Re: [MinTamil] Re: நெல் அவித்தல்

2 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 29, 2017, 10:30:07 AM9/29/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com



அன்பின் நரசிங்கபுரம் சுரேஷ்,

வேய்த்தல் - மிக அருமையான, நாட்டுப்புறங்களில் வழங்கும் தூய்தான தமிழ்.
”பாலில் வேய்த்து” என கூகுளில் துழாவினேன். அப்படிச் செய்து பாருங்கள்.
முதல் தெரிவாக, ஃபேஸ்புக் பதிவு ஒன்று காட்டும்.

அதில்,
“"ஒவ்வொன்றும் தனித்தனியாக கொட்டை நீக்கி நிழலில் காயவைத்து, பாலில் வேய்த்து நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பின் தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம்"
என்றுள்ளது.

ஃபேஸ்புக்கில் நுழைந்து இந்த முழுப்பதிவும் சிக்கினால் தாருங்கள்.

வேய்த்தல் - வேவித்தல் என்ற பொருளில் உள்ள சொல். அகராதிகளில் இல்லாத பொருளில் உள்ள சொல் என்று காட்ட உதவும்.

நன்றி,
நா. கணேசன்


வேய்த்தல் = வேவித்தல், புழுக்குதல், அவித்தல்.
இன்னோர் உதாரணம்:
வேர்க்க வேர்க்க வெற்றுடம்புடன்
மூன்று சக்கர வண்டி ஓட்டி
மூட்டை சுமந்து கூலி செய்து
வேய்த்த வேர்க்கடலை தின்று
வயிறு கழுவும் தமிழ்ப்
பாட்டாளிகளைப் பார்க்கும்போதெல்லாம்

முழுக் கவிதையும் இங்கே,

நான் பிராமணன் அல்ல
பிராமணத் துவேஷியும் அல்ல
நான் தலித் அல்ல
தலித் எதிரியும் அல்ல
மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும்
எந்த இட ஒதுக்கீட்டிற்கும் அருகதையற்ற
எவர் எந்த ஒதுக்கீடு பெற்றாலும்
அதைப் பற்றிய ஆட்சேபணையற்ற
சாதாரண மனிதன்
எந்தச் சாதிக்குழுவும் எந்தக் கட்சிப் பிரிவும்
உட்பிரிவும் சீந்திக் கூடப் பார்க்க லாயக்கற்ற
சாமான்யத் தமிழன்
தமிழனல்லாத தமிழனானவன் அல்ல
வீட்டிலும் வெளியிலும் கூடப்
பிறந்ததிலிருந்து தமிழ் பேசுகின்ற
ஐயோ பாவப் பச்சைத் தமிழன்
வேர்க்க வேர்க்க வெற்றுடம்புடன்
மூன்று சக்கர வண்டி ஓட்டி
மூட்டை சுமந்து கூலி செய்து
வேய்த்த வேர்க்கடலை தின்று
வயிறு கழுவும் தமிழ்ப்
பாட்டாளிகளைப் பார்க்கும்போதெல்லாம்
சத்தியமாய் பரிதவித்து உருகுபவன்
அதை  வைத்து அரசியலோ
ஏன் இலக்கியமோ கூடச்
செய்யத் தெரியாத அப்பாவி
என் உயிர் வாழும் உரிமைக்கு
ஓர் உத்தரவாதமும் இல்லை என அறிந்தவன்.
எனக்காக என்பொருட்டு
எந்த ஒரு வார்த்தை சொல்லவும்
எவருமற்ற இந்த ஸ்திதியில்
என்ன ஒரு நிம்மதி... என்ன ஒரு சுகம்!
அநாதைகளே அறிவர் அந்த சுகம்
                               - வையவன்


 Suresh, I learnt about a 10,000 years old rare Tamil word. You made my day! 

Best wishes,
N. Ganesan





On Friday, September 29, 2017 at 12:38:05 AM UTC-7, நரசிங்கபுரத்தான் wrote:

வேலூர் / திருவண்ணாமலை  மாவட்டங்களில் .

நெல் வேய்த்தல்  என்று கூறுவார்கள் . - ( நெல்லு  வேய்ச்சாங்க  /   நெல்லு வெய்க்க போறோம்....... ) 

அவித்தல் ----> வேய்த்தல் என மாறி இருக்கலாம் .

சுரேஷ்குமார் 


அவித்தல் வேய்த்தல் என மாறவில்லை. இரண்டும் தனித்தனியான வினைச்சொற்கள்.

வெயில், வெம்மை, வெப்பம், ... போன்றன வே- என்ற வினைச்சொல்லில் இருந்து தோன்றியவை.
கொங்குநாட்டில் வேவித்தல் என்போம். இதற்கு வேய்த்தல் என்ற வினைச்சொல்லும் உண்டு
என அறிய மகிழ்ச்சி.  பா- என்ற வினைச்சொல் பாய் என்றும், பாவு என்றும் வருமாப்போல.

சில வினைச்சொற்கள் எதிர்ப்பதமாக இரு பொருளிலும் வரும்.
வே- என்பதும் அவ்வாறே. கூரை வேய்தல் - வெயிலில் இருந்து தடுப்பதற்காகச் செய்வது.
சிந்து முத்திரையில் மீன், அதன் மேல் கூரை (inverted V) வடிவில் இருக்கும்.
கடவுளரில் பெருங்கடவுள் என்பது எனக் கருதி, “வேய்-மீன்” எனலாம் என
20 ஆண்டு முன் எழுதியுள்ளேன்.

நா. கணேசன்



 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


N. Ganesan

unread,
Sep 29, 2017, 11:14:45 AM9/29/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, panb...@googlegroups.com

2017-09-29 0:38 GMT-07:00 நரசிங்கபுரத்தான் <jaisure...@gmail.com>:

வேலூர் / திருவண்ணாமலை  மாவட்டங்களில் .

நெல் வேய்த்தல்  என்று கூறுவார்கள் . - ( நெல்லு  வேய்ச்சாங்க  /   நெல்லு வெய்க்க போறோம்....... ) 

உங்கள் ஊர்க்காரர் ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள். இச்சொல்லை மிக அழகாகப் பாவித்துள்ளார்.

ஸ்ரீமத் அருணகிரிநாதர் பயன்படுத்தும் அவர் ஊர்ச்சொல்லை அறியாத பிற நாட்டார்கள்
தப்பிதமாக உரை சொல்லியுள்ளனர். அவ்வுரை சற்றும் பொருந்தவில்லை.

என்ன திருப்புகழ் என்று தெரிகிறதா?

நா. கணேசன்

Reply all
Reply to author
Forward
0 new messages