மக்களிடமிருந்து அன்னியப்பட்ட கல்வித்துறையை சீரமைப்பது எப்படி?

3 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 9, 2017, 10:24:41 PM3/9/17
to செல்வன்
மக்களிடமிருந்து அன்னியப்பட்ட கல்வித்துறையை சீரமைப்பது எப்படி?

நமது கல்விமுறைக்கும், மக்களின் பொருளாதாரம், வாழ்க்கைமுறைக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்றால் துளியும் இல்லை எனத்தான் சொல்லவேண்டும்

கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் பெயில் ஆகும் பாடம் என ஆங்கிலத்தை குறிப்பிடலாம். தாய், தந்தை யாருக்கும் ஆங்கிலம் தெரியாது என்ற நிலையில் அதை கற்றே ஆகவேன்டும் என கட்டாயபாடம் ஆக்குவது எதற்கு?

அதிலும் கிராமப்புற மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர், மில்டன் பாடபுத்தகங்களை வைப்பது எல்லாம் எதற்கு?

ஆங்கிலத்தை எழுத, படிக்க, ஒரு கடிதாசி எழுத, செய்தித்தாள் படிக்கும் அளவு தெரிந்தால் போதாதா?  ஆக ஆங்கிலபாடத்தை பள்ளிமாணவர்களுக்கு மிக எளிமைபடுத்தவேண்டும். மணவர்களை ரொம்பபடுத்தி எடுக்கவேண்டாம். உடனே "அவர்கள் எஞ்சினியரிங் சேர்ந்தால் ஆங்கில புத்தகம் படிக்கவேண்டாமா" என கேட்டு மடக்கவேண்டாம். ஆறாம் வகுப்பில் ஆங்கிலத்தில் பெயில் ஆவதால் பள்ளியை விட்டு விலகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை நினைவில் கொள்வோம். ஆங்கிலம் அன்னியமொழி. அது என்னதான் முக்கியமான மொழியாக இருந்தாலும் அது ஒரு மொழிதான். அதனால் ஆங்கிலபாடத்தை மிக எளிமைபடுத்தி மாணவர்களுக்கு கற்பிக்கலாம்.  அதில் பெயில் ஆனால் பரவாயில்லை என 10, +2 சர்ட்டிபிகேட்டை மாணவர்களுக்கு கொடுத்து அவர்கள் விரும்பும் பி.ஏ பொலிட்டிக்கல் சயன்ஸ், பிகாம் என வேறு எதோ டிகிரியை படிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கலாம். பல ஆர்ட்ஸ் டிகிரிகளை தமிழிலேயே படித்து தேர்வு எழுத அனுமதி உண்டு என்பது குறிப்பிட்தக்கது.

இதனால் ஆங்கிலத்தில் பெயில் ஆகி 10வது,+2வது கூட பாஸ் செய்யாமல் பள்ளியை விட்டு பலரும் விலகும் நிலை தவிர்க்கபடும்.

அடுத்ததாக கணிதம். மாணவர்களின் உயிரை எடுக்கும் வகுப்புகளில் இதுவும் ஒன்று

சின்னவயதில் படித்த காஸ் தீட்டா, டேன் திட்டா, ஆட்டா, பாட்டவை வைத்து என்ன பயன் என இதுநாள்வரை யோசித்தும் எனக்கு எதுவும் விளங்கவில்லை

நான் படித்த திரிகோணமிதி, மேட்ரிக்ஸ் ஆகியவற்றின் பிராக்டிக்கல் பலன் என் குழந்தைகளுக்கு அதை கற்றுகொடுக்க அது உதவுகிறது என்பதே. அவர்களுக்கும் அதில் எதுவும் பலன் இருக்குமா என எனக்கு தெரியவில்லை.

எஞ்சினியர், விண்வெளி ஆராய்ச்சியாலர் போன்ற டிகிரிகளுக்கு அது உதவலாம். ஆனால் அந்த படிப்புகளை மையபடுத்தியே ஏன் எல்லாரும் பயனற்ற இந்த கணிதபாடத்திட்டத்தை கட்டிஅழவேண்டும் என எனக்கு தெரியவில்லை.

கணிதம் முக்கியமான திறன். துளியும் பயனற்ற இம்மாதிரி கணிதபாடதிட்டத்தை தலைமுழுகிவிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஏன் வட்டி கணக்கிடுவது எப்படி, லாப, நஷ்டம் கணக்கிடுவது எப்படி மாதிரி எளிய அனைவ்ருக்கும் பயனுள்ள கணிதத்தை கற்றுதரகூடாது? எஞ்சினியர், டாக்டர் படிப்புக்கு போகிறவர்களுக்கும் இது அவசியம் தானே?

10வது பாஸ் செய்து +11,+12வில் எஞ்சினியரின், சயண்ஸ் துறையை எடுப்பவர்களுக்கு தேவைக்கேற்ப அல்ஜீபரா, கோப்ரா, காப்ராவையெல்லாம் தேவைக்கேற்ப கற்பிக்கலாமே? நான் +2வில் காமர்ஸ் பிரிவு. ஆனாலும் +2 கணிதத்திலும் இந்த திரிகோணம்தியையெல்லாம் கற்பித்து என்னை ஆவி எடுத்தார்கள். காமர்ஸ் மாணவனுக்கு எதுக்கய்யா திரிகோணமிதி? தெரிஞ்சுட்டா நல்லதுதானே என சொல்லவேண்டாம். இதனால் மட்டுமே +2வில் கணிதத்தில் பெயில் ஆகிறவர்கள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

10ம் வகுப்புவரை மானவர்களுக்கு

அடிப்படையான பிராக்டிக்கல் பயனுள்ள ஆங்கிலம். பெயில் ஆனாலும் டிகிரி படிக்க அனுமதி

பிராக்டிக்கல் தமிழ், பிசினஸ் தமிழ். குறள், சிலப்பதிகாரம் மாதிரி இலக்கியங்களையும் கற்பிக்கலாம். 

பிசினஸ் கணிதம். வட்டி, அளவையியல் மாதிரி எளிய கணிதம் மட்டுமே கற்பிக்கபடவேண்டும்.

எளிமைபடுத்தபட்ட விஞ்ஞானம்.

ஹிஸ்டரி, ஜியாக்ரபி, சோஷியல் சயன்ஸ் எல்லாம் ஏறக்கட்டிவிட்டு பதிலுக்கு தோட்டக்கலை, விவசாயம் மாதிரி மண்ணுடன் தொடர்புள்ள ஒரு படிப்பை அனைவருக்கும் கற்பிக்கலாம். இவற்றை எல்லாம் இழிவாக அல்லது முக்கியமற்ற படிப்புகளாக எண்ணகூடாது. இப்படி மண்ணுக்கு தொடர்பற்ற கல்விமுறையால் தான் வெறும் குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்விமுறையாக நம் கல்விமுறை வளர்ந்து வருகிறது. அசோகர் மரம் நட்டதை எல்லாம் படிக்க ஒரு சப்ஜெக்ட் அவசியமில்லை. இதெல்லாம் சுயமா படித்து தெரிந்துகொள்ளலாம். ஜெனெரல் நாலெட்ஜில் அடங்கும்.வாரம் ஒருமுறை விருப்பபட்ட புத்தகங்கலை படிக்க லைப்ரரிக்கு அனுப்பி "இந்த வாரம் ஹிஸ்ட்ரி, இந்த வாரம் பாலிடிக்ஸ்" என புத்தகங்களை கொடுத்து படிக்கவைக்கலாம். அதை ஒரு பாடமா அறிமுகபடுத்தவேண்டாம்.

இப்படி செய்தால் எல்லாரும் எளிதில் +10ம் வகுப்பு பாஸ் செய்வார்கள்.

+1, +2வில் அவரவர் தேர்வுக்கு ஏற்ப சயன்ஸ் துறை எடுக்கும் மானவர்களுக்கு அல்ஜீப்ரா, ட்ரிக்ணாமெட்ரி, பயாலஜி, பாட்டனி எல்லாம் கற்பியுங்கள். 

இப்படி செய்வதால் கல்வி கற்பது எளிதாகவும், பயனுள்ளதாகவும் அமையும்.

















--
Reply all
Reply to author
Forward
0 new messages