இளம்பெண் துறவிகள்

8 views
Skip to first unread message

செல்வன்

unread,
Aug 3, 2016, 6:08:36 PM8/3/16
to mintamil, vallamai, பண்புடன், tamilpayani, தமிழ் சிறகுகள்

கல்யாணம் ஆகாத 18 வயது இளம்பெண்கள் மொட்டை அடித்து துறவறம் பூணும் வழக்கம் இந்து மதத்தில் கிடையாது!

இப்பெண்களின் பிரம்மசர்யத்தாலும், மொட்டையாலும் சமூகத்துக்கு எப்பலனும் இல்லை. செய்யவேண்டிய நல்ல காரியங்களை கல்யாணம் செய்துகொண்டு, ஜீன்ஸ் போட்டுகொண்டு குடும்ப அமைபில் இருந்தபடியே செய்யலாம்.

திருமணம் செய்யாமல் துறவறம் பூணுதல் முட்டாள்தனமானது. புராணகால உதாரணங்களை காட்டி அதை நியாயபடுத்த வேண்டாம்.

இத்தவறை நியாயப்படுத்தி பதிவுகள் வருவதை  ஒரு தந்தையாக ஏற்கமுடியவில்லை.

G J Thamil Selvi

unread,
Aug 3, 2016, 10:06:19 PM8/3/16
to panb...@googlegroups.com

ஜி. விஜயபத்மா 

ஜி. விஜயபத்மாஜி. விஜயபத்மா

ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, இல்லை அவள் பெற்றோருக்கோ கூட உரிமையில்லை. அவர்கள் ஈஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்றால், அதை விமர்சிக்கும் நீங்களும் இந்த உலக நாற்றங்களினால் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். மனதிற்கு துளியும் பிடிக்காத ஒரு ஆணை பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டு அருவெருப்புடன் அந்த புணர்ச்சியை காமத்தை உள்வாங்கி வாழ்வது கூட ஒரு பெண்ணுக்கு கட்டாய வன்புணர்வதான் என்பது ஏன் உங்களில் ஒருவருக்கும் புரியமாட்டேன் என்கிறது. ஈஷா யோக மையம் சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்கள் நான் விகடன் நிருபராக பணி புரிந்த காலங்களில் இருந்தே ஜக்கிவாசுதேவை சந்திக்க வாய்ப்பிருந்தும் நான் சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்ட வகையில்,அவரை ஆழ்ந்து படித்து புரிந்து கொண்ட வகையில் அவர் ஜென் தத்துவங்களையே அடித்தளமாக கையாள்கிறார். உங்கள் வாழ்க்கையில் “குடும்பம்”நடத்தி தினம் தினம் செக்ஸ் வைத்துக் கொள்வதால் நீங்கள் அனைவரும் சுவர்க்கத்தில் வாழ்கிறீர்களா? அந்த வாழ்வு எனக்கு பிடிக்கவில்லை என்று துறவறம் போன பெண்களை மீட்டு வந்து “எவனுடைய காமத்துக்கோ”பலியாக்கிவிட்டால் உங்கள் சமூக வன்மம் தீர்ந்து விடுமா? அவரவர் விருப்பத்திற்கு அவரவரை வாழ விடாமல் சமூக வலைத்தளங்களில் வந்து”பதிவு”என்ற பெயரில்”நாட்டாமை”ஏன் செய்கிறீர்கள். ஏசு, புத்தன், விவேகானந்தர் என எல்லா ஆன்மீகவாதிகளும் அவரவர் வாழ்ந்த காலங்களில் பெரும்பாலான சமுகம் என்றழைக்கப்படும் “வக்கிரமனிதர்களால்” பழிக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டுமே வாழ்ந்தனர் என்றே வரலாறு சொல்கிறது.

இன்றும் அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஈஷா உங்களுக்கு பிடிக்கவில்லையா நீங்கள் போகாதீர்கள்.விருப்பபட்டு போகிறவர்களை ஏன் ஆளுமை செய்ய முயல்கிறீர்கள்? சரி அல்லது தவறு என்பதை எந்த அளவீடுகளில் அளக்கிறீர்கள்? ஈஷா ஒரு வியாபாரம் என்று சொல்கிறீர்கள்..சரி அப்படியானால் பெப்ஸியும் கோக்கும் உங்களை கொள்ளையடிக்கலாம் அது பரவாயில்லையா? சமகால மக்களின் சீக்குபிடித்த மனநிலை அருவெறுப்பாக உள்ளது. 30 பேர் சேர்ந்து சிறுமிகலைச்செல்வியை பாலியல் வன்புணர்வு செய்வதையும், இரண்டு தலித் பெண்களை உயர்சாதிப்பெண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி அடிப்பதும், அதைக்கேவலமான ஆண்நாய்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் விடுவதும் பார்க்க கொதிக்கிறது மனம். இதை எதிர்க்கவோ பதிவு செய்யவோ ஒரு கூட்டமும் புயலென புறப்படவில்லை. காசு படைத்த ஈஷாவும் ,பணக்கார கபாலி ரஜினியும், ரஞ்சித்துமே பாடு பொருள் இங்கே. இந்த கும்பலுக்குள் புழுவாய் ஊர்வதுவிட மொட்டை அடித்துக் கொண்டு துறவறம் போகலாம் தப்பில்லை.

ஜி. விஜயபத்மா, எழுத்தாளர்; இயக்குநர்.

https://thetimestamil.com/2016/08/03/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4/



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

G J Thamil Selvi

unread,
Aug 3, 2016, 10:13:02 PM8/3/16
to panb...@googlegroups.com

  • எது துறவறம்?

மனைவி, மக்கள், சுற்றத்தார் என நெருங்கிய உறவு வட்டத்தில் அன்பு காட்டி வாழ்ந்த ஒருவன் இல்லறத்தின் தேவைகளை நிறைவு செய்த நிலையில், தன்னை அடுத்த அயலார்க்கும், ஊரார்க்கும், பிறர்க்கும், பிற பிற உயிர்களுக்கும் நல்லன ஆற்றும் வகையில் அருள் உணர்ச்சி பெற வேண்டும். இதுவே துறவு. துறவு என்பது பற்று நீக்கி வாழ்வதன்று; பற்றின் விரிவு. துறவு நிலை அடையும் ஒருவன் தன் வீட்டிலுள்ளவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருந்த நிலை மாறி எல்லா உயிர்க்கும் அன்பு செய்வோராக மாறுகிறான். இதுவே துறவறம் எனப்பட்டது. அருள் என்பது அன்பின் குழந்தை என்கிறார் திருவள்ளுவர். எனவே திருவள்ளுவர் கூறும் துறவறம் நாட்டில் ஒவ்வொருவர்க்கும் உரியது என அறியலாம்.

http://www.tamilvu.org/courses/degree/c031/c0312/html/c03123l2.htm


செல்வன்

unread,
Aug 3, 2016, 10:50:52 PM8/3/16
to பண்புடன்

2016-08-03 21:06 GMT-05:00 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
ஈஷா ஒரு வியாபாரம் என்று சொல்கிறீர்கள்..சரி அப்படியானால் பெப்ஸியும் கோக்கும் உங்களை கொள்ளையடிக்கலாம் அது பரவாயில்லையா?

நல்ல சப்பைகட்டு...பெப்ஸி,கோக்கை காரணம் காட்டி கார்ப்பரேட் சாமியாரை நியாயப்டுத்துகிறார். 



--

G J Thamil Selvi

unread,
Aug 4, 2016, 12:00:58 AM8/4/16
to panb...@googlegroups.com
2016-08-03 21:06 GMT-05:00 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
ஈஷா ஒரு வியாபாரம் என்று சொல்கிறீர்கள்..சரி அப்படியானால் பெப்ஸியும் கோக்கும் உங்களை கொள்ளையடிக்கலாம் அது பரவாயில்லையா?

நல்ல சப்பைகட்டு...பெப்ஸி,கோக்கை காரணம் காட்டி கார்ப்பரேட் சாமியாரை நியாயப்டுத்துகிறார். 

இருக்கலாம் தான். அதன் பின் வரிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும்,  அதற்காக யாரும் பொங்கி எழவில்லை என்றும் பொங்கியிருக்கிறாரே அதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அல்லவா?

//இப்பெண்களின் பிரம்மசர்யத்தாலும், மொட்டையாலும் சமூகத்துக்கு எப்பலனும் இல்லை. செய்யவேண்டிய நல்ல காரியங்களை கல்யாணம் செய்துகொண்டு, ஜீன்ஸ் போட்டுகொண்டு குடும்ப அமைபில் இருந்தபடியே செய்யலாம்.

திருமணம் செய்யாமல் துறவறம் பூணுதல் முட்டாள்தனமானது. புராணகால உதாரணங்களை காட்டி அதை நியாயபடுத்த வேண்டாம்.//

தங்களின் கருத்தை நானும் ஏற்கிறேன். 18 வயது மனமுதிர்ச்சி அற்ற பருவம் கொண்டது. சரி என்று தோன்றி செய்வதெல்லாம் சரியாக அமைந்துவிடுவதில்லை. இதனை பெண்கள் மட்டும் அல்ல இப்பருவத்தில் இருக்கும் ஆண்களும்  ஏற்பதில்லை.

பெண்களுக்கு மொட்டை அடித்தல் என்பதை பெண்களை மதிக்கும் சமுதாயம் நிச்சயமாக செய்யாது என்று நம்புகிறேன்.





--

R.VENUGOPALAN

unread,
Aug 4, 2016, 1:04:42 AM8/4/16
to பண்புடன்
2016-08-04 7:36 GMT+05:30 G J Thamil Selvi <thamil...@gmail.com>:

அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, இல்லை அவள் பெற்றோருக்கோ கூட உரிமையில்லை.

அம்மாடி! இனிமேல் இந்தப் பெண்ணியவாதியாவது 'பெற்றோர்கள் ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டும்'னு சொல்லும்போது, இதையே சொல்லுங்க! 
 

மனதிற்கு துளியும் பிடிக்காத ஒரு ஆணை பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டு அருவெருப்புடன் அந்த புணர்ச்சியை காமத்தை உள்வாங்கி வாழ்வது கூட ஒரு பெண்ணுக்கு கட்டாய வன்புணர்வதான் என்பது ஏன் உங்களில் ஒருவருக்கும் புரியமாட்டேன் என்கிறது.

அம்மணிக்கு செக்ஸ், வன்புணர்ச்சி மாதிரி வார்த்தைகள்னா வெல்லக்கட்டி போலிருக்குது. கல்யாணம் என்பது உடலுறவு மட்டும்தான் என்று கட்டமைக்கிற பிற்போக்குவாதிகளுக்கும், தொட்டதற்கெல்லாம் உடலுறவையும் வன்புணர்ச்சியையும் ஊறுகாய்போலத் தொட்டுக்க கொள்ளுகிற இத்தகைய முற்போக்குவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் தெரியலை. 
 

உங்கள் வாழ்க்கையில் “குடும்பம்”நடத்தி தினம் தினம் செக்ஸ் வைத்துக் கொள்வதால் நீங்கள் அனைவரும் சுவர்க்கத்தில் வாழ்கிறீர்களா? அந்த வாழ்வு எனக்கு பிடிக்கவில்லை என்று துறவறம் போன பெண்களை மீட்டு வந்து “எவனுடைய காமத்துக்கோ”பலியாக்கிவிட்டால் உங்கள் சமூக வன்மம் தீர்ந்து விடுமா?

இதைத்தான் சொல்ல வந்தேன். அம்மணிக்கு திருமண வாழ்க்கைன்னா, சும்மா பொழுதண்ணிக்கும் செக்ஸ் வைச்சுக்கிறது தான். வேற எதை பத்தியும் யோசிக்கிற திராணி அம்மணிக்கு இல்லை. 
 

ஈஷா ஒரு வியாபாரம் என்று சொல்கிறீர்கள்..சரி அப்படியானால் பெப்ஸியும் கோக்கும் உங்களை கொள்ளையடிக்கலாம் அது பரவாயில்லையா?

பார்றா! சினிமா டிக்கெட்டை பிளாக்குல வாங்குறதுக்கு கோவில் அர்ச்சனை டிக்கெட்டை பிளாக்குல வாங்குறதுக்கு வித்தியாசம் இல்லையா? பேஷ்!
 

சமகால மக்களின் சீக்குபிடித்த மனநிலை அருவெறுப்பாக உள்ளது. 30 பேர் சேர்ந்து சிறுமிகலைச்செல்வியை பாலியல் வன்புணர்வு செய்வதையும், இரண்டு தலித் பெண்களை உயர்சாதிப்பெண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி அடிப்பதும், அதைக்கேவலமான ஆண்நாய்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் விடுவதும் பார்க்க கொதிக்கிறது மனம்.

அம்மணிக்கு மத்தவங்க மேல கோபமா, தன கையாலாகாத்தனத்து மேல கோபமா தெரியலை. சிக்குப்பிடிச்ச தலையை பியூட்டி பார்லர் போய் வாஷ் பண்ணிக்கிற அக்கறை முற்போக்குவாதிகளுக்கு, சிக்குப் பிடிச்ச சமூகத்தைத் திருத்தவும் வரணும். சும்மா, பெரிய சுயம்பு மாதிரி பத்திரிகையிலும் இணையத்துலயும் மத்தவங்க மேல காறித்துப்புறதோட நிறுத்தப்படாது. 
 

காசு படைத்த ஈஷாவும் ,பணக்கார கபாலி ரஜினியும், ரஞ்சித்துமே பாடு பொருள் இங்கே. இந்த கும்பலுக்குள் புழுவாய் ஊர்வதுவிட மொட்டை அடித்துக் கொண்டு துறவறம் போகலாம் தப்பில்லை.

அதான பார்த்தான். இன்னும் கபாலி வரலியேன்னு. 
இந்தப் பொம்பளை சரியான பேத்தல் கேசு. திருமணம், சமூகம், எதைப்பத்தியும் முழுசாத் தெரிஞ்சுக்காம சும்மா பிரிலா வுடுற ரெடிமேட் புத்திஜீவி. அம்புட்டுத்தான். 

G J Thamil Selvi

unread,
Aug 4, 2016, 1:17:48 AM8/4/16
to panb...@googlegroups.com
//அதான பார்த்தான். இன்னும் கபாலி வரலியேன்னு. 
இந்தப் பொம்பளை சரியான பேத்தல் கேசு. திருமணம், சமூகம், எதைப்பத்தியும் முழுசாத் தெரிஞ்சுக்காம சும்மா பிரிலா வுடுற ரெடிமேட் புத்திஜீவி. அம்புட்டுத்தான். //

ஹா ஹா ஹா... சூப்பர்  அண்ணாச்சி!

G J Thamil Selvi

unread,
Aug 4, 2016, 1:30:32 AM8/4/16
to panb...@googlegroups.com
ஆனாலும் அண்ணாச்சி! நானும் கபாலி ரசிகைங்கறதால டக்குன்னு சூப்பர் சொல்லிட்டேன்... நீங்க பொதுவெளியில அதுவும் ஒரு பெண்ணைப்பற்றி, பொம்பள, ரெடிமேட் புத்திஜீவி... பிரிலா வுடுற... இப்படியெல்லாம் எழுதப்படாது...

நாம பெண்களை மதிக்கிற சமுதாயத்தில் வாழ்கிறோம். அது பெண் பேயாக இருந்தாலும் கூட


அவங்க நாய் பற்றி அதிகமா  அதிகமா எழுதிட்டாங்க...( நாய் கூட பழகலே போல ஹிஸ்டிரியா பேஷண்ட்டுன்னு நெனைக்குறேன். மன்னிச்சு விட்டுடுவோம்..

செல்வன்

unread,
Aug 4, 2016, 1:43:48 AM8/4/16
to பண்புடன்

2016-08-03 23:00 GMT-05:00 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
இருக்கலாம் தான். அதன் பின் வரிகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியும்,  அதற்காக யாரும் பொங்கி எழவில்லை என்றும் பொங்கியிருக்கிறாரே அதையும் கருத்தில் கொள்ளவேண்டும். அல்லவா?


கார்ப்பரேட் சாமியாருக்கு வக்காலத்து வாங்கிவிட்டு பின்னால் வேறு என்ன சொன்னால் என்ன?அதை எதுக்கு கணக்கில் கொள்ளவேண்டும்?


--

R.VENUGOPALAN

unread,
Aug 4, 2016, 2:01:52 AM8/4/16
to பண்புடன்
2016-08-04 11:00 GMT+05:30 G J Thamil Selvi <thamil...@gmail.com>:
ஆனாலும் அண்ணாச்சி! நானும் கபாலி ரசிகைங்கறதால டக்குன்னு சூப்பர் சொல்லிட்டேன்... நீங்க பொதுவெளியில அதுவும் ஒரு பெண்ணைப்பற்றி, பொம்பள, ரெடிமேட் புத்திஜீவி... பிரிலா வுடுற... இப்படியெல்லாம் எழுதப்படாது...

நாம பெண்களை மதிக்கிற சமுதாயத்தில் வாழ்கிறோம். அது பெண் பேயாக இருந்தாலும் கூட

அதெல்லாம் சரிதான். இதே மாதிரி ஒரு பதிவை ஒரு ஆம்பிளை எழுதியிருந்த, அவரையும் 'அந்த ஆளு, ஆசாமி' அப்படி இப்படின்னுதான் எழுதியிருப்பேன். பொதுவெளியில் சமூகத்தைத் திட்டிப்புட்டு கடமை முடிஞ்சுதுன்னு நினைக்கிற நபர் ஆம்பளையா இருந்தாலும் சரி பொம்பளையா இருந்தாலும் சரி, மரியாதைக்கு தகுந்தவர் அல்ல என்பது அடியேன் கருத்து. 

கபாலி ரசிகையா? சபாஷ்! 

G J Thamil Selvi

unread,
Aug 4, 2016, 2:05:46 AM8/4/16
to panb...@googlegroups.com
//பொதுவெளியில் சமூகத்தைத் திட்டிப்புட்டு கடமை முடிஞ்சுதுன்னு நினைக்கிற நபர் ஆம்பளையா இருந்தாலும் சரி பொம்பளையா இருந்தாலும் சரி, மரியாதைக்கு தகுந்தவர் அல்ல என்பது அடியேன் கருத்து. //

தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.

G J Thamil Selvi

unread,
Aug 4, 2016, 2:13:45 AM8/4/16
to panb...@googlegroups.com
//ஈஷா உங்களுக்கு பிடிக்கவில்லையா நீங்கள் போகாதீர்கள்.விருப்பபட்டு போகிறவர்களை ஏன் ஆளுமை செய்ய முயல்கிறீர்கள்? சரி அல்லது தவறு என்பதை எந்த அளவீடுகளில் அளக்கிறீர்கள்? ஈஷா ஒரு வியாபாரம் என்று சொல்கிறீர்கள்..சரி அப்படியானால் பெப்ஸியும் கோக்கும் உங்களை கொள்ளையடிக்கலாம் அது பரவாயில்லையா? //

ஈஷா யோக மையம் சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்கள் நான் விகடன் நிருபராக பணி புரிந்த காலங்களில் இருந்தே ஜக்கிவாசுதேவை சந்திக்க வாய்ப்பிருந்தும் நான் சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்ட வகையில்,அவரை ஆழ்ந்து படித்து புரிந்து கொண்ட வகையில் அவர் ஜென் தத்துவங்களையே அடித்தளமாக கையாள்கிறார்.


அவர் கார்ப்பரேட் சாமியாருக்கு வக்காலத்து வாங்கியதாக தெரியவில்லையே... எதைவைத்து அவ்வாறு கூறுகிறீர்கள். மேற்அகண்வட வரிகளில் நான் அவரின் கருத்தை பகிர்கிறார் என்றல்லாவா எண்ணினேன்.இக்கட்டுரை பெண்களை மையப்படுத்தி, பெண் அவலங்களை முன்னிலைப்படுத்தி எழுதியதாகத்தான் எனக்கு தோன்றியது.


--

தியாகு

unread,
Aug 5, 2016, 3:16:07 AM8/5/16
to பண்புடன்
//அவர் கார்ப்பரேட் சாமியாருக்கு வக்காலத்து வாங்கியதாக தெரியவில்லையே... எதைவைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்.//

செல்வன் கூட  விவாதம் செய்வதற்கு அவரோட திசை திருப்பல்களை புரிஞ்சிக்கனும் :) அனுபவம்


--
தியாகு

-

G J Thamil Selvi

unread,
Aug 5, 2016, 10:51:31 AM8/5/16
to panb...@googlegroups.com
விவாதமா? 
Reply all
Reply to author
Forward
0 new messages