ஒரு 'மினி' ஆன்மீகப்(?!) பயணத்தொடர்!

15 views
Skip to first unread message

R.VENUGOPALAN

unread,
Mar 16, 2015, 1:36:16 AM3/16/15
to பண்புடன், தமிழ்த்தென்றல்

ஒரு பத்து நாட்களுக்கு முன்னர் யாராவது என்னிடம் வந்து 'உனக்கு நிறைய ஆலயதரிசன யோகம் இருக்கிறது' என்று சொல்லியிருந்தால், அனேகமாக அன்னாருக்கு பன்றிக் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி தென்படத் தொடங்கியிருக்கிறதோ என்றுதான் சந்தேகப்பட்டிருப்பேன். பப்பன் எனப்படுகிற எனது பால்ய சினேகிதன் பத்மநாபன் இரண்டு ஆப்பிள்களுடன் வீட்டுக்கு வந்து "ஒரு கார் அரேஞ்ச் பண்ணிண்டு அப்படியே ஊர் வரைக்கும் போயிட்டு வரலாம்னு இருக்கேன். நோக்கு தோதுப்படுமோ?' என்று கேட்டபோது கண்டிப்பாக அவன் 'லிங்கா' படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்திருப்பானோ என்ற பச்சாதாபமே ஏற்பட்டது. 'ஆகற ஜோலியைப் பாருடா; இங்கேயிருக்கிற காளிகாம்பா கோயிலுக்குப் போய் மாசக்கணக்காச்சு' என்று அடியேன் அலுத்துக் கொண்டதும், அவன் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு வெளியேறியதும் பரோட்டா சூரியின் நகைச்சுவைபோல அடுத்த நிமிடமே மறந்து போய்விட்டது.

ஆனால், அடுத்தடுத்து சில பால்ய சினேகிதர்களின் அழைப்புகள். 'இன்னும் ரெண்டே ரெண்டு சீட்டுத்தாண்டா இருக்கு' என்று எச்சரிக்கை வேறு. கிளம்புவதற்கு முந்தைய நாள் வீட்டுக்கே வந்து விட்டான் வாஞ்சி என்ற இன்னொரு சினேகிதன். 'உன் உடம்புக்கு ஒரு புண்ணாக்கும் இல்லை; மரியாதையா வந்து சேரு. சும்மா நாலு நாள் ஜாலியா இருந்திட்டு வரலாம்' என்று வற்புறுத்தவும், 'போய்த்தான் பார்க்கலாமே?' என்று ஒரு நப்பாசைஆனால், வீட்டிலோ...

'போறதைப் பத்தி ஒண்ணும் இல்லை; ஒழுங்கா மருந்து மாத்திரை சாப்பிடணும்.'

'இப்பத்தான் குறைச்சிருக்கேள்; வெளியே போனா திரும்பவும் பாக்கெட் பாக்கெட்டா வாங்கி ஊதித் தள்ளுவேள்'

'நாலு நாள் கார்லே போனா திரும்பவும் முதுகு வலிக்க ஆரம்பிச்சிட்டா...? எதுக்கு ரிஸ்க்?"

"நாங்க இருக்கோம்," என்று அபயஹஸ்தம் காட்டினான் வாஞ்சி. "பத்திரமாக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்திடறோம். யூ டோண்ட் வொரி.."

நிறைய தயக்கத்துடனும் அதைவிட நிறைய அறிவுரைகளுடனும் 'ஜாக்கிரதையாப் போயிட்டு வாங்கோ!' என்று வீட்டில் ஒரு வழியாக பெரும்பான்மையில் தீர்மானம் நிறைவேற, ஒரு ஜோல்னாப்பையில் கையில் அகப்பட்டதை எடுத்துத் திணித்துக்கொண்டு நானும் கிளம்பி விட்டேன். சரி, எங்கெல்லாம் போகணும்?

"திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், சங்கரன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி, திருவானைக்காவல்,ஸ்ரீரங்கம், சமயபுரம், ........"

"டேய் டேய்! ஸ்தூ! என்னடா கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுலே கூவுற மாதிரி கூவுறே? நாலு நாளுக்குள்ளே இத்தனை இடம் எப்படிடா பார்க்கிறது?"

"புறப்படறச்சயே ஏண்டா அஸ்து போடறே? எல்லாம் பகவான் கூட்டிண்டு போவார். கெளம்பு."

'பகவான் கூட்டிண்டு போவாரா? பகவான் கிட்டேயே கூட்டிண்டு போறியாடா?' என்ற கேள்வி நாக்கின் நுனி வரைக்கும் வந்தபோதும், சகுனம், ஜோசியம், இவற்றில் எல்லாம் TMT முறுக்குக் கம்பிகளுக்கு மேலான நம்பிக்கை வைத்திருக்கும் வாஞ்சியை உசுப்பேற்ற விரும்பவில்லை. சரி, எவ்வளவோ பண்ணிட்டோம்; இதைப் பண்ண மாட்டோமா?

சர்வம் டொயோட்டா இன்னோவாப்பர்ப்பணம் அஸ்து!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்குப் போவதற்குள் முதுகும் கால்களும் 'இதெல்லாம் உனக்குத் தேவையா?' என்று அசூயைப்படுகிற நிலைமையில், ஒரு இன்னோவா காருக்குள் ஒடுங்கி உட்கார்ந்து நான்கு நாட்களில் திட்டமிட்டதில் பெரும்பாலான கோவில்களுக்குப் போய், கூடுமானவரை கூட்டத்தில் மாட்டிக்கொள்ளாமல் சாமி கும்பிட்டு வந்ததேகூட, 'கின்னஸ்' புத்தகமில்லாவிட்டாலும் ஒரு 'சின்னஸ்' புத்தகத்திலாவது இடம்பெறத் தக்க சாதனைதான்.

மறுநாள் மாலை ஐந்து மணியளவுக்கு அந்தக் கருநிற இன்னோவா வீட்டு வாசலில் வந்தபோது ஏற்கனவே இந்துக்கல்லூரி அலுமினிகளில் ஐந்து பேர் அமர்ந்திருந்தார்கள். 'ஜாக்கிரதையா போயிட்டு வாங்க', 'டேக் கேர் டாடி', 'போய் போன் பண்ணுங்க' என்று கலவரமாய் அவியலாக சொல்லப்பட்ட அறிவுரைகளை அறையும் குறையுமாக கேட்டபடி வண்டியில் ஏற எத்தனித்தேன்.

'பின்னாலே உட்கார்ந்துக்கடா! ஆல்பாபெட் வரிசைப்படித்தான் எல்லாரும் உட்கார்ந்திருக்கோம்' என்று வாஞ்சி சொன்னதும், 'டேய், இதென்ன மெர்க்கண்டைல் லா கிளாஸாடா?' என்று கேட்க ஆசைதான். ஆனால், என்னைப் பின்னால் உட்காரவைக்க, நடுவரிசையில் இருந்தவர்கள் கீழே இறங்கி, டிரைவர் வந்து அந்த இருக்கைகளை முன்பக்கமாக மடக்கி, பின்வரிசையில் காலியாக இருந்த ஒரே சீட்டில் அமர வைத்தபோது அவர்களின் சதித்திட்டம் எனக்குப் புரியவில்லை. கடைசியாக கோயம்பேடு கேம்ஸ் வில்லேஜில் வசிக்கும் பப்பனை அழைத்துக்கொள்ள வண்டி விரைந்தபோது வாஞ்சி சொன்னான்.

'பின்பக்கம் உட்கார்ந்தா அடிக்கடி கீழே இறங்க முடியாதே; எப்படி தம் அடிப்பே?'  கொலைகாரப் பாவிகளா

கோயம்பேட்டில் பப்பன் ஏறிக்கொண்டதும் வண்டி விர்ரென்று கிளம்பியது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயல் வரைக்கும் இருந்த குண்டுகுழிகளில் வண்டி ஏறி இறங்கியபோது என் முதுகெலும்பு கெட்ட கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டியது. 'ஒழுங்கு மரியாதையா வீட்டிலே இருக்க மாட்டியாடா நீ?'

'டேய்! உடுமலைப்பேட்டை டோல்கேட் வரைக்கும் வண்டி நிக்காது. அங்கே போய் ஒரு டீ! அப்புறம் நேரா திருநெல்வேலிதான்.'

'சாப்பாடு?' அதிர்ந்தேன் நான். 'எனக்கு மாத்திரை சாப்பிடணும்டா'

'பொட்டலம் கட்டி எடுத்திட்டு வந்திருக்கேன்,' என்றான் பப்பன். 'லெமன் ரைஸ்'.

"அப்போ நான் திருநெல்வேலியிலேயே சாப்பிட்டுக்கிறேன்' என்றேன் நான். இந்த லெமன் ரைஸைக் கண்டுபிடித்த கிராதகன் மட்டும் என் கையில் சிக்கினால் அவனை ஆறு மாதம் அர்னாப் கோஸ்வாமியிடம் அப்ப்ரெண்ட்டிஸாக சேர்த்து விட வேண்டும்.

'வர மாட்டேன் வர மாட்டேன்னு சொன்னியே; பகவான் உன்னையும் வரவழைச்சிட்டார் பார்த்தியா?' என்று சிரித்தான் அண்மையில் வங்கியிலிருந்து விருப்ப ஒய்வு வாங்கிய சீனிவாசன்.

'வேணு! நீ கவலையே படாதே! நீ எப்படிக் கிளம்பினியோ அப்படியே வீட்டுக்குத் திரும்பிப் போவே!" என்றான் வாஞ்சி.

"எப்பட்றா இவ்வளவு கான்பிடேன்ட்டா சொல்றே?" என்றேன்.

"பின்னே என்னடா?" சிரித்தான் வாஞ்சி. "நாமெல்லாம் அம்புட்டு சீக்கிரம் போய் சேருவோமா என்ன? எவ்வளவு பாவம் பாக்கி இருக்கு?"

வண்டியே அதிருமளவு எல்லாரும் சிரித்தோம். அப்போதுதான் நான் கவனித்தேன்.

வண்டியில் முன்பக்கத்தில் கச்சிதமாக ஒரு சிலுவை. கீழே ஒரு ஸ்டிக்கர்.

"நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை."

(தொடரணும்!)

--

R.VENUGOPALAN

மஞ்சூர் ராசா

unread,
Mar 16, 2015, 1:53:46 AM3/16/15
to பண்புடன்
ஆஹா வேணு, அசத்தலான தொடக்கம். உங்க ஸ்டைலில் கலக்குங்க. 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

sadayan sabu

unread,
Mar 16, 2015, 7:59:20 AM3/16/15
to panbudan

வேணுஜி, அர்னாப் கொசுவாமி நகைச்சுவை டாப்

Imsai Arasi

unread,
Mar 16, 2015, 11:40:13 AM3/16/15
to பண்புடன்
ஆரம்பமே கலக்கல்.... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

அரசி...

2015-03-16 7:59 GMT-04:00 sadayan sabu <sadaya...@gmail.com>:

வேணுஜி, அர்னாப் கொசுவாமி நகைச்சுவை டாப்

--

Tulsi Gopal

unread,
Mar 16, 2015, 4:56:40 PM3/16/15
to Groups
நானும் கூடவே வர்றேன்.   சாமி கும்பிடத்தான்:-)
--
என்றும் அன்புடன்,
துளசி

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Mar 18, 2015, 3:06:57 AM3/18/15
to panb...@googlegroups.com
I am waiting !!!
 
for the next part !!

On Tuesday, March 17, 2015 at 4:56:40 AM UTC+8, Tulsi wrote:

துரை.ந.உ

unread,
Mar 19, 2015, 11:30:59 AM3/19/15
to தென்றல், பண்புடன்
வாழ்க ஐயா ... நீண்ட இடைவெளிக்குப்பின் தரிசனம் ( பை ஆல் மீன்ஸ் :))

இப்போ எங்கே இருக்கீங்க ... நான் திருச்செந்தூர்

--
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்த்தென்றல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhthendr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

R.VENUGOPALAN

unread,
Mar 20, 2015, 1:05:28 AM3/20/15
to தமிழ்த்தென்றல், பண்புடன்
பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி. அடுத்த பகுதி இன்று மாலை அல்லது நாளை காலை. 

கவிஞரே, நான் மார்ச் 5 அன்று கிளம்பி மார்ச் 9 அன்று வீடு திரும்பியாகி விட்டது. :-)

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
Mar 28, 2015, 3:18:10 AM3/28/15
to தமிழ்த்தென்றல், பண்புடன்

மார்ச் 6 - திருச்செந்தூர் & நெல்லை

மார்ச் 5-ம் தேதி மாலையில் பப்பனின் தலைமையில், அந்த டொயோட்டா இன்னோவா சென்னை நகர எல்லையிலிருந்து சீறிப்பாய்ந்தபோது, நாங்கள் ஏழு பேரும் அவரவர் நரைத்த மண்டைகளையும் வழுக்கை மண்டைகளையும் மறந்துவிட்டு சுசீந்திரம் தேர்த்திருவிழாவுக்கு டிரவுசர் போட்டுக்கொண்டு சைக்கிள் மிதித்துக் கிளம்பிய பிராயத்துக்கே போய் விட்டிருந்தோம். பீர்க்கங்கரணை தாண்டுவதற்கு முன்னரே கத்திக் கத்தி எங்களது தொண்டைகள் வறண்டு கிட்டத்தட்ட சைகையில் பேசுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டிருந்தோம்.

முன்சீட்டில் அமர்ந்திருந்த பப்பன், படுசின்சியராக ஒரு பாக்கெட் நோட்டும், ஆபீசிலிருந்து கொய்த பால்பாயிண்ட் பேனா, பெவிஸ்டிக், நீலகிரித் தைலம், அவில் மாத்திரை, குரோசின் மாத்திரை, ஆரஞ்சு மிட்டாய், நெபுலைஸர் ஆகிய பொருட்களுடனும், படிப்பதற்கு விஜயபாரதம் இன்னபிற ஆன்மீகப் புத்தகங்களும், கேட்பதற்கு வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம், வீரமணி ஐயப்பன் பாடல்கள் மற்றும் எம்.எஸ்ஸின் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று சிடிக்களுடன் வந்திருந்தான். பின்சீட்டிலிருந்து பார்த்தபோது அவனது வழுக்கைத்தலை ஜீராவில் ஊறவைத்த ஒரு பிரம்மாண்டமான குலாப்ஜாமூன் போலப் பளபளத்துக் கொண்டிருந்தது.

பப்பனின் இளவயதைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். பயலுக்கு எங்களில் பெரும்பாலானவர்களைப் போல சினிமா, விகடன், குமுதம், பேசும் படம், சரோஜாதேவி ஆகியவற்றில் ஈடுபாடே இருந்தது கிடையாது. படிப்பைத் தவிர்த்து அவனுக்கு மிகவும் பிடித்தது சங்கோஜமில்லாமல் சாப்பிட்டுவிட்டு சங்கடம் இல்லாமல் தூங்க வேண்டும். எப்போதாவது ஜெய்சங்கர் படம் பார்ப்பான்; தூரத்து உறவாம். அது தவிர அவனது குணாதிசயத்தைப் பற்றி சொல்வதென்றால், 'பாய்ஸ்' படத்தில் செந்தில் செய்த அந்த அன்னவெறி கன்னையன் கேரக்டரின் முன்னோடி. 'மகாதானபுரத்தில் என்று கஞ்சியும் அவியலும் போடுகிறார்கள்? இறச்சகுளத்தில் வனபோஜனம் எப்போது? திருவட்டாறு பெருமாள் கோவிலில் என்றைக்கு அக்கார அடிசல் படைப்பார்கள்? இந்த முறை பங்குனி உத்திரக் சாப்பாட்டில் மொத்தம் எத்தனை வகைப் பாயாசம்?' இப்படி பிரசாதம், சாப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த ஈடுபாடு, அவனது சுருள் சுருள் முடியைப் பார்த்து சுருண்ட சில பெண்களின் மீதுகூட அவனுக்கு இருந்தது கிடையாது.

சென்னையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்பும்வரை ஒவ்வொரு டோல்கேட்டிலும் ரூபாய் முப்பத்தைந்தில் ஆரம்பித்து எழுபத்தைந்து வரை அழுத தண்டத்துக்கான அத்தனை சீட்டுக்களையும் அப்போதைக்கப்போதே பெவிஸ்டிக் தடவி, ஒரு நோட்டில் பத்திரமாக ஒட்டி வைத்துக் கொண்டிருந்தான். சிங்கிள் டீ தொடங்கி ஸ்ரீரங்கத்தில் தரிசன டிக்கெட் வரை எல்லா செலவையும் குறித்து வைத்துக் கொண்டிருந்தான். 'என்ன செலவு பண்ணினாலும் தப்பில்லை; ஆனா எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கணும்' என்று 'பஞ்ச்' டயலாக் வேறு!

"எதுக்குடா கையாலே எழுதி கஷ்டப்படறே?" இன்னொரு நண்பனான மூர்த்தி சொன்னான். "நான் லாப்-டாப் கொண்டு வந்திருக்கேன். தரட்டுமா?"

"அதுலே 'டேலி' இன்ஸ்டால் பண்ணியிருந்தா நானே என்ட்ரி போட்டுத் தரேன்," என்றேன் நான்.

"அதெல்லாம் எதுக்குடா? இதுதான் சவுகரியம்!" நானும் மூர்த்தியும் அவனைக் கலாய்ப்பதைக் கூட அறியாமல் அவன் சாவகாசமாகச் சொன்னான். எத்தனை வருடங்கள் ஆனாலும் சில மனிதர்கள் தங்களது அடிப்படை குணத்தை விட்டு விடாமல் இருப்பது வேடிக்கையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்கிறது.'அன்னவெறி கன்னையன்' வேறு பரிமாணத்தில் தகவல்கள் சேகரித்து வைத்திருப்பதையும் அறிய முடிந்தது.

"மதுராந்தகம் வந்தாச்சா? இந்தக் கோவில் விசேஷம் என்ன தெரியுமா? இங்கே மட்டும்தான் ராமர் சீதை கையைப் பிடிச்சிண்டு எழுந்தருளியிருக்கார். நீ போயிருக்கியாடா?"

"த்சு, போனதில்லைடா!"

"நீ போயிருக்கியா?" விடாமல் வண்டியில் இருந்த மற்ற ஆறு பேரிடமும் கேட்டு, ஒரு வழியாக ஒரே ஒரு நண்பன் மட்டும் 'ஆமாம்' என்று சொல்ல, "வெரி குட், இவனுங்கல்லாம் இத்தனை வருஷம் மெட்ராசிலே இருந்து என்னதான் பண்ணினாங்களோ!"

இப்படியாகத்தானே பப்பனாகப்பட்டவன் ஒவ்வொரு ஊர் கடக்கும்போதும், அந்த ஊரில் என்ன கோவில் இருக்கிறது, அதன் ஸ்தலபுராணம் என்ன, அங்கு என்ன விசேஷம், எப்போது உற்சவம் என்று விவரமாகச் சொல்லிவிட்டு 'ஒரு நல்ல விஷயம் கூட தெரியாம இத்தனை வயசாகியும் தத்தியா இருக்கேளே!' என்று கடுப்பேற்றவும், அவனை மடக்க வேண்டிய பொறுப்பு என் வசம் மற்றவர்களால் ஒப்படைக்கப் பட்டது.

'என்னடா பண்றது, நீ சின்ன வயசுலேருந்தே புத்திசாலி. ஹிந்தி டீச்சரையே பயனீர் பிக்சர் பாலஸ் தியேட்டர்லே 'சச்சா ஜூட்டா' படத்துக்குக் கூட்டிண்டு போனவன். எங்களுக்கெல்லாம் அந்த சமர்த்து வருமா?" என்று நான் ஒரு குண்டைத் தூக்கிப் போடவும் பப்பனின் வாய் ரிப்பனைச் சுருட்டித் திணித்ததுபோல ஒரு நொடி கப்பென்று மூடிக் கொண்டது.

'டே பப்பா, இதைப் பத்தி எங்ககிட்டே சொன்னதே இல்லையே நீ?'  மற்றவர்களும் சேர்ந்துகொள்ள பப்பன் அலறினான்.

'மகாபாவி வேணு, நான் டீச்சரை மட்டும் கூட்டிண்டு போகலேடா; அவா அம்மாவையும் கூட்டிண்டு போனேன்!"

"அது இன்னும் மோசம்." என்று நான் சொல்லவும் டிரைவர் பக்கென்று சிரித்து விட்டார்.

"சிரிக்காதீங்க, ஆக்சுவலி அது எப்படி நடந்ததுன்னா......" என்று அப்பாவி பப்பன் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை ஆதியோடந்தமாக விவரிக்க ஆரம்பிக்க, அடுத்த சில நிமிடங்களை சிரித்துச் சிரித்தே செலவழித்தோம்.  

வண்டி கிளம்பியது முதலாகவே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். என்னதான் கி.மீக்கு 12 ரூபாய் என்று பேசி வந்திருந்தாலும், டிரைவர் ஒரு விதமான சங்கடத்தில் இருப்பதை கவனிக்க முடிந்தது. குறிப்பாக முன்சீட்டில் அமர்ந்துகொண்டு டிரைவருக்கு சுவாரசியம் தராத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வருவது, ஒரு நீண்ட சாலைப் பயணத்தில்  தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பது புரிந்தது. பாவம் அந்த டிரைவர், தெரியாத்தனமாக வந்து ஏழு பண்டாரங்களிடம் அகப்பட்டு, வீடு திரும்புவதற்குள் 'கர்-வாபஸி' மாதிரி சிக்கலில் மாட்டிக்கொள்வோமோ என்று பயப்படுவது போலத் தோன்றியது. ஆகவே பேச்சை வேறு திசைக்கு இழுத்துச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாயிற்று.

 உளுந்தூர்ப்பேட்டை வருவதற்கு முன்பே அரைக்கிழங்களான எங்களுக்கு முழுப்பசி வந்து தொலைத்து விடவே, வழியில் வண்டியை நிறுத்தி லெமன் ரைஸை வெளுத்து வாங்கி, ஒரு டீயும் குடித்துக் கொண்டிருக்கும்போது பப்பனை அழைத்துப் புரிய வைத்தேன்.

'அடே அபிஷ்டு! அந்த டிரைவர் கிறிஸ்டியன். அவர் பக்கத்துல உட்காந்துண்டு ஒவ்வொரு கோவில் ஸ்தலபுராணமா சொல்லிண்டு வர்றியே, அவருக்கு போர் அடிக்காதாடா? உன்னை ஒரு சுவிசேஷக் கூட்டத்துக்குக் கூட்டிக்கிட்டு போயி வலுக்கட்டாயமா உட்கார வைச்சா எப்படி இருக்கும்? அதான் கோவில் கோவிலா பார்க்கப் போறமே, வண்டியிலே உருப்படியா சினிமா, அரசியல், கிரிக்கெட்டுன்னு எதையாவது பேச வேண்டியதுதானே? நீ போடற பிளேடு தாங்காம அவரு வண்டியை நிறுத்திட்டு பஸ் புடிச்சு ஊருக்குப் போயிடப் போறாரு!"

"ஆமாண்டா!" பப்பன் திருவனந்தபுரம் மேத்தமணியைப் போல வாயைப் பிளந்தான். "கொஞ்சம் அதிகமா பிளேடு போட்டுட்டேனோ?"

"அப்பாடா, இப்பவாச்சும் புரிஞ்சுதே!" என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். "நீ பின்னாலே உட்காரு. நான் முன்னாலே உட்கார்ந்துக்கிறேன்."

"அஸ்க்கு புஸ்க்கு!" என்றான் பப்பன். "முன்சீட்டுலே உட்காந்துக்கத்தான் இம்புட்டு வியாக்கியானமா?"

"டே அல்பே! பொண்ணுக்குக் கல்யாணம் பண்ற வயசாச்சு. இன்னும் கொழந்தை மாதிரி சீட்டுக்கு அடம் பிடிக்கிறியே!”

"என்னடா பிரச்சினை?" ஓமப்பொடி நாராயணன் நடுவில் தனது நீளமான மூக்கை நுழைத்தான். "யாரு முன் சீட்டுலே உட்கார்ரதுன்னுதானே? நான் உட்கார்ந்துக்கிறேன்.போங்கடா!"

"அடேய், சந்துலே பூந்து சிந்து பாடறியா?" என்று பப்பன் நாராயணன் இருவரையும் அடக்கிவிட்டு, பெரும்பான்மை கருத்துக்கு மதிப்பளிக்காமல் நானே முன் சீட்டில் உட்கார்ந்துகொள்ள வண்டி விரைந்ததுபப்பனுக்கு திடீரென்று டிரைவர் மீது கரிசனம் ஏற்படவே, அடிக்கடி 'டிரைவர் தம்பி, உங்களுக்கு எப்ப வேண்ணாலும் வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டுக்குங்க. எங்கள்ளே பாதி பேருக்கு ஷுகர் இருக்கு. முன்சீட்டுலே இருக்கானே, அவனுக்கு எய்ட்ஸ், கான்சர் தவிர எல்லா வியாதியும் இருக்கு. அதனாலே எங்களைப் பத்திக் கவலைப்படாம நீங்க எப்ப வேண்ணா நிறுத்தி நிதானமா டீ சாப்பிட்டு ஆசுவாசமாப் போனாப் போதும்."என்று சொல்லிக்கொண்டே வந்தான்.

ஒரு கட்டத்தில் பப்பனின் பச்சாதாபம் உச்சாதாபமாகி விடவே, திரும்பிக் கத்தினேன். "ஏண்டா அவரை டிஸ்டர்ப் பண்ணறே? அவர் தூங்கி ரொம்ப நேரம் ஆச்சு."

மார்ச் 6 வெள்ளிக்கிழமையன்று அதிகாலை ஒரு மணியளவில் எங்களது வண்டி ஒத்தக்கடையைத் தாண்டியது. ஒரிஜினல் திட்டப்படி நேரடியாக பாளையங்கோட்டை சென்று இன்னொரு நண்பன் வீட்டில் பல்விளக்கிக் குளித்து ஒசிக்காப்பி குடித்து குளித்து காந்திமதி அம்மனிடம் ஆஜர் போடுவதாக இருந்தோம்.ஆனால்....

"விடியக்காலையிலே எதுக்குடா அவனை டிஸ்டர்ப் பண்ணனும்? வண்டியை நேரா திருச்செந்தூருக்கு விடுங்க." என்றான் பப்பன். "குளிச்சு சுவாமி தரிசனம் முடிச்சிட்டு திருநெல்வேலிக்குப் போகலாம். டிபனும் ரெடியாயிருக்கும்."

அட, என் நண்பர்களுக்குக் கூட புத்திசாலித்தனமாக யோசிக்க முடிகிறதே என்று ஆச்சரியமாக இருந்தது. ஆகவே, வண்டி திருச்செந்தூரை நோக்கி விரைந்தது.

திருச்செந்தூர் முருகனுக்கும் எனக்கும் சிறுவயது முதலே நிறைய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இரண்டு முறை அங்கு சஷ்டி விரதம் இருந்திருக்கிறேன். 41 கிருத்திகைகளுக்குத் தொடர்ச்சியாக நாகர்கோவிலிலிருந்து வந்து சுப்ரமணியசாமியை (திருச்செந்தூர் சு.சாமியை!) தரிசனம் செய்திருக்கிறேன். ஒரு முறை வருடாந்திர உற்சவத்தின் ஏழாவது நாளான பச்சை சாத்தி அலங்காரத்தின்போது, அந்த மண்டபத்தில் என்னை உற்சவமூர்த்திக்குப் பின்னால் உட்கார வைத்தனர். அப்புறம் என்ன, சாமிக்கு அபிஷேகம் செய்த பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன் எல்லாம் என்னையும் குளிப்பாட்ட, சுற்றியிருந்தவர்கள் எல்லாம் 'ரொம்பக் கொடுத்து வைச்சவன்' என்று சிலாகித்தார்கள். ஆனால், செந்திலாண்டவன் விடுதிக்குப் போய் உடம்பை சுத்தம் பண்ணுவதற்குள் திருச்செந்தூர் மற்றும் சுற்றுப்பட்ட எட்டுப்பட்டியிலுமிருந்த ஒட்டுமொத்த ஈக்களும் என்னை மொய்த்து டெண்ஷனாக்கிவிட்டன.

செந்திலாண்டவனை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு தரிசிக்கப் போகிறேன் என்பதே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கோவில் வளாகத்தை நாங்கள் எட்டியபோது மணி நான்கைத் தொட்டு விட்டிருந்தது. கடலில் குளிக்கலாமா கடையில் குளிக்கலாமா என்று ஒரு ஐந்து நிமிடம் யோசித்து விட்டு, எங்கள் ஏழு பேரில் ஆறு பேருக்கு 'தண்ணியில் கண்டம்' இருந்ததால் வீரத்தை அடக்கி, விவேகத்தைக் கடைப்பிடித்து, கட்டணம் கொடுத்து காக்காய் குளி குளித்து நெற்றி நிறைய திருநீறு அணிந்து கொண்டு, அந்த அதிகாலையிலும் நீண்டிருந்த வரிசையில் வால்பிடித்து நின்று கொண்டோம்.

இத்தனை வருடங்களாகியும் செந்தில்முருகனின் அழகும் கம்பீரமும் சற்றும் குறையவில்லை. நாங்கள் உள்ளே புகுந்த நேரம் பார்த்து தீப ஆராதனை நடைபெறவே, பப்பனின் கண்கள் தெப்பமாக நனைந்து விட்டன. "இதெல்லாம் கிடைக்கப் புண்ணியம் செஞ்சிருக்கணும்டா".

தீப ஒளியில் சிரித்துக்கொண்டு நின்ற செந்திலாண்டவன் 'எங்கடா போயிருந்தே இத்தனை நாளா?' என்று கேட்பது போலிருந்தது. 'அடுத்தவாட்டி குடும்பத்தோட வந்து சேவிக்கிறேன்; அதுவரைக்கும் உங்கப்பா கிட்டே சொல்லி இந்த சனீஸ்வரன் அங்கிளை கொஞ்சம் அடக்கி வை முருகா' என்று வேண்டிக்கொண்டேன். கூட்டம் அதிகமாக இருந்தாலும், அப்படி இப்படி ஓரிரு நிமிடங்கள் அழகன் முருகனை கண்கொட்டாமல் பார்த்து வேண்டிக்கொள்ள முடிந்தது மிகவும் திருப்தியாக இருந்தது.

"எனக்கு மொட்டையடிக்கிற பிரார்த்தனை ஒண்ணு பாக்கி இருக்குடா!" என்றான் பப்பன்.

"பிரார்த்தனை பாக்கியிருந்து என்னடா புண்ணியம். மண்டையிலே முடி பாக்கியில்லையே. கன்னியாகுமரிக்குப் போனதும் இருக்கிற ஒண்ணு ரெண்டு முடியும் காத்துலே பறந்துடப் போவுது." என்றேன் நான்.

"இல்லைடா, பொண்ணுக்குக் கல்யாணம் ஆனதும் குடும்பத்தோட வரணும். அப்பப் பார்த்துக்கலாம்." என்றான்.

திருச்செந்தூரிலிருந்து வண்டி கிளம்பியதும், "அடுத்து எங்கே, பாளையங்கோட்டையா?" என்று கேட்டேன்.

"போற வழியிலே ஆழ்வார் திருநகரி தரிசனத்தை முடிச்சிடலாமா? நம்மாழ்வார் பிறந்த ஊருடா. எல்லா கோவிலிலும் பெருமாளுக்குத்தான் மங்களாசனம் பண்ணுவாங்க. ஆனா, ஆழ்வார் திருநகரி கோவில்லே திருமங்கையாழ்வார் நம்மாழ்வாருக்கு மங்களாசனம் பண்ணியிருக்கார். 108 திவ்ய ஷேத்திரத்தில் ஒண்ணு. போவோமா?"

" யெஸ்!"

ஆழ்வார் திருநகரி கோவிலுக்குள் நாங்கள் நுழைந்தபோது நம்மாழ்வார் கம்பீரமாக திருவீதி பவனி வந்து கொண்டிருந்தார்.

(தொடரணும்)

Jaisankar Jaganathan

unread,
Mar 28, 2015, 3:23:29 AM3/28/15
to panb...@googlegroups.com
ஐயா சேட்டை,

சேட்டையை விட்டுட்டு  ஆன்மீகம் பத்தி திருத்தல புராணம், பதிகம், ராம நாம மகிமை, பத்தி எழுதுஙக். உங்க சேட்டையை நாஙக் வேறு இழையில் எதிர்பாக்குறோம்.

மீண்டும் பேஸ்புக்குக்கு வந்துட்டீங்க நன்றி

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
regards,
jaisankar jaganathan

R.VENUGOPALAN

unread,
Mar 28, 2015, 4:10:53 AM3/28/15
to பண்புடன்

யோவ் ஜே! உம்ம அறிவாளின்னு நினைச்சேன். எவனாவது ஆர்யபவனுக்கு வந்து ஆட்டுக்கால் சூப் கேட்பானாய்யா? :-)

On 28 Mar 2015 12:53, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
ஐயா சேட்டை,

சேட்டையை விட்டுட்டு  ஆன்மீகம் பத்தி திருத்தல புராணம், பதிகம், ராம நாம மகிமை, பத்தி எழுதுஙக். உங்க சேட்டையை நாஙக் வேறு இழையில் எதிர்பாக்குறோம்.

மீண்டும் பேஸ்புக்குக்கு வந்துட்டீங்க நன்றி

2015-03-28 12:48 GMT+05:30 R.VENUGOPALAN <venugopal...@gmail.com>:

மார்ச் 6 - திருச்செந்தூர் & நெல்லை

மார்ச் 5-ம் தேதி மாலையில் பப்பனின் தலைமையில், அந்த டொயோட்டா இன்னோவா சென்னை நகர எல்லையிலிருந்து சீறிப்பாய்ந்தபோது, நாங்கள் ஏழு பேரும் அவரவர் நரைத்த மண்டைகளையும் வழுக்கை மண்டைகளையும் மறந்துவிட்டு சுசீந்திரம் தேர்த்திருவிழாவுக்கு டிரவுசர் போட்டுக்கொண்டு சைக்கிள் மிதித்துக் கிளம்பிய பிராயத்துக்கே போய் விட்டிருந்தோம். பீர்க்கங்கரணை தாண்டுவதற்கு முன்னரே கத்திக் கத்தி எங்களது தொண்டைகள் வறண்டு கிட்டத்தட்ட சைகையில் பேசுகிற நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டிருந்தோம்.

முன்சீட்டில் அமர்ந்திருந்த பப்பன், படுசின்சியராக ஒரு பாக்கெட் நோட்டும், ஆபீசிலிருந்து கொய்த பால்பாயிண்ட் பேனா, பெவிஸ்டிக், நீலகிரித் தைலம், அவில் மாத்திரை, குரோசின் மாத்திரை, ஆரஞ்சு மிட்டாய், நெபுலைஸர் ஆகிய பொருட்களுடனும், படிப்பதற்கு விஜயபாரதம் இன்னபிற ஆன்மீகப் புத்தகங்களும், கேட்பதற்கு வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசம், வீரமணி ஐயப்பன் பாடல்கள் மற்றும் எம்.எஸ்ஸின் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று சிடிக்களுடன் வந்திருந்தான். பின்சீட்டிலிருந்து பார்த்தபோது அவனது வழுக்கைத்தலை ஜீராவில் ஊறவைத்த ஒரு பிரம்மாண்டமான குலாப்ஜாமூன் போலப் பளபளத்துக் கொண்டிருந்தது.

பப்பனின் இளவயதைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். பயலுக்கு எங்களில் பெரும்பாலானவர்களைப் போல சினிமா, விகடன், குமுதம், பேசும் படம், சரோஜாதேவி ஆகியவற்றில் ஈடுபாடே இருந்தது கிடையாது. படிப்பைத் தவிர்த்து அவனுக்கு மிகவும் பிடித்தது சங்கோஜமில்லாமல் சாப்பிட்டுவிட்டு சங்கடம் இல்லாமல் தூங்க வேண்டும். எப்போதாவது ஜெய்சங்கர் படம் பார்ப்பான்; தூரத்து உறவாம். அது தவிர அவனது குணாதிசயத்தைப் பற்றி சொல்வதென்றால், 'பாய்ஸ்' படத்தில் செந்தில் செய்த அந்த அன்னவெறி கன்னையன் கேரக்டரின் முன்னோடி. 'மகாதானபுரத்தில் என்று கஞ்சியும் அவியலும் போடுகிறார்கள்? இறச்சகுளத்தில் வனபோஜனம் எப்போது? திருவட்டாறு பெருமாள் கோவிலில் என்றைக்கு அக்கார அடிசல் படைப்பார்கள்? இந்த முறை பங்குனி உத்திரக் சாப்பாட்டில் மொத்தம் எத்தனை வகைப் பாயாசம்?' இப்படி பிரசாதம், சாப்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த ஈடுபாடு, அவனது சுருள் சுருள் முடியைப் பார்த்து சுருண்ட சில பெண்களின் மீதுகூட அவனுக்கு இருந்தது கிடையாது.

சென்னையிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்பும்வரை ஒவ்வொரு டோல்கேட்டிலும் ரூபாய் முப்பத்தைந்தில் ஆரம்பித்து எழுபத்தைந்து வரை அழுத தண்டத்துக்கான அத்தனை சீட்டுக்களையும் அப்போதைக்கப்போதே பெவிஸ்டிக் தடவி, ஒரு நோட்டில் பத்திரமாக ஒட்டி வைத்துக் கொண்டிருந்தான். சிங்கிள் டீ தொடங்கி ஸ்ரீரங்கத்தில் தரிசன டிக்கெட் வரை எல்லா செலவையும் குறித்து வைத்துக் கொண்டிருந்தான். 'என்ன செலவு பண்ணினாலும் தப்பில்லை; ஆனா எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கணும்' என்று 'பஞ்ச்' டயலாக் வேறு!

"எதுக்குடா கையாலே எழுதி கஷ்டப்படறே?" இன்னொரு நண்பனான மூர்த்தி சொன்னான். "நான் லாப்-டாப் கொண்டு வந்திருக்கேன். தரட்டுமா?"

"அதுலே 'டேலி' இன்ஸ்டால் பண்ணியிருந்தா நானே என்ட்ரி போட்டுத் தரேன்," என்றேன் நான்.

"அதெல்லாம் எதுக்குடா? இதுதான் சவுகரியம்!" நானும் மூர்த்தியும் அவனைக் கலாய்ப்பதைக் கூட அறியாமல் அவன் சாவகாசமாகச் சொன்னான். எத்தனை வருடங்கள் ஆனாலும் சில மனிதர்கள் தங்களது அடிப்படை குணத்தை விட்டு விடாமல் இருப்பது வேடிக்கையாகவும் ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்கிறது.'அன்னவெறி கன்னையன்' வேறு பரிமாணத்தில் தகவல்கள் சேகரித்து வைத்திருப்பதையும் அறிய முடிந்தது.

"மதுராந்தகம் வந்தாச்சா? இந்தக் கோவில் விசேஷம் என்ன தெரியுமா? இங்கே மட்டும்தான் ராமர் சீதை கையைப் பிடிச்சிண்டு எழுந்தருளியிருக்கார். நீ போயிருக்கியாடா?"

"த்சு, போனதில்லைடா!"

"நீ போயிருக்கியா?" விடாமல் வண்டியில் இருந்த மற்ற ஆறு பேரிடமும் கேட்டு, ஒரு வழியாக ஒரே ஒரு நண்பன் மட்டும் 'ஆமாம்' என்று சொல்ல, "வெரி குட், இவனுங்கல்லாம் இத்தனை வருஷம் மெட்ராசிலே இருந்து என்னதான் பண்ணினாங்களோ!"

இப்படியாகத்தானே பப்பனாகப்பட்டவன் ஒவ்வொரு ஊர் கடக்கும்போதும், அந்த ஊரில் என்ன கோவில் இருக்கிறது, அதன் ஸ்தலபுராணம் என்ன, அங்கு என்ன விசேஷம், எப்போது உற்சவம் என்று விவரமாகச் சொல்லிவிட்டு 'ஒரு நல்ல விஷயம் கூட தெரியாம இத்தனை வயசாகியும் தத்தியா இருக்கேளே!' என்று கடுப்பேற்றவும், அவனை மடக்க வேண்டிய பொறுப்பு என் வசம் மற்றவர்களால் ஒப்படைக்கப் பட்டது.

'என்னடா பண்றது, நீ சின்ன வயசுலேருந்தே புத்திசாலி. ஹிந்தி டீச்சரையே பயனீர் பிக்சர் பாலஸ் தியேட்டர்லே 'சச்சா ஜூட்டா' படத்துக்குக் கூட்டிண்டு போனவன். எங்களுக்கெல்லாம் அந்த சமர்த்து வருமா?" என்று நான் ஒரு குண்டைத் தூக்கிப் போடவும் பப்பனின் வாய் ரிப்பனைச் சுருட்டித் திணித்ததுபோல ஒரு நொடி கப்பென்று மூடிக் கொண்டது.

'டே பப்பா, இதைப் பத்தி எங்ககிட்டே சொன்னதே இல்லையே நீ?'  மற்றவர்களும் சேர்ந்துகொள்ள பப்பன் அலறினான்.

'மகாபாவி வேணு, நான் டீச்சரை மட்டும் கூட்டிண்டு போகலேடா; அவா அம்மாவையும் கூட்டிண்டு போனேன்!"

"அது இன்னும் மோசம்." என்று நான் சொல்லவும் டிரைவர் பக்கென்று சிரித்து விட்டார்.

"சிரிக்காதீங்க, ஆக்சுவலி அது எப்படி நடந்ததுன்னா......" என்று அப்பாவி பப்பன் நாற்பது வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தை ஆதியோடந்தமாக விவரிக்க ஆரம்பிக்க, அடுத்த சில நிமிடங்களை சிரித்துச் சிரித்தே செலவழித்தோம்.  

வண்டி கிளம்பியது முதலாகவே நான் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். என்னதான் கி.மீக்கு 12 ரூபாய் என்று பேசி வந்திருந்தாலும், டிரைவர் ஒரு விதமான சங்கடத்தில் இருப்பதை கவனிக்க முடிந்தது. குறிப்பாக முன்சீட்டில் அமர்ந்துகொண்டு டிரைவருக்கு சுவாரசியம் தராத ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு வருவது, ஒரு நீண்ட சாலைப் பயணத்தில்  தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்பது புரிந்தது. பாவம் அந்த டிரைவர், தெரியாத்தனமாக வந்து ஏழு பண்டாரங்களிடம் அகப்பட்டு, வீடு திரும்புவதற்குள் 'கர்-வாபஸி' மாதிரி சிக்கலில் மாட்டிக்கொள்வோமோ என்று பயப்படுவது போலத் தோன்றியது. ஆகவே பேச்சை வேறு திசைக்கு இழுத்துச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாயிற்று.

 உளுந்தூர்ப்பேட்டை வருவதற்கு முன்பே அரைக்கிழங்களான எங்களுக்கு முழுப்பசி வந்து தொலைத்து

...

Jaisankar Jaganathan

unread,
Mar 28, 2015, 8:26:56 AM3/28/15
to panb...@googlegroups.com
ஆஹா இது மிலிட்டரி ஹோட்டலுக்கு போயி நெய் தோசை கேட்டாமாதிரின்னு சொல்லுங்க 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
regards,
jaisankar jaganathan
Reply all
Reply to author
Forward
0 new messages