விந்தை உலகம்

19 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jul 2, 2015, 4:54:00 PM7/2/15
to K Selvan
சிவனடியாருக்கு வந்த ஹெல்மெட் சோதனை.. தீர்க்க முடியாமல் தவித்த போலீஸ்.. காரணம் கொண்டை

கோவை: கோவையைச் சேர்ந்த சிவனடியார் ஒருவர், ஹெல்மெட்டைக் கையில் வைத்தும் கூட அதைப் போடாமல் போனதால் அவரைப் போலீஸார் பிடித்தனர். ஆனால் அந்த சிவனடியாரோ, முடிந்தால் நீங்களே ஹெல்மெட்டைப் போட்டு விடுங்க பார்ப்போம் என்று சவால் விட, ஹெல்மட்டை அவரது தலையில் மாட்ட முடியாமல் தவித்துப் போய் விட்டார்கள் போலீஸார்.. காரணம், சிவனடியாரின் தலையின் பின்னால் இருந்த பெரிய சைஸ் கொண்டை! ADVERTISEMENT என்னடா இது சோதனை என்று நொந்து போன எப்படி இவர் மீது நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் விழித்து நிற்கிறார்கள். இந்த சிவனடியாரும் அசராமல் கையில் ஹெல்மெட்டை ஏந்தியபடி கோவையை வலம் வருகிறார்.
கோவையைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சிவனடியார். இவர் பெரிய சைஸ் கொண்டை வளர்த்துள்ளார். இதனால் இவரால் ஹெல்மெட் அணிய முடியவில்லை. இருப்பினும் சொந்தமாக ஹெல்மெட் வைத்துள்ள அவர் வாகனத்தில் அதை மாட்டிக் கொண்டு வலம் வருகிறார். இவரை தடுத்து நிறுத்தும் போலீஸாரிடம், சற்றும் பதட்டப்படாமல் ஹெல்மெட்டைத் தூக்கி கையில் கொடுத்து, நானா போட மாட்டேன் என்று சொல்கிறேன். முடிந்தால் நீங்களே மாட்டி விடுங்க என்று கூறுகிறார். அவர்களும் டிரை செய்து முடியாமல் தவித்து வருகின்றனர். காரணம், செந்தில்குமார் தனது தலையில் பின்னால் போட்டுள்ள பெரிய சைஸ் கொண்டைதான்.




இதுகுறித்து அவர் கூறுகையில், சிவனடியார்கள் முடியை அவிழ்க்க மாட்டோம். இது சிவன் வழிபாடு தொடர்புடையது. ஜடாமுடியுடன் கூடியவன் சிவன். அவனை வழிபடுவோரும் ஜடா முடி வளர்த்துத்தான் வழிபடுவோம். எனவே என்னால் ஹெல்மெட் போட முடியவில்லை. நான் மறுக்கவில்லை. ஆனால் எனது தலையில் ஹெல்மெட்டை பொருத்த முடியவில்லை. என்னைப் போன்றவர்களுக்கு ஹெல்மெட் அணிவதிலிருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோருகிறேன் என்றார் செந்தில்குமார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/coimbatore-sivanadiyar-challanges-police-helmet-issue-230145.html

--

Srimoorthy.S

unread,
Jul 3, 2015, 4:57:22 AM7/3/15
to பண்புடன்

கனடாவில் சிங் ஒருவருக்கும் இதே பிரச்சினை உண்டானது. சிங்குகள் பெரிய முண்டாசை தலையில் கட்டி இருப்பது கலாசாரத்துடன் தொடர்புடையதென்பதால் ஹெல்மட் போட முடியவில்லை.

ஒரு வழக்கின் அடிப்படையில் அந்த சிங் தலைப்பாகை விழாமல் 100 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி ஹெல்மட் கட்டாய த் தி லிருந்து விலக்கு பெற்றார்

செல்வன்

unread,
Jul 9, 2015, 3:38:04 PM7/9/15
to K Selvan
அரிய புகைப்படம்.....யாருன்னு தெரியுதா?



Omprakash

unread,
Jul 10, 2015, 12:04:30 AM7/10/15
to panb...@googlegroups.com
காங்கிரஸில் இருக்கும் rationalist என்று பேர் எடுத்த நேரு “மாமா”

தியாகு

unread,
Jul 10, 2015, 12:48:04 AM7/10/15
to பண்புடன்
ஐ நேரு மாமா

அதோ பாரு
காரு குள்ள யாரு
எங்க மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு
எழுதி படிக்க சொன்னாரு
எழுதி படிக்க வரலைன்னா
அரசியல் பண்ண சொன்னாரு
அரசியல் பண்ண வரலைன்னா
அடிக்க  ஓடி வருவாரு :)

2015-07-10 9:34 GMT+05:30 Omprakash <vi.omp...@gmail.com>:
காங்கிரஸில் இருக்கும் rationalist என்று பேர் எடுத்த நேரு “மாமா”

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

செல்வன்

unread,
Jul 19, 2015, 12:59:18 PM7/19/15
to K Selvan

ஏசி காரில் போகும் நாய்க்கு வாய்க்கப்பெற்ற வாழ்வுக்கு சற்றும் குறைச்சலில்லாதது இந்த தட்டுவண்டியில் செல்லும் நாய்க்கு வாய்க்கப்பெற்ற அன்பு நிறைந்த வாழ்வு. என்ன ஒரு அன்பான முத்தம் அதை ஏற்றுக்கொள்ளும் முகத்தில் எத்தனை அழகான ரியாக்‌ஷன்.

இருக்குதோ இல்லையோ அன்பாய் வாழ்ந்து மடிவோம். இந்த படத்த பார்த்ததில் இருந்து மனசு ஜாலியா இருக்கு....

# ஹாப்பி சன்டே




செல்வன்

unread,
Jul 22, 2015, 1:07:47 AM7/22/15
to K Selvan

இன்று சிகாகோ சென்றேன். மதியம் 3 மணியளவில் சிகாகோ சென்று சேர்ந்தேன். சற்று ஓய்வெடுத்துவிட்டு மாலை அருகே உள்ள பார்ட்லெட் நகரில் உள்ள ஸ்வாமிநாராயண் ஆலயம் சென்றோம்.

ஸ்வாமிநாராயண் சம்பிரதாயம் ஒரு குஜராத் வைணவ சம்பிரதாயமாகும். இந்தியாவின் பணக்கார மாநிலத்தின் கோயில் என்பதை நிருபிப்பது போல கோயில் பளிங்கில் பள,பள என மின்னியது. சிகாகோவில் உள்ள வேறு எந்த கோயிலும் பக்கத்தில் கூட வரமுடியாது என சொல்லுவது போல அத்தனை செலவு செய்து கோயிலை கட்டியிருந்தார்கள். ஸ்வாமிநாராயண் விஷிச்டாத்வைத சம்பிரதாயத்தை பின்பற்றுகிறது என உள்ளே எழுதியிருந்தார்கள். இது 1780 முதல் 1830 வரை வாழ்ந்த கன்ஷியாம் பாண்டே எனும் உபி பிராமணர் உருவாக்கிய அமைப்பு. நீலகண்ட வர்ணி எனும் பெயரில் 12 வயது முதல் இந்தியா முழுக்க அலைந்து பின் குஜராத் சென்று இவ்வமைப்பை நிறுவினாராம்.

கோயிலில் கிருஷ்ணர் சிலை, அருகே இவரது சிலை. இரு சிலைகளுக்கும் ஒரு இஞ்சு கூட வித்தியாசம் இல்லை எனும் அளவு இரட்டையர் போல தோற்றம். "ஏன் இப்படி?" என கேட்டதற்கு "கடவுள், அவரது தூய பக்தர்" இருவரையும் அருகருகே வைத்து வழிபடுவது மரபு" என சொன்னார்கள். ஏனோ மனம் அதை ஏற்கவில்லை. திருமால் அருகே தாயாரை மட்டுமே ஏற்கமுடியும். அத்தனை பக்தி நிரம்பிய ஆஞ்சநேயர் கூட இராமனின் காலடியில் தானே அமர்ந்திருக்கிறார்? அருகே சரிசமமாக நிற்கவில்லையே?

ஆனால் மற்றவர்கள் யாரும் அதைகண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்த அமைப்புக்கு குஜராத்தில் 2 கோடி பக்தர்கள் இருப்பதாக சொன்னார்கள். கோயில் அலங்காரம், வேலைப்பாட்டை பார்த்து ரசிக்கவே ஒரு நாள் போதாது. கோயிலில் டோக்ளா, சமோசா, அரிசி, இட்டிலி, சாம்பார், டீ எல்லாம் மலிவான விலையில் தான் விற்ரார்கள். எல்லாமே ஐந்து டால்ர். லஸி 2 டாலர். அமர்சித்ர கதா எல்லாம் ஒன்று முதல் இரண்டரை டாலருக்கு கிடைத்தது.

ஆக எப்படியும் பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் இக்கோயிலும் சேர்ந்துவிட்டது. கோயிலின் தத்துவம் பிடிக்குதோ இல்லையோ, இன்னொரு கலாசாரத்தையும், சம்பிரதாயத்தையும் அறியும் வாய்ப்பு கிட்டியதில் மகிழ்ச்சி.









செல்வன்

unread,
Aug 9, 2015, 2:45:09 PM8/9/15
to K Selvan
மைக்கேல் பிரவுன் சுட்டுகொல்லபட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தும் கருப்பினத்தவர்.




இந்திய முறைப்படி கைகூப்பி வணங்குவது வியப்பை அளிக்கிறது. அமெரிக்காவில், ஐரோப்பாவில் இப்படிப்பட்ட வணக்கமுறை இல்லை. கிறிஸ்துவ வணக்கமுறையும் இதுவல்ல...இந்திய பாரம்பரியமே தெரியாத ஒருவருக்கு தன்னியல்பாக இவ்வணக்க முறை மனதில் எப்படி தோன்றியிருக்கும் என யோசிக்கையில் வியப்பாக உள்ளது.


செல்வன்

unread,
Aug 15, 2015, 5:29:59 PM8/15/15
to K Selvan

ஐதராபாத்தில் பிராமணர்களுக்கு என்று தனியாக "வேத காயத்ரி அக்கிரஹாரம்" என ஒரு காலனி அமைக்கபடுவதாகவும் அதில் திருமண மண்டபம், பிராமின் ஐ.ஏ.எஸ் அகாடமி, வேதபாடசாலை, ஆயுர்வேத சாலை, கோசாலை எல்லாம் அமைக்கபடும் எனவும் அறிவிப்பு வெளியானது

ஆரம்பித்தவர் பிரபாகர் சர்மா என்ற பிராமணர். ஆந்திராவில் பிறந்து இன்னும் ஜாதிப்பற்றுடன் அமெரிக்காவில் குடியேறிய வசதியான தெலுங்கு பிராமணர்களாக பார்த்து திட்டத்துக்கு ஆள்சேர்த்தார். ஒரு கட்டத்தில் வெறும் ஆறே லட்சத்தில் 200 சதுர அடி நிலம் கொடுப்பதாகவும், அதை 100 இன்ஸ்டால்மெண்டில் கட்டி முடிக்கலாம் எனவும் இன்ச்டால்மெண்ட் திட்டம் அறிவிக்க உள்ளூரில் உள்ள மிடில்க்ளாஸ் பிராமண சாப்ட்வேர் எஞ்சினியர்கள், அக்கவுண்டண்டுகள் எல்லாம் விழுந்தடித்துக்கொண்டு நிலத்தை வாங்கினார்கள்.

கடைசியில் பார்த்தால் ஒரே பிளாட் நிலத்தை பத்து பதினைந்து பேருக்கு காட்டி, அத்தனை பேருக்கும் விற்றுவிட்டு பிரபாகர் சர்மா ஆட்டையை போட்டது தெரியவந்திருந்தது. ஆயிரம் பேரிடம் இப்படி 25 கோடி அமுக்கபட்டிருந்தது.

போலிஸில் புகார் வரவும் பிரபாகர் சர்மாவை கைது செய்தார்கள். பெயிலில் அடுத்த நாளே வெளியே வந்துவிட்ட அவர் தலைமறைவாகிவிட்டார். போலிசார் அவரை வலைவீசி தேடிவருகிறார்கள்

செல்வன்

unread,
Aug 15, 2015, 6:33:37 PM8/15/15
to K Selvan


நான் பார்த்தவரை வட அமெரிக்காவில் உள்ள இந்துகோயில்கள் பலவும் ஒன்று தமிழர் அல்லது தெலுங்கரால் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இதனால் இருநாட்டுக்கும் எல்லைச்சாமியான திருப்பதி பாலாஜி மட்டுமே இவற்றின் ஆஸ்தான தெய்வமாக இருக்கிறார். மெஜாரிட்டி கணக்கு பார்த்தால் அமெரிக்காவிலுள்ள் அறுதிப்பெருமான்மைக்கும் மேலான சதவிகித இந்துகோயில்கள் தென்னாட்டின் பங்களிப்பே என்பது என் கணிப்பு

அடுத்ததாக குஜராத்திகள் ஸ்வாமிநாராயண மந்திர் என சிலவற்றை கட்டியுள்ளார்கள். ஆனால் அவற்றின் எண்ணிக்கை வெகு குறைவே. திராவிடர்கள் போல கன்சர்வேடிவாகவும் வட இந்தியர்கள் இருப்பதாக தெரியவில்லை. பூஜை, விரதம் எல்லாம் நம் அளவுக்கு தீவிரமாக அவர்கள் அனுஷ்டிப்பதுமில்லை. ஐய்யப்பமாலை அணிந்து அமெரிக்காவில் இருந்து சபரிமலை போய்வரும் பல நண்பர்களை அறிவேன். நான் பார்த்தவரை இந்துமதம் மற்றும் பண்பாடு எல்லாமே அமெரிக்காவில் செழிக்ககாரணம் ஆந்திராவும், தமிழ்நாடுமே என தைரியமாக சொல்லலாம்.

உங்க ஊரில் எப்படி?





--

செல்வன்

unread,
Aug 15, 2015, 6:35:46 PM8/15/15
to K Selvan


Asif Meeran

unread,
Aug 16, 2015, 5:19:08 AM8/16/15
to பண்புடன்
இதுக்கு ஒருத்தரு பதில் போட்டிருந்தாரே?
இந்திய அன்னைக்கு பர்தாபோடுற வேலையெல்லாம் வேண்டாம்னு :-)))

காமெடியில் நம்மாளுங்க கில்லாடிப்பா

2015-08-16 2:35 GMT+04:00 செல்வன் <hol...@gmail.com>:


செல்வன்

unread,
Aug 21, 2015, 2:26:03 AM8/21/15
to K Selvan
மேக்கப்பால் வந்த வினை!



சீனாவில் இன்னும் உல்டா

நல்லா இல்லாமல் இருந்த முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக்கி கல்யாணமும் செய்துகொண்டார் ஒரு பெண்

சர்ஜரிக்கு முன்

பின்



ஆனால் பிள்ளைகள் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முந்தைய தாயின் முகஜாடையுடன் பிறக்க சந்தேகமடைந்த கணவன் விசாரித்து உண்மை அறிந்து வழக்கு தொடர கோர்ட்டு விவாகரத்து வழங்கியதுடன் நில்லாமல் மனைவிக்கு 75,000 டாலர் அபராதமும் விதித்தது



இதில் யார், யாரை குற்றம் சொல்லுவது? நீங்களே சொல்லுங்க

செல்வன்

unread,
Aug 30, 2015, 10:40:26 PM8/30/15
to K Selvan


சிகாகோ திவான் தெருவில் நகர்வலம் வந்தேன்

வட அமெரிக்காவின் மிகப்பெரும் தெற்காசிய அங்காடிதெரு என இதைக்கூறலாம்

தெருவின் ஒரு பகுதி முழுக்க இந்தியர்கள்..அப்பகுதிக்கு காந்தி மார்க் என பெயர் வைத்துள்ளார்கள்

மறுபகுதியில் பாகிஸ்தானியர்கள். அவர்கள் ஜின்னா சாலை என அதற்கு பெயர் வைத்துள்ளார்கள்

மூன்றாவது பகுதியில் யூதர்கள். கோல்டா மேயர் தெரு என இஸ்ரேலின் பெண் பிரதமர் பெயரை தெருவுக்கு சூட்டியுள்ளார்கள்

திவான் தெரு என்றால் ஏதோ உருது/இந்தி பெயர் மாதிரி தெரிந்தாலும் டிவான்ஷயர் ஸ்ட்ரீட் என்பதன் சுருக்கமே அது. அதை சுருக்கு திவான் ஆக்கிவிடடர்கள்

இங்கே மைசூர் உட்லண்ட்ஸ் ஓட்டல், ஆரியபவன் (வீகன் உணவகம்), அன்னபூர்ணா, உடுப்பி உணவகம் என தடுக்கி விழுந்தால் இந்திய உணவுதான்

செல்வன்

unread,
Sep 6, 2015, 12:27:42 PM9/6/15
to K Selvan
சீனாவில் காரை ஒருவர் மேல் ஏற்றி விபத்து நடந்தால் அவரை மறுபடி கார் ஏற்றி கொன்று விட்டுதான் வேறு வேலை பார்க்கிறார்கள்.


அதாவது காரை ஓட்டி போகிறீர்கள். ஒருவர் மேல் கார் மோதுவிடுகிறது. அவருக்கு காயம் ஏற்பட்டு விடுகிறது. இந்த சூழலில் கார் ஓட்டியவர் காரை மறுபடி கீழே விழுந்து கிடப்பவர் மேலே ஓட்டி அவரை  கொன்றுவிடுவார்.

சமீபத்தில் செக்யூரிட்டி காமிராவில் பதிவான ஒரு சம்பவம்

பஸாட் எனும் விலை உயர்ந்த காரை ஓட்டி வரும் ஒருவன் ஒரு 64 வயது பெண் மேல் காரை விட்டுவிடுகிறான். அவர் அடிபட்டு கீழே விழுகிறார். அதன்பின் ரிவர்ஸ் எடுத்து மறுபடி காரை அவர் மேல் விடுகிறான். அதன்பின் மறுபடி காரை முன்னே ஓட்டி அவர் மேல் ஏற்றுகிறான். இப்படி நாலைந்து தடவை கார் ஓட்டி அவரை கூழாக்கி முடித்தபின்னரே ஓட்டுவதை நிறுத்துகிறான்

காரணம்.....விபத்து ஏற்பட்டு மரணம் நிகழ்ந்தால் சின்ன நஷ்ட ஈட்டுடன் பிரச்சனை தீர்ந்தது. ஆனால் விபத்தில் கை,கால் முறிந்தால் ஆயுளுக்கும் அவருக்கான ஜீவனாம்சத்தையும், மருத்துவ செலவையும் நாம் தான் கொடுக்கணும். அது மில்லியன்கணக்கான யுவானில் வந்து நிற்கும் என்பதால் அடிபட்டு விழுபவர்களை முழுக்க அடித்தே கொன்று காரியத்தை முடித்துவிடுகிறார்கள்

(அந்த 64 வயது பெண்ணை கொன்றவனுக்கு எந்த தண்டனையும் கொடுக்கபடவில்லை. விடுதலை ஆகி விட்டான்)

Jaisankar Jaganathan

unread,
Sep 6, 2015, 12:29:16 PM9/6/15
to panb...@googlegroups.com
தியாகு சாரை காணவில்லையே இன்னும் ஏன்?>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

செல்வன்

unread,
Sep 10, 2015, 11:45:05 AM9/10/15
to K Selvan
இந்தியாவுக்கான சவூதி தூதரக அதிகாரி மேல் பாலியல் பலாத்கார குற்றசாட்டு சுமத்தபட்டுள்ளது

நேபாளத்தில் இருந்து இரு பணிப்பெண்களை வரவழைத்து தன் அபார்ட்மெண்டில்  அடைத்து வைத்து நாள்கணக்கில் பலாத்காரம் செய்து வந்ததாக அப்பெண்கள் புகார் கூறியுள்ளார்கள். தூதரக அதிகாரியின் நண்பர்களும் தம்மை பாலியல் கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்கள்.

அப்பெண்களை மீட்டு டெல்லி குர்காவோன் போலிஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூதரக அதிகாரி என்பதால் அவருக்கு தண்டனை அளிக்கும் உரிமை இந்திய அரசுக்கு கிடையாது என்பது குறிப்பிடதக்கது





Srimoorthy.S

unread,
Sep 10, 2015, 12:49:43 PM9/10/15
to பண்புடன்

அந்த அதிகாரியை அவசர அவசரமா அவங்க ஊருக்கே திருப்பி அனுப்பிட்டாங்களாம். அவங்க நாட்டை விட்டு வெளியேறின பின்னர்தான் தகவல் பத்திரிக்கையாளர்களுக்கு வந்திருக்கும்போல

Thevan

unread,
Sep 10, 2015, 1:03:02 PM9/10/15
to panb...@googlegroups.com
அது போன்ற குற்றவாளிகளை தப்பிக்க வைக்க தேவைப்பட்டால் புதிய சட்டத்தைக்
கூட இயற்றுவார்கள்.
Reply all
Reply to author
Forward
0 new messages