அப்பா தினம்

5 views
Skip to first unread message

தியாகு

unread,
Jun 6, 2016, 2:58:30 AM6/6/16
to பண்புடன்
அப்பாக்கள் தினமோ அப்பாவின் தினமோ தெரியாது அப்பாவை பற்றி ஞாபகபடுத்தி விடுகிறார்கள் . ஒரு செய்தி படிச்சேன் அப்பாவின் சம்பாத்தியத்தில் செலவு செய்ய மகன் யோசிப்பதில்லை ஆனால் மகனின் சம்பாத்தியத்தில் செலவு செய்ய அப்பாக்கள் நிச்சயம் யோசிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை .

தன் மகன் கஸ்டப்பட்டு அனுப்பும் பணத்தை தான் ஊதாரியாக செலவு செய்ய கூடாது என்று தினமும் ஒரு நோட்டில் எழுதி வைப்பதாகவும் நான் வந்தால் காட்ட வேண்டும் என்றும் சொல்வதாகவும் அம்மா சொன்னார் எனக்கு அப்போது புரியவில்லை ஏன் எழுதனும் என்று .

எல்லாருக்கும் அம்மாவைத்தான் நிரம்ப பிடிக்கும் எனக்கு மாறுதலாக அப்பாவை நிரம்ப பிடிக்கும்  . எந்த விசயத்திலும் அப்பாவை நான் விட்டு கொடுப்பதில்லை என்பது அம்மாவின் குறைப்பாடு ஆனால் என்னால் விட்டு கொடுக்க இயலாது என்பதை நான் அடிக்கடி அனைவரிடமும் சொல்லி விடுவேன் ஏனெனில் அவர் என்னை எந்த இடத்திலும் விட்டு கொடுத்ததில்லை.

”நேர்மையா இருக்கனும்டா ”என்பது அவர் சொல்லி கொடுத்த பாடம் ஆனால் நேர்மையா வாழ்ந்ததுதான் அவர் எனக்கு கொடுத்த பாடமே .உழைப்பு நேர்மை இதுக்கெல்லாம் உதாரணம் அவர்தான் எனக்கு .

மற்றபடி வாழ்ந்து மறைந்த தலைவர்கள் புத்தகத்தை படிச்சி அறிந்து கொள்வதை விட அவர் வாய்மொழியாக அனுபவத்தை சொன்னது நிறைய மண்டையில் ஏத்திவிட்டேன் என சொல்லலாம் .

அம்மாவுக்கும் அப்பாவும் சண்டை வந்தாலோ அல்லது அப்பாவுக்கும் சகோதரனுக்கும் சண்டை வந்தாலோ முதல் ஆளா நான் அப்பாவுக்கு சப்போர்ட்டா போய் நிப்பேன் என்பதை அறிவார்கள் ஏனெனில் அவருடைய தரப்பில் நேர்மை யற்ற அனுகுமுறை சிறிதும் இருக்காது என்பதே.

அதுமட்டுமில்லாம உழைப்பு  அது அவரோட உடன் பிறந்ததுன்னு சொல்லலாம்  உழைக்காமல் ஒரு நாள் உணவை எடுப்பதை பற்றி ரொம்ப கவலை படும் மனிதன் அவராகத்தான் இருப்பார் .

மற்றபடி அவரது தொழிற்சங்க உழைப்பு  மறுக்க முடியாத பதிவுகளை அங்கிருந்த தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு மரியாதையை பெற்று தந்தது .

சின்ன வயதில் படிக்காமல் விட்டதால் ஏற்பட்ட பின்னடைவை அடிக்கடி சொல்லி படிக்க சொல்வார்

பத்தாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாக தேர்ந்தெடுக்க பட்டதற்கு மகிழ்ந்தார் ஆனால் நீ ஏன் மாநிலத்தில் முதல் மாணவனாக வரலை என்றே சொன்னார் .

தொடர் முயற்சி அயராத தன்மையை அப்பாவிடம் இருந்தே கற்று கொண்டேன்

எதை கண்டும் அஞ்சாத ஒரு மனிதனாக எனது ஹீரோவாக இருப்பவர் எனது அப்பா .

ஹேட்ஸ் ஆப்  அப்பா உன்னை போன்ற அப்பா கிடைத்ததற்கு


--
தியாகு

-
Reply all
Reply to author
Forward
0 new messages