Re: முதியோர் இல்லம் (நாலடியார்)

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jun 12, 2016, 12:57:10 PM6/12/16
to மின்தமிழ், Santhavasantham, vallamai, panb...@googlegroups.com, housto...@googlegroups.com
திரு. சிங்கநெஞ்சன்,

அற்புதமாக ஒருகதை போல், நாலடி வெண்பா விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்

 

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.                     20:7

(படத்தில் உள்ள கல்கத்தா ஆல மரத்தின் அடி மரம் கெட்டுப்போனதால்  1925 ஆம் ஆண்டு அகற்றப்பட்டுவிட்டது)

 

கல்கத்தா ஆலமரம் போலவே, நாலடியாரின் பாடலுக்கு விளக்கமாய், அடையாறு ஆலமரத்தின் அடிமரமும்

1989-ல் வீசிய புயலாய் சிதையுண்டது. அடிமரத்தின் உயிர்மீட்கப் பட்ட பாடு வீணானது. ஆனால், அதிசயமான

முறையில் விழுதுகள் அடையாறு ஆலமரத்தைக் காப்பாற்றிவிட்டன:


ஆல் < யால்-. யாடு > ஆடு, யாமை > ஆமை, ..... போல யால்- > ஆல் என்றானது.

யால நேஷனல் பார்க் இலங்கையின் தென்கோடியில் உண்டு. பொள்ளாச்சி, மூணாறு, பறளியாறு (குன்னூர்) போல இயறகைவளம் மிகுந்த வனம் யால வனம்.

பழந்தமிழர்கள் இலங்கை முழுதும் வாழ்ந்தபோது யால (=ஆலமரம்) மரங்கள் பெயரிட்டிருக்கிறார்கள்.

ஆலுக்கு யால் என்ற பெயர் வேதத்தில் முக்கியமான பகுதியை வர்ணிக்கும் பரிபாடல் பகுதியில் இருக்கிறது எனக் கருதுகிறேன்.

அந்த  ஆலைப் பெருமரம் என்கிறார் மதுரை தமிழ் சங்கத்தில் புலவர்களை வென்ற பாட்டில் நம்மாழ்வார்.

100+ ஆண்டுகளுக்கு முன் கிடைத்த அப்பாடலைக் கண்டுபிடித்த ரா. ராகவையங்கார் விளக்கம் தமிழ் மரபு அறக்கட்டளை நூலகத்தில்

நான் கொடுத்தது இருக்கிறது. பாருங்கள். இப் பெருமரம் பற்றி சிந்து சமவெளிக் கண்டுபிடிப்புகள், தமிழக வரலாறு (சங்கம், Pre-Sangam archaeology

of Visirikkal athropomophic axe megalithic sculptures) கொண்டு மேலும் விளக்கவியலும்.


திராவிட வேர்ச்சொல் அகராதி செய்த சம்ஸ்கிருதப் பேராசிரியன்மார் இருவர். எமனோ யாமையை சாமை என எழுதியுள்ளார் - பெரியோர் சிறுபிழை என்க.
சங்க இலக்கியத்தால் யாமை > சாமை (இடைக்காலத்தே) > ஆமை. எமனோ தான் தமிழ் இலக்கியம் படித்ததில்லை என என்னிடம் ஒருமுறை சொல்லியுள்ளார்.
அடுத்த தலைமுறை, தமிழ்க் குழைந்தைகள் ஐரோப்பாவிலும், ஆவுஸ்திரேலியாவிலும், அமெரிக்கா, கனடா நாடுகளிலும் ஏராளமாக வளர்ந்துவருகின்றனர்.
அவர்களில் ஒரு சிலராவது தமிழ் இலக்கிய இலக்கணங்கள், திராவிட ஒப்பீட்டு மொழியியல் வல்லுநர்களாக வருவார்கள், மிளிர்வார்கள் என எதிர்பார்ப்பு
பல பெற்றோரிடையே. 

கடுமையான வெயில் காலத்திலும் வேர்த்து தண்ணீர்த்துளிகளை வெளியே அனுப்பி உள்ளே நீரைக் குளுமையாய் வைத்திருக்கும்
நம் குலாலரின் அரிய கண்டுபிடிப்பு “சால்”. சால் மிடா - Natural refrigeration and environmetally friendly (no input from centralized power grids!).
யாமை > சாமை > ஆமை, போல,
யாலுதல் = சாலுதல் = நாலுதல்/ஞாலுதல். நால்வாய்/ஞால்வாய் = யானை என்பது இதனால்தான்.
சால் மிடாவுக்குக் கீழே விழும் சொட்டுகளைப் பிடிக்க ஓர் தட்டு வைப்பர் அல்லவா? 
இதே, ய்- > ச்- > ந்- மாற்றம் இன்னொரு சொல்லில் பார்க்கலாம். 
யாண்- (யாழ்) > சாண்- > நாண்- “கயிறு”. சாணம் - கள்ளிறக்க,  பனை/தென்னை மரமேறிகள் காலில் கட்டும் தளைகயிறு “சாணம்”.
பிஷப் கால்ட்வெல் திருநெல்வேலி பற்றி எழுதிய நூல்களில் விரிவாக கள்ளிறக்குந் தொழில் பற்றிச் சொல்லியுள்ளார்.

In Proto-Dravidian, *yAl- is the source for Al 'ficus indica' fig tree which is the Banyan tree - India's National tree. Note that VaTa is the Tamil word
which works as a loan word in Sanskrit for the banyan from Vedas onwards. Thanks for your beautiful explanation of Naladi venpa. Pl. continue with
many more short poems in 18 Kiizhk kaNakku verses.

ஆக, முந்துதமிழில் (in Proto-Dravidian)
ஆலமரம் < யாலமரம் (Cf. ஆனை < யானை)

நா. கணேசன்

On Saturday, June 11, 2016 at 7:41:56 AM UTC-7, singanenjan wrote:

முதியோர் இல்லம் (நாலடியார்)

கோடை இன்னும் முடிந்தபாடில்லை. வெயிலின் கடுமையும் குறைந்த பாடில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு பனையூர் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார் புலவர். நண்பர் நல்லயனைப் பார்த்து எத்தனைக் காலம் ஆயிற்று. இதோ இன்னும் அரை கல்  தொலைவில் பனையூர். புலவருக்கு களைப்பு மேலிட்டது. கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர் தருவாய் சாலையோரத்தில் ஆலமரம் ஒன்று விரிந்து பரந்திருந்தது. ஆலமரத்தின் நிழலில் இருந்த சுமைதாங்கியில் இடுப்பில் இருந்த மூட்டையை வைத்து விட்டு, பக்கவாட்டில் இருந்த நெடுங்கல்லில் சாய்ந்து உட்கார்ந்தார். அங்கும் இங்குமாக விழுதுகள் இறங்கி நிலத்தில் ஊன்றியிருந்தன. இளம்விழுதுகள் காற்றில் ஊசலாடிக் கொண்டிருந்தன. ஆனால் அடிமரமோ பாதிக்குமேல் கரையானால் அரிக்கப்பட்டு வலுவிழந்து இருந்தது.

பார்வையை மேலே உயர்த்தினார் புலவர். பச்சைப் பசேலென்ற இலைகள், இடையிடையே பழுத்து சிரித்துக் கொண்டிருந்த சிவந்த  பழங்கள். பழங்களைக் கொத்தி அங்கும் இங்கும் பாடிப்  பறந்து கொண்டிருந்த குயில்கள், அந்தப் பாடல்களை சீட்டியடித்து ரசித்துக் கொண்டிருந்த பச்சைக் கிளிகள். எல்லாமே அற்புதமாக இருந்தன. ஒரு குறைவும் இல்லை விழுதுகள் தாங்கி நிற்கும்  இந்த  ஆல மரத்திற்கு 

இந்த எழிலான காட்சியை உவமைப் படுத்தி பாடல் ஒன்று எழுத எண்ணம் வந்தது புலவருக்கு. உடன் உதித்தன உவமை வரிகள்

“சிதலை தினப்பட்ட ஆல மரத்தை

மதலையாய் மற்றதன்  வீழூன்றி ஆங்கு.”

.....................................................................................................................................

மண்வெட்டியை தோளில் சுமந்து கொண்டு சாலை  வழியே வந்த ஓர் இளைஞன், புலவரைப் பார்த்து

“ஐயா, தாங்கள் யார், யாரைப் பார்க்க வேண்டும்”

“யான் ஓர் புலவன் தம்பி.. இதோ இந்த பனையூரில் என் நண்பர் நல்லயனைப் பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன். சந்தைத்தோப்பு பக்கத்திலேதான் அவர் வீடு”

“அப்படியா..வணக்கம்.... வணக்கம்  அய்யா. நான்   அவரின் பிள்ளைதான். இ வாருங்கள் போகலாம்.”

“மகிழ்ச்சி மகிழ்ச்சி ....பத்து ஆண்டுகளுக்கு முன் உன்னைப்  பார்த்தது.   வளர்ந்து இளைஞனாகி  ஆகி விட்டாய் .உன் பெயர்  நல்லமுத்து தானே ?”

“ஆமாம் ஐயா.”

“ம் ம் , உன் தந்தை நல்லயனுக்கு உன்  தாத்தா முத்தையன் மீது பாசம் அதிகம்.எனவேதான் அவர் பெயரையே உனக்கு  சூட்டியுள்ளார். நீயும் அப்பாவிடம் பாசத்தோடும் பற்றோடும் நடந்து கொள்ள வேண்டும்”

“ உங்கள் ஆசியின்படி அப்படியே ..........இதோ வீடு வதுவிட்டது”

.இருவரும் வாசலில் கால் கழுவிக்கொண்டு உள்ளே சென்றனர். கயிற்றுக் கட்டிலில் சாய்ந்திருந்த நல்லையன் நிமிர்ந்து

“வாருங்கள் புலவரே .....வாருங்கள்....எத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன உங்களைக் கண்டு...அமருங்கள்”

“ மகிழ்ச்சி நல்லையா, மகிழ்ச்சி. என்ன தளர்ச்சியாக இருக்கிறீர்கள்”

“வயதாகி விட்டது...... வேறொன்றும் இல்லை. தளர்ச்சி உடலுக்குத்தானே தவிர மனதுக்கு இல்லை.  பிள்ளை வேளாண்மையை நன்றாக பார்த்துக் கொள்கிறான்.மனைவியும் மருமகளும் வீட்டை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்.தளர்ச்சியிலும் மகிழ்ச்சியாகவே  இருக்கிறேன்.சரி, உணவு ஏற்பாடாகிவிட்டது .....வாருங்கள்”

புலவருக்கு உவமேயமும் உதித்து விட்டது.

“குதலைமை தந்தைகட் தோன்றிற்றான்  பெற்ற

 புதல்வன்  மறைப்பக் கெடும்.”

இதோ அந்த நாலடி :

 

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.                     20:7

(படத்தில் உள்ள கல்கத்தா ஆல மரத்தின் அடி மரம் கெட்டுப்போனதால்  1925 ஆம் ஆண்டு அகற்றப்பட்டுவிட்டது)

 

 

 

N. Ganesan

unread,
Jun 12, 2016, 12:59:06 PM6/12/16
to வல்லமை, mint...@googlegroups.com, santhav...@googlegroups.com, panb...@googlegroups.com, housto...@googlegroups.com
திரு. சிங்கநெஞ்சன்,

அற்புதமாக ஒருகதை போல், நாலடி வெண்பா விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்

 

சிதலை தினப்பட்ட ஆல மரத்தை
மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
புதல்வன் மறைப்பக் கெடும்.                     20:7

(படத்தில் உள்ள கல்கத்தா ஆல மரத்தின் அடி மரம் கெட்டுப்போனதால்  1925 ஆம் ஆண்டு அகற்றப்பட்டுவிட்டது)

 

கல்கத்தா ஆலமரம் போலவே, நாலடியாரின் பாடலுக்கு விளக்கமாய், அடையாறு ஆலமரத்தின் அடிமரமும்

1989-ல் வீசிய புயலாய் சிதையுண்டது. அடிமரத்தின் உயிர்மீட்கப் பட்ட பாடு வீணானது. ஆனால், அதிசயமான

முறையில் விழுதுகள் அடையாறு ஆலமரத்தைக் காப்பாற்றிவிட்டன:


Forgot to give ref. to 1989 destruction of the base tree at Adyar, here it's.

"A devastating cyclone uprooted this tree in 1989. To bring back the tree to its original position, huge cranes were brought to the scene. A vast pit was dug and the tree was kept back in its position. But all these efforts went in vain.
When the gale uprooted the giant trunk in 1989, hope was given up for the ancient tree, but it has miraculously survived on a weakened trunk and its drop roots, still attracting thousands of visitors."
Reply all
Reply to author
Forward
0 new messages