Re: தனிப்பாடல்

26 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 20, 2016, 10:20:21 AM6/20/16
to சந்தவசந்தம், மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com
யுரேக்கா! செய்யுள் எப்போது கவிதை ஆகிறது எனச் சொல்லும் வெண்பாக் கண்டேன். பக்கத்தில் வந்து படி, சேலை அவிழ்ந்தது, வேட்டி அவுருதுங்க, ... வெண்பாக்கள் வரும் காலத்தில்
இந்தப் பழைய கவிதையும் பார்க்கலாம். 

குச்சிலியர் என்ற சொல்லுக்குக் காட்டாக சென்னைப் பேரகராதி வழங்கும் கவிதை. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு 5 தொகுதிகளும் பார்த்தேன்.
4-ஆம் தொகுதியில் பாடல் எண் 826  (பக்கம் 395) இலங்குகிறது. “குச்சிலிய மாதர் குயமும்” என இணையத்தில் தேடிய போது கிட்டவில்லை.

மெட்றாஸ் லெக்ஸிகான் மேற்கோள் காட்டும் பாட்டு இது தான்.

குச்சிலிய மாதர் குயமும் குவலயத்தோர்
மெச்சுதமிழ் மாதர் வியன்முலையும்  சிச்சீ;
தெலுங்க மடமாதர் சிங்காரக் கொங்கைக்
கலிங்கமென வேசொல் கவி.

                                                 - கவிஞர் பெயர் தெரியாத தனிப்பாடல்.

(அ-ரை) பொருள் சிறிது விளங்கியும் விளங்காமலும் இருக்குமாறு செய்யுள் இயற்றுதல் வேண்டும்.

---------------------------

இப்பாடலைப் புரிந்துகொள்ள குச்சிலியர், தெலுங்கர், தமிழர்களின் மென்பாலார் அணியும்/அணியாத
மார்த்துணிகளைப் பாருங்கள் - 1837 ஓவிய நூலில். மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம்
இவை வரைந்த டேனியல் பூர் எனுஞ் சைத்ரீகரின் மனைவி அவர் ஞாபகார்த்தமாக கட்டிக் கொடுத்தது.
(அங்கே வைத்திருந்த பல பொருள்கள் - ஓவியங்கள், ... காணவில்லை என்கிறார்கள்.)

Seventy two specimens of castes in India - 
Yale University Beinecke Rare Book & Manuscript Library
ஓவியம், ஓவியமாக பார்க்க:

தமிழில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று ஒருங்குகுறியில் எழுதி
ஆராயும் மின்தமிழ்க் குழும இழை:

----------------------------------

இம்மடல் எழுதும்போது இணையத்தில் கண்டது:

வெண்பா பல எழுத்துப்பிழை, சீர்ப்பிழையுடன் தந்துள்ளார் தயானந்த் பாரதி. உரை ஏதோ தனிப்பாடல் புஸ்தகம், பக். 260-லிருந்து தருகிறார். சில எழுத்துப் பிழை நீக்கி அளிக்கிறேன்:

உரை: குச்சிலியப் பெண்களின் முழுவதும் மூடின தனங்களும், பூவுலகினர் பாராட்டும் தமிழ்ப் பெண்களின் நன்கு மூடாத பருத்த முலைகளும், வெறுப்பை விளைக்கக் கூடியன வாதலால், இளைய தெலுங்குப் பெண்டிரது அழகு தெரியும்படி துணியினால் மூடியும் மூடப்படாமலும் இருக்கிற தனங்களைப் போல விருக்கும்படியாக, பாட்டு இயற்றுவாயாக!-ப. 260



On Sunday, June 19, 2016 at 9:19:41 PM UTC-7, N. Ganesan wrote:
சென்னைப் பேரகராதி “குச்சிலிய மாதர் குயமும்” என்ற தனிப்பாடலை மேற்கோள் காட்டுகிறது.
முழுப்பாட்டும் இணையத்தில் காணோம். உங்களிடம் உள்ள தனிப்பாடற்றிரட்டு நூல்களில்
இப்பாட்டு இருந்தால் தாருங்கள். நன்றி.

குச்சிலியர் - கூர்ச்சர தேசத்தவர். குச்சிலிபாளையம், குச்சியன்பாறை - திண்டுக்கல் வட்டத்தில் உள்ளன.

Tamil Lexicon:
குச்சிலியர் kucciliyar , n. < gurjarī. Gujaratis, people of Gujarat; கூர்ச்சரதேசத்தவர். குச்சிலிய மாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190).

குச்சிலி ஓவியம்:


குஜ்ஜிலி குஜிலி ஆகும். உ-ம்: குச்சிலியர் தெரு - திருச்சியில் குஜிலி தெரு என்கின்றனர்.
குச்சிலியன்பாறை, குச்சிலிபாளையம் எல்லாம் திண்டுக்கல் அருகே இருக்கின்றன.
இவை ராஜ கம்பளத்தாரோடு தொடர்புடையவை. 



குஜ்ஜிலியன் பாறை அருகே உள்ள குச்சிலி பாளையம். கம்பளத்து நாயக்கரில் ஒரு கூட்டம் : குச்சிலியர்,
வடநாட்டில் நிகழ்ந்த அன்னிய படையெடுப்புகளால் விஜயநகரம் நோக்கிப் புலம்பெயர்ந்தவர்கள் பலர்.
கூர்ச்சரம்/குச்சரம் நாடுகளில் இருந்து வந்தோர் குச்சிலியர் எனப்பட்டனர். பொந்தகண்ட நாட்டார் பொந்திலியர் என்றது போல்.

குஜிலியன்பாறை அருகே உள்ள ஊர் குச்சிலிபாளையம். குச்சிலியர் கூட்டம் அமைத்த ஊர்.

“நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலக 
காவலாளியாக திண்டுக்கல் மாவட்டம் குச்சிலி பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி(52) என்பவர் 
பணியாற்றி வந்தார்.”



திண்டுக்கல் - பழனி - உடுமலை பகுதிகளில் கம்பளத்து நாயக்கர்களின் பாளையங்கள் மிகுதி.
  1. காமைய நாயக்கனூர் ( கடவூர் ) - காமைய நாயக்கர்
  2. கன்னிவாடி - அப்பு நாயக்கர்
  3. கோம்பை( மதுரை ) - கன்னட தொட்டிய நாயக்கர் இனம்
  4. காடல்குடி
  5. கோலார் பட்டி - கலங்க நாயக்கர்
  6. தொட்டப்ப நாயக்கனூர்
  7. ஆவுலப்பன் பட்டி - குச்சிலி பொம்மு நாயக்கர்
  8. ஆலங்குளம் ( சிவகாசி )
  9. அருப்புகோட்டை
  10. ஆற்றங்கரை - பெதன்ன நாயக்கர்
  11. கொல்லப்பட்டி ( நில கோட்டை ) - மக்கால நாயக்கர் - கவரா இனம்
  12. பேரையூர் - ராமசாமி காமைய நாயக்கர்
 
ஆவுலுப்பம்பட்டியில் குச்சிலி பொம்மு நாயக்கர்.
இதுபோன்ற குச்சிலியன் ஒருவனின் பாறை. குச்சிலியம்பாறை.

பொந்திலியர் போல, குச்சிலியர்கள் இசுலாமியர் படையெடுப்பால் தென்னகம் நோக்கி,
முதலில் ஆந்திர - கர்நாடகம், பின்னர் தமிழகம் வந்துள்ளனர். இதனால், வடக்கே
இருந்து தெற்கே வந்த கலந்தமைக்கு அடையாளமாக பொந்திலி, குஜ்ஜிலி எல்லாம்
இருக்கின்றன. குஜ்ஜிலியன் குஜிலியன் ஆகியுள்ளது எனக் கருதுகிறேன்.

இவர்கள் இபோதைய குஜராத்தியர் அல்லர். நாயக்கர் அரசாங்க காலத்து பாளையப்பட்டுகள்.
காலின் மெக்கென்சி சுவடிகள், சமுதாய ஆவணங்கள், திண்டுக்கல் வட்ட வரலாறு, ...
பார்த்தால் குச்சிலியர்/குஜ்ஜிலியர் வரலாறு தெரியும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jul 1, 2016, 8:43:49 PM7/1/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com, panb...@googlegroups.com, pira...@googlegroups.com

ஒரு புலவன் செய்யுளில் சொல்லியுள்ளான்:

குச்சிலிய மாதர் குயமும் குவலயத்தோர்
மெச்சுதமிழ் மாதர் வியன்முலையும்  சிச்சீ;
தெலுங்க மடமாதர் சிங்காரக் கொங்கைக்
கலிங்க மெனச்சொல் கவி.

குச்சிலியர் = குஜராத்தியர். திண்டுக்கல் அருகே குச்சிலிபாளையம், குச்சிலியன்பாறை (இப்பொழுது குஜிலியன்பாறை) - குஜராத்தில் இருந்து வந்து ஆந்திராவில் கலந்துவிட்ட ராஜ கம்பளத்து தொட்டிய நாயக்கன்மார் பெயரால்.

வடமொழி ஸுபா⁴ஷிதமோ என்று நினைத்தேன், https://en.wikipedia.org/wiki/Subhashita
முன்பு படித்தாற் போல இருந்தது. இன்று லீவு. என் நூலகத்தில் தேடினேன். டேவிட் ஷூல்மன்
தெலுங்கு மூலமும், மொழியாக்கமும் அளித்துள்ளார். இது அல்லசானி பெத்தன்னா என்னும்
கிருஷ்ணதேவராயரின் அஷ்ட திக்கயங்களில் ஒருவரான பண்டிதர் சொன்னதாம். தமிழில் அதை
மொழிபெயர்த்துள்ளனர்.

Not Entirely Hidden

Not entirely hidden, 
like the enormous breasts of those Gujarati women, 
and not open to view, 
like a Tamil woman's breasts,
but rather,
like the supple, half-uncovered breasts 
of a Telugu girl,
neither concealed nor exposed: 

that's how a poem should be composed. 
Anything else
is a joke.

ghanatara-ghūrjarī-kuca-yuga-kriya gūḍhamu gāka drāviḍī-
stana-gati teṭa gāka aracāṭ' agu āndhra-vadhūṭi cokkapun
canu-gava-līla gūḍhatayu cāṭutanambunu lekay uṇḍa cep-
pinan adipo kavitvam' anipiñcu nagiñc' aṭugākay uṇḍinan

(pg. 33, A Poem at the Right Moment: Remembered Verses from Premodern South India, 1998).

----------

"There were in Telugu literature, stray verses dealing with poets and poetry of known and unknown authorship.

We have got a verse popularly attributed to Allasani Peddana bringing forth vividly the idea that art consists in concealing art. The verse projects before us three distinct pictures, a Gujarati lady with fully covered breasts, a Dravidian lady with naked breasts and an Andhra lady with breasts party concealed. The poet alludes here, how good poetry should win the appreciation as in the last picture, by suggestion rather than by complete exposure. "
(pg. 820, Amaresh Datta, Encyclopaedia of Indian Literature: A-Devo., Sahitya Akademi, 1987)

Happy Weekend!
N. Ganesan

Reply all
Reply to author
Forward
0 new messages