பண்புடன் குழுமம் - என் பார்வையில்

9 views
Skip to first unread message

Ahamed Zubair A

unread,
Nov 17, 2015, 3:30:08 AM11/17/15
to பண்புடன்
அப்பப்ப போரடிச்சா ஏதாவது படிச்சிட்டு இருப்பேன். இந்தக் குழுமத்தில் சேர்ந்ததிலேர்ந்து ஒரு மண்ணும் செய்யுறதில்ல.. ஏதாவது படிக்கலாம்னா அதும் நடக்க மாட்டேங்குது...அதனால இப்படி ஒரு கட்டுரை எழுதலாம்னு நினைச்சிட்டேன். ஆல் தி பெஸ்ட். (உங்களுக்குத் தான்)

##############################

இணையக் குழுமங்கள் என்பது எனக்கு அறிமுகமானது 2005ன் ஆரம்பம். சவூதி அரேபியாவின் புரைதா (அல்-கசீம்) என்ற சிறு நகரத்தில் கொத்துவேலை செய்துவிட்டு அறைக்கு வந்தால் மறு நாள் காலை வரை அடித்துப் போட்டது போன்ற உறக்கம் வரும். பேச்சுத் துணைக்கோ, விளையாடுவதற்கோ ஆட்கள் இல்லாத இயந்திர வாழ்வு. அந்தக் காலங்கள் தான் இப்போது தொழில் ரீதியாக எனக்கு அன்னமிடுகிறது என்றாலும், அந்தக் காலத்தில் நான் எனக்காக, என் விருப்பத்திற்காக எதையும் செய்ய இயலாத நிலை. காலை 5 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணிக்குத் தான் திரும்பலாம். பிறகு அங்கிருந்து சவூதி தலைநகர் ரியாத் மாநகருக்கு மாற்றல். அது அலுவலகம் சார்ந்த பணி என்பதால் நமக்கான வேலையை திட்டமிட்டு செயல்பட முடிந்தது.

இந்தக் கால கட்டத்தில் தான் இணையம் மூலம் அறிமுகமானது ரியாத் தமிழ்ச் சங்கம் - யாஹூ குழுமம். சில ஆயிரம் மக்கள் தங்களுக்குத் தெரிந்த வகையில் அளவளாவுதலும், ஆங்காங்கே ஒன்று கூடலும் நடந்தாலும், எனக்கு உள்ளிருக்கும் தாழ்வு மனப்பான்மையால் எதிலும் கலந்துகொள்ளாமல் ஒரு பார்வையாளனாகவே பயணம் செய்த நாட்கள். 2006ம் ஆண்டு ரியாத் தமிழ்ச் சங்கத்தில், சில குழுக்கள் பிரித்து ஒவ்வொரு கூடமாக உருவாக்கினர். (மே பி அதர் வே ரவுண்ட் :-)) அப்போது எழுத்தின் மேல் விருப்பம் கொண்ட ஒத்த கருத்துடைய நண்பர்கள் இருந்த குழுமம் ”எழுத்துக் கூடம்”. இது கூகுள் குழுமத்தில் உருவாக்கப்பட்டது.

என்னுடைய எழுத்தின் மேல் எனக்கே நம்பிக்கை உருவாக்கிய குழுமம் இது தான். இங்கே நான் பழகியவர்களில் மிக முக்கியமானவர்கள் முனைவர் மாசிலாமணி, அண்ணன் அபுல்கலாம் ஆசாத் மற்றும் மறைந்த நண்பர் சாகரன். அவர்கள் மட்டுமல்லாது இன்னும் நண்பர் நாக.இளங்கோவன், ஐயா வெற்றிவேல், சாதிக் ஜாஃபர் அண்ணன், இம்தியாஸ் அண்ணன், மருத்துவர் சோமு ஐயா, ஜெயசீலன் ஐயா, மலர் அக்கா, பாலமுகுந்தன் ஐயா, நண்பன் கேவிஆர், லக்கி ஷாஜஹான் அண்ணா, இப்னு ஹம்துன் அண்ணா போன்றவர்கள். 

இவர்களைப் பொறுத்தவரை நான் துடிப்புள்ள கிறுக்கன்/தம்பி. ஏதாவது ஒன்றை உளறிக் கொட்டி, அவ்வப் போது கேவிஆர் மூலம் திட்டு வாங்கி, மிக வேகமாக குறிப்பிடத்தகுந்த ஆட்களில் ஒருவனாக ஆனேன்.

இந்தக் குழுமத்தில் தான் “கதாவிலாசம் - எஸ்.ரா.” புத்தகத்தின் அறிமுகம் கிடைத்தது. அதாவது அந்த புத்தகத்தில் ஒரு பகுதியைப் பிரித்து ஒருவர் வாசிக்க, அது சார்ந்த விவாதங்கள் கிளை பிரியும். பிறகு அடுத்த பாராவில் ஒன்று சேரும். பிறகு கிளை பிரியும். இது ஒரு தேர்ந்த ஓவியன் வரைந்த தூரிகை வண்ணத்தை ஒத்திருக்கும். விவாதப் பரப்புகளில் எப்போதும் ஆக்ரோஷம் வந்ததாக அறிந்திலேன். சில சமயங்களில் விவாதம் என்பதே இல்லாமல் பிரசங்கமாக இருக்கும். பல சமயங்களில் நான் முதற்கொண்டு பேசிக்கொண்டிருப்போம். நான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஏதாவது உளறுபவன். 

இந்த சமயத்தில் தான் சாகரன் தேன்கூடு பற்றிய அறிமுகத்தையும், அதில் நடைபெறும் மாதாந்திர போட்டிகள் பற்றியும் கூறினார். என்னுடைய முதல் படைப்பே “மரணம்” என்ற தலைப்புக்கானது. அந்தக் கட்டுரை தான் எனக்கு வலைப்பூவில் ஒரு அறிமுகம் தந்தது. 

பிறகு வெண்பா எழுதுவது பற்றி நண்பன் கேவிஆர் எடுத்த பாடங்கள் அதிக ஆர்வமூட்டுபவையாக அமைந்ததும், அவ்வப்போது நடக்கும் கவியரங்கங்களில் கலந்துகொண்டு நமது கவிதை எனும் போலி எழுத்துகளில் வாழ்வின் இழப்புகளை வார்த்தைகளாக்கி அரிப்பினைத் தீர்த்துக்கொண்டும் கழித்திருந்தேன். 

மாற்றங்கள் மாற்றங்கள் மாற்றங்கள். இந்தச் சமயங்களில் தான் எனது அலுவலகத்தில் விரும்பிய வேலைவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சவூதியினை விட்டு செல்லவேண்டிய நிலை வந்தது. அங்கிருந்து வெளிப்பட்ட பொழுது தான் அடுத்தது என்னவென்ற பயம் உண்டானது. இணையம் என்பதற்கு வலை என்ற வார்த்தையைச் சமைத்த அறிஞனை மிகவும் மதிக்கிறேன். ஆம் இது வலை தான். நம்மைப் பீடித்திருக்கும் வலை. அறுத்து எறிவது அத்தனை சுலபமில்லை. சவூதி மண்ணை விட்டு நட்புகளை விட்டு பிரிந்த பொழுதுகளில் அத்தகைய காலங்கள் மீண்டும் வருமாவென உள்ளூர பயத்துடன் பிரிந்தேன். 

இதே சமயத்தில் தான் ஆசிப் மீரானும் அவரின் ஒத்த கருத்துடைய நண்பர்களும் இணையத்தில் பண்புடன் என்ற குழுமத்தை உருவாக்கி ஒரு கலந்துரையாடலுக்கு அழைத்தனர். அவர்களின் அழைப்பின் பேரில் பண்புடன் ஆரம்பித்த ஒரே வாரத்தில் சேர்ந்தேன் நான்.

இப்போது போல அக்காலங்களில் தமிழை இத்தனை வேகமாக நான் தட்டச்ச இயலாது. சில பல நல்ல இழைகளைப் படித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 17, 2015, 3:42:59 AM11/17/15
to பண்புடன்
கவிஞரே வாழ்க வாழ்க..

பாதிலேயே நின்னுடுத்தே ?

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 17, 2015, 4:02:00 AM11/17/15
to பண்புடன்
அண்ணாச்சி தான் இந்த கொடிய காரியத்தை செய்தவரா ? ?

shylaja

unread,
Nov 17, 2015, 4:02:16 AM11/17/15
to பண்புடன்
என்பேரை சுவாதி பேரை மறந்துபோனதுக்கு சென்னைமழையை அங்க  அனுப்பி பயமுறுத்துவேன் சுபைரு:)

2015-11-17 0:42 GMT-08:00 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>:
கவிஞரே வாழ்க வாழ்க..

பாதிலேயே நின்னுடுத்தே ?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 

அன்புடன்
ஷைலஜா

/நல்லார் எனத்தாம் நனி விரும்பிக்கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நெல்லுக்(கு) உமி உண்டு;நீர்க்கு நுரை உண்டு;
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.///

---நாலடியார்---

yesu rajan

unread,
Nov 17, 2015, 4:09:40 AM11/17/15
to பண்புடன்
 நானும் இப்படித்தான் ஒருத்தர் பேச்சை கேட்டு பண்புடனுக்கு வந்தேன்

ஒருத்தர் எனக்கு பணம் அனுப்புனங்கன்னு மடல் போட்டாரு :)


Iyappan Krishnan

unread,
Nov 17, 2015, 4:24:56 AM11/17/15
to பண்புடன்
​அக்கோவ்..

இன்னும் பாதி கூட முடியல.. மாமங்க்காரன் இப்ப தான் ஆரம்பிச்சிருக்கான். இன்னும் பத்து கட்டுரை வரும் போல. வெயிட்டீஸ்.. என்  பேர்லாம் வரலைன்னா அவ்ளோ தான்.... ​

2015-11-17 14:31 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
என்பேரை சுவாதி பேரை மறந்துபோனதுக்கு சென்னைமழையை அங்க  அனுப்பி பயமுறுத்துவேன் சுபைரு:)




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

shylaja

unread,
Nov 17, 2015, 4:39:47 AM11/17/15
to பண்புடன்
அப்டியா அப்போ  மன்னிக்கறேன் குழந்தையை:):)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Nov 17, 2015, 4:44:43 AM11/17/15
to பண்புடன்
2015-11-17 15:09 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
அப்டியா அப்போ  மன்னிக்கறேன் குழந்தையை:):)

​இச்சொற்பிரயோகத்தை மிக வண்ண்ண்ண்ண்ண்னையாகக் கண்டிக்கிறேன் 



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Iyappan Krishnan

unread,
Nov 17, 2015, 4:45:39 AM11/17/15
to பண்புடன்
​வெண்ணெயாகவா ? வண்ண்னையாகவா சரியா சொல்லுங்க ஜி :))​


Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

துரை.ந.உ

unread,
Nov 17, 2015, 4:49:06 AM11/17/15
to பண்புடன்
2015-11-17 15:15 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
​வெண்ணெயாகவா ? வண்ண்னையாகவா சரியா சொல்லுங்க ஜி :))​

​நானே மிகக் கடுங்கோவ அதிர்ச்சிக் கலக்கக் குழப்பத்தில்  உள்ளேன் ஆசானே ...  நீங்க வ்வேற 

shylaja

unread,
Nov 17, 2015, 4:50:49 AM11/17/15
to பண்புடன்
குழந்தை  போல உடலும் உள்ளமும்    இதுக்கு எதுக்கு கண்ணடிக்கணுமோ  துர

Iyappan Krishnan

unread,
Nov 17, 2015, 4:53:41 AM11/17/15
to பண்புடன்
​முதல்ல நல்ல டாக்டரா பாருங்க்க...

அவன் உடம்பு குழந்தை போலவா.... சரியாப் போச்சு... பஸ்ல ரெண்டு பேர் சீட்ல இவன் ஒருத்தன் மட்டுமே உக்காந்துட்டு வரான். அப்பவும் உக்கார இடம் பத்தலைன்னு கண்டக்டர் கிட்ட கம்ப்ளேயிண்ட் வேற..​

2015-11-17 15:20 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
குழந்தை  போல உடலும் உள்ளமும்



துரை.ந.உ

unread,
Nov 17, 2015, 4:58:51 AM11/17/15
to பண்புடன்
2015-11-17 15:20 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
குழந்தை  போல உடலும் உள்ளமும்    இதுக்கு எதுக்கு கண்ணடிக்கணுமோ  துர
பார்ர்ர்ரா !
 பார்ர்ர்ரா ! பார்ர்ர்ரா !
​!​

​திரும்பவும் பார்ர்ர்ரா !!!

Jaisankar Jaganathan

unread,
Nov 17, 2015, 5:05:56 AM11/17/15
to panb...@googlegroups.com
உங்களிடம் பணம் கேட்டவரைசொல்லுங்க இயேசுராஜன். இயேசுவை வச்சு நாலு கேள்வி கேக்க சொல்லலாம்
regards,
jaisankar jaganathan

Jaisankar Jaganathan

unread,
Nov 17, 2015, 5:09:06 AM11/17/15
to panb...@googlegroups.com
நான் ஒரு இழை ஆரம்பிச்சு உங்களை பற்றி எழுதுறேன் அக்கா

கம்பராமாயணம் வகுப்பை பற்றி ஒரு இழை ஆரம்பித்தால் ஷைலஜா அக்காவுக்கு கட்டவுட் வச்சு ஸ்ரீரங்கம் தொகுதியில் கொண்டாடுவேன்.

மைபாவை நான் கேள்விப்பட்டதே இங்குதான்.  மைபாவை தண்டவாளத்தில் வச்சா ரயில் கவுந்துடுவும்னு பண்புடன் அன்பர் ஒருவர் சொன்னார்

2015-11-17 14:31 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:



--
regards,
jaisankar jaganathan

shylaja

unread,
Nov 17, 2015, 5:27:52 AM11/17/15
to பண்புடன்
:) துர   படம்  கிடையாதா  இதுக்கு?:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

shylaja

unread,
Nov 17, 2015, 5:31:32 AM11/17/15
to பண்புடன்


2015-11-17 2:09 GMT-08:00 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>:
நான் ஒரு இழை ஆரம்பிச்சு உங்களை பற்றி எழுதுறேன் அக்கா>>ஏற்கனவே நகைச்சுவை இழை  உங்களுது இருக்கேப்பா?:)

கம்பராமாயணம் வகுப்பை பற்றி ஒரு இழை ஆரம்பித்தால் ஷைலஜா அக்காவுக்கு கட்டவுட் வச்சு ஸ்ரீரங்கம் தொகுதியில் கொண்டாடுவேன்.>>>>  க ரா   இழை ஐயப்சு  எழுதுவாரே அபப்போ?

மைபாவை நான் கேள்விப்பட்டதே இங்குதான்.  மைபாவை தண்டவாளத்தில் வச்சா ரயில் கவுந்துடுவும்னு பண்புடன் அன்பர் ஒருவர் சொன்னார்
>>>  இரண்டுவாக்கியம் சரியா எழுதினா  மூணாவது வாக்கியம்  முரண்பாடா இருப்பது ஜெய்விதியா?:)

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Nov 17, 2015, 5:36:48 AM11/17/15
to பண்புடன்

பண்புடன் என் பார்வையில் !!


துரை.ந.உ

unread,
Nov 17, 2015, 5:44:48 AM11/17/15
to பண்புடன்
அறந்தாங்கிலீக்ஸ்ஸீல் இருந்து குழந்தப்பயப்படம் :))

Jaisankar Jaganathan

unread,
Nov 17, 2015, 5:45:43 AM11/17/15
to panb...@googlegroups.com
அற்ந்தாங்கிஎன்றால் அரும்புவின் சிறியவயது படமா துரைஅண்னா
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Nov 17, 2015, 5:53:58 AM11/17/15
to பண்புடன்
2015-11-17 15:57 GMT+05:30 shylaja <shyl...@gmail.com>:
:) துர   படம்  கிடையாதா  இதுக்கு?:)

​:)​

​ 

shylaja

unread,
Nov 17, 2015, 5:56:32 AM11/17/15
to பண்புடன்
குழந்தையின் குழந்தையா  இது ச்ச்சோ  ச்வீட்ட்டு:0:)

shylaja

unread,
Nov 17, 2015, 5:57:05 AM11/17/15
to பண்புடன்
ச்சே பாவம்  வடிவேலு அடிவாங்கன்னே பொறந்திருக்காரே:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Asif Meeran

unread,
Nov 17, 2015, 7:23:20 AM11/17/15
to பண்புடன்
நான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஏதாவது உளறுபவன். 

இப்ப மட்டும் என்ன வாழுதாம்?

இப்படிக்கு
அரும்பானவன்

Tthamizth Tthenee

unread,
Nov 17, 2015, 7:34:23 AM11/17/15
to பண்புடன்
கலகலப்பான   பண்புடன்  குழுமம்  எனக்கு மிகவும் பிடித்த  குழுமம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





sadayan sabu

unread,
Nov 17, 2015, 8:07:00 AM11/17/15
to panbudan

கலகலப்பான குழுமம் , கலைந்து போய்விட்டது, முகநூல். கூகுள்+ , வாட்ஸ் அப் வந்த பிறகு

ஜெஹபர் அலி

unread,
Nov 18, 2015, 12:27:04 AM11/18/15
to பண்புடன்

2015-11-17 12:24 GMT+03:00 Iyappan Krishnan <jee...@gmail.com>:
இன்னும் பத்து கட்டுரை வரும் போல. வெயிட்டீஸ்.. என்  பேர்லாம் வரலைன்னா அவ்ளோ தான்.... ​

நானும் அதுக்குதான் வெயிட்டிங்...


--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

yesu rajan

unread,
Nov 18, 2015, 3:14:25 AM11/18/15
to பண்புடன்
i am also waiting for my name

yesurajan

--
Reply all
Reply to author
Forward
0 new messages