ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்

6 views
Skip to first unread message

செல்வன்

unread,
Jan 6, 2017, 11:04:17 AM1/6/17
to செல்வன்
கீற்றில் வெளியான "ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்" எனும் கட்டுரைக்கு பதில்

www.keetru.com

ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்


----------

1) கீற்று: "ங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. 'மாடுமுட்டிப் பய' என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், "மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்... விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய..."
அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன."



பதில்: காளைமாட்டை வண்டியில் பூட்டு ஓட்டுவது, ஏரில் பூட்டி உழுவது, செக்கில் ஆட்டி எண்ணெய் எடுப்பது...இப்படி பல பணிகளுக்கு காளைகள் பயனாகின்றன. ஊரில் மாடுகள் மிரன்டு ஓடினால் அவற்றை அடக்க பயிற்சி அவசியம். இதற்காக தான் ஜல்லிகட்டு முதலான போட்டிகள் அறிமுகமாயின. கிராம வாழ்க்கையில் மாடுகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அவற்றை கட்டுபடுத்தி பயிற்சி எடுப்பதன் பெயர் "மாட்டுடன் மல்லுக்கு நிற்பதல்ல"

கார் ஓட்ட பயிற்சி எடுத்துதான் கார் ஓட்டவேண்டும். பஞ்சர் ஆனால் என்ன செய்வது, ப்ரேக்டவுன் ஆனால் என்ன செய்வது என தெரியவேண்டும். அப்படிப்பட்ட பயிற்சி தான் ஜல்லிகட்டு. ஜல்லிகட்டு வீரர்கள் ஆன்டுமுழுக்க பயிற்சி எடுபார்கள். மாட்டுடன் மோதி குடல் சரிவதெல்லாம் உண்மைதான். இதற்கு காரணம் இந்த விளையாட்டு கிராமிய விளையாட்டாக, புரபஷனலாக இல்லாமல் இருப்பதால். கிரிக்கட்டில் ஹெல்மெட், பேட் வருவதற்கு முன்னால் வீரர்களுக்கு அடிபட்டு கொண்டுதான் இருந்தது. புட்பாலில் 17ம் நூற்றாண்டில் கிராமம், கிராமமாக ஆடி அடி,உதை, கொலை எல்லாம் நிகழ்ந்தது. இந்த குறைகளை எல்லாம் களைந்து மைதானங்கள் அமைத்து, பாதுகாப்பு உபகரணங்கள் அளித்து இந்த விளையாட்டுக்கள் முறைபடுத்தபட்டன.

அதேபோல நம் பாரம்பரிய விலையாட்டான ஜல்லிகட்டு, கபடி மாதிரி ஆட்டங்களையும் மைதானங்களில் பாதுகாப்பாக, போதுமான உபகரணங்களுடன் நடத்த உதவுவது அரசின் கடமை. அன்னிய விளையாட்டுக்கள் கிரிக்கட், பேஸ்பால்,வாலிபால், புட்பாலுகெல்லாம் மைதானம் கட்டும் அரசு நம் பாரம்பரிய விளையாட்டை தெருவில் நடத்தவிட்டுவிட்டு "பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை" என்பது பெற்றதாயை மகனே தெருவில் விடுவிட்டு "நீ பிச்சைகாரி" என இகழ்வதற்கு சமம்.

இப்படி நம் பாரம்பரிய விளையாட்டுக்களை இழந்தால் நாடெங்கும் கிரிக்கட், புட்பால் மாதிரி அன்னிய விளையாட்டுக்கள் மட்டுமே விளையாடபடும். கள்ளு உடலுக்கு கெடுதி என சொல்லி தடை செய்துவிட்டு விஸ்கி, பிராந்தியை விற்கும் புத்திசாலிகள் நிரம்பிய நாடு ஆச்சே இது?

-------------------

2) கீற்று: உலக மல்யுத்தப் போட்டியில் விளையாடுபவர்கள் அவர்களது உடல் எடைக்கு இணையான உடல் எடை உள்ளவர்களோடு மட்டுமே மோத விடப்படுவார்கள். அவன் 51 கிலோ என்றால், இவனும் 51 கிலோ இருக்க வேண்டும். ஆனால், நமக்குக் கொஞ்சமும் பொருந்தாத மாட்டுடன் முட்டிக் கொண்டிருப்பதை 'வீர விளையாட்டு' என்று சொன்னால், அது பகுத்தறிவுள்ள செயலா? இதுதான் நமது பண்பாடு என்று சொன்னால் உலகம் நகைக்காதா?

பதில்:
கிராம தெருவில் காளை மிரண்டு ஓடுகிறது. எதிரே நீங்கள் வந்தால் "என் எடை 51 கிலோ, காளை எடை 500 கிலோ. அதனால் மோதமாட்டேன்" என சொல்லி அப்படியே நிற்பீர்களா?

நாலைந்து ரவுடிகள் சுற்றிவளைக்கிறார்கள். "ஒருவனுக்கு ஒருவன் மோதுவதுதான் சர். நான் மோதமாடேன்" என சொல்லி அடிவான்கிகொள்ள முடியுமா?

வீர விளையாட்டு என்பதும் அத்தகையதுதான். பயிற்சி இங்கே மனிதனுக்கு தான்.

--------------------------

3) கீற்று: உண்மையில் நாட்டு மாடுகளைக் காக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அதற்கு செய்ய வேண்டியது ஆக்கப்பூர்வமான வேலைகள்தான். ஜல்லிக்கட்டு மூலம் காப்போம் என்பது நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை வெறும் 300க்குள் சுருக்கி விடும்.

பதில்:

300 மாடுகளை வைத்து எத்தனை ஆயிரம் பசுக்களுக்கு சினையூட்ட முடியும் என்பது தெரியுமா?

ஜல்லிகட்டு மட்டுமே நாட்டுமாடுகளை காக்க போதாது. ஆனால் அணையபோகு ஒரு மரபின் கடைசி சுடராக நிற்பதையும் அழித்துவிடுவது அறிவுடமைதானா? யாருமே நாடகம் பார்ப்பதில்லை என்பதால் இருக்கும் கடைசி நாடக ட்ரூப்பையும் கலைத்துவிடுவதுக்கு ஒப்பானது இது.

-----------------------------

4) கீற்று: நாட்டு மாடுகள் அழிவது குறித்து அக்கறை கொள்வோர்கள், ஜல்லிக்கட்டு இல்லாமலேயே அதைச் செய்ய முடியும்.

அவரவர்கள் வீடுகளில் நாட்டுக் காளைகளையும், நாட்டுப் பசுகளையும் வளர்ப்பதை யார் தடை செய்திருக்கிறார்கள்? இதனால் பால் உற்பத்தி அதிகரித்து, பால் விலையும் குறையும்; நாட்டு மாடுகளும் காப்பாற்றப்படும்.

பதில்:

நாட்டுமாடுகளை ஜல்லிகட்டுக்கு வளர்ப்பதன் மூலம் ஒரு பெருமை, பலன் கிடைக்கிறது. சும்மா வளரு என்றால் யாரும் வளர்க்க மாட்டார்கள். ஜெர்சி பசுவை வலர்ப்பதுதான் பாலுக்கு லாபமானது.

கிரிக்கட், புட்பால் ஆடினால் அரசு வேலை கூட கிடைக்கும்.இப்படி சலுகை கொடுத்து அன்னிய ஆட்டங்களை வளர்த்துவிட்டு, நம் தாய்மண்ணின் மரபுசார் விளையாட்டை ஆடும் வீரர்களுக்கு வேலை, சலுகை, மெடல் என எதுவும் தராமல் அழித்துவிட்டு இப்போது வீட்டில் சும்மா மாடுகளை வலர்த்துகொள் என்பது எத்தனை தவறானது?

கிரிக்கட் விளையாடினால் பணம் கிடைக்காது, பரிசுகள் இல்லை, சும்மா வீட்டில் வ்ளையாடு என்றால் டென்டுக்ல்கர், தோனி எல்லாம் கிரிக்கட் விளையாடியிருப்பார்களா?

நம் மரபை நாமே காப்பாற்றவில்லஒயென்றால் அன்னியனா வந்து காப்பாற்ற போகிறான்? ஊரான் பிள்ளை கிரிக்கட், புட்பாலை நாம் ஊட்டி வலர்த்தால் பின் ஜல்லிகட்டை அவனா வந்து ஆடபோகிறான்? அழிவது நம் மரபும், பண்பாடும் தான்


-------------------

5) கீற்று: பெண்களைப் புறந்தள்ளிய, பெண்களின் பங்கேற்பு இல்லாத ஜல்லிக்கட்டை தமிழர்களின் ஒட்டுமொத்த பண்பாடு என்று எப்படிச் சொல்வது? பங்கேற்பை விடுங்கள்... ஒப்புதல் கிடைக்குமா? "தமிழ்ப் பண்பாட்டைக் காக்க நம் மகனை ஜல்லிக்கட்டுக்கு அனுப்பட்டுமா?" என்று வீட்டில் கேட்டுப் பாருங்கள்... என்ன பதில் கிடைக்கும்?

பதில்:

பெண்களின் பங்களிப்பு ஜல்லிகட்டில் உண்டு. ஏறுதழுவி மாட்டை அடக்கியவனை தவிர வேறு யாரையும் ஆயர் இனப்பெண்கள் மணந்ததில்லை என்ற சங்கபாடல் உண்டு. ஜல்லிகட்டில் ஆண்கள் பங்கேற்பதே திருமணத்துக்கான தகுதி என்ற நிலை முன்பு இருந்தது.

பெண்கள் கபடி ஆடுவதில்லை, ராணூவத்தில் சேர்வதில்லை, கிரிக்கட் ஆடுவதில்லை. அதனால் இதை எல்லாம் கலைத்துவிடுவிடலாமா? ஆண்கள் கும்மி அடிப்பதில்லை, கோலாட்டம் போடுவதில்லை, கோலம் போடுவதில்லை...இதை எல்லாம் அதனால் நிறுத்திவிடலாமா?

நம் மரபு சார் விளையாட்டை எப்படி மேம்படுத்துவது, குறைகளை களைவது என்பதை நாம் யோசிக்கவேண்டும். பிறக்கையிலேயே எந்த விளையாட்டும் பர்பெக்டாக பிறக்கவில்லை. ஒலிம்பிக் பந்தயங்களில் கிரேக்கர் காலத்தில் ஏகபட்ட குறைகள் இருந்தன. நிர்வாணமாக தான் அப்போது போட்டிகளில் கலந்துகொண்டார்கள். பெண்கள் அனுமதிக்கபடவில்லை, கருப்பர்கள் அனுமதிக்கபடவில்லை. போட்டிகளில் அடித்துகொன்டு கொலை செய்துகொன்டார்கள்.

அதை எல்லாம் முறைபடுத்தி அந்த ஆட்டம் இன்று செம்மையாக்காப்டவில்லையா? அதுபோல் ஜல்லிகட்டை புரஷனல் ஆக்க குரல் கொடுத்து உதவுவதே நம் கடமை. அதை செய்யாமல் விட்டுவிட்டு நம் மரபுசார் விளையாட்டை நாமெ அழித்துவிட்டு அன்னிய விளையாட்டுக்களை ஆடிகொண்டிருந்தால் நாம் தமிழன் என எப்படி சொல்லிகொள்வது? எதை வைத்து சொல்வது? பேசுவது தமிங்கிலம், பிழைப்புக்கு ஆங்கிலம், பொழுதுபோக்குக்கு கிரிக்கட், தின்ன பீட்சா, பர்கர்...பிரவுன் தோல் மட்டும் இருந்தால் தமிழன் ஆகிவிட முடியுமா?

இத்தனை பண்பாட்டு தாக்குதல்களிலும் நம் மரபை காப்பாற்ற் நிற்கும் கிராம மக்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. அதை அழிக்கலாமா? நம் மரபை நாம் காக்காவிட்டால் வெளிநாட்டவனா வந்து காக்கபோகிறான்?

--
Reply all
Reply to author
Forward
0 new messages