கிஷோர் குமார் – சல்தே சல்தே….

54 views
Skip to first unread message

VJagadeesh

unread,
Aug 4, 2014, 12:19:19 PM8/4/14
to பண்புடன்

http://karundhel.com/2010/10/kishorekumar-tribute.html

கிஷோர் குமார் – சல்தே சல்தே….

Kishore Kumar

ஹிந்திப் பாடல்களுக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு, ரங்கோலி, தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய ஆரம்ப நாட்களில் இருந்து ஆரம்பிக்கிறது. அந்நாட்களில், இருந்த ஒரே தொலைக்காட்சி அதுதான் என்பதனால், தூர்தர்ஷனின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் பார்ப்பது எங்களது வழக்கம். குறிப்பாக ரங்கோலி, சித்ரஹார், சித்ரமாலா ஆகியவை. என்னவென்றே புரியாமல் பார்க்கத்தொடங்கிய நாட்கள் அவை. அப்படிப் பார்க்கத் தொடங்கி, பின் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கி, ஒரு அளவு குன்ஸாகப் புரிய ஆரம்பித்தது ஹிந்தி. அதன்பின், சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் ஹிந்திப்படத்தைப் பார்க்கத் துவங்கினேன். இதனால், ஹிந்திப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின் பல சேனல்கள் வந்தபின்னரும், தொலைக்காட்சியில் ஹிந்திப் பாடல்கள்.. அதுவும் பழைய பாடல்கள் என்றால், பார்க்க அமர்ந்துவிடுவேன். அப்படி எனது மனம் கவர்ந்த ஒரு சில பாடல்களைப் பற்றியதே இப்பதிவு. இப்பதிவுக்கு இன்னொரு காரணம், பத்து வருடங்கள் கழித்து ஒரு பாடலைக் கேட்க நேர்ந்ததே. அப்பாடல், இதோ – அங்கியோன்கே ஜரோகோ ஸே.

ஆபாஸ் குமார் கங்குலி – இது நம் சௌரவ் கங்குலியின் உறவுக்காரர் இல்லை. கண்ட்வா என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, ஹிந்தித் திரைப்பட உலகில் நுழைந்து, பிரம்மாண்டமான புகழைச் சம்பாதித்து, புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்துபோன கிஷோர் குமாரே அவர். எனக்கு மிகமிகப் பிடித்த வெகுசில மனிதர்களில் ஒருவர்.

ஐம்பதுகளில், ஹீரோ. பாடகர். அறுபதுகளில், தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா.. பாடலாசிரியர்.. நடிகர்.. இத்தனை விஷயங்களையும் ஜாலியாகச் செய்த மனிதர். இவ்வளவுக்கும் மேல், மனிதருக்கு ஒன்றின் பின் ஒன்றாக நான்கு திருமணங்கள் வேறு. எக்ஸெண்ட்ரிக் என்று ம் பெயரெடுத்தவர். ’கிஷோர் குமார் ஜாக்கிரதை’ என்று தனது வீட்டின் வாயிலில் எழுதி ஒட்டிவைத்தவர். அதேபோல், பணமில்லையெனில், என் வீட்டுக்கே வந்துவிடாதீர்கள் என்று ஒரு கறாரான கொள்கை வைத்திருந்தவர். ஸ்டுடியோ வரை சென்று, பணம் கொடுக்காததால் பாட மறுத்து வீடு திரும்பிய நிகழ்ச்சிகள் ஏராளம். தன் மீது கேஸ் போட்ட ஒரு தயாரிப்பாளரை, தனது வீட்டு அலமாரியில் இரண்டு மணி நேரம் பூட்டி வைத்தவர்.

இத்தனை விசித்திர குணாதிசயங்கள் இருந்தும், ஹிந்தித் திரையுலகம், கிஷோர் குமாரைத் தலையில் தூக்கி வைத்து மரியாதை செய்தது. அவர் என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டது. காரணம்………?

அவரது கணீரென்ற கம்பீரமான குரல். அந்தக் குரலுக்கு இணை என்று யோசித்தால், மலேசியா வாசுதேவனை மட்டுமே உதாரணமாகச் சொல்லலாம்.

அக்காலத்தில் ஹிந்தித் திரையுலகில், அமைதியான, மென்மையாக குரலே பின்னணிப் பாடல்களில் பிரபலமாக இருந்தது. மொஹம்மத் ரஃபி, முகேஷ், மஹேந்திர கபூர், ஹேமந்த் குமார் ஆகிய பாடகர்களே இவ்வகையில் மிகப்பிரபலமாக விளங்கிய காலகட்டம் அது. இவர்களின் திறமையில் எவருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இவர்கள் அனைவருமே பின்னணிப் பாடல்களில் உச்சம் காட்டி வந்தனர்.

கிஷோர் குமாரிடம் இருந்தது, இவர்கள் யாவரிடமும் இல்லாத ஒரு கணீர்க்குரல். நாற்பதுகளில், கே. எல். ஸாய்கல் என்ற பாடகரைப் பற்றி ஹிந்திப் பாடல் விரும்பிகளுக்குத் தெரிந்திருக்கலாம். ஹிந்தித் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக விளங்கியவர் (நமது தியாகராஜ பாகவதரைப் போல்). தேவதாஸாக நடித்த சிலரில் ஒருவர். பிரம்மாண்டமான புகழைப் பெற்று, அகாலமாக இறந்து போனவர். இறந்ததற்குக் காரணம், மதுவில் திளைத்தது.

இந்தக் கே. எல் ஸாய்கலே, கிஷோர் குமாரின் ஆதர்சம். இவரது பாடல்களைத் திரும்பத் திரும்பப் பாடியே தனது குரலைக் கிஷோர் குமார் செம்மைப்படுத்தினார். இயற்கையாகவே இருந்த ஒரு கணீர்க்குரலை மேலும் மெருகூட்டி, இவர் பாடிய ஆரம்பப் பாடல்கள் பல, இன்றளவும் சூப்பர் ஹிட்டுகள். எஸ்பிபியைப் போலவே, எந்த வித இசைப்பயிற்சியும் இல்லாமல் திரையுலகுக்கு வந்தவர் இவர்.

பின்னணிப் பாடல்கள் பாடிப் புகழடைய வேண்டும் என்ற ஆசையில் பம்பாய் வந்த கிஷோர் குமாருக்குக் கிடைத்தது, நடிக்கும் வாய்ப்புகள் (இது மலேசியா வாசுதேவனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமை). இவரது மூத்த சகோதரரான அஷோக் குமார் பெற்றிருந்த புகழின் காரணமாக, கிஷோர் குமாருக்கு நடிக்கும் வாய்ப்புகள் பல வந்தன. இதன் காரணமாக, ’ஷிகாரி (1946)’ என்ற படத்தில் நடித்தார். ’ஸித்தி (ziddi) என்ற படத்தில், பின்னணிப் பாடல் ஒன்றும் பாடி, தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.

அந்தக் காலகட்டத்தில், ஹிந்திப் படங்களின் மிக பிஸியான நடிகராக மாறினார் கிஷோர் குமார். அவரது படங்களில், பாடல்களையும் அவரே பாடி வந்தார். அவரது நேரமின்மை காரணமாக, ஒரு படத்தில், கிஷோர் குமாருக்கு மொஹம்மது ரஃபி பின்னணி பாடிய விஷயமும் நடந்தது. ஷராரத் (1959) என்ற அப்படத்தின் ‘அஜப் ஹை சாத் சாத் தெரி யே ஸிந்தகி’ என்ற பாடலை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.

அதே காலகட்டத்தில் கிஷோர் குமார் பாடிய பல பாடல்கள், மிகவும் அருமையாக இருக்கும். ஆஷா (1957) படத்தின் ’ஈனா மீனா டீகா’ (ஒரு ஆங்கிலப்பாடலின் ஈயடிச்சாங்காப்பி), சல்தி கா நாம் காடி (1958) படத்தின் ‘எக் லட்கி பீகி பாகி ஸி’, (நடிப்பும் அவரே), ஃபன்தூஷ் (1956) படத்தின் ‘துக்(ஹி) மன் மேரே’, பேயிங் கஸ்ட் (1957) படத்தின் ‘மானா ஜனாப்னே புகாரா நஹி(ன்)’, நௌ தோ க்யாரா (1957) படத்தின் ’ஹம் ஹெய்ன் ராஹி ப்யார் கே’, முஸாஃபிர் (1957) படத்தின் ‘முன்னா படா ப்யாரா’ (இப்படம் தான் ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் முதல் படம். இவர் ஹிந்தியில் எனக்குப் பிடித்த ஜனரஞ்சக இயக்குநர். நமது தில்லுமுல்லு, இவரது ‘கோல்மால்’ படத்தின் ரீமேக்கே ஆகும். இவர் எடுத்த ‘பவர்ச்சி’ படமே, தமிழில் ‘சமையல்காரன்’ என்ற பெயரில் வெளிவந்து, மு.க. முத்துவிற்கு ஒரு சூப்பர்ஹிட்டாக மாறியது). ஹிந்தி இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன், கிஷோர் குமாரைத் தொடர்ந்து பாட வைத்து, வாய்ப்புக்கள் கொடுத்து வந்தார். பர்மனைப் பொறுத்த வரை, கிஷோர் குமாரின் குரல், ஒரு அருட்கொடை என்றே நம்பி வந்தார். ஆகையால், தனது படங்களான ஃபன்தூஷ், பேயிங் கஸ்ட், நௌ தோ க்யாரா ஆகிய படங்களில் சில அட்டகாசமான பாடல்களைக் கிஷோருக்கு வழங்கினார்.

இவ்வளவு பிஸியாக இருந்த கிஷோர் குமார், அறுபதுகளின் துவக்கத்தில், மெல்ல மெல்ல ஹிந்திப் பட உலகால் புறக்கணிக்கப்படத் துவங்கினார். ஆரம்ப அறுபதுகளில் இருந்து, 1969 வரை, மிகச் சில பாடல்களே அவரால் பாட முடிந்தது. அக்காலகட்டத்தில், சில படங்களிலும் நடித்தார். அவரே தயாரித்து, இயக்கி நடித்த படங்களான ஜும்ரூ (1961), தூர் ககன் கி சாவோன் மேய்ன் (1964) ஆகிய படங்கள், அந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. எஸ். டி பர்மனின் மகனான ஆர். டி. பர்மனும், தனது தந்தையைப் போலவே, கிஷோர் குமாருக்கு வாய்ப்புகளை வழங்கினார். இதனாலேயே, படோசன் (1968) படத்தில் சில அருமையான பாடல்கள், கிஷோர் குமாருக்குக் கிடைத்தன. மட்டுமல்லாமல், படோசனில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்தார். கதாநாயகன் சுனில் தத்தின் நண்பனாக, ஒரு இசையமைப்பாளராக அவர் கலக்கியிருப்பார். இந்தப்படம், தமிழில், ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்ற பெயரில் முதலிலேயே வெளிவந்துவிட்டது. அதன் காப்பி தான் படோசன். தங்கவேலு தமிழில் நடித்த கதாபாத்திரமே கிஷோர் குமார் ஹிந்தியில் செய்தது.

’கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே’ பாடல் நினைவிருக்கிறதா? இதன் ஹிந்தி வடிவம், ‘மேரே சாம்னேவாலே கிட்கி மேய்ன் எக் சாந்த் கா துக்டா ரெஹ்தா ஹை’ (எனது பக்கத்து ஜன்னலில், நிலவின் ஒரு பிம்பம் வசிக்கிறது) என்ற சூப்பர்ஹிட் பாடல். இப்படத்தின் ‘கெஹ்னா ஹை’ என்ற அருமையான காதல் பாடலும் கிஷோரின் குரல் வண்ணமே.

இப்படி இருக்கையில், கிஷோர் குமாரின் வழ்வின் மிகப்பெரிய திருப்புமுனை, 1969ல் வந்தது. ஆராதனா என்ற படத்தை, ஷக்தி சமந்தா என்றவர் இயக்கத் தொடங்கிய காலம் அது. அப்படத்தின் இசையமைப்பாளர், எஸ்.டி .பர்மன். வழக்கப்படி, இப்படத்தில் சில பாடல்களைக் கிஷோர் குமாருக்கு அவர் கொடுக்க, அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்த பாடல்களாக அவை மாறின. ‘மேரி சப்னோங்கி ரானி கப் ஆயேகி தூ’, ’கோரா காகஸ் தா யே மன் மேரா’, ‘ரூப் தெரா மஸ்தானா’ (பாதிக்கு மேல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட ஒரு பாடல்) என்ற அப்பாடல்கள், கேட்டவர்களைப் பைத்தியம் பிடிக்க வைத்தன. இதன்மூலம், கிஷோர் குமார், ஐம்பதுகளில் தான் இருந்த இடத்தை மீண்டும் பிடித்தார்.

அதன் பின் அவர் திரும்பிப் பார்க்கவே இல்லை. வரிசையாகப் பல சூப்பர் ஹிட் பாடல்கள் வெளிவந்தன. கிஷோர் குமாரின் பாடல்கள் இருந்தாலேயே, படம் ஓடும் என்ற நிலை உருவானது.

ராஜேஷ் கன்னாவின் ஆஸ்தானப் பாடகராக மாறினார் கிஷோர் குமார். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த யே ஷாம் மஸ்தானி’ (கடீ பதங் – 1970), ’ஸிந்தகி ஏக் சஃபர் ஹை சுஹானா (அந்தாஸ் – 1971) – இந்த அந்தாஸில் ராஜேஷ் கன்னா செய்த கதாபாத்திரமே, மௌன ராகத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம்; ’ச்சிங்காரி கோயி பட்கே’ (அமர் ப்ரேம் – 1970);, ’ஸிந்தகி கா சஃபர் (சஃபர் – 1971) – இப்பாடலே கிஷோரின் மிகப் பிடித்தமான பாடலும் ஆகும்; ’மேரே தில் மே ஆஜ் க்யா ஹை’ (தாக் – 1972); ‘மேரே நைனா சாவன் பாதோன்’ (மெஹ்பூபா – 1976); ‘ஹமே(ன்) தும்ஸே ப்யார் கித்னா (ஹுத்ரத் – 1980)’ ஆகிய பாடல்கள், வெறித்தனமான ஹிட்டுகள் ஆயின. இவை சில சாம்பிள்களே. இது தவிர, இன்னமும் ஏராளமான பாடல்கள் இருக்கின்றன.

ராஜேஷ் கன்னாவுக்குப் பாடிக்கொண்டு இருக்கையிலேயே, அமிதாப் பச்சன் என்ற வளரும் நடிகருக்கும் கிஷோர் குமார் பாடினார். அமிதாப் பச்சன் சூப்பர் ஸ்டாராக ஆனபின், இவர்கள் கூட்டணி மிகப் பிரபலமடைந்தது. ‘காய்க்கே பான் பனாரஸ் வாலா’ (டான்) – தமிழில் வெத்தலையைப் போட்டேண்டி; ’அரே தீவானோ.. முஜே பெஹச்சானோ’ (டான்), ‘கே பக் குங்ரூ பாந்த் மீரா நாச்சிதி’ (நமக் ஹலால்) – தமிழில், தோட்டத்துல பாத்தி கட்டி; ’ரோதே ஹுவே ஆதே ஹைன் சப்’ (முகத்தர் கா சிகந்தர்); ’இந்தெஹா ஹோகயி இந்தஸார் கி’ (ஷராபி); ’மீத் நா மிலாரே மன் கா’ (அபிமான்); ’தில் பர் மேரே’ (சத்தே பே சத்தா); ’ஓ சாத்தி ரே’ (முகத்தர் கா சிகந்தர்); ‘ஜஹான் தேரி ஏ நஸர் ஹை’ (காலியா) – தமிழில் கூலிக்காரன் ஆகியவை ஒரு சில சேம்பிள்கள்.

இன்னமும் ஆயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவ்வப்போது பகிருகிறேன்.

கிஷோர் குமார், புகழின் உச்சியில் இருக்கையில், 1987ல், தனது 58ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.

பி.கு 1 – கிஷோர் குமார், நமது ஸ்ரீதர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ ப்டத்தின் ஹிந்தி வடிவமான ‘பியார் கியே ஜா’ படத்தில், முத்துராமனின் வேடத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீதர் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ படத்தில் இவர் கிஷோர் குமாரைச் சந்தித்த ரசமான நிகழ்ச்சியைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். கல்கியில் இது தொடராக வந்தபோது படித்திருக்கிறேன்.

பி.கு 2- – நல்ல பாடல்கள் எங்கிருந்தாலும் கேட்பேன் என்ற கொள்கை உடைய நண்பர்களுக்கு மட்டும் – கீழே எனக்கு மிகப்பிடித்த கிஷோர் குமாரின் பாடல்களின் பட்டியல் கொடுத்திருக்கிறேன். இப்பாடல்களைத் தரவிறக்கி, அமைதியான சூழலில், விளக்குகளை அணைத்துவிட்டு, கேளுங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.

  1. கோரா காகஸ் தா யே மன் மேரா – ஆராதனா
  2. பல் பல் தில் கே பாஸ் – ப்ளாக்மெய்ல்
  3. சல்தே சல்தே மேரே யே கீத் – சல்தே சல்தே
  4. ஓ ஷாம் குச் அஜீப் தி – (க்)ஹாமோஷி
  5. கில் தே ஹைன் குல் யஹான் – ஷர்மிலீ (தமிழில் ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே)
  6. பூலோன் கி ரங் ஸே – ப்ரேம் பூஜாரி
  7. காதா ரஹே மேரா தில் – கைட்
  8. யே ஷாம் மஸ்தானி – கடீ பதங்
  9. மேரே சாம்னே வாலி கிட்கி மேய்ன் – படோசன்
  10. ஓ சாத்தி ரே – முகத்தர் கா சிகந்தர் (இந்த சுட்டியில், அமிதாப்பின் நடிப்பைக் கவனியுங்கள்.. தான் சிறுவயதிலிருந்து காதலிக்கும் பெண், தனது அருகாமையில் இருந்தும், தனது காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் துன்பத்தைத் தனது கண்களில் உருக்கமாகக் காட்டியிருப்பார்).

பி.கு 3 – கிஷோர் குமாரின் வெகுசில நேரடி இசை நிகழ்ச்சிகளின் இணைப்புகள் இங்கே..

http://www.youtube.com/watch?v=GVD-r4MU3Wc
http://www.youtube.com/watch?v=W74jCTBB_jo
http://www.youtube.com/watch?v=M7-hW5Uyemg
http://www.youtube.com/watch?v=ENGSNgzodSA
http://www.youtube.com/watch?v=uVBwAAeIo3g&feature=related
http://www.youtube.com/watch?v=qxdveuLmBoI&feature=related
http://www.youtube.com/watch?v=lTowqyzp2-E&feature=related

இவைகளைப் பார்த்தால், சந்திரபாபுவுக்கும் கிஷோருக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஆசாத்

unread,
Aug 6, 2014, 11:39:36 AM8/6/14
to panb...@googlegroups.com

கிஷோர் குமார், புகழின் உச்சியில் இருக்கையில், 1987ல், தனது 58ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.


இந்தப் பக்கம் வரமுடியாம இருந்துச்சு. இன்னிக்கு வில்லன் இழுத்து வந்தார். ஒண்ணுமில்ல, கிஷோர் பதிவி எடுத்துப் போட்டேன், நீங்க இருக்கீங்கன்னு நெனச்சேன்ன்னார்.

இருக்கத்தான் இருக்கேன். ஆசிப விட்டுட்டுப் போகவா முடியும்? வரத்தான் நேரம் கெடைக்றதில்ல. 

கிஷோர் பத்தி அந்தக் காலத்துல தமிழ் மணத்துல கட்டுரை ஒன்ணு நம்மள்து இருக்கும். தேக்கா ஏக் க்வாப் வொ தோ சில்சிலே ஹுவே தூர் தக் _____ குல் கிலே ஹுவேன்னு சில்சிலா பாட்டுல கிஷோர் துவக்கம் கேட்டா அப்படியே எங்கியோ பறக்றாப்ல இருக்கும்.

துள்ளல்னா ஏக் மைன் அவுர் ஏக் து...ம்ஹூம்...சல்தாஹை! இதே பண்புடன்ல நீத்து சிங் பத்தி ரொம்ப பேசிட்டோம், இப்ப பேசத் தயக்கமா இருக்கு. வயசாகிட்டதால வந்த பக்குவமுன்னு நெனைக்கிறேன். சல்தாஹை! ஃபில்மி கெமிஸ்ட்ரின்னா இது.

shylaja

unread,
Aug 6, 2014, 11:43:41 AM8/6/14
to பண்புடன்
ஜீ,சில்சிலா படத்தில் அந்தப் பாட்டு கிஷோர் குரல் அந்த லொகெஷன்   ரேகா   ஆஹா.


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
“Good friends, good books, and a sleepy conscience: this is the ideal life.”
Mark Twain

ஆசாத்

unread,
Aug 6, 2014, 11:44:14 AM8/6/14
to panb...@googlegroups.com

ம்ம்ம்..மேல இருக்றது இல்லை...அங்க கர்ஸ்து தவறிப்போய் வந்துருச்சு..கீழ இருக்றதுதான் ஏக் மைன் அவுர் ஏக் து...இரண்டாம் முறையாக பார்க்கிறேன் :-)

Omprakash

unread,
Aug 6, 2014, 11:45:06 AM8/6/14
to panb...@googlegroups.com
கிஷோருக்கு முன்னாடி நவுஷாத் இறந்த தினம் வந்துச்சே, இவங்க ரெண்டு பேரும் பாடின ஒரே பாட்டு “ தும் பின் ஜாவோ ககான்”  

அதை பத்தி சொல்ல முடியுமா ஆசாத் ஜி?


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தெய்வம் நீ என் றுணர்..

AbulKalam Azad

unread,
Aug 6, 2014, 11:53:54 AM8/6/14
to பண்புடன்
> Omprakash <vi.omp...@gmail.com>:

கிஷோருக்கு முன்னாடி நவுஷாத் இறந்த தினம் வந்துச்சே, இவங்க ரெண்டு பேரும் பாடின ஒரே பாட்டு “ தும் பின் ஜாவோ ககான்”  

ஜீ,

தும் பின் ஜாவூன் கஹான்...சூப்பர் டூப்பர் ஹிட் ப்யார் கா மவ்ஸம் பத்திதான சொல்றீங்க? வெலிங்டன் திரையரங்கமா இருந்தப்போ செகண்ட் ரன்ல நூன்ஷோவாப் பாத்தோம். ப்யார் கா மவ்ஸம் ஃபஸ் ரிலீஸ் அப்ப பாக்கலை.

கொஞ்சம் டைம் குடுங்க அப்புறம் வரேன்.

இப்ப கொஞ்சம் வெளில போகணும். 

Omprakash

unread,
Aug 6, 2014, 11:56:16 AM8/6/14
to panb...@googlegroups.com
அதான் நினைக்கிறேன் ஷமி கபூரா? அவரோட தம்பியோ நடிச்சது..


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

AbulKalam Azad

unread,
Aug 6, 2014, 2:55:18 PM8/6/14
to பண்புடன்

ஜீ,சில்சிலா படத்தில் அந்தப் பாட்டு கிஷோர் குரல் அந்த லொகெஷன்   ரேகா   ஆஹா.

ஹாலந்தின் துலிப் மலர்கள் பின்னணியில், அட அட அட. உயரமாக இல்லாத என்போன்றோரைப் பொறாமைப்படவைத்த அமிதாபின் உடை. அப்படியான ஸ்வெட்டரை நானும் முயற்சி செய்திருக்கிறேன் :-) கான மயிலாடக்... 

R.VENUGOPALAN

unread,
Aug 7, 2014, 12:02:09 AM8/7/14
to பண்புடன்
2014-08-06 21:13 GMT+05:30 Omprakash <vi.omp...@gmail.com>:
கிஷோருக்கு முன்னாடி நவுஷாத் இறந்த தினம் வந்துச்சே, இவங்க ரெண்டு பேரும் பாடின ஒரே பாட்டு “ தும் பின் ஜாவோ ககான்”  

அதை பத்தி சொல்ல முடியுமா ஆசாத் ஜி?

தும் பின் ஜாவூம் கஹா பாடலைப் பாடியவர்கள் கிஷோர்தா மற்றும் ரஃபி சாப்!
சம்மன் இல்லாம ஆஜர் ஆனதைப் பொறுத்துக்கணும். :-)
 


2014-08-06 21:09 GMT+05:30 ஆசாத் <banu...@gmail.com>:


கிஷோர் குமார், புகழின் உச்சியில் இருக்கையில், 1987ல், தனது 58ம் வயதில் மாரடைப்பால் காலமானார்.


இந்தப் பக்கம் வரமுடியாம இருந்துச்சு. இன்னிக்கு வில்லன் இழுத்து வந்தார். ஒண்ணுமில்ல, கிஷோர் பதிவி எடுத்துப் போட்டேன், நீங்க இருக்கீங்கன்னு நெனச்சேன்ன்னார்.

இருக்கத்தான் இருக்கேன். ஆசிப விட்டுட்டுப் போகவா முடியும்? வரத்தான் நேரம் கெடைக்றதில்ல. 

கிஷோர் பத்தி அந்தக் காலத்துல தமிழ் மணத்துல கட்டுரை ஒன்ணு நம்மள்து இருக்கும். தேக்கா ஏக் க்வாப் வொ தோ சில்சிலே ஹுவே தூர் தக் _____ குல் கிலே ஹுவேன்னு சில்சிலா பாட்டுல கிஷோர் துவக்கம் கேட்டா அப்படியே எங்கியோ பறக்றாப்ல இருக்கும்.

துள்ளல்னா ஏக் மைன் அவுர் ஏக் து...ம்ஹூம்...சல்தாஹை! இதே பண்புடன்ல நீத்து சிங் பத்தி ரொம்ப பேசிட்டோம், இப்ப பேசத் தயக்கமா இருக்கு. வயசாகிட்டதால வந்த பக்குவமுன்னு நெனைக்கிறேன். சல்தாஹை! ஃபில்மி கெமிஸ்ட்ரின்னா இது.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
தெய்வம் நீ என் றுணர்..

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

R.VENUGOPALAN

unread,
Aug 7, 2014, 12:04:06 AM8/7/14
to பண்புடன்
கிட்டத்தட்ட அதே லொகேஷன் தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கேவிலும் தமிழில் அன்னியனில் அய்யங்காரு வீட்டு அழகே பாட்டிலும் வரும். அடியேன் அமிதாப்பின் ஹேர்ஸ்டைலைக் காப்பியடிக்க அக்காலத்திலேயே சொளையாக நூறு ரூபாய் மாதாமாதம் செலவழித்தவன். :-)
 
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN

Jaisankar Jaganathan

unread,
Aug 7, 2014, 12:09:30 AM8/7/14
to panb...@googlegroups.com
அப்போ எடுத்த புகைப்படத்தை போடவும். பாத்து தெரிஞ்சுக்குறோம். எது அமிதாப் ஹேர் ஸ்டைல் என்று
regards,
jaisankar jaganathan

Omprakash

unread,
Aug 7, 2014, 12:59:43 AM8/7/14
to panb...@googlegroups.com
நீங்கதான் என்னை பொறுக்கனும் நவுஷாத்ன்னு தப்பா சொல்லிட்டேன் ஆமா அது முகமது ரஃபி...

AbulKalam Azad

unread,
Aug 7, 2014, 1:06:28 AM8/7/14
to பண்புடன்
ஜாலி வர்ஷன் கிஷோர் பாடுனதாவும், பேத்தாஸ் வர்ஷன் ரக்பி பாடுனதாவும் இருக்ற பாட்டு, முக்கத்தர் கா சிக்கந்தர்ல 'ரோத்தே ஹுவே ஆத்தேஹை சப்' 

Omprakash

unread,
Aug 7, 2014, 1:07:38 AM8/7/14
to panb...@googlegroups.com
இல்லையே ரஃபி பாடியது டூயட் தான்


2014-08-07 10:36 GMT+05:30 AbulKalam Azad <banu...@gmail.com>:
ஜாலி வர்ஷன் கிஷோர் பாடுனதாவும், பேத்தாஸ் வர்ஷன் ரக்பி பாடுனதாவும் இருக்ற பாட்டு, முக்கத்தர் கா சிக்கந்தர்ல 'ரோத்தே ஹுவே ஆத்தேஹை சப்' 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

R.VENUGOPALAN

unread,
Aug 7, 2014, 1:08:27 AM8/7/14
to பண்புடன்
2014-08-07 10:36 GMT+05:30 AbulKalam Azad <banu...@gmail.com>:
ஜாலி வர்ஷன் கிஷோர் பாடுனதாவும், பேத்தாஸ் வர்ஷன் ரக்பி பாடுனதாவும் இருக்ற பாட்டு, முக்கத்தர் கா சிக்கந்தர்ல 'ரோத்தே ஹுவே ஆத்தேஹை சப்' 

இந்தப் பாட்டை ஹரிஹரனை வைச்சும் பாடச்சொல்லி ரிகார்ட் பண்ணியிருக்காங்க. ஆனா, நமக்குக் கிடைச்சது கிஷோர்தா ரஃபி சாப் ரெண்டு பேரோடதும்தான்.

R.VENUGOPALAN

unread,
Aug 7, 2014, 1:09:01 AM8/7/14
to பண்புடன்

2014-08-07 10:37 GMT+05:30 Omprakash <vi.omp...@gmail.com>:
இல்லையே ரஃபி பாடியது டூயட் தான்

ஆமாம். கிஷோர் பாடியதுதான் pathos. சசிகபூர்.

Omprakash

unread,
Aug 7, 2014, 1:14:04 AM8/7/14
to panb...@googlegroups.com
ஹரிகரன் பாடிய வெர்ஷனும் நல்லா தான் இருந்தது, அந்த படம் பேர் தெரியல அதுல எல்லா பாட்டுமே பழைய பாட்டுதான்


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

R.VENUGOPALAN

unread,
Aug 7, 2014, 7:17:34 AM8/7/14
to பண்புடன்
2014-08-07 10:44 GMT+05:30 Omprakash <vi.omp...@gmail.com>:
ஹரிகரன் பாடிய வெர்ஷனும் நல்லா தான் இருந்தது, அந்த படம் பேர் தெரியல அதுல எல்லா பாட்டுமே பழைய பாட்டுதான்

தில் வில் பியார் வியார்

உண்மையிலே ‘பியார் கா மௌசம்’ படத்தில் ‘தும் பின் ஜாவு கஹா’ பாட்டு கிட்டத்தட்ட அஞ்சு வாட்டி ரிபீட் ஆகும்னு ஞாபகம். 

கிஷோருக்கும் ரஃபிக்கும் பிரச்சினைன்னு நிறைய புரளி கட்டி விடுவாங்க அப்பப்போ. ஆனா, ரெண்டுபேரும் சேர்ந்து பாடின பல ஹிட் பாடல்கள் இருக்கு. ஆசாத்ஜீ வரப்போற இழையிலே அடக்கி வாசிக்கணும்னு தான் காத்திருக்கேன். ஆயியே ஜனாப்! :-)

Omprakash

unread,
Aug 7, 2014, 9:27:27 AM8/7/14
to panb...@googlegroups.com
பிஸியா இருக்காரு போல 


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

R.VENUGOPALAN

unread,
Aug 8, 2014, 5:47:40 AM8/8/14
to பண்புடன்
 நடிகர் பிராணைப் பற்றி எழுதியபோது ‘ஹாஃப் டிக்கெட்’ படத்தில் அவரும் கிஷோர்குமாரும் சேர்ந்து வருகிற ‘ஆக்கே ஸீதி லகி’ என்ற பாடலைப் பற்றிக் குறிப்பிட்டதாக ஞாபகம். அந்தப் பாடலில் பெண்வேடத்தில் வருகிற கிஷோர்குமாரைப் பார்த்து பிராண் கிறங்குவதுபோலக் காட்சி. அந்தப் பாடலில் ஆண்குரல், பெண்குரல் இரண்டுமே கிஷோர்குமாருடையதுதான்.

அந்தப் பாடலைப் பாட வேண்டிய லதா மங்கேஷ்கர் வர இயலாமல் போகவே, இசையமைப்பாளர் சலீல் சௌத்ரியிடம் பேசி, லதா பாட வேண்டிய பகுதியையும் தானே கிஷோர்குமார் பாடி முடித்தார். இன்னொரு செய்தி, லதா மங்கேஷ்கர் மீது கொண்டிருந்த மரியாதை காரணமாக, அவர் வாங்கிய தொகையை விடவும் ஒரு ரூபாய் குறைவாகவே கடைசிவரை வாங்கியவர் கிஷோர் குமார்.

இந்திராகாந்தி அம்மையார் அவசர நிலைப் பிரகடனம் செய்தபோது அவரது ஆட்சியைப் புகழ்ந்து எழுதப்பட்ட ஒரு பாடலைப் பாட மறுத்ததால், கொஞ்ச காலம் தூரதர்ஷன் கிஷோர்குமார் படங்களையும் பாடல்களையும் ஒளிபரப்பாமல் தடை விதித்திருந்தார்கள்.




R.VENUGOPALAN

Asif Meeran

unread,
Aug 10, 2014, 8:52:29 AM8/10/14
to பண்புடன்
கிஷோர் குமாரின் தவற விடக்கூடாத் டாப் 10 பாடல்களை ஆசாத் அண்ணனும் வேணு ஐயாவும் தத்தமது தேர்வுகளாகத்
தொகுத்தளிக்க விண்ணப்பம்

R.VENUGOPALAN

unread,
Aug 10, 2014, 10:50:06 AM8/10/14
to பண்புடன்
2014-08-10 18:22 GMT+05:30 Asif Meeran <asifme...@gmail.com>:
கிஷோர் குமாரின் தவற விடக்கூடாத் டாப் 10 பாடல்களை ஆசாத் அண்ணனும் வேணு ஐயாவும் தத்தமது தேர்வுகளாகத்
தொகுத்தளிக்க விண்ணப்பம்


கரும்புதின்னக் கூலியா அண்ணாச்சி? தங்கள் சித்தம் என் பாக்கியம். :-)

R.VENUGOPALAN

unread,
Aug 11, 2014, 5:42:37 AM8/11/14
to பண்புடன்

கிஷோர்குமார் பாடல்கள். 01

பாடல்:     ஜிந்தகி ஏக் ஸஃபர் ஹை சுஹானா

படம்:      அந்தாஸ்

இசை:     சங்கர் ஜெய்கிஷன்

பாடலாசிரியர்: ஷைலேந்தர்.

நடிப்பு:     ராஜேஷ் கன்னா & ஹேமாமாலினி

 

டி.எம்.எஸ் பாடல்களில் பத்து பாடல்களைத் தேர்வு செய்யச் சொல்லியிருந்தால்தான் முழி பிதுங்கும் என்று நேற்று ஏற்பட்ட அலட்சியமான எண்ணம் எவ்வளவு திமிரானது என்று இன்று தோன்றுகிறது அண்ணாச்சி. கொஞ்சம் சாய்ந்து உட்கார்ந்து யோசித்தால், இந்தி சினிமாவின் மீது எனக்கிருக்கிற அபிமானத்துக்கு கிஷோர்குமார் ஒரு முக்கியமான காரணமாக இருப்பது புரிகிறது. மன்னாடே, தலத் அஜீஸ், ஹேமந்த்குமார் போன்றவர்களின் பத்து பாடல்களைத் தேர்ந்தெடுப்பதுகூடப் பரவாயில்லை போலிருக்கிறது.

 

’ஷோலே’ படத்தில் தர்மேந்திராவுக்காக, ஹேமாமாலினியின் மௌஸியிடம் அமிதாப் பெண்கேட்டுப் போகிற அந்தக் காட்சியில் ‘சே, என்னடா பேசிப்பேசிக் கழுத்தறுக்கிறாங்க?’ என்று அலுப்போடு டீ குடிக்கப்போனதும், பின்னாளில் இந்தி கொஞ்சம் புரிந்தவுடன் அதே காட்சியில் விலாநோகச் சிரித்ததும் ஞாபகமிருப்பதுபோலவே, முதலில் புரியாததால் புதிராக இருந்த கிஷோர்குமார் சில வருடங்கள் கழித்து எனக்கு மிகவும் பிடித்தமான பாடகர்களில் ஒருவராகிப் போனார்.

 

‘கனிமுத்துப்பாப்பா’ என்றொரு படம் வந்தது. அனேகமாக, எஸ்.பி.முத்துராமன் இயக்கிய முதல் படம் அதுவாகத்தான் இருக்கும் என்று ஞாபகம். ஹிந்தியில் ரமேஷ் சிப்பி இயக்கத்தில் ஷம்மி கபூர்-ஹேமாமாலினி நடித்து வெளியாகி சக்கைபோடு போட்ட ‘அந்தாஸ்’ படத்தின் கதையைக் ஏகத்துக்கும் மாற்றி எடுக்கப்பட்ட படம். அதில் இடம்பெற்று அப்போது மிகப்பிரபலமான ‘ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே’ என்ற பீ.சுசீலாவின் பாடல், கிஷோர்குமார் பாடிய ‘கில்தே ஹைன் குல் யஹா’ என்ற பாடலின் அப்பட்டமான காப்பி என்பது எனக்குத் தெரியாது. காரணம், அந்தப்பாடல் இடம்பெற்ற ‘ஷர்மிலீ’ படத்தைப் பற்றி அறிய சில ஆண்டுகளாகின. ஆனால், ‘காலங்களே…காலங்களே…காதலிதைப் பாருங்களேன்’ என்ற எஸ்.பி.பியின் பாடலைக் கேட்டபோது, ‘அட, இது அந்தாஸில் வந்த ‘ஜிந்தகி ஏக் ஸஃபர் ஹை சுஹானா’ பாடலைப் போல இருக்கிறதே’ என்று தோன்றியது உண்மை. காரணம், எங்கள் ஊரில் அபூர்வமாக சக்கைபோடு போட்ட ஹிந்திப்படங்களில் ‘அந்தாஸ்’ படமும் ஒன்று.

 

‘அந்தாஸ்’ படத்தில் கௌரவ வேடத்தில் நடித்த ராஜேஷ் கன்னா, அவரது அறிமுகக்காட்சியில் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஹேமாவை அமரவைத்துக்கொண்டு, பெரிய கூலிங் கிளாஸும், ஜிங்குச்சான் ஜிங்குச்சான் காஸ்ட்யூமுமாக, அவருக்கே உரித்தான அந்தத் தலையாட்டலுடன் ‘ஜிந்தகி ஏக் ஸஃபர் ஹை சுஹானா’ என்று கிஷோரின் பாடலுக்கு வாயசைத்தபடி திரையில் தோன்றியபோது, நாகர்கோவில் தங்கம் தியேட்டரே கைதட்டலில் அதிர்ந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. மருந்துக்கும் ஆக்‌ஷன் இல்லாத ஒரு வளவள இந்திப்படத்தில் எனக்கு ஞாபகமிருந்தது அந்தப் பாட்டு ஒன்றுதான். பின்னாளில் அதை ஹேமாவுக்காகப் பார்த்தது வேறு கதை.

 

ஆமாம்! கிஷோர்குமாரை எனக்கு அறிமுகப்படுத்திய ‘ஜிந்தகி ஏக் ஸஃபர் ஹை சுஹானா’ பாடல் எப்போதும் எனக்குப் பிடித்தமான பாடலாக இருக்கும்.


ஜிந்தகி ஏக் ஸஃபர் ஹை சுஹானா

யஹா கல் கியா ஹோ கிஸ்னே ஜானா

(வாழ்க்கை என்னும் சுகமான பயணத்தில், நாளை நடப்பதை யாரறிவார்?)

 

சாந்த் தாரோ ஸே சல்னா ஹை ஆகே

ஆஸ்மானோ ஸே பட்னா ஹை ஆகே

பீச்சே ரஹ்ஜாயேகா யே ஜமானா

யஹா கல் கியா ஹோ கிஸ்னே ஜானா

 

(சந்திரன், நட்சத்திரங்களுக்கும் முன்னே செல்ல வேண்டும். ஆகாயத்தையும் முந்திச் செல்ல வேண்டும். உலகம் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும். நாளை நடப்பதை யாரறிவார்?)

 

மௌத் ஆனி ஹை ஆயேகி இக் தின்

ஜான் ஜானீ ஹை ஜாயேகி இக் தின்

அய்ஸீ பாத்தோன் ஸே க்யா கப்ரானா

யஹா கல் கியா ஹோ கிஸ்னே ஜானா

 

(வரவேண்டிய மரணம் ஒரு நாள் வந்தே தீரும். போக வேண்டிய உயிர் ஒரு நாள் போயே தீரும். இதற்கெல்லாம் எதற்குப் பயம்? நாளை நடப்பதை யாரறிவார்?)

 

ஹஸ்தே காத்தே ஜஹா ஸே குஜர்

துனியா கீ து பர்வா ந கர்

முஸ்குராத்தே ஹுவே தின் பிதானா

யஹா கல் கியா ஹோ கிஸ்னே


(சிரித்தும் பாடியும் வாழ்க்கை நடத்து. உலகத்தைப் பற்றிக் கவலைப்படாதே. புன்னகையுடன் நாட்களைச் செலவழி. நாளை நடப்பதை யாரறிவார்?)

 

இந்தப் பாடலில் வருகிற பல வரிகள் பின்னாளில் பல பாடல்களில் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

 

’முக்கதர் கா சிக்கந்தர்’ படத்தில் கிஷோர்தா அமிதாபுக்காகப் பாடிய ‘ரோத்தே ஹுவே ஆத்தே ஹை சப்’ பாடலும் ‘அழுதுகொண்டே பிறக்கிறோம் எல்லாரும். சிரித்தபடி செல்பவனே விதியை வென்றவன்’ என்ற பொருளில் நேர்மறையான கருத்துடன் இருக்கிறது.

 

’ஆப் கீ கஸம்’ படத்தில் வருகிற ‘ஜிந்தகி கி ஸஃபர் மே குஜர்ஜாதே ஹை ஜோ மகாம்’ என்ற சோகப்பாடலில், ‘வாழ்க்கைப்பயணத்தில் கடந்து வந்த திருப்பங்கள்’ குறித்த ஆதங்கம் இருக்கிறது.

 

’ஜிந்தகி க்யா ஸஃபர் ஹை யே கைஸா ஸஃபர்’ என்று வாழ்க்கையை நொந்து கொள்கிற கிஷோர்குமாரின் ‘ஸஃபர்’ படப்பாடலும் இருக்கிறது.

 

இப்படி, கிஷோர்தாவே வாழ்க்கையைக் குறித்து மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் பாடிய பல பாடல்கள் இருந்தாலும், இந்த ஜிந்தகி ஏக் ஸஃபர் ஹை சுஹானா’ எல்லாவற்றிற்கும் மகுடம் சூட்டியது போல அமைந்த பாடல் என்று கருதுகிறேன். இதே பாடலை ஆஷா போஸ்லேயும் படத்தில் பாடியிருந்தார். ராஜேஷ் கன்னா விபத்தில் இறக்கிற காட்சியில் இந்தப் பாடல் சோகமாக ஒலிக்கும்.

 

கிஷோர்குமாரை Man of many moods என்று சொல்வார்கள். அவரது உற்சாகமான பாடல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் இந்தப்பாடல் எப்போதும் நம்பர் ஒன் தான்.

Asif Meeran

unread,
Aug 11, 2014, 5:48:56 AM8/11/14
to பண்புடன்
அமர்க்களம்.. தன்யனானேன் வேணுஜி!!
எனக்கு மிகப்பிடித்த பாடல் உங்கள் தேர்வில் பத்துக்குள் வருமா என நினைத்தேன்
முதல்பாடலாகவே வந்து விட்டது.. ஜாக்பாட்!! :-))
மிகக் நன்றி

ஆவலுடன் மற்றவைகளுக்காகக் காத்திருக்கிறேன்

sadayan sabu

unread,
Aug 11, 2014, 9:05:10 AM8/11/14
to panbudan
வேணுஜி

கிஷோரின் பாடலுக்கு 10 பத்தாது. கிஷோர் நினவு நாளன்று, கிஷோரின் சோகப்பாடல், கிஷோரின் துள்ளல் பாடல், கிஷோரின் டூயட், கிஷோர் நடித்து பாடியது என பல்வகை பாடல்கள் கேட்டேன் கூட்டிக் கழித்து பார்த்தால் டாப் 40 தேறும்.


--

Asif Meeran

unread,
Aug 11, 2014, 9:44:08 AM8/11/14
to பண்புடன்
இந்த இழையில் காலங்களே பாடல் இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் எஸ்பிபி கிஷோர் பாணியில் பாடியிருக்கிறார் என்பதைச் சுட்டுவதற்கா?
செம..

அதிலும் இளையவர் உலகம் தனி உலகம் வரிகளுக்கு காமெராவை வித்தியாசமான கோணத்தில் வைத்திருக்கிறார்கள்
அக்காலத்தில் இயல்பான வெளிச்சத்தில் இப்படி பாரலல் ஷாட் வைத்துப் படமாக்குவது மிக அரிதானதென்றாலும்
சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எஸ்பிமுத்துராமன் அப்போதே அப்பாடக்கர்தான் போல :-) நன்றி வேணுஜி!!


AbulKalam Azad

unread,
Aug 11, 2014, 9:52:48 AM8/11/14
to பண்புடன்
ஆசிப்,

நானும் முயற்சி செய்வேன். பிறகு வருவேன்.

வேணு அய்யா அவர்கள் ஆராதனாவின் மேரே சப்புனோன் கி ரானி யை எனக்காக விட்டுக்கொடுக்கவும் :-) 

Asif Meeran

unread,
Aug 11, 2014, 9:56:17 AM8/11/14
to பண்புடன்
மேரே சப்னோ கி ராணி - கப் ஆயேகிஜி?? :-)

வேணு அய்யா அவர்கள் ஆராதனாவின் மேரே சப்புனோன் கி ரானி யை எனக்காக விட்டுக்கொடுக்கவும் :-)

அவசியம் வந்தேயாகணும். ஆண்டு விழா இழையிலயும் எழுதியேயாகணும்

R.VENUGOPALAN

unread,
Aug 11, 2014, 10:11:42 AM8/11/14
to பண்புடன்
2014-08-11 18:35 GMT+05:30 sadayan sabu <sadaya...@gmail.com>:
வேணுஜி

கிஷோரின் பாடலுக்கு 10 பத்தாது. கிஷோர் நினவு நாளன்று, கிஷோரின் சோகப்பாடல், கிஷோரின் துள்ளல் பாடல், கிஷோரின் டூயட், கிஷோர் நடித்து பாடியது என பல்வகை பாடல்கள் கேட்டேன் கூட்டிக் கழித்து பார்த்தால் டாப் 40 தேறும்.

சரியாகச் சொன்னீங்க சாபத்தா. நான் அடிக்கடி முணுமுணுக்கிற கிஷோர்தா பாடல்களே ஒரு 50 தேறும். இருந்தாலும் முயற்சி செய்வோம். ஆசாத்ஜீ வாராரு; நீங்களும் வாங்க.

மெஹ்ஃபில் மெஹ்ஃபில்...!

R.VENUGOPALAN

unread,
Aug 11, 2014, 10:15:24 AM8/11/14
to பண்புடன்
2014-08-11 19:14 GMT+05:30 Asif Meeran <asifme...@gmail.com>:
இந்த இழையில் காலங்களே பாடல் இணைக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் எஸ்பிபி கிஷோர் பாணியில் பாடியிருக்கிறார் என்பதைச் சுட்டுவதற்கா?
செம..

அதே! அந்த ஒட்லேஹி ஒட்லேஹி அப்படியே காப்பி அண்ட் பேஸ்ட் மாதிரியிருக்கும். :-) 

அதிலும் இளையவர் உலகம் தனி உலகம் வரிகளுக்கு காமெராவை வித்தியாசமான கோணத்தில் வைத்திருக்கிறார்கள்
அக்காலத்தில் இயல்பான வெளிச்சத்தில் இப்படி பாரலல் ஷாட் வைத்துப் படமாக்குவது மிக அரிதானதென்றாலும்
சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். எஸ்பிமுத்துராமன் அப்போதே அப்பாடக்கர்தான் போல :-) நன்றி வேணுஜி!!


எஸ்.பி.முத்துராமன் ஏ.ஸி.திரிலோக்சந்தரின் சிஷ்யர் என்றாலும் திரைக்கதையை நகர்த்துவதில் குருவை மிஞ்சின சிஷ்யர். பின்னாளில் ஓளிப்பதிவாளர் பாபுவுடன் அவர் செய்த சாகசங்கள் இருக்கின்றனவே. பிறிதொரு நாளில் முடிந்தால் எழுத விருப்பம். நன்றி அண்ணாச்சி.:-)

R.VENUGOPALAN

unread,
Aug 11, 2014, 10:17:26 AM8/11/14
to பண்புடன்
 நான் உங்களுக்கும் அய்யாவாயிட்டேனா? :-)

டீக் ஹை! சப்னோன் கி ரானி கோ ஆப் லே லீஜியே, மகர் ‘யே ஷாம் மஸ்தானி’ மேரி ஹோகி! :-)

R.VENUGOPALAN

unread,
Nov 21, 2015, 1:33:08 AM11/21/15
to பண்புடன்

சிங்காரி கோயி பட்கே தோ ஸாவன் உஸே புஜாயே


படம்: அமர் ப்ரேம்(1972)

பாடியவர்: கிஷோர்குமார்

பாடலாசிரியர்: ஆனந்த் பக்‌ஷி

இசை: ஆர்.டி.பர்மன்

இயக்குனர்: சக்தி சாமந்தா

 



சிவாஜிக்கு ஒரு பீம்சிங் கிடைத்ததுபோல, ராஜேஷ் கன்னாவுக்கு ஒரு சக்தி சாமந்தா கிடைத்தார் என்றால், அது நிச்சயம் ஒரு அநியாயமான ஒப்பீடாக இருக்காது. ’ஆராதனாபடத்தின் வெற்றிக்கூட்டணியில் ஏறக்குறைய அத்தனை பேரும் மீண்டும் இணைந்த ஒரு படம்அமர் ப்ரேம்’. குறிப்பிடத்தக்க விதிவிலக்கு, ‘ஆராதனாவில் இசையமைத்த எஸ்.டி.பர்மனின் மகன் ஆர்.டி.பர்மன்அமர் ப்ரேம்படத்தின் இசையமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மனிதர் எப்படிப்பட்ட பாடல்களை அந்தப் படத்தில் கொடுத்திருந்தார் என்று யோசித்தால் மலைப்பாக இருக்கிறது.


அமர் ப்ரேம்படம் தயாரிக்கப்பட்டபோது, ‘ஆராதனாமூலம் புகழின் உச்சிக்கே காக்காஜி (ராஜேஷ் கன்னா) சென்றிருந்தார் என்றால், ஷர்மிளா தாகூர் பட்டோடியைத் திருமணம் செய்துகொண்டு ஸைஃப் அலிகானுக்கு அம்மாவாகியிருந்தார். எழுபது, எண்பதுகளின் துவக்கத்தில் இந்திப்படங்களில் பல வங்காளிப்படங்கள் அல்லது வங்காளிக்கதைகள் அல்லது வங்காளிக் கலைஞர்களால் உருவாகிய சூழலில், ‘அமர் ப்ரேம்படமும் உத்தம்குமார் நடித்த ஏதோ ஒரு வங்காளிப்படத்தின் தழுவலாக வந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், அந்தப் படத்தில் பல ஆச்சரியங்கள் இருப்பதை இப்போது பார்த்தாலும் குறித்துக் கொள்ள முடிகிறது.


குறிப்பாக, ராஜேஷ் கன்னாவின் கதாபாத்திரம்!


ஆராதனாபடத்துக்குப் பிறகு, ராஜேஷ் கன்னா காதல் மன்னனாகக் கருதப்பட்டு வந்தார் என்பது குறித்து பல குட்டிக்கதைகள் இன்றளவிலும் பேசப்படுகின்றன. ராஜேஷ் கன்னா ஹேர்-ஸ்டைல், ராஜேஷ் கன்னா காலர், ராஜேஷ் கன்னா கர்ச்சீப், ராஜேஷ் கன்னா ஷூ என்று இளையதலைமுறையை அவரது பிம்பம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த காலம் அது. அப்பேர்ப்பட்ட கன்னா, படம் முழுக்க வங்காளி பாணியில் வேட்டியணிந்து, ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு, ஒரு டூயட் கூட இல்லாமல், ஒரு ஜோடியும் இல்லாமல் நடித்தால் எப்படியிருக்கும்?


இயக்குனர் சக்தி சமந்தாவுக்கும் இந்த சந்தேகம் இருந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. ஆகவே, அவர் அப்போது இத்தகைய சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ராஜ்குமாரை அணுகினார் என்றும், இதையறிந்த ராஜேஷ் கன்னா, இருவரிடமும் பேசி, தன்னால் அப்படியொரு கதாபாத்திரத்தைச் செய்ய முடியும் என்று கெஞ்சிக்கூத்தாடி, ‘அமர் ப்ரேம்படத்தின் வாய்ப்பைக் கிட்டத்தட்ட ராஜ்குமாரிடமிருந்து தட்டிப் பறித்தார் என்றும் சில உபகதைகள் உண்டு. எது எப்படியோ, ‘அமர் ப்ரேம்படம் ராஜேஷ் கன்னாவுக்கு இன்னுமொரு வெற்றிப்படமாக, அவரை நினைவுகூர்கிறவர்களுக்கு சட்டென்று ஞாபகத்துக்கு வருகிற படமாக அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.


”I hate tears”- ராஜேஷ் கன்னாஅமர் ப்ரேம்படத்தில், அடிக்கடி சொல்லும் இந்த வசனம் காவிய அந்தஸ்தைப் பெற்றது என்று அடித்துச் சொல்லலாம். பின்னாளில், தமிழில் வந்தகனிமுத்துப் பாப்பாஎன்ற படத்தில் ஜெய்சங்கரும் இதே வசனத்தைச் சொன்னார் என்பது ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.


சிங்காரி கோயி பட்கேபாடலுக்கு முன்னால், ராஜேஷ் கன்னாவும் ஷர்மிளா டாகூரும் பேசுகிற வசனம் எல்லா ஆல்பங்களிலும் கட்டாயம் இருக்கிறது.


ரோ மத் புஷ்பா’- (அழாதே புஷ்பா!) என்று காக்காஜி பேசுகிற வசனத்துடன் ஆரம்பித்து, அப்படியே ஒரு ஓடத்தில் கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும் உட்கார வைத்து, சொந்தவாழ்க்கையில் சறுக்கி விழுந்த ஒரு மனிதனின் இயலாமையையும், அவனிடமிருந்து தன்னிச்சையாக வருகிற தத்துவார்த்த விசாரமாகவும் அமைந்த அந்தப் பாடல், பல விரக்தியான தருணங்களில் நான் அடிக்கடி கேட்ட, இன்னும் கேட்கிற ஒரு பாடல்.


மாஜி(படகோட்டி), நாவ் (படகு), பார் லகானா (கரைசேர்த்தல்) போன்ற வார்த்தைகளுடன் கூடிய பாடல்கள் இந்தியிலே எத்தனை என்று துல்லியமாகச் சொல்லுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. (ஷம்மா, பர்வானா என்ற வார்த்தைகளுடன் கூடிய பாடல்கள் எத்தனை என்று கேட்டால், அரபிக்கடலில் குதித்துத் தற்கொலைதான் செய்துகொள்ள நேரிடும்.). தமிழிலும் ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் தொடங்கி ஒரு அரை டஜன் பாடல் தேறும். (’காத்திருந்த கண்கள்’ படமும் வங்காளிப்படத்தின் தழுவல் என்று கேள்வி!)


’சிங்காரி கோயி பட்கே?’ சுருக்கமாக இந்தப் பல்லவியின் பொருள்.


‘எரிமலை வெடித்தால் மழை வந்து அணைக்கலாம்.

மழையே நெருப்பு மூட்டினால் அதை யார் அணைப்பார்கள்?

இலையுதிர் காலத்தில் சோலை வறண்டுபோனால், வசந்தம் வந்து அந்தச் சோலையைத் துளிர்க்க வைக்கலாம்; வசந்தத்தில் சோலை வறண்டால், அதை யார் துளிர்க்க வைப்பது?’


’அமர் ப்ரேம்’ படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே முத்து முத்தாக அமைந்திருந்தன. எஸ்.டி.பர்மன் குரலில் ஒலித்த ‘டோலி மே’ பாடல்; லதா மங்கேஷ்கர் குரலில் ’ரைனா பீத் ஜாயே’ மற்றும் ‘படா நட்கட் ஹை யே’ என்ற இரண்டு பாடல்கள்; கிஷோர்தா பாடிய ’குச் தோ லோக் கஹேங்கே’ மற்றும் ‘யே க்யா ஹுவா?’ என்ற மற்றும் இரு பாடல்கள் என்று ஆர்.டி.பர்மன் படத்தை இசைமழையில் சொட்டச் சொட்ட நனைய வைத்திருந்தார்.


தெரியாத்தனமாக ஒரு மாதிரியான இடத்துக்கு வந்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறவனை அப்படியே ஈர்த்து அழைத்துக் கொண்டு போகிற ‘ரைனா பீத் ஜாயே’ பாடலில் ப்ஞ்சம்தா (ஆர்.டி.பர்மன்) லதா மங்கேஷ்கர், ஷர்மிளா தாகூர், ராஜேஷ் கன்னா, ஆனந்த் பக்‌ஷி (பாடலாசிரியர்), சக்தி சாமந்தா ஆகிய நால்வருக்குமே ‘ஷொட்டு’ கொடுக்கலாம் என்று தோன்றும். ஆனந்த் பக்‌ஷி-ஆர்.டி.பர்மன் – கிஷோர்குமார் என்று ஒரு பட்டியல் எடுத்தால், அதிலிருந்து 20 நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுப்பதே பெரும்பாடாகி விடும்.


ஆனாலும், கிஷோர்தாவின் ‘சிங்காரி கோயி பட்கே’ பாடல்தான் படத்தின் ஹைலைட்!


காட்சியின் தன்மைக்கேற்றவாறு, மிக மிக மெதுவான தாளத்துடன், மிகுந்த தன்னிரக்கத்தை வெளிப்படுத்துகிற மாதிரி அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாடல்தான் இன்றளவிலும் ‘அமர் ப்ரேம்’ படம் என்றாலே எல்லாருக்கும் முதலில் சட்டென்று நினைவுக்கு வருகிற பாடல்.


தமிழ்ப்பாடல்களை நேசிக்கிற அளவுக்கு இந்திப்பாடல்களையும் விரும்பிக் கேட்க வைத்த பல பாடல்களில் இது மிக முக்கியமான பாடல்.

https://www.youtube.com/watch?v=kpM0jPd6-7w




R.VENUGOPALAN IYENGAR



sadayan sabu

unread,
Nov 21, 2015, 7:37:48 AM11/21/15
to panbudan

சூப்பர் வேணு ஜி, அதேன் ஷம்மா பர்வான மேல் அத்தனை வெறுப்பு

R.VENUGOPALAN

unread,
Nov 21, 2015, 10:20:42 AM11/21/15
to பண்புடன்
வெறுப்பா..? அத்தனை பாடல்களையும் சேகரித்துக் கொண்டிருக்கிறேன் சாபத்தா. உங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் சொல்லுங்க ப்ளீஸ்! :-))
--

R.VENUGOPALAN IYENGAR



Asif Meeran

unread,
Nov 23, 2015, 2:14:52 AM11/23/15
to பண்புடன்
அடடே!!
என் மனைவி கிஷோரின் ரசிகை
தொணதொணப்பு இல்லாமல் இருக்க கிஷோரின் சிடி இரண்டு எண்பது திர்ஹாம்கள் (அப்போது தங்கமே 45 திர்ஹாம்தான் கிராமுக்கு) கொடுத்து வாங்கிக் கொடுத்தேன் :-))

sankaran

unread,
Nov 26, 2015, 1:34:42 AM11/26/15
to panb...@googlegroups.com
பைரேட்டேட்வாங்கி தந்திருக்கலாமே ஆசிப்சார்

Ahamed Zubair A

unread,
Dec 14, 2015, 8:27:42 AM12/14/15
to பண்புடன்
வெயிட்டிங்....

R.VENUGOPALAN

unread,
Dec 14, 2015, 9:04:34 AM12/14/15
to பண்புடன்
2015-12-14 18:57 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
வெயிட்டிங்....

ரைட்டிங்.... 
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN IYENGAR



R.VENUGOPALAN

unread,
Dec 15, 2015, 2:30:29 AM12/15/15
to பண்புடன்


பாடல்: யே ஷாம் மஸ்தானி

பாடலாசிரியர்: ஆனந்த் பக்‌ஷி

இசை: ஆர்.டி.பர்மன்

படம்: கட்டி பதங்

இயக்கம்: சக்தி சமந்தா

 

 

அது என்ன மந்திரமோ, என்ன மாயமோ தெரியவில்லை. கிஷோர்குமாரைப் பற்றி யோசித்தால், அவர் தோளில் கைபோட்டுக் கொண்டு ராஜேஷ் கன்னாவும் நிற்பதுபோல ஒரு மனச்சித்திரம் தெரிவதைத் தவிர்க்க முடிவதில்லை. ’கட்டி பதங்’ படத்தின் பாடல் என்பதால், ஆஷா பாரீக் குறித்தும் எழுதுகிற அதிகப்பிரசங்கித்தனம் உண்டு. (சரோஜாதேவியையும் ஆஷா பாரீக்கையும் ஒப்பிட்டு ஒரு தொடர் மாதிரி எழுத ஆரம்பித்து, எனது ’ஆரவல்லி’யின் அகாலமரணம் காரணமாக அரைகுறையாகவே முடிந்தது.)

 

 

ராஜேஷ் கன்னாவுக்கு எப்படி சக்தி சமந்தாவோ, ஆஷா பாரீக்குக்கு நாசிர் ஹுசைன். ‘தில் தேக்கே தேக்கோ’ தொடங்கி ‘காரவான்’ வரை ஆஷா பாரீக் நடித்த பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் நாசீர் ஹுசன் படங்கள் தான். ‘கட்டி பதங்’ ராஜேஷ் கன்னா – ஆஷா பாரீக் – சக்தி சமந்தா கூட்டணியில் வெளியான மிகப்பெரிய வெற்றிப்படம். ‘ஆராதனா’ தொடங்கி ‘ஆப் கி கஸம்’ வரை சக்தி சமந்தா எடுத்த மற்ற படங்களோடு ஒப்பிட்டால், ‘கட்டி பதங்’ படத்தின் கதை கொஞ்சம் ’வீக்’ தான். விதவைபோல நடிக்க நேர்கிற ஒரு பெண் மீது ஒரு இளைஞன் கொள்கிற காதல்; இடையிலே பிரேம் சோப்ரா; கொஞ்சம் மெலோடிராமா என்று சற்றே கணிக்கக்கூடிய மாதிரியான கதை. ஆனால், படத்தைத் தூக்கி நிறுத்திய மூன்று பேர், ஆர்.டி.பர்மன், ராஜேஷ் கன்னா மற்றும் ஆஷா.

 

 

ஆர்.டி.பர்மனின் திறமைக்கு இந்தப் படம் ஒரு ஷோ-கேஸ் என்று சொல்லலாம். ராஜேஷ் கன்னாவுக்கு முகேஷ் பாடிய விரல்விட்டு எண்ணக்கூடிய  பாடல்களில் குறிப்பிடத்தக்க பாடல் இதில் இடம்பெற்றது. ‘ஜிஸ் கலி மே தேரா கர் ந ஹோ பால்மா, உஸ் கலி ஸே ஹமே தோ குஜர்னா நஹி

 

 

 

காதல் தோல்வியென்றால், பெண்களைப் பழித்து, Beep போட்டு எழுதுவதெல்லாம் ஓஸோன் திரையில் ஓட்டைவிழுந்ததன் பின்விளைவாக இருக்கலாம். ‘கட்டி பதங்’ காலத்தில், பெரும்பாலான கவிஞர்களுக்கு ‘ராத்திரி சாப்பிட வீட்டுக்குத்தான் போகணும்’ என்ற சொரணை இருந்திருக்கிறது.

 

 

யே ஜோமொஹப்பத் ஹை யே உன் கா ஹை காம்…’

 

 

‘கட்டி பதங்’ படத்தில் கிஷோர்குமார் பாடிய ஒரு காதல் தோல்வி பாட்டு.

 

 

’யே ஜோ மொஹப்பத் ஹை யே உன் கா ஹை காம்

மெஹ்பூப் கா ஜோ பஸ் லேத்தே ஹுவே நாம்

மர் ஜாயே மிட்ஜாயே ஹோஜாயே பத்நாம்

ரெஹ்னேதோ சோடோ பீ ஜானேதோ யார்

ஹம் நா கரேங்கே ப்யார்

 

 

பொழிப்ஸ்: இந்தக் காதலிருக்குதே, இது சும்மா காதலி பேரையே சொல்லிக்கினு, செத்துச் சுண்ணாம்பாகி, பேரை நாறடிச்சுக்கிற ஆளுங்க வேலை. விடுங்கய்யா, எனக்கு வேணாம் இந்தக் காதல். (இந்தப் பாடலுக்காக கிஷோர்குமார் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கினார்!) ஆனால், என் ஃபேவரைட் பாடல் இன்னொன்று…!

 

 

ப்யார் திவானா ஹோத்தா ஹை மஸ்தானா ஹோத்தா ஹை’ – இது இன்னொரு காதல் ஏக்கப்பாடல்தான் என்றாலும், கொஞ்சம் அடக்கி வாசிக்கிற பாடல். (இப்போதெல்லாம் ஹீரோ பியானோ வாசித்துப் பாடுகிற மாதிரி பாடல்களே அதிகம் வருவதில்லையே, ஏன்?) ஷம்மா, பர்வானா (விளக்கு, விட்டில்பூச்சி) உதாரணம் வருகிற பல இந்திப் பாடல்களில் ஒன்று. ஆசாத்ஜி! ஆர் யூ தேர்?

 

 

’கட்டி பதங்’ படத்துக்கு ‘கிஷோர்குமார் கஃபே’ என்று பெயர் வைத்திருந்தாலும் பொருத்தமாகத்தான் இருக்கும். காரணம், அத்தனை வரைட்டியான பாடல்களை மனிதர் பாடி அசத்தியிருந்தார்.

 

 

லதாவுடன் இணைந்து கிஷோர்தா பாடிய ‘ஆஜ் நா சோடேங்கே’ ஒரு டிப்பிக்கல் ஹோலி பாடல். ’ப்யார் திவான ஹோத்தா ஹை’ மற்றும் ‘யே ஜோ மொஹப்பத் ஹை’ கானல்வரி ரேஞ்ச்! ஆனால், ‘கட்டி பதங்’ என்றால், சட்டென்று அடியேனுக்கு நினைவுக்கு வருகிற பாடல் இதுதான்.

 

‘யே ஷாம்மஸ்தானி மத்ஹோஷ் கியே ஜாய்..’

 

 

எப்படி ‘மன்னவன் வந்தானடி’ பாடலை வானொலியில் கேட்டாலும், சிவாஜி ‘டகுஜிகு நகுஜிகு டகுஜிகு நகுஜிகு’ என்ற தாளத்துக்கேற்றவாறு நடந்து வருவது கண்முன் தோன்றுகிறதோ, அப்படியே ‘யே ஷாம் மஸ்தானி’யென்று சொன்னால், ஒரு இடத்தில் நிற்காமல் தலையைச் சிலுப்பிக்கொண்டே காக்காஜி பாடுகிற காட்சியும் மனத்திரையில் எவ்வித சிராய்ப்புமின்றித் தெளிவாகத் தெரிகிறது.

 

 

கிஷோர்குமாரின் ட்ரேட் மார்க் ‘ஊவுவு ஊவு உவுவூவூ உவு ஊவுவு ஊவு’ என்ற சேஷ்டை இந்தப் பாடலுக்கு மகுடம். வார்த்தைகளின் அழுத்தத்துக்கு ஏற்றவாறு நிறுத்தி, இடைவெளி விட்டு, அழகாகப் பாடியிருப்பார் கிஷோர்தா. உதாரணத்துக்கு….

 

 

அய்ஸா லகே ஜெய்ஸே கி து

ஹஸ்கே----------ஜெஹர்------கோ-யி---பியே-ஜாயே!

 

 

 

’கட்டி பதங்’ படத்தின் எல்லாப் பாடல்களுமே அபாரம்தான் என்றாலும், கிஷோர்குமாரின் பல ஆல்பங்களில் தவறாமல் இடம்பெறுகிற பாடல் ‘யே ஷாம் மஸ்தானி’ தான். நான் அடிக்கடி கேட்கிற பாடல்களில் இதுவும் ஒன்று.


--

R.VENUGOPALAN IYENGAR



Ahamed Zubair A

unread,
Dec 15, 2015, 3:42:45 AM12/15/15
to பண்புடன்
ஆசாத் அண்ணா...

கால் ஃபார் யு :)

AbulKalam Azad

unread,
Dec 15, 2015, 4:09:18 AM12/15/15
to Ahamed Zubair A, பண்புடன்
தலைவரே, 

மன்னிக்கணும். இந்தப் பக்கம் வந்து நெம்பனாளாகுது :-)

சமீபத்தில் இந்தித் திரை எட்டியிருக்கும் இடம் கொஞ்சம் வித்தியாசமானது வேணுஜீ.

ஒரு குறிப்பிட்ட களத்தை எடுத்துக்கொண்டு அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றார்கள். மெல்லிசை குறைந்தது போலத்தான் தோன்றுகிறது. உறுதியாகச் சொல்வேன், எழுபதுகளின் திரைப்பாடல் இப்போது அங்கு கிடையவே கிடையாது. ஷமா பர்வானா உவமைகளைக் கேட்கவில்லை :-(

சல்தாஹை!

இதற்கு அப்படியே முழுத்திருப்பம் அடித்தாற்போல் கஜல்கள். அவற்றில் இன்னும் நாம் எதிர்பார்க்கும் கவித்துவம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்தித் திரையில் இன்னொரு "யே ஷாம் மஸ்தானி"யெல்லாம் இனி கிடையாது என்று எனது அனுபவம் சொல்கிறது.

R.VENUGOPALAN

unread,
Dec 15, 2015, 4:15:39 AM12/15/15
to பண்புடன்
2015-12-15 14:39 GMT+05:30 AbulKalam Azad <banu...@gmail.com>:
தலைவரே, 

மன்னிக்கணும். இந்தப் பக்கம் வந்து நெம்பனாளாகுது :-)

what a surprise? :-))))

this is a medical miracle...thanks Zubair.

see you later...

 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

R.VENUGOPALAN IYENGAR



R.VENUGOPALAN

unread,
Dec 15, 2015, 5:12:26 AM12/15/15
to பண்புடன்
2015-12-15 14:39 GMT+05:30 AbulKalam Azad <banu...@gmail.com>:


ஒரு குறிப்பிட்ட களத்தை எடுத்துக்கொண்டு அக்குவேறு ஆணிவேறாக அலசுகின்றார்கள்.

 நல்ல content உள்ள படங்கள் நிறைய வரத் தொடங்கியிருக்கின்றன.
 
மெல்லிசை குறைந்தது போலத்தான் தோன்றுகிறது. உறுதியாகச் சொல்வேன், எழுபதுகளின் திரைப்பாடல் இப்போது அங்கு கிடையவே கிடையாது. ஷமா பர்வானா உவமைகளைக் கேட்கவில்லை :-(

இதுதான் எனது ஆதங்கமும். இந்தி மட்டுமல்ல; தமிழிலும் மெலடி என்பது அத்திபூத்தாற்போலவே கேட்கக் கிடைக்கிறது. தமிழில் நல்ல கவிஞர்களும் குத்துப்பாட்டு கோதாவில் இறங்கியிருப்பது கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது.
 

இதற்கு அப்படியே முழுத்திருப்பம் அடித்தாற்போல் கஜல்கள். அவற்றில் இன்னும் நாம் எதிர்பார்க்கும் கவித்துவம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

இப்போதெல்லாம் கஜல் கேட்க நேரமிருப்பதில்லை. :-(

இந்தித் திரையில் இன்னொரு "யே ஷாம் மஸ்தானி"யெல்லாம் இனி கிடையாது என்று எனது அனுபவம் சொல்கிறது.

அதே! அதே!


--

R.VENUGOPALAN IYENGAR



Reply all
Reply to author
Forward
0 new messages