பகதூர் வெள்ளையத் தேவன்

4 views
Skip to first unread message

Thevan

unread,
May 28, 2017, 7:31:58 AM5/28/17
to panbudan, mintamil
வீரபாண்டிய கட்டபொம்மனைத் திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன் ராமநாதபுரத்தில்
சந்தித்துப் பேசுகிறபோது திடீரென ஜாக்சன் கட்டபொம்மனைச் சுடுவதற்கு
ஏற்பாடு செய்யவும், கட்டபொம்மன், ஊமத்துரை வெள்யைத்தேவன் மூவரும் ஓடி
குதிரையில் ஏறித் தப்பினர். அந்தச் சமயம் தானவதிப் பிள்ளை அகப்பட்டுக்
கொள்கிறார்.

அவரை ஜாக்சன் சிறைப்படுத்தி பல அடக்குமுறைகள் செய்து சென்னையில் கவர்னர்
முன்னால், முழங்கால் அளவு ஒரு சிறு துண்டை கட்டச் செய்து உடல் எல்லாம்
காயங்களுடன் கொண்டுபோய் தானாவதிப் பிள்ளையை விசாரணைக்கு நிறுத்தினார்.

அப்போது கவர்னர் தானாவதிப் பிள்ளையை விசாரிக்கத் தொடங்கினார். தானாவதிப்
பிள்ளை கவர்னரிடம், “கவர்னர் அவர்களே, என்னைப் பாருங்கள். என் உடலில்
உள்ள காயங்களைப் பாருங்கள். ஒரு சிறு துணியைக் கட்டி பிச்சைக்காரனைப் போல
ஜாக்சன் என்னைக் கொண்டு வந்து உங்கள் முன்னால் நிறுத்தி இருக்கிறார்.
நான் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் திவான். அதாவது மந்திரி. நான் ஒரு
அரசியல் கைதி. நான் என்ன தவறு வேண்டுமானாலும் செய்ததாக ஜாக்சன்
சொல்லட்டும். அதற்கு நான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அமைச்சர் அந்தஸ்தில் உள்ள என்னிடம் இவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து, ஓர்
அரசியல் கைதிக்குரிய மரியாதையைக் கூட கொடுக்காத ஜாக்சன் எவ்வளவு
கொடுமையாக நடந்திருப்பார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்”
என்று சொன்னார்.
உடனே கவர்னர் தானாவதிப் பிள்ளையை விடுவிக்கச் செய்து காயங்களுக்கு
மருந்து போட்டு கவர்னர் மாளிகையில் விருந்தினராகத் தங்க ஏற்படு
செய்கிறார். ஒரு வாரம் கழித்து கவர்னர் தானாவதிப் பிள்ளையை அழைத்து,
“கட்டபொம்மனை பெரிய வீரன், தீரன், சூரன் என்றெல்லாம் சொல்கிறார்களே,
நீங்கள் கட்டபொம்மனை அழைத்து வர முடியுமா?” என்று கேட்கிறார்.

தானாவதிப் பிள்ளை, “அழைத்து வருகிறேன்” என்று கவர்னரிடம் கூறிவிட்டு
பாஞ்சாலங்குறிச்சி வந்து கட்டபொம்மன், ஊமத்துரை, வெள்ளையத் தேவன் ஆகிய
மூவரையும் அழைத்துக் கொண்டு கவர்னரிடம் போகிறார்.

கவர்னர் அவர்கள் நால்வருக்கும் விருந்தளித்து கட்டபொம்மனிடம், “கம்பெனி
அரசாங்கம் என்ன சொல்ல விரும்புகிறது என்றால் கப்பம் என்று பெயரளவுக்கு
ஏதேனும் ஒரு தொகையைத் தாங்கள் செலுத்தினால் போதும்” என்கிறார். அதற்குக்
கட்டபொம்மனும் சம்மதிக்க உடன்பாடு ஏற்படுகிறது.

அதன் பின் கவர்னர் கட்டபொம்மன், ஊமத்துரை, வெள்ளையத் தேவன், தானவதிப்
பிள்ளை ஆகிய நால்வரையும் அழைத்துக் கொண்டு ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு
அழைத்து வருகிறார். அங்கே மிக உயரமான பஞ்சாப் குதிரைகள் ஐந்து
நிற்கின்றன. குதிரைகள் ஐந்துக்கும் சேணம் மாட்டவில்லை. கடிவாளம்
மாட்டவில்லை.

அப்போது கவர்னர் கட்டபொம்மனைப் பார்த்து, “கட்டபொம்மன் அவர்களே உங்களை
பெரிய வீரர் என்று நான் கேள்விப் பட்டிருக்கிறேன். சேணம் மாட்டாத,
கடிவாளம் இல்லாத இந்தக் குதிரை மீதேறி நீங்கள் சவாரி செய்ய வேண்டும்”
என்று கூறுகிறார்.

கட்டபொம்மன் மிகவும் அலட்சியமாக, “இந்தச் சிறு வேலையை நான் செய்ய
வேண்டியதில்லை. என்னுடைய தளபதி வெள்ளையத் தேவன் செய்வார். அவரால்
முடியாவிட்டால் அப்புறம் நான் செய்கிறேன்” என்றார்.

ஐரோப்பாவில் தளபதி வீரத்தைக் காட்டிலும் ராஜா பத்து மடங்கு வீரராக
இருப்பது வழக்கம். கவர்னர் ஒரு குதிரையை அவிழ்த்து விட்டு வெள்ளையத்
தேவனை சவாரி செய்யச் சொல்கிறார்.

முன்னங்கால் இரண்டையும் உயரத் தூக்கி வெள்ளையத் தேவனை தாக்க வரும்
குதிரையின் நீளமான பிடரி மயிரைப் பிடித்து, தாவி ஏறி உட்கார்ந்து சிறிது
தூரம் சென்றதும், தனது காலால் வர்ம அடி அடிக்கவும் குதிரை சடாரென கீழே
விழுந்து புஸ் என நுரை தள்ளித் துடிக்கிறது. அதுபோல நான்கு குதிரைகளையும்
வெள்ளையத் தேவன் வர்ம அடியால் வீழ்த்தி நுரை தள்ளித் துடிக்க வைக்கிறார்.

தளபதியே இவ்வளவு வீரனாக இருந்தால் ராஜா இதைவிடப் பத்து மடங்கு
வீரனாகத்தான் இருப்பார் என்று கவர்னர் கருதி, ஐந்தாவது குதிரையை
வெள்ளையத் தேவனுக்குப் பரிசாகக் கொடுத்து “பகதூர்” என்ற பட்டத்தையும்
தருகிறார் (பகதூர் என்றால் இந்தியில் “வீரன்”, ‘‘துணிச்சலானவன்” என்று
பொருள்). அது முதல் வெள்ளையத் தேவன் பகதூர் வெள்ளையத் தேவன் என்று
மாறினார் (இதனை ஃபாதர் வெள்ளையத் தேவன் என்றும் சொல்வார்கள்). இந்த
வரலாற்றை யாரும் இதுவரை சொல்லவில்லை. காரணம் கட்டபொம்மனை விட வெள்ளையத்
தேவனை வீரனாகக் காட்ட மனம் இல்லாமைதான் என்று கருதுகிறேன். இந்த வரலாறு
தேவர் வாய்மொழியாகச் சொன்ன வரலாறாகும்.

இந்த வீர வரலாற்றை நான் சொல்ல வந்த காரணம் முத்துராமலிங்கத் தேவர்
மனிதனுக்கும் மிருகத்திற்கும் வர்ம அடி அடிக்கக் கற்றிருந்தார் என்றும்
அதுபோலவே பகதூர் வெள்ளையத் தேவனும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் வர்ம
அடி அடிக்கக் கற்றிருந்தார் என்று எடுத்துக் காட்டுவதற்காகத்தான்.

- ஏ.ஆர். பெருமாள், முடிசூடா மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,
பக்கம் 37, 38, 39

http://perumalthevan.blogspot.in/2017/05/blog-post_28.html

Ahamed Zubair A

unread,
May 29, 2017, 1:36:38 AM5/29/17
to பண்புடன்
அண்ணே... அந்த ஆதாரம்?? !!


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

இணைய இதழ்  : http://www.panbudan.com

Jaisankar Jaganathan

unread,
May 29, 2017, 2:11:03 AM5/29/17
to பண்புடன்
- ஏ.ஆர். பெருமாள், முடிசூடா மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,
பக்கம் 37, 38, 39 

இதான் அந்த ஆதாரம். இதுக்கு மேல என்ன வேண்டும்?

Ahamed Zubair A

unread,
May 29, 2017, 3:12:26 AM5/29/17
to பண்புடன்
:-))

Thevan

unread,
May 29, 2017, 7:08:17 AM5/29/17
to panb...@googlegroups.com
ஒரு கிறிஸ்தவரோ, ஒரு இஸ்லாமியரோ, ஒரு தலித்தோ அல்லது ஒரு சிறு
எண்ணிக்கையிலான சமூகத்தைச் சேர்ந்த நபரோ எழுதியிருந்தால் அதை ஆதாரமாக
சொல்லலாம். ஒரு தேவர் புத்தகம் எழுதினார் என்றால் அதை நம்ப முடியுமா? அதை
ஆதாரமாகவும் கொள்ளத்தான் முடியுமா, என்ன?

வாழ்க முற்போக்கு....

Ahamed Zubair A

unread,
May 30, 2017, 1:10:29 AM5/30/17
to பண்புடன்
ஆதாரம் இல்லாமல் எதையாவது எழுதினால் பிற்கால ஆராய்ச்சி மாணவர்களுக்கு குழப்பம் தருமே என்ற ரீதியில் கேட்டேன் ஐயா...

ஆதாரம் எல்லாவற்றிலும் கேட்கவேண்டும். அதுதான் சிந்தனைக்கு நல்லது :)

Thevan

unread,
May 30, 2017, 10:14:10 AM5/30/17
to panb...@googlegroups.com
நீங்கள் கீழே கொடுத்த வரியை பார்க்க வில்லை போலிருக்கிறது.

செல்வன்

unread,
Jun 3, 2017, 3:59:44 PM6/3/17
to mintamil, பண்புடன்
அலெக்சாந்தரும் இம்மாதிரி குதிரையை அடக்கியதை படித்துள்ளோம்.

பகிர்வுக்கும், தகவலுக்கும் நன்றி தேவன் அவர்களே

2017-06-02 18:25 GMT-05:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
குதிரை யானை நாய் முதலானவை தன் தலைவனுக்கு மட்டுமே அடங்கும்.
சேணம் மாட்டாத குதிரையை அடக்கி ஓட்டுவதற்கு வீரத்துடன் விவேகமும் வேண்டும். 
தகவலுக்கு நன்றி.

தஞ்சை நூலகத்தில் குதிரை சாத்திரம் அடங்கிய மிகப் பெரிய புத்தகம் ஒன்று உள்ளது. 

அன்பன்
கி. காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Thevan

unread,
Jun 4, 2017, 2:54:29 AM6/4/17
to panb...@googlegroups.com
நன்றி செல்வன் அவர்களே,


பகதூர் வெள்ளையத் தேவன் என்ற பெயரை எல்லாருக்கும் தெரியும். ஆனால்
அவருக்கு யார், எதனால் இந்தப் பட்டத்தை வழங்கியது என்ற தகவல் இந்த
புத்தகத்தில்தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆங்கிலேயர்கள்
இந்தியர்களுக்கு, பகதூர், ராவ் பகதூர், திவான் பகதூர் போன்ற பட்டங்களை
கொடுத்தார்கள் என்பது பலருக்கும் தெரியும்.

அதேபோல வர்மக் கலை மனிதர்க்கு உள்ளது போல மிருகங்களுக்கும் உண்டு
என்பதையும் தேவர் ஒருமுறை ஒரு மாட்டை அவ்வாறு வர்மத்தால் வீழ்த்தி
பின்னர் அதிலிருந்து விடுவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. அதை விளக்கவே
நூலாசிரியர் இதற்கு முன்பும் இதுபோல நடந்தது என்பதற்கு சான்றாக இந்தச்
சம்பவத்தை கூறியுள்ளார்.

Thevan

unread,
Jun 4, 2017, 2:57:07 AM6/4/17
to panb...@googlegroups.com
ஒரு காலத்தில் 5 கிமீ முதல் 10 கிமீ தூரத்தை மக்கள் சாதாரணமாக நடந்தே
கடந்து சென்றார்கள்.

20 கிலோ முதல் 30 கிலோ எடையுள்ள சுமைகளை தலைச்சுமையாக எடுத்துச் செல்வார்கள்.

வீட்டுக்கு தேவையான தண்ணீரை பெண்கள் கிணறுகளில் இறைத்து தூக்கி வருவார்கள்.

வீட்டுக்குத் தேவையான விறகையும் அருகேயுள்ள காடுகளில் இருந்து எடுத்து
தலைச்சுமையாக கொண்டு வருவார்கள்.

வீட்டில் புகை வெளியாகும் விறகு அடுப்பையே எரிப்பார்கள். நெல், சோளம்
போன்றவற்றை கைக்குத்தலாக குத்தி சமையல் செய்வார்கள். மாவுக்காக திருகை,
ஆட்டு உரலில் ஆட்டி எடுப்பார்கள்.

இதையெல்லாம் சொன்னால் மக்கள் நம்ப முடியாத காலமாக தற்போதைய காலம் மாறி வருகிறது.

Jaisankar Jaganathan

unread,
Jun 4, 2017, 8:55:10 AM6/4/17
to பண்புடன்
நானும் இதை எல்லாம் பார்த்திருக்கிறேன். பெருமாள் தேவன். சிறு வயதில். 
Reply all
Reply to author
Forward
0 new messages