1 view
Skip to first unread message

செல்வன்

unread,
Jun 10, 2017, 10:50:59 AM6/10/17
to செல்வன்
நேற்று விஸ்கான்ஸினில் உள்ள பெரிய மாட்டுப்பண்ணை ஒன்றுக்கு சென்றோம்.

வரவேற்பரை ஒரு பெரிய பன்னாட்டு கம்பனியின் வரவேற்பரை போல இருந்தது. மிக புரப்ஷனலாக பண்ணை நடத்தபட்டு வந்தது. குழந்தைகளுக்கு வாரம் 1 நாள் விவசாய அனுபவம் கிடைக்கவெண்டுமென இலவசமாக டிராக்டரில் ஏற்றி பண்ணையை சுற்றி காட்டுகிறார்கள். 

வளர்ப்பவை அனைத்தும் ஜெர்ஸி பசுக்கள். நாள் ஒன்றுக்கு மும்முறை பால் கறக்கிறார்கள். மொத்தமாக மாடு ஒன்றுக்கு (மூச்சை பிடித்து கொள்ளவும்) 38 லிட்டர் பால் ஒரு நாளுக்கு உற்பத்தி ஆகிறது. மொத்தம் ஐயாயிரம் மாடுகள்.

இவர்கள் நிலத்திலேயே ஆல்பால்பா, மக்காசோளம், கீரைகள் ஆகியவற்றை வளர்த்து தீவனமாக கொடுத்துவிடுகிறார்கள். வெளியே தீவனம் வாங்குவதில்லை.

மாட்டுசாணியில் இருந்து மீதேன் எடுத்து, மின்சாரம் தயாரிக்கிறார்கள். அதன்பின் மீதமுள்ள சாணி பவுடர் மாதிரி ஆகிவிடுகிறது. அதை உரமாக வயலில் கொட்டுகிரார்கள். வேறு உரமே வயலுக்கு தேவையில்லையாம். பண்ணை முழுக்க, முழுக்க மாட்டுசாண மின்சாரத்தில் தான் ஒட்டுகிறது. 

ரோட்டரி என ஒரு இயந்திரம் உள்ளது. மாடுகள் அதில் ஏறி நிற்கின்றன. ஒருவர் மாட்டு மடியில் சேனிடைசரை வைத்து துடைத்து பால்கறக்கும் இயந்திரத்தை மாட்டுகிறார். ரோட்டரி ஒரு சுற்று சுற்றிமுடிப்பதற்குள் பால் கறக்கபட்டு விடுகிறது

ஈக்கள் தொல்லை செய்யகூடாது என்பதற்காக இராட்சத மின்விசிறிகள் சுழன்றுகொண்டே உள்லன

ஜீவகாருண்யம்:

மாடுகள் நடக்க, படுக்க விசாலமான இடம் பண்ணையில் உள்ளது

மாடுகளுக்கு வாலும் இல்லை,கொம்பும் இல்லை. எப்படி அவற்றை அகற்றுகிறீர்கள், ஏன் அகற்றுகிறீர்கள் என கேட்டதுக்கு "பணி புரிபவர்களின் பாதுகாப்புக்குதான். இல்லையெனில் வால், கொம்பை அவை சும்மா சுழற்றினாலே அடிபட்டுவிடும்" என்றார்கள். கன்றாக இருக்கையில் கொம்பு வளரும் இடத்தில் ஒரு மருந்தை வைத்தால் கொம்பு அதன்பின் வளராது, துண்டிப்பதில்லை என்றார்கள். வாலை சுற்றி அதேபோல கட்டிவிடுவார்களாம். வாலும் அதன்பின் வளராதாம். ஆனால் மிருகவதை சங்கங்களின் தொஅர் போராட்டத்தால் விஸ்கான்ஸின் அரசு பிறப்பித்த உத்தரவுப்படி இந்த வருடம் மார்ச்சுக்கு பின் பிறந்த மாடுகளின் வால் வெட்டபடகூடாதாம். அதனால் அடுத்த வருடம் முதல் அனைத்து மாடுகளுன் வாலுடன் காட்சியளிக்கும்

கன்றுகள் பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்து தனியே கொண்டுபோய்விடுவார்கள். சீம்பால் புட்டியில் வைத்து கொடுக்கபடும். ஆண்கன்றுகள் சில நாளில் வெட்டுக்கு போய்விடும். பெண்கன்றுகள் பால் கறக்க தயார் ஆகும். பால் கறப்பது நின்றவுடன் அவையும் வெட்டுக்கு போய்விடும்.

மரபணு டைவர்சிட்டி கருதி ஆண்கன்றுகளை செலக்டிவாக இனப்பெருக்கத்துக்கு தயார் செய்வார்கள். எல்லாமே செயற்கை கருத்தரிப்புதான். அதனால் இங்குள்ள பசுக்கள் எல்லாமே கன்னித்தாய்கள் தான்.

கன்றுகள் உள்ள இடத்துக்கு சென்றோம். இனபெருக்கத்துக்கான அனைத்து தகுதிகளும், சிறப்பான மரபணுவும் பெற்றதாக ஒரு ஆண்கன்று செலக்ட் செய்யபட்டு வளர்க்கபட்டு வந்ததை கண்டோம்.

தயார் ஆகும் பால் முழுக்க, முழ்க்க சீஸுக்கே பயனாகிறது என்ரார்கள்.





--

Imsai Arasi

unread,
Jun 12, 2017, 4:52:02 PM6/12/17
to பண்புடன், செல்வன்
oh man.. all i could think is how smelly it would be :)

--

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

செல்வன்

unread,
Jun 12, 2017, 10:34:52 PM6/12/17
to Imsai Arasi, பண்புடன்

2017-06-12 15:51 GMT-05:00 Imsai Arasi <imsaia...@gmail.com>:
oh man.. all i could think is how smelly it would be :)

Being born in a village and being used to run after cows for their dung, I felt home in that smell :-)


--

Charles Antony

unread,
Jun 14, 2017, 4:24:17 AM6/14/17
to பண்புடன், Imsai Arasi
Cool.. 

2017-06-13 8:04 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2017-06-12 15:51 GMT-05:00 Imsai Arasi <imsaia...@gmail.com>:
oh man.. all i could think is how smelly it would be :)

Being born in a village and being used to run after cows for their dung, I felt home in that smell :-)

:) 


--
நட்புடன்

ழைக்கான்
http://charlesantony.blogspot.com/
http://vidiyal.wordpress.com/ 

Creation of a casteless and peaceful society is indeed the first step towards just, egalitarian, and harmonious society. A society of equals, neither unequal nor more-equals, beyond the strings of caste, class, gender, race, etc. Otherwise it would lead to social oppression, political exploitation, economic deprivation, cultural domination, gender discrimination, class isolation, deliberate exclusion. Lets' believe in a society beyond this.

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
Reply all
Reply to author
Forward
0 new messages