அண்ணாகண்ணனின் அகமொழிகள்

54 views
Skip to first unread message

AnnaKannan K

unread,
Apr 6, 2018, 3:55:10 AM4/6/18
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
ஆட்டத்தின் வெற்றி - தோல்விக்கு வர்ணனையாளர் பொறுப்பேற்க முடியாது. (அகமொழி 1195)

ஓர் ஆழமான கத்திக் குத்தின் தழும்பு, பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பயணிக்கும். (அகமொழி 1196)

நமது பேச்சின் விளைவுகளை நாம் அறிந்தாக வேண்டும். நம் ஒவ்வொரு வாக்கியமும் எதிர்காலத்தில் ஒருவரால் மேற்கோள் காட்டப்படக் கூடும் என்ற விழிப்புணர்வு நமக்குத் தேவை. (அகமொழி 1197)

நான் தனி மனிதர் ஒருவரிடம் பேசினாலும் பேரரங்கில் பேசினாலும் குறிப்பிட்ட மனிதர்களிடம் பேசுவதாக எண்ணவில்லை. வரலாற்றை நோக்கிப் பேசுவதாகவே எண்ணுகிறேன். (அகமொழி 1198)

ஒவ்வொரு சொல்லும் தனக்குள் ஒரு சாம்ராஜ்யத்துக்கு உரிய பரப்பினைக் கொண்டுள்ளன. நாம் கொஞ்ச தூரம் ஓடுவதற்குள் களைத்து விடுகிறோம் என்பதே உண்மை. (அகமொழி 1199)

நீங்கள் சாலையில் பயணிக்கிறீர்களா? எந்த நேரத்திலும் எந்தத் திசையிலிருந்தும் ஒரு விபத்தை எதிர்பாருங்கள். உங்கள் பயணம் பாதுகாப்பானதாய் இருக்கும். (அகமொழி 1200)

நான் ஆசைப்பட்ட ஒவ்வொன்றும் எனக்குக் கிடைக்காமல் போனபோது, அவற்றின் மீதான ஆசைகளை இழந்தேன். படிப்படியாக ஆசைப்படுவதையே குறைத்துக்கொண்டேன். சோகம்தான் என்னை ஆசையற்ற நிலைக்கு அழைத்துச் செல்கிறது. வலிதான் வலியற்ற நிலைக்கு வழிகாட்டுகிறது. (அகமொழி 1201)

நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், வேலையைத் தொடங்கியதும் கன வேகமாக அதை முடிக்க முயலுங்கள். நெடுநேரமாகச் செய்யப்படும் ஒரு வேலை, சலிப்பையும் களைப்பையும் தரும். (அகமொழி 1202)

திருத்திக்கொள்வதைக் குறித்து நீங்கள் ஏதும் வெட்கப்பட வேண்டாம். இவ்வுலகில் திருத்தப்படாத அல்லது திருத்தம் தேவைப்படாத எதுவுமே இல்லை. மனம், உடல், புறம்... எனத் திருத்தம் நிகழ்கிற இடங்கள் மாறுபடலாமே தவிர, திருத்தங்கள் நிகழாமல் இல்லை. (அகமொழி 1203)

புகழ்ச்சியை நம்பாதீர்கள். பெரும்பாலும் அது ஒரு சடங்கு. பொய்யாகவாவது புகழ்வது உறவை வளர்க்கும் என்பர். புகழ்ச்சியின் ஒவ்வொரு சொல்லையும் விசாரணை செய்யுங்கள். உண்மைக்கு மேலாகச் சொல்கிறார்கள் எனில், அதில் மகிழ என்ன இருக்கிறது? உண்மையைத்தான் சொல்கிறார்கள் எனில், அது எப்படிப் புகழ்ச்சி ஆகும்? போய், அடுத்த வேலையைப் பாருங்கள். (அகமொழி 1204)

எல்லா விடயங்களிலும் சாதகமும் பாதகமும் உண்டு. நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலைக்கான சாதக அம்சம் குறித்து மகிழுங்கள். சாதக அம்சங்களைக் கண்டறியுங்கள். அவ்விதம் ஏதும் இல்லை என நினைத்தால், உண்டாக்குங்கள். (அகமொழி 1205)

AnnaKannan K

unread,
Jul 3, 2018, 11:39:08 AM7/3/18
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
பிடிக்காத வேலையைத் தவிர்த்து, தள்ளிப் போட்டு, தாமதித்து, தரம்குன்றிச் செய்கிறோம். பிடித்த வேலையை முதலில் தொடங்கி, செம்மையாக, நேர்த்தியாக, நிறைவாகச் செய்கிறோம். பாடுபடுவதை விடவும் சிறந்தது ஈடுபடுவது. (அகமொழி 1206)

AnnaKannan K

unread,
Aug 6, 2018, 9:05:08 AM8/6/18
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
ஒரு குறிப்பிட்ட பொறுப்புக்கு வருவதோ, அந்தப் பொறுப்புக்கான கடமைகளை ஆற்றுவதோ சாதனை ஆகாது. எதிர்பார்ப்புகளை விஞ்சிய, முன்னெப்போதும் கண்டிராத உச்சப் பங்களிப்பை,  வீச்சை, பாய்ச்சலை  அல்லது வேறு எவரைக் காட்டிலும் அதி சிறப்பான நற்செயல்களையே சாதனை எனலாம். (அகமொழி 1207)

***********************

உன் பதவியின் காரணமாக உனக்கு மதிப்பு ஏற்பட்டால், அது உனக்குச் சிறுமையே. உன்னால் உனது பதவிக்கு மதிப்பு ஏற்பட்டால், அதுவே பெருமை. (அகமொழி 1208)

***********************

கால வெளியில் கோள்கள், சோழிகளைப் போல் உருட்டப்படுகின்றன. அவற்றின் பலன்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணத்திலும் மாறும். (அகமொழி 1209)

***********************

இப்போது பூமியில் உள்ள எந்த மனிதரும், இன்றிலிருந்து 150 ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கே இருக்கப் போவதில்லை. இவர்களின் கொடிவழியே வேறு புதிய தலைகள் தொடரும்.  ஒவ்வொருவரின் வாழ்நாளிலும் அறிவும் விழிப்பும் செயல்வேகமும் செறிந்த காலம், மிகச் சிறிதே. கூர்முனைபோல் குறுகிய இக்காலத்தை மேன்மை மிக்க செயல்களுக்கே பயன்படுத்து. (அகமொழி 1210)

***********************

அனைத்து உயிர்களும் ஒன்றெனக் கருதுவது, தூரத்து இலக்கு. மனிதர் யாவரும் ஒன்றெனக் கருதுவது, உடனடி இலக்கு. பேதங்களைக் கடந்து, இந்த இலக்குகளை எட்டினால், உலகின் பெரும்பாலான சிக்கல்கள் அக்கணமே தீர்ந்துவிடும். (அகமொழி 1211)

AnnaKannan K

unread,
Oct 27, 2018, 3:37:48 AM10/27/18
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனச் சொல்லத் தெரியாத மக்கள், தற்படம் (செல்ஃபி) எடுத்துப் பகிர்கிறார்கள். உன் மகிழ்ச்சி கண்டு எனக்கும் மகிழ்ச்சி எனச் சொல்லத் தெரியாதவர்கள், அதற்கு விருப்பம் தெரிவிக்கிறார்கள். (அகமொழி 1212)

AnnaKannan K

unread,
Mar 9, 2019, 12:54:13 AM3/9/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
கணினியில் ஒரு வெற்றிடத்தை (space)ப் படியெடுத்து இன்னொரு வெற்றிடத்தில் பிரதியிட முடியும். ஆனால், இங்கே வெற்றிடம் என்பது ஒரு மாயை. நாம் படியெடுக்கும் வெற்றிடமானது, உண்மையில் வெற்றிடம் இல்லை. அங்கே நிர்ணயிக்கப்பட்ட பண்புகளுடன் ஒரு பரப்பு உள்ளது. இதே போல் அண்ட வெளியில் உள்ள வெற்றிடமும் உண்மையில் வெற்றிடம் இல்லை. ஒட்டுமொத்த வெளியில் ஒவ்வொரு நுண்புள்ளியும் ஒரு பரப்பே. அதற்கெனத் தனித்துவமான பண்புகள் உள்ளன. இதர அணுக்கள் அந்தப் பரப்பின் மீது பயணிக்கலாம் அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு இடம் பெயரலாம். பரப்பும் அதனுடன் இணைந்து உறவாடும் அணுக்களும் தனித் தனிப் படலங்களாக(Layers)க் கொள்ளத் தக்கவை. இவற்றுள் அணுக்களே இடம்பெயரத் தக்கவை; ஆற்றலும் உருவமும் தன்மைகளும் மாறக் கூடியவை. பரப்போ, மாறாதது, நிலையானது. இரண்டுக்குமே உயிர்ப்பு உண்டு. (அகமொழி 1213)

AnnaKannan K

unread,
Apr 2, 2019, 3:42:43 AM4/2/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
இயல்பாக, எளிமையாக வாழ்பவர்களை மகாத்மா என்றும் ஞானிகள் என்றும் போற்றுகின்றனர். சாதாரணமாகச் சிந்திப்பவர்களை விஞ்ஞானிகள் என விதந்தோதுகின்றனர். அடிப்படையான திறமைகளை ஆஹா எனக் கொண்டாடுகின்றனர். வழக்கமான ஆற்றல்களை வானளாவ ஏத்துகின்றனர். இதில் சாதனை எங்கே இருக்கிறது? மனிதன் தன் எல்லையைத் தாண்டி எதுவும் செய்துவிடவில்லை. இன்னும் சொல்லப் போனால், தன் முழு ஆற்றலைக் கூட இன்னும் பயன்படுத்தவில்லை. இருக்கின்ற திறன்களைக் கூட, ஒன்றா மனத்தாலும் கருவிகளைச் சார்ந்து வாழ்வதன் மூலமும் இழந்து வருகிறான். சகிக்க முடியாத இந்த வீழ்ச்சிக்கு நடுவே, இவனுக்கு உள்ளிருந்து அதிமானுடன் எப்போது வெளிப்படுவது? (அகமொழி 1214)

AnnaKannan K

unread,
May 1, 2019, 12:56:12 AM5/1/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
புதிய முகத்திற்குள் பழைய முகம், புதைந்துகொண்டே செல்கிறதா? பழைய முகத்திலிருந்து புதிய முகம் பூத்துக்கொண்டே எழுகிறதா? (அகமொழி 1215)

AnnaKannan K

unread,
May 18, 2019, 6:40:46 AM5/18/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
மனிதன் தன் ஆயுளில் மூன்றில் ஒரு பாகத்தைத் தூக்கத்தில் தொலைத்துவிடுகிறான் எனச் சிலர் புள்ளிவிவரங்கள் காட்டுகிறார்கள். உண்மையில், விழித்திருக்கும் பொழுதை விட, தூங்கும்பொழுதே மனிதன் நிறைவாகவும் சிறப்பாகவும் வாழ்கிறான். மனிதனின் தூங்கும் நேரம் அதிகரித்தால், உலகில் பிரச்சினைகள் குறையும்; மாறாக, தூங்கும் நேரம் குறைந்தால், பிரச்சினைகள் அதிகரிக்கும். (அகமொழி 1216)

AnnaKannan K

unread,
May 18, 2019, 7:00:31 AM5/18/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
மனிதனின் ஆயுள் அதிகரிப்பதால், மக்கள் தொகை கூடுவதால், அவனது சுயநலத்துக்காக உலகின் வளங்களைச் சுரண்டுகிறான். சான்றாக, இருக்கும் தண்ணீரை அவனே முழுவதும் எடுத்துக்கொள்ள விழைகிறான். இது, இதர உயிர்களை நேரடியாகப் பாதிக்கும். மனித மக்கள் தொகை கூடக் கூட, இதர உயிர்கள் வேகமாக அழியும். உலகின் உயிர்ச் சமநிலை குலையும். அது, இறுதியில் மனித மக்கள் தொகையையும் அழித்து ஒழிக்கும். எனவே, தன் சுயநலத்திற்காகவேனும் மனிதன் இதர உயிர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். (அகமொழி 1217)

AnnaKannan K

unread,
May 19, 2019, 2:47:59 AM5/19/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
நான் வாழும் காலத்தில் ஒரு சிக்கல் தீர்க்கப்படாமல் இருக்குமானால், அதற்கு நானும் பொறுப்பே. (அகமொழி 1218)

AnnaKannan K

unread,
May 19, 2019, 3:28:37 AM5/19/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
ஒரு சிந்தனையும் அதன் நிறைவேற்றமும் தொடர்ச்சியான மேம்பாடும் ஒரு தொடர் ஓட்டத்தின் அடுத்தடுத்த நிலைகள். இவற்றில் ஈடுபடும் அனைவரும் ஓரணியினர். பெறக்கூடிய வெற்றியை, பெருமையை இவர்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்தளிக்க வேண்டும். இதில் ஓருவர் மேல், இன்னொருவர் கீழ் இல்லை. இது, ஆசிரியர் - மாணவர், தலைவர் - தொண்டர், பெற்றோர்-பிள்ளை ஆகியோருக்கும் பொருந்தும். (அகமொழி 1219)

AnnaKannan K

unread,
May 19, 2019, 3:47:36 AM5/19/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
ஒரு தளத்தில் வாடிக்கையாளர் மிக அதிக நேரம் செலவிடுகிறார் எனில், அதை அந்தத் தளத்தின் வெற்றியாக, வளர்ச்சியாகக் கருதக் கூடாது. இதுபோல், இரவு பகல் பாராது ஊழியர் வேலை பார்க்கிறார் எனில், அதை நிறுவனம் ஊக்குவிக்கக் கூடாது. உங்கள் நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் என எச்சரிப்பது, கட்டுப்படுத்த வேண்டியது, பணிப் பளுவைக் குறைப்பது நிறுவனத்தின் கடமை. விமானத்தின் உதிரி பாகம் ஒன்று, மற்றவற்றை விட மிகுதியாக இயங்கினால், விரைவில் தேய்ந்து முடங்கிவிடும்; அதனால் விமானத்திற்கு ஆபத்தே. வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் சொத்தாக நடத்துவதை விடத் தங்களின் ஒரு பகுதியாக நிறுவனங்கள் நடத்த வேண்டும். (அகமொழி 1220)

AnnaKannan K

unread,
Jul 10, 2019, 2:18:24 PM7/10/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
நீ தோற்றதை விட, வீறு கொண்டு போராடாமல் தோற்றுவிட்டாய் என்பதே அதிகம் வலிக்கிறது. (அகமொழி 1221)

AnnaKannan K

unread,
Aug 1, 2019, 3:18:43 AM8/1/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
குருவி தன் மூக்கால் நெல்மணிகளைக் கொத்தி உண்பது போல், என் ஒற்றை விரலால் செல்பேசியைத் தட்டி எழுதுகிறேன். இதை எங்கோ சில விரல்கள் கொத்தி உண்ணட்டும். (அகமொழி 1222)

AnnaKannan K

unread,
Aug 1, 2019, 3:47:48 AM8/1/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
(Edited)

குருவி தன் அலகால் நெல்மணிகளைக் கொத்தி உண்பது போல், என் ஒற்றை விரலால் செல்பேசியைத் தட்டி எழுதுகிறேன். இதை எங்கோ சில விரல்கள் கொத்தி உண்ணட்டும். (அகமொழி 1222)  

AnnaKannan K

unread,
Oct 23, 2019, 12:18:21 PM10/23/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
ஆய்வுக் கூடம் என்பது எங்கோ உள்ள மூடிய அறை இல்லை. உலகமே ஓர் ஆய்வுக் கூடம்தான்; நாம் எல்லோரும் ஆய்வுப் பொருள்களே. (அகமொழி 1223)

AnnaKannan K

unread,
Dec 1, 2019, 2:55:47 AM12/1/19
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
நம்பக் கடினமாய் இருக்கிறது, மழைக்காலத்தில் மழை பெய்கிறது என்பதையும் இது மழைக்காலம்தான் என்பதையும். (அகமொழி 1224)  

Ahamed Zubair A

unread,
Dec 1, 2019, 5:20:45 AM12/1/19
to பண்புடன்
ஐயோ அம்மா...

 நம்பக் கடினமாய் இருக்கிறது, அண்ணாகண்ணன் முனைவர் என்பதையும் இது அவர் எழுதியதுதான் என்பதையும். 

On Sun, 1 Dec 2019 at 10:55, AnnaKannan K <annak...@gmail.com> wrote:
நம்பக் கடினமாய் இருக்கிறது, மழைக்காலத்தில் மழை பெய்கிறது என்பதையும் இது மழைக்காலம்தான் என்பதையும். (அகமொழி 1224)  

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/panbudan/CAG2t_CZU0%3DXpTDkpHmo5dybFoAyiQ%3DJ6Rq2Z%3DMwxTkw1z0xoDQ%40mail.gmail.com.

AnnaKannan K

unread,
Feb 17, 2020, 1:25:40 PM2/17/20
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
மக்களாட்சியின் மீது அதிருப்தி எழ நேருமானால், சர்வாதிகாரமே சரி என்ற எண்ணம் தோன்றிவிடும். அது தோன்றாத வகையில் நடந்துகொள்வது, மக்களாட்சியின் அனைத்துப் பங்குதாரர்களின் கடமை. இதை மீறி நடந்துகொள்பவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களுமே இதன் விளைவுகளுக்குப் பொறுப்பாளர்கள். (அகமொழி 1225)

AnnaKannan K

unread,
Feb 8, 2023, 1:11:50 PM2/8/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
சிறு துகளைக் கண்ணுக்கருகில் வைத்தால் பெரிதாகத் தோன்றும். பெருமலையோ, தொலைவில் நின்று பார்த்தால் சிறு துகளாகத் தோன்றும். உன் சிக்கல்களும் வலிகளும் அடுத்தவர் குற்றங்களும் அப்படியே. (அகமொழி 1226)

AnnaKannan K

unread,
Feb 8, 2023, 1:58:41 PM2/8/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
குற்றம் இழைத்தவர் தண்டனை பெற்றால், நீதி வென்றது என்கிறார்கள். கொலையாளியைச் சிறையில் அடைப்பதால், கொலையுண்டவருக்கு எப்படி நீதி கிடைக்கும்? இது எப்படி நீதியின் வெற்றியாகும்? மனித நீதியை விட, இயற்கையின் நீதியே இறுதியில் வெல்கிறது. (அகமொழி 1227)

AnnaKannan K

unread,
Feb 8, 2023, 2:43:27 PM2/8/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
காதலுக்காகக் கெஞ்சாதே, அழாதே, சிறுமை கொள்ளாதே, நேரத்தைக் கொல்லாதே, தியாகம் செய்யாதே. நிமிர்ந்து நில், பொறுப்புடன் நட. கடமையைச் செய். உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல். அன்பும் செலுத்து. (அகமொழி 1228)

AnnaKannan K

unread,
Feb 8, 2023, 3:22:07 PM2/8/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
எந்த நிபந்தனையும் இல்லாத காதலே உயர்ந்த காதல். பதிலுக்குக் காதலிக்க வேண்டும் என்று கூட எதிர்பார்க்காதே. மனம் முழுதும் எல்லையில்லாத தூய அன்பை விரியச் செய். அக்கணமே நீ பரிபூரண நிலையை அடைவாய். (அகமொழி 1229)

AnnaKannan K

unread,
Feb 10, 2023, 1:01:19 PM2/10/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
இணையத்தில் அரசியல் வாதங்களுக்கும் விளம்பரங்களுக்கும் பரப்புரைகளுக்கும் மனிதர்களே தேவையில்லை. மனித அடையாளங்களுடன் எந்திரக் கணக்குகள் பிறக்கும். மனித வலைப்பின்னலில் ஊடுருவும். பரப்ப வேண்டிய கருத்துகளை விரும்பும், பகிரும், தயாராக வைத்திருக்கும் மறுமொழிகளை இடும். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கேள்விகள் எழுப்பும், பதில்களும் கொடுக்கும். பகுப்பாய்வு, ஆராய்ச்சி, ஒப்பீடு, வாக்கெடுப்பு என எல்லாமே செய்யும். தொண்டர் எண்ணிக்கையை விடத் தொழில்நுட்ப வல்லமையே அரசியலை வடிவமைக்கும், தீர்மானிக்கும், மேலாதிக்கம் செய்யும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். (அகமொழி 1230)

AnnaKannan K

unread,
Feb 10, 2023, 1:22:29 PM2/10/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
புல்லாங்குழலின் துளைகளை எண்ணாதே; இசையை ரசி. (அகமொழி 1231)

AnnaKannan K

unread,
Feb 10, 2023, 2:13:08 PM2/10/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
வாழ்க்கையே முன்னுரிமைகளால் முன்னகர்கிறது. சிலவற்றை முன்னுக்குத் தள்ளும், சில பின்னுக்குச் செல்லும். பின்னுக்குச் சென்றவை எல்லாம் கைவிடப்பட்டவை அல்ல. பழைய கனவு என எதையும் எண்ணாதே. எந்த நேரத்திலும் இந்த முன்னுரிமைகள் மாறலாம். எந்தப் பணியையும் கையில் எடுக்கலாம். எந்த இலக்கையும் எட்டலாம். நீ உன்னை நம்பினால் மட்டுமே இது சாத்தியம். (அகமொழி 1232)

AnnaKannan K

unread,
Feb 11, 2023, 3:12:37 AM2/11/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
உன்னிடத்தில் எனக்கென உதிக்கும் ஒரு சிரிப்பு, ஒரு தனித்த பார்வை, முகம் முழுதும் விரியும் ஒரு புதிய மலர்ச்சி, ஒரு பிரத்யேகக் கனிவு, ஒரு விசேஷத் தேடல்... இதை நான் என்ன பெயரிட்டு அழைக்க? (அகமொழி 1233)

AnnaKannan K

unread,
Feb 11, 2023, 4:55:24 AM2/11/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
இருவரும் கைகோத்துச் செல்வதற்கும் ஒருவர் கைக்குள் இன்னொருவர் தன்னை ஒப்படைப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஜோடிப் பறவைகள் கூட, தங்கள் இரு சிறகுகளால் தனித் தனியாகப் பறப்பதைப் பார். (அகமொழி 1234)

AnnaKannan K

unread,
Feb 11, 2023, 6:37:33 AM2/11/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
உன்னைத் திருத்துவதற்காக நானும் என்னைத் திருத்துவதற்காக நீயும் ஓயாமல் முயன்றோம். கடைசியில், காலம் நம்மைத் திருத்தியது. (அகமொழி 1235)

AnnaKannan K

unread,
Feb 11, 2023, 10:19:12 AM2/11/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
எளிதில் கிடைப்பதை விட, பாடுபட்டுத் துரத்திச் சென்று அடையும் ஒன்றில் மகிழ்ச்சி மிகுதி. காரணம் எளியது. இரண்டாவதில் பொருளுடன் கூடவே வெற்றி என்ற பெருமிதம் கிடைக்கிறது. (அகமொழி 1236)

AnnaKannan K

unread,
Feb 12, 2023, 1:50:11 PM2/12/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
கற்பனைக்கு எட்டாத ஒன்று நிகழும்போது, அது நிகழ்வின் பெருமையை விடக் கற்பனைத் திறனின் சிற்றெல்லைகளைக் காட்டுகிறது. (அகமொழி 1237)

AnnaKannan K

unread,
Feb 12, 2023, 2:14:55 PM2/12/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
பூமியின் சுற்றுச்சூழல் மாசு, வெப்பநிலை ஏற்றம், காடுகள் அழிப்பு, இயற்கைவளச் சுரண்டல், சுயநல ஆதிக்கம், எளிய உயிர்களுக்கு அநீதி இவை அனைத்துக்கும் மனிதனே காரணம். எனில், இன்னொரு கோள் கிடைத்தாலும் அங்கும் இவற்றையே செய்வான். எனவே இதனை மானுட வகைமாதிரி (Human Pattern) என வரையறுக்கலாம். (அகமொழி 1238)

AnnaKannan K

unread,
Feb 12, 2023, 2:59:15 PM2/12/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
குறிப்பிடத்தக்க பணி செய்தவர்களை அந்தத் துறைக்கே கடவுள் என அடிப்பொடிகள் கொண்டாடுவர். இது பணி செய்தவர் பெருமையைக் காட்டவில்லை. புகழ்பவரின் உணர்வெழுச்சியையே காட்டுகிறது. உணர்ச்சி மேலோங்கும்போது அங்கே அறிவு வேலை செய்வதில்லை. (அகமொழி 1239)

AnnaKannan K

unread,
Feb 13, 2023, 12:57:53 AM2/13/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
கவனித்தீர்களா? வலது கையால் செய்ய முடிந்ததை இடது கையால் செய்ய முடிவதில்லை. உணவுக்கு முன் செய்ய முடிந்ததை உணவுக்குப் பின் செய்ய முடிவதில்லை. கண்திறந்து செய்ய முடிந்ததைக் கண்மூடிச் செய்ய முடிவதில்லை. இளமையில் செய்ய முடிந்ததை முதுமையில் செய்ய முடிவதில்லை. தாத்தனால் செய்ய முடிந்ததைப் பேரனால் செய்ய முடிவதில்லை. இந்த உடலும் மனமும் உயிரும் இடம், காலம், தேவை ஆகியவற்றுடன் பொருந்தும்போது வெவ்வேறு சக்திநிலைகளைப் பெறுகின்றன. இவற்றில் எழுச்சியும் தளர்ச்சியும் உண்டு. ஆற்றல் கண்ணிகளும் உண்டு. இவற்றுக்கு இடையே ஒத்திசைவு நிகழும்போது, பேராற்றல் பிறக்கும். இதுவே சக்தி மேலாண்மை. (அகமொழி 1240)

AnnaKannan K

unread,
Feb 15, 2023, 5:41:06 AM2/15/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
மெட்ரோ தொடர்வண்டி நிலையங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருக்கின்றன. மால்கள் எனப்படும் பேரங்காடிகளில் ஒரே மாதிரி கடைகளே இருக்கின்றன. பொருட்காட்சிகள் யாவும் ஒன்றே போல் உள்ளன. வாழ்த்துச் செய்திகள் ஒத்தாற்போல் உள்ளன. இரங்கல் செய்திகளும் அப்படித்தான். காதல் செய்திகளிலும் புதுமையில்லை. அன்பே, உன் ஒற்றைச் சிரிப்பைத்தான் நம்பியிருக்கிறேன். (அகமொழி 1241)

AnnaKannan K

unread,
Feb 15, 2023, 12:32:39 PM2/15/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
ஊதுபத்தியை ஏற்றினேன். பல வடிவங்கள் எடுத்த புகை, இறுதியில் வடிவமில்லாத நிலைக்குச் சென்றது. அதன் வாசம் மட்டும் அறையை நிறைத்தது. இதுவே வாழ்வின் சுருக்கமான விளக்கம். (அகமொழி 1242)

AnnaKannan K

unread,
Feb 15, 2023, 1:08:08 PM2/15/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
என்னைக் கடித்த கொசுவை ஆச்சர்யத்துடன் கேட்டேன். "கொசு மருந்து அடித்தார்களே, நீ எங்கே இங்கே?" என்றேன். "அப்படியா" என்றது. (அகமொழி 1243)

AnnaKannan K

unread,
Feb 16, 2023, 9:34:17 AM2/16/23
to Vallamai, தமிழ் மன்றம், panbudan
காலுறை (சாக்ஸ்) அணிந்த பிறகு, அதன் மீது கொலுசு அணிகிற ரசனைக்காரியே! 'புதுமையை ஏற்பேன், அதற்காக மரபை விடமாட்டேன்' என்பதை உன் ஒவ்வோர் அடியிலும் சொல்கிறாய். (அகமொழி 1244)
Reply all
Reply to author
Forward
0 new messages