Sahambari Kavithaigal

75 views
Skip to first unread message

Lakshmi Sahambari

unread,
May 22, 2008, 9:56:12 PM5/22/08
to பண்புடன்

செல்லமே
=======

உன் கன்னக்குழி அழகில்
நான் புதையுறும் பொழுதிலும்
உன் பிஞ்சுவிரல் நகங்கள்
என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
உன் கருவிழிகளுக்குளே காணப்படும்
கவலையற்ற என் பிம்பத்திலும்
அயர்ந்து நீ தூங்கும் பொழுதில்
என் தோள் நனைக்கும் எச்சிலிலும்
உன் அதரங்களைத் தாண்டி
வழிந்தோடும் என் உதிரத்திலும்

வரங்களிற்கான கூறுகளைத்
திரட்டிக் கொண்டு
நீ தேவதையென மாறுகிறாய் ....
எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !

Lakshmi Sahambari

unread,
May 25, 2008, 11:53:44 PM5/25/08
to பண்புடன்
நத்தைக்கூடு

அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது
நத்தை கொண்ட ஓடு .


நகர்வுகள் அனைத்திலும்
உடன் பயணித்து வரும் ஓடு
சுமையாகவும்
ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும் ...


ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் ...

நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்

அணிந்து அணிந்து கொண்டதோ
அணிவிக்கப்பட்டதோ தெரியாது


ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

Gnaniyar

unread,
May 26, 2008, 12:03:02 AM5/26/08
to panb...@googlegroups.com
//ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .//

 
அழகானதொரு சிந்தனை வார்த்தைச் சிக்கனத்தோடு வந்திருக்கின்றது...நன்றாக சிந்தித்திருக்கின்றீர்கள்



பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற
மல்லேஸ்வரியைப் பற்றிய ஒரு கவிதை எனது நண்பன் எழுதியது.

பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்றாலும்
உனக்கு கிடைத்ததும்
சுமைதாங்கி என்கிற பட்டம்தானே என்ற கவிதை ஞாபகத்திற்கு வருகிறது

"...ப்ரியன்..."

unread,
May 26, 2008, 12:42:01 AM5/26/08
to panb...@googlegroups.com
மிக நல்ல கவிதை சாகாம்பரி...

Asif Meeran AJ

unread,
May 26, 2008, 7:59:38 AM5/26/08
to panb...@googlegroups.com
ஈர்க்கும் கவிதைகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள் லட்சுமி
வாழ்த்துகள்


ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் .

ம்ம். சில அடையாளங்கள் தவிர்க்கவும் முடியாதவை
அழகானாலும் அழுக்கானாலும் சுமக்க வேண்டியவைகள்


Asif Meeran AJ

unread,
May 26, 2008, 8:09:30 AM5/26/08
to panb...@googlegroups.com
வரங்களிற்கான கூறுகளைத்
திரட்டிக் கொண்டு
நீ தேவதையென மாறுகிறாய் ....
எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !


எனக்கும். :-)))
நல்ல கவிதைகளைப் படிக்கும்போது இயல்பாகவே சிறகுகள் முளைத்து விடுகின்றன

Lakshmi Sahambari

unread,
May 27, 2008, 6:34:41 AM5/27/08
to பண்புடன்
நன்றி ரசிகவ் ..ப்ரியன் மற்றும் மீரான் அவர்களே :-)
உங்களின் வாசிப்பும் விமர்சனங்களும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை
அளிக்கிறது :-)))))))

கோகுலன்

unread,
May 29, 2008, 6:04:16 PM5/29/08
to panb...@googlegroups.com
ஆஹா.. குழந்தையின் அழகே அழகு.. நல்ல கவிதை.. கடைசிவரிகள் முத்தாய்ப்பு லட்சுமி அவர்களே..
 
எல்லோரும் சொல்லுவார்கள்.. காதலித்தால் கவிஞனாகிவிடலாம் என.. 
 
குழந்தையை ரசித்தாலும் கூட அப்படியே!!

http://gokulansirukathai.blogspot.com/  
http://gokulanpoem.blogspot.com/  
http://gokulanfotos.blogspot.com/

Lakshmi Sahambari

unread,
May 29, 2008, 10:29:08 PM5/29/08
to பண்புடன்
Nandri Gokulan :-)

On May 30, 3:04 am, "கோகுலன்" <gokulankan...@gmail.com> wrote:
> On 5/22/08, Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > செல்லமே
> > =======
>
> > உன் கன்னக்குழி அழகில்
> > நான் புதையுறும் பொழுதிலும்
> > உன் பிஞ்சுவிரல் நகங்கள்
> > என் முகத்தில் கீறும் கவிதைகளிலும்
> > உன் கருவிழிகளுக்குளே காணப்படும்
> > கவலையற்ற என் பிம்பத்திலும்
> > அயர்ந்து நீ தூங்கும் பொழுதில்
> > என் தோள் நனைக்கும் எச்சிலிலும்
> > உன் அதரங்களைத் தாண்டி
> > வழிந்தோடும் என் உதிரத்திலும்
>
> > வரங்களிற்கான கூறுகளைத்
> > திரட்டிக் கொண்டு
> > நீ தேவதையென மாறுகிறாய் ....
> > எனக்குச் சிறகுகள் முளைக்கத் துவங்குகிறது !
>
> ஆஹா.. குழந்தையின் அழகே அழகு.. நல்ல கவிதை.. கடைசிவரிகள் முத்தாய்ப்பு லட்சுமி
> அவர்களே..
>
> எல்லோரும் சொல்லுவார்கள்.. காதலித்தால் கவிஞனாகிவிடலாம் என..
>
> குழந்தையை ரசித்தாலும் கூட அப்படியே!!
>
>
>
> --
> நட்புடன்,
> கோகுலன்.http://ninaivukalil.blogspot.com/http://gokulansirukathai.blogspot.com/http://gokulanpoem.blogspot.com/http://gokulanfotos.blogspot.com/- Hide quoted text -
>
> - Show quoted text -

இலக்குவண்

unread,
May 30, 2008, 10:41:49 PM5/30/08
to panb...@googlegroups.com
// சமயங்களில் சுமையாகவும்

பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும//

அழகு.உண்மை.

2008/5/26 Asif Meeran AJ <asifm...@gmail.com>:

கோகுலன்

unread,
Jun 1, 2008, 11:10:00 PM6/1/08
to panb...@googlegroups.com
ஓட்டை தவிர்த்த நத்தை
கற்பனைகளில் தோன்றுவதில்லை
உடன்வரும் ஒன்று
அதற்கான அடையாளமாய் ...
 
நத்தை கொண்ட
கூட்டிற்கான நகலாய்
பெண்ணின் வரையறைகள்
 
நல்ல ஒப்புமை கவிதையில்.. மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள் சாகம்பரி !!

--
நட்புடன்,
கோகுலன்.
http://ninaivukalil.blogspot.com/  

Tamizh Raseegai M

unread,
Jun 2, 2008, 1:26:20 PM6/2/08
to panb...@googlegroups.com
//ஈர்ப்பின் இருப்பிடமாகவும்

அழகானதொரு கூடாகவும்
சமயங்களில் சுமையாகவும்
பிற்பொழுதுகளில்
அவளிற்கான அடையாளமாகவும் //
 

மிகவும் எனை ஈர்த்த வரிகள்...
வாழ்த்துக்கள்...சாகம்பரி !!

 

Lakshmi Sahambari

unread,
Jul 3, 2008, 8:45:45 PM7/3/08
to பண்புடன்
நொடிப்பொழுதேனும் இமைக்காமல்
பார்க்குமாறு செய்துவிடுகிறது
நிறங்கள் கசியும் பூக்கள்

அருகில் சென்று வாசம் நுகர்வதை
அவை ஆட்சேபிப்பதில்லை

தொட்டுத்தடவி மென்மை ரசிப்பதை
கொஞ்சமேனும் மறுப்பதில்லை

பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்
பலவீனம் மட்டுமே புலப்படுகிறது

வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது
எளிதானதாக இருக்கிறது

சூரியன்
எப்பொழுதும் எங்கிருந்தோ
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...

On Jun 2, 10:26 pm, "Tamizh Raseegai M" <tamizhrasee...@gmail.com>
wrote:
> //ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
> அழகானதொரு கூடாகவும்
> சமயங்களில் சுமையாகவும்
> பிற்பொழுதுகளில்
> அவளிற்கான அடையாளமாகவும் //
>
> மிகவும் எனை ஈர்த்த வரிகள்...
> வாழ்த்துக்கள்...சாகம்பரி !!
>
> On 6/2/08, கோகுலன் <gokulankan...@gmail.com> wrote:
>
>
>
>
>
> >  ஓட்டை தவிர்த்த நத்தை
> >> கற்பனைகளில் தோன்றுவதில்லை
> >> உடன்வரும் ஒன்று
> >> அதற்கான அடையாளமாய் ...
>
> > நத்தை கொண்ட
> > கூட்டிற்கான நகலாய்
> > பெண்ணின் வரையறைகள்
>
> > நல்ல ஒப்புமை கவிதையில்.. மிகவும் ரசித்தேன்.. வாழ்த்துக்கள் சாகம்பரி !!
> > --
> > நட்புடன்,
> > கோகுலன்.
> >http://ninaivukalil.blogspot.com/
> >http://gokulansirukathai.blogspot.com/
> >http://gokulanpoem.blogspot.com/

செல்வன்

unread,
Jul 3, 2008, 11:48:23 PM7/3/08
to panb...@googlegroups.com
மென்மையான அழகான கவிதை :)
வாழ்த்துக்கள்..

2008 ஜூலை 4 06:15-ல், Lakshmi Sahambari <n.lakshmi...@gmail.com> எழுதியது:



--
அன்புட‌ன்
குட்டி செல்வ‌ன்

http://selvakavithaigal.blogspot.com/

Gnaniyar

unread,
Jul 4, 2008, 12:01:58 AM7/4/08
to panb...@googlegroups.com

பூக்களைப் பற்றிய தங்களது கவிதையில் ஒட்டு மொத்த பெண்மையின் நிலையும் அடங்கிப்போகின்றது... கவிதை நன்றாக வந்திருக்கின்றது...பாராட்டுக
்கள்

நண்பன்

unread,
Jul 4, 2008, 8:53:13 AM7/4/08
to பண்புடன்
என்ன ஒரு முரண்!?

> வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது
> எளிதானதாக இருக்கிறது
>
> சூரியன்
> எப்பொழுதும் எங்கிருந்தோ
> பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...


வலுவற்ற பூவும், வலிமையான சூரியனும்.... ஒன்றுக்கொன்றுக்கொன்று
தொடர்புடையதும், அதே வேளையில் முரண்பட்ட தளத்தில் தங்களை நிலை நிறுத்திக்
கொள்ளும் பாடுபொருட்களாகவும்...

அருமையான முரண் ஒன்றைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள், பாராட்டுகள்...

Lakshmi Sahambari

unread,
Jul 6, 2008, 8:33:31 PM7/6/08
to பண்புடன்
@ Selvan - Rasikow - Nanban

Vaasipirkum vimarsanathirkum mikka nandri :-))

தஞ்சை-மீரான்

unread,
Jul 8, 2008, 3:38:29 AM7/8/08
to panb...@googlegroups.com
மலரின்(பூ) கவிதை
என் மனதில்
மணத்தை நிரப்பியது!
 
வாழ்த்துக்கள்.
 

 
--
அன்புடன்
மீரான்

www.vaalkaikalvi.blogspot.com
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

இலக்குவண்

unread,
Jul 8, 2008, 12:13:56 PM7/8/08
to panb...@googlegroups.com
கவிதை நல்லா இருக்குங்க. மெண்மையாவும் ஆழமாவும்.

இலக்குவண்.

2008/7/4 Lakshmi Sahambari <n.lakshmi...@gmail.com>:

Lakshmi Sahambari

unread,
Jul 14, 2008, 12:56:06 AM7/14/08
to பண்புடன்
Vaasipirkku mikka nandri :-)

On Jul 8, 9:13 pm, "இலக்குவண்" <nanumava...@gmail.com> wrote:
> கவிதை நல்லா இருக்குங்க. மெண்மையாவும் ஆழமாவும்.
>
> இலக்குவண்.
>
> 2008/7/4 Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com>:
> > > >http://gokulanfotos.blogspot.com/-Hide quoted text -
>
> > > - Show quoted text -- Hide quoted text -

Lakshmi Sahambari

unread,
Jul 14, 2008, 12:59:05 AM7/14/08
to பண்புடன்


அறியாமலே விட்டுச்செல்கிறது
ஒவ்வொரு நனைதலும்
பிறிதொரு மழைக்கான தேடலை ...



On Jul 14, 9:56 am, Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com>
wrote:
> Vaasipirkku mikka nandri :-)
>
> On Jul 8, 9:13 pm, "இலக்குவண்" <nanumava...@gmail.com> wrote:
>
>
>
> > கவிதை நல்லா இருக்குங்க. மெண்மையாவும் ஆழமாவும்.
>
> > இலக்குவண்.
>
> > 2008/7/4 LakshmiSahambari<n.lakshmisahambb...@gmail.com>:
> > > > >http://gokulanfotos.blogspot.com/-Hidequoted text -

Lakshmi Sahambari

unread,
Sep 2, 2008, 6:55:51 AM9/2/08
to பண்புடன்
கொஞ்சம் உயிரும் ..... காதலென சொல்லப்படுவதும்...
====================================================


உயிரின் கடைசி துகள்கள்
என்னை நீங்கத் தீர்மானித்த பொழுதில்
காற்றின் கரங்களை பற்றிக்கொண்டு
காலத்தின் கைபிடிக்குள் சிக்காது மீட்டு
மலைமுகட்டில் ஒரு கழுகுக்
கூட்டை என் இருபிடமாக்கினாய்

புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்

உன் சுவாசத்தின் நெடி அறிய
புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்

உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்

அறிவிப்பற்ற மழையாய் நீ என்னை
நனைக்கத் தொடங்கிய பொழுதில்
உனக்கான தாகம் வற்றத் துவங்கி
உன் இருத்தலை பெருந்துயராக்கிப் போனது

உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்

என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..



www.sahambari.blogspot.com

On Jul 14, 9:59 am, Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com>
wrote:
> அறியாமலே விட்டுச்செல்கிறது
> ஒவ்வொரு நனைதலும்
> பிறிதொரு மழைக்கான தேடலை ...
>
> On Jul 14, 9:56 am, LakshmiSahambari<n.lakshmisahambb...@gmail.com>
> > > > > >http://gokulanfotos.blogspot.com/-Hidequotedtext -

Asif Meeran AJ

unread,
Sep 2, 2008, 7:31:05 AM9/2/08
to panb...@googlegroups.com

உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்


:-) ரொம்ப நல்லா வந்திருக்குங்க சஹாம்பரி
காதல் குறித்த அனுமானங்கள் காதலுக்கு வரமா சாபமா? ;-)

ezhil

unread,
Sep 2, 2008, 7:58:01 AM9/2/08
to panb...@googlegroups.com

>>>உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்<<<

போலி என்ப‌து ந‌ம் எதிர்பார்ப்பிற்கு மாறாக‌ இருப்ப‌த‌னால்  சொல்கிறோமா? இல்லை அசல் என சொல்லி நகல் ஏமாற்றிவிட்டதே என்பதனாலா?

>>உன் நெருக்கத்தின் வெம்மை கிடைக்காது போயினும்
உன்னைப் பற்றிய அனுமானங்களோடு
பயணிக்கத் துவங்கினேன்
காதலின் ஆபத்தான பள்ளங்களில்<<

ப‌ள்ளங்களில் ப‌ய‌ணிப்ப‌து ஆப‌த்தில்லையே!? ஊடே ப‌ள்ள‌ங்க‌ள் நிறைந்த‌ குன்றுக‌ளில் ப‌ய‌ணிப்ப‌து அல்ல‌வா ஆப‌த்தானாது?

>>புள்ளியாய் மட்டுமே நீ தோன்றக் கூடிய தொலைவில்
புறப்படத் துவங்கிற்று என் பிரியத்தின் பிரவாகம்<<

தூர‌த்து க‌வ‌ர்ச்சி! எளிமையான‌ வ‌ரிக‌ள்!

>>என் அனுமானங்களுக்கு
உயிர் இருந்திருக்கலாம்
நான் மிஞ்சி இருக்ககூடும் ..<<

இருந்திருக்க‌லாம்! அப்படி இருந்திருந்தால் இந்த‌ க‌விதை இருந்திருக்காது!

Saharathendral

unread,
Sep 2, 2008, 10:09:45 AM9/2/08
to பண்புடன்

சில நேரங்களில் சில கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து அவ்வளவு
சீக்கிரம் வெளியேறிவிட முடியாது. அது போன்ற கவிதைகளில் இது ஒன்று. நன்றி
சாகம்பரி

Tamizh Raseegai M

unread,
Sep 2, 2008, 2:22:45 PM9/2/08
to panb...@googlegroups.com
//உன் சுவாசத்தின் நெடி அறிய

புழுவாய் நெளிந்து நெருங்கவே
பறந்து விலகி உனக்கான தாகம் கூட்டினாய்//
 
 நான் மிகவும் ரசித்த வரிகள்....
கவிதை மிக நன்று..சஹாம்பரி
...


 

Ayyanar

unread,
Sep 2, 2008, 2:35:02 PM9/2/08
to panb...@googlegroups.com
விலகல் V நெருங்கல்
இது ரெண்டுக்குமான அலைக்கழிப்புதான் பெரும்பான்மைத் தனிமைகளின் மிகப்பெரும் பிரச்சினை.
விலகலில் துளிர்க்கும் உயிரிலைகள் நெருங்கலில் உதிரத் துவங்குவது நாம் வாழும் சூழலின் அபத்தங்களை, போலித்தனங்களை பதிவு செய்வதாய் உள்ளது.
 

Lakshmi Sahambari

unread,
Sep 8, 2008, 1:37:30 AM9/8/08
to பண்புடன்
நன்றி அண்ணாச்சி.. அனுமானங்கள் கண்டிப்பா ஆபத்தானது தான்னு தோணுது..
காதல்னு இல்ல.. எல்லா விஷயத்துலேயும் :-)


@ எழில் - வாசிச்சு விமர்சனம் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி ..
#############################
>>>உன்னைகாட்டிலும் போலியானது
என் காதலை கொழுத்து வளரவிட்ட
உன்னைபற்றியதான என் அனுமானங்கள்<<<

போலி என்ப‌து ந‌ம் எதிர்பார்ப்பிற்கு மாறாக‌ இருப்ப‌த‌னால் சொல்கிறோமா?
இல்லை
அசல் என சொல்லி நகல் ஏமாற்றிவிட்டதே என்பதனாலா?

##################### போலின்னு ஒன்னும் இல்ல ..அசல்னு ஒன்னும்
இல்ல..எல்லாம் நம்ம நெனசுக்கறது தான் :-)

######ப‌ள்ளங்களில் ப‌ய‌ணிப்ப‌து ஆப‌த்தில்லையே!? ஊடே ப‌ள்ள‌ங்க‌ள்
நிறைந்த‌
குன்றுக‌ளில் ப‌ய‌ணிப்ப‌து அல்ல‌வா ஆப‌த்தானாது? ###########

பள்ளங்கள் பாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்திட கூடாதே ...:-)

@ சஹாரா

ரொம்ப நன்றி :-))))))

Lakshmi Sahambari

unread,
Sep 8, 2008, 1:44:10 AM9/8/08
to பண்புடன்

@தமிழ் ரசிகை - ரொம்ப நன்றி :-))))))

@Ayyanar

//// விலகலில் துளிர்க்கும் உயிரிலைகள் நெருங்கலில் உதிரத்
துவங்குவது ... ///

நான் இத்தனை வரிகள் எடுத்துக் கொண்டு சொல்ல நினைத்தது ..இந்த ஒற்றை
வரியை தான் :)






On Sep 8, 10:37 am, Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com>
wrote:
> > சாகம்பரி- Hide quoted text -

ezhil

unread,
Sep 8, 2008, 3:07:32 AM9/8/08
to panb...@googlegroups.com

>>பள்ளங்கள் பாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்திட கூடாதே ...:-)<<

:). உண்மையில் ப‌ள்ள‌ம் வேறு பாதாள‌ம் வேறு என்று என‌க்கு தோன்ற‌வில்லை! நீங்க‌ள் சொன்ன‌ ப‌திலை பார்க்கும்போது பாதாள‌த்திற்கு ப‌ள்ள‌ம் சிக‌ரம் என்று தோன்ற‌ செய்து விட்டீர்க‌ள். சுவார‌ஸ்ய‌மான‌ ப‌தில்! ந‌ன்றி!

Lakshmi Sahambari

unread,
Sep 8, 2008, 10:33:50 AM9/8/08
to பண்புடன்
@Ezhil :-)))))))))

On Sep 8, 12:07 pm, ezhil <nand...@gmail.com> wrote:
> >>பள்ளங்கள் பாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்திட கூடாதே ...:-)<<
>
> :). உண்மையில் ப‌ள்ள‌ம் வேறு பாதாள‌ம் வேறு என்று என‌க்கு தோன்ற‌வில்லை!
> நீங்க‌ள் சொன்ன‌ ப‌திலை பார்க்கும்போது பாதாள‌த்திற்கு ப‌ள்ள‌ம் சிக‌ரம் என்று
> தோன்ற‌ செய்து விட்டீர்க‌ள். சுவார‌ஸ்ய‌மான‌ ப‌தில்! ந‌ன்றி!
>
> On 9/8/08, Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > நன்றி அண்ணாச்சி.. அனுமானங்கள் கண்டிப்பா ஆபத்தானது தான்னு தோணுது..
> > காதல்னு இல்ல.. எல்லா விஷயத்துலேயும் :-)
>
> > @ எழில் -  வாசிச்சு விமர்சனம் பண்ணினதுக்கு ரொம்ப நன்றி ..
> > #############################
> > >>>உன்னைகாட்டிலும் போலியானது
> > என் காதலை கொழுத்து வளரவிட்ட
> > உன்னைபற்றியதான என் அனுமானங்கள்<<<
>
> > போலி என்ப‌து ந‌ம் எதிர்பார்ப்பிற்கு மாறாக‌ இருப்ப‌த‌னால்  சொல்கிறோமா?
> > இல்லை
> > அசல் என சொல்லி நகல் ஏமாற்றிவிட்டதே என்பதனாலா?
>
> > #####################  போலின்னு ஒன்னும் இல்ல ..அசல்னு ஒன்னும்
> > இல்ல..எல்லாம் நம்ம நெனசுக்கறது தான் :-)
>
> > ######ப‌ள்ளங்களில் ப‌ய‌ணிப்ப‌து ஆப‌த்தில்லையே!? ஊடே ப‌ள்ள‌ங்க‌ள்
> > நிறைந்த‌
> > குன்றுக‌ளில் ப‌ய‌ணிப்ப‌து அல்ல‌வா ஆப‌த்தானாது? ###########
>
> > பள்ளங்கள் பாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்திட கூடாதே ...:-)
>
> > @ சஹாரா
>
> > ரொம்ப நன்றி :-))))))
>
> > On Sep 2, 7:09 pm, Saharathendral <saharathend...@gmail.com> wrote:
> > > சில நேரங்களில் சில கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து அவ்வளவு
> > > சீக்கிரம் வெளியேறிவிட முடியாது. அது போன்ற கவிதைகளில் இது ஒன்று. நன்றி
> > > சாகம்பரி- Hide quoted text -

Lakshmi Sahambari

unread,
Sep 23, 2008, 11:40:12 PM9/23/08
to பண்புடன்
உன் விரல் பிடித்துக் கொள்கிறேன் ...
================================


உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது

வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள்
தென்படக்கூடும் ..







On Sep 8, 7:33 pm, Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com>
wrote:
> > - Show quoted text -- Hide quoted text -

இலக்குவண்

unread,
Sep 23, 2008, 11:41:42 PM9/23/08
to panb...@googlegroups.com
//இருட்டிலே

கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள்
தென்படக்கூடும்// :))

2008/9/24 Lakshmi Sahambari <n.lakshmi...@gmail.com>

சூர்யா

unread,
Sep 24, 2008, 4:29:13 AM9/24/08
to panb...@googlegroups.com
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
நன்று.

Gokulan

unread,
Sep 24, 2008, 6:16:51 PM9/24/08
to panb...@googlegroups.com
நல்ல கவிதை சாகம்பரி...

2008/9/23 Lakshmi Sahambari <n.lakshmi...@gmail.com>

உன் விரல் பிடித்துக் கொள்கிறேன் ...
================================


உன் விரல் பிடித்துக் கொள்கிறேன்
அனிச்சையாய் ..
இருள் படர
ஆயத்தமாகும் பொழுது

வகைபிரிக்க முடியாத உணர்வு
இருட்டில் பயணிப்பதென்பது
பயமாகவும் இருக்கலாம்
தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
 
இரண்டும் ஒன்றுதானோ?

ஆராய விருப்பமில்லாது
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்

உறுதியளிக்க முடியாது தான்
உன் பாதைகளின் தன்மை குறித்து
இருளைக் காட்டிலும்
மோசமான தாக்கத்தை
நீ என்னில் ஏற்படுத்தலாம்
எனினும் உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
 
உண்மை.. நல்ல வரிகள்... தெரிந்தே துணியும் கதைகள் எல்லோரிடமும் உண்டு போலும்...
 


என்னென்னவோ காரணங்களை
எனக்கு நானே கற்பித்துக் கொண்டு
உன் விரல் பிடித்துக்கொள்கிறேன்
இருட்டிலே
கொஞ்சம் கொஞ்சமாய்
என் சுயத்தின் சிதைவுகள்
தென்படக்கூடும் ..
 
ஆமாம்.. நமக்கு நன்றாய் தெரிந்தும் வெறும் மன ஒப்புதலுக்காய் ஏதோ சொல்லிக்கொள்வதும் உண்டு..
 
மனதின் யதார்த்த எண்ணங்களை நன்றாய் சொல்கிறது கவிதை...நன்று!
 
 
 
சிறுகதைகள் : http://gokulansirukathai.blogspot.com/
ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/

Lakshmi Sahambari

unread,
Sep 24, 2008, 10:08:36 PM9/24/08
to பண்புடன்
நன்றி இலக்குவன் , சூர்யா மற்றும் கோகுலன்

@கோகுலன்

/////
> வகைபிரிக்க முடியாத உணர்வு
> இருட்டில் பயணிப்பதென்பது
> பயமாகவும் இருக்கலாம்
> தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
////

இரண்டும் ஒரே போல தோன்றினாலும் ஒரு நூலிழை வித்தியாசம் உண்டு...

Courage is not the absence of fear - But it is a phase in which
something is else is considered to be more important than fear ...


######################################

On Sep 25, 3:16 am, Gokulan <gokulankan...@gmail.com> wrote:
> நல்ல கவிதை சாகம்பரி...
>
> 2008/9/23 Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com>
> --
> நட்புடன்,
> கோகுலன்.
> கவிதைகள் :http://ninaivukalil.blogspot.com/
> சிறுகதைகள் :http://gokulansirukathai.blogspot.com/
> ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/- Hide quoted text -

Lakshmi Sahambari

unread,
Oct 6, 2008, 4:38:58 AM10/6/08
to பண்புடன்
தீராநதி



நகர்கிறேன்
தெளிந்த நீரின் பிரவாகமாய்
தடயங்களை விட்டுசெல்வதில்லை
பாறைகளின் வன்மம்

நகர்த்தப்படுகிறேன்
உதிர்ந்து விட்ட சருகுகள்
சொல்ல மறந்த சலசலப்பில்

வரையறுக்கப்படாதது
என் வெளி
வெளிச்சமும் இருளும்
வித்தியாச படுவதில்லை

பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்

உயிர்ப்புடன் பயணிக்கிறேன்
தீராநதியாய் நான்



On Sep 25, 7:08 am, Lakshmi Sahambari <n.lakshmisahambb...@gmail.com>
wrote:
> நன்றி இலக்குவன் , சூர்யா மற்றும் கோகுலன்
>
> @கோகுலன்
>
> /////> வகைபிரிக்க முடியாத உணர்வு
> > இருட்டில் பயணிப்பதென்பது
> > பயமாகவும் இருக்கலாம்
> > தைரியக்குறைவாகவும் இருக்கலாம்
>
> ////
>
> இரண்டும் ஒரே போல தோன்றினாலும் ஒரு நூலிழை வித்தியாசம் உண்டு...
>
> Courage is not the absence of fear - But it is a phase in which
> something is else is considered to be more important than fear ...
>
> ######################################
>
> On Sep 25, 3:16 am, Gokulan <gokulankan...@gmail.com> wrote:
>
>
>
> > நல்ல கவிதை சாகம்பரி...
>
> > 2008/9/23 LakshmiSahambari<n.lakshmisahambb...@gmail.com>
> > > On Sep 8, 7:33 pm, LakshmiSahambari<n.lakshmisahambb...@gmail.com>
> > >  wrote:
> > > > @Ezhil :-)))))))))
>
> > > > On Sep 8, 12:07 pm, ezhil <nand...@gmail.com> wrote:
>
> > > > > >>பள்ளங்கள் பாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்திட கூடாதே ...:-)<<
>
> > > > > :). உண்மையில் ப‌ள்ள‌ம் வேறு பாதாள‌ம் வேறு என்று என‌க்கு தோன்ற‌வில்லை!
> > > > > நீங்க‌ள் சொன்ன‌ ப‌திலை பார்க்கும்போது பாதாள‌த்திற்கு ப‌ள்ள‌ம் சிக‌ரம்
> > > என்று
> > > > > தோன்ற‌ செய்து விட்டீர்க‌ள். சுவார‌ஸ்ய‌மான‌ ப‌தில்! ந‌ன்றி!
>
> > ஆங்கிலக்கவிதைகள்:http://gokulanpoem.blogspot.com/-Hide quoted text -

ezhil

unread,
Oct 6, 2008, 5:58:54 AM10/6/08
to panb...@googlegroups.com

 நன்றாக இருக்கிறது. இனிமையாக‌வும் இந்த சோகம் இருக்கிற‌து!

>நகர்கிறேன்
தெளிந்த நீரின் பிரவாகமாய்<

பிர‌வாக‌ம் ந‌க‌ர்வ‌தாக‌ சொல்வ‌து முர‌ண்பாட‌ல்ல‌வா? :) ந‌க‌ர்ந்தால் ந‌டை! பொங்கிப் பாய்ந்தால்தான் பிர‌வாக‌ம்!


>பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்<

ம‌ழை ஓய்ந்துவிட்ட‌தென்று மிக‌ அழ‌காக‌ சொல்லியிருக்கிறீர்க‌ள் (அல்ல‌து நான் அப்ப‌டி புரிந்துக் கொண்டேன்?)

N Suresh

unread,
Oct 7, 2008, 6:38:26 AM10/7/08
to panb...@googlegroups.com
நல்ல படைப்பு
வாழ்த்துக்கள்
அன்புடன் என் சுரேஷ்
2008/10/6 ezhil <nan...@gmail.com>

Lakshmi Sahambari

unread,
Oct 7, 2008, 8:48:29 PM10/7/08
to பண்புடன்
மிக்க நன்றி எழில் மற்றும் சுரேஷ் :)))))))

@எழில்
////
பிர‌வாக‌ம் ந‌க‌ர்வ‌தாக‌ சொல்வ‌து முர‌ண்பாட‌ல்ல‌வா? :) ந‌க‌ர்ந்தால்
ந‌டை!
பொங்கிப் பாய்ந்தால்தான் பிர‌வாக‌ம்!
////

ஆமாம் ... :))))))

/////
பெருமழையின் சுவடுகள்
எதிர்பாராத வெள்ளமாயும்
வானவில்லின் பிரதிபலிப்பிலும்

ம‌ழை ஓய்ந்துவிட்ட‌தென்று மிக‌ அழ‌காக‌ சொல்லியிருக்கிறீர்க‌ள் (அல்ல‌து
நான்
அப்ப‌டி புரிந்துக் கொண்டேன்?)

//////////////

சரி தான் எழில் ... மழை ஓய்ந்து விட்டது என்றும் வெள்ளம் ஏற்படுத்திய
பாதிப்பை விட வானவில்லின் பிரதிபலிப்பு நதி நீர்பரப்பில் விழுவது நதிக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கொள்ளலாம் :)))))))



On Oct 7, 3:38 pm, "N Suresh" <nsureshchen...@gmail.com> wrote:
> நல்ல படைப்பு
> வாழ்த்துக்கள்
> அன்புடன் என் சுரேஷ்
> 2008/10/6 ezhil <nand...@gmail.com>...
>
> read more »
>
>
>
> >  நன்றாக இருக்கிறது. இனிமையாக‌வும் இந்த சோகம் இருக்கிற‌து!
>
> > >நகர்கிறேன்
> > தெளிந்த நீரின் பிரவாகமாய்<
>
> > பிர‌வாக‌ம் ந‌க‌ர்வ‌தாக‌ சொல்வ‌து முர‌ண்பாட‌ல்ல‌வா? :) ந‌க‌ர்ந்தால் ந‌டை!
> > பொங்கிப் பாய்ந்தால்தான் பிர‌வாக‌ம்!
>
> > >பெருமழையின் சுவடுகள்
> > எதிர்பாராத வெள்ளமாயும்
> > வானவில்லின் பிரதிபலிப்பிலும்<
>
> > ம‌ழை ஓய்ந்துவிட்ட‌தென்று மிக‌ அழ‌காக‌ சொல்லியிருக்கிறீர்க‌ள் (அல்ல‌து நான்
> > அப்ப‌டி புரிந்துக் கொண்டேன்?)
>
> >> > > --- Hide quoted text -

N Suresh

unread,
Oct 8, 2008, 4:28:34 AM10/8/08
to panb...@googlegroups.com
நன்றிக்கு நன்றி எழில்.
பலருக்கு தங்களின் படைப்புகளுக்கு என்ன பின்னூட்டம் வந்துள்ளது என்று
பார்க்கக்கூட நேரம் இல்லாத நிலையில் நீங்கள் நாங்களிட்ட
பின்னூட்டத்திற்கு நன்றி சொல்வது வியப்பாக உள்ளதால் நன்றி சொன்னேன்.

வாழ்க!!


அன்புடன்
என் சுரேஷ்

ezhil

unread,
Oct 8, 2008, 1:08:01 PM10/8/08
to panb...@googlegroups.com

அன்பு சுரேஷ்,

உங்கள் நன்றியை சாகம்பரியிடம் சேர்த்துவிட்டேன்.

நன்றி சொன்னது அவர்கள்தான்! :)

Lakshmi Sahambari

unread,
Dec 7, 2008, 9:59:55 PM12/7/08
to ezhil, panb...@googlegroups.com
இருத்தல்

பத்திரமாய் படிந்திருக்கிறது
பட்டாம்பூச்சியின் வண்ணங்கள்
பழுப்பேறிய நோட்டுப்பக்கங்களில்

இதுவே போதுமானது
உயிரைப்பிழியும் என் தனிமையை
வரைதலில் எடுத்துரைக்க

ஜன்னல் கண்ணாடியில்
மங்கிய வெளிச்சத்தில்
எனதென ஊகிக்ககூடியதாய்
ஒரு பிம்பம்
அனுமதிப்பதில்லை
தனிமைக்கான என் சித்திரத்தை

தனிமையிலேனும்
உண்டாகிறது
எனக்கான என் இருத்தல்

www.sahambari.blogspot.com

On Oct 8, 10:08 pm, ezhil <nand...@gmail.com> wrote:
> அன்பு சுரேஷ்,
>
> உங்கள் நன்றியை சாகம்பரியிடம் சேர்த்துவிட்டேன்.
>
> நன்றி சொன்னது அவர்கள்தான்! :)
>

> On 10/8/08, N Suresh <nsureshchen...@gmail.com> wrote:
>
>
>
> > நன்றிக்கு நன்றி எழில்.
> > பலருக்கு தங்களின் படைப்புகளுக்கு என்ன பின்னூட்டம் வந்துள்ளது என்று
> > பார்க்கக்கூட நேரம் இல்லாத நிலையில் நீங்கள் நாங்களிட்ட
> > பின்னூட்டத்திற்கு நன்றி சொல்வது வியப்பாக உள்ளதால் நன்றி சொன்னேன்.
>
> > வாழ்க!!
> > அன்புடன்
> > என் சுரேஷ்
>

> > >> >> > > > > > நீங்க‌ள் சொன்ன‌ ப‌திலை...
>
> read more »

Vimal Doss K

unread,
Nov 17, 2016, 12:08:25 AM11/17/16
to பண்புடன், n.lakshmi...@gmail.com
On Sunday, 25 May 2008 22:53:44 UTC-5, Lakshmi Sahambari wrote:
> நத்தைக்கூடு
>
> அணிந்து கொண்டதோ
> அணிவிக்கப்பட்டதோ தெரியாது
> நத்தை கொண்ட ஓடு .
>
>
> நகர்வுகள் அனைத்திலும்
> உடன் பயணித்து வரும் ஓடு
> சுமையாகவும்

> ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
> அழகானதொரு கூடாகவும் ...

>
>
> ஓட்டை தவிர்த்த நத்தை
> கற்பனைகளில் தோன்றுவதில்லை
> உடன்வரும் ஒன்று
> அதற்கான அடையாளமாய் ...
>
> நத்தை கொண்ட
> கூட்டிற்கான நகலாய்
> பெண்ணின் வரையறைகள்
>
> அணிந்து அணிந்து கொண்டதோ
> அணிவிக்கப்பட்டதோ தெரியாது

>
>
> ஈர்ப்பின் இருப்பிடமாகவும்
> அழகானதொரு கூடாகவும்
> சமயங்களில் சுமையாகவும்

> பிற்பொழுதுகளில்
> அவளிற்கான அடையாளமாகவும் .


நத்தையை பெண்மைக்கு உவமைப்படுத்திய உங்கள் சிந்தனை பாராட்டுக்குரியது...!!!
இப்படிக்கு
உங்கள் தமிழ் ஆர்வத்தின்
இரசிகனில் இவனும் ஒருவன்...!!!

Ahamed Zubair A

unread,
Nov 17, 2016, 12:12:35 AM11/17/16
to பண்புடன், n.lakshmi...@gmail.com
யப்பா ராசா... 2008ம் வருச மெயிலுக்கு ரொம்ப பாஸ்டா ரிப்ளை பண்ணிட்டீங்க...

உங்களைப் பத்தின அறிமுகம் போடுங்க...


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com

Vimal Doss K

unread,
Nov 17, 2016, 1:37:31 AM11/17/16
to பண்புடன், n.lakshmi...@gmail.com
மொழியும் முன் நாவினிக்க செய்யும் தேன் மொழி எந்தன் தாய் மொழி...
இதைவிடவா ஒரு அருகம் வேண்டும்....!!!

Ahamed Zubair A

unread,
Nov 17, 2016, 1:39:52 AM11/17/16
to பண்புடன்
மொழியும் முன் நாவினிக்குமா? 

அது சரி...

தங்கள் பெயர், ஊர், பண்புடன் குழுமத்தில் சேர்ந்ததன் நோக்கம் முதலியன பகன்றால் பகலவன் உதிப்பதைப் போல் அன்பர்கள் உதித்து உம்மைப் புகழ வகை செய்ய வேணுமாய் விரும்புகிறேன்.

Achu Sudhakar

unread,
Nov 17, 2016, 10:34:51 AM11/17/16
to பண்புடன்
Vimak Doss K  அறிமுகம்னா, புதுசா ஒரு மடல் ஆரம்பித்து அதில் உங்களை பற்றி சொல்லுங்க.
அது இப்படி இருக்கனும்,

புதுமுகம் அறிமுகம்:

பெயர்: விழியன்
தம்பி பெயர் : உமாநாத்
ஊர் : சென்னை
வயது : 24, 34
வேலை : கணினி
சொந்த ஊர் : வேலூர்

நன்றி,
வணக்கம்


ஸ் பெ

unread,
Nov 17, 2016, 2:49:18 PM11/17/16
to panbudan
;-)

Achu Sudhakar

unread,
Nov 17, 2016, 3:06:47 PM11/17/16
to பண்புடன்
ஃபேக் ஐடிக்கு யாரோ சீரியசா ரிப்ளை பண்ணியிருக்காங்க அதுவும் 8 வருஷ பழைய மெயிலுக்கு.

2016-11-17 14:48 GMT-05:00 ஸ் பெ <stalinf...@gmail.com>:
;-)

Muthu மணி

unread,
Nov 17, 2016, 9:57:00 PM11/17/16
to பண்புடன்

பண்புடன் தொடங்கும் போது வந்த மெயிலுக்கு பதில்

vimal doss.k

unread,
Nov 21, 2016, 1:22:17 PM11/21/16
to panb...@googlegroups.com
பெயர் : விமல்குமார் காளிதாஸ்
ஊர்  :  தென்காசி 
வயது : 31 
வேலை : கணினி 
சொந்த ஊர்  :  தென்காசி 

நன்றி 
வணக்கம்
--
Thanks & Regards
VimalDoss.K
Protech Solutions Inc.,

Achu Sudhakar

unread,
Nov 21, 2016, 2:24:50 PM11/21/16
to பண்புடன்
நன்றி விமல். பாலினம், கல்யாணம் ஆச்சா இல்லையா,எத்தனை குழந்தைங்க. 

shylaja

unread,
Nov 21, 2016, 2:36:55 PM11/21/16
to பண்புடன்
பண்புடனை உயிர்ப்பித்திருக்கிறவரை  ஏன்ப்பா போட்டு  படுத்தறீங்க?:):)
ஷைலஜா

திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!" 

- நம்மாழ்வார் திருவாய்மொழி

ஸ் பெ

unread,
Nov 25, 2016, 2:41:07 PM11/25/16
to panbudan
வருக வருக விமல்..
எப்படி பண்புடனுக்கு வந்தீர்கள் ?

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Ahamed Zubair A

unread,
Nov 26, 2016, 12:10:36 AM11/26/16
to பண்புடன்
கேள்வியில் பிழை இருக்கிறது ஸ்பெ...

ஏன் பண்புடனுக்கு வந்தீர்கள்னுல்ல இருக்கணும் ;)

ஹாஜா மொஹைதீன்

unread,
Nov 26, 2016, 12:38:17 AM11/26/16
to panb...@googlegroups.com

ரெண்டு மாடரேட்டரும் சேர்ந்த்து புது உறுப்பினரை கலாய்ப்பது நல்லாவா இர்ுக்்க்ு

Haja Mohaideen
from mi phone

Ahamed Zubair A

unread,
Nov 26, 2016, 2:22:06 AM11/26/16
to பண்புடன்
அப்படின்னா பழைய உறுப்பினரைக் கலாய்க்கலாமா??

எல்லாரும் ஊரான் வீட்டு போன்ல மெய்ல் பண்ணுவாங்களா? இவரு மட்டும் mi phoneல அனுப்புறாராம்...
Reply all
Reply to author
Forward
0 new messages