Re: [MinTamil] விளம்பி ஆண்டே வருக

1 view
Skip to first unread message

N. Ganesan

unread,
Apr 14, 2018, 5:48:12 PM4/14/18
to மின்தமிழ், vallamai, panbudan, housto...@googlegroups.com
On Fri, Apr 13, 2018 at 4:29 AM, kanmani tamil
<kanmani...@gmail.com> wrote:
>
> நாளை சித்திரை -1 புத்தாண்டு கொண்டாடும் அனைத்து மின்தமிழ் நட்புகளுக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
> கண்மணி
>


சந்தவசந்தம் தந்த புத்தாண்டுக் கவிதை:

வருஷப் பிறப்பு - 2018-04-14 - விளம்பி

------------------------------------------------

சீவிளம்பி ஆண்டுலகு செழிக்கமெய்யே அரசாள்வோர்
நாவிளம்ப கவலையின்றி நல்லவர்கள் இனிதிருக்க
கூவிளம்பூங் கொன்றைபுனல் கோளரவம் திகழ்முடிமேல்
மாவிளம்பால் மதிவைத்த மாதேவன் அருளாலே.
- சிவசிவ (மரு. வி. சுப்பிரமணியன், நியூ ஜெர்ஸி)

(நேரிசை வெண்பா)

உளம்பிறழ்ந்து போகாமல் உண்மைக் கவிதைக்
களம்சிதைந்து வீழாமல் காணும்- விளம்பி
நலமெல்லாம் கொண்டுவந்து நல்கிடுக வெற்றி
வலம்வருக, சேர்க வளம்
கவிமாமணி இலந்தை

ஓங்கும் அதர்மம் ஒறுக்கநுதற் கண்திறந்து
தீங்கு தொலைத்துச் சிறுமையொழித் - தீங்கவ்
விளம்பிறைசூ டெம்பிரான் ஈந்தருள்க நன்மை
விளம்பியெனும் ஆண்டில் விரைந்து.
- வெண்பாவிரும்பி (முனைவர் ந. சிவக்குமார், டெக்சாஸ்)




விளம்பி எனும் நல்லாண்டு

கணமென்னும் எண்ணவிசை நாணைப் பூட்டிக்
காலமெனும் கூரம்பைப் பாய்ச்சும் ஆரம்
மனமென்னும் தன்னிலசை மாற்றிக் காட்டி
மாறிமறை வாகுமதோ மாயா ஜாலம்!

தினமென்னும் இத்தினமே திண்ணம்! இன்பம்
தீராத நந்நிலையைத் தெளிவீர் தன்னுள்
கனவென்னும் நிலைதுயிலும் நனவும் தாண்டிக்
காட்சிக்குச் சாட்சியெனக் கனிவீர் இன்றே!

விளம்பியினி நன்மைவரும் விளங்கும் ஞாலம்
விளம்பிமறை உண்மைதரும் விளக்கும் ஞானம்
விலங்குமனத் துன்பமினி விலகும்! நேயம்
விளங்கியுல கெங்கும்நலம் விளைத்து வாழும்!

புதுவருடம் புதுநோக்கம்! புதிதாய்த் தன்னுள்
பூத்ததொளிப் பெருஞ்சுடரைப் புரிந்து கொள்வீர்!
அதுயினிமை! இதுவிளம்பி அன்பில் கோர்த்து
ஆனதிது! யாவும்நலம்! அடியேன் வாழ்த்து!

மீ. ரா (லண்டன், இங்கிலாந்து)

( an approximate gist in English).

Let the pace of the sharp arrow of time, set by the string of
recurring thoughts entwined in the bow of mind, be what it may, as the
very moment is the only truth, by being with, the triad of dream,
wakeful and deep-sleep states are surpassed, and there, YOU, the
unchanging witness of all.

So let the dawn of Tamil New Year VILAMBI, the revealer, enlighten us
for a world that is full of love, peace and prosperity.

Rajja

------------------

களம்புகும் வீரர்கள் விளம்பிடும் வெற்றியால்
கவிதைகள் அதிகரிக்கும்!
காலவோட் டத்தினில் ஞாலமே புதுப்புதுக்
கணங்களில் மெய்சிலிர்க்கும்!
குளங்களில் தாமரை பூத்திடத் திருமகள்
குதுகலம் கொண்டமர்வாள்!
கொஞ்சிடும் குருவிகள் பசுமரந் தோறுந்தங்
கூட்டினில் கூடிவாழும்!
வளங்களை வழங்கிடும் வயல்களில் நெற்கதிர்
வளைந்துதம் வணக்கம்காட்டும்!
வாலிழை மங்கையர் வானத்து நிலவோடு
மண்ணிலே ஒளிகூட்டுவர்!
விளம்பிநல் லாண்டினை விளம்பிடும் வேதியர்
வேண்டிடும் வேண்டுகோள்கள்
விரைவாக நிறைவேறும்! வரவாகுஞ் செல்வங்கள்
வெற்றிகள் தமைநல்குமே!

விளம்பித் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புடன் புலவர் இராமமூர்த்தி.

-------------------

விளம்பி வருடம்-- புதிது.. 14-04-2018
.
இனிப்பான சர்க்கரைப் பொங்கலும் கூடவே
இல்லற மனைவி ‘நகை’யும்,
எழுந்தநம் கொழுந்துகள் வாயில்புன் சிரிப்பும்
ஏகாந்த உல்லாசமும்
தனியான வேலுடன் தமிழ்பேசும் முருகனின்
சளைக்காத அருட் கண்களும்
சலிக்காமல் நம்மீது கருணையே கொண்டிடும்
தாயாரின் நற்செயல்களும்
முனியாத நம்குரு நம்மீது வைத்திடும்
முன்னேற்றக் கை ஆசியும்
முப்பக்கம் நம்தெரு அன்பர்கள் நம்மேலே
மூவாத நட்புரையும்
கனியோடு வந்தநல் விளம்பித் தாய் அன்னை
கசடின்றி அருள்செய்குவள்!
கரும்போடு பணியாரம் சித்ரான்னம் வைத்(து)அவளைக்
கைகூப்பி வணங்குவோமே!
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& (கவியோகி வேதம்)

சகாப்த புதுவருஷ வாழ்த்துடன்,
நா. கணேசன்


> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Apr 15, 2018, 5:26:01 PM4/15/18
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panbudan


On Fri, Apr 13, 2018 at 4:29 AM, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> நாளை சித்திரை -1 புத்தாண்டு கொண்டாடும் அனைத்து மின்தமிழ் நட்புகளுக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
> கண்மணி


தமிழ்நாட்டின் தலைமை அமைச்சர்கள் புத்தாண்டில் டிஃபென்ஸ் தொழிற்சாலைகள் அமைக்க இருக்கும்
இந்திய அரசையும், பாரத பிரதமர் மோதியையும் வரவேற்கும் காட்சி.




​​
நிர்மலா சீதாராமன் பேருரை:
https://www.youtube.com/watch?v=qJmF0ZgGHbA

http://www.mijaaj.com/pm-narendra-modi-arrives-chennai-shortly-inaugurate-defexpo-2018/#img-1
http://www.thesouthindianpost.com/south-india/tamilnadu/modi-arrives-in-tn-amid-cauvery-row

நா. கணேசன்
 https://theprint.in/opinion/happy-tamil-new-year-wait-not-everyone-in-tamil-nadu-agrees-it-is-today/49736/

Saying Happy Tamil New Year today is very political. Modi should have known that

MANURAJ SHUNMUGASUNDARAM 14 April, 2018

Prime Minister Narendra Modi being welcomed by the Tamil Nadu Chief Minister Edappadi K Palaniswami, in Chennai on Thursday | PTI Photo / PIB

The crux of the issue is that the Tamil renaissance and Dravidian movements resented that Tamils’ life had started imbibing Vedic ideas.

On 23 August 2011, months after J. Jayalalithaa was elected for her third term as chief minister, her government passed a resolution in the Tamil Nadu assembly to change the ‘Tamil New Year’ to 14 April. It coincides with the first day of the Tamil month ‘Chithirai’, and many other communities across India celebrate their new year on the same date.

Jayalalithaa had stated then that the Tamil New Year was wrongly being celebrated on 14 January – the first day of the Tamil month ‘Thai’ – as legislated by the preceding Dravida Munnetra Kazhagam (DMK) government in 2008.

Jayalalithaa overturned many DMK projects. But, the change of the new year date was significant. The debate for when the Tamil New Year should be celebrated goes into the core of the movement that laid the foundation for Dravidian political sub-nationalism and Tamil cultural renaissance.

In 1921, a group of Tamil scholars led by Maraimalai Adigal, one of the pioneers of the Tamil renaissance movement, declared that there was sufficient literary evidence in ancient Sangam-era texts such as Nattrinai, Ainkurunuru and Tholkappiayam to observe the new year at the start of the Tamil month of Thai. The Dravidian poet-writer Bharthidasan, through this song, admonished Tamils who were celebrating the new year in Chithirai month as those living in complete darkness.

“நித்திரையில் இருக்கும் தமிழா,

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு.”

The crux of the issue is that the Tamil renaissance and Dravidian movements resented that Tamils’ life had started imbibing Vedic ideas and the Tamil language had begun loaning Sanskrit words. The rise of non-Brahmin scholars like Maraimalai Adigal coinciding with that of Dravidian political stalwarts like Periyar EV Ramasamy created impetus to shear Tamil of external influences completely. The basis for the Chithirai new year was the 60-year cycle that was mentioned in the Vedas.

For instance, this new year is ‘Vilambi’ while the previous one was called ‘Heyvilambi’. Each of these years, ‘samvatsara’, with Sanskritic names is derived from a myth involving Lord Krishna and sage Narada, who is transformed into a woman and gives birth to 60 sons. Each son is then given the reins to rule the world for one year, and that year is derived from the nameof the son.

The Tamil reformists found this myth too hard to swallow and decided to come up with a more rational basis for their calendar. The birth of Tamil saint-poet Thiruvalluvar was estimated to be in 31 BC and that was adopted as the official start of the Tamil calendar. The DMK-led government had officially notifiedthis to be the first Tamil calendar year in 1972.

Successive AIADMK governments have not altered the Thiruvalluvar year calculation and the same is being followed to date.

However, there is debate among Tamils – depending on which side of the political fence you stand – as to whether they must go with Thai or Chithirai for the new year.

Prime Minister Narendra Modi into this debate during his visit to Chennai a couple of days back. During his speech at the DefExpo, Modi wished Tamils a happy new year. By doing so, he has once again revealed how little he understands the complexities of Tamil Nadu and its deeply reformist socio-political legacy.

Thanks to the new archaeological evidences unravelled in Keezhadi, Alagankulam, Kodumanal and the perception of the antiquity of Tamil language validated with the help of advanced linguistic tools, there is a growing sentiment of Tamil neo-renaissance and Dravidian resurgence. In this context, one can expect the debate around the Thai new year vs the Chithirai new year to be renewed again.

Manuraj Shunmugasundram is an Advocate and Spokesperson, DMK.


Reply all
Reply to author
Forward
0 new messages