Re: ஆயிரம் கண்கள்

4 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 14, 2016, 4:35:20 AM7/14/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, panb...@googlegroups.com, housto...@googlegroups.com


On Wednesday, July 13, 2016 at 10:08:33 AM UTC-7, Ram wrote:
நண்பர் கணேசன் ஒரு ஆங்கிலக்கவிதையை அனுப்பித் தமிழாக்கம் கேட்டிருந்தார். அதன் முதல் வரி கண்ணதாசன் “இரவுக்கு ஆயிரம் கண்கள் என்று மொழியாக்கம் செய்திருக்கிறார். படப்பாட்டு வந்திருக்கிறது.  என் மொழியாக்கம் இதோ:


The Night Has a Thousand Eyes
 
Francis William Bourdillon (b. 1852)

THE NIGHT has a thousand eyes,
  And the day but one;
Yet the light of the bright world dies
  With the dying sun.
 
The mind has a thousand eyes,        5
  And the heart but one;
Yet the light of a whole life dies
  When love is done.
 

ஆயிரம் கண்கள் இரவுக் குண்டு
    ஆனால் பகலுக்(கு) ஒன்று
ஓயும் கதிரோன் சாயப் புவியின்
    ஒளியும் சாகும் அன்று

ஆயிரம் கண்கள் மனத்திற் குண்டு
   இதயக் கண்ணோ ஒன்று
மாயும் காதல் போகும் போகும்
   வாழ்க்கை ஒளியைக் கொன்று

இலந்தை

 

அழகாக வடித்துள்ளீர்கள். 

நனிநன்றி,
நா. கணேசன்

குலமகள் ராதை படத்தில் வரும் கண்ணதாசன் பாடல்:
 
இரண்டு ஸ்டான்சாவிலும் முதல்வரிகளை மாத்திரம் கவிஞர் கண்ணதாசன் மொழிபெயர்த்துள்ளார்:

இரவுக்கு ஆயிரம் கண்கள் 
   பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் 
   உறவுக்கு ஒன்றே ஒன்று

முழுப்பாடலும் தமிழில் தந்துள்ளார் இலந்தை.
Reply all
Reply to author
Forward
0 new messages