உலகின் மிக வலிமையான மனிதன்

10 views
Skip to first unread message

செல்வன்

unread,
Dec 27, 2016, 10:00:34 PM12/27/16
to செல்வன்
எடி ஹால் என ஒரு டாக்குமெண்டரி...நெட்ப்ளிக்ஸில் கண்டேன். பளுதூக்குதல், ஸ்ட்ராங்க்மேன், பாடிபில்டிங்கில் விருப்பம் உள்ளவர்களுக்கு படம் விருந்து. மற்றவர்களும் கண்டு ரசிக்கலாம்.

"உலகின் மிக வலிமையான மனிதன்" (Worlds Strongest man) என்ற ஒரு போட்டி. அதில் கலந்துகொள்ளும் எடி ஹால் எனும் ப்ரிட்டிஷ் வீரரை பற்றிய தொகுப்பு இது. உலகின் வலிமையான மனிதன் போட்டி விடியோக்களை யுடியூபில் கண்டுகளிக்கலாம். பஸ்ஸை கயிறு கட்டி இழுத்தல், 200 கிலோ கற்களை தூக்குதல், ப்ரிட்ஜை முதுகில் தூக்கியபடி ஓடுதல் என ரகளையான போட்டி அது. தவறாமல் விடியோக்களை காணவும்.

ஒரு சாம்பியன் எப்படி உருவாகிறார், விளையாட்டு போட்டிகளும் உடல்நலமும் என பல விசயங்களை எனக்கு உணர்த்திய டாக்குமெண்டரி இது.

எடி ஹால் ஒரு மெகானிக்..உலகின் வலிமையான மனிதன் பணம் கொழிக்கும் விளையாட்டும் அல்ல. அதனால் இங்கிலாந்தின் நம்பர் ஒன் ஸ்ட்ராங்க் மேன் ஆக இருந்தும் எடி ஹால் நாள் முழுக்க மெகானிக் ஆல பணியாற்றி தினம் 10 மணி நேர உடல் உழைப்புக்கு பின் ஜிம்முக்கு சென்று மூன்றுமணிநேர பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

அவரது சம்பளம் அவரது உணவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. ஏனெனில் ஸ்ட்ராங்கேன் போட்டிக்கு ஏகப்பட்ட இறைச்சி, சத்தான காய்கறிகள் என எடுக்கவேன்டும். போட்டிக்கான உபகரணம், பயணசெலவு எல்லாம் இவர் தலையில் தான் பலசமயம் விடியும். அதனால் இவரது மனைவி வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றுகிறார்.

எடி ஹாலின் கனவுகள் இரன்டு

1) உலக் டெட்லிப்ட் சாதனை புரியவேண்டும்

2) உலகின் வலிமையான மனிதன் பட்டத்தை ஒருமுரையேனும் வெல்லவேண்டும்

இந்த கனவை புரிந்து கொள்ளும் மனைவி அமைந்ததால் அவரது பயணம் சாத்தியமாகிறது. ஆனால் மனைவி வேலை பார்க்க, இவரும் வேலை பார்த்து பயிற்சிகள் செய்ய பல நாட்கள் குழந்தைகளுடன் நேரம் கழிக்க முடியாமல் போகிறது. இந்த சூழலில் ப்ரோட்டீன் பவுடர் விற்கும் கம்பனி ஒன்று இவரை ஸ்பான்சர் செய்ய முன்வருகிறது. மிகுந்த மகிழ்ச்சியடைந்து மெகானிக் வேலையை விட்டுவிட்டு முழுநேர ஸ்ட்ராங்மேன் ஆக மாறுகிறார்.

இரண்டாவது கனவை நிறைவேற்ற முடியாமல் ப்ரையன் ஷா எனும் அமெரிக்கரும் ஸன்டூரஸ் ஸவிஸ்காஸ் எனும் லிதுவேனியரும் குறுக்கே நிற்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக இவர்களிர்வரும் தான் மாறி, மாறி பட்டம் பெறுகிறார்கள்.

சரி..உலக டெட்லிப்ட் சாதனையாவது செய்யலாம் என முயல்கிறார் எடி ஹால். மிக, மிக குரூரமான முறையில் விதி விளையாடி அந்த சாதனையை இவரை செய்யவிடாமல் தடுக்கிறது. ஆம் உலக சாதனை எடையான 461 கிலோ எனும் எடையை தூக்கிவிடுகிறார் எடிஹால். அதன்பின் மகிழ்ச்சியில் நடுவர் சிக்னல் அளிக்குமுன் எடையை கீழே போட்டுவிட அந்த சாதனை ரெகார்டில் ஏறாமல் போய்விட கண்ணீர்கடலில் மூழ்குகிறார் எடிஹால்.

அதன்பின் வரிசையாக ஸ்ட்ராங்க்மேன் போட்டிகளில் தோல்விகள்..ஒரு கட்டத்தின் ஒகையோவில் ஸ்ட்ராங்க்மேன் போட்டியில் தோற்று ஆறாமிடம் பிடித்த களைப்புடன் உடனே ஆஸ்திரேலியாவுக்கு விமானம் ஏறி 36 மணிநேரம் பறந்து ஜெட்லாகுடன் மீண்டும் ஒரு ஸ்ட்ராங்க்மேன் போட்டியில் கலந்துகொள்கிறார்.

அங்கே இவரது கனவுநாயகன் அர்னால்டு...போட்டியில் ஜெயிக்க மீண்டும் டெட்லிப்டில் உலகசாதனை எடையை தூக்கவேண்டும் என்ற நிலை. அர்னால்டை கண்ட மகிழ்ச்சியில் முயற்சி செய்து 462 கிலோ எடையை தூக்கியும் விடுகிறார் எடிஹால். அர்னால்டு அவரை கட்டிபிடித்து பாராட்டுவதுடன் டாகுமெண்டரி நிறைவடைகிறது.

ஒரு சாம்பியனின் வாழ்க்கை, அதிலும் அதிக பணம் புரளாத விளையாட்டுக்களில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை எத்தனை சவால் நிறைந்தது என்பதை இந்த டாக்குமெண்டரி உணர்த்தியது.

அதிலும் எடி ஹால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார். இவரது எடை 200 கிலோவுக்கும் மேல். அதனால் ஸ்லீப் அப்னியா வராமல் இருக்க ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்து தான் உறங்கவே முடியும் என்ற நிலை.

யுடியூப் விடியொ ஒன்றில் 500 கிலோ எடையை தூக்கி தன் உலக்சாதனையை தானே முறியடுக்கும் எடி ஹால் விடியோ ஒன்றை கண்டேன். 500 கிலோ மனிதனால் தூக்க முடியாத எடை. அதை தூக்குகையில் அவரது மூளை நரம்புகளில் ரத்தம் கசிந்து சாதனை செய்த அடுத்த நிமிடம் மயங்கி வீழ்கிறார் எடி ஹால். அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாறுகிறார்கள். 500 கிலோ எடையை யாராலும் டெட்லிப்டில் இனி தூக்க முடியாது, தூக்கினால் உயிர் போய்விடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். தன் உலகசாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது என்ற மகிழ்ச்சியில் எடி ஹால் முகத்தில் மகிழ்ச்சிக்களை தாண்டவம் ஆடுகிறது.

சாதனை வெறி, வரலாற்றில் இடம்பிடிக்கவேண்டும் என்ற வெறிதான் இவர்களை இயக்குகிறது போல.

அந்த உணர்ச்சியை என்னால் முழுக்க புரிந்து கொள்ள முடிகிறது. மனிதனுக்கு இப்படி எதாகினும் ஒரு சவால் அவசியம். இல்லையெனில் எடி ஹால் இன்று யாராலும் அறியப்படாத எளிய ப்ரிட்டிஷ் மெகானிக் ஆக இருந்திருப்பார். தன் உடலின் வரம்புகளை அவரால் அறிந்து கொள்ள இயலாது போயிருக்கும்.

உடல்வளக்கலை என்பது எனக்கும் அதனாலேயே ஒரு இனிய போதை போன்ற விசயம். ஆரோக்கியம் எனும் எல்லையை தாண்டாமல் அந்த வரம்புக்குள் பளுதூக்குகிறேன். அதை தாண்டி சாதனை எனும் நோக்கில் அவர் பளுதூக்குகிறார்.இவரை போன்றவர்களால் உந்தபட்டுத்தான் நானும், இன்னும் பல லட்சம் பேரும் இத்துறைக்குள் காலடி எடுத்துவைத்தொம். அதனால் இளைஞர்களை ஊக்குவிக்க சாம்பியன்கள் அவசியம்.

நன்றி எடிஹால்....நிறைய பணம் சேர்க்க நல்வாழ்த்துக்கள்!










--

Ahamed Zubair A

unread,
Dec 28, 2016, 2:25:20 AM12/28/16
to பண்புடன், செல்வன்
//மனிதனுக்கு இப்படி எதாகினும் ஒரு சவால் அவசியம். //

Idiotic...

"Being Ordinary" is also an acceptable way to lead a peaceful life.

We understood "Self Actualization" in wrong manner. 

செல்வன்

unread,
Dec 28, 2016, 10:20:50 AM12/28/16
to Ahamed Zubair A, பண்புடன்
அர்த்தம் நிறைந்த வாழ்க்கை

மனிதவாழ்வின் நோக்கம் என்ன என புத்தர் முதல் காந்திவரை பல மகான்கள் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள். ஆனால் யாருடைய விடையும் இன்னொரு தரப்புக்கு ஏற்புடையதாக இருந்ததில்லை.

மேலைநாடுகளில் மனித வாழ்வின் நோக்கம் மகிழ்ச்சியாக இருத்தல்...மது, சிகரெட், கஞ்சா, செக்ஸ் என அடுத்தவரை பாதிக்காமல் உன்னளவுக்கு உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் எதையும் செய்யலாம் என்ற அளவுக்கு சமூகத்தில் சுதந்திரம் உள்ளது. இந்த இன்பங்களை அனுபவிக்க பணம் தேவை. அதனால் சமூகம் பொருளை தேடி அலைந்து, பணக்காரர்களை கொண்டாடி, ஹீரோவாக ஆக்கி மகிழ்கிறது. இதன் பின்விளைவுகள் சிதறும் குடும்பங்கள், குன்றும் உடல்நலம் என சமுதாயத்தின் அடிப்படையே அசைகிறது.

ஆக வெறும் மகிழ்ச்சி என்பது மட்டுமே குறிக்கோளாக இருக்க இயலாது. மனிதவாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு குறிக்கோளை நோக்கி நகர்வதன் மூலமே மனிதன் வாழ்வில் அர்த்தத்தை காண்கிறான்.

கல்யாணம் ஆகாத வரை நம் இளைஞர்கள் பஸ்ஸ்டாண்டுகளில், மால்களில் துணையை தேடுதலே குறிக்கோளாக கடுந்தவம் மேற்கொள்கிறார்கள். அதன்பின் வேலை, இண்டர்வியூ, வீடு என இன்னொரு குறிக்கோளை நோக்கி வாழ்க்கை நகர்கிறது. நல்ல வேலை, குடும்பம் என செட்டில் ஆனபின் மனதில் ஒரு வெறுமை தோன்றுகிறது. அடுத்தது என்ன என்ற உணர்வு.

சமூகசேவை, ஆன்மிகம், பக்தி, பேஸ்புக், புத்தகம் எழுதுதல், அரசியல் என பலரும் நல்ல, கெட்ட குறிக்கோள்களை நோக்கி நகர்தல் இக்காலகட்டத்தில்தான்.

அதனால் தான் ஆன்மிகவாதிகளின் பர்சனல் வாழ்க்கை அத்தனை பொருள் நிரம்பியதாக உள்ளது. அவர்கள் துயரம், வாழ்வதற்கான நோக்கம் அனைத்தையும் ஆன்மிகம் வழங்குகிறது. மரணமிலா பெருவாழ்வு வாழ ஆன்மிகம் உதவும் என நம்புகிறார்கள்.

மதநம்பிக்கையற்றவர்கள் சமூக நலன், பகுத்தறிவு, சுற்றுபுற சூழலியல் போன்ற குறிக்கோள்களை முன்வைத்து இயங்குகிறார்கள். அவர்கள் வாழ்வின் நோக்கமும் இதேபோன்ற குறிக்கோள்களால் நிறைவுறுகிறது. அவர்கள் வாழ்வும் பொருள் நிரம்பியதாக மாறுகிறது.

சிலரால் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை தான்டியே முன்னேறக்கூடிய சூழல் அமைவது இல்லை. ஆனால் அவர்களும் கடைசிக்கு ஒரு சினிமா நடிகரின் ரசிகராக மாறியாவது தம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் அல்லது பொருளை தேடிகொள்கிறார்கள்.

அர்த்தம் நிரம்பிய வாழ்க்கை நம்மை பல கெட்ட விசயங்களில் செல்வதில் இருந்து தடுக்கிறது. நம் ஆற்றலை ஒரு இலக்கை நோக்கி செலுத்துகிறது. வெறும் மகிழ்ச்சி என்பதை தேடி அலைவதை விட வாழ்க்கை இவ்விதத்தில் இனிமையானதாக மாறுகிறது. மகிழ்ச்சியை விட மனநிறைவு மேலானதுதானே?



Ahamed Zubair A

unread,
Dec 29, 2016, 3:50:07 AM12/29/16
to செல்வன், பண்புடன்
சவால் என்பது என்ன? மகிழ்ச்சி என்பது என்ன?

சவால்கள் அவசியம் என்பதை நான் ஏற்க மாட்டேன். சவால்கள் இல்லாத வாழ்க்கையும் மனிதன் வாழலாம். 

மகிழ்ச்சி என்பது பிறருக்கு கொடுத்துண்பதிலும் கிட்டக்கூடும். 

மன நிறைவு என்பது என்ன? "Self Actualization" என்றால் என்ன?

நம்முடைய வாழ்வின் குறிக்கோள் என்ன என்பதை ஒவ்வொரும் அறிய முற்படுவதே Self Actualization என்பேன்.

இங்கே ஆன்மிகம் நம்மை வழிநடத்தக்கூடும்.

சவால்கள் இல்லா மகிழ்ச்சியான வாழ்வில் மனநிறைவும், self actualization கிடைக்கக்கூடும்.


2016-12-28 18:20 GMT+03:00 செல்வன் <hol...@gmail.com>:
அர்த்தம் நிறைந்த வாழ்க்கை

மகிழ்ச்சியை விட மனநிறைவு மேலானதுதானே?

Reply all
Reply to author
Forward
0 new messages