பல்நலம்: தவிர்க்கவேண்டிய (நல்ல) உணவுகள்

2 views
Skip to first unread message

செல்வன்

unread,
Aug 3, 2017, 10:55:17 PM8/3/17
to செல்வன்


நல்லவை என நாம் நினைக்கும் சில உணவுகளும் பல்லுக்கு கெடுதலாக ஆகும். அவற்றில் சில

பழச்சாறு: என்னதான் சர்க்கரையே இல்லாமல் மாம்பழ ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் எல்லாம் வீட்டிலேயே போட்டாலும் பழத்தில் இயற்கையாக இருக்கும் சர்க்கரை எல்லாம் எனாமலில் படிந்து கிருமிகளை உற்பத்தி செய்யும் நோய்க்கூடமாக மாறிவிடும். பழசாறுகளை குடிக்கவேண்டாம். குடிப்பதனால் பல்லில் படாமல் ஸ்ட்ரா மூலம் குடிக்கவும்

சிட்ரஸ் பழங்கள் (எலுமிச்சை, ஆரஞ்சு) எலுமிச்சம்பழ சாறு உப்பு போட்டு குடித்தாலும் ஆப்பிள் சைடர் வினிகருக்கு இருக்கும் அதே விதிமுறைதான். சிட்ரஸ் பழங்களில் ஆசிட் உண்டு. ஆசிட் எனாமலுக்கு கெடுதி. அதனால் பல்லில் படாமல் ஸ்ட்ரா போட்டுதான் குடிக்கவேண்டும். தப்பி தவறி குடிக்கும் சூழல் உருவானால் குடித்தபின் தண்ணீர் ஒரு பெரிய கோப்பை நிறைய பருகவும். அது எனாமலில் இருக்கும் ஜூஸை அடித்துக்கொண்டு உள்ளே போய்விடும். அல்லது வாயை கொப்புளிக்கவும்

காபி/டீ: இவற்றில் உள்ள கபீன் பல்லில் கரைகளை உருவாக்கும். வாய் உலர்ந்து போகவும் ஆகலாம். இவற்றை எத்த்னைக்கெத்தனை குடிக்கிறீர்களோ அந்த அளவு நீரை பருகவேண்டும் (உடனே அல்ல)

உலர் திராட்சை, பேரிச்சை: பல்லில் ஒட்டிக்கொள்ளகூடிய இம்மாதிரியான உணவுகள் மிட்டாய்க்கு ஒப்பாக பல்லுக்கு கேடுவிளைவிக்ககூடியவை. என்னதான் இவை பழங்கள் என்றாலும் இவற்றை உண்டபின் பல்குத்தும் குச்சியை வைத்து பல் இடுக்குகளை நன்றாக குத்தி எடுத்து வாயை கொப்புளித்து பல்லும் துலக்கவேண்டும்

ஸ்டார்ச் உள்ள உணவுகள் (கிழங்குகள்): உருளை, சர்க்கரவைவள்ளி என ஸ்டார்ச் இருக்கும் எந்த உணவுகளை உண்டபின்னும் வாயை கொப்புளிப்பதும், பல் இடுக்குகளில் உள்ள உணவுதுணுக்குகளை பல்குத்தும் குச்சியால அகற்றுவதும் அவசியம். ஸ்டார்ச் மிக எளிதில் பல் இடுக்கில் சிக்கி பிளேக்கை உருவாக்கிவிடும்

தவிர கெட்ட உணவுகளில்:

டயட் சோடா: சர்க்கரை இல்லாத கோக்ஸீரோ போன்றவையும் பல்லுக்கு மிக ஆபத்தனவை. உங்களுக்கு பல்கூச்சம் இருந்தால் அதற்கு முதன்மை காரணம் இவற்றில் உள்ள பாஸ்போரிக் அமிலமே.

மது: மது வாயை டிரை செய்து எச்சில் வரும் அலவை குறைத்து ஜீரணத்தையும், பல்நலனையும் கெடுத்துவிடும்

பொதுவாக:

அரிசி கோதுமை என எது சாப்பிட்டாலும் சாப்பிட்டபின் வாயை நன்றாக கொப்புளித்து முடிந்தால் பல்துலக்கிவிடவேண்டும்.

வருடம் இருமுறை டென்ட்டிஸ்டிடம் போய் பல்லை க்ளீன் செய்துகொள்ளவேண்டும்

பிளாஸ் செய்வது கூட அத்தனை முக்கியமில்லை. ஆனால் உண்டபின் வாயில் மீதமிருக்கும் உணவுதுணுக்குகளை குச்சியால் அகற்றிவிட்டு, வாயை கொப்புளிப்பது மிக முக்கியம்

அதனால் இந்த வருடம் இதுநாள்வரை டென்டிஸ்டை பார்க்கவில்லை என்றால் உடனே அப்பாயிண்மென்ட் வாங்கவும்

http://www.neanderselvan.com/dentalhygeine/

--

செல்வன்
Reply all
Reply to author
Forward
0 new messages