, மாமா, அத்தை, இவர்களில் யாராவது ஒருவர் மட்டுமே ஸ்பான்சராகலாம். அந்த ஸ்பான்சர் NRI ஆக இருக்கவேண்டும். அம்புட்டுதேன்.
 
NRI கோட்டா கிட்டத்தட்ட எல்லா கல்லூரிகளிலும் இருக்கிறது. கல்லூரியைப் பொறுத்து நன்கொடை அளவு வித்தியாசப்படும். சுமார் 50,000/- ரூபாய் முதல் சில பல லகரங்களை நன்கொடையாக கேட்பார்கள் (NRI கோட்டாவில்)
 
மேலதிக விபரங்கள்,
 
 
 
அருமையான புது விபரம்... மிக்க நன்றி ரித்தீஷ்...
 
( பாட்டி னு சொல்றது வருத்தமில்லை..:) ஆனா நான் அண்ணாச்சி, அக்கா னு சொல்றவங்களும் அப்ப தாத்தா, பாட்டி ஆயிடுவாங்களேன்னு நெனச்சாதான் அழுகையா வருது...:(((   )

Ahamed Zubair A

unread,
Dec 17, 2008, 1:32:09 PM12/17/08
to panb...@googlegroups.com
2.VARDHMAN MAHAVEER OPEN UNIVERSITY (VMOU), KOTA, RAJASTHAN

இது முன்பு கோடா திறந்தவெளிப் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இதன் பெயர் வர்தமான் மஹாவீர் திறந்தவெளிப் பல்கழைக்கழகம் என்பதாகும்.
 
 
இந்த பல்கலைக்கழகத்தில், இளநிலை முதல் முனைவர் வரை பாடப்பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே கல்விமையங்கள் இருக்கின்றன.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு, மிகவும் உபயோகமான பல்கலைக்கழகம்..
 
"காந்திகிரி"ன்னு லகே ரஹோ முன்னாபாய் படத்தில ஒரு வார்த்தை வரும். அதுல கூட இங்க பாடப்பிரிவு ஆரம்பிச்சிருக்காங்க. :-)) அதாவது, காந்திய சிந்தனைகளைப் பாடமாக்கியிருக்கிறார்கள்.
 
அன்புடன்,
சுபைர் 

 
2008/10/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இந்த வாரம்

Ahamed Zubair A

unread,
Dec 20, 2008, 1:24:07 PM12/20/08
to panb...@googlegroups.com
இந்த பையன் எப்ப பார்த்தாலும் தொலை நிலைக்கல்வி, படிப்புன்னு தொல்லை பண்றான்.. இவன என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா??
 
அப்ப சட்டம் படிங்க..பையன உள்ள தள்ளிடலாம்..:-)
 
சட்டப் படிப்பு தொலை நிலைக் கல்வில்ல கிடைக்குதா??
 
சட்டப் படிப்பு பத்தி தெரியல.. ஆனா சட்ட மேற் படிப்பு தொலை நிலைக்கல்வில படிக்கலாம்..
 
கோர்ட்ல போய் வக்கீலா தொழில் செய்ய முடியுமான்னு கேட்டா பதில் இல்ல.. ஆனா பல கம்பெனிகள்ல காண்ட்ராக்ட் (ஒப்பந்தம்) பத்தின தொழில்ல இருக்குறவங்களுக்கு இந்த படிப்புகள் ஓரளவு உதவியா இருக்கும்.
 
முதலாவது, இந்த பாடங்கள் வழங்கப்படும் பல்கலைக்கழகம் "நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இண்டியா யுனிவர்சிட்டி" (இத தமிழ் படுத்தினா "இந்திய தேசிய சட்டக் கல்லூரி பல்கலைக்கழகம்"னு வருது. அதான் இங்கிலிபீஸ்லயே எழுதிட்டேன்)
 
இந்த பல்கலைக்கழகம் பெங்களூரில் இயங்கி வருகிறது. கர்நாடக மாநில அரசின் சட்டத்தின் மூலம் 1987ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது.
 
சட்ட மேற்படிப்புகள் மட்டுமே இங்கு தொலை நிலைக்கல்வியாக வழங்கப் படுகிறது.
 
என்னென்ன படிப்புகள் படிக்கலாம்னா,
 
1. முதுநிலை பட்டம் - தொழில் சட்டங்கள் (2 ஆண்டுகள்) (M.B.L)
2. முதுநிலை பட்டயம் - மனித உரிமை சட்டங்கள் (1 ஆண்டு) (PGDHRL)
3. முதுநிலை பட்டயம் - மருத்துவ சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் (1 ஆண்டு) (PGDMLE)
4. முதுநிலை பட்டயம் - சுற்றுச்சூழல் சட்டங்கள் (1 ஆண்டு) (PGDEL)
5. முதுநிலை பட்டயம் - அறிவுசார் சொத்துக்களின் உரிமை சட்டங்கள் (Intellectual Property Rights) (தமிழ் படுத்தல் சரியான்னு தெரியல) (1 ஆண்டு) (PGDIPRL)
 
இதற்கான கல்வித்தகுதி ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஏதாவது ஒரு பட்டம். வயது வரம்பு இல்லை.
 
இப்ப நம்ம விஷயத்துக்கு வருவோம்.. இந்த சுபைர் தொல்லையை எப்படி நிறுத்தறதுன்னு யோசிச்சா இருக்கவே இருக்கு..இந்த பையன் வலைமனையில இருந்து திருடி தகவல் தர்றான்னு Intellectual Property Rightsல ஒரு பாயிண்ட் எடுத்து உள்ள தள்ளிடலாம். :-) (அப்படி பார்த்தா யாருமே ப்ளாக் எழுத முடியாதா?? அதுவும் சரிதான்)

ஆனா இந்த மெயில்ல அந்த பாயிண்ட உபயோகிக்க முடியாது..ஏன்னா அந்த பல்கலைக்கழக வலைமனை கொடுத்திடுறேன். மேலதிக விபரங்களுக்கு,
 
அன்புடன்,
சுபைர் 
 
 
 
 
 
2008/12/17 Ahamed Zubair A ahamed...@gmail.com

Ahamed Zubair A

unread,
Dec 21, 2008, 11:43:14 AM12/21/08
to panb...@googlegroups.com

படிக்கிறதுக்கு வயசு ஒரு தடையே இல்லைன்னு இந்த அம்மா நிரூபிச்சிருக்காங்க..

மேல படிங்க.. :-)

நன்றி: தினமலர்.

கோவை: வேளாண்மை பல்கலையின் தொலைதூரக்கல்வி மையத்தில் தொடர்ந்து நான்கு சான்றிதழ் படிப்புக்களை படித்து முடித்த 69 வயது பாட்டி, ஐந்தாவது சான்றிதழ் படிப்பில் சேர தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் தொலைதூரக்கல்வி மையத்தில் விவசாயிகள், பெண்களுக்கு பயனுள்ள சான்றிதழ் படிப்புகள் தமிழில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த படிப்புகளை விவசாயிகள் பலர் படித்து வருகின்றனர். தற்போது இந்த படிப்புக்களை படிக்க, கோவையைச் சேர்ந்த பெண்களும் ஆர்வம் காட்டுகின்றனர்.

பேரூர் பச்சாப்பாளையம் பகுதியில் சவுந்தர்யம்- சந்தோஷம் இல்லத்தில் வசித்து வரும் 69 வயது பெண் கல்யாணி. வேளாண் பல்கலை தொலைதூரக்கல்வி மையத்தில் நடத்தி வரும் பேக்கரி பொருட்கள் தயாரித்தல், காய்கறி, பழங்களை பதப்படுத்துதல், அலங்கார தோட்டம் அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் படிப்புக்களை படித்து முடித்து விட்டார்.

தற்போது மூலிகைத்தோட்டம் என்ற படிப்பில் சேர, தனது பெயரை பதிவு செய்துள்ளார். இவர் பிரிட்டிஷ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசித்த போது 10க்கும் அதிகமான குறுகிய கால சான்றிதழ் படிப்புக்களை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்யாணி கூறியதாவது: அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இருந்த போது பள்ளிகளில், தையற்கலை, கார் பழுதை நீக்குதல், வீடுகளை பராமரித்தல், கம்ப்யூட்டர் பயன்பாடு உட்பட பல்வேறு படிப்புகள் முதியோர்களுக்கு நடத்தப்படும். அதுபோல், முதியோர்களுக்கு இந்தியாவில் அதிகளவில் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுவது இல்லை.

கோவையில் செட்டில் ஆனதும் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தொலைதூரக்கல்வி மையத்தில் நடத்தப்படும் சான்றிதழ் படிப்பில் சேர்ந்தேன். தற்போது நான்கு படிப்புக்களை முடித்துவிட்டேன். இந்த படிப்பில் இருந்து கற்ற விஷயங்களை, வீட்டுத்தோட்டத்தில் பயன்படுத்துகிறேன். இவ்வாறு கல்யாணி கூறினார்.


2008/12/20 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

lucky shajahan

unread,
Dec 22, 2008, 8:32:24 AM12/22/08
to panb...@googlegroups.com
மாமா ஒருவர் இருக்கிறார் சுபைர்.. இப்போது ஒரு எம்.ஏ செய்துகொண்டு இருக்கிறார். பையன் மருந்தக ஆளுமை ( Bachelor of Pharmacy) படித்துக் கொண்டு
இருக்கிறாள்.பெண் இருந்தால் பேரப் பிள்ளைகள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கும்
இது நான்காவது எம்.ஏ..
 
வேலை ஒரு கிராம அங்காடியில் கிளரிகல் ( ஆமா இதுக்கு தமிழ்ல என்ன)
ஆனால் படிப்பின் மீது அபார மோகம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அவர் வசிப்பிட ஊருக்கு காலை மாலை இரண்டு வேளைகல் மட்டுமே பஸ் போகும்.
 
நீங்கள் குறிப்பிட்ட பெண்மணி அளவுக்கு இவர் சாதித்து விட வில்லை எனினும்
இந்த உங்கள் பதிவுக்குப் பிறகு அவரைக் கொண்டாடவே தோன்றியது.. இருங்கள்
அவருக்கு ஒரு போன் பேசி விட்டு வருகிறேன்..
 
நன்றி சுபைர்.. இந்த இழை இன்னும் பெருகட்டும்..

 
2008/12/21, Ahamed Zubair A <ahamed...@gmail.com>:

Ahamed Zubair A

unread,
Jan 13, 2009, 7:36:27 AM1/13/09
to panb...@googlegroups.com
இப்ப B.Ed.ன்னு ஒரு படிப்பு இருக்கு. அதாவது இளநிலை கல்வியியல்.

இந்த படிப்பு தமிழ்நாட்டுல மூலைக்கு ஒரு கல்லூரி ஆரம்பிச்சு, ஜெகஜோதியா நடக்குது வியாபாரம்.

இதயும் இப்ப தொலைநிலைக்கல்வியா கொடுக்கப் போறாங்க..

1. பாரதிதாசன் பல்கலைக்கழகம் 
2. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம்
3. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 

உள்ளிட்டவை இந்த படிப்பினை தமிழகத்தில் வழங்குகின்றன.

கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும்.

அன்புடன்,
சுபைர்

2008/12/22 lucky shajahan <luckys...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Jan 13, 2009, 7:47:40 AM1/13/09
to panb...@googlegroups.com
அங்கே போய் நம்பர் போட்டுட்டு இங்க வந்து நல்ல புள்ளையாய் என்னமா
நடிக்கிறீங்கடா டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
நல்லா இருங்க!!


கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும்.

 ம்ம்ம் இந்த இழைலயாவது நல்ல விசயங்களை பேசுவோம்

பிரேம்குமார்

unread,
Jan 13, 2009, 11:48:28 AM1/13/09
to panb...@googlegroups.com
கல்வி நிலையங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே இந்த படிப்பில் சேர இயலும்.
 
மற்றவர்கள் கண்டிப்பாக இதை படிக்க முடியாதா சுபைர்??? M.phil லும் தொலைநிலைக் கல்வியில் முற்றிலுலாக நீக்கப்பட்டு விட்டதா?
 
 

 

Ahamed Zubair A

unread,
Jan 13, 2009, 1:57:10 PM1/13/09
to panb...@googlegroups.com
இரண்டு கேள்விகள் பிரேம்.
 
பதில் கீழே!
 
கேள்வி 1: B.Ed. படிப்பு தொலைநிலைக் கல்வியில் மற்றவர்கள் படிக்க முடியாதா??
 
பதில்: 2 ஆண்டு ஆசிரியர் அனுபவமும், தற்போது பள்ளியில் பணிபுரிபவர்களும் மட்டுமே தமிழகத்தில் இப்படிப்பை தொலைநிலையில் படிக்கலாம்.
 
கேள்வி 2: M.phil லும் தொலைநிலைக் கல்வியில் முற்றிலுலாக நீக்கப்பட்டு விட்டதா?
 
பதில்: இல்லை. M.Phil மற்றும் Ph.D. படிப்பு தொலைநிலையில் வழங்கப்பட்டால் அதன் தரம் குறையலாம் என்ற எண்ணத்தினால் இப்பாடங்கள் தமிழக அரசின் உதவிபெறும் பல்கலைக்கழகங்களின் தொலைநிலைக்கல்வியில் (2005ம் ஆண்டு முதல்) வழங்கப்படுவதில்லை.
இங்கே கவனிக்கத்தக்கது M. Phil மற்றும் Ph.D. ஆய்வறிக்கை சம்பந்தப்பட்டது. அதனால் போதிய வழிகாட்டுதல் தேவை. மற்ற பாடங்கள் வீட்டிலிருந்தும் படிக்கலாம். அதனால் தமிழக அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது.
 
மத்திய பல்கலைக்கழகங்கள், தமிழகத்தின் தனியார் பல்கலைக்கழகங்களில் தாராளமாக படிக்கலாம்.
 
அன்புடன்,
சுபைர்
2009/1/13 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jan 26, 2009, 11:09:17 PM1/26/09
to panb...@googlegroups.com
சென்னைப் பல்கலைக் கழகத்தில் புதிதாக ஒரு சுற்றறிக்கை புழங்குகிறது.

அதாவது, பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வுகளில் 50% மதிப்பெண்கள் சரியான விடையை தேர்ந்தெடுப்பதற்கு வழங்கப்படும். (Objective Type). மீதி 50% விரிவான விடைகளுக்கு.

அதனால், மெல்ல அத்தனை தேர்வுகளும் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் விதத்தில் வரலாம். இது வலைமனையில் (online) தேர்வெழுதச் செய்யும் உத்தியின் ஆரம்ப நிலை.

எனவே விரைவில் எதிர் பாருங்கள்.. அனைத்து தேர்வுகளும் வலைமனையிலேயே எழுதி உடனுக்குடன் மதிப்பெண் தெரிந்துவிடும். GMAT, CAT போன்ற போட்டித்தேர்வுகள் போல வினாக்கள் உருவாக்கப்படும்.

அதனா.......ல,

தொலைநிலைக்கல்விலயும் இனி எங்க இருந்தாலும் தேர்வெழுத வாய்ப்பு கிடைக்கும்.

என்னுடைய கணிப்பு சரியானால், இன்னும் 3 ஆண்டுகளில், இந்தியாவில், பெரும்பாலான தொலைநிலைக் கல்விப் பாடங்களுக்கு ஆன்லைனில் படித்து தேர்வெழுத இயலும்.

jmms

unread,
Jan 26, 2009, 11:13:32 PM1/26/09
to panb...@googlegroups.com


2009/1/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

 நல்ல தகவல்...

அன்புடன்,
சுபைர்





--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================

Ahamed Zubair A

unread,
Feb 1, 2009, 2:26:23 PM2/1/09
to panb...@googlegroups.com
இக்னோல இப்ப புதுசா ஒரு சான்றிதழ் படிப்பு ஆரம்பிச்சிருக்காங்க.
 
அதாவது ஸ்பானிய மொழிய ஆன்லைன்ல சொல்லித்தரப் போறாங்க.
 
குறைந்த பட்சம் 6 மாதம் முதல் அதிக பட்சம் இரண்டு ஆண்டுகளுக்குள் படிக்கலாம்.
 
கல்விக்கட்டணம் 2000 ரூபாய், மற்றும் பதிவுக்கட்டணம் 100 ரூபாய்.
 
வரும் 28ம் தேதி வரை சேர்க்கை நடைபெறும். கடன் அட்டை மூலமாகவோ, வரைவோலை மூலமாகவோ கட்டணம் செலுத்தலாம்.
 
இந்த ஆண்டு முதலில் வரும் 200 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர்.
 
ஒரு புது மொழி கத்துக்குறது நல்லது தானுங்களே?? கத்துக்கலாம்ல..!
 
மேலதிக விபரங்களுக்கு,
 
அன்புடன்,
சுபைர்

 
2009/1/27 jmms jmms...@gmail.com

 நல்ல தகவல்...

Ahamed Zubair A

unread,
Feb 7, 2009, 2:00:23 PM2/7/09
to panb...@googlegroups.com
ரசீம்,

Ph.D. என்ற முனைவர் பட்டம் பொறியியல் துறையில் கிடைப்பது என்பது தற்போதைய சூழலில் தொலைநிலைக்கல்வியில் இரண்டு வகையில் மட்டுமே சாத்தியம்.

1. ஏதாவது கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் பணியில் இருக்கவேண்டும்.
2. ஏதாவது ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் இருக்கவேண்டும்.

இந்த இரண்டும் இல்லாத பட்சத்தில், Ph.D. மேலாண்மையில் மட்டுமே தொலைநிலைக் கல்வியில் சாத்தியம்.

சில தனியார் பல்கலைக்கழகங்களும் Ph.D. (External Candidate) என்ற முறையில் தருகின்றன. ஆனால், தனியார் பல்கலைக்கழக Ph.D. அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு உதவாது என்பது கூடுதல் செய்தி.


அன்புடன்,
சுபைர்


2009/2/5 Raseem <md.r...@gmail.com>
அன்பு சுபைர்,
 
Ph.D in Engineering பற்றி ஏதாவது தெரிந்தால் பதிவிடுங்களேன்
சமீபத்தில் தான் M.S தேர்ச்சி பெற்றேன் BITS ல்.

Raseem

unread,
Feb 7, 2009, 11:23:31 PM2/7/09
to panb...@googlegroups.com
தகவலுக்கு நன்றி சுபைர்
-ரஸீம்

Ahamed Zubair A

unread,
Feb 18, 2009, 12:53:38 PM2/18/09
to panb...@googlegroups.com
மத்திய பல்கலைக்கழகத்தில் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம், முனைவர் படிப்பிற்கான குறைந்த பட்ச கல்வித்தகுதியை தளர்த்தியிருக்கிறது.
 
அதாவது, பொறியியல், மருத்துவம் அல்லது சட்டம் - இளநிலை படித்தவர்கள் நேரடியாக முனைவர் படிப்பில் சேரலாம்.
 
இத்தனை நாளாக இது முதுநிலை படித்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
அன்புடன்,
சுபைர்
 
 
2009/2/8 Raseem <md.r...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Mar 7, 2009, 12:25:20 PM3/7/09
to panb...@googlegroups.com
மக்களே..!

இந்த இழையினை எந்த திசையில் எடுத்துக்கொண்டு போவது என்பதில் கொஞ்சம் குழப்பமான மன நிலையில் இருக்கிறேன்.
சரி..விஷயத்திற்கு வருகிறேன்..
 
தொலைநிலைக் கல்வி மையம், DEC என்பது இந்திய அரசின் மையம். இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் தொலைநிலைக் கல்விக்கான அங்கீகாரம் இந்த மையமே வழங்கும். அதாவது நீங்கள் படிக்கும் படிப்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டதா இல்லையா என்பதை இந்த மையமே தீர்மானிக்கும்.
 
இதில முக்கியமான விஷயம் என்னன்னா, இவ்வளவு நாளா தான் நினைச்ச மாதிரி அங்கீகாரம் குடுத்த இந்த அமைப்பில இப்ப புதுசா ஒரு குழுவை ஆரம்பிச்சிருக்காங்க.
 
அதாவது, DEC, UGC மற்றும் AICTE (பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில் நுட்ப படிப்புகளுக்கான மையம் இவற்றுடன்) இணைந்தே அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.
 
புரியுற மாதிரி சொன்னா,
 
M.B.A மற்றும் M.C.A. முதலான தொழில்நுட்பப் படிப்புகள் இந்த ஒருங்கிணைந்த குழுவால் அங்கீகரிக்கப்படணும்.
 
இல்லாட்டி, கட்டுற காசும் போய், சும்மா காச்சுக்கும் பேருக்கு பின்னால டிகிரி போட்டுக்கலாம்.
 
தமிழ்நாட்டுல எந்தெந்த பல்கலைக் கழகம்லாம் அங்கீகாரம் வாங்கியிருக்குன்னு பார்த்தா,
 
1. சென்னைப் பல்கலைக்கழகம்
2. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
3. வினாயகா பல்கலைக்கழகம் (சேலம்)
 
இதுங்க மட்டும் தான் இரண்டு குழுவிலயும் அங்கீகாரம் வாங்கியிருக்குது..
 
பாத்து செய்யுங்க மக்கா..
 
அன்புடன்,
சுபைர்
 
மேலதிக விபரங்கள் : http://www.dec.ac.in/

Ahamed Zubair A

unread,
Mar 20, 2009, 2:37:52 AM3/20/09
to panb...@googlegroups.com
நம்ம குழுமத்துல நிறைய பேரு பெங்களூர்ல இருக்காங்க..
 
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களைப் பத்தி ஓரளவு பாத்துட்டதால இப்ப கர்நாடகா.
 
1. கர்நாடகா திறந்தநிலைப் பல்கலைக் கழகம் - மைசூர்
2. பெங்களூரு பல்கலைக்கழகம்
3. குல்பர்கா பல்கலைக்கழகம்
4. கன்னட பல்கலைக்கழகம்
5. கர்நாடகா பல்கலைக்கழகம்
6. குவெம்பு பல்கலைக்கழகம்
7. மங்களூர் பல்கலைக்கழகம்
8. இந்திய பல்கலைக் கழகத்தின் தேசிய சட்டக் கல்லூரி
9. சுவாமி விவேகானந்தா யோக அனுசந்தன் சன்ஸ்தன்
10. விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
11. மனிபால் மேற்படிப்பு அகாடமி
 
இவையெல்லாம் மத்திய அரசின் DEC ஆல் அங்கீகரிக்கப்பட்டவை. இதைத் தவிர சில பல்கலைக்கழகங்கள் இருக்கலாம். அவை அங்கீகாரம் பெறாத பட்சத்தில் அங்கே படிப்பதனை யோசித்து முடிவெடுத்தல் நல்லது.
 
இன்று, கர்நாடகா திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
 
1. B.A./B.Com - இளங்கலை
2. B.Ed. - இளநிலை கல்வியியல்
3. B.LI.Sc - இளநிலை நூலக அறிவியல்
4. M.A./M.Com. - முதுகலை
5. M.Ed. - முதுநிலை கல்வியியல்
6. M.LI.Sc. - முதுநிலை நூலக அறிவியல்
7. M.B.A. - முதுநிலை மேலாண்மை
8. M.Phil - ஆய்வியல் நிறைஞர்
9. PG Diploma - முதுநிலைப் பட்டயம்
10. Certificate Courses - சான்றிதழ் படிப்புகள்
இந்தியாவின் குறிப்பிடும் படியான பல்கலைக்கழகத்தில் ஒன்றாக தேவையான அத்தனை கட்டமைப்பும் இருப்பினும், இன்னும் சரியான முறையில் தனது கொள்கைகளை வகுக்காததால் இந்த பல்கலைக்கழகத்தின் மக்களிடம் சரியானபடி போய்ச் சேரவில்லையோ என வருத்தம் இருக்கிறது.
 
இங்கு கொடுக்கப்படும் பாடங்களில் முக்கியமானது
 
இந்தப் பல்கலைக்கழகம் பல நிறுவனக்களுடன் இணைந்து நடத்தும் படிப்புகள். (கர்நாடகத்திற்குள் மட்டும்)
 
இந்தப் படிப்புகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் மாநில அரசின் பல்கலைக் கழகமாதலால் அங்கீகாரம் வாங்கி விடுவார்கள்.
 
மேலும் விபரங்களுக்கு,
 
 
 

பிரேம்குமார்

unread,
Mar 20, 2009, 12:29:32 PM3/20/09
to panb...@googlegroups.com

பி.எட் என்றவுடன் ஆவலுடன் ஓடி வந்தேன். ஆனால் இது கர்நாடக மக்களுக்கு மட்டும் தானா?

சுபைர், இந்த கேள்விக்கு பதில் சொல்ல நீங்க தான் சரியான ஆள்.

நான் கல்வித்துறைக்கு தாவலாம் என்றிருக்கிறேன். அதற்கு பி.எட் அல்லது எம்.பில் தானே படிக்க வேண்டும். ஆனால் இப்போது அவை இரண்டுமே தொலைநிலை கல்வியில் படிக்க முடியாது என்கிறார்களே.

இந்தியாவில் ஏதேனும் பல்கலைகழகம் இதை வழங்குகிறதா?

Ahamed Zubair A

unread,
Mar 20, 2009, 2:01:54 PM3/20/09
to panb...@googlegroups.com


2009/3/20 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

இந்தியாவில் ஏதேனும் பல்கலைகழகம் இதை வழங்குகிறதா?

ப்ரேம், இதே கேள்விக்கு முன்னமே பதில் சொல்லியிருக்கேன்னு நினைக்கேன்.
 
இப்ப உங்களுக்காக விரிவான பதில் பாருங்க.
 
கல்வித்துறை என்பது இப்போதெல்லாம் பணம் காய்க்கும் மரமாகி விட்டது. அதில் சேவை மனப்பான்மை குறைந்து போனாலும். இந்த ரிசெஷன்லாம் கல்வித்துறைக்கு இல்லை. :-)
 
M.Phil.ல என்ன பாடம் படிக்கணும்கிறத பொறுத்து பல்கலைக் கழகங்கள் பத்தின முடிவை எடுக்கலாம்.
மேலாண்மை முதலான பாடங்களுக்கு எந்த பல்கலைக்கழகமா இருந்தாலும் பெஸ்ட்.
 
இந்த படிப்பு வேறொரு மொழியில் ஆய்வியல் நிறைஞர் என்றும் தமிழில் எம்.ஃபில் என்றும் வழங்கப்படுகிறதாம். (சும்மா கருத்துக்கு சொன்னேன்பா)
 
ஆனால் நீங்க கல்வித்துறை எடுக்கணும்கிற முடிவுல இருக்குறதால நான் ரெகமண்ட் பண்றது Ph.D.
 
என்னடா, இப்படி குண்டைத்தூக்கி போடுறேன்னு பாக்காதீங்க..Ph.D. 3 வருஷ படிப்பு. M.Phil. 1 வருஷப் படிப்பு.
 
ஆனா, கல்லூரிகள்ல பாடம் எடுக்குறதுக்கு Ph.D. கட்டாயமாக்கப் படலாம். மத்திய அரசின் கல்விக்கொள்கைப் படி மாணவர்கள் சிறந்த முறையில் கற்றுத் தேர்வதற்கு முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களின் வழிகாட்டுதல் மிகத் தேவையாய் இருக்கிறது.
 
M.Phil. படிக்கிறதுக்கு நிறைய மத்தியப் பல்கலைக் கழகங்கள் இருக்கு. தமிழகத்தின் கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் பல்கலைக் கழகங்கள் தவிர..(ஏன் தமிழ்நாட்டைத் தவிர அப்டின்னு சொல்றேன்னா இணைப்பைப் பாருங்க..புரியும்).
 
ஆனா அதுக்கும் ஒரு வழி இருக்கு. நான் M.Phil. படிக்கிறது சேலம் வினாயகா மிஷன் பல்கலைக் கழகத்துல. அதுல வசதி என்னன்னா, ஒரு வருசப் பாடம். நான் - செமஸ்டர். பரீட்சை முடிஞ்சு ஒரு ஆய்வறிக்கை (தமிழ்ல தீசிஸ்) கொடுத்தா போதும்.
 
ஆனா, தமிழ்நாட்டுக் கல்லூரில வேலைக்கு சேரணும்னா தனியார் பல்கலைக் கழகத்துல Ph.D. படிச்சிடாதீங்க. தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற எந்த கல்வி நிறுவனத்தில பணிக்கு சேரணும்னாலும், தனியார் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் செல்லுபடியாகாதுன்னு அண்ணா பல்கலைக் கழத்துல நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டுல முடிவு பண்ணாங்க 3 மாசம் முந்தி.
 
வேற எதாவது விளக்கமா கேள்வி கேட்டா நான் இப்படி போரடிக்க மாட்டேன்.
 
என்ன பாடம்?, என்ன சிறப்புப் பாடம்?, எங்க இருக்கீங்க?, எப்ப ஊர்ல பரீட்சை எழுதலாம்? முதலான கேள்விகளுக்கு பதில் இருக்கும் பட்சத்தில் எனது பதிலும் சுருக்கமாய் இருக்குமென நம்பலாம்.
 
கல்வித்துறைக்கு போகணும்னு முடிவு செஞ்சதுக்கே வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
tamilnadu_gov_order.pdf

பிரேம்குமார்

unread,
Mar 20, 2009, 3:39:52 PM3/20/09
to panb...@googlegroups.com

ஏற்கனவே இந்த கேள்விய கேட்டுட்டேனா? :( என் நினைவாற்றல் அப்படி (இத வச்சிக்கினு நீ கல்வித்துறைக்கு போகனுமாடேன்னு யாரும் கேட்டுடாதீங்க)

//ஆனா, தமிழ்நாட்டுக் கல்லூரில வேலைக்கு சேரணும்னா தனியார் பல்கலைக் கழகத்துல Ph.D. படிச்சிடாதீங்க. தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற எந்த கல்வி நிறுவனத்தில பணிக்கு சேரணும்னாலும், தனியார் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம் செல்லுபடியாகாதுன்னு அண்ணா பல்கலைக் கழத்துல நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டுல முடிவு பண்ணாங்க 3 மாசம் முந்தி//

அப்போ எதுல‌ தான் ப‌டிக்கிற‌து?

//என்ன பாடம்?, என்ன சிறப்புப் பாடம்?,//

நான் பொட்டி த‌ட்டும் ப‌ணியில் இருக்குற‌தால‌ அதுலேயே செய்ய‌லாமா? உங்க கூட உரையாடியதில் நான் இந்த விசயத்தில் ஆழமா சிந்திக்க ஆரம்பிக்கலன்னு தெரியுது. இன்னும் கொஞ்சம் யோசித்துவிட்டு நிறைய கேள்விகளோடு வருவேன்.

எப்படியும் சென்னையில் இருந்து பரீட்சை எழுதுறது மாதிரி தான் யோசிக்கனும்

Ahamed Zubair A

unread,
Mar 21, 2009, 12:22:41 AM3/21/09
to panb...@googlegroups.com
பொட்டி தட்டுறது பொறியியல் புலம்.

அதுக்கு Ph.D. பண்ணனும்னா, வெளிப்புற மாணவனாகத்தான் சேர இயலும்.

அதாவது 1 வருஷம் அல்லது 6 மாசம் (பல்கலைக் கழகத்தைப் பொறுத்து) கல்லூரி போய் படிச்சுட்டு, அப்புறம் வேலை செய்யும்போது அடிக்கடி போய் வந்துட்டு இருக்கணும் - இது முதல் ஆப்சன்

இரண்டாவது மேலாண்மையில் முனைவர் பட்டம். இதை நீங்கள் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக் கழகத்திலோ, அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பு (All India Management Association) மூலமோ படிக்கலாம்.

எங்க படிச்சாலும், படிக்கணும் :-)

2009/3/20 பிரேம்குமார் <prem.kav...@gmail.com>

ஏற்கனவே இந்த கேள்விய கேட்டுட்டேனா? :( என் நினைவாற்றல் அப்படி (இத வச்சிக்கினு நீ கல்வித்துறைக்கு போகனுமாடேன்னு யாரும் கேட்டுடாதீங்க)

Ahamed Zubair A

unread,
Mar 28, 2009, 9:30:06 AM3/28/09
to panb...@googlegroups.com
இன்னைக்கு ஒரு ரொம்ப முக்கியமான செய்தி படிச்சேன்..

உங்க கிட்டயும் பகிர்ந்துக்கணும்னு நினைச்சேன்..

இந்த இணைப்பைப் பாருங்க..

http://www.aima-ind.org/TribuneSSC27309.asp

டெல்லி பல்கலைக் கழகத்திலிருந்து தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவர்களின் மத்திய அரசு பணிக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அது தொலைநிலைக் கல்வி மையத்தின் (DEC) அங்கீகாரம் பெறவில்லை என்பது தான் காரணம்..

இத்தனைக்கும் டெல்லி பல்கலைக் கழகம் மாநில அரசின் உதவி பெறும் பல்கலைக் கழகம்.. இதுல யாரை குத்தம் சொல்றதுன்னும் தெரியல..

அதனால, என்ன படிச்சாலும் அங்கீகாரம் இருக்கான்னு பாத்து படிங்கப்பா...


2009/3/21 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Mar 29, 2009, 1:14:42 AM3/29/09
to panb...@googlegroups.com
பல்கலைக் கழக மானியக் குழு தற்போது அனைத்து பல்கலைக் கழக துணை வேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள மடல் உங்கள் பார்வைக்கு.

http://www.ugc.ac.in/notices/cmlette2303r09.pdf

ஒரு முக்கியமான கல்வி சீர்திருத்தத்தை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இது போன்ற சீர்திருத்தங்கள் தான் ஒரு நாட்டினை வல்லரசாக்கக்கூடிய திறமை கொண்ட குடிமகன்களை உருவாக்கும்.

அன்புடன்,
சுபைர்
2009/3/28 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Apr 2, 2009, 1:32:53 PM4/2/09
to panb...@googlegroups.com

S.No

University / Institute Name

Provisional

Continuance of Provisional

Regular

Post facto Recognition

From

To

 

TAMIL NADU

 

 

 

 

 

1

 Annamalai University, Annamalainagar

***************

***************

15/02/2007

14/02/2012

1995-2007

2

 Bharath Institute of Higher Education and Research, Chennai

2007-08

***************

***************

***************

***************

3

 Bharathiar University, Coimbatore

2007-08

***************

***************

***************

***************

4

 Bharathidasan University, Tiruchirapalli

2007-08

***************

***************

***************

***************

5

 Dakshin Bharat Hindi Prachar Sabha, Chennai

2007-08

***************

***************

***************

***************

6

 Dr. MGR University, Chennai

2007-08

***************

***************

***************

***************

7

 Gandhigram Rural Institute, Gandhigram

2007-08

***************

***************

***************

***************

8

 Madurai Kamaraj University, Madurai

2007-08

***************

***************

***************

1995-2007

9

 Manonmaniam Sundaranar University, Tirunelvali

2007-08

***************

***************

***************

***************

10

 Periyar University, Salem

2007-08

***************

***************

***************

***************

11

Shanmugha Arts, Science, Technology & Research Academy (SASTRA), Thanjavur

2007-08

Till the committee visits and submits its  recommendation

***************

***************

***************

12

Sri Chandrasekharendra Saraswathi Viswamahavidyalaya, Kanchipuram

2007-08

***************

***************

***************

***************

13

Sri Ramachandra University, Chennai

2007-08

***************

***************

***************

***************

14

SRM University, Kanchipuram

2007-08

***************

***************

***************

***************

15

Tamil Nadu Agricultural University, Coimbatore

2007-08

***************

***************

***************

***************

16

Tamil Nadu Dr. Ambedkar Law University, Chennai

2007-08

***************

***************

***************

***************

17

Tamil University, Thanjavur

2007-08

***************

***************

***************

***************

18

University of Madras, Chennai

2007-08

***************

***************

***************

1995-2007

19

PRIST University, Thanjavur

2008-09

***************

***************

***************

***************

20

Periyar Manimmai University, Thanjavur

2008-09

***************

***************

***************

***************

21

Karunya University, Coimbatore

2008-09

***************

***************

***************

***************

22

Vinayaka Mission 's University, Salem

***************

***************

Feb. 2007

Feb. 2012

Till 2005

23

Alagappa University

2008-09

***************

***************

***************

***************


இதுதான் இன்றைய தேதிக்கு தமிழகத்தில தொலைநிலைக் கல்விக்கான அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகங்களின் அட்டவணை.

அன்புடன்,
சுபைர்

நன்றி: www.dec.ac.in

Ahamed Zubair A

unread,
Apr 10, 2009, 2:46:30 PM4/10/09
to panb...@googlegroups.com
சரி..படிப்பு மட்டும் பாத்துக்கிட்டு வர்றோம்..
 
இப்ப ஒரு சர்டிபிகேசன் ஒண்ணு இருக்கு. அதுக்கு Project Management Professional (PMP) ன்னு பேரு.
 
அப்டின்னா என்னா?
 
இருங்க சொல்றேன்..ஒவ்வொருவரும் ஒரு விதமான புறத்திட்டு மேலாண்மை (ப்ராஜெக்ட் மேனேஜ்மண்ட்) செய்கிறோம். அதை எப்படி செய்யலாம், என்னென்ன தேவை, என்னென்ன வழிமுறைகள் இருக்கு இதெல்லாம் பத்தி ஒரு தேர்வு இருக்கு. இது கிட்டத்தட்ட ஐ.எஸ்.ஓ. மாதிரி. ஐ.எஸ்.ஓ வாங்கினா நிறுவனங்களுக்கு என்ன மதிப்பு இருக்கோ, அதுமாதிரி PMP வாங்கினா மனுசனுக்கு மதிப்பு இருக்கு.
 
இதை யார் நடத்துறா?
 
இந்தத் தேர்வை நடத்துறது Project Management Institute (PMI), USA. அமெரிக்கால இருக்குற புறத்திட்டு மேலாண்மை நிறுவனம்.
 
இந்தத் தேர்வை யார்யார் எழுதலாம்?
 
புறத்திட்டு மேலாண்மையில் அனுபவம் இருக்கிற, புறத்திட்டு மேலாண்மையில் ஒரு 40 மணி நேரமாவது புதுசா கத்துக்கிட்ட யார் வேணும்னாலும் எழுதலாம்.
 
அது என்னா 40 மணி நேரம்?
 
PMI ஒரு புத்தகம் போட்டிருக்காங்க. அதுல புறத்திட்டு மேலாண்மையை பகுதி வாரியா பிரிச்சு இருக்கு. அந்த புத்தகம் பேரு PMBOK - Project Management Body of Knowledge. இதை மட்டும் படிச்சா போதும் தேர்வில பாஸ் மார்க் வாங்கிடலாம். ஆனா உண்மையில கத்துக்கணும்னா இதை வாழ்வின் அத்தனை செயல்பாடுகள்லயும் உபயோகிக்கணும். இத PMI அங்கீகாரம் பெற்ற மையங்களல் முறையா சொல்லித்தர்றாங்க. எல்லா நாட்டிலையும்.
 
எந்தெந்த இடத்தில சொல்லித்தர்றாங்கன்றதை இங்க பாருங்க தெரியும்.
 
படிச்சா என்ன வசதி?
 
வேலை  பாக்குற இடத்தில எனக்கு புறத்திட்டு மேலாண்மை நல்லாவே தெரியும் உதார் விடலாம்.
அமெரிக்காகாரன் படிப்புன்றதுனால எங்கயும் செல்லுபடியாகும். (செல்வன் அண்ணா ஏதாவது சொல்வார் பாருங்க)
இதெல்லாம் தாண்டி புதுசா ஒண்ணு கத்துக்கிட்டோம் மனசு நிறைவா இருக்கும்.
 
விதிமுறை:
 
ஒரு தடவை பரீட்சை எழுதி பாஸ் பண்ணிட்டா அதுக்கு 3 வருசம் தான் வேல்யூ.
அதுக்கப்புறம் புதுசா சிலது கத்துக்கிட்டேன்னு நீங்க ப்ரூஃப் பண்ணனும். இல்லாங்காட்டி திரும்ப பரீட்சை எழுதணும்.. :-)
 
ஏன்னா இது சர்டிபிகேட் இல்லை. சர்டிபிகேசன்.. (ஐ.எஸ்.ஓ. மாதிரின்னு ஆரம்பத்திலயே சொன்னேன்ல..ரினீவல் பண்ணிக்கிட்டே இருக்கணும்)

Ahamed Zubair A

unread,
May 18, 2009, 2:57:43 AM5/18/09
to panb...@googlegroups.com

நண்பர்களே,

ரொம்ப நாள் கழிச்சு பாக்குறோம்.

இப்ப என்ன விஷயம்னா, இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழக்த்தில ஜூலை மாதம் ஆரம்பமாகும் படிப்புகளுக்கு சேர்க்கை தேதியை ஜூன் 30 வரை அதிகரிச்சிருக்காங்க..

அதனால, ஊர் உலகத்தில நாலு படிப்பு படிச்சு வச்சுக்கலாம்னு நினைக்கிறவங்க உடனடியா சேர்ந்துக்கங்க...

சொத்துன்னு நமக்கு இருக்கப் போறது கல்வி ஒன்னுதான் இல்லீங்களா?




IGNOU

STUDENT REGISTRATION DIVISION

Dated: 01.05.2009

 N O T I C E

This is to bring to the notice of all prospective students  that the last date for submission of filled-in Application Form for admission to the programmes offered through Common Prospectus for July 2009 cycle has been extended  up to 30.06.2009 without any late fee.

             Officer on Special Duty, SRD


2009/4/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jun 2, 2009, 1:54:29 PM6/2/09
to panb...@googlegroups.com
இன்னைக்கு தினமலர்ல ஒரு செய்தி வந்திருந்தது.
 
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் தொலைநிலைக்கல்வி பாடத்திட்டங்களுக்கு தேர்வுக்கட்டணம் தேவையில்லைன்னு சொல்லியிருக்காங்க.
 
 
படிக்கிற காலத்துல படிக்காம இப்ப என்ன படிக்கணும்னு கேக்குறீங்களா? அதுவும் சரிதான்..
 
பி.கு.: இந்த தினமலர்ல இருந்து செய்திகளை வெட்டி ஒட்டுறது எப்படின்னு யாராவது சொல்லிக்கொடுங்கப்பா. (Right Click + Copy is not working only with Dinamalar)

செல்வன்

unread,
Jun 3, 2009, 2:11:21 AM6/3/09
to panb...@googlegroups.com

நெல்லை பல்கலை.,யில் தொலைநெறி கல்வி தேர்வு கட்டணங்கள் ரத்து


http://www.dinamalar.com//Pothunewsdetail.asp?News_id=13623

ஜூன் 02,2009,00:00  IST




திருநெல்வேலி : நெல்லை பல்கலையின் தொலைநெறிக்கல்வி திட்டத்திற்கான தேர்வு கட்டணங்கள் ரத்துசெய்யப்படுவதாக துணைவேந்தர் சபாபதிமோகன் அறிவித்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் கல்விசார் நிலைக்குழு கூட்டம் நேற்று பல்கலை வளாகத்தில் நடந்தது. துணைவேந்தர் சபாபதிமோகன் தலைமை வகித்தார். பதிவாளர் மணிக்குமார் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் பேசுகையில், நெல்லை பல்கலையில் படிப்பு, ஆராய்ச்சிகளை முன்வைத்து கல்வித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தெரிவுமுறை தேர்வு திட்டம் கடந்த ஆண்டு முதலே அமல்படுத்தியுள்ளோம்.



பல்கலையின் 20 ஆண்டு துவக்கவிழா அடுத்த ஆண்டு நடந்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் முதல்வர், துணைமுதல்வர், உயர்கல்வி அமைச்சர் உள்ளிட்டவர்களை அழைக்கதிட்டமிட்டுள்ளோம்.  பல்கலையின் தொலைநெறி கல்விதிட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் வரும் கல்விஆண்டு முதல் ரத்துசெய்யப்படுகிறது. எம்.எஸ்.சி.,சைக்காலஜியில் மாணவர் சேர்க்கை இல்லாததால் தற்போதுபயில்கிற 2ம் ஆண்டு, 3ம் ஆண்டு மாணவர்களை தவிர புதிய மாணவர்கள் சேர்க்கை ரத்துசெய்யப்படுகிறது. இந்தி பாடத்திற்கு போதிய நிதிஆதாரங்கள் இல்லாததால் அந்த வகுப்புகளும் ரத்துசெய்யப்படுகிறது என்றார்.



2009/6/2 Ahamed Zubair A <ahamed...@gmail.com>



--
செல்வன்

www.holyox.tk

“We've begun to raise daughters more like sons... but few have the courage to raise our sons more like our daughters.” - Gloria Steinem

செல்வன்

unread,
Jun 3, 2009, 2:12:10 AM6/3/09
to panb...@googlegroups.com
சுபைர்

பயர்பாக்ஸில் காப்பி,பேஸ்ட் செய்து ஒட்டினால் வருகிறது.நான் அப்படித்தான் செய்தேன்

Ahamed Zubair A

unread,
Jun 9, 2009, 12:44:19 AM6/9/09
to panb...@googlegroups.com
நன்றி செல்வன்...



2009/6/3 செல்வன் <hol...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jun 9, 2009, 12:45:53 AM6/9/09
to panb...@googlegroups.com
மற்றொரு குழுமத்தில் ஒருவர் கேட்ட, இதே போல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் விவரம் தர முடியுமா? கேள்விக்கான பதில் இது...

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் பின்வரும் வழிகளில் உண்டு..

1. டிப்ளமோ - பட்டயப் படிப்பு - அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் விரும்பிய பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
நிறை: மூன்று ஆண்டுகளில் பணிக்கு போகலாம்.
குறை: முன்னேற்றம் என்பதே இல்லாத வாழ்க்கை. 
குறையை நிவர்த்தி செய்யும் முறை: பணிக்கு போய்க்கொண்டே மேல்படிப்பை தொடரவேண்டும்.

2. ITI படிப்புகள் - பிளம்பர், முதலான தொழிற் படிப்புகளுக்கு தொழில் தெரிந்த நபர்களையே விரும்பி கேட்கின்றனர். மேலை நாடுகளில் கணிசமான வருவாய் இருக்கும். மேலே சொன்னதைப் போன்று ஒரு நிலை வரைக்கும் முன்னேறலாம். அதன் பிறகு மிகவும் கடினமாய் இருக்கும் முன்னேற்றம்.

3. இந்திய அரசின் கல்லூரிகள் - ராணுவம் முதலான இந்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்ற கல்லூரிகளில் 10ம் வகுப்பு முடிந்தவுடன் அரசே தத்தெடுத்து அவர்களுக்கு உரிய கல்வியை கொடுத்து பணியிலெடுத்துக் கொள்ளும். ஓய்வுக்காலம் என்பது சராசரியாக 35 வயது என்பதால் ஓய்வுக்குப் பிறகு அரசின் சிறப்பு உதவிகளுடன் தொழில் தொடங்கி முன்னேறலாம்.

4. Tool and Die Making - தொழில் சார்ந்த படிப்பு. அச்சு வார்ப்புக் கலை என்றும் சொல்லலாம். இந்த நவீன யுகத்தில் இந்த கலைக்கான வேல வாய்ப்பு குறையப் போவது இல்லை..

5. Paramedical courses - எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை முதலான மருத்துவம் சார்ந்த தொழிற்படிப்புகள் படிக்கலாம்.

6. மின்னணுவியல் - கணினி, தொலைக்காட்சி முதலான பொருள்களின் ரிப்பேர் பாடங்கள் படிக்கலாம்.

7. திரைத்துறை சார்ந்த படிப்புகள்

8. மீன்வளம், விமான பயணச் சீட்டு, நகை வடிவமைப்பு, முதலான பாடங்கள் படிக்கலாம்.

இது தவிர அனைத்து பல்கலைக் கழகங்களிலும் தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கப்படும் பட்டயப் பாடங்கள் அனைத்தும் படிக்கலாம்.

தமிழக பல்கலைக் கழகங்களில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மற்றும் வினாயகா மிசன்ஸ் பல்கலைக் கழகங்களைப் பரிந்துரைக்கிறேன்.

அன்புடன்,
சுபைர்

2009/6/9 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jun 13, 2009, 1:03:55 AM6/13/09
to panb...@googlegroups.com
ICFAI பல்கலைக் கழகம் பற்றிய ஒரு செய்தி...

பாத்து சூது வாதா இருந்துக்கங்கப்பு....!!

நன்றி: தினமலர்

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=4071


'இக்பாய்' கல்வி மையங்கள் செயல்பட ஐகோர்ட் தடை

ஜூன் 13,2009,00:00  IST


சென்னை : தமிழகத்தில் ஐ.சி.எப்.ஏ.ஐ., (இக்பாய்) நடத்தும் கல்வி மையங்கள் செயல்பட, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இக்பாய் நிறுவனத்தின் மீது சட்டப்படி யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., - அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்டவை நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.



ஐதராபாத்தில் இக்பாய் சொசைட்டி, உத்தராஞ்சல் மாநிலத்தில் இக்பாய் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இக்பாய் நேஷனல் கல்லூரி மற்றும் இக்பாய் பிசினஸ் ஸ்கூல், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளை தமிழகத்தில் நடத்தி வருகிறது. இக்பாய் நடத்தி வரும் கல்வி மையங்கள், தொலை தூரக் கல்வி மற்றும் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., உள்ளிட்ட பல்வேறு வகுப்புகளை மூடுவதற்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் தேவதாஸ் என்பவர் மனு தாக்கல் செய்தார். மற்றொரு பொது நல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுக்களை நீதிபதிகள் முகோபாதயா, தனபாலன் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் சீனியர் வக்கீல் ஜெயராமன், வக்கீல் சையது பஷீர் அகமது, யு.ஜி.சி., சார்பில் சீனியர் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் கோபிநாத், ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வக்கீல் முரளிகுமரன் உட்பட வக்கீல்கள் ஆஜராகினர்.



மனுக்களை விசாரித்த "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசின் அனுமதியின்றி, பல்கலைக் கழகத்தின் இணைப்பின்றி தமிழகத்துக்குள் எந்தக் கல்வி நிறுவனத்தையும் இக்பாய் நிறுவனத்தால் துவக்க முடியாது. அவ்வாறு துவக்கினால், அது போலி நிறுவனம் போலாகும். ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெறாமல் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., வகுப்புகளை இக்பாய் சொசைட்டி மற்றும் இக்பாய் பல்கலைக் கழகம் நடத்துவது, ஏ.ஐ.சி.டி.இ., சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளை மீறுவதே. தமிழக அரசின் அனுமதியின்றி, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்தின் இணைப்பின்றி உறுப்புக் கல்லூரிகளையும், கல்வி மையங்களையும் துவங்கிய இக்பாய் நிறுவனத்தின் செயல், தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்கு முறை சட்டத்தை மீறுவதாகும். பி.எட்., - எம்.எட்., வகுப்புகளையும் இக்பாய் நடத்தியுள்ளது. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலிடம் இதற்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், பெறவில்லை. பல்வேறு வகுப்புகளை நடத்த இக்பாய் சொசைட்டி மற்றும் இக்பாய் பல்கலைக் கழகத்துக்கு அனுமதியளிக்கவில்லை என யு.ஜி.சி., தொலை தூரக் கல்வி கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.



இவ்வாறு தமிழக அரசு மற்றும் யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதியின்றி எப்படி கல்வி மையங்களையும், வகுப்புகளையும் இக்பாய் நிறுவனம் நடத்தியது என ஆச்சரியமாக உள்ளது. அனுமதியின்றி துவக்கப்படும் கல்வி நிறுவனங்களைக் கண்டிக்க வேண்டும். எனவே, யு.ஜி.சி., மற்றும் அரசின் அனுமதியின்றி துவங்கப்பட்ட கல்வி மையங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது. அவ்வாறு இயங்க அனுமதித்தால், அப்பாவி மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, இந்த கல்வி நிறுவனங்களை நடத்த இக்பாய் சொசைட்டி, இக்பாய் பல்கலைக் கழகத்துக்கு சட்டப்பூர்வ உரிமையில்லை. எனவே, இவற்றை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இது போன்ற சட்ட விரோத கல்வி நிறுவனங்களைத் தடுக்க தகுந்த விதிமுறைகளை ஏ.ஐ.சி.டி.இ., - யு.ஜி.சி., போன்ற அமைப்புகள் கொண்டு வர வேண்டும். இக்பாய் சொசைட்டி, இக்பாய் பல்கலைக் கழகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., தமிழக அரசு உள்ளிட்டோரைப் பொறுத்தது. இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது. 

செல்வன்

unread,
Jun 13, 2009, 1:12:09 AM6/13/09
to panb...@googlegroups.com
இக்பாய் பல்கலைகழகம் ஈரோட்டில் ஒரு கல்வி கண்காட்சியில் ஸ்டால் வைத்திருந்தார்கள்.அங்கே எதேச்சையாய் போனபோது இக்பாய் லெக்சரர் ஒருவர் என்னை மாணவன் என்று நினைத்துக்கொண்டு இக்பாயில் எம்.பி.ஏ சேர சொல்லி பாம்ப்லட் ஒன்றை தந்தார். "இக்பாய்க்கு யு.ஜி.சி அங்கீகாரமே கிடையாதே?அப்புறம் அந்த டிகிரிக்கு என்ன மதிப்பு?" என்று கேட்டேன் விவரம் தெரிந்தவன் போல என்று உஷாராகிவிட்டார்...".இக்பாய்ல படிச்சா கேம்பஸ் இன்டர்வியூல பெரிய,பெரிய கம்பனியா வந்து அள்ளிகிட்டு போயிடுவான்.அப்புறம் யு.ஜி.சி அங்கீகாரம் இருந்தா என்ன, இல்லாட்டா என்ன?" "இருக்கலாம்..ஆனால் ஏன் உங்ககிட்ட யு.ஜி.சி அங்கிகாரம் இல்லை?" "சீக்கிரம் வாங்கிடுவோம் " அத்துடன் இடத்தை விட்டு நகர்ந்துவிட்டேன். இது நடந்தது 2004ல்.இன்று கோர்ட்டாக பார்த்து இக்பாய்க்கு ஆப்பு வைத்திருக்கிறது.
2009/6/13 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 6, 2009, 3:43:35 AM7/6/09
to panb...@googlegroups.com
நண்பர் ஒருவர் அனுப்பிய மடல்.. நம்ம இழைக்கு உதவுமேன்னு போட்டாச்சு..

என்ன படிக்கலாம், என்ன வேலை வாய்ப்புகள் என்பதை சுருக்கமாய் சொல்லியிருக்கிறார்கள்..


image001.gif

ச.பிரேம்குமார்

unread,
Jul 6, 2009, 2:17:39 PM7/6/09
to panb...@googlegroups.com

ஆகா, அருமையான் Chartஆ இருக்கே. பகிர்ந்தமைக்கு நன்றி சுபைர்

Ahamed Zubair A

unread,
Jul 14, 2009, 6:25:58 AM7/14/09
to panb...@googlegroups.com
http://www.aima-ind.org/14July2009_2.asp

குருஷேத்ரா பல்கலைக் கழகத்தில் 1976 முதல் தொலைநிலைக் கல்வி மூலம் படித்த படிப்புகளெல்லாம் அங்கீகாரம் பெறாதவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறையில் பணி புரிபவர்களுக்கு இது மிகவும் முக்கிய செய்தி.

பார்த்து சூதுவாதா இருந்துக்கங்கப்பு...

Asif Meeran AJ

unread,
Jul 14, 2009, 6:35:06 AM7/14/09
to panb...@googlegroups.com
இந்த வருசம் எம்.பி.ஏ படிக்க வாய்ப்பிருக்கா?
எங்க படிக்கலாம்னு சொல்லுங்கப்பு

சூது வாது இல்லாத பல்கலையா சொல்லுங்க :-)

Ahamed Zubair A

unread,
Jul 14, 2009, 7:03:52 AM7/14/09
to panb...@googlegroups.com
எம்.பி.ஏ. படிப்பு என்பது எங்கு படிக்கிறோம் என்பதில் இருக்கிறது.

மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களே கூட சறுக்கி விழுந்திருக்கின்றன தொலைநிலைக் கல்விக்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும்போது.

தங்களின் தொழில் நிமித்தமான மேலாண்மை படிப்புகள் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களிலேயே வழங்கப்படுகிறது.

எதற்காக படிக்கிறோம் என்பதில் தெளிவு இருந்தால் அதனைத் தெரியப்படுத்தவும்.

சும்மா பேருக்கு பின்னால எம்.பி.ஏ எழுதணும்னாலும் பல்கலைகள் இருக்கு. புரிஞ்சு படிக்கணும்னாலும் பல்கலைகள் இருக்கு.

பதில் சொல்லுங்க.

அன்புடன்,
சுபைர்


2009/7/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>
It is loading more messages.
0 new messages