வெள்ளைத்தோலும் கருப்புத்தோலும்

11 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jul 29, 2016, 6:30:20 PM7/29/16
to Neander Selvan


80களின் தமிழ் திரையுலகம் ஒரு அழகான பொற்காலம். ராதா, ராதிகா, சரிதா, சுகாசினி என கருப்புத்தோல் பெண்கள் காலோச்சின காலம். அன்று வெள்ளையாக இருந்த அம்பிகா, ஸ்ரீதேவியும் பீக்கில் இருந்தார்கள். ஆனால் தம் நிறத்துக்காக அல்ல, நடிப்புக்காக. அதனால் அவர்களால் அன்று ரஜினி, கமலுக்கு இணையாக படங்களில் ஈடுகொடுத்து நடிக்க முடிந்தது. ஊர்வசியுடன் நடிப்பதுதான் சவாலான காரியம் என கமலே கூறியுள்ளார்.

இன்றுபோல் அன்றும் நாயகனை முன்னிறுத்தியே படங்கள் தயாரிக்கபட்டன. ஆனால் இன்று போல அன்றைய நாயகன் சூப்பர்மேனாக இல்லை, ஹீரொ ஒர்ஷிப்பும் இன்றைய அளவு இல்லை. நாயகியர் ஆதிக்கம் நாயகன் ஆதிக்கத்துக்கு ஈடுகொடுக்கும் அளவில் இருந்ததே காரனமாக இருக்கலாம்.

80களின் நாயகியருடன் தமிழ்பெண்களால் தம்மை பொருத்திப்பார்க்க முடிந்தது. அன்று நாயகனும் கருப்பு, நாயகியும் கருப்பு. அதனால் இன்றைய படங்களில் காணப்படும் கருப்புதோல் குறித்த தாழ்வுமனபான்மையை அன்றைய படங்களில் காணமுடியாது. 90களில்  வெள்ளைதோல் நாயகியரை தேடி மும்பைக்கு தமிழ் சினிமா படையெடுத்தவுடன் பெயின்ட் அடித்த பொம்மை மாதிரி நடிக்க தெரியாத நாயகி, கருப்பான நாயகன் என ஆனவுடன் நாயகியரை ஈவ் டீஸ் செய்வது, துரத்தி துரத்தி காதலிப்பது, நிறத்தை குறித்த நாயகர்களின் தாழ்வுமனபான்மை எல்லாமெ தமிழ்படங்களில் இடம்பெற துவங்கின. சிவாஜியோ, ஜெமினியோ, எம்ஜிஆரோ, ஜெய்சங்கரோ, அவ்வளவு ஏன் 80களின் ரஜினி, கமல், விஜய்காந்தோ கூட இப்படி எல்லாம் தாழ்வுமனபான்மையுடன் பாடியது கிடையாது.




மக்களிடமும் இம்மனபான்மை பரவி 90களில் சிகப்பழகு க்ரீம்கள், அழகுசாதன பொருட்களை மக்கள் தேடி வாங்க துவங்கினார்கள். இன்றைய வெள்ளைத்தோல் நாயகியருடன் பெயர் முதல் கலாசாரம், உடை வரை எதிலும் தமிழ்பெண்களால் தம்மை பொருத்திபார்க்க இயலுவதில்லை. இதே காரனத்துக்காக தான் அப்பாஸையும், குணாலையும் ஆண்கள் ஏற்கவில்லை. ஆனால் பெண்களுக்கு அந்த தேர்வு இல்லை என்றவுடன் அவர்கள் திரையரங்குகளுக்கு செல்வதை நிறுத்தினார்கள்.

பெண்கள் அரங்குகளுக்கு செல்லாமல் இருக்க காரணம் டிவி, கவர்ச்சிகாட்சிகள் என மாற்றுகாரணமும் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் அரங்குகளுக்கு வரவேன்டும் என நினைத்தால் கூட அவர்களுக்கு அரங்குகளுக்கு வர எக்காரணமும் இல்லை. திரைப்படங்களுக்கு போனால் தன் கனவு நாயகன், தன்னை விட வெள்ளையான, ஒல்லியான, ஸ்டைலான பெண்ணை "கருப்பான ஆண்கள் இங்கே பல கோடி உண்டு" என தாழ்வுமனபான்மையுடன் கூடிய பாடலை பாடியபடி தெரு, தெருவாக துரத்தும் காட்சிகளை தான் அவர்கள் காணவேண்டி இருக்கும். நக்மா, ரம்பா எல்லாம் நாயகியர் ஆனபின் கதாநாயகியரை பணக்காரர, நகர்ப்புற பெண்ணாகதான் காட்டமுடியும் என்ற நிர்ப்பந்தமும் சேர்ந்துகொன்டது. நக்மாவுக்கு பாவடை, தாவணி போட்டு கிராமபெண்ணாக நடிக்க வைப்பதை விட அல்ட்ரா மாடர்ன் டிரஸ் போட்டு நகர்ப்பெண்னாக காட்டினால் தான் கவர்ச்சிக்கான ஸ்கோப் இருக்கும் என்பதே காரணம்.

மேலும் முந்தி நாகேஸ்வரராவ் பார்க்கில் எடுக்க முடிந்த பாடலை எடுக்க இப்போது வெளிநாடு செல்லவேண்டி ஆனது. அழகான நாயகியை ஆட வைக்க ஸ்விட்சர்லாந்து போகவேண்டியது அவசியம் அல்லவா? இதனால் திரைப்பட செலவீனங்க்ஜளும் அதிகரித்தன.

இதனால் கலாசாரம், நிறம், உருவம் என பல விதங்களில் டிஸ்க்ரிமிநேட் செய்யபட்டதாக உணர்ந்த பெண்கள் அரங்குகளுக்கு செல்லவில்லை. டிவி சீரியல் நாயகியரை என்னதான் ஆண்கள் கேலியும், கின்டலும் செய்தாலும் அவற்றில் பெண்களுக்கு மேலே சொன்ன குறைகள் எதுவும் இல்லை. அதனால் அவர்கள் டிவியிடம் சரணடைந்துவிட்டார்கள். சினிமா இயக்குனர்களும் காலேஜ் மாணவர்கள் கதை, ஆக்ஷன் கதை, ஜாதிகளை போற்றும் கதை, ஹீரோ ஒர்ஷிப் கதை,  கவர்ச்சியை மையபடுத்தும் கதை என எடுத்து ஆண்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவானது.

ராம்ராஜனை டிரவுசர் பையன், பசுநேசன் என கூறி கின்டல் செய்தாலும் அவர் படங்கள் லோ பட்ஜெட் படங்கள், சின்ன, சின்ன தயாரிப்பாளர்களை வாழவைத்தவை. கனகா, ரேகா, கவுதமியுடன் ஒரு எளிய குடும்ப ஏழையின் கதையை சொல்லும் படங்களே ராமராஜன் படங்கள்.

 சட்டை போடாமல் சந்தனத்தை பூசிகொன்டு முறுக்கின மீசையை மேலும் முறுக்கிவிட்டுக்கொண்டு, சாதியவாதமும், ஆணாதிக்கமும் பேசின பின்னாளைய கிராம்ப்புற படங்களுடன் அவர் படங்களை ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியும்.   நாட்டாமையும் கிராமத்து கதைதான். ஆனால் அதில் விஜயகுமார் சட்டையெ போடாமல் சந்தனத்தை பூசிகொண்டு எச்சிலை துப்ப செம்பை எந்திய வேலைகாரனுடன், தான் ஏறும் வண்டியின் படிக்கட்டை துண்டால் சரத்குமார் துடைக்க படத்தில் வருவார். இரண்டுக்கும் எத்தனை வேறுபாடுகள்? ஆனால் இதில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது என்னவோ ராமராஜன் தான்.

ஆதியவாதமும், ஆணாதிக்கமும் சேர்ந்து 90களுக்கு பின் தமிழ் சினிமாவை புரட்டிபோட்டுவிட்டன. இதனுடன் ஒப்பிட்டால் 80களில் வந்த படங்களில் இருந்த அப்பாவித்தனமே ஆயிரம் மடங்கு பரவாயில்லை எனத்தான் கூறவேண்டி இருக்கிறது.

--

வேணுகோபாலன் ரெங்கன்

unread,
Aug 2, 2016, 8:00:52 AM8/2/16
to பண்புடன், hol...@gmail.com

On Saturday, 30 July 2016 04:00:20 UTC+5:30, Neander Selvan wrote:


ஆதியவாதமும், ஆணாதிக்கமும் சேர்ந்து 90களுக்கு பின் தமிழ் சினிமாவை புரட்டிபோட்டுவிட்டன. இதனுடன் ஒப்பிட்டால் 80களில் வந்த படங்களில் இருந்த அப்பாவித்தனமே ஆயிரம் மடங்கு பரவாயில்லை எனத்தான் கூறவேண்டி இருக்கிறது.

கொஞ்ச நாள் இந்தப் பக்கம் வராட்டி என்னெல்லாமோ நடக்குது. :-)

தியாகு

unread,
Aug 5, 2016, 3:19:05 AM8/5/16
to பண்புடன்
ஆதிய வாதம்னா என்னா?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-
Reply all
Reply to author
Forward
0 new messages