கொலைவெறி கவிதைகள் சீரிஸ்....

14 views
Skip to first unread message

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 5, 2016, 9:56:18 AM5/5/16
to பண்புடன்
கொ.வெ.க - 1
******************
உச்சிக் கிளையமர்ந்த
குருவி, தான் நிதமமரும் 
கிளையறியும்

மரமும் குருவியும்
பேசி  உறவாடி,
நட்பை வளர்த்தன  
நித்தம் நித்தம். 


குருவியமரா பொழுதமர்ந்த
மரங்கொத்தி கிளையழிக்க
வருந்திக் கிடந்தது மரம்

தானமர்ந்த கிளைதேடி 
வந்தமர்ந்த குருவியை 
நீயந்த மரங்கொத்தியென்றது
மரம் 


அன்றிலிருந்து இன்றுவரைக்கும்
யாரும் அமராது 
வெறுமையில் இருக்கிறது 
கிளை 

Iyappan Krishnan

unread,
May 5, 2016, 10:01:41 AM5/5/16
to பண்புடன்
கொ.வெ.க 2
*****************

நோக்கும் தூரம் மட்டும்
சிறுகா இருள் 
சிலிர்த்திருக்கிறது. 
வெட்டும் மின்னலில்
எங்கேனும் தென்படுகிறது
நாய்களும் இன்னும் பிற
மிருகங்களும். 
தனிமையின் கொடுநகங்கள்
உடலெங்கும் அழுந்த
சுளீரென்று முகம் குத்திக்
கீழ் வீழ்கிறது மழைத்துளி. 
அதில் சில துளிகள்
என்றேனும் வருமொளி என்று
இலக்கற்று நோக்குமென்
விழிகளின் துளியில் 
கரைந்துச் செல்கின்றன. 
அடர்ந்துக் கொண்டிருக்கிறது
இருள்
**

தியாகு

unread,
May 5, 2016, 10:07:47 AM5/5/16
to பண்புடன்
இது கவிதை தானே

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

Iyappan Krishnan

unread,
May 5, 2016, 10:22:14 AM5/5/16
to பண்புடன்
​இருக்கலாம்ணே :) தெரியல :))) அண்ணாச்சி அப்புறம் திட்டுவாரு :))))​

2016-05-05 19:37 GMT+05:30 தியாகு <seewty...@gmail.com>:
இது கவிதை தானே




Iyappan Krishnan

*>*<*
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்.
நிலைபெறுத்தலும். நீக்கலும். நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார்-அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே.

துரை.ந.உ

unread,
May 5, 2016, 10:51:49 PM5/5/16
to பண்புடன்
2016-05-05 19:31 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:
அன்பு ஐயப்ஸ்.... 
வரிவையாய்ப் (!) படித்த பின்பும் , இவ்வாழ்வின்  விடையறியாமல் விழிக்கிறேன்.. விழிப்பின் விடையாய் வந்து விழுந்த  எனது இருவரிகள் கீழே ...ஒர்ரே ஒரு வேண்டுகோள்...தயை கூர்ந்து , பொருளுண்ர்ந்து , பின் ‘கண்டின்யூ’ செய்யவும் ... வாழ்க வாழ்க 

கோழி மிதித்துவிட்டால் குஞ்சுக்கு நோவு;
குஞ்சிலென்றால் வந்துவிடும் சாவு

​அவ்வ்வ்வ்வ்வ் 

 


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

தியாகு

unread,
May 6, 2016, 12:49:37 AM5/6/16
to பண்புடன்
//இலக்கற்று நோக்குமென்

விழிகளின் துளியில் 
கரைந்துச் செல்கின்றன. 
அடர்ந்துக் கொண்டிருக்கிறது
இருள்//

சோகம் என்றாலே அது இருளோடு சம்பந்த பட்டதுதானா ?

வெயில் படம் சோகத்தை பிழிந்து கொடுத்ததே
தியாகு

-

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2016, 5:34:05 AM5/6/16
to பண்புடன்
தியாகண்ணே,

பிறர் அறியா சோகம் வெளிச்சத்தில் வாராது.. 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
May 6, 2016, 5:34:43 AM5/6/16
to பண்புடன்
அவ்வ்... மிதிக்காதீங்க... மிதிக்க விட்டுடாதீங்க....

பிரசாத் வேணுகோபால்

unread,
May 10, 2016, 2:41:17 AM5/10/16
to பண்புடன்
2016-05-06 8:21 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


2016-05-05 19:31 GMT+05:30 Iyappan Krishnan <jee...@gmail.com>:


கோழி மிதித்துவிட்டால் குஞ்சுக்கு நோவு;
குஞ்சிலென்றால் வந்துவிடும் சாவு

​அவ்வ்வ்வ்வ்வ் 

 

தளை ஐயா... 

 

Iyappan Krishnan

unread,
May 10, 2016, 4:45:54 AM5/10/16
to பண்புடன்
வணக்கம் பிரசாத் ஐயா அவர்களே... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி

அன்புடன்
ஐயப்பன்.

Iyappan Krishnan

unread,
May 12, 2016, 8:20:48 AM5/12/16
to பண்புடன்
கொ. வெ. க 5

சண்டையின் போதெழுந்த
சுருக்கென்ற கோபத்தில்
வெளியேறிச் சென்று
தனெக்கெனத் துணையாய்
என்றோ ஒப்புமையிட்ட
பழைய நிலவொன்றைக்
கையில் வைத்திருந்தாள்
பக்கத்திலேயே
சில மான்களும், மீன்களும்
பறவைகளுமென.
கடந்து வந்த காலங்களில்
அவை மட்டும் அப்படியே
மாறாமல் இருக்கிறது
அவளின் நினைவேட்டில்.

துரை.ந.உ

unread,
May 12, 2016, 8:25:06 AM5/12/16
to பண்புடன்

நல்லவன் என்றுஊர் உனைஅழைக்க வேண்டுமெனில்

நல்லவன் என்னும்பேர் வை

# நாங்கள்லாம் அப்பவே அப்படி !


2016-05-06 8:21 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

Iyappan Krishnan

unread,
May 12, 2016, 8:40:49 AM5/12/16
to பண்புடன்
ஹிஹி... ஒருத்தன் சொன்னானாம்...  என் பையனுக்குப் பேரு ஐலவ்யூன்னு வைக்கப் போறேன்னு... ஏண்டான்னா அப்பவாச்சும் காலேஜ்ல பொண்ணுங்க என் பையனப் பாத்து பொண்ணுங்க ஐலவ்யூன்னு சொல்லட்டுமேன்னு அந்த கதையால்ல போச்சு... :))))))​

2016-05-12 17:54 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:

நல்லவன் என்றுஊர் உனைஅழைக்க வேண்டுமெனில்

நல்லவன் என்னும்பேர் வை

# நாங்கள்லாம் அப்பவே அப்படி !




தியாகு

unread,
May 12, 2016, 9:26:08 AM5/12/16
to பண்புடன்
இப்பதான் கொலைவெறி கவிதைகள் சூடு பிடிக்குது ஒரு ஜிப் படம் போடுங்க துரைஜி :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தியாகு

-

துரை.ந.உ

unread,
May 12, 2016, 11:35:57 AM5/12/16
to பண்புடன்
ஓகே...

இது ஜீவ்ஸ்க்கு எச்சரிக்கை..
‘’ வண்டி நின்னா ’--’ல சுடுவேன்’’
Inline image 1

Iyappan Krishnan

unread,
May 13, 2016, 5:07:48 AM5/13/16
to பண்புடன்
​அய்யோ அம்மா... கைல துப்பாக்கி வச்சு மெரட்றாங்க உவர ஆனர்...



2016-05-12 21:05 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இது ஜீவ்ஸ்க்கு எச்சரிக்கை..
‘’ வண்டி நின்னா ’--’ல சுடுவேன்’’



Iyappan Krishnan

unread,
May 13, 2016, 5:12:58 AM5/13/16
to பண்புடன்
கொ.வெ.க - 6
******************

உன்
கருவிழி நீலத்தில்
கரைந்து போனது 
என் மனது.

உந்தன் காதலை 
நானறிய மாட்டேனோ?
என்னுள்ளே உன்னைக் கண்டு..
உன்னையெண்ணி 
வாழும் மனது

முழுநிலவில், கடற்கரையில்
கடலை நிரப்புகிறேன்
என் கண்ணீரினால்...
உன்னையெண்ணி 
வாழும் மனது... 


மனமெனும்  மாக்கடலில்
இரத்தின மலைகளின்
மீதுலவும் மேகங்களாய்
உலவிக் கொண்டிருக்கின்றது
உன்னையெண்ணி 
வாழும் மனது... 

அலைவந்து அழைத்திடும்
உன்னுடைய அரண்மனைக்கு
என்னுள் இருக்கும் இரத்தின புரியது
அது இரத்தினபுரியாய் இருப்பது
உன்னாலன்றோ
உள்ளிருக்கும் தெய்வம் நீயன்றோ
உன்னையெண்ணி
வாழும் மனது

தியாகு

unread,
May 13, 2016, 5:40:52 AM5/13/16
to பண்புடன்
//

உள்ளிருக்கும் தெய்வம் நீயன்றோ
உன்னையெண்ணி
வாழும் மனது//

  அட்றா சக்க  அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Iyappan Krishnan

unread,
May 13, 2016, 8:46:01 AM5/13/16
to பண்புடன்
அவ்வ்...  நல்லாருக்குங்கறீங்களா , இல்லைங்கறீங்களான்னே தெரியலைண்ணே :)))​

2016-05-13 15:10 GMT+05:30 தியாகு <seewty...@gmail.com>:
  அட்றா சக்க  அட்றா சக்க அட்றா சக்க அட்றா சக்க



தியாகு

unread,
May 13, 2016, 9:03:22 AM5/13/16
to பண்புடன்
நல்லா இருக்கு :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Iyappan Krishnan

unread,
May 23, 2016, 7:56:17 AM5/23/16
to பண்புடன்
சும்மா மரபுல ஒரு முயற்சி... 
***********************

 நிழல்தரும் மரந்தனை இதமுடன்  வளர்த்திட 
                             ..... நிதியென வளர்ந்திடும் நிதமது நிலைத்திடும்
பழம்தரும் பனிதரும் பலவகை பயன்தரும் 
                            ......வியந்திடும் வகையினில் விளைவுகள் நலம்பெரும்
எழிலென  வளர்ந்திடும்   புவியதன் குழலென, 
                           .......மனமது மயங்கிட மணமுடை மலர்தரும்
மழைவர புவியினில் நிதமது உதவிடும்  
                          ........நதியினை வளர்த்திடும்  நமக்கது ஒருவரம்

Iyappan Krishnan

unread,
Jun 6, 2016, 7:12:18 AM6/6/16
to பண்புடன்
கொ.வெ.க சீரிஸ்:
**********************
கொடுங்கனவை  எனக்களித்து மனமழித்துச் சென்றாய்
படபடத்து படும்துயரில்  மனங்களித்து நின்றாய்
படையழியப் பதைப்பதைக்க உயிர்குடிக்கும் போராய்
விடையறியா கனவிதனில்  நிதம்தவித்து  நின்றேன்

வனத்தலையும் விலங்கினைப்போல் இருக்கவழி செய்தாய்
தினம்வளரும் சினம்மறைத்து சிரித்திருக்கச் செய்தாய்
மனக்குகையில் மறைந்திருக்கும் இருள்வளர்த்துப் போனாய்
கணக்கடங்கா கழலெனவே கவலைகளைக் கொண்டேன்.
​​
தினங்கிடந்து உழலுகிறேன், திகைப்பினிலே வாழும்
மனக்கவலை மறைந்திடவே மருந்தெதுவும் உண்டோ
தினைக்குறத்தி தனைமணந்த  மலைமகளின்  மைந்தா
நினைக்கையிலே மனமிறங்கி அருள்புரிய  வாவா!!
( கலி விருத்தமாம்... அவலோகிதம் சாஃப்ட்வேர் அப்படித்தான் சொல்லுது )

Ahamed Zubair A

unread,
Jun 6, 2016, 7:19:03 AM6/6/16
to பண்புடன்
கார்த்திக்!!

--

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jun 8, 2016, 6:30:25 AM6/8/16
to பண்புடன்
அவுனு பாவா :)) கார்த்திக்னே நேனு செப்தானு.. 

Ahamed Zubair A

unread,
Jun 8, 2016, 7:24:19 AM6/8/16
to பண்புடன்
good.

தியாகு

unread,
Jun 9, 2016, 2:01:27 AM6/9/16
to பண்புடன்
how nice you are trying in many ways to expand tamil poem  :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
Reply all
Reply to author
Forward
0 new messages